அந்நஜாத் ஜூலை – 1989

in 1989 ஜுலை

துல்ஹஜ் : 1409

ஜூலை – 1989

மிகக் கடுமையாக எச்சரிக்கிறோம்!

அன்பார்ந்த  சகோதர, சகோதரிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

மலேசியாவில் தொழில் புரியும் ஒரு சிந்தனைத்திறன் மிக்க சகோதரர் நம்மைச் சந்தித்துச் சொன்ன சில விபரங்கள் நம்மை மிகவும்வேதனைக்குள்ளாக்கி இருக்கின்றன. அதாவது தக்லீதை சாடும் நீங்கள் உங்களைத் தக்லீது செய்யும் ஒரு கூட்டத்தை உங்களை அறியாமலேயே   உருவாக்கி   வருகிறீர்கள்.  ஒரு   கூட்டம் உங்களைத் தக்லீது செய்கிறது; இன்னொரு கூட்டம் இன்னொருவரைத் தக்லீது செய்கிறது என்பதை அவரின் குற்றச்சாட்டாகும்.

இதனைக் கேட்டதிலிருந்து எமது உள்ளம் மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறது. உண்மையில் மரியாதைக்குரிய அந்த நான்கு இமாம்களைத் தக்லீது செய்வதை விடஎம்மையோ,அல்லது வேறு யாரையுமோ தக்லீது செய்வதை மிகப் பெறும் குற்றமாகவேநாம் கருதி  எச்சரிக்கிறோம். எம்மைத் தக்லீது செய்யும் சூழ்நிலைகள் உருவாகா வண்ணம் எம்மால் இயன்ற அனைத்து    முயற்சிகளையும் செய்து வருகிறோம். மக்களிடையே நம்மைப் பற்றிய பிரபல்யம் ஏற்படுவதைவிட குர்ஆன் ஹதீஸூடைய பிரபல்யம் ஏற்படவே முயற்சிகள் செய்து வருகிறோம்.

பத்திரிகையின்   முகப்பில்   ஆசிரியர்    என்று   நமது பெயரைக் கொட்டை எழுத்துக்களில் போட்டோ அல்லது நமது இனி´யவை மக்கள் எளிதாக உச்சரிப்பதற்கு   ஏற்றார்போல்   மாற்றி   அபிமானிகளை அந்த இனி´யலை திக்ரு செய்ய வைத்தோ, அல்லது ததமது பெயரை லெட்டர் பேடில் அச்சடித்தோ, வால்போஸ்டர்களில் எமது பெயரைப் பெரிய எழுத்துகளில் போட வைத்தோ அல்லது இவற்றைப்   போல்   இன்றைய   அரசியல்    வாதிகளும், சினமா   நடிகர்களும் மேற்கொள்ளும்    முயற்சிகள் எதனையும் செய்து நம்மைப் பிரபல்யப்படுத்திக் கொள்ள நாம் முயற்சி செய்யவில்லை.

அதிகமான குர்ஆன்  வசனங்களையும்,  ஹதீஸ்களையும் அரபியில் மனப்பாடம் செய்து வைத்துக்கொண்டு நமது பயான்களில் அவற்றைச்சரளமாக மக்கள் புரியாத நிலையில் ஓதிக் காட்டியும், இன்னும் மக்கள் குர்ஆன், ஹதீஸைச் சிந்திப்பதை விட நம்மைப் பற்றிச் சிந்திக்கும் வகையில் பேச்சு  நடைகளைப் பின்பற்றியும், நாம் மட்டுத்தான் அவ்வாறு பேச முடியும் வேறு யாரும் அவ்வாறு பேச முடியாது என்ற பிரமிப்பை    உண்டாக்கி மக்களிடையே   நமக்கு பிரபல்யத்தை உண்டாக்கும் முயற்சிகளைச் செய்வதில்லை. சர்வ சாதாரணமாக  தமிழ் தெரிந்த ஒரு நடுத்தர ஆசாமியும் மார்க்கத்தைப் போதிக்க முடியும். அவ்வளவு எளிதான,தெளிவான      மார்க்கம் இஸ்லாம் என்ற எண்ணத்தை மக்களிடையே உண்டாக்கும்  நோக்கத்தில் குர்ஆன் தமிழ் மொழி  பெயர்ப்பை கையில்   வைத்துக் கொண்டு   பக்கங்களைப்   புரட்டிப் பார்த்து படித்துக்காட்டி, சாதாரணமாக மக்கள் பேசும் எளிய நடையில் பயான் செய்யும்முறையையே கைக்கொண்டு வருகிறோம். ஆக இப்படி முடிந்த மட்டும்எம்மைப் பற்றி பிரபல்யம் ஏற்படாமல் குர்ஆன் ஹதீஸூடைய பிரபல்யம் ஏற்படும் வகையில் நம்மால் ஆன முயற்சிகளைச் செய்து வருகிறோம்.    நமது   ஆற்றல்களை   மக்கள்   சிந்திக்காது   குர்ஆன் ஹதீஸின் மகிமைகளை மக்கள் சிந்திக்கும் சூழ்நிலைகளை உருவாக்கவே பாடுபட்டு வருகிறோம்.

இன்று    ஏகத்துவத்தை   நிலைநாட்டம்   பெரும்   தியாகங்கள்   செய்தும்,    துன்பங்களை   அனுபவித்தும்   கடும்   முயற்சிகளை   மேற்கொண்டிருக்கும் பல பெயர்களில் இயங்கிக் கொண்டிருக்கும் இயக்கங்களைச் சரிகாணாமல் “” இஸ்லாம்” என்று அல்லாஹ்  பெயரிட்ட அந்தப்பெயரிலேயே செயல்பட வேண்டும்என்ற நமது கூற்றில்நாம் உறுதியாக இருப்பதால்,அப்படிப்பட்ட இயக்கங்களின்வெறுப்புக்கும், வீண்பழிக்கும்ஆளாகி இருக்கிறோம். இந்தவி­யத்தில் நீங்கள் சிறிது விட்டுக்கொடுத்துவிட்டால்நாங்கள் உங்களைஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்று சில இயக்க சகோதரர்கள் எமக்கு எழுதவும் செய்தனர். அவர்களின் விருப்பத்திற்கு நாம் இணங்கி இருந்தால் அவர்கள், அல்லாஹ் 17:73 வசனத்தில் சொல்வதுபோல்    தங்களின் உற்ற நண்பராக நம்மை ஏற்றுக் கொள்ளவும்  தயாராக   இருக்கிறார்கள்.   ஆயினம் 17:73, 74, 75 வசனங்கள் நம்மை அவ்வாறு செய்வதை   விட்டும்  தடுத்து    நம்மைப்   பாதுகாத்துக் கொள்ள   துணையாக நிற்கின்றன.   அவர்களின்   விருப்பத்திற்கு    நாம்    இணங்காததால், அவர்கள்   அனைவரும் ஒன்று சேர்ந்து நம்மைப் புறக்கணிப்பதுடன் அவர்களின் சிலர் நம்மீது    வீண் பழி சுமத்தவும், வாதத்தை வாதத்தால் வெல்ல முடியாமல் தோல்வியுற்றுஅதனால் சூழ்ச்சிகள்செய்து நம்மை வீழ்த்தவும்பெரும் முயற்சிகள் செய்து கொண்டிருக்கின்றனர்இப்படிப்பட்ட இக்கட்டான நிலையிலும் அல்லாஹ்வின் திருப்தியையோ குறிக்கோனாகக் கொண்டு செயல்படுகிறோமே அல்லாமல் எமக்கு ஆதரவாக ஒருகூட்டத்தைச் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் எமக்கு ஏற்படவில்லை.

ஆக இப்படி   நம்மைத்    தக்லீது   செய்யம்   சூழ்நிலைகள் எதிலும்   சிக்கிக் கொள்ளாமல் சர்வ ஜாக்கிரதையாக இருந்து கொண்டு மக்களிடையே  தனி  மனித   வழிபாடு   ஏற்பட்டு   விடாமல்,  குர்ஆன்,    ஹதீஸூடைய சிந்தனையை மேலோங்கச்செய்ய பெரும் முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறோம். மக்களுக்கு நம்மீது பிரியம் ஏற்பட்டு அதனால் நாம் சொல்லுவதை எல்லாம் மார்க்கமாக நம்பிச் செயல்படாமல், நம்மை தக்லீது செய்யாமல் நம்மீது விருப்போ,   வெறுப்போ   இல்லாத நிலையில் நாம் எடுத்து வைக்கும் ஆதாரங்களைக் குர்ஆன்,ஹதீஸூடன் ஒப்பிட்டு சுயசிந்தனையுடன் விளங்கி மக்கள் செயல்படும் சூழ்நிலைகளையே உருவாக்கப்  பாடுபட்டு வருகிறோம்.

இந்த நிலையில் எம்மைத்  தக்லீது செய்யும் ஒரு கூட்டம்   உருவாகிக்  கொண்டிருக்கிறது என்று அந்த நண்பர் சொன்னது எமக்கு அளவு கடந்த வேதனையைத்  தந்து கொண்டிருக்கிறது. இந்தத்   தவறுக்கு  நாம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ காரணமோ, பொறுப்போ   இல்லை     என்பதைத்   தெளிவாக   அறிவித்துக்   கொள்கிறோம்.   நாம்   எந்த நோக்கத்துடன் இப்புனிதப் பணியில் ஈடுபட்டிருக்கிறோமோ அந்த நோக்கம்   நிறைவேறாது   போய்விடுமோ என   அஞ்சுகிறோம்.   நமது   நோக்கம்   இதுதான், மனித அபிப்பிராயங்களை முற்றிலுமாக விட்டு  மக்கள் குர்ஆன், ஹதீஸை நேரடியாக சுயசிந்தனையுடன் விளங்கிச் செயல்படும் காலம் கனிய வேண்டும், அதுவே இஸ்லாத்தின் பொற்காலமாகும் இதற்கு மாற்றமாக எம்மைத் தக்லீது செய்யும் ஒரு கூட்டம் உருவானால்அவர்கள் நிச்சயமாக, மரியாதைக்குரிய அந்த நான்கு இமாம்களைத் தக்லீது செய்யும் கூட்டத்தை விட பெருந்தவறில் இருக்கிறார்கள் என்பதை மிக உறுதியுடன், மிகக் கடுமையாக எச்சரிக்கிறோம்.”” யாரையுமே தக்லீது செய்யாதீர்கள்.    எம்மைக்    கண்டிப்பாகத்   தக்லீது செய்யாதீர்கள்.”

மக்களுக்கு மார்க்கத்தை விளக்க முற்படும் போதும்,  அல்லது  சத்தியத்தை   வெளிப்படுத்த அழகிய முறையில் விவாதம் செய்யும் போதும்  அந்நஜாத்தை  ஆதாரமாகக்    காட்டாதீர்கள். அந்நஜாத்தில்   நீங்கள்  பார்த்த   வி­யங்களுக்கு குர்ஆனில் இருந்தோ, ஹதீஸிலிருந்தோ   ஆதாரங்கள்  காட்டப்பட்டிருக்கும். அந்த குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களைக் காட்டி மார்க்கத்தை விளக்குங்கள் அழகிய முறையில்   விவாதம்   செய்யுங்கள்.  அந்நஜாத்தில்   ஆதாரம்   இல்லாமல்   சொல்லப்பட்டிருந்தாலோ, நீங்கள் விளங்கிக் கொள்ளும் அளவுக்கு விளக்கம்  போதாமல்  இருந்தாலோ  தயங்காமல்  எழுதிக் கேளுங்கள் எப்போதுமே எம்மால் இயன்ற அளவு விளக்கம் தரத் தயாராகவே இருக்கிறோம்.விளங்காத நிலையில் நாம் சொல்லுவது சரியாகத் தான் இருக்கும் என்று நம்பிச் செயல்படாதீர்கள். இதனையே தக்லீது என்று சொல்லுகிறோம். மீண்டும்  கடுமையாக  எச்சரிக்கிறோம்.  எம்மைத்  தக்லீது செய்யாதீர்கள்.

——————————————————————————————————————-

நபி வழியில் நம் தொழுகை

(தொடர்:31)

அபூ அப்திர்ரஹ்மான்

நபியே சொல்வீராக!    நீங்கள் அல்லாஹ்வை   நேசிப்பவர்களாயிருப்பின்   என்னைப்   பின்பற்றுங்கள்.   அல்லாஹ்   உங்களை நேசிப்பான் மேலும் உங்களுக்கு உங்க்ள பாவங்களையும் மன்னிப்பான் அல்லாஹ் மன்னித்து கிருபை செய்பவனாயிருக்கிறான். (3:31)

“” என்னைத் தொழக்கண்டவாறே நீங்களும் தொழுங்கள்!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(மாலிக்பின் ஹுவைரிஸ் (ரழி), புகாரீ, முஸ்லிம்)

இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்களின் வாயிலாக அறிவிக்கப்பட்டு புகாரீ,முஸ்லிம்ஆகிய நூல்களில்பதிவாகியுள்ள. “” நபி(ஸல்)அவர்கள்ஒரு முறை ளுஹ்ரை 5 ரகாஅத்துகாளக தொழ வைத்துவிட்டார்கள்” என்ற மேற்காணும் ஹதீஸில் ஒருவர் தாம் மறதியாக 5 ரகாஅத்துகள் தொழுது விட்டால், அவர்   4வது ரகா  அத்தில் உட்கார்ந்திருக்க வேண்டும் என்ற பிரச்சனையோ, அல்லது அவர் அதில் உட்கார்ந்திருந்தால்  ஒரு  ரகா அத்தை அத்துடன்  சேர்த்து 6 ரகாஅத்துகள்  தொழ  வேண்டும் என்ற நிலையோ, அல்லது அவர் 4வது ரகாஅத்தில் உட்காராமலிருந்தால் மீண்டும் அவர் புதிதாக தொழ வேண்டும் என்ற அவசியமோ அறவே கிடையாது.

ஒருவர் மறதியாக 5 ரகா அத்துகள் தொழுது   விட்டால்   ஸூஜூதுஸ்ஸஹ்வு   மட்டும் செய்தால் போதும் என்ற வகையில் நபி(ஸல்) அவர்கள் தாமே மறதியாக ஒருமுறை 5 ரகாஅத்துகள் தொழ வைத்துள்ள சந்தர்ப்பத்தில் இவ்வாறு அவர்களே நடைமுறைப்படுத்திக்காட்டி இருந்தும், இதற்குப் புறம்பாகச் செய்வது முறை கேடான செயல் அல்லவா?

மரியாதைக்குரிய இமாம்கள் இவ்வாறெல்லாம் கூறியிருப்பார்களா? எப்படித்தான் இந்த மத்ஹபு வாதிகள் ஹதீஸூக்குப் புறம்பாக இவ்வாறு    மஸ்அலாக்களைத்   தயாரித்தார்களோ?   தெரியவில்லை. இத்தகைய   சிக்கல்கள்   பிற்காலத்தில்    ஏற்படாதிருக்கவே ஒவ்வொரு   இமாம்களும்   முன்   ஜாக்கிரதையாக குர்ஆன்,   ஹதீஸ்களுக்கு    எனது   சொல் ஒத்திருந்தால் அதை எடுத்து அமல் செய்யுங்கள். அவற்றுக்கு மாறாகயிருப்பின், எனது சொல்லைச்சுவற்றில் வீசி அடித்துவிட்டு,   குர்ஆன்,   ஹதீஸ்களின் படி அமல் செய்து கொள்ளுங்கள் என்று கூறிச் சென்றுள்ளார்கள்.

(6) ஒருவர் தாம் தொழ வேண்டிய ரகாஅத்துகளில் மறதியாக ஒன்றையோ, அல்லது இரண்டையோ குறைத்துத் தொழுது விட்டால் அவற்றை நிறைவு செய்துவிட்டு, இறதியில் ஸூஜூதுஸ்ஸஹ்வு செய்து கொள்ள வேண்டும்.

ஒருமுறை நபி(ஸல்)அவர்கள் அஸ்ரு தொழ வைத்தார்கள். அப்போது 3வது ரகாஅத்தில்  ஸலாம்   கொடுத்து   விட்டு தமது வீட்டில் புகுந்து விட்டார்கள்.  உடனே  கைதாராளம்  வாய்ந்த  கிர்பாக்(ரழி) அவர்கள்    எழுத்து அல்லாஹ்வின் தூதரே! என்று    அழைத்து அவர்களின் நடப்பை எடுத்துக் கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஆவேசத்துடன் தமது மேல் ஆடையை இழுத்தவர்களாக வெளியில் வந்து, மக்களை நோக்கி இவர் கூறுவது உண்மையா? என்றார்கள். அனைவரும்””ஆமாம்” என்றனர். உடனே ஒரு ரகாஅத்து தொழ வைத்துவிட்டு, பிறகு ஸலாம் கூறி, 2  ஸஜ்தாக்கள் செய்து பின்னர் ஸலாம் கொடுத்தார்கள்.(இம்ரான்பின் ஹுஸைன் (ரழி),முஸ்லிம்)

ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு அஸ்ரு தொழ வைக்கும்போது இரண்டாவது ரகா அத்தில் ஸலாம் கொடுத்து விட்டார்கள்.அப்போது “”துல்யதைன் ” என்று அழைக்கப்படும் ஒருவர்  எழுந்து     அல்லாஹ்வின் தூதரே! தொழுகை குறைக்கப்பட்டு விட்டதா, அல்லது நீங்கள்   மறந்து   விட்டீர்களா? என்று   கேட்டார். அதற்கு, “”அப்படி எல்லாம் எதுவும் நிகழவில்லை” என்றார்கள் அதற்கு அவர் அல்லாஹ்வின் தூதரே! “”அப்படி சில மட்டுமே நிகழ்ந்துள்ளன” என்றார்.   அப்போது   நபி(ஸல்)   அவர்கள் மக்களை நோக்கி “” துல்யதைன்” கூறுவது உண்மைதானா? என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதரே! “”ஆமாம்” என்றனர்.    உடனே அவர்கள் தொழுகையில்   விடுபட்டவற்றை நிறைவு செய்துவிட்டுதாம்   உட்கார்ந்த   நிலையில்   ஸலாம்   கொடுத்த   பின்னர் 2 ஸஜ்தாக்கள் செய்தார்கள். (அபூஹுரைரா (ரழி), முஸ்லிம்)

(7) தொழுகையில் மறதியாக    இரண்டாவது ரகாஅத்தை  விட்டும் எழும் ஒருவருக்கு  நினைவு வந்து விட்டால், அவர் முழுமையாக எழாத நிலையில் இருந்தால், உடனே உட்கார்ந்து கொள்ள வேண்டும். முழுமையாக எழுந்து விட்டால் மீண்டும் உட்காராமல் தமது தொழுகையை நிறைவு செய்து விட்டு இறுதியில் ஸூஜூதுஸ்ஸஹ்வு செய்து கொள்ள வேண்டும்.

ஒருஇமாம் இரண்டாவது ரகா அத்தில் (உட்காராமல்) எழுவாரானால், தாம் முழுமையாக எழுவதற்கு முன் அவருக்கு ஞாபகம் வந்துவிட்டால் உடனே அவர் உட்கார்ந்து கொள்ள வேண்டும். (அவ்வாறின்றி) அவர் முழுமையாக எழுந்து விட்டால் பிறகு உட்காருவது கூடாது. அதற்காக அவர் தமது (தொழுகையின் இறுதியில்) மறதிக்குரிய 2 ஸஜ்தாக்கள் செய்து கொள்ள வேண்டும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (முகீரத்துபின் ஷீஃபா(ரழி), அபூதாவூத், இப்னுமாஜ்ஜா)

இதன்    அறிவிப்புத்    தொடரில்   “”ஜாபிருல்ஜூஅஃபீ”   எனும்   நம்பகமற்ற   ஒருவர்  இடம்  பெற்றிருப்பதால் இதை  பலகீனமான அறிவிப்பென்று கருதப்பட்டாலும், இப்ராஹீம்பின் தஹ்மான். கைஸூப்னிர் ரபீஃ ஆகிய  இருவரும் “” தஹாவீஃபீ­ர்ஹில் மஆனீ” எனும் நூலில் (பாகம்1, பக்கம் 255?ல்) காணப்படும் இந்த ஹதீஸின் நிலையை சரிகண்டு, இதை ஸஹீஹான  அறிவிப்பென்று ஊர்ஜிதம் செய்துள்ளனர்.  (மிஷ்காத் தஹ்கீக் அல்பானீ பாகம்1, பக்கம்322)

ஸூஜூதுஸ்ஸஹ்வு (மறதிக்கான ஸஜ்தாக்கள்) செய்வோரின் கவனித்திற்கு :

1.இமாம்   இரண்டாவது   ரகாஅத்தில்   உட்காராமல் மறதியாக  எழுந்துவிட்டால் அவரைப் பின்பற்றித் தொழுவோரும் அவ்வாறே அவருடன் எழும்பி விட வேண்டும்.

ஒருமுறை   நபி(ஸல்)   அவர்கள்   ளுஹர் தொழுகையில் இரண்டாவது ரகா அத்தில் உட்காராமல் எழுந்து விட்டார்கள். அப்போது அவர்களுடன் தொழுதோரும் எழுந்து விட்டார்கள். (ஹதீஸ் சுருக்கம்)  (இப்னு புஹைனா (ரழி), புகாரீ, முஸ்லிம்)

2. இமாம் தமது மறதிக்காக ஸஹ்வுடைய   ஸஜ்தாக்கள்   செய்யும்   போது   பின்பற்றித் தொழுவோரும் அந்த ஸஜ்தாக்கள் செய்ய வேண்டும்.

“”இமாம் ஸஜ்தா செய்தால் நீங்களும் ஸஜ்தா     செய்யுகள்” என்று   இமாமுடன்   ஸஜ்தா   செய்யும்படி    பொதுவாகவே  நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். (ஹுமைதீ (ரழி), பாடம்: இமாமத், முஸ்லிம்)

3. மறதிக்கான ஸஜ்தாக்கள் செய்யும்போது, ஸஜ்தா செய்வதிற்காக தமது  தலையைத் தாழ்த்தும்போதும், அதிலிருந்து தலையை உயர்த்தும்போதும் தக்பீர் கூற வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் நான்கு ரகா அத்துகள் தொழ வேண்டுடியிருக்கமறதியாக 2வது ரகாஅத்திலேயே ஸலாம் கொடுத்துவிட்டார்கள்பிறகு வி­யம் தெரிந்தவுடன் விடுபட்ட 2 ரகாஅத்துகளையும் தொழுது விட்டு ஸலாம்  கொடுத்து பிறகு தக்பீர் கூறி ஸஜ்தா செய்து பிறகு தக்பீர் கூறி தலையை உயர்த்தி, பிறகு தக்பீர் கூறி மீண்டும் ஸஜ்தா செய்து, பிறகு தக்பீர் கூறி எழுந்து அமர்ந்தார்கள்.
(அபூஹுரைரா (ரழி), புகாரீ)

4. ஒருவர் இமாயை அவர் ருகூஃவிலிருக்கும்   போது   பின்பற்றி    ருகூஃவுக்குச்   சென்று   விட்டார். அப்போது இமாம் தலையை உயர்த்தினார். இந்நிலையில் அவருக்கு தாம் இமாமுடன் ருகூஃவில் சேர்த்துவிட்டோமா,    இல்லையா? என்று சந்தேகம் ஏற்பட்டு விட்டது. அப்போது அவர்   தமக்கு   சந்தேகமாயுள்ள அந்த ரகாஅத்தைக்கணக்கில்   எடுக்காமல்,   தொழுதுவிட்டு “”மறதிக்கான 2 ஸஜ்தாககள்” செய்து கொள்ள வேண்டும்.

உங்களில்    ஒருவருக்கு   தமது   தொழுகையில்    சந்தேகம்    ஏற்பட்டு   தாம்   தொழுதவை   மூன்றா   அல்லது  நான்கா? என்பதுபுலப்படவில்லை என்றால், உடனே சந்தேகத்தை அகற்றிவிட்டு   தமக்கு உறுதியானதன்படி தொழுது முடித்து விட்டு, பின்னர் தாம் ஸலாம் கொடுக்கும் முன் 2 ஸஜ்தாக்கள் செய்து கொள்வாராக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.(ஹதீஸின் சுருக்கம்)
(அபூஸயீதில் குத்ரீக்(ரழி), முஸ்லிம், அஹ்மத்)

மறதிக்கான ஸஜ்தாக்கள் (ஸூஜூதுஸ்ஸஹ்வு) செய்யும் ஓதும் போது தஸ்பீஹ் :

மறதியின் காரணமாக, தொழுகையின் இறுதியில்   செய்யப்படும்   இந்த   இரண்டு   ஸஜ்தாக்களிலும் ஓதுவதற்கான விஷேசமான தஸ்பீஹ்   எதுவும்   ஹதீஸ்களில்   காணப்படவில்லை. எனினும் “” நபி(ஸல்) அவர்கள் மறதிக்காக இரு ஸஜ்தாக்கள் செய்தார்கள்” என்பதையே   அன்றி, அந்த   ஸஜ்தாக்களில் என்ன   தஸ்பீஹ்   ஓதினார்கள்   என்பது பற்றி எவ்வித விளக்கமுமில்லை. ஆகவே பொதுவாக   அவர்கள்   ஸஜ்தா   செய்யும்  போது   எந்த   தஸ்பீஹை   ஓதி   வந்தார்களோ    அதனையே   ஸூஜூதுஸ்ஸஹ்விலும் ஓதியிருப்பார்கள் என்பதை அறிகிறோம்.

சிலர் ஸூஜூதுஸ்ஸஹ்வின் போது   “”சுப்ஹான ? மன்லா ?  யனாமு   வாலாயஸ்ஹு ” (தூக்கமும்,    மறதியும்   அற்ற   அல்லாஹ்   பரிசுத்தமானவன்)  எனும்  தஸ்பீறை   ஓதுவது முஸ்தஹப்பு?விரும்பத்தக்கது என்று கூறியுள்ளார்கள். அவர்களின் இக்கூற்றுக்கு ஹதீஸ்களில்   எவ்வித  ஆதாரமுமில்லை என்று இமாம் இப்னு ஹஜ்ர் அஸ்கலானீ (ரஹ்)அவர்கள் தமது “”தல்கீஸ்” எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.   (இன்ஷா அல்லாஹ் தொடரும்)

——————————————————————————————————————-

குர்ஆனின் நற்போதனைகள்: – தொடர்: 9

“”மானக் கேடானவற்றை தவிர்த்துக் கொள்ள அறிவுரைகள்”

தொகுப்பு: ஏ. முஹம்மது அலி, னி.பு., னி.Pஜுஷ்யி.,

1. (இறை நம்பிக்கையற்ற) அவர்கள்   ஒரு    மானக்கேடான காரியத்தைச் செய்து விட்டால், “”இம்மாதிரியே எங்கள் மூதாதையர்கள் செய்யக் கண்டோம்; இன்னும் அல்லாஹ் எங்களை அதைக் கொண்டே ஏவினான்” என்றும் கூறுகின்றனர்.

அப்படியல்ல! நிச்சயமாக அல்லாஹ்   மானக்கேடான   செயல்களைச்   செய்ய   கட்டளையிடவில்லை.   நீங்கள்    அறியாததை   அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கூறுகிறீர்கள்? என்று கேட்பீராக! (7:28)

2. (மனைவிமார்கள்) பகிரங்கமான மானக்கேடான (காரியத்)தைச் செய்தாலன்றி அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து நீங்கள் வெளியேற்றாதீர்கள். அவர்களும் வெளியேறலாகாது (65:1)

3. நபியுடைய மனைவியரே!   உங்களில்     எவரேனும்   பகிரங்கமான    மானக்கேடு    செய்வாராயின்.   அவர்களுக்கு வேதனை இரட்டிக்கப்படும். இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமாகும். (33:30)

4. உங்கள்  பெண்களில்   எவரேனும்   மானக்கேடான   செயல்   செய்து   விட்ட   (தாகக் குற்றம் சுமத்தப்பட்)டால் அதை நிரூபிக்க உங்களிலிருந்து நான்கு பேர்களை (சாட்சியாக) அழையுங்கள். (4:15)

5. உங்கள் ஆண்களில் இருவர் இ(ம் மானக்கேடான காரியத்)தைச் செய்து விட்டால் அவ்விருவருக்கும் தண்டனை கொடுங்கள்.  அவ்விருவரும்   தாம்   செய்த   குற்றத்தை   நினைத்து   வருந்தி   தவ்பாச்   செய்து   தங்களைத்  திருத்திக் கொண்டால், அவர்களை (புறக்கணித்து) விட்டு விடுங்கள்?அல்லாஹ் நிச்சயமாக மன்னிப்போனும், கிருபையுடையோனுமாக இருக்கிறான். (4:16)

6. மானக்கேடான செயல்களின் பக்கம் வெளிப்படையாகவோ, ரகசியமாகவோ நெருங்காதீர்கள். (6:151)

7. ஈமான் கொண்டவர்களே? ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்.   இன்னும்   எவன்   ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ (அவனை ஷைத்தான்) மானக்கேடானவற்றையும், வெறுக்கத்   தக்கவற்றையும்   (செய்ய)   ஏவுலான் (24:21)

8. நிச்சயமாக ஷைத்தான் தீயவற்றையும், மானக்கேடானவற்றையும் செய்யும்படியும்அல்லாஹ்வைப்பற்றி நீங்கள் அறியாததைக் கூறும்படியும் உங்களை ஏவுகிறான். (2:169)

9. நிச்சயமாக தொழுகை (மனிதனை) மானக்கேடானவற்றையும், தீமையையும் விட்டு விலக்கும்; நிச்சயமாக,அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதாகும். அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான். (29:45)

10. (இறை பக்தியுடையோர்) மானக்கேடான ஏதேனும் ஒரு செயலைச் செய்துவிட்டாலும்அல்லது  (ஏதேனும் பாவத்தினால்)  தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அவர்கள் மனப்பூர்வமாக அல்லாஹ்வை   நினைத்து      தங்கள் பாவங்களுக்காக    மன்னிப்புக் தேடுவார்கள். (3:135)

——————————————————————————————————————-

குர்ஆனை விளங்குவது யார்?

தொடர் :11

இப்னு ஹத்தாது

3:7 வசனத்தின் சரியான பொருள் :

அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில்   தீர்க்கமான   (தெளிவான)   வசனங்கள்   இருக்கின்றன. இவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும்.  மேலும்  எஞ்சியவை  பல  பொருள்  பெறத்தக்கவை  (தீர்க்கமற்றவை)யாகும்.   எவர்களுடைய உள்ளங்களில் கோணல் (வழிகேடு) இருக்கிறதோ அவர்கள் குழப்பங்களை நாடி, பல பொருள்   வசனங்களின் முடிவுகளைத்தேடி அவற்றைப் பின்பற்றுகின்றனர்.   ஆனால்   இவற்றின் உண்மைக்   கருத்துக்களை (முடிவு?ய்ஷ்ஐழியிVerdஷ்உமி)   அல்லாஹ்வைத் தவிர வேறெவரும்  அறியார்.   அறிவில்    தேர்ந்தவர்களோ   “”நாங்கள்   இவற்றில்    (பூரணமாக)    நம்பிக்கை    கொண்டோம்; இவை அனைத்துமே   எங்கள்   இரட்சகனிடமிருந்து   வந்தவைதாம்” என்று கூறுவார்கள்.       அறிவுடையோரைத்    தவிர    வேறெவரும்  நல்லுபதேசம் பெற மாட்டார்கள்.  (3:7)

3:7 வசனத்தின் தவறான பொருள் :

அவன் தான்  (இவ்)வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன?இவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும்.     மற்றவை   (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத்   (என்னும்  ஆயத்துகள்)   ஆகும்.   எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக   முதஷாபிஹ்   வசனங்களின் விளக்ககத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வையும், கல்வியில் உறுதிப்பாடு உடையவர்களையும் தவிர வேறு எவரும் அதன் விளக்கத்தை அறிய மாட்டார்கள். “” அவை அனைத்தும்    எங்கள்    இறைவனிடமிருந்து வந்தவைதான்; நாங்கள் அதை  நம்பிக்கை கொள்கிறோம்” என்று அவர்கள் கூறுவார்கள் அறிவுடையயோரைத்   தவிர  மற்றவர்கள்   இதைக்கொண்டு      நல்லுபதேசம் பெற மாட்டார்கள்.  (3:7)

“”முத்தஷாபிஹாத் வசனங்களின் விளக்கத்தை   அல்லாஹ்வையும்   கல்வியில் திறமை மிக்கோரையும் தவிர மற்றவர்கள் அறிய மாட்டார்கள்”   (அல் ஜன்னத் ஜூலை  1988,   பக்கம்54)என்ற இந்த  3:7   வசனத்தின் தவறான   விளக்கம்  பெரும்  விபரீதங்களைஉண்டாக்குகின்றது.

1. இஸ்லாத்தின் அடிப்படைகளை அலட்சியம் செய்கிறது. (இதுபற்றி ஜூன்’ 89 அந்நஜாத் இதழில் விரிவாகப் பார்த்தோம்)

2. அல்லாஹ்வும்   விளங்க   வேண்டிய நிலையிலேயே இருக்கிறான்  என்று   சொல்லி,   அல்லாஹ்வின்   அந்தஸ்தை   மனித   அந்தஸ்திற்குத் தாழ்த்துகின்றது.

3. அல்லாஹ் மட்டுமே அறிகிற  உண்மைப்   பொருளை  மனிதர்களும் அறிவார்கள் என்று சொல்லி மனிதர்களின் அந்தஸ்தை அல்லாஹ்வின் அந்தஸ்திற்கு உயர்த்துகிறது.

இறையுணர்வு மிக்கவன் இவற்றைத் தாங்கித் கொள்ள மாட்டான். எனவே 3:7வசனத்தை வார்த்தைக்கு வார்த்தை ஆராய்ந்து அது முஹ்க்கமாத் வசனந்தான், அதில் பொருள் தடுமாற்றமில்லை, அதில் ஒரே பொருள் மட்டுமே எடுக்க முடியும் “”முத்தஷாபிஹாத் ”   வசனங்களில் உண்மைப் பொருளை அல்லாஹ்   மட்டுமே   அறிவான்.   கல்வி   அறிவில்   சிறந்தவர்கள், “”நாங்கள்   இவற்றில்   நம்பிக்கைக் கொள்கிறோம். இவை அனைத்தும்   எங்கள்   ரப்பிடமிருந்து   வந்தனவதாம்” என்று கூறுவர் என்ற  விளக்கங்களை நிலைநாட்டும் நிர்ப்பந்த நிலைக்கு நாம் தள்ளப் பட்டுள்ளோம். எனவே இந்த 3:7 வசனத்தை நான்கு தலைப்புகளில் நாம் விரிவாக ஆராய்வோமாக!

அவையாவன,

1. 3:7 குர்ஆன் வசனத்தை, குர்ஆனைக் கொண்டே விளங்குவது.

2.3:7 குர்ஆன் வசனத்தை ஹதீஸுகளைக் கொண்டு விளங்குவது.

3.3:7 குர்ஆன் வசனத்தை அரபி இலக்கிய அடிப்படையில் விளங்குவது,

4. இறுதியாக அவர்கள் எடுத்து வைத்துள்ள வீண் வாதங்களை வரிக்கு வரி அலசி அவற்றின் அபத்தங்களைத் தெளிவுபடுத்துவது.

1. குர்ஆனைக் கொண்டே குர்ஆனை விளங்குவது :

குர்ஆன் தனக்குத் தானே சுய விளக்கம் கொண்டதாக அமைந்துள்ளது குர்ஆனின் ஓர் அற்புதமே. இறையுணர்வுடன் குர்ஆனை அணுகுகிறவன் அதிலிருந்தே தெளிவு பெற முடியும் இப்போது நாம் 3:7 குர்ஆன்   வசனத்தை   குர்ஆனைக் கொண்டே விளங்க முற்படுவோம். 3:7 வசனத்தில் மூன்று முக்கிய பதங்கள் இடம் பெற்றுள்ளன. அவையாவன,

1.”” முஹ்க்கமாத் ”

2. “” முத்தஷாபிஹாத்”

3. “”தஃவீல்”

இந்த முக்கிய மூன்று அரபிப் பதங்களும் எந்தெந்த கருத்துக்களில் குர்ஆனில்    பிரயோகப்படுத்தப்பட்டுள்ளன    என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொண்டால் 3:7 வசனத்தை மிகத் தெளிவாக நாம் சந்தேகத்திற்கு இடமின்றி  விளங்கிக் கொள்ள முடியும்.

1. முஹ்க்கமாத்: “”முஹ்க்கமாத்” என்ற பதம் அல்குர்ஆனில் 47:20ல் ஒருமையிலும், 3:7ல் பன்மையிலும் இடம் பெற்றுள்ளது.

ஈமான் கொண்டவர்கள் “”(புனிதப் போர் பற்றி) ஓர்    அத்தியாயம்   இறக்கி வைக்கப்பட வேண்டாமா? என்று கூறுகிறார்கள். ஆ²ல் திட்டவட்டமான (சந்தேகத்திற்கு இடமில்லாத)    ஓர்    அத்தியாயம்   இறக்கப்பட்டு, அதில்   போர்    புரியமாறு பிரஸ்தாபிக்கப்பட்டால், எவர்களுடைய இருதயங்களில் (நயவஞ்சக) நோய் இருக்கிறதோ அவர்கள் மரணாவஸ்தையில் மயங்கிக் கிடப்பவன்   நோக்குவது போல் உம்மை நோக்குவதை நீர் காண்பீர். (அவர்களுக்குக்) கேடுதான்”  (47:20)

இங்கு ஸூரத்துன் முஹ்க்கமத்துன் என்ற   பதம்   திட்டவட்டமான    (சந்தேகத்திற்கு இடமில்லாத) ஓர் அத்தியாயம் என்று பொருளில் இடம் பெறுகிறது. இந்த வசனம் தெளிவாக  ?  குறிப்பாக  ?   பொருள்   தடுமாற்றமில்லாத   ஒன்றுக்கு   “”முஹ்க்கமத்”   என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளதை உறதிப் படுத்துகிறது. அதே அடிப்படையில் 3:7 வசனத்தில் இடம் பெற்றுள்ள “”ஆயாத்தும் முஹ்க்கமாத்”என்ற   பதம்    தெளிவான?  குறிப்பான?   பொருள்   தடுமாற்றமில்லாத   வசனங்கள்   என்ற பொருளையே தருகின்றது என்பதில் இரண்டாவது கருத்து இருக்க   முடியாது.  மேலும்  தெளிவு  பெற   கீழ்வரும்   வசனங்கள்  ஆராய்வோம். 10:35, 37:154, 68:36 வசனங்களில் “”முஹ்க்கமாத்” பதத்தைச் சார்ந்த “”தஹ்க்குமூன்” பதம்    பயன்படுத்தப்பட்டுள்ளது.   இந்த    மூன்று  வசனங்களிலும்””கைஃப தஹ்க்குமூன் எவ்வாறு முடிவு செய்கிறீர்கள்?தீர்ப்பளிக்கிறீர்கள்?தீர்மானிக்கிறீர்கள் என்றபொருளில் “”தஹ்க்குமூன்” என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்படித் தீர்மானமாக முடிவு செய்யப்பட்ட ஒன்றையே “”முஹ்க்கமத்” என்று கூறப்படுகிறது. இதனைஇன்னும்தெளிவாக22:52 வசனம் உறுதிப்படுத்திகிறது.

“” எந்தத் தூதரையும், நபியையும் அனுப்பினாலும் அவர் அறிவித்த செய்தியுடன் ஷைத்தான் எதையும் சேர்க்காது இருந்ததில்லை. ஷைத்தான் சேர்த்தவற்றை அகற்றிய பின் அல்லாஹ் தன் வசனங்களை உறுதிப் படுத்துகிறான்”.    (22:25)

இங்கு அல்லாஹ் தன் வசனங்கள் உறுதிப்படுத்துகிறான் என்பதில் “”யுஹ்க்கிமுல்லாஹு ஆயாத்திஹி ” என்ற பதம் பயன்படுத்தப் பட்டுள்ளது. இந்த “”யுஹ்க்கிமு” என்ற பதமும் “”முஹ்க்கமத் ” பதத்தைச் சார்ந்ததே அதாவது ஷைத்தான்கள் பல கருத்துக்களைச்    சேர்த்து   இறைவசனங்களைக்     குழப்ப     முற்படும்    போது,   அல்லாஹ்   அந்த   குழப்பத்தை   நீக்கி   தனது   வசனங்களை   குழப்பத்திற்கிடமில்லாமல் உறுதி செய்கிறான் என்பது தெளிவாகிறது.   இதனை   இப்படியும் சொல்லலாம்,   பல விளக்கங்களைப்   பெற முடியாத?பொருள் தடுமாற்றத்தைத் தராத? குறிப்பான?ஒரே பொருளைத்தரும் வசனங்கள் முஹ்க்கமாத் வசனங்கள் என்று கூறப்படுகின்றன.   “” இது  வேதமாகும்.  இதன்  வசனங்கள்   (பல்வேறு   அத்தாட்சிகளால்) உறுதியாக்கப்பட்டு பின்னர் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன. மேலும், நன்கறிபவனும் ஞான மிக்கோனுமாகிய (இறை)வனிடம் இருந்து (வந்து)ள்ளவை” (11:1) என்ற இறைவசனமும்   இதனை   உணர்த்துகிறது.   இங்கும்   “”உஹ்க்கிமத்ஆயாத்துஹு”   என்ற   “”முஹ்க்மத்” பதத்தைச் சார்ந்த பதமே இடம் பெற்றுள்ளது.

இந்த  இறை   வசனங்கள்    அனைத்தையும்   பார்க்கும்போது   குர்ஆனிலிருந்து   நாம்   விளங்குவது “”ஆயாத்தும் முஹ்க்கமாத்” என்றால்?பல   பொருளைப்   பெற   முடியாத?பொருள்   தடுமாற்றத்தைத்   தராத?தெளிவான?  குறிப்பான?இறைவனால்  தீர்ப்புச் செய்யப்பட்டுவிட்ட ஒரே பொருளைத் தரும் வசனங்களாகும் என்பதாகும்.

அடுத்து    இங்கு   இன்னொன்றையும்   நாம்   கவனத்தில்   கொள்ள   வேண்டும்.   “”சட்ட   திட்டங்களை   கூறக் கூடிய வசனங்களே “”முஹ்க்கம்” வசனங்கள்.    சட்ட திட்டங்கள் பற்றி கூறாதவை “”முத்தஷாபிஹ்” என்று சிலர் தவறாகப்   பொருள் கொண்டுள்ளனர், இது பெருந்தவறாகும். சட்ட திட்டங்கள் பற்றி கூறும் வசனங்கள் அனைத்து “”முஹ்க்கம்”   வசனங்கள்   என்பதில்   சந்தேகமில்லை காரணம் உறுதிபடத் தெரியாத ஒன்றைச் சட்டமாக்கிச் செயல்படுத்தி முடியாது. செயல்படுத்தும்  வி­யங்களில்   திட்டமான ஞானம் வேண்டும்.

“”எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை (த் செய்யத்) தொடர வேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும் பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதன் தன் செயல்பற்றி) கேள்வி கேட்கப்படும்”. (17:36)

ஆனால் அனைத்து “”முஹ்க்கம்” வசனங்களும் சட்டதிட்டங்களுக்குரியவை அல்ல. சட்டப் பிரச்சினைகளைக் கூறாத “”முஹ்க்கம்” வசனங்களுமுண்டு. “”காகங்கள் எல்லாம் கருப்பு” என்றால்   “”கருப்பாயிருப்பவை   அனைத்தும்   காகங்கள்”   என்று சொல்லுவது எப்படித் தவறோ, அதேபோல் “”சட்ட திட்டங்களுக்குரிய வசனங்கள் அனைத்து முஹ்க்கம் வசனங்கள்”   என்பதனால்  “”முஹ்க்கம் வசனங்கள் அனைத்தும் சட்ட திட்டங்களுக்குரியவை” என்று சொல்லுவதும் தவறாகும்.

உதாரணமாக, அன்றியும் “”குற்றவாளிகளே! இன்று நீங்கள் (நல்லோரிலிருந்து) பிரிந்து நில்லுங்கள்” (என்று   குற்றவாளிகளிடம் மறுமையில் கூறப்படும்).  (36:59)

இந்த வசனம் மறுமையில் நிச்சயமாக நிகழப்போகும் நிலையைப்பற்றி சந்தேகத்திற்கு இடமில்லாமல் சொல்லும் ஒரு “”முஹ்க்கமத்”வசனமாகும். இந்த வசனத்தில் பொருள் தடுமாற்றமோ, ஒன்றுக்கு மேல் பொருள் பெறப்படும் நிலையோ இல்லை. ஆயினும் இந்தவசனத்திலிருந்து எந்தச் சட்ட திட்டமும் எடுக்கப்படுவதில்லை. இந்த வசனத்தை ஆதாரமாகக் காட்டி இந்த உலகில் இவர்களெல்லாம்நல்லவர்கள், இவர்களெல்லாம் கெட்டவர்கள் என்று தீர்ப்பளித்து மக்களை இருபிரிவினராகப் பிரிக்க முடியாது.

இந்த   உலகில்   தொழுகையில்   பேணுதலற்ற ஒருவர், பொய் சொல்லும் ஒருவர், “”அல்லாஹ் மீது ஆணையாக” என்று சொல்லி பொய்ச் சத்தியம் செய்து மற்றவர்கள் மீது வீண்பழி சுமத்தும் ஒருவர்,   புறம் பேசித்  திரியும்  ஒருவர்  தனது பேச்சுத் திறமை, வாதத் திறமை இவற்றைக் கொண்டு, தான் ஒரு நல்லவர்போல் நடிக்கலாம். மக்களும்   அவரை   நல்லவராக   நம்பலாம். இந்த உலகில் யாரும் அவரைக் கெட்டவர் என்று தீர்ப்பளித்து நல்லவர்களிலிருந்து பிரித்துவிட முடியாது. அப்படிப்பட்ட ஒருவர் தனது தவறுகளை உணர்ந்து சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்டு, அல்லாஹ்விடம் மனமுருகி, பாவமன்னிப்புக்   கோரி   “”தெளபா”   செய்யாதநிலையில்   மரணித்து விடுவாரானால், இந்த 36:59 வசனப்படி நாளை மறுமையில் நல்லவர்களிலிருந்து பிரிக்கப்பட்டு கெட்டவர் என தீர்ப்பளிக்கப்படுவார் என்பது உறுதி. ஆதம் (அலை) முதல் உலகம் அழியும் வரை தோன்றும் கோடானுகோடி மக்கள்   முன்   அவமானப்பட்டு சிறுமைப்பட்டு?இழிவடைந்து நரகம் புக நேரிடும் இந்த உலகில் இன்று ஒரு சிலரிடம் நல்ல பெயர் வாங்குவதால் ஆகப்போவது   ஒன்றுமில்லை   என்பதை   இந்த   வசனத்தின்   மூலம் உணர்ந்து தன்னைத் திருத்திக்கொள்ள இந்த வசனம் ஒரு வாய்ப்பைத் தருகிறது. இப்படி இறையுணர்வு (தக்வா) மிக்கவர்கள்    தங்களின்   போக்கை   மாற்றி வெற்றியுடைய வாழ்க்கை வாழ வழிவகுக்கும்   பல   “”முஹ்க்கம்”   வசனங்கள்   குர்ஆனில்   காணப்படுகின்றன.   அவை   சட்ட   திட்டங்களுக்குரிய   வசனங்கள்   அல்ல.   கட்டளைக்குரிய வசனங்கள் என்று   முஹ்க்கமாத் வசனங்களைச் சொல்வதால்,   சட்ட திட்டங்களுக்குரிய   வசனங்கள்     என்று கொள்ள முடியாது.  பின்பற்றப்பட வேண்டிய   வசனங்கள்  என்று கொள்ளலாம் ஆக முஹ்க்கமாத் வசனங்கள் பற்றிய ஒரு தெளிவான தீர்ப்பை பெறுகிறோம்.

2. “”முத்தஷாபிஹாத் ” : அடுத்து நாம் விளங்க வேண்டிய அரபிப் பதம் “”முத்தஷாபிஹாத்” ஆகும். “”முத்தஷாபிஹாத்” என்று பதம்   குர்ஆனில் 3:7லும். “”முத்தஷாபிஹின் என்று 6:99, 6:141லும் முத்தஷாபிஹன் என்று 2:25, 6:141, 39:23லும் முஷ்தபிஹன்       என்று 6:99லும், “”தஷாபஹத்” என்று    2:118லும், “”தஷாபஹ” என்று   2:70, 3:7,13:16லும் “”ஷிப்பிஹ” என்று 4:157லும் இடம்   பெறுகிறது.

மேலே குறிப்பிட்ட    எல்லா   இடங்களிலும்,   வெவ்வோறனவற்றை   ஒன்றுபோல் தோற்றமளிக்கச் செய்யும் ஒன்றைக் குறிக்கவே இப்பதம் பயன்படுத்தப் பட்டுள்ளது. 39:23 தவிர மற்ற இடங்களில்   பொருள்   தடுமாற்றத்தையோ,   பார்வை தடுமாற்றத்தையோ தந்து, சந்தேகத்தில்   ஆக்குபவற்றை   குறிக்கவே    இந்த “”முத்தஷாபிஹாத்”   பதமும்,   அதனைச்   சார்ந்த    பதங்களும்   இடம்   பெற்றுள்ளன இதிலிருந்து “” ஆயாத்தும் முத்தஷாபிஹாத்” என்ற பதம் பல பொருளை முரண்பாடில்லாமல் ஏற்றுக் கொள்ளப்படும் நிலையில் உள்ள குர்ஆன் வசனங்களைக் குறிக்கிறது என்பது தெளிவாகப்புரிகிறது.

அதாவது “”முஹ்க்கமாத்” வசனங்களுக்கு நேர்    எதிரிடையான     நிலையிலுள்ள வசனங்கள் “”முத்தஷாபிஹாத்” வசனங்களாகும்.””முத்தஷாபிஹாத்” வசனங்களிலுள்ள பொருள் தடுமாற்றம் தீர்க்கப்பட்டு குறிப்பான ஒரே பொருள் பெறப்படுமானால் “”முத்தஷாபிஹாத்” வசனங்கள் அவற்றின்   நிலையை   இழந்து   “”முஹக்கமாத்” வசனங்களின் நிலைக்கு வந்து விடுகின்றன. உதாரணமாக, வார்த்து  எடுத்தது   போல் இரண்டு   சகோதரர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் இருவரும் தனித் தனிப் பெயரை     உடையவர்கள். இப்போது அந்த இருவரையும் பார்ப்பவர்களுக்கு பார்வை தடுமாற்றம் ஏற்பட்டு இவர் இன்ன பெயரை உடையவர், இவர்   இன்ன   பெயரை   உடையவர்   என்று   கூறுவதில்   சந்தேகம்   ஏற்பட்டு   விடுகிறது.  இப்படிப்பட்ட நிலையையே “”முத்தஷாபிஹாத்” என்ற பதம் குறிக்கிறது. இந்த நிலையில் அந்த இருவரும் தங்கள் தங்கள் பெயரைச்    சொல்லி விடுகிறார்கள். இப்போது இவர் இன்னார் தான், இவர் இன்னார்தான் என்ற சந்தேகத்திற்கு இடமில்லாத, உறுதியான முடிவுக்கு வந்துவிட முடிகிறதுஇந்த   உறுதியான   நிலையையே முஹ்க்கமாத் என்ற பதம் குறிக்கிறது. இப்போது நிதனாமாகச் சிந்தித்துப் பாருங்கள். பொருள்      தடுமாற்றத்தைத் தரும் “”முத்தஷாபிஹாத்” வசனங்களுக்குத் திட்டமான உறுதியான பொருளைத் தந்து அவற்றை “”முஹ்க்கமாத்” நிலைக்கு    மாற்றும்    வல்லமை “”வர்ராஸிகூனஃபில் இல்மி” என்று  சொல்லக்கூடிய கல்வியில் திறமை மிக்கோருக்கு உண்டா? அதாவது அல்குர் ஆனிலுள்ள “”முஹ்க்கமாத்”, “”முத்தஷாபிஹாத்”   என்ற   இருவகையான   வசனங்களில்   “”முத்தஷாபிஹாத்”   வசனங்களையும்     “”முஹ்க்கமாத்” வசனங்களின் நிலைக்கு மாற்றி, முழுக் குர்ஆனையும் “” முஹ்க்கமாத்”  வசனங்கள்   அடங்கியதாக   ஆக்கும் வல்லமை கல்வியல் திறமை மிக்கோருக்கு உண்டா? நிச்சயமாக இருக்க முடியாது. அப்படி இருந்தால் அல்லாஹ் இறக்கியுள்ள குர்ஆனின் நிலையை மாற்றும் வல்லமையை அவர்கள்பெற்று விடுகிறார்கள். அதாவது அல்லாஹ்வின் நிலைக்கு அவர்கள் உயர்ந்து விடுகிறார்கள். இது   இப்னு   அரபியின் அத்வைத   (சூபிஸம்)   கொள்கைக்கு   ஆதரவளிப்பதாக   இருக்கிறது.   இது   அல்லாஹ்வுக்கு   இணை   வைக்கும்   குற்றத்தை   ஏற்படுத்துமா? இல்லையா? என்பது சிந்தனையாளர்கள் முடிவு செய்ய வேண்டிய ஒன்றாகும்.

இன்னொரு வி­யம் இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட்ட வேண்டும்3:7 வசனம் மட்டுமே “”முத்தஷாபிஹாத்” வசனங்கள் பற்றிச்  சொல்லுகிறது. மேலே    நாம்   குறிப்பிட்டுள்ள    வசனங்களில் “”முத்தஷாபிஹாத் ” பதம் வந்திருக்கிறதேயல்லாமல் எந்த வசனமும் “”முத்தஷாபிஹாத்” வசனங்கள்    பற்றிச்   சொல்லவில்லை.   39:23   வசனம்    முத்ஷாபிஹ்   வசனங்கள் பற்றிச் சொல்லுவதாக குறிப்பிடுவது தவறு அந்த வசனம் இதோ:?

“” அல்லாஹ் மிக அழகான வி­யங்களை வேதமாக இறக்கியருளினான்; இவை(முரண்பாடில்லாமல்) ஒன்றுக்கொன்று ஒப்பானதாகவும் (முத்தஷாபிஹ்). (மனதில் பதியுமாறு) திரும்பத் திரும்பக் கூறப்படுவதாகவும் இருக்கின்றன தங்கள் ரப்புக்கு எவர்கள் அஞ்சுகிறார்களோ      அவர்களுடைய    மேனிகள்    இவற்றைக்     கேட்கும்போது  சிலிர்த்து விடுகின்றன. பிறகு அவர்களின் மேனிகளும், உள்ளங்களும் இறை நினைவில் இளகுகின்றன. இதுவே அல்லாஹ்வின்  நேர்வழியாகும். இதன் மூலம்  அவன் நாடியவர்களை நேர்வழியில்செலுத்துகிறான். ஆனால் எவனை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விடுகிறானோ அவனை நேர்வழியில் நடத்துவோர் எவருமில்லை.”  (39:23)

3:7 வசனத்தில் ஒரே வசனத்தில்  முரண்  இல்லாமல் பல பொருள்  பெறப்படுவதை “”முத்தஷாபிஹாத்” என்று கூறுப்பபட்டுள்ளது ஆனால்   39:23ல்    முழுக்   குர்ஆனிலுள்ள   66:66   வசனங்களும்   ஒன்றுக்கொன்று   முரண்பாடில்லாமல்   ஓத்திருப்பதை     “”முத்தஷாபிஹன்” என்றும் மனதில் பதியுமாறு திரும்பத் திரும்பக் கூறப்படுவதை “”மஸானீ” என்றும் கூறுப்பட்டுள்ளது. முழுக்குர்    ஆனிலுள்ள 66:66 வசனங்களும் முரண்பாடில்லாமல் ஒன்றுக்கொன்று ஒத்திருப்பதைப் பார்க்கும் மனிதனின் மேனி சிலிர்த்து, அல்லாஹ்வின்   வல்லமையையும்,    அல்குர்ஆனின்   அற்புதத்தையும்   உளமாற   ஒப்புக் கொண்டு இறை நினைவால் உள்ளம்இனகுவதைக் குறிப்பிடும் 39:23 வசனத்தை முத்தஷாபிஹாத் வசனங்கள் பற்றியது என்று கூறி, முத்தஷாபிஹாத் வசனங்களின்உண்மைப் பொருளை கல்வியறிவில் திறமை மிக்கோர் அறிவதன் காரணமாகவே அவர்களின் மேனி சிலிர்க்கிறது என்று கூறுவதுவிதண்டாவாதமே ஆகும்.

39:23 வசனத்தில் “”வர்ராஸிகூன ஃபில் இல்மி”   என்பவர்களைப் பற்றிய எவ்வித குறிப்பும் இல்லை. “”யக்­வ்ன ரப்பஹும்’ என்று பொதுவாக தங்கள் ரப்பை அஞ்சுபவர்களைப்பற்றியே சொல்லப்பட்டிருக்கிறது என்பதையாவது அவர்கள் கவனிக்க வேண்டாமா? அவர்களது    கூற்றுப்படி   கல்வியில்   திறமை   மிக்கோர்   மட்டுமின்றி,   தங்கள் ரப்பை அஞ்சும் அனைவரும் “”முத்தஷாபிஹாத்” வசனங்களின்   உண்மைப்   பொருளை   அறிந்து   அவர்களின்   மேனிசிலிர்க்கிறது என்று பொருள் ஏற்பட்டு, கல்வியில் திறமை மிக்கோர் மட்டுமே அறிகிறார்கள் என்ற அவர்களின் கூற்றுக்கே அவர்கள் முரண்படுவதும் அவர்களுக்குத் தெரியவில்லையா?

ஒரே   வசனத்தில்    பல பொருள்    முரண்பாடில்லால்   பெறப்படும்    நிலைக்கும்,    முழுக்    குர்ஆனின்   66:66   வசனங்களும் முரண்பாடில்லாமல் ஓத்திருக்கும் நிலைக்கும்  உள்ள   வித்தியாசம்   இவர்களுக்குத்   தெரியவில்லையா?   3:7 வசனத்தில்,   ஒரே வசனத்தில் பெறப்படும் பல பொருளினால்   ஏற்படும்   தடுமாற்ற   நிலையும்,    39:23   வசனத்தில் முழக்குர்ஆனிலுள்ள 66:66 வசனங்களும்  முரண்பாடில்லாமல்   ஒன்று  போல்   காட்சியளிப்பதினால் ஏற்படும் ஆச்சிரிய நிலையும் ஒன்றாகுமா  “”முத்தஷாபிஹாத்” என்ற பதம் இருந்து விட்டால் இவர்கள் இஷ்டப்படி பொருள் கொண்டு விட முடியுமா?

3. தஃவீல் :  மூன்றாவதாக   நாம்   விளங்கிக்    கொள்ள   வேண்டிய   அரபிப்பதம்   “”தஃவீல்” ஆகும்.   இப்பதம்   சிறிய உச்சரிப்பு வித்தியாசங்களுடன்   3:7,   4:59,   7:53, 10:39, 12:6, 21, 36, 37, 44, 45, 100,   101,   17:35,   18:78,  82 ஆகிய குர்ஆன்   வசனங்களில்   காணப்படுகிறது.   இவற்றில்  10:39, 12:6, 21, 36, 44, 45, 100, 101, 18:78, 82 ஆகிய   வசனங்களில்    தஃவீல் எனும்    பதம்   விளக்கம்    என்ற    பொருளிலும்,   4:59,   7:53,   17:35   ஆகிய வசனங்களில்  முடிவு என்ற பொருளிலும் இடம்   பெற்றுள்ளத்தை அறிகிறோம்.

இப்போது அவர்கள் சர்ச்சை செய்யும் இடமான 3:7 வசனத்தில் “”தஃவீல்”    என்ற   பதம்   என்ன   பொருளில்   இடம் பெற்றுள்ளது. என்பதைத் தீர்க்கமாக நாம் அறியக் கடமைப் பட்டிருக்கிறோம். அதற்கு முன்குர்ஆனில் காணப்படும் 3:7 வசனத்தைத் தவிர இதர எல்லா வசனங்களிலும் இந்த “”தஃவீல்” என்ற பதம் மனிதர்களுடன் இணைத்துச் சொல்லப்படும் நிலையில் இந்த 3:7 வசனத்தில் மட்டும்””வமா யஃலமு தஃவீலஹு இல்லல்லாஹ்” என்று அல்லாஹ்வுடன் இணைத்துச் சொல்லப்படுகிறது என்பதை நம் கவனத்தில்கொள்ள    வேண்டும்.    இந்த   இடத்தில் அல்லாஹ்வுடன் இணைத்துச் சொல்லப்படும் “”தஃவீல்” என்ற பதத்திற்கு விளக்கம் என்று பொருள் கொள்ளுவது பொருந்துமா? அப்படிப் பொருள் கொள்ளுவது ஹிமாலயத் தவறு அல்லவா? அந்நஜாத் செப். 88, பக்கம் 15ல் இதனை நாம் தெளிவுப்பபடுத்தி   இருந்தோம்.   இங்கு தஃவீல் என்ற அரபிப் பதத்திற்கு விளக்கம் என்று பொருள் கொடுத்தது மட்டுமில்லாமல்,   “”முத்தஷாபிஹாத்”    தொடர்   கட்டுரை   முழுவதும்   “”முத்தஷாபிஹாத்”    வசனங்களை   விளங்குவது   என்ற அடிப்படையிலேயே எழுதப்பட்டு வருகிறது. அல்குர்ஆன் 3:7 வசனத்திலுள்ள “”தஃவீல்” என்ற பதத்திற்குவிளக்கம் என்பது பொருள் அல்ல. 4:59, 7:53, 17:35ஆகிய வசனங்களில் உள்ளது போல்(இறுதி) முடிவு (ய்ஷ்ஐழியிVerdஷ்உமி) என்ற பொருள்   மட்டுமே கொள்ள   முடியும்   என்பது  ஊறுதியாகி    விட்டால்,   அவர்களின்   “”முத்தஷாபிஹாத்”   கட்டுரைத்   தொடர்   முழுவதுமே   அடிப்படையின்றி பொருளற்றதாகிவிடும்.

விளக்கத்தை அறிவது என்றால் என்ன?

தமிழ் அகராதியில்  விளக்கங்காணுதல் என்பதற்கு   ஆராய்ந்தறிதல்   எனப்   பொருள் கொள்ளப்பட்டுள்ளது.    புரியாதிருந்த ஒரு வி­யத்தை சுய ஆய்வுகளுக்குப் பிறகோ அல்லது  பிறரது விளக்கத்திற்குப் பிறகோ புரிந்து கொள்ளுவதை “விளங்குதல்’ அல்லது “விளக்கத்தை அறிதல்’ என்று சொல்லப்படும்.   அறியாதிருந்த   ஒரு   வி­யத்தை அறிந்து கொள்வதைக் கூட விளங்குதல் என்று சொல்லப்படுவதில்லை.    உதாரணமாக…………..என்பவர்    இறந்துவிட்டார்.    என்று   வைத்துக்   கொள்வோம்.   இந்தச்   செய்தி   தெரியாதிருந்த ஒருவரிடம் இன்னொருவர் வந்து…………….இறந்து விட்ட செய்தி உங்களுக்குத் தெரியுமா? என்றோ, அல்லது……….இறந்து விட்ட   வி­யத்தை அறிவீர்களா?   என்றோ   தான்   கேட்பார்…… இறந்து விட்டதை விளங்கிக் கொண்டீர்களா? என்றோ, அல்லது இறந்து   விட்ட   விளக்கத்தை   அறிவீர்களா? என்றோ ஒரு போதும் கேட்க மாட்டார். அதே சமயம் அவருக்குப் பக்கத்தில் நின்று    கொண்டிருந்த   அவரது   ஐந்து   வயது   மகன், இறந்து விடுவது என்றால் என்ன? என்று கேட்கிறான். இப்போது தந்தை மகனுக்கு   இறந்து   விடுவது என்றால் என்ன என்பதைத் தனது மகன் புரிந்து கொள்ளுமாறு விளக்கி விட்டு, அதன்பின் மகனைப் பார்த்து   இறந்து   விடுவது   என்றால்   என்ன   என்பதை    விளங்கிக்   கொண்டாயா?   என்றோ,   அல்லது விளக்கத்தை அறிந்து கொண்டாயா? என்றோ கேட்பார்.   இந்த  உதாரணத்திலிருந்து அறிவதற்கும்.   விளங்குவதற்கும்   உள்ள வேறுபாட்டை எளிதாக உணர முடியும்.

இந்த     அடிப்படையில்    “”தஃவீல்”   என்ற   பதம்   விளங்குதல்   என்ற   பொருளில்   வந்துள்ள வசனங்களைப் பார்ப்போம். 12-ம்அத்தியாயத்தில் எட்டு இடங்களில் இந்த “”தஃவீல்” என்ற   பதம்   வந்துள்ளது.   இவை   அனைத்தும்   யூசுப்(அலை) அவர்களுக்கு இறைவன் கற்றுக் கொடுத்த கனவின் விளக்கத்தைப்  பற்றிக்   கூறுகின்றன.   கனவுகள்   சம்பந்தமாக    புரியாதிருந்தவைகளை யூசுப்(அலை) அவர்களுக்கு அல்லாஹ்   கற்றுக்   கொடுத்த   விளக்கத்தினால்   மற்றவர்களுக்கு   தெளிவு  படுத்தினார்கள். இந்த இடங்களில் தஃவீலுக்கு   விளக்கம்   என்ற   பொருள் மிகச் சரியானதேயாகும். அடுத்து 18-ம் அத்தியாயத்தில் இரண்டு இடங்களில் (18:78, 18:82)   இந்த    “”தஃவீல்”   என்ற     பதம்    வருகிறது.   அந்த   இரண்டு   இடங்களிலும்   மூஸா  (அலை) அவர்களுக்குப்   புரியாதிருந்தவைகளை, அல்லாஹ் அருளிய ஞானத்தைப் பெற்றிருந்த ஒருஅடியார் விளக்கியதற்குப்பின் மூஸா(அலை) அவர்கள்விளங்கிக் கொண்டார்கள்.

எதைப்பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோஅதன் விளக்கத்தையும் உமக்கு திட்டமாகஅறிவித்துவிடுகிறேன்.(18:78)(பார்க்க 18:65 லிருந்து 82 வரை)

இந்த இடங்களிலும் தஃவீலுக்கு விளக்கம் என்ற பொருளே பொருத்தமானது.   இந்த இடத்தில் ஒரு வி­யத்தை வாசகர்களுடைய கவனத்தில் கொண்டு வராமல் இருக்க முடியாது.

முகல்லிது மவ்லவிகள் “”இந்த உம்மத்திலுள்ள ஆலிம்கள் பனீ இஸ்ராயீல்களில் தோன்றிய நபிமார்களைப் போன்றவர்கள்” என்ற கருத்திலுள்ளஒரு இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸை பற்றிப்பிடித்துக் கொண்டு அதற்கு ஆதாரமாக மூஸா(அலை) அவர்களுக்கும், இமாம்கஸ்ஸாலிக்கும்   இடையில்   நடந்ததாக ஒரு சம்பா­னையையும் கற்பனை செய்து எழுதி வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றி வருகிறார்கள். காதியானிகளும்   இந்த    இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸை தூக்கிப் பிடித்தே, நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு நபிமார்கள் வரமுடியும்   என்ற   தங்களின்    சொத்தை   வாதத்தை    நிலை   நாட்ட   முயற்சி   செய்கிறார்கள். முகல்லிது மவ்லவிகள் இந்த    உம்மத்திலுள்ள ஆலிம்கள் பனீ இஸ்ராயில்களில் தோன்றிய நபிமார்களை போன்றவர்கள் என்று தான் வாதித்து வருகிறார்கள். ஆனால் 3:7 வசனத்திலுள்ள முத்தஷாபிஹாத் வசனங்களின் உண்மை பொருளை   இந்த உமமத்திலுள்ள “”வர்ராஸிகூன ஃபில் இல்மி”   என்ற   கல்வியில்   திறமை   மிக்கோரும்   அறிவார்கள்   என்று    சொல்லுவதன் மூலம்   அந்த நபிமார்களை விட இந்த உம்மத்திலுள்ள    ஆலிம்கள்   உயர்ந்தவர்கள் என்று கற்பனை செய்பவர்களின் நிலை பற்றி நமக்கு வேதனையாக இருக்கிறது. அடுத்து 10:39 வசனத்தில் இடம் பெற்றுள்ள   “”தஃவீல்”   என்ற   பதத்திற்கும் விளக்கம் என்ற பொருளே பொருத்தமான தேயாகும். எஞ்சியுள்ள3 வசனங்கள்:

“”நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள்; இன்னும் அல்லாஹ்வின் தூதருக்கும், உங்களில் (நேர்மையாக)அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்ப்படியுங்கள்; உங்களில் ஏதாவது   ஒரு   வி­யத்தில்   பிணக்கு   ஏற்படுமானால்? மெய்யாகவே நீங்கள்   அல்லாஹ்வையும்,    இறுதி   நாளையும்   நம்புபவர்களாக   இருப்பின்?அதை   அல்லாஹ்விடமும், அவன் தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள்? இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.” (4:59)

“”இவர்கள் (தங்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு வந்த) இறுதியையன்றி வேறு எதை எதிர் பார்க்கிறார்கள்? (7:53)

“”மேலும் நீங்கள் அளந்தால் அளவைப் பூர்த்தியாக அளவுங்கள்; (இன்னும்) சரியான தராசைக் கொண்டு    நிறுத்துக் கொடுங்கள் இதுவே நன்மையுடைதாகவும், முடிவில் பலன் தருவதில் அழகானதுமாகும்.” (7:35)

இந்த மூன்று வசனங்களில் இடம் பெற்றுள்ள “”தஃவீல்” என்ற பதத்திற்கு விளக்கம்   என்று   பொருள்   படுத்திப் பாருங்கள். அந்த வசனங்களின் அர்த்தம்   தெளிவற்றதாகிவிடும்.   முடிவு என்று பொருள் கொள்வதே   பொருத்தமாக   இருக்கிறது. ஆயினும் இந்த வசனங்களில் “”தஃவீல்”   என்ற   பதம்   அல்லாஹ்வுடன்   இணைத்துச்   சொல்லப்படவில்லை.   இந்த நிலையில் 3:7 வசனத்தில் அல்லாஹ்வுடன்      இணைத்துச்     சொல்லப்பட்டிருக்கும்     “”தஃவீல்”    என்ற பதத்திற்கு விளக்கம் என்று   பொருள்   கொடுத்து     அல்லாஹ்வையும் விளக்கம் பெறும் மனித நிலைக்குத் தாழ்த்துவது   எவ்வளவு   பெரிய   ஹிமாலாயத்   தவறு   அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் வழிகேடான செயல் என்பதை உணர வேண்டும்.

எனவே 3:7 வசனத்தில் அல்லாஹ்வுடன் இணைத்துச் சொல்லப்பட்டிருக்கும் “”தஃவீல்” என்ற பதத்திற்கு விளக்கம்   என்ற பொருள் ஒருக்காலும் கொள்ள முடியாது. “”முத்தஷாபிஹாத்” வசனங்களில் மனிதர்களிடையே ஏற்படும் பொருள்   தடுமாற்றத்தைத் தீர்த்து வைக்கும் அதிகாரம்  ?  முடிவு (ய்ஷ்ஐழியிVerdஷ்உமி)?  அல்லாஹ்விடம்    மட்டுமே   இருக்கிறது.   என்ற    பொருளில்    “”முத்தஷாபிஹாத் வசனங்களின்   உண்மைப்   பொருளை   அல்லாஹ் மட்டுமே அறிவான்” என்று பொருள் கொள்வதே சரியாகும். அதேபோல்3:7 வசனத்தில் இடம் பெறும் “”வப்திகாஅ தஃவீலிஹ்”   என்ற   பாகத்திலுள்ள தஃவீல் பதத்திற்கு விளக்கம் என்ற பொருள் கொள்ளாது முடிவு தேடி (ய்ஷ்ஐழியிஷ்விed) அதனைப் பின்பற்றுவது என்று பொருள் கொள்வதே மிகப் பொருத்தமாகும். காரணம், “”முத்தஷாபிஹாத்” வசனங்களில் விளக்கங்கள் தேடுவது தவறல்ல. ஆனால் அவற்றில்   இறுதி   முடிவெடுத்து மார்க்கமாக்கிப் பின்பற்ற முற்படுவதே குற்றமாகும். மேலும் “”முத்தஷாபிஹாத்” வசனங்களில் தர்க்கம் புரிவதும் தடை செய்யப்பட்டுள்ளது. அது பற்றிய ஹதீஸ் வருமாறு:

நபி(ஸல்) அவர்கள் 3:7 வசனத்தை “”உலுல் அல்பாப்” முடிய ஓதினார்கள்    பின்னர், “”பல பொருளுடைய வசனங்களில் குதர்க்கம் புரிபவர்களை நீங்கள் காணின் இவர்களைப் பற்றித்தான் இறைவன் இந்த   வசனத்தில் குறிப்பிட்டு இருக்கிறான் என்று அறிந்து, அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாய் இருந்து கொள்ளுங்கள்” என்று தனது உம்மத்தை(சமூகத்தை) எச்சரித்தார்கள். (ஆயிஷா(ரழி), புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ)

அல்குர்ஆனில் “”தஃவீல்” என்ற பதம்   வரும்   இடங்கள்  அனைத்தையும் பரிசீலனை செய்தபின் 3:7 வசனத்தில் இடம் பெற்றுள்ள “”தஃவீல்” என்ற பதத்திற்கு விளக்கம் என்று பொருள் கொள்வது   தவறு. இறுதி முடிவு (ய்ணூஹிபுஸிVசியூம்ணூளீவீ)-உண்மைப்பொருள் என்று பொருள் கொள்வதே மிகச் சரியாகும் என்பது மிகத்தெளிவாகபுரிகிறது. மேலும்அதற்குமாறாக முயற்சிகள் செய்து ஆய்ந்து பெறும் விளக்கம் என்று பொருள்   கொள்வது   அல்லாஹ்வும்   முயற்சிகள்   செய்து ஆய்ந்து விளங்க வேண்டிய மனித நிலையிலேயே இருக்கிறான் என்ற  தப்பான?´ர்க்கான முடிவுக்கு நம்மைக் கொண்டு சேர்த்துவிடும்.  அல்லாஹ்   சர்வ    வல்லமை   மிக்கவன்; முக்காலமும் அறித்தவன் முயற்சிகள் செய்து விளங்கும் நிலையில்   அவன்    இல்லை. அல்லாஹ் அறிகிறான் என்று சொல்வதற்கும், மனிதன் அறிகிறான் என்று சொல்வதற்குமே மலைக்கும்   மடுவுக்குமுள்ள    வித்தியாசம்   இருக்கிறது.   இந்த      நிலையில் முயற்சிகளுக்குப் பின், ஆய்வுகளுக்குப்பின் விளங்கும், விளக்கத்தை அறிவது என்பதை அல்லாஹ்வுடன் இணைத்துச்சொல்வது மாபெரும் குற்றமாகும், வழிகேடாகும், ஏன்? ´ர்க்குமாகும். எனவே 3:7 வசனத்தில்,

“”முத்தஷாபிஹாத்   வசனங்களின்   விளக்கத்தை அல்லாஹ்வையும், கல்வியில் திறமை மிக்கோரையும் தவிர மற்றவர்கள் அறிய மாட்டார்கள்” என்று பொருள்   கொள்வது ஹிமாலயத் தவறு? வழிகேடு? ´ர்க்கை உண்டாக்கும் தவறு. அதன் சரியான விளக்கம் வருமாறு:

“”முத்தஷாபிஹாத் வசனங்களின்   (உண்மைப்பொருளை)   முடிவை  (ய்ணூஹிபுஸிVசியூம்ணூளீவீ) அல்லாஹ் அல்லாத வேறு யாரும் அறிய மாட்டார்கள்”   கல்வியில்   திறமை   மிக்கோர்   “”நாங்கள் இவற்றில்   நம்பிக்கை     கொள்கிறோம்.    இவை   அனைத்தும்   எங்கள் ரப்பிடமிருந்து வந்தவை தான்” என்று கூறுவார்கள். இதுவே முறையான சரியான பொருளாகும். அடுத்து இந்த 3:7  வசனத்தை ஹதீஸ் களைக் கொண்டு விரிவாக ஆராய்வோம்.(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

——————————————————————————————————————-

தொடர் : 6

மெய்ப்பொருள் காண்போம்; அவ்வழி நடப்போம்.

க்ஷி. அப்துஸ்ஸமது ய.சி., னி.றீஉ., (சிஐஆ) சென்னை.

நான்காவதாக நபி(ஸல்) அவர்களோடு நாம் கொள்ள வேண்டிய உறவு, பாசத்தின் (அன்பின்) அடிப்படையில் அமைய வேண்டும்.  பாசத்தின்   அடிப்படையில்    உருவாகாத   ஈமானும்,   கீழ்படிதலும்   நிறைவானவை அல்ல. பாசமில்லாமல் (மேற் கொள்ளப்படும்) கீழ்படிதல் பெரும்பாலும் போலி நடிப்பு(க்ஷிதீஸ்ரீலிஉrஷ்விதீ) ஆகவே இருக்கும்.   நபி (ஸல்)   அவர்கள்   மீது   கொள்ள   வேண்டிய   பாசம்   சம்பிரதாயத்திற்காகவும், வெளிப்பகட்டிற்காகவும் காட்டப்பட வேண்டியதல்ல;   மற்ற   பந்த   பாசங்களை   எல்லாம் அது மிகைத்து   நிற்க வேண்டும்; மிக நெருங்கிய உறவினர்களோடுள்ள பாசத்தையும் உளமார்ந்த அந்நியோன்ய நட்பையும், நபி(ஸல்) அவர்கள்  மீது கொள்ளும் பாசமும், பந்தமும் மிகைத்திட   வேண்டும்.   இந்த    பாசத்திற்காக    உலகில்   உள்ள   யாவற்றையும் அர்ப்பணம் செய்யலாம்; ஆனால் நபி   (ஸல்)   அவர்கள் மீதுள்ள   பாசத்தையும்,   நேசத்தையும் கோடானுகோடிகிட்டினம் களைய   முடியாது. திருமறை இத்தகைய பாசத்தின் வரை முறையை விவரிக்கின்றது.

(நபியே!    விசுவாசிகளை   நோக்கி)    நீர்    கூறும்  ; உங்களுடைய   தந்தையரும், மக்களும், சகோதரர்களும், துணைவர்களும், குடும்பங்களும், நீங்கள் சம்பாதித்துள்ள (உங்கள்) பொருட்களும்   நஷ்டமாகிவிடுமோ என நீங்கள் (பயந்து) மிக எச்சரிக்கையுடன் செய்துவரும் வர்த்தகமும், உங்களுக்கு (மிக்க) விருப்பமுள்ள   (உங்கள்) வீடுகளும் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் விடவும்,   அவனுடைய   பாதையில்   யுத்தம்   செய்வதை   விடவும்   உங்களுக்கு   மிக்க   விருப்பமானவைகளாக   இருந்தால்      அல்லாஹ்வுடைய கட்டளை வரும் வரையில் நீங்கள் காத்திருங்கள். (9:24)

இக்கருத்தை வலியுறுத்தும் நபிமொழிகளும் உள்ளன.

“”உங்களுடைய தந்தை, மகன், மனிதர்களில் வேறு யாரையும் விட நான் உங்களுக்கு நெருங்கினவனாகக் கருதப்படாத வரையில் நீங்கள் யாரும் முஃமீன் ஆக முடியாது.”  (அனஸ் (ரழி), புகாரீ, முஸ்லிம்)

ஒவ்வொருவரும்    தன்   குடும்பத்தாரிடமும்,   உறவினரிடமும்   இயல்பாகக் காட்டும் (மனோபாவமான) உணர்ச்சி வசப்பட்ட அன்பு போன்றதல்ல நபி(ஸல்) அவர்கள் மீது கொள்ள வேண்டிய    அன்பு கொள்கை அடிப்படையில் அறிவுப்பூர்வமாக ஏற்படும் அன்பு அது. அடிப்படைக் கோட்பாடுகளிலும், வரையறுத்துக் கொண்ட  நியதிகளிலும்   ஏற்படும்   பற்றும், இணைப்பும் காரணமாக அவை ஒருவருடைய    வாழக்கையின்   எல்லா   அம்சங்களிலும்   மிளிரும்;   தாம்   போற்றிப்பேணும்    கொள்கைகளுக்காக மற்றெல்லாசித்தாந்தங்களையும், முறைகளையும், இச்சைகளையும் அர்ப்பணம் செய்யத் தயங்க மாட்டார்; தனது கொள்கைகள், கருத்துக்கள்நியதிகள் இவைகளின் மேம்பாட்டை நிலைநிறுத்த மற்றவையாகவும் தரங்குறைவதைப் பற்றியோ, அழிவதைப் பற்றியோ கவலைக்கொள்ள மாட்டார். ஆனால் தன் கொள்கைகளும், நியதிகளும் நிலை குலைவதைச் சகிக்க மாட்டார். தாம் வகுத்துக் கொண்ட கொள்கைகளுக்கும்     ஏற்றுக்     கொண்ட    நியதிகளுக்கும்   ஏற்ப   வாழ    தன்   மனம்    இசையமறுத்தால்   அதை   அடக்கி   ஒடுக்கி     கொள்கைகளுக்கொப்ப ஓழுகிடுவார்.

மற்றவர்கள்    தடையாயிருப்பன் அவர்களை     எதிர்த்து   தன் வழி நிற்பார். தன் மனைவியும், மக்களும், குடும்பமும், நாடுமே தம் கொள்கைகளின் வரைமுறைகளை எதிர்த்திடினும்,   தம்     கொள்கைகளையும், கோட்பாடுகளையும் விட்டு அகலாது, அவைகளைஒட்டி  நின்று விளைவுகளை சமாளிப்பார். மனைவியின் காதலும், மக்களின் பாசமும், குடும்ப உறவும், நாட்டுப்பற்றும், கொள்கை வழி    வாழ்வதைவிட்டும்    அவரை    அகற்ற    சக்தியற்றவையாகும். அறிவாற்றலால் உந்தப்பட்டு கொள்கைக் கோட்பாடுகளின் அடிப்படையில் உருவாகும் பந்த பாசம் தம் உம்மத்திடம் உருவாக வேண்டும் என்றே நபி(ஸல்)அவர்கள் விழைந்தார்கள்.

நபி(ஸல்) அவர்களோடுள்ள உறவு, கீழ்படிதல் பின்பற்றுதல்,    பாசம்(அன்பு) இவைகளின் அடிப்படையில் உருவானால் மாத்திரம் அது இயல்பாகவும், வலுவுற்றதாகவும்    அமையும்.    அன்பின்றிக் கீழ்படிவது வெறும் போலி நடிப்பு(நயவஞ்சம்) ஆகும் என்பதை திருமறையே எடுத்துரைக்கின்றது. மதீனாவைச்    சுற்றி    வாழ்ந்த    நாட்டுப்புறத்து    அரபிகல் (யசிம்Uணூஹிறீ)பலர், இஸ்லாமிய ஆட்சி நிறுவப்பட்டபின்     இஸ்லாத்தைத்    தழுவி    அதன்    சட்டதிட்டங்களுக்குப்பட்டு வாழ இசைந்தனர். இது முஸ்லிம்களின் அரசியல் ஆதிக்கத்திற்குப் பயந்து       ஏற்பட்ட    மாற்றமே    அல்லாது,        அல்லாஹ்வின்   மீதும்   அவனது    தூதர்    மீதும்     கொண்ட    நேசத்தாலோ, நம்பகமான ஈமானாலோஅல்ல. இஸ்லாமிய   சட்ட   திட்டங்களுக்கு வெளிப்படையாகப் பணிந்து நடப்பது கொண்டு மாத்திரம் ஒருவர் உண்மை முஸ்லிம் ஆகிவிட முடியாது.

திருமறை இவ்விதம் கூறுகிறது :-

“”நாங்கள்   ஈமான்   கொண்டோம் ” என்று   நாட்டுப்புறத்து அரபிகள்(யசிம்Uணூஹிறீ) (நபியே உம்மிடம்) கூறுகிறார்கள். “” நீங்கள் ஈமான் கொள்ளவில்லை; எனினும் “நாங்கள் இஸ்லாத்தைத் தழுவினோம்’ என்று வேண்டுமனால் கூறுங்கள் (என நபியே) அவர்களிடம் கூறுவீராக!”  (49:14)

ஆக முன்னர் குறிப்பிட்டது போல் அல்லாஹ்வை   நேசிப்பதற்குரிய ஒரே வழிநபி(ஸல்) அவர்களைப் பின்பற்றுவதே ஆகும்(காண்ககுர்ஆன் வசனம்3:31) அல்லாஹ்வை நேசிப்பதாகக் காட்ட மேற் கொள்ளப்படும் மற்றெல்லா முறைகளும் தவறானவைகளும், பித்அத்துகளும் ஆகும். வேறொரு முக்கிய வி­யமும் இங்கு கவனிக்கப்பட வேண்டும். நபி(ஸல்) அவர்கள் தன்னை நேசிப்பதாகக்  கூறி, வரம்பு மீறி   விடாமலும், மிகைப்படுத்தி விடாமலும்   இருக்கும்படியும் எச்சரித்துள்ளார்கள். கிறித்தவர்கள் ஈஸா (அலை) அவர்கள் மீது காட்டிய வரம்பு மீறிய அன்பே அவர்களின் வழி கேட்டிற்கு மூலகாரணம் ஆகும்; முஸ்லிம்கள்  இதே ரீதியில் தடம் புரண்டு வருகிறார்கள்.

உமர் (ரழி) அவர்கள் ரசூல் (ஸல்) அவர்கள் கூறியதாகஅறிவிக்கிறார்கள்;என்னைப் புகழ்வதில் வரம்புமீற (மிகைப்படுத்த)வேண்டாம்;ஈசாஇப்னு மர்யம் (அலை) அவர்களை கிறித்தவர்கள் புகழ்ந்தது போல் எனவே, என்னைஅல்லாஹ்வின்அடிமை என்றும்,அவனதுதூதர் என்றும் அழையுங்கள்.  (புகாரீ)

நபி(ஸல்) அவர்கள் மீது நபித்தோழர்கள் கொண்டிருந்த அன்பும், பாசமும், மரியாதையும் பிரசித்தமானவை. அல்லாஹ்வின் தூதர்மீது ஈமான் கொண்டு, அவர்களைப் பின்பற்றி   வாழ   முற்பட்டதால்   அனுபவிக்க   நேர்ந்த   எண்ணற்ற   தொல்லைகளையும்,    துன்பங்களையும்,     இழப்புகளையும்   சகித்துக்   கொண்ட நபித்தோழர்கள், நபி(ஸல்) அவர்கள் மீது ஒரு முள் குத்துவதைக் கூடப் பொறுத்துக் கொள்ள    முடியாதவர்களாக   இருந்தார்கள்.   போர்களில்   எதிரிகள் எய்த அம்புகள் ஏற்படுத்திய ரணங்களும், வாள்வெட்டுகளின் காயங்களும் தந்த வேதனைகளையும் மனம் தளராமல் சகித்துக்கொண்டு  நபி(ஸல்) அவர்கள் மீது ஒரு சிறு காயம்கூட பட்டுவிடாத வண்ணம் அவர்களை கண்இமைபோல் பாதுகாத்தனர்; கணவன், தந்தை, சகோதரன், மக்கள் யாவரும் போரில் மாண்டதைக்    கூடப்     பொருட்படுத்தாமல்,   பெண்களும் கூட நபி(ஸல்) அவர்களின் நலனைப்   பற்றியே   விசாரித்தவர்களாகக் காணப்பட்டார்கள். சரித்திரம் அதுவரை கண்டிராத   வகையில் நபித்தோழர்கள் அன்போடும், பாசத்தோடும் நபி(ஸல்) அவர்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தார்கள்; அவர்களின் வழி முறைகளைக் கண்ணியத்தோடும், பெருமிதத்தோடும் பின் பற்றினார்கள். இவை    எல்லாம்   ஆச்சரியமல்ல.   ரசூல்    (ஸல்)    அவர்கள்    விரும்பாததை    அது   அல்லாஹ்வின்    தூதர்   அவர்களைக்     கண்ணியப்படுத்தும் செயலாக இருந்தும் கூட, செய்யாமல் தவிர்ந்து கொண்டது ஏன்? என்பதை நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

அனஸ்(ரழி) அவர்கள் கீழ்வருமாறு அறிவித்துள்ளார்கள்;-

நபித்தோழர்களுக்கு  அல்லாஹ்வின் தூதரை விட அன்புக்குப் பாத்திரமானவர் இவ்வுலகில் வேறு எவரும் இல்லை. என்றாலும் நபி(ஸல்) அவர்கள்    வருவதைக்    கண்டு   மரியாதை   செலுத்தும் வகையில் அவர்கள் எழுந்து நிற்பதில்லை. காரணம், ரசூல்(ஸல்) அவர்கள் அதை விரும்பவில்லை என்பதே.  (திர்மிதீ)

நபி(ஸல்) அவர்களை உயிரினும் மேலாகக் கருதிய நபித்தோழர்களின் நிலை இவ்வாறிருக்க,  நபி(ஸல்) அவர்கள் மீது நம்பிக்கைக்கொண்டுள்ளதாகப் பிரகடனப்படுத்தும்  இன்றைய முஸ்லிம்களில் பெரும்பாலானோரின் நிலையைக்   கவனியுங்கள்.  நபி(ஸல்)  அவர்களின் கட்டளைக்கு   அடிபணிவதில்லை;   அவர்கள்   மீது   அன்பு   கொண்டுள்ளோம்.  என்று   பறை   சாட்டுவர். ஆனால் அன்னாரின்    வழி  முறைகளைப்    பின்பற்ற   மாட்டார்கள்.   மாறாக   நபி  (ஸல்)   அவர்களின் வழிமுறைகளல்லாத,    அவர்கள்  விரும்பாதப் பல புதிய சடங்குகளை நிறைவேற்றுவதில் பக்தி சிரத்தையோடு ஆர்வம்   கொண்டுள்ளனர். நபி(ஸல்)   அவர்களின்   பிறந்த தின   விழா   கொண்டாடுவது;   அத்தினத்தில்   மக்களைத்   திரட்டி  கோ­மிட்டு ஊர்வலம் வருவது; அவ்விழாவில் இனிப்புப் பதார்த்தங்கள் வழங்குவது; இவைகள்தாம் நபி (ஸல்)    அவர்கள்   மீது   அன்பை வெளிக்காட்டவும், அவர்களை நினைவு கூறவும் மேற்கொள்ளப்படும்  நற்செயல்கள்   எனக்   கருதுகின்றனர். வாழ்நாளில் ஒருவேளைகூட கடமையாக்கப்பட்ட தொழுகையை நிறைவேற்றாதவர்கள்   அநேகர், இத்தகைய மீலாது விழாக்களையும், மவ்லூது வைபவங்களையும் வெகு அக்கறையுடன் முன்னின்று நடத்துகின்றனர். நிறைந்த செல்வம் சேர்த்தும், அல்லாஹ் விதித்த “” ஜக்காத்” தைக் கொடுப்பதில்லை; ஆனால் நபி(ஸல்) அவர்கள் விரும்பாத மேற்கொள்ளும்படி ஏவாத மீலாது விழாக்களுக்கும், மவ்லூது வைபவங்களுக்கு வாரி வழங்குகின்றனர்.

“” எவனுக்கு   இறைவன்   பொருள் கொடுத்திருந்து அவன் அதனுடைய ஜகாத்தைக் கொடுக்கவில்லையோ, அவனுடைய பொருள் மறுமை நாளில் நாகப்பாம்பின் உருவில் கொண்டு வரப்படும், அதன் இரு கடவாய்களிலும் நுரை நிரம்பி இருக்கும். இன்னும் அது வளையத்தைப் போல் அம்மனிதனின்   கழுத்தில்   சுற்றிக்கொண்டு   நான்  தான்   உன்  பணமும் செல்வமும் என்று கூறும்!” என நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள்.  (அபூரைரா (ரழி), புகாரீ)

அல்லாஹ்வின்திருமறையைவாசிக்க நேரமில்லை; ஆர்வமுமில்லை; நபிமொழிகளைஅறிந்துகொள்ள சந்தர்ப்பங்கிட்டுவதில்லை;திருமறை நபிமொழி இவைகளுக்கொப்ப அமைந்துள்ளனவா தம் செயல்கள்? என சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமேஎழுவதில்லை;    ஆனால்    நபி(ஸல்)   அவர்களைப்    புகழ்வதாகக்   கருதி,   விளம்பரப்படுத்தி   மவ்லூது   ஓதி,  இஸ்லாமிய இசை மன்னர்களின் கீதங்கள் செவியைப் பிளக்க, இரவெல்லாம் கண்விழித்திருந்து,    அலங்காரச்   சந்தனக் கூண்டுகளில்   பால்குடம் சுமந்து, பக்திப் பரவசத்தால் தன்னிலை இழந்து கூத்தாடுவது   தான்   இவர்களுக்கு   நபி(ஸல்) அவர்களின் மீது அன்பு செலுத்தி, அன்னாரின் துவாபரக்கத்தை(?) தேடித் தரும் சடங்குகள்!   எல்லாம்   வல்ல ரப்பில் ஆலமின் நம்மனைவரையும் நல்வழிப்படுத்தி அருள்வானாக!  (இன்ஷா அல்லாஹ் தொடரும்)

தலைவர்களுக் நபி(ஸல்) அவர்களின் துவா!

எவர்    எனது    சமுதாயத்தவரின் யாதேனும்    ஒரு   பொறுப்பை   ஏற்று   அதன்   வகையில் அவர்களைச் சிரமத்திற்கு ஆளாக்கு வாரேயானால், யா அல்லாஹ்! அவரை நீர் சிரமத்திற்கு ஆளாக்கிவிடு! எவர் எனது   சமுதாயத்தவரின் யாதேனும் ஒரு பொறுப்பை ஏற்று அதன்வகையில் அவர்களிடம் அன்புடன் நடந்து கொள்வாராயின் அவரிடம்   நீயும் அன்புடன் நடந்து கொள்வாயாக! என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.  (ஆயிஷா (ரழி), பாடம்: தலைமைத்தனம், புகாரீ, முஸ்லிம்)

தலைமையின் அவசியம்

ஒரு பிராணத்தில் மூலர் இருப்பின் அவர்களில் ஒருவரை    அவர்கள்   தலைவராக்கிக்   கொள்வாராக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.  (அபூஸயீதில் குத்ரீ(ரழி), பாடம்: பிரயாண ஒழுங்கு, அபூதாவூத்)

——————————————————————————————————————-

சமூகவியல் :

16. உலகு உய்ய வேண்டுமா?

புலவர் செ. ஜஃபர்அலி பி.லிட்.,

“எங்களுடைய வேதம்   குர்ஆனாகும்’   என்று   பகிரங்கமாக அறிவித்து, தங்களை குர்ஆனைப் பின்பற்றுவோராக மற்றவர்களை நம்பச் செய்யும் முஸ்லிம்களே இன்று எண்ணற்றவர்களாவர்.   அவர்களுக்கு   குர்ஆனில்   சொல்லப்படுவனே யாவை? என்பது கூடத் தெரியா !

“”நீங்கள் சொல்வதும், செய்வதும் குர்ஆனுக்கு மாற்றமாக உள்ளதே” என்று அறிந்தவர் எடுத்துக்   காட்டினால்,   “”உனக்கு   என்ன தெரியும்? பெரியப் பெரிய ஹஜ்ரத்துமார்கள் கூட நாங்கள் செய்வதைத் “தவறு’    என்று   கூறவில்லையே!   மாறாக   எங்களுக்கு   ஒத்துழைப்பு அல்லவா கொடுக்கின்றார்கள்” என்று பதில் தருகின்றார்கள்.

உண்மையில், இவர்கள் எல்லாரும் குர்ஆனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தவர்கள் தாமா? தூய வேதத்தை ஏற்றுக் கொண்டவர்கள்.தாமா? என்று பகுத்துணர்ந்தால், இவர்கள் தம் செயலால்?ஏன் சொல்லால் கூட பகிரங்கமாக குர்ஆனை எதிர்ப்பவர்களே! என்ற   முடிவுக்கு நாம் வந்து விடலாம்.

“”அவர்களில்    பெரும்பாலோர்  அல்லாஹ்வை  விசுவாசிப்பதில்லை.    அவ்வாறு   அவர்களில்   எவரேனும் விசுவாசித்த போதிலும் (அவனுக்கு) அவர்கள் இணை வைக்காமலும் இல்லை”  (12:106)

“” எவர்கள் தங்கள் இறைவனுடைய அழைப்பை ஏற்றுக் கொள்கிறார்ளோ அவர்களுக்கு(அது)   முற்றிலும் நன்மையாகும். அன்றி எவர்கள் அவன் அழைப்புக்கு பதில் கூறவில்லையோ அது அவர்களுக்கு (க் கேடாகும் ஏனென்றால்) பூமியில் உள்ள பொருள்கள்யாவும் சொந்தமாக இருந்து, அத்துடன் அதனைப் போன்றதொரு பாகமும் (அவர்களிடம்) இருந்தால், (மறுமையில் அவர்களுக்குக்கிடைக்கக்    கூடிய வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்ள) இவை யாவையும் தங்களுக்குப்   பிரதியாகக்   கொடுத்து   விடவே        விரும்புவார்கள்.   (எனினும், அது ஆகாத காரியம்; அன்றி) அவர்களிடம் மிகக்   கடினமானவே கேள்விக்கணக்குக் கேட்கப்படும். அவர்கள் தங்குமிடம் நரகந்தான்; அது மிகக் கெட்ட புகலிடம்”.  (13:18)

“”உம் இறைவனால் உமக்கு அருளப்பட்ட (வேதத்)தை (அது) உண்மைதான் என்று உறுதியாக நம்புபவன் (பார்வையிழந்த) கபோதிக் கொப்பாவானா? (ஆக மாட்டான்) நிச்சயமாக (இதனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுபவரெல்லாம் அறிவுடையகோர்தாம்.”(13:19)

குர்ஆனை, பட்டுறையில்  இட்டு, முடிச்சும் போட்டு கைக்கெட்டாத   உயரத்தில் வீட்டில் வைத்து (பூஜை செய்யாத குறையாக) பயபக்தியுடன் அதனை மதிப்பதாக சொன்னவர்களே, இன்று, மொழி பெயர்ப்புடன் கூடிய குர்ஆனையும் (பொருளை உணர்ந்து அமல் செய்யாமல்) அதே பயபக்தியுடன் முடிச்சுப் போட்டு வைத்து விட்டார்கள். என்னே கொடுமை!

உணர்வற்ற பிண்டங்களாகிய இவர்கள் இறுதிவரை உணரப்போவதில்லையோ?

இத்திருமறையைப் பற்றி அல்லாஹ்வே திருக்குர்ஆனில் கூறியுள்ளான்;

“”(மனிதர்கள் சிந்தித்து ஆராய்ந்து)நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு இ(ந்த)த்   திருக்குர்ஆனைநிச்சயமாக நாம் மிக்க எளிதாக்கியிருக்கிறோம். ஆகவே (இதனைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறுவோர் எவரும் உண்டோ?”  (54:17)

மேலும், (நபியே! நாம் உம்மீது அருளியிருக்கும் இவ்வேதம் மிக்க பாக்கியம் உடையதாகும். அறிவுடையோர் இதன் வசனங்களைச்சிந்தித்து, ஆராய்ந்து நல்லுணர்ச்சி பெறுவார்களாக!”  (38:29)

“ஓதப்பட்டது?ஓதக்கூடியது?ஓத வேண்டியது’ என்னும் பொருள் கொண்டது “குர்ஆன்’ என்னும் சொல்!

மனித   சமுதாயம்   மாண்புற  ?  அனைத்துச் செய்திகளையும் மிகத் தெளிவாகவே உரைக்கின்றது திருக்குர்ஆன்,   எனவே மனித சமுதாயம்   முழுமையும்   தங்கள்   இதயங்களை   குர்ஆனின் பக்கம் திருப்பி விட்டால் உலகம் அமைதிப் பூங்காவாக மாறிவிடும் அப்போதுதான், உலகம் உய்யும்! முஸ்லிம்களாகிய நாம் பின்பற்றவேண்டிய வேதம் என்ன சொல்கின்றது என்பதை ஒவ்வொருவரும்அறியத் தலைப்பட்டால் உண்மையை நன்கறிந்து கொள்வது திண்ணம் !

மாறாக, இஸ்லாமிய நூல்கள்   என்று   ஆயிரம்   வந்தாலும்   ஆகா; அது ஆதாரமும், உண்மையையும், அடிப்படை இஸ்லாமிய நெறியையும் அறிந்து கொள்வதற்கு   மாறாக   தவறான   மனித   அபிப்பிராயங்களையும், யூகங்களையும் மார்க்கமாக எண்ணி, கண்டதே காட்சி?கொண்டதே கோலமென்று அலைந்து திரிந்து, இறைவனுக்கு முற்றிலும் இணைவைத்து வாழுபவர்களைப் போலத்தான் வாழ வேண்டி வரும் இந்நிலை,  முஸ்லிம்களாகப் பிறந்த ஒவ்வொரு ஆண்?பெண்ணுக்கும் ஏற்படாதிருக்க, திருக்குர்ஆன் திருவசனங்களையும்?நம்பகமான   நபிமொழிகளையும்   மனதில்   நிலை   நிறுத்துச்   செயல்பட   வேண்டும்!    அப்போது   தான் உண்மையிலேயே நாம் திருக்குர்ஆன்? நபிமொழிகளைப் பின்பற்றி வாழுகின்றோம் என்பது பொருந்தும்.

இறந்த போனவர்களுக்கு ஓதும் மந்திரமாக   நாம்   குர்ஆனை   ஆக்கி விட்டோம்; பேய்?பிசாசு?பில்லி? சூனியம்   என்று தாயத்து  ?பீங்கான்?பனை ஓலைகளில் எழுதி வியாதியஸ்தர்களுக்குத் கொடுத்து, பணத்தைப் பெறுவதற்காக உள்ளதன்று இறைமறை!

“”(நபியே! முன்னுள்ள வேதங்களைப்) பலவாறாறகப் பிரித்தோர் மீது, முன்னர் நாம் (வேதனை) இறக்கியவாறே, இந்தக் குர்ஆனை பலவாறாகப் பிரிப்போர் மீதும் (வேதனையை இறக்கி வைப்போம்)”  (15:90, 91)

“” இதற்கு    முன்னும்    சரி,   இதற்குப்    பின்னும்    சரி  (திருக்குர் ஆனாகிய)   இதனை   பொய்   (அணுகவே)  அணுகாது.    மிக்க   புகழுக்குரியவனும், ஞானம் உடையவனுமால் (இது) இறக்கப்பட்டது.” (41:42)

இஸ்லாமிய இனிய சகோதரர்களே! ஏகத்துவமே இஸ்லாம்; அல்லாஹ் ஒருவன்!  அவனை ஒருமைப்படுத்துவதன்   மூலம்   தான்   நமக்கு நற்கதி உண்டு; அந்த ஏகனுடைய பேரருளை முழுமையாக நாம் பெற வேண்டுமானால், அவனுடைய திருமறையை ஏற்று?அதன்படி அமல் செய்ய வேண்டும்;   அவனுடைய   உயர்வான   திருத்துதர்   முஹம்மது   (ஸல்?அம்)   அவர்களின் விளக்கமான வாழ்க்கை வழிமுறையைப் பின்பற்றி நடக்க வேண்டும். இவ்விரண்டைத் தவிர வேறுவழி நமக்கில்லை!

யா அல்லாஹ்! உனக்கு இணைவைக்காத நற்பண்புள்ளோர் குழுவில் எங்களைச் சேர்த்து உன்னருளைப் பொழிவாயாக! (இன்ஷா அல்லாஹ் வளரும்)

——————————————————————————————————————-

பையத்தா? மையத்தா?

எம். ஜாகிர் அஹமத்

தெள்ளத்     தெளிவான    குர் ஆனுக்கும், நபி(ஸல்)    அவர்களின்    நடைமுறைகளுக்கும்   முரணாக   மார்க்கத்தின்   பெயரால்  முஸ்லிம்களிடையே      பீர்?முரீது    வியாபராம்    நடந்து வருகிறது. அந்த வியாபாரத்தில் இரகசியம்! இரகசியம்! என்று சொல்லியே மக்களை ஏமாற்றி வருகிறார்கள். அந்த இரகசியம்   என்ன?    என்பதை    இந்தச்    சம்பவம்    அம்பலப்படுத்துக்கிறது. யாரையும் கேவலப்படுத்தும் நோக்கத்துடன் அல்ல.மக்களுக்கு சத்திய மார்க்கத்தை உணர்த்த இக்கட்டுரை இடம் பெறுகிறது.  ? ஆசிரியர்.

எனது    மாமா    வீட்டிற்கு    எதிர்    வீட்டில்    உள்ள பெரியவர் ஒருவர் முரீது பெற்றுள்ளார் எனத் தெரிந்து அவரைச் சந்தித்து முரீது பெற்றுள்ளதைப் பற்றி விசாரித்தேன்.

அப்பொழுது     அவர்    சொன்னதாவது    “”தம்பி,    நான்    தற்போது கலவைக்கு 1 கி.மீ. முன்னுள்ள அகரம் என்னும் காலனியில் குடியிருக்கும் ஷைகு அப்துல் கரீம் காதிரி என்பவரிடம்    முரீது    பெற்றேன்.   எனக்கு ஒரு வருடம் முன்பே என் மூத்த மகன் முரீது வாங்கினான் நான் என் மகனிடம் ஷைகு என்ன சொல்லி கொடுத்தார் என கேட்டேன். அப்பொழுது என் மகன் எனக்கு ஷைகு ஒரு கலிமாவை கற்று கொடுத்தார். ஆனால் அதனை யாரிடமும் சொல்லக்கூடாது. மீறி சொன்னால் நெஞ்சு வலியுடன் இறக்க நேரிடும்இந்த   கலிமாவை அந்த ஷைகிடம் முரீது பெற்ற பீர்பாய்களிடம மட்டும்தான் சொல்ல அனுமதி உள்ளது என மகன் சொன்னான். இதைக்கேட்டு   எனக்கு   தன்னை அறியாத ஒரு ஞானத்துடன் அவரிடம் சென்று முரீது பெற்றேன். அவ்வாறே ஷைகு கலிமாவை சொல்லிக் கொடுத்தார் அதனை யாரிடமும் சொல்லக் கூடாது என தடைவிதித்தார்.

முரீது பெறுவதற்கு நீ    தயாரெனில்  சொல் போகலாம்.  என என்னிடம் கேட்டார். ஆனால் ஷைகிடம் நீ ஸலாம் சொல்லக்கூடாது ஆதாப் எனச்  சொல்ல வேண்டும். அவரிடம் முஸாபா  செய்யும்போது அவருடைய கட்டை விரலுடன் உன்னுடைய கட்டை விரலை சேர்த்து முஸாபா   செய்ய   வேண்டும். ஷைகு   உட்கார்ந்திருந்தால் அவருடைய மடியில் உன் தலையை சாய்த்து முஸாபா செய்ய வேண்டும். இது என்னுடைய ஷைகு கற்றுத்   தந்தது என பெரியவர் கூறினார். அதன்பிறகு நான் அந்த பெரியவரிடம் கேட்ட சில     கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் கீழ்வருமாறு :

1. நான் : பைஅத் என்றால் என்ன?
பெரியவர்: பைஅத் என்றால் மைய்யத் ஆகிவிடுதல்.

2.நான்: உங்கள் தரீக்கா எது?
பெரியவர்: காதிரிய்யா தரீக்கா

3. நான் : உங்களுக்கு ஷைகு சொல்லிக் கொடுத்த திக்ருகள் யாவை?
பெரியவர்: ஒரே   கலிமா   தான். அதை   நாவால்   சொல்லக்   கூடாது அதனை உள்ளத்தால் மட்டும் சொல்ல வேண்டும். ஆனால் அதனை யாரிடமும் சொல்ல மாட்டோம்.

4. நான்: தொழுகை பற்றி வலியுறுத்திச் சொன்னாரா?
பெரியவர் : நீங்கள் வியாபாரம் செய்வதால் ஜூம்மா மட்டும் தவறாமல் போகவும்.

5. நான்: ஒரு நாளைக்கு 5 வேளைத் தொழுகை கட்டாயக் கடமையாயிற்றே.
பெரியவர் : நாங்கள் மஃரிபத்தில் ஆகிவிட்டவர்கள்.

இதற்கு பிறகு அந்த பெரியவரிடம் நான் தங்கள் ஷைகை காணவேண்டும் வருகிறீர்களா? என்றேன். பெரியவர் சம்மதித்து என்னைஷைகிடம் அழைத்துப் போனார். ஷைகு வெளியே சென்று இருந்தார். வீட்டில் அவரின் மனைவி பொறுங்கள், அவர் வந்து விடுவார்எனக்கூறினார். சிறிது  நேரத்தில்    ஷைகு    வந்தார்.    அப்பொழுது ஷைகிடம் நான் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் சொன்ன பதில்களும் கீழ்வருமாறு:

1. நான் : உங்கள் தரீக்கா எது?
ஷைகு : காதரிய்யா.

2. நான் : தரீக்காவை ஆரம்பித்தவர் ?
ஷைகு : முஹியத்தீன் அப்துல் காதிர் ஜிலானி(ரஹ்)

3. நான் : தாங்கள் கற்றுக் கொடுக்கும் கலிமா எது?
ஷைகு : அதை முரீது வாங்குபவனுக்கு மட்டும் சொல்ல வேண்டும்.

4. நான் : கலிமா “” லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லா” தானே; அதை மறைக்க வேண்டிய அவசியம் என்ன?
ஷைகு : நான்    கற்றுக்    கொடுப்பது   மஃரிபத்   கலிமா அதை இதயத்தால் மட்டும் தியானிக்க வேண்டும். ஏனெனில் வாய் பொய் சொல்லுகிறது ஹராம் சாப்பிடுகிறது. எனவே வாயால் தியானிக்க கூடாது.

5. நான் : மனதில் தியானம் நிலை பெறுவது கடினமாயிற்றே.
ஷைகு : அதனை மனதில் படிய வைப்பதே ஷைகின் கடமை

6. நான் : தங்கள் முரீது தொழுவதில்லையே?
ஷைகு : அதை அவரிடம் கேளும்

7. நான் : நீங்கள் தொழுவதில்லையே?
ஷைகு:   பைத்தியமே,   தொழுது   எவன்   வலியானான்? தொழுகையை விட திக்ரு  தான்   மேலானது.   திக்ரு   செய்பவன்   தான் வலியவாடன். பானிப்பட்டில் ஒரு வலி (பெயர் மறந்து விட்டேன்) அவர் தொழுகை இல்லாமலேயே வலி ஆனார்.

8. நான் : அல்லாஹ் குர்ஆனில் தொழுபவர்கள் தான் மூமின்கள் என்று சொல்கிறானே?
ஷைகு : குர்ஆன் என்ன உனக்காகவா இறக்கப்பட்டது? உன் மீதா வஹீ வந்தது?   இல்லையே!   அது   நபிகள் (ஸல்) மீது தானே இறக்கி வைக்கப்பட்டது. எனவே அந்த வஸீயத்துகள் எல்லாம் அவருக்கே.

ஷைகு : நீ இவ்வாறு எல்லாம் குறுக்குக் கேள்விகள் கேட்கிறாயே! நீ சொல், குர்ஆனில் “”தன் ஆன்மாவை   அறிந்தவன்   தன்       இறைவனை அறிவான்” என்று இருக்கிறதே. (இப்படி குர்ஆனில் இல்லை) இதில் சொல்லப்பட்டிருப்பது படி ஆன்மாவை எவ்வாறு அறிவது?    தொழுகையிலா?    இல்லை.   நான்   சொல்லும்   முழு   கலிமாவால்   தான்.  நீங்கள் சொல்வது அரை கலிமா. இந்த இந்தியாவிலேயே முழு கலிமாவை சொல்லி ஈடேற்றம் செய்பவன் நானும், என் பீர்பாய்களும் தான்.

9. நான் : மார்க்கத்தில் ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமை கண்டால் ஸலாம்  சொல்லுங்கள்.   எனச்   சொல்லி    இருக்கையில்   தாங்கள் மட்டும் “”ஆதாப்” என்று சொல்கிறீர்களே! இது மார்க்கத்தை நிராகரிப்பதல்லவா?

ஷைகு : மார்க்கத்தில் சொல்லியிருப்பது    முஸ்லிம்களுக்கு தான் மூமீன்களுக்கு இல்லை.  நான்   மூமின்   ஆகவே ஸலாமை விட மேலான ஆதாப் எனச்சொல்லுகிறேன்.

நான் இந்த ஷைகின் உல்ட்டா?சீதா பேச்சுகளைக்  கேட்டு  இனி இவரிடம் எதைப் பற்றியும் சொல்லிப் பயனில்லை. நான் முஸ்லிம் என்கிறார். சற்று நேரத்தில் மூமின் என்கிறார். குர்ஆன் ஹதீஸ்படி நடக்க வேண்டும் என்கிறார். சற்று நேரத்தில் குர்ஆன் உன்மீதா இறக்கப்பட்டது என்கிறார். எனவே அவர் சொல்வதெல்லாம்   சரி   எனச்   சொல்லவே, பையன்    நம்  வழிக்கு வந்து விட்டான் என நினைத்து, கீழ்க்கண்ட நூதனமான ´ர்க்குகளைச் சொன்னார்.

ஷைகு: நமது நபிகள் நாயகன் பிறக்கும்போது அல்லாஹ்   என்ற   சொல்லே கிடையாது ரஸுலுல்லாஹ்வுக்கு முன்னால் இருந்த நபிகள் காலத்தில் எல்லாம் அல்லாஹ்வை குதா, ரப் எனத்தான் அழைத்தார்கள்.   பிறகு   தான்   நபிகள்   பிறந்த 40-வது வயதில் “”அல்லாஹ்” என்பதை உலகுக்கு அறிவித்தார்கள் இப்பொழுது நீ சொல், நாற்பது ஆண்டுகளுக்கு முன்   பிறந்த   முஹம்மத்  பெரியவரா? அல்லது “” அல்லாஹ் ” பெரியவனா?

பெரியவர்: ஷைகே நீங்கள் உண்மையான ஷைகு ஆஹா; என்ன மஃரிபத்! என்ன மஃரிபத்!

ஷைகு: ஷைத்தானானவன் இவ்வுலகத்தில் ஸஜ்தா செய்யாத இடம் ஊசி முனை அவ்வளவு கூட இல்லை. அப்படிப்பட்டவனையே அல்லாஹ் “”ஷைத்தான்” என்று பட்டம் சூட்டி  வெளியே தள்ளினான் எனில், நீயும் ஸஜ்தா செய்து தொழுது வந்தால் உனக்கு என்ன பெயர் சூட்டுவான்?

ஷைகு:   அல்லாஹ்   மனிதனை   சோதிப்பதற்கு   ஷைத்தானை   படைத்தான்   ஆனால், ஷைத்தானை சோதிப்பதற்கு யாரையும் படைக்கவில்லை. இதிலிருந்து அல்லாஹ் ஷைத்தானை நம்புகிறான். ஆனால் எங்களை நம்பவில்லை இல்லையா?

இப்படிப் பேசிய இந்த ஷைக்கு  வேலூரில்   மட்டும்   60க்கும்   மேற்பட்ட   முரீதுகள்.    இவரைப்போல் கிளை கலீபாக்கள் விஷாரம்,வாணியம்பாடி மற்றும் பல  இடங்களில் இருக்கிறார்களாம். இப்படிப்பட்ட ஷைகுகளிடம் சிக்குபவர்கள் பெரும்பாலும் கல்வி அறிவு இல்லாதவர்களே. எனவே அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. இப்படிப்பட்ட ஷைகுகள் மலிந்தால் உண்மையான கலிமாவைச் சொல்பவர்கள்   இல்லாமல்   போய்விடும். இதை எல்லாம்   எடுத்துச்   சொல்ல   பெரும்பாலான   மவ்லவிகள் முன்வருவதில்லை. இவர்கள் தான் மார்க்கத்திற்குச் சொந்தக்காரர்களாம்.

மவ்லவிகளை நம்பிச் செயல்படாமல், நபி(ஸல்) அவர்கள்   காலத்தில்   இருந்தது   போல், சாதாரண மக்களும் குர்ஆன், ஹதீஸை நேரடியாக விளங்கிச் செயல்பட முன் வந்தால் அன்றி, இப்படிப்பட்ட வே­தாரிகளின்  வே­ம் கலையப் போவதில்லை. நபி(ஸல்) அவர்களின் காலத்து நிலையை உருவாக்கப் பாடுபடுவோம்.

——————————————————————————————————————-

கருவளர்ச்சி பற்றிய ஆய்வுக் கட்டுரை :

அன்றே கூறியது அருள்மறை குர்ஆன்!

தமிழில் : பேராசிரியர் தாஜூத்தீன் னி.பு.,

கனடா நாட்டில்   இருக்கும்   டொரண்டோ (வீrலிஐமிலி) நகரில் வாழும் மிகப் புகழ் பெற்ற கருவளர்ச்சி நிபுணர் டாக்டர்  “கெய்த்  எல்.  மூர்’ (ம்r.லுeஷ்மிஜுஸி.னிலிலிre) என்பவர் நயாகரா நீர்வீழச்சிப் பகுதியில் நடை பெற்ற   இஸ்லாமிய   மருத்துவர் சபையின் 18-வது   ஆண்டுக் கூட்டத்தில் ஓர் உரை நிகழ்த்தினார். அந்த உரையில் டாக்டர் மூர், மனிதக் கரு வளர்ச்சி பற்றிப் பேசக் கூடிய புனித திருக்குர் ஆனின்வசனங்களை   விளக்கினார்.   “”திருமறை   நெடுகிலும்   மனித   வளர்ச்சி   மற்றும்   இனப்பெருக்கத்தைப்   பற்றிய   வசனங்கள்    காணக் கிடைக்கின்றன” என அப்போது குறிப்பிட்டார் சமீப காலமாகத்தான் திருமறையின் ஒரு சில திரு வசனங்களின் பொருள்    முழுமையாக விளங்கி கொள்ளப்பட்டுள்ளன என்றார். அவர் தனது ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வசனங்களையும், அவர் தரும் விஞ்ஞான விளக்கத்தையும் காண்போம்.

உங்கள் தாய்மார்களின் வயிறுகளில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களைப் படைக்கிறான். அவனேஅல்லாஹ்! உங்களுடைய   இறைவன்!   அவனுக்கே   ஆட்சி   அதிகாரம்  (முழுதும் உரித்தாகும்). அவனைத் தவிர வேறு நாயன் இல்லை! அவ்வாறிருக்க (அவனை விட்டும்) நீங்கள் எப்படித் திருப்பப்படுகிறீர்கள்?   (அல்குர்ஆன் 39:6)

கருப்பையில் உள்ள சிசுவைப் பற்றிய முதல் படம் கி.பி. 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த “லியனார்டோ டாவின்ஸி’ (ஸிeஐலிழிrdலிdழிஸஷ்ஐஉஜுஷ்)என்ற    இத்தாலியரால்    வரையப்பட்டது.   கி.பி.   இரண்டாம்   நூற்றாண்டில்   வாழ்ந்த   கேலன்   (றூழியிeஐ) என்பவர்   தன்னுடைய    “கருஉருவாகுதல்,   என்ற   நூலில்   “பிளசென்டர்’ (Pயிழிஉeஐமிழி) என்ற மாவைப்பற்றியும், கருவை மூடி இருக்கும் மெல்லிய சவ்வைப் பற்றியும் விளக்கியிருந்தார்.”” மனிதக்கரு கருப்பையில் வளர்ந்தது என்பது பற்றி கி.பி.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த மருத்துவர்கள் அறிந்திருந்தனர்” என்பதற்கான சாத்தியக்கூறே கிடையாது.(7-ம் நூற்றாண்டில்தான்குர்ஆன் அருளப்பட்டது) அப்படி இருக்கையில்குர்ஆன் இறங்கி, மனிதருக்கரு வளர்ச்சி பற்றிகூறக்கூடிய காலத்தில்வாழ்ந்த மருத்துவர்கள் மனிதக் கரு படிப்படியாக வளர்ச்சியடைந்தது என்பதை அறிந்திருக்க சாத்தியமே இல்லை! இன்னும் சொல்லப் போனால் கி.பி  15-ம்நூற்றாண்டு   வரை “”மனிதக்கரு படிப்படியாக வளர்ச்சியடைகிறது”   என்பதைப் பற்றி எவரும் பேசவோ, நிரூபிக்கவோ இல்லை!

கி.பி 16-ம்நூற்றாண்டுக்குப் பிறகு “மைக்ரோஸ் கோப்’ என்றபெரிதுபடுத்திக்காட்டும் கருவி “லிவன் ஹுக்’ (ஸிeeழeஐஜுலிலிவ)  என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தான் கோழிக் கருவின் ஆரம்ப நிலைகள் பற்றிய விளக்கங்கள் கிடைக்க ஆரம்பித்தன.       அப்போது கூட மனிதக்கரு வளர்ச்சி பற்றி எவரும் விளக்கிடவில்லை!

கி.பி. 20-ஆம்    நூற்றாண்டில்   ஸ்ட்ரீட்டர் (றீமிreeமிer) (1941) என்பவரும், ஒராஹிலி(நு’யூழிஜுஷ்யிதீ) (1972) என்பவரும் முதன் முதல் கரு நிலைகளைப்    பற்றிய   முçறாயன   விளக்கத்தைத்   தந்தனர். அதற்கு முன் எவரும் மனிதக் கரு வளர்ச்சி பற்றிய     நிலைகளை விளக்க இயலவில்லை! ஆனால் திருக்குர்ஆன்   ஏழாம்   நூற்றாண்டிலேயே மிகத்துள்ளியமாக இந்த உண்மைகளைவிளக்கி இறை மறை என்பதற்குச் சான்றாகத் திகழ்கின்றது.

இப்போது மேற்கூறிய திருக்குர்ஆன்   வசனத்தைப்   பாருங்கள்! அதில் “”ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து, வயிற்றுச்சுவர், கருப்கையின் சுவர், கருவின் மீது போர்த்தி இருக்கும் மெல்லிய சவ்வு ஆகிய மூன்று இருள்களுக்குள் மனிதனை வைத்துப் படைத்ததை அல்லாஹ் அழகாக விளக்குகிறான்.

பின்னர்   நாம்   (மனிதனைப் படைப்பதற்காக) அவனைப்   பாதுகாப்பான ஒரு இடத்தில் வைத்தோம்! பின்னர் அந்த (கலக்கப்பட்ட) இந்திரியத்    துளியை “அலக்’   என்ற நிலையில்   ஆக்கினோம்! பின்னர் “அலக்’ என்பதை ஒரு தசைக் பிண்டமாக்கினோம்! பின்னர்அந்தத் தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் அக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்! பின்னர் நாம் அதனை வேறு படைப்பாக (மனிதனாக)ச் செய்தோம்! (இவ்வாறு படைத்தவனாகிய, அல்லாஹ்  பெரும்  பாக்கிய முடையவன். (படைப் பாளர்களிலெல்லாம்) மிக அழகான படைப்பாளன். (அல்குர்ஆன் 23:13, 14)

“கலப்பான  இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம்’   (அல்குர் ஆன் 76:2)

முதல் வசனத்தில் இந்திரியத்துளியிலிருந்து படைத்ததாகவும், இரண்டாம் வசனத்தில் கலப்பான இந்திரியத்துளியிலிருந்து படைத்ததாகவும் அல்லாஹ் கூறுகிறான் கலப்பான  இந்திரியத்துளி   என்பதன்   பொருளை பல நூற்றாண்டுகளுக்கு முன் வரை மனிதன் அறிந்திருக்கவில்லை.

“”ஆணுடைய   இந்திரியத்துளி   பெண்ணிடம்   தயாராக   உள்ள முட்டையுடன் கலந்து ஸைகாட் (ரீதீஆலிமிe) என்ற கரு உருவாகிறது பின் அது பிரிந்து பிளாஸ்டோஸிஸ்ட் (யயிழிவிமிலிஉதீவிமி) என்ற நுண்ணுயிராக மாறி கருப்பையில்   விதைக்கப்படுகின்றது” என்பதை சமீபகாலத்தில் தான்  மனிதனால் கண்டுபிடிக்க முடிந்தது. இந்தப்பேருண்மையை திருக்குர்ஆன் பல   நூறு   ஆண்டுகளுக்கு  முன்பேதெளிவாக்கிவிட்டது.

மேற்கூறிய 23:14 வசனத்தில்   “அலக்’   என்ற    இரண்டாம் நிலையை மனிதக் கரு அடைவதாகக் கூறப்படுகின்றது. “அல்க’ என்ற சொல்லுக்கு “இரத்தக்கட்டி’ என்றே கடந்த காலங்களில்    பொருள்   செய்யப்பட்டுள்ளது. அந்த வார்த்தைக்கு அப்படி ஒரு பொருள் இருப்பதை   எவரும்   மறுக்க   முடியாது.   ஆனாலும்   மனிதக்குரு   “இரத்தக்கட்டி’  என்ற    நிலையை   அடைவதில்லை  என்பது விஞ்ஞானிகளின் முடிவு. எனினும் “அலக்’ என்ற சொல்லுக்கு வேறு பொருளும் உண்டு என்பதை எவரும் மறுக்க முடியாது. அந்த அடிப்படையில் ஆராயும் போது “அலக்’ என்ற சொல் அட்டைப்பூச்சியையோ, அல்லது இரத்தத்தை  உறிஞ்சக் கூடிய பூச்சியையோ குறிக்கும். இந்தப் பொருள் இன்றைய விஞ்ஞான முடிவுக்கு ஒத்து வருமா என்று பார்ப்போம்.

கலப்பான விந்து துளியாக கருப்பையில் நுழைந்த மனிதக்கரு, அட்டைப்பூச்சி தோலின் மேல் தொற்றிக் கொண்டு தொங்குவதைப்போல் கருப்பையின் உட்சுவரில் தொங்கிக் கொண்டிருக்கும். 7ல் இருந்து 24 நாட்கள் வரை வளர்ச்சி நிலையில் இருக்கும் மனிதக் கருவைக் குறிக்க இதை விடச் சிறந்த வார்த்தை இருக்க முடியாது அட்டைப்பூச்சி தனக்கு வேண்டிய “சத்தை’ ஒட்டிக் கொண்டிருக்கும்பிராணியிலிருந்து எவ்வாறு உறிஞ்சிக் கொள்கிறதோ   அவ்வாறே   மனிதக்   கருவும்   தனக்கு, வேண்டிய சந்தை கர்ப்பப்பையில் ஒட்டிக்கொண்டு அங்கிருந்து உறிஞ்சிக் கொள்கிறது. மனிதக் கருவின் இரண்டாம் நிலையை   அட்டைப்   பூச்சிக்கு   ஒப்பிட்டது மிகப்பொருத்தமே!

7ல் இருந்து 24 நாட்கள் வரை உள்ள மனிதக் கருவை உபகரணங்களின் உதவியால் பெரிதாக்கிப் பார்த்தால் அது ஒரு அட்டைப்பூச்சியின் வடிவிலிருப்பது ஆச்சிரியகரமானது. மைக்ராஸ்   கோப்   போன்ற   எந்தக் கருவிகளும் இல்லாத 7-ஆம் நூற்றாண்டில் மனிதக்கரு அட்டைப்பூச்சியைப் போலிருக்கிறது என்ற கருத்து எந்த மனித அறிவிலிருந்து பிறந்திருக்க முடியாது.

அதே 23:14 வசனம் “அலக்’ என்ற நிலையிலிருந்து தசைக்கட்டியாக மாறுவதாகக் குறிப்பிடுகின்றது. அதில் தசைக்கட்டி என்பதைக் குறிக்க “முழ்கத்’   என்ற   சொல்   பயன்படுத்தப்பட்டுள்ளது.   இந்தச்   சொல்லுக்கு “”மெல்லப்பட்ட சதைத்துண்டு” என்பது பொருள் இப்போது இது பற்றி விஞ்ஞானிகளின் முடிவைக்காண்போம்!

கரு   உண்டான   நான்காவது   மாத   இறுதியில்   “கரு’   ஏறத்தாழ   மெல்லப்பட்ட   சதைத்துண்டைப் போல் தோற்றமளிக்கின்றது. தலைப்பகுதி, மார்பு, வயிறு, கால்கள் இவை எல்லாம் பிரிக்கப்பட்டு வளர்வதற்கு   முன்னால் இவற்றின் சுவடு கருவில்  உருவாக ஆரம்பிக்கும்.அந்தச் சுவடுகள் தான் பல்லால் சதைத் துண்டை மென்றால் ஏற்படும் பற்குறிகளைப் போன்ற தோற்றத்தை அந்தக் கருவிற்கு ஏற்படுத்திவிடுகின்றது.

கரு   வளர்ச்சியில்   மூன்று   அடுக்குகளாக   உறுப்புக்கள் உருவாகின்றன. எக்டோ டெர்ம்(சிஉமிலிderது) என்ற மேல் அடுக்கிலிருந்து தோல் பகுதிகளும், நரம்பு மண்டலமும் மற்றும்   தனிப்பட்ட உணர்வுகளை அறியக்கூடிய இன்ன பிற உறுப்புகளும், சுரப்பிகளும் உருவாகின்றன.

என்டோ டெர்ம் (சிஐdலிderது)  என்ற கீழ் அடுக்கில் இருந்து   உட்புற செல், திசு அடுக்கு உண்டாகின்றது. மெஸோடெர்ம் (னிeவிலிderது) என்னும் மத்திய அடுக்கிலிருந்து தான் மென்மையான   எலும்பு முதலில் உருவாக்கப்பட்டு அதன் மீது சதை போர்த்தப்படுகின்றது. எட்டாவது வாரத்தை அடையும்   வரை   பல்வேறு   வளர்ச்சி   மாற்றங்களையும், நிலைகளையும் கடந்து கரு மற்ற பிராணிகளைப் போன்றிருக்கின்றது. எட்டாவது   வாரத்தை   ஒட்டித்தான்   அந்தக்கரு  மனிதப்பண்புகளை   அடைகின்றது. இந்த பேருண்மையை மேற்க்கூறிய திருவசனம் 28:14 எவ்வளவு தெளிவாக விளக்கிவிடுகின்றது!?

மனிதர்களே! இறுதித் தீர்ப்புக்காக நீங்கள் மீண்டும் எழுப்பிப்படுவது பற்றி  சந்தேகத்தில் இருந்தால் அறிந்து கொள்ளுங்கள்! நாம் நிச்சயமாக உங்களை   (முதலில்)   மண்ணிலிருந்தும்.   பின்னர்   இந்திரியத்திலிருந்தும், பின்பு இரத்தக் கட்டியிலிருந்தும் பின்பு   உருவாக்கப்பட்டதும் உருவாக்கப்படாததுமான சதைக் கட்டியிலிருந்தும் படைத்தோம் (அல்குர் ஆன்22:5)

இந்த வசனத்தில்(பகுதி) உருவாக்கப்பட்டதும் (பகுதி) உருவாக்கப்படாததுமான சதைக்கட்டி என்று கூறப்படுகின்றது. இதன் பொருள் என்ன? இப்படி   ஒரு   நிலை   கரு   வளர்ச்சியில்   உண்டா   என்று   ஆராய்ந்தால்   நாம் வியப்படையும் பேருண்மைதான் நமக்கு வெளிப்படுகின்றது.

பகுதி உருவான, பகுதி உருவாகாத என்பது, வித்தியாசப்படுத்த முடிகின்ற? வித்தயாசப்படுத்த முடியாத திசுக்களைக் குறிக்கும். இந்தஇரண்டு நிலைகளும் கருவளர்ச்சியில்   இருப்பதை   விஞ்ஞானம் தெளிவாக  ஒப்புக்கொள்கின்றது. மென்மையான எலும்புகளும் கெட்டியான எலும்புகளும் உருவாக்கப்படும்  போது    பகுதி    உருவான    இணைப்புத்   திசுக்களையும்,   அவற்றைச் சுற்றியுள்ள   பகுதிகளையும்     பிரித்தறிய     முடியாது.    இன்னும்    சிறிது   காலம்    சென்ற   பின்    அவை   தசைப்பகுதியாகவும், எலும்புடன் ஒட்டிக்கொண்டிருக்கும் நார்போன்ற    இணைப்புத்    தசையாகவும்    பிரித்துவிடுகின்றது. இதைத்தான் 22:5 வசனம் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.

கேட்கும், பார்க்கும், மற்றும் தொடு உணர்ச்சிகள் திருக்குர்ஆனின் 32:9 வசனத்தில்சொல்லப்பட்டிருக்கும் அதேவரிசைக்கிராமத்தில்தான் உருவாகின்றன என்பது அதைவிட ஆச்சிரியமானதே! பகுத்து புரியச்செய்யும்மூளை உருவாவதற்குமுன்பு உள்செவி மற்றும்கண்களின்   ஆரம்பச்சுவடுகள்  தோன்றுகின்றன. திருமறைக்குர்ஆன்  இந்தப் பேருண்மைகளை ஐயத்திற்கிடமின்றி தெளிவாக்குகின்றது.

22:5 வசனத்தில் எந்தக்கருக்கள் கர்ப்பப்பையில் முழுமையான   காலம்   தங்கி   இருக்கும்   என்பதை   இறைவன்   ஒருவனே      நிர்ணயிக்கிறான் என்ற கருத்தை இந்தத் திருவசனம் உணர்த்துகின்றது.

அனேக கருக்கள் முதல் மாத வளர்ச்சியின் போதே சிதைந்துவிடுகின்றன என்பது அனைவரும் அறிந்ததே! சுமார் 80% கருக்கள் தான் சிசுவாகி பிறக்கும் வரை உயிருடன் இருக்கின்றன.

ஏழாம்நூற்றாண்டில் மக்கள் பெற்றிருந்த மருத்துவஅறிவைக்கொண்டும் மேற்குறிப்பிட்டுள்ள மனித வளர்ச்சி பற்றிய திருவசனங்களின் பொருளை முழுமையாக உணரமுடியாது. கரு வளர்ச்சியைப் பற்றிய ஆழ்ந்த விளக்கம்நமக்கேகடந்த 50ஆண்டுகளில்தான்…அதுவும் மைக்ராஸ்கோப் போன்ற பல விஞ்ஞான கண்டுபிடிப்புக்களுக்குப்பிறகுதான்கிடைத்துள்ளது..இதற்கெல்லாம்முன்பே    ஏழாம் நூற்றாண்டிலேயே இந்த உண்மையைத் தெளிவாகவிளக்க குர்ஆன், இறைமறை என்பதை நிரூபித்துக்கொண்டுள்ளது.

ஆதாரம் : The Muslim World League Journal May—June1987

——————————————————————————————–

கற்றோருக்கிடையே கருத்து வேறுபாடுகள்

முஹிப்புல் இஸ்லாம்

“”எவர்களுக்குத் தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும் பிளவுண்டு பிரிந்து போனார்களோ அவர்களைப் போன்று நீங்களும் ஆகி விட வேண்டாம் …….. அவர்களுக்கே தாம் மகத்தான வேதனையுண்டு…” (அல்குர்ஆன் : 3:105)

தூய இஸ்லாத்தைக்     கருத்து   வேறுபாட்டுத்   தீயிலிட்டுப்    பொசுக்கும்   திருப்பணியைத்   தொடர்ந்து வரும் மார்க்கம்  கற்றோரே  (ஆலிம்களே)..!நீங்கள் கற்றது உண்மையான இஸ்லாமிய கல்வி யயன்றால் உங்களிடம் ஏனித்தனை வன்மம்..? மற்றவர்களுக்குப்பிரச்சனை யேற்றபட்டால் தீர்த்து வைக்கும் பொறுப்பேற்ற நீங்கள் இன்று சமுதாயத்திற்குப் பெரும் பிரச்சனையாகி விட்டீர்களே….

அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடித்து   சமுதாயத்தை ஒற்றுமைப் படுத்த வேண்டிய   நீங்கள்! இன்று வேற்றுமையையல்லவா விதைத்துக் கொண்டிருக்கிறீர்கள்!

நீதியின்   அரியாசனத்தை   அலங்கரிக்க   வேண்டியவர்கள்  ?  குற்றவாளிக்   கூண்டிற்கு   விரைந்து கொண்டிருக்கும் கொடுமை உங்களுக்கு இதமாகவா இருக்கிறது? சமுதாயத்தில்   ஒருவர்   கூடவா   இதன்    கடமையை   இன்னும் உணராமலிருக்கிறீர்கள்? உணர்ந்தோர் ஒரு சிலரும்? உணர்த்த முற்படாமல் நமக்கேன் இந்த வீண் வம்பு என்று ஒதுங்கியிருக்கிறீர்களா?

மார்க்கம் கற்றவர்களே…!

சற்று சிந்தியுங்கள்?பொறுமையாக…!

நீங்கள் முட்டி மோதி பிளவுபட்டுக்  கொண்டிருக்கும்   இழுக்கு ?   உங்களோடு   மட்டும்   ஒழியவில்லை.   மாறாக   அந்த   அழுக்கு? இஸ்லாத்தை அசுத்தப்படுத்துவதை நீங்கள் அறியவில்லையா?

நீங்கள் கற்றது உண்மையில் தீனுல் இஸ்லாம் ஒன்றேயயனில் நீங்கள்  பல்வேறு பிரிவிகளாய் செயல்படுவதேன்?

உங்களுடைய கருத்து வேறுபாடு?சமுதாயத்தை சின்²பின்ன மாக்கிக் கொண்டிருப்பதும் நீங்கள் அறியாததல்ல.

சமுதாயம்   சிதறினால்  தான்    உங்கள்   பிழைப்பை   வெற்றகிரமாய் தொடர முடியும் என்ற வரட்டு முடிவுக்கு வந்து விட்டீர்களா? அறிஞர்கள் என்ற பட்டயத்திற்கு சொந்தம் கொண்டாடும் நீங்கள் அறிவிலிகளாக மாறிக் கொண்டிருப்பதை அறியவில்லையா?

சிறு?சிறு   சில்லறை   வி­யங்களில் வேறுபட்டாலே சிதறும் சமுதாயத்தை இன்று மூலக் கொள்கைகளில் மோதலையேற்படுத்தி அதிரவைத்துக் கொண்டிருக்கிறீர்களே? நியாயம்தானா?

அறியாத மக்கள் உண்மை புரிய உழைக்க வேண்டிய நீங்கள் அந்த மக்களைக் குழப்பத்திலாழ்த்தி அலைகழிக்கலாமா?

நாங்கள்   மற்றதெல்லாம்   கற்றோம்.   மார்க்கத்தைக்   கற்கவில்லை.   எல்லாருக்கும் பொதுவுடமையாக வேண்டிய இஸ்லாமியக் கல்வியை உங்களுக்கு மட்டும்   தனியுடமையாக்கியது மட்டுமே நாங்கள் செய்த தவறு…! இமாலயத் தவறு! ஒப்புக் கொள்கிறோம்! இப்போது காலம் கடந்தாவது.   அதற்காக   நீங்கள்   அறியாமையில்   மூழ்கிக் கிடக்கும்   அப்பாவி மக்களை உங்கள் மோதலுக்கு பலியாக்கிக் கொண்டிருக்கிறீர்களே!

ஓ! எத்துனை கொடூர தண்டனை!

அன்று! இறைத் தூதர்(ஸல்) அவர்கள் அந்தகாரத்தில் மூழ்கிக்கிடந்த அப்பாவி மக்களுக்கு அறிவொளியல்லவா பாய்ச்சினார்கள் ஆனால் நீங்கள் இன்று!

வேத வாக்கிற்கு முரண்பட்டாலும் உங்கள் வாக்கை வேத வாக்கென்றும்?

நபி வழிக்கு மாற்றமாய் நீங்கள் நடைபோட்டாலும் உங்கள் வழியே நபி வழியயன்றும் அப்பட்டமாய் நம்பும் அப்பாவி மக்கள்!

ஓ..! இந்த சமுதாய மக்களுக்கு உங்கள் மேல் எத்தனை நம்பிக்கை! உறுதியான அசைக்க முடியாத நம்பிக்கை!

?நீங்கள் தவறிழைக்க மாட்டீர்கள்!

?நீங்கள் தவறுரைக்க மாட்டீர்கள்!

உங்களிடம் அல்லாஹ் மேல் ஆணையிட்டுக் கேட்கிறோம்! நீங்கள் இந்த நம்பிக்கைக்கு உரித்தானவர்கள் தானா..?

இல்லை, இல்லை… இல்லவேயில்லை….

உங்கள்    நடவடிக்கைகள்    இந்த   நம்பிக்கையைத்   தகர்த்தெறிந்து   கொண்டிருக்கின்றன.    இதை நீங்கள் நன்கறிந்திருத்தும் அறியாதோர் போல் வாளாவிருக்கின்றீர்களே…!

“”ஏன்   திருடினாய்…   உன்   எஜமானர்   உன்   மேல்   பரிபூரண   நம்பிக்கை    வைத்திருந்த நிலையில்” என்று குற்றவாளிக் கூண்டி லேற்றப்பட்ட திருடனிடம் நீதிபதி வினவியபோது?

“அப்படியயாரு நம்பிக்கை வைத்ததால் தான் என்னால் திருட முடிந்தது’ என்று திருடன் தன் தவறை நியாயப் படுத்திய சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது.

உங்கள்   மேல்   நாங்கள்   காட்டும்   அபரிமித    மரியாதையும், மார்க்கத்தைச் சரியாக உணர்ந்தவர்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும்?

எங்கள் மீது எதையும் திணித்து விடலாம்!

நீங்கள் கூறும் எழுதும் எதையும் எவ்வித மறுப்புமின்றி ஏற்றிடுவோம்! என்ற உறுதி உங்களுக்கு ஏற்பட்டு விட்டது.

மக்கள் அறியாமையால் ஏமாறுகிறார்கள், எப்படி வேண்டுமானாலும் அவர்களை ஏமாற்றலாம்.

காட்டுவோம் கைவரிசையை… என்று மார்க்கம் குறித்து எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம்; எழுதலாம்; விளக்கலாம் என்று மக்களின் நம்பிக்கையைத் துஷ்பிரயோகம் செய்து கொண்டிருக்கிறீர்களே…! நியாயம் தானா?

மார்க்கம் கற்றவர்கள் அனைவரும்?எல்லாவகை விமர்சனங்களுக்கும் அப்பாற்ப்பட்ட?அப்பழுக்கற்றவர்கள், என்ற தப்பான எண்ணத்தை மக்களின் மனதில் பதித்து?நீங்கள்   செய்து   வரும் தவறுகளை வெகு சாமார்த்தியமாக மறைந்து வெற்றிகரமாய் உங்கள் பிழைப்பைத் திட்டமிட்டு நடத்திக் கொண்டு வருகிறீர்கள்.

நீங்கள் இஸ்லாமியக் கொள்கைக் கோட்டையைத் தகர்க்கும் நேரங்களில்?அதைத் தகுந்த ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டினாலும்?எடுத்துக்   காட்டியவரை   எதிரியாகப்    பாவித்து?அவர்   மீது   வீண்பழி   சுமத்தி  மக்கள் முன் குற்றவாளியாக்கி?உங்கள் தவறை நியாயப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்கிறீர்களேயன்றி, தவறை தவறென்றுணர்ந்து திருந்த முன் வருவோர்.

?(அரிதிலும் அரிது.)?விரல் விட்டெண்ணுமளவே…!

“”நீங்கள் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கவும், சத்தியத்தை அசத்தியத்தைக் கொண்டு கலக்கவும் செய்யாதீர்கள்.”
(அல்குர் ஆன்2:42)

ஒன்றே தெய்வம்?அல்லாஹ்…!

ஒன்றே நமது திருவேதம்?அல்குர்ஆன்….!

நமது வழிகாட்டியும் ஒருவரே?இறைத் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் மட்டுமே…!

இவைகள்   உங்கள்   பேச்சிலும்    எழுத்திலும்   முழக்கத்திற்குரிய   தத்துவமாய் மாற்றப்பட்டு விட்டதேயன்றி?இன்று இஸ்லாத்தின் பெயரால் உங்கட்கிடையே எண்ணிலடங்கா கொள்கை வேறுபாடுகள் நாளும் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கின்றன. ஏனிந்த வேறுபாடுகள்…? எப்படி யாரால் இந்த வேறுபாடுகள் எழுகின்றன..? என்று என்றாவது எண்ணிப் பார்த்ததுண்டா?

இஸ்லாமிய கொள்கை கோட்பாடுகளில் ? மார்க்கம் கற்றவருக்கு?மார்க்கம் கற்றவர் மாறுபடுவதேன்….?

ஒரே வி­யத்திற்குப் பல்வேறு மாறுபட்ட?ஒன்றிற்கொன்று முற்றிலும் முரண்பட்ட விளக்கங்கள்?!

ஆளுக்கொரு கொள்கை….!

வேளைக்கொரு ஃபத்வா….!

நாளுக்கொரு கருத்து….!

ஒரே மதரஸாவில் ஒன்றாக ஓதி?ஒன்றாக தஹ்ஸீல் (பட்டம்) ஆகி? அதே மதரஸாவில் ஒன்றாகப்பணி புரியும் இரு பேராசிரியர்கள்…! இஸ்லாமியக்   கொள்கை   சம்மந்தப்பட்ட   எந்த   வி­யமானாலும்  சரி? ஒருமித்த கருத்தைக் கொண்டிருந்ததில்லை. மக்கள் இருவரிடமும் அபிமானம் பூண்டவர்கள்! ஒருவருக்கு இருவரிடம் கேட்டு வி­யத்தை விளங்க வேண்டும் என்ற ஆர்வம் அவர்களுக்கு…!ஒரே வி­யத்திற்கு இருவரும் கொடுக்கும் மாறுபட்ட விளக்கங்கள்..! இருவரும் தத்தமது கூற்றே சரியயன வாதித்து விளக்கம் கேட்க வந்த வரை, அப்பாவியைக் குழப்பத்திலாழ்த்திவிடுவர்.

ஏன்   விளக்கம்   பெற   வந்தோம்…!   விளக்கத்திற்கு   பகரமாய் குழப்பமல்லவா எமக்குப் பரிசாய் கிடைத்திருக்கிறது…! ஏமாற்றம்? இறுதியில் மிஞ்சுவது வேதனை! எதைத்   தெரிய   விழைந்தாலும் குழப்பம் தான்! ஏனிப்படி…? இது விளக்குபவர் குறை என்பதை உணராத மக்கள்? இஸ்லாத்தில்   எதற்கும்   தெளிவில்லை   போல்   தெரிகிறது!     மதரஸாவில் ஓதி பட்டம் பெற்றவர்கள் நிலையே இதுவெனில்?ஒன்றுமறியாத நாம் எப்படி   உண்மையை   உணரமுடியும்…?   குழப்பம்   நிறைந்த வி­யங்களில் ஒளிந்திருக்கும் உண்மையை எந்த அளவு கோலைக் கொண்டு பாகுபடுத்தி? உண்மையை உணர்வது…? நமக்கேன் இந்த வேண்டாத வேலை…? இறைவனருளிய எளிய இனிய மார்க்கம்,   பாமர  மக்கள் முன் பூதகரமாய், கடுமையாய் சிக்கல் நிறைந்தாய் சித்தரிக்கப்படுவதால், மக்கள் மார்க்கத்தை அறிவதிலிருந்து ஓதுங்கிக் கொண்டு வருகிறார்கள்?பல இடங்களில்….

ஒரு ஊரில் நிலை தானிப்படி..! மற்ற ஊர்களில் இந்த நிலையிருக்காது என்று அங்குள்ளோரை அணுகினாலும் எங்கும் இதேநிலைதான் நீடிக்கிறது என்பது மிகவும் வேதனைக்குரிய கசப்பான உண்மை. நாடெங்கிலும் இதே நிலைதான்… இன்றளவும்.

மதரஸாக்களில் வெளியாகும் ஃபத்வாக் (மார்க்கத் தீர்ப்பு)கள்: மவ்லவிகள், மவ்லவிகள் அல்லாதார் வெளியிடும் நூல்கள்; முஸ்லிம்வார மாதமிருமுறை, மாத இதழ்களில் வெளியாகும் கருத்துக்கள்; மேடைகளில் முழக்கம் செய்யப்படும் இஸ்லாமியக் கருத்துக்கள் இவையனைத்தும்    ஒன்றிற்கொன்று   முரணாகவோ   அல்லது   சில்லறை   அபிப்பராய   பேதங்களை உண்டாக்குகிறதேயன்றி ஒருமித்தக்கருத்தை உருவாக்க உதவவில்லை.

இதனால் இன்று நம் சமுதாயத்தில்  பல்வேறு  கொள்ளைப் பிரிவுகள், பல்வேறு பெயர்களில் உருவாகி வருகிறது. ஒரு கொள்கைப் பிரிவார் மற்றொரு கொள்கைப் பிரிவாரை எதிரியாக?விரோதியாக   பாவிக்கும்   சூழ்நிலையும் கருக் கொண்டுள்ளது. ஆங்காங்கே தாக்குதல்களும் நிகழ்ந்துள்ளன. இதற்கெல்லாம் ஒட்டு மொத்தமாய் பலியாகிக்   கொண்டிருப்பது   மார்க்கமறியா   மக்கள் கூட்டம் தான்   மார்க்கம்   கற்றவர்களால்   உருவாக்கப்படும்.    கருத்து   வேறுபாடுகள் தான் இதற்கு முக்கியக் காரணம் என்பதில் மாற்றுக் கருத்திற்கிடமில்லை.

இதைத் தடுத்து நிறுத்த சமுதாயம் முழுமையும் ஒட்டு மொத்தமாய்?  முழு   மூச்சுடன்  ?  போர்க்   கால   அவசரத்துடன் இயங்க முன்வர வேண்டும். குர்ஆன்ஹதீஸை நேரடியாக விளங்கிச் செயல்பட வேண்டும்.

மாற்றான் நமது ­ரீஅத்தில் சிறு மாறுதல் செய்ய முனைந்த போது ஒன்றுபட்டு வெற்றி கண்டது போல?

நமது   மார்க்கம்   கற்றோரே?இஸ்லாத்தின் கொள்கைகளைப் புரட்ட  முனைந்திருக்கும்.   இந்த இக்கட்டடான கால கட்டத்தில்?நாம் இன்னும் அதிவேகத்துடனும், விவேகத்துடனும், செயல்பட்டு?

இறையருளிய இஸ்லாமிய வாழ்க்கை நெறி ஒன்றே… என்று உலகிற்கு உணர்த்துக் கடமைப் பட்டுள்ளோம்.

“”மேலும் நீங்கள்   அனைவரும் அல்லாஹ்வின் கயிற்றைக் கொட்டியாய்ப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் நீங்கள் பிரிந்து விடவும் வேண்டாம்.”   (அல்குர் ஆன் 3:103)

——————————————————————————————–

ஐயமும் தெளிவும்

ஐயம் :  தொழுகையில்   இருக்கும்  போது   ரஸூல்(ஸல்) அவர்களின்   திருநாமம்   கூறப்பட்டால் தொழுகையில் இருப்பவர் சலவாத் தோதலாமா? ஏ.எல். அப்துல் ஸமது, ரியாத், செளதி அரேபியா.

தெளிவு  :  அவ்வாறு  ஸலவாத்   ஓதுவது   கூடாது. இவ்வாறே ஒருவர் தொழுது கொண்டிருக்கும்போது அவருக்கு ஒருவர் ஸலாம் கூறினால் அதற்கு பதில் சொல்லவும் கூடாது.

நாங்கள் நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் இருக்கும்போது அவர்களுக்கு ஸலாம் கூறிக் கொண்டிருந்தோம். அவர்களும் பதில்  சொல்லிக் கொண்டிருந்தார்கள். நஜ்ஜா´ அரசரிடமிருந்து நாங்கள் திரும்பி வந்தபோது நபி(ஸல்) அவர்களுக்கு (தொழுகையில்) ஸலாம்   கூறினோம்.   அதற்கு   அவர்கள்   பதில்   கூறவில்லை.   அப்போது   அல்லாவின்   தூதரே!   தாங்கள்   தொழுகையில்   இருக்கும்போது நாங்கள் ஸலாம் கூறினால் பதில் சொல்லிக் கொண்டிருந்தீர்களே! (இப்போது ஏன் பதில் சொல்வதில்லை?) என்று  கேட்க, அதற்கு அவர்கள் நிச்சயமாக தொழுகையில் (இதல்லாத) வேறு வேலைகள் இருக்கின்றன என்று கூறினார்கள்
(அப்துல்லாஹ்பின் மஸ்ஊத் (ரழி), புகாரீ, முஸ்லிம்)

தொழுகை என்பது,குர்ஆன்ஒதுவது,அல்லாஹ்வை திக்ரு செய்வதுஆகியவைகளுக்கு மட்டுமே உள்ளதாகும். ஆகவே நீர் தொழும்போது உமது வேலை அதுவாகவே இருக்கட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(முஆவியத்துப்னில் ஹக்கம்(ரழி), அபூதாவூத்)

ஆகவே இக்கருத்திலுள்ள வேறு பல ஹதீஸ்களை அடிப்படையாகக் கொண்டு நாம் தொழுகையில்நபி(ஸல்)அவர்களின் பெயரைக்கூறப்பட்டால் நாம் தொழுது கொண்டுதான் இருக்க வேண்டுமே அன்றி அதற்காக ஸலவாத்து கூறக்கூடாது என்பதை அறிகிறோம்.

ஐயம்: சில முஸ்லிம் தம்பதிகளின் படுக்கை அறையையும் அவர்கள் படுக்கின்ற கட்டில்களின் சில பகுதிகளையும் கண்ணாடிகளால்அலங்காரம் செய்கிறார்கள். இப்படிப்பட்ட செயல்களை மார்க்கம் அனுமதிக்கிறதா? பு.க்ஷி.னி. ஹசனார், தோகா

தெளிவு : நமது   இஸ்லாம்   கட்டிலில்   படுக்க   வேண்டாம்   என்றோ,   கண்ணாடி பார்க்க வேண்டாம் என்றோ, மின் விசிறி போட  வேண்டாம் என்றோ, மேன்மையான நல்லுணவு சாப்பிட வேண்டாம்   என்றோ   தடை   செய்யவில்லையே!   ஏதோ   இவ்வுலகில்   குறைந்த  காலம்   வாழப்போகும்.   மனிதன்   தனது   வசதிக்காக மனைவி மக்களோடு, இருந்து   தின்று உண்டு   சுகமாக   கட்டில்  தலையணை மெத்தை முதலியவற்றை உபயோகித்து வாழ்வதை இஸ்லாம் தடை செய்யவில்லை.

மாறாக   அல்குர்ஆனில்,   நபியே! “”அல்லாஹ்   தன்   அடியார்களுக்காக   அளித்திருக்கும்   அலங்காரத்தையும், பரிசுத்தமான ஆகாரத்தையும் (ஆகாதவையயன்று) தடுப்பவர் யார்?” என்று   கேட்டு, “” அது  இவ்வுலக   வாழ்வில் விசுவாசங் கொண்டவர் களுக்கு(ம் ஆகுமானதே! எனினும்)   மறுமை   நாளில் (அவர்களுக்கு   மட்டுமே)  சொந்தமானது ” என்றும்    கூறுவீராக!   அறிபக்கூடிய    மக்களுக்கு நம்முடைய வசனங்களை இவ்வாறு விவரிக்கிறோம் என்று கூறுகிறான். (7:32)

ஆகவே வல்ல ரஹ்மான் உண்ணவோ, உடுத்தவோ, மனைவி மக்களுடன் கொஞ்சி குலாவி வாழவோ எவ்விதத் தடைமின்றி அனுமதி வழங்கியுள்ளான். ஆனால் இவற்றில் விரயம் ஏற்பட்டுவிடாது இருக்க வேண்டும் என்பதாகவும் கூறுகிறான்.

ஆதமின்   மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழும்போது உங்களை ஆடைகளைக் கொண்டு அலங்கரித்துக் கொள்ளுங்கள், உண்ணுங்கள், பருகுங்கள் எனினும் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் விரயம் செய்வோரை அல்லாஹ் விரும்புதில்லை(7:31)

“”உண்ணுங்கள்,   பருகுங்கள்,   தானம்   தர்மம்   செய்யுங்கள், ஆடை அணியுங்கள், விரயமும் பெருமையும் அவற்றில் கலந்து விடக்கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(அம்ருபின் ஷீஐபு (ரழி), பாடம் :ஆடை அணியுதல், அஹ்மத், நஸயீ, இப்னுமாஜ்ஜா)

எனவே மேற்காணும் ஆயத்தையும், ஹதீஸையும் மனதில் கொண்டு நீங்கள் நன்கு சுகவாழ்வு வாழ மார்க்கம் அனுமதிக்கிறது.

ஐயம்: நிரந்தர கர்ப்பத்தடை செய்துள்ள ஒரு பெண்ணை ஒருவர் தலாக் கொடுத்துவிட்டால் அப்பெண் இத்தா இருக்க வேண்டுமா?
எஸ். எம். நாஸர், நாகர்கோவில்.

தெளிவு : “”மேலும் உங்கள் பெண்களில் எவரும் மாதவிடாயில் நம்பிக்கையிழந்து, (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி)நீங்கள்   சந்தேகப்பட்டால்,   அப்பெண்களுக்கும்,    மாதவிடாயே   ஏற்படாதப்   பெண்களுக்கும்   இத்தா(வின் தவணை)   மூன்று   மாதங்களாகும். தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய (இத்தாவின்) தவனை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும்.      மேலும் எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான்” (65:4)

நிரந்தர கர்ப்பத்தடையை இஸ்லாம் ஏற்கவில்லை என்பது தெளிவு.

இவ்வாறு தவறாக நிரந்தர கர்ப்பத்தடை செய்தவரும் “”இத்தா” இருந்தாக வேண்டும். தலாக்கு கொடுக்கப்பட்டவள். இத்தா   இருக்க   வேண்டும் என்பதற்கு அவள் கர்ப்பத்தில் சிசுவிருக்கிறதா? என்று பரீசீலனைச் செய்வதற்காக மட்டுமல்ல. கர்ப்பப் பரிசீலனையோ, தலாக்கு கொடுக்கப்பட்ட   பெண்   உடனடியாக   மற்றோர்  கண்வரை  திருமணம்  செய்து கொண்டு மீண்டும் விவாகரத்து போன்ற துன்பத்திற்கு தம்மை ஆளாக்கிக் கொள்ளாமல் தற்காத்துக் கொள்வதற்காக  சிந்தித்துச் செயல்பட வேண்டியோ இருக்கிறது. இது     போன்ற   பல   வி­யங்களுக்காகவே   இஸ்லாம்   இத்தாவுடைய   காலத்தை   தலாக்குக் கொடுக்கப்பட்ட பெண்ணுக்கு சிந்தித்துச் செயல்படுவதற்கு   அவகாசமாக   அளித்திருக்கிறது.   ஆகவே   நிரந்தர   கர்ப்பத்தடை    செய்து    கொண்ட பெண்ணும் தலாக்குக் கொடுக்கப்பட்டால் “” இத்தா” இருந்தாக வேண்டும்.

ஐயம் : நோன்புப்  பெருநாள் நோன்பு நோற்றவர்களுக்கு மட்டும்தானாம்.   மற்ற முஸ்லிம்களுக்கு பெருநாள் இல்லையாம் என்று எங்கள் நாட்டைச் சார்ந்த மவ்லவி ஒருவர் சொன்னார். இவ்வாறு கூறுவதற்கு ஹதீஸில் ஆதாரம் உண்டா?
ஏ.எல். அப்துஸ்ஸமது, ரியாத்.

தெளிவு :  பெருநாள்   என்பது   பொதுவாக முஸ்லிம்களுக்கு மட்டும் தான் சக்தியிருந்தும் எவர் நோன்பு பிடிக்கவில்லையோ, அவர்எப்படி  உண்மையான முஸ்லிமாயிருக்க முடியும்? இத்தகையோருக் கெல்லாம் “”வெறு” நாளே தவிர பெருநாள் இல்லை என்பது உண்மைதான்.

ஒரு   மாதம்   பகல்   முழுவதும் அல்லாஹ்வின் சட்டத்திற்கு உட்பட்டு நோன்பு இருந்து விட்டு ஒருவர் பெருநாள் கொண்டாடுகிறார். முறை தான்   மற்றொருவரோ சக்தியிருந்தும் அல்லாஹ்வின் ஆணைக்கு மாறாக நோன்பு பிடிக்காமல் இருந்துவிட்டு பெருநாள் அன்று மிக

ஐயம்: சிலர்    மார்க்கத்தில்   இல்லாத   சிறு  சிறு தவறுகளைச் செய்யும்போது இது தவறு என்று சுட்டிக்காட்டினால் இது சிறிய பாவம் தானே என்று சொல்கிறார்கள். அப்படியானால் சிறிய பாவத்திற்கு  அதற்கேற்ப கூலியும் பெரிய பாவத்திற்கு அதற்கேற்ப கூலியும்அல்லாஹ் நமக்கு தருவானா? விளக்கம் தேவை.  எஸ். ஐ. அலிஅக்பர் சென்னை?94

தெளிவு : ஒருவர் அணுவளவு நன்மை செய்தால் அந்தளவு நற்பலனையும், அணுவளவுதீமை செய்தால் அந்தளவு தண்டனையும்கண்டு கொள்வார்   (99:7, 8)   இவ்வசனத்தின்   அடிப்படையில்   ஒவ்வொரு   மனிதரும்   தமது   செய்கைக்கு   ஏற்றவாறு   கூலி  கொடுக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.

தவறுசெய்தவர்களை அல்லாஹ் தண்டித்தாக வேண்டும் என்பது அவன்மீது கடமை இல்லை. அவன்மன்னிக்கும் பண்புடையவன்மன்னிப்பது   அவன்   கருணை   பெரும்  பாவங்களை விட்டு எவர் விலகிக் கொள்கிறாரோ அவருடைய சிறிய பாவங்களைத் தான் மன்னிப்பதாக கூறுகிறான்.

நீங்கள்  உங்களை விட்டும், தடை செய்யப்பட்டுள்ள பெரிய பாவங்களை விட்டும் விலகிக் கொண்டால் உங்களுடைய (மற்ற சிறிய) பாவங்களுக்கு அதனை நாம் பரிகாரமாக்கி உங்களை மிக்க மரியாதைக்குரிய இடங்களில் புகுத்துவோம்.

பெரும் பாவங்கள்: அல்லாஹ்வுக்கு   இணை   கற்பித்தல்,   பெற்றோரை   துன்புறத்தல், கொலை செய்தல், பொய் சாட்சி கூறுதல் ஆகியவையாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.  (அப்துல்லாஹ்பின் அம்ரு (ரழி), புகாரீ)

நாசப்படுத்தும்   ஏழு   பாவங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! அவையாவை? எனக் கேட்டார்கள்,அதற்கு அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல் சூனியம் செய்தல், முறையின்றி ஒருவரை கொலைசெய்தல்   வட்டி   வாங்கி   புசித்தல் அநாதையின் பொருளை சாப்பிடுதல், யுத்தத்தின்போது புறமுதுகு காட்டிச் செல்லல், மூமினான ஒழுக்கமுள்ள பேதைப் பெண்கள் மீது அவதூறு கூறுவது ஆகியவையாகும் என்றார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரீ, முஸ்லிம்)

இவ்வாறே ஒருவர் நன்மைகள் செய்வதாலும் அல்லாஹ் அவருடைய சிறிய பாவங்களை மன்னிக்கிறான். “”நிச்சயமாக நன்மைகள்தீமைகளைப் போக்கிவிடும் (அல்லாஹ்வை) நினைவு கூறுவோருக்கு இது நல்லுபதேசமாகும்.”  (11:114)

“”அல்லாஹ்வுக்கு    முற்றிலும்   வழிபட்டு   நடப்பவர்”   என்ற   சிறப்புப்   பெயரைப் பெற்றுள்ள ஒரு முஸ்லிம், சதா அதற்கேற்பவே நடப்பவராயிருத்தல் வேண்டும். இல்லையேல் பெயரளவில் தான் முஸ்லிம் என்ற நிலை ஏற்பட்டுவிடும்.

சந்தர்ப்பத்தில்அறிந்தோ அறியாமலோ பாவம் செய்யும்சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. அப்போது உடனே மனம் வருந்தி தாம் செய்தபாவத்திற்குஅல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு,பிறகு தவறு செய்யும் வி­யத்தில் எச்சரிக்கையாக இருந்து கொள் வேண்டும்.மீண்டும் தவறு செய்து விட்டால் அதற்கும் மேற் கூறப்பட்ட முறையே பரிகாரமாகும்.

சிறிய பாவம் தானே என்று அலட்சியமாக இருந்து விடலாகாது. ஒருமுறை நபி(ஸல்)  அவர்கள் அன்னை ஆயிஷா(ரழி) அவர்களைநோக்கி, ஓ!ஆயிஷா நீர் எந்தப்பாவத்தையும் இலேசாகக்கருதி விடவேண்டாம். ஏனெனில் நிச்சயமாக அதற்கும்அல்லாஹ்விடத்தில்கேள்வி உண்டு என்றார்கள். (ஆயிஷா (ரழி), இப்னுமாஜ்ஜா, பைஹகீ, தாரமீ)

ஆகவே நாம் செய்யும் பாவம் சிறிதாயிருப்பினும் அது யாருடைய கட்டளைக்குப் புறம்பாகச் செய்யப்படுகிறதோ அந்த அல்லாஹ் மிகப் பெரியவன் என்ற உணர்வு நமக்கு  இருக்க வேண்டும்.  அவ்வாறாயின் சிறு பாவங்கள் கூட நிகழாமல் தற்காத்துக் கொள்ள முடியும்.

ஐயம் : கடன் பட்டவர் கஷ்டத்தில் இருப்பின் அவருக்கு வசதியான நிலை  வரும்  வரை   காத்திருங்கள். அதை அவருக்கு தர்மமாக விட்டு விடுங்கள். அதுவே உங்களுக்கு  பெரும்   நன்மையாகும்.   நீங்கள்   அறிவீர்களானால் (2:280) நான் ஒரு மளிகை கடை வைத்துள்ளேன்.   என்னிடம்   முஸ்லிம்   அல்லாத   பலரும்   கொடுக்கல்   வாங்கல் செய்கிறார்கள். கடனை கடன்காரருக்கு வஜா செய்வதால் பெரிய நன்மை உண்டு என்று குர்ஆன் கூறுகிறது. முஸ்லிம்     அல்லாத  சகோதரருடைய கடனை வஜா செய்தாலும் நன்மை கிடைக்குமா?  எஸ். எம். இக்பால். ஜெகதாப்பட்டணம்.

தெளிவு : நிச்சயமாக   நன்மை   கிடைக்கும்.   இவ்வுலகில்   ஈரமான   இருதயமுள்ள யாதொரு உயிர் ஐந்துக்கு உதவி செய்தாலும் புண்ணியம் உண்டு என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.  (அபூ ஹுரைரா(ரழி), புகாரீ, முஸ்லிம்)

ஒருவர்   மனித   வர்க்கம் அன்றி மற்ற பிராணிகளுக்கு உதவி செய்தாலும் அவருக்கு அதற்கான புண்ணியம் நிச்சயம் கிடைக்கும் என்று கூறுவதன் மூலம் இஸ்லாம் சுயநலமின்றி பொது நல வாழ்வை வலியுறுத்துகிறது என்பதை அறிகிறோம்.

ஐயம்:  முஸ்லிம்கள்    காலவாய்   போட்டு  செங்கலைச்   சுட்டு   விற்பனை செய்வது   கூடாது   என்று சிலர் கூறுகிறார்களே! இதற்குஏதேனும் ஆதாரம் உண்டா? எம்.ஏ. ஹாஜி முஹம்மத், நிரவி.

தெளிவு : காலமாய்   போட்டு   செங்கலை விற்பனை செய்வது பற்றியோ, அல்லது அந்த கற்களால் ஒரு கட்டிடத்தைக் கட்டி அதை விற்பனை செய்வது பற்றியோ, மார்க்கத்தில் எவ்வித தடையுமில்லை.

மூமின்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருத்திக்கொள்ளும்   முறையில்   அமைந்துள்ள   வர்த்தகம்   அல்லாமல் ஒருவர் மற்றொருவரின் பொருட்களைத் தவறான முறையில் உண்ண வேண்டாம்.  (4:29)

ஆகவே மார்க்கம் அனுமதிக்கும் எந்த வியாபாரத்தையும் முறையாகச் செய்வதில் தவரொன்றுமில்லை.

ஐயம்: உளுஹிய்யா, குர்பானி இறைச்சியை தாய், தகப்பன், பிள்ளைகளுக்கு உண்ணக் கொடுக்கக் கூடாது என்று இலங்கையில் இருக்கும் மெளலவிமார்களும், முஅல்லிம்களும் சொல்கிறார்கள். இது உன்மையா? நபிவழியில் விடை எதிர்பார்க்கிறேன்.

நான் முன்னர் எனது பெண் பிள்ளைக்கு   உளுஹிய்யா, குர்பானி கொடுத்து அதன் இறைச்சியை நானும், பிள்ளையின் தாயும், பிள்ளையும் உண்ணவில்லை. இன்னும்   முஅல்லிம்   சொன்னார்;   உளுஹிய்யா,   குர்பானி   இறைச்சியை   முள்ளில் இருந்த சதையை மாத்திரம் கலட்டி எடுக்க வேண்டுமாம். இது உண்மையா?  ஏ. எஸ்.எம். சல்மி, ரியாத்.

தெளிவு : குர்பானி,    உளுஹிய்யா இவ்விரண்டும் ஹஜ்ஜூப் பெருநாள் அன்று அறுத்து வினியோகம் செய்யப்படும் மாமிசத்திற்கு சொல்லப்படும். “”அகீகா” என்பது குழந்தைக்காகஅறுத்துக் கொடுக்கப்படும் மாமிசத்துக்கு சொல்லப்படும்.குர்பானிஇறைச்சியையும்அகீகாவையும்  நாமும் சாப்பிடலாம். பிறருக்கு அன்பளிப்பாக கொடுக்கவும் செய்யலாம். மற்றபடி நீங்கள் கூறும் மவ்லவிகளின் கூற்றுகளுக்கு எவ்வித ஹதீஸ் ஆதாரமும் இல்லை.

ஐயம்: சுபுஹூ தொழுகையில் குனூத் ஓதுவதினால் யாஜூஜ் மாஜூஜ் கூட்டத்தினர் வரமுடியாமல் தடுக்கப்படுகின்றது என்றும் குனூத்ஓதாவிட்டால்   மலையை   உடைத்துக்   கொண்டு வெளியே  வருவார்களாம்  என்றும்  இலங்கை   நாட்டவர் சொல்கிறார்கள். இது உண்மையா? நபிவழியில் விடைதரவும்.  ஏ.எஸ்.எம். சல்மி ரியாத்.

தெளிவு : இதெல்லாம் பொது மக்கள் தாங்களாகவே   கற்பனை செய்து, தங்களுக்கு மத்தியில் பேசிக் கொள்ளும் பொழுதுபோக்கு போன்றவை. இவற்றிக்கு மார்க்கத்தில் ஒரு ஆதாரமும் கிடையாது.

ஐயம்: எமது நாட்டில் பெருநாள் தொழுகை முடிந்த பிறகு சில  பேர்கள் கட்டயாக் கடமை போல கபுரடிக்குப்போய் யாஸீன் ஓதி, துஆ கேட்கும் வழக்கம் இருக்கின்றது. நபிவழியில் விடை தரவும். ஏ. எஸ். எம். சல்மி, ரியாத்

தெளிவு: கபுரடிக்குச் சென்று அதை   நோக்கி ஸலாம் கூறுவது பற்றியோ, அல்லது அந்த கபுராளிகளுக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுவது பற்றியோ தவறெதுவுமில்லை. யாஸீன் ஓதி துஆ செய்தால் யார் யாஸீன் ஓதினாரோ அவருக்கு மட்டும்தான் அந்த ஸவாபு கிடைக்கும். யாஸீன்   ஒருவர்   ஓதி மற்றவருக்கு பார்சல் செய்தால் அது அவருக்குப் போய் சேராது என்று பின்வரும் வசனம் கூறுகிறது.

“”இன்னும் மனிதனுக்கு அவன் முயற்சித்ததே அன்றி வேறில்லை.” (53:39)

ஐயம் : தேநீரில் ஈ (கொசு) விழுந்தால் அதை தேநீரில் உள்ளேதாட்டி (அமுக்கி)விட்டு, ஈயை வெளியே எடுத்து அப்புறப்படுத்தி விட்டு குடிப்பது கூடுமா? இப்படி குடிப்பது பற்றி நபி வழியில் இருக்கின்றதா? ஏ.எஸ்.எம். சல்மி, ரியாத்

தெளிவு : “”உங்களின்   (குடிப்புப்)   பாத்திரங்களில்   ஈ விழுந்து   விடுமாயின்   அதை   முழுமையாக   உள்ளே மூழ்கடித்து, பின்னர் அப்புரப்படுத்தி விடுங்கள்! ஏனெனில்   நிச்சயமாக   அதன்   இறகுகளில்   ஒன்றில்    ´ஃபா?நோய் நிவாரணமும், மற்றொன்றில் நோயுமிருக்கிறது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரீ)

ஒருமுறை   நெய்யில்  ஒரு   எலி   விழுந்து இறந்து விட்டது. அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் எலியையும் அதைச் சூழ்ந்துள்ள பாகத்திலுள்ளவற்றையும் அப்புறம் படுத்திவிட்டு (நெய்யைப்) புசியுங்கள் என்றார்கள்.
(மைமூனா (ரழி), புகாரீ)

ஆகவே நமது பானங்களில் ஈ விழுந்துவிட்டால் அதன் இருபாகத்தின் இறக்கைகள் உன்பட முழுமையாக அதை பானத்தில் மூழ்கச்செய்துவிட்டு பிறகு அதை அருந்துவதே நபி வழியாகும் என்பதை அறிகிறோம்.

——————————————————————————–
விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

விமர்சனம்  : மே89  இதழில் விமர்சனங்கள் பகுதியில் நஜாத் பிரியன் என்று ஒரு வாசகர் குறிப்பிட்டதைத் தாக்கக் கடமைப்பட்டுள்ளோம் என்று கூறியுள்ளீர்கள்.  அது   எப்படி? அல்லாஹ்விடம்   நஜாத்தடைய   பிரியப்படக் கூடியவராக   இருக்கும் ஒருவரிடம் நஜாத் பிரியராக இருப்பது முறையல்ல என்று கூறுவது தவறு என்கிறேன். ஏற்றுக்கொள்கிறீர்களா? எம். அபூ நபீல், தேங்காய் பட்டணம்.

விளக்கம் : அனைவரும்   அல்லாஹ்விடம்   நஜாத்தடைய   பிரியப்படக்   கூடியவர்களாக   இருக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறோம் நஜாத் இதழைக் குறிப்பிட்டு “”நஜாத் பிரியன்” என்று எழுதி இருப்பதாக நாம் கருதியதாலேயேஅவ்வாறு கண்டித்து எழுதி இருந்தோம்காரணம் “”பிரியத்துடன் அணுகினால் தவறும் சரியாகவே   தெரியும்; வெறுப்புடன் அணுகினால் சரியும் தவறாகவே தெரியும்” என்ற அடிப்படையில் நமது நஜாத் இதழ் பிரியராக அவர் இருந்து, அதன் காரணமாக நம்மை   தக்லீது   செய்யும் நிலை ஏற்பட்டு விடக் கூடாது என்பதையே தெளிவுபடுத்தி இருந்தோம்.

விமர்சனம்  :”” நீங்கள்   அல்லாஹ்வின்   கட்டளைப்படி   நபி(ஸல்)   அவர்களை   நேசித்து, அவர்களைப் பின்பற்றக் கடமைப் பட்டிருக்கிறீர்களே அல்லாமல் நஜாத் பிரியனாக இருப்பது முறையல்ல” என்று   நாம்   எழுதியிருந்ததே   நீங்கள்   குறிப்பிடும் நஜாத் பிரியனை நாம் குறிப்பிட்டவில்லை, நஜாத் இதழ் பிரியனையே குறிப்பிட்டிருக்கிறோம் என்பதை சந்தேகத்திற்கிடமில்லாமல் நிரூபிக்கப்போதுமானதுதிருச்சி சகோதரர் “”தனது கடிதத்திற்கு பதிலளித்து என்னைப் பெரிய மனிதனாக்க வேண்டாம் ” என்று குறிப்பிட்டிருந்ததால் தான்   அதற்கு   பதில்   அளிக்கவில்லை   என்றும்,  அந்தப்  பாராவை மாத்திரம் திட்டமிட்டு மறைத்து தவறான தோக்கம் கற்பிக்கப்படுகிறது என்று  குற்றம் சாட்டப்படுகிறதே?  எஸ்.எம்.நாஸர். நாகர்கோவில்

விளக்கம் : அந்தக்   கட்டுரையிள்   ஆரம்பத்திலேயே   “”நீண்ட   கடிதமாக   இருந்தாலும்   வாசகர்களுக்குப்   பயனுள்ளதை   மட்டும்இங்கு   பிரசுரித்திருக்கிறோம்” என்று ஆசிரியர் குறிப்பு எழுதப்பட்டுள்ளதைப்  படித்தவர்கள்  இக்குற்றத்தைச்  சுமத்த  முன்வர மாட்  டார்கள். அடுத்து அந்தப் பாராவை  மாத்திரம்  திட்டமிட்டு  மறைந்துள்ளதாகச் சொல்வது வீண் பழியும் அவதூறுமாகும்.  அக்கடித்ததின்  முதல்  பக்கத்தின்   முக்காப்   பாகத்தை   விட்டிருக்கிறோம்.    அதில்   “”வாசகர்கள்   மேலும்   அறிந்து    கொள்வதற்காக, இதனைத்  தங்கள்   பத்திரிக்கையில்  பிரசுரிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி” என்று எழுதி வாசகர் கையயழுத்தும் இட்டுள்ளார்.

அல்ஜன்னத்தில்   பிரசுரிக்கும்படி   நேரடியாக   மிகத்  தெளிவாக வாசகர் எழுதி கேட்டுக் கொண்டிருப்பதையும்  நாம்  விட்டுத்தான் இருக்கிறோம்.   அக்கடிதத்தின்   இறுதிப்பக்கத்தில் 6   வரிகளைத்   தவிர   எஞ்சியுள்ள   பெரும்   பகுதியை விட்டிருக்கிறோம். இந்த நிலையில் அந்தப் பாராவை மாத்திரம் திட்டமிட்டு மறைந்துள்ளதாகச் சொல்வது   எவ்வளவு   பெரிய அவதூறு என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

அடுத்து அவர்கள் குறிப்பிட்டுள்ள பாராவில் அக்கடித்தைப் பிரசுரிக்க வேண்டாம் என்ற கருத்து இருக்கிறதா என்று பார்ப்போம்.

“”என்னுடைய எல்லாக் கருத்துக்களுக்கும்   பழக்கத்தின்  காரணமாக பதிலளிக்க முன் வருவீர்களேயானால் தங்களிடம் ஓர் அன்பு வேண்டுகோள்! பதிலளித்து என்னைப் பெரிய மனிதனாக ஆக்கிவிட வேண்டாம். இல்லை, எனது தவறுகளைச் சுட்டிக் காட்டத்தான் வேண்டும்” என்று கூறுவீர்களேயானால், “” நான் தோற்றுவிட்டேன்” என்று இப்போதே ஒப்புக்கொள்கிறேன். இப்போதாவது என்னைவிட்டுவிடுங்கள் இந்த வம்பெல்லாம் எனக்கு வேண்டாம். மேலும்மேலும் அதிரடி நடவடிக்கையாகதனித்திறமையின் பிரவேசத்தைத்தாங்கிக்   கொள்ள   மாட்டான்   அந்த  வாசகன். எனவே   சப்தமின்றி   ஓதுவதற்கு   தொழுகையில்  என்றுநேரிடையாக ஹதீஸ்கள்இருப்பதுபோல், சப்தமாக ஓதுவதற்கும் தொழுகையில் என்று நேரிடையாக ஹதீஸ்கள்    இருந்தால்   மட்டும்  தெரிவியுங்கள். இது போன்ற வாதங்ககள் வேண்டாம்.”

இது தான் அந்தப் பாராவின்   முழு   வாசகங்கள்   இதில்   “”அக்   கடிதத்தைப் பிரசுரிக்க வேண்டாம்” என்ற கருத்து தொனிக்கிறதா? அல்லது “”மார்க்க   வி­யத்தில்   உங்கள்   அபிப்பிராயங்களையும்,  வீண்வாதங்களையும்   எடுத்துவைத்து   மக்களைக்   குழப்ப   வேண்டாம் நேரடியாக ஹதீஸை எடுத்து வையுங்கள்” என்று கருத்து தொன்க்கிறதா? என்று சிந்தித்துப் பாருங்கள்.

எங்களது   தனித்   திறமையே   இப்படி   விதண்டாவாதங்கள் செய்து மக்களைக் குழப்பி திசை திருப்பு து தான் அதை அந்த வாசகர்வேண்டாம் என்று சொல்லிவிட்டதால் பிரசுரிக்கவில்லை என்று சொல்லுகிறார்களோ என்னவோ? இங்கு எழுந்துள்ளது இவர்களது கெளரவப் பிரச்சினையோ அல்லது வாசகரது கெளவரப் பிரச்சினையோ அல்ல. தொழுகையில் பிஸ்மியை சத்தமிட்டு ஓதுவதா?  அல்லது மெதுவாக ஓதுவதா? என்ற மார்க்கப் பிரச்சனையே ஆகும். அந்த வாசகரினவிருப்பத்திற்கிணங்க மார்க்கப்பிரச்சனையைமறைந்து   விட்டதாக   அவர்களே   ஒப்புக்   கொள்வதுதான் வேடிக்கையாக இருக்கிறது அவர்களின் பேதமையை ஒரு உதாரணம் மூலம் விளக்கினால் மிகவும் பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறோம்.

ஒருவர் இன்னொருவருக்கு ரூபாய் ஐந்தாயிரம் கடன் கொடுத்திருந்தார். அந்தத் தவணை முடிந்த பின் கடனைத் திருப்பிக் கேட்டார்.கேட்கும்   போதெல்லாம்   கடன்   பெற்றவர்   இன்று   தருகிறேன். நாளை தருகிறேன் என்று ஏமாற்றிக் கொண்டே இருந்தார். கடன் கொடுத்தவர் பலமுறை அலைக்கழிக்கப்பட்டதால் மிகுந்த வருத்தமடைந்து “”இன்று நாளை என்று ஏமாற்றிக் கொண்டேயிக்கிறாய் அந்தப்பணத்தைத்   தரவே   வேண்டாம்,   நீயே   வைத்துக்கொள்”   என்று   ஆத்திரத்துடன்   சொல்லிவிட்டு வந்துவிட்டார். இப்படிச் சொன்னாலாவது சூடு சொரனை பெற்று கடனைத் திருப்பிக் கொடுத்து விடுவார் என்ற நம்பிக்கையில் தான் அவ்வாறு கூறினார். அப்படியும்   பணம்  வந்த பாடில்லை. கடன் கொடுத்தவர் வேறு வழியின்றி நீதி மன்றத்தில்   வழக்கு   தாக்கல்   செய்தார்.   வழக்குவிசாரணைக்கு வந்தது கடன்   வாங்கியவர் தன்னைப் பெரிய புத்திசாலி என்று எண்ணிக்கொண்டு,ஒருமுறை பணம் கேட்டு வந்த இடத்தில் “அந்தப் பணத்தைத்   தரவே   வேண்டாம். நீயே   வைத்துக்கொள்” என்று கடன் கொடுத்தவர் சொல்லி விட்டார். அதனால் தான் அந்தப்பணத்தைத்   திருப்பிக்  கொடுக்காமல்   நானே   வைத்துக்கொண்டேன்” என்று நீதிபதியிடம் சொல்லுகிறார் இக்கூற்று எவ்வளவு   பெரிய   பேதமையோ   அதைவிட  எந்த  வகையிலும்   இவர்களின்   இக்கூற்று   குறைந்ததாக  இல்லை இப்படிப்பட்ட அறிவீனமான   ஒரு   வாதத்தைக்   குறை   மதி   படைத்தவனும்   நீதி  மன்றத்தில்   எடுத்து   வைக்க   மாட்டான்   எளிதில்   பிரிந்து கொள்வதற்காகவே இவ்வுதாரணத்தை இங்கு எடுத்து  எழுதினோம்.

வீண் விதண்டா வாதங்கள் வேண்டாம். “பிஸ்மியைச் சப்தமிட்டு தொழுகையில் ஓதுவதற்கு, தொழுகையில் என்று குறிப்பிட்டு வரும்ஹதீஸைக் காட்டுங்கள்” என்று   வாசகர்   கேட்டால் “”பதிலளிக்க வேண்டாம் என்று வாசகர் எழுதிவிட்டார். அதனால் தொழுகையில் பிஸ்மியை   சப்தமிட்டு   ஓதுவதா?   அல்லது   சப்தமின்றி   ஓதுவதா? என்று   மக்களுக்கு     ஏற்பட்டுள்ள ஐயத்தைப் போக்காமல் அவர்களைத் தடுமாற்றத்தில் நிலைக்கச்செய்து மெளனம் சாதிக்கிறோம்” என்று   அவர்கள்   கூறுவது முறையா? என்று சிந்தித்துப் பாருங்கள். “”தனது தவறைநியாயப்படுத்த எப்படி எல்லாம்சமாளிக்கிறார். வாசகர்கள் புரிந்து கொள்ளவேஇதை நாம் எழுதுகிறோம்.” (அந்நஜாத் ஜன&பிப் 1987 பக்கம் 78)

1987 ஜனவரியில் ரஹ்மத் ஆசிரியரையும், குர்ஆனின்குரல் ஆசிரியரையும் வக்கணை பேசியவரே 1989ல் அதே வக்கணைக்கு ஆளாகியுள்ளார் என்பதை அந்நஜாத், ஜனவரி &பிப்ரவரி 1987 இதழை மீண்டும் பார்ப்பவர்கள் தெளிவாகவே புரிந்து கொள்ள    முடியும்.

வாசகர்   ஆரம்பத்திலேயே   “”வாசனகர்கள்   மேலும்   அறிந்து   கொள்வதற்காக   இதனை   தங்கள் பத்திரிகையில் பிரசுரிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி! என்று நேரடியாக எழுதி, அதன்கீழ் கையயப்பமும் இட்டுள்ளதை விட்டுவிட்டு இடையில்    வரும் ஒருபகுதியைச் சுட்டிக்காட்டி வாசகர் பிரசுரிக்க வேண்டாம் என்று எழுதியிருந்ததாலேயே பிரசுரிக்கவில்லை என்று மக்களைத் திசை திருப்புகிறவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள்? அவர்களின் இந்தத் திசை திருப்புதலில் மயங்குகிறவர்கள் பரிதாபத்திற்குரியவர்களாகவே   இருக்க    முடியும்.   காரணம்   சுயசிந்தனை   உள்ள   யாரும்  அப்படி இருக்க முடியாது. இப்படித்தான்  சமாதிச் சடங்குக்காரார்களும் முகல்லிதுகளும் குர்ஆனில் நேரடியாகத் தெளிவாகச்     சொல்லப்படும் குர்ஆன் வசனங்களை விட்டுவிட்டு வேறு   வசனங்களில்   இடையில்     வரும்     வாசகங்களைக்     காட்டி     தங்களின்   தவறான   செயல்களை   நியாயப்படுத்திக்     கொண்டிருக்கின்றனர். மக்களில் பெருங்கூட்டத்தினர் அவர்களை நம்பி தங்கள் ஈமானை இழந்து கொண்டிருக்கின்றனர். அதே    முறையை இவர்களும் இப்போது கைக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். தங்களை நம்பி ஒரு கூட்டம் சேர்ந்து விட்டால் இப்படித்தான் புத்தி போகும் போல் தெரிகிறது. அப்படிப்பட்ட ஒரு கும்பல் நம்மைச் சுற்றிச் சேராமல் அல்லாஹ் பாதுகாப்பானாக? ஆமீன்

“”வாசகரின் விருப்பத்திற்கிணங்க மார்க்க விவகாரத்தை அம்போ” என்று விட்டு விட்டோம்” என்று அவர்கள் சொல்லுவதன் மூலம்     ஒன்று நமக்கு பளிச்சென்று தெரிகிறது அதாவது பொதுவாக மற்ற பத்திரிகையாளர்களைப் போல் வாசகர்களைத் திருப்தி படுத்தி   அவர்களின் ஆதரைவப் பெற்று பொருள் வளமும், புகழ் வளமும் பெரும் நோக்குடனேயே பத்திரிகை நடத்துகிறார் களேயல்லாமல் மக்கள் வெறுத்தாலும் சத்தியத்தை எடுத்து வைத்து அதன் மூலம் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவது தங்களின் நோக்கமல்ல என்பதை அவர்களே வெளிப்படுத்தி விட்டனர். நமது நிலை அதுவல்ல. உலகிலுள்ள அனைவரும் வெறுத்தாலும் சத்தியத்தைச்      சொல்லி    அதன்    மூலம்    அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதே நமது நோக்கமாகும். உண்மையான விசுவாசிகளுக்கு நாம் சொல்லும் சத்தியம் பலன்தரவே செய்யும்.

“”முதஷாபிஹாத் ” வசனங்கள்    சம்பந்தமாக   எனது   கருத்துக்களை   மக்கள்   முன்வைக்க எனக்கு எண்ணம் பிறந்தது. எனவே சிலவற்றை எழுதுகிறேன். 3:7அல்குர்ஆன்   வசனத்திற்கு   இதற்கு  முன்புள்ள எல்லா தர்ஜூமாவிலும் “”முதஷாபிஹாத் வசனத்தின் “”உண்மை” பொருளை அல்லாஹ்வை அன்றி வேறு யாரும் அறிந்து கொள்ள முடியாது” அறிவில் உறுதிப்பாடு உடையவர்களோ, இது  அனைத்தும்  அல்லாஹ்விடமிருந்து   வந்தது  தான்   என (இதனை எங்கள்) நம்பிகிறோம்! என்று கூறுவார்கள்” (3:7). இந்த  மொழி   பெயர்ப்பு   கருத்தும்   மிகச் சரியாக இருக்கின்றது. ஆனால் மெளலவி P.மூ. மொழி பெயர்ப்பில்”” அல்லாஹ்வும், அறிவில் உறுதிப்பாடு உடையவர்களும் முதஷாபிஹாத்     வசனத்தை விளங்குவார்கள். மற்றவர்கள் இதனை  அறிய மாட்டார்கள். இவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவை, இவற்றை   நாங்கள்   நம்பினோம்   என்று   கூறுவார்கள்”  என்று  ஜூலை    அல்ஜன்னத் பக்கம் 41-ல் குறிப்பிடுகிறார். இதன்மூலம் நாம் ஒரு கால கட்டத்தில் இந்த மவ்லவிகளை கண்மூடி நம்பி வழிகெட்டு   இருக்கும்போது மவ்லவி P.மூ.போன்றோர்களின் கடுமையான உழைப்பின் காரணமாக நாமாக சுயமாக குர்ஆன், ஹதீஸ்களை      நேரடியாக   விளங்கிச்  செயல்படத்  துவங்கி  நேர்வழியின்   பால்   வந்து,   இடைத்தரகர்   இல்லாத  தீனை உருவாக்க எத்தினிக்கும்நேரத்தில் P.மூ. யின் இந்த மொழி   பெயர்ப்பு   திரும்பவும்   இந்த   மவ்லவிகளை நம்பித்தான் நாம் தீனை விளங்க முடியும்  என்ற சூழ்நிலைக்கு   கொண்டு   வருகிறார்.   மேலும் P.மூ. யின்   மொழி   பெயர்ப்பில்   எனக்கு   ஒரு தவறு தென்படுகிறது.  எவ்வாறெனில் “”வமா எஃலமு தஃவீலஹு   இல்லல்லாஹ்   வர்ராஸிகூன ஃபில் இல்மி எகூலூன ஆமன்னா பிஹி” என்பதில் அல்லாஹ்வும்      அறிவில்   சிறந்தவர்களும்   முதஷாபிஹாத்   வசனத்தின்   உண்மைப்பொருளை விளங்க முடியுமே தவிர வேறு யாரும் விளங்க முடியாதுஎன்று மொழி பெயர்த்துவிட்டு இதுவரை இலக்கணப்படி சரியாக இருந்தாலும் அதற்கடுத்து “”எகூலூன” என்று பன்மையில் அல்லாஹ்வையும், அறிவில் உறுதிப்பாடு உடையவர்களையும் சேர்த்து “”இவை   அனைத்து  எங்கள்   இறைவனிடமிருந்து வந்தவை. இவற்றை நாங்கள் நம்பினோம்” என்று கூறுவார்கள் என்று மொழி பெயர்க்கும்போது அறிவில் உறுதியுடையவர்கள் இவை அல்லாஹவிடமிருந்து வந்தது என்று நம்புவது சரி; அல்லாஹ்வும் இது அல்லாஹ்விடமிருந்து   வந்தது   என்று   கூறுவதாக அந்த மொழி பெயர்ப்பு வருவதாக உள்ளதால் அல்லாஹ்வுக்கு மேல் ஒரு அல்லாஹ் உள்ளதாகத் தானே காட்டுகிறது.   இது   எவ்வளவு   பெரிய விபரீதம் என்பதை உணரும்போது உண்மையிலேயே இந்த மவ்லவிகளின் போக்கை மாற்ற முடியாதோ என்று சந்தேகம் உண்டாகிறது. மேலும் என்போன்ற கொள்கைச் சகோதரர்கள் சிலர் P.மூ யை கண்மூடி நேசித்தவர்கள் கூட இப்போது இந்த மவ்லவி இனத்தை சரியாகப்புரிந்து கொண்டு இவர்களும் முகல்லிதுகளை உருவாக்கத்தான் வார்த்தை ஜாலங்களை பயன்படுத்துகிறார்கள்என்று நேரில் என்னிடமே சிலர் கூறி இருக்கின்றனர் அல்லாஹ் இந்த   தவ்ஹீத்   மவ்லவிகளுக்கும்,   நமக்கும்   நேர்வழி   காட்டப்போதுமானவன எனவே தாங்கள்இந்த மவ்லவிகளின் உண்மை சொரூபத்தை உலகிற்குக்காட்ட அயராதுபாடுபடுங்கள் அல்லாஹ்நிச்சயம் உதவி செய்வான். எம். அஹ்மத் இப்ராஹீம், புளியங்குடி

உங்களையும், உங்கள் நண்பர்களையும்போல், முகல்லிதுகளைத் தவிர மற்றுமுள்ள சுய சிந்தனையாளர்கள் அனைவரும் இந்ததவ்ஹீத்  மெனலவிகளின் சுய ரூபத்தை விளங்கிக் கொண்டுதான் வருகிறார்கள். வெகு விரைவில் அவர்களின் வே­ம் கலைந்துவிடும். நல்லவர்கள்போல் நடித்து சத்திய சமத்துவ, சகோதரத்துவ சமுதாயத்தை அமைக்க எம்முடன் பாடுபடத்தயார் என்று உறுதி சொல்லி   வந்தவர்கள்.   தங்களுக்கு   மக்களிடையே   சிறிது   பிரபல்யம்   ஏற்பட்டவுடன் தடம் புரண்டு மீண்டும்  கரையேறி வந்த குட்டையிலேயே விழுந்து விட்டனர். இந்த அனுபவத்திற்குப்பின் மவ்லவி   இனத்தைத் திருத்த முடியும் என்ற நம்பிக்கையை நாம் இழந்து விட்டோம். கழுதை உழவுக்கு வந்தாலும்   இந்த   மவ்லவி   இனத்தார் நேர் வழிக்கு வரப்போவதில்லை. தாருந் நத்வாவை விட்டு விதிவிலக்காக ஒரு சிலர் வந்ததுபோல்   விதிவிலக்காக ஒரு சிலர் நேர்வழிக்கு வரலாம் ஆதாரங்களைக் கொண்டோ, வாதம் செய்தோ எம்மை வெல்ல முடியாததை   அனுபவத்தில்   கண்டு   கொண்ட  அவர்கள் இப்போது சூழ்ச்சிகள் செய்து நம்மை வீழ்த்த பெரும்   முயற்சிகள்   செய்து   கொண்டிருப்பதை   கண்கூடாகப்   பார்த்து விட்டோம் நமக்கு அல்லாஹ் ஒருவனே போதுமானவன். அவர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து சத்தியத்தைப் பாதுகாக்க அல்லாஹ் போதுமானவன்.

எதுவரை   நாம்   சத்தியத்தில்   இருக்கிறோமோ   அதுவரை   அல்லாஹ்வின்   உதவி நமக்குண்டு என்ற உறுதியுடன்  செயல்பட்டு வருகிறோம்.   நீங்கள்   குறிப்பிட்டிருப்பது   போல்   இந்த   மெளலவிகளின் உண்மை சொரூபத்தை உலகிற்குக் காட்ட மரணத்தைத்தழுவும் வரை, இறுதி மூச்சு வரை அயராது பாடுபடுவோம்.

நீங்கள் குறிப்பிட்டது போல் அவர்களின் தவறான மொழி பெயர்ப்பினால் “”ஆமன்னா பிஹி குல்லுன்மின் இன்தி ரப்பினா” என்று அல்லாஹ்வும் கூறுவதாகப் பொருள் ஏற்பட்டு இன்னொரு அல்லாஹ் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தத்தான் செய்கிறது.இதனை நாம் 3:7 வசனத்தை அரபி இலக்கண, இலக்கிய அடிப்படையில் ஆராயும் போது மிக விரிவாக விளக்குவோம்.

இஸ்லாத்தை   அதன்   தூய   வடிவில் நிலைநாட்டி சத்திய, சமத்துவ சகோதரத்துவ சமுதாயத்தை அமைக்கும் எமது இந்த புனிதப் பணியிலிருந்து அவர்களின் ஆசை வார்த்தைகளோ, வீண் பழிகளோ, மிரட்டல்களோ, பயமுறுத்தல்களோ, சூழ்ச்சிகளோ எம்மை அணுவளவும்   அகற்றிவிடா   என,   எவன் கைவசம் எமது உயிர் இருக்கிறதோ அந்த அல்லாஹ் மீது ஆணையிட்டு உறுதியாகக் கூறிக் கொள்கிறோம்.

விமர்சனம் : கடந்த 9-7-89 அன்று சென்னை   அண்ணா சாலை மக்கா மஸ்ஜித் பேஷ் இமாம் அவர்கள் குர்ஆன் விளக்கவுரையின்  போது   உங்களைப்   பற்றி   ஒரு   சம்பவம்   கூறினார்.   அதாவது   லெப்பைகுடிக்  காட்டில்  (நான் தெரியவில்லை)  நீங்கள் ஒரு கூட்டத்தில் பேசியபோது  இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதி ஹத்தம்  செய்வது   கூடாது   என்று   கூறினீர்களாம். மறுநாள் ஒருவர்  உங்களிடம்  வந்து   தான்.  தனது  இறந்துபோன  தந்தையை   கனவில்  கண்டதாகவும் அவர் மெலிந்து காணப்பட்டதாகவும் கூறினாராம். அதற்கு நீங்கள் முந்தய நாள் வியாக்கியானத்திற்கு மாற்றமாக யாசீன் சூரா ஓதச் சொன்னீர்களாம்.

இது மெய்யா?   பொய்யா?   மெய்யாயிருப்பபின்   ஹத்தம் செய்யும் நோக்கத்துடன் யாசீன் ஓதச் சொன்னீர்களா? அல்லது வேறு காரணம் உண்டா? விளக்க வேண்டுகிறோம்.  ஏ. எஸ். அப்துல்கரீம், ஏ. ஷாகுல் ஹமீது, புதுப்பேட்டை, சென்னை.

விளக்கம் : லெப்பைக்குடி   காட்டிலோ   அல்லது உலகின் எந்தப் பகுதியிலோ இப்படி ஒரு சம்பவம் நடைபெறவுமில்லை; இறந்தவர்களுக்காக யாஸீன் சூரா   ஓதும்படி   நாம்   சொல்லவுமில்லை.   மனிதர்களின்   கனவைக்   காரணமாக வைத்து    மார்க்கச்  சட்டம் சொல்லும்  அளவுக்கு நாம் அறிவிலியுமல்ல. மக்கா மஸ்ஜித் இமாம் பச்சைப் பொய்யர்   என உறுதிபடக் கூறுகிறோம். அவர் உண்மையாளர் என்றால் ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டட்டும்.

விமர்சனம் : மக்காச்   சுடர்   ஜூன்’ 89  இதழ் பக்கம் 41-ல் “”நபி(ஸல்)   அவர்கள்   ரமழானில்   20 ரகா   அத்துகளும், வித்ரு3 ரகா அத்துகளும்    தொழுதார்கள்”   என்றதொரு    ஹதீஸ்    முஅத்தா    இமாம்   முஹம்மது   பைஹக்கீ,   இப்னு  அபீஷைபா ஆகிய கிதாபுகளில் இடம் பெற்றுள்ளதாக பாகம், பக்கம் முதல் கொடுத்து வெளியிட்டுள்ளார்களே? அந்த ஹதீஸின் நிலை என்ன?
ரபீக் அஹ்மது, சென்னை?3

விளக்கம் :  பொய்யையே   திரும்பத்   திரும்பச்  சொல்லி மக்களை ஏமாற்ற   வல்லவர்கள் முகல்லிது மவ்லவிகள் என்பதற்கு இது நல்லதொரு  சான்றாகும்.

மே ’86   நஜாத்   இதழில் இணைக்கப்பட்டிருந்த ரமழான் இரவுத் தொழுகை பற்றிய பிரசுரத்தின் 5-ம் பக்கம் மிகத் தெளிவாக இதுபற்றி வெளியிட்டிருந்தோம். அதனையே மீண்டும் இடம் பெறச் செய்கிறோம்.

ரமழான் தொழுகை 20 ரகாஅத் என்ற ஹதீஸ்களின் நிலை?

“”நபி(ஸல்) அவர்கள் ரமழானில் 20 ரகாஅத் தொழுததாக இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களைக் கொண்டு அறிவிக்கப்படுவதாக ஒரு இட்டுக்கட்டப்பட்ட   ஹதீஸ்   சில   கிதாபுகளில்   (சுமார்   9   கிதாபுகள்) காணப்படுகிறது. இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் வருகின்ற 1. அபீஷைபா இப்றாஹீம் இப்னு உஸ்மான்.

2.ஹகம் இப்னு உதைபா ஆகிய இருவரில் ஒருவர் காழியாக இருந்துள்ளார். மற்றவர் கூஃபாக்காரர் இந்த இருவரும் பொய்யாகள் என்று அஸ்மாவுர் ரிஜால் (அறிவிப்பாளர்களின் தகுதிகளை எடை போடும்) கலையில் வல்லுநர்கள் பலர் பதிவு செய்துள்ளனர்.

இமாம்களான ஷீஃபா,அஹ்மது, இப்னுமுயீன், புகாரீ, நஸயீபோன்றோர் இந்த இருவரையும்நல்லவர்களாக நேர்மையாளர்களாககணிக்கவில்லை. ஹதீஸ் கலை வல்லுநர்கள்   அனைவரும்   ஏகோபித்து   இந்த  ஹதீஸ்  அன்னை ஆயிஷா(ரழி) அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள ஆதாரப்பூர்வமான ஹதீஸுக்கு எதிராக இருக்கிறது என்று கூறி நிராகரித்திரிக்கிறார்கள். தேவ்பந்து ஆலிம்கள் பலரின்   நூல்களில் இந்த உண்மை தெளிவாக இருந்தும் அப்பாவி முஸ்லிம்களை இவர்கள் ஏன்தான் ஏமாற்றி வருகிறார்களோ தெரியவில்லை.

இவ்வளவு தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ள ஒரு இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸை மக்காச் சுடரில் இடம் பெறச் செய்வது கொண்டு, பொய்யர்களான   ராவிகளின்   பட்டியலில் மக்காச் சுடர் ஆசிரியர் தனது பெயரையும் பதிவு செய்து கொள்கிறார் போல் தெரிகிறது. அவரது “ஹலோ மிஸ்டர் ! அந்(?)நஜாத்’ திற்கு விளக்கம் தனிப் பிரசுரமாக இணைக்கப்பட்டுள்ளது.

 

Previous post:

Next post: