அந்நஜாத் பிப்ரவரி -1989

in 1989 பிப்ரவரி

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம்

அந்நஜாத்

இஸ்லாமிய  இலட்சிய  மாத  இதழ்

நோக்கம் : 3  விளக்கம் : 11

ரஜப்  : 1409    பிப்ரவரி -1989

இதழின் உள்ளே…..

                    *     அல்ஹம்துலில்லாஹ்!

*     நபிவழியில் நம்  தொழுகை!

*     நீங்கள் பிரிந்து விடவேண்டாம்!

*   வறுமையின் விபரீதங்கள்!

*    ஆய பயன் என்ன?

*   மெய்ப்பொருள் காண்போம், அவ்வழி நடப்போம்!

*    இஸ்லாமிய தஃவாப் பணியில் தனி நபர் பங்கு!

*    உணரப்படாத தீமை 2 – வட்டி

*    கீரனூர் கடிதம் – பதில்!

*    ஐயமும்! தெளிவும்!!

*    விமர்சனங்கள்!  விளக்கங்கள்!!

*********************************************************************

அல்ஹம்துலில்லாஹ்!

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபை கொண்டு, நம்முடைய அழைப்பை பலர் ஏற்றுள்ளனர். 1400 வருடங்களுக்கு முன் நபி(ஸல்) அவர்கள் அமைத்துக் காட்டிய அதே முறையில், ஒரே தலைமையின் கீழ் இஸ்லாமழிய நெறியை முற்றிலும் கடைபிடித்தொழுகுகிறேன். அதனை அகில உலகிற்கும் அறிமுகப்படுத்தி, அகில உலக முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்றிணைக்கச் செய்யப்படும் முயற்சியில் ஒன்றுபட்டுச் செயல்படத் தயாராக இருக்கிறோம். என உள் நாட்டிலிருந்தும்,வெளி நாடுகளிலிருந்தும் கடிதங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. சமுதாயத்திற்குப் பணி செய்திட சில இயக்கங்களில் ஆர்வமுடன் ஈடுபட்ட சில சகோதரர்களிடமிருந்து வரும் கடிதங்கள் இயக்க மாயையை விட்டு விடுபட்டு வருகிறார்கள் என்பதைக் காட்டுகின்றன.

15 வயதிற்கு உட்பட்ட சகோதரர்கள் சிலரிடமிருந்து வரும் கடிதங்கள். நமக்கு நபி(ஸல்) அவர்களின் காலத்தை நினைவூட்டுகின்றன. நாங்கள் இந்த முயற்சியில் இணைந்து செயல்படவும், அதற்காக எங்கள் உயிரைத் தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறோம். ஆனால் இப்போதைக்கு இதை இரகசியமாக வைத்திருங்கள். எங்கள் பெற்றோர்க்குத் தெரிந்தால் சிரமங்கள், முட்டுக்கட்டைகள் ஏற்படும் என அவர்கள் எழுதி இருப்பது, நமது முயற்சிகளுக்கு நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது. நபி(ஸல்) அவர்களின் காலத்தில் முஸ்அப்பின் உமைர்(ரழி) என்ற நபித் தோழரும் இதே நிலையில்தான் இருந்தார்கள். அதன்பின் தன் பெற்றோர், உற்றார், சொத்துகட்கள் அனைத்தையும் தியாகம் செய்து விட்டு, நபி(ஸல்) அவர்களிடமட் வந்து தன்னை மார்க்கப் பிரச்சாரம் செய்தார்கள். அவர்களின் பெரும் முயற்சிகள் மதீனாவில் இஸ்லாம் பரவுவதற்கும், நபி(ஸல்) அவர்களின் ஹிஜ்ரத்திற்கும் வழிகோலின. இறுதியில் பஞ்சை பராரியாகவே உஹது யுத்தத்தில் ஷஹீதானார்கள். இப்படிப்பட்ட தீரமிக்க எண்ணமுடைய இளைஞர்கள் இன்றும் இருப்பது, அவர்களைக் கொண்டு நமது, இந்த முயற்சி முன்னேறிச் செல்லும் எனட்ற திட நம்பிக்கையைத் தருகின்றது.

20-ம் நூற்றாண்டின் சீரிய சிந்தனையாளர்களில் ஒருவரான மெளதூதி அவர்களின் கூற்று ‘சமரசம்’ 1-15 பிப்ரவரி ’89 தலையங்கத்தில் இடம் பெற்றுள்ளது. அதன் ஒரு பகுதி நமது முயற்சிக்கு வலுவூட்டுகிறது : அது வருமாறு.

‘தன்னலம், தீவிரவாதம் ஆகியவற்றிலிருந்து பரிசுத்தமாயிருந்தால் தூய்மையான எண்ணத்துடன் அடிப்படை இஸ்லாமிய நோக்கத்திற்காக இஸ்லாமிய முறையில் பணியாற்றினால், சத்திய வழியில் நடக்கும் அந்த ஜமாஅத்துகள் இறுதியில் ஒன்றுபட்டு விடும். சத்திய வழியில் நடப்பவர்கள் அதிக காலம் பிரிந்திருக்க முடியாது. சத்தியம் அவர்களை ஒன்றுபடுத்தியே தீரும். ஏனெனில் சத்தியத்தின் இயல்பு, ஒற்றுமை பரஸ்பர அன்பு, ஏகத்துவம், ஐக்கிய உணர்வு ஆகியவற்றுக்கு இட்டுச் செல்வதாய் இருக்கிறது.

மெளதூதி போன்றோர்களின் கூற்று நனவாகும் காலம் கனிந்து வருகிறது. அதை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள அனைவரையும் அழைக்கிறோம்.’

***********************************************************************

நபி வழியில் நம் தொழுகை –  தொடர் – 26  – அபூ அப்திர் ரஹ்மான்

நபியே! சொல்வீராக! நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாயிருப்பின் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை நேசிப்பான் மேலும் உங்களுக்கு, உங்கள்  பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னித்து கிருபை செய்பவனாக இருக்கிறான்.  (அல்குர்ஆன் 3:31)

என்னைத் தொழக் கண்டவாறே நீங்கம் தொழுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (மாலிக்பின் ஹுவைரின்(ரழி), புகாரீ, முஸ்லிம்.

சென்ற ஜனவரி 89 இதழில் இரண்டாவது ரகாஅத்திற்காக கைகளை எவ்வாறு ஊன்றி எழவேண்டும்? இரண்டாம் ரகாஅத்தை எவ்வாறு தொழ வேண்டும்? அதில் கிராஅத்தை எதைக் கொண்டு துவங்க வேண்டும்? நடு இருப்பு, அதில் அமரும் முறை, இருப்பின்போது எந்த விரலால், எவ்வாறு சமிக்கை செய்ய வேண்டும்? விரலை அசைப்பதனட் பலன், ஆகியவற்றின் விபரங்களைப் பார்த்தோம்.  இன்ஷா அல்லாஹ் இவ்விதழில் அடுத்துள்ள நிலைகளைப் பார்ப்போம்.

நடு இருப்புக்காக அமருவதும், அதில் “தஷஹ்ஹுது’ (அத்தஹிய்யாத்) ஓதுவதும் சுன்னத்து :

நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு இரண்டு ரகாஅத்துகளிலும் ‘அத்தஹிய்யாத்’ ஓதிக் கொண்டிருந்தார்கள். (அவற்றின் இருப்பின்போது)  தமது இடது கலலை மடித்து அதன்மீது உட்கார்ந்து வலது காலை (அதன் பாதத்தை) தட்டிக் கொள்வார்கள். (ஆயிஷா(ரழி), முஸ்லிம்)

நடு இருப்பில் ஓதப்படும் ”அத்த ஹிய்யாத்து”வின் வாசகம் :

அத்த ஹிய்யாத்து – லில்லாஹி – வஸ்ஸலவாத்து – வத்தய்யிபாத்து – அஸ்ஸலாமூ -அலைக்க – அய்யுஹன்னபிய்யு – வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ – அஸ்ஸலாமு – அலைனா – வஅலா – இபாதில்லாஹிஸ் – ஸாலிஹீன் – அஷ்ஹது – அல்லா – இலாஹ – இல்லல்லாஹு – வஅஷ்ஹது – அன்ன – முஹம்மதன் – அப்துஹூ – வரசூலுஹூ.

பொருள் : சொற்செய்ல்பொருள் சம்பந்தப்பட்ட அனைத்து வணக்க வழிபாடுகளும் அல்லாஹ்வுக்கே உரித்தானவை. நபியே! உங்கள் மீது ஸலாம் உண்டாகுக! மேலும் அல்லாஹ்வின் அருளும், அபிவிருத்தியும் உண்டாகுக! எங்கள் மீதும், அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீதும், ஸலாம் உண்டாகட்டும்! வணங்கி வழிபடுவதற்கு உரித்தானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று உறுதிமொழழி கூறுகிறேன். மேலும் நிச்சயமாக முஹம்மது (ஸல்) அவர்கள், அலட்லாஹ்வின் அடியாரும் தூதருமென்று உறுதிமொழி கூறுகிறேன்.

‘அத்த ஹிய்யாத்து’வின் வாசகங்கள் பல்வேறு ஸஹாபாக்களின் வாயிலாக பல்வேறு அமைப்புகளில் ஹதீஃத்களில் இடம் பெற்றிருப்பினும், இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்களின் மூலம் அறிவிக்கப்பட்டு, புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜ்ஜா, அஹ்மத் ஆகிய அனைத்து நூல்களிலும் இடம் பெற்றுள்ள மேற்காணும் ‘அத்த ஹிய்யாத்து’வின்ட வாசகமே மிகமிக ஸஹீஹானதும், ஆதாரப்பூர்வமானதுமாகும். இதனையே பெரும்பாலான ஸஹாபாக்களும், தபாயீன்களும் ஓதி வந்துள்ளார்கள்.

‘அத்த ஹிய்யாத்து’ பற்றி இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்களின் விமர்சனம் :

நபி(ஸல்) அவர்கள் தமது இருகரங்களுக்கு மத்தியில், எனது கை இருக்கும் நிலையில் குர்ஆனுடைய சூராவைக் கற்றுத் தருவது போல் எனக்கு ‘தஷஹ்ஹுது’ (அத்த ஹிய்யாத்து)வைக் கற்றுத் தந்தார்கள். (இப்னு மஸ்ஊத்(ரழி), நஸயீ, அஹ்மத்)

மேற்காணும் இப்னுமஸ்ஊத்(ரழி) அவர்களின் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள ‘அத்த ஹிய்யாத்து’க்கு அடுத்தபடியாக ஸஹீஹானதும், மிழக நம்பகமானதும் இப்னு அப்பாஸ்(ரழி), அவர்களின் வாயிலாக அறிவிக்கப்பட்டு, ஸஹீஹ் முஸ்லிம், நஸயீ ஷாபியீ, அபூ அவானா ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளதாகும்.

இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள ‘அத்த ஹிய்யாத்து’

அத்த ஹிய்யாத்துல் – முபாரகாத்துஸ் – ஸலவாத்துத் – தய்யிபாத்து லில்லாஹி – அஸ்ஸலாமு அலைக்க – அய்யுஹன் – னபிய்யு – வரஹ்மத்துல்லாஹி – பரகாத்துஹூ – அஸ்ஸலாமு அலைனா – வஅலா – இப்தில்லாஹிஸ் – ஸாலிஹீன் – அஷ்ஹது – அல்லா – இலாஹ – இல்லல்லாஹு – வஅஷ்ஹது – அன்ன – முஹம்மதர் – ரசூலுல்லாஹி.

இந்த ‘அத்த ஹிய்யாத்து’ இடம் பெற்றுள்ள மற்றொரு அறிவிப்புத் தொடரில், ‘வஅஷ்ஹது அன்ன முஹம்மதர் – ரசூலுல்லாஹி’ எனும் வாசகத்திற்குப் பகரமாக வஅஷ்ஹது அன்னமுஹம்மதன் அப்துஹூ – வரசூலுஹூ’ என்றும் உள்ளது. ஆகவே இவ்வறிவிப்பின்படி இவ்வாறும் ஓதிக் கொள்ளலாம் என்பதை உணருகிறோம். இதன் பொருள் சற்றேறத்தாழ முந்தைய  ‘அத்தஹிய்யாத்து’வின் பொருளை ஒத்ததாகவே உள்ளது.

நடு இருப்பில் அத்த ஹிய்யாத்துடன் ஸலவாத்தை இணைத்தோதுவதன் நிலை :

நபி(ஸல்) அவர்கள் முந்தைய இரண்டாவது ரகாஅத்தில் உட்காரும் சமயம் சூடான கல்லின் மீது அமருவதுபோல் அமர்ந்து, (அத்த ஹிய்யாத்தில் அப்துஹு வரசூலுஹு வரை ஓதிவிட்டு சுணக்கமின்றி) உடன் எழுந்து விடுவார்கள். (அபூ உபைதாபின் அப்தில்லாஹிப்னி மஸ்ஊத்(ரழி), அபூதாவூத், திர்மிதீ, நஸயீ.

இவ்வறிவிப்பில் அபூஉபைதா(ரழி) அவர்கள், தமது தந்தை இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்களிடம் தாம் இதைச் செவியுற்றதாக அறிவித்துள்ளார்கள். ஆனால் இவர்களைப் பற்றி ஹதீஃத் கலாவல்லுநர்கள் குறிப்பிடும்போது, தமது தந்தை இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்களை இவர்கள் சந்தித்து கேட்டிருப்பதற்கான வாய்ப்பிழந்தவர்கள் என்று கூறியுள்ளார்கள்.

ஆகவே இந்த அறிவிப்பு ‘முன்கதிஃ’ (ஸனதில் துண்டிப்பு ஏற்பட்ட அறிவிப்பு எனும் வகையில் பலகீனமான அறிவிப்பின் தரத்தை அடைகிறது என்று ஹதீஃத் கலாவல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

சிலர் கடைசி இருப்பில் அந்த ஹிய்யாத்துக்குப்பின், ஸலவாத்தை இணைத்தோதுவதுபோல், அதே அடிப்படையில் நடு இருப்பிலும் அத்த ஹிய்யாத்தில் ‘அப்துஹு வரசூலுஹு’ வரை ஓதிவிட்டு அத்துடன் ‘அல்லாஹும்ம ஸல்லிஅலா முஹம்மத்’ என்று ஓதுவது சுன்னத்து என்பதாகவும் கூறுகிறார்கள். ஆனால் அவர்களின் இக்கூற்றிற்குப் போதுமான ஆதாரம் ஹதீஃத்களில் கிடையாது என்பது தெளிவு. எனினும் இதற்கு மாறாக இப்னு குஜைமா, முஸ்னத் அஹ்மத் ஆகிய நூல்களில் ஒரு ஹதீஃத் இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்களின் வாயிலாக இடம் பெற்றுள்ளது. அதாவது:

நபி(ஸல்) அவர்கள் தொழுகையின் நடு இருப்பிலும், கடைசி இருப்பிலும்,  ‘அத்த ஹிய்யாத்து’வை, ‘அப்துஹூ வரசூலுஹூ’ வரை ஓதுவார்கள். ஆனால் நடு இருப்பில் ‘தஷஹ்ஹுது’ (அப்துஹு வரசூலுஹு முடிய) ஓதி முடிந்தவுடன், எழுந்துவிடுவார்கள். கடைசி ரகாஅத்தின்போது, தமது ‘தஷஹ்ஹுது’வுக்குப் பிறகு (அத்த ஹிய்யாத்தில் ‘அப்துஹு வரசூலுஹு’ என்று ஓதி முடிந்த பிறகு) அல்லாஹ் அவர்களை துஆ செய்யும்படி நாடியுள்ளவற்றைக் கொண்டு துஆ செய்துவிட்டு, பின்னர் ஸலாம் கொடுப்பார்கள். (இப்னு மஸ்ஊத்(ரழி), இப்னு குஜைமா, அஹ்மத்)

மேற்காணும் இவ்வறிவிப்பில் நபி(ஸல்) அவர்கள் நடு இருப்பின் போது, ‘அத்த ஹிய்யாத்து’வில், அப்துஹூ வரசூஹூ வரை ஓதி முடிந்தவுடன். ஸலவாத்து, துஆ போன்றவை எவற்றையும் ஓதாத, உடனே அடுத்த ரகாஅத்துக்காக எழுப்பியுள்ளார்கள் என்பதையும், மேலும் அவர்கள் இந்த கட்டத்தில் ஸலவாத்து போன்று எதனையும் தாம் ஓதிக்கொண்டிருக்கவில்லை என்பதையும் அறிகிறோம்.

அவ்வாறு எவரும் ‘அப்துஹூ வரசூலுஹூ’வுக்குப் பிறகு ‘அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மத்’ என்பதாக ஓதிவிட்டால் அதற்காக ‘ஸஜ்தா ஸஹ்வு’ செய்யவேண்டுமட் என்று சிலர் கூறுகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறுவதற்கு ஹதீஃதின் அடிப்படையில் எவ்வாதாரமும் கிடையாது.

நடு இருப்பிலிருந்து எழும் முறை :

முதலாம் ரகாஅத்திலிந்து எழும்போது, கைகளைத் தரையில் ஊன்றி எழும்புதல், அவ்வாறு அவற்றை ஊன்றாமல், முட்டுக்கால்கள் மீது கைகளை வைத்து ஊன்றி எழும்புதல் ஆகிய முறைகள் இரண்டுமே ஸஹீஹான ஹதீஃத்களில் உள்ளவையாயிருப்பதால், இவ்விருமுறைகளில் ஒன்றின்படி அமல் செய்து கொள்ளலாம்.

நடு இருப்பிலிருந்து எழும்போது, தக்பீர் கூறி, நிலைக்கு வந்த பின் கைகளை உயர்த்துதல் :

அபூகதாதா(ரழி) அவர்கள், நபி(ஸல்) அவர்களின் தொழுகையை வர்ணித்தபோது பின் வருமாறு கூறியுள்ளார்கள். நபி(ஸல்) அவர்கள் இரண்டாவது ரகாஅத்திலிருந்து எழும்போது தக்பீர் கூறி, தமது இரு கைகளையும் உயர்த்தி (கட்டி)னார்கள். (அபூதாவூத், திர்மிதீ)

தொழுகையின் 4 சந்தர்ப்பங்களில் மட்டுமே கைகளை உயர்த்துவது சுன்னத்து :

1. முதல் தக்பீரின்போது, 2. ருகூவுக்காக குனியும்போது. 3.ருகூஃவிலிருந்து தலையை உயர்த்தும்பொது,  4. நடு இருப்பிலிருந்து எழுமட்பி நிற்கும்போது,

இப்னு உமர்(ரழி) அவர்கள் தொழுகையைத் துவங்கும்போது, தமது இரு கைகளையும் உயர்த்தி தக்பீர் கூறுவார்கள். அடுத்து ருகூஃவுக்குச் செல்லும்போதும் தமது கைகளை உயர்த்துவார்கள். பின்னர் ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ என்று கூறும்போது தமது கைகளை உயர்த்துவார்கள். மேலும் இரண்டாம் ரகாஅத்தை விட்டு எழும்போதும் தமது கைகளை உயர்த்துவார்கள். (புகாரீ, அபூதாவூத், நஸயீ)

இவ்வாறே நபி(ஸல்) அவர்கள் செய்துள்ளார் என்று இப்னு உமர்(ரழி) அவர்கள் அறிவித்துள்ளதாக ஹம்மாதுபின் ஸலமா அவர்களின் ஓர் அறிவிப்புத் தொடரிலும் இடம் பெற்றுள்ளது. (புகாரீ)

முதலாவது ரகாஅத்து, மூன்றாவது ரகா அத்துகளிலிருந்து எழும்போதும் கைகளை உயர்த்துவது சுன்னத்தா?

நபி(ஸல்) அவர்கள் ருகூஃ செய்துவிட்டு தமது இரு கைகளையும் உயர்த்துவார்கள். (இவ்வாறே) ஸஜ்தா செய்த பின்னரும் (உயர்த்துவார்கள்) என்பதாக ஒரு அறிவிப்பை இமாம புகாரீ(ரஹ்) அவர்கள் தமது ‘ரஃப்உல்யதைன்’ எனும் கிதாபில் எடுத்துக் கூறிவிட்டு, இவ்வறிவிப்பு பலகீனமானது என்பதாக குறிப்பிடுகிறார்கள்.

இவ்வாறே நபி(ஸல்) அவர்கள், இரண்டு ஸஜ்தாக்கள் செய்துவிட்டு எழும்போதும் தமது கைகளை உயர்த்துவார்கள்.  என்பதகாக ஓர் அறிவிப்பு அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது. ஆனால் இவ்வறிவிப்பின் முன்பின் தொடர்களை உற்றுநோக்கும்போது, இரண்டு ரகாஅத்துகளை முடித்துவிட்டு எழும்பொது என்பதற்கு பதிலாக, அதன் ஸ்தானத்தில் இரண்டு ஸஜ்தாக்களைச் செய்துவிட்டு எழும்போது என்னும் வாசகம் இடம் பெற்றுள்ளது என்பதாக ஹதீஃத் கலாவல்லுநர்கள் ஒருமித்த கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

ஆகவே ஹதீஃத் கலையில் போதிய அனுபவமற்ற ஒரு சிலரே மேற்காணும் இரு அறிவிப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு எல்லா ரகாஅத்துகளிலிருந்து எழும்போதும் கைகளை உயர்த்துவது சுன்னத்து என்று கூறுகின்றனர். இது முறையல்ல. இவ்வாறு கைகளை உயர்த்துவதற்குப் போதுமான சான்று ஹதீஃத்களில் கிடையாது.

ருகூஃவிலிருந்து தலையை நிமிர்த்தும்போது கைகளை உயர்த்துவதா? அல்லது நிலைக்கு வந்தபின் உயர்த்துவதா?

நபி(ஸல்) அவர்கள் தொழுகையை துவங்கும்போது, தமது கைகளை புஜம் வரை உயர்த்திக்கொண்டிருந்தார்கள். ருகூஃவுக்கு தக்பீர் கூறும்போதும், ருகூஃவிலிருந்து தமது தலையை உயர்த்தும்போதும் இவ்வாறே இரு கரங்களையும் உயர்த்தி, ‘ஸமிஅல்லாஹுலிமன ஹமிதஹ் – ரப்பனா லக்கல் ஹம்து’ என்று கூறுவார்கள். (இப்னு உமர்(ரழி), புகாரீ, முஸ்லிம்.

இவ்வறிவிப்பில் ருகூஃவிலிருந்து எழும்போதே கைகளை நபி(ஸல்) அவர்கள் உயர்த்தியுள்ளார்கள் என்பதைக் காணுகிறோம்.

பிறகு தமது தலையை (ருகூஃவிலிருந்து) உயர்த்தி, ‘ஸமி அல்லாஹு லிமன் ஹிமிதஹ்’ என்று கூறிவிட்டு பின்னர் தமது இரு கைகளைத் தமது இரு  புஜங்களுக்கு நேராக சரியாக உயர்த்துவார்கள்.  (அபூஹுமைது(ரழி), அபூதாவூத், திர்மிதீ, தாராமீ)

இவ்வறிவிப்பில் ருகூவிலிருந்து நிமிர்ந்து, பின்னர் தமது கைகளை உயர்த்தியுள்ளார்கள் என்பதைக் காணுகிறோம். ஆகவே ருகூவிலிருந்து எழும்போது கைகளை உயர்த்தவேண்டும் என்பதற்கும், எழும்பி நின்ற பிறகுதான் கைகளை உயர்ந்த வேண்டும் என்பதற்கும் மேற்கண்ட அறிவிப்புகளைப் போன்று இன்னும் பல அறிவிப்புகள் உள்ளன. இவை அனைத்துமே ஸஹீஹானவையாயிருப்பதால் இவ்விரு முறைகளில் ஒன்றின்ப அமல் செய்து கொள்ளலாம் என்பதை அறிகிறோம்.

மூன்றாவது, நான்காவது ரகாஅத்துகளில் கிராஅத் ஓதும் நிலை :

பர்ளான தொழுகையாயிருப்பின் மூன்றாம், நான்காம் ரகாஅத்துகளில் சூரத்துல் ஃபாத்திஹா மட்டும் ஓதுவது பர்ளு – அவசியமாகும், பர்ளு அல்லாத சுன்னத்து, நபிலான தொழுகைகளாயிருப்பின் சூரத்துல் ஃபாத்திஹாவுக்குப் பின் மற்றொரு சூராவைச் சேர்த்தோதுவது சுன்னத்தாகும் எனும் விபரம் அந்நஜாத் 88 ஜூலை இதழில் விரிவாகத் தரப்பட்டுள்ளது.

கடைசி இருப்பு :

தொழுகையின் இறுதியில் இடம் பெற்றுள்ள இவ்விருப்பு,தொழுகைகளின் பர்ளு – முக்கிய கடமைகளில் ஒன்றாகும். ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் தமது அனைத்து தொழுகைகளிலும் இதை கடைபிடித்து வந்திருப்பதுடன், என்னைத் தொழக் கண்டவாறே நீங்களும் தொழுங்கள் என்றும் கூறியுள்ளார்கள். (மாலிக் பின் ஹுனவரிஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்)

கடைசி இருப்பில் அமரும் முறை :

நான் மதீனா வந்தவுடன் (நபி(ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு உள்ளது என்பதை நேரில் பார்க்கவேண்டும் என்று கருதி) நிச்சயமாக நான் (இன்று) நபி(ஸல்) அவர்களின் தொழுகையை உற்று நோக்கிக் கொண்டு) இருந்தேன்.

நபி(ஸல்) அவர்கள் “தஷஹ்ஹுது” (அத்த ஹிய்யாத்து)க்காக உட்காரும்போது இடது காலை மடித்து (அதில்) உட்கார்ந்து இடக் கையைத் தமது இடது தொடை மீது வைத்துக்கொண்டு வலது காலை (அதன் பாதத்தை) நட்டி வைத்துக் கொண்டார்கள். (வாயிலுபின் ஹுஜ்ரு(ரழி), திர்மிதீ)

நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு இரண்டு ரகாஅத்துகளிலும் ‘அத்தஹிய்யாத்து’ ஓதுவதுடன் தமது இடது காலை மடித்து (அதில் உட்கார்ந்து, வலது காலை (அதன் பாதத்தை) தட்டிக் கொள்வார்கள். (ஆயிஷா(ரழி), முஸ்லிம்)

மேற்காணும் இவ்விரு ஹதீஃத்களும் தொழுகையின் நடு இருப்பு மட்டுமின்றி, கடைசி இருப்பில் அமரும்பொதும், இடது காலை மடித்து அதன் மீது உட்கார்ந்து, வலது காலின் பாதத்தை நட்டி வைத்துக் கொள்ளவேண்டும் என்பதைக் காட்டுகின்றன. 

இன்ஷா அல்லாஹ் தொடரும்…..

*************************************************************************

குர்ஆனின் நற்போதனைகள்

நீங்கள் பிரிந்து விட வேண்டாம்  -தொடர் – 4  – தொகுப்பு A. முஹம்மது அலி, M.A., M.Phil.,

1. உங்களுக்காக அல்லாஹ் இஸ்லாத்தை மார்க்கமாக பொருந்திக் கொண்டான். (5:3)

2. இந்த தீனுல் இஸ்லாத்தில் அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. இதுதான் உங்கள் பிதாவாகிய இப்ராஹிமுடைய மார்க்கமாகும். அவன் (அல்லாஹ்) தான் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். (22:78)

3. எவர் அல்லாஹ்வை (அவனது மார்க்கத்தை) வலுவாகப் பற்றிக் கொள்கிறாரோ, அவர் நிச்சயமாக நேர்வழியில் செலுத்தப்பட்டார். (3:101)

4. நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை (குர்ஆனை) வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள். (3:103)

5. நீங்கள்(அனைவரும் இஸ்லாம் என்னும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள். அதில் நீங்கள் பிரிந்து விடாதீர்கள். (42:13)

6. நிச்சயமாக (இஸ்லாம்) இதுவே என்னுடைய நேரான வழியாகும். ஆகவே இதனையே பின்பற்றுங்கள். இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் – அவை உங்களை அவனுடைய வழியை விட்டுப் பிரித்து விடும். நீங்கள் (நேர்வழியான இஸ்லாத்தைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அல்லாஹ் உங்களுக்கு போதிக்கிறான். (6:153)

7. அவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி(பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ (அவர்களாகி விடவேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள். (30:32)

8. அவர்களோ தம் காரியத்தில் சிதறுண்டு, தமக்கிடையே பல பிரிவுகளாய்ப் பிரிந்து, ஒவ்வொரு “பிரிவினரும் தம்மிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்ச்சியடைபவர்களாய் இருக்கின்றனர். (23:53)

9.  எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் பிருப்பப்படி பலவாறாகப் பிரித்து பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ, அவர்களுடன், (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை. அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடம் உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்க அறிவிப்பான். (6:159)

10.  இறைவனின் தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும் யார் தங்களுக்குள் பிரிவையுண்டு பண்ணிக்கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் மாதிரி ஆகிவிடாதீர்கள், அத்தகையோருக்குக் கடுமையான வேதனையுண்டு. (3:105)

எனவே குர்ஆன், ஹதீஃத் போதிக்கும் சகோதர, சகோதரிகளே!

11. நம்பிக்கையாளர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக  நுழைந்து விடுங்கள். (2:208)

12. அல்லாஹ் அளவில் (மக்களை) அழைத்து (தாமும்) நற்செயல்கள் செய்து, நிச்சயமாக நான் முஸ்லிம்களில் உள்ளவன், எனட்று சொல்பவனைவிட சொல்லால் அழகியவன் யார்?  (41:33)

(அடுத்த தொடர் : நீங்கள் பிரித்து வேறுபடுத்த வேண்டாம்)

*************************************************************************

பொருளியல் – வறுமையின் விபரீதங்கள்!  – இறையடிமை

வறுமைக்கு அஞ்சி நபி முஹம்மது(ஸல்) அல்லாஹ்விடம் “இறைவனே! வறுமையிலிருந்தும், பசியிலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்”. (அபூதாவூத்) என்றும் “இறைவனே வறுமையிலிருந்தும் கேவலத்திலிருந்தும் என்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்”. (அபூஹுரைரா(ரழி), அபூதாவூது, நஸயீ, இப்னு மாஜா) என்றும் இறைஞ்சினார்கள். வறுமை மற்றும் பசியின் கொடுமையை இளம் பருவத்திலிருந்து அனுபவித்த நபி(ஸல்) அவர்கள் “அவை” தனது உம்மத்தாரை (பின்பற்றுவோரை) அணுகக் கூடாது என்பதற்காக அருமையானத் திட்டங்களை அழகாகக் காட்டினார்கள்.

வறுமையின் இயல்புகள்

1. இறை மறுப்பின்பால் இட்டுச் செல்ம் அபாயம்!

வறுமையின் தன்மையை அதன் முழு இயல்போடு அறிந்து கொள்வது அதனைத் துடைத்தெரிய பெருந்துணை புரியும். நபி(ஸல்) அவர்கள் வறுமை, பசி ஆகியவற்றிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடினார்கள் என்றால், காரணம் வறுமையினால் உண்டாகும் பசியின் குரல் மனசாட்சியின் குரலை விட ஓங்கி ஒலிக்கிறது. மறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கின்ற மனிதன் அதற்குரிய காரணங்களை ஆராய்கின்றான். தன்னைச் சுற்றி செல்வத்தில் வாழ்கின்ற பிற மனிதர்களைப் பார்க்கும்போது முதலில் அவனுக்கு பொறாமை ஏற்படுகின்றது. “செல்வந்தனும் நானும் ஒன்றாகத்தானே இருக்கின்றோம். பிறகு “ஏன் இந்த வித்தியாசம்? அவன் பணக்காரப் பெற்றோருக்குப் பிறந்திருக்கின்றான். நானோ ஏழைப் பெற்றோர்களுக்குப் பிறந்திருக்கிறேன். என்னைப் படைத்தவனே இவ்வாறு வித்தியாசத்தில் தானே படைத்திருக்கின்றான்! ஏன் என்னை இவ்வாறு துன்பத்தில் ஆழ்த்தவேண்டும்? நான் என்ன தவறு செய்தேன்? இவ்வாறு அவன் சிந்திக்கின்றபோது இறை மறுப்பாளனாகிய நாத்திகன் அவனை நோக்கி இறைவனும் இல்லை. எவரும் இல்லை! இறைவனை நம்பாதே! உனது வறுமைக்கு பிற மனிதர்களின் ஏமாற்றுதலே காரணம்! நீயும் விரைந்து முன்னேறு! என்று தன் பக்கம் இழுக்க முயற்சி செய்கின்றபோது கடும் வறுமையில் இருப்பவனுக்கு நாத்திகனின் கூற்றில் உண்மை இருப்பது போலத் தோன்றுகின்றது. உடனே இறைவனிடம் குறை காண முற்படுகின்றான். இறைவன் தன்னை ‘அநியாயமாக துன்பத்தில் ஆழ்த்தி விட்டதாக நினைக்கத் தொடங்கிவிடுகின்றான்!.

எப்படியேனும் பெரும் பொருள் திரட்டி செல்வந்தனாகிவிட முயற்சி செய்கின்றான். அப்போது நியாய, அநியாயம் அவன் கண்களுக்கு தெரிவதில்லை. எல்லா வகையான தீய மற்றும் மோசடி செயல்களைத் தயக்கமின்றி செய்யத் தலைப்படுகின்றான். கடைசியில் தான் சேகரித்த பெருஞ் செல்வத்தை ஆடம்பரம். கெளரவம், பெருமை, புலனின்பம் போன்றவைகளுக்காக செலவும் செய்கின்றான். இவ்வாறு அவன் முழுமையான இறைமறுப்பாளனாக (காஃபிராக) ஆகிவிடுகின்றான். இவ்வுதாரணம்  எல்லா ஏழைகளுக்கும் பொருந்தாது. சிலர் செல்வம் சேர்க்கின்றவரை எவ்வாறாவது சேர்த்துவிட்டு பிறகு தான், தருமங்கள் செய்து தனது மனப்புண்ணுக்கு மருந்திட்டுக் கொள்வார். வேறு சிலருக்கு ‘முதுமை’ அல்லது ‘பெருநோய்’ கண் திறப்பானாக இருக்கும்.

அல்லாஹ்வின் செல்வப் பங்கீடு :

ஆனால் உண்மையில் இறைவன் சிலருக்கு அதிக செல்வத்தை அளிக்கிறான்.  சிலருக்குக் குறைத்துக் கொடுக்கின்றான். ‘அன்றி, நாங்கள் அதிகமான பொருள்களையும், சந்ததிகளையும் உடையவர்கள், ஆகவே (மறுமையில்) நாங்கள் வேதனை செய்யப்படமாட்டோம்’ என்று கூறினார்.

(அதற்கு நபியே!) நீர் கூறும்! நிச்சயமாக என் இறைவன், தான் நாடியவர்களுக்குப் பொருளை விரிவாகக் கொடுக்கின்றான். (தான் நாடியவர்களுக்கு) அளவோடும் கொடுக்கின்றான். எனினும் மனிதரில் பெரும்பாலோர் (அதன் கருத்தை) அறிந்து கொள்வதில்லை’. (அல்குர்ஆன் : 34:35.36)

அருளாளனாகிய அல்லாஹ் ஏன் இவ்வாறு செல்வப் பகிர்வு (Wealth Distribution) செய்கின்றான்? இறைவன் தான் நாடியவர்களுக்குப்பொருளை விரிவாகக் கொடுக்கின்றான் என்றால் அவர்களுக்கு இம்மை மறுமை நன்மைகளைக் கொடுக்கின்றான் என்று பொருள் கொள்ளலாமா? அப்படி பொருள் கொள்ளக் கூடாது! ஏனெனில் அடுத்த வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான். உங்களை நமக்கு நெருங்கியவர்களாக்குவது (நீங்கள் எண்ணுகிறவாறு) உங்குளுடைய பொருள்களோ, சந்ததிகளோ அல்ல. ஆனால் விசுவாசங்கொண்டு நற்கருமங்கள் செய்கின்றவர்களேயாவர். இத்தகையோருக்குத் தான் அவர்கள் செய்த (நல்) வினையின் காரணமாக இரட்டிப்பான கூலி உண்டு. அவர்கள் (சுவனபதியிலுள்ள) மேல் மாடிகளில் நிம்மதியாக வசிப்பார்கள். (அல்குர்ஆன் : 34:37)

செல்வம் ஒரு சோதனை :

பின் எதற்காக அல்லாஹ் சிலருக்கு கூட்டியும், சிலருக்கு சுருக்கியும் கொடுக்கின்றான்?  பதில் அல்லாஹ்வே கூறுகின்றான்! அன்றி உங்களுடைய பொருட்களிலும், உங்களுடைய சந்ததிகளிலும், (உங்களுக்கு)) பெரும் சோதனை இருக்கின்றன என்பதையும் நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் (உங்களுக்கு) மகத்தான வெகுமதியுண்டு என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 8:28, 64:15)

எனவே பெருஞ்செல்வம் கொடுக்கப்பெற்றவன் பெருஞ் சோதனைக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும் என்பது அல்லாஹ்வின் அறிவுரை! பெருஞ் செல்வத்தில் என்ன சோதனை இருக்கின்றது? உங்களை அவன் எதற்கு (உரிமையுடைய பிரதிநிதிகளாக்கினானோ அதிலிருந்து (தானமாகச்) செலவு செய்யுங்கள். (அல்குர்ஆன் 57:7)

இக்கருத்துக்கு மாற்றமாக அம்மனிதன் வாழ்கின்றானா அல்லது இக்கருத்துக்கு உட்பட்டு வாழ்கின்றானா என்பதுதான் செல்வந்தருக:கு கொடுக்கப்பட்டிருக்கின்ற முதல் சோதனையாகும். செல்வந்தர்களுக்கு அல்லாஹ் அளித்தவற்றிலிருந்து வீண் செலவு செய்யக் கூடாது என்பது மற்றொரு சோதனை.

வீண் விரயம் தடுக்கப்பட்டது :

ஆதமுடைய மக்களே! தொழும் இடத்திலெல்லாம் ஆடைகளினால்! உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள். (இறைவன் உங்களுக்கு அனுமதித்தவ்றை) நீங்கள் புசியுங்கள். பருகுங்கள், எனினும் (அவற்றில்) அளவு கடந்து (வீண்) செலவு செய்யாதிர்கள். ஏனென்றால் அல்லாஹ் வீண் விரயம் செய்வோரை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 7:31)

……அல்லாஹ்வுடைய வரம்புகளைப் பேணி நடப்போரும், ஆகிய இத்தகைய உண்மை விசுவாசிகளுக்கு நீர் நன்மாராயம் கூறுவீராக! (அல்குர்ஆன் 9:112) தான் யாருக்குக் கொடுக்க வேண்டும்ட என்று அல்லாஹ் அறுதியிட்டுக் கூறுகின்றானோ அவர்களுக்குப் பொருளை செல்வந்தர்கள் கொடுக்கின்றார்களா? என்பது மற்றொரு சோதனைஃ சுருங்கக் கூறின் செல்வம் சேர்ப்பதிலும் அதனைச் செலவு செய்வதிலும் மரணத்திற்குப் பின்பு வாரிசுகளுக்கு விட்டுச் செல்வதிலும் செல்வந்தர்கள் அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணி நடக்கின்றார்களா? என்பது தான் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற சோதனை.

ஏழ்மை ஒரு சோதனை :

ஏழைகாகப் பலரை ஏன் அல்லாஹ் படைத்திருக்கின்றான் என்ற வினாவிற்கு இங்கு பதில் காண்போம். சோதனை என்பது எல்லோருக்கும் ஒன்று போல்  இருப்பதில்லை. வறுமையைக் கொண்டு சிலரை அல்லாஹ் சோதிக்கின்றான். கொடிய வறுமையிலும் ஏழைகள் அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணி நடக்கின்றார்களா? இறையச்சத்துடன் வாழ்கின்றார்களா? வறுமையிலும் செம்மையாக வாழ்கின்றார்களா? என்பது தான் அவர்களுக்குரிய சோதனை. வறுமை வாட்டுகின்றபோதும் இறைவனிடமே இறைஞ்சுகின்றார்களா? அல்லது பிற மனிதர்களிடம் சுய மரியாதையிழந்து இரந்து நிற்கின்றார்களா? என்று அல்லாஹ் அவர்களைச் சோதிக்கின்றான்.

(விசுவாசிகளே!) ஓரளவு பயத்தாலும், பசியாலும் பொருட்கள் உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் நஷ்டத்தாலும் நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம் என்றாலும் சகித்துக் கொண்டிருப்பவர்க்கு நன்மாறாயம் கூறுவீராக. (அல்குர்ஆன் 2:156)

வறுமை நிரந்தரமல்ல :

எல்லாரையும் வறுமையில் எப்போதும் பாட. அழிந்துபட அல்லாஹ் விட்டுவிடுவதில்லை. அவனின் பொருளாதாரத் திட்டம் எல்லா மக்களுக்கும், எல்லா காலத்திலேயும் பயன் அளிக்கக் கூடியது. ஏழைகள் மீது அல்லாஹ் பெருங் கருணையுடையவனாக இருக்கின்றான்.

நபியே! இவ்வாறே அவர்களில் சிலரைக் கொண்டு சிலரை நாம் சோதித்ததில், நமக்கிடையில் (ஏழைகளாகிய) இவர்கள் மீதா அல்லாஹ் அருள் புரிந்து விட்டான்? என்ற பணக்காரர் கூற முற்பட்டனர். (அல்குர்ஆன்  : 6:53)

வாழ்க்கையே ஒரு சோதனை :

இஸ்லாமிய கண்ணோட்டத்தில் இவ்வுலக வாழ்க்கை ஒரு பெருஞ் சோதனையாக அமைந்துள்ளது. உங்களில் எவர் அழகிய செயல்களுடையவர் என்பதைச் சோதிக்கும் பொருட்டே அவன் வாழ்வையும், பணத்தையும் படைத்திருக்கின்றான்’. (அல்குர்ஆன் : 67:2) என்று அல்லாஹ் வாழ்வின் தத்துவத்தை வகையாய் விவரிக்கின்றான்.

************************************************************************

சமூகவியல் : 13. ஆய பயன் என்ன?  புலவர் செ.ஜாஃபர் அலி, பி்லிட்.

மெய்யாகவே மனிதன் பதட்டக்காரனாகவே படைக்கப்பட்டுள்ளான். ஏனென்றால், அவனை ஒரு தீங்கு அடைந்தால், (திடுக்கிட்டு) நடுங்குகின்றான். அவன் யாதொரு நன்மை அடைந்தாலோ அதனை(ப்பிறருக்கு பகிர்ந்தளிக்காது) தடுத்துக் கொள்கிறான்”.  அல்குர்ஆன் 70:19-21

“பதட்ட நிலை” என்பது மனிதனின் இயற்கை அமைப்பாக இருக்கிறது. ஆம்! அப்படித்தான் மனிதன் படைக்கப்பட்டுள்ளதாக  அல்லாஹ் தன் கூற்றாக அறிவிக்கின்றான். இப்பதட்ட நிலையை மாற்றக்கூடிய நல் மருந்தாக உள்ளதே இறையச்சம் என்னும் உயரிய பண்பு. எல்லாம் இறைவனின் ஆணைகள் பொறுத்துக்கொள்வோம். துன்பம் வந்தால், பூரிப்படைவோம். இன்பம் வந்தால், என்று மன உறுதியுடன் – இறை நம்பிக்கையுடன் வாழும் இறையடியானை ‘பதட்டம்’  பதம் பார்க்காது! அவன் தீங்கைக் கண்டு நடுங்கவுமாட்டான். நன்மை தன்னை அடைந்தாலும் மனித சமுதாயம் பயன் பெறவே அதனைப் பயன்படுத்த எத்தனிக்கின்றான்.

இத்தகைய அறிய சமுதாயத்தை உருவாக்க முயல்வதே ‘இஸ்லாம்’ என்னும் சாந்தி மார்க்கம். தனிமனித  பொறுமையுணர்வே – இறையச்ச உணர்வே சமுதாய முழுமைக்கும் தேவை எனப் பறைசாற்றுவதே இஸ்லாம்.

‘அவசரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்பது பழமொழி எதனையும் நிதானமாக ஆராயாமல், உடன் செயல் வடிவம் கொடுக்க முயல்பவனே அவசரக்காரன். தன்னுடைய அறிவைக் கொண்டு பகுத்துணராமலேயே அவன் செயல்படத் துணிகின்றான். அவனுக்கு எங்ஙனம் வெற்றி கிட்டும்? மேலும் அவன் எப்போதுமே ‘படபட’ வெனவே நிற்கின்றான். ஒரு சிறு இன்னல் கூட அவன் கண்ணுக்கு ‘மலையளவாக தோற்றமளித்து, பயந்து நடுங்கி – நிலை குலைந்து காணப்படுகின்றான். அவன், இன்பத்தைக் கண்டாலும் துள்ளிக்குதித்து – தன்னை மறந்த நிலையில் குதூகளிக்கின்றான். அதி விரைவில் இன்பமும் மறைந்துவிடும் என்பதை அவன் அவசரபுத்தி உணருவதில்லை.

இங்ஙனமே மனித சமுதாயம் தம்மைத்தாமே உய்த்துணராமல் காலங்காலமாக முன்னோர்கள் நடந்துவந்த வழியிலேயே நடக்கத் துணிகின்றது. மார்க்கத்தை அதன் தூய வடிவில் பின்பற்றத் தலைப்படுவதில்லை. தங்களின் பகுத்தறிவுக்குப் பொருந்தாத பழைய கொள்கைகளையே மார்க்கமாக எண்ணி செயல்பட்டு வருவதோடு, செயல்படத் தவறினால் எத்தீங்கு தம்மைத் தொடருமோ என அஞ்சி – இறையடியார்களை அல்லாஹ்விடம் பரிந்துரைப்பவர்களாக பரவித்து, அறியாமலேயே இணைவைத்தல் என்னும் ஷிர்க்கைச் செய்கின்றனர்.

இதுதான் மார்க்கம், நீங்கள் செய்வது மார்க்கத்துக்குப் புறம்பானது என்று எடுத்துக் காட்டினால், கொடிய வனவிலங்குகளைக் கண்டவர் அஞ்சி நடுங்குவது போன்ற நிலையில் நம்மைக் காணுகின்றனர். மேலும், தீண்டத் தகாதவர்களாகவும் நம்மை எண்ணி, மார்க்கத்துக்குப் புறம்பாக நாம் செயல்படுவதாக பலவித கற்பனைகளை மக்கள் மத்தியில் பரப்பி விடுகின்றனர். அந்தோ கைசேதம்! எல்லாம் வல்ல அல்லாஹ் இவர்களுடைய இதயங்களில் உண்மையை விதைப்பானாக!

“(ஈமான் மூலம்) நேர்வழி பெற்றவர்களுக்கு நேர்வழியை (மேலும்) அல்லாஹ் அதிகமாக்குகின்றான்” (அல்குர்ஆன்ட 47:17)

“ஈமான் கொண்டவர்கள் தமது ஈமானை (மேலும்) அதிகமாக்கிக் கொள்ளவேண்டும் என்பதற்காக….(அல்குர்ஆன் 74:31)

எவர்கள் தமது ஈமானில் அக்கிரமத்தைக் கலக்காத நிலையில் ஈமான் கொண்டவர்களாயிருக்கின்றனரோ அவர்களுக்கே (இம்மையிலும், மறுமையிலும்) அச்சமற்ற நிலை உண்டு. மேலும், அவர்களே நேர்வழி பெற்றவருமாவார். (அல்குர்ஆன் 6:82) என்ற இறைவசனம் இறங்கியபோது, நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் ‘அல்லாஹ்வின் தூதரே! எங்களில் யார்தான் அக்கிரமம்(பாவம்)புரியாதவர்களாயிருக்கிறோம்? எனக் கேட்டனர். அப்போதுதான், லுக்மான் தன குமாரனுக்கு நல்லுபதேசம் செய்தபோது,  என்னருமை மைந்தனே! நீ அல்லாஹ்வுக்கு இணைவைக்காதே! (ஏனென்றால்) உறுதியாக, இணை வைப்பது மாபெரும் ஓர் அக்கிரமமாகும்’ என்று கூறினார். (அல்குர்ஆனட் 31:13) என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கினான் என அப்துல்லாஹ் பின் மஸ்வூது(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம் : புகாரீ)

(ஆகவே, நபியே!) நீர் கூறும் : ஒவ்வொரு மனிதனும் (நன்மை எனத் தனக்கு தோன்றியவைகளையே செய்கிறான். ஆகவே நேரான வழியில் செல்பவன் யார்? என்பதையும் உங்கள் இறைவன் தான் நன்கறிவான். (அல்குர்ஆன் : 17:84)

மறுமை நாளில் மக்கள் அனைவரிலும் என் பரிந்துரைக்குத் தகுதி பெற்றவர் தன் உள்ளத்திலிருந்து தூய்மையான எண்ணத்துடன் வணங்கி வழிபடுவதற்குரியவன் அல்லாஹ்வையன்றி யாருமில்லை’ என சொன்னவராவர்’ என்று நபி(ஸல்) அவர்கள் திருவாய் மொழிந்தார்கள். ஆதாரம் : புகாரீ, அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரழி)

ஆனால், இன்றைக்கு இச்சமுதாயத்தில் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்கள் நிறைந்துவிட்டனர். அதனால் வந்ததுதான் ‘ஷிர்க்’ என்னும் பெருங்கேடு! உள்ளத்திலிருந்து தூய்மையான எண்ணத்துடன் ‘வணங்கத் தகுந்தவன் அல்லாஹ் ஒருவனே!” என்று மொழிந்து அதற்கேற்ப எச்செயலிலும் அவனுக்கு இணை எண்ணாமல் – செய்யாமல் இருந்தால்தானே ஒவ்வொருவரும் சிறந்த முஸ்லிமாகத் திகழ இயலும்.

உதட்டளவில், ‘வணங்கி வழிபடத் தகுந்தவன் அல்லாஹ்வையன்றி வேறில்லை’ என்று சொல்லிவிட்டு, அவர்களின் செயல் முழுவதும் ஷிர்க்கிலேயே நிறைந்துவிட்டால் ஆய பயன் என்ன?

அருமைச் சகோதரர்களே! நாம் அனைவரும் அல்லாஹ்வின் அளப்பெரிய பண்புகளுக்கு  ஏற்ப அவன் ஏகத்துவப்படுத்தி ஒருமை உணர்வுடன் வணங்கி வழிபடக்கூடிய நல்லடியார்களாகத் திகழுவோமாக! ஆமீன்! யாரப்பல் ஆலமீன். (இன்ஷா அல்லாஹ் வளரும்…..)

************************************************************************

மெய்ப்பொருள் காண்போம்! அவ்வழி நடப்போம்!!  – தொடர் : 3  Er.H.அப்துஸ்ஸமது, சென்னை.

மனிதர்களுக்காக (உம்மீது) அருளப்பட்ட இ(வ்வேதத்)தை அவர்கள் சிந்திக்கும் பொருட்டு” தெளிவாக அவர்களுக்கு நீர் விளக்குவீராக! (16:44)

மேலே குறிப்பிட்டவையும், இன்னும் பல வசனங்களும்  இறைமறை தரும் போதனைகளின் உண்மையையும், அவசியத்தையும், மகத்துவத்தையும் மனிதன் சிந்தித்து அறிய வேண்டும் என வலியுறுத்துகின்றன.

அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் எவன் வழிபடுகின்றானோ, அவன் நிச்சயமாக மகத்தான பெரும் பாக்கியத்தை அடைந்து விட்டான். (33:71)

இவ்வசனம், குர்ஆன், நபிமொழி இவ்விரண்டையும் அடியொற்றி பின்பற்றி நடப்பதே அல்லாஹ்விற்கு முற்றிலும் வழிபடுவதாகும் என்பதை எடுத்துக் காட்டுகிறது. இதையே தெள்ளத் தெளிவாக நபி(ஸல்) அவர்களும் நவின்றுள்ளார்கள்.

நான் உங்களிடையே இரண்டு விஷயங்களை விட்டுச் செல்லுகின்றேன். அவைகளை நீங்கள் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் வழி தவறவே மாட்டீர்கள்! அவை அல்லாஹ்வின் திருவேதமும் அவனுடைய ரசூலுடைய சுன்னத்தும் ஆகும். (அனஸ்(ரழி), (முஅத்தா)

திருமறைறையும் நபி(ஸல்) அவர்களின் சுன்னத்தையும் பேணி நடந்தால் வழி தவறமாட்டீர்கள் என்று கூறுவதன் மூலம் முஸ்லிமாக வாழ்ந்து, முஸ்லிமாக மரணிக்க பற்றுகோல் இவைதான் என்பது திட்டப்படுத்தப்படுகிறது. அல்லாஹு கபஹானஹுவத்தஆலா அவனது படைப்பினங்களில் தலையாய மனித வர்க்கம் தன்னையே முற்றிலும் வழிபட வேண்டும் எனக் கூறியதோடு, அவர்கள் அதனைச் செவ்வனே நிறைவேற்ற உற்ற மார்க்கத்தை நிறைவற்றதாக வகுத்துத் தந்து அதன் நிறைவும், தூய்மையும் உலகம் உள்ளளவும் மாற்றப்பட முடியாது என உத்திரவாதமும் நல்கியுள்ளான்.

நான் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை இன்றைய தினம் பரிபூரணமாக்கி வைத்து விட்டேன். மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையை பூர்த்தியாக்கிவட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை (இசைவானதாக) தேர்ந்தெடுத்துள்ளேன்.

நிச்சயமாக நாம்தான் இஸ்லாத்தை இறக்கி வைத்தோம். ஆகவே நிச்சயமாக நாமே அதனைப் பாதுகாத்துக் கொள்வோம். (15:9) ஈமான் கொண்டோருக்கு முன்மாதிரியாக விளங்குவது நபி(ஸல்) அவர்கள் தான்.

அல்லாஹ்வின் மீதும்,  இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிக்கும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரியிருக்காது. (33:21)

ஆக, அல்லாஹ்வினால் அருளப்பட்ட குர்ஆன், எல்லாம் வல்ல அல்லாஹ்வினாலேயே அணுவளவும் மாறாது பாதுகாக்கப்பட்டு, நம்மிடையே இன்றும், அன்று இறங்கிய அமைப்பிலேயே உள்ளது. இறைவன் வகுத்த வழி வழுவாது, அவன் தனக்கிட்ட தூதுவப் பணியைச் செம்மையாகச் சீராக நிறைவேற்றி, வாழ்ந்து வந்த நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையாகிய, அல்லாஹ்வே பரிந்துரைக்கும் அப்புனித நெறியும் நம்மிடையே உண்டு. எனினும் முஸ்லிம்கள் வழி தவறி சிறக்க காரணம்தான் யாது?

இறைவனை உணர, இறைவனுக்கு உவப்பாய அவன் வழி வாழ நாம் இரண்டாவதாக நாடிக் கார்ந்திட வேண்டியது நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையும், அன்னார் தம் குணநலன்களுமேயாம். இவற்றிலிருந்து நாம் முழுமையான பலன்களைப் பெற நாம் நபி(ஸல்) அவர்களோடு கொள்ள வேண்டிய தொடர்பும் உறவும், சீரான நிலையிலும், நன்மையிலும் அமைய வேண்டும். இவை நம்மிடம் உருவாக, அல்லாஹ்வின் தூதர் என்ற நிலையில் முஹம்மது (ஸல்) அவர்களின் நிலையையும், தரத்தையும், அவர்கள், அவர்களுக்கும் நமக்குமிடையே எத்தகைய தொடர்பு நிலை வேண்டும் என விரும்பினார்கள் என்பதையும் திட்டவட்டமாக நாம் உணர்ந்திருத்தல் அவசியம். நபி(ஸல்) அவர்களுக்கும், அவர்களின் உத்தமத் தோழர்களுக்கும் இடையே நிலவிய உறவும் தொடர்பும்தான் சீரான முன்மாரியான நிலையாகும். (Ideal  Relationship) நபித் தோழர்களின் காலத்திற்குப் பின் அந்நிலை சிறுகச் சிறுக மாறி, காலச் சுழற்சியில் முற்றிலும் வேறுபட்டு சீர்குலைந்து விட்டது. முஸ்லிம்களுக்கும், நபி(ஸல்) அவர்களுக்கும் இடையே உருவாக வேண்டிய யதார்த்தமான உறவும், பிணைப்பும் பற்றி கூறுமுன் நம்மிடையே இவை சம்பந்தமாக காணப்படுமட் சில முறைகேடான கொள்கைகளையும், செயல்பாடுகளையும் பற்றி அறிந்திருப்பது நன்று.

நபி(ஸல்) அவர்களுக்கும் அல்லாஹ்விற்கும் இடையே உள்ள உறவும், அவர்களுக்கும் மனிதருக்கும் இடையே உள்ள தொடர்பும், ஒரு நம்பகமான சேவகர் அல்லது நேர்மையான ஒரு தபால்காரருடையது போன்ற நிலைதான் என்று முஸ்லிம்களின் ஒரு சாரார் கருதுகின்றனர். அனுப்புனர் ஒருவர் அனுப்பும், அஞ்சலை  பெறுநரிடம் தருவதோடு, இவ்விருவருக்குமிடையே தபால்காரருக்கு நிலவும் உறவு முடிவுறுவது போன்ற அல்லாஹ் வழங்கிய வேதத்தை மக்களுக்கு வெளிப்படுத்தியதோடு நபிப்பணி நிறைவுற்று விட்டதாகவும், நபி(ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடைய நிலவிய உறவும் அற்று விட்டதாகவும் இத்தகையோர் வாதிடுகின்றனர். இக்கருத்தின் அடிப்படையிலேயே நபி(ஸல்) அவர்களுக்கும் தங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை நிர்ணயிக்கின்றனர்.  இவர்கள், இது மாபெரும் தவறாகும்.

நபி(ஸல்) அவர்கள், அல்லாஹுவிற்கும் அவனது அடியார்களுக்கும் இடையே வந்த ஒரு தூதர் மாத்திரமல்ல. அவர்கள் ஒரு போதகர், சீர்திருத்துபவர்: விளக்கம் அளிப்பவர், நன்மாராயம் நல்குபவர் எச்சரிக்கையாளர்: ஒளிதரும் விளக்கு: அடியொற்றி நடப்பதற்குரிய சீரிய வழிகாட்டி, இவற்றிற்கெல்லாம் உபரியாக மனித குலத்திற்கு அவர்கள் மாபெரும் அருட்கொடையுமாவார்கள்.

அவர், அவர்களுக்கு அவனுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து, அவர்களைப் பரிசுத்தமாக்கியும் வைக்கின்றார். அன்றி வேத ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார். (3:164)

நபியே! நிச்சயமாக நாம் உம்மைச் சாட்சியாகவும், நன்மாராயம் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பி இருக்கிறோம். அன்றி அல்லாஹ்வுடைய அனுமதியின்படி அவன் பால் அழைப்பவராகவும், ஒளிவீசும் விளக்காகவும் (இருக்கின்றீர்) (33:45. 46)

(நபியே!) நாம் உம்மை உலகத்தார் யாவருக்கும் ஒரு அருளாகவே அனு்பி இருக்கிறோம். (22:107)

இத்தகையத் தனிச் சிறப்புகளோடு நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு நேர்வழி காட்டும் கடமையை அல்டலாஹ் உதவியாலும், கண்காணிப்பாலும் செவ்வனே நிறைவேற்றினார்கள். மக்களுக்கு திருமறையை வழங்கியதுமல்லாமல்,  ஞானத்தையும் கற்பித்தார்கள். திருமறையின் போதனைகளுக்கேற்ப தானும் வாழ்ந்து, அவ்வண்ணமே வாழும் ஒரு உன்னத சமுதாயத்தையும் உருவாக்கினார்கள். தானே கண்காணித்து அச்சமுதாயத்தின்  வாழ்க்கை நெறி திருமறையின் போதனையாகவே திகழச் செய்தார்கள்.  (இன்ஷா அல்லாஹ் தொடரும்)

***********************************************************************

இஸ்லாமிய  தஃவாப்  பணியில் தனி நபர் பங்கு!

முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஒரே அமீரின் கீழ் செயல்பட வேண்டும். அதற்குரிய முயற்சிகளில் இறங்குகிறோம் என்று சென்ற இதழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.  பேராசிரியர் முஸ்தபா மஷ்ஹுர் அவர்கள் அரபியில் எழுதிய கட்டுரை தமிழில் ‘ஷிஹாப்’ அவர்களால் தரப்பட்டு இலங்கையிலிருந்து வெளிவரும் அல்ஹஸனாத் மாத இதழில் தொடர் கட்டுரையாக வெளிவந்து கொண்டிருக்கிறது. ஜனவரி 89 இதழில்  பக்கம் 15ல் இடம் பெ்றுள்ள ஆறாவது தரம், ஏழாவது தரம், நமது அழைப்புக்கு வலுவூட்டக் கூடியதாக அமைந்துள்ளது. அதனை இங்கு இடம் பெறச் செய்துள்ளோம்.

ஆறாவது தரம் :

தஃவா எனும் இக்கடமையை தனிப்பட்ட முறையில் மட்டும் மேற்கொள்வதால் இது முழு அளவில் நிறைவேறாது. இதற்காக இயக்க ரீதியான ஜமாஅத் அமைப்பு வேண்டும். கிலாபத் எனும் இஸ்லாமிய அரசியல் அமைப்பை ஏற்படுத்தும் முயற்சி தனிப்பட்டவர்களால் செய்து முடிக்க முடியாதது. இதற்கு, இஸ்லாமிய சமூக அமைப்பை ஏற்படுத்த வேண்டும்ட என்ற இலட்சியமுள்ளவர்களின் கூட்டு முயற்சி இன்றியமையாததாகும். ஒரு வாஜிப் கடமை நிறைவேற அவசியமான துணை அம்சங்களை மேற்கொள்வதும் வாஜிப் கடமையாகும் என்ற இஸ்லாமிய சட்டவிதி இதற்கும் பொருந்தும். இஸ்லாமிய சமூக அமைப்பை ஏற்படுத்த இயக்க ரீதியான கூட்டுமுயற்சி தவிர்க்க முடியாதது என்பதால், அதற்காக எல்லா முயற்சிகளும், குறிப்பாக இஸ்லாமிய உணர்வுள்ள அனைவரும் கூட்டாக முயற்சிப்பது, அவர்கள் ஒவ்வொருவர் மீதும் வாஜிப் கடமையாகும். இக்கடமையைப் புறக்கணித்து விட்டு வாழ்பவர்களட் தனிப்பட்ட முறையில் இஸ்லாமிய கடமைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அவற்றை அதிகமாக நிறைவேற்றினாலும் கூட அவர்கள் முழு அளவில் இஸ்லாத்தைப் பின்பற்றுகிறார்கள் என்று கொள்ள முடியாது. முஸ்லிம்களைப் பொருத்தவரை எல்லாக் காலத்திலும், அதிலும் குறிப்பாக இக்காலத்தில் கிலாபத் அமைப்பை மீண்டும் ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு ஜமாஅத் – இயக்க ரீதியாக நடவடிக்கைகளை மேற்கொள்வது அதிமுக்கிய, கட்டாயக் கடமையாகும்.

ஆனால் துரதிஷ்டவசமாக பலர் இன்று இக்கடமையைப் பற்றி உணர்வதில்லை. ஜமாஅத் அமைப்பின் அவசியம் பற்றிய இஸ்லாமிய கருத்துக்களை அவர்கள் அறியாததால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கத் தவறுகின்றனர்.

ஜமாஅத்தாகச் செயல்படும்போது ஏற்படும் பொறுப்புகளிலிருந்து ஒதுங்க விரும்பியபோது சிலர் இக்கடமையைப் புறக்கணிக்கின்றனர். மற்றும் சிலர் இயக்க ரீதியாகச் செயற்படும்போது ஏற்படும் தொந்தரவுகளிலிருந்து விலக எண்ணியும் ஏன் நமக்கு இந்தத் தொந்தரவு என்ற சுயநல நோக்கம் காரணமாகவும் இயக்க ரீதியாக செயல்படுவதைத் தவிர்த்துக் கொள்கிறார்கள்.

எனவே, ஜமாஅத் – இயக்க ரீதியான வாழ்க்கைக்கு இஸ்லாத்தில் அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை விளக்குவதுமட், அவ்விதமான ஜமாஅத் ரீதியான முயற்சியன்றி இஸ்லாமிய சமூக அமைப்பை ஏற்படுத்த முடியாது என்றும், இஸ்லாமிய சமூக அமைப்பில்லாவிட்டால் பூரணமான உண்மை முஸ்லிமாக வாழ முடியாது என்றும் நன்கு புரிய வைப்பதும் கட்டாயமாகும். இந்த அம்சத்தை ஒருவர் விளங்கிக் கொள்ளும்போது அவர் ஜமாஅத்  அமைப்பில்  வாழ்வதால்  தற்காலிகமாக பல கஷ்ட நஷ்டங்கள் ஏற்பட்டாலும் கூட, அதை எண்ணிப்பார்க்க மாட்டார். இஸ்லாமிய இலட்சியங்கள் நிறைவேறி பயன் தவும் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவும் ஜமாஅத் அமைப்பும் இயக்க ரீதியான செயல்முறைகளும் வாஜிபான கடமைகள் என்பதால் அவர் அதில் பேணுதலுடையவராக இருப்பார்.

ஆதலால் தஃவாவழின் படி முறைகளில் ஜமாஅத்தான – கூட்டு முயற்சியின் அவசியத்தை விளங்குவதும், அதை ஏற்கவைப்பதும் ஆறாவது, தரமாக அமைகிறது.

ஏழாவது தரம் :

இஸ்லாமிய வழியில் உழைப்பதாகக் கூறும் பல்வேறு அமைப்புகளையும் சீர்தூக்கிப் பார்த்து, அவற்றில் பூமியில் அல்லாஹ்வின் தீனை ஸ்தாபிக்கும் – இகாமதுத் தீன்  பணிக்கு மிகப் பொருத்தமான அமைப்பில் இணைந்துகொள்வது ஏழாவது படித்தரமாகும். இது மிக முக்கியமான ஒரு கட்டம். ஆழ்ந்த சிந்தனையின் பின் தீர்மாணிக்கப் படவேண்டியதும், அலசி ஆராய்ந்து பூரண மனதிருப்தியுடன் மேற்கொள்ள வேண்டியதுமாகும்.

இஸ்லாமிய பெயருடன் செயல்படும் பல்வேறு இயக்கங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் தனது வழியே சரியானது என்றும், இஸ்லாமிய இலட்சிய வேட்கையுள்ளோர் எல்லாரும் தம்முடன் இணைத்துக் கொள்ளவேண்டும் என்றும் விவாதிக்கின்றன. துடிப்புள்ள இளைஞர்களையும், செயல்பட விரும்பும் மற்றவர்களையும் தன்பக்கம் கவர  இளைஞர்களையும், செயல்படவிரும்பும் மற்றவர்களையும் தன்பக்கம் கவர இவை பகீரதப் பிராயத்தனம் செய்கின்றன.

இஸ்லாத்தை ஸ்தாபிக்கும் பணி மிகவும் அடிப்படையானதும், அதிக முக்கியத்துவம் வாய்ந்ததுமான பணி என்பதால் இதில் மிகவும் விளிப்பாக இருக்க வேண்டிய ஒவ்வொருவருடைய கடமையாகும்.  அவசரப்பட்டு அல்லது மேலோட்டமாக கவர்ச்சிகளைக் கண்டு மயங்கி, பொருத்தமற்ற அமைப்புகளுடன் இணைந்து விடக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஓர் உயிரும், உலகில் வாழ்வதற்கான ஒரு சந்தரப்பமும் உண்டு. எனவே இவற்றைப் பாழாக்கி விடக்கூடாது. அவசரப்படாது மிகவும் கவனமாக அவதானித்தும், வலருடன் கலந்து பேசியும் மிகவும் பொருத்தமான அமைப்பைக் கண்டு தெளிவு பெற்று உறுதியாக இணைந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாத்தினால் பெற முடிந்த சிறந்த பயன்களைப் பெறவும், அதற்குதவும் இஸ்லாமிய சமூக அமைப்பை ஏற்படுத்த உதவும் அமைப்பை அடையாளம் காண துணை புரியும். மிக முக்கியமான அம்சம் அதன் செயல்பாட்டு முறையாகும். ஏதாவது ஒரு அமைப்பு  நபி(ஸல்) அவர்கள் இஸ்லாமிய சமூக அமைப்பை ஏற்படுத்த மேற்கொண்ட வழிமுறைகளைப் பின்பற்றிச் செயல்படுகிறது என்று இனங்காக முடியுமாயின் அதுவே அனைவரும் அங்கம் பெற வேண்டிய அமைப்பாகும்.

நபி(ஸல்) முஃமின்களின் உள்ளத்தில் முதலில் இஸ்லாமிய அகீதா நம்பிக்கைகளை ஊன்றினார்கள். அடுத்து குர்ஆனின் வழியிலும் தங்களுக்கே உரிய பாணியிலும் “தாருல் அர்கமில்’ அவர்களுக்கு பயிற்சி அளித்தார்கள். அதன் பயனாக இஸ்லாமியக் கொள்கைகள் தங்கள் உடலிலும், உணர்வுகளிலும் ஊறிப்போன, இஸ்லாமிய இலட்சியங்களே தங்களது வாழ்வின் இலட்சியங்களாகும் என்று நம்பி நடந்த ஒரு திருக்கூட்டம் உருவாயிற்று. அவர்கள் தங்களின் இஸ்லாமிய நம்பிக்கைகள் இலட்சியங்கள் என்பவற்றை அடைய தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும், அர்ப்பணஞ் செய்யத் துணிந்தார்கள். அவற்றை அமைக்கும் வழியில் தடையாக நின்ற எதற்கும் பயப்படாது அவசியமான அனைத்தையும் தியாகஞ் செய்தார்கள். இந்த வழியில் அவர்கள் பட்ட கஷ்டங்களுக்கும், செய்த தியாகங்களுக்கும் அளவேயில்லை. இஸ்லாமிய கிலாபத் அமைப்பின் அத்திவாரமாகத் திகழ்ந்தவர்கள். இவ்விதம் பயிற்றப்பட்ட ஆரம்பகால முஸ்லிம்களேயாவர். நபி(ஸல்) அவர்கள் தனித்தனியாக வென்றெடுத்த இவர்கள் அனைவரையும் ஒரே அணியாகத் திரட்டி அவர்களை ஒழுங்கும் கட்டுப்பாடும் நிரம்பிய அமைப்பாக ஆக்கி இஸ்லாத்தை தாபிக்கும் பணிக்காக அனைத்தையும் அர்ப்பணிப்பதாக வாக்கும் வழங்கினார்கள். இத்தகைய ஜமாஅத்தவர்களே நபி(ஸல்) அவர்கள் அமைத்த இஸ்லாமிய சமூக, அமைப்பின் அத்திவாரமாக திகழ்ந்தனர்.

நபி(ஸல்) இவ்வாறு முதலில் கொள்கையில் உறுதியையும் அடுத்து ஐக்கியம் கட்டுப்பாடு என்பவற்றையும் அதன்பின் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு தடைகளாக அமைந்த அனைத்தையும் அகற்றி எதிரிகளின் எதிர்ப்புகளை முறியடித்து இஸ்லாமிய சமூக அமைப்பை நிறுவத் துணை புரியும் திறமைகளையும், பயிற்சிகளையும் தமது தோழர்களிடம் வளர்த்தார்கள். முஸ்லிம்களின் தொகை பெருகி அவர்களுக்கென்று ஆள் பலமும் ஏற்படும் வரை எதிரிகளின் அநீதிகளையும், கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு கொள்கையில் உறுதியாக வாழ்ந்து அதனை வளர்க்க இரவு பகலாக முயலுமாறே அன்னார் தன் தோழர்களைக் கேட்டார்கள் அப்போது எதிரிகளுடன் போராட அனுமதி வழங்கவில்லை.

நபி(ஸல்) அவர்களின் இந்த படிமுறைப் பயிற்சிகளை வழங்கும் அமைப்பு மட்டுமே இஸ்லாமிய இலட்சியத்தை விரும்புவோர் இணைந்து கொள்ள மிகவும் பொருத்தமான அமைப்பாகும். கொள்கை விளக்கம், நடைமுறைப் பயிற்கி, ஐக்கியமும், கட்டுப்பாடும், எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி கொள்வதற்கு அவசியமான பயிற்சிகள் என்பனவற்றில் கவனஞ் செலுத்தாத அமைப்புகள் பெயரளவில் அமைந்த இஸ்லாமிய அமைப்புக்களே. இவற்றால் இஸ்லாமிய சமூக அமைப்பை நிர்மாணிக்கும் அரிய பணிகளைச் செய்ய முடியாது. கொள்கைத் தெளிவும், கடமை கட்டுப்பாட்டுணர்வும், நடைமுறை இஸ்லாமிய வாழ்க்கையுமில்லாது, பலத்தில் மட்டும் நம்பிக்கை வைத்து அதன் வழியாக, இஸ்லாமிய சமூக அமைப்பை ஏற்படுத்த முயல்வதும்ட, கட்சி அரசியல் முறைகளினூடாக அல்லது வேறு குறுக்கு வழியாக அதனை சாதிக்க முயல்வதும் வீண் கனவாகும். இவ்வழிமுறைகளால் ஏதாவது பயன்கள் எப்போதாவது கிடைத்தாலும் கூட அவை தற்காலிகமானவையாகவே அமையும். மாறாக நிலைத்து நிற்க முடியாது.

மேலே குறிப்பிட்டபடி முறையான பயிற்சிகள் இஸ்லாமிய சமூக அமைப்புக்கான அத்திவாரங்களாகும். அவற்றின் தொடரான வளர்ச்சியின் பயனாகவே சமூக அமைப்பு மலர முடியும். விசாலமான உறுதியான ஒரு கட்டாயத்தை நிறுவ பலமான அத்திவாரம் அவசியம் என்பதில் தர்க்கத்திற்கு இடமில்லை. அதேபோல் சர்வதேச மட்டத்தில் வியாபகமாக்கப்பட வேண்டிய இஸ்லாமிய சமூக அமைப்பை நிறுவ படிப்படியான உறுதியான முயற்சிகள் அவசியம் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். இஸ்லாமிய சமூக அமைப்பு நிறுவப்படுவதை விரும்பாத எதிர்ப்பு சக்திகள் உலகளாவிய முறையில் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகின்றன என்பதைக் கருத்தில் கொண்டு நோக்கும்போது உண்மையில் இஸ்லாமிய இயக்கம் என்பது நபி(ஸல்) அவர்களின் வரலாற்றின் வழியில் படி முறையான  நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமைய வேண்டும் என்பது மேலும் உறுதியாகிறது.  இதற்கு நீண்ட  காலம் தேவைப்படலாம். அது நியாயமானது. ஏனெனில் இயக்கங்களின் வரலாறு தனி நபர்களின் வாழ்க்கையை அளவுகோலாகக் கொண்டு மட்டிடப்படுவதில்லை.  கொள்கைப் பிரகாரம் அதை ஏற்றுச் செயல்படும் ஜமாஅத்தின் வளர்ச்சி என்பவற்றின் அடிப்படையிலேயே கணிக்கப்படும்.
நன்றி :அல்ஹஸனாத்.

குறிப்பு : இஸ்லாமிய சமூக அமைப்பு, நபி(ஸல்) அவர்களின் வழிமுறைப்படி அமைக்கப்படுவதாக இருந்தால் அது கண்டிப்பாக இஸ்லாம் என்றே இயங்க வேண்டும். தனியொரு இயக்கப் பெயரில் இயங்குவதாக இருக்கமுடியாது என்பதை சகோதர, சகோதரிகள் நினைவில் கொள்ள வேண்டுகிறோம். (ஆசிரியர்)

***********************************************************************

உணரப்படாத தீமை : 2 “வட்டி”  – அப்துல்லாஹ்

இன்றைய உலகில் பணம் அதிகமாக சேர்க்கவேண்டும் என்ற பேராசையால் பல தீமைகள் மனித வர்க்கத்தால் தீமை என்றே உணரப்படவில்லை. இவற்றில் சினிமா, வட்டி, வரட்சணை போன்றவை முதலிடம் வகிக்கின்றன.

இன்னும் சில தீமைகள், தீமை என்று தெளிவாக அறிந்தும் பணத்தின் மீதுள்ள பேராசையால் அரசாங்கமே அத்தீமைகளை அங்கீகாரம் செய்துள்ளது. அவற்றுள் முக்கியமானவை லாட்டரி, குதிரைப்பந்தயம், விபச்சாரம், குடி போன்றவையாகும். இத்தகைய அரசாங்கத்திற்கு, சமூக நலனை விட பணமே பெரிதாகத் தெரிகின்றது.

ஒரு பக்கம் குடி குடியை கெடுக்கும் என்று அறிவுரையும் மறுபக்கம் மதுக்கடைகளை சட்டப்பூர்வமாக திறந்து வைத்தலும்.

தனி மனிதன் சூதாட்டத்தில் ஈடுபட்டால் அது குற்றம்; ஆனால் அரசாங்கமே அதை லாட்டரி, குதிரைப் பந்தயம் என்ற பெயரில் செய்தால் அது குற்றமில்லை.

ஒருபுறம் (AIDS போனட்ற) கொடிய நோய் வருவதற்கு முக்கிய காரணமாக விளங்குவது விபச்சாரம் என்று ரேடியொ, டி.வி. மூலம் பிரச்சாரம்  மறுபுறம் வீதியொறம் விபச்சார விடுதி அமைக்க சட்டப்படி லைசென்ஸ் வழங்குவது. (இவர்கள் தான் பெண்கள் உரிமையைப் பாதுகாப்பவர்கள் – பலதார மணத்தை தவறு என்று குறை கூறுபவர்கள் :

இரட்டை வேடம் குளறுபடி ஆகியவற்றின் மொத்த உருவமே இன்றைய நமது அரசாங்கம்.

கினிமாவின் தீமைகள் பற்றி சென்ற டிசம்பர் இதழில் கண்டோம் தீமை என்றே உணரப்படாத தீமையாகிய வட்டியைப் பற்றி நாம் இங்கு ஆராய்வோம்.

அரசாங்கமும், தனிமனிதனும் வட்டியை ஒரு தீமையாகவே கருதுவதில்லை. ஆனால் சமுதாயத்தில் இது எவ்வளவு பெரிய சுயநலவாதிகளையும், பேராசைக்காரர்களையும், சகோதர மனப்பான்மை அற்றவர்களையும், பொருளாதார வீழ்ச்சியையும் உருவாக்குகிறது என்பதை யாரும் உணருவதில்லை. ஏன்? அரசாங்கத்திற்கும் இது மிகப் பெரும் இழப்பாகும் என்பதை கீழ்வரும் உதாரணம் மூலம் அறியலாம்.

வளரும் நாடுகள் வளர்ந்த நாடுகளிடமிருந்து பல வளர்ச்சித் திட்டங்களுக்காக வட்டிக்கு கடன் வாங்குகிறது. வட்டியொடு கடனைத் திருப்பிக் கொடுப்பதற்காக அந்நாட்டு மக்களுக்கு அதிக வரியை (High Tax Policy) விதிக்கிறது. இதனால் ஏற்படுமட் தீமைகள் கணக்கு ஒளிப்பு – கறுப்புப் பணம்  – அதைக் காப்பாற்ற அதிகாரிகளக்கு லஞ்சம் – பொருள்களின் விலையை அதிகப்படுத்துதல் – அதிக லாபம் – ஆதாயம் தரக்கூடிய தொழிலையே தொடங்குவது – பண வீக்கம் இப்படியாக தொடர்ந்து கொண்டே செல்கிறது.

இத்தகைய சமுதாயத் தீமையாகிய வட்டியை விட்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களும் விலகாமல் இருப்பது மிகவும் வேதனைக்குரியதே. இதற்கு முக்கிய காரணம். பலர் இதை ஒரு பெரும்பாலமாகக் கருதவில்லை என்பதேயாகும். ஆனால் இறைமறையும், நபி(ஸல்) அவர்களின் பொன்மொழியும் இதை மிகப் பெரும் பாவமாகக் கருதி மனித குலத்தையே எச்சரிப்பதை பாருங்கள்.

இறைவன் தனது திருமறையில் மூன்று வகையான பாவங்களை செய்பவர்கள் என்றென்றும் நரகிலேயே தங்கி விடுவார்கள். அதிலிருந்து அவர்கள் மீளவே மாட்டார்கள் என்கின்றான். அத்தீமைகள் யாதெனில்.

1. இணை வைத்தல்

2. அநியாயமாக ஒருவனை கொலை செய்தல்

3. வட்டி வாங்கித் தின்றவர்கள். (5:72, 4:93, 2:276)

யார் இறைவனின் நற்போதனை வந்த பின்னரும் வட்டி வாங்கித் தின்றார்களோ, அவர்கள் (நரக) நெருப்பின் தோழர்கள் ஆவார்கள், அவர்கள் அதில் என்றென்றும் தங்கி விடுவார்கள். (அல்குர்ஆன் 2:276)

மேலே கூறிய இறைவசனத்தின் மூலம் பாவங்களிலெல்லாம் மிகவும் கொடிய பாவமான இணைவைத்தல்(ஷிர்க்) செய்யும் பாவிகளுக்கு கொடுக்கும் தண்டனையோடு, வட்டி வாங்குபவர்களையும் வல்ல நாயன் தோழர்கள் எனும் வார்த்தையால் இணைப்பதன் மூலம் நாம் தெள்ளத் தெளிவாக உணரலாம்.

நபி(ஸல்) அவர்கள் நமக:கு விளக்கும் வண்ணம்.

வட்டி வாங்கும் குற்றத்தை எழுபது பிரிவுகளாகப் பிரித்து அதிலெல்லாம் கடைசி அளவான குற்றமானது, தன்னை ஈன்றெடுத்த தாயை கற்பழிப்பதற்கு சமம்.” என்று கூறியுள்ளார்கள். ஆதாரம் : இப்னுமாஜ்ஜா, பைஹகீ, அறிவிப்பு : அபூஹுரைரா

இதன் மூலமும் வட்டி எவ்வளவு பெரும்பாவம் என்பதை அறியலாம்.

மேலும் முஸ்லிம்கள் : பலர் வட்டியும், வியாபாரமும் ஒன்றுதான் என்றும், இறைவன் திருமறையில் வட்டியைப் பற்றி கூறிய வசனம் இந்த காலத்திற்கு பொருந்தாது. அது அன்றைய நிலையில் உள்ள கொடும் வட்டியைத்தான் குறிக்கும். அதுவும் இரட்டிப்பு (கூட்டு) வட்டிதான் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்குக் குறைவாக உள்ளவை ஹலால் என்றும் பணத்தின் மீது கொண்ட பைத்தியத்தால் தாமாகவே தாம் செய்யும் தவறுகளை நியாயப்படுத்திக் கொள்கின்றனர்.

இன்னும் சிலர் வட்டி வாங்குவதுதான் பாவம், கொடுப்பது பாவமில்லை என்றும் வட்டியை அடிப்படையாகக் கொண்ட வங்கியில் வேலை செய்வது கூடும் என்றெல்லாம் கருதுகின்றனர்.

சகோதரர்களே! வட்டியைப் பற்றி இஸ்லாம் கூறுவதென்ன? எனட்று ஆராய முற்படும்போது, ஒரே ஒரு இறைவசனத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல்,இறைமறையின் எல்லா வசனங்களையும், அதற்கு விளக்கமாக உள்ள ஹதீஃத்களையும் விருப்பு வெறுப்பின்றி பார்த்தால்தான் அதன் உண்மை நிலை விளங்கும். அதுபற்றி இறைமறையும், நபி(ஸல்) அவர்களின் வாக்கும் கூறுவதையெல்லாம் கீழே காண்போம்.

இரட்டிப்பு வட்டி ஹராம் என்று கூறும் இறை வசனம் :

ஈமான் கொண்டோரே! (அசலுக்கு அதிகமாகவும் வட்டிக்கு வட்டி போட்டும்) இரட்டித்துக் கொண்டே அதிகரிக்கக் கூடிய வட்டியை, (வாங்கி) விழுங்காதீர்கள். அல்லாஹ்வுக்கு பயந்து (அதனைத் தவிர்த்துக் கொண்டால்) நீங்கள் சித்தியடைவீர்கள். (3:130)

ஒட்டுமொத்தமாக எல்லா வட்டியும் ஹராம் என்று கூறும் இறை வசனம் :

யார் வட்டியை (வாங்கித்) தின்றார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன், பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் வேறுவிதமாய் எழமாட்டார்கள்.

இதற்கு காரணம் அவர்கள் ‘நிச்சயமாக வியாபாரமும் வட்டியைப் போன்றதே என்று கூறியதினாலேயாம்.

ஆனால் அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான். ஆயினும் யார் தன் ரப்பினிடமிருந்து நற்போதனை வந்தபின் அதை விட்டு விலகி விடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது  என்றாலும்ட அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது.

ஆனால் யார்(நற்போதனை பெற்ற பின்னர்) இப்பாவத்தின்பால் திரும்புகிறார்களோ, அவர்கள் நரக நெருப்பின் தோழர்கள் ஆவார்கள். அவர்கள் அதிலட் என்றென்றும் தங்கி விடுவார்கள். (2:275)

அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழிந்துவிடுவான். தான தருமங்களை பெருகச் செய்வான். (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (2:276, 30:39)

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக மூமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டுவிடுங்கள். (2:278)

இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனட் தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டுவிட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)

உண்மை முஸ்லிம் அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிய துணிவானா என்பதை (வட்டி) தொழில் செய்யும் முஸ்லிம்கள் உணர்வார்களா?

உணர்ந்து விட்டால் அவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறுகின்றான்.

நீங்கள் தவ்பாக் செய்து மீண்டு விட்டால் உங்கள் பொருள்களின் அசல் முதல் உங்களுக்குண்டு. (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள். நீங்களும் அநியாயம் செய்யமாட்டீர்கள். (2:279)

வட்டியைப் பற்றி ஹதீஸ் கூறுவது:

வட்டி வாங்குவது – வட்டி கொடுப்பது – வட்டிக் கணக்கை எழுதுவது – வட்டியின் சாட்சிகள் ஆகியோரை நபி(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள் அவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவரே. (அறிவிப்பாளர் : ஜாபிர்(ரழி), ஆதாரம் : முஸ்லிம், திர்மிதீ, முஸ்னத் அஹ்மத்)

இறைவன் நான்கு போர்களை சுவர்க்கத்திற்கோ அல்லது அதனுடைய சுகத்தை அனுபவிக்கவோ விடமாட்டான். அவர்கள்,

1.    குடிப்பதை வழமையாகக் கொண்டவர்கள்.

2.     வட்டி வாங்கித் தின்றவர்கள்

3.     அநாதைகளின் சொத்தை அநியாயமாக அபகரித்தவர்கள்

4.    பெற்றோரைத் துன்புறுத்தியவர்கள். (அறிவிப்பாளர் : அபூஹுரைரா, ஆதாரம் : ஹாக்கிம்) (ரழி)

அறிந்து கொண்டே ஒரு திர்ஹம் வட்டி வாங்குவது, 36 முறை விபச்சாரம் புரிவதைவிட மோசமானதாகும்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஹன்ழலா. ஆதாரம் : அஹ்மத், தாரகுத்னீ பைஹகீ. (இது பலவீனமான அறிவிப்பாகும்)

வட்டி என்றால் என்ன?

நபியெ! நாமே (வஹீ மூலம்) இவ்வோதத்தை உம்மீது  இறக்கினோம்! நீர் அதை மக்களுக்கு விளக்கிக் காட்டுவதற்காக. (அல்குர்ஆன் : 16:44)

மேலே உள்ள இறை வசனத்தின்மூலம் குர்ஆனில் வரும் வட்டிக்கு விளக்கம் தர அங்கீகாரம் (உரிமை) பெற்ற நபி(ஸல்) அவர்கள் அதைப் பற்றி கூறுவதை கீழே காண்போம். பலவிதமான கொடுக்கல் வாங்கலில் நபி(ஸல்) அவர்கள் இவையெல்லாம் கூடும். இவையெல்லாம் வட்டி(ஹராம்) கூடாது என்று கூறியுள்ளதால், குறுகிய கண்ணோட்டத்துடன அணுகாமல் எல்லா ஹதீஸ்களையும் கருத்தில் கொண்டு அதைப் பற்றி அறிய  முற்படவேண்டும்.

1.  வட்டி எல்லாம், தவணை முறையில்தான்,  கைக்குக்கை மாற்றும் பொருட்களில் வட்டி இல்லை. (உஸாமத்துபின் ஜைத்(ரழி), புகாரி, முஸ்லிம்)

2. உங்களில் ஒருவர் மற்றொருவருக்குக் கடன் கொடுத்திருக்கும்போது, கடன் வாங்கியவர் கடன் கொடுத்தவருக்கு ஒரு பொருளை அன்பளிப்புச் செய்தால், அல்லது தமது வாகனத்தில் இலவசமாக ஏற்றினால், அப்போது கடன் கொடுத்தவர் அந்த அன்பறிப்புப் பொருளை ஏற்றுக்கொள்ளவோ, அவ்வாகனத்தில் இலவசப் பிரயாணம் செய்யவோ கூடாது. ஆனால் இதுபோன்ற பரோபகாரத்தை கடன் வாங்கும் முன்பே இவர் செய்பவராயிருந்தாலே அன்றி. (அனஸ்(ரழி), இப்னுமாஜ்ஜா, பைஹகீ)

3. தங்கத்தை தங்கத்திற்கு பதிலாகவும், வெள்ளியை வெள்ளிக்கு பதிலாகவும், மணிக்கோதுமையை மணிக்கோதுமைக்கு பதிலாகவும், தொலிக் கோதுமையை  தொலிக் கோதுமைக்கு பதிலாகவும், பேரீச்சம்பழத்தை பேரீச்சம்பழத்திற்கு பதிலாகவும், உப்பை உப்பிற்குப் பதிலாகவும் சம எடையில், சம தரத்தில், கரத்திற்கு கரம் விற்றுக் கொள்ளுங்கள். இவ்வினங்கள் பேதகப்படுமானால் கரத்திற்கு கரம் நீங்கள் விரும்பிய பிரகாரம் விற்றுக் கொள்ளுங்கள். எவர் கூடுதலாகக் கொடுக்கவோ அல்லது கூடுதலாக வாங்கவோ செய்த போதிலும் அது வட்டியாகும். விற்பவரும் வாங்குபவரும் சமமானவரே. (உபாதத்துப்னிஸ்ஸாமித், முஸ்லிம், திர்மிதி)

4.   நபி(ஸல்) அவர்களிடம பிலால்(ரழி) அவர்கள் பர்னீ வகையைச் சார்ந்த பேரீச்சம்பழத்தை கொண்டு வந்தனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இது உமக்கு  எங்கிருந்து கிடைத்தது? என்று வினவினர். அதற்கு அவர்கள் என்னிடம் தரத்தில் குறைந்த பேரீச்சம்பழம் இருந்தது. அதில் நான் இரண்டு மரக்கால் கொடுத்துவிட்டு அதற்கு பகரமாக ஒரு மரக்கால் பரினீ பேரீச்சம்பழம் வாங்கினேன் என்றார்கள். அப்பொழுது நபி(ஸல்) அவர்கள் ஆ! இது வெளிப்படையான வட்டி முழுக்க முழுக்க வட்டி, இவ்வாறு செய்யாதீர். இவ்வாறு நீர் வாங்க நாடினால் முதலில்(உமது) பேரீச்சம்பழத்தை விற்றுவிட்டு பின்னர் இதனை (விலை கொடுத்து) வாங்கிக கொள்வீராக! என்று கூறினார்க். அபூ ஸயீது, புகாரீ, முஸ்லிம், முஸ்னத் அஹ்மத்)

5. நான் கைபர் தினத்தன்று அங்கு மணிகள் இணைத்துள்ள தங்க மாலை ஒன்றை 12 திர்ஹத்திற்கு வாங்கினேன். அதைப் பார்த்தபொழுது தங்கத்தின் மதிப்பு 12 திர்ஹத்திற்கும் அதிகமாக இருப்பதை அறிந்து நபி(ஸல்) அவர்களிடம் சென்று விளக்கம் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அம்மாலையிலிருந்து தங்கத்தை பிரித்தெடுக்காத வரை விற்கவேண்டாம் என்று கூறினார்கள். (பிரித்த பின் தங்கத்திற்கு தங்கம் சம எடையிலோ அல்லது அதற்கு உரிய விலையிலோ விற்கப்படலாம்) (ஃபழாலாயின் அபி உபைத்(ரழி), முஸ்லிம், திர்மழிதி, நஸயீ.

6. நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் : நிச்சயமாக வட்டிப் பொருள் வளர்த்தபோதிலும், உண்மையில் அதன் இறுதிப் பலன் நாசம்தான். (இப்னுமஸ்ஊத்(ரழி),அஹ்மத்)

7. வட்டித் தொழில் செய்து சாப்பிட்டவர் மறுமையில் தட்டழிந்து தடுமாறும் பைத்தியக்காரராகவே எழுப்பப்படுவார். (இப்னு அப்பாஸ்(ரழி), இப்னு அபிஹாத்திம்)

8. நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஹராமான உண்வை உட்கொண்டு வளர்ந்த உடல் சுவர்க்கம் பிரவேசிக்காது.  (அபூ பக்ரு(ரழி), பைஹகீ)

9. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்களுக்கு ஒரு காலம் வரும். அக்காலத்தவர்  தமது சம்பாத்தியம் ஹலாலானதா? ஹராமானதா? முறையானதா? முறையற்றதா? என்பனவற்றைப் பொருட்படுத்தாது (சம்பாதித்துக் கொண்டு) இருப்பர். (அபூஹுரைரா(ரழி) புகாரீ)

எனவே நாம் மேற்காணும் ஹதீஸ்களின் வாயிலாக வட்டி பெரும்பாவம் என்பதையும் அதை விட்டும் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்பதையும் உணருகிறோம்.

இத்தகைய பெரும்பாவமான வட்டியிலிருந்து விலகி இன்றைய  உலகில் நாம் வாழ முடியாது. அப்படி வாழ முற்பட்டால் நாமும், நம சமுதாயமும் மிகப் பெரும் பொருளாதார வீழ்ச்சியைச் சந்திக்க நேரிடும் என்று சிறிதும் அஞ்சவேண்டியதில்லை. ஏனெனில், அல்லாஹ்வும் அவன் தூதரின் வாக்கும் எக்காலத்திலும் பொய்யாகாது என்பது முஸ்லிம்களாகிய நாம் அறிந்த ஒன்றேயாகும்.

வல்ல நாயன் தனது மறையில் கூறுகின்றான் : வட்டியை எந்த பரக்கத்தும் இல்லாமல் அழித்து விடுவான். (2:276)

நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் : இறைவன் எனது உள்ளத்தில் போட்டான். நிச்சயமாக எந்த நபரும் அவரது ரிஜ்கு முடியாதவரை ஒருபோதும் மரணிக்க முடியாது. ஆகவே, அல்லாஹ்வை பயந்து ரிஜ்கை சம்பாதிக்கும் வகையில் ஹலாலான (ஆகுமான) சிறந்த முறையைக் கடைபிடிப்பீர்களாக! (இப்னு மஸ்ஊத்(ரழி), பைஹகீ, ஷரஹுஸ்ஸுன்னா)

எனவே நாம் எவ்வளவு அதிகமாக கஷ்டப்பட்டு உழைத்தாலும், இறைவனால் நமக்கு அளித்த ரிஜ்க்கு, மேல் அடையுமுன் யாரும் மரணிக்க முடியாது. ஆகவே வட்டி என்ற ஹராமை தவிர்த்து, ஹலாலான வழியிலேயே முயற்சி செய்வோம். நமக்குள்ள ரிஜ்க்கு நம்மை வந்தே அடையும் என்ற நபி(ஸல்) அவர்களின் வார்த்தையில் உறுதிகொண்டு உழைப்போமாக.

வல்ல நாயன், அழியக்கூடிய இவ்வுலக அற்ப இன்பத்திற்கு ஆசைப்பட்டு, வட்டி என்ற பெரும் பாலத்தில் விழுந்துவிடாமல் காத்து அழியாத  நிலைத்திருகட்கக்கூடிய மறுமையில், சுவர்க்கத்தின் எல்லா நற்பேறுகளையும் நாமும், மற்றவர்களும் அடைய தவ்ஃபீக் செய்தருள்வானாக! ஆமீன்.

********************************************************************

கீரனூரி கடிதம்….

அ.க.அ.

திண்டுக்கல்

29.11.1988

சகோதரர் இன்ஜினியர் H. அப்துஸ்ஸமது ஆலிம் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். ஹஜ்ரத் அலி(ரழி) அவர்களின் ஒட்டகப் பங்கீடு நிகழ்ச்சிக்கு விளக்கம் கோரியதாக எழுதி,  இறுதியில் உங்களைப் பற்றி விமர்சனங்கள் எழுத நேரிடும் என்ற எச்சரிக்கை அடங்கிய தங்களது 20.5.88 கடிதத்துக்கு விரிவான பதிலை எழுத அவகாசம் எதிர்பார்த்திருந்தேன்.

முதலில் வாரிசுரிமை சம்பந்தமாக குர்ஆன் கூறியுள்ள முறைகளை கவனிக்க வேண்டுகிறேன்.

அல்லாஹ் கூறுகிறான் :

பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு. (4.11) 1 / 6.

ஆனால் இரண்டுக்கு அதிகமாக இருந்தால், அவர்கள் மூன்றில் ஒரு பாகத்தில் சமமாக பங்கிட்டுக் கொள்ள வேண்டுமட். (4:12) 1 / 3

இன்னும் உங்கள் மனைவியர் விட்டுச் சென்றதில், அவர்களுக்கு பிள்ளை இல்லாதிருந்தால், உங்களுக்கு பாதி பாகம் உண்டு. (4:12) 1 / 2

அவர்களுக்குப் பிள்ளை இருந்தால் உங்களுக்கு கால்பாகம் தான். (4:12) 1 / 4

அப்போது அவர்களுக்கு நீங்கள் விட்டுச் சென்றதில், எட்டில் ஒரு பாகம்தான். (4:12) 1 / 8

ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பதியாகும். (4:11) 1 / 2

பெண்கள் மட்டுமிருந்து, அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால், அவர்களுக்கு இறந்து போனவர் விட்டுச் சென்றதில் மூன்றில் .இரண்டு பாகம் கிடைக்கும். (4:11) 2 / 3.

(இறை வசனங்கள் அரபியில் எழுதப்பட்டுள்ளன. ஆ-ர்)

அல்லாஹ் தெளிவாக 1/2. 1/4, 1/8, 1/3, 2/3, 1/6 என்று கூறி, இப்படித்தான் பாகங்களைப் பிரிக்கக் கூறியுள்ளான். எனவே ஹஜ்ரத் அலி(ரழி) அவர்கள் தங்களிடம் கேள்ளி கேட்டவருக்கு 1/2, 1/3 என்ற பதில் கூறினார்கள். இதுவே குர்ஆன் கூறும் முறை. தாங்களோ….. அலி(ரழி) அவர்கள் திருமறையில் கூறியிருப்பதை ஒட்டி, சொத்துப் பிரிவினை முறையை அறிவிக்காமல் தன் யுக்திக்கு ஏற்ப ஒரு முறையைக் கூறி… என்று எழுதுகிறீர்கள் என்றால் திருமறை கூறும் முறையை தாங்கள் எவ்விதம் ஆராய்ந்து தெரிந்து வைத்துள்ளீர்கள் என்பது புரிகிறது.

குர்ஆன் கூறும் வாரிசுரிமைச் சட்ட வாசனைப்பட்ட யாரும் ஹஜ்ரத் அலி(ரழி) அவர்கள் கூறிய பதிலையே கூறுவார்கள். கூற வேண்டும். இந்தப் பங்கீட்டு முறையை நம்ப முடியவில்லை என்று எழுதியுள்ளீர்கள். அதாவது அல்லாஹ் கூறிய பங்கீட்டு முறையை உங்கள் கல்வித் துறையில் நீங்கள் கற்காததால் உங்களால் நம்ப முடியவில்லை.

குறிப்பிட்டுள்ள நிகழ்ச்சியில், பங்குதாரர்களின் சொந்தம் தெளிவாக குறிப்பிடவில்லை. (தேவையில்லாததால் கூறாமல் விட்டிருக்கலாம்) எனினும் பங்குதாரர்கள் கீழ்க்கண்டவாறு இருக்கலாம்.

உடன் பிறந்த சகோதரி 1
தாயார்
சிறிய தந்தை 1

வாரிசுதாரர்கள் மேற்கண்டவர்கள் மட்டுமே இருக்கும் நிலையில் உடன் பிறந்த சகோதரிக்கு, சொத்தில் பாதி(1/2) என்றும் தாயாருக்கு சொத்தில் மூன்றில் ஒரு பங்கு (1/3) என்றும் குர்ஆன் கூறுகிறது.

வாரிசுரிமைச் சட்ட குர்ஆன், ஹதீஸ் விளக்கப்படி சிறிய தந்தைக்கு மீதமுள்ள சொத்து கிடைக்க வேண்டும். அதையே அலி(ரழி) 1 / 9 என்றார்கள்.

பதில் கேட்டுச் சென்றவர், சொத்து என்ன உள்ளது என்று பார்த்தார். 17 ஒட்டகங்கள் மட்டுமே மிஞ்சியது. 1/2, 1/3, 1/9 பாகங்களாகப் பிரித்துப் பிரித்துப் பார்க்கிறார். முடியவே இல்லை. மீண்டும் அலி(ரழி) அவர்களிடம் வந்து, “உயிருடன் பிரிக்க முடியவில்லையே என்ன செய்வது? என்று கேட்கிறார். ஒட்டகைக்குப் பகரம் சில்லரையாக்க முடிந்த திர்ஹங்களாகவோ, உடைத்துக் கொள்ள முடிந்த பொருட்களாகவோ இருந்திருந்தால் அவரே பிரித்துக் கொடுத்திருப்பார். ஒட்டகையாதலால் பிரிக்கமுடியவில்லை. அப்போதுதான் அலி(ரழி) அவர்கள் பைத்துல் மாலிலிருந்து ஒரு ஒட்டகை சேர்த்து நிற்கவைத்து, அதே 17 ஒட்டகையை உயிர் போகாமல், அதே 1/2,1/3,1/9 கணக்கில் தங்களுக்கு அல்லாஹ் அளித்திருந்த மேலான அறிவக் கூர்மையால் பிரித்துக் கொடுத்துவிட்டார்கள்.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பங்கிடப்பட வேண்டியவைகளை ஷரீஅத் முறையில் மீதமில்லாமல் பங்கிடக்கூடிய ஒரு வழிமுறையைத் தான் எந்த அறிஞரும் தருவாரே அல்லாமல்…. என்று எழுதியுள்ளீர்கள். ஷரீஅத் முறையை ஹஜ்ரத் அலி(ரழி) அவர்களுக்கும், குர்ஆனுடைய  முறைப்படி போதிக்கும் உலமாக்களுக்கும், நீங்கள் போதிப்பதைபட் பார்க்கும்போது மார்க்க அறிவு சூன்யம் இந்த அளவும் போக முடியுமா? என்று எண்ணி ஆச்சரியமடைய வேண்டியுள்ளது.

மேற்கண்ட ஒட்டகப் பங்கீடு முற்றிலும் குர்ஆன், ஹதீ’ஸ் ஷரீஅத் கூறும் முறைப்படியே இருக்கிறது. எந்தவித முரண்பாடும் அறவே கிடையாது. இந்நிகழ்ச்சியை என்னுடைய கண்ணியமிகு உஸ்தாது சொல்லக் கேட்டுள்ளேன். நான் நூறு கிதாபை பார்ப்பதை விட அது மிகப் பெரிய ஆதாரமாகும். ஆனால் கற்றோரின் அருமை கல்வி உடையவர்களுக்கு தானே புரியும். 1, 2 என்ற இலக்கம் தெரியாவிட்டால் 1+2=3 என்பது எப்படித் தெரியும். அல்லாஹ் நல்வழி காண்பிப்பானாக! நஜாத்துக்கு இந்த பதிலை அனுப்புவதற்குரிய வக்காலத்தை தாங்களே எடுத்துக் கொள்ளக் கோருகிறேன். (ஒ.ம்.) அ.கலீல் அஹ்மத், கீரனூரி.

குறிப்பு : நஜாத்தை ஆதரிக்கும் நாங்கள் அதன் கூற்றுப்படி ஆலிமாக  விட்டீர்கள். எனவே, தாங்களை கெளரவிக்க ஆலிம் என்று எழுதியுள்ளேன்.

*************************************************************************

கீரனூரிக்கு பதில்

பிஸ்மில்லஹிர்ரஹ்மானிர்ரஹீம்

H.அப்துல் சமது,  சென்னை, 7-2-89

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சகோதரர் மவ்லவி கலீல் அஹ்மது கீரனூரி அவர்களுக்கு எழுதுவது தாங்கள் “பயான் சுனில் எடுத்தியும்பும் பதினேழு ஒட்டகங்களின் கலை”க்கு  ஆதாரமும், விளக்கமும் கோரி, 20.5.88ல் நான் எழுதிய கடிதத்திற்கு மறுமொழியாகத் தாங்கள் 29.11.88ல் எழுதிய கடிதம் கிடைக்கப் பெற்றேன்.

என்னை கவுரவிப்பதற்காக “ஆலிம்” என அழைத்திருப்பதாக ஏளனமும், இகழ்ச்சியும் தொளிக்க எழுதியுள்ளீர்கள். இறை வசனம் ஒன்றைத் தங்களுக்கு ஞாபகமூட்டி (சத்தியத்தை) உண்மையை எடுத்துரைக்க விழைகின்றேன்.

விசுவாசிகளே! எந்த ஆண்களும், மற்றெந்த ஆண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். அவர்கள், இவர்களைவிட  மேலானவர்களாக இருக்கலாம்”. (49:11)

நீங்கள் கையாண்டிருக்கும் இகழ்ச்சியும் ஏளனமும் மிக்க நடையை நான் கையாள விரும்பவில்லை. எனது முன் கடிதமும், இக்கடிதமும் உண்மையை உணர்த்தி சத்தியத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற இலட்சியத்தால் உத்தப்பட்டவையே அன்றி குற்றம் கண்டு. இழிவுபடுத்தவேண்டும். ஏளனம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தால் எழுதப்பட்டவை அல்ல.

ஆலிம் என்ற அரபுப் பதத்திற்கு கற்றவன்(அறிஞன்) என்பதே பொருள் என்பதை நான் எடுத்துக் கூற வேண்டிய அவசியமில்லை. எனவே பல்கலைக் கழகங்களில் முறையுடன் சீராகப் பயின்று, பொறியியலில் சான்றுகள் பல பெற்ற “ஆலிம்” நான் என்பது உண்மையே. இம்மை வாழ்வில் பயனுற, பொறியியல் கற்றுத் தேர்ந்த நான், மறுமையின் வெற்றிக்காக மார்க்கக் கல்வியை சுயமே கற்றேன். குர்ஆன், ஹதீஸ் இவைகளின் அடிப்படையில், அவைகளை ஆதாரமாகக் காட்டி மார்க்கத்தை மக்களுக்கு எடுத்தியம்பும் அந்நஜாத் என மார்க்க அறிவு பெருக உறுதுணையாகத் திகழ்ந்தது, திகழ்கிறது என்பதை மன உவகையுடன் கூற விரும்புகிறேன். அல்ஹம்துலில்லாஹ். இங்ஙனம் கற்று பெற்ற அறிவே. தாங்கள் வெகு ஆர்வத்துடன் கூறி வரும் பதினேழு ஒட்டகங்களின் பங்கீடு பற்றிய கதையின் உண்மை நிலையையும், தரத்தையும் நிர்ணயிக்க வழிகோலியது.

அபூஹுரைரா(ரழி அவர்கள், நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாக அறிவிக்கின்றார்கள். ஒருவன் தான் கேட்பதை எல்லாம் (அதன் உண்மையை ஆய்ந்து அறியாமல்) விவரிப்பது அவனை பொய்யன் ஆக்கப் போதுமானது. (முஸ்லிம்)

இந்த நபிமொழி பிறர்வாய் கேட்பவற்றை எல்லாம் நம்பி விவரிப்பது தவிர்க்கப்படவேண்டும். கேட்பவற்றின் வாய்மையையும் தரத்தையும் ஆய்ந்தறிய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. தாங்களோவெனில், தாங்கள் ஆர்வத்துடனும், அழுத்தத்துடனும் ‘பயானில்’ எடுத்துரைக்கும் கதையின் நிலையையும், தரத்தையும் நிர்ணயிக்க தக்க ஆதாரம் தருவதைத் தவிர்த்து ‘இந்நிகழ்ச்சியை என்னுடைய கண்ணியமிகு’ உஸ்தாது சொல்லக் கேட்டுள்ளேன். நான் நூறு கிதாபைப் பார்ப்பதை விட அது மிகப் பெரிய ஆதாரம் ஆகும். ஆனால் கற்றோரினட் அருமை கல்வியுடையவர்களுக்குத்தானே புரியும் என தங்கள் கடிதம் முழுவதும் இழையோடும் இகழ்ச்சியும், ஏளனமும் இங்கும் துவங்கும் வகையில் எழுதி விட்டீர்கள். நான் முனைந்து கற்று கல்வியுடையோன் ஆகி கிதாபுகளிலெல்லாம் தலையாய புனிதக் குர்ஆனில் எல்லாம் வல்ல அல்லாஹு, வேதத்தையும், ஞானத்தையும்ட கற்றுக் கொடுக்கிறவர் எனப் புகழ்ந்தேத்தும் உஸ்தாதுகளுக்கெல்லாம் உஸ்தாது ஆகிய நபி(ஸல்) அவர்களின் அறிவுரையைப் பின்பற்றி உங்களிடம் ஆதாரம் தரக் கோரினேன். என் கோரிக்கையின் நோக்கம் அறிந்து மறுமொழி தராமல் – என்னை இகழவும், ஏளனமும் செய்யும் வகையில் ஏதேதோ எழுதி விட்டீர்கள். ஏளனத்தாலும் இகழ்ச்சியாலும் உண்மையை மறைக்கவியலாது. கல்வியுடையோர்க்கு இது அழகல்ல.

அன்றி சத்தியம் வந்தது. அசத்தியம் மறைந்தது. நிச்சயமாக அசத்தியம் மறைந்தே தீரும். (17:81)

நீங்கள் கூறும் கதை வரலாற்று நிகழ்ச்சி அல்ல: புனையப்பட்டது என்பதற்கான காரணங்கள் கண்டு எழுதுகின்றேன். உண்மையை நிலைநிறுத்தும் நோக்கோடு சீர்தூக்கிப் பார்த்து, சிந்திக்கவேண்டுகிறேன்.

ஆறு மாத இடைவெளிக்குப் பின், பதினேழு ஒட்டகங்களின் உரிமையாளருக்கு வாரிசுகளாக, ஒரு சகோதரியையும், தாயாரையும், ஒரு சிறிய தந்தையையும் கண்டெடுத்துள்ளீர்கள். அவர்களுக்கு முறையே இரண்டில் ஒன்று (1/2): மூன்றில் ஒன்று (1/3); ஒன்பதில் ஒன்று(1/9) என்ற விகிதத்தில் பதினேழு ஒட்டகங்களைப் பங்கீடு செய்ய வேண்டுமெனக் கூறுகிறீர்கள். இதுவே குர்ஆன் கூறும் முறை எனப் பகர்ந்து, திருமறை கூறும் முறையைத் தாங்கள் எவ்விதம் ஆராய்ந்து? தெரிந்து! வைத்துள்ளீர்கள் என்பது புரிகிறது என்று வினாக்குறியும், வியப்புக் குறியும் இட்டு என் ஆய்வையும், அறிவையும் ஏளனம், செய்வதில் முனைந்து உண்மையைக் காணத் தவறிவிட்டீர்கள். தாங்கள் வரிந்து கட்டி பரிந்துரைக்கும் பங்கீடு முறையில் கண்கூடாகக் காணப்பெறும் தவறை ஏனோ தாங்கள் புரிந்துகொள்ளவில்லை! திருமறையில் சொத்துப் பிரிவினை முறை 1/2, 1/3, 1/6….. என பின்ன விகிதாச்சாரத்தில் கற்பிக்கப்படுவதை அறியாமலோ, புரியாமலோ நான் உங்களிடம் விளக்கம் கோரவில்லை. தாங்கள் கூறும் கதையில் தரப்படும் பங்கீட்டு முறை, தாங்கள் நிலைநாட்ட முனைவதுபோல் குர்ஆன், ஹதீது இவைகளின் அடிப்படையில் அமையவில்லை. எனவே அப்பங்கீட்டுமுறை அறிவுமிக்க அலி(ரழி) அவர்கள் பகர்ந்ததல்ல என்பது என் உறுதியான நம்பிக்கை. தாங்கள் கூறுவதற்கேற்ப, சகோதரிக்கு 1/2 பாகமும், தாயாருக்கு 1/3 பாகமும் கொடுக்கப்பட்டால் மீதமுள்ளது 1/6 பாகமே அல்லாது 1/9 பாகம் அல்ல, என்பது வெள்ளிடைமலை.

வாரிசுரிமைச் சட்ட குர்ஆன், ஹதீஸ் விளக்கப்படி சிறிய தந்தைக்கு மீதமுள்ள சொத்து கிடைக்கவேண்டும். அதையே அலி(ரழி) 1/9 என்றார்கள் என எழுதியதோடல்லாமல், “ஷரீஅத் முறையை ஹஜ்ரத் அலி(ரழி) அவர்களுக்கும், குர்ஆனுடைய முறைப்படி போதிக்கும் உலமாக்களுக்கும் நீங்கள் போதிப்பதைப் பார்க்கும்போது மார்க்க அறிவுச் சூன்யம் இந்த அளவு போக முடியுமா? என்று ஆச்சரியமடைய வேண்டியுள்ளது என உண்மையைத் திரித்து எழுதியுள்ளீர்கள். அலி(ரழி) அவர்களைக் குறை கூறியோ அல்லது அவர்களுக்கு நான் போதிக்கத் துணியும் வகையில் மமதையும், செருக்கும் தொனிக்கவோ நான் எழுதியுள்ளதாக ஏதேனும் ஒன்றை எடுத்துக் கூற முடியுமா? சகோதரர்  அவர்களே! சஹாபா பெருமக்களில் வீரர் எனவும், மார்க்க அறிஞர் எனவும், புகழ்ந்தேத்தப்படும் அலி(ரழி) அவர்களின் இறை உணர்(தக்வா)வின் மேன்மையையும்,  அன்னரின் அறிவாற்றலின் உயர் நிலையையும் நன்குணர்ந்தவன் நான். எனவே தான், அவர்களுக்குரிய கண்ணிமும் மகத்துவம் – நீங்கள் அவர்கள் மீது சாட்டி மொழியும் கட்டுக்கதையால் – கலங்கமடையாலாகாது என்ற கடமை உணர்ச்சியால் உந்தப்பட்டு அக்கதையின் பங்கீட்டுமுறை அலி(ரழி) அவர்கள் பகர்ந்ததல்ல என விளம்புகின்றேன். நீங்கள் கூறுவது வரலாற்று உண்மையாயின் தயவ கூர்ந்து ஆதாரம் தாருங்கள்.

நிச்சயமாக  இந்தக் குர்ஆன் மிக நேரான வழியையே காட்டுகின்றது. (17:9) என அல்லாஹ் திவுளமாகின்றான். திருமறையின் இக்கூற்றிற்கேற்ப, நேர்மையானராக, அறிவுடையோராக, உத்தமமாக, நீதியாளராக வாழ்ந்தவர் அலி(ரழி) அவர்கள், நடைமுறை சாத்தியமில்லாத, தெளிவற்ற, திணரடிக்கும் பங்கீட்டு முறையை ஷரீஅத் முறை என பரிந்துரைத்திருக்க மாட்டார்கள் என உறுதியுடன் அறுதியிட்டுக் கூறுகிறேன்.

மேலே காண்பித்தது போல் கணித ரீதியாக குறையுள்ள ஒரு பங்கீட்டு முறை நன்கு அறிந்தவனும், தெரிந்திருப்பவனும் ஆகிய அல்லாஹ்வின் (திருமறையின்) போதனை அல்ல.

வாரிசுச் சட்ட ஹதீதுகளில் கீழ்வரும் நபிமொழியை பல இடங்களில் காண்கின்றோம். ரசூல்(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

பெற உரிமை பெற்ற வாரிசுதாரர்களுக்கு (திருமறையில் நிர்ணயித்துள்ளபடி) அவர்களுக்குரியதை கொடுத்து விடுங்கள். (கொடுத்த) பின் மீதமுள்ளது ஆண் உறவினர்களில் மிக நெருக்கமானவருக்குக் கொடுக்கப்படவேண்டும்.(புகாரீ)

அறிஞர் அலி(ரழி) அவர்களை, சொத்துப் பிரிவினை ஆலோசனை நாடி, உங்கள் கதையின் 17 ஒட்டகங்களின் உரிமையாளர் அணுகி இருக்கிறார். அன்னார் திருமறை ஹதீது வாரிசுச் சட்டப்பிரகாரம், சகோதரிக்கு 1/2 பாகம், தாயாருக்கு 1/3 பாகம்; மீதமுள்ளது சிறிய தந்தைக்கு என்றே கூறி இருப்பார்கள். அல்லாமல் சிறிய தந்தைக்கு 1/9 பாகம் என்று நிச்சயமாகக் கூறி இருக்கமாட்டார்கள். இப்போது கூறுங்கள் சகோதரரே, மார்க்க அறிவுச் சூன்யம் காரணமாக நான் உங்களிடம் விளக்கம் கோரினேனா? குர்ஆனின் முறைப்படி போதிக்கும் உலமாக்களுக்கு நான் போதிக்கும் எண்ணத்தில் எழுதினேனா? குர்ஆன், ஹதீது முறைப்படி போதிக்காததால்தான் முன் எழுதியவைகளையும், இப்போது எழுதுபவைகளையும், வரைய நேர்ந்தது என்பதையும் எல்லாம் வல்ல  வல்ல அல்லாஹி என்னை மார்க்க அறிவுச் சூன்யம் உடையோனாக வைத்திருக்கவில்லை என்பதையும் அறிய வேண்டுகிறேன். எனக்கு மார்க்க அறிவு பெவேண்டும் என்ற ஆர்வமும், முனைவும் எத்துணை உள்ளது என்பதை என் இல்லத்தில் உள்ள மார்க்க நூல்களின் எண்ணிக்கையே சான்று பகரும்.

அவ்வாறே இந்த குர்ஆனையும் நாம் உமக்கு அருளினோம். மனிதர்களுக்காக அருளப்பட்ட இதை, நீர் அவர்களுக்குத் தெளிவாக எடுத்துக் காண்பியும். அவர்கள் கவனித்து, அறிந்து கொள்ளுவார்கள். (16:14)

எனும் இறைவசனத்திற்குகந்து மார்க்க அறிஞராகிய அலி(ரழி) அவர்கள் தெளிவாகவே அறிவுரையும், ஆலோசனையும் பகருவார்களேயல்லாமல் தன்னை நாடி வருபவரிடம் திகைப்பும், குழப்பமும் ஊட்டவல்லதும், கணித ரீதியில் குறைபாடுள்ளதுமான ஒரு புதிரைக் கூற மாட்டார்கள்.

1/2, 1/3, 1/4 பாகங்களாகப் பிரித்துப் பார்க்கிறார். முடியவே இல்லை. மீண்டும் அலி(ரழி) அவர்களிடம் வந்து உயிருடன் பிரிக்க முடியவில்லையே என்ன செய்வது என்று கேட்கிறார். ஒட்டகைக்குப் பகரம்  சில்லரையாக்க முடிந்த  திர்ஹங்களாகவோ, உடைக்க முடிந்த பொருட்களாகவோ இருந்திருந்தால் அவரே பிரித்துக் கொடுத்திருப்பார். ஒட்டகையாதலால் பிரிக்க முடியவில்லை. அப்போதுதான் அலி(ரழி) அவர்கள் பைதட்துல்மாலிலிருந்து ஒரு ஒட்டகையைச் சேர்த்து நிற்க வைத்து, அதே 17 ஒட்டகையை உயிர் போகாமல் 1.2, 1/3,1/9 கணக்கில், தங்களுக்கு அல்லாஹ அளித்திருந்த மேலான அறிவுக் கூர்மையால் பிரித்துக் கொடுத்து விட்டார்கள் எனவும், பிறிதொரு இடத்தில் 1, 2 என்ற இலக்கம் தெரியாவிட்டால் 1+2=3 என்பது எப்படித் தெரியும். எனவும் எழுதியுள்ளீர்கள். இங்ஙனம் என்னை இகழ்ந்துரைப்பதற்காகவும், ஏளனம் செய்வதற்காகவும் எழுதிய தாங்கள் 1+2=3 என்பதை  உண்மையில் உணரத் தவறி விட்டீர்கள் என்பதை மிக மன வேதனையுடன் எடுத்துக்கூற வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகி விட்டேன். விளக்கமும், ஆதாரமும் கோரி எழுதியும், ஆலோசித்து, நுட்பமாக, துல்லியமாக ஆய்வு செய்து உண்மையை அறிந்து மறுமொழி தராமல், ஏளனமட் செய்யும் மன இச்சைக்கு இரையாகி, எழுத்து வடிவில் தருபவை நீங்கள் நிலைநாட்ட நாடுவதற்குச் சாதகமானவைதானா? என்பதையும் தீர அறியாமல் எழுதி விட்டீர்களே! நீங்கள் நிலைநாட்ட விரும்புவதற்குப் பாதகமாக உங்கள் கூற்று அமைந்துவிட்டது என்பதைக் காண்க!

ஒட்டகைக்குப் பகரமாக சில்லரையாக்க முடிந்த திர்ஹங்களாகவோ, உடைக்க முடிந்த பொருட்களாகவோ இருந்திருந்தால் அவரே பிரித்துக் கொடுத்திருப்பார் என்பது தங்களின் கூற்று. கூறப்பட்ட பங்கீட்டு முறை ஷரீஅத் தரும் முறையாக இருப்பின் அவர் கொடுத்திருக்க வேண்டும். 17 பொருட்களும்ட, பரிந்துரைக்கப்பட்ட விகிதாச்சாரத்தில் விநியோகிக்கப்பட்டால் பாக்கி இல்லாதிருக்கவேண்டும். இதுதானே நியாயம்! நீங்கள் கூறுவதுபோல் 17 ஒட்டகங்களையும் சில்லரையாகக்க முடிந்த தர்ஹங்களாகவோ, உடைக்க முடிந்த பொருட்களாகவோ கருதி, நீங்களே பங்கீடு செய்து பாருங்கள். சகோதரிக்கு 17×1/2 = 8  1/2 (திர்ஹங்கள் அல்லது பொருட்களு)ம், தாயாருக்கு 17×1/3 =  5  2/3ம், சிறிய தந்தைக்கு 17×1/9 = 1  8/9ம், கொடுப்பீர்கள். மூவருக்கும் கொடுக்கப்பட்டது மாத்திரமே நீங்கள் கூறும்ட விகிதாச்சாரத்தில் பங்கிடப்பட்டுள்ளது. இங்ஙனம் நிறைவற்ற ஒரு பங்கீட்டு குறைபாடுள்ள  ஒரு திட்டத்தை அலி(ரழி) அவர்கள் பரிந்துரைப்பார்களா? இவைதான் எனது ஐயங்கள். நானட் உங்களிடம் ஆதாரமும் விளக்கமும் கோரியதற்கு தக்க முகாந்திரம் உள்ளதா? இல்லையா? நான் மேலே தந்துள்ளவை சாதாரண கணித முறையேயல்லாமல், தில்லுமுல்லுகளோ, விதண்டாவாதமோ அல்ல.

இவை மாத்திரமல்லாமல் இன்னொரு கோணத்தில் நோக்கினாலும் நீங்கள் கூறும் கதை தரும் பங்கீட்டு முறை ஷரீஅத்திற்கு ஒத்ததாக இல்லை என்றே தெளிவாகிறது. பதினேழு ஒட்டகங்களை வாரிசுதாரர்களுக்கு உரிய விகிதாச்சாரத்தில் முழு ஒட்டகங்களாகவே கொடுக்க முடியாத நிலை ஏற்படுமாயின், சில ஒட்டகங்களை விற்று பணமாக்கி, அப்பணத்தை ஒட்டகங்களுடன் சேர்த்துப் பங்கிடுவதை ஷரீஅத் தடை செய்கிறதா? இல்லையே! அங்ஙனம் இருக்க, நீங்கள் கூறும் கதையில் திகழ்ந்தது போல் பைத்துல்மாலிலிருந்து ஓர் ஒட்டகத்தைக் கொண்டு வந்து நிறுத்தி, 18 ஒட்டகங்களாக்கி பங்கிட்டு பின் பைத்துல்மாலில் சேர்த்து புதிரை விடுவிக்க வேண்டிய அவசியம் உண்டோ?

சாதாரண மக்களும் கண்கூடாகக் காணக்கூடிய ஒரு மிகச் சாதாரண சின்ன கணிதக் குறைபாட்டைக் கூட காணமுடியாமல் இந்நிகழ்ச்சியை என்னுடைய கண்ணியமிகு உஸ்தாது கூறக் கேட்டுள்ளேன். நான் நூறு கிதாபைப் பார்ப்பதைவிட அது மிகப்பெரிய ஆதாரம் ஆகும்… என்று எழுதுகிறீர்கள். இதே போல் தாங்கள் மார்க்க சம்பந்தமான விஷயங்களிலும் இத்தகைய முறையற்ற நம்பிக்கையுடன் ஆதாரம் தேடாமல் பெரும் தவறுகளில் மூழ்கி இருக்கிறீர்கள் என்பதை என் போன்றவர்கள் அறிய வகை செய்துள்ளீர்கள்.

நான் எடுத்தியம்புவது தவறானால் சுட்டிக்காட்டுங்கள்.ஏற்கத் தயாராகவுமுள்ளேன். தவறை தவறென ஏற்பது நிறையுடைமை எனக் கருதுபவன் நான். உண்மையை உணரவேண்டும், உண்மையை எடுத்துரைக்க வேண்டும் என்பதுதான் என் இலட்சியம்.

நான் எனது 20.5.88 கடிதத்தில் … உண்மையை அறிவிக்க விமர்சனங்கள் எழுத நேரிடும் என எழுதியதை உரிய கோணத்தில் காணாமல் எச்சரிக்கையாகக் ருதியது வியப்பாகவுள்ளது. எழுத்தாளர்களையும், பேச்சாளர்களையும், அறிஞர்களையும் விமர்சிப்பது சீரான, நேரான மரபே, தகாத செயலல்ல, எச்சரிக்கையாகாது. அறிஞர் அபுல் ஹஸன் அலி நத்வி அவர்கள் அறிஞர் அபுல் அஃலா மவ்தூதி அவர்கள் எழுதிய திருமறையின் நான்கு அடிப்படைச் சொற்கள் என்ற நூலை, நவீன யுகத்தில் மார்க்க மதிப்புணர்வும், வியாக்கியானமும் என்ற நூலில் விமர்சித்து எழுதினார்கள். இந்நூலின் ஒரு பிரதியுடன் கடிதம் ஒன்று ஒழுதி மவ்தூதி அவர்களுக்கு அனுப்பினார்கள். மவ்தூதி, அவர்கள் நதவி அவர்களுக்கு எழுதிய மறுமொழி கீழ்வருமாறு.

நான் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவனாக என்னை எண்ணுவதுமில்லை. (என் நூல்களைப் பற்றிய) விமர்சனத்தை இழிவாகக் கருதுவதுமில்லை. இவ்விதம் எழுதியதோடல்லாமல் அவர்களுடைய மற்ற நூல்களைப் பற்றி பாரபட்சமற்ற விமர்சனம் எழுதும்படியும், சந்தேகங்களையும், அபிப்பிராயங்கையும் அறிவிக்குமாறும் அபுல் ஹஸன் அலி நதவி அவர்களை வேண்டிக்கொண்டார்கள்.

மவ்லவிகளுமே ஏற்றுக் கொள்ளுவதில்லை என்பதை நான் அறிவேன். ஆனால் மேற்கூறிய இருவரையுமே மார்க்க அறிஞர்கள் என இஸ்லாமிய உலகம் ஏற்றுள்ளதோடு, அவர்கள் எழுதிய அரிய அறிவார்ந்த நூல்களுக்கு மாபெரும் விருதுகளை வழங்கி சிறப்பித்துள்ளது என்பது அண்மைகால வரலாறு தரும் உண்மை. எனவே தான் உலகம் போற்றும் அறிஞர்களாகிய அவர்களின் விமர்சனத்தைப் பற்றிய கருத்தை கண்டு எடுத்துரைத்தேன்.

எழுதியவை அனைத்தையும் நடுநிலை நோக்கோடு கண்டு முடிவு எழுத வேண்டுகிறேன். உங்கள் கடிதத்தின் நகலையும், எனது இக் கடிதத்தின் நகலையும் அந்நஜாத் இதழின் பிரசுரிக்க அனுப்பியுள்ளேன்.

முற்றிலும் உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாமே உம்மீது அருளி இருக்கின்றோம். ஆகவே அல்லாஹ் உமக்கு அறிவித்தவைகளைக் கொண்டு மனிதர்களுக்கிடையில் நீர் தீர்ப்பளிப்பீராக. நீர் சதிகாரர்களுக்குத் தர்க்கிப்போராக இருக்க வேண்டாம்.  நீர் அல்லாஹ்விடம் மன்னிப்பைக் கோரும். நிச்சயமாக அல்லாஹ் மிக்க பிழை பொறுப்பவனும், அன்புடையொனுமாக இருக்கின்றான். (4:105,106)

எல்லாம் வல்ல அல்லாஹு நம்மனைவருக்கும் ஹிதாயத் நல்கி அருள்வானாக.

குறிப்பு : இவ்விரு கடிதங்களையும், நடுநிலையோடு ஆய்ந்து பெறப்படும்ட முடிவை அந்நஜாத்திற்கு எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம். – ஆசிரியர்.

*************************************************************************

ஐயமும்! தெளிவும்!!

ஐயம் :  ஒரு ஆலிம்ட ஹாஜியும் கூட இவர் சில காரணங்களைக் கூட இஜ்மா, கியாஸ் இல்லாமல் குர்ஆன், ஹதீஸை வைத்து நேரடியாக எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியாது என்று வாதிடுகிறார். அவற்றில் ஒன்று.

பெண்கள் சைக்கிள் ஓட்டுவது கூடுமா? கூடாதா? என்பதற்கு குர்ஆன், ஹதீஸில் ஆதாரம் இல்லை. ஆனால் ஒட்டகத்தின் மீது அமர்ந்து பெண்கள் பிரயாணம் செய்யக் கூடாது. ஒட்டகத்தில் மீது பல்லாக்கு போன்று அமைத்து, அதன் மீது உட்கார்ந்து பிரயாணம் செய்யலாம் என்று பெருமானார்(ஸல்) கூறியதை ஆதாரமாக வைத்துதான், சைக்கிள் மீதும் பெண்கள் பிரயாணம் செய்யக் கூடாது என்று கூறலாம். காரணம் ஒட்டகத்தின் மீது பெண்கள் அமர்ந்து (பல்லாக்கு இல்லாமல்) பிரயாணம் செய்யுமட் போது ஒட்டகத்தின் அசைவு அபத்தின் மீது படுகிறது. இதே போன்றுதான் சைக்கிளில் உட்கார்ந்து விதிக்கும்போது கால்களின் அசைவினால் ஏற்படுகிறது. எனவே சைக்கிளில் பெண்கள் மிதித்து ஓட்டுவது அனுமதிக்கப்பட்டதல்ல என்கிறார். இதுபோல கியாஸை வைத்துத்தான் பல பெரியார்கள் பல்லாண்டுகள் முன்பே இந்நவீன விஞ்ஞான காலத்திற்கு ஏற்ப சட்டமியற்றியுள்ளர். இது தவறல்ல என இஜ்மா, கியாஸுக்கு வக்காலத்து வாங்குகிறார். இதனை தெளிவுபடுத்தவும். எம். அப்துல் லத்தீப், திருச்சி-16.

தெளிவு : தாங்கள் குறிப்பிட்டுள்ள ஹாஜியான ஆலிமும்(?) மற்றும் முகல்லிது மெளலவிகளும் எப்படியாவது குர்ஆன், ஹதீஸ் மூலம் நமது எல்லாப் பிரச்சனைகளுக்கும் முடிவு காணமுடியாது என்பதை நிலைநாட்டவே முற்படுகின்றனர். அதற்கென தங்களது சொந்த ஊகங்களையும், அபிப்பிராயங்களையும் “இஜ்மா”, கியாஸ்” என்ற அரபிப் பெயர்களில் அரங்கேற்ற ஆசைப்படுகின்றனர். அதற்கு ஒரு உதாரணமே தங்கள் கேள்வியாகும்.

பெண்கள், ஒட்டகம், சைக்கிள் ஓட்டும்போது அவர்களது அபம் எங்கு உரசும், எதில் பட்டு அசைவு பெறும், சைக்கிள் ஓட்டும்போது கால்களின் அசைவினால் எப்படி உரசும் என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யும் இந்த மேதாவிகள், தங்களத ஆராய்ச்சியை ஹதீஸ்களில் செலுத்தியிருந்தால் இப்படிப்பட்ட அபத்தங்களை அள்ளி வீச மாட்டார்கள். முழுமையாக ஹதீஸ்களை பார்வையிடாமலே பிதற்றும் பிதற்றல்தான் இது. எனவே அவர்களுக்கு நாம் ஹதீஸ் மூலமே விளக்கம் தருகிறோம்.

ஒட்டகம் ஓட்டும் பெண்களில் சிறந்தவர்கள் குறைஷிப் பெண்களேயாவர் என நபி(ஸல்) அறிவித்த ஹதீஸ் புகாரியில் 3 இடங்களிலும் முஸ்னது அஹ்மதில் 8 இடங்களிலும் இடம் பெற்றுள்ளது. அறிவிப்பு : அபூஹுரைரா(ரழி)

நஜாத் செப்டம்பர் ’87 இதழ் பக்கம் 44ல் இடம் பெற்ற ஹதீஸ் இஃப்க்’கில் ஆயிஷா(ரழி) ஒட்டகத்தின் மேல் பிரயாணம் செய்த ஆதாரம் இருக்கிறது.

நபி(ஸல்) பல்லாக்கு இல்லாமல் ஒட்டகத்தில் பெண்கள் சவாரி செய்யக் கூடாது என்று தடை செய்திருந்தால், அவரது அன்பு மனைவி ஆயிஷா(ரழி) அவ்வொட்டகத்தில் ஏறியிருப்பார்களா? அதனால்தான் அவருக்கு களங்கம் ஏற்பட்டது என தங்களது ஆலிமான ஹாஜி கூறுவாரா?

நபி(ஸல்) அவர்கள் தனது ஒட்டகத்திலே தனது மனைவி ஸபிய்யா(ரழி) அவர்களை உடன் அமரச் செய்து, தனது மேலாடையால் போர்த்திய வண்ணம் பிரயாணம் செய்திருக்கிறார்கள். இது நடந்தது ஹிஜ்ரி 7-8ல். அங்கும் அவ்விருவரும் பல்லாக்கில் அமரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிகழ்ச்சியின் முழு விபரத்தை அபீஷையா, அபியஃலா, தாரீக் இப்னு அஸாகீர் போன்ற தரமான ஹதீஸ், மற்றும் நூல்களில் சரியான அறிவிப்பாளர் வரிசையில் காணலாம்.

இப்படி பல விபரங்கள் ஹதீஸ் நூல்களில் இருக்க, அதனை சிறிதும் பாராமல் தனது மனம் போன போக்கில் காரணங்களைக் கூறி ‘இஜ்மா, கியாஸுக்கு’ வக்காலத்து வாங்கியுள்ளார் தாங்கள் குறிப்பிடும் ஹாஜியான ஆலிம், இப்படி கூறியிருப்பது வருந்தத்தக்கது. பெண்களின் அபத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து அபத்தங்களை அவிழ்த்து விடாமல், அறிவு பொக்கிஷங்களான குர்ஆன், ஹதீஸைப் புரட்டச் சொல்லுங்கள்.  நாம் கூறியுள்ள ஆதாரங்களைக் கூறி விளங்க வையுங்கள். அல்லாஹ் அவருக்கும், நம்மனைவருக்கும் நேர்வழி காட்ட போதுமானவன்.

ஐயம் : தராவீஹ் தொழுகை 8+3 ரக்அத்துக்கள் ஸஹீஹான ஹதீஸாக இருப்பினும் நீங்கள்  தொழவைக்கும் முறை ஹதீஸுக்கு மாற்றமாக உள்ளதே! 4+4 என்ற அடிப்படையில் நபி(ஸல்) அவர்கள் தொழுதிருக்கிறார்கள் என இங்குள்ள ஒரு மெளலவழி கூறுகிறார். ஸஹீஹான ஹதீஸ் ஆதாரங்களில் தராவீஹ் தொழுகையை நபி(ஸல்) எப்படி தொழுதுள்ளார்கள்? விளக்கவும். ஏ.ஹெச். முஹம்மது அலி, சிங்கப்பூர்.

தெளிவு : ஹதீஸ் நூல்களில் தராவீஹ் என்ற சொல் இல்லை. ஸலாத்துல் லைல், கியாமுல் லைல் என்ற பதங்களே காணப்படுகின்றன. ரமழானிலும், ரமழான் அல்லாத காலங்களிலும் நபி(ஸல்) அவர்கள் 11 ரகாஅத்திற்கு மேல் தொழுததே இல்லை என்ற ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கும் அந்த ஹதீஸில் 4+4+3 என்று தொழுததாகவே வருகின்றது. நபி(ஸல்) அவர்கள் இரவுத் தொழுகைகளை 4+4+3 என்ற தொழுதது போல் இரண்டிரண்டாக தொழுததற்கும், பல ஹதீஸ்களை, பல நூல்களில் காண முடிகிறது. ஆனால் நபி(ஸல்) அவர்கள் ரமழானிலோ, ரமழான் அல்லாத காலங்களிலோ இரவுத் தொழுகை 20+3 ரகாஅத் தொழுததாக ஒரு ஆதாரமும் இல்லை. எனவே நடைமுறையில் இருக்கும் 20+3 ரகாஅத் நபி வழி இல்லை என்று எடுத்துக் காட்டுகிறோம். அதே சமயம் மக்களின் நடைமுறையில் இருக்கும் இரண்டிரண்டாக தொழுவதற்கு நபிவழியில் ஆதாரம்ட இருப்பதால் மக்களின் நடைமுறையிலிருப்பதை நாமும் சரிகாண்கிறொம். 4+4+3 என்று தொழுவதும் நபிவழியாகும்.

ஐயம் : மிஃராஜுக்கு ரசூலுல்லாஹ் சென்றபோது அங்கு ஒவ்வொரு வானத்திலும் ஈஸா(அலை), மூசா(அலை)இன்னும் சில நபிகளைச் சந்தித்ததாகவும், 50 வக்து தொழுகையை 5 வக்தாக குறைக்க மூஸா(அலை) அவர்கள், அல்லாஹ்விடம் ரசூலை கேட்கச் சொன்னதாக ஸஹீஹான ஹதீஸில் இருப்பதாக ஒரு மெளலவி பயான் செய்தார். நல்லடியார்களும் நபிமார்களும் கப்ருகளில் கியாம நாள் வரையில் நீண்ட தூக்கமாக இருப்பதாக ஒரு ஹதீஸ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது. எப்படி சந்தித்தார்கள்? அவர்களுடன் எப்படி பேசினார்கள்? ஈஸா(அலை) அவர்கள் மரணிக்கவில்லை) மற்றவர்களுடன் எப்படி பேசி இருப்பார்கள்? விளக்கம் தரவும்.  ஏ.உபைதுர் ரஹ்மான், தமாம் – செளதி அரேபியா.

தெளிவு : மிஃராஜ் மனித அறிவுக்கு அப்பாற்பட்ட மிக அதிசயமான சம்பவமாகும். அதில் இடம்பெற்ற அனைத்தும் அல்லாஹ்வின் வல்லமை கொண்டு நடைபெற்றனவாகும். கியாமநாள் வரை நீண்ட உறக்கத்தில் இருப்பவர்களையும், அல்லாஹ்வின் வல்லமையினால் இன்றுவரை மரணிக்காமல், எங்கிருக்கிறார்கள் என்ற நிலையும் நமக்குத் தெரியாமல் இருக்கும் ஈஸா(அலை) அவர்களையும், மிஃராஜின்போது குறிப்பிட்ட இடங்களில் இருக்கச் செய்தது. பேசச் செய்தது அல்லாஹ்வின் வல்லமைக்கு அப்பாற்பட்ட காரியங்கள் அல்ல. நபி(ஸல்) அவர்கள் இங்கிருந்து அங்கே சென்றது எப்படி அதிசயமோ, அதே போல் அந்த நபிமார்கள் அங்கே சென்றதும் அதிசயமே. நீங்கள் குறிப்பிடும் ஹதீஸுக்கு முரணானவையுமல்ல.

ஐயம் : நபி(ஸல்) அவர்களை குளிப்பாட்டியது ஆயிஷா(ரழி) என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் அலி(ரழி) அவர்கள் தான் குளிப்பாட்டியதாக ஸஹீஹான ஹதீஸ் ஆதாரங்கள் உள்ளன. விளக்கவும். ஏ.ஹெச்.முஹம்மது அலி, சிங்கப்பூர். இப்னு சுல்தான், சிங்கப்பூர்.

தெளிவு : அபூதாவூத், இப்னுமாஜ்ஜா, முஸ்னது அஹ்மது போன்ற நூல்களில் குறிப்பிட்டுள்ள ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் ஆயிஷா(ரழி) குளிப்பாட்டியதாக எழுதினோம். ஆனால் அந்நூல்களில் குறிப்பிடப்படும் ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் முஹம்மது இப்னு இஸ்ஹாக் என்பவர் நம்பத்தக்கவரில்லை. எனவே, அது பலஹீனமான ஹதீஸாகும். தவறுக்கு வருந்துகிறோம். தவறை சுட்டிக்காட்டி ஹதீஸை மீண்டும் அலச உதவியமைக்கு  நன்றி.

அலி(ரழி) குளிப்பாட்டியதாகவும், அப்பாஸ்(ரழி) நீர் ஊற்றியதாகவும் உஸாமா(ரழி), ஸக்ரான்(ரழி) என்ற இரு நபித்தோழர்கள் வாயிலில் நின்று குளிப்பாட்ட உதவியதாகவும் தாரீக் இப்னு ஸஃதீ, தாரீக் இப்னு அஸாகீர் போன்ற நூல்களில் காணக்கிடைக்கிறது.  இது ஒரு சரித்திரச் செய்தியாகும். நபி(ஸல்) அவர்களைக் குளிப்பாட்டியது யார்? என தெரியாததாலோ, தவறாக தெரிந்து விட்டதாலோ நமது ஈமானில் கேடு விளையப்போவதில்லை. எனவேதான் பற்பல ஹதீஸ் கலாவல்லுநர்கள், ஒரு சிலரைத் தவிர, இதுபோன்ற சரித்திரச் செய்திகளை தங்களது நூல்களில் குறிப்பிடவில்லை. இருப்பினும் உண்மையான சரித்திரச் செய்தியைத் தருவதே இஸ்லாமிய வழி. அந்த வழியில் உதவிய தங்களுக்கு மீண்டும் நன்றி.

ஐயம் : இந்த தெய்வங்கள் எங்களுக்கு பரிந்துரை செய்யும் என்ற (10:18, 39:3) வசனங்களின் அடிப்படையில் காபிர்கள் இவ்வுலக வாழ்க்கையில்தான் பரிந்துரை செய்யும் என நினைத்தார்கள். இது தவறுதான், ஆனால் நாம் வலிமார்களிடத்தில் பரிந்துரை கேட்பது ஆகிரத்தில் அல்லவா? இது எப்படி தவறாகும்? என இங்கு விசேஷ வருகை புரிந்து ஒரு தமிழக மெளலவி கூறுகிறார். இவரின் கூற்று சரியா? ஏ.ஹெச்.முஹம்மது அலி, சிங்கப்பூர்.

தெளிவு : தமழக மெளலவி, தற்சமயம் தமிழகத்தில் விலைபோதாத சரக்கை உங்களிடம் விற்க வந்திருக்கிறார். அல்லாஹ் குர்ஆனில் பரிந்துரையைப் பற்றி கூறுவதை எல்லாம் பாராமல், தானே சொன்த விளக்கங்களைத் தனக்குத் தெரிந்த ஓரிரு குர்ஆன் வசனங்களுக்குக் கூறி உங்களை குழப்பியுள்ளார். அவர் கூறியுள்ள இரு கூற்றுக்களும் குர்ஆனுக்கு முற்றிலும் மாறானது என்பதை குர்ஆன், ஹதீஸ் மூலமும் விளங்குவோமாக!

குர்ஆன் வசனங்கள் 10:18, 39:3 அடிப்படையில் காஃபிர்கள் இவ்வுலக வாழ்க்கையில்தான் அவர்கள் வணங்கும் தெய்வங்கள் பரிந்துரை செய்யும் என நினைத்திருந்தார்கள் என்பது அவரது  முதல் கூற்று. அது முற்றிலும் தவறான கூற்றாகும்.

(மறுமையில் அல்லாஹ் இவர்களை நோக்கி) நாம் உங்களை முதல் முதலாகப் படைத்தோமே அதுபோன்று தனியே எம்மிடம் வந்துவிட்டீர்கள். இன்னும் நாம் உங்களுக்கு அளித்தவற்றையெல்லாம் முதுகுகளுக்குப் பின் விட்டு விட்டீர்கள். எவர்களை நீங்கள் உங்களுடைய கூட்டாளிகள் என்றும், உங்களுக்குப் பரிந்து பேசுவார்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவர்களை நாம் உங்களுடனிருப்பதைக் காணவில்லை. உங்களுக்கிடையே இருந்த தொடர்பும் அறுந்துவிட்டது. உங்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் தவறிவிட்டன என்று அல்லாஹ் கூறுவான். (குர்ஆன் 6:94)

அவர்கள வணங்கிய தெய்வங்கள் மறுமையில் பரிந்துரை செய்யும் என்ற நம்பிக்கையில் காஃபிர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள். எனவேதான் மறுமையில் அவர்கள் நம்பியிருந்த, பரிந்துபேசக்கூடிய மக்களைக் காணமுடியாது என்கிறான் அலலாஹ். மேலும் அவர்களுடைய நம்பிக்கைகள் தவறிவிட்டன எனவும் எச்சரிக்கிறான். மேலும் அல்லாஹ் :

அல்லாஹ்வையன்றி அவர்கள் எவற்றை (தெய்வங்களாக) அழைக்கிறார்களோ,  அவை(அவனிடம் அவர்களுக்குப்) பரிந்து பேச அதிகாரமுள்ளவையல்ல (குர்ஆன் 43:36) எனவும் கூறுகிறான். மறுமையில் தங்களுக்கு அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யுமென நம்பி தாம் வணங்கியவைகள், அச்செயலை செய்யாததை அவர்கள் பார்க்கிறார்கள். பரிதவிக்கிறார்கள், புலம்புகிறார்கள். இந்த புலம்பலை அல்லாஹ் அழகாக படம் பிடித்துக் காட்டுவதை குர்ஆனில் 7:53, 26:87 முதல் 102 வரை உள்ள வசனங்களில் காணலாம். தயவு செய்து குர்ஆனை புரட்டிப் பாருங்கள். உங்களூர் வந்த விஷேச மெளலவியையும்  பார்க்கச் செய்யுங்கள். குர்ஆனின் இக்கூற்றுகளுக்கு மாற்றமாகக் கூறிய அம்மெளலவிக்கு, அவர் கூறிய 10:18 வசனத்தின் கடைசி பாகத்தையும் ஓதிக் காட்டுங்கள்.

வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் அறியாதவை (உள்ளன என நினைத்துக் கொண்டு) நீங்கள் அவனுக்கு (அல்லாஹ்வுக்கு) அறிவிக்கிறீர்களா? என்று கேட்பீர்களாக! (10:18) ஏனெனில் அல்லாஹ் கூறியதற்கு மாற்றமாக தான் அவனைவிட தெரிந்தவர்போல அவை இவ்வுலக வாழ்க்கையில்தான் பரிந்துரை செய்யும் என்று எண்ணிதாகக் கூறியுள்ளார்.

அவரது இரண்டாவது கூற்று நாம் வலிமார்களிடத்தில் பரிந்துரை கேட்பது ஆகிரத்தில் அல்லவா? அது எப்படி தவறாகும்? என்பதாகும் இதுவும் குர்ஆன் ஹதீஸ் பார்வையில் முற்றிலும் தவறானதாகும். அல்லாஹ்வைத் தவித வேறு பாதுகாவலரோ, பரிந்து பேசுபவரே இல்லை. (6:70, 32:4)

பரிந்து பேசுதல் எல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது. (39:44)

சிபாரிசு செய்வோரின் எந்த சிபாரிசும் அவர்களுக்கு பலனளிக்காது. (74:48)

அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும். (2:255)

அவனுடைய அனுமதி கிடைத்த பின்னரேயன்றி அவனிடம் பரிந்து பேசுபவர் எவருமில்லை. (10:3, 34:23)

அவன் அனுமதி வழங்கியவர்கள் மட்டுமே ஆகிரத்தில் பரிந்துரை பேசமுடியும். மற்றவர்களால் பரிந்துபோச முடியாது. முடியவே முடியாது என்பதை மேற்கண்ட குர்ஆன் வசனங்கள் நிரூபிக்கின்றன.

வலிமார்கள் ஆகிரத்தில் பரிந்து பேசுவார்கள் என்ற அந்த மெளலவியின் கூற்று சரியென்றால் அவ்வலிமார்களுக்கு அல்லாஹ் அனுமதி அளித்தான் என்பது இவருக்கு எப்படித் தெரிந்தது. வஹி வந்ததா? அல்லாஹ்வும், அவனது ரசூலும் கூறியுள்ளனரா? ஏதாவது கிதாபுகளில் எவரோ எழுதி வைத்ததை ஆதாரமாக காட்டாமலட் குர்ஆன் ஹதீஸிலிருந்து ஆதாரம் காட்ட முடியுமா? முடியவே முடியாது.

ரசூல்(ஸல்) அவர்கள் நமக்கு பரிந்து பேசுவார்கள். மற்ற நபிமார்கள் கூட தங்களது சமுதாயத்தினருக்கு பரிந்து பேச முன்வர மாட்டார்கள். ஒவ்வொரு நபி, ரசூல்மார்கள் தாம், தாம் செய்த ஓரிரு தவறுக்காக என்னைக் காப்பாற்று, என்னைக் காப்பாற்று என வருந்தி, பரிந்து பேச முடியாமல் திணருவார்கள். தங்களுக்குப் பரிந்துபேச, கேட்க அவர்களது உம்மத்துக்களை நபி(ஸல்) அவர்களிடம் அனுப்புவார்கள் என்ற நீண்ட ஹதீஸை புகாரி, முஸ்லிம், அஹ்மது போன்ற ஹதீஸ் நூல்களில் நாம் காணுகிறோம்.

நபி(ஸல்) அவர்களும் தாம் ஸஜ்தா செய்து அல்லாஹ்வின் அனுமதி பெற்ற பின்னரே பரிந்து பேசுவார்கள். அதுவும் அல்லாஹ் குறிப்பிட்ட மக்களுக்குப் பரிந்து பேசுக! என வரையறையளித்து, பரிந்துபேச அனுமதியளிக்கிறான். அக்கூட்டத்தாருக்குத்தான் நபி(ஸல்) அவர்கள் பரிந்து பேசுவார்கள் என்பதையும் அந்த ஹதீஸில் காணலாம். அனஸ் பின் மாலிக்(ரழி) அறிவிக்கும் இந்நீண்ட ஹதீஸை புகாரியில் தெளஹீத் என்ற பாடத்தில் காணலாம்.

நிலைமை இப்படியிருக்க வலிமார்கள் ஆகிரத்தில் பரிந்து பேசுவார்கள் எனக் கூறுவது நபி, ரசூல்மார்களை விட இந்த வலிமார்கள் சிறந்தவர்கள், எவ்வித தப்புத் தவறுகளையும் செய்யாதவர்கள் எனச் சொல்லாமல் சொல்கிறார் இந்த மெளலவி, எவ்வளவு அபத்தம் என்பதை காணுங்கள். ஆலிம் என்ற பெயரில் எந்த அபத்தத்தையும் அரங்கேற்ற நினைக்கும் இவர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக!

ஐயம் : தமிழக முஸ்லிம்களிடையே மரைக்காயர், ராவுத்தர் என்ற பாகுபாடு எப்படி வந்தது? இவர்கள் “நான் தான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன்” என பிராமணர்கள் தென்கலை, வடகலை என்று பிரச்சனை கிளப்புவதுபோல் வாதம் செய்து வருகிறார்கள்.  உருது முஸ்லிம்கள், தாங்கள் தான் அசல் முஸ்லிம்என்றும் வீரம் பேசுகிறார்கள். விளக்கம் தரவும். எம்.ஏ.ஜின்னா, பெரையார்.

தெளிவு: மரைக்காயர், ராவுத்தர் என்ற பாகுபாடு அவரவர் செய்த தொழில்களின் அடிப்படையில் வந்ததாகக் கூறுவர். மரக்கல(கடல்) வியாபாரம் செய்தவர்கள் மரைக்காயர் என்று அழைக்கலாயினர். குதிரை வியாபாரம் செய்தவர்கள் ராவுத்தர் என்று அழைக்கலாயினர் என்று கூறுவர். இது மொழி இலக்கண வல்லுநர்களின் கூற்றாகம். இப்பெயர்களுக்கும், இஸ்லாத்திற்கும் எள்ளளவும் தொடர்பில்லை. இப்பெயர்களால் செய்யும் தொழிலால் எவரும் சிறப்படைவதில்லை. அவ்விதம் சொல்பவர்கள் அறியாமையிலிருக்கிறார்கள் என்பதே தெளிவு.

அடுத்து, பேசும் மொழியாலும் எவரும் உயர்ந்தவர் ஆவதில்லை. உருது பேசும் முஸ்லிம்கள் தாங்கள் தான் அசல் முஸ்லிம் என்பதாக வீரம் பேசி, நபி(ஸல்) அவர்களையும், அவரது அருமைத் தோழர்களையும் அவமதிக்கிறார்கள். ஏனெனில் நபி(ஸல்) அவர்களுக்கும், அவர்களின் தோழர் (ஸஹாபாக்) களுக்கும் உருது தெரியாது. அப்போது உருது என்ற ஒரு மொழியே இல்லை. உருது, மொகலாயர்கள் காலத்தில் உருவான ஒரு கலப்பட மொழியாகும். மொகலாயர் காலத்தில் போர்க்களங்களில் கலந்து கொண்ட பல்வேறு சிப்பாய்களின் பற்பல மொழிகளின் கூட்டு மொழிதான் உருது. 200, 300 வருடத்திற்குள் உருவாகி வளர்ந்துள்ள இம்மொழியை பேசுவதால் உயர்ந்தவர்கள் எனக் கூறுவது எவ்வளவு பேதமை என்பதைப் பாருங்கள்.

இஸ்லாமிய அடிப்படையில் எவர்கள் உயர்ந்தவர்கள்? சிறப்பானவர்கள் யார்? என்பதை குர்ஆன் கூறுவதைப் பாருங்கள் :

வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும், உங்களுடைய மொழிகளும்,

உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதிலும் அவனுடைய அத்தாட்சிகள் உள்ளன. (30:22)

நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளும் பொருட்டு உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆனால் அதைக்கொண்டு உயர்ந்தவர், சிறந்தவர் எனப் பெருமைப் பாராட்ட முடியாது. ஏனெனில்) உங்களில் எவர் மிகவும் பயபக்தி (தக்வா) உடையவராக இருக்கின்றாரோ அவர் தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக கண்ணியமானவர். (அல்குர்ஆன் 49:13)

இக்குர்ஆன் வசனப்படி நபி(ஸல்) தனது கடைசி ஹஜ்ஜின்போது இஸ்லாத்தில் நிறம் மொழி, நாடு, கலாச்சாரம் போன்றவற்றால் ஒருவர் சிறப்படைய முடியாது. இறை பக்தி (தக்வாவை)யைக் கொண்டுதான் சிறப்படைய முடியும் என்றார்கள். (ஹதீஸின் சுருக்கம் அஹ்மத் திர்மீதீ)

அபீசீனிய கறுப்பரான ஹபஷி அடிமை பிலால்(ரழி) அவர்கள குறைஷி உயர் குலத்தாரான உமர்(ரழி) அவர்களால் “எங்கள் தலைவரே” என அழைக்கப்பட்டதும் தக்வாவின் அடிப்படையில்தான் என்பதை அறிகிறோம். உலகத்தார் எதனையும் பிதற்றித் திரியட்டும். அல்லாஹ்வின் பார்வையில் உயர்ந்தவர், சிறந்தவர், கண்ணியமானவர், இறைபக்தி (தக்வா) உடையவர் தான். அதற்கொப்ப நமக்கு பலனளிப்பவனும் அவனே! இதனை விளங்குவோர்க்கு விளக்குங்கள். விதண்டாவாதம் பேசுவோருக்கு நேர்வழி கிடைக்க அல்லாஹ்விடம் இறைஞ்சுங்கள். அல்லாஹ் மிக அறிந்தவன்.

***************************************************************************

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

யார் மீது தவறு உள்ளது என்பதை நிருபிப்பதன் மூலம், யார் நிரபராதி? யார் வழி சுமத்தியவர்? என்று தெரிந்து கொள்வதன் மூலம் மார்க்கத்தை அறிய முயலும் வாசகர்களுக்கு என்ன பயன்? நிச்சயமாக ஒவ்வொரு நபரும் தன்னுடைய செயல்களுக்கான விளைவை மறுமையில் சந்திக்கவே போகிறார். ஆனால் மார்க்க விஷயங்களில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளைக் களைந்துகொள்ளும் முயற்சிக்கு இந்த பிரச்சனையை ஏன் தடைக்கல்லாகப் பயன்படுத்த வேண்டும்? ரிபாய்தீன், பி.ஏ. செல்லூர், மதுரை-2.

உங்களைப் போல், சுய சிந்தனையுடைய சிலரும் இந்த மயக்கத்தில் இருப்பதால், இதனை விரிவாகவே விவரிக்கிறோம். வாசகர்களை அதிகப்படுத்திக் கொள்ளும் நோக்கில், அவர்களின் போக்கில் போகாமல், குர்ஆன், ஹதீஸ் வழியிலேயே அந்நஜாத் செல்கிறது. இந்தக் கண்ணோட்டத்துடன் விஷயங்களை அணுகவும்.

சத்திய பிரச்சாரத்தில் ஈடுபட்ட நபிமார்கள் மீது, சுயநலமிகள் பல அவதூறுகளை அள்ளி வீசியபோதெல்லாம், உடனுக்குடன் அல்லாஹ் அவற்றை மறுத்து, அவை அவதூறுகள் தாம் என நிலைநாட்டி இருக்கிறான். மறுமையில் தீர்ப்பளிக்கப்படயிருக்கிறது என்பதால் ஒத்தி வைக்கவில்லை.

அதேபோல் நபி(ஸல்) அவர்களை பொய்யர், சூனியக்காரர் (38:4) இட்டுக்கட்டுபவர் (69:44), பைத்தியக்காரர் (52:29), குழப்பக்காரர் (38:5) சூனியம் செய்யப்பட்டவர் (17:47) கதையளப்பவர் (25:4,5), கவிஞர் (52:30, 36:68), சந்ததியற்றவர் (108:3), திருடர் (3:161) என்று நெருங்கிய பந்துக்களான குறைஷிகளே அவதூறுகள் பரப்பினர். அல்லாஹ் உடனுக்குடன் பதில் அளித்து, அவை அவதூறுகள்தானம் என பறைசாற்றினான்.

திருடுபோன ஒரு பொருள் குறித்து, நபி(ஸல்) அவர்கள் மீது உடன் இருந்த சிலரே அவதூறு பரப்பினர். அப்போதும்,மோசடி செய்வது எந்த நபியிடமும் இல்லை. எவரேனும் மோசடி செய்வாராயின். அவர் மோசடி செய்ததைக் கொண்டு இறுதி நாளில் வருவார்.  (3:161) என அல்லாஹ் சுடச்சுட வசனம் இறக்கி அவதூறைக் களைந்துள்ளான். (இப்னு அப்பாஸ்(ரழ), இப்னு மர்தூயா,  தப்ஸீர் இப்னு கதீர்)

நபி(ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா(ரழி) மீது, உடனிருந்த சிலரே அவதூறு பரப்பினர். அல்லாஹ், 24:11 முதல் 20 வரையுள்ள வசனங்களில் அது அவதூறுதான் என்று தெளிவுபடுத்தி இருக்கிறான்.

ஒரு சமயம் நபி(ஸல்) அவர்கள் பங்கீடு செய்தார்கள். அன்சாரிகளில் ஒருவர் நிச்சயமாக இப்பங்கீடு அல்லாஹ்வுடைய திருப்தியை நாடிச் செய்ததல்ல” என குற்றம் சாட்டினார். அதனைப் பிறர் மூலம் கேள்வியுற்ற நபி(ஸல்) அவர்களின் முகம் சிவந்தது. மூஸா(அலை)க்கு அல்லாஹ்வின் அருள் உண்டாகுக! அவர் இதைவிட அதிகமாகத் தமது சமூகத்தாரால் தொந்தரவு அளிக்கப்பட்டு, பொறுமை காட்டியுள்ளார் எனக் கூறி அந்த அவதூறுக்கு பதில் அளித்தார்கள். (ஹதீஸ் சுருக்கம் – சுலைமான்பின் மிஹ்ரான், புகாரீ, முஸ்லிம்)

மூஸா(அலை) அவர்களின் இன உறுப்பில் ஓதம் போன்ற கோளாறு இருப்பதாக ஒரு சிலர் அவதூறு பரப்பினார்கள். இந்த அவதூறு, அவர்களின் சத்தியப் பிரச்சாரத்தைப் பாதிக்கக் கூடிய ஒன்றல்ல. ஆயினும் அல்லாஹ் மூஸா(அலை) அவர்களை அந்த மக்கள் நிர்வாணமாகக் காணும் சூழ்நிலையை உருவாக்கி, அந்த மக்களின் அவதூறை உணர வைத்தான். (ஹதீஸ், சுருக்கம் – புகாரி)

சத்தியப் பிரச்சாரத்தைப் பாதிக்காத இந்த அவதூறையே தெளிவுபடுத்த, ஒரு நபியை நிர்வாணமாகக் காணும் சூழ்நிலையை அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கிறான் என்றால், சத்திய பிரச்சாரத்தைப் பாதிக்கும் அவதூறுகள் களையப்படுவது, எவ்வளவு அதி முக்கியமானது என்பது இங்கு ஊன்றிக் கவனிக்கத் தக்கது.

இப்படி சத்திய பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நபிமார்கள் மீது சுமத்தப்பட்டவை. அனைத்தும் அவதூறுகள்தான் என்று தெளிவுபடுத்தியுள்ளான். அல்லாமல் அவர்களின் தனிப்பட்ட விவகாரங்கள் இவையென அல்லாஹ் அவற்றை விட்டுவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அன்று வஹி வந்து கொண்டிருந்ததால், அவதூறுகளுக்கு பெரும்பாலும் அல்லாஹ்வே பதில் அளித்திருக்கிறான், சில சமயங்களில் நபி(ஸல்) அவர்களும் தெளிவுபடுத்தி,  அவதூறு  சுமத்தப்பட்டவர்களுக்கும் அந்தப் பொறுப்பு இருக்கிறது என உணர்த்தி இருக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள்தான் இறுதி நபி, அவர்களுக்குப் பின் யாருக்கும் வஹி வருவதில்லை. எனவே குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அவதூறுகளைத் தெளிவுபடுத்த, அவதூறு சுமத்தப்பட்டவர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள் என்பது தெளிவு.

நபிமார்கள் மீது சுமத்தப்பட்ட அவதூறுகளைக் களைய அல்லாஹ் அதிக அளவில் அக்கறை காட்டியுள்ளான். இது ஏன்? சத்தியப் பிரச்சாரம் செய்ததால்தான் அவர்கள் மீது அவதூறுகள் சுமத்தப்பட்டன. இல்லை என்றால் அவதூறுகள் சுமத்தப்பட்டிருக்கா. எனவே மார்க்கத்தோடு இரணந்த விஷயம் எனத் தெளிவாகத் தெரிகிறது. எனவே அவை அவர்களின் தனிப்பட்ட விஷயங்கள் என ஒதுக்கப்படவில்லை. மறுமையில் தீர்ப்புக்குரியவை என ஒத்தி வைக்கப்டவும் இல்லை. அவை பற்றிய விபரங்கள் உடனுக்குடன் குர்ஆனில் இடம்பெற்றுள்ளன.

சத்திய  பிரச்சாரம் மக்களிடையே பரவாது தடுக்கவே அவர்கள் மீது அவதூறுகள் பரப்பப்பட்டன. அவை களையப்படாவிட்டால், ஷைத்தானின் இந்த சூழ்ச்சி வெற்றியடைந்து விடும். மேலும் மெளனமாக இருப்பதால், சுமத்தப்பட்டவை  உண்மைக் குற்றச்சாட்டுக்களே. அவதூறாக இருந்தால் அவர்கள் மெளனமாக இருந்திருப்பார்களா? என ஷைத்தான் மேலும் தனது சூழ்ச்சி வெற்றி பெற வகை செய்து கொள்கிறான். எனவே மார்க்கப் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறவர்களின் மீது அவதூறுகள் சுமத்தப்படும் என்பதும், அந்த அவதூறுகளைக் களைய முற்படுவதும் மார்க்கத்தைச் சார்ந்ததுதான் என்பதும் தெளிவாகத் தெரிகிற.

நீங்கள் எழுதி இருப்பது போல்,அவை கவனிக்கப்படாமல் விடப்பட்டால், அவை மார்க்கத்தை இரண்டு வகையில் பாதிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஒன்று உண்மையாளர்களால் செய்யப்படும் சத்தியப் பிரச்சாரம் மக்களிடையே பாரவுவதற்கு முட்டுக்கட்டை ஏற்படும். இரண்டாவது ஏமாற்றுப் பேர்வழிகள் தங்களின் பேச்சுவன்மை. எழுத்துத் திறமை இவற்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு,மார்க்கத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி உலக ஆதாயம் அடைய வழி ஏற்பட்டு விடும். இது பெருந்தீங்காகும்.

மார்க்கப் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறவர்கள் ஒழுக்கச் சீலர்களாகவும், பொய், பித்தலாட்டம், அவதூறு பரப்புதல் போன்ற தீமைகளை விட்டு கண்டிப்பாக விடுபட்டவர்களாகவும் இருக்க வேண்டும். பிறர், இவர்களைப் பற்றி இப்படிப்பட்ட சந்தேகம் கொள்ள இடம் அளிப்பவர்களாக இருக்கக் கூடாது என்பதற்கு கீழ்வரும் சம்பவம் ஆதாரமாக இருக்கிறது.

நபி(ஸல்)அவர்கள் இரவில் ஸபிய்யா(ரழி) அவர்களுடன் செல்லும்போது, இரண்டு அன்சாரிகள் அவர்களைப் பார்த்துவிட்டு ஒதுங்கிச் சென்றார்கள். நபி(ஸல்)அவர்கள், அவர்களை அழைத்து, இவர்(எனது மனைவி) ஸபிய்யா என்று கூறினார்கள். அதற்கு அந்த அன்சாரிகள் சுபஹானல்லாஹ் யாரசூலல்லாஹ் என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் மனித உடலில் இரத்தம் ஓடும் இடமெல்லாம் ஷைத்தான் ஓடுகிறான்.  உங்களின் உள்ளங்களில் அவன் எதையும் பொட்டுவிடுவான் என அவன் அஞ்சுகிறேன் என தெளிவுபடுத்தினார்கள். (ஹதீஸ் சுருக்கம் – ஹுஸைன்பின் அலி(ரழி), புகாரீ)

அவர்கள் சந்தேகம் கொள்வார்கள் என்று கருதி, அதனைத் தெளிவுபடுத்த நபி(ஸல்) முற்பட்டிருக்கிறார்கள். அப்படியானால்  அவதூறு மூலம் சந்தேகம் ஏற்படும்போது, அதனைத் தெளிவுபடுத்தும் பொறுப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்தல் வேண்டும். எனவே சம்பந்தப்பட்டவர்கள் அவதூறுகளை தெளிவுபடுத்துவதே சத்தியப் பிரச்சாரம் ஓங்கி வளர்வதற்குரிய வழியாகும்.

அதல்லாமல் அரசியல் வேறு, மதம் வேறு என சுயநல அரசயில்வாதிகள் கூறுவது போல், மார்க்கப் பிரச்சினை வேறு, சொந்தப் பிரச்சனை வேறு என்று சுயநலமிகளே சொல்ல முடியும்.  மார்க்கப் பிரச்சாரரர்கள் இவ்வாறு கூறி தப்பிச் செல்ல மார்க்கம் அனுமதிக்கவில்லை.  ஆனால் இன்று அரசியலைப் போல், மார்க்கத்திலும் இந்தத தவறைச் செய்வதால் பொய்யர்களும், புரட்டர்களும் மார்க்கத்தின் பெயரால் செல்வாக்கு பெற, வழி வகுத்துக் கொடுக்கிறொம். அவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் நாம் தலையிடாததால், அதுவே அவர்கள் வளரக் காரணமாகின்றது. மிர்சா குலம் வளரவும், சிலரிடம் செல்வாக்கு பெறவும், ஒரு கூட்டத்தை வழிகெடுக்கவும், இந்தத் தவறே காரணமாயிற்று.

இது பரீட்சை உலகம், எனவே சத்தியத்தைவிட அசத்தியத்திற்கு வேகம் அதிகம். சத்தியம் வீட்டை விட்டுப் புறப்படுமுன் அசத்தியம் உலகையே சுற்றி வந்துவிடும். பொதுவாகப் பாரங்கள் மாற்று மதத்தினருக்கு – முஸ்லிம்களை விடவும், முஸ்லிம் என்பவர்களில் சமாதிச் சடங்கினருக்கு – அதை எதிர்ப்பவர்களை விடவும், முகல்லிதுகளை விடவும், பிரச்சார பலம் அதிகமாகவே இருக்கிறது. இந்த நிலையில் அவதூறுகளுக்குப் பதில் அளிக்காமல் மெளனம் சாதித்தால் சத்தியப் பிரச்சாரம் பரவாமல் இருக்க  அது காரணமாகின்றது.

எனவே மார்க்கப் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறவர்கள், குறிப்பாக அதில் முன்னணியில் இருப்பவர்கள் கண்டிப்பாக ஒழுக்க சீலர்களாகவும், பொய், புரட்டு, பித்தலாட்டம், மோசடி, அவதூறு பரப்புதல் போன்ற தீய செயல்களை விட்டும் முற்றிலும் விடுபட்டவர்களாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட தீய குணங்கள் இவர்களிடம் இருக்குமோ? என்று மக்கள் சந்தேகிக்கும் நிலையிலும் இவர்கள் இருக்கக் கூடாது. அப்படி அவதூறுகள் பரப்பப்பட்டால் உடனுக்குடன் அவற்றை உரிய ஆதாரங்களுடன் களைய கடமைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். இதன் பின்பே நீங்கள் கூறும் மார்க்க விஷயங்கள் பற்றி பேச அவர்கள் அருகதை உடையவர்களாக ஆகிறார்கள். இதுவே குர்ஆன், ஹதீஸ் வழியாகும். நீங்கள் கூறுவது மனித வழியே என்பதை இப்போது மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறோம்.

செயலில் இறங்கத் தயாராவது யார்? யார்? என்ற கட்டுரையில் மறைமுகமாக சில குறிப்பிட்ட நபர்கள் மீதான குற்றச்சாட்டுகளாக மட்டும் தொணிக்கிறதே, இது சரியா? ரிபாய்தீன், பி.ஏ. செல்லூர், மதுரை-2.

குர்ஆன் ஹதீஸ் வழி இதுவாகவே இருக்கிற. சத்தியத்தை முடக்க முற்படுபவர்களை பகிரங்கமாகவே குர்ஆன் கண்டிக்கிறது.

நபி(ஸல்) அவர்களின் பெரிய தகப்பனார் – சம்மந்தி அபூலஹப் சத்தியத்தை முடக்க முற்பட்டதால், அல்லாஹ் அவரை  சபித்து ஓர் அத்தியாயத்தையே (111) இறக்கி அடையாளம் காட்டியுள்ளான். அதேபோல் இன்னும் சிலரை மக்கள் யார்? என்று புரிந்துகொள்ளும் வகையிலேயே அல்லாஹ் கண்டித்து வசனங்கள் இறக்கியுள்ளான். சத்தியத்தை வளரவிடாமல் முட்டுக்கட்டை போடுகிறவர்கள் யாராக இருந்தாலும், அல்லாஹ் தயவு தாட்சன்யமின்றி கண்டித்துள்ளதையே பார்க்கிறோம். இதற்கு ஆதாரமாக நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கை ஒன்றும் ஹதீஸில் காணப்படுகின்றது.

தீயவரைப் பற்றி விமர்சிக்க தயக்கம் காட்டிக் கொண்டிருக்கிறீர்களா? அவரின் தவறுகளை அறிந்து, மக்கள் அவரைப் பற்றி எச்சரிக்கையாக நடந்துகொள்ளும் பொருட்டு, அப்பட்டமாக அவற்றை எடுத்துரைத்து விடுங்கள். (பஹ்ஜுபின் ஹகீம்(ரழி), இப்னு அதீ, இப்னு அபித்துன்யா)

நபி(ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கை, ஒருவரின் தீயசெயல்கள் பிறரை பாதிக்காமல், அவரை மட்டும் பாதிப்பனவாக  இருந்தால் அவற்றை பகிரங்கப் படுத்துவதுதான் குற்றம். அதே சமயம் அவரின் தீய செயல்கள் பிறரைப் பாதிப்பனவாக இருந்தால், கண்டிப்பாக அவற்றைப் பகிரங்கப்படுத்தி மக்களை அவரின் தீமைகளிலிருந்து பாதுகாக்கப் பாடுபடுவது ஒருமுஸ்லிமின் கடமை என்பது தெளிவாகியுள்ளது.

மேலும் அவரின் தீய செயல்கள் மார்க்க வளர்ச்சியைப் பாதிப்பதாக இருந்தால் கண்டிப்பாக அவற்றை மக்களுக்கு அறிவித்தேயாக வேண்டும். எதிரிகளிடம் தலைகுனிவு ஏற்படும் என்றோ, தங்கள் கெளரவத்திற்கு பாதிப்பு ஏற்படுமென்றோ, மக்களிடம் செல்வாக்கு போய் விடும் என்றோ, அல்லது வேறு எந்தக் காரணத்தை முன்னிட்டும், அவற்றை பகிரங்கப்படுத்துவதில் தயக்கம் காட்டுவதன் மூலம் சத்தியத்தை முடக்க துணைபோனவர்கள் நாளை மறுமையில் இதற்கு அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

உங்களுடைய கேள்வியிலிருந்தே அத்தீய செயல்களை செய்கிறவர்களை அறிந்திருக்கிறீர்கள் என்பது புரிகிறது. எனவே அவர்களைத் திருத்த,, திருத்தும் முயற்சி தோல்வியுற்றால் அவர்களை மக்களுக்கு அடையாளம் காட்ட  கடமைப்பட்டிருக்கிறீர்கள் என்பதே குர்ஆன், ஹதீஸ் காட்டும் வழியாகும்.

*  அக்டோபரில் மவ்தான வரலாறு, டிசம்பரில் உயிர் பெற்ற விந்தையை பாரீர்! என ஒரு ஏட்டில் ஒரு மவ்லவி, அந்நஜாத்தை நையாண்டி செய்துள்ளாரே? இ.இக்பால், லால்குடி.

மக்களின் சுய சிந்தனையை மழுக்கி வைத்திருப்பதால், தாங்கள் பகலை இரவு என்றாலும், 2+2=5 என்றும், வெள்ளையைக் கறுப்பு என்றாலும் மக்கள் அப்படியே நம்பி ஏற்றுக் கொள்வார்கள் என்பது மவ்லவிகளின் அபார நம்பிக்கை.அதனால் தான் ஒரு மவ்லவி  1/2+1/3+1/9 =`   என்று சாதிக்கிறார். சேலத்து மவ்லவி நமக்கு ஒரு ரிஜிஸ்டர் தபாலும் அனுப்பாத நிலையில் பல ரிஜிஸ்டர் தபால்கள், அனுப்பியதாகவும், நாம் பதில் அனுப்பாமல் இருப்பதாகவும் நாம் பதில் அளிக்காமல் இருப்பதாகவும் துணிந்து பொய் பேசித் திரிகிறார். இந்த மவ்லவியோ பாலஸ்தியர்களின் மன்னனான ஜலாலுத்தின் வரலாறும் இஸ்ரவேலர்களின் மன்னரான் தாலூத்தீன் வரலாறும் ஒன்று என்று சாதிக்கிறார். ஜாலூத்திற்கும், தாலூத்திற்கும் ஒரே ஒரு எழுத்து வித்தியாசமே இருப்பதால், மக்கள் புரிந்து கொள்ளமாட்டார்கள் என்று நம்புகிறார் போலும்.

சிலரைப் பல காலம் ஏமாற்றலாம். பலரைச் சில காலம் ஏமாற்றலாம். எல்லாரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது என்ற உண்மையை இந்த மவ்லவிகள் அறிந்துகொண்டால் சரி. அரபி அழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் மட்டுமே ஆலிம்கள் என்ற அறியாமைக்கால வாதத்தை விட்டும் விடுபடாதவரை இத்தகைய மவ்லவிகளுக்கு விடிவு காலமில்லை.

 

Previous post:

Next post: