அந்நஜாத் ஆக்ஸ்ட் –  1989

in 1989 ஆகஸ்ட்

ஆக்ஸ்ட் –  1989

முஹர்ரம் :1410

அந்நஜாத்தின் நிலை இது தான்!

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

கோட்டைக்குள்   குத்து     வெட்டு   வேண்டாம்.  தவ்ஹீத்    சகோதரர்களிடையே   பிளவை   ஏற்படுத்தும்  வகையில் எழுதாதீர்கள்.  தவ்ஹீத்   சகோதரர்களின்   குறைகளை  எடுத்து   எழுதி,   அதன்   மூலம்   குராபிகளுக்கு   மத்தியில்   நமக்கு   தலை   குனிவை    ஏற்படுத்தாதீர்கள்.    தனி   நபர்தாக்குதல்    வேண்டாம்.  குர்ஆன்,    ஹதீஸ்படி    நடப்பவர்களிடையே  காணப்படும்  குறைகளை   கண்டிப்பதில்    ஏன்    இவ்வளவு   கடுமை   காட்டுகிறீர்கள்!   இப்படிச்   சில    சகோதரர்கள்   நமக்கு எழுதி வருகிறார்கள். அவர்கள் அனைவரும்    தூய   இஸ்லாத்தின்   வளர்ச்சியில்    அந்நஜாத்தின்   வளர்ச்சியில்   மிகுந்த   அக்கரை   கொண்டுதான்,   நம்மீது   நல்லெண்ணங்கொண்டு தான் அவ்வாறு எழுதுகிறார்கள் என்பதை நாம் பூரணமாக ஒப்புக் கொள்கிறோம். ஆனால், அவர்களின்  இக்கூற்றுகள்  இன்றைய  மக்களின்  மனோ நிலைகளையும் ஜனநாயக மரபுகளையும் அனுசரித்து இருக்கின்றனவே அல்லாமல் குர்ஆன்,     ஹதீஸ்    அடிப்படையில்   இல்லை   எனவே   இக்கூற்றுகளை    ஏற்று  செயல்பட  எம்மால்  முடியவில்லை  என்பதை  அச்சகோதரர்களுக்கு  மிகத் தாழ்வுமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இஸ்லாத்தை நிலை நாட்டும்   தூய   பணியில்   நபி(ஸல்)   அவர்கள்   ஈடுபட்டிருந்த    ஆரம்பக்கட்டங்களில் கோட்டைக்குள் நடந்த தவறுகளை   அல்லாஹ்   மூடி   மறைந்துவிட வில்லை. குர்ஆன் வசனங்களை இறக்கி பகிரங்கப் படுத்தினான். மிக வன்மையாக எதிரித்துக் கொண்டிருந்த   குறை´களுக்கு   முன்   முஸ்லிம்களுக்கு   தலை  குனிவு    ஏற்பட்டுவிடுமே    என்று    தவறுகளை     அல்லாஹ் மூடி மறைத்துவிடவில்லை.   80-1-12 வசனங்களும்,6:52?55 வசனங்களும்,   18:28   வசனமும்    இன்னும்   இவை போன்ற குர்ஆன் வசனங்களும் இறக்கப்பட்ட வரலாறுகளைப் புரட்டிப்பார்ப்பவர்கள் இந்த எமது கூற்றை மறுக்க மாட்டார்கள்.

நபி(ஸல்) அவர்களின் அருமை    மனைவியர்கள்    பகிரங்கமாக    கண்டிக்கப்பட்டு    இறக்கப்பட்ட 33:28-34, 66:3-5குர் ஆன் வசனங்களையும், அவர்கள் தவறு செய்தால் இருமடங்கு வேதனை கொடுக்கப்படும்   என்று இறக்கப்பட்ட 33:30 வசனத்தையும் அறிந்தவர்கள் எமது இந்தக்கூற்றை மறுக்க மாட்டார்கள்.

அதே போல் சிறந்த நபித் தோழர்களிலுள்ள ஹஸ்ஸானுபின் தாபித், மிஸ்தஹ் பின்   அஸாஸா, ஹிம்னா பின்த் ஜஹ்ஷ் (ரழி?ம்) இம்மூவருக்கும்    பகிரங்கமாக   கசையடி     கொடுக்கப்பட்ட     வரலாற்றையும்   கஃபு   பின்   மாலிக்,   ஹிலாலுபின்   உமையா    மிராரத்துப்னிர்ரபீஉ(ரழி?ம்) இந்த மூவரும் பகிஷ்கரிக்கப்பட்டு  வைக்கப்பட்டிருந்த   வரலாற்றையும்    அறிந்துள்ளவர்கள்   எமது    இந்தக் கூற்றை மறுக்க மாட்டார்கள்.

தன்னை முஸ்லிம் என்றாலும், முஸ்லிம் அல்லாதவர்   என்றாலும்   ஆலிம்   என்றாலும் அவாம் என்றாலும் யார் அல்லாஹ்வின் வசனங்களை சத்திய மார்க்கத்தை நேரடியாக   எதிரித்து? மறைத்து   குழப்பத்தை   உண்டு   பண்ணுகிறார்களோ   அவர்களோடு   நேரடியாகவே மிகக் கடுமையாகவே   போராட   குர்ஆன் கட்டளையிடுகிறது. (பார்க்க 2:190-193) அடுத்து, கோட்டைக்குள் இருந்து கொண்டு குற்றம் செய்பவர்களைக்   கடுமையாகக்   கண்டிக்கவும்,   அவசியப்பட்டால்   தண்டிக்கவும்   சொல்லுகிறது.  அல்குர்ஆன் (பார்க்க 9:118, 24:4, 33:28-34, 66:3-5)

இது    தகப்பன்   தனது   மக்களின்   எதிர்கால   நலனைக்   கருதி   அவர்களைக் கடுமையாகக் கண்டிப்பதையும் தண்டிப்பதையும் ஒத்திருக்கிறது. தனது மக்கள் மீதுள்ள அளவில்லாத அன்பின்   காரணமாகவே   அவர்களது   எதிர்காலம்  சிறந்திருக்க வேண்டும் என்றே தகப்பன் இவ்வாறு நடந்து கொள்கிறான். அதே சமயம் தங்களை முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டு   நயவஞ்சகர்களாக நடப்பவர்கள் மீதுஇந்த அளவு கடுமை காட்டப்படவில்லை.  என்பதற்கு   தபூக்   யுத்தித்தில்   கலந்து   கொள்ளாத   உண்மையான முஸ்லிம்கள் மூவர் கடுமையாகத் தண்டிக்கப் பட்டதும் நயவஞ்சகர்கள் தண்டிக்கப்படாமல் விடப்பட்டதும் தக்க சான்றாகும்.

எனவே, குற்றங்கள்   களையப்படுவதற்காக   நெருக்கமானவர்கள்   மிகக்   கடுமையாகக்   கண்டிக்கப்படவும்,   போகப்   போக    தூரமாகிச் செல்லுபவர்கள் கண்டிக்கப்படுவதில், கடுமை குறைக்கப்படவும் இஸ்லாம் போதிக்கிறது. இந்த போதனைக்கு மாற்றமாக நெருக்கமானவர்களின் குற்றங்களை மூடி மறைத்துக் கொண்டு, தூரமானவர்களைக் கண்டிப்பதில் கடுமை காட்டுவதால் இன்று  இஸ்லாமிய   வளர்ச்சி குன்றியுள்ளது. அறிவு குறைந்த பெற்றோர் தங்கள் குழந்தைக்கும், பக்கத்து வீட்டார் குழந்தைக்கும் ஏற்பட்ட சச்சரவில் தங்கள் குழந்தை மீதுள்ள மிகைப்பட்ட பாசத்தால் தங்கள் குழந்தையைக் கண்டிக்காமல் குற்றத்தை மறைத்து மாற்றார் குழந்தையைக்கண்டிப்பது   கொண்டு, அக்கம் பக்கம் உள்ள வீட்டாரின் பகையைத் தேடி அவர்களின் நல்லெண்ணத்தை இழந்து நிம்மிதி இழந்த வாழ்க்கை வாழ்வது போன்ற நிலையில் தான் இன்று முஸ்லிம்கள் வாழ்த்து கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம்களின்இந்த   தவறான  அணுகுமுறையால்   முஸ்லிம்   அல்லாதார் இஸ்லாத்தைப் பற்றித் தவறாக எண்ணும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்கள் தங்களின் இந்த தவறான போக்கை அவசியம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

இவ்வளவு தெளிவான விளக்கத்தைப் பெற்ற   நிலையில்   நாம்   விட்டுக்கொடுத்து,   இந்த   சகோதரர்களின் வேண்டுகோள்களை ஏற்றுச்செயல்படுவதாக   இருந்தால்   இந்தச்    சகோதரர்களின்    விருப்பத்திற்கிணங்க     செயல்படுவதாகவே   இருக்கும். அப்படிச்செயல்பட்டால் அவர்களுக்கு நம்மீது நேசம் அதிகரிக்கும், அதனால் அவர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் அதிகரிக்கும், அதனால்அந்நஜாத்தின்   சந்தாக்கள்   அதிகரிக்கும்   நாம்   உலக   ரீதியில்   வளர   வாய்ப்புகள்   அதிகம் ஏற்படும். இவை அனைத்தையும் நாம் நன்கு    அறிந்தே    இருக்கிறோம். ஆனால்   அது   எமது   லவ்கீக   வளர்ச்சியாகவும்,   அந்நஜாத்தின்   வளர்ச்சியாகவும்     இருக்குமேயல்லாது தூய இஸ்லாத்தின் வளர்ச்சியாக அது ஒருபோதும் இருக்காது. இதனை தெளிவாக அறிந்த நிலையிலேயே      இஸ்லாத்தின்   வளர்ச்சியையே   நாம்   குறிக்கோளாகக்   கொண்டு   செயல்படுகிறோம்.   அதனாலேயே    இந்தச் சகோதரர்களின் வேண்டுகோள்களை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. குர்ஆன் ஹதீஸை விட்டு விலக நம்மால் முடியவில்லை.

மற்றவர்களைக்  கண்டு கொள்ளாமல்  நாம் நமது போக்கில் நமது பணியைச் செய்து கொண்டே சென்றால் அது நல்ல பலனைத் தரும் என்று சில   சகோதரர்கள்     அபிப்பிராயப்படுகிறார்கள். ஆம், நாமும் இஸ்லாத்தின் பெயரால் ஒரு இயக்கமாக வளர்வோம். மற்றவர்களும்    இஸ்லாத்தின்    பெயரால்    தனித் தனி    இயக்கங்களாக   வளர்வார்கள். ஒன்றுபட்டு இயங்க வேண்டிய முஸ்லிம் சமுதாயம் கூறு போடப்பட்டு பல பிரிவுகளின் இயங்க   அதனால்    வழியேற்படும். அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்த தாராளமான மனப்பான்மையினால்  தான்  முஹ்க்கமாத் வசனங்களுக்கே அடிப்படையான முஹ்க்கமாத் வசனமான 3:7 முத்தஷாபிஹாத் வசனமாக்கப்பட்டு, அந்த சர்ச்சை காலங்காலமாக தஃப்ஸீர்களிலும் இடம்பெற்றுள்ளதைப் பார்க்கிறோம். எனவே மார்க்கத்தில் மனிதர்களின் மாறுபட்ட கருத்துகளுக்கு இடமில்லை என்பதை திட்டமாகத் தெளிவாக நிலைநாட்டும் கட்டாயத்தில் நாம்இருக்கிறோம்.

இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு சமுதாய ஒற்றுமைக்கு தனி நபர் பங்கம் விளைவிப்பவராக இருந்தால் அந்த தனி நபர் விமரிசிக்கப்பட்டுசமுதாயத்திற்கு அடையாளம் காட்டப்படுவது குர்ஆன் ஹதீஸ் வழியேயாகும். இதில் தயவு தாட்சண்யத்திற்கு   இடமே    இல்லை.    இதனை நஜாத்தின் ஆரம்ப இதழிலேயே சுட்டிக்காட்டியுள்ளோம். தனது தவறுகள் சுட்டிக்காட்டப்படும் போது, அதனை யார்   சுட்டிக் காட்டினாலும் அதனை  ஏற்றுத் தன்னைத் திருத்திக் கொள்பவர்களே ஈமானுடன் செயல்படுகிறவர்கள் ஆவார்கள். இவர்கள் யார்? எமது    தவறைச்   சுட்டிக்காட்ட   என்ற   இறுமாப்பு   எண்ணம் யாருக்கு ஏற்பட்டாலும் அது தனி மனிதனாக இருந்தாலும் அல்லது இயக்கமாக இருந்தாலும் அவர்கள் நேர்வழியில் இல்லை என்பதே அதன் பொருளாகும்.

தங்களின்      முயற்சிகளின்   பலனை   மறுமையில்   முழுமையாக   அடைந்து   கொள்ள  விரும்புகிறவர்கள்     மட்டுமே    நமது இந்த    கூற்றுக்களை    ஏற்றுக்    கொள்ளமுடியும். மாறாக  தங்கள் முயற்சிகளின்    பலனை   இவ்வுலகிலேயே    அனுபவிக்க     விரும்புகிறவர்களுக்கு நமது   கூற்றுக்கள்   எட்டிக்காயாக   கசக்கும்   என்பதையும்    நாம் நன்கு அறிவோம் கசப்பாக இருந்தாலும்சத்தியத்தைச் சொல்லும் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். எனவே இது தான் எமது நிலை. எமது இந்த நிலையில் மாறுதல் இல்லைகுர்ஆன் ஹதீஸ் வழிக்குமாறுபட்டுச் செயல் பட   நாம்  தயாராக  இல்லை. நமது லவ்கீக நிய்யும் அந்நஜாத்தும் முயல்வேகத்தில்    வளர்ச்சியடைவதைவிட தூய இஸ்லாம் ஆமை   வேகத்தில் வளர்ச்சி   அடைந்தாலும்   அதுவே  அசலான  வளர்ச்சி   என்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு   வருகிறோம்.    இந்த   அடிப்படையில்     எம்மோடு    இணைந்து   செயல்படத்   தயாராக   உள்ள   சகோதராகளின்   ஒத்துழைப்பையே  நாம்  எதிர்பார்க்கிறோம்.

——————————————————————————————–

நபி வழியில் நம் தொழுகை  

தொடர் : 32

அபூ அப்திர்ரஹ்மான்

நபியே    சொல்வீராக!   நீங்கள்    அல்லாஹ்வை   நேசிப்பவர்களாயிருப்பின்   என்னைப்   பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான் மேலும் உங்களுக்கு உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னித்து  கிருபை செய்பவனாயிருக்கிறான்(3:31)

என்னைத் தொழக் கண்டவாறே நீங்களும் தொழுங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(மாலிக்பின்  ஹுவைரிஸ் (ரழி), புகாரீ, முஸ்லிம்)

சென்ற ஜூலை ’89 இதழில் ஸூஜூதுஸ்ஸஹ்வு செய்வோரின் கவனத்திற்கு மறதிக்கான ஸஜ்தாக்கள் செய்யும் போது ஓதும் தஸ்பீஹ்ஆகியவை பற்றிய விபரங்களைப் பார்த்தோம். இன்ஷா அல்லாஹ் இவ்விதழில் அதற்கு அடுத்துள்ள நிலைகளைப் பார்ப்போம்.

தொழுகையில் தவறிழைக்கும் இமாமுக்கு அதை உணர்த்தும் முறை :

“”உங்கள் தொழுகையில் உங்களுக்கு ஏதேனும் கோளாறு ஏற்பட்டு விட்டால், ஆண்கள் (ஜமா அத்தாக தொழும்போது) “”தஸ்பீஹ்” சொல்வார்களாக! பெண்கள் ஒரு    கையின்   உள்   பாகத்தால்   மற்றொரு கையைத் தட்டுவார்களாக!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஸஹ்லுபின் ஸஃது (ரழி), புகாரீ, முஸ்லிம்)

மேற்காணும் அறிவிப்பில் இமாம் ஏதேனும் தவறிழைக்கும்போது   அதை   அவருக்கு   உணர்த்தக்   கூடியவர்  ஆணாகியிருப்பின் “”சுப்ஹானல்லாஹ் ”என்று சப்தமாகக் கூறுவதன் மூலமாகவும், பெண்களாயிருப்பின் தஸ்பீஹ்   எதுவும்   கூறாமல்   தமது   ஒரு   கையில் உட்புறத்தால் மற்றொரு கையைத் தட்டுவதன் மூலமாகவும் உணர்த்த வேண்டும் என்று தெளிவு படுத்தப்பட்டுள்ளது.

ஸூஜூதுஸ்ஸஹ்வு (மறதிக்கான ஸஜ்தாக்கள்) செய்வது சுன்னத்தா? அல்லது வாஜிபா?

இப்னு    மஸ்ஊத்   (ரழி)   அவர்களும்,   அவர்களைப்   போன்று   வேறு   சில   சஹாபாக்களும்   அறிவித்துள்ள ஹதீஸ் தொடரில் “”லியஸ்ஜூத் ஸஜ்தைனி” (அவர் மறதிக்காக) இரண்டு ஸஜ்தாக்கன் செய்து கொள்வாராக! என்று ஏவல்   வினையின் அடிப்படையில் ஹதீஸின் வாசகம் அமைந்திருப்பதால்   இது அவசியத்தைக்  குறிக்கிறது.  என்று கருதி சிலர் “”ஸூஜூதுஸ்ஸஹ்வு” செய்வது வாஜிபு என்று கூறுகிறார்கள்.   ஆனால் “”ஸூஜூஸ்ஸஹ்வு” சுன்னத்துத்தான் என்பதை  கீழ்க்காணும் அபூ ஸயீதில் குத்ரீ(ரழி) அவர்களின் அறிவிப்பு தெளிவுபடுத்துகிறது.

உங்களில் ஒருவருக்கு தமது தொழுகையில் சந்தேகம் தோன்றிவிட்டால் அவர் சந்தேகத்தை அகற்றிவிட்டு தமக்கு உறுதியானதன்படி   நடந்து   கொள்வாராக! (தொழுகையின்)   பரிபூரண   நிலை   உறுதியாகி   விட்டபோது, (சந்தேகம் ஏற்பட்டமைக்காக) இரண்டு ஸஜ்தாக்கள் செய்து கொள்ள வேண்டும். அவருடைய தொழுகை (உண்மையில்) நிறைவானதாயிருப்பின், அவர் தொழுதுள்ள ரகாஅத்து   அவருக்கு    நபிலாக?   உபரியானதாக   ஆகிவிடுவதோடு   இரண்டு   ஸஜ்தாக்களும்   (அவ்வாறே உபரி) ஆகிவிடுகின்றன.அவருடைய தொழுகை குறைபாடுள்ளதாயிருப்பின் அவர்   தொழுதுள்ள   அந்த   ரகாஅத்து   அவருடைய தொழுகையை நிறைவுசெய்வதாகி விடுகிறது. இரண்டு ஸஜ்தாக்களும் ஷைத்தானுடைய தோல்வியைக்காட்டக் கூடியவையாகிவிடுகின்றன.
(அபூ ஸயீதில் குத்ரீ(ரழி), அபூதாவூத்)

இவ்வறிவிப்பில் அவர் தொழுதுள்ள ரகாஅத் அவருக்கு “”நபிலாக    உபரியானதாக   ஆகிவிடுவதோடு   இரண்டு   ஸஜ்தாக்களும்
(அவ்வாறே உபரி) ஆகி விடுகின்றன” என்று தொடரில் இரண்டு ஸஜ்தாக்களும்அவ்வாறே உபரியாகி விடுகின்றன என்ற வாசகத்தில் நபி  (ஸல்)   அவர்களே   (ஸஹ்வுடைய)   இரு   ஸஜ்தாக்களையும்   உபரியானவை   என்று   கூறியிருப்பதால்   அவை   வாஜிபு?  கட்டாயமானவை அல்ல மேல்   மிச்சமானவை   தான்   என்றும்,   தொழுகையில்   சந்தேகம்   ஏற்பட்ட  சந்தர்ப்பங்களில் இவ்வாறு செய்துகொள்ள வேண்டும். என்று நபி(ஸல்) அவர்கள் சொல்லியும், செய்தும் காட்டியிருப்பதை   ஆதாரமாகக் கொண்டு இவ்விரு ஸஜ்தாக்களையும் சுன்னத்தானவை என்று அறிகிறோம்.

ஸஜ்ததுத் திலாவத்தின் விபரம் :

“”ஸஜ்ததுத் திலாவத்”    என்றால்   குர்ஆனில்   உள்ள “”ஸஜ்தா” வின் ஆயத்தை   ஒருவர் ஓதினாலும்   அல்லது   பிறர்   ஓதுவதைக் கேட்டுக்கொண்டிருந்தாலும்   ஓதியவரும்   கேட்டுக்   கொண்டிருந்தவரும்   தக்பீர்   கூறி   ஒரு ஸஜ்தா செய்வதற்கு சொல்லப்படும். இவ்வாறுஸஜ்தா செய்வது சுன்னத்தாகும். இதற்கு ஹதீஸ்களின்வழக்கில் “”ஸூஜூதுல்குர்ஆன்” (குர் ஆனுடைய ஸஜ்தாக்கள்) என்றுஉள்ளது.

ஸஜ்ததுத் திலாவத்தின் சிறப்பு :

ஆதமின்  மகன் ஸஜ்தாவின் ஆயத்தை ஓதிவிட்டு (அதற்காக) அவன் ஸஜ்தா செய்யும்போது ஷைத்தான் ஒதுங்கியவனாக, தான் அழுத   நிலையில்   “”எனக்கு   ஏற்பட்ட   நாசமே!   ஆதமுடைய மகனுக்கு ஸஜ்தா செய்யும்படி ஏவப்பட்டது. அதற்கு அவன் ஸஜ்தா செய்தான் அவனுக்கு சுவர்க்கம். நான் ஸஜ்தா செய்யும்படி ஏவப்பட்டேன் ஆனால் நான் அதை மறுத்துவிட்டேன். எனக்கு நரகம்”  என்று கூறுவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா (ரழி), முஸ்லிம், அஹ்மத், இப்னுமாஜ்ஜா)

இவ்வறிவிப்பின்படி “”ஸஜ்தா திலாவத்” செய்பவர் தக்பீர் கூறி ஒரு ஸஜ்தா செய்வது மட்டுமே ஹதீஸில் இடம் பெற்றுள்ளது. ஸஜ்தா   செய்த பிறகு மீண்டும் தக்பீர் கூறி எழ வேண்டும் என்பதற்கோ   அல்லது   அவ்வாறு   தக்பீர்   கூறி எழுந்து   உட்கார்ந்து   ஸலாம் கொடுக்க வேண்டும் என்பதற்கோ ஹதீஸில் ஆதாரம் எதுவுமில்லை.

நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு குர்ஆனை ஓதிக்காட்டிக் கொண்டிருந்தார்கள்.   ஸஜ்தாவுடைய    ஆயத்தை   அவர்கள் ஓதினால் உடனே தக்பீர் கூறி ஸஜ்தா செய்வார்கள். அப்போது நாங்களும் ஸஜ்தா செய்வோம்.(இப்னு உமர்  (ரழி),  அபூதாவூத்,  பைஹகீ, ஹாக்கிம்)

இவ்வறிவிப்பின்படி ஸஜ்தாவின் ஆயத்தை    ஓதியவரும்,   அதைக்   கேட்டுக்   கொண்டிருந்தவரும்   ஸஜ்தா   செய்வது சுன்னத்து என்பதை அறிகிறோம்.

ஸஜ்தத்துத் திலாவத்து சுன்னத்துதான் வாஜிபல்ல என்பதற்கான சான்று :

நபி(ஸல்) அவர்களிடத்தில் “”வந்நஜ்மி” அத்தியாயத்தை ஓதினேன். அவர்கள் அதில் ஸஜ்தா செய்யவில்லை. (தாருகுத்னீயில் இடம் பெற்றுள்ள இதே அறிவிப்பில் எங்களில் எவரும் (அதில்) ஸஜ்தா செய்யவில்லை என்று உள்ளது) (ஜைதுபின் ஸாபித் (ரழி), புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், அஹ்மத், தாருகுத்னீ)

நபி(ஸல்) அவர்கள் “”வந்நஜ்மி” எனும் அத்தியாயத்தில் (அதை ஓதியபின்) ஸஜ்தா செய்தார்கள். அவர்களையயாட்டி முஸ்லிம்களும்முஷ்ரிக்குகளும், ஜின் இனத்தவரும், மனித இனத்தவரும் ஸஜ்தா செய்தார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி), புகாரீ, திர்மிதீ)

மேற்காணும்  இரு  அறிவிப்புகளிலும்    வந்நஜ்மீ    என்னும்   ஒரே  சூராவை நபி(ஸல்) அவர்கள் ஓதிவிட்டு முதல் அறிவிப்பின்படி அவர்கள் ஸஜ்தா செய்யவில்லை என்பதையும், இரண்டாவது அறிவிப்பின்படி ஸஜ்தா செய்தார்கள் என்பதையும் காணுகிறோம். ஆகவே ஸஜ்தா செய்வது வாஜிபு(கட்டாயம்) என்றிருந்தால் ஸஜ்தாவுடைய ஆயத்து ஓதியவுடன் ஸஜ்தா செய்திருப்பார்கள். ஆகவே ஸஜ்தா திலாவத்து வாஜிபு அல்ல, அது சுன்னத்து தான் என்பதை அறிகிறோம்.

குர்ஆனிலுள்ள ஸஜ்தாவின் ஆயத்துகள் மொத்தம்15

நபி(ஸல்) அவர்கள் குர்ஆனிலிருந்து 15 ஸஜ்தாக்களை(ச் சுட்டிக்காட்டி) என்னை ஓதும்படி செய்தார்கள். அவற்றில் முஃபஸ்ஸலில் உள்ளவை மூன்றும், சூரத்துல் ஹிஜ்ஜில் உள்ளவை இரண்டு ஸஜ்தாக்களும் இடம் பெற்றுள்ளன. (அம்ருப்னில் ஆஸ்(ரழி), அபூதாவூத், ஹாக்கிம்)

(“” முஃபஸ்ஸல்” என்பது “” சூரத்து முஹம்மது” என்னும் 47-வது  அத்தியாயத்திலிருந்து குர்ஆனின் இறுதிவரையுள்ள அனைத்து அத்தியாயங்களின் ஒட்டு மொத்தமான பெயராகும்.)

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ள அப்துல்லாஹ்பின் முனைன், ஹாரிஸுபின் ஸஃது ஆகியவர்கள் பற்றி இவர்கள் “”மஜ்ஹுல்”? அறிமுகமில்லாதவர்கள் என்று   இப்னுகித்தான்   போன்றோர்    கூறியிருப்பினும்   யஃகூபுபின்   சுஃயான் அவர்கள் அப்துல்லாஹ்பின் முனைன் அவர்களை நம்பகமானவர் என்று கூறியிருப்பதை இப்னுஹஜர் (ரஹ்) அவர்கள் ஊர்ஜிதம்செய்துள்ளார்கள். (தஹ்தீபுத் தஹ்தீபு பாகம்6, பக்கம்44)

இவ்வாறே   ஹாரிஸுபின்   ஸஃது   அவர்கள்   குறித்து   ஹாபிழ்   இப்னு   ஹஜர்   (ரஹ்) அவர்கள் இவர் “”மக்பூல்” ? ஹதீஸ் கலா வல்லுநர்களிடையே அங்கீக்ரிக்கப் பட்டவர்தான் என்பதாக தமது “”தக்ரீபு” எனும்   நூலில்   இப்பெயர்  இடம்  பெற்றுள்ள பகுதியில் குறிப்பிட்டுள்ளார்கள்.

குர்ஆனில் ஸஜ்தா இடம் பெற்றுள்ள சூராக்கள்

நான்  நபி (ஸல்)   அவர்களுடன்   11   ஸஜ்தாக்கள்   செய்துள்ளேன்.   அவற்றில் “”முஃபஸ்ஸலில்” இடம் பெற்றுள்ள   ஸஜ்தாக்கள் எதுவுமில்லை.   (அவையாவன)   அல்அஃராஃப்,   ரஃது,  நஹ்லு,  பனீ இஸ்ராயீல், மர்யம், ஹஜ்ஜூ, ஃபுர்கான்,நம்லு, அலிப்லாம் மீம்ஸஜ்தா, ஸாத், ஹாமீம் ஸஜ்தா ஆகிய சூராக்களாகும். (அபுத்தர்தாஃ(ரழி), இப்னுமாஜ்ஜா)

இவ்வறிப்பில் இடம்  பெற்றுள்ள 11 ஸஜ்தாக்களுடன்  முஃபஸ்ஸலில்  இடம்  பெற்றுள்ள 3  ஸஜ்தாக்களையும், சூரத்துல் ஹஜ்ஜில் உள்ள  இரண்டாவது  ஸஜ்தாவையும் சேர்த்து பார்க்கும் போது  மேற்காணும் ஸஹீஹான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது மொத்தம் 15 என்பது தெளிவாகிறது.

நபி(ஸல்) அவர்கள் முஃபஸ்ஸலில்   இடம்   பெற்றுள்ள 3 ஸஜ்தாக்களையும் அவர்கள் செய்துள்ளார்கள் என்பதற்கும், சூரத்துல் ஹஜ்ஜில்   உள்ள   இரண்டு   ஸஜ்தாக்களையும்   செய்துள்ளார்கள்   என்பதற்கான   ஆதாரங்கள்   ஸஹீஹான   ஹதீஸ்களில்   காணப்படுவதை காரணமாக  வைப்பதோடு, இதன் அறிவிப்பாளர் தொடரில் நம்பகமற்ற   நிலையிலுள்ள உஸ்மானுபின்  ஃபாயித் என்பவர்  இடம் பெற்றிருப்பதையும் வைத்து இவ்வறிவிப்பு லயீபு பலஹீனமானது என்பதை அறிகிறோம். (தஹ்தீபுத் தஹ்தீபு பாகம்7, பக்கம் 148)

முஃபஸ்ஸலில் இடம் பெற்றுள்ள 3 ஸஜ்தாக்களின் ஆயத்துகளை ஓதினால் ஸஜ்தா செய்ய வேண்டும் என்பதற்கான ஹதீஸ்கள்:

நபி(ஸல்) அவர்கள் மக்காவில் (இருக்கும்போது) “”வந்நஜ்மி” எனும் சூராவை ஓதிவிட்டு அவர்களும், அவர்களுடன் இருந்தவர்களும் ஸஜ்தா செய்தார்கள். ஒரு வயோதிகர் மட்டும் செய்யவில்லை அவர் ஒருபிடி பொடிக்கல், அல்லது மண்ணை எடுத்து, அதைத் தனதுநெற்றி வரை உயர்த்தி எனக்கு இதே போதும் என்று (அலட்சியமாக) கூறினார். அதன் பின் நான் அவரை காபிராகக் கொல்லப்பட்ட நிலையில் கண்டேன். (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரழி), புகாரீ)

நபி(ஸல்)அவர்கள் “”இதஸ்ஸமாஉன் ­க்கத்” எனும் சூராவிலும், “”இக்ரஃபிஸ்மிரப்பிக்” எனும் சூராவிலும் ஸஜ்தா செய்தார்கள். (அபூஹுரைரா (ரழி), பாடம்: ஸூஜூதுல் குர்ஆன், முஸ்லிம்)

மேற்காணும் இரு அறிவிப்புகளிலும் முஃபஸ்ஸலில் இடம் பெற்றுள்ள 3 ஸஜ்தாக்களையும் நபி(ஸல்) அவர்கள் செய்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது.

ஸஜ்தா திலாவத்தில் என்ன தஸ்பீஹ் ஓத வேண்டும்?

ஸஜ்தாவின்   ஆயத்தை   ஓதியதற்காக    ஸஜ்தா  செய்யும்  போது பொதுவாக ஸஜ்தாவில் ஓதப்படும் “”சுப்ஹானரப்பியல் அஃலா” எனும் தஸ்பீஹை ஓதலாம். நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு ஓதியுள்ளதாகவும் ஹதீஸில் இடம் பெற்றுள்ளது.
ஸஜத வஜ்ஹிலில்லதீ கலக்கஹு வஸவ்வரஹு வ­க்க ஸம் அஹுவபஸரஹு பிஹவ்லிஹீ வகுவ்வத்திஹீ ஃபதபாரக்கல்லாஹு அஹ்ஸனுல் காலிக்கீன்.(ஆயிஷா (ரழி), திர்மிதீ, அபூதாவூத், தாருகுத்னீ, பைஹகீ, ஹாக்கிம்)(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

——————————————————————————-
பொருளியல்: 6

வறுமையின் காரணங்கள்

இறையடிமை

உலகில்   மனிதர்களிடம்   காணப்படும்   வறுமை   இயற்கை   மற்றும்   செயற்கையான காரணங்களினால் ஏற்படுகின்றன என்று சொல்லப்படுகின்றது. செயற்கையான காரணங்கள் வறுமையை விளைவிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. விஞ்ஞான ரீதியாக ஆராய்கின்றபோது ஒரு மனிதனிடம் பொருள்களை “”வாங்கும் சக்தி” இல்லை என்றால் அவனை எழை.வறுமைக் கோட்டிற்குக் கீழ் வசிப்பவன்   என்றெல்லாம்   குறிப்பிடுகின்றோம்.   இந்த   “”வாங்கும் சக்தி”   ஒரு   மனிதனுக்கு   கீழ்கண்ட   நான்கு   வகைகளில்  கிடைக்கின்றது.

1. அவர்   ஊதியத்திற்கு   பணியில்   இருப்பவராக   இருக்க  வேண்டும்.மேலும் எவ்வளவு காலம், மற்றும் என்ன ஊதியத்தில் அவர் பணியில் இருக்கிறார் என்பது கவனிக்கப்பட வேண்டும்.

2. தன்னிடம் இருக்கின்ற உழைப்பு அல்லாத சொத்துக்களை விற்பதன் மூலம் கிடைக்கின்ற வருமானம் அவ்வாறு சொத்துக்களை விற்கின்ற பொழுது அதற்கு ஆகின்ற செலவினைக் கழித்துக் கொள்ள வேண்டும்.

3. தன்னிடம் இருக்கின்ற உழைப்பு மற்றும் மூலப்பொருள்களைக் கொண்டு எவ்வளவு உற்பத்தி செய்து பொருளீட்டுகிறார். உற்பத்தி காரணிகளை வாங்குவதற்காக அவர் செலவிடும் தொகையும்,   உற்பத்தி   செய்யப்பட்ட   பொருள்களை விற்பதினால் கிடைக்கும் வருமானம்.

4. சமூக நல நன்மைகளின் மூலம் பெறுகின்ற வருமானம் :

சுருக்கமாகக்   கூறினால் ஒரு மனிதன்  தான் பெறுகின்ற பணத்தைப் பொறுத்து அவரது “” வாங்கும்  சக்தி ” நிர்ணயிக்கப்படுகிறது. பணம் ஒருவருக்கும் கிடைக்கின்ற பல வழி முறைகளை மேலே நாம் கண்டோம்.  வேலை  வாய்ப்பு இல்லாத போது வருமானம்     இன்றி வறுமையில் வாடநேரிடுகிறது. விற்று வாழ்வதற்கு சொத்துக்கள் இல்லாதபோதும் தன்னுடைய சுய முயற்சியினால் பொருள் உற்பத்தியில் ஈடுபட்டு அப்பொருளை விற்று பணம்   சம்பாதிக்க வழியில்லாதபோதும்,  சமூகநலத்திட்டங்கள்   செயல்படாத போது    “”வாங்கும் சக்தி” கிடைக்கப் பெறாததால் மக்கள் வறுமையில் வாட நேரிடுகிறது.

வறுமையில்   வாழ்கின்ற   மக்களை   இளைஞர்கள்,   முதியவர்கள்   என்று   பாகுபாடு   செய்யலாம். இளைஞர்களில் கல்வியறிவு பெற்றவர்கள், கல்வியறிவு பெறாதவர்கள் என்றும் பாகுபாடு செய்யலாம்.   இந்த   பாகுபாடு   இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ்,இலங்கை, ஆப்பிரிக்க நாடுகள், தென் அமெரிக்க நாடுகள் போன்றவைகளில் காணப்படுகின்றன. ஐரோப்பிய நாடுகள், கம்யூனிசிநாடுகள்,  வட அமெரிக்க நாடுகளில் இந்த பாகுபாடுகாணக்கிடைப்பதில்லை.  ஏனெனில் அங்கு மிகப்பெரும்பான்மையான மக்கள் கல்வி     கற்றவர்களாக   இருக்கிறார்கள்   ஆனால் ஐரோப்பியா மற்றும் அமெரிக்க முதலாளித்துவ நாடுகளில் வேலையின்மை அதிகபட்சம் பத்துசதவீதம் காணப்படுகிறது. ஆனால் ரஷ்யா, சீனா போன்ற கம்யூனிச நாடுகளில்  வேலையின்மை காணமுடியாத ஒன்றாகும்.    அவ்வாறேன்றால் கம்யூனிச   நாடுகள்   வேலையில்லாத்   திண்டாட்டத்தை   ஒழித்து விட்டனவா? என்றால் “”இல்லை”என்று தான் கூற வேண்டும்.

கம்யூனிச நாடுகளும் வேலையும் :

கம்யூனிச நாடுகளில்  வேலையில்லாத்  திண்டாட்டம்  முற்றிலும்  ஒழிக்கப்பட்டு விட்டதாக  அந்நாடுகள்  பிரச்சாரம் செய்கின்றன. அதனைக்  கண்டு  வேலையின்மை மிகுதியாக  காணப்படும்.  ஏழை நாடுகள் தாங்களும் கம்யூனிசத்தை பின்பற்ற பேராவல்        கொள்கின்றன. இதற்கு முஸ்லிம் நாடுகளும் விதிவிலக்கல்ல. பொருளாதார விஞ்ஞான ரீதியாக இதனை ஆராய்ந்து பார்த்தால்     கம்யூனிச நாடுகளில் முழு வேலை வாய்ப்பு (ய்ற்யியிசிதுஸ்ரீயிலிதீதுeஐமி) இருப்பதாகத் தெரியவில்லை இந்நாடுகளில் “”மறை த் திருக்கின்ற  வேலையின்மை” (ம்ஷ்விஆஐஷ்விedUஐசிதுஸ்ரீயிலிதீதுeஐமி)  மிகுதியாக   இருக்கின்றது.   மறைந்திருக்கின்ற   வேலையின்மையை    ஒரு    உதாரணத்தைக் கொண்டு தெளிவாக்க முடியும் ஒரு விவசாயிக்கு, வாலிபப் பருவத்தில்   நான்கு   மகன்கள் இருக்கிறார்கள். இந்த குடும்பத்தில்  உள்ள   ஐந்து   பேரும்   சேர்த்து   ஒரு   ஆண்டுக்கு   ரூ.25, 000/- மதிப்புள்ள  விவசாயப்  பொருள்களை உற்பத்தி செய்கிறார்கள்.இந்த   ஐந்து நபர்களில் ஒருவர் விவசாயத்தை விட்டுவேறு தொழிலுக்குச் சென்று  விடுகிறார்.அப்பொழுதும்  நான்குநபர்கள்   அதே   ரூ. 25, 000/- மதிப்புள்ள விவசாயப் பொருள்களை உற்பத்தி செய்கிறார்கள். அவ்வாறென்றால் விவசாயத்தை விட்டு வெளியேறிய ஒரு நபர் பொருள் உற்பத்திக்கு தேவையில்லாதவராகத் தான் கடந்த காலத்தில் இருந்திருக்கின்றார். ஆனால், அவர் விவசாயத்தில்  ஈடுபட்டுக்  கொண்டிருந்த  போது  அவரும்   மற்றசகோதார்களைப் போல்   தனது  உழைப்பை விவசாயத்தில் ஈடுபடுத்திக்   கொண்டிருந்தார்.   இவரைத்தான்        பொருளாதார   விஞ்ஞானம்   “”மறைந்திருக்கின்ற   வேலையற்றவர்”   என்று     குறிப்பிடுகின்றது.     இதனை   வேறொரு    முறையிலும்    விளக்கிக்   கூற   முடியும்.   அரசு   அலுவலகங்களில்  கட்சியின் ஆட்சி செயல்படுகின்ற   ஜனநாயக   அமைப்பில்   உபரி  ஊழியர்கள் (நுஸerறீமிழிக்ஷூக்ஷூ) இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு கூறப்படுகிறது. தங்களதுகட்சியின்   நலனுக்கு உழைத்த இனைஞர்களுக் கெல்லாம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கின்ற அக் கட்சியானது அரசாங்கத்தில்  வேலைவாய்ப்பு   அளிக்கின்றது.   ஆட்சியிலிருக்கின்ற   கட்சி   மாறுகின்ற   போது   புதிது புதிதாக ஆட்கள் சேர்க்கப்படுகிறார்கள்.    ஏற்கனவே இவ்வாறு  சேர்க்கப்பட்டவர்கள் பதவி பாதுகாப்பின் மூலம் தொடர்ந்து பதவியை தக்க வைத்துக் கொள்கிறார்கள். அரசு நிர்வாகப் பொறுப்பில் இருக்கின்ற எல்லா அமைப்புகளிலும் இந்த “” உபரி ஊழியர்” பிரச்சினை வெகுவாகக் காணப்படுகின்றது.

எல்லா பொருளாதார நடவடிக்கைகளையும் அரசு தன் பொறுப்பிலேயே வைத்திருக்கிறது.   கம்யூனிச   நாடுகள்,   வேலையில்லாப் பிரச்சினையைத்    தீர்க்கக்கூடிய   மாமருந்து   கம்யூனிசம்   தான்   என்று   பிரச்சாரம்  செய்கின்றன.  கம்யூனிச நாடுகள் தங்கள் நாட்டிலுள்ள எல்லோருக்கும் வேலை கொடுத்து விடுகின்றது. அதனால்  அங்கும் மறைமுக வேலையின்மை என்பது கண்ணுக்குத்தெரியாமல் மறைவாகக் காணப்படுகின்றது. அதன் காரணமாகத் தான் தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் (ஸிழிணுலிற்rPrலிdற்உமிஷ்ஸஷ்மிதீ) மிகக் குறைவாக இருக்கின்றது.

நம் நாட்டில் வேலையில்லாத இளைஞர்கள் அனைவரும் அரசாங்கமே வேலை கொடுக்க வேண்டும். என்றுகுரல் எழுப்புகின்றனர்கம்யூனிசம்   போன்ற   அமைப்பு   ஏற்பட்டாலன்றி   எல்லோருக்கும்   வேலை தருவதென்பது இயலாததாகும். அது ஒரு புறமிருக்கவேலையின்மை  என்பது வறுமைக்கு ஒரு முக்கிய காரணமாகும்.  வேலையின்மை எதனால்   ஏற்படுகின்றது   என்று   ஆராய்ச்சி செய்தால் கட்டுரை  மிக  விரிந்து கொண்டே போகும். சுருக்கமாக ஒன்றை இங்கு கூற வேண்டியது மிக அவசியமாகிறது. அதாவது நம் நாட்டில்வேலைக்குரிய   மதிப்பு (ம்ஷ்ஆஐஷ்மிதீலிக்ஷூஸிழிணுலிற்r)காணப்படவில்லை மாறாக, வேலை அந்தஸ்து கருதுப்படுகின்றது. அதுவும் சாதி  அடிப்படையில்   உயர்வு   தாழ்வு   பாராட்டப்படுகிறது.   சில   வேலைகள் ( (உ.ம்.)   சாலை    போடுதல்,    பழுது    பார்த்தால்,   கழிவு  நீர்   தொடர்புடைய   வேகைள்,   விவசாயப்பணிகள்   உடல்   உழைப்புப்பணிகள்   போன்றவை) கீழ்த்தரமானவைகளாக    வெறுக்கப்படுகின்றன.    இத்தகைய   சூழ்நிலையில்    சாதி   வித்தியாசமின்றி   சமுதாய   அந்தஸ்து   பெறுவதற்காக   எல்லோரும் வெள்ளை காலர் (நிஜுஷ்மிeளீலியியிer) (உ.ம். அதிகாரிகள், அலுவலர்கள்)   வேலை   பெறுவதையே   வாழ்க்கையின்   லட்சியமாகக்          கொண்டிருக்கிறார்கள். ஆனால் அத்தகைய வேலை எல்லோருக்கும் கிடைப்பது கடினமாக இருக்கின்றது.

அடுத்து, கல்வி கற்பது    என்பது   வேலை   பெறுவதற்காக  என்று கருதப்படுவதால், கல்வி விரிவாக்கப் பணி பரவலாக்கப்படுவது தடைக்படுகிறது.

இப்பூவுலகில்     வாழ்கின்ற    எல்லா   மக்களுக்கு   இறைவன்   இரணத்தை   ஏற்படுத்தி   வைத்திருக்கின்றான்.   “”உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்.” (அல்குர்ஆன்6:151) அவ்வாறு இருந்த போதிலும் மக்கள் உண்ண உணவில்லாமல்உடையில்லாமல்   துன்பப்படுகிறார்கள்.    என்றால்   இதற்கு   அளிப்பு   முறையில்   (ம்ஷ்விமிrஷ்ணுற்மிஷ்ஸeறீதீவிமிeது)    காணப்படுகின்ற குறைபாடுதான் காரணமாகின்றது.

வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்பவர்களின் ஒரு கணிசமான பகுதியினர் வயது   முதிர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.    அதனால் உழைத்து உண்பதற்கு வழி இல்லாமல் இருக்கிறது. அரசாங்கத்திலிருந்து ஒய்வு பெற்ற பணியாளர்கள் ஒய்வூதியம் பெற்று தங்கள் வாழ்க்கையின் சிரமத்தைக் குறைத்துக்   கொள்ள   முடிகிறது.   ஆனால்   வேறு    தொழில்   செய்தவர்கள்   ஒய்வூதியம்   இல்லாத காரணத்தினால்   துன்பப்      படுகிறார்கள்.    தங்களது   பிள்ளைகளினால்   கைவிடப்பட்ட   முதிய   பெற்றோர்கள்    நோய்வாய்ப்   பட்டிருப்பவர்கள், ஊனமுற்றவர்கள் போன்றோரின் நிலை மிகவும் வருந்தத் தக்கதாக இருக்கின்றது.

அரசாங்கத்தின்     கையாலாகாதத்    தனம்    வறுமைத்   தீய்க்கு   மேலும்   எண்ணெய் ஊற்றுகிறது, எவ்வாறெனில் வறுமையை வளர்ப்பதற்கு சில சந்தர்ப்பங்களில் அரசாங்கமே   காரணமாக   இருந்து   விடுகின்றது. குறிப்பாக அரசு வசூலிக்கின்ற வட்டியைக் குறிப்பிடலாம்.     அரசு      நிறுவனங்களிடமிருந்தும்,   வங்கிகளிடமிருந்தும்   பணம்     கடனாகப்   பெற்று   வாழ்க்கை   நடத்தத்    தொடங்குபவர்கள், வாங்கிய    கடனுக்கு   வட்டி   செலுத்துகிறார்கள்.   அவர்களின் லாப நஷ்டத்தில் அக்கரைக் கொள்ளாமல் வட்டி கொடுக்கும் காரணத்தினால் வறுமைக் கோட்டிற்கு மேலே போய் விட வேண்டும் என்ற முயற்சி வெற்றி பெற முடியவில்லை.

அரசாங்கம்     இராணுவத்திற்கும்,   ஆடம்பர   வீண்   விளம்பரங்களுக்கும்   செய்கின்ற   அளவுக்கதிகமான   தொகை   மக்களின் பொருளாதார    மேம்பாட்டிற்கு   அதன்   மூலம்   வறுமையை   ஒழிப்பதற்கு   நடவடிக்கை   எடுப்பதைத்     தடுத்து   விடுகின்றது.   உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும். என்றால் நம் நாட்டில் அணு வெடிப்பும், அக்னி எவுகணையும், இந்தியா ஒரு வல்லரசாக    முயற்சி செய்வதைத்தான் வெளிப்படுத்துகிறது. நம் நாட்டில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகின்ற தேர்தலுக்காக தேசிய அளவிலான    கட்சிகள்   ஒவ்வொன்றும்   குறைந்தது   ஆயிரம்   கோடி ரூபாய் செலவு செய்வதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.நாற்பது ஆண்டுகள்   ஆகியும் “” நமது சுதந்திரம்” நம்   நாட்டு   மக்கள்   குடிப்பதற்கு தண்ணீர் கூட கிடைக்க வழி  செய்ய வில்லை. மாறாக 1200  கோடி   ரூபாய்   செலவு   செய்து  ஆசிய விளையாட்டை நடத்திக் காட்டியது. இச்செலவினங்கள் அரசின் அலட்சியப் போக்கையும், அக்கரையின்மையையும் வரட்டு கவுரவத்தையும் காட்டுகின்றன.

இயற்கைக் காரணங்கள் :

மழையின்மை,   பெரு     வெள்ளம்,    நில    நடுக்கம்,   பெரு   நோய்கள்,    உற்பத்திக்    குறைவு    போன்வற்றின்   காரணமாக    பஞ்சமேற்படும்போது மக்களை வறுமைப் பிணி வாட்டுகிறது.   மேற்கூறிய   இயற்கை    உபாதைகளை ஒவ்வொன்றாக ஆராய்ச்சி செய்து பார்த்தால் இவைகளெல்லாம் மனிதர்கள்   தங்கள்   கரங்களினால் தேடிக் கொண்டதாகத் தான் தெரிகின்றது. நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்குஓர் அணுவளவும்   தீங்கிழைப்பதில்லை; எனினும் மனிதர்கள் (தீவினைகளைச் செய்து)தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கின்றனர்.(அல்குர் ஆன் 10:44) தற்பொழுது விஞ்ஞானிகள் மழையின்மைக்கு மனிதர்களின் பேராசையின் நிமித்தம் காடுகள் அழிக்கப்பட்டதை காரணமாகக்   காட்டுகிறார்கள்.  அபரிமிதமாக   பொருள் உற்பத்தி செய்ய விழைவதன் மூலம் தொழிற்சாலைகளிலிருந்து   வெளியாகின்ற   கரியமில  வாயு   வானத்தில்   உயர்ந்து   பூமியின்   வெப்பத்தை   அதிகப்படுத்தி,     துருவங்களிலிருக்கின்ற பனிமலைகளை    உருகச்செய்து, அதன் மூலம் கடலின் நீர் மட்டங்கள் உயர்ந்து    நாடுகள் நகரங்கள்  அழிந்து போவதற்கு பெரு வெள்ளம் ஏற்படுவதற்குக் காரணமாகின்றது. பேரருளாளனான அல்லாஹுதஆலா பூமியில் மனிதர்கள் வரம்பு   மீறிச்    செய்கின்ற   அட்டூழியங்களைப்    பொறுத்துக்     கொண்டு,    அவர்கள்     வாழ்வதற்குப்   போதிய    உணவினைத் தந்து வருகிறான். ஆனால் மனிதர்கள் தங்களின்   பேராசைக்   காரணமாக    ஒரு சிலர் செல்வத்தை விளை பொருள்களை நுகர் பொருள்களை முடக்கி வைத்துக் கொண்டு பெரும்பாலான மக்கள் வறுமையில் துன்பப்படுவதற்கு வழி கோலுகின்றார்கள்.

நம் நாட்டில் உணவு, உற்பத்தி, மக்கள் தொகை   பெருக்கத்திற்கேற்ப   பெருகிக்   கொண்டிருப்பதை    எவராலும் மறுக்க முடியாது. பொருளியல் நிபுணர்களும் நம் நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து விட்டதாகக்   கூறுகிறார்கள் எனவே மக்களின் வறுமை பசிக்கு மனிதர்களே காரணமாகிறார்கள் என்பது தெளிவாகிறது. இனி வறுமை  தோன்றாமலிருப்பதற்கும். எவ்வாறேனும் தோன்றிய வறுமையை விரட்டுவதற்கும் இஸ்லாம் கூறும் வழி வகைகளைக் காண்போம்.

————————————————————————————————-

குர்ஆனை விளங்குவது யார்?

தொடர் :12

இப்னு ஹத்தாது

3:7 வசனத்தின் சரியான பொருள்

அவன் தான் (இவ்)வேதத்தை உம் மீது   இறக்கினான்.   இதில்   தீர்க்கமான   (தெளிவான)   வசனங்கள் இருக்கின்றன இவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும்.   மேலும்   எஞ்சியவை   பல   பொருள் பெறத்தக்கவை (தீர்க்க மற்றவை)யாகும். எவர்களுடைய உள்ளங்களில் கோணல் (வழிகேடு) இருக்கிறதோஅவர்கள், குழப்பங்களை நாடி, பல பொருள் வசனங்களின் முடிவுகளைத் தேடி, அவற்றைப் பின்பற்றுகின்றனர். ஆனால்,   இவற்றின்   உண்மைக்கருத்துக்களை   (முடிவு ய்ஷ்ஐழியிVerdஷ்உமி) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும்   அறியார்.   அறிவில்    தேர்ந்தவர்களோ    “”நாங்கள்   இவற்றில்   (பூரணமாக)   நம்பிக்கை  கொண்டோம்.   இவை அனைத்துமே எங்கள்   இரட்சிகனிடமிருந்து   வந்தவை   தாம்”   என்று   கூறுவார்கள்.   அறிவுடையோரைத்   தவிர   வேறெவரும் நல்லுபதேசம் பெற மாட்டார்கள் (3:7)

3:7வசனத்தின் தவறான பொருள்

அவன் தான் (இவ்)வேதத்தை உம்மீது இறக்கினான் இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும்.      மற்றவை   (பல அந்தரங்களைக்    கொண்ட)   முதஷாபிஹாத்   (என்னும் ஆயத்துகள்)  ஆகும்.   எனினும்   எவர்களுடைய உள்ளங்களில் வழி கேடு இருக்கிறதோ   அவர்கள்  குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத்தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வையும்    கல்வியில்  உறுதிப்பாடு உடையவர்களையும் தவிர வேறு எவரும் அதன் விளக்கத்தை அறிய மாட்டார்கள் “”இவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவை தான். நாங்கள் இதை நம்பிக்கை கொள்கிறோம் ”என்று அவர்கள் கூறுவார்கள் அறிவுடையோரைத் தவிர   மற்றவர்கள்  இதைக் கொண்டு நல்லுபதேசம் பெற மாட்டார்கள்.

சென்ற இதழில் குர்ஆனுடைய வெளிச்சத்தில் 3:7 வசனத்தின் சரியான பொருளையும்   அது  அல்லாத  தவறான பொருளையும் இந்தத் தவறான பொருளில் ஏற்படும் விபரீதங்களையும் விரிவாகப் பார்த்தோம் அடுத்து 3:7 வசனத்தை ஹதீஸ்களைக் கொண்டுஆராய்வோம்.

ஹதீஸ்களின் வெளிச்சத்தில் 3:7 வசனம் :

அல்குர்ஆனில் நாம் பார்த்தது போல் அல்ஹதீஸிலும் “”முஹ்க்கமாத்”, “”முத்தஷாபிஹாத்”, பதங்கள் என்னென்ன பொருள்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன என ஆராய்வோம்.

முஹ்க்கமாத்:- “”வஇதாஹழரல் கிஸ்மத்த உலுல்குர்பா,   வல்யத்தாமாவல்   மஸாக்கீன்   ”(4:8)   எனும்   ஆய்த்து குறித்து இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறும் போது,
“”இது முஹ்கமானது (செயல்படுத்தப்படவேண்டியது)
மன்சூக் (மாற்றப்பட்டது) அல்ல” என்று கூறியுள்ளார்கள்.(இப்னு அப்பாஸ் (ரழி), புகாரீ, தஃப்ஸீர்)

“”இந்த ஹதீஸிலிருந்து   உறுதி   செய்யப்பட்ட   திட்டமான   ஒன்றுக்கு “”முஹ்க்கமாத்” என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.

முத்தஷாபிஹாத் :-

ஹலாலும் தெளிவானது, ஹராமும் தெளிவானது. இவை இரண்டுக்குமிடையே (“”முஷ்தபிஹாத்”) சந்தேகமானவையும் உள்ளன. இவற்றை மக்களில் அநேகர் அறிந்துகொள்ள மாட்டார்கள். (நுஃமானு பின் பUர், புகாரீ, முஸ்லிம்)

இந்த ஹதீஸிலிருந்து   தீர்க்கமாகத்   தெரியாத,   சந்தேகத்திற்கிடமானவற்றைக்   குறிக்க   “”முஷ்தபிஹாத்”   எனும்  பதம்   பயன்    படுத்தப்பட்டுள்ளது தெளிவாகப் புரிகின்றது.

இவை தவிர முத்தாஷாபிஹாக் வசனங்கள் பற்றியே குறிப்பிடும் ஹதீஸ் வருமாறு ;

நபி(ஸல்)   அவர்கள்   3:7  வசனத்தை “உலுல் அல்பாப்’ முடிய ஓதினார்கள். பின்னர் “”பல பொருளுடைய வசனங்களில் குதர்க்கம் புரிபவர்களை நீங்கள் காணின்,   இவர்களைப் பற்றித்தான் இறைவன் இந்த வசனத்தில் குறிப்பிட்டு இருக்கிறான் என்று அறிந்து,அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாய் இருந்து கொள்ளுங்கள்” என்று தனது உம்மத்தை (சமூகத்தை) எச்சரித்தார்கள். (ஆயிஷா (ரழி), புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ)

இந்த ஹதீஸை ஆழ்ந்து நோக்கும்   போது,   முத்தஷாபிஹாத்   வசனங்களில்   தர்க்கம் புரிவது எவ்வளவு விபரீதமானது என்பது தெளிவாகப் புரிகிறது.

முஹ்க்கமாத் வசனங்களில் தீர்க்கமான பொருள் இருப்பதால் அவற்றில் யாராவது    தர்க்கம் புரிந்தால்  அது எளிதாக சாதாரண அறிவு படைத்தவருக்கும் புரிந்து விடும். உதாரணமாக 8மு8=64 இது தீர்க்கமான   ஒரு   கணக்கு.   கணிதம் தெரியாதவர்கள் 64 என்பதற்குப்  பதிலாக  68  என்றோ,  66  என்றோ, 56  என்றோ  தவறு  தலாகச்  சொன்னால்  8மு8லும்  மாறுபட்டக்   கருத்துக்கள் (முத்தஷா பிஹத்தான நிலை) இருக்கின்றன என்று   சொல்ல  மாட்டோம்.  64   அல்லாத   எண்ணிக்கையை யார் சொன்னாலும், கணிதம் தெரியாதவர்கள் தடுமாறினாலும் தெரிந்தவர்கள்  அதனை நிராகரித்து விடுவார்கள். தடுமாற்றத்திற்கு வழியே இல்லை. அதே சமயம் வானவெளியிலுள்ள விண்மீன்களின் துல்லியமான எண்ணிக்கையை திட்ட வட்டமாக எண்ணிச் சொல்ல முடியுமா? இதில் பலரும் பல எண்ணிக்கைகளைச் சொல்ல வாய்ப்புண்டு. அங்கு 8மு8=64 என்பதற்குப் பதிலாக வேறு எண்ணிக்கைகளைச் சொன்னவர்கள் அனைவரும் கணித அறிவில்லாதவர்கள்   என்று   சொல்வது   போல் இங்கு யாருடைய கூற்றையும் நிராகரித்து விடவும் முடியாது, யாரையும் அறியாதவர் என்று சொல்லவும் முடியாது. இங்கு ஒருவர்தான் சொன்ன எண்ணிக்கையே சரியானது என்று வாதிடுவாரானால் நிச்சயமாக ஒருவருக்கொருவர் தர்க்கித்துக் கொள்ளவே செய்வர். இந்த தர்க்கத்திற்கு ஒரு முடிவும் செய்ய முடியாது. அப்படியானால் அது வீண் தர்க்கமேயாகும். இப்போது   இதே கண்ணோட்டத்தோடு   முஹ்க்கமாத்   வசனங்களையும், முத்தஷாபிஹாத்   வசனங்களையும்   பற்றிச்   சிந்தியுங்கள். முஹக்கமாத்   வசனங்கள்   8மு8=64 என்ற தீர்க்கமான கணக்கைப் போல் தீர்க்கமான   பொருளைக்   கொண்டவை,   அவற்றில்   வேறு   பொருளைச்   சொல்லக்   கூடியவர்களை   அறியாதவர்கள்   என்று ஒதுக்கி   விடலாம். ஆனால்; அதற்கு   மாறாக “முத்தஷாபிஹாத்’ வசனங்கள்  வான   வெளியிலுள்ள   விண்மீன்களை        எண்ணிச் சொல்வது    போன்ற    தீர்க்கமற்ற   நிலையிலுள்ள   வசனங்களாகும்.   இந்த    வசனங்களில்    பலரும் பல விதமான விளக்கங்களைச் சொல்லலாம். யாருடைய விளக்கம் தீர்க்கமானது என்று யாராலும் சொல்ல முடியாது. இந்த   நிலையில் ஒருவர் தன்னை “”வர்ராஸி கூனஃபில் இல்மி”? ஆழ்ந்தறிவுடையவர்களைச் சேர்ந்தவர் என்றும் முத்த­பிஹாத் வசனத்திற்கு  தீர்க்கமான விளக்கம்   தனக்குத்   தெரியும்   என்று   சொல்லி   ஒரு   விளக்கத்தைச்   சொல்லுகிறார்.   என்று வைத்துக்கொள்வோம்.    அவர்    சொல்லுவதுதான்   தீர்க்கமானது   என்று   யார்   முடிவு செய்வது? எந்த அடிப்படையில் செய்வது? இந்த நிலையில் இன்னொருவர் தானும் “”வர்ராஸி கூனஃபில் இல்மி”யைச் சேர்ந்தவர்   என்று சொல்லிக் கொண்டு அதே வசனத்திற்கு இன்னொரு விளக்கத்தைத் தந்தால் இவர்கள் இருவரில் யார் சொல்வது சரி? யார் உண்மையான “”வர்ராஸிகூனஃபில் இல்மி” யைச் சேர்ந்தவர் என்ற முடிவை யார் எடுப்பது? இந்த தர்க்கத்தை முடித்து வைப்பவர்  யார்? இது வீண் தர்க்கமா, இல்லையா? அப்படியானால் நாங்கள் “”வர்ராஸி கூனஃபில் இல்மி” யைச் சேர்ந்தவர்கள் என்று வாதாடி   முத்தஷாபிஹாத் வசனங்களுக்கு தீர்க்கமாக முடிவைச் சொல்லும் அந்த இருவருமே   வழிகேட்டிலேயே   இருக்கிறார்கள்.  என்பது   இந்த   ஹதீஸின்படி  புரிகிறதல்லவா? அவர்கள் பற்றி எச்சரிக்கையாக இருக்கும் படி நமக்கு நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள் அல்லவா, இப்போது சொல்லுங்கள் “”முத்தஷாபிஹாத் ” வசனங்கள் பற்றி அவற்றின் தீர்க்கமான விளக்கத்தை உண்மைப் பொருளை “”வர்ராஸிகூனஃபில் இல்மி”? ஆழ்ந்தறிவுடையோர் என்போரும் சொல்லி    முத்தஷாபிஹாத்    வசனங்களை    முஹ்க்கமாத்   வசனங்களாக   மாற்றிவிட   முடியாது   என்பது   இந்த    ஹதீஸ்     விளக்கத்திலிருந்து தெளிவாகிறதா? இல்லையா?

அடுத்து3:7 குர்ஆன் வசனத்தை அரபி இலக்கணப்படி ஆராய்வோம்:

எந்த மொழியாக இருந்தாலும் இலக்கண அடிப்படையில் ஒருவாக்கியம் முற்றுப் பெற எழுவாய், பயனிலை இன்றியமையாததாகும்எனவே நாம் இப்போது 3:7 வசனத்தை எழுவாய், பயனிலை தெரியும் நிலையில் பிரித்து எழுதுவோம்.

அவன்தான் (இவ்)வேதத்தை உம்மீது இறக்கினான்

இதில் தீர்க்கமான (தெளிவான) வசனங்கள் இருக்கின்றன.

இவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும்

மேலும் எஞ்சியவை பல பொருள் பெறத்ததக்கவை (தீர்க்கமற்றவை)யாகும்.

எவர்களுடைய   உள்ளங்களில்     கோணல் (வழிகேடு) இருக்கிறதோ அவர்கள் குழப்பங்களை நாடி, பல பொருள் வசனங்களின் முடிவுகளைத் தேடி அவற்றைப் பின்பற்றுகின்றனர்.

ஆனால் இவற்றில் உண்மைக் கருத்துக்களை (முடிவு?ய்ஷ்ஐழியிVerdஷ்உமி) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியார்.

அறிவில் தேர்ந்தவர்களோ “”நாங்கள்    இவற்றில்    (பூரணமாக)    நம்பிக்கை   கொண்டோம்.    இவை    அனைத்துமே    எங்கள்   இரட்சகனிடமிருந்து வந்தவை தாம்” என்று கூறுவார்கள்.

அறிவுடையோரைத் தவிர வேறெவரும் நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.

3:7   வசனத்தை    சிறு    வாக்கியங்களாகப்   பிரித்து   எழுதியிருக்கிறோம். அவற்றில் எழுவாய், பயனிலை தடித்த எழுத்துக்களில் காட்டப்பட்டுள்ளன. இந்த வாக்கியங்களில்    எழுவாய்   பயனிலையில்  குழப்பமும்  இல்லை, கூறு போடப்படவும் இல்லை என்பது தெளிவாகவே புரிகிறது.

இப்போது அவர்கள் கொடுத்திருக்கும் பொருளின் அடிப்படையில் 3:7 வசனத்தை சிறு வாக்கியங்களாகப் பிரித்துப் பார்ப்போம்.

அ. அவன் தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான்.
ஆ. இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன.
இ. இவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும்.
ஈ. மற்றவை (பல அந்தரங்களைக் கொண்ட) முதஷாபிஹாத்(என்னும் ஆயத்துக்கள்) ஆகும்.
உ. எனினும் எவர்களுடைய உள்ளங்களில்     வழிகேடு   இருக்கிறதோ    அவர்கள்    குழப்பத்தை ஏற்படுத்துவற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர்.
ஊ. அல்லாஹ்வையும், கல்வியில் உறுதிப்பாடுடையவர்களையும் தவிர வேறு யாரும் அதன் விளக்கத்தை அறியமாட்டார்கள்.
எ. அவர்கள் “”இவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவை தான், நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம் என்று கூறுவார்கள்.
ஏ. அறிவுடையோரைத் தவிர வேறெவரும் நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.
இந்த 8 சிறு வாக்கியங்களில் ஊ?வாக்கியத்தையும் எ?வாக்கியத்தையும் உற்று நோக்கவும்.

அவர்களது மொழி பெயர்ப்புப்படி ஊ?வாக்கியத்தில் எழுவாயாக அல்லாஹ் இடம்   பெறுவதோடு ஆழ்ந்தறிவுடையவர்களும் இடம் பெறுகிறார்கள்.

எ?வாக்கியம் “”அவர்கள்” என்ற பன்மைச் சொல்லில் ஆரம்பிக்கிறது. அப்படியானால் இந்த எ? வாக்கியத்தின் அவர்கள் யார் யார்?  என்பதை விளங்க வேண்டும்.

எந்த   மொழியிலும்   தொடர்   வாக்கியங்களில்   முந்திய   வாக்கியத்தின் எழுவாயே அதைத்    தொடர்ந்து வரும் வாக்கியத்திற்கும்   எழுவாயாகும்.   என்பதில்   இலக்கணம்   அறிந்தவர்களுக்கிடையே   மாற்றுக்   கருத்து   இருக்க   முடியாது.   ஆக அரபி இலக்கணஅடிப்படையில் எ?வாக்கியத்தில் “”அவர்கள்” என்பது அவர்களது மொழி பெயர்ப்புப்படி அல்லாஹ்வும் கல்வி அறிவில் உறுதிப்பாடு உடையவர்களும் ஆகும்.

அவ்வடிப்படையில் இந்த எ? வாக்கியத்தை நிறைவு செய்து பார்ப்போம்.

அல்லாஹ்வும், கல்வி    அறிவில்    உறுதிப்பாடுடையவர்களும்   “”இவை அனைத்து எங்கள் இறைவனிடமிருந்து வந்தவை தான்; நாங்கள் அதை  நம்பிக்கை கொள்கிறோம்” என்று கூறுவார்கள்.

இந்தக் கூற்றை ஏற்க முடியுமா? என்று சிந்தியுங்கள்; ஏற்க முடியாது.

அல்லாஹ்வே   “”  இவை   அனைத்து   எங்கள்    இறைவனிடமிருந்து   வந்துவை   தான்” என்று சொல்லுவதாக இருந்தால் அந்த இறைவன் யார்? அல்லாஹ்வுக்கு மேல் ஒரு அல்லாஹ் இருக்கின்றானா? இத்தகைய கூற்று நம் ஈமானைப் பாதிக்காதா?

இந்த இடத்தில் “”நீங்கள்   ஏன்   அல்லாஹ்வையும் சேர்த்துச் சொல்லுகிறீர்கள்? கல்வியில் உறுதிப்பாடுடையவர்களை மட்டும் ஏன் சொல்லக் கூடாது”   என்று   நம்மிடம்   சிலர்   கேட்கலாம்.   ஆம்! இந்த   வாக்கியத்தில்   அல்லாஹ்வைச் சேர்ப்பதால் எப்படிப்பட்ட விபரீதமான பொருள் ஏற்படுகிறதோ, அதே போல் ஊ? வாக்கியத்தில் கல்வி அறிவில்   உறுதிப்பாடுடையவர்களைச் சேர்ப்பதாலும் இதே போல் விபரீதமான  பொருள்  ஏற்படுகிறதே?   அதை  ஏன் அவர்கள்  உணர   மறுக்கிறார்கள் என்பது தான் நமது கேள்வி. ஊ?வாக்கியத்தில்   இருக்கும்   எழுவாயே எ?வாக்கியத்திற்கும்    எழுவாயாகும்.    என்பது   இலக்கண    விதியாகும்.     எனவே      ஊ? வாக்கியத்தின்  எழுவாயை, எ?வாக்கியத்திற்காக கூறு போட முடியாது. அதாவது ஊ? வாக்கியத்திலுள்ள “” அல்லாஹ்வையும், கல்வியில்    உறுதிப்பாடுடையவர்களையும்”    என்ற   எழுவாயை     கூறு     போட்டு,   அல்லாஹ்வைப்     பிரித்து    கல்வியில்     ஆழ்ந்தறிபவர்களை மட்டும் எ? வாக்கியத்தின் எழுவாயாக   ஆக்க   முடியாது.   எந்த   மொழியினதும் இலக்கண விதி இதற்கு இடம்தராது.

எனவே இலக்கண விதிப்படிஊ?வாக்கியத்திற்கு எழுவாயாக அல்லாஹ்வையும், கல்வியில்உறுதிப்பாடுடையவர்களையும் அவர்கள்குறிப்பிடுவதால், எ?வாக்கியத்தின் எழுவாயாகவும், அதே அல்லாஹ்வும், கல்வியில் உறுதிப்பாடுடையவர்களும் என்றே அவர்கள்கூற்றுப்படி அமைய வேண்டும். முன்னைய வாக்கியத்தில் வரும் எழுவாய் பின்னைய வாக்கியத்திற்கு வராது என்றால் பின்னைய வாக்கியத்தின் எழுவாய் தெளிவாகக் குறிப்பிடப்பிட வேண்டும் என்பது தான் இலக்கணமரபாகும். உதாரணமாக,

தாவூதும்,   அவரது   தோழர்களும்   வந்தார்கள்,   சாப்பிட்டார்கள்.   இந்த இரண்டு வாக்கியங்களில் முதல் வாக்கியத்தில் எழுவாய் இருக்கின்றது. 2?வது வாக்கியத்தில் எழுவாய் மறைந்து இருக்கிறது.   எனவே இலக்கண மரபுப்படி தாவூதும் அவரது தோழர்களும் சாப்பிட்டார்கள்   என்று   பொருள்   கொள்வது   தான்   விதியாகும்.   தாவூதுக்கு   வயிற்றுக்  கோளாறு இருந்தது, அதனால் அவரதுதோழர்கள்   தான்   சாப்பிட்டார்கள்   என்று   எவராவது   கூறினால்   இலக்கண விதிப்படி அது தவறாகும். அப்படியானால் வாசகம் இவ்வாறு   அமைந்திருக்க   வேண்டும்.   தாவூதும்   அவரது   தோழர்களும்   வந்தார்கள்,   அவரது   தோழர்கள்   சாப்பிட்டார்கள்.  சொல்லுவதைத்   தெளிவாகவும்,   தீர்க்கமாகவும்    குறிப்பிடுவதற்கே ஒரு மொழியின் இலக்கணம் அமைத்துள்ளது வாக்கியத்தில் தெளிவு இல்லை என்றால் அங்கு இலக்கணவிதி மீறப்பட்டுள்ளது என்பதே பொருளாகும்.

அவர்களது மொழி பெயர்ப்பு சரி என்றால் அரபி இலக்கணப்படி அந்த வாக்கியம் கீழ்க்கண்டவாறு அமைந்திருத்தல் வேண்டும்.

“”வமா யஃலமு தஃவீல்ஹு இல்லல்லாஹ் வர்ராஸிகூனஃபில் இல்ம். வர்ராஸிகூனஃபில் இல்மி யகூலூன ஆமன்னாபிஹி” என்று அரபி இலக்கண மரபுப்படி அமைதல் வேண்டும். 3:7 வசனத்தில் இவ்வாறு இல்லை என்பதை சாதாரண அறிவு படைத்தவர்களும் அறிவார்கள். எனவே அவர்களது மொழி பெயர்ப்பு   தவறு என்பது வெள்ளிடை மலை. அல்லது அல்குர்ஆனில் அரபி இலக்கண விதி மீறப்பட்டடுள்ளது என்று அவர்கள் சொல்ல வருகிறார்களா? தங்களின் இந்த தவறான கூற்றை 89:22 குர்ஆன் வசனத்தைத் தவறாக மொழி பெயர்த்து நியாயப்படுத்த முன்வரலாம்.   காரணம்   அவ்வாறு   சிலர்   நியாயப்படுத்தியுள்ளனர்.   எனவே அதற்கு முன்பே இந்த 89:22 வசனத்தில் அவர்கள் கூறும்   தவறான   மொழி   பெயர்ப்பையும்,   சரியான   மொழி பெயர்ப்பையும் இங்கு விளக்கி, அந்த ஐயத்தையும் போக்கி விடுகிறோம்.

“”வஜாஅ ரப்புக வல் மலக்கு ஸஃப்பன் ஸஃப்பா” (89:22) இந்த வசனத்திற்கு அவர்கள்   தங்கள் கூற்றை   நியாயப்படுத்தி, தவறாக மொழி பெயர்ப்பது வருமாறு :

“”உம்முடைய இறைவனும்,  வானவரும் அணியணியாக வரும்  போது    இப்படித்தவறாக   மொழி பெயர்த்துவிட்டு “”ஜாஅ” என்று அரபிப்பதத்” தில்   வரும்   பயனிலை   முன்னைய   வாக்கியத்தில்   வரும்   அல்லாஹ்வுக்கும்   பின்னைய   வாக்கியத்தில்   வரும்   மலக்குகளுக்கும்    பொருந்தும்.   அதே   சமயம்   அணியணியாக   வருவது   அல்லாஹ்வுக்குப்   பொருந்தாது.  எனவே “”ஜாஅ” அரபிப்பதம் இரண்டு வாக்கியங்களையும் கட்டுப் படுத்துக்கிறது.  மாறாக,   அணியணியாக   வருவது   பின்னைய வாக்கியத்திற்கு மட்டுமே   பொருந்துகிறது.   என்று   விபரீதமாகக்   கூறி,   தங்கள்   கூற்றை   நியாயப்படுத்துகின்றனர்.   இதே அடிப்படையல் 3:7 வசனத்திலுள்ள     நாம்    குறிப்பிட்ட    ஊ?வாக்கியத்தில்   அல்லாஹ்வும்,   கல்வியில்   ஆழ்ந்தறிபவர்களும்   இடம்   பெற்றாலும் எ?வாக்கியத்தில்   அல்லாஹ்   இடம்   பெற   மாட்டான்   என்று   தவறாக    வாதிடுகின்றனர்.   இவ்வாறு   கூறுவதன்   முலம் அரபி இலக்கணத்தை    அவர்கள்   கொச்சைப்   படுத்துகின்றனர். அவர்கள்   கூறும்   குறைபாடு   இந்த 89:22 வசனத்திலும் இல்லை. உண்மையில் அவர்கள் மொழி பெயர்ப்பே தவறாகும். இந்த 89:22 வசனத்தில் சரியான மொழி பெயர்ப்பு வருமாறு :

“”மலக்குகள்   அணியணியாயிருக்க   உமது   ரப்பு   வரும் போது”   இதுவே   சரியான மொழி பெயர்ப்பாகும். அதாவது “”இராணுவ அணிவகுப்பை   ஜனாதிபதி பார்வையிட்டார்”   என்று    கூறப்படுவது    போன்ற    கருத்தில் வரும் வசனமாகும் இது. இந்த 89:22 வசனத்திலுள்ள   “”ஜாஅ” என்ற   பதம்   அல்லாஹ்வுக்கு   மட்டுமே பொருந்தும், மலக்குகளுக்குப் பொருந்தாது. மலக்குகளையும் குறிப்பிடும் என்று கூறுவது இவர்களின் தவறான மொழி   பெயர்ப்பாகும்.   மலக்குகளுக்கு   ஸஃப்பன்  ஸஃப்பா என்று பயனிலை தனியாக இருக்கிறது.

இவர்களின் இந்த விபரீதமான மொழி பெயர்ப்பின்படி அணியணியாக வரும் அளவிற்கு பல அல்லாஹ்க்கள் இருப்பது போலும், அந்த அல்லாஹ்க்கள் மலக்குகளோடு அணியணியாக வருவது போன்றும் மிகவும் தவறான ஒரு சிந்தனையை உண்டாக்குகிறது என்பதை இங்கு நாம் கவனத்தில கொள்ள வேண்டும்.

இப்போது அரபி இலக்கண விதிப்படியும் அவர்களின் கூற்று தவறு என்பதும் இரண்டு வித மொழி பெயர்ப்புக்கும்அரபி இலக்கணம்இடம் கொடுக்கிறது என்று அவர்கள் கூறுவது அரபி இலக்கணத்தில் பழி போடுவதாகும் என்பதும் தெளிவாக விளங்குகிறதல்லவா?

அவர்கள் தங்கள் இதழ் செப்.,88, பக்கம் 33-ல் குறிப்பிட்டுள்ளது வருமாறு :

“”தெளிவானஅரபி மொழியில் அருளப்பட்ட திருக்குர்ஆனின் இந்த வசனத்திற்குயார் செய்த பொருள் சரி என்று முடிவு செய்திடஅரபி மொழி இலக்கணத்தை  நாம்   ஆராயும்   போது,   இந்த   இரண்டு அர்த்தங்களும்   இலக்கணத்தை ஒட்டியே   அமைந்துள்ளன. இலக்கணத்தில் எந்த விதியையும் இரண்டு மொழி பெயர்ப்புகளும் மீறி விடவில்லை இன்னும் சொல்வதானால் அரபி இலக்கணம் இந்த இரண்டுஅர்த்தங்களுக்கும்   இடம்   தருவதனால்   தான்  இந்த   சர்ச்சையே  தோன்றியுள்ளது.  சரியான   பொருளை புரிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட இலக்கணவிதிகள் சில சமயங்களில் இப்படிக்காலை வாரி   விடுவதுண்டு. அரபி மொழி உள்பட எந்த மொழியும்  இதிலிருந்து விதி விலக்கு பெற வில்லை”.

இவர்களின் இந்தக்கூற்று நமக்குச் சிரிப்பை ஏற்படுத்துகிறது. சரியான பொருளைப் புரிந்து    கொள்வதற்காக இலக்கண விதிகள் அமைக்கப்பட்டுள்ளன என்று அவர்களே கூறிக்கொண்டு, அதே இலக்கண   விதிகளே   காலை   வாரி விடுவதாகவும் அவர்களே கூறுவது   இங்கு    எழுதக்   கூசும்   ஒரு   முதுமொழியை நமக்கு ஞாபகப்படுத்துகிறது. மேலும், “”இன்னும் சொல்வதனால் அரபி   இலக்கணம் இந்த இரண்டு அர்த்தங்களுக்கும் இடம் தருவதனால் தான் இந்த   சர்ச்சையே   தோன்றியது”   என்ற  அவர்களின்   கூற்று, நபி(ஸல்) அவர்களின் காலத்திலோ, நபித்தோழர்களின் காலத்திலோ இந்த சர்ச்கை தோன்ற வில்லை என்பதை அவர்களேஒப்புக் கொள்வதை உணர்த்துகிறது.

அதாவது    அல்லாஹ்    சொன்னதை   நபி(ஸல்)   அவர்கள்   அப்படியே   எடுத்துரைத்த   அரபி   இலக்கண  இலக்கண மறியாத  மக்களிடையே இந்த சர்ச்சை இல்லை. அரபி  இலக்கண   முறையில் அதனை நபி(ஸல்)  அவர்களிடமிருந்து   கற்றுக்கொள்ளாத நபித்தோழர்கள் காலத்திலும் இந்த சர்ச்சை இல்லை   என்பதை    அல்ஜன்னத்   ஆகஸ்ட்   89  இதழ்   பக்ககம்  9-ல்  அவர்கள்  அளித்துள்ள ஒரு விமர்சன விளக்கமேநமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. மேலும் தங்களது   அறிவில் குறை வைத்துக் கொண்டு   மொழிகளின் இலக்கண விதிகளில் குறை காண்பது தான் வேடிக்கையாக இருக்கிறது.

மொழி இலக்கணம் தீர்க்கமாகபொருள் சொல்லும்மொழி இலக்கணம் தான், வழுக்கிச் செல்லும் மொழி விளக்கெண்ணை இல்லைஎன்பதை அவர்கள் உணரும் காலம் என்று வருமோ? இவர்கள் தான் அரபிப் பண்டிதர்களாம்!

நபி(ஸல்)அவர்களின் நேரடிப் பார்வையிலேயே அல்குர்ஆனின் அத்தியாயங்களும்   வசனங்களும்   முறைப்படி தொகுக்கப்பட்டு விட்டன. அபூபக்கர் சித்தீக்(ரழி) அவர்களின்  ஆட்சி   காலத்தில்   பலரிடமிருந்த   சில  பலவசனங்கள் ஒரே நூலாகசேர்க்கப்பட்டது. உதுமான்(ரழி) அவர்களின் ஆட்சி காலத்தில்   இஸ்லாம் பல நாடுகளுக்கும் பரவிவிட்டது.அந்த சமயத்தில் அல்குர்ஆனை பலரும் பலவிதமாகஓதி வருகிறார்கள்என்று புகார்எழுப்பப்பட்டது. எனவே உதுமான்(ரழி)அவர்கள் அபூ பக்கர் (ரழி) அவர்களது ஆட்சியில்  ஒன்று சேர்க்கப்பட்ட குர்ஆனைப்பார்த்துபல பிரதிகள் எடுத்ததோடு, குர்ஆன் ஓதப் படவேண்டிய முறையையும்நபி(ஸல்) அவர்களதுகாலத்தில்   குர்ஆனை   பதிவு   செய்த   ஸயது  இப்னு  தாபித்  (ரழி)  இன்னும்  இவர்கள்  போன்றவர்களின் துணையுடன் ஒழுங்கு படுத்தினார்கள்.  இப்படி  உதுமான் (ரழி)  அவர்களின் ஆட்சியில்  பதிவு  செய்யப்பட்ட   அல்குர்  ஆனைப் பார்த்து அதே முறையில் பதிவாகி சமீபத்தில் அரபு நாடுகளில் ஒப்புதலுடன் வெளியிடப்பட்ட அல்குர் ஆனில் “”வமாயஃலமு தஃவீலஹு இல்லல்லாஹ்” என்ற இடத்தில் வக்ஃபுலாசிம்   என்ற   நிறுத்தல்   குறி   இருக்கிறது.   இந்த வக்ஃபிலாசிம் என்ற இடத்தில் கண்டிப்பாக நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் பொருள் பேதகம்ஏற்படும் என்றுவிளக்கமும் இருக்கிறது. தமிழ்மொழிபெயர்ப்புகளிலும் இதுகுறிப்பிடப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. அதுமட்டுமல்ல, இந்த  3:7  வசனத்தைத்தவறாக மொழி  பெயர்த்து  எழுதும்  ´ஆக்கள், காதியானிகள் போன்றோர் பதிவு செய்திருக்கும் குர்ஆனிலும், இதே இடத்தில் அரபிஒரிஜினலில் வக்ஃபுலாசிம்இருக்கத்தான் செய்கிறது. இந்த நிலையில்இந்த அரபி  வசனத்தை வேறு  மொழிகளில்  மொழி  பெயர்க்கும் போது இந்த   வக்ஃபுலாசிமை பொருட்படுத்தாமல் அதன் முக்கியத்துவத்தை அலட்சியம் செய்து மொழி பெயர்ப்பதே அவர்கள் மக்களை  ஏமாற்றி   வழிகெடுத்து, தாங்கள் சுய  ஆதாயம்  அடையும்நோக்கத்துடன் செயல்படுகிறார்கள் என்பதைத் தெளிவாக உணர்ந்துகிறது அல்லவா?

இன்று பிரபல்யமாக நடைமுறையில் இருக்கும் ஹஃப்ஸுப்னி கலைமானிப்னில் முகீரத்தில் அஸதிய்யில் கூஃபி அவர்களின் கிரா அத்தானது ஆஸிமுபின்அபின் நுஜூதில் கூஃபிய்யித்தாபியீ அவர்களின் கிராஅத்துக்கு ஒத்த அமைப்பில் இருக்கிறது. ஆஸிமுபின்அபின் நுஜூதில் கூஃபி அவர்கள் தமக்கு அபூ அப்திர்ரஹ்மான் அப்தில்லாஹிப்னி   ஹபீபிஸ்ஸுலமீ   அவர்   அறிவித்ததாகவும், அவர்கள் தமக்கு உஸ்மானு பின் அப்பான், அலிய்யிபின் அபீதாலிப், ஜைதுபின் ஸாபித்,    உபையிபின் கஃபு(ரழி?ம்) ஆகியோர் அறிவித்ததாகவும், இந்நான்கு பேர்களும் தங்களுக்கு நபி(ஸல்) அவர்கள் அறிவித்ததாகவும் கூறுகின்றனர்.

இது இப்னு அப்பாஸ் (ரழி)அவர்களின் தஃப்ஸீரின்523-ம் பக்கத்தில்காணப்படும்முடிவுரையில்எழுதப்பட்டுள்ளது. இந்த தஃப்ஸீரில்எழுதப்பட்டுள்ள அல்குர் ஆனின் வசனங்கள் மேற்காணும் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளன. இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களின்   இந்த தஃப்ஸீரின் 43-ம்  பக்கத்தில்  இடம்   பெற்றுள்ள “”வமாயஃலமு   தஃவீலஹு   இல்லல்லாஹ்” என்ற இடத்தில் வக்ஃபுலாசிம் போடப்பட்டுள்ளது. எனவே   ஹஃப்ஸ்  அவர்களுடைய   கிரா  அத்திலும் இந்த இடத்தில்நிறுத்தப்பட்டுள்ளதுஎன்பதுதெளிவாகிறது. இதனையும்சகோதர சகோதரிகள் கவனிக்கவும்.

இந்த விளக்கங்களுக்குப்பிறகு அரபி இலக்கண விதிப்படி இந்த 3:7 வசனத்தில் இரு விதமாக மொழி பெயர்க்க இடம் இருக்கிறது. என்று கூறுகிறவர்கள் தவறாகக் கூறுகிறார்கள். அரபிஇலக்கணத்தில்அநியாயமாக குறைக்காணகிறார்கள். அப்படிப்பட்ட குறைபாடுஉள்ள நிலையில் அரபி இலக்கணம் இல்லை. அரபி இலக்கணப்படியும் 3:7வசனம் ஒரே பொருளைத் தரும் தெளிவாக நிலையில்இருக்கிறது.  என்பது  உள்ளங்கை  நெல்லிக்கனி போல் தெரிகிறது.  இந்த  நிலையில் தங்களை அரபு மொழி கற்றவர்கள், அரபி இலக்கணம் அறிந்தவர்கள் என்று கூறிக்கொள்ளுபவர்கள் இவ்வாறு தவறாகக் கூறி வருவதுதான் நமக்குச்சந்தேகத்தைத்               தருகிறது.

அடுத்து தலை சிறந்த அல்குர்ஆன் விரிவுரையாளர்களின் 3:7 வசனம் பற்றிய விளக்கங்களைப் பார்த்துவிட்டு, அல்ஜன்னத்       இதழில் வரும் “” முதஷாபிஹாத் ” தொடர் கட்டுரையின் அபத்தங்களை வரிக்குவரி அலசுவோம்.(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

——————————————————————-
சமூகவியல்:

17. கண்ணியம் காப்பீர்!

புலவர் செ. ஜஃபர் அலீ, பி.லிட்.,

இஸ்லாமிய   சமூக   அமைப்பில்   இறையில்லம்   என்றழைக்கப்படும்   “மஸ்ஜிதுகள் ‘   (பள்ளிவாசல்கள்) மிக மிக கண்ணியமாக இடங்களாகும். எல்லாம்   வல்ல  அல்லாஹ்வை   ஐவேளை   வணங்குவதற்குரிய   அமைதியான? தூய்மையான இடங்களாகும். அந்தந்தப்    பகுதி ஜமா    அத்தினர்களே   பள்ளிவாசல்களைக்   கண்காணித்து   நிர்வாகம்   செய்யும்    பொறுப்பையும்  ஏற்றுக்    கொண்டுள்ளார்கள்.    பள்ளிவாசல்களின் பராமரிப்பு குறித்து தெளிவாகவே திருமறை உரைக்கின்றது.

“”எவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் விசுவாசித்து தொழுகையையும் கடைபிடித்து, ஜக்காத்தும் கொடுத்து வருவதுடன்   அல்லாஹ்வையன்றி மற்றெவருக்கும்அஞ்சமாலும்இருக்கிறார்களோ,அவர்கள் தாம்அல்லாஹ்வுடையபள்ளிகளைப் பரிபாலனஞ்செய்யக் கூடியவர்கள். இத்தகையோர் தாம் நேரான வழியில் இருப்பதாக நம்பத்தக்கவர்கள்.” (அல்குர்ஆன்9:18)

இத்திருமறை திருவசனத்தில் அல்லாஹ், பரிபாலனஞ் செய்யக் கூடியவர்களின் தகுதிகள் பற்றி குறிப்பிட்டுக் காட்டி விட்டான்.

“முத்தவல்விலகள்’ என்றும், ” ஜமாஅத்   தலைவர்கள்’   என்றும்   நாட்டாண்மை’   என்றும் தகுதி  (?)   சால் தலைமைப் பதவிகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் இவர்களின் உண்மைத் தகுதிகளை சம்பந்தப்பட்ட மக்கள் நன்றாகவேஅறிவர்! இவர்களில் பெரும்பாலோர்தொழாதவர்கள்   மட்டுமல்லர்;      இஸ்லாமிய     அடிப்படைக்     கொள்கை ?   கோட்பாடுகளையே    உணராதவர்கள்!   அறிய     ஆவலில்லாதவர்கள்! மொத்தத்தில் புகழ் விரும்பிகள்!

சமுதாயத்தில் சிறப்புயர் நிர்வாகத்தை  இவ்வாறாக இழிவுபடுத்து பவர்கள் உறுதியாக இறைத்தண்டனைகளுக்குரியவர்களே!

இமாம்களும்,   முஅத்தின்களும்    அந்தந்த    ஊர்   மக்களின்      பாவங்களுக்குப்       பரிகாரமானவர்களாவே    பெரும்பாலும்    கருதப்படுகின்றார்கள்   அதாவது    அவர்களுடைய       தொழுகையும்   ?   நோன்பும்   அனைத்து   மக்களுக்கும்    ஈடேற்றத்தை அளிக்கப் போதுமானதென்றே   கருதுகின்றார்கள். என்னெ இவர்கள் மதியீனம்!

மேலும், அல்லாஹ்வின் மஸ்ஜிதுகள், ஊர்மக்களுக்கு பொழுது போக்கும் இடங்களாகவும், பஞ்சாயத்து பேசும் சடையாகவும்,       மல?ஜலம் கழிக்க?குளிக்க? உறங்க? வசதியான இடங்களாகவும் மட்டும் பயன்படுத்தப்படுகின்றன.   தங்களுடைய    தேவைகளை பூர்த்தி செய்வதற்குகாகபள்ளிவாசல்கள் பக்கம் வருபவர்கள். “”அல்லாஹுஅக்பர்” என்னும்பாங்கொலி தொங்கியவுடன்ஷைத்தான்களைப்போல் பள்ளிவாசல்களை விட்டு விரண்டோடி விடுகின்றனர்.

மேலும் சில ஊர்களில் பள்ளிவாசலை ஒட்டியே தர்கா(ஹ்)களும் அமைந்திருக்கும்.   தொழுகைக்கு இடையூராக பலவித பூஜைகள் (பாத்திஹாக்கள் என்ற பெயரால்) நடந்து கொண்டிருக்கும். இணையில்லாத    இறைவனுடைய    ஆலயத்துக்கு அண்மையிலேயே “இணைவைத்தல்’ நிகழ்ந்து கொண்டிருக்கும்?

கொடி ஊர்வலம்?சந்தனக்கூடு என்று அமளி?துமளிகள் பள்ளி வாசலில்   இருந்தே   ஹஜ்ரத்து   மார்கள்   “துஆ’வுடன் புறப்படும். இத்தியாதி அலங்கோலங்கள்? அவலங்களுக்குச் சமுதாயத்தில் முடிவே இல்லையா? எவரும் சிந்தனை செய்ய மாட்டார்களா?

“”அன்றி, அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுக்களில்   அவனுடைய  (திரு)  நாமத்தைத் துதி   செய்வதைத் தடுத்து, அவைகளைப் பாழாக்க முயற்சிப்பவனை விட, மகா அக்கிரமக்காரன் யார்? அச்சத்துடனன்றி, அவைகளில்    நுழைய அவர்களுக்கு உரிமையே இல்லை. (அவ்வாறிருக்க, அதற்கு மாறாக நடக்கும்) அவர்களுக்கு இவ்வுலகில் இழிவுதான். அன்றி மறுமையிலோ அவர்களுக்கு மகத்தான வேதனையுண்டு”(அல்குர்ஆன்2:114)

அல்லாஹ்வுக்கு இணை வைப்பதற்காக அவனுடைய இல்லத்தையே பயன்படுத்தும்   இந்த   சூடு  ? சொரனையற்ற சகோதரர்கள் என்றைக்குத்தான் மனம் வருந்துவார்களோ? திருந்துவார்களோ?

மேலும், ரபீயுலவ்வல்?ரபீயுலாகிர் மாதங்க்ள வந்துவிட்டால் பள்ளிவாயில்களில் தோரணமென்ன? வண்ணத்தாள்கள் என்ன?மின் விளக்கு அலங்கார?அலங்கோலங்கள் தாம் என்னென்ன? அதற்கு முனைந்து செயல்படும் செயல் வீரர்களாகிய இளைய தலை முறையினர் தம்மையோ, எதற்காக நாம் செயல்படுகின்றோம் என்பதையோ ஒரு நொடிப் பொழுது சிந்தித்திருப்பார்களா? என்றால் அது மட்டும் தான் இல்லை.

இறைக்கிணை   வைத்து  ?   சினிமா   இசைகளில்   ஓதப்படுகின்ற   “மெளலூது’   நிகழச்சியை   இஸ்லாத்திற்கு   பொருத்தமான  (?) நிகழ்ச்சியாகக் கற்பனை செய்துகொண்டு, இந்தியாதி பணிகளில் நாம் ஈடுபவதால், மறுமையில்   சுவர்க்கப்  பேற்றையும்,   இறை   திருப்தியையும், இறைத்தூதரின் அன்பையும் ஒருசேர பெற்றுவிடலாமென எண்ணுகின்றனர்.ஐயகோ! வேதனை தரும் இவர்களின்இச்செயல்கள்   இறை   சாபத்தையல்லவா பெற்றுத்தரும் என்பதை இவர்கள் உணர்வதில்லை! இவர்களுக்கு இவர்கள் நம்பிக்கை வைத்துள்ள    எவரும்    அறிவுறுத்துவதாகவுமில்லை!   இவர்கள்   மனம்   போன   போக்கில்   விளையாடுவதற்கு,   இவர்களுக்கு பள்ளிவாசல்கள் தாமா கிடைக்க வேண்டும்? அது தான் என்வினா!

“”அவன் விரும்பினால் உங்களை அழித்து (மற்றொரு) புதிய படைப்பைக் கொண்டு வந்து விடுவான். இஃது அல்லாஹ்வுக்கு    ஒரு பொருட்டன்று.” (அல்குர்ஆன்35:16,17)

எனவே, சகோதரர்களே! பள்ளிவாசல்களைப் பராமரிப்பவர்கள் இறையச்சமுடனும், பயன் படுத்துபவர்கள் பயன் படுத்த வேண்டியவாறும் நடந்து கொள்ளுங்கள்! (இன்ஷா அல்லாஹ் வளரும்).

——————————————————————————————————————-

மெய்ப்பொருள் காண்போம்; அவ்வழி நடப்போம்.

தொடர் :7

க்ஷி. அப்துல் ஸமது ய.சி., னி.றீஉ., (சிஐஆ)சென்னை

குர்ஆனையும்,   நபி மொழிகளையும்   நேரடியாக வாசித்து.  மார்க்ககத்தை   விளங்கி, ரசூல்(ஸல்) அவர்களை முன்  மாதிரியாகக் கொண்டு வாழவேண்டியது முஸ்லிம்கள் ஒவ்வொருவரின் தலையாய   கடமையாகும்.   மற்ற   எல்லாத்துறைகளையும்  போலவே மார்க்க அறிவிலும், செயலிலும் எல்லோரும் சமநிலை அடைவது சாத்தியமல்ல தான். ஆனால் முன்னர் குறிப்பிட்டது போல் நபித் தோழர்களில்  ஒரு  சாராருக்கு  மாத்திரம்   சில   உண்மைகள்   தனிப்பெரும்   சலுகையாக அறிவிக்கப்பட்டது என்றும் அவ்வறிவு இரகசியமாகப் பாதுகாக்கப்பட்டு, பிற்காலத்தில்அதேபோல்தெரிவு செய்யப்பட்ட ஒருசிலருக்குவழங்கப்பட்டது என்றும் சூபியாக்களும்அவர்களைப் பின்பற்றுபவர்களும் கூறுகின்றனர். இக்கருத்தை  மவ்லவிகளில்  பெரும்பாலானோர்  நம்புவதோடு  மக்களுக்கும்     போதிக்கின்றனர்.   நபி   மொழிகளில்  சிலவற்றை,   தங்களின்   இத்தகைய  கருத்துக்கும்,  வாதத்திற்கும் ஏற்ப திரித்து   விளக்கம்  கூறுகின்றனர். அத்தகைய நபி மொழிகளில் ஒன்றை நாம் ஆய்வுக்காக எடுத்து விளக்குகின்றோம்.

அபூஹுரைரா (ரழி) அவர்கள் கீழ்வருமாறு அறிவித்துள்ளார்கள் :

“”நான் இரண்டு   வி­யங்களை   ரசூல்  ( ஸல்)  அவர்களிடமிருந்து   அறிந்து   மனனம் செய்திருந்தேன். ஒன்றை உங்களிடையே பரப்பிவிட்டேன். மற்றொன்றை அறிவித்தால் (பரப்பினால்)என்னுடையகுரல்வளை வெட்டப்பட்டு விடும் என்று அஞ்சுகிறேன்.”?புகாரீ

சூபிகள்இந்த ஹதீதை ஆதாரமாகக் காட்டி, அபூஹுரைரா(ரழி)அவர்கள் மிகவும்இரகசியமான பல ஹதீதுகளைஅறிந்திருந்தார்கள்என்றும்,அவைகள் சாதாரண மக்கள் புரிந்து கொள்ள முடியாதவை ஆதலால் அறிவாற்றலும், தனிச் சிறப்பும் வாய்ந்த தங்களுக்குமாத்திரம் அவை அறிவிக்கப்பட்டுள்ளன என்றும் கூறுகின்றனர். சாதாரண  மக்களுக்கு இவை புரியாதவை மாத்திரமல்லாததோடு  விபரீதமாகவும்   தோன்றுமாம்.  எனவே   தான் அபூஹுரைரா (ரழி) அவர்கள்   அவைகளை  வெளிப்படுத்தினால் தம்  உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சி அவைகளை  வெளிப்படுத்தவில்லை   என்றும்  கூறுகின்றார்கள்.   மேலும் ஆத்தரங்கமான  பல வி­யங்கள் வெளியிடப்பட்டால் சாதாரணமக்கள் அவைகளைப் புரிந்து கொள்ளவோ, கிரகிக்கவோமுடியாமல் குழம்பிவிடுவார்கள்;எனவே  அவை  குறிப்பிட்ட   சிலருக்கு     மட்டுமே     இரகசியமாக   அறிவிக்கப்பட்டன.    என்றும்   கூறுகிறார்கள். குர்ஆனிலும், ஹதீதுகளிலும் வெளிப்படையாகக்   காணப்படுபவை  அல்லது விளங்கப்படுபவை மாத்திரம் ஈமான் ஆகிவிடாது, இரகசியமான   அந்தரங்க ஞானம் பெற்றவர்களுடைய ஈமான் தான் நிறைவுற்றதும், உயர்வானதும் ஆகும். என்பது இவர்களின் சித்தாந்தம்.       மக்களை   இச்சித்தாந்தத்தை   நம்பச்   செய்து,   இஸ்லாத்திற்கு   புறம்பான சூபிகளுடைய மாயைகளும் ஆவேச உணர்ச்சிகளும் ஈமானுக்குட்பட்டவை என்று   நிலை   நாட்டுகின்றனர்.   அது   மட்டுமல்லாமல்   தங்களுடைய   செயல்கள்   குர்ஆன்,     ஹதீதுகளு(­ரியத்து) க்கு அப்பாற்பட்டவை என்றும் கோருகின்றனர். மவ்லவிகளில்  பெரும்பான்மையினர்    இவைகளை எல்லாம்  நம்பிச்    செயல்படுவதோடு  தமது    ஜூம்  ஆ   பயான்களிலும்,  மேடைச்   சொற்பொழிவுகளிலும்,   பயபக்தியோடும்,       உணர்ச்சியோடும், சூபியாக்களைச்சிலாகித்துச் கூறுகின்றனர். சூபிகளின் ஆன்மீக நிலைபற்றி, பாமர மக்களால் உச்சரிக்கவோ,   புரிந்து கொள்ளவோமுடியாத    அரபிப்பதங்களால்     வர்ணித்து,      மக்களைத்     திணரடிக்கின்றனர்.    குர்ஆனையும்,   ஹதீதுகளையும்வாசித்தோ   விளங்கியோ      அறியாத    மக்கள்,     மார்க்கத்தின்     பெயரால்    நிறைவேற்றப்படும்     தேவையற்ற,     முறையற்ற     எல்லாச்   சடங்குகளுக்கும்   தாங்கள்   நாடிச்   சார்ந்துள்ள   மவ்லவிகள் (ஹஜ்ரத்மார்)  புகழ்ந்து போதிக்கும் சூபிகளின் வழிமுறைகளையே இஸ்லாம் என நம்பி வாழ்கின்றனர். இறைமறை வழங்கிய இஸ்லாத்தினின்றும் தாங்கள்  அகன்று  நிற்பதை அறியாதவர்களாக   வாழ்நாளைப் போக்குகின்றனர்.  அல்லாஹ்,   இறைமறையில்   பகர்ந்தவைகளையும், நபி(ஸல்) அவர்களின் வழி முறையையும் கசடறக் கற்று கற்றதற்கேற்ப வாழ்ந்த  நல்லடியார்கள்   அவ்வப்போது   தோன்றி   உள்ளதை உள்ள படி   உரைத்து வந்துள்ளனர். இத்தகையோர், மேலே கண்ட ஹதீது குறித்து கூறுவது என்னவென்று காணபோம்.

மேலே கூறப்பட்ட ஹதீது இஸ்லாத்தின் அடிப்படைக்கோட்பாடுகளுக்கு இசைந்தவிதத்தில்விளக்கப்பட வேண்டுவது அத்தியாவசியம்அபூஹுரைரா (ரழி)   அவர்கள்   இந்த  அறிவிப்பை   வெளியிட   மூன்று   விதமான   சாத்தியக் கூறுகள் உண்டாகியிருக்கக் கூடும். அவைகளாவன:

1.    ரசூல் (ஸல்)  அவர்கள், அபூஹுரைரா (ரழி)  அவர்களிடம்   சில   முக்கிய   வி­யங்களைக் கூறி அவைகள் சாதாரண மக்கள் அறிய   வேண்டியவை  அல்லவென்றும்  அவை இரகசியமாகப்பாதுகாக்கப்பட வேண்டும். என்றும் மீறி பகிரங்கப்படுத்தப்பட்டால் அவைகளை வெளியிடும் அபூஹுரைரா (ரழி) அவர்களின் உயிருக்கு ஆபத்து விளையும் என்றும் எச்சரித்து இருக்க வேண்டும்.

2.     அபூஹுரைரா (ரழி)   அவர்களிடம்   நபி (ஸல்) அவர்கள் இவ் வி­யங்களைக் கூறி, மற்ற ஹதீதுகளைப் போல் இவைகளும் மக்களுக்கு அறிவிக்கப்பட வேண்டியவை   என்று  கூறி இருந்தாலும் அபூஹுரைரா(ரழி) அவர்களே, காலச் சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றம்  காரணமாக அவைகளை அறிவிக்காமல் இருந்திருக்க வேண்டும். இந்த ஹதீதில் அறிவிக்கப்படும் வி­யங்கள் அல்லது உண்மைகள் அன்றைய   காலக்கட்டத்தில்   மக்களுக்கு விபரீதமாகத் தோன்றி, அதை அறிவிக்கும் தனது உயிருக்கு மக்களால்  ஆபத்து நேரிடலாம் என்று அபூஹுரைரா (ரழி) அவர்கள் அஞ்சி இருக்க வேண்டும்.

3.      குறிப்பிட்ட   ஹதீது   தரும்   வி­யங்கள்   அல்லது   உண்மைகள் அன்றைய ஆட்சியாளர்களுடையவும், அவர்களுடைய அதிகாரிகளுடையவும்   ஒழுக்கங்களுக்கும்,   நடவடிக்கைகளுக்கும்   எதிராக   அமைந்து  இருந்த   காரணத்தால்   அவைகளை   வெளியிடுவதால்   அவர்களால்   தம்   உயிருக்கு   ஆபத்து   ஏற்படும்   என்று    அபூஹுரைரா (ரழி) அவர்கள் பயந்து அவைகளை வெளியிடாது இருந்திருக்க வேண்டும்.

இம்மூன்று  சாத்தியக்  கூறுகளையும்,   யுக்தி,   சரித்திரச்   சான்றுகள்   ஹதீதுகள்   இவைகளின்  அடிப்படையில்  அலசி ஆய்ந்து உண்மையை உணர முயல்வோம்.

முதல் சாத்தியக்கூறு நிகழ்ந்திருக்க வழியில்லை என்பது தெளிவு உண்மையிலேயே நபி(ஸல்) அவர்கள் ஏதேனும் இரகசியமாகப்  பாதுகாக்கப்பட  வேண்டும்  என்று  கருதி  இருந்தால், அதனை  அவர்களின் உத்தமத்தோழர்களில்,  அவர்களோடு  நீண்ட காலம் நெருங்கிப்  பழகிய அபூபக்கர்,  உமர், உதுமான், அலி  ஜைத் பின் தாபித், முஆத் பின் ஜபல், அபூதர்தா, ஆயிஷா(ரழி) இவர்களில் யாரையேனும்  தெரிவு  செய்து   அவர்களிடம்   சொல்லி   இருப்பார்கள்.  நபித் தோழர்களிடையே அறிவும் தெளிவும் மிக்கவர்கள் இவர்கள். ஈமான் பற்றிய நுட்பங்களையும் “­ரியத்’ பற்றிய நுணுக்கங்களையும் துல்லியமாகவும், விரிவாகவும் அறிந்தவர்களும், செயலாக்கத்தில் ஆர்வமும், ஊக்கமும், திறமையும் மிகுந்தவர்களும் இவர்கள் தாம். இரகசியங்களைக் கூறி பாதுகாக்கும் படி ஏவ இவர்களே ஏற்றமுடையவர்கள் இவர்களல்லாமல்(சாஹிபு சிர்ரு) “”இரகசியங்களைப்   பாதுகாப்பவர்”  என்றழைக்கப்பட்ட ஹுதைபா (ரழி)அவர்களிடமும் கூறி இருக்கலாம். இங்ஙனம் இவர்கள் யாரிடமும் அறிவித்ததாகச் சான்றுகள் இல்லை. அபூஹுரைரா(ரழி)   அவர்களுக்குச் சிறப்புக்குரிய தனித்தன்மைகள் உண்டு. ஹதீதுக்கலை வல்லுநர்; அவைகளை அறிவிப்பதில் ஆற்றல் மிக்கவர்; அதிகமான ஹதீதுகளை அறிவித்தவர். எனினும் மேலே குறிப்பிட்ட நபித்தோழர்களைப் போல் அத்துணை வல்லமை வாய்ந்தவர் அல்லர் என்பது உண்மை. மேலும் ரசூல்(ஸல்) அவர்கள்அறிவித்தவை அனைத்துமேசெவிமடுத்தவர் அறிவுபெறவும், அவைகளைமற்றவர்க்கு எடுத்துரைப் பதற்குமேயல்லாது இரகசியமாக மூடி மறைப்பதற்கல்ல. குர்ஆனிலோ, ஹதீதுகளிலோ, முகம்மது (ஸல்) அவர்களின்   வாழ்க்கையிலோ    அன்றி    ஏனைய   நபிமார்களின்   வரலாறுகளிலோ   இரகசியமானவையும்   இருந்ததாகக்      காணப்படவில்லை. மாறாக, நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களை, அவர்கள் தங்களிடம் இருந்து கற்றவைகளையும், கேள்வியுற்றவைகளையும்   மற்றவர்க்கு   அறிவிக்கும்படி   திரும்பத்   திரும்பப்   பணித்துள்ளார்கள்.   நபி(ஸல்)   அவர்கள் “”என்னிடம் இருந்து நீங்கள் செவி மடுப்பது ஒரே ஒரு வார்த்தையாக இருந்தாலும் அதை மக்களிடம் பரப்புங்கள்” என்றும் “”என்னிடம் இருந்து நீங்கள்  கேட்டறிந்தவைகளைக் கவனமாக மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்;  ஏனெனில் நான் உண்மையையன்றி வேறெதையும்  சொல்லுவதில்லை.” என்றும் கூறியுள்ளார்கள். அவர்களின் இறுதி ஹஜ் யாத்திரையில் அங்கு கூடி இருந்தவர்களிடம் ” என்னிடம்  இருந்து    நீங்கள்    கேட்டறிந்தவைகளை     எல்லாம்     இங்கு   வராதவர்களுக்கு   அறிவித்து   விடுங்கள்; சொல்லுபவரிடமிருந்துநேரடியாகக்  கேட்பவர்களை விட பிறரிடமிருந்து அவைகளை அறிந்தவர்கள் அறிந்தவைகளை நன்<கப்  புரிந்து   கொள்ளுவர்’  என்றும்  எனது  சொற்களையும்,  சத்தியத்தை (குர்ஆனை)யும் அறிந்து கொண்டே தவறாகப் பரப்புபவர்கள் தீர்ப்பு நாளில் நரக     நெருப்புக்கு இரையாவார்கள் என்றும் கூறியுள்ளார்கள்.

இம்மாதிரியான போதனைகளை மிகவும் வலியுறுத்தும்  ஹதீதுகளே ஏராளமாகக் காணப்படுகின்றனவே அல்லாமல், தாங்கள்     போதித்தவைகளை, மக்களுக்கு   எடுத்துரைக்காமல்  இரகசியமாகப்  பாதுகாக்கும்படி   கூறியதாகவுள்ள ஒரு ஹதீதைக் கூட காணமுடியவில்லை,   மாறாக,   நபி (ஸல்)   அவர்களிடமிருந்து   அறிந்தவைகளைப் பகிரங்கப்படுத்துவதால் மக்களின் பகைமைக்கும் கொடுமைக்கும் ஆளாக  நேரிடும்  என்பதை  உணர்ந்திருந்தும்   அவைகளை பகிரங்கப்படுத்தும்படியாக அறிவித்துள்ளதாகவே அறிகின்றோம். எனவே, ரசூல்(ஸல்) அவர்கள்   தங்கள் கூற்றுகளை வெளிப்படுத்த  வேண்டாம் என்று அறிவித்து. அதற்கிணங்க அபூஹுரைரா (ரழி) அவர்கள் அவைகளை வெளிப்படுத்தாமல் இருந்தார்கள் என்பது சாத்தியமல்ல.

நபி(ஸல்) அவர்கள், அபூஹுரைரா(ரழி) அவர்களிடம் கூறியவை மக்களிடையே போதிப்பதற்காகவே என்று அறிவித்திருந்தும் அபூஹுரைரா(ரழி) அவர்களின் காலத்தின் சூழ்நிலையில் ஏற்பட்ட தீவிர  மாற்றங்கள்  காரணமாக   அவைகளை   வெளிப்படுத்தாமல் இருந்திருக்கலாம் என்பது இரண்டாவது  சாத்தியக்கூறு. அவைகளை  வெளிப்படுத்துவதால்  மக்களால்  ஆபத்து விளையக்கூடும் எனப்பயந்து இருக்கலாம்.

அபூஹுரைரா (ரழி) அவர்களின் வாழ் நாளிலேயே ஒரு மோசமான சூழ்நிலை உருவாகியதாக சரித்திரம் வாயிலாக அறிகிறோம்.    நல்வழி நடந்த கலீபாக்களின் ஆட்சியின் இறுதியில் உமையாக்களின் ஆட்சி நிறுவப்பட்டது. உமையாக்களின் ஆட்சி காலத்தில்   முஸ்லிம் சமுதாயத்தாரிடையே,இம்மையின் சுகபோகம் தலைதூக்கி மறுமையைப்பற்றிய சிந்தை குறைந்து வந்த காலக்கட்டம்    வரை   அபூஹுரைரா(ரழி)   அவர்கள்   வாழ்ந்தார்கள்.   இத்தகைய  மாறுதல்   ஏற்பட்டது   என்பதை   மறுக்கவியலாது  எனினும், உமையாக்களின் ஆட்சி காலத்தில் குறிப்பாகஆரம்பக்கட்டத்தில் ஹதீதுகளைஅறிவித்தவர்களுக்கு ஊறுவிளைவிக்கும் அளவிற்குமக்களின்ஈமானும், ஒழுக்கமும் சீர்குலைந்துவிடவில்லை சிறப்புமிக்க சஹாபாக்களும்அவர்களின் சீடர்களும் எல்லாவிடங்களிலும்பரவி  வாழ்ந்து வந்தனர்.  இவர்கள்   யாவரும்   மக்களால்   கண்ணியப்படுத்தப்பட்டார்கள். ஹதீதுகளை அறிந்தவர்கள் ஒருவருக்கொருவர்   அவைகளைப்    பரிமாறுவது   பரவலாக வழக்கில்   இருந்தே   வந்தது. ஒழுக்கச்சிதைவு சமுதாயத்தில் சிறிது சிறிதாக ஊடுருவி   எங்கும்   வியாபித்திருந்தாலும்   மார்க்கக்கல்வி   கற்பதற்கும்,   கற்பிப்பதற்கும்   இடையூறுகள்   விளைந்ததாகவோ,    கற்பிப்பவர்கள்   துன்புறுத்தப்பட்டதாகவே   கூறும்   சான்றுகள்  இல்லை. வேற்றுக் கலாச்சாரமும், மார்க்கமல்லாத இதாக்கல்வியும்பரவத்தொடங்கிய   போதிலும்   நபி(ஸல்)  அவர்களில்  மொழிகள்   விபரீதமாகத்  தோன்றுமளவிற்கு   மக்களின்   மனப்பான்மை   சீர்குலைந்து   விடவில்லை.   மக்களின்   மார்க்க   அறிவாற்றல்    நலிவுறத்   தொடங்கியது   உண்மையாயினும்,   இஸ்லாமியக்    கோட்பாடுகளை அறவே புரிந்து கொள்ள முடியாத நிலைக்கோ, இஸ்லாமியப்பண்புகளைப் போற்ற முடியாத நிலைக்கோ அவர்கள்தாழ்ந்து விடவில்லை. முஸ்லிம்களில்   அனைத்து   தரத்தினரும்   அவரவரின்   தரத்திற்கேற்ப   இஸ்லாத்தின்  கொள்கைகளையும்கோட்பாடுகளையும் கிரகிப்பவர்களாகவே   விளங்கினர்.எனவே அபூஹுரைரா(ரழி)அவர்கள் நபி(ஸல்)அவர்களின் போதனைகளைவெளியிட்டால்,    மக்களால்   தனக்கு   ஆபத்து   விளையும்   என நினைத்து அவைகளை மறைக்கவோ வெளியிடாது இருக்கவோ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் அளவிற்கு சூழ்நிலை சீர்குலையவில்லை என்பது திண்ணம்.(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

————————————————————————————–

மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள்

லு. தாஜூத்தீன் னி.பு., குவைத்

ஒரு மனிதன் மரணத்திற்குப் பின் அவரது அமல்களில் மூன்றைத் தவிர   மற்றவை    எல்லாம்   செயலற்றவை ஆகி விடுகின்றன. அம்மூன்று செயல்கள்:-

1. சதக்கத்துல் ஜாரியா 2. பலன் தரும் கல்வி 3.பெற்றோருக்காக பிரார்த்திக்கு நேர்மையான (ஸாலிஹான)பிள்ளைகள். (அபூஹுரைரா(ரழி), முஸ்லிம்)

ஒரு முஸ்லிமின் மரணத்தோடுஅவரது செயல்கள் முற்றுப்பெறுகின்றன.நற்செயல்கள் செய்து நன்மையைத்தேடிக் கொள்ளுவதும்இயலாமல் ஆகி விடுகிறது. ஆயினும், அவர் உயிரோடு இருந்த காலத்துச் செய்த நற்செயல்களில் சில, மரணத்திற்குப் பின்னரும் நிரந்தரமாகஎன்றென்றும்நன்மையை ஈட்டித்தருபனவாக உள்ளன. எந்தநன்னோக்த்துடன்அச்செயல்கள்நிறைவேற்றப்பட்டனவோஅந்நோக்கங்கள்நிறைவேறிக்கொண்டு இருக்கும்காலமெல்லாம் நன்மைகள்அச்செயல்களைச்செய்தவரை, அவர் மரணமடைந்தபின்னரும் சேர்த்து கொண்டிக்கும். உதாரணமாக, முஸ்லிம்கள் தொழுகையை நிறைவேற்ற, தன் பொருளைச் செலவு செய்து கட்டியபள்ளிவாசல்கள் நிர்மானித்த கல்விக்கூடங்கள் மக்கள்குடி நீர் பெறதோண்டிய கிணறுகள்,நோயாளிகள் சிகிச்சைப் பெற ஏற்படுத்தியமருத்துவமனைகள்,  தாய் தந்தையரற்ற அனாதைகளைப்    பராமிக்கத் தோற்றுவித்த   அனாதை   நிலையங்கள்   கட்டிய தர்ம ஸ்தாபனங்கள், பலன் தரும் விஞ்ஞான கண்டு பிடிப்புகள் இவையாவும் அத்தகையனவாகும்.

இரண்டாவதாக,  ஒரு   மனிதனின்   ஜீவித  காலத்தில் மக்களுக்கு பலனளித்துக் கொண்டிருத்த அவரது கல்வியறிவாகும். மார்க்கக்கல்வியும், மனித   வர்க்கத்திற்கு  பலனளிக்கும்   மற்ற  கல்வியும் இவ்வகையில் சேருவனவாகும். இறந்தவர் தன் கல்வி அறிவால்போதித்தவைகளின் பலனாக நன்மைகளைச்செய்து கொண்டிருக்கும்காலம் எல்லாம் நன்மைகளைச்செய்தவருக்குரிய       பலன்களை குறைவுறாமல் கிடைப்பதோடுஅந்நன்மைகளைச் செய்ய ஊக்குவித்த கல்வியானருக்கும், அவரது மரணத்திற்குப் பின்அதே போல்  நன்மைகள் சேர்த்து கொண்டே இருக்கும்.

மூன்றாவதாக மார்க்க நெறிகளைப் பேணி ஒழுக்கமுடன் வளர்க்கப்பட்ட மக்கள் ஆற்றுகின்ற நற்செயல்கள் யாவும் மரணமடைந்த பெற்றோர்களுக்கு    நன்மைகள்   சேர்ப்பனவாகும்.   இத்தகைய    சாலிஹான   பிள்ளைகளில்    இறைவணக்கம், அவர்களின்   நல்லொழுக்கம் இறை உணர்வோடு நிறைவேற்றும் அனைத்துச் செயல்கள் யாவும் பெற்றோர்க்கும், அவர்களின் மரணத்திற்குப்   பின்பும் நன்மை பயப்பனவாகும்.

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களை அணுகி “” என்னுடைய தந்தை யார் மரண சாசனமும்அறிவிக்காமல்அவருடைய சொத்துக்களைவிட்டு விட்டு இறந்து விட்டார். நான் அவருடைய சார்பில் “சதக்கா’ (தர்மம்) கொடுத்தால் அவரது பாவச் சுமைகளிலிருந்து அவருக்கு விடுதலை கிடைக்குமா? ” என வினவினார். நபி(ஸல்) அவர்கள் “”ஆம்” என பதிலளித்தார்கள்.(அபூஹுரைரா(ரழி), முஸ்லிம்)

வேறு ஒரு நபி மொழி கீழ் வருமாறு அறிவிக்கின்றது;

ஒருவர் நபி(ஸல்)அவர்களிடம் “”என்னுடைய தாயார் மரணசாசனம் அறிவிக்காமல் திடீரென மரண மெய்தி விட்டார்கள். இறப்பதற்குமுன்பேசும்   வாய்ப்பிருந்திருக்குமேயானால்   அவர்கள்   “சதக்கா’ செய்வது   பற்றி   கூறி   இருப்பார்கள்  என நான் நினைக்கிறேன்அவர்களுடைய சார்பில் நான்  சதக்கா செய்தால்   அவர்களுக்கு நன்மைகிட்டுமா?”  என வினவினார்.  நபி(ஸல்) அவர்கள் “”ஆம்” என்றார்கள்.(ஆயிஷா (ரழி), முஸ்லிம்)

மேலே   கூறிய   நபிமொழி   ஒருவர்   செய்யும் நற்செயல்கள் தமது வாழ்நாளில் தமக்கு நன்மை பயப்பதுடன் தாம் இறந்த பின்பும் தமக்கு நன்மைகள் கிட்டிக்கொண்டிருக்கும் என அறிந்து செயல்பட ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது.

இரண்டாவது   மூன்றாவது   நபிமொழிகளின்  படி  இறந்தவர்கள்.   சார்பில்   செய்யப்படும்  தான்  தர்மங்கள்  சிறந்தவைகள் என அறிகிறோம் தர்மம் செய்பவரும், எப்பொருளைக் கொண்டு தர்மங்கள்  செய்யப்படுகின்றனவோ அப்பொருளை ஈட்டியவரும், அவர்இறந்தவராயினும் அவைகளால் நன்மை அடைகின்றார்கள்.   இறந்தவர்களுக்காக அவர்களது சார்பில் தர்மம் செய்வது கட்டாயக் கடமை அல்லவெனினும், அவர்கள் சார்பில் செய்யும் தர்மங்களால் இறந்தவர்களுக்கு நன்மை கிடைக்க வழி செய்வதோடுதானும் நன்மை அடைகிறார்.

இறந்தவர்விட்டுச் செல்லும் வாரிசுகளின் மீதுசாட்டப்படும் கடமையாதெனில்இறந்தவர் உயில் எழுதியிருந்தாலும், இல்லாவிட்டாலும்அவரது   கடன்களை   அடைத்துவிட  வேண்டும்.   கடன்  என்பது  பிறரிடமிருந்து  வாங்கிய பொருளாகவோ, பிறருக்கு செய்யப்பட்ட வாக்குறுதிகளாகவே இருக்கலாம்.

இறந்தவர் விட்டுச்செல்லும் சொத்தின் மீது கடமையாகி இருந்த ஜக்காத் அவர்மீது கடமையாகி நிறைவேற்ற முடியாமல் போன ஹஜ்கொடுத்திருந்த வாக்குறுதிகள் இவைகளைஅச்சொத்திலிருந்து நிறைவேற்றப்பட வேண்டும். அவர் மீது  கடமைகளாகியவைகளைஅவரது சொத்திலிருந்தே நிறைவேற்றப்பட வேண்டுவது நிர்ப்பந்தம். இவைகளை நிறைவேற்றுவதற்குப் போதுமான அளவு அவரதுசொத்துக்களின்   மதிப்பு   இல்லை எனில் அவைகளை நிறைவேற்றுவது வாரிசுகளுக்கு கடமை இல்லை. இருப்பினும் தாம் ஈட்டியபொருளிலிருந்து இவைகளை வாரிசுகள நிறைவேற்றுவார்களாயின் அது மிகச் சிறப்புடைய செயலாகும்.

ஆனால் நம்மில்   பெரும்பாலோர்   துர்ரதிர்ஷ்டவசமாக   இவை   போன்ற   நபி   மொழிகளின்    கருத்துக்களை   அறியாமலும்,  உணராமலும் அவைகளுக்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுகின்றனர். இறந்தவர்களுக்கு நன்மை சேர்ப்பதாக எண்ணி 3-ம்,     7-ம்,40-ம் நாள்   பாத்திஹா வருடப்  பார்த்திஹா  மற்றும்   மெளலிதுகள்   ஓதி சடங்குகள்   செய்வது    பாவமான    காரியங்களே. இச்சடங்குகளாக   இறந்தவர்கள் தன்மை   அடையவர் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. இவற்றால் பொருள் நேரம், சக்தி விரயமாவதுடன் அல்லாஹ்வின் வெறுப்பிற்கும் ஆளாகி விடுகின்றார்கள் என்பதை உணர வேண்டும்.

இத்தகைய    சடங்குகள்   இறந்தவர்களுக்கு   நன்மை   பயப்பனவாக   இருப்பவையாயின்   நபி(ஸல்)   அவர்களும்,   அவர்களது தோழர்களும் செய்துகாட்டி இருப்பார்கள். அவர்களின் மற்ற நற்செயல்களின் முறையும், அவற்றால் பெறும் நன்மைகளும் ஹதீதுகிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பது போல்    இவைகளும்   பதிவு   செய்யப்பட்டு   நாம்   அறியத்   தரப்பட்டிருக்கும்?ஆனால்   இத்தகைய சடங்குகள் நிறைவேற்றப்பட்டதாக எவ்வித ஆதாரமும் இல்லை. எனவே இவை திண்ணமாக தவிர்க்கப்பட வேண்டுவன.

அன்புச் சகோதரர்களே! மேலே கூறிய நபி மொழிகளில் கூறப்பட்டிருப்பவைகளில் தான், நாம் இறந்தவர்களுக்கு நன்மை செய்ய முடியும். அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்.

“”எவன் நேரான வழியில் செல்லுகிறானோ, அவன் தன்னுடைய நன்மைக்காகவே நேரான வழியில் செல்லுகிறான். எவன் தவறானவழியில்  செல்லுகிறானோ   அவன்   தனக்கே   தீங்கிழைத்துக்   கொள்ளுகிறான்;  ஒருவனுடைய பாவச் சுமையை மற்றொருவன் சுமக்க   மாட்டான்.   (அச்சு  மூட்டி  எச்சரிக்கக்  கூடிய  நம்முடைய)  தூதரை அனுப்பாதவரையில்  நாம் (எவரையும்)  வேதனை        செய்வதில்லை.” (17:15)

அல்லாஹ் நம்மனைவரையும் நல்வழியில் செலுத்துவானாக!

——————————————————————————————

மனக் குமுறல்

பு. உபைதுர் ரஹ்மான், தம்மாம் லு.றீ.பு.

இஸ்லாமிய சகோதரர்களே! 1400 ஆண்டுகளுக்குப் பின்பும் குர்ஆனையும், ஹதீஸையும் மக்கள் முன் எடுத்துச் சொல்லும் போதுமார்க்க மேதைகள் என்று  தம்பட்டம் அடித்து தம்மைப் பறைசாற்றிக் கொள்ளும் மெளலவிகளில் அதிகமானோர் வஹ்ஹாபிகள், நஜாத் கூட்டம், குழப்ப   வாதிகள்   என்று   கூறுவதை   கேட்கும்போது   கல்வி அறிவு இல்லாத அக்கால கட்டத்தில் சன்மார்க்கத்தை எடுத்துரைக்கும்  போது   கல்வியறிவைப்   பெற்றிருந்த  தாருந்நத்வாவினரிடம்   நபி(ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும்கொண்ட துயரங்களை நன்றாக நாம் இன்று உணர முடிகிறது.

சில இடங்களில் இப்படிப்பட்ட மெளலவிகள்    குர்ஆனையும்,   ஹதீஸையும்  பின்பற்றி   நடக்கும் சகோதரர்களுக்கு பல வகையில்துன்பம் தருவதைப் பார்க்கும்போது மக்கத்து காபிர்களை விட வி­மத்தில் மிஞ்சிவிட்டனர். “”நெஞ்சு பொறுக்குதில்லையே…….”. நபி(ஸல்) அவர்களின் சொல்லுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட்டுவிட்டு, இமாம்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, கண்மூடித்தனமாக அவர்கள் சொன்னதாகச் சொல்லும் நபிமொழிக்கெதிரான கூற்றுக்களைத் தான் பின்பற்று வோம், அவற்றைத்தான் மக்களுக்கும் எடுத்துரைப்போம் என்றால் தாங்கள் வழி கெட்டது மட்டுமல்லாமல் அவர்களை நம்பும் மக்களையுமல்லவா வழி கொடுக்கின்றனர். இப்படிப் பட்டவர்களை மறுமையில் நரகிற்கு இழுத்துச் செல்லும்போது அவர்கள் கூறுவார்களாம். அதை அல்லாஹ் தன்திருமறையில் அழகாகக் குறிப்பிடுகின்றான்;

எங்கள்  இறைவனே!   நிச்சயமாக   நாங்கள்   எங்கள்   தலைவர்களுக்கும்   எங்கள்   பெரியார்களுக்கும்   வழிபட்டோம்; அவர்கள் எங்களை தப்பான வழியில் செலுத்திவிட்டார்கள்.(அல்குர்ஆன்33:67)

“”எங்கள் இறைவா!அவர்களுக்கு இருமடங்குவேதனையைத் தருவாயாக அவர்களைப் பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக!” (அல்குர்ஆன்33:68)

இந்த இறை வசனங்கள் அவர்கள் இனியாவது சிந்திக்கட்டும்அண்மையில் இரண்டு ஊர்களில் (பரங்கிப்பேட்டையிலும், நெல்லிக் குப்பத்திலும்) நடந்த சம்பவங்கள்.  தலை  மூடாமல்  தொழ வந்தவரை   இகழும்  இமாம்.    சூரேஃபாத்திஹாவுக்குப் பின்பு சப்தமிட்டு “”ஆமின்”   சொன்னவரை சபிக்கின்ற இமாம், இவர்கள்  தான்? “”நாங்கள் நபியின் வாரிசு”  என்று  சொல்லிக்   கொண்டு, நபி(ஸல்) அவர்களின் நடைமுறையின் அடிப்படையில் நடப்பவர்களை ஒழித்துக்கட்ட நினைப்பவர்கள் தொப்பிஅணியாத நிலையில் தொழும்தொழுகையை ஏற்றுக்கொள்ள  மாட்டான் அல்லாஹ் என்ற தவறான எண்ணம் நம் சமுதாயத்தவர்களிடம் பரவலாக இருக்கன்றது.நபி (ஸல்)அவர்கள் தலைமூடியும், தலை மூடாமலும் தொழுது இருக்கிறார்கள். எனவேதலை மூடாமலும் தொழலாம் என்ற   எண்ணத்தில்  தொழ  வந்த நண்பர்களை   அந்த இமாம்   பயங்கரமாகத்திட்டி, என் பின்னால் தொழாதே, முன் வரிசையில் நிற்காதே    பள்ளிக்கு வரக்கூடாது என்றெல்லாம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தலையை மூடுவதும் நபி வழி. அதை எவரும் மறுக்கவில்லை.தொழுகைக்கு மட்டும்தான் தலையை மூடவேண்டும் என்று கூறுவதுவே­மாகத் தெரியவில்லையா?

தலை   திறந்து   தொழுவது   சவூதி   அரேபியாவுக்கு தான் பொருந்தும்,  நம்  நாட்டுக்குப்  பொருந்தாது  என்று  அவர்களில் சிலர் கூறுகின்றனர். அல்லாஹ் தன் அருள் மறையில்   நபி(ஸல்)   அவர்களை உலகத்தார்   அனைவருக்கும்   அருட்கொடை   என்று  குறிப்பிடுகின்றானே தவிர, சவூதி அரேபியாவுக்கு மட்டும் என்று   குறிப்பிடவில்லை.  உலக மக்கள் அனைவருக்கும் நபியவர்கள் அழகிய முன் மாதிரி என்று தான் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

நெல்லிக்குப்பத்தில் இளைஞர்   ஒருவர் இமாயை பின்தொடர்ந்து தொழும்போது  சூரேஃபாத்திஹாவுக்கு  பின்பு  சப்தமிட்டு ஆமீன் சொல்லி இருக்கின்றார். ஃபாத்திஹா என்னும் அல்ஹம்து சூராவை நபி(ஸல்) அவர்கள் ஓதி முடித்துவிட்டால் “”ஆமீன்” என்று சப்தமாக நீட்டிச்சொல்வார்கள்.(நூல்கள்: புகாரீ, அபூதாவூத்)

ஃகைரில் மக்ழூபி    அலைஹிம் வலழ்ழால்லீன்   என்று இமாம் கூறினால் நீங்கள் “”ஆமீன்” எனக் கூறுங்கள் யாருடைய ஆமீன் மலக்குகள்கூறும் ஆமீனுக்குஒத்திருக்கின்றதோ (ஒன்றுசேர்ந்ததாகஇருக்கின்றதோ)அவரின்முன் பாவங்கள்மன்னிக்கப்படுகின்றன(நூல்கள்: புகாரீ, முஸ்லிம், நஸயீ) அந்த    இமாம் அந்த இளைஞரை பல முறை தடுத்து வந்தும் அந்த  இளைஞர் சுன்னத்தை    பின்பற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் அந்த இமாமின் கூற்றைப் பொருட்படுத்தாமல் மாறாக,   அந்த (ஏழாண்டு காலம்   குர்ஆனையும், பிக்ஹ் சட்டத்தையும் கரைத்துக் குடித்து வந்த) இமாமுக்கு இது சம்பந்தப்பட்ட ஹதீஸ்   பற்றி விளக்கம்  தந்துள்ளார்மவ்லவியல்லாத அந்த  இளைஞர்.   இதனால்   மேலும் கோபமுற்ற   அவர், ஒரு    நாள் மஃரிப்   தொழுகையில்   ஆமீன்   என்ற   சப்தத்தைக் கேட்டுவிட்டு அவசர   அவசரமாக   தன்   தொழுகையை   முடித்து  விட்டு (வழக்கமாக ஓதும் கூட்டு துஆவுக்கு முன்பே)   முஸல்லாவிலேயே திரும்பி அந்த இளைஞரைப் பார்த்து சோறு தின்கின் <யா அல்லது பீ தின்கின்<யா? எத்தனை முறைதான்       உனக்கு சொல்வது அறிவில்லையா? என்று காட்டுகத்து கத்தி இருக்கின்<ர்.உடனேமற்றுமொரு இளைஞர் மட்டும் அந்த இமாமின்துர்ச் செயலை கண்டித்துள்ளார் ரசூல்லாவின் வாரிசுகள் நாங்கள் என்று மார்தட்டிப்பேசும் இவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் செய்துகாட்டியது என்ன?

நபி(ஸல்) அவர்களின் தொழுகை முடிந்துவிட்டது என்பதை (அவர்கள் கூறிய) தக்பீர் மூலம் தெரிந்து கொண்டோம். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி), நூல்: புகாரீ

முன்பின்   பாவங்கள்   மன்னிக்கப்பட்ட   நபியே   ஒவ்வொரு தொழுகையின்  பின்பும் இஸ்திஃபார் (பாவமன்னிப்பு) தஸ்பீஹ்களும்செய்து இருக்கும் போது அந்த இமாம் செய்தது என்ன? இப்படித்தான் அவர்களுக்கு பட்டம் கொடுத்த பாடசாலையில், சுன்னத்தைகடைபிடிப்பவரைக்   கண்டபடி  திட்டக்   கற்றுக்  கொடுத்தார்களா? அல்லது இவர்களின் பிக்ஹ்நூல்களில் இப்படி சபிக்கச் சொல்லி பதியப்பட்டுள்ளதா? ஒன்றும் புரியவில்லை. எந்த அடிப்படையில் அந்த இமாம் இப்படி சபித்துள்ளார். இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்<ல்  அந்த   இமாம்  சப்தமிட்டு   ஆமின்   சொல்லும் ஷாபி மத்ஹபைச் சேர்ந்தவர். ஆ²ல் ஹனபிமத்ஹபினருக்கு இமாமத் செய்யும்  போது  அந்த மத்ஹபினரிடம்  வாங்கும்   கூலிக்கு   துரோகம் செய்ய அவருக்கு மனம் விரவில்லை இத்துடன் அவர் விட்டு விடவில்லை. சில வி­மிகளை ஏவி விட்டுபல வகையில்   அந்த   இளைஞருக்குத்   துன்பம்   தந்திருக்கின்<ர். மேலும்எதற்கெடுத்தாலும் என்பின்னால் தொழாதே, பள்ளிக்கு தொழவராதே, என்று கூற அவர்களுக்கு என்ன  அருகதை இருக்கின்றது? நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்திய சுன்னத் தாடி வைப்பது.

இணை கற்பிப்பவருக்கு மாற்றம் செய்யுங்கள், தாடியைவைத்து மீசையைவெட்டிவிடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி²ர்கள் (இப்னு உமர் (ரழி), புகாரீ, முஸ்லிம்)

நபி(ஸல்)    அவர்கள் “”என்னுடைய எஜமான் (அல்லாஹ்) என்னை மீசையை வெட்டும்படியும், தாடியை நிரப்பமாக வைக்கும் படியும்கட்டளையிட்டுள்ளான்” என்<ர்கள்.(ஜைதுபின் அபீஹபீப்(ரழி), இப்னுஜரீர்)

இன்று   நம்மில்   தாடியில்லாமல்  எவ்வளவு   பேர்   தொழ     வருகின்றனர். அவர்களைப் பார்த்து என்பின்²ல் தொழுகாதீர்கள். முன்   சஃப்பில்   நிற்காதீர்கள்  என்று   கூற   எந்த   இமாமுக்காவது   துணிவு உண்டா? அவ்வாறு தாடி வைக்காதவரை கண்டிக்க அவர்களால் முடியாது. நிறைய ஊர்களில் இது போன்ற இமாம்களுக்கு கூலி கொடுக்கும் முத்தவல்களில் பெரும் பாலோரிடத்தில் இந்த முக்கிய சுன்னத் கிடையாது அதைப் பற்றி கண்டித்தால் நம்மை வேலையை விட்டு வெளியேற்றிவிடுவார்கள் என்ற அச்சம்   தான் காரணம்:   கீழ்   ஆடையை   கரண்டைக்காலுக்கு மேல் அணிய வேண்டும் என்று கண்டித்துச் சொல்லும் பல நபிமொழிகள் காணப்படுகின்றன. அதற்கு மாறாக தரையைக் கூட்டும் நிலையில் கீழாடை அணிந்து கொண்டு தொழவரும் சகோதரர்களை இந்தஇமாம்கள் கண்டித்ததாக சான்றுகள் காட்ட முடியுமா?

(நபியே! விசுவாசிகளை நோக்கி) நீர் கூறும்: உங்களுடைய தந்தைகளும், உங்களுடைய மக்களும்உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய   துணைவர்களும்,   உங்களுடைய   குடும்பமும்,  நீங்கள்  சம்பாதித்து  வைத்திருக்கும்  (உங்கள்)  பொருள்களும் நஷ்டமாகிவிடுமோ  என  நீங்கள்   பயந்து (மிக  எச்சரிக்கையுடன்)  செய்து  வரும்  வர்த்தகமும்,  உங்களுக்கு  (மிக்க) விருப்பமுள்ள(உங்கள்) வீடுகளும் அல்லாஹ்வையும் அவனுடைய  தூதரையும் விடவும்,  அவனுடைய  பாதையில்  யுத்தம்  புரிவதை   விடவும் உங்களுக்கு   மிக்க   விருப்பமான   வைகளாகயிருந்தால்,   (நீங்கள்  உண்மை  விசுவாசிகளல்ல,  நீங்கள்  அறிய  வேண்டிய      தண்டனையைப்   பற்றிய)   அல்லாஹ்வுடைய   கட்டளை   வரும்வரையில்   நீங்கள்   எதிர்பார்த்திருங்கள்.   (உங்களைப் போன்ற)  பாவிகளை  அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவதில்லை.(அல்குர்ஆன்9:24)

இன்று   நபி(ஸல்)   அவர்கள்  மீது   முஹப்பத்    வைப்பவர்கள் யார்? யார் நபியின் சொல், செயலைப் பின்பற்றி இன்பமாயினும், துன்பமாயினும்   எது   வந்தாலும்   நபிவழியே   எங்கள்   நடைமுறை என்பவர்களா? அல்லது காசுக்காக கரம் கட்டி, சிரம் தாழ்த்தி   நபியின்     புகழ்பாடுவதாகச்   சொல்லி   ´ர்க்கான   கவிகளை   மவ்லிது   என்ற    பெயரால்   பாடி ஃபாத்திஹா   சடங்குகள்   ஓதி பிழைப்புக்குப்   பட்டியல்   போட்டு   மக்களை   ஏமாற்றிப்  பிழைப்பு  நடத்திக்  கொண்டு   நபிவழி   நடப்பவர்களை நாவில் வந்தபடி ஏசித்    திரிபவர்களா? இது போன்றகண்மூடிச் செயல்களை ஆதரித்து குர்ஆனையும், ஹதீசையும் பின்பற்றுபவர்களை பார்த்து ஊரில்   உள்ள   நடு   நிலை   வாதிகளில்  சிலர் கூறுகின்றனர்.   ஊரோடு ஒத்துப்போக வேண்டும் என்று. அல்லாஹ் தன் தூதரைப் பார்த்து கூறுகி<ன்;

(நபியே) இப்புவியில்   இருப்போரில்   அனேகரை   நீர் பின்பற்று வீரா²ல் அவர்கள் உம்மை அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து திருப்பி    விடுவார்கள். (ஆதாரமற்ற)   வெறும்  யூகங்களைத்  தவிர(உண்மையை) அவர்கள்  பின்பற்றுவதில்லை  அன்றி(வெறும் பொய்யான)கற்பனையில் தான் அவர்கள் மூVகி இருக்கின்றனர்.(அல்குர்ஆன்:? 6:116)

இனியாகினும் இவர்கள் பரிசுத்த மார்க்கத்தில்   பிரிவினை ஏற்படுத்தாமல், குர்ஆனுக்கும்   ஹதீசுக்கும்   கட்டுப்பட்டு (பெரியார்கள்    பெயரில் கூறப்பட்டுள்ள பொய்க் கற்பனைகளை விட்டுவிட்டு) நேரான வழியில் வெற்றி நடை போட எல்லாம் வல்ல அல்லாஹ்    அருள்புரிவானாக!  ஆமின்!

———————————————————————————————-
ஐயமும்! தெளிவும்!!

ஐயம்:சிலர் தொழுகை முடிந்தவுடன் இடம் மாறிமாறி தொழுகிறார்கள். ஒரே இடத்தில் முதல் தொழுகை முடிந்தவுடன் எழுந்து மீண்டும் இடம் மாறிமாறி தொழ வேண்டும் என்பது நபிவழியா?விடை தருக. ஏ.எஸ்.எம். சல்மி, ரியாத்.

தெளிவு: தொழுகிறவர் இடம் மாறிமாறித்தொழ வேண்டும் என்பது நபிவழி அல்ல. ஒருவர் தமது சவுகரியத்தை முன்னிட்டு இவ்வாறுஇடம் மாறி தொழுகிறார் என்றால் அதுபற்றி பிரச்சனை எதுவுமில்லை. இடம் மாறி தொழுவதால் ஸவாபு கிடைக்கும் என்ற அடிப்படையில் தொழுவது கூடாது. இமாமாகயிருப்பினும், அவர் தாம் தொழுத இடத்திலேயே தொழுவது பற்றி தவறெதுவுமில்லை. 87 செப்டம்பரில் “”ஐயமும் தொழுவது” எனும் பகுதியில் “”இமாமாக உள்ளவர் தொழ வைத்து அதே இடத்திலிருந்து சிறிதும் நகராமல் மீண்டும்மற்ற தொழுகைகளைத்தொழுவதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்” எனும் வகையில் முகீரத்துபின் ஷீஃபா(ரழி)அவர்களின்வாயிலாக அறிவிக்கப்பட்டு, இப்னுமாஜ்ஜாவில் இடம் பெற்றிருப்பதாக எழுதப்பட்டுள்ள அறிவிப்பில், முகீரத்துபின் ஷீஃபா(ரழி) அவர்களிடம் தாம் கேட்டிருப்பதாக அறிவிக்கும் “” அத்தா உல்குராஸானீ” அவர்கள்  முகீரத்துபின் ஷீஃபா(ரழி) அவர்களை சந்திக்கும்     வாய்ப்பிழந்தவர் என்று அபூதாவூத் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். ஆகவேமேற்காணும்இப்னுமாஜ்ஜாவில்இடம்பெற்றுள்ளமுகீரத்துபின் ஷீஃபா (ரழி) அவர்களின் அவ்வறிவிப்பு லயீபானது என்று கொள்வோமாக!

ஐயம் : நண்டு சாப்பிடுவது ஹராமா? ஹலாலா? என்ற கேள்விக்கு ஆலிம்களும், உலமாக்களும், சிலர் ஹராம் என்றும், சிலர்    ஹலால் என்றும் பதில் சொல்கிறார்கள். இதே சமயம் அராபியர்கள் நண்டை மிகவும் விருப்பமாக சாப்பிடுகிறார்கள். எனவே இதற்குரிய ஆதாரப்பூர்வமான விளக்கத்தை எங்கள் சிந்தனைக்கு விருந்தளிக்கும் நஜாத் மூலம் தரும்படி கேட்டுக் கொள்கிறோம். ஏ.யஹச்.எம்.ஹஸனார்.

தெளிவு : அரபிகள்  நண்டை  விருப்பமாக  சாப்பிடுகிறார்கள் என்று தாங்கள் எழுதுவதிலிருந்து தாங்களும் நண்டை சக்கை போடு போடுவீர்கள்  போலத்  தெரிகிறது.  நண்டு  சாப்பிடுவது  ஹராம்  என்று  யார்  சொன்னாலும்  கேட்காதீர்கள். அது ஹலால் என்று அல்லாஹ் சொல்லும் போது ஹராம் கூறுவதற்கு யாருக்கு அதிகாரம் இருக்கிறது?

உங்களுக்கும்,  (மற்ற) பிரயாணிகளுக்கும் பயன்பெறும்  பொருட்டு (நீங்கள் ஹஜ்ஜூக்காக  இஹ்ராம்  கட்டியுள்ள சந்தர்ப்பத்திலும்) நீரில் (கடலில்) வேட்டையாடுவதும், அதைப் புசிப்பதும் உங்களுக்கு ஹலாலாக?ஆகுமானதாக ஆக்கப்பட்டுள்ளது.(5:96)

மேற்காணும் வசனம் நீர்வாழ் பிராணிகள் அனைத்தையும் நமக்கு ஹலால் என்று கூறுவதால் நண்டும் நீர்வாழ் பிராணி என்ற    வகையில் சாப்பிடுவது ஹலால் என்பதை அறிகிறோம்.

ஐயம் : குர்பானி மாட்டுக்கு 7பங்கு, அந்த 7 பங்கில் 5பங்கு, குர்பானி என்ற எண்ணித்திலும், 2பங்கு சதக்கா என்ற எண்ணித்திலும்கொடுத்தால் குர்பானி ஆகுமா? (குர்பானி கொடுப்பது கடமை, சதக்கா சுன்னத் அதை எப்படி கடமையில் சுன்னத் சேர்க்க முடியும்? வசதி உள்ளவர் கண்டிப்பாய் குர்பானி கொடுக்க வேண்டும். கொடுக்கவில்லை என்றால் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும்ஆனால் சதக்கா செய்தால் நன்மை ஆனால்  அதற்கு கேள்வி  கேட்க மாட்டான். இந்த வாசகம் என் எண்ணம்) குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் பதில் தரவும்.  கரோனேசன் வாட்ச் கம்பெனி, சேலம்.

தெளிவு : ஹஜ்ஜூப் பெருநாளன்று  குர்பானி கொடுப்பது சுன்னத்துதான். பர்லோ, வாஜிபோ அல்ல. குர்பானி செய்யப்படும் அந்த பிராணியை அறுப்பதோடு அந்த சுன்னத்து முடிந்து விடுகிறது. பிறகு அதிலிருந்து சிறிதளவு கொடுத்துவிட்டு மீதியைத்  தாமே வைத்துக் கொள்வதிலும் ஆட்சேபனையில்லை. இருப்பினும் அவற்றை தர்மமாக, அன்பளிப்பாகக் கொடுத்து விடுவதே விசே­ம். தோலைக் கூட தாமே சொந்த உபயோகத்திற்கு வைத்துக் கொள்ளலாம். விற்றால் அதை தர்மம் செய்துவிட வேண்டும். குர்பானி கொடுப்பவர் ஒரு மாட்டிற்கு ஏழு நபர்கள் சேர்த்து கொடுக்கலாம். 7 நபரும் குர்பானி என்ற நிய்யத்தில் அறுத்துவிட்டு சதக்கா கொடுப்பவர் தமது 2 பங்கை மட்டும் பிரிந்து வாங்கி சதக்கா செய்து விட்டால் சரியாகிவிடும். இதற்காக பிரச்சனை எதுவும் தேவையில்லை.

ஐயம் : ஸாம் ´ஹாபுத்தீன் வலியுல்லாஹ் அவர்கள் தம்முடைய ரசூல்மாலையில் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தம்முடைய தாய்தந்தையரை  அவர்களின்   அடக்கத்  தலத்தலிருந்து  உயிர்  பெற்றெழச்செய்து அவர்களுக்கு மீண்டும் கலிமாச் சொல்லிக் கொடுத்தார்கள் எனப் பாடியுள்ளார்கள். இது உண்மையா? விளக்கவும். எஸ்.எம். ஹாஜா, சவூதி அரேபியா

தெளிவு : தாங்கள் கூறியிருப்பதுபோல் அவர்கள் பாடியிருந்தால் அது ஏற்கத்தக்கதல்ல. ஏனென்றால் வல்ல அல்லாஹ், நபி(ஸல்) அவர்களைப்   பற்றிக்   கூறுகையில் “”(நபியே!) நாம்  எம்மை  அகிலத்தாருக்கெல்லாம்  ரஹ்மத்தாக?அருட்கொடையாகவேயன்றி அனுப்பவில்லை”  (21:107) என்று  கூறியிருப்பதிலிருந்து,  நமது நபி(ஸல்)  அவர்கள்  சுயநலவாதி  அல்லர், பொதுநலவாதி தான்  என்பதை   அறிகிறோம்.  அகிலத்தாருக்   கெல்லாம்   அருட்கொடையானவர்கள் இவ்வாறு தமது பெற்றோரை மட்டும் கப்ரிலிருந்து எழுப்பி  கலிமாவைச்  சொல்லிக்    கொடுத்துள்ளார்கள்  என்பது  மேற்காணும்  வசனத்திற்கு முரண்படுவது ஒருபுறமிருக்க, “”தமது பெற்றோரை உயிர் பெறச் செய்துள்ளார்கள் என்பது அதைவிடமிக மோசமான தொன்றாகும். ஏனெனில், மரித்தவர்களை அல்லாஹ் தான் உயிர்ப்பிப்பான்   அவன் அன்றி   வேறெவராலும்   உயிர்ப்பிக்க   இயலாது”   என்பதையும் அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.  நாம்  சதா  ஓதிவரும்  யாஸீனில் “”  இன்னா நஹ்னு  நுஹ்யில் மவ்த்தா” எனும் ஓர் வாசகமிருப்பதை நாம் அறிவோம். நிச்சயமாக நாமே தாம் மரணமடைந்தவர்களை உயிர்ப்பிககிறோம். (36:12)

(நபியே!) அவர்கள் அல்லாஹ்வையன்றி (வேறு)பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டார்களா? ஆனால், அல்லாஹ்வோ, (அனைவருக்கும்) அவனே பாதுகாவலனாக இருக்கிறான்.  அவனே  இறந்தோரை  உயிர்ப்பிக்கிறான்.  அவனே  அனைத்து பொருள்கள் மீதும் பேராற்றல் படைத்தவனாவான்.(42:9)

மேற்காணும் வசனங்கள், மரித்தவர்களை  உயிர்ப்பிக்கும்  தன்மை  வல்ல  அல்லாஹ் ஒருவனுக்கே சொந்த மானதொன்றாகும். என்பதைத் தெளிவு படுத்திக் கொண்டிருக்கும்போது,  நபி (ஸல்)  அவர்கள்  தமது  பெற்றோரை உயிர்ப்பித்தார்கள் என்று கூறுவது எவ்வளவு  அபத்தமானது  என்பதை  நாம்  அறிய  வேண்டும்.  இவ்வாறு அவ்லியாக்கள்  என்று அவர்களாகவே பெயர்  வைத்துக் கொண்ட பலரைப் பற்றி,  பலரும்  அந்த  அவ்லியா  அதை  ஹயாத்தாக்கினார்கள்.  இந்த  அவ்லியா  இதை  மவ்த்தாக்கினார்கள் என்றெல்லாம் வாய்  கூசாமல்  தாம்  பேசுவதோடு,  புத்தகங்களிலும் “”காரண சரித்திரம்” என்ற  பெயரால் வெறும் கட்டுக்கதைகளைஎழுதி வைத்துள்ளார்கள். இவை அனைத்து குர்ஆனுக்கும்,  ஹதீஸ்களுக்கும்  முற்றிலும்  புறம்பானவை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

ஐயம் :தூங்கும் போது வலது புறமாகத்தான் படுத்துத் தூங்க வேண்டுமா? இது நமது ரசூல்(ஸல்) அவர்களின் வழி முறையா? விளக்கவும். பி. எஸ். அப்துல்காதிர், கடையநல்லூர்

தெளிவு : நாம் தூக்கத்திற்குத் தயாராகும் போது வலப்புறமாகப் படுப்பது சுன்னத்தாகும். தூங்கிய பிறகு எந்தப் புறமாக நாம் படுத்திருப்பதைப் பற்றியும் பிரச்சனையில்லை.

நீர் உமது படுக்கைக்கு வரும்போது தொழுவதற்கு ஒளூ செய்வதுபோன்று ஒளூ செய்துவிட்டு, பிறகு உமது வலப்புறமாகப் படுத்துக்கொள்வீராக. (ஹதீஸ் சுருக்கம்) (பர்ராஃபின் ஆஜிப் (ரழி), புகாரீ, முஸ்லிம்)

நபி(ஸல்) அவர்கள் தூங்குவதற்குநாடினால் தமது வலக்கரத்தைத் தமது (வலக்) கன்னத்தில் வைத்துக்கொண்டு, “” அல்லாஹும்மகினீஅதாடக்கயவ்ம தப்அஸூ இபாதக்க” (யா அல்லாஹ்! உனது அடியார்களை நீ எழுப்பும் நாளில் என்னை உனது வேதனையிலிருந்து காப்பாற்றுவாயாக!) என்று மும்முறை ஓதுவார்கள்.(ஹஃப்ஸா(ரழி), அபூதாவூத்)

இவ்வறிவிப்புகளில்  நபி(ஸல்) அவர்கள்  வலப்புறமாக  தாம்  படுப்பதோடு  வலக்கன்னத்தில் கீழ், வலக்கரத்தை வைத்தவர்களாக, மேற்காணும் துஆவை ஓதியவர்களாக படுப்பார்கள் என்பதைக் காணுகிறோம் இவ்வாறு பல்வகை துஆக்களை நபி(ஸல்) அவர்கள்ஓதியுள்ளார்கள்.

ஐயம் :மனிதன் இறைவனோடு ஒன்றித்தல் என்பது இஸ்லாத்திற்கு முரணான கொள்கையா? அவ்வாறாயின் அதை ஆதாரத்துடன்விளக்குக! னி.பு. ஹாஜிமுஹம்மது, நிரவி

தெளிவு : மனிதன் அல்லாஹ்வோடு   ஒன்றித்தல்   என்பது  ஆதாரமற்றதோர்  கூற்றாகும்.  இதற்கு  குர்ஆன்,ஹதீஸின் வாயிலாகஎத்தகைய   ஆதாரமும்   இல்லை.   மாறாக   இவ்வாறு  ஒன்றித்தல் ஒருபோதும் முடியாது என்பதற்கான ஆதாரங்களே குர்ஆன் ஹதீஸ்களில்   ஏராளமாகக்   காணப்படுகின்றன.   குறிப்பாக “”சூரத்துல் இக்லாஸ் ” என்னும்   “”குல்   ஹுல்லாஹு அஹத்” எனும் அத்தியாயத்தை   எடுத்துக்   கொண்டால்   அதன் 5  வசனங்களில்   ஒவ்வொன்றும் நேரிடையாக   இக்கொள்கையை   நிர்மூலப்   படுத்துகின்றன என்பதைக் காணலாம்.

1) நபியே  சொல்வீராக! அவன் ஒரே அல்லாஹ் தான். (அவனுக்கு மாற்று நபராக வேறொரு அல்லாஹ் இல்லை. ஆ²ல் மனிதனுக்கோ அவன் எவ்வளவோ திறமை சாலியாக இருப்பினும் அவனுக்கும் மாற்று நபர் உண்டு)

2) அல்லாஹ் தேவை அற்றவன்.(மனிதனோ தேவையுள்ளவ²க இருக்கிறான்)

3) அவன் யாரையும் பெறவில்லை.(ஆ²ல் மனிதன் குழந்தைகளைப் பெற்றெடுக்கிறான்)

4)மேலும் எவராலும் பெறப்படவுமில்லை.(மனிதனோ பிறரால் பெற்றெடுக்கப் படுகிறான்)

5) அவனுக்கு நிகர் எவருமில்லை.(ஆ²ல் மனிதனுக்கோ, ஒருவனைப்போல் பலர் இருக்கின்றனர்)

இவ்வாறு  மனிதன்  பல்வேறு  வகையில்   இறைவனுக்கு வேறுபட்டிருக்கும் போது, மனிதன் இறைவனுடன் ஒன்றித்தல் என்பது, அறவே சாத்தியமாகாத ஒன்றாகும். ஆகவே இத்தகைய மோசமான கொள்கைக்கு இஸ்லாத்தில் இடம் கிடையாது.

ஐயம்: சிலர் துஆ செய்து முடிந்தவுடன் தமது கைகளைமுகத்திலும் உடலிலும் தடவிக் கொள்கின்றனர்.நெஞ்சிய ஊதிக்கொள்ளவும் செய்கின்றனர். இவ்வாறு செய்வதற்கு ஆதாரமுண்டா?  னி. முகம்மது ஹனிபா, குன்னூர்

தெளிவு : துஆ  கேட்டு  முடிந்தவுடன்  கைகளை  முகத்தில் தடவிக் கொள்ள  வேண்டும்  என்பதற்கான  ஹதீஸ்கள்  அனைத்தும்    பலகீனமானவைகளாவே இருக்கின்றன. முகத்தில் கைகளைத் தடவிக்  கொள்ள  வேண்டும்என்பதற்கு ஸஹீஹான ஹதீஸ் ஒன்றுகூட கிடையாது. பின்வரும் சில ஹதீஸ்களின் நிலையைப் பார்ப்போம்.

உங்கள் கைகளின் உள் பாகத்தைக்கொண்டு அல்லாஹ்விடம் துஆ கேளுங்கள் கைகளின் பின் புறத்தால் கேட்காதீர்கள்! துஆ   கேட்டு முடிந்துவிட்டால் இரு கைகளையும் உங்கள் முகத்தில் தடவிக் கொள்ளுங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு அப்பாஸ் (ரழி), அபூதாவூத்)

இவ்வறிவிப்பு முஹம்து பின் கஃபு என்பவரின் வரிசையில்  பல தொடரில்  இடம் பெற்றுள்ளது. இத்தொடரில்  அப்துல் மலிக் பின் முஹம்மத் எனும் “”மஜ்ஹுல்”    அறிமுகமற்றவர்   இடம்   பெற்றிருப்பது   போல், அனைத்துத்   தொடர்களிலும்   பல கோளாறுகள் காணப்படுவதால், அனைத்தும் பலகீனமானவைகளாகவே இருக்கின்றன.

நபி(ஸல்) அவர்கள் தாம் துஆ செய்யும் போது கைகளை உயர்த்தினால் கைகளால் தம் முகத்தைத் தடவிக் கொள்வார்கள்.
(ஸாயிபு பின் யஜீத் (ரழி), அபூதாவூத்)

இவ்வறிவிப்பில் “” இப்னு லுஹைஆ” வெனும் நம்கபகமற்ற ஒருவர் இடம் பெற்றிருப்பதால் இதுவும் பலகீனமானதாகும்.

நபி(ஸல்) அவர்கள் துஆவின் போது கைகளை உயர்த்தி²ல்அவற்றால் தமது முகத்தைத்தடவிக் கொள்ளாதவரை தமது கைகளை கீழே விடமாட்டார்கள். (உமர் (ரழி), திர்மிதீ)

இவ்வறிவிப்பு   குறித்து   திர்மிதீயின்   பல   பிரதிகளில் “”ஹதீஸுன் ஸஹீஹுன்”?  ஸஹீஹானஹதீஸ் என்று போடப்பட்டிருப்பினும்அதன்   நம்பகமான   அசல் பிரதியில் “” ஹதீஸுன் கரீபுன் ” ஒரு வழிச்  செய்தி  என்றே  இடம்  பெற்றள்ளது  என்பதாக  ஹாபிழ்    அப்துல் ஹக்(ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.  இது  சம்பந்தமான அறிவிப்புகளின்  அனைத்துத்  தொடரிலும்  பலகீனமான    நிலையே காணப்படுகிறது என்பதாக இமாம் நவவீ(ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

(“” அத்காருந்நவவீயின் விரிவுரை” “”ஹில்யத்துல் அப்ரார்” எனும் நூலில் பக்கம் 344ல் இடம் பெற்றுள்ளது)

ஐயம்: பாங்குக்கு பதில் சொல்வது போல் இகாமத்துக்கும் பதில் சொல்ல வேண்டுமா? னி.றீ.ஸலாஹுத்தின், பேட்டை, திருநெல்வேலி

தெளிவு :அபூஉமாமா (ரழி) அவர்கள் தமக்கு  ஒரு  ஸஹாபி   கூறியதாக    அறிவித்துள்ளார்கள். பிலால்(ரழி) அவர்கள் “”இகாமத்” சொல்லத்துவங்கி “” கத்காமத்திஸ்ஸலாஹ் ” என்று அவர்கள்கூறும் போது, நபி(ஸல்) அவர்கள் (அதற்கு பதில் சொல்லும் வகையில்)””அகாமஹல்லாஹு வஅதாமஹா” (அல்லாஹ் அதை?தொழுகையைநிலை நிறுத்தி, மேலும் அதை நேமமாக்கியருள்வா²க!) என்று கூறி²ர்கள் இகாமத்துடைய ஏனைய வாசகங்களுக்கு (உமர் (ரழி), அவர்களின்அறிவிப்பில் இடம் பெற்றிருப்பது போல) பாங்கின் வாசங்களுக்கு பதில் சொன்²ர்கள். (அபூஉமாமா(ரழி), அபூதாவூத்) ஆகவே இவ்வறிவிப்பின் படி இகாமத்துக்கும் பாங்குக்கு பதில் சொல்வது போல், பதில் சொல்ல வேண்டும் என்பதை அறிகிறோம்.

ஐயம் :   பாங்கு   சொல்லி   முடிந்தவுடன் “”லாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்   வஅனமினல் முஸ்லிமீன்” என்று கூற  வேண்டும் என்று கூறுவதற்கு ஆதாரமுண்டா? னி.றீ. ஸலாஹுத்தீன் ? பேட்டை

தெளிவு : பாங்குசொல்லிமுடிக்கும்போது இறுதியாக “”லாஇலாஹஇல்லல்லாஹ்” என்று கூறப்படுகிறது.அப்போதுபதில்கூறுவோரும்அவ்வாறே “”லாஇலாஹஇல்லல்லாஹ்” என்று மட்டுமே பதிலாகச்சொல்லவேண்டும். அடுத்து பாங்கு துஆஓதிக்கொள்ள வேண்டும்என்பது  தான்   நபி   வழியே தவிர,   தாங்கள்   எழுதியிருப்பது போன்ற   அல்லது   லாஇலாஹ இல்லல்லாஹ்வுடன்  முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்பதை இணைத்து பதிலாகக் கூறுவது போன்றும் கூறுவது சுன்னத்து ?  நபி வழி  அல்லபித்  அத்தாகும் என்பதை””பாங்கு கூறுபவர் சொல்வது போன்றே நீங்களும் பதில்சொல்லுங்கள்” எனும் ஹதீஸ் தெளிவு படுத்துகிறது.
(ஹதீஸ் சுருக்கம், உமர்(ரழி), முஸ்லிம், அபூதாவூத்)

(அதிக விளக்கத்திற்கு அந்நஜாத் பிப்ரவரி 88ல் நபி வழியில் நம் தொழுகை பார்க்க!)

ஐயம் : ஜின்கள் பள்ளிகளில் தொழ வருவார்கள் என்பதும் அவ்வாறு அவர்கள் வரும் போது மனிதர்கள் எதிர்பட்டால் அவர்கள் அடித்துவிடுவார்கள் என்பதும் உண்மையா? னி. முஹம்மது ஹனீபா, குன்னூர்

தெளிவு : ஜின்களில் முஸ்லிம் ஜின்களுமிருக்கிறார்கள். அவர்கள் நம்மைப் போன்றே எல்லா அமல்களும் செய்யக் கடமைப்படுள்ளார்கள். நோன்பு பிடிப்பார்கள், ஹஜ்ஜு செய்வார்கள், கஃபாவை தவாபு?வலம் சுற்றுவார்கள். இவ்வளவும் செய்யக்கூடியவர்கள்   நமது பள்ளிகளில் வந்து தொழவும் செய்யலாம். இவ்வளவு ஸாலிஹான சிறந்த ஈமானையுடைய அவர்கள் பள்ளியில் உள்ளவர்  களைப் பார்த்து சந்தோ­ப்படுவார்களே அன்றி, அவர்களை அடிக்க வேண்டிய தேவை அவர்களுக்கு எதுவுமில்லை.

பள்ளியில் தொழவைக்கும் இடமாகிய “”மிஹ்ராபு”க்கு நேராகப் படுத்திருப்போரின் கால்களைப் பிடித்து இழுத்துப்போட்டுவிட்டுப்        போய் விடுவார்கள் என்பதாகச் சொல்லப்படுகிறது. அதுவும் கப்ஸாவாகத் தான் இருக்க வேண்டும். ஏனெனில் பள்ளியைத் தேடித்  தொழ வரக்கூடியவர்கள் இத்தகைய வேண்டாத வேலைகளையயல்லாம் ஏன் செய்யப் போகிறார்கள்?

ஐயம் : குர்பானி செய்த ஆட்டுத் தோலை மஜ்ஜித்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கலாமா? என்பதை தெரியப்படுத்தவும்.
றீ.க்ஷி. ஷாகுல் ஹுசைன், ஊத்தான்கரை

தெளிவு : குர்பானித் தோலை பள்ளி வாசலுக்குக்  கொடுப்பது  தவறில்லை.  ஆ²ல்  தோல் விற்ற பணத்தை பள்ளி நிர்வாகிகள்    துஷ்பிரயோகம் செய்யக் கூடாது. அது ஏழைகளின் ஹக்காகயிருப்பதால் மிஸ்கீன்களுக்கே கொடுக்கப்பட வேண்டும் பள்ளியில்    பணிபுரிவோருக்கு  தோல்  விற்ற  பணத்தை சம்பளமாகக்  கொடுக்கக்   கூடாது.   இவ்வாறே   பள்ளிவாசல்   சம்பந்தப்பட்ட  வேறு   செலவுகளுக்கும் இதைப் பயன்படுத்தக் கூடாது.

ஐயம் : ஜூம்மாவின் போது முதலாவது குத்பாவுக்கும், இரண்டாவது குத்பாவுக்கும் இடையில் அந்த சிறிய இருப்பின் போது என்ன துஆ, ஸலவாத்து ஓத வேண்டும்? எம். யூனுஸ் அஜீப், குவைத்

தெளிவு : இமாம் குத்பாவுக்காக மேடையில் அமருவதிலிருந்து தொழுகை முடியும்  வரை உள்ள நேரம் துஆ கபூலாகும் நேரம் என்பதாக ஹதீஸ்களில் காணப்படுகிறதே தவிர, அப்போது எவ்வாறு எந்த துஆ ஓத வேண்டும் என்பதாக குறிப்பு எதுவும் இல்லை.

அபூபுர்தாPபீன் அபீமூஸா (ரழி) கூறுகிறார்கள்;

நபி(ஸல்) அவர்கள் ஜூம் ஆவுடைய தினத்தன்று (துஆ கபூலாகும்) குறிப்பிட்டதோர் நேரம் பற்றி, அது இமாம் (மின்பரில்) உட்கார்ந்ததிலிருந்து தொழுகை முடியும் வரையில் உள்ளது என்று கூற, தான் கேட்டதாக என் தந்தை என்னிடம் கூற நான் கேட்டுள்ளேன்.
(முஸ்லிம்)

இமாம் அஹ்மதுபின் ஹம்பல் (ரஹ்)அவர்கள் இதுபற்றிக் கூறுகையில் பெரும்பாலான ஹதீஸ்கள் அந்த துஆ கபூலாகும் நேரம் வெள்ளிக்கிழமை   அஸ்ருக்குப்பின்   உள்ளதாகவே இருக்கின்றன. இமாம் திர்மிதீ அவர்களின் அறிவிப்பின்படி வெள்ளிக்கிழமை சூரியன் மேற்கே சாய்ந்ததற்குப்பின்  என்பதாகவும் உள்ளது. இரண்டு   குத்பாக்களுக்கு மத்தியில் இமாம் அமரும் போது உள்ளது என்பதற்கு ஹதீஸ்களில் ஆதாரமில்லை.

ஐயம் : ஓதும்போதோ அல்லது   தொழும்   போதோ   ஸஜ்தா   செய்ய   வேண்டிய இடத்தில் ஸஜ்தா செய்யும் போது என்ன சொல்ல வேண்டும் என்ன ஓத வேண்டும்? குர் ஆன், ஹதீஸ்படி விளக்கவும். எம்.யூனுஸ் அஜீப், குவைத்.

தெளிவு : தொழும் போதோ, அல்லது குர்ஆன் ஓதும் போதோ ஸஜ்தாவின் ஆயத்தை ஓதிவிட்டால் ஸஜ்தா செய்வது சுன்னத்து.     அந்த   ஸஜ்தாவில்   சாதாரணமாக   ஸஜ்தாவில்   ஓதப்படும்   தஸ்பீஹை ஓதலாம். நபி  (ஸல்) அவர்கள்   பின்வரும்   தஸ்பீஹை ஓதியுள்ளதாகவும் ஹதீஸில் இடம் பெற்றுள்ளது. நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையில் ஸஜ்தாதிலாவத்தின்போது  “”ஸஜதவஜ்ஹீ?லில்லதீ கலக்க ஹுவஸவ்வரஹுவ­க்க  ஸம்அஹு வபஸரஹு?பிஹவ்லிஹீ?வகுவ்வத்திஹி பதபாரக்கல்லாஹு அஹ்ஸனுல் காலிக்கீன்.”                                               (ஆயிஷா (ரழி), திர்மிதீ, அபூதாவூத், தாருகுத்னீ, ஹாக்கிம்)

பொருள் : சுயமே தனது  ஆக்கும், திறன்  அழிக்கும்  திறன் ஆகியவற்றால்  எனது  முகத்தைப்படைத்து  உருவாக்கியவனுக்கு அது பணிந்துவிட்டது மேலும்,  அவனே   அதில்  கேட்கும்   திறனையும்   பார்க்கும்   திறனையும்   தோற்றுவித்தான்   அல்லாஹ் பெரும் பாக்கிமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்.

————————————————————————————-
விமர்சனங்கள் ! விளக்கங்கள்!!

எந்த ஒரு செயலுக்கும் குர்ஆனையோ,  ஸஹீஹான ஹதீஸையோ ஆதாரம் காட்ட வேண்டும் என்று கூறும் நீங்கள், அந் நஜாத் மே’ 89 இதழ், 54 ம் பக்கத்தின் கடைசியில் “” குர்ஆனை பேப்பரில் எழுதி, அதனை நூலாக்கி, அதைக் கொடுத்து காசு வாங்குவதைமார்க்கம் அனுமதிக்கிறது. அந்த வகைக்கு   எழுத்துப்   பணியில்   மொழி   பெயர்ப்புப்   பணியில்    ஈடுபடுகிறவர்களுக்கு ஊதியம் கொடுப்பதை மார்க்கம் அனுமதிக்கிறது”   என்று   எழுதியிருப்பதற்கு எந்த ஒரு குர்ஆன் வசனத்தையோ, ஹதீஸையோ ஆதாரமாக எடுத்து வைக்கவில்லையே, ஏன்?         எம். ஏ. இஸ்மத் இநூன், நாகூர்.

ஒரு முறை நபித்   தோழர்கள்   வி­ம் தீண்டப்பட்ட ஒருவர்   இருக்கும் ஓர் ஊருக்குச் சென்றார்கள். அப்போது அவ்வூர் வாசிகளில் ஒருவர் இவ்வூரில் வி­ம் தீண்டப்பட்ட ஒருவர் இருக்கிறார்.  அவருக்கு சிகிச்சை செய்வோர் உங்களில் எவரும் உள்ளனரா? என்று கேட்டார். உடனே  அவர்களில்  ஒருவர் சென்று பாத்திஹத்துல் கிதாபுவை?சூரத்துல்ஃபாத்திஹாவை சில ஆடுகளுக்காக ஓதினார். உடன்  அவரது வி­ம் இறங்கி விட்டது. (அவர் தாம் பேசியபடி) ஆடுகளை தமது சகாக்களிடம் ஓட்டிக் கொண்டு வந்தார். அவர்கள் அதை  ஏற்க  வெறுத்தார்கள். அல்லாஹ்வின் வேதத்திற்கு  கூலி  பெற்றுள்ளீரா? என்றும்  கூறினார்கள். இறுதியாக அனைவரும் மதினா வந்தடைந்தும் நபி(ஸல்)அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே!  இவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு கூலி வாங்கி விட்டார் என்றார்கள்.அப்போது நபி(ஸல்) அவர்கள் ” கூலிபெறுவதற்குமிக்க ஏற்றமானது அல்லாஹ்வின் வேதமாகும் ” என்றார்கள்
(இப்னு அப்பாஸ் (ரழி), புகாரீ)(ஃபத்ஹுல் பாரீ, பாகம் 10 பக்கம் 199)

நபித் தோழர்களில் சிலர் அரபியர் வசிக்கும் ஓர் ஊருக்கு வந்தனர் அவர்கள் இவர்களுக்கு விருந்தளிக்கவில்லை. இந்நிலையில் அவர்களின்   தலைவருக்கு   வி­ம்   தீண்டி   விட்டது. அப்போது அவ்வூர் வாசிகள் இவர்களை நோக்கி, வி­ம் தீண்டியவருக்கும் மருந்து கொடுப்போர் அல்லது மந்திரிப்போர் உங்களில் யாரும் உள்ளீரா? என்றார்கள்.

அப்போது இவர்கள் அவர்களை நோக்கி, நீங்கள்   எங்களை   கவனித்து விருந்துக்கு ஏற்பாடு செய்யவில்லை. ஆகவே நாங்கள் இதற்குப் பரிகாரம் செய்ய   வேண்டுமானால் நீங்கள்   எங்களுக்கு ஒரு தொகை ஆடுகள் தர வேண்டும் என்றார்கள். அவர்கள் சரி காணவே,  ஒருவர்  சூரத்துல்  ஃபாத்திஹாவை  ஓதி தமது நாவில்  சிறிது எச்சிலை சேமித்து  அவர்மீது  துப்பினார்.  உடனே  அவர் குணமடைந்தார்.   உடனே    (குறிப்பிட்ட)   ஆடுகளைக்   கொண்டு வந்தனர்.  அப்போது  நாங்கள்  இது  வி­யமாக  நபி (ஸல்)     அவர்களிடம் கேட்காமல் எதையும் பெற்றுக்கொள்ள மாட்டோம்,  என்று   கூறினார்கள்.  இறுதியாக நபி(ஸல்)  அவர்களிடம் வந்து  கேட்க, அதற்கு அவர்கள் சிரித்தார்கள். பிறகு  அவருக்கு அது  மந்திரம்  என்று எவ்வாறு தெரியும்?  என்று கேட்டு விட்டு அவற்றில் எனக்கும் ஒரு பங்கு வைத்து விடுங்கள் என்றார்கள். (பத்ஹுல்பாரீ, பாகம்10, பக்கம் 198)

இந்த இரண்டு ஹதீஸ்களிலிருந்து, குர்ஆனைக் கொண்டு பொருள் ஈட்டக் கூடாது என்ற அச்சம் நபித் தோழர்களுக்கு இருந்ததும், இந்த கையில் பொருள் ஈட்டுவது ஆகுமானது மட்டுமல்ல, மிக ஏற்றமானதும் கூட என்பதும் தெளிவாகப் புரிகின்றது.

நபித் தோழர்கள் ஆரம்பத்தில் ஆடுகளைக் கூலியாகப் பெறுவதற்கு அஞ்சியதற்குக் காரணம், மார்க்கத்தைப் போதிப்பதற்குக் கூலிபெறுவதை 6:90,  10:72, 11:29,51, 12:104,  25:57, 26:109,127,164, 180,  34:47, 36:21, 38:86, 42:23, 52:40 ஆகிய        குர்ஆன் வசனங்கள் கண்டிப்பதேயாகும். அந்த அடிப்படையில் வி­ம் இறங்க குர்ஆனை ஓதியதற்குக்கூலிபெறத் தயங்கினார்கள்நபி(ஸல்)  அவர்களிடம்  வந்து  முறையிடவும்  செய்தார்கள்.  ஆனால் நபி(ஸல்) அந்தக் கூலியானது பெறுவதற்கு மிக ஏற்றமான தென்று கூறி,  தனக்கும் அதில்   பங்கு   கேட்டிருக்கிறார்கள். மேல்   எழுந்த   வாரியாகப்   பார்க்கம்போது  மேலே  கண்ட குர்ஆன் வசனங்களுக்கு   இந்த    ஹதீஸ்கள்   முரண்படுவது   போல் தெரியும்.   சரியாக விளங்கிக் கொண்டால் முரண்பாடுதீர்ந்து விடும். மார்க்கத்தைப்   போதிப்பது  நபிமார்களுக்குக்   கடமையாக  இருந்தது போல், இந்த உம்மத்திலுள்ள ஆணுக்கும், பெண்ணுக்கும் கடமையாக இருக்கிறது   என்பதை 103?ம்   அத்தியாயம் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடுகின்றது. தனது கடமையைச் செய்ய கூலி பெறுவது கூடாது. அதற்குரிய கூலி அல்லாஹ்விடமே உண்டு உதாரணமாக அரசாங்க அலுவலகத்தில் பணி புரிபவருக்கு சம்பளம்அரசாங்கம்   கொடுக்கிறது.  தன்மீது கடமையான அந்தப்   பணியைச்  செய்து   கொடுத்து   விட்டு, அதற்காக  மக்களிடம்  கூலி     பெறுவதையே  (லஞ்சம்) குற்றம் என்கிறோம், ஆகாது என்கிறோம். அரசாங்க டாக்டர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளித்து விட்டு மக்களிடம் கூலி பெறுவதை குற்றம் என்கிறோம். அதே டாக்டர் தனதுபணிநேரத்திற்குப்பின், வெளியில் டிஸ்பென்ஸரிவைத்துசிகிச்சை அளித்துப் பணம் பெறுவதை குற்றம் என்றுசொல்ல மாட்டோம். “”பீஸ்” என்றும் அனுமதிக்கப்பட்டதுஎன்றும் சொல்லுவோம்அதாவது தனது கடமையைச்செய்வதற்கு கூலி பெறமுடியாது, கடமைஅல்லாததைச்செய்யும் போது கூலி பெறலாம்.மார்க்கத்தைப்போதிப்பது, குர்ஆனை போதிப்பது   ஒவ்வொரு   முஸ்லிமின்   மார்க்கக் கடமையாகும். எனவே   அதற்காக கூலி பெற முடியாது. ஆனால் குர்ஆனை   ஓதி   வி­த்தை   இறக்கியது மார்க்கக் கடமையைச் சார்ந்தது அல்ல. எனவே அதற்காக கூலி பெறுவதை நபி(ஸல்) அவர்கள் அனுமதித்தார்கள்.

அதே போல் குர் ஆனை போதிப்பது மார்க்கக்கடமையே அல்லாமல் அதனை ஏட்டில் எழுதிக் கொடுப்பது மார்க்கக்கடமை அல்ல. அது மார்க்கக் கடமையாக இருந்திருக்குமானால் நபித் தோழர்கள் மார்க்கத்தை போதிப்பதைக் கடமையாகச் செய்தது போல், குர்ஆனை எழுதி மற்றவர்களுக்கு கொடுக்கக் கடமைப்பட்டிருப்பார்கள். எழுதிக்கொடுப்பது மார்க்கக் கடமையாக இருந்திருக்குமா²ல்   எழுதப் படிக்கத் தெரியா மக்களை பெரும்பான்மையாகக் கொண்டிருந்த ஒரு சமுதாயத்தை மார்க்கத்தை நிலை நாட்டும் மக்களாக அல்லாஹ்   தேர்ந்தெடுத்திருக்க   மாட்டான்.   இந்த   விளக்கங்களிலிருந்து   குர்ஆனையோ,  அல்லது   மார்க்க    சம்பந்தப்பட்ட வி­யங்களையோ  எழுதி, அவற்றை நூலாக்கிக்  கொடுப்பது விதிக்கப்பட்ட மார்க்கக் கடமையமல்ல. எனவே அவற்றைச் செய்து    கூலி பெறுவது ஆகும் என்பதை  மேற்காணும் ஹதீஸ் மூலம் விளங்குகிறோம்.

இப்போது இமாமாக தொழ வைப்பது கடமையல்லவே. தன் மீது கடமையில்லாததைச் செய்து   விட்டுத்தானே   கூலி   பெறுகிறார்   என்ற ஐயத்தைச்   சிலர்   கிளப்பலாம்.   இதற்கு   நபி(ஸல்)   அவர்களுடைய காலத்தில் இமாமாக தொழ வைத்தவர்களுக்குக் கூலி கொடுக்கப்படவில்லை. அந்த    அடிப்படையில் இமாமத்திற்கு கூலி பெறுவது ஆகுமானதல்ல என்று எளிதாக விளங்கிக் கொள்ள முடியும். குறிப்பிட்ட ஒருவருக்கு இமாமத் செய்வது கடமை இல்லை என்றாலும், தொழுகைக்கு இருவர் சேர்ந்து விட்டாலே ஒருவர்   இமாமாக நின்று தொழுது வைப்பது கடமையாகி விடுகிறது. மார்க்கத்துக்குச் சொந்தக்காரர்கள் மவ்லவிகள் தான் என்ற நிலை மாறிநபி(ஸல்) அவர்கள்  காலத்தில் இருந்தது போல் அனைவரும் மார்க்கத்தை அறிந்தவர்களாக ஆகிவிட்டால், யாரும் தொழ வைக்க முடியும். தொழ வைப்பதற்கு நான் தயார், நீ தயார் என்று தயாராகிவிடுவார்கள். கூலிக்கு ஆள் பிடிக்கும் நிர்ப்பந்தம் இருக்காது.

எங்களூர்   வந்திருந்த  மதனி  அவர்களிடம் “”தமிழ்நாடு  ஜமா அத்துல் உலமா சபை” அமைந்திருப்பது பற்றியும் அதனை நீங்கள் தவறு என்று கூறி வருவது பற்றியும் கேட்டேன். அதற்கு அவர் நீங்கள் வியாபாரிகள் சங்கத்தின் முக்கிய பொறுப்பில்இருப்பதாகவும்அதைப்போன்ற ஒரு சங்க அமைப்புத்தான் இந்த ஜமாஅத்துல்உலமா சபையும்என்று கூறினார். நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?முஹம்மது அலி  ஜின்னா, முக்கனாமலைப்பட்டி

“”எலக்ட்ரிக், எலக்ட்ரேனிக் & என்ஜினுயரிங் டிரேடர்ஸ் அஸோஸியே­ன்” என்ற சங்கத்தில் நாம் முக்கிய பங்கு வகிப்பது உண்மை தான்   அதைக்காட்டி   அவர்கள்  ஜமா அத்துல் உலமா சபையை நியாயப்படுத்துவது தான் ஏற்புடையதாக இல்லை. மக்கா பள்ளி இமாம்   கண்ணாடி,   கைக்கடிகாரம்   அணிவதைக்  காரணம்  காட்டி,  பித்அத்துகளை நியாயப்படுத்துகிறாரே, அதற்கும் இதற்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. டாக்டர்கள் மீது  வல்கீல்கள்  மீது  மக்கள் நம்பிக்கை வைத்து,  தங்கள் காரியங்களை ஒப்படைத்து, அதற்கு ஃபூஸும் கொடுக்கும் போது, மவ்லவிகள் மீது மக்கள்நம்பிக்கை வைத்து மார்க்கக்காரியங்களை அவர்களிடம் ஒப்படைத்துஅதற்காக அவர்களுக்கு ஹதியா(?) கொடுப்பதில் தவறு என்ன? என்ற விமரிசனத்திற்கு அந்நஜாத் ஏப்ரல் 89 இதழ் பக்கம் 53ல் விளக்கம்  கொடுத்துள்ளோம்.  அதனை  தயவு  செய்து  மீண்டும்  பாருங்கள் அவர்களின்  வாதத்திலுள்ள  கோளாறு உங்களுக்கு நன்றாகவே புரியும்.

சங்கங்கள் பொதுவாக தங்கள் உரிமைகளைப் பெற்றுக் கொள்ளஅமைக்கப்படுகின்றன. அதேபோல் இந்தஜ.உ.சபை அவர்களின்உரிமைகளைப் பெற்றுக் கொள்ள அமைக்கப்பட்டிருந்தால் அவர்களின் வாதத்தை ஏற்றுக்கொள்ளலாம்.  ஆனால் சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வை   உண்டாக்க   அல்லவா  ஜ.உ.ச   அமைந்துள்ளார்கள். 1987 பிப்ரவரியில் இடம் பெற்ற ஒரு சம்பவத்தை அறியத் தருகிறோம். அதன் பின் நீங்களே அவர்களின்  கூற்றிலுள்ள  உண்மை  (?) யை முடிவு  செய்து  கொள்ளுங்கள்.  திருச்சியில் 87  பிப்ரவரி 14,15?ல்  நாம்  நடத்திய  இஸ்லாமிய  மாநாடு  நடந்து முடிந்த  அடுத்த  நாள் 16-2-87 காலை எம்மிடமிருந்த அந்நஜாத் சம்பந்தப்பட்ட எல்லாப் பொறுப்புக்களையும் அட்ஹாக் கமிட்டிவசம் ஒப்படைத்த நிலையில் 2 மதனிகள், 2 மவ்லவிகள் அடங்கிய 9 நபர்கள்  கொண்ட  அட்ஹாக்  கமிட்டி  அன்று   இரவு   கூடியது   அட்ஹாக்   கமிட்டியின்  நிர்வாகத்தில் எமக்கு எவ்வித பொறுப்பும் கொடுக்கப்படாமல் பார்த்துக் கொண்டார்கள். நாம் அதற்கு மறுப்புத்தெரிவிக்கவில்லை. இறுதியில் ஆசிரியர் குழுவில் யாரெல்லாம்இடம் பெறுவது என்ற கேள்வி எழும்போது அதிலும் நாம்இடம் பெறுவதைதவிர்ப்பதற்கு ஆசிரியர் குழுவில் இடம் பெற அளவுகோள் என்ன? என்ற கேள்வியை ஒரு மதனி கிளப்பினார். உடனே நீங்கள்  சந்தித்த மதனி அளவுகோள் ஆலிமாக இருக்க வேண்டும். ஆலிம் என்றால்  அரபி   தெரிந்திருக்க   வேண்டும்   என்று  வாதாடினார். இந்த  மதனிகளின்  வாதத்தில் நியாயம் இல்லை என்று மவ்லவி அல்லாத உறுப்பினர் மூவர் பல விளக்கங்கள் கொடுத்து வாதாடினார்கள். சுமார் 1 மணி நேரம் இந்தவாதம் நீடித்தது. ஒரு முடிவும் ஏற்படவில்லை. ஆசிரியர் குழுவில் இடம் பெறுபவர் அரபி தெரிந்தவராக இருக்க வேண்டும் என்பதில் மதனிகள் இருவரும் மிகவும் பிடிவாதமாக   இருந்தனர். இவ்வளவு   நீண்ட   நேர   விவாதத்திலும்   கதாநாயகர் மவ்லவி வாய்மூடி மவ்னம் சாதித்தாVர்.அவர்களின் போக்கில் வெறுப்புற்று நாம் வெளி நடப்புச்   செய்ய   முற்பட்ட   பின்பே   அந்த மவ்லவிகள் வழிக்கு வந்து, அட்ஹாக் கமிட்டி உறுப்பனிர்கள் 9  பேரும் ஆசிரியர் குழுவில் இடம் பெறுவது என முடிவு செய்தனர்.அதன்பின் பல தினங்கள் நடைபெற்ற அட்ஹாக் கமிட்டியின் ஆய்வில் நம்மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச் சாட்டுகள் அனைத்தும் பொய் என நிரூபிக்கப்பட்டு 29-3-87ல் மீண்டும் எம்மையே அந்நஜாத்  நிர்வாகத்தின்  தலைவராகத் தேர்ந்தெடுக்கும் நிர்ப்பந்த நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. நம்மிடம் பொறுப்பை ஒப்படைத்தனர். ஒரு மாதம் கழித்து  மே’87 இதழில் அவர்கள் அமைத்துள்ள ஜ.உ.ச. பற்றிய விளம்பரத்தைப் போடும்படி வேண்டினர். அவர்களது கோரிக்கை ஏற்றுக்  கொள்ளப்பட்டவில்லை. அவர்கள் வெளியேறியதற்கு இது ஒரு முக்கிய காரணம் என்பதற்கு அவர்கள் கைப்பட எழுதிய கடிதங்களே ஆதாரங்களாக இருக்கின்றன. அவர்கள் தங்களின இனத்தைத் தக்க வைத்துக் கொள்ள எந்த அளவு வெறியுடன் செயல்பட்டுள்ளனர் என்பது தெரிகிறதல்லவா? அவர்கள் இதழ் ஜூன்’ 89 பக்கம் 14ல் பாருங்கள்.இஸ்லாமிய  அழைப்பாளர்களாக   பயிற்சி  பெற  ஸனது  பெற்ற மவ்லவிகளையே  விண்ணப்பிக்க  கோரியுள்ளனர். இதிலிருந்து என்ன தெரிகிறது? மவ்லவிகள் அல்லாதவர்கள் அழைப்பாளர்களாக பயிற்சி பெற அருகதை அற்றவர்களா? ய.பு.,ய.றீஉ.,ய.ளீலிது.,னி.பு.,னி.றீஉ.,னி.ளீலிது., போன்ற பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு அழைப்பாளர்களாக ஆகும்தகுதிஇல்லையா?தமிழ் மட்டும் படித்துள்ள துடிப்புள்ள வாலிபர்கள் அழைப்பாளர் பயிற்சி பெறக்கூடாதா? நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள். அரபியைக் கொண்டு பெருமைபேசி, சமுதாயத்தைப்   பலி   கிடாவாக   ஆக்கி, தங்கள்   இனத்தை வளர்ப்பது தான் அவர்களின் நோக்கம் என்பது இப்போதாவது உங்களுக்குப் புரிகிறதா? சுமார் 1 1/2 வருடங்கள் அவர்களுடன் பழகிய பின் ஏற்பட்ட இது போன்ற அனுபவங்கள்பல இருக்கின்றன

அவர்கள் நம்மைவிட்டு  வெளியேறுவதற்கு   முன்னால் இடம் பெற்ற சம்பவங்கள் எழுதிய கடிதங்கள் இவை அனைத்தையும் சில சகோதரர்களின் அன்பான வேண்டுகோளுக்கிணங்கி நாம் மக்கள் முன் வைக்கவில்லை. இது அவர்களுக்கு இப்படிப்பட்ட தவறானசெய்திகளைப் பரப்ப துணை புரிகிறது. இப்படி தவறானசெய்திகளையும்அவதூறுகளையும் வீண்பழிகளையும் தொடர்ந்து அவர்கள்பரப்பி வந்தால் சம்பந்தப்பட்ட சம்பவங்கள்   அனைத்தையும்   கடிதங்கள்   அனைத்தையும் மக்கள் முன் வைக்கும் நிர்ப்பந்தத்தில் நாம் தள்ளப்படுவோம்.

“”அபூ அப்துல்லாஹ் இப்போது இறங்கி வந்து “”முத்தஷாபிஹாத் ” வசனங்களை விளங்க முடியும்” என்று ஒப்புக்கொள்கிறார் என்று சிலர் சொல்லுகின்றனரே!  னி. முஹம்மது காசீம், பொறையார்

மக்களின் மறதி, தக்லீது மனப்பான்மை, சுயசிந்தனையற்ற போக்கு இவற்றைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி  இவ்வாறு பேசித்திரிகின்றனர்.

குர்ஆனை விளங்குவது யார்?  என்ற  தொடரின்  ஆரம்பத்திலேயே (ஆகஸ்ட் ’87 பக்கம் 30) 3:7  வசனத்தின்  மொழி  பெயர்ப்பில் “”உண்மைக்  கருத்தை  அல்லாஹ்  மட்டுமே அறவான் ” என்ற  கருத்திலேயே  எழுதியுள்ளோம்.  விளங்குவதை  நாம்  மறுத்துக்  கூறவில்லை. ஜூலை ’88 பக்கம் 19ல்

“”முத்தஷாபிஹாத் வசனங்களைஓதுவதையோ அவற்றைப்பற்றிச்சிந்திப்பதையோ, விளங்கமுற்படுவதையோதடை செய்யவில்லைஇது தான் அதன் பொருள் என்று  ஓர்  உறுதியான முடிவுக்கு வந்து  அதைப்  பின்பற்றுவதையே தடை செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டிருந்தோம். செப்’ 88 பக்கம் 14ல்,

முத்தஷாபிஹாத் வசனங்களுக்கு உறுதியான, திட்டமான   ஒரு   முடிவுக்கு   அல்லாஹ்  அல்லாத  வேறு  யாரும் (கல்வியறிவில்   நிலையானவர்கள் உட்பட) வர முடியாது  என்பதனால் அந்த வசனங்களைப் பற்றி சிந்திக்கக் கூடாது; அவற்றிலுள்ள ஞானங்களைவிளங்க முற்படக் கூடாது; உலக ரீதியில் அவற்றிலுள்ள ஞானங்களை விளங்கிச்செயல்படுத்தக் கூடிய வி­யங்கள் நிதர்சனமாக இவ்வுலக வாழ்க்கையில் குர்ஆனுக்கோ,   ஹதீதுக்கோ   முரணில்லாத  நிலையில்  நல்ல பலன்களைத் தரும் பொழுது அவற்றை பயன்படுத்தக் கூடாது என்றோ நாம் சொல்லவில்லை. மாறாக,  முத்தஷாபிஹாத்   வசனங்களிலிருந்து  திட்டமான ஒரு  கருத்தைச் சொல்லி, அதைப் பின்பற்றுவதால் மறுமையில் நன்மை  கிடைக்ககும்  என்றோ,  உலகத்தில்  பரக்கத்  ஏற்படும்  என்றோ   எடுத்து மார்க்கமாகச்   செயல்படுத்தக்   கூடாது    என்றே   சொல்கின்றோம்.   இந்த 3:7 வசனத்திலுள்ள “தஃவீல்’ என்ற அரபிப் பதத்திற்கு உண்மைக் கருத்து (இறுதியான முடிவு)   என்ற   பொருளைத்   தராமல்   விளக்கங்கள்   விரிவுரைகள்   என்ற பொருளைத் தருவது கொண்டு சிலர் தடுமாறுவதால் இந்த விளக்கத்தை இங்கு இணைக்க நேரிட்டது என்றே குறிப்பிட்டிருந்தோம்.செப்’88 பக்கம்16ல்

முத்தஷாபிஹாத் வசனங்களை விளங்க அரபி இலக்கண இலக்கிய ஞானம் அந்த வி­யங்கள் சம்பந்தப்பட்ட துறைகள் பற்றிய ஞானம், அதற்குரிய காலம் கனிந்திருத்தல் இந்த மூன்றும் அவசியம் என்று குறிப்பிட்டிருந்தோம்.

வி­யம் இவ்வளவு தெளிவாக இருக்க,  இப்போது  நாம்  இறங்கி வந்து “”முத்தஷாபிஹாத்” வசனங்களை விளங்க முடியும் என்று ஒப்புக்கொள்வதாக   கதையளந்தால்   அவர்களைப்பற்றி நீங்களே முடிவு  செய்து  கொள்ளுங்கள். தங்களை  தவ்ஹீதுவாதிகள், குர்ஆன்   ஹதீஸ்   படி நடப்பவர்கள்   என்று   கூறிக்கொள்பவர்களே இப்படிப்பட்ட  உண்மைக்குப் புறம்பான கூற்றுக்களை நம்பி, அவர்களும் இவற்றைக் கூறித்திரிகிறார்கள் என்றால் அவர்களது சுயசிந்தனைத்திறன் பற்றியும் நீங்களே முடிவு செய்யுங்கள்.

அந்நஜாத்தில் வெளியிடப்பட்ட தெளிவான வி­யங்கள் குறித்தே உண்மைக்குப் புறம்பாக அவர்கள் பேசித் திரிவதும், அதை ஒரு கூட்டம் நம்புவதும் சாத்தியம்   என்றால்   மக்கள் முன் வைக்கப்படாத வி­யங்கள் பற்றி எந்த அளவு அவதூறு பரப்புவார்கள் பழி சுமத்துவார்கள் என்பதையும்அவர்களை நம்பும் கூட்டமும் அவற்றை எந்த அளவு ஏற்றுச் செயல்படுவார்கள்என்பதையும் நீங்களேமுடிவு செய்யுங்கள்   அவர்கள்   கூறித்திரியும்   அவதூறுகள்   பழிகள்   பற்றி   நேரடியாக அந்நஜாத்  ஆபிஸ் வந்து சம்பந்தப்பட்ட ரிகார்டுகளைப் பார்வையிடாமலும், சம்பந்தப்பட்ட நம்முடைய வாக்கு மூலங்களைக் கேட்டு உண்மையை விளங்காமலும், கண்மூடித்தனமாக அவற்றை ஏற்றுச்  செயல்படும்   கூட்டம்  பற்றியும்   நாம் சொல்லி   நீங்கள்   தெரிய   வேண்டியதில்லை. அந்நஜாத்   ஆரம்பத்திலிருந்து   சொல்லிவரும் யாரையும் தக்லீது செய்யாதீர்கள்’ என்பதை அவர்கள் விளங்கியதாகத் தெரியவில்லை.

சென்னை மக்கா மஸ்ஜித் இமாம் தனது இதழில் தங்களை மிகக் கடுமையாகச் சாடியுள்ளாரே? எம். ஹஸன், அரியமங்கலம்

மவ்லவிகள் நம்மைச் சாடுவதும், தரக்குறைவாகப் பேசுவதும்   புதிய   வி­யமல்ல. நெருங்கிய நண்பர்களாக இருந்த மவ்லவிகள் சத்தியத்தை மறைக்காமல் நாம் சொல்ல முற்பட்டது கடும் பகைவர்கள் போல் ஆகிவிட்டார்கள். எனவே மக்கத மஸ்ஜித் இமாமின் தூற்றலை நாம் பொருட்படுத்த வேண்டிதில்லை. ஆயினும் அதன் மூலம்   அவர் தனது அறியாமையை 1000 நி பவர் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.

“”ஹஜ்ரத் நபிகளார் (ஸல்?அம்) அவர்கள் மாத்திரம் தான் “உம்மி’ என்ற சிறப்புக்கு உரியவர்கள்” இது அவரது மணிவாசகம்ஆனால்அல்குர்ஆனில் “உம்மி’ என்ற பதம் 7:157, 158   வசனங்களில்   நபி(ஸல்)   அவர்களைக்   குறிக்கும், 62:2ல் இந்த உம்மத்தைக் குறித்தும், 2:78, 3:20, 3:75 வசனங்களில் பொதுவாக எழுதப்படிக்கத் தெரியாத அனைவரைக் குறித்தும் குறிப்பிட்டு வந்துள்ளது.நாம் அல்குர்ஆனின் உபதேசத்தை ஏற்பதா? அல்லது இந்த மவ்லவியின் கூற்றை ஏற்பதா? என்று நீங்களே முடிவு செய்யுங்கள். அது மட்டுமல்ல, இந்த உம்மத்தை “உம்மி’   சமுதாயம் என்று   குறிப்பிடும்   பல    ஹதீஸ்களைப்  பார்க்கிறோம்.   உதாரணமாக, அந்நஜாத் ஏப்ரல் ’89 பக்கம் 47ல் இப்னு உமர் (ரழி)   அவர்களால்   அறிவிக்கப்பட்டு   புகாரீ, முஸ்லிமில் இடம் பெற்றுள்ள ஒரு ஹதீஸ் காணப்படுகிறது பார்வையிடுங்கள். அதில் தெளிவாக “”நிச்சயமாக நாம் எழுதப் படிக்கத் தெரியாத “”உம்மியான” சமுதாயம் நமக்கு எழுதவோ,  கணக்குப்   பார்க்கவோ   தெரியாது” என்று   நபி(ஸல்)   அவர்களேகுறிப்பிடுகிறார்கள். மேலும்,   “”நான் எழுதப் படிக்கத் தெரியாத உம்மியான சமுதாயத்திற்கு அனுப்பப்பட்டுள்ளேன்” என்று நபி(ஸல்)   அவர்கள் நவிலும் ஒரு ஹதீஸ் திர்மிதீயில்காணப்படுகிறது. இது 62:2குர்ஆன் வசனத்திற்கு விளக்கமாக  இருக்கிறது.  நபி(ஸல்)    அவர்களை விட  இந்த  பாக்கவி தன்னை  மெத்தப் புத்திசாலி என்ற எண்ணுகிறார் போலும்.

அடுத்து, “”ஸஹாபாப் பெருமக்களில் உள்ள ஒவ்வொருவரின் பெயரைக் குறிப்பிடும் போதும் “ஹஜ்ரத்’ என்று மாண்புரை குறிப்பிடப்படுகின்றதே, அதன் அர்த்தத்தைக் கூடவா உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்று பாக்கவியார் வினா எழுப்பியுள்ளார்.

இந்த “ஹஜ்ரத்’ என்ற பதத்திற்கு அர்த்தம் குர்ஆனில் பார்க்க வேண்டுமா? அல்லது ஹதீஸில் பார்க்க வேண்டுமா? என்றவிபரத்தைஅவர் தரவில்லை. குர்ஆனிலோ, ஹதீஸிலோ இந்த “ஹஜ்ரத்’  என்ற   பதம்   இடம்  பெறவேயில்லை.  நபி(ஸல்) அவர்களையோ, நபித்தோழர்கைளையோ  “ஹஜ்ரத்’ என்று   அழைத்தத்ற்கு    எவ்வித  ஆதாரமும், எந்த  ஆதாரப்பூர்வமான  நூலிலும்  இல்லை. இதுவே  உண்மை நிலை.

அது போகட்டும் அரபி அகராதி (முன்ஜித்)யில் இந்த மவ்லவிகளாலும் மக்களாலும் உச்சரிக்கப்படும் “ஹஜ்ரத்’ என்ற பதத்திற்கு அர்த்தத்தைப் பார்ப்போம்.

ஹழ்ரத்? சந்நிதானம்?பெரியவாள்.(மாற்று மதத்தினரைப் போல்இவர்களும் தங்களை இறைவனின் அவதாரம் என்று சொல்லுகின்றரோ என்னவோ?)

ஹழரத்? ஆஜராகும் நிலை, சமீபம்
வீட்டின் முன்னால் உள்ள முற்றம்
நகரத்தில் வசிப்பவர்.
வீடு கட்டத் தேவையான கல், கருங்கல் செங்கல், சிமெண்ட் போன்றவை.

ஹழரதிஸ்ஸலாத் (வினைச்சொல்)? தொழுகை நேரம் வந்துவிட்டது.

ஹஜர்?கல்;ஹிஜ்Vரத்? கற்கள்
ஹஜ்ரத் ?ஓரம் (இவர் போன்ற ஹஜ்ரத்களை ஓரம் கட்டும் காலம் வந்து விட்டதால் அப்படி அழைக்கச் சொல்லுகிறாரோ என்னவோ?அல்லது நபித்தோழர்களின் உண்மைச் சம்பவங்களை ஓரம்கட்டி வைத்துவிட்டு, இவர்களது கற்பனைக் கட்டுக் கதைகளை மார்க்கமாகச் சொல்லுவதால் “ஹஜ்ரத்’ என்று அழைக்கச் சொல்லுகிறாரோ என்னவோ? அவரே இவற்றையும் வெளிச்சம் போட்டு காட்டுவாராக!)

ஹஜ்ரத்? சொத்து (சொத்து சேர்ப்பதிலேயே அவர் குறியாக இருப்பதால் அவ்வாறு சொல்லுகிறாரோ என்னவோ?)
ஹஜரத்? அல்மர் அத்துஸ் ஸமீனத்துத்தாம்மத்து?முழுமையாகக் கொழுத்த பெண்.
ஹஸ்ரத்?கை தேசம்
ஹுஜுர்? பாலில் உரை ஊற்றி புளிக்க வைத்தல்
பேரீச்சம் பழத்தை தண்ணீரில் ஊறவைத்து புளிக்க வைத்தல்

இவற்றில் எந்த உச்சரிப்பை, எந்தப் பொருளில் சொல்ல வேண்டும் என்பதை சுலைமான் பாக்கவியாரே விளக்குவாராக!

அவர் தனது ஏட்டில் உபயோகித்திருக்கும் அட முட்டாள்களே!’ முண்டங்களே! போன்ற அடை மொழிகளுக்கு யார்சொந்தக் காரர்கள் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

அல்ஜன்னத் ஆக்ஸ்ட் “89 இதழி பக்கம் 26ல் நபி(ஸல்) அவர்கள் திரைக்குப் பின்னால் இருந்து நீட்டிய ஒரு பெண்ணின் கையைப்பிடித்துக்கொண்டு, இது ஆணுடையகையா? பெண்ணுடைய கையா? என்று எனக்குக் தெரியவில்லையே? என்று கேட்டதாக ஒரு ஹதீஸ் ஆயிஷா (ரழி) அவர்களால் அறிவிக்கப்பட்டு, நஸயீ, அபூதாவூதில் இடம் பெற்றுள்ளவதாக எழுதியுள்ளனர். நபி(ஸல்) அவர்கள் அந்திய பெண்களின் கையைப் பிடித்துள்ளனரா?அயூப்கான் மேலகல்கண்டார் கோட்டை

பெண்களின்  கைப்பிடித்து  ரசிக்கும்  பீர்  முரீது  வியாபாரிகளுக்கு  நல்ல  கொண்டாட்டம் தான். நபி(ஸல்) அவர்கள் எந்த அந்திய பெண்ணின் கையையும் பிடித்ததில்லை என்ற ஆதாரப்பூர்வமான ஹதீஸுக்கு முரணாக இப்படி ஒரு ஹதீஸ் அவர்களுக்கு கிடைத்தால் அவர்களுக்குக் கொண்டாட்டமாக இருக்காதா? அதுவும் திரைக்குப்பின்னால் இருந்து நீட்டிய அந்திய பெண்ணில் கையைக் பிடித்துக் கொண்டு இது ஆணுடைய கையா? பெண்ணுடைய கையா? என்று கேட்டதாகச் சொல்வது பீர் முரீது வியாபாரிகளுக்கு   பாலில்  பழம்  விழந்தது போல் தான். நாம் பார்த்தவரை நஸயீயிலோ, அபூதாவூதிலோ அவர்கள் கூறும் பொருளில் ஒரு ஹதீஸும் இல்லை நஸயீயில் காணப்படும் ஹதீஸ் வருமாறு;

ஆயிஷா (ரழி) அறிவித்துள்ளார்கள்:

ஒரு பெண் நபி(ஸல்) அவர்கள்  பக்கம் ஒரு ஏட்டுடன் தமது கையை நீட்டினார். நபி(ஸல்) அவர்கள் (அதைத் தொடாமல்) தமது கையை இழுத்துக் கொண்டார்கள். அப்போது அப்பெண் “” அல்லாஹ்வின்தூதரே! நான் ஏட்டுடன் எனது கை உங்கள் பக்கம் நீட்டினேன். அதை நீங்கள் வாங்க வில்லையே!” என்றார் அதற்கு நபி(ஸல்) அவர்கள் அது ஆணுடைய கையா? அல்லது பெண்ணுடைய கையா? என்பது எனக்குப் புரியவில்லை” என்றார்கள் பெண்ணுடைய கை தான் என்று அப்பெண் கூறினார். அப்போது அவர்கள் பெண்ணுடைய கையாயிருப்பின் நீர் அதன் நகங்களை மருந்தானியால் மாற்றிருப்பீரே! என்றார்கள் (நஸயீ)

அபூதாவூதில் காணப்படும் ஹதீஸ் வருமாறு :

ஆயிஷா (ரழி) அறிவித்துள்ளார்: ஒரு   பெண்   திரைக்கு   அப்பால் இருந்து   கொண்டு   நபி(ஸல்) அவர்களின்   பக்கம்   புத்தகம்  வைத்துள்ள நமது கையை நீட்டினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் (அதைத் தொடாமல்) தமது கையை இழத்துக் கொண்டு இதுஆணுடையகையா? அல்லதுபெண்ணுடைய கையா? என்பது எனக்குப் புரியவில்லைஎன்றார்கள்.அப்போதுஅவர் பெண்ணுடையகைதான்என்றார். அதற்கு நீர் பெண்ணாகயிருப்பின் உமது நகங்களை(மருந்தாணி கொண்டு அதன் நிறத்தை) மாற்றியிருப்பீரே! என்றார்கள்.(அபூதாவூத்)

நபி(ஸல்) அவர்கள் அந்தியப் பெண்களின் கையையும் அறவே தொட்டதேயில்லை என்பதற்குரிய ஹதீஸ் வருமாறு:

அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி(ஸல்) அவர்களின் கை (அந்நிய) எந்தப் பெண்ணுடையகையையும் அறவே தொட்டதில்லை. எனினும் அவர்கள் பெண்களிடத்தில் (கையைப் பிடிக்காமல்) வார்த்தையின் மூலம் ஒப்பந்தம் (பைஅத்) செய்து கொண்டார்கள்.
(ஆயிஷா (ரழி), பாடம்: தஃப்ஸீர், புகாரீ, இமாரத், முஸ்லிம்)

எனவே ஹதீஸின் அர்த்தம் அனர்த்தம் செய்யப்பட்டு, பீர் முரீது வியாபாரிகளுக்கு ஊக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுவாக சல்யூட் அடிப்பது நஸாரா வழக்கம். அதிலும் தேசியக் கொடிக்கு சல்யூட் அடித்து மரியாதை செய்வது ´ர்க் ஆகுமா? ஆகாதா? (பயப்படாமல் பதில் தரவும்)  எஸ்.எம்.ஏ. முஹம்மது பUர் ஆரிஃப், காயல்பட்டினம்.

மலக்குகளையோ,     ஜின்களையோ,    நபிமார்களையோ,     அவுலியாக்களையோ,   மனிதர்களையோ,    மிருகங்களையோ,     பட்சிகளையோ,  மரம்செடி   கொடிகளையோ,   கல்லையோ, மண்ணையோ,  கொடியையோ ஆக அல்லாஹ்வால் படைக்கப்பட்ட எவற்றை   வணங்கினாலும்   அது   தெளிவாக    அல்லாஹ்வுக்கு   இணை   வைத்தலாகும்?´ர்க்காகும். நபி(ஸல்) அவர்கள் இறந்த சமயம் நபித்தோழர்கள் நபி(ஸல்)   அவர்கள்     இறக்கவில்லை என்ற தவறான எண்ணத்தில் இருக்கும்   போது   அபூபக்கர்      சித்தீக்(ரழி) அவர்கள் “”மன்கான யஃபுது முஹம்மதன் ஃபஇன்ன   முஹம்மதன்   கத்மாத்”? “”எவர்கள்   முஹம்மதை    வணங்கிக்   கொண்டிருந்தார்களோ, (அவர்கள் அறிந்து கொள்ளட்டும்) நிச்சயமாக முஹம்மத் இறந்து விட்டார்” என்று உரத்துச் சொல்லி, நபித்தோழர்களை விழிப்படையச் செய்தார்கள். அபூபக்கர் சித்தீக்(ரழி) அவர்களின் இந்த   அறிவுரைப்படி   சாதாரணமாக மக்கள் நினைப்பது போல் கைகட்டி நின்று ருகூவு, சுஜூது செய்வது மட்டும்தான் வணக்கம் என்றில்லாமல்  அல்லாஹ்வுக்கு   மட்டும் சொந்தமானஎந்தத் தன்மையையும் அல்லாஹ் அல்லாதயாருக்குக் கொடுத்தாலும் சரி, அல்லது எப்பொருளுக்குக் கொடுத்தாலும் சரி, அல்லதுஅல்லாஹ்வின் தனித் தன்மைக்குப்பங்கம் வரும் வகையில் நடந்து கொண்டாலும் சரி, அது தெளிவாகவணக்கமாகும்?அல்லாஹ்வுக்கு இணை வைப்பதாகும்?´ர்க்காகும்.

நீங்கள்   குறிப்பிட்டுள்ள   தேசியக்   கொடிக்கு   மரியாதை   செய்வது   என்பது “”கொடி வணக்கம்” என்ற   பெயரிலேயே முஸ்லிம் அல்லாதவர்களால் கடைபிடிக்கப்படுகிறது. அல்லாஹ்அல்லாதவர்களையோ, அல்லாதவற்றையோ வணங்குவது  தவறல்ல என்ற கொள்கையையுடைய முஸ்லிம் அல்லாதாருக்கு “”கொடி  வணக்கம்” உயர்ந்த    செயலாகத் தெரியாலம். அல்லாஹ்வை மட்டுமே வணங்கக் கடமைப்பட்ட முஸ்லிம்களுக்கு “”கொடி வணக்கம்” ´ர்க்கை உண்டாக்கும் பாவமான செயலேயாகும்.

சத்தியத்தைச் சொல்ல நாம் என்றுமே பயப்பட்டதில்லை. குமைனியின் கத்மீல் ஃபத்வா குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலானது அல்லஎன்று   மிகப்   பெரும்பான்மை   முஸ்லிம்களின்   கருத்துக்கு   மாறாக   பயப்படாமல் பதில் தந்து, உங்களைப் போன்றவர்களின் நிந்தனைக்கு ஆளாகியதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

“”கஸஸூல் அன்பியா” நபிமார்கள் சரிதை பொய் என்று வாதாடும்    நீங்கள்   உங்களை விட   மூத்த பெரியோர்கள் மற்ற ஏனைய உலகமும் அதைத் தவறாகக் காணவில்லையே இதன் சரியான விளக்கம், ஆதாரம் தரவும்.புலவர். ஹ. சபீர் சலாம், பனைக்குளம்.

பெரியோர்களின்   சொல்லை   நம்பிச்   செயல்பட்டவர்கள்  நாளை  நரகில்  போடப்பட்டு  அவர்களின்  முகங்கள்  பொசுக்கப்படும்  என்பதையும் அப்போது அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது ரசூலுக்கும்   வழிப்   பட்டிருக்க   வேண்டுமே,   அதைவிட்டு நாங்கள்எங்களின் பெரியோர்களையும், தலைவர்களையும் நம்பிப் பின்பற்றி இக்கதிக்கு ஆளாகி விட்டோமே என்று கதறுவார்கள் என்பதை 33:66, 67,68, வசனங்களும் உலகிலுள்ள பெரும்பான்மையினரைப் பின்பற்றுகிறவர்கள்வழிகேட்டிலேயே செல்வார்கள்வெறும், யூகங்களைப்   பின்பற்றுவர்   என்பதை 6:116 வசனமும் தெளிவாகவே பறை சாற்றுகின்றன.  இந்த  வசனங்களைத் தெளிவாக   விளங்கியவன்  பெரியார்களையோ, பெரும் பான்மையினரையோ பின்பற்றமாட்டான் குர்  ஆன்   ஹதீஸை   நேரடியாக  விளங்கிப்பின்பற்றவே முற்படுவான்.

கொட்டானீ வரும்போதுள்ள ஒழுக்கம்

உங்களில் ஒருவர் கொட்டாவி விட்டால் தமது கையால் தமதுவாயை மூடிக்கொள்வாராக! ஏனெனில் நிச்சயமாக ஷைத்தான் (அதில்)நுழைகிறான்.(அபூஸயீதில் குத்ரீ(ரழி), முஸ்லிம்)

Previous post:

Next post: