சிந்திக்க மாட்டீர்களா!

in 2018 ஏப்ரல்

புளியங்குடி அபூ கனிபா

இன்று உலகம் முழுவதும் முஸ்லிம்கள் கொல்லப்படுவதும், சித்திரவதை அனுபவிப்பதும், உரிமைகள் பறிக்கப்படுவதும் அவர்கள் கைகளால் தேடிக்கொண்டதே.

எப்படி?

அல்குர்ஆன் 12:106 வசனம் சொல்கிறது அவர்கள் இணைவைப்பவர்களாக (ஷிர்க்) இருக்கிற நிலையிலில்லாமல் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதில்லை.

எப்படி ஷிர்க் வைக்கிறார்கள் ?

அல்குர்ஆன் 9:31 வசனம் சொல்கிறது அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்க ளாக்கிக் கொள்கின்றனர். இன்று முஸ்லிம்கள் தங்களின் மதகுருமார்களான மவ்லவிகளையும், ஆலிம்களையும், இயக்கத் தலைவர்களையும் ரப்பாக ஆக்கிக் கொண்டுள் ளனர்.

அவர்கள் சொல்வதுதான் மார்க்கம் என்று எண்ணி இறைவனுடைய வாழ்க்கை நெறிநூலை, இறை கட்டளைகளை புறக்கணிக்கிறார்கள். ஒன்றுபட்ட ஒரே சமுதாயம் என்ற அல்லாஹ்வின் 21:92 வசனத்தை புறக்கணிக்கிறார்கள்.

நிச்சயமாக உங்கள் சமுதாயம் (வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம் தான்; மேலும், நானே உங்கள் இறைவன். ஆகையால், என்னையே நீங்கள் வணங்குங்கள். (அல்குர்ஆன்: 21:92)

மேலும் 8:46 வசனம் சொல்லும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக் கும் கீழ்படியுங்கள். நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள். (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள். உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச்  சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமை யுடையவர்களுடன் இருக்கின்றான் என்ற அல்லாஹ்வின் கட்டளையை புறம் தள்ளி விட்டு தனித்தனி இயக்கங்களாகவும், மத்ஹப்களாகவும் பிரிந்து கிடக்கிறார்கள்.

இப்படி பிரிந்து கிடப்பதற்கு என்ன அவசியம் வந்தது?

இப்படி பிரிந்து கிடப்பவர்களின் நிலை என்ன தெரியுமா?

அல்குர்ஆன் 3:105 (இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள். அத்தகையோருக்குக் கடுமையான வேதனை உண்டு.

இன்று முஸ்லிமகள் அனுபவிக்கக்கூடிய வேதனைகளுக்கும், சோதனைகளுக்கும் யார் காரணம்? அல்லாஹ்வின் வசனங்களை புறக்கணித்துவிட்டு தனித்தனி இயக் கங்களாக பிரிவுகளாக தங்களின் தலைவர்களின் சொல்தான் மார்க்கம் என்று எண்ணி பிரிந்து கிடப்பதுதான்.

சிந்திக்கமாட்டீர்களா?

Previous post:

Next post: