அந்நஜாத்   – 1989 செப்டம்பர்   

in 1989 செப்டம்பர்

 1989 செப்டம்பர்

ஸஃபர் : 1410

அந்நஜாத் பொழுது போக்கு இதழல்ல!  

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

முன்பு அறிவிப்பு செய்தபடி மே இதழில் வெளியிட முடியாமல் போது “”ஸல்ஸிலயே நிஜாமிய்யா” ஆய்வுகட்டுரை இவ்விதழில் இடம் பெற்றுள்ளது.    அதன்   முக்கியத்துவத்தைக்   கருதி   கட்டுரையை   முழுமையாகத் தந்துள்ளோம். அதிக பக்கங்களை அதற்காக ஒதுக்கியதற்கு வாசகர்கள் பொறுத்துக் கொள்ளவும். அந்நாஜத்தைப் பொழுது போக்கும் நோக்கத்துடன் படிக்காமல், ஆழ்ந்தறிந்து செயல்படும்   நோக்கித்துடன்   சிரத்தையுடன்   படிக்குமாறும்   அன்புடன்   வேண்டுகிறோம்.   உலமாக்களை நம்பி உலமாக்களாக வாழ்பவர்களை சுய சிந்தனையுடன்  செயல்படும் மக்கள் என்ற உயர்நிலைக்கு உயர்த்தும்  பணியில்   அந்நஜாத்   ஈடுபட்டுள்ளது என்ற உண்மையை உணர்ந்து ஒத்துழைப்புத் தர வேண்டும்கிறோம்.

மேற்படி   கட்டுரையில்    “”தஸவ்வுஃப்”  பற்றிய   முழு   விபரங்களும்   தரப்படவில்லை.   இன்ஷா    அல்லாஹ்  அதற்கென  ஒரு    தனிக் கட்டுரை பின்னால் இடம் பெறும்.

அந்நஜாத்தின் பணியை உணர்ந்துள்ள சகோதரர்கள், அந்த உண்மையை மற்றவர்களுக்கும் உணர்த்த வேண்டுகிறோம். அது   நல்லபலனைத்   தரும்.   விடைபெறும்   ஹஜ்ஜில்   நபி(ஸல்)   அவர்கள் “”இங்கு   ஆஜராகி   இருப்பவர்கள், ஆஜராகாதவர்களுக்கு இச்செய்திகளைக் கொண்டு சேர்க்கவும். அவர்கள்  இவர்களைவிட   முழுமையாக விளங்கக்   கூடியவர்களாக  இருக்கலாம்” என்றுநவின்றுள்ளதற்கு   ஒப்ப   சத்தியத்தைக்   கேட்டவுடன்   மிகவும் உற்காசத்துடன் செயல்பட முன்வரும் ஈமானுடையவர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஜனவரி   89   இதழை  8  மாதங்களுக்குப்பின்   படிக்கும்   வாய்ப்பைப்   பெற்ற   சில  சகோதரர்கள் “”ஒன்றுபட்டு செயலில் இறங்க அழைக்கிறோம்.    என்ற தலைப்பிக் கீழ் “”நபித்தோழர்கள் கொண்ட சிந்தனையும், தூரநோக்கும் இன்று நமக்கு அத்தியாவசிமாகத் தேவைப்படுகிறது” என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இது ஒரு  தூர நோக்கு முயற்சிதான் என்றாலும் நாளைய தலைமுறையினராவது   நபி(ஸல்)   அவர்களின்   வழியைத்   தெளிவாகத்   தெரிந்து   கொள்வார்கள்”   என்று   எழுதியதோடு   “”ஒன்றுபட்டுச்   செயல்படக்   காத்திருக்கிறோம்” என்று உறுதி அளித்து கையயழுத்திட்டு   அனுப்பி   கணிசமான   சந்தாக்களையும்   சேர்த்து அனுப்பியுள்ளனர். இதிலிருந்து  அந்நஜாத்தின்   பணிபற்றி   விளங்கும்   ஆற்றல்   மிக்கவர்களுக்கு,   நமது   முயற்சிகள்   பற்றிய செய்திகள் போய்ச்சேரவில்லை   என்பதை   உணர்கிறோம்.   சத்தியத்தில்   ஆர்வமுள்ளவர்கள்   அப்பணியை     முறையாகச்   செய்திட   அன்புடன்   வேண்டுகிறோம்.

————————————————————————————-

நபி வழியில் நம் தொழுகை

தொடர்:33

அபூ அப்திர்ரஹ்மான்

சென்ற இதழில் இடம் பெற்ற தஸ்பீஹ் உடைய பொருள் வருமாறு :

பொருள்: சுயமே தனது   ஆக்கும்  திறன்    அழிக்கும்   திறன் ஆகியவற்றால் எனது முகத்தைப் படைத்து உருவாக்கியவனுக்கு அது பணிந்து  விட்டது.  மேலும்   அவனே   அதில் கேட்கும் சக்தியையும் பார்க்கும்   சக்தியையும்   தோற்றுவித்தான்   அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் படைப்பினங்களில் எல்லாம் மிக அழகான படைப்பாளன்.

தொழுகையில் ஸஜ்தாவின் ஆயத்தை ஓதினால்  உடன் ஸஜ்தா செய்வது சுன்னத்து :

நான்   அபூஹுரைரா (ரழி) அவர்களுடன் இஷாவைத் தொழுதேன் அப்போது அவர்கள் “”இதஸ்ஸமாஉன் ­க்கத்” எனும் சூராவை ஓதி விட்டு ஸஜ்தா செய்தார்கள். (தொழுது முடித்தவுடன் நான் அவர்களை நோக்கி) இது  என்ன (ஸஜ்தா)? என்று கேட்டேன். அதற்கு அவர்கள்   இந்த   சூராவை (தொழுகையில்)   ஓதியமைக்காக   நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் நான் ஸஜ்தா செய்துள்ளேன். ஆகவே நான் அவர்களைச் சந்திக்கும் வரை இதை ஓதியபின் ஸஜ்தா    செய்து கொண்டு தான் இருப்பேன் என்றார்கள்.(அபூராஃபி (ரழி), புகாரீ, முஸ்லிம்)

ஆகவே மேற்காணும் இவ்வறிவிப்பில் நபி(ஸல்)   அவர்கள்   தாம் தொழும் போது ஸஜ்தாவின் ஆயத்தை ஓதிவிட்டு அதற்காக தாம்தொழும்போதே ஸஜ்தா செய்துள்ளார்கள் என்பதை அறிகிறோம்.

ஸஜ்தா திலாவத்து செய்வதற்கு ஓளூ அவசியமா?

நபி(ஸல்) அவர்கள் “”வந்நஜ்மி”   எனும்   சூராவில்   (அதை ஓதிய பின்)  ஸஜ்தா செய்தார்கள். அவர்களை யயாட்டி முஸ்லிம்களும், முஷ்ரிக்கு? இணை கற்பிப்பவர்களும், ஜின் இனத்தவரும், மனித இனத்த வரும் ஸஜ்தா செய்தார்கள்.                                                                    (இப்னு அப்பாஸ் (ரழி), புகாரீ, முஸ்லிம்)

(அப்துல்லாஹ்பின்   மஸ்ஊத்(ரழி) வாயிலாக   புகாரீயில்   இடம்  பெற்றுள்ள மற்றொரு அறிவிப்பில் “” அவர்களில் ஒரு வயோதிகர் மட்டும் ஸஜ்தா செய்யவில்லை. அவர்   ஒரு பிடி  மண்ணை  எடுத்து அதைத் தனது நெற்றிவரை உயர்த்தி, எனக்கு   இதே போதும் என்று (அலட்சியமாகக்) கூறினார். அதன்பின் நான் அவரை காபிராக கொல்லப்பட்ட நிலையில் கண்டேன்” என்று உள்ளது.)

இவ்வறிவிப்பில் முஷ்ரிக்கு?இணை   வைத்து வணங்குவோர் ஸஜ்தா செய்வதற்கு தாம் அருகதையற்றவர்களாகயிருந்தும், தமது  நெற்றியைத் தரையில் வைத்து  ஸஜ்தா  செய்துள்ளார்கள் என்பதாக இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறியுள்ளார்கள் என்றால், அவர்கள்    பிரதான    çஹாபாக்களில்    ஒருவராயிருந்தும்   “”முஷ்ரிக்கு”கள்    செய்துள்ள    இச்   செயலை    ஸஜ்தா   என்றே    குறிப்பிட்டிருப்பதாலும்,  இவ்வாறு ஸஜ்தா செய்யாது அலட்சியமாக சிறிது மண்ணை எடுத்து அதைத் தனது நெற்றிவரை உயர்த்தி, எனக்கு    இதே   போதும்   என்று   கூறியவர்.  காபிராக வெட்டுப்பட்ட நிலையில் கிடந்ததை தாம் நேரில் கண்டேன் என்பதாக அந்த ஸஹாபியே கூறியிருப்பதினாலும், முஷ்ரிக்கானவர்கள் ஒளூ இல்லாமல்   செய்துள்ள அந்த ஸஜ்தாவுக்கும் ஓர் அர்த்தம் உண்டு  என்பதை  உணருகிறோம். இந்நிலையில் அவ்விடத்தில் இருந்த  முஸ்லிம்கள் அனைவரும் ஒளூவுடன் இருந்திருப்பார்கள் என்று கருதுவதற்கு சாத்தியக் கூறு எதுவுமில்லை. காரணம் அவர்கள் ஸஜ்தா செய்ய வேண்டும்   என்பதற்காக ஒளூ செய்துவிட்டு தயார் நிலையில் இல்லை இச்சம்பவம் எதிர்பாராது திடீரென்று நிகழ்ந்திருப்பதாக அறிகிறோம்.

நபி(ஸல்) அவர்களின்    பார்வையில்    இவ்வாறு    முஷ்ரிக்குகளும்   முஸ்லிம்களும்   ஒட்டு   மொத்தமாக ஒரே நேரத்தில் ஸஜ்தா செய்திருக்கும் போது அவர்களில் யாரையும் பார்த்து  நீங்கள் ஒளூவுடன் ஸஜ்தா செய்யுங்கள்    என்று    நபி(ஸல்) அவர்கள்   ஒரு வார்த்தையும் கூறாமல் மெளனமாக   இருந்திருப்பதிலிருந்தே  ஒளூ   இல்லாமல்   ஸஜ்தா   திலாவத்து   செய்யலாம்   என்பதை   உணர்த்துகிறது.

ஹாபிழ் இப்னு ஹஜர் (ரழி) அவர்கள் தமது “”பத்ஹுல்பாரீ” எனும் நூலில் பாகம்2, பக்கம் 554?ல் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்.

சூரத்துஸ்ஸாதில் உள்ள ஸஜ்தாவின்  நிலை :

“”ஸாத்” எனும்  அத்தியாயத்தில்  உள்ள ஸஜ்தாவானது வலியுறுத்தப்பட்ட ஸஜ்தாக்களில் உள்ளதல்ல என்று  இப்னு அப்பாஸ்(ரழி) அறிவித்துள்ளார்கள்.(புகாரீ, திர்மிதீ, அஹ்மத்)

ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் தாம் மின்பரில் இருந்த நிலையில் “”ஸாத்” எனும் அத்தியாயத்தை ஓதி, அதில் ஸஜ்தாவின் ஆயத்தைஅடைந்தவுடன்   மின்பரிலிருந்து   இறங்கி    ஸஜ்தா  செய்தார்கள். அவர்களுடன் மற்ற மக்களும் ஸஜ்தா செய்தார்கள். இவ்வாறு மற்றொரு நாளும் அதே சூராவை ஓதினார்கள். அவர்கள்   ஸஜ்தாவின்   ஆயத்தை அடைந்தபோது மக்கள் ஸூஜூது செய்வதற்கு ஆயத்தமானார்கள்.   அப்போது   நபி(ஸல்)   அவர்கள்   இந்த   ஸஜ்தா   ஒரு நபியுடைய “”தவ்பா”வாக உள்ளது. எனினும் நீங்கள் அனைவரும்   ஸூஜூது செய்வதற்கு தயார்   நிலையில்   இருப்பதாக    காணுகிறேன்   என்று   கூறிவிட்டு   கீழே   இறங்கி    ஸஜ்தா செய்தார்கள்.  அவ்வாறே மக்களும் ஸஜ்தா செய்தார்கள். (அபூஸயீதில் குத்ரீ(ரழி), அபூதாவூத், ஹாக்கிம், இப்னு குஜைமா)

இவ்வறிவிப்பின்    போக்கை    கவனிக்கும்    போது   மற்ற   சூராக்களைப்  போன்று இந்த சூராவில் ஸஜ்தா செய்வது வலியுறுத்தப் படாமலிருப்பது   ஒருபுறமிருக்க   நபி(ஸல்)   அவர்கள்   மற்றவர்களெல்லாம் ஸஜ்தா செய்வதற்கு தயாராக இருப்பதைப் பார்த்ததன்காரணமாகவே   தாம்   ஸஜ்தா   செய்வதாகக்   கூறிக்கொண்டு   ஸஜ்தா செய்துள்ளார்கள். ஆகவே     சூரத்துஸ்ஸாதில்    ஸஜ்தா    செய்யாமலிருப்பதற்கு இடம் உள்ளது என்பதை அறிகிறோம்.

ஸஜ்தத்துஷ்ஷீக்ரின் விபரம் :

புதிதாக தமக்கு ஓர் அருட்கொடை கிடைத்தமைக்காக அல்லது தமக்கு ஏற்படவிருந்த ஆபத்து, மாபெரும் கஷ்டம் நீங்கியமைக்காக அல்லாஹ்வுக்கு   நன்றி    செலுத்தும்    பொருட்டு   செய்யக்   கூடிய   ஸஜ்தாவுக்கு ஸஜ்தத்துஷ்ஷீக்ரீ   என்று   பெயர்.   இவ்வாறு குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் மட்டும் ஸஜ்தா செய்வது சுன்னத்தாகவுமிருக்கிறது.

ஹதீஸ்களில் இதற்கான ஆதாரம் :

நபி(ஸல்) அவர்கள் “”ஸாத்” எனும் சூராவில் ஸஜ்தா செய்து  விட்டு தாவூத்   (அலை)   அவர்கள்   “”தவ்பா” எனும்   வகையில்   இந்த ஸஜ்தாவைச் செய்தார்கள். நாம் இதை “”ஷீக்ரு” நன்றி எனும் வகையில் செய்கிறோம் என்று கூறினார்கள். (இப்னு அப்பாஸ் (ரழி),   நஸயீ)

நபி(ஸல்)  அவர்கள்  அலி(ரழி)   அவர்களை யமனுக்கு அனுப்பி வைத்திருந்தார்கள். அவர்கள் அங்கு சென்று “”அங்குள்ளவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு   விட்டார்கள்   என்று   எழுதியிருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் அதனை வாசித்தவுடன் அதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியவர்களாக ஸஜ்தாவில் விழுந்தார்கள்.(பர்ராஉபின் ஆஜிப் (ரழி), பைஹகீ)

கஃபுபின் மாலிக்  (ரழி) அவர்கள் தபூக் போரில் கலந்து கொள்ளாமல் மதீனாவில் தங்கி விட்டதால்  நபி(ஸல்) அவர்கள் மற்ற ஸஹாபாக்களை கஃபுபின் மாலிக் (ரழி) அவர்களுடன் பேசக்   கூடாது  என்றும், இது போன்ற வேறு சில கட்டுப்பாடும் விதித்திருந்தார்கள். இறுதியாக 50 நாட்களுக்குப் பிறகு இவர்களின் “”தவ்பா”வை   அல்லாஹ் கபூல்? அங்கீகரித்துவிட்டான். இது வி­யத்தை கஃபுபின்மாலிக் (ரழி) அவர்களிடத்தில் ஒருவர் நற்செய்தி கூறியவுடன்    அவர்கள்   அல்லாஹ்வுக்கு   நன்றி   செலுத்தும்  பொருட்டு ஸஜ்தா செய்தார்கள். (சுருக்கம்) (புகாரீ, முஸ்லிம்)

ஆகவே சிலர் ஸஜ்தத்துஷ்ஷீக்ருக்கு சரியான ஆதாரம் இல்லை என்று கூறியிருப்பினும்  மேற்காணும்    ஹதீஸ்களின் வாயிலாக போதுமான ஆதாரம் இருப்பதாக அறிகிறோம்.

ஷீக்ருடைய ஸஜ்தா செய்யும் முறை:

ஸஜ்தா திலாவத்துக்கு ஒளூ எவ்வாறு அவசியமில்லையோ, அவ்வாறே இதற்கும் ஒளூ அவசியமில்லாமலிருப்பதோடு. தக்பீர் கூறிஸஜ்தாவுக்கு செல்ல  வேண்டும் என்பதுமில்லை. ஆகவே இதற்கு வெறுமனே ஒரு ஸஜ்தா மட்டும் செய்தால் போதும்.

தொழுகையின் போது ஆகுமான செய்கைகள் :

1. தேள், பாம்பு முதலிய மக்களுக்கு தீங்கு செய்யும் உயிர் ஜந்துகளை கொல்லுதல்!
“”நீங்கள் தொழும்போது தேளையும், பாம்பையும் அடித்துக் கொன்று விடுங்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(அபூஹுரைரா (ரழி), அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, இப்னு மாஜ்ஜா, அஹ்மத்)

2. தொழும் போது குழந்தையைத் தோளின் மீது சுமந்து கொண்டு தொழுவது, பின்னர் கீழே இறக்கி விடுவது மீண்டும்  தோளில்   மீது தூக்கி வைத்துக் கொள்வது ஆகும்.
நபி(ஸல்) அவர்கள் (தமது மகள்) ஜைனபு (ரழி) அவர்களின் மகள் உமாமா எனும் குழந்தையைத் தமது தோளின் மீது இருக்கும்     நிலையில் மக்களுக்கு தொழ வைப்பதைப் பார்த்துள்ளேன். தாம் ருகூஃ செய்யும் போது அக்குழந்தையைக் கீழே இறக்கி வைத்து விடுவார்கள் ஸஜ்தா செய்துவிட்டு எழும்போது அதைத் தூக்கி வைத்துக் கொள்வார்கள். (அபூகதாதா(ரழி), முஸ்லிம்)

3. காலில் உள்ள மிதியடிகளைக் கழற்றி வைத்தல் :
நபி(ஸல்) அவர்கள் தாம் மக்களுக்கு தொழ வைக்கும் போது தமது காலில் உள்ள மிதியடிகளில் அசுத்தமிருப்பதாக ஜிப்ரீல் (அலை)அவர்கள் மூலம் உணர்த்தப்பட்டு தமது மிதியடியைக் கழற்றி வைத்து விட்டார்கள். (ஹதீஸ் சுருக்கம்)  (அபூஸயீதில் குத்ரீ (ரழி), அபூதாவூத் )

4. தொழும்போது தமக்கு முன்னால் செல்பவரை கை நீட்டி தடுத்தல்:
உங்களில் ஒருவர் (தாம் தொழும்போது) மக்கள் குறுக்கே சென்று விடாத வகையில் “”சுத்ரா” தடுப்புப் பொருளை (த் தனக்கு எதிரில்) வைத்துத் தொழும்போது, எவரும்   குறுக்கே   சென்றால்   அவரைத்   அடுத்து விடுவாராக! மீண்டும் அதை மறுத்துவிட்டு வந்தால் அவரைத்கொன்று விடுவாராக! ஏனெனில் அவர் ஷைத்தானாவார். (அபூஸயீத் (ரழி), புகாரீ, முஸ்லிம்)

5. ஸஜ்தா செய்யுமிடத்திலுள்ள மண்ணை கையால் சரி செய்தல்:
நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்யுமிடத்திலுள்ள மண்ணை சரி செய்து   கொள்பவரின் வி­யமாக “”நீர் இவ்வாறு செய்து கொள்ள வேண்டுமாயின் ஒரு தடவை செய்து கொள்வீராக!” என்று கூறினார்கள்.(முஅய்க்கீப் (ரழி), புகாரீ, முஸ்லிம்)

6. எச்சில் துப்புதல்:
ஒருவர் தாம் தொழும்போது தமது  ரட்சகனிடத்தில் உரையாடிக்கொண்டிருக்கிறார்.   ஆகையால்   அவர் தமக்கு எதிரிலோ அல்லது தமது வலப்புறத்திலே எச்சில் துப்ப வேண்டாம். எனினும் அவர்தமது இடப்புறத்தில் தமது இடது கால் அடியில் துப்பிக் கொள்வாராக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

உங்களில் ஒருவர் தமது தொழுகையில் இருக்கும் போது, தமது கிப்லாவுக்கு முன்னால்?எதிரில் எச்சில் துப்ப வேண்டாம். எனினும் அவர் தமது  இடப்பக்கமோ அல்லது தமது கால் அடியிலோ (துப்பிக் கொள்வாராக!) என்று கூறிவிட்டு தாம் மேலே போட்டிருக்கும் ஆடையின்   ஒரு   புறத்தை   எடுத்து   அதில் உமிழ்ந்து ஒருபுறத்தை மறுபுறத்தில் வைத்து மடித்துவிட்டு அல்லது இவ்வாறு செய்து கொள்வாராக என்று கூறினார்கள்.  (அனஸ் (ரழி), புகாரீ, முஸ்லிம், அஹ்மத்)

மேற்காணும் அறிவிப்புகளிலுள்ள காரியங்களை ஒருவர் தாம் தொழும்போது செய்வதால் அவரது தொழுகைக்கு எவ்வித பாதிப்பும்ஏற்பட மாட்டாது. ஏனெனில் இவை அனைத்தும் நபி(ஸல்) அவர்களே செய்தவையும், பிறருக்கு எடுத்துக் கூறியவையுமாகும்.

தொழுகையை முறித்துவிடும் காரியங்கள்:

1. ஒளூவை முறிப்பவை அனைத்தும் தொழுகையை முறித்துவிடும். காரணம், தொழுகைக்கு ஒளூ கட்டாயமாகும். ஒளூவில்லாது தொழ முடியாது. நபி வழியில் நம் தொழுகைப் பகுதியில் ஒளூவைப் பற்றி கூறுமிடத்து நாம் முன்பே இதை அறிந்துள்ளோம்.

2. தொழுகையின் பர்ளுகளில் அத்தியாவசியமானவற்றில் ஒன்றை மறதியின்றி வேண்டுமென்றே விட்டுவிடுதல்.
நபி(ஸல்) அவர்கள் கிராமவாசி ஒருவர் தொழுகையை முறைப்படி தொழாது, நிலை, ருகூஃ, ஸூஜூது முதலிய தொழுகையில் பர்னாயுள்ளவற்றை அரைகுறையான வகையில் செய்து தொழுத போது அவரை நோக்கி மீண்டும் நீர் தொழுவீராக! ஏனெனில் நீர்தொழவில்லை என்று கூறியுள்ளார்கள். (ஹதீஸ் சுருக்கம்)   (அபூஹுரைரா (ரழி), புகாரீ, முஸ்லிம்)

3. மறதியின்றி வேண்டுமென்றே உண்ணல், குடித்தல் ஆகியவை:
ஒருவர் மறதியாக உண்ணுவதால் அல்லது குடிப்பதால்  தொழுகை முறியாது.
எங்கள் ரட்சகனே! நாங்கள் மறந்திருப்பினும் அல்லது தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடித்து விடாதே.  (2:286)

இவ்வசனம்    அருளப்பட்டடபோது, அல்லாஹ் “”சரி” என்று கூறியதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதாகவும் இப்னு அப்பாஸ் (ரழி)   அவர்களின்   அறிவிப்பில்   “”நிச்சயமாக   நான்   செய்து விட்டேன்” என்று அல்லாஹ் கூறினான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்றும் உள்ளது. (அபூஹுரைரா (ரழி), இப்னு அப்பாஸ் (ரழி), முஸ்லிம்)

ஆகவே இவ்வறிவிப்பின்படி நாம் மறதியாகவோ அல்லது தவறு தலாகவோ செய்பவற்றை அல்லாஹ் மன்னித்து விடுகிறான் என்பதை அறிகிறோம்.

4. மறதியின்றி வேண்டுமென்றே பேசுதல்:

நாங்கள் தொழுகையில் பேசுபவர்களாயிருந்து கொண்டிருந்தோம். எங்களில் ஒருவர் தமக்கு அடுத்துள்ள நபரிடம் தொழும் போது (சாதாரணமாகப்)     பேசிக்    கொண்டிருப்பார். இந்நிலையில், “”அல்லாஹ்வின்  முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள்” (2:238)   எனும்   வசனம்   அருளப்பட்டது.   அப்போது   தான்   நாங்கள்   (தொழுகையில்) மெளனமாக இருக்கும்   படி ஏவப்பட்டு, பேசக்சுடாது என தடை விதிக்கப்பட்டோம்.(ஜைதுபின் அர்க்கம்(ரழி), புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜ்ஜா) இன்ஷா அல்லாஹ் தொடரும்

——————————————————————————————————————-

“”ஸில்ஸிலயே நிஜாமிய்யா ” கல்வித் திட்டம் ஓர் ஆய்வு !

அபூ ஃபாத்திமா

இன்று  பெரும்பாலான   அரபி மதரஸாக்களில் குறிப்பாக குர் ஆனுக்கும் ஹதீஸுக்கும் முரணான தக்லீதையும் தஸவ்வுஃபையும் மார்க்கமாகப்போதிக்கும் அரபி மதரஸாக்களில்”” ஸில்ஸிலயே நிஜாமிய்யா” கல்வித்திட்டத்தின் படி பாடங்கள் போதிக்கப்படுகின்றன  கண்மூடிப்   பின்பற்றும்    தக்லீது    கொள்கையுடைய   முகல்லிதுகளால்   இம்மதரஸாக்கள்   நடத்தப் படுகின்றன என்பதை நாம் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

எனவே, “”ஸில்ஸிலயே நிஜாமிய்யா” என்றால் என்ன என்பதை அம்மதரஸாக்களில் பாடம்போதிக்கும் ஆசிரியர்களோ,கல்விகற்கும்மாணவர்களோ அறிந்திருக்கும் வாய்ப்பு மிக மிகக்குறைவு இதுபற்றி பட்டம் பெற்றபல மவ்லவிகளிடம்நாம் கேட்டும்சரியானபதிலைஇதுவரை யாருமே தரவில்லை. சுமார் 60 வயதை   நெருங்கிக் கொண்டிருக்கும் மவ்லவிகளில் திறமை மிக்க ஒரு ஹாபிழ் மவ்லவியிடம் இது பற்றி நாம் கேட்ட போது ஹைதராபாத் நிஜாமின் ஞாபகார்த்தமாக அவ்வாறு சொல்லப்படுகிறது  என்று விளக்கினார். ஓரளவு விளக்கம் தெரிந்தவர்கள் லட்சுமணபுரியில் வாழ்ந்த பெரியார் நிஜாமுத்தீன் என்பவர்இத்திட்டத்தை உருவாக்கியதால் “”ஸில்ஸிலயே நிஜாமிய்யா ” என்று கூறப்படுகிறது என்று கூறுகி<ர்கள். திறமை மிக்க மவ்லவிகளின் நிறையே இது வென்றால் மற்ற மவ்லவிகளின் நிலை பற்றி நாம் சொல்லி நீங்கள் தெரிய வேண்டியதில்லை.

நிஜாமிய்யாவின் தோற்றம் :

செல்ஜூக்   சுல்தான்களின்   பாரசீக  அமைச்சராக இருந்த நிஜாமுல் முல்க் என்பவரால்””நிஜாமிய்யா” என்ற பெயரில் மதரஸாக்கள்நிறுவப்பட்டன. அவற்றில்   தலையாயது  ஹி 457-459ல் (கி.பி. 1065-67) பாக்தாதில் நிறுவப்பட்ட நிஜாமிய்யாவாகும். அது குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும்  முரணான  தக்லீதுக்கு  வித்திடப்பட்ட காலக்கட்டமாகும். எனவே அம்மதரஸாவில் இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்களின் பெயரால் கற்பனை    செய்யப்பட்டிருந்த    ஷாஃபி   மத்ஹபின்   நூல்களும், அஷ்அரி கொள்கையை வலியுறுத்தும் நூல்களும்,   பழம்பெரும்   பாடல்கள்   பெருமளவிலும்,   பெயரளவில்   குர்ஆனும்   போதிக்கப்பட்டுவந்தன. இஸ்லாமிய உலகின் பல்லேறு பகுதிகளிலிருந்து மாணவர்கள் இங்கு வந்து பாடம் பயின்று வந்தனர். அப்போது அவர்கள் வாயாலோ, எழுத்து மூலமோ ஆசிரியர்களைக் கேள்விகள் கேட்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தனர்.

தலைமை  ஆசிரியர் இமாம் கஸ்ஸாலி :

இந்த    மதரஸாவின்   தலைமை   ஆசிரியர்   பொறுப்பை இமாம் கஸ்ஸாலி அவர்கள் ஹி. 484-88(கி.பி1091-95) வரை வகித்து வந்தார்அப்போது அந்த நிஜாமிய்யாவின் போதனா முறையிலேயே ஒரு புதுத்திருப்பம் ஏற்பட்டது. அந்த போதனா முறைகள் எந்த அடிப்படையில் அமைக்கப்பட்டன என்பதை அறிய அன்று மக்களிடையே செல்வாக்குடன் திகழ்ந்த கல்வி முறைகள், தத்துவங்கள் கலைகள் இவற்றை நாம் அறிந்து கொள்வது    அவசியம்   அக்காலகட்டத்தில்   தத்துவங்களும், தர்க்கவியலும் மிகைத்திருந்தன. கிரேக்கத்தத்துவங்கள் ஐரோப்பிய நாடுகளில் தனது ஆதிக்கத்தை இழந்து  கொண்டிருந்த நிலையில் அரபு நாடுகளில் நுழைந்து அது மீண்டும் உயிர் பெற்றது. ஜார்ஜ் ஸைதான் என்ற வரலாற்றாசிரியர் இவ்வாறு எழுதுகிறார்:

“” பழைய    கிரேக்கத்   தத்துவங்கள்   அழியக்   கூடிய   நிலையில்   இருந்த   போது   முஸ்லிம்கள் அத் தத்துவ நூற்களை தங்கள் மொழிகளில்   மொழி   பெயர்த்து   அவற்றைத்   தமதாக்கிக்   கொண்டார்கள்.    அப்பாஸியர்கள் காலத்தில் தத்துவம், தர்க்கவியல் சம்பந்தமான   கிரேக்க,   லத்தீன்,   மொழியிலுள்ள புத்தகங்கள் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டன. (உதாரணமாக கலீலாதிமனா என்ற பஞ்ச தந்திரக் கதைகள்)” இதன் காரணமாக வெவ்வேறு நாட்டு மக்களின் பழக்க வழக்கங்கள் (ஐதீகங்கள்) முஸ்லிம்களிடம் நுழையத் தொடங்கின. தக்லீதும், தஸ்வ்வுஃபும் அவ்வகையைச் சார்ந்தவையே. அரபிகளல்லாத இஸ்லாத்தைப் பற்றித் தெளிவாக அறிந்திராத தர்க்கக் கலைவல்லுநர்கள்   முஸ்லிம்கள்   ஆன போது தாங்கள் முன்பு சார்ந்திருந்த மதப் பழக்க வழக்கங்களையும், கோட்டுபாடுகளில் சிலவற்றையும் இஸ்லாத்தில் நுழைத்துக்   கொண்டனர்.   அவர்களிடம்   அறிவாற்றல் இருந்த தேயல்லலாமல் தூய்மையான   இஸ்லாத்தை    அவர்கள்   அறிந்திருக்கவில்லை.   முஸ்லிம்களும்   குர்ஆன்   ஹதீஸை நேரடியாக  விளங்கிச்     செயல்படும்    உயரிய    நிலையிலிருந்து     தவறி,    கண்மூடிப்    பின்பற்றும்    தக்லீத்    கொள்கைக்கு     ஆட்பட்டிருந்ததால்,      இத்தகையவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட தத்துவங்களால் ஈர்க்கப்பட்டனர்.    இதன்    காரணமாக    உண்மையான இஸ்லாமிய கொள்கைகளை விட்டும் மேலும் மேலும் விலகிச் சென்றனர். அது மட்டுமல்ல  மாற்று மதங்களிலிருந்தும்,   தத்துவங்களிலிருந்து காப்பி அடித்த கொள்கைகளே உண்மையான இஸ்லாம் என்ற தவறானநம்பிக்கையில் அவற்றை ஆர்வத்தோடு செயல்படுத்தினர் அல்லாஹ்வின்     கலாமான    திருக்குர்     ஆனுக்கு     தஃப்ஸீர்  ?  விரிவுரை   என்ற    பெயரால்   அந்நியரிடமிருந்த காப்பியடித்த கருத்துக்களையும்,    தங்கள்   சொந்த   ஊகங்களையும், அந்தியரிடமிருந்து இரவில் வாங்கிய தர்க்கக்கலையையும் இஸ்லாத்தில் புகுத்தும் அளவிற்கு நிலைமை சீர்குலைந்தது,   இப்படி    அந்நிய   தர்க்கக்   கலையை   தஃப்ஸீர்களில் புகுத்தியமையால் ஏற்பட்ட மோசமான விளைவுகளை காலஞ்சென்ற   அறிஞர்   அபுல்   கலாம்   ஆஸாத்    அவர்கள்     தன்னுடைய தர்ஜூமானுல் குர்ஆன் முன்னுரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்.

“” நபித்தோழர்களின்    இறுதிக்    காலத்திலேயே ரோமானிய பாரசீக கலாச்சாரங்கள் அரேபியாவில் பரவத்  தொடங்கின. அதோடு, கிரேக்க தத்துவ நூல்கள் அரபியில் மொழி பெயர்க்கப்பட்டன. அதனால்   மனிதர்களால்  உருவாக்கப்பட்ட  கலைகள் மக்களிடையேபரவத்   தொடங்கியதும்   இயற்கையான  அரபிமொழி நடையை   உள்ளங்கள்   வெறுக்கத் தொடங்கின. எனவே குர்ஆனின் சொல்ஒரு தட்டிலும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட  கலை   மறு  தட்டிலும் வைக்கப்பட்டு   நிறுத்துப் பார்க்கப்பட்டன. ஆனால் குர்ஆனின்நடைவேறு;     மற்றவைகளின்    நடைவேறாகும். வேறு பட்டவைகள் இரண்டினை  ஒன்று   சேர்க்க   முயற்சிகள்   செய்யப்பட்டன. இதனால்   குர்ஆனில்   விளக்கங்கள்    அவர்களால்    உருவாக்கப்பட்ட   நியதிகளுக்கு    ஏற்றுவாறு  தரப்பட்டன. அந்நியர்களின் கலாச்சாரங்களுக்கு ஏற்றுவாறு  இஸ்லாமிய   கலாச்சாரங்கள் திரிபடைந்தன”.

தத்துவங்களும், தர்க்கக்கலையும் இஸ்லாத்தில் நுழைந்தன.

அதோடு     மட்டுமல்லாமல்    தர்க்கக்கலை    (ஸிலிஆஷ்உ)   முஸ்லிம்களின்    மத்தியில்   புகுந்து   அவர்களை   மார்க்க வி­யங்களில் குழப்பத்திலும், சந்தேகத்திலும் ஆழ்த்தியது. தர்க்கவியலும், தத்துவங்களும் (Pஜுஷ்யிலிவிலிஸ்ரீஜுதீ) சரிவரக் கற்பிக்கப்பட்டால்     இத்தகைய குழப்பமும், சந்தேகமும் நீங்கவிடும் என்ற நோக்கத்துடன் அக் கலைகள் மேற்கூறப்பட்ட கலாசாலைகளில் போதிக்கப்படலாயின. அப்பாஸிய கலீபாக்களின் காலத்தில் தர்க்கக்கலை உச்சநிலையை அடைந்திருந்தது.

பொதுவாக  முஸ்லிம் நாடுகளில் (அரபி நாடுகளின்) நிலை இவ்வாறிருக்க இமாம் கஸ்ஸாலி பிறந்த நாடான பாரசீகத்தின் (ஈரான்) நிலை    எவ்வாறிருந்தது    என்பதையும்    நாம்    அறிந்திருக்க    வேண்டும். பாரசீக மக்களிடம் ஏற்கனவே பாரசீகத தத்துவங்கள் புரையோடிப்    போயிருந்தது   மட்டுமல்லாமல், வெறும் யூகத்தில் அடிப்படையில் தனிமனித ஆராதனைக்காக இஸ்லாத்தினின்றும்பிரிந்து    சென்ற    Uஆ   பிரிவினரின்    கற்பனைக்   கட்டுக்கதைகளும்   ஆழமாக   வேரூன்றி இருந்தன. இந்த U ஆபிரிவினர் குர்ஆனின் வசனங்கள் எந்த நோக்கத்ததிற்கான இறங்கினவோ அவற்றை விட்டு மாற்றுப் பொருள்கள் கற்பித்து திரிக்கலானார்கள்நபிமொழிகளுக்கு பொருத்தமற்ற தமது வியாக்யானங்களைப் பரப்பினார்கள். அப்படியும் தங்கள் தவறான நோக்கம் நிறைவேறத் தடங்கல்   ஏற்பட்டபோது நபி (ஸல்) அவர்களின் பெயரால் பல இலட்சக்கணக்கான பொய்யுரைகளை ஹதீஸ்கவென இட்டுக்கட்டிப் பரப்பலானார்கள். இந்த Uஆ பிரிவினரின் தவறான போதனைகள் பாரசீக (ஈரான்) மக்களை வெகுவாகக் கவர்ந்தன. அந்த நாடு Uஆ கொள்கையால்    ஆட்கொள்ளப்பட்டது.    அங்கு   Uஆக்கள்   பரப்பி   விட்ட பொய்யான? இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் மிக வேகமாகப் பரவியிருந்தன. இப்படிப்பட்ட ஒரு காலக்கட்டத்தில் இமாம் கஸ்ஸாலி அங்கு ஹி.450 ல் (கி.பி 1058)பிறந்தார்.

இமாம் கஸ்ஸாலி இயற்கையிலேயே அதி புத்திசாலியாக இருந்தார் என்பதில் ஐயமில்லை.அல்லாஹ் அவருக்கு சிறந்த மதி நுட்பத்தையும், பேச்சு வன்மையையும் வாதத் திறமையையும் கொடுத்திருந்தான். அன்றைய கால சூழ்நிலைகளுக்கேற்றவாறு இமாம் கஸ்ஸாலி தன்னைத் தயார் செய்து கொண்டார். சிறுவயதிலேயே பாரசீக நாட்டில் பரவயிருந்தபல்வேறு கலைகளைக்கற்று அவற்றில்தலைசிறந்த மேதையானார். அவரது கால கட்டத்தில் கிரேக்க தத்துவங்களும், பாரசீக தத்துவங்களும், தர்க்கக்கலையும் மக்களிடையேபெரும் செல்வாக்கைப் பெற்றிருந்தன என்று பார்த்தோம். அந்திய தத்துவங்களுக்குஒத்துப்போகும் விதத்தில் Uஆக்கள் நபி(ஸல்) அவர்களின் பெறரால் பொய்யானஹதீஸ்களை புனைத்துபரப்பி விட்டிருந்ததையும்பார்த்தோம். இவை அனைத்தையும் கற்றுமாபெரும் அறிஞராக மதிக்கப்பட்டார். கல்வித் துறையிலும், கலைத்துறையிலும்மக்களிடையே பிரபல்யமானவற்றைஒருவர் கற்று, அவற்றில் தேர்ச்சியும், கீர்த்தியும் மிக்கவரானால் அவரை பேரறிஞராகக் கருதிமக்கள்    மதிப்பதும்,   பாரட்டுவதும் மரபே இன்றுகூடகவைக்குதவா  கலைகளைக் கற்று அவற்றில் சிறப்புடன் திகழ்ந்தவர்களை “”பேரறிஞர் ” என்று மக்கள் வாய் நிறைய அழைப்பதையும், வானளாவப் புகழ்வதையும் பார்க்கத்தானே செய்கிறோம்.

இந்த நிலையில் இமாம் கஸ்ஸாலி இஸ்லாத்தின் சிறப்பை மக்களுக்கு தெளிவு படுத்துவதாக நம்பிக் கொண்டு தத்துவ அடிப்படையிலேயே இஸ்லாத்தை விளக்க முற்பட்டார். இதற்கு U ஆக்கனால்    புனையப்பட்ட பொய்யான ஹதீஸ்கள் அவருக்குப் பெரிதும் உதவின. இந்த பொய்யான ஹதீஸ்கள் அந்நியர்களின் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டு அவற்றிற்கு நபிமொழிகள்  என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது இப்படிப்பட்ட பொய்யான ஹதீஸ்களின் அடிப்படையில் தனதுவாதங்களை இமாம் கஸ்ஸாலி எடுத்து வைத்தாலும்,  தனது மதி நுட்பத்தாலும், தர்க்க வாதத்திறமையாலும் எதிரிகளை முறியடித்துவெற்றி    வாகை    சூடினார்.   இது   அவருக்கு இஸ்லாமிய உலகில் ஒரு தனிப்பெரும் புகழையும் ஸ்தானத்தையும் ஏற்படுத்திற்று. அவரது அறிவாற்றலாலும்.   பேச்சுவன்மையாலும்   பெரிதும்  கவரப்பட்ட அமைச்சர் நிஜாமுல் முல்க் இவரை இவரது 34ம் வயதில்தாம்  நிறுவிய நிஜாமிய்யா கல்லூரியின் முதல்வராக நியமித்தார்.   இளம்   வயதில் இவர் பெற்ற இந்த உயர்பதவியானது பலருக்குஇவர் மேல் பொறாமையை ஊட்டி²லும், அதற்கு மாறாக வேறு பலரிடம் அளவு கடந்த மதிப்பையும் பெற்றுத் தந்தது. நிஜாமிய்யா மதரஸாவின்   பாடதிட்டங்களை நாம் முன்னர் குறிப்பிட்டது போல், இவர் பெற்றிருந்த தத்துவம், தர்க்கக்கலை (பல்ஸஃபா, மன்திக்) போன்ற    கலைகளைக்    கொண்டு   நிரப்பினார்.   சுமார்    ஐந்தாண்டுகள்    நிஜாமிய்யா   மதரஸாவின் தலைமைப் பொறுப்பில் மிகத் திறம்பட சேவையாற்றி பேரும் புகழும் பெற்றார். இவரது புகழ் இஸ்லாமிய உலகம்   முழுவதும் பரவி இருந்தது. இஸ்லாமிய மார்க்க    ஞானத்திலும்    சட்டங்களிலும்   அதிகாரப்பூர்வமான   வல்லுநர் (புUவீக்ஷிநுயூணூவீக்ஷு) என்று    முஸ்லிம்கள்   இவரை   நம்பிச்   செயல்படலாயினர்.

சூபிஸம் இஸ்லாத்தின் அங்கீகாரம் பெற மூலகர்த்தா யார்?

இந்த  நிலையில், இவரது 38ம் வயதில் இறைஞானமே உண்மையான அறிவு என்றும். அந்த இறை  ஞானத்தை அடையும் வழி துறவறத்தை மேற்கொள்வதே என்றஎண்ணம்இவருக்கு ஏற்பட்டது. தனக்குக்கிட்டியுள்ள உயர்பதவி, கீர்த்தி, புகழ்இவற்றைத்துறந்துசெல்வதா!  என  மனம்   அங்கலாய்த்தாலும்   துறவறத்தை  மேற்கொண்டால்   அன்றி   “முக்தி’ பெற முடியாது என்றும்தூண்டியது. அந்திய மதவாதிகளின் கொள்கைகளையும் தத்துவங்களையும் கற்று அவற்றின் தன்னிகரில்லாத அறிஞர் என ஏற்றுக்கொள்ளப்பட்டவருக்கு இஸ்லாத்திற்கு முரணான?குர்ஆனும், ஹதீஸூம் மறுக்கின்ற துறவறம் தான் ஈடேற்றத்திற்குரிய வழி என்ற விகற்பமானஎண்ணம் ஏற்பட்டதில் வியப்பில்லை தான். பொதுவாக தத்துவங்களில் ஈடுபாடு கொண்டு அவற்றில்லேயே ஊறிப்போனவர்களை  அவர்கள் அறியாமலேயே அவை அடிமையாக்கிவிடும் என்பது உலகம் ஒப்புக்கொள்ளும் உண்மையாகும்போதை  வஸ்துகளை   உபயோகிப்பவன் இறுதியில் அவற்றிற்கு எப்படி  அடிமையாகி    விடுகிறானோ அதே போல் இந்தத் தத்துவங்களும் மனிதனுடைய மதியை மயங்கிச் செய்து,  போதையை உண்டாக்கி அடிமையாக்கிக் கொள்ளுகின்றன.

போதைப்    பொருள்கள்   மனிதனது சிறு   மூளையைப்பாதித்து பதியைமயக்கி, அவனை நிலைகுலையச் செய்து ஏதோ ஒரு உயர் ஞானத்தைப் பெற்றதுபோல் ?மாயத்தோற்றத்தை    உண்டாக்குவது   போல்,   மாற்று    மதங்களிலுள்ள   சில பயிற்சி முறைகளும் மனிதனது மதியைமயக்கி அவனை நிலைகுலையச் செய்து உயர்ந்ததொரு மெய்ஞானத்தில் இருப்பதாக அவனை நம்ப வைக்கின்றன. இதனால்  தான்   மாற்று   மதவாதிகள் மனிதர்களால் உண்டாக்கப்பட்ட தங்களது  மதங்களில் ஆழ்ந்த பற்றும் நம்பிக்கையும் கொண்டு செயல்படுகின்றனர். மாற்று மதவாதிகளின் சுலோகங்களை   ஒட்டி   அரபிச்  சொற்றொடர்களால்  ஆன சுலோகங்களைக்கூறும் பயிற்சி முறைகளைக் கையாண்டு,   மதிமயங்கி   தன்னிலை   இழந்து, உயர்ந்த ஞானத்தில் (மஃறிஃபா) இருப்பதாக நம்பச் செய்வது தான் தஸவ்வுஃமாகும் (சூபிஸம்)    இத்தகைய   பயிற்சி    முறைகள் மூலம் இந்த நிலையை அடைய முடியாத ஷைகுகள் கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருள்களை   உபயோகிப்பதன்   மூலம்   மதிமயங்கி தன்னிலை இழந்து மெய்ஞானத்தில் (மஃறிஃபா)மூழ்கி இருப்பதாக   மனப்பால்   குடிப்பது   நமது   இக்கூற்றுக்குத் தக்க சான்றாகும். இமாம் கஸ்ஸாலி போன்றோர் கஞ்சா, அபினை பயன்படுத்தினார்கள்   என்று   நாம்   சொல்லவில்லை; அவ்வாறு   யாரும் எண்ணி விட வேண்டாம். போதைப்   பொருள் உட்கொண்டு அடையும் மயக்க நிலையைப்போன்ற ஒரு நிலையை அவைகளை உபயோகிக்காமல் சில பயிற்சிகள் மூலம் அடைந்தார்கள் என்றே சொல்லுகிறோம். இதனைப்பின்னால் விரிவாக விளக்குவோம். ஆக,ஹி 488ல் தனது 38-வது வயதில் கம்பளிப்போர்வை அணிந்து காலில்செருப்பில்லாமல்,மாற்று மதவாதிகளைப்போல் துறவறம் பூண்டுவீடும் நாடும் துறந்து சென்றார் இமாம்கஸ்ஸாலி.

மாற்று    மத   தத்துவங்களுக்கு   முக்கியத்துவம்   கொடுத்து, அவற்றை மேற்கொண்டதன் விளைவாக அவற்றிற்கு அடிமையாகி இஸ்லாத்திற்கு முரணான துறவறத்தை   இமாம்   கஸ்ஸாலி   மேற்கொண்டது   இஸ்லாமிய    உலகின் போக்கையே பயங்கரமாக மாற்றிவிட்டது.அன்றை காலகட்டத்தில் இஸ்லாமிய  உலகு  அவரையே வழிகாட்டியாக நம்பி இருந்து   இஸ்லாமிய  மார்க்கத்தின் அதிகாரப்பூர்வமான இமாம் என முஸ்லிம்களால் கணிக்கப்பட்டார் என்ற விபரங்களை முன்பே பார்த்தோம்.

எனவே இமாம் கஸ்ஸாலிக்கு முன்பே மாற்று மததத்துவங்களும், கலைகளும் முஸ்லிம்களிடையே ஊடுறுவஆரம்பித்ததிலிருந்தேதக்லீதும், சூபிஸமும் (துறவறம்) இஸ்லாத்தில் நுழைந்திருந்தும் அவற்றிற்கு இஸ்லாமிய உலகின் ஆதரவோஅங்கீகாரமோ சட்டபூர்வமாக கிடைக்கவில்லை. அதற்கு வாய்ப்புமில்லாமலிருந்தது. ஆனால் அந்த வாய்ப்பையும், அங்கீகாரத்தையும் இமாம் கஸ்ஸாலிதுறவறத்தை மேற்கொண்டதன் மூலம் அரங்கேற்றி சட்டபூர்வமான அனுஷ்டானம் ஆக்கிவிட்டார். அவருக்குப்பின் சூபி இப்னுஅரபிஇஸ்லாத்தின் கோட்பாடாகவே சூபிஸத்தை பகிரங்கமாக செயல்படுத்தி, இறைவனும் அடியானும் இரண்டறக் கலப்பது சாத்தியமே    என்று   இஸ்லாத்திற்கு   முரணான அத்வைதத்தை இஸ்லாத்தில் நுழைத்துவிட்டார். இப்னு அரபியின் இந்த தகாத செயல்களுக்கு இமாம் கஸ்ஸாலியின் நூல்கள் குறிப்பாக  இஹ்யாஃ உலூமித்தீன் பெரிதும் ஊக்கமளித்தன. ஆக, இமாம் கஸ்ஸாலியும்,   சூபி  இப்னு அரபியும் சேர்ந்து தக்லீதும், தஸவ்வுஃபும் இல்லாது இஸ்லாம் இல்லை என்ற தவறான விபரீதமான நம்பிக்கையை இஸ்லாமிய உலகில் ஊடுறுவச் செய்து நிலைக்கச் செய்து விட்டனர்.

அதாவது    மனிதர்களால்   உருவாக்கப்பட்ட   மாற்று மதங்களின் கோட்பாடுகளான தக்லீது?பெரியார்களில் நம்பிக்கை கொண்டு அவர்களைக் கண்மூடிப் பின்பற்றல், தஸவ்வுஃப்?துறவறம்    ஆகிய    இரண்டையும்   இஸ்லாத்தில் நுழைவித்து இஸ்லாத்தையும் வெறும்மதம் என்ற நிலைக்குத் தள்ளி அதன் பரிசுத்த நிலைக்கு மாசும்? களங்கமும் ஏற்படுத்திவிட்டனர். சென்று போனவர்களைப் பற்றிய சர்ச்சை நமக்கு அவசியமில்லை என்பதை “”அவர்கள்  சென்றுபோனவர்கள்   அவர்கள்   சம்பாதித்தவை    அவர்களுக்கே, நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே  அவர்கள்  செய்து கொண்டிருந்தவை பற்றி நீங்கள் கேட்கப்படமாட்டீர்கள்” (2:134, 141) என்றவசனங்களில்     அல்லாஹ்    நமக்குத்   தெளிவுபடுத்திவிட்டான். பிழைகளைப் பொறுத்து உயர் பதவிகளையும் நல்க வல்லவன் அல்லாஹ். நமது கவலையும், கவனமும் அதுவல்ல. ஆனால் இமாம் கஸ்ஸாலியின் கருத்துக்களில் குர்ஆனுக்கும், ஹதீஸூக்கும்முரணான நடைமுறைகளையும்,   போதனைகளையும் நாம் ஏற்று செயல்படுவதன் மூலம் நமக்கு வெற்றி கிடைக்குமா? நமக்கு அல்லாஹ்வின்   பொருத்தம்   கிடைக்குமா? என்பது தான்  நாம் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய வி­யமாகும். குர்ஆன், ஹதீஸில்   இல்லாதவை,    அவற்றிற்கு    முரணானவை   அனைத்தும்   வழிகேடுகள். அவை நம்மை நரகில் கொண்டு சேர்க்கும் என்பதை   அல்லாஹ்வின்   இறுதித்தூதர்   தெளிவாக நமக்கு எச்சரித்துச்   சென்றுள்ளார்கள். எனவே    எச்சரிக்கையாக    நடந்து கொள்வது    நமது    கடமையாகும்.   குர்ஆனுக்கும், ஹதீஸூக்கும்  முரணான   தக்லீதையும்,    தஸவ்வுஃபையும்   விட்டுவிடுவதே அறிவுடைமையும் அவசியமும் ஆகும்.

முகல்லிதுகள் செய்தது என்ன?

ஆனால்,    மார்க்கத்தை   வெறும்    மதமாக்கி    அதைப்    பிழைப்பாகக்    கொண்டு   வாழ்பவர்கள் ஆரம்பத்திலிருந்தே  இருந்து வருகிறார்கள் உலகம் அழியும் வரை இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களுக்குச் சாதகமான இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தத் தவற மாட்டார்கள் என்பதை சாதாரணமானவர்களும் அறிந்துகொள்ள  முடியும் எனவே இமாம் கஸ்ஸாலியும், சூபி இப்னு அரபியும் சேர்ந்து  உருவாக்கிவிட்ட வாய்ப்பை தமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள். மார்க்கத்திற்கு முரணானவையாயினும் தங்களுக்கு உலகில் கொழுத்த ஆதாயத்தைத் தேடித்தரும் தக்லீதையும், தஸவ்வுஃபையும் இறுக்கப் பற்றிப்பிடித்துக்கொண்டார்கள்.     அந்த    திட்டத்திற்கு    இமாம்    கஸ்ஸாலியால்    புகழ்    பெற்ற    நிஜாமிய்யா    மதரஸாவின்    பெயராலேயே     “”ஸில்ஸிலயே நிஜாமிய்யா”  என்ற பெயரைச் சூட்டி தக்லீதையும் தஸவ்வுஃபையும் நிலைநாட்டி விட்டனர். அவற்றை காலங்காலமாகமக்களுக்கு    போதித்து    மக்களை    மடமையிலாழ்த்தி   சுய   ஆதாயம் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இன்று இந்த “”ஸல்ஸிலயே நிஜாமிய்யா” கல்வித்திட்டம்   பரம்பரை  பரம்பரையாக? வழிவழியாகப் பின்பற்றப்பட்டு வருகின்றது. இன்று அதனைச் செயல்படுத்துகிறவர்களுக்கு ஒருக்கால் அதன்   கெடுதிகள் தெரியாதிருக்கலாம். ஆனால் அதன் கெடுதிகள் குர்ஆன்?ஹதீஸ் ஆதாரங்களுடன் தெளிவாக   எடுத்து    விளக்கப்பட்ட    பின்பும்  அவற்றைத்   தெரிந்து   கொண்டே வீண் பிடிவாதத்துடன் இது காலம் வரை வாழ்ந்த தலைவர்களெல்லாம், பெரியார்களெல்லாம் மடையார்களா?   நரகவாதிகளா?    என்ற    முறையற்ற,   தேவையற்ற வினாக்களை எழுப்பி அறிந்து கொண்டே அழிவைத்தேடுவதோடு, பொதுமக்களையும் அழிவுறச்செய்வது தான் நமக்கு வேதனையைத் தருகிறதுஇவர்களின் இந்த வினாக்கள் அழிவைத் தாங்களே தேடிக் கொண்டவர்களின் வினாக்களாகும். அல்லாஹ்வின் கோபத்திற்காளாகிநாகை தங்கள் இருப்பிடமாக்கிக் கொண்டவர்களின் வினாக்கள் இவை  என்பதை அல்குர் ஆனின் 2:170, 33:66, 67, 68 ஆகிய வசனங்கள் தெள்ளத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன.

“” அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ் வேதத்) தைப்    பின்பற்றுங்கள்”    என்று   அவர்களிடம்   கூறப்பட்டால்,   அவர்கள் “”அப்படியல்ல!எங்களுடைய  மூதாதையார்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும்    பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள். என்ன!  அவர்களுடைய    மூதாதையர்கள்,   எதையும்   விளங்காதவர்களாகவும்,   நேர்வழி   பெறாதவர்களாவும்   இருந்தால் கூடவா?(2:170)

நெருப்பில்    அவர்களுடைய   முகங்கள்   புரட்டப்படும்   அந்நாளில்,  “” ஆ கைசேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே !” (என்று கதறுவார்கள்) (33:66)

“” எங்கள்   இறைவா!   நிச்சயமாக   நாங்கள்    எங்கள்   தலைவர்களுக்கும்,   எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டார்கள்” (என்றும் அவர்கள் கதறுவார்கள்) (33:67)

“”எங்கள் இறைவா!அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக;அவர்களைப்பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக!”(எனக் கதறுவர்) (33:68)

இப்படிப்பட்ட   வினாக்களை   எழுப்பிய  அபூலஹப் நபி(ஸல்) அவர்களின் பெரிய தகப்பனாராக இருந்தும் எவ்வளவு கடுமையாக அல்லாஹ்வால் சபிக்கப்பட்டான் என்பதற்கு குர்ஆனின் 111ஆம் அத்தியாயம் தக்க சான்றாகும்.

அபூலஹபின் இரண்டுகைகளும்    நாசமடைக;   அவனும்   நாசமாகட்டும்.   அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்கு பயன்படவில்லை. விரைவில் அவன் கொழுந்து  விட்டெரியும்   நெருப்பில் புகுவான் விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ. அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறு தான் (அதனால் அவளும் அழிவாள்).  (111:1-5)

தவறுகளை உணர்ந்ததும் திருந்துபவர்களே மனிதர்கள்.

மனிதன் தவறுகள் செய்யலாம். ஆனால் அவை தவறுகள் என உரிய ஆதாரங்களுடன் நிலை நாட்டப்பட்டால், அதனை உணர்ந்துதன்னைத் திருத்திக் கொள்பவரே மனிதனாவான். தவறுகள் சுட்டிக் காட்டப்பட்ட பின்பும் திருந்தாதவன் மனிதனாக இருக்க முடியாதுஅவன் மிருகத்திற்குச் சமம். இல்லை, மிருகங்களை விட இழிவான நிலையிலுள்ளவனாவான். (பார்க்க 7:179)

சுமார்    1000    வருடங்களாக    நடைமுறையில்     இருக்கும்   தக்லீது   தஸவ்வுஃப்   அடிப்படையிலான   இமாம்   கஸ்ஸாலியின் போதனைகளில் பெரும்   நம்பிக்கை   கொண்டு,   அவற்றை   அப்படியே   உருப்போட்டு அவற்றில் திளைத்து அதன் காரணமாக வீட்டைத் துறந்து இமாம் கஸ்ஸாலியைப் போல் நாடோடியாகச் சென்று தனிமையில் புலன்களையடக்கி தியானங்களில் மூழ்கினார் ஒருவர். அதன் பலனாக அவருக்கு சில காட்சிகளும்,  தோற்றங்களும்    ஏற்படத்தான் செய்தன. இறைவன்  தன்னுடன் பேசுவது   போன்ற பிரமிப்பில்   ஆழ்ந்தார்.   சுமார் 21    வருடங்களாக   இப்படிப்பட்ட   நடைமுறைகளில் நம்பிக்கை வைத்திருந்தவர், அவை குர்ஆனுக்கும்,   ஹதீஸுக்கும்   முரணானவை   என்பதை   அறிந்தவுடன் அவற்றை விட்டுவிலகி விட்டார். முன்னோர்கள் சென்ற வழியாயிற்றே என்று அவர் தயக்கம் காட்டவில்லை. நீண்ட   காலமாக ஒன்றைச் சரிகண்டு செய்து விட்டு இப்போது அது தவறான வழி என்று சொன்னால் மக்கள் தன்னைப் பார்த்து சிரிப்பார்களே!   ஏளனம்   பேசுவார்களே!   என்ற வீண் வரட்டு கெளரவத்திற்கு ஆளாகி மனம் ஒப்புக் கொண்ட   உண்மைகளை   மக்களுக்குச்   சொல்லத்  தயங்கவில்லை   இப்படிப்பட்ட ஒருவரை நாம் நன்கு அறிவோம். இது போன்ற மனோ நிலை முஸ்லிம்கள்  அனைவருக்கும் ஏற்பட்டுவிட்டால் அதுவே போதும், அதாவது தங்கள் மனம் உண்மை என்று ஒப்புக்  கொண்டதை   வரட்டு கெளரவம் பார்க்காமல் பகிரங்கமாக மக்களுக்கு அறிவித்தால் அதுவே இஸ்லாமிய மறுமலர்ச்சிக்குப் பெரிதும் உதவும் இப்படி பல சகோதரர்கள் உண்மையை உணர்ந்து தரீக்காக்களை விட்டு விலகி வருகின்றனர். அவர்கள் தரீக்கா  பயிற்சிகள்   மூலம்   சில   காட்சிகளையும், தோற்றங்களையும் தங்கள் அனுபவத்திலேயே கண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாத்தின்   பெயரால்   இருக்கும்   நடைமுறைகள்   நமக்கு   போதிக்கப்பட்ட கல்வி முறை இவற்றைக் கொண்டு உண்மைக்குப் புறம்பானவற்றை    நம்பிக்   கொண்டிருந்தாலும்,    அவை    தவறானவை,   நஷ்டத்தைத்   தருபவை   என்பதற்கு   முஸ்லிம்கள் அனைவருமே ஒப்புக் கொள்ளும் குர்ஆனிலிருந்தும்,   நபி(ஸல்)   அவர்களின்   ஆதாரப்பூர்வமான   நடை முறைகளிலிருந்தும் ஆதாரங்கள் தரப்படும்  போது.   அவை   தெள்ளத்   தெளிவாக இருக்கும் நிலையில் வீண்வரட்டு கெளரவம் காரணமாக அவற்றை மறுப்பவன் உண்மையில்  குர்ஆனையும், ஹதீஸையும மறுக்கிறான். எனவே, அவற்றை மறுக்கிறவன் குர்ஆன்2:39 வசனப்படி நரகம்   புகுவான்.   அந்நரகத்தில்   என்றென்றும் தங்கி   விடுவான். அதிலிருந்து விடுதலையே   இல்லை   என்பதை   ஒவ்வொரு முஸ்லிமும் விளங்கிச் செயல்படக்  கடமைப்பட்டுள்ளார்கள்.  தக்லீதும்,   தஸவ்வுஃபும்   குர்ஆன்,   ஹதீஸுக்கு நேர்முரணானவை என்பதற்கு   எண்ணற்ற   குர்ஆன்   வசனங்களையும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் இதுவரை அந்நஜாத்தில் இடம் பெறச் செய்துள்ளோம்.   சிந்திப்பவர்கள்   அவற்றைப்   பார்த்துப்   படிப்பினை   பெற்றுக்  கொள்வார்கள். தக்லீதையும், தஸவ்வுஃபையும் அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள “”ஸில்லிலயே நிஜாமிய்யா” கல்வித் திட்டத்தைத் தூக்கி எறிந்து விடுவார்கள்.

மெய்ஞானம் என்று இவர்கள் கூறுவது ஒரு போதையே :

­ரீஅத்,   தரீக்கத்,   ஹகீகத்,   மஃறிபத்   என்று சூபிகள் மக்களை ஏமாற்றி வருவது ஒரு போதை நிலையே அன்றி உண்மையான இறை ஞானமோ, மெய்யறிவோ இல்லை என்பதை விரிவாக விவரிப்பதாகக் குறிப்பிட்டிருந்தோம். இந்த முறையில் மெய்யறிவைப்பெற்ற   பல நாதாக்கள்   வாழ்ந்திருக்கிறார்கள் என்று அவர்களின் பெயரால் பல ஆச்சரியமான கதைகளைச் சொல்வார்கள். பல அதிசயங்களைச் செய்து காட்டியதாகவும்,   மறைவான   வி­யங்களை   அறிந்து   சொன்னதாகவும், பிறருடைய உள்ளங்களில் ஏற்படும்    எண்ணங்களை     அறிந்து    சொன்னதாகவும்,   இன்னும்     இவை   போல்     பல   நம்பமுடியாத    சம்பவங்களைச்   சர்வ சாதாரணமாகச்   சொல்லிக்   கொண்டிருக்கிறார்கள்.   ஏடுகளில்   எழுதி,   பக்கங்களை   நிரப்பி   இருக்கிறார்கள். இப்படிப்பட்ட கதைகள்    எல்லாம்    முன்னால்   நடந்ததாகச்   சொல்லுவார்களேயல்லாமல், இப்போது இந்தப் பயிற்சிகள் மூலம் இப்படிப்பட்டட ஆச்சரியகரமான செயல்களைச்   செய்து   காட்டுபவர்களை நேரடியாகக் காட்ட முடியாது. அப்படியே சிறிய சிறிய சம்பவங்களைச் செய்து காட்டினாலும் அவை கண்கட்டி வித்தை போன்ற கலைகளைச் சார்ந்தவையாக இருக்குமேயல்லாமல் மெய்ஞானநிலையில்ஏற்படும் கராமத்தாக இருக்காது. (காரணம், நபி (ஸல்) அவர்களை அடியயாற்றிப் பின்பற்றி நடப்பவர்கள் இப்படிப்பட்ட கீழ்த்தரமானகாரியங்களில் ஈடுபட மாட்டார்கள்) ஆயினும், அன்றுபோல் இன்றும் இந்த தரீக்கா முறைகளைச்  செயல்படுத்திக் கொண்டுதான்   இருக்கிறார்கள். அப்படியானால் சென்ற நூற்றாண்டில் செய்து காட்டிய அதிசயங்களை இந்த நூற்றாண்டில் ஏன் செய்ய முடியவில்லை என்பதே கேள்வியாகும். இதில் அதிசயம் என்ன தெரியுமா? இந்த நூற்றாண்டில் இப்படிப்பட்ட அதிசயங்களை நேரடியாகச் செய்து காட்டத்தவறியவர்கள் அடுத்த நூற்றாண்டில் இந்த நூற்றாண்டில் வாழ்ந்த சிலரைப்பற்றி இப்படி கதைகளைக் கட்டிச் சொல்லத்தவற மாட்டார்கள். இதிலிருந்தே என்ன தெரிகிறது?இவர்கள் கூறும்  இறைஞானம் (மஃறிபத்), மெய்நிலை  கண்டநிலை   இவை   அனைத்தும் இவர்களின் வாயிலும், இவர்களால் எழுதப்பட்டஏடுகளிலும்இருக்கின்றனவேஅல்லாமல் உண்மையானவை இல்லைஇவை வெறும் போதை நிலையே உண்மையானவை இல்லை, இவை வெறும் போதை நிலையை என்பதே எதார்த்தமான நிலையாகும்.

இவர்கள்   மாபெரும் இறைநேசச் செல்வர்களாகவும் இறை ஞானம்     மிக்கவர்களாகவும்   மெய்நிலை   கண்ட   ஞானிகளாகவும், எதார்த்த    நிலைகளை    மிகச்    சரியாக   உணர்ந்தவர்களாகவும்   நம்பியிருக்கும்   இரண்டு   பெரியார்கள்,   இந்த  தக்லீதையும், தஸவ்வுஃபையும்   இஸ்லாமிய   மார்க்கத்தில்    நுழைத்து,   சட்டப்பூர்வமான   அங்கீகாரத்தைப்  பெற்றுக் கொடுத்தவர்கள் இமாம் கஸ்ஸாலி,    சூபி    இப்னு   அரபி   இவர்கள் இருவரும் பெற்றிருந்தது உண்மையான இறைஞானமோ, மெய்நிலைகளோஇல்லை என்பதே உண்மையாகும் என்பதை ஆதாரங்களுடன் தருகிறேன்.

இமாம் கஸ்ஸாலி தனது 38ம் வயதில் துறவியாக நாட்டைவிட்டு வெளியேறி காடுகளில் அலைந்து கொண்டும் கடும், தவம் செய்து கொண்டும் இருந்ததற்குப் பிறகு?   அவர்களது   பாஷையில்   சொல்வதானால்  ­ரீஅத்? தரீக்கத் ஹகீகத், மஃறிபத் என்ற நான்கு படித்தரங்களிலும் முறையாக பயிற்சி பெற்று நடைமுறைப்படுத்தி அவை மூலம்   மெய்யறிவை  பெற்று   ஒவ்வொரு பொருளின் ஹகீகத்தை ?எதார்த்தநிலையில் அறிந்த  நிலையிலேயே தனது பெயர் பெற்ற “”இஹ்யாஃ உலூ மித்தீன்” என்ற   நூலை   அரபி   மொழியில் எழுதினார். அதற்கும் பிறகு சில ஆண்டுகள் கழித்து அதன் சுருக்கத்தை “”கீமியா ஸஆதத்” என்ற பெயரில் தனது தாய் பாஷையான பார்சியில் எழுதினார்.

அப்படிப்பட்ட    மெய்ஞான   நிலையில்    எழுதப்பட்ட   அந்த   நூல்கள்    எப்படி   இருக்க   வேண்டும்?   உண்மைக்குப்   புறம்பான எதார்த்தத்திற்கு    முரணான   ஒரு   சம்பவமாவது   இடம்   பெற்றிருக்க   முடியுமா?   அவர்தான் ஒவ்வொன்றுடையவும் ஹகீகத்தை? எதார்த்த நிலையை அறிந்தவராயிற்றே. ஆனால் அந்த    நூல்களில் உண்மைக்குப்   புறம்பானவை மட்டுமல்ல. பலவீனமான ஹதீஸ்களும், இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களும்   அடிப்படையேயில்லாத   ஹதீஸ்களும்   தாராளமாக இடம் பெற்றுள்ளன. இது ஒரு சாதாரண வி­யமல்ல. “”என் மீது வேண்டுமென்று எவன் பொய் சொல்லுகின்றானோ   அவன்   ஒதுங்குமிடம்   நரகமாகும்” என்ற கருத்தில்    பல    நபித்தோழர்களால்    அறிவிக்கப்பட்டு    பெரும்பாலும்   எல்லா    ஹதீஸ்    நூல்களிலும்   காணப்படும்  மிகமிக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்படி எவ்வளவு கடினமான ஒரு காரியம். மெய்நிலை கண்ட நிலையில் ஒருவர் இப்படிப்பட்ட பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை எல்லாம் தனது நூலில் எடுத்து எழுதி இருக்க முடியுமா? என்று  சிந்தித்துப்   பாருங்கள்.   அதுவும் ஆரம்பத்திலேயேய இஸ்லாமிய வழியை விட்டு விலகிச் சென்ற பிரிவினை வாதிகளான U ஆக்கள் இட்டுக் கட்டியவற்றை எல்லாம் தனது நூலில் எடுத்து எழுதி இருக்க முடியுமா? என்று சிந்தித்துப் பாருங்கள்.    இமாம்   கஸ்ஸாலியின்  இஹ்யாஃஉலூ மித்தீனில் குர்ஆனுக்கும்,   ஹதீஸுக்கும்   ஓத்த   பல   உன்னத   கருத்துக்கள்   இருக்கின்றன என்பதையும் அறிஞர்கள் ஒப்புக் கொள்ளவே செய்கிறார்கள். அதே   சமயம்   குர்ஆனுக்கும்,   ஹதீஸுக்கும்   நேர்முரணான   பல  கருத்துக்களும் இருக்கின்றன. பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களும், அடிப்படையற்ற ஹதீஸ்களும் ஏராளமாக  இடம்   பெற்றுள்ளன. உதாரணமாக சில பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் :

“”இஹ்யாவில் ” அடிப்படையில்லாத ஹதீஸ்கள்:

“” ஒருமுறை இல்முடைய மஜ்லிஸூக்கு ஆஜராவது 1000 ரகா அத்து தொழுவதைப் பார்க்கனும் மேலானதாகும் ” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

“”உலமாக்கள்    அல்லாஹ்வின்    அடியார்களுக்கு    ரசூல்மார்களின்    (அமீனாக்கள்) நம்பிக்கையாளர்களாவர்” என்று நபி(ஸல்) அவர்கள்  கூறியுள்ளார்கள்.   இவ்விரு   அறிவிப்புகளும்   இஹ்யாவில்    இல்முடைய பாடத்தில் இடம் பெற்றுள்ள மவ்ழூஃவான்? இட்டுக்கட்டப்பட்டவையாகும்.

உலகத்தைத்   துறந்து   மெளனநிலையை   அடைந்துள்ள  ஒருவரை நீங்கள் கண்ணுற்றால் அவரை நீங்கள் அணுகுங்கள் அவர் “”ஹிக்மத்” ஞானத்தை போதிப்பார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.(இப்னு கல்லாத் (ரழி), இப்னுமாஜ்ஜா)

ஒரு கூட்டத்தாரிடையே ஒரு ஷைகானவர் ஒரு  சமூகத்தாரிடையே   உள்ள   நபியைப்  போன்றவராவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இவ்விரு அறிவிப்புகளும் லஸீஃபானவை ?பலகீனமானவை இவையும் அதே இல்முடைய பாடத்தில் இடம் பெற்றுள்ளன.

ஒருமுறை   நபி(ஸல்)   அவர்கள் ஜிப்ரில் (அலை) அவர்களிடம் சூரியன் சாய்ந்து விட்டதா? என்று கேட்டதற்கு அவர்கள் “”இல்லை, ஆம்” என்றார்கள். அதற்கு   என்ன “”இல்லை, ஆம் ” என்று கூறுகிறீர்களே? என்றார்கள். அதற்கு ஜிப்ரீல்(அலை) அவர்கள் “”நான் இல்லை என்று கூறிய நேரத்திலிருந்து “”ஆம்” என்று கூறுவதற்குள் சூரியன் 500 வருடங்களின் தொலை தூரம் நகர்ந்து விட்டது ” என்று    கூறினார்கள்.   இவ்வறிப்பு    இஹ்யாவில்    இல்முடைய   பாடத்தில்   இடம்   பெற்றுள்ளது.   இது  அடிப்படையே இல்லாத தொன்றாகும்.

ஹிஜ்ரீ 725 க்கும் 806க்கும் இடையில் வாழ்ந்து வந்த ஹாபிழ் இராக்கி (ரஹ்) அவர்கள் இஹ்யாஃ உலூ   மித்தீன்   எனும் இமாம் கஸ்ஸாலி அவர்கள் எழுதியுள்ள நூலுக்கு தாம் எழுதியுள்ள அடிக்குறிப்பின் மேற்காணும் “”மவ்ழூஃ” லயீஃப் அடிப்படை அற்றவை” எனும் விபரங்களைத் தந்துள்ளார்கள்.

 மேலே   நாம்   குறிப்பிட்டுள்ள   ஹதீஸ்கள்   மாதிரிக்காகக்   கொடுக்கப்பட்ட   சில    ஹதீஸ்களாகும்.   உண்மை என்னவென்றால் “இஹ்யாவின்’ பக்கங்களைப் புரட்டுகிறவர்கள் அதில் பக்கத்திற்குப் பக்கம் இப்படி பட்ட ஹதீஸ்கள் இடம் பெற்றுள்வதை பார்வையிட முடியும்.

“”உலகிலுள்ள இஸ்லாமிய நூல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு இந்த “”இஹ்யாஃ உலூ மித்தீன் ” மட்டும் பாதுகாக்கப்பட்டு விட்டால் மீண்டும்  இஸ்லாத்தை    உயிர்ப்பித்து   விடலாம்”   என்று   முகல்லிது   மவ்லவிகளால்   ஏற்றிப்   போற்றப்படும் இஹ்யாஃ உலூ மித்தீன் தீனுடைய இல்முகளை உயிர்ப்பிக்கும் நூல் என்ற நூலின் உண்மைநிலை இது தான். பக்கத்திற்குப் பக்கம் பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட, அடிப்படையே இல்லாத ஹதீஸ்கள் தாராளமாக இடம் பெற்றாலும், குர்ஆனுக்கும், ஹதீஸூக்கும் ஒத்த உன்னத கருத்துக்களும் அந்நூலில் இடம் பெற்றுள்ளன என்பதையும் அறிஞர்கள் ஒப்புக்கொள்ளவே செய்கிறார்கள்.

இவற்றையும்    இன்றைய    அறிஞர்கள்   சுட்டிக்காட்டவே   செய்கிறார்கள்.   இஹ்யாவில்   காணப்படும் சில உயர்ந்த கருத்துக்கள் காரணமாக அந்த நூலை பார்வையிட்டு அதிலுள்ள பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை, அடிப்படையற்ற ஹதீஸ்களை அடிக்குறிப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். இவற்றை பரிசீலனைச்   செய்கிறவர்கள்.   எப்படி இன்றைய மவ்லவிகள் தாங்கள் கேள்விப்பட்டதை எல்லாம் ஹதீஸ்கள் என்று சொல்லி வருகிறார்களோ அதே போல் இமாம் கஸ்ஸாலியும் தான் கேள்விப்பட்டதை எல்லாம் ஹதீஸ்கள் என்று  எழுதியுள்ளார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். பொதுவாக தனது நூலில் ஹதீஸில் வந்திருக்கிறது என்று மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறாரே அல்லாமல் அறிவிப்பாளர்,   அது   காணப்படும் ஆதாரப்பூர்வமான நூல் எதனையும் அவர் குறிப்பிடவில்லை. மரியாதைக்குரிய  நான்கு   இமாம்களின்   காலத்தில்   ஹதீஸ்கள்   அனைத்தும் முறையாக பரிசீலனைச் செய்யப்பட்டு,   ராவிகளின்   வரிசை  அவர்களின் தராதரம் இவை அலசப்பட்டு தரம் பிரிக்கப்பட்டிருக்கவில்லை. இந்த நிலையில் அவர்கள் சில   பலவீனமான   ஹதீஸ்களை   கையாண்டதில்   யாரும்  குறை சொல்ல முடியாது. அதுவும் முஸ்லிம்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டிய தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற அத்தியாவசியகாரியங்களின் நிர்ப்பந்தம் காரணமாக அவ்வாறு செய்துள்ளனர். ஆயினும்   இப்படிப்பட்ட நிர்ப்பந்த நிலையிலும் அவர்களில்   யாரும்   அறிந்து  கொண்டே   Uஆ   பிரிவினரின் ஹதீஸ்களை    எடுத்துக்    கொண்டதே   இல்லை.   Uஆக்கள்   அறிவிக்கும்   ஹதீஸ்கள்   என்றால்   தூக்கி எறிந்து விடுவார்கள். மரியாதைக்குரிய    நான்கு   இமாம்கள்   மத்ஹபுகள்   தோன்றுவதற்கு   காரணமாகவும்   இல்லை. தங்களை தக்லீது செய்வதை திண்ணமாக மறுத்துள்ளார்கள் என்பதற்கு தெளிவான சான்றுகள் கிடைக்கின்றன.   பின்னால்   வந்தவர்கள் தவறாக அவர்களின் பெயர்களைப் பயன்படுத்தி மத்ஹபுகள் அமைத்துக் கொண்டார்கள் என்பதே   உண்மையாகும். எனவே மரியாதைக்குரிய நான்கு இமாம்களையும் மத்ஹபுடைய வி­யத்தில் யாரும் குற்றப்படுத்த முடியாது.  ஆனால்   ஐந்தாவது சிறந்த இமாமாகக் கருதப்படும் இமாம் கஸ்ஸாலியின் நிலை அப்படி அல்ல. அவரது காலமான ஹி. 450-505ல்    பெரும்பாலான   ஹதீஸ்கள்  அறிவிப்பாளர் வரிசை,    அவர்களின்   தராதரம்   யாவுமே   பரிசீலனைச்   செய்யப்பட்டு   முறையாக பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டுவிட்டன.முயற்சிப்பவர்களால்    ஹதீஸ்களின்    தராதரங்களை   அறிந்து  கொள்ள   முடியும்.   ஆனால்   இமாம்  கஸ்ஸாலி இஸ்லாத்திற்கு சம்பந்தமில்லாத அந்நிய தத்துவங்களையும் கலைகளையும்   கற்பதில்   ஆர்வம்   காட்டிய   அளவிற்கு   ஹதீஸ்களின் உண்மை நிலைகளை அறியும்   முயற்சியில்   ஈடுபட்டதாகத்  தெரியவில்லை.    மரியாதைக்குரிய   நான்கு   இமாம்களால்   நிராகரிக்கப்பட்ட U ஆக்களின் ஹதீஸ்களை இவர் எடுத்து தனது நூலில் பதிவு செய்திருக்கிறார் எனில் அவரது நிலை எப்படி இருந்திருக்கும்? என்றுநீங்களே   முடிவு   செய்து கொள்ளுங்கள். அவர் இஹ்யாவில் எடுத்து எழுதிய Uஆக்களின் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைத்தான்  “”ஸில்ஸிலயே   நிஜாமிய்யா”   கல்வித்   திட்டப்படி   கற்று   ஸனது   பெற்று  வரும்   மவ்லவிகள்   இன்று மேடைக்கு மேடை குத்பா பிரசங்கங்கள் உட்பட தாராளமாக சர்வ சாதாரணமாக எடுத்துக் கையாண்டு மக்களை வழி கெடுக்கிறார்கள்.

முயற்சி செய்தால் ஹதீஸ்களை அறிந்து கொள்ள முடியும் :

நடுத்தர    அறிவுள்ள    ஒரு   முஸ்லிம்   சுமார்   5   ஆண்டுகள்   முறையாக   ஹதீஸ் நூல்களை ஆராய்வரானால் பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை எளிதில் விளங்கிக் கொள்ள   முடியும்.   அவரிடம்   அடிப்படையே இல்லாத ஒன்றை ஹதீஸ் என்று கூறி   யாரும்   ஏமாற்ற   முடியாது.   இந்த   நிலையில் 10   ஆண்டுகளுக்கு மேல் இவர்கள் கூறும் தஸவ்வுஃப் முறையில் ­ரீஅத்?தரீக்கத்?ஹகீகத்?மஃறிபத் என்று பயிற்சி பெற்று மெய்ஞானத்தை ?எதார்த்த நிலைகளைக் கண்டு கொண்ட இமாம் கஸ்ஸாலிக்கு பலவீனமான   இட்டுக்கட்டப்பட்ட,   அடிப்படையே   இல்லாத   ஹதீஸ்களின்   எதார்த்த நிலையை அறிந்து கொள்ள முடியவில்லை என்றால் அதன் பொருள் என்ன?  அந்த   பயிற்சிகளின்   மூலம்   அவர்   பெற்றது   ஒரு போதை நிலையேயன்றி உண்மையான மெய்ஞானம் இல்லை என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் புரிகிறதல்லவா?

அதே போல் சூபி இப்னு அரபி இமாம்   கஸ்ஸாலியின்   நூல்களிலுள்ள   இந்த  குறைபாடுகளை அறியாமல் அவற்றை அப்படியேவேதவாக்காக   எடுத்துச்   செயல்படுத்தியுள்ளார்.   அவற்றை   அடிப்படையாக   வைத்து   குர்ஆனுக்கும்,   ஹதீஸுக்கும் முரணான கருத்துக்களில்   அவரும்   நூல்கள்  எழுதியுள்ளார் என்றால் அதன் பொருள் என்ன? அவரும்   எதார்த்த   நிலையை  அறியாமல் போதை  நிலையில்    இருந்துள்ளார்   என்பது   புரிகிறதல்லவா?   அதே   போல்   அன்றிலிருந்து    இன்று  வரை இந்த இருவரின் இக்கொள்கைகளை   ஏற்று,   தஸவ்வுஃப்   அடிப்படையில் ­ரீஅத்? தரீக்கத்? ஹகீகத்?மஃறிபத் என்று பயிற்சிகள்   செய்து   மெய் ஞானத்தில்   உச்சத்தில்   இருப்பதாக    நம்புகிறவர்களில்   யாராவது   இமாம் கஸ்ஸாலியின் நூல்களில் பொய்யுரைகள் எல்லாம் ஹதீஸ்களாகப்    பதியப்பட்டுள்ளன   என்ற எதார்த்த நிலையை தங்கள் மெய்ஞானம் கொண்டு அறிந்திருக்கிறார்களா? என்றால் இல்லை என்ற பதிலையே பெற முடியும்.   இதிலிருந்து   என்ன   தெரிகிறது?   அவர்கள்   இப்பயிற்சிகள்  மூலம் மெய்ஞானத்தை அடையவில்லை.     ஒரு     போதை    நிலையை  அடைந்து   தடுமாறுகின்றனர்   என்பதே   உண்மையாகும்.   இவர்கள்   கூறும்   இப்பயிற்சிகளில்,   ஈடுபடாமல்   முறையாக   ஹதீஸ்களை   ஆராய்கிறவர்கள்   மட்டுமே “” இஹ்யாவில்” பொய்யுரைகளெல்லாம் ஹதீஸ்கள் என்று இடம் பெற்றிருக்கும் எதார்த்த நிலையை அறிந்து தெளிவு    படுத்துகிறார்கள். இவ்வளவு தெளிவாக விளக்கியும் புரியாதவர்கள் புரிந்து கொள்ள ஒரு பயிற்சியைத் தருகி¼<ம்.

சந்தேக நிவர்த்திக்காக பரீட்சித்துப் பாருங்கள் :

இறைவனைப் பற்றியோ, மார்க்கத்தைப் பற்றியோ, மறுமையைப் பற்றியோ    சிறிதும்   எண்ணம்  இல்லாமல் தனிமையான ஒரு இடத்தில் அமர்ந்து ஒரு கல்லை நினைத்துக் கொண்டு   தங்கள்   புலன்களை  அடக்கிமனதை   ஒரு   நிலைப்படுத்தி கல்?கல்?கல்? என்றோ அல்லது அரபியில் ஹஜர்?ஹஜர்?ஹஜர்?  என்றோ   இலட்சக் கணக்கில் ஜபித்துக் கொண்டிருந்து பார்க்கட்டும். அவர்கள் மார்க்கத்தின்   பெயரால்   பயிற்சி    செய்து   அடையும்   இன்பத்தையும்,   மயக்கத்தையும்   இவர்களும்   அடைய   முடியும்   யார்  வேண்டுமானாலும் இதனைப் பரீட்சித்துப் பார்க்கலாம். அதன் பின்பாவது இவர்கள் கூறுவது இறை ஞானத்தைப் பெறும் உயர்ந்த முறை   அல்ல;   மனிதன்   மதி  மயங்கி நிலைகுலைந்து ஒரு போதை நிலையை அடையும் பயிற்சி முறையே என்பதை உணர்ந்து கொள்ளட்டும்.

இமாம் கஸ்ஸாலியின் நூல்களே சான்று :

ஆரம்ப காலத்தில் ஹதீஸ்களை முறையாக இமாம் கஸ்ஸாலி பயிலவில்லை. அவரது இறுதி காலத்தில் தான் அந்த முயற்சிகளில் ஈடுபட்டார்   அதற்குள்   மரணத்தைத்   தழுவி   நேரிட்டு   விட்டது   என்று அவரது சரித்திரக் குறிப்புகளில் காணப்படுகிறது. உண்மை நிலையை அல்லாஹ் அறிவான். ஆனால் அவரது நூல்களில்   குர்ஆனுக்கும்   ஹதீஸுக்கும் முரணான பல சம்பவங்களும் பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட  ஹதீஸ்களும் அடிப்படையற்ற ஹதீஸ்களும் இடம்   பெற்றுள்ளன.   அவற்றில் நம்பிக்கை கொண்டு செயல்படுகிறவர்கள்.   நேர்வழி   தவறிச்   சென்று   கொண்டிருக்கிறார்கள்   என்று   உறுதியாகச்   சொல்லலாம். மிகத் தெளிவாகச் சொல்லுவதாக இருந்தால் அசலே இல்லாதவற்றை எல்லாம் இமாம் கஸ்ஸாலி ஹதீஸ்   என்று   எடுத்து   எழுதியுள்ளார். இருட்டில் காட்டில் விறகு பொறுக்கியவர் கதை   தான்   வி­ப்பாம்பையும்   விறகு என்று கையால் பிடிக்க நேரிடும். அதே நிலை தான் இமாம் கஸ்ஸாலிக்கு   ஏற்பட்டுள்ளது   என்று    உறுதிபடச்   சொல்ல    முடியும்   இமிட்டே­ன்   வைரத்தை   ஒரிஜினல் வைரம் என நம்பி ஏமாறுகிறவர்களைத்    தேர்ந்த    அறிவுடையவர்கள்   என்று   யாரும்    சொல்ல   மாட்டார்கள்.    இந்த  நிலையில்  கூழாங்கல்லை (அடிப்படையே இல்லாத ஹதீஸ்களை) ஒரிஜினல் வைரம் என்று நம்பிச் செயல்பட்டவரை மெய்நிலை கண்ட ஞானி   ?  எதார்த்த    நிலையை    அறிந்து    கொண்டவர்   என்று   ஏற்றுக்   கொள்ள  முடியுமா? என்று சிந்தித்துப் பாருங்கள் நமது கூற்றுக்கு அவரது நூல்களே போதிய சான்றுகளாக இருக்கின்றன.

அன்று    நேர்வழியில்    இருந்த    அறிஞர்களால்   இமாம் கஸ்ஸாலியின் நூல்கள் கடுமையான கண்டனத்திற்கு ஆளாகின சில இடங்களில் அவை நெருப்புக்கிரையாக்கப்பட்டன. ஆயினும் நேர்வழி பிறழ்ந்து செல்பவர்களுக்கே மக்களின் ஆதரவு எளிதாகவும்,அதிகமாகவும் கிடைக்கும். அந்த அடிப்படையில் இமாம் கஸ்ஸாலியின் நூல்கள் இஸ்லாமிய உலகில் உறுதியானதொரு இடத்தைப்பெற்றுக்கொண்டன.

இமாம் கஸ்ஸாலியை அளவு கடந்து நேசித்தோம் :

இவ்வாறு  நாம்  எழுதியுள்ளதைப் பார்க்கும் இமாம் கஸ்ஸாலியின் அபிமானிகள் நம்மீது அளவு கடந்து ஆத்திரப்படுவார்கள். ஒரு காலத்தில் அவர்களை விட அதிகமாக இமாம் கஸ்ஸாலி மீது பற்றும்பாசமும் வைத்திருந்தோம்என்பதைச்சொல்லிக் கொள்கிறோம்அவரது நூல்கள்தமிழில் வெளி வந்தவை அனைத்தையும் பெரும் விருப்பமுடன் படித்தோம். அவற்றில் நம்பிக்கையும்வைத்திருந்தோம். ஆனால் குர்ஆன் ஹதீஸைப் பார்க்கும் போது, அவரது நூல்களில் அவற்றிற்கு நேர்முரணாவை நிறைந்து காணப்படும்    போது நாம் என்ன செய்வது? அல்லாஹ்வின் மீதுள்ள முஹப்பத்தை விட அல்லாஹ்வின் ரசூலின் மீதுள்ளமுஹப்பத்தைவிட இமாம் கஸ்ஸாலி மீது அதிக  முஹப்பத்து வைக்கச் சொல்லுகிறார்களா? அப்படிச்செய்தால் அவனை அல்லாஹ்எங்கே அனுப்புவான்? நேராக நரகம் புகநேரிடும் என்று அறிந்து கொண்ட பின்பும் அப்படி முரட்டு முஹப்பத்து வைக்க முடியுமா? வி­த்தை வி­ம்     என்று நன்கு தெரிந்து கொண்டே குடிப்பவர்கள் நம்மில் இருக்க<ர்களா? அப்படிப்பட்ட அறிவீனமான செயலே குர்ஆனுக்கும்    ஹதீஸுக்கும்   முரணான  இமாம் கஸ்ஸாலியின் போதனைகளைப் பின்பற்றுவதாகும். இந்த விளக்கமே எம்மை அதைவிட்டும்    விலகச் செய்தது.

அரபி மதரஸாக்களில் பாடும் கவி :

இமாம்   கஸ்ஸாலியின்   போதனைப்படியே   தக்லீதையும்   தஸவ்வுஃபையும் ஆதரித்து இன்றைய நம் நாட்டு அரபி மதரஸாக்கள் “”ஸில்ஸிலயே நிஜாமிய்யா ” கல்வித்திட்டத்தின்படி நடந்து வருகின்றன சில மதரஸாக்களில் தினசரி ஓதப்படும்.
நவ்விர்  இலாஹஸ்ஸமா கல்பல் கரீபிகமா
நவ்வர்த்த கல்ப இமாமின்னாஸி கஸ்ஸாலி

என்று ஆரம்பிக்கும் கவிகள் நமக்கு இதை ஊர்ஜிதம் செய்கின்றன. அதாவது இமாம் கஸ்ஸாலிக்குக் கொடுத்த கல்வி அறிவையும்விளக்கத்தையும்    தங்களுக்கும்   கொடுக்கும்படி  துஆ செய்து தினசரி கவிபாடுகிறார்கள். அல்லாஹ்வோ “”ரப்பி ஸித்னீ இல்மா”? இறைவா எனக்கு அறிவை அதிகப்படுத்துவாயாக! என்று கேட்கும்படி அழகாகக்  கற்றுத் தருகிறான். துஆ கேட்கும் வி­யத்தில் நபி(ஸல்)அவர்களின் அறிவுரை கீழ்வருமாறு அமைந்துள்ளது ;

ஒருமுறை அப்துல்லாஹ்பின் முகஃப்பல் (ரழி) அவர்கள், தமது மகன் “”யா அல்லாஹ்! நான் சுவர்க்கத்தில் நுழைந்தால் உன்னிடம் சுவர்க்கத்தின் வலப்புறத்தில் வெள்ளை மாளிகை ஒன்றை வேண்டுகிறேன்” என்று பிரார்த்தித்துக் கொண்டிருப்பதைக் கேட்டார்கள். உடனே “”எனது    மகனே! நீ   அல்லாஹ்விடம்   பொதுவாக   சுவர்க்கத்தைத் தரும்படி கேட்பதோடு, நரகத்தை விட்டும் பாதுகாப்புச் செய்யும் படியும்   பிரார்த்தனை   செய்வீராக!   ஏனெனில்   துஆ   கேட்பதிலும் ஒளூ செய்வதிலும் அத்து மீறி நடக்கும் ஒரு கூட்டம் வருவார்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என்று கூறினார்கள். (அபூநுஆமா(ரழி), இப்னுமாஜ்ஜா, அபூதாவூத்)

இந்த குர்ஆன் வசனத்தையும், ஹதீஸையும் அறிபவர்கள் இப்படி துஆ கேட்பது எவ்வளவு தவறானது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.    மேலும்   இமாம்   கஸ்ஸாலி   பெற்ற   அறிவு   அல்லாஹ்வின்   அங்கீVரத்தைப் பெற்றதா? என்பதை இவர்கள் அறிய மாட்டார்கள் இந்த நிலையில் அவர்கள் இவ்வாறு ஏன் துஆகேட்கிறார்கள் என்பதைச்   சிந்தித்துப்   பாருங்கள் ஆக அடிப்படையே இல்லாத ஒருகல்வித்திட்டத்தை அமைத்துக் கொண்டு குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முரணான செயல்படுகிறார்கள் என்பது தெரிகிறதல்லவா? மேலும் பல விபரங்களை “” இன்றைய அரபி மதரஸாக்கள் ஓர் ஆய்வு” என்ற கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.

முடிவுரை: “” ஸில்ஸியே நிஜாமிய்யா” குர்ஆன்   ஹதீஸுக்கு   நேர்முரணான   ஒரு   கல்வித்திட்டமாகும். அதை விட்டு விடுபடுவதே அறிவுடைமையாகும். அல்லாஹ் அருள் புரிவானாக !

——————————————————————————————————————-

நாஸ்திக நண்பர்களே! நாசத்தைத் தவிர்ப்பீர் !!
தொடர்:10

K.M.H அபூ அப்துல்லாஹ்

ஏப்ரல்   ‘   89  இதழில், “” இறைவன் இல்லை” என்ற தவறான தத்துவத்தை நிலை நாட்டுவதன் மூலம் மக்களிடையே ஏற்பட்டுள்ள மூடநம்பிக்கைகள் மூடச் சடங்குகள்,  ஒழுக்கமற்ற   நிலைகள்   இவற்றை   அகற்றி,   சுபீட்சமான ஒரு வாழ்க்கை முறையை மனித சமுதாயத்திற்கு    அளிக்கும்   திட்டத்தில்   நாஸ்திகர்கள்   தோல்வியடைந்து   விட்டனர்    என்பதற்குரிய  ஆதாரங்களை விபரமாகப் பார்த்தோம்.

ஆக கடந்த 9 தொடர்களில் “” இறைவன் இல்லை” என்று இறைவனை மறுக்கும்   நாஸ்திகர்களின்   போக்கு   மிகவும் தவறானது ஆபத்தானது   விவேகமற்றது   என்பதை   உரிய   ஆதாரங்களுடன்   தெளிவாகப்   பார்த்தோம். நடுநிலையோடு நமது ஆய்வை அணுகுகிறவர்கள். “”  இறைவன்   இல்லை  ”   என்ற   தங்களின்   தவறான   கொள்கையை   மாற்றிக்   கொள்வார்கள்  ?  இறை   நம்பிக்கையாளர்களாக   ?   ஆஸ்திகர்களாக   மாறிவிடுவார்கள்    என்ற   நம்பிக்கை   நமக்கிருக்கிறது.   இவ்வளவு   தெளிவான விளக்கங்களுக்குப் பிறகும் நாஸ்திகக்கொள்கையில் நம் பிக்கையுடன் இருக்கும்  நண்பர்களுக்கு இறுதியாக சில விளக்கங்களை எடுத்துச் சொல்ல விரும்புகிறோம்.

பிறந்த    மனிதன்   இறக்கிறான்,    மரணத்தைத்    தவிர்க்கும்   ஒரு    வாழ்க்கையை    மனிதன்    வாழவில்லை  என்பதில் நாஸ்திகநண்பர்களுக்கும்    மாற்றுக்   கருத்து    இருக்க   முடியாது.   நிச்சயமாக   நாம்   அனைவரும்   மரணத்தை எதிர் பார்த்தே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு நாளைக்கு மரணமடையப் போகிறோம் எனவே இப்போது மரணத்தின் பின்னுள்ள நிலையைப்பற்றி நம் இரு சாராகும் மறுக்க முடியாத உண்மை இது தான்; நாஸ்திக  நண்பர்கள் கூறுவது போல், “”இறைவனும் இல்லை மரணத்தின் பின்விசாரணையும்   இல்லை, சொர்க்க நரகமும் இல்லை, மரணத்தோடு மனிதன் மண்ணோடு மண்ணாக ஆகிவிடுகிறான். மறுஉலக வாழ்க்கை என்ற    ஒன்று   இல்லை”   என்பது   உண்மையானால்   நாஸ்திகர்களும் தப்பித்துக் கொள்வார்கள், நாமும் தப்பித்துக் கொள்வோம்.    மறுமையில்   நஷ்டம்   இரு   சாராருக்கும் இல்லை என்பதை நாஸ்திகர்களும் மறுக்க மாட்டார்கள். அதே சமயம் அவர்கள் கூற்று பொய்யாகி நமது கூற்று உண்மையானால் அவற்றை மறுத்துக் கொண்டிருந்த நாஸ்திகர்கள் வகையாக மாட்டிக் கொண்டு துன்பப்படப் போகிறார்கள். காரணம், அவர்கள்   இவ்வுலக   வாழ்க்கையில்   மறுமைக்குரிய   எவ்வித   முன்னேற்பாடும் செய்யவில்லை.   ஆனால்    நாம்   மறுமையை    நம்பி    அதற்குரிய    முன்னேற்பாடுடன்    செல்வதால்     இறை   அளிக்கும்     தண்டனைகளிலிருந்து    தப்பித்து    சுவர்க்கம்   செல்ல    வாய்ப்பு    இருக்கிறது.    ஆக,   இந்தக் கோணத்திர்ல பார்த்தாலும் நாம் பாதுகாப்பின்   பக்கமே   (றீழிக்ஷூeறீஷ்de)   இருக்கிறோம்.  நாஸ்திகர்களோ கடுமையான ஆபத்தின் பக்கம்(நிrலிஐஆறீஷ்de) இருக்கிறார்கள். இப்போது நாஸ்திகர்கள் ஒரு கேள்வியை எழுப்பலாம்   மறுமை   என்ற ஒன்று இருப்பதாக நம்பி இவ்வுலக வாழ்க்கையை நீங்கள் வீணுக்கிக் கொள்கிறீர்களே, அது உங்களுக்கு நஷ்டம் தானே?   என்ற   கேள்வியே அது. இதிலும் அவர்கள் அறியாமையிலேயே இருக்கிறார்கள் என்றே நாம் சொல்லுவோம்.

உலக ஆசாபாசங்களை விட்டு விலகியவர்களே வெற்றி பெற முடியும் என்று இஸ்லாம் சொல்லவில்லை. சிற்றின்ப வாழ்க்கையை துறந்தவர்களே   சித்தி பெற முடியும் என்று இஸ்லாம் சொல்லவில்லை. முற்றும் துறந்த முனிவர்களே முக்தி பெற முடியும் என்று  இஸ்லாம்   சொல்வில்லை.    இறை    மறை    இவ்வாறு   கூறவில்லை. இவை அனைத்தும் மனிதக் கரங்களால் உருவாக்கப்பட்ட மதங்களின் கூற்றுக்களாகும். மாறாக, உலக வாழ்க்கையில் ஆசாபாசங்களுக்கிடையே அனைத்து இன்பங்களையும் முறையாக அனுபவித்துக்    கொண்டே    முழுமையாக    வெற்றி   பெரும்   ஒரு   வாழ்க்கைத்   திட்டத்தையே   இஸ்லாம் மனித வர்க்கத்திற்குக் கொடுத்துள்ளது.    இறை    கொடுத்த    மறைவழி    நடப்பவர்கள்.   அணு அளவும் தங்கள் இம்மை வாழ்க்கையை நஷ்டப்படுத்திக் கொள்ளவில்லை    என்பதே    உண்மையாகும்.    இவ்வுலக    வாழ்க்கையில்    சுபீட்சமாகவும்,    மகிழ்ச்சியாகவும்   வாழும்   வழி முறைகளையே இறைவன் வாழ்க்கை நெறியாக மனிதனுக்கு அளித்துள்ளான். நாஸ்திகர்களை விட இறை கொடுத்த மறைவழி   நடப்பவர்களே இவ்வுலக வாழ்க்கையின் இன்பங்களை நிறைவாக அடைந்து, மன திருப்தியுடன் இவ்வுலகில் வாழ்கிறார்கள் என்று உறுதி பட நம்மால் சொல்ல முடியும். இதனை பின்னால் நாம் விரிவாக விளக்குவோம்.

நாஸ்திகர்களின்    இத்தவறான    கூற்று   மனித அபிப்பிராயங்களைக் கொண்டு மார்க்கத்தை மதமாக்கி, குருட்டு நம்பிக்கையில் இறைவன் பெயரைச்  சொல்லி   வாழ்த்து   கொண்டிருக்கிறார்களே அப்படிப்பட்ட மதவாதிகளின் வாழ்க்கை நிலைகளைப் பார்த்துச் சொல்வதாகும். இறைகொடுத்த மறைவழி கண்டு சொல்லுவதில்லை.

ஆதி மனிதன் ஆதம் முதல் இன்று வரை இந்த மனித சமுதாயத்திற்கு இறைவன் கொடுத்தது, மனிதனுக்கு  சாந்தியை அளிக்கும் சாந்தி மார்க்கம்? இஸ்லாம்   ஆகும்.   காலத்திற்குக்   காலம்   இறை கொடுத்த வழி மறந்து, மனிதன் தனது ம¼² இச்சையி²ல் அமைத்துக் கொண்ட வழி முறைகளே மதங்களாகும். மதங்களிலும் பல நல்ல போதனைகள் இருக்கின்றனவே என்ற மனமருட்சி அவசியமற்றதாகும்.சட்ட விரோமதாக தயாரிக்கப்படும் கள்ள நோட்டுக்களிலும் செல்லா நோட்டுகளிலும் நல்லநோட்டுக்களிலுள்ள பல அம்சம்கள் இருக்கலாம் அதனால் அவை நல்ல நோட்டுக்களாக?அரசு வெளியிட்டு புழக்கத்தில் இருக்கும்சட்ட   பூர்வமான      நோட்டுக்களாக    ஆகிவிடுவதில்லை    எனவே சத்திய மார்க்கம் மனிதக் கரம்பட்டு மதமாகி விட்டால் அது தனது பரிசுத்த நிலையை இழந்து விடுகிறது. இறை கொடுத்த    தூய    வாழ்க்கை   நெறி    பிறழ்ந்து வழி தவறிச் செல்லும் நிலை அங்கு உருவாகி விடுகிறது.

மனிதன் மாறுபட்ட கருத்துக்களை உடையவன் என்பதில் ஐயமில்லை. எனவே பற்பல கருத்துக்களை பற்பல மதங்கள் தோன்றின.ஆயினும்    மனிதன்    தனது    கற்பனையினால்   தோன்றிய   மதங்களுக்கும் இறை சாயம் பூசி இருப்பதால் நாஸ்திகர்கள் இந்த மதங்களை    எல்லாம்   தூய   வாழ்க்கை   நெறி   கொடுத்த இறைவனுடன் சம்பந்தப்படுத்தி ஏமாறுகின்றனர். மனித சமுதாயத்தில் வேற்றுமைகளை உண்டுபண்ணும் மதங்களை   கொடுத்த   ஒரு   இறைவன்   இருக்க  முடியுமா? என்று வினா எழுப்புகின்றனர். கைதேசம்    இறை    கொடுத்த    இறுதி    மறையாக   ஒரு   புள்ளியும்   பழுது  படாத நிலையிலுள்ள குர்ஆனை ஒப்புக்கொள்ளும் முஸ்லிம்களாவது தங்கள் வாழ்க்கை முறைகளில் மனித அபிப்பிராயங்களைக்   கலக்காமல்   தூய இஸ்லாமிய நெறிமுறையில் வாழ்கிறார்களா? என்<ல் இல்லை என்ற பதிலைத்தான் பெற முடியும்.  வெகு    சொற்பமான    முஸ்லிம்கள் அந்த அடிப்படையில் வாழ்ந்தாலும் அது நாஸ்திகர்களின் கண்ணில் படுவதில்லையே.

முஸ்லிம்கள் என்ற பெயரோடு உலகளாவிய அளவில் இஸ்லாமிய நெறி பிறழ்ந்து வாழும் பெரும்பான்மை சமுதாயத்தை தானே முஸ்லிம்களாக   அவர்கள் பார்க்க முடியும் முஸ்லிம்கள் ஒப்புக்கொள்ளும் இறை கொடுத்த இறுதி மறைக்கும், இஸ்லாமிய நெறி பிறழ்ந்து வாழும்   பெரும்பான்மை   சமுதாயம்   கொடுக்கும் விளக்கத்தைத்தானே அவர்கள் சரி என்று ஏற்க முடியும். இது மனித இயல்புதானே. இதை மறுக்க முடியுமா? குர்ஆனும், ஹதீஸூம் தெளிவாக மறுக்கின்ற எத்தனையோ கணகற்ற சடங்குகளை இந்த முஸ்லிம் சமுதாயத்தினர் செய்து கொண்டிருக்கின்றனர்.   மரணமே   இல்லாத   என்றும்   நித்தியானான இறைவனை விட்டுவிட்டு இவர்களைப்  போல்    இறைவனால்    படைக்கப்பட்ட    மனிதர்கள்   இவ்வுலகில்     வாழ்ந்து      மரணித்தபின்     அவர்களுக்காக   சமாதிகளைக்    கட்டி,   தர்காக்களை     உண்டாக்கி    அங்கு    பூஜை    புணஸ்காரம்   செய்யும் மக்கள் தானே தங்களை உண்மை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.   மாற்று   மதங்களிலுள்ள   ஜாதிப்     பிரிவினைகள்  போல் இஸ்லாத்திலும் மத்ஹபுகளின் பெயரால்  பிரிவினைகளை   உண்டாக்கிக்   கொண்டு பெருமை பேசுபவர்கள் தானே தங்களை முஸ்லீம்கள் என்று சொல்லிக்     கொண்டிருக்கிறார்கள்.    இறைவனின்    உண்மைத்தூதர்?   இறுதித் தூதர் தன்னோடு இருந்தவர்களெல்லாம் தனது தோழர்கள்   என   அழகாக    அழைத்து    நடைமுறைப்படுத்திக்    காட்டித்   தந்திருக்க   அதற்கு  மாற்றமாக பீர்? முரீது என்று மற்ற மதத்தினரைக் காப்பியடித்த குரு சிஷ்ய நடைமுறையை நடைமுறைப்படுத்தும் தரீக்கா வாதிகள்   தானே   தங்களை   முஸ்லிம்கள் என்று    சொல்லிக்    கொண்டிருக்கிறார்கள்.   இன்று   முஸ்லிம்   சமுதாயத்தின்   மிகப் பெரும்பான்மையினர் இப்படிப்பட்ட மனித அபிப்பிராயங்களால் உண்டாக்கப்பட்ட மதங்களைக் கடைபிடித்துக் கொண்டு   தங்களை   உண்மை முஸ்லிம்கள் என்று சொல்லி வருவதால்,    நாஸ்திகர்கள்    இவர்களின்    இந்த    சொற்  செயலை    வைத்து   தான்   இஸ்லாத்தையும்   கணிக்கின்றனர்.   மூட நம்பிக்கைகளையும்,   அர்த்தமற்ற   சடங்கு   சம்பிரதாயங்களையும்   செய்யத்   தூண்டும் மக்களை மடலையில் மூழ்கச் செய்யும் மதங்களைப்போல் இஸ்லாமும் ஒரு மதமே என்று தவறாகக் கணக்குப் போடுகின்றனர்.   நாஸ்திகர்களின்   மதிப்பீடுகள் எல்லாம் இந்த அடிப்படையில் அமைந்தவையே.

இதற்கு    நாம்     நாஸ்திகர்களைக்    குறை   சொல்ல   மாட்டோம்.  அப்படி  அவர்கள்  தவறாக இஸ்லாத்தை எண்ணும் வகையில் குர்ஆனுக்கும்,   ஹதீஸுக்கும்   முரணான நடக்கும் மிகப் பெரும்பான்மை முஸ்லிம்களையே   குறை   சொல்லுகிறோம். முஸ்லிம் அல்லாதவர் இஸ்லாத்தைத் தவறாக விளங்கிக்   கொள்ள   இவர்களே காரணஸ்தர்களாக இருக்கிறார்கள் என்று சொல்லுகிறோம். மிகப் பெரும்பான்மை முஸ்லிம்கள் அவ்வாறு நடப்பதால் இஸ்லாம்   அவற்றையே   போதிக்கிறது   என்று  அவர்கள் எண்ணுவதில்என்ன தவறு இருக்க முடியும்?

ஆயினும்    நாஸ்திக   நண்பர்களிடம்  நாம் சொல்லிக் கொள்ள விரும்புவது. தயவு செய்து இன்றைய முஸ்லிம்களின் வாழ்க்கை முறைகளைப் பார்த்து நீங்கள் இஸ்லாத்தை எடை போடாதீர்கள். சுமார்1400 ஆண்டுகளுக்கு முன்பு இறைவனின் இறுதித் தூதர் அறியாமையிலும்   மவ்ட்டீகத்திலும்   மூழ்கிக்    கிடந்த   மக்களிடம்    போதனை    செய்து     அவர்களை   அகில   உலக  மக்களின் வழிகாட்டிகளாக ஆக்கினார்களே அந்தச் சரித்திரத்தைப் புரட்டிப் பாருங்கள் என்று சொல்லுகிறோம். இறை கொடுத்த   இறுதிமறை வழியில்  மனித அபிப்பிராயங்கள் கலக்காமல் அவை துய்மையான நிலையில் கடை பிடிக்கப்பட்ட போது அவை உலக மக்களிடம் ஏற்படுத்திய அதிசயிக்கத்தக்க உன்னத மாறுதல்களை மனக் கண்முன் கொண்டுவந்து நிறுத்திப் பாருங்கள் என்று சொல்லுகிறோம் உலகளாவிய மக்கள் இப்படி நடக்க  ஆரம்பித்து விட்டால் உலகின் பிரச்சனைகள் தீர்ந்து சுபீட்சமான, மகிழ்ச்சிகரமான வாழ்க்கை அமைந்துவிடும்  என்று  நாஸ்திகர்கள் கற்பனையாகச்  சொல்லுவதுபோல் நாமும் இனிமேல் நடக்கப்போவதை கற்பனை செய்து பார்க்கச்சொல்லவில்லை,    நடைமுறைப்படுத்திக்    காட்டப்பட்ட    உண்மைச்   சரித்திரத்தை   பார்க்கச் சொல்லுகிறோம். ஆனால் வருந்தத்தக்க   வி­யம்    இதற்கு   முன்னால்   அனுப்பப்பட்ட   இறை   தூதர்களுக்குக்   கொடுக்கப்பட்ட மறை வழி எப்படி மனிதக் கரங்களால் மாசுபடுத்தப்பட்டு அவர்கள் வழி தவறிச் சென்றார்களோ அதே போல் இறுதித் தூதருக்குக் கொடுக்கப்பட்ட  இறுதி மறைபோதிக்கும்   வழி    மனிதக்   கரங்களால்   மாசுபடுத்தப்பட்டு   இவர்களும்    வழி  தவறிச் சென்றிருக்கிறார்கள். எனவே இன்றைய பெரும்பான்மை    முஸ்லிம்களின்   நிலையை  வைத்து இஸ்லாத்தை எடை போடாதீர்கள்    என்று    சொல்லுகிறோம். முஸ்லிம்கள்செய்யும்   தவறுகள்   இஸ்லாத்தின்   தவறுகளல்ல   என்பதை   நாஸ்திக நண்பர்கள் உணர வேண்டுகிறோம். அந்த  மறைவழியைஎடுத்துச்   சொல்லும்  அல்குர்ஆன்    மனிதக்   கரங்களால்,   மாசுபடுத்தப்படாமல்   இன்று   வரை   ஒரு  புள்ளிகூட மாற்றப்படாமல்பாதுகாப்பான நிலையில் உள்ளது. அதனை முறைப்படி விளங்க முற்படுங்கள் என்றே நாஸ்திக நண்பர்களுக்குச்  சொல்லுகிறோம்

அந்த   குர்ஆனையும்   நாங்கள்    அணுகிப்பார்த்து   விட்டோம்.   அதிலும்  பல   குறைகளைக் கண்டு பிடித்து விட்டோம். எங்களது தோழர்கள் அவற்றை தெளிவுபடுத்தி பல நூல்கள் வெளியிட்டிருக்கின்றனர்.   எனது   அவர்கள் சொல்லாம். நாம் அவர்களுக்குக் கூறக் கொள்ள விரும்புவது இது தான்; மனித இயல்பின் படி குற்றங்காணும் குறுகிய கண்ணோட்டத்தோடு எதனைப் பார்த்தாலும்  சரியானவையும்    தவறாகவே    தெரியும்   அதே   போல்   நியாயப்படுத்தும்   குறுகிய கண்ணோட்டத்தோடு எதனைப் பார்த்தாலும் தவறானவையும் சரியாகவே தெரியும். எனவே ஆத்திரமோ, அனுதாபமோ  இல்லாமல்   நடுநிலையோடு  அல்குர் ஆனை ஆராயமுன் வாருங்கள். அல்குர்ஆனைக் கொண்டு இறைவனின் இறுதித் தூதர் 1400 வருடங்களக்கு முன்பு நடைமுறைப்டுத்திக் காட்டியவாழ்க்கை    நெறியை    ஆய்ந்து   பாருங்கள்.    அதில்   நீங்கள்   கற்பனை செய்துள்ளதை விட உயரிய மேலான சுபீட்சமான ஒருவாழ்க்கைத்திட்டம்   மனிதர்களுக்காக   இருப்பதை அறிந்து கொள்வீர்கள். மற்ற தங்களைப்போல் இஸ்லாமும் ஒரு மதமே என்ற உங்களின்   தவறான   எண்ணம்   மாறி    இஸ்லாம் ஒரு மதமல்ல அது இறைவனால் மனித வர்க்கத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ள வாழ்க்கை   நெறி,   அதை  விட சிறந்த வாழ்க்கை நெறியை உலகில் தோன்றிய எந்த மனிதனும் தர முடியாது  எந்த இஸமும் தர முடியாது என்ற மறுக்க முடியாத மாபெரும் உண்மையை நீங்களும் வளங்கிக் கொள்வீர்கள்.

அந்த    இறை    கொடுத்த    மறை    வழி   மனிதன்   இவ்வுலகிலும் அவன் அனுபவிக்க வேண்டிய அனைத்து இன்பங்களையும் முறையாகவும் நிறைவாகவும் அனுபவிக்க வழி வகுத்துத் தந்திருக்கிறது. அது துறவு வாழ்க்கையை கற்பிக்கவில்லை என்பதையும் புரிந்து   கொள்வீர்கள்.   இறை   வழங்கிய    மறைவழி   விட்டு மனிதன் தனது சுயவழி தேடிக் கொண்டதின் விளைவே இவ்வுலகில் வாழ்க்கையை   முறையாக   அனுபவிக்க   முடியாமல்   போவது   துறவு  வாழ்க்கை கொண்டே மனிதன் முக்தி பெற முடியும் என்ற தவறான ஐதீகம் என்பதை எல்லாம் விளங்கிக் கொள்வீர்கள்.

அடுத்து இறை நம்பிக்கை உடையவர்களே நாஸ்திகர்களைவிட இவ்வுலக வாழ்க்கையின் மனமகிழ்வை முழுமையாக அனுபவிக்க முடியும் என்பதை ஆதாரங்களுடன் பார்ப்போம்.(வளரும்)

——————————————————————————————————————-

குர்ஆனை விளங்குவது யார்?
தொடர்:13     

 இப்னு ஹத்தாது

3:7 வசனத்தின் சரியான பொருள்

அவன் தான் (இவ்)வேதத்தை உம் மீது   இறக்கினான்.   இதில்   தீர்க்கமான   (தெளிவான)   வசனங்கள் இருக்கின்றன இவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும்.   மேலும்   எஞ்சியவை   பல   பொருள் பெறத்தக்கவை (தீர்க்க மற்றவை)யாகும். எவர்களுடைய உள்ளங்களில் கோணல் (வழிகேடு) இருக்கிறதோஅவர்கள், குழப்பங்களை நாடி பல பொருள் வசனங்களின் முடிவுகளைத் தேடி, அவற்றைப் பின்பற்றுகின்றனர். ஆனால் ,   இவற்றின்   உண்மைக்கருத்துக்களை   (முடிவுய்ஷ்ஐழியிVerdஷ்உமி) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும்   அறியார்.   அறிவில்    தேர்ந்தவர்களோ    “”நாங்கள்   இவற்றில்   (பூரணமாக)   நம்பிக்கை  கொண்டோம்.   இவை அனைத்துமே எங்கள்   இரட்சிகனிடமிருந்து   வந்தவை   தாம்”   என்று   கூறுவார்கள்.   அறிவுடையோரைத்   தவிர   வேறெவரும் நல்லுபதேசம் பெற மாட்டார்கள் (3:7)

3:7வசனத்தின் தவறான பொருள்

அவன் தான் (இவ்)வேதத்தை உம்மீது இறக்கினான் இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும்.      மற்றவை   (பல அந்தரங்களைக்    கொண்ட)   முதஷாபிஹாத்   (என்னும் ஆயத்துகள்)  ஆகும்.   எனினும்   எவர்களுடைய உள்ளங்களில் வழி கேடு இருக்கிறதோ   அவர்கள்  குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத்தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வையும்    கல்வியில்  உறுதிப்பாடு உடையவர்களையும் தவிர வேறு எவரும் அதன் விளக்கத்தை அறிய மாட்டார்கள் “”இவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவை தான். நாங்கள் இதைநம்பிக்கை  கொள்கிறோம் ”என்று அவர்கள் கூறுவார்கள் அறிவுடையோரைத் தவிர   மற்றவர்கள்  இதைக் கொண்டு நல்லுபதேசம்பெற மாட்டார்கள்.

சென்ற     இதழில்    ஹதீஸின்   வெளிச்சத்திலும்,  அரபி இலக்கண அடிப்படையிலும் 3:7 வசனத்தின்    சரியான பொருளையும்,  தவறான பொருளினால் ஏற்படும் தப்பபிப்பிராயங்களையும்   அவை விளைவிக்கும் விபரீதங்களையும் பார்த்தோம். அடுத்து இந்த 3:7 வசனம் பற்றிய தலை சிறந்த குர்ஆன் விரிவுரையாளர்களின் கருத்துக்களைப் பார்ப்போம்.

நபித்தோழர்களின் நிலை:

நபித்தோழர்களின் காலத்திலேயே 3:7 வசனம் பற்றிய    இந்த    மாறுபட்ட   கருத்துக்கள்   ஏற்பட்டு விட்டன என்று அவர்கள் எழுதி இருந்தார்கள்.அதற்கு ஆதாரமாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் கருத்தாகவும், இப்னு மஸ்ஊத்(ரழி)அவர்களின் கருத்தாகவு  ம் எடுத்து எழுதி இருந்தார்கள். அவற்றில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பதை முதலில்   நாம் ஆராய்வோம்.

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் கருத்து :

இப்னு    அப்பாஸ்   (ரழி)   அவர்கள்   சிறப்புக்குரிய நபித்தோழர்களில் ஒருவர், குர்ஆன் பற்றிய தெளிந்த ஞானம் உடையவர்கள் அவர்களுக்கு குர்ஆனின் விளக்கத்தை   கொடுக்கும்படி   அல்லாஹ்விடம்   நபி(ஸல்)   அவர்கள் துஆ செய்துள்ளார்கள். இவை அனைத்தையும் யாரும் மறுக்கமாட்டார்கள். அதேபோல்   அவர்கள்  இந்த   உம்மத்திலுள்ள   “”வர்ராஸி கூனஃபில் இல்மி” என்ற ஆழ்ந்தறிவுடையவர்களில் ஒருவர் என்பதிலும் யாருக்கும்  மாற்றுக்   கருத்து   இருக்க  முடியாது.   இங்கு எழுந்துள்ள  பிரச்சனை இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் 3:7 வசனத்தில் குறிப்பிட்டுள்ள   முத்தஷாபிஹாத் வசனங்களுக்குரிய   உண்மைப் பொருள்களை (இறுதி முடிவுகளை) அறிவார்களா? என்பது தான். அதற்கு  நாம்   முதலில் அணுக வேண்டியது இன்று நம்மிடையே பிரபல்யமாக இருந்து வரும் “”தஃப்ஸீர் இப்னு அப்பாஸ் ” என்று அவர்களது பெயரிலுள்ள தஃப்ஸீர் தான். அவர்கள் சொல்லியுள்ள கருத்துக்கள் அந்த தஃப்ஸீரில் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும். அதில் காணப்படும் வாசகங்கள் வருமாறு :

வமா  யஃலமு  தஃவீலஹு   இல்லல்லாஹ்?அதன்   உண்மைப்பொருளை (இறுதி முடிவை)  அல்லாஹ்வையன்றி  மற்றெவரும் அறியார் என்று குறிப்பிட்டுள்ளதோடு முடிக்காமல் “” இத்துடன்  வாசகம்   முற்றுப்பெற்று   பின்னர் அடுத்த   வாசகம்  துவங்குகிறது” என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இல்லல்லாஹ்வுடன்நிறுத்தவேண்டும். “”வர்ராஸி கூன ஃபில் இல்மி” அதனைச் சேர்த்தல்லஅது அடுத்த வாசகத்தை சேர்த்தது என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள். (தஃப்ஸீர் இப்னு அப்பாஸ், பக்கம் 47)

இதற்கு இன்னும் தெளிவாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் “”வமாயஃலமு தஃவீலஹு இல்லல்லாஹ் வயகூலுர்ராஸி கூனஃபில் இல்மிஆமன்னாபிஹி” என்று  ஓதிக் கொண்டிருந்ததாக அப்துர் நஜாக் அவர்களுக்கு மஃமர் அறிவித்ததாகவும், அவருக்கு இப்னு தாவூஸ் அறிவித்ததாகவும், அவருக்குஅவரது தந்தை அறிவித்ததாகவும் அறிவிப்புத் தொடருடன் தஃப்ஸீர் இப்னுகதீர் பாகம்1,         பக்கம் 347?ல் பதிவாகியுள்ளது.

இவ்வறிவிப்பின்     மூலம்    இல்லல்லாஹ்    என்பதோடு    முதல்   வாசகத்தை   முடித்து   விட்டு   “”வயகூலு”   என்னும் வாசகத்தை ராஸிகூனவோடு இணைத்து பின்னால் வரும் ராஸிகூன வாசகம் தனியானது என்பதை இப்னு அப்பாஸ் உணர்த்தியுள்ளார்கள்.

 மேலும், “”நான் அதன் தஃவீலை (விளக்கம்) அறியக் கூடிய ஆழ்ந்தறிவுடையோரில் ஒருவனாவேன் ” என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள்     கூறியதாக     முஜாஹித்    அவர்கள்   அபூ   நஜீஹ்   அவர்களிடம்   கூறியதாக   இப்னு   கதீர்  பாகம்1, பக்கம் 347?ல் பதிவாகியுள்ளது.   அதல்லாமல்   “முதஷாபிஹ்   வசனங்களின் உண்மைப் பொருளை அறிந்து கொள்பவர்கள் என்று இறைவன் குறிப்பிடுகின்ற கல்வியில் சிறந்தவர்களில் நானும்   ஒருவன் ” என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாக எந்த நூலிலும் ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் வரிசையுடன் இல்லை. இவர்கள் தங்கள் கைச்சரக்கை விலைபோகச்  செய்ய  இப்னு   அப்பாஸ் (ரழி) அவர்களின் பெயரை அநியாயமாக இழுத்துள்ளனர். இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள்   வி­யத்தில் முஜாஹித் அவர்களுக்கு தடுமாற்றம் ஏன் ஏற்பட்டது என்பதற்கு இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் அழகாக விளக்கம் கொடுத்துள்ளார்கள்.

முஜாஹித்   (ரஹ்)   கூறுகிறார் :   நான்   இப்னு   அப்பாஸ் (ரழி) அவர்களிடத்தில் ஆரம்ப முதல் இறுதி வரை பன்முறை ஓதிக்காட்டி ஒவ்வொரு வசனத்தையும் ஓதியபின் நிறுத்திவிட்டு    அதைப்பற்றிக்   கேட்பேன்   அவர்களோ   இந்த   உம்மத்தின்   தலைசிறந்த   அறிஞராக   இருந்ததோடு   “”அல்லாஹ்வைத்   தவிர   மற்றெவரும்   அதன் தஃவீலை (இறுதி முடிவு) அறிய மாட்டார் ” என்று கூறிக்கொண்டிருந்தவர்களில்     ஒருவராக   இருந்தும்,   முஜாஹித்தாகிய   எனக்கு     ஒவ்வொரு   ஆயத்துக்கும்    பதில்   அளித்தார்கள்.(ப.இ. தைமிய்யா, பாகம்13, பக்கம் 284)

இப்னு     அப்பாஸ்   (ரழி)    அவர்களிடம்    முஜாஹித்   ஒவ்வொரு    வசனத்திற்கும்    விளக்கம்   கேட்க   அவர்களும்    சொல்லிக் கொண்டிருந்திருக்கிறார்கள். எனவே முஜாஹித் அவராக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்கு   முத்தஷாபிஹாத்   வசனங்களின் உண்மைப் பொருள்கள் தெரியும் என்று முடிவு செய்து கொண்டிருக்கிறார். உதாரணமாக “”அலக்”   என்ற   பதத்திற்கு   முஜாஹித் விளக்கம் கேட்ட போது இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் இரத்தக் கட்டி என்று விளக்கம் கொடுத்து தான் இருப்பார்கள்.  இது  போல் முத்தஷாபிஹாத் வசனங்களுக்கு விளக்கம் கேட்ட போது அவர்களுக்குத் தெரிந்த விளக்கத்தை சொல்லியே இருப்பார்கள். இதை வைத்து முஜாஹித் அவர்கள் 3:7 வசனத்தில் வரும் “”தஃவீல் ” என்ற பதத்திற்கும் விளக்கம் என்ற தப்பான பொருளைக் கொண்டு 3:7   வசனத்திலுள்ள    இல்லல்லாஹ்   என்ற     வசனத்துடன்   வர்ராஸிகூன ஃபில் இல்மியையும் அவராகச் சேர்த்துக் கொண்டார்இதனை 3:7 வசனம் பற்றி “”அல்லாஹ்வைத் தவிர மற்றெவரும் அதன் தஃவீலை அறிய மாட்டார் என்று கூறிக் கொண்டிருந்தவர்களில் ஒருவராக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் இருந்தார்கள்”   என்று முஜாஹித் கூறுவதே உறுதி செய்கிறது. அதாவது இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் முத்தஷாபிஹாத் வசனங்களுக்கு  “”தஃவீல் ” (விளக்கம் அல்ல உண்மைப் பொருள்?இறுதி முடிவு) அல்லாஹ் மட்டுமே அறிவான், அதே சமயம் அது பற்றி நானறிந்த விளக்கத்தைச் சொல்லுகிறேன் என்ற கருத்தில் தான் சொல்லி இருக்கிறார்கள்.   அன்று   இப்னு   அப்பாஸ்   (ரழி)   அவர்கள்   “”அலக்”   என்ற    பதத்திற்கு    இரத்தக்கட்டி என்ற விளக்கத்தையே கொடுத்திருப்பார்கள். அவர்கள் அறிந்த விளக்கம் அது தான். இன்று ஆராயப்படும் போது கரு ஒருபோதும் இரத்தக்கட்டி நிலைக்கு வருவதில்லை, அது தாயின் கர்ப்பப்பையின் ஒட்டிக் கொண்டு ஆகாரத்தை உறிஞ்சி வளர்வதால் அட்டை என்ற பொருளில் “” அலக்”என்ற      பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற விளக்கத்தை இன்று தருகிறார்கள். நாளை வேறு விளக்கங்களும் பெறப்படலாம். என்கிலும்   அதன் உண்மைப் பொருளை இறுதி முடிவை அல்லாஹ்வே அறிவான் என்பதே உண்மையாகும். ஆனால் நிச்சயமாக இப்னு     அப்பாஸ் (ரழி) அவர்களுக்கு அன்ற இந்த விளக்கம் கிடைத்திருக்க முடியாது.  ஆயினும் அவர்கள்  “”வர்ராஸிகூன ஃபில் இல்மி ”   என்ற ஆழ்ந்தறிவுடையவர்களில் ஒருவர் என்பதில்யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. இதிலிருந்து வர்ராஸிகூனஃபில்   இல்மி என்பவர்கள் முத்தஷாபிஹாத் வசனங்களின் உண்மைப் பொருளை?இறுதிமுடிவைஅறிய முடியாது. அதனை அல்லாஹ் மட்டுமேஅறிவான். எனவே 3:7 வசனத்தில் இல்லல்லாஹ் என்பதுடன் முதல் வாக்கியத்தை நிறுத்த வேண்டும். வர்ராஸிகூன ஃபில் இல்மி அதற்கடுத்த வாக்கியத்தைச் சேர்ந்தது என்பதை சாதாரணமானவர்களும் விளங்கிக் கொள்ள முடியும்.

இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்களின் கருத்து :

இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் 3:7 வசனத்தில் “”லாயஃலமு தஃகூலஹு இல்லல்லாஹ் வயகூலுர் ராஸிகூன ஃபில் இல்மி ” என்று ஓதியதாக பிற்கால தஃப்ஸீர்களில் எழுதி வைத்துள்ளனர். அவர்கள் ஓதிய பிரகாரம் இந்த வசனத்திற்கு இரண்டு அர்த்தங்களுக்கு  இடமில்லை. ஒரு அர்த்தம்  மட்டுமே உண்டு என்று ஒரு சாரார் கூறுவதாக  அவர்கள்  எழுதிவிட்டு  இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அவ்வாறு    ஓதினார்கள்   என்பதற்கு   எந்த   அறிவிப்பாளர்   வரிசையுமில்லை.    ஆதாரப்பூர்வமான   ஒரு   நூலிலும் அது இடம் பெறவில்லை.   இது   இப்னு  மஸ்ஊத் (ரழி) பெயரால் கூறப்படும் பச்சைப் பொய்யைத் தவிர வேறில்லை என்று    கூறி   அதனை   நிராகரித்துள்ளனர். (அல்ஜன்னம் அக் ’88, பக்கம் 42)

இங்கு    குர்ஆனுக்கும்,    ஹதீஸுக்கும்,   அரபி   இலக்கணத்திற்கும்   ஒத்த  நிலையில்   இப்னு   மஸ்ஊத்   (ரழி)  அவர்கள்   பற்றி சொல்லப்படுவதை, அறிவிப்பாளர் வரிசை இல்லை, ஆதாரப்பூர்வமான நூலில் பதிவு இல்லை, அதனால்   அது    பச்சைப்  பொய் என்று தீர்ப்பளித்து விட்டார்கள். அதே   சமயம்   இக்கூற்று  பிற்கால   தஃப்ஸீர்களில்   எழுதப்பட்டுள்ளதாகவும்   அவர்களே ஒப்புக் கொண்டுள்ளார்கள்.   இந்த   நிலையில்  குர்ஆனுக்கும்,  ஹதீஸுக்கும், அரபி இலக்கணத்திற்கும் முரண்படுகிறது. அறிவிப்பாளர் வரிசையும் இல்லை, ஆதாரப்பூர்வமான நூல்களில்   பதிவும்   இல்லை.   ஏன்? பிற்கால தஃப்ஸீர்களிலும் “”3:7 வசனத்தைப்பற்றி இப்னு  அப்பாஸ் (ரழி)  அவர்கள்  குறிப்பிடும்  போது   முதஷாபிஹ்   வசனங்களின் விளக்கத்தை (உண்மைப் பொருளை? இறுதி முடிவை   என்பதையே   தவறாக   விளக்கம்   என்று   இங்கு   குறிப்பிட்டுள்ளனர்)   அறிந்து   கொள்பவர்கள்   என்று   இறைவன்   குறிப்பிடுகின்ற    கல்வியில்   சிறந்தவர்களில்   நானும்   ஒருவன்   என்று   கூறினார்கள்” (அல்ஜன்னத் அக்’88, பக்கம் 41) என்று அவர்கள் எடுத்து எழுதி இருக்கும் வாசகம்   இல்லை   இதிலிருந்து  நமக்கு   என்ன   தெரிகிறது. அவர்களுடைய வாதத்திற்கு ஒத்த கருத்தாக இல்லை என்றால் அது குர் ஆன், ஹதீஸுக்கு ஒத்திருந்தாலும் பச்சைப் பொய், தங்களின் இந்தக் கூற்றை நியாயப்படுத்தஅறிவிப்பாளர்   வரிசை,   ஆதாராப்பூர்வமான   நூல்   என்றெல்லாம் எழுதுவார்கள். தங்களின் வாதத்திற்கு மாற்றமான கருத்தாக இருந்தால்   குர்ஆனுக்கும்,     ஹதீஸுக்கும்   அரபி   இலக்கணத்திற்கும்    முரண்படுவது   மட்டுமல்ல, சாதராண   ஒரு நூலிலும்  காணப்படாவிட்டாலும்   இவர்களாக   கற்பனை  செய்து அதனைப் பெரிய ஆதாரமாக எடுத்து எழுதலாம். அதாவது   “”நான் அதன் தஃவீலை  அறியக்கூடிய   ஆழ்ந்தறிவுடையோரில்   ஒருவனாவேன் ” என்று     பதியப்பட்டுள்ளதை “” முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தை அறிந்து கொள்பவர்கள் என்று இறைவன் குறிப்பிடுகின்ற கல்வியில் சிறந்தவர்களில் நானும் ஒருவன் என்று  திரித்து எழுதலாம்   இது   தான்   அவர்களில்   நிலை.   தங்களின் தவறான கருத்தை நிலை நாட்ட அவர்கள் வீண்வாதம் செய்கிறார்களே அல்லாமல் சத்தியத்தை விளங்கும் நோக்கத்தில்  நியாயமான   வாதத்தை  எடுத்து வைக்கவில்லை என்பதற்கு இதைவிட ஆதாரம் வேண்டுமா?

இப்னு    அப்பாஸ்    (ரழி)    அவர்கள்    அவ்வாறு   “”  வமாயஃலமுதஃவீலஹு   இல்லல்லா   வயகூலுர்ராஸிகூன   ஃபில்   இல்மி ஆமன்னா பிஹி”  என்று    ஓதியாக   அறிவிப்பாளர்   வரிசையுடன்   இப்னு   கதீரில்   காணப்படுகிறதே   அதற்கு   என்ன   மறுப்பு தெரிவிக்கப்     போகிறார்களோ?   ஒரு     வேளை      இப்னு       கதீர்     மிகவும்     பிற்காலத்தில்     எழுதப்பட்ட    தஃப்ஸீர்    என்று   சொல்லப்போகிறார்களோ? என்னவோ! அப்படிச்   சொல்ல   முற்படுவதற்கு   முன்னால்   அவர்கள்   கூறியுள்ள   வாசகம்    எந்த  தஃப்ஸீரிலும் இல்லை அது அவர்களின் கைச்சரக்கு என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு சொல்ல முற்படுவார்களாக!

“”நான்    அதன்    தஃவீலை   அறியக்   கூடிய   ஆழ்ந்தறிவுடையோரில்   ஒருவனாவேன்” என்று   இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியுள்ளதற்கு  “” குர்ஆனின் விளக்கத்தை அறியக் கூடிய ஆழ்ந்தறிவுடையோரில்    ஒருவனாவேன் ” என்று பொருள் கொள்ள முடியுமேயல்லாமல்    “”   முத்தஷாபிஹாத்   வசனங்களின்   உண்மைப்   பொருள்களை  அறியக்கூடிய   ஆழ்ந்தறிவுடையோரில் ஒருவனாவேன் ” என்று பொருள் கொள்ள முடியாது.

இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்களின் நிலை :

அடுத்து,   முத்தஷாபிஹ் வசனங்களில்  உண்மை  பொருளை  வர்ராஸிகூன  ஃபில் இல்மி” ஆழ்ந்தறிவுடையோரும் அறிவார்கள் என்ற கருத்தை இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் கொண்டிருந்தார்கள்என்பதற்கு அவர்கள் கொடுத்துள்ள பெரிய ஆதாரம் வருமாறு:
“” திருக்குர் ஆனின் எந்த ஒரு வசனமும்  எங்கே இறங்கியது என்று நான் அறிவேன்; எந்த ஒரு வசனமும் என்ன காரணத்திற்காக இறங்கியது என்பதையும் நிச்சயமாக நான் அறிவேன்” என்று இப்னு மஸ்ஊத் (ரழி) கூறியுள்ளனர். இந்தச் செய்தி புகாரீ, முஸ்லிம், நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது ” (அல்ஜன்னத் அக்’ 88 பக்கம்42)

இந்த   ஹதீஸை எடுத்து எழுதி சொந்த விளக்கங்கள் பல கொடுத்து தங்கள் வாதத்தை நியாயப்படுத்தியுள்ளனர். அவர்கள் எதைச் சொன்னாலும்   அதனை    அப்படியே  ஏற்றுக் கொள்ளும் ஒரு கூட்டம் இருக்கும் போது ஏன் சொல்லமாட்டார்கள்? உதாரணமாக, 96ம்அத்தியாயம் எங்கே இறங்கியது?   என்ன   காரணத்திற்காக   இறங்கியது?   என்பதை  இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்கள் நன்கு அறிந்திருப்பார்கள் என்பதில் இரண்டு கருத்து இருக்க முடியாது. அப்படியானால் 96வது அத்தியாயத்தில் இரண்டாவது வசனத்தில் வரும்   “”அல்க்”   என்ற   பதத்திற்குரிய உண்மைப் பொருளை இப்னு மஸ்ஊத் (ரழி)   அவர்கள்   அறிந்திருந்தார்களா?   நிச்சயமாக “”அலக்” என்பதற்கு இரத்தக்கட்டி  என்ற   விளக்கத்தையே   தெரிந்திருப்பார்கள். உண்மை நிலை என்ன? “”அலக்” என்ற பதத்தின் உண்மைப்    பொருளை    அல்லாஹ்வையன்றி   அல்லாஹ்வின்   ரஸுலும்   கூட   அறிய   மாட்டார்கள்   என்பதேயாகும்.   ஒரு முத்தஷாபிஹாத்   பதத்தின்  நிலை இதுவென்றால் முத்தஷாபிஹ் வசனங்களில் நிலை பற்றி என்ன சொல்ல முடியும்? வி­யம்      இவ்வளவு   தெள்ளத்   தெளிவாக    இருக்க   இவர்கள்  ஏன்  இப்படி தடுமாறும்கிறார்கள்? இன்னும் பாருங்கள் அலிஃப்லாம்மீம், அலிஃப்லாமரா, காஃப்ஹாயா அய்ன்சாத்,   யாஸீன்,   நூன்  ஸாத் இப்படித் தொடங்கும் அத்தியாயங்கள் எங்கே இறங்கின என்ன காரணத்திற்காக   இறங்கின    என்பதை   இப்னு   மஸ்ஊத் (ரழி) அவர்கள் நிச்சயமாக அறிந்திருப்பார்கள். எனவே அவர்களுக்கு இவற்றின்    உண்மைப்   பொருள்   தெரியும்    என்று   சொல்ல    வருகிறார்களா? அப்படி அவர்களின் சொல்லுவதைக் கேட்கும் கூட்டத்திற்காவது   சுய   சிந்தனை வேண்டாமா? வரட்டு கெளரவத்திற்காக இப்படி விண்வாதம் புரிகிறார்கள் என்பதற்கு இதை விட ஆதாரம் வேண்டுமா?

ஆக   இப்னு அப்பாஸ், இப்னு மஸ்ஊத் (ரழி?ம்) ஆகிய இரு நபித்தோழர்களும் 3:7 வசனத்தில் இல்லல்லாஹ்வுடன் வர்ராஸிகூனஃபில்   இல்மியையும்   சேர்த்து   ஓத   வேண்டும் என்ற கருத்தில் இருந்தார்கள் என்று சொல்லுவது ஹிமாலயத் தவறு எந்த அளவு பெரிய   தவறு   என்றால்,   இப்னு   அப்பாஸ்   (ரழி) அவர்கள் “” நபி (ஸல்) அவர்கள்   அல்லாஹ்வை நேரில் தனது புறக்கண்ணால் பார்த்தார்கள்” என்று  சொன்னதாகத் தவறாகச் சொல்லுவதைவிட  அதே   இப்னு   அப்பாஸ்  (ரழி)   அவர்கள் “” நபி(ஸல்) அவர்கள் ரமழான் இரவில் 20+3 ரகா அத்து தொழுதார்கள்” என்று   சொன்னதாகத்   தவறாகச்   சொல்லுவதை   விட   உமர் (ரழி) அவர்கள் ரமழான் இரவில் 20+3 ரகா அத்து தொழுதார்கள்  என்றோ, தொழ வைக்கச் சொன்னார்கள் என்றோ தவறானச் சொல்லுவதைவிடபெரிய தவறாகும்.   ஆனால்   இந்த   வி­யங்களில் உண்மையைப் புரிந்து கொண்டவர்கள் 3:7 வசனத்தின் உண்மை நிலையைப்புரிய முடியாமலா இருக்கிறார்கள். புரியாமல் இல்லை, சொன்னதை மாற்றிச் சொன்னால் தங்கள் கெளரவம் போய்விடுமே என்றுவரட்டு   கெளரவம்   பார்க்கிறார்கள்   என்பதே   உண்மையாகும்.   நபித்தோழர்களைச்   சம்பந்தப்படுத்தி   துணிந்து பொய் கூறும் முகல்லிது மவ்லவிகளுக்கிருக்கும் துணிச்சல் இவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது தான் நமக்கு ஆச்சிரியத்தைத்   தருகிறது. இந்த இரு நபித்தோழர்கள்  வி­யத்தில்   தவறான   செய்திகளை   மக்களுக்குக்   கொடுத்துவிட்டு   அவர்கள்    இருவரும்   காதியானிகளாக இருக்கவில்லை  என்று நையாண்டி செய்திருப்பது தான் இதில் இன்னும் பெரிய வேடிக்கையாக இருக்கிறது.

ஆக,    நபித்தோழர்களிடையே   3:7   வசனம்  பற்றிய மாறுபட்ட கருத்துக்கள் இருக்கவில்லை. அவர்கள் அனைவரும் ஏகோபித்து “”முத்தஷாபிஹாத் வசனங்களில் உண்மைப்   பொருளை   அல்லாஹ்வையன்றி   வேறு   எவரும் அறியார் ”என்ற கருத்திலேயே இருந்தனர் என்பது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. அதாவது 3:7 முஹ்க்கம்வசனத்தில்    இரண்டு முரண்பட்ட கருத்துக்கள் பெற முடியும் என்ற தவறான கருத்தில் நபித்தோழர்களில் எவரும் இருக்கவில்லை. திட்டமான, தெளிவான   ஒரே ஒரு கருத்தையே பெற முடியும் என்று நபித்தோழர்கள் அனைவரும் ஏகோபித்த முடிவில் இருந்துள்ளனர். பின்னால் வந்தவர்கள்   அவர்கள்  பெயரால் அப்படி கற்பனை செய்துள்ளனர் என்பதே உண்மையாகும். அதனையும்விரிவாகவே அலசுவோம்.( இன்ஷா அல்லாஹ் தொடரும்)

 

*********************************************

ஐயமும், தெளிவும்

ஐயம்: ஒருவரை பலர் “”அவ்லியா” என்று கூறுவதால் அவர் உண்மையான அவ்லியாவாகிவிட முடியுமா? உண்மையில் “அவ்லியா”என்போர் எத்தகையோர் என்பதை குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் விளக்குக! எம். ஏ. அபூதாஹிர், திண்டுக்கல்.

தெளிவு : ஒருவரை பலர் “”அவ்லியா” என்று கூறிவிடுவதால், எவ்வாறு    அவர்    உண்மையான   அவ்லியாவாகிவிட முடியாதோ, அவ்வாறே ஒருவரை எவரும் “”அவ்லியா ” என்று கூறாமலிருப்பதால் அவர் “”அவ்லியா” அல்லர் என்றும் ஆகிவிட மாட்டார். ஒருவர் அவ்லியா வாகுவதற்கு பலர் அவரை “”அவ்லியா ” என்று கூறவேண்டும் என்பது ­ர்த்து அல்ல.

அவ்லியாவுக்கு இது தான் அளவுகோல் என்பதை அல்குர்ஆனும், ஹதீஸூம் பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றன.

அறிந்து கொள்ளுங்கள்:   அல்லாஹ்வின்   நேசர்களுக்கு   எவ்வித   அச்சமில்லை    அவர்கள்   துக்கிக்கவுமாட்டார்கள். அவர்கள் (இறைவன் மீது) விசுவாசம் கொண்டு “”தக்வா” ?இறை உணர்வு இறை அச்சம் கொண்டவர்களாகு இருப்பார்கள். (10:62)

மேற்காணும் வசனத்தில் ஈமானும், தக்வாவும்(இறை  நம்பிக்கையும், இறை உணர்வும்) உள்ளவர்கள் தான், அவ்லியாக்கள்?இறை நேசர்கள் ஆவர் என்பது மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

ஒருவர் “”தக்வா” இறையச்சம், இறையுணர்வு மிக்கவர் என்பதை எவராலும் எளிதில் கண்டுகொள்ள முடியும் என்பதை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் “”தக்வா? இறை உணர்வு, இறையச்சம் என்பது இங்கே   தான்   இருக்கிறது ” என்று தமது நெஞ்சின் பக்கம் மும்முறை சமிக்கை செய்து கூறினார்கள். (அபூஹுரைரா (ரழி), முஸ்லிம்)

“”நிச்சயமாக அல்லாஹ்தான் உள்ளங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன் ”  (31:23)

ஆகவே மேற்காணும் ஆதாரங்களிலிருந்து ஒருவர் அவ்லியாக்களில் உள்ளவர் தான் என்பதை திட்டவட்டமாக அல்லாஹ் மட்டுமேஅறிவான் என்பது  ஊர்ஜிதமாகிறது.

மக்கள்   தன்னிச்சையாக சிலரை அவ்லியாக்கள் என்று சொல்லிக் கொண்டு அவர்களின்  கப்ருகளில் மார்க்கத்திற்குப் புறம்பான காரியங்களைச் செய்து கொண்டிருப்பதெல்லாம் வெறும் பித்தலாட்டமே அன்றி சத்திய இஸ்லாத்துக்கு உடன்பாடானவை அல்ல.

ஐயம்: அவ்லியாக்கள் எல்லாம் வெளி உலகத்துக்குக்தான் இறந்தவர்கள். உண்மையில் அவர்கள் கப்ருக்குள் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்    என்று   கூறுவது   உண்மையா?   கப்ரில் நபி(ஸல்) அவர்களின் நிலை என்ன? பி. எம். முஹம்மது கவ்ஸ், ராயப்போட்டை, சென்னை

தெளிவு : நபிமார்களோ, அல்லது அவ்லியாக்களோ   மரணித்துவிட்டார்கள் என்று கூறப்பட்டால், அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பது தான் பொருள். அவர்கள் மரணித்த பிறகும் உயிருடன் இருக்கிறார்கள் என்று சொன்னால் அவர்களைக் கப்ரில் அடக்கம் செய்தவர்கள் அனைவரும் உயிருடன் இருந்த    ஒருவரை   பூமிக்குள்   புதைத்து  விட்டதோர்   கொலைக்குற்றத்தைத்தாம்   ஏற்க   வேண்டியநிலை ஏற்படும்.

மேலும்,    இத்தகையோரின்   சொத்துகளுக்கு   யாரும்  பங்குதாரராகவும் வர முடியாது. இவர்களின் மனைவிகள் “”இத்தா” இருக்க வேண்டிய அவசியமுமில்லை என்று இஸ்லாம் தெளிவுபடுத்தியிருக்கும்.

ஆகவே, மனித இனத்தில் மாபெரும் பதவிகளையுடைய நபிமார்கள் ­ஹீத்மார்கள், அவ்லியாக்கள் ஆகியோர் மரணித்துவிட்டால்அவர்கள் மரணித்து விட்டார்கள் என்று வைத்துத்தான்   அவர்களை   கழுவிக்   குளிப்பாட்டி,   கபன்   இட்டு, ஜனாஸா தொழவைத்து அடக்கம் செய்தாக வேண்டும் என்பதை முஸ்லிம்களின் மீது இஸ்லாம் கடமையாக்கியுள்ளது.

ஆனால், “” அல்லாஹ்வுடைய பாதையில் (யுத்தம் புரிந்து எதிரிகளால்) கொல்லப்பட்டவர்களை  இறந்தவர்கள் என்று கூறாதீர்கள். அவ்வாறன்று, (அவர்கள்) உயிரோடு இருக்கிறார்கள். எனினும் (இதனை) நீங்கள் உணர்ந்து    கொள்ளமாட்டீர்கள் (2:154)என்று ­ஹீதுகளைக் குறித்து மட்டும் குறிப்பாகக் கூறப்பட்டிருக்கிறது.

“” நிச்சயமாக ஷிஹதாக்கள்?அல்லாஹ்வின் பாதையில்   கொல்லப்பட்டவர்களின்   உயிர்   பறவைகளின் உடல் கூட்டில் விடப்பட்டு, சுவர்க்கத்தில்    தமது    விருப்பத்திற்கேற்ப     உலாவிக்    கொண்டிருக்கின்றன    என்று    நபி  (ஸல்)   அவர்கள்   கூறியுள்ளார்கள். (அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரழி), முஸ்லிம்)

உங்கள்    சகோதரர்கள்   உஹதுப்   போரில் கொல்லப்பட்டபோது அல்லாஹ் அவர்களின் உயிர்களை பச்சைப் பறவையின் உடல்கூட்டில் அமைத்து விட்டான்.   அவை   சுவர்க்கத்துடைய   ஆறுகளில்  தண்ணீர்   அருத்திக் கொண்டும், சுவர்க்கத்தின் (மரங்களின்)பழங்களை புசித்துக் கொண்டுமிருக்கின்றன.(இப்னு அப்பாஸ் (ரழி), அஹ்மத்)

­ஹீத்களைப் பற்றி குர்ஆனுடைய மேற்காணும்வசனம் “”அவர்களை மரணித்து விட்டார்கள் என்று நீங்கள் கூறாதீர்கள் ” என்று கூறிவிட்டு,   “”எனினும்   அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் ” ஆனால் (இதனை) நீங்கள் உணர்ந்து கொள்ள முடியாது என்றும் கூறுகிறது ஆகவே நாம் கற்பனை   செய்வது   போல் அவர்கள் தமது கப்ருகளில் உயிராக இருந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தவறாகும்.   ஏனெனில்   அவர்களின்   நிலைபற்றி   நபி(ஸல்) அவர்கள்   அல்லாஹ்வின்   அறிவிப்பின்படி சுவர்க்கத்தில் பறவை அமைப்பில் அவர்கள் உலாவிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறியிருப்பதால் இதுவே உண்மை என்பது ஊர்ஜிதமாகிறது.

ஆகவே சுவர்க்கத்தில் பறவை அமைப்பில் உலாவிக்கொண்டிருப்பதானது போரில்கொல்லப்பட்டவர்களுக்குமட்டுமின்றிபொதுவாக ஏனைய மூமின்காளகிய நல்லடியார்கள் அனைவருக்கும் அந்த வாய்ப்பு உண்டு என்பதை பின்வரும் ஹதீஸ்தெளிவுபடுத்துகிறது.

“”மூமின்களின்     உயிர்    சுவர்க்கத்தின்   மரத்தில்( உள்ளவற்றைச்) சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பறவையின் அமைப்பில் இருந்து கொண்டிருக்கும். பின்னர் அல்லாஹ் அவரை    எழுப்பும்  போது அவருடைய உடலில் அதை மீண்டும் கொண்டு வந்து சேர்ப்பான்”என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.  (கஃபுபின் மாலிக் (ரழி), அஹ்மத்)

கப்ரில் நபி(ஸல்) அவர்களின் நிலை :

“”ஜூம்   ஆவின்    தினத்தில்    என்மீது   நீங்கள்   அதிகமாக ஸலவாத் தோதுங்கள். அது எனக்கு எடுத்துக் காட்டடுப்படுகிறது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, ஒருவர் “”அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் கப்ரில் மக்கி மடிந்தவர்களாயிருக்கும் போது எங்களின் ஸலவாத்தை உங்களுக்கு எவ்வாறு  எடுத்துக்   காட்டப்படும்?” என்று கேட்டார் அதற்கு நபி(ஸல்) அவர்கள் “”நிச்சயமாக அல்லாஹ், நபிமார்களின் உடல்களை பூமி தின்பதை   விட்டும்   தடை   செய்துள்ளான் ”  என்றார்கள் (­த்தாத்பின் அவ்ஸ் (ரழி), அபூதாவூத், இப்னு மாஜ்ஜா, நஸயீ தாரமீ, அஹ்மத், இப்னுஹிப்பான்)

“”நிச்சயமாக பூமியில் வந்து கொண்டிருக்கும் சில மலக்குகள் அல்லாஹ்வுக்கு உள்ளனர். அவர்கள் எனது உம்மத்துகளிடமிருந்து எனக்கு ஸலாத்தைச் சேர்ப்பித்துக் கொண்டிருப்பார்கள் என்று   நபி(ஸல்)    அவர்கள் கூறினார்கள். (இப்னு மஸ்ஊத் (ரழி), நஸயீ, தாரமீ)

ஆகவே மேற்காணும் அறிவிப்புகளின்   வாயிலாக   ஏனைய    நபிமார்களைப் போல் நபி(ஸல்) அவர்களின் புனித மேனியையும் மண் தின்பதை விட்டும் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதை அறிகிறோம்.

(இப் பாதுகாப்பு நபிமார்களின் உடலுக்கு   உண்டு   என்பதாகத் தான் ஹதீஸில் வந்துள்ளதே தவிர, சிலர் கூறுவதுபோல் குர்ஆன் மனனம் செய்துள்ள ஹாபிழ்கள் மற்றும்   இறைநேசச்  செல்வர்களுக்கும் உண்டு என்பதற்கான சரியான ஆதாரம் ஹதீஸ்களில் கிடையாது. அவ்வாறு கூறப்படுபவை அனைத்தும் பலகீனமானவையும், இட்டுக்கட்டப்பட்டவையுமாகவே உள்ளன.)

அடுத்து நாம் நபி(ஸல்) அவர்களுக்குக்    கூறும்   ஸலாமும்,   அவர்கள்   மீது ஓதும் ஸலாவத்தும் தமக்குச் சேர்ப்பிக்கப்படுவதாக அவர்கள்    கூறி  இருப்பதைக் காணுகிறோம். அவர்களின் பால் சேர்ப்பிக்கப்படும்    ஸலவாத்தையும்,    ஸலாமையும்    எவ்வாறு அவர்களால் உணர்ந்து கொள்ள முடிகிறது என்பதைப் பின்வரும் அறிவிப்பு விளக்குகிறது.

“”உங்களில்    ஒருவர்   எனக்கு   ஸலாம்  கூறினால்,  அல்லாஹ் எனது உயிரை என்னில் மீண்டும் கொண்டு வந்து சேர்க்கிறான். அதன்    பயனாக    அவருக்கு   பதில்    ஸலாம்   அளிக்கிறேன்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.(அபூஹுரைரா(ரழி), அபூதாவூத், பைஹகீ. அஹ்மத்)

இவ்வறிவிப்பு  நபி   (ஸல்)   அவர்களுக்கு   ஸலாம் கூறும்போது அவர்கள் மீது ஸலாவத்தோதும் போதும், அவற்றை அவர்களுக்குசேர்ப்பிக்கக் கூடிய அந்த சந்தர்ப்பத்தில் மட்டும், அவர்களின் உயிரை அவர்களுக்கு மீண்டும் கொண்டு வரப்படுகிறது என்பதானதுஅவர்கள் எப்போதும் கப்ரில் ஹயாத்தாக ?உயிரோடு இல்லை என்பதை மிகத் தெளிவாக காட்டுகிறது.

இவ்வறிவிப்புக்கு மாறாக வந்துள்ள சில அறிவிப்புகளின் நிலை பின்வருமாறு :

“”நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி   தின்பதை   விட்டும்   தடை   செய்துள்ளான். ஆகவே அல்லாஹ்வின் நபி உயிருடையவராக,   ரிஜ்கு   அளிக்கப்பட்டுச் கொண்டிருப்பார்”   என்று   நபி (ஸல்)   அவர்கள்   கூறியிருப்பதாக   அபூதர்தாஃ(ரழி) அவர்களின் மூல்ம ஓர் அறிவிப்பு இப்னு மாஜ்ஜாவில் காணப்படுகிறது.

இதன் அறிவிப்பாளராகிய    அபூதர்தாஃ(ரழி)   அவர்களிடமிருந்து   இவ்வறிவிப்பைத்   தாம் கேட்டிருப்பதாகக் கூறும் “உபாதாபின் நுஸையி’ என்பவர்  அவர்களை   சந்தித்திருப்பதற்கு   வாய்ப்பில்லை.   இவ்வாறே   இதை    உபாதாவிடமிருந்து கேட்டதாகக் கூறும் “”ஜைதுபின் அய்மன்” என்பவர் உபாதாவை சந்தித்திருப்பதற்கு வாய்ப்பில்லை.

ஆகவே இதன் அறிவிப்பாளர் தொடரில் இவ்வாறு இரு இடங்களில் தொடர் இழந்து காணப்படுவதால் இத்தகைய அறிவிப்புகளை முன்கதிஃ தொடரிழந்தவை எனப்படும். இத்தகையவை ஏற்பக்குரியவை அல்ல.

எனவே நபிமார்கள்   உயிருடையவர்களாகவும், ரிஜ்கு அளிக்கப்பட்டவர்களாவும் கப்ரில் இருந்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு சரியான சான்று எதுவுமில்லை என்பதை அறிகிறோம். இவ்வாறே நபி மார்கள் மலக்குகளின் வாயிலாக தமக்கு சேர்ப்பிக்கப்படும் ஸலவாத், ஸலாம் முதலியவற்றைத் தவிர மற்றவர் பேசுவதையும் செவியுறுகிறார்கள் என்பதற்கும் சரியான சான்று எதுவுமில்லை. அதன் விபரம் பின் வருமாறு:

“”எனது கப்ருக்கு அருகில் ஒருவர் ஸலவாத் தோதினால் அதை நான் செவியுறுகிறேன். ஒருவர் தூரத்திலிருந்து ஸலவாத்தோதினால் அதற்காக நியமிக்கப்பட்டுள்ள மலக்கு அதை எனக்குச் சேர்ப்பிப்பார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதாக அறிவிக்கப்படும் அறிவிப்பு பற்றி இது மவ்ழூஃ ?   இட்டுக்   கட்டப்பட்டது, இதற்குச்   சரியான   சான்று எதுவுமில்லை என்று ஹதீஸ் கலாவல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஆகவே, நபி(ஸல்) அவர்களுக்கு கூறப்படும் ஸலாத்தையும், அவர்கள் மீது ஓதப்படும்   ஸலவாத்தையும் மலக்குகளின் வாயிலாக சேர்ப்பிக்கப்படுகிறது. அல்லது எடுத்துக் காட்டப்படுகிறது என்ற பொருளுள்ள வாசகமே ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளது. மாறாக அவற்றை நபி (ஸல்) அவர்கள் செவியுறுகிறார்கள் என்ற வகையில் ஒரு வாசகம் கூட ஸஹீஹான ஹதீஸ்களில் காணமுடியாது.

ஐயம் : ஒரு தாய் தன் பிள்ளைக்கு எத்தனை  ஆண்டுகள்   தாய்பாலூட்ட   வேண்டும்   என்பதற்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் பதில் தருக: எம். அஹ்மத்கான், திருநெல்வேலி

தெளிவு: தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு (அவை பிறந்ததில் இருந்து) இரண்டு வருடங்கள் வரைபூரணமாக பாலூட்டுவார்கள்.  (2:233)

தமது தாய் தந்தை (க்கு நன்றி செய்வது) பற்றி மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்துள்ளோம். அவருடைய தாய் துன்பத்தின்      மேல் துன்பத்தை அனுபவித்து   (கர்ப்பத்தில்) அவனைச் சுமந்தாள். அவன் (பிறந்த) பிறகும் இரண்டு வருடங்களுக்குப் பின்னரே அவனுக்கு பால்  மறக்கடித்தாள் (31:14)

நபி(ஸல்) அவர்களின் இப்றாஹீம்   எனும்   மகன்   மரணமான   போது, நபி(ஸல்) அவர்கள் “”எனது மகன் பால்குடிப் பருவத்தில்     மரணமாகி விட்டார். நிச்சயமாக அவருக்கு சுவர்க்கத்தில் பாலூட்டு பவர் இருக்கிறார் என்றார்கள்” (பர்ராஃபின் ஆஜிப்(ரழி), அஹ்மத்)

நபி (ஸல்) அவர்களின் மகன் இப்றாஹீம் தமது ஒருவருடம் பத்து   மாதங்கள் பால்குடிப் பருவத்தில் மரணமடைந்துள்ளார். (ஷீஃபா (ரழி), புகாரீ)

ஆகவே, மேற்காணும் ஆதாரங்களின் அடிப்படையில் 2 வருடங்கள் தாய்ப்பால் ஊட்ட வேண்டும் என்பதை அறிகிறோம்.

ஐயம் : மண   வாழ்க்கைக்கு   உரியவயதை அடைந்துள்ள மகனையோ மகளையோ அவர்களின் பெற்றோர் முத்தமிடலாமா? இது பற்றி ஹதீஸ் என்ன கூறுகிறது?  தளபதி அப்துல் மாலிக், நிரவி,

தெளிவு : “”நடை,   உடை,   பாவனை,   பேச்சு   வார்த்தை   அனைத்திலும்   நபி(ஸல்) அவர்களுக்கு ஒத்தவர்களாக பாத்திமா (ரழி) அவர்களைவிட வேறு யாரையும் நான் கண்டவதில்லை. நபி(ஸல்) அவர்களிடத்தில்  பாத்திமா(ரழி) அவர்கள் வந்தால் அவர்களின் பக்கம் தாம் எழுந்து சென்ற அவர்களின் கையைப்  பிடித்து   அவர்களை   முத்தமிட்டு   தமது   இருப்பிடத்தில் அமரச் செய்வார்கள். இவ்வாறே நபி(ஸல்) அவர்கள் பாத்திமாவிடம் சென்றால், அவர்களின் பக்கம் பாத்திமா (ரழி) எழுந்து சென்று அவர்களின் கையைப்பிடித்து  அவர்களை முத்தமிட்டு  தமது இருப்பிடத்தில் அவர்களை அமரச் செய்வார்கள்” என்று ஆயிஷா (ரழி) அறிவித்துள்ளார்கள்.(அபூதாவூத்)

இவ்வறிவிப்பில் பெற்றோர் தமது வயது வந்த மக்களை முத்தமிடுவது ஆகுமானதாயிருப்பது    போல் வயது வந்த மக்களும் தமது பெற்றோரை முத்தமிடுவது ஆகுமானது என்பதை அறிகிறோம்.

ஐயம்: “”அப்துல் முத்தலிப்” என்பதாக பெயர் வைப்பது ஆகுமா?  ஆர். ஏ. அஜீஸ், கொல்லபுரம்.

தெளிவு : “”அப்து” என்றால் அடியான் என்பது பொருள். நாம் அனைவரும் அல்லாஹ்வின் அடியார்களாக இருக்கிறோமே அன்றி வேறு யாருக்கும் அறவே அடியார்களாக இல்லை. எனவே “”முத்தலிப்” எனும் பெயர் அல்லாஹ்வின் திருநாமங்களில் உள்ளதல்ல. “”முத்தலிப்” என்றால் “”பிறரிடத்தில் மீண்டும் மீண்டும் கெஞ்சிக்  கேட்டுக்   கொண்டிருப்பவன் ”   என்பது    பொருள். அல்லாஹ்வோ (ஸமத்) யாரிடத்திலும்    எத்தேவையும்   அற்றவனாகவும்,   (வஹ்ஹாபு) கொடைவள்ளலாகவும் இருக்கிறான் “”அப்துல் வஹ்ஹாபு” அப்துர் ரஹ்மான் (கொடை வள்ளலின் அடியான்;   அருளாளனின்   அடியான்)   என்று  அழகாக நமது பிள்ளைகளுக்குப் பெயரிட வேண்டியிருக்க, போயும் போயும்  “”பிறரிடத்தில்   மீண்டும்  மீண்டும்   கெஞ்சுக்   கேட்டுக்   கொண்டிருப்பவனின் அடியான்” என்றா பெயரிடுவது?

அப்துல்    முத்தலிப்    என்ற   பெயர்   நபி (ஸல்) அவர்களின் பாட்டனார் பெயரால் இருப்பதால், அதுவும் இஸ்லாமியப் பெயர் என்ற கருத்தில்  சிலர் பெயரிடுகின்றனர். நபி(ஸல்) அவர்கள் தமது காலத்திலேயே இத்தகைய தவறான பெயர்களை மாற்றியுள்ளார்கள். பிரபலமான நபித்தோழர் அபூஹுரைரா(ரழி)   அவர்களின்   முந்தையப்   பெயர் அப்துஷ்­ம்ஸ்(சூரியனின் அடியான்) இதனை நபி(ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மான்  (அருளாளனின் அடிமை) என்று மாற்றிப் பெயரிட்டார்கள். அனைவரும் அல்லாஹ் ஒருவனுக்குமட்டுமே    அடியார்களாயிருக்க வேண்டுமே   அன்றி   அவனால்   படைக்கப்பட்ட எந்த நபருக்கும் அல்லது எந்தப் பொருளுக்கும் அடியார்களாக இருக்கக்கூடாது என்பதைத் தெளிவு படுத்தியுள்ளார்கள்.

“”உங்கள் பெயர்களில் அல்லாஹ்விடம் மிகவும் விரும்பத்தக்க   பெயர்கள் அப்துல்லாஹ், அப்துர் ரஹ்மான் ஆகியவையே என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு உமர் (ரழி), முஸ்லிம்)

இவ்வறிவிப்பின் அடிப்படையில் அப்து முஹம்மத் (முஹம்மதின் அடிமை) முஹ்யுத்தீன் அடிமை, ந Vகூர் அடிமை ஏர்வாடி அடிமை போன்ற பெயர்கள் அனைத்தும் இஸ்லாத்திற்கு முற்றும் புறம்பானவையேயாகும்.

ஐயம் : ஸஃதுபின் முஆத்(ரழி) அவர்களின் ஜனாஸா அடக்கம் செய்யும்போது கப்ரு நெருக்கியதாக ஒரு செய்தி “”அஹ்மத்” எனும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் ஸனது சரியானதா? எம். அஹ்மத் இப்றாஹிம், புளியங்குடி.

திருப்பார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா(ரழி)    அவர்களின்    மூலம்   அறிவிக்கப்பட்டு,   முஸ்னத் அஹ்மதில் பதிவாகியுள்ள இவ்வறிவுப்புடைய ஸனது (அறிவிப்பாளர் தொடர்) பலமானது தான் ஆனால் ஜாபிர் (ரழி)   அவர்களின்   வாயிலாக முஸ்னத் அஹ்மத் பாகம்3, பக்கம் 360, 377 ஆகியவற்றில் பதிவாகியுள்ள பின்வரும் அறிவிப்பு பலகீனமானதாகும்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஸஃதுபின் முஆத்(ரழி) அவர்களிடம் அவர்களின் மரணத்தின் போது சென்றிருந்தோம். நபி(ஸல்)அவர்கள் அவர்களுக்கு (ஜனாஸா) தொழ வைத்து அவர்களை கப்ரில் வைத்து மண்ணைத் தள்ளப்பட்டபோது, நபி(ஸல்) அவர்கள் தஸ்பீஹ் செய்தார்கள். நாங்களும்   நெடுநேரம்   தஸ்பீஹ் செய்தோம். பிறகு தக்பீர் கூறினார்கள், நாங்களும் தக்பீர் கூறினோம். அப்போது “” அல்லாஹ்வின் தூதரே!   தாங்கள்   ஏன்   தஸ்பீஹும் தக்பீரும் கூறினீர்கள்? ” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் “”இந்த நல்லடியாரை அவரது கப்ரு நெருக்கிற்று ஆகவே அல்லாஹ் அவரை அதிலிருந்து விடுவித்தான் ” என்று கூறினார்கள்.

இவ்வறிவிப்பில் இடம் பெற்றுள்ள “”மஹ்மூதுபின் அப்திர் ரஹ்மான்பின் அம்ரிப்னில் ஜமூஹீ” என்பவர் ஹதீஸ் கலையினரிடத்தில் அறிமுகமில்லாதவர் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் தமது “”தஃஜீல் ” எனும் நூலில் கூறியுள்ளார்கள்.

ஐயம் : பெண்கள் வெள்ளிக்  கிழமை   ஜூம்ஆ தொழுகையில் கலந்து கொண்டால், மீண்டும் ளுஹ்ர் 4 ரகாஅத்து பர்ளு தனியாகத்தொழ   வேண்டுமா?   இங்கு   இரண்டு ஆலிம்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது.  பெண்களுக்கு ஜூம்ஆ கடமை இல்லை என்பதால்அவர்கள்  ஜூம்ஆ   தொழுத   பிறகு   ளுஹ்ரைத்    தொழத்தான்   வேண்டும்    என்று    ஒருவரும், மற்றொருவர் ஜூம்ஆ தொழுகை ளுஹ்ருக்குச் சமமாக இருப்பதால் மீண்டும் அவர்கள் எதையும் தொழ வேண்டியதில்லை என்றும் கூறுகிறார். குர்ஆன் ஹதீஸ்படி எது சரியானது?  பு.க்ஷி. முஹம்மது அலி சிங்கப்பூர்

 தெளிவு : இரண்டாம் நபர்    கூறுவதே   சரியானதாகும்.   ஏனெனில்   நபி (ஸல்)   அவர்கள் வெள்ளிக் கிழமை பள்ளியில் “”ஜூம்ஆ” தொழுதவர் எவரையும் நோக்கிக் நீர் ளுஹ்ரையும் தொழுவதாக வேண்டும்   என்று   அறவே கூறியது கிடையாது. ஆகவே ஜூம்ஆ தொழுதவர் ஆணாகவோ அல்லது பெண்ணுகவோ இருப்பினும் மீண்டும்   அவர் ளுஹ்ர் தொழ வேண்டும் என்பதற்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் எவ்வித ஆதாரமுமில்லை.

——————————————————————————————————————-

விமர்சனங்கள்! விளக்கங்கள்!

“”குர்ஆன் ஹதீஸ்” அடிப்படையில் செயல்பட பெரியபெரிய யுனிவர் ஸிடிகளேதயக்கம் காட்டுகின்றன. உதாரணமாக “”கெய்ரோ”வில் உள்ள அல்அஸ்ஹர் பல்கலைக்கழகம் “”இமாம்களை தக்லீத் செய்வது   இக்கால    கட்டத்தில்     இன்றியமையாதது”? என பத்வா வெளியிட்டுள்ளது. பல பேராசிரியர்கள் (அரபி வல்லுனர்கள்) சேர்ந்து எடுத்து   இம்முடிவை  தவறானது என நீங்கள் கூற முடியுமா?(கெய்ரோ பல்கலைக்கழகமே இம்முடிவுக்கு வந்து விட்ட பின்பு தமிழ்நாட்டு மதரஸாக்களை குற்றம் சொல்வதில் ஏதும் பயனுண்டா?) பி.அபில் ஹஸன்     ஏ. பUர் அஹமத், சிங்கப்பூர்

“” அல்  அஸ்ஹர்”   பல்கலைக்கழகத்திற்கோ   அல்லது   வேறு   பல்கலைக்கழகங்களுக்கோ, அரபி மதரஸாக்களுக்கோ, மார்க்க வி­யத்தில் சொந்த அபிப்பிராயம் சொல்லும் அதிகாரம் இல்லை   என்பதைத் தெளிவாக விளங்கிக் கொண்டால் இந்த  சந்தேகம் உங்களுக்கு   எழாது    மார்க்க  வி­யங்களில்    பூரண    அதிகாரம்    பெற்றவன்    அல்லாஹ்    மட்டுமே   என்பதற்கு “”மார்க்கம் அல்லாஹ்வுக்கே சொந்தம்” (39:3) அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணையாளர்கள் அவர்களுக்கு இருக்கிறன்றனரா?” (42:21) என்ற இறை வசனங்கள் தெளிவான   ஆதாரங்களாக   இருக்கின்றன.  அதிகாரம்   பெற்ற  அல்லாஹ்(ஜல்), “”என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நேர்வழி வரும்போது,   யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமுத் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்; அன்றி யார் (எனது நேர்வழியை) மறுத்து (மனித  அபிப்பிராயங்களை ஏற்று)   நம்   வசனங்களைப்    பொய்ப்பிக்க     முற்படுகிறார்களோ   அவர்கள் நரகவாசிகள். அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்”(2:38, 39) என்று தெளிவாக எச்சரித்துள்ளான். மேலும் “”(மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு  இறக்கப்பட்டதைப்    பின்பற்றுங்கள்    அவனையன்றி    (வேறெவரையும்)    பாதுகாவலர் (களாக்கி அவர்)களைப் பின்பற்றாதீர்கள்.   நீங்கள்   சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள்” (7:3) என்ற வசனத்தில் பச்சைப் பிள்ளைக்குப்பாடம் சொல்லிக்கொடுப்பது    போல்    தெளிவுபடுத்தி   இருக்கிறான்.   அல்லாஹ் (ஜல்) வுடைய எச்சரிக்கைப் போதாதென்று நபி(ஸல்) அவர்களும் தெளிவாக எச்சரித்துள்ளார்கள்.

“”வார்த்தையில்    சிறந்தது    அல்லாஹ்வின்    வேதம்   நடைமுறையில்    சிறந்தது முகம்மதின் நடைமுறை காரியங்களில் கெட்டது (நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் இல்லாத) பித் அத்துகள் பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகள் வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும்”. (இப்னு மஸ்ஊத் (ரழி), புகாரீ, முஸ்லீம், ஜாபிர் (ரழி), நஸயீ)

“” உங்களிடையே    இரண்டை    விட்டுச்    சொல்லுகிறேன். அவற்றைப் பற்றிப்பிடித்திருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழி தவறவே மாட்டீர்கள் ஒன்று அல்லாஹ்வின் வேதம், மற்றது எனது வழிமுறை”. (மாலிக் இப்னு அனஸ் (ரழி), முஅத்தா)

தக்லீது     கூடாது,    குர்ஆன்,    ஹதீஸையே    பின்பற்ற   வேண்டும்    என்பதற்குத்    தெளிவான    குர்ஆன்   வசனங்களையும், ஹதீஸ்களையும் ஆதாரமாகத் தந்து நாம் கூறுகிறோம், நீங்கள்   குறிப்பிடும்   பல்கலைக்கழகங்களும்,   மதரஸாக்களும்  மனித அபிப்பிராயங்களைஎடுத்து வைத்து தக்லீதை நியாயப்படுத்துகின்றன. மனித அபிப்பிராயங்களைத் தவிர தக்லீது கூடும் என்பதற்குஆதாரமாக    ஒரு குர்ஆன்    வசனத்தையோ,    ஹதீஸையோ   அவர்களால் காட்ட முடியவில்லை. குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் திரித்தே தங்கள் கூற்றை நியாயப்படுத்துகின்றனர்.   அவற்றையும்   அந்நஜாத்தில்   தெளிவுபடுத்தி வருகிறோம். இந்நிலையில்    இவர்களின்    மனித    அபிப்பிராயங்களை   ஏற்றுச்   செயல்படுவதா?   அல்லது   அல்லாஹ்வினதும்,  அவனது ரஸுலினதும் தெளிவான எச்சரிக்கைகளை ஏற்றுச் செயல்படுவதா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் அல்லாஹ்வினதும், அவனது ரஸுலினதும் எச்சரிக்கைகளை ஏற்று, குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றுகிறவர்களே வெற்றியடைந்து   சுவர்க்கம் புகுவார்கள் என்பதை ஒரு முஸ்லிம் மறுக்க முடியுமோ?

புகாரீ, முஸ்லிம் போன்ற இமாம்களது ஸனதுகளை விட “” இப்னு ஹஜர் ” அவர்களது அபிப்பிராயம் தான் உங்களுக்கு மிக முக்கியமானதாகப் படுகிறது. இதை நீங்கள் மறுக்க முடியுமா? அதே போன்று புகாரீ, முஸ்லிம் போன்ற இமாம்களைவிட “”ஹனபி ஷாபி ” இமாம்களது     அபிப்பிராயத்திற்கு    நாங்கள்   முக்கியத்துவம்     கொடுக்கிறோம்  காரணம், இமாம் ஹனபி ஷாபி போன்றவர்கள் ஸஹாபாக்கள், தாபி ஈன்கள் காலத்தைச் சேர்ந்தவர்கள். ஒரு செயலை கண்ணாரக் கண்டு செயல்படும் மத்ஹபுடைய இமாம்கள் ஒரு செயலை கண்ணாரக் காணாமல்?விசாரித்து அறிந்து நம்பிச் செயல்படும்?ஹதீஸ்    வல்லுனர்கள்   இவர்களில் யார் உயர்வு என்பதை    சாதாரண   அறிவு   படைத்தவனும்   விளங்கிக்   கொள்வான்.  இதற்கு மேலும் மக்களைக் குழப்பாமல் “”மத்ஹபுகளை பின்பற்றுவதுதான் சரி” என்று ஒப்புக் கொள்ளுங்கள். மவ்லவி ஏ. நூர் முஹம்மது பாக்கவி, மலேசியா

மார்க்கத்திற்குப்     பூரண    சொந்தக்காரன்    அல்லாஹ்    மட்டுமே.   மனிதர்களில் யாரும் தங்கள் கருத்தைச் சொல்லி அவனது அதிகாரத்தில் தலையிட முடியாது என்பதை   ஆதாரங்களுடன்   முதல்    விமர்சனத்தில் விளக்கியுள்ளோம். நபி (ஸல்) அவர்களும் மனித    இனத்தைச்    சேர்ந்தவர்களே    என்ற    அடிப்படையில் அவர்களின் கருத்துக்கள்   அல்லாஹ்வால் கண்காணிக்கப்பட்டு அவற்றில்    சில     அல்லாஹ்வின்    அதிகாரத்தில்    தலையிடும் போது அல்லாஹ்    அவற்றைத்   திருத்தி   நபி(ஸல்) அவர்களின்கருத்துக்கள் அனைத்தும் அல்லாஹ்வின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக  அல்லாஹ் ஆக்கிவிட்டான். அதன்  படி    அல்லாஹ்வின் கலாமான குர்ஆனையும், அல்லாஹ்வின் அங்கீகாரத்தைப் பெற்ற நபி(ஸல்) அவர்களின்   நடைமுறைகளையும்    மார்க்கமாகக் கொள்வதில்    முஸ்லிம்களுக்கு    மாற்றுக்    கருத்து    இருக்க    முடியாது,    ஆனால்   நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப்பிறகு அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடும் யாருடைய கருத்தையும் அல்லாஹ் கண்காணித்துத்   திருத்தவில்லை. அல்லாஹ்வின் கண்காணிப்பில் இருந்த நபி(ஸல்) அவர்களின் கருத்துக்களே சமயங்களில் அல்லாஹ்வின்  அதிகாரத்தில்   தலையிடுபவையாக இருந்தனவென்றால், மற்றவர்களின் கருத்துக்களில் சில அல்லாஹ்வின்அதிகாரத்தில் தலையிடுபவையாக இருப்பதில் ஆச்சரியம்எதுவும் இருக்க முடியாது. அப்படியானால் அப்படிப்பட்ட கருத்துக்களை நாம் எப்படி அடையாளம் கண்டு அவற்றை விட்டும் விலகிக்கொள்வது என்பது தான் தலையாயப் பிரச்சினை.

சிறிது   நிதானமாகச்   சிந்தித்தால்   குர்ஆனும், ஹதீஸ்களும் முறையாகப் பாதுகாக்கப்பட்டு விட்டன. அவையே தெளிவான உரை கற்கள் அவற்றிற்கு முரண்படும் கருத்து யாருடைய கருத்தாக இருந்தாலும் அது நிராகரிக்கப்பட வேண்டும் என்பதில் முஸ்லிம்கள்  கருத்து வேறுபட முடியாது.    இந்த    அடிப்படையில்   குர்ஆனுக்கும்,   ஹதீஸுக்கும்   முரணான   கருத்து   குலஃபாயே ரா´தீன், நபித்தோழர்கள், தாபியீன், தபவுத், தாபியீன், இமாம்கள்  இவர்கள்   யாருடைய   கருத்தாக   இருந்தாலும்   அவை நிராகரிக்கப்பட வேண்டும். முஸ்லிம்கள் இந்த முறையை கடைபிடித்தால்   மட்டுமே   மார்க்கத்தில்  மனித   அபிப்பிராயம்   நுழைந்து   மார்க்கம்    மதமாவதைக்    தடுக்க   முடியும்.   அதே   சமயம் குலஃபாயே ரா´தீன்களின் கருத்து குர்ஆன் ஹதீஸுக்கு முரணான இல்லாமல் இருக்கிறது.   ஆனால்   நமது   கருத்துக்கு   அவர்களின்   கருத்து   முரணாகத் தெரிகிறது. இந்த இடத்தில் நபி (ஸல்) அவர்களின் ஆணைப்படி நமது கருத்தை விட்டு குலஃபாயே ரா´தீன்களின் கருத்தை  எடுத்து நடக்க வேண்டும். மற்றவர்களின் கருத்து நமது கருத்துக்கு முரண்பட்டுத் தெரியும் நிலையிலும் அவர்களின் கருத்தையே எடுத்து நடக்க வேண்டும். என்பதற்கு குர்ஆக், ஹதீஸில் ஆதாரமில்லை. மேலும் இப்படிச் செயல்படுவதில் தக்லீதுடைய நிலை   ஏற்படுவதோடு   மனித   அபிப்பிராயத்தை   மார்க்கத்தில்   நுழைக்கும் பெருங்குற்றமும் ஏற்பட்டு விடுகிறது எனவே கருத்து? மனித அபிப்பிராயம் என்ற நிலையில்   குர்ஆன்,   ஹதீஸுக்கு   முரணான யாருடைய கருத்தையும் மார்க்கமாக நாங்கள் கொள்ளவில்லை.

அடுத்து கருத்துக்கும்? தகவலுக்கும் உள்ள வேறுபாட்டை 1987 ஜன?பிப்ரவரி இதழில் தெளிவாக விளக்கியுள்ளோம். கருத்து ?ஒரு மனிதனின் சொந்த அபிப்பிராயமாகும். தகவல்? பிறரிடமிருந்து அறிந்த செய்தியை எடுத்துச் சொல்வதாகும். இவை இரண்டிற்குமுள்ள வேறுபாட்டை தெளிவாகவே புரிய முடிகிறது. எனவே மார்க்கத்தின் உரைகற்கள்  குர்ஆன், ஹதீஸ் மட்டுமே என்று நாம் முன்பு விளக்கியுள்ளபடி ஒருவர் தரும் தகவல் முறையாக குர்ஆனையோ,ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையோபோய்ச்சேருகிறதா?என்றுபார்க்கிறோம். தகவல் தொடர்பு தெளிவானதாகவும், நம்பகமானதாகவும் இருந்தால் ஏற்றுக் கொள்கிறோம். சுமார் 1400 வருடங்களுக்கு முன் இடம் பெற்ற சம்பவங்களை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள இதைவிட தெளிவாக ஒரு    முறையை இதுவரை யாரும் தரவில்லை. மார்க்கத்தை உள்ளது உள்ளபடி அறிந்து கொள்ள நமக்குள்ள ஒரே வழி இது தான்.

இந்த    அடிப்படையில்   ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்குரிய தகவல்களை மரியாதைக்குரிய நான்கு இமாம்கள் ஹதீஸ்களைத் தொகுத்த இமாம்கள், பின்னால்   அவற்றை   ஒழுங்கு படுத்தி தெளிவாக்கிய இமாம்கள், ஆதாரப்பூர்வமான ஹதீஸ் தானா என்று அறிந்து கொள்ள அறிவிப்பாளர் தொடரில் இடம்  பெறுபவர்களின் விபரங்களையும், தகவல்களையும் தந்த இமாம்கள் இவர்கள் அனைவரும் தரும் தகவல்களை பரிசீலனைச் செய்து முறையாக இருந்தால் ஏற்றுக் கொள்கிறோம். அதே சமயம் அவர்கள் கூறும்கருத்துக்கள் குர்ஆன் ஹதீஸுக்கு முரணாக இருந்தாலும், தகவல்கள் முறையாக இல்லாவிட்டாலும் அவர்களில் எவ்வித பாகுபாடுமின்றி    அவற்றை   நிராகரித்து விடுகிறோம் புகாரீ, முஸ்லிம் போன்ற இமாம்களது ஸனதுகளைவிட “”இப்னு ஹஜர்” அவர்களது அபிப்பிராயம் தான்    உங்களுக்கு மிக முக்கியமானதாகப்படுகிறது ”என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது தவறாகும். “” இப்னு ஹஜர்” அவர்களின் சொந்தக் கருத்துக்கு    நாங்கள்    ஒருபோதும்   முக்கியத்துவம்   கொடுத்ததில்லை. அவர் கொடுக்கும் தகவல்களின் ஆதாரங்களைவைத்தே முடிவு செய்கிறோம். இப்னு ஹஜர் வாழ்ந்த காலகட்டம் (ஹி.773-852) பலரது நூல்களைப் பரிசீலனைச் செய்து வி­யங்களைத் தெளிவாக எடுத்து வைக்கும் ஒரு நல்ல வாய்ப்பை   அவருக்குக்   கொடுத்து.   இப்னு   ஹஜர்   குர்ஆன். ஹதீஸை    மக்கள்    தெளிவாகவிளங்கிக்    கொள்ளும்    தகவல்களைச்   சேகரம் செய்து கொடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டாரே அல்லாமல், குர்ஆன், ஹதீஸுக்கு சுயவிளக்கம் கொடுக்க முற்படவில்லை.    ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை அறிந்து கொள்ள அவரது தகவல்கள் பெரிதும் உதவுவதால் அவற்றை நாங்கள்     அடிக்கடி    எடுத்துக் கையாள்கிறோம். இதனை நீங்கள் தவறாக அவரது அபிப்பிராயத்திற்கு  முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று விளங்கிக் கொண்டீர்கள். இன்றைய நவீன கம்யூட்டர் யுகத்தில் இப்னு ஹஜர் போன்ற அறிஞர் ஒருவர் முறையாகப் பாடுபட்டு,   அவை   அனைத்தையும் கம்யூட்டர் மயமாக்கி விட்டால் அதைவிட தெளிவாகவும் எளிதாகவும் குர்ஆன் ஹதீஸை மக்கள் விளங்கிக் கொள்ள முடியும்.

“”புகாரீ,     முஸ்லிம்    போன்ற    இமாம்களை   விட    ஹனபி,    ஷாபி    இமாம்களது அபிப்பிராயத்திற்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறோம். காரணம் இமாம் ஹனபி, ஷாபி போன்றவர்கள் ஸஹாபாக்கள்,    தாபியீனகள்    காலத்தைச் சேர்ந்தவர்கள். ஒரு செயலைக் கண்ணாரக் கண்டு செயல்படும் மத்ஹபுடைய இமாம்கள் ஒரு செயலைக் கண்ணாரக் காணாமல் ?விசாரித்து அறிந்து நம்பிச் செயல்படும்? ஹதீஸ் வல்லுனர்கள் இவர்களில்  யார்    உயர்வு   என்பதை   சாதாரண   அறிவு    படைத்தவனும் விளங்கிக் கொள்ளுவான் ” என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

 இந்தக் கூற்றிலுள்ள தவறுகளை விவரமாக விளக்குகிறோம்.

மரியாதைக்குரிய அந்த நான்கு இமாம்களில் யாருக்கும் நபி(ஸல்)அவர்களின் செயல்களையோ, நபித்தோழர்களின் செயல்களையோ நீங்கள் சொல்வதுபோல் கண்ணாரக் கண்டு செயல்படும் பாக்கியம் கிடைக்கவில்லை என்பதே உண்மையாகும். தெளிவாகச்  சொல்லுவதாக இருந்தால் எல்லா நபித்தோழர்களிடமிருந்தும் எல்லா ஹதீஸ்களையும் அறிந்து கொண்ட தாபியீன், தபவுதாபியீ  னையோ சந்தித்து ஹதீஸ்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் அவர்களுக்கு இருக்கவில்லை என்பதேஉண்மையாகும்.

நான்கு இமாம்களும்    தாபியீன்,    தபவுதாபியீன்    வழியாகக் கேட்டச் செய்திகளை ஆதாரமாக வைத்தே நம்பிச் செயல்பட்டனர். அதிலும்    முழுமையாக    எல்லாச்    செய்திகளும்    அவர்களுக்குக்   கிடைக்கவில்லை.   கிடைத்த   செய்திகளிலும் பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட   செய்திகளும்    இருந்தன.   அவற்றைத்   தரம் பிரித்து அறிந்து கொள்ளும் வாய்ப்புகளும் அவர்களுக்கு மிகக் குறைவாகவே இருந்தன

“”தலைமுறையில் சிறந்தது என்னுடைய தலைமுறை;    அதற்கடுத்தது   அடுத்த    தலைமுறை;அதற்கடுத்தது அடுத்த தலைமுறை”என்ற ஹதீஸை   வைத்து   இமாம்களது   செயல்கள் அனைத்தையும் உண்மைப்படுத்துவதும் மிகத் தவறாகும். அந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் அனைவரும் உண்மையாளர்கள்? சத்தியச்சீலர்கள் என்ற பொருளில் சொல்லப்பட்டதல்ல இந்த  ஹதீஸ், நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்து    கொண்டிருக்கும்   போதே  உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசும் நயவஞ்சகர்கள் இருந்தனர் என்பதைக் குர்ஆனே கூறுகிறது. உதுமான் (ரழி) அவர்களது    ஆட்சி    காலத்திலேயே   பொய்யுரைகளை   ஹதீஸ்கள்   என்று    அறிவிக்கும் சண்டாளர்கள் தோன்றிவிட்டார்கள். எனவே உங்களைப் போன்றவர்கள் இந்த ஹதீஸுக்குச் சொல்லும் விளக்கம் தவறாகும். அந்தகால கட்டத்தில் அல்லாஹுவின் நேசத்திற்குரியவர்கள் இந்த பூமியில் அதிகமாக நடமாடிக் கொண்டிருந்தனர்   என்ற   விளக்கமே பொருத்தமாகும். அந்த மூன்று தலைமுறைகளிலும் பொய்யர்களே இல்லை என்பது பொருளல்ல.

மரியாதைக்குரிய   நான்கு இமாம்களின் கருத்துக்களைப் பரிசீலனைச் செய்யும் போது அபூஹனீபா (ரஹ்) (ஹி. 80) அவர்களின் கருத்துக்களை விட    மாலிக்    (ரஹ்)    (ஹி.93)      அவர்கள்  கருத்து, குர்ஆன், ஹதீஸூக்கு நெருக்கமாக இருக்கிறது. ஷாபி (ரஹ்) (ஹி. 150) அவர்களின் கருத்து மாலிக் (ரஹ்) அவர்களின்   கருத்தை   விட   நெருக்கமாக இருக்கிறது. ஹன்பலி (ரஹ்) (ஹி. 164) அவர்களின் கருத்து ஷாபி (ரஹ்)   அவர்களின்   கருத்தைவிட   நெருக்கமாக   இருக்கிறது. அதாவது முன்னால் இருந்த வரை விட பின்னால்    வந்தவருக்கு   அதிக   தகவல்கள்    கிடைத்து,   உண்மை   ஹதீஸ்களை   அதிகமாகத் தெரிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. அபூஹனீபா (ரஹ்) அவர்களுக்கு பகுதாதைச்    சுற்றியுள்ள   மக்களுக்கு   தெரிந்திருந்த   அலி,   இப்னு  மஸ்ஊத் (ரழி?ம்) இருவரின் மூலமாக அறிவிக்கப்படும் ஹதீஸ்களே பெரும்பாலும் தெரிந்திருந்தன. மாலிக்(ரஹ்) அவர்களுக்கு மதீனாவில் சுற்று   வட்டாரத்தில்   அறியப்பட்டிருந்த   ஹதீஸ்களே தெரிந்திருந்தன. ஷாபி (ரஹ்) மக்கா மதீனாவில் இருந்தபோது கிடைக்காத ஹதீஸ்கள் எகிப்து சென்ற போது    கிடைத்தது.    ஹன்பல் (ரஹ்) அவர்களுக்கு மற்ற இமாம்களுக்குக் கிடைக்காத பல ஹதீஸ்கள் கிடைத்தனர். விடைபெறும் ஹஜ்ஜில் நபி(ஸல்)    அவர்களின்    கட்டளையை   ஏற்று நபித்தோழர்கள் பல பாகங்களுக்கும் பிரிந்து சென்று விட்டதால் இமாம்களின் காலமான ஹி. 80-லிருந்து ஹி.241   வரையுள்ள   கால கட்டத்தில் எந்தப் பகுதியிலும், எல்லா ஹதீஸ்களையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் இருந்தது. நான்கு இமாம்களின்    காலத்திற்குப்    பிறகே  ஊர்ஊராகச் சென்று    ஹதீஸ்களைச்    சேர்க்கும்    முயற்சிகள்   தொடங்கப்பட்டன.   அதன்பின் அவற்றைத் தரம் பிரித்து அறியும் வாய்ப்பாக அறிவிப்பாளர்    வரிசையிலுள்ளவர்களின்    தகுதிகள்    எடை    போடப்பட்டு    அறியப்பட்டன.    ஆக    மரியாதைக்குரிய  நான்கு இமாம்களுக்கு   ஒரு   நூற்றாண்டுக்ளுப்   பிறகே  இப்படிப்பட்ட வாய்ப்புகள் ஏற்பட்டன. தங்கள் காலத்தில் இருந்த வாய்ப்பில்லாத நிலையை   நன்கு   அறிந்திருந்த    நான்கு   இமாம்களும் “”ஸஹீஹான ஹதீஸ்களே   எங்கள் நடைமுறை எங்கள் கருத்துக்கள் உண்மை ஹதீஸுக்கு முரண்பட்டால் எங்கள்  கருத்துக்களைவிட்டு குர்ஆன், ஹதீஸை    எடுத்து   நடங்கள் ”   என்று   தெளிவாக அறிவித்துச்     சென்றுள்ளனர்.    இந்த    விவரங்கள்    எல்லாம்   நீங்கள்   கல்வி கற்ற “”ஸில்ஸிலயே நிஜாமியா” கல்வித் திட்டப்படி போதிக்கப்படாமல்,    கண்மூடிப்   பின்பற்றும்   தவறான    விமுறையே போதிக்கப்பட்டிருப்பதால் அதை அப்படியே ஒப்புவிக்கிறீர்கள்அந்நஜாத்தில்    வெளியான   “” நபிவழி தொகுப்பு   வரலாறு”   என்ற தொடரை நீங்கள்    படித்திருந்தாலாவது    இந்த விவரங்கள் அனைத்தும் தெரிந்திருக்கும்.

உண்மையில்     அந்த     இமாம்களையும்    நீங்கள்    பின்பற்றவில்லை,   நீங்கள் மார்க்கமாகச் செயல்படுத்தும் பெரும்பாலான காரியங்களுக்கு    அந்த    இமாம்களில்   நூல்களிலிருந்து    உங்களால்    ஆதாரம்   காட்ட    முடியாது.   நீங்கள்   மக்களிடையே நடைமுறைப்படுத்தும் கபுருச் சடங்குகள், 3ம் 7ம், 40ம் மற்றும் பாத்தியாக்கள். மீலாது  மெளலிது   சடங்குகள்,   நிகாஹ்   மற்றும் தேவைகளில் கடைபிடிக்கும் சடங்குகள்  இவை   அனைத்திற்கும்   நான்கு   இமாம்களின்   ஆதாரப்பூர்வமான நூல்களிலிருந்து ஆதாரங்கள் காட்டுங்கவேன் பார்க்கலாம்.   உங்களால்   காட்ட  முடியாது. கிறிஸ்தவர்கள் ஈஸா (அலை) அவர்கள் பெயரால் பொய் சொல்லிச் செயல்பட்டுக் கொண்டு உண்மையில் ஈஸா (அலை)   அவர்களின்  மீது அவர்களுக்குத்தான் பிரியம் இருப்பதாக வாதம் செய்வதுபோல், நீங்களும் உங்களைப் போன்றவர்களை நம்பிச் செயல்படும்   முகல்லிதுகளும்   நான்கு இமாம்களின் பெயரால் பொய் சொல்லிக் செயல்பட்டுக்கொண்டு உங்களுக்குத்தான் இமாம்கள் மீது பிரியம் இருப்பதாக   தவறான   வாதம்   செய்கிறீர்கள் என்பதே உண்மையாகும். சத்தியத்தை விரும்புகிறவர்களுக்கு இதற்கு மேலும் விளக்கம் தேவை இல்லை.

இதற்கு மேலும் அறிந்து கொண்டே “” மத்ஹபுகளைப் பின்பற்றுவது நான் சரி” என்று  கூறி   நீங்களும்   வழிகெட்டு    மக்களையும் குழப்பி வழி கெடுக்காமல் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களின்படி தக்லீது செய்து மத்ஹபுகளைப் பின்பற்றுவது கூடாது என்று ஒப்புக்கொள்ளுங்கள்.

இம்மாத  (ஆகஸ்ட்) இதழில் பக்கம் 15?ல் ( முத்தாபிஹாத்) வசனம் :

ஹலாலும்    தெளிவானது   ஹராமும்    தெளிவானது.   இவை   இரண்டுக்குமிடையில் (“”முத்தஷாபிஹாத்”) சந்தேகமானவையும் உள்ளன. இவற்றை மக்களில் அநேகர் அறிந்து கொள்ளமாட்டார்கள். (நுஃமானுபின் பUர், புகாரீ, முஸ்லிம்)

இவ் ஹதீதுபடி    “அநேகர்,    அறியமாட்டார்கள்.    ஆனால்    ஒரு   சிலர்   அறிவார்கள் என்று பொருள் கொள்ளத் தோன்றுகிறது. வர்ராஸிகூனஃபில் இல்மி என்பதற்கு கல்வியறிவு  உடையவர்களும்   அறிவர்   என்பதை   ஏன் ஏற்றுக்கொள்ள முடியாது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே,

 இப்னு   மஸ்ஊத்   (ரழி)   அவர்கள்   மூலம்   அறிவிக்கும்    ஹதீது   புகாரீ,    முஸ்லிம், நஸயீ போன்ற நூல்களில் இருப்பதாகவும், “” அல்ஜன்னத்தில் வந்துள்ளதே ” அந்த வசனம்.

திருக்குர்ஆனின் எந்த ஒரு வசனமும்    எங்கே    இறங்கியது என்று நான் அறிவேன். எந்த ஒரு வசனமும் என்ன காரணத்திற்காக இறங்கியது என்பதையும் நிச்சயம் நான் அறிவேன்.

ஆகவே தங்களின் விளக்கம் என்ன?
எம். பஸல் ஹுசேன் பரங்கிப்பேட்டை
எஸ். செய்யது அலி மேலப்பாளையம்

இந்த ஹதீஸை மீண்டும் கவனமாகப் படித்துப் பாருங்கள்
சந்தேகமானவைகளும் உண்டு என்பதை ஒரு சிலரே ஒப்புக்கொள்வார்கள். அநேகர் எப்படி சந்தேகமானவைகள் இருக்க முடியும்?சந்தேகமானவைகளை    அல்லாஹ்    ஏன்    படைக்க   வேண்டும்?   எனவே வர்ராஸிகூனஃபில் இல்மி? ஆழ்ந்தறிவுடையவர்கள் சந்தேகங்களைப் போக்கி ஹலால் ?ஹராம் என்று திட்டமாகச் சொல்லிவிட முடியும் என்று வீண்வாதம் செய்வார்கள் என்பதையே அது சுட்டிக் காட்டுகிறது.

வெகு    சொற்பமானவர்களே   சத்தியத்தை    உணர்ந்து   செயல்படுவார்கள். மிகப் பெரும்பான்மையினர் சத்தியத்தை அலட்சியம் செய்து வீண்வாதம் செய்து, வீண் வாழ்க்கை நடத்துவார்கள் என்ற கருத்தில் பல குர்ஆன் வசனங்களைப் பார்க்கிறீர்கள் அல்லவா? (7:131, 187; 6:37; 8:34; 39:29; 39:49) அது   போன்ற கருத்தில் தான் இந்த ஹதீஸின் இறுதிப் பகுதியும் இருக்கிறது. இதனை இந்த ஹதீஸில் வரும் அடுத்த வாக்கியம் உறுதி செய்கிறது. அதுவருமாறு :

“”சந்தேகங்களைத் தவிர்த்துக் கொள்பவர்    தனது    மார்க்கத்தையும்    மானத்தையும் பேணிக்கொண்டவர் ஆவார். சந்தேகத்தில் விழுந்தவர் ஹராமில் விழுந்து விடுபவர் ஆவார்.” (நுஃமானுபின் பUர், புகாரீ, முஸ்லிம்)

எனவே இந்த ஹதீஸின்படி “”முத்தஷாபிஹ் வசனங்களின் உண்மைப்   பொருளை அல்லாஹ் மட்டுமே அறிவான் ” என்று ஒப்புக் கொள்பவர்களே தங்கள்   மார்க்த்தையும்   மானத்தையும் பேணிக்கொண்டவர்    ஆவார்கள் “” அவற்றின் உண்மைப் பொருளை ஆழ்ந்தறிவுடையவர்களும்    அறிவார்கள்”   என்று    சொல்லுகிறவர்கள்   ஹராமில்    விழுந்து   விடுபவர்கள் ஆவார்கள் என்பது தெளிவாகவே தெரிகிறது

இப்னு    மரிஊத்    (ரழி)   அவர்கள்   மூலம்   அறிவிக்கப்படும் ஹதீஸின் விளக்கம் “”குர்ஆனை விளங்குவது யார்?” என்று தொடர் கட்டுரையில் இடம் பெறுகிறது.

 

Previous post:

Next post: