நம்மில் பலர் பிறை பார்ப்பது என்றால் மாத கடைசி தேதியில் மட்டும் மேற்கே பார்ப்பது என்று நம்பிக் கொண்டு இருக்கின்றோம். உண்மை அதுவல்ல. நபி(ஸல்) காலத்தில் மாதம் முழுவதும் தினமும் அஹில்லாக்களை பார்ப்பார்கள் அதிலும் ரமழான் மாதத்திற்கு முந்தய மாதம் முழுவதும் மற்ற மாதங்களை விட கவனமாக பார்ப்பார்கள் என்பதை இந்த ஹதீஃத் உறுதி செய்கிறது.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஷஃபானை மனப்பாடம் செய்து கொண்டே வருவார்கள். அது அல்லாத மாதங்களை மனப்பாடம் செய்வதை விட பிறகு ரமழானுடைய காட்சியின் அடிப்படையில் நோன்பு வைப்பார்கள். அது அவர் மீது மறைக்கப்படும்போது அவர் அதை முப்பதாவது நாள் என்று எண்ணிக் (Count) கொள்வார்கள் பிறகு நோன்பு வைப்பார்கள். அறிவித்தவர் : ஆயிஷா(ரழி), நூல்: அபூதாவூத்(1993)
மாதங்களை, கால கணக்கை அறிவது பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.
அஹில்லாக்கள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும்: “அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. வீடுகளுக்குள் மேற்புறமாக வருவதில் புண்ணியம் இல்லை. ஆனால் இறைவனுக்கு அஞ்சி நற்செயல் புரிவோரே புண்ணியமுடையோராவர். எனவே வீடுகளுக்குள் (முறையான) வாசல்கள் வழியாகவே செல்லுங்கள். நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை, அஞ்சி நடந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன்: 2:189)
இந்த வசனத்தில் அஹில்லாக்கள் காலம் காட்டுவதாக அல்லாஹ் கூறியுள்ளான்.
இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மனாஜில்களை ஏற்படுத்தியிருக்கின்றோம். (அல்குர்ஆன்: 36:39)
இந்த வசனத்தில் சந்திரனின் பிறை வடிவம் (அஹில்லா) ஆனது மனாஜில்களால் ஏற்படுகிறது என்று விளக்குகின்றான்.
இதன் மூலம் நாம் அறிந்து கொள்வது சந்திரனின் அஹில்லாக்களும், மனாஜில்களும் இணைந்து கால கணக்கை காட்டும் என அறிய முடிகிறது.
அஹில்லா என்றால் பிறை வடிவங்கள் என்று பெரும்பாலானவர்களுக்கு தெரியும். ஆனால் மனாஜில் என்றால் என்ன என்று பெரும்பாலான மக்களுக்கு தெரியாது.
மனாஜில் என்பது மன்ஜில் என்பதன் பன்மை. மன்ஜில் என்றால் வீடு என்று பலரும் சொல்வார்கள் வீடுகளுக்கு “இக்பால் மன்ஜில்’, “பாத்திமா மன்ஜில்’ என்று பெயர் வைப்பார்கள். அதன் பொருள் வீடு என்று கருதி கொண்டு சந்திரனுக்கு பல வீடுகள் இருப்பதாக சொல் பவர்களும் உண்டு.
முதலில் மன்ஜில் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம்.
மன்ஜில் என்றால் இருப்பிடம்,
மனாஜில் என்றால் இருப்பிடங்கள்.
நான் இன்று திருச்சி முழுவதும் சுற்றி வந்தால் என்னுடைய இன்றைய இருப்பிடம் திருச்சி.
நான் இன்று தமிழகம் முழுவதும் சுற்றி வந்தால் என்னுடைய இன்றைய இருப்பிடம் தமிழகம்.
அது போல் சந்திரன் அன்று தன்னுடைய வட்ட பாதையில் அது சென்ற தூரம் அன்றைய இருப்பிடம் ஆகும்.
படிதரம், தங்குமிடம் என்று மொழி பெயர்ப்பது தவறு. இருப்பிடம் என்பது சரியான மொழிபெயர்ப்பு.
பிறை வடிவம் (அஹில்லா) மட்டும் போதும் என சிலர் நினைக்கின்றனர்.
அதன் இருப்பிடம் (மனாஜில்) பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. அது சரியான நிலைப்பாடு அல்ல. வடிவங்கள் மட்டும் வைத்து தேதியை சொல்ல முடியாது. வடிவத்துடன், இருப்பிடத்தையும் பார்த்தால் சாத்தியம் ஆகும் என்று உங்களுக்கே தெரியும்.
மனாஜில்லை பார்க்க சூரிய உதயத்தின் போது அல்லது மறைவின் போதுதான் சூரியனுடன் ஒப்பிட்டு பார்க்க முடியும்.
முதலில் பிறை பார்த்தல் என்பது என்ன? என்று புரிய வேண்டும்.
சந்திரனின் பிறை வடிவங்களையும் மற்றும் அதன் இருப்பிடங்களையும் சேர்த்து தான் பார்க்க வேண்டும். குர்ஆன் சந்திரன் பற்றி இவைகளை தான் கூறுகிறது.
அவ்வாறு பிறையை ஆகாயத்தில் பார்க்கும்போது பூமியை பொருத்து ஒரு நிலையான புள்ளி வேண்டும் அது சூரியன் தான். சூரியனுடன் சந்திரனையும் சேர்த்து பகலி லும், இரவிலும் பார்க்க முடியாது. சூரியன் உதிக்கும் நேரமும், மறையும் நேரமும் தான் சரியான நேரம். சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே மேற்கில் இருந்து கிழக்கு வரை உள்ள 180 டிகிரி கோணத்தை 12, 2டிகிரி அடிப்படையில் இருப்பிடத்தை மாற்றுவதை தினமும் பார்க்கலாம்.
(வளர்பிறையில் 0டிகிரியில் சூரியனில் இருந்து 180டிகிரிக்கு விலகும். தேய்பிறையில் 180டிகிரியில் இருந்து 0டிகிரிக்கு சூரியனை நெருங்கும். இது புரியவில்லை என்றால் விட்டுவிடுங்கள் நேரில் தினமும் பிறை பார்க்கும் போது புரியும்.
அன்றைய அரபிகளுக்கு நட்சத்திரங்கள் பற்றிய அறிவு நம்மை விட அதிகம். காரணம் அவர்கள் பிரயாண திசை அறியவும், பருவ மாற்றங்கள் அறியவும், விடி வெள்ளி மூலம் நேரம் அறியவும், தவறாக ராசிபலன் பஞ்சாங்கம் (குறி) பார்க்கவும் என்று பல வகையிலும் நட்சத்திரத்தை பயன்படுத்தினர். அதனால் நாம் இன்று டிகிரிகள் கொண்டு சந்திரன் தினமும் நகர்வதை அன்றைய அரபிகள் நட்சத்திரங்கள் நடுவே சந்திரன் நகர்வதை வைத்து எந்த நட்சத்திரத்திற்கு அருகில் சந்திரன் உள்ளதோ அந்த நட்சத்திரத்தை மனாஜிலாக எடுத்து கொண்டனர்.
அன்றைய அரபிகள் மனாஜிலுடன் தான் அஹிலாக்களை பார்த்தனர்.
பிறைகளை இருப்பிடங்களுடன் பார்ப்பது எப்படி?
சந்திரமாதம் ஆரம்பித்தவுடன் முதல் பிறையில் இருந்து முழு நிலவு வரை சூரியன் மறையும் போது சந்திர வடிவங்களை (அஹிலால்) சூரியன் இருப்பிடத்துடன் ஒப்பிட்டு சந்திரன் இருப்பிடங்களை (மனாஜில்) பார்க்க வேண்டும் என்று சூரியன் மறையும் நேரமும், சந்திரன் உதிக்கும் நேரமும் ஏறக்குறைய ஒன்றாக உள்ளதோ அன்றுதான் முழு நிலவு சூரியனும், சந்திர னும் ஏறக்குறைய 180டிகிரியில் இருக்கும்.
முழு நிலவுக்கு அடுத்த நாள் முதல் மாத கடைசி பிறை வடிவம் (உர்ஜூனுல் கதீம்) வரை சூரிய உதயத்தின் போது சந்திரனின் இருப்பிடங்களை (மனாஜில்) சூரியனின் இருப்பிடத்துடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
சூரிய உதயம் நேரம், மறைவு நேரம் அல்லாத மற்ற நேரங்களில் பிறையை மன்ஜிலுடன் பார்க்க முடியாது.
எனவே மற்ற நேரங்களில் பார்க்க கூடாது. இந்த பயிற்சி 3 மாதம் தினமும் செய் தால் போதும் உங்களால் சந்திரனின் பிறை வடிவத்தையும், மனாஜிலையும் பார்த்து உங்களாலும் அன்றைய பிறை காட்டும் தேதியை சொல்லி விட முடியும். முயற்சி செய்து பாருங்கள்.
குறிப்பு : மனாஜில் என்பதற்கு இருப்பிடங்கள் என்று கூறுவதை விட சஞ்சரிக்கும் இடங் கள் என்றும் பொருள் தரலாம் என்று நெல்மேனிபட்டி சகோதரர் அப்துல் ஹமீது அவர் கள் சொல்வது ஏற்புடையதாக உள்ளது.
அல்லாஹ்வே நம் அனைவருக்கும் நேர்வழி காட்ட போதுமானவன்.