அந்நஜாத் ஜூலை – 2016

in 2016 ஜுலை

ஜூலை 2016

ரமழான்-­வ்வால் 1437

ஈத் சிந்தனை! சமுதாயத்தைப் பிளவுடுத்தும் அதிகாரம் நபிமார்களுக்கும் இல்லை!

இன்றைய முஸ்லிம் சமுதாயத்தில் ஆலிம்கள் எனப் பெருமை பேசும் மவ்லவிகளாலும், அவர்களது முகல்லிது பக்தர்களாலும் காஃபிர், முஷ்ரிக் ஃபத்வா கொடுக்கப்பட்டு, அவர்களது பள்ளிக்குப் போகக் கூடாது, அவர்களைப் பின்பற்றித் தொழக் கூடாது என்று ஃபத்வா கொடுக்காத ஒரேயயாரு ஆலிமையும் காட்டமுடியாது. குஃப்ர், ஷிர்க் ஃபத்வா கொடுக்கப்படாத ஒரேயயாரு பிரிவையும் பார்க்க முடியவில்லை. ஒட்டுமொத்தப் பிரிவினர் அனைவரும் இந்த ஃபத்வாவுக்கு உட்பட்டவர்களே! சமுதாயத்தைதப் பிளவுபடுத்தும் இந்த வெறித்தனம் ஒவ்வொரு முஸ்லிமினதும் இரத்தத்தோடு கலந்து விட்டிருக்கிறது. அல்லாஹ்வின் தனிப்பட்ட அதிகாரத்தில் மூக்கை நுழைத்துள்ள இப்பிரிவினைவாதிகள் நாளை 4:145 இறைவாக்குக் கூறுவதுபோல் நரகின் அடித்தட்டில் கிடந்து வெந்து கரியாகப் போகிறார்கள் என்பதை 42:21, 49:16 இறைவாக்குகளும் இன்னும் பல இறைவாக்குகளும் உறுதிப்படுத்துகின்றன.

குர்ஆனை அன்றாடம் படித்து அறிகிறவர்கள் இவ்வுலகில் எப்படிப்பட்ட ஷிர்க், குஃப்ரில் மூழ்கி இருப்பவர்களையும் பார்த்து, நாளை அவர்களுக்கு எப்படிப்பட்டத் தண்டனைகள், வேதனைகள், நரக நெருப்பு காத்திருக்கின்றன என்பதைத் தெளிவாக எடுத்துக் கூறி எச்சரிப்பது மட்டுமே நமது கடமை. அவர்கள் வீம்பாகவும், முரட்டுத்தனமாகவும் அப்படி குர்ஆனைக் கொண்டு எச்சரிப்பவர்களை காஃபிர், முஷ்ரிக் எனக் கடுமையாகத் திட்டினாலும் பதிலுக்கு அவர்களுக்கு காஃபிர், முஷ்ரிக் ஃபத்வா கொடுத்து அவர்களைப் பின்பற்றித் தொழக் கூடாது என்று ஃபத்வா கொடுக்க ஒருபோதும் முற்பட மாட்டார்கள்.

இதோ குர்ஆன் கூறுகிறது, வரிசையாகப் பாருங்கள்!

“எவன் (நாங்கள் கொண்டு வந்திருப்பதை) பொய்ப்பித்து புறக்கணிக்கிறானோ அவன்மீது நிச்சயமாக வேதனை ஏற்படும் என எங்களுக்கு உறுதியாக அறிவிக்கப் பட்டுள்ளது” (20:48)

மூஸா(அலை) ஃபிர்அவ்னுக்கு மறுமையின் கடுமையான தண்டனைப் பற்றிக் கடுமையாக எச்சரிக்கிறார். உடனே ஃபிர்அவ்ன் “அப்படியயன்றால், முன்சென்ற தலைமுறைகளின் நிலைமை என்ன?” என்று கேட்டான். (20:51)

ஃபிர்அவ்ன் அப்போது தன்னுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்களைப் பற்றிக் கேட்கவில்லை. இணைவைத்த நிலையில் இறந்துவிட்ட தன் முன்னோர்களைப் பற்றிக் கேட்கிறான். அவர்கள் இறந்து போனவர்கள். தங்கள் இணை வைக்கும் கொடிய குற்றத்தை விட்டும் தவ்பா செய்து மீளும் வாய்ப்பு அவர்களுக்கு இல்லவே இல்லை. நரகத்திலிருந்து மீளும் வாய்ப்பு அவர்களுக்கு இல்லவே இல்லை. இந்த நிலையிலும் கூட மூஸா(அலை) அவர்கள் ஃபின்அவ்னின் முன்னோர்கள் காஃபிர்கள், முஷ்ரிக்கள் என ஃபத்வா கொடுக்கத் துணிந்தார்களா? இல்லவே இல்லை. அவர்கள் கூறிய பதிலைப் பாருங்கள்.

“இது பற்றிய அறிவு என்னுடைய இறைவனிடம் (பதிவுப்) புத்தகத்தில் இருக்கிறது. என் இறைவன் தவறுவதும் இல்லை, மறப்பதும் இல்லை” என்று (மூஸா) கூறினார். (20:52)

மூஸா(அலை) பல சிறப்புகள் பெற்ற நபி. அல்லாஹ் அவருடன் பேசியும் இருக்கிறான். அப்படிப் பட்ட மூஸா(அலை) அவர்களே தவ்பா செய்ய வாய்ப்பே இல்லாத ஃபிர்அவ்னின் இறந்துபோன முன்னோர்கள் காஃபிர்கள், முஷ்ரிக்கள் என ஃபத்வா கொடுக்கத் துணியவில்லை. அந்த அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. அல்லாஹ்வே அந்த அதிகாரத்தை மறுமைக்கென்று ஒத்தி வைத்திருக்கிறான் என்பதைத் திட்டமாக அறிந்து அல்லாஹ்வுக்கே முற்றிலும் அடிபணிந்து நடந்தார்கள்.

தனிச்சிறப்புள்ள இறைத்தூதரான மூஸா (அலை) அவர்களுக்கே இல்லாத அதிகாரம் தங்களுக்கிருப்பதாக வீண் பெருமையடிக்கும் (பார்க்க:7:146) இம்மவ்லவிகள் ஆள் ஆளுக்கு காஃபிர், முஷ்ரிக், அவர்களைப் பின்பற்றித் தொழக்கூடாது என்று துணிந்து ஃபத்வா கொடுத்து வருகிறார்கள். (பார்க்க : 42:21, 49:16) இது எத்தனை பெரிய வழி கேடு? சிந்தியுங்கள்!

அடுத்து நபி(ஸல்) அவர்களுடன் நாங்களும் முஸ்லிம்கள் என உள்ளத்தால் ஒப்புக் கொள்ளாமல் நுனி நாவினால் மட்டும் சொல்லி நடித்த முனாஃபிக்கள்-நயவஞ்சகர்கள். இந்த நயவஞ்சகர்கள் பற்றி குர்ஆனில் சுமார் 32 இடங்களில் அல்லாஹ் தெளிவாக அடையாளம் காட்டியுள்ளான். அல்பகரா 8 முதல் 20 வரையுள்ள வசனங்களைப் படித்துணர்பவர்கள் அவர்களை விட நிராகரிப்பாளர்கள், இணை வைப்பவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது என்பதை அறிய முடியும்.

மேலும் மேற்படி 32 முனாஃபிக்கள் பற்றிய வசனங்களையும் நேரடியாகப் படித்து அறிகிறவர்கள் அவர்கள் முஸ்லிம் எனச் சொல்லிக் கொள்ளக் கடுகளவும் தகுதியற்றவர்கள் என்று அறியலாம். இந்த நிலையில் நபி(ஸல்) அவர்கள் அந்நயவஞ்சகர் களுக்கு காஃபிர், முஷ்ரிக் ஃபத்வா கொடுத்து தமது சமுதாயத்தை விட்டும் வெளியேற்றாமல் இருந்தார்களே? சிந்திக்க வேண்டாமா? அப்படிப்பட்டவர்களைப் பின்பற்றித் தொழக் கூடாது என்று கட்டளையிடவில்லையே ஏன்? தன்னை முஸ்லிம் என்று சொல் கிறவனுக்கு முஸ்லிம்களுக்குரிய அனைத்து உரிமைகளும் உண்டு என்று கட்டளையிட்டது ஏன்?

அந்த நயவஞ்சகர்களை முஸ்லிம்கள் என்ற நிலையில் தம் சமூகத்தோடு இணைத்து வைத்திருந் ததால், நபி(ஸல்) அவர்கள் பட்டத் துன்பங்கள், வேதனைகள், தூய இஸ்லாம் மற்றவர்களிடம் போய்ச் சேர ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் ஏராளம். போர்க்காலங்களில் இந்த முனாஃபிக்கள் கூட இருந்தே குழி பறித்ததால் ஏற்பட்ட பேரிழப்புகள் சொல்லி மாளா. ஆயிஷா(ரழி) அவர்கள் மீது இந்த நயவஞ்சகர்கள் அவிழ்த்து விட்டப்படும் அவ தூறுகளால் சுமார் 50 நாட்கள் இறைவனிடமிருந்து ஆயிஷா(ரழி) பரிசுத்தமானவர் என்ற வஹி வரும் வரை நபி(ஸல்) அவர்கள் அனுபவித்த மன உளைச்சல், வேதனை சொல்லி மாளாது.

இப்படி எண்ணற்றக் கொடுமைகளையும், சதி வேலைகளையும், தினசரி அரங்கேற்றிக் கொண்டிருந்த இந்நயவஞ்சகர்களான காஃபிர், முஷ்ரிகீன்களுக்கு அப்படி ஃபத்வா கொடுத்து அவர்களைத் தமது உம்மத்திலிருந்து வெளியேற்றியிருந்தால் நபி(ஸல்) அவர்கள் அந்த முனாஃபிக்கீன்களிடமிருந்து அனுபவித்து வந்த எத்தனையோ இடறு பாடுகளிலிருந்து, கொடுந் துன்பங்களிலிருந்து எளிதாக விடுதலை அடைந்திருக்க முடியும். கூட விருந்தே குழி பறித்து வந்த கொடிய நிலைக்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டு தீனுடைய பிரசாரம் மேலும் சிறக்க வழியேற்பட்டிருக்கும்.

இப்படிப்பட்ட அநுகூலங்கள் பல இருந்தும் நபி (ஸல்) அவர்கள் இந்த நயவஞ்சகர்கள் முஸ்லிம்கள் இல்லை. எனது உம்மத்திலுள்ளவர்கள் இல்லை என்று ஃபத்வா கொடுக்கத் துணியவில்லையே ஏன்? ஆம்! அந்த அதிகாரம் முழுக்க முழுக்க அல்லாஹ்வுக்கே உரியது; அதில் தமக்கு கடுகளவும் அதிகாரம் இல்லை. அதிகாரம் பெற்ற அல்லாஹ்வே அந்த அதிகாரத்தை இவ்வுலகில் பயன்படுத்துவதில்லை என்று முன்னரே வாக்களித்துவிட்டான். (பார்க்க : 10:19, 41:45, 42:14,21)

ஆக இவ்வுலகில் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்கிறவர்களை முஸ்லிம் இல்லை, முஷ்ரிக், காஃபிர், அவர்களைப் பின்பற்றித் தொழக் கூடாது என்று ஃபத்வா கொடுக்க நபிமார்களுக்கும் அதிகாரம் இல்லை. மனிதர்களில் எவருக்கும் அதிகாரம் இல்லை. அதிகாரம் பெற்ற அல்லாஹ்வும் தீர்ப்பளிப்பதை மறுமைக்கென்று ஒத்திவைத்திருகிறான்.

இந்த நிலையில் பெயர்தாங்கி முஸ்லிம்களுக்கு குஃப்ர், ஷிர்க் ஃபத்வா கொடுத்து அவர்களைப் பின்பற்றித் தொழக் கூடாது என்று ஃபத்வா கொடுப்பவர்கள் அவர்களுக்கு முன் இவர்களே நரகம் புக நேரிடும் என்று கடுமையாக எச்சரிக்கிறோம்.

இப்போது நபி(ஸல்) அவர்களது காலத்தில் முஸ் லிம்களாக நடித்த பெயர் தாங்கி முஸ்லிம்களோடு இன்றைய பெயர் தாங்கி முஸ்லிம்களை ஒப்பிட்டுப் பார்ப்போம். அன்றைய பெயர் தாங்கி முஸ்லிம்கள் அதாவது முனாஃபிக் என்ற நயவஞ்சகர்கள் உள்ளத்தால் தூதரையும், குர்ஆனையும் ஏற்றுக் கொள்ளாமல் நுனி நாவால் முஸ்லிம்கள் எனக் கூறி நடித்தார்கள். அன்றைய காஃபிர்களுடன் சேர்ந்து லாத், மனாத், உஜ்ஜா சிலைகளை வணங்கினார்கள். அந்த காஃபிர்களிடம் நாங்கள் உங்களோடுதான் இருக்கிறோம். நாங்கள் முஸ்லிம்கள் என்று கூறி அவர்களை கேலி, கிண்டல் செய்கிறோம் என்றார்கள், அவர்கள் ஈமான் கொள்ளவே இல்லை போன்ற முழு விபரங் களையும் 2:8-20 வரையுள்ள வசனங்களை நேரடியாகப் படித்து அறிகிறவர்கள் விளங்க முடியும்.

அல்லாஹ் தெளிவாக அவர்கள் முஸ்லிம்கள் இல்லை; நிராகரிப்பாளர்கள் என்று திட்டமாகக் குர்ஆனில் அறிவித்துவிட்டான். இந்த நிலையிலும் நபி(ஸல்) இவ்வுலகில் அவர்களுக்கு குஃப்ர் ஃபத்வா கொடுக்கவோ, முஷ்ரிக் ஃபத்வா கொடுக்கவோ முற்படவில்லை. காரணம் அந்த அதிகாரம் தமக்கில்லை என்று திட்டமாக அறிந்திருந்தார்கள்.

இப்போது இன்றைய பெயர் தாங்கி முஸ்லிம்களின் நிலைகளைப் பார்ப்போம். இந்த பெருமை பேசும் வழிகெட்ட மவ்லவிகளின் (7:146) துர்போதனைகளால், குர்ஆனை அவர்கள் நேரடியாகப் படித்து விளங்க முடியாமல் இம்மவ்லவிகள் தடுத்துக் கொண்டிருப்பதால், கலிமாவைச் சரியாக உச்சரிக்கத் தெரியாமல் இருக்கலாம், அல்லாஹ்வைப் பற்றியும், அவனது தூதரைப் பற்றியும் தெளிவான அறிவு இல்லாமல் இருக்கலாம், தர்கா மவ்லவிகள் கபுரு-சமாதி வழிபாட்டுக்கு வாசலைத் திறந்து வைத் திருப்பதால் அது முற்றி ஹிந்துக் கோவில்கள், கிறித்தவ சர்ச்சுகள், சபரிமலை, திருப்பதி எனப் போய் வழிபாடுகள் செய்யலாம், அன்று முனாஃபிக்கள் செய்த அனைத்து குஃப்ர், ஷிர்க் காரியங்களைச் செய்பவர்களாகவும் இருக்கலாம்.

ஆயினும் அன்றைய பெயர் தாங்கி முனாஃபிக் முஸ்லிம்கள் தூதரையும், குர்ஆனையும் உள்ளத்தால் ஒப்புக் கொள்ளாமல், நுனி நாவால் சொல்லி நடித்தது போல், இன்றைய பெயர் தாங்கி முஸ்லிம்கள் நடிக்கவா செய்கிறார்கள். அப்படி நடிக்கும் ஒரேயொரு முஸ்லிம் பெயர் தாங்கியையாவது யாராலும் காட்ட முடியுமா? முடியவே முடியாது.

நபி(ஸல்) அவர்கள் காலத்திலிருந்த முனாஃபிக் என்ற முஸ்லிம் பெயர் தாங்கிகள், இன்றைய முஸ்லிம் பெயர் தாங்கிகளை விட ஆயிரம் மடங்கு கேடுகெட்டவர்கள் என்று சொன்னாலும் தகும். நரகின் ஆக அடித்தட்டில் கிடந்து வெந்து கரியாகிக் கொண்டு கதறப்போகும் (4:145) அந்த பெயர்தாங்கி முஸ்லிம்களுக்கே நபி(ஸல்) அவர்கள் காஃபிர், முஷ்ரிக் ஃபத்வா கொடுக்கவில்லை. அவர்கள் ஏதாவது ஒரு பள்ளியில் இமாமாக இருந்தால் அவர்களைப் பின்பற்றித் தொழக்கூடாது என்று ஃபத்வா கொடுக்கவில்லை என்பது திட்டவட்டமாகத் தெரியும்போது, பாவங்களில் நபிகாலத்து பெயர் தாங்கி முஸ்லிம்களை விட குறை நிலை உடைய இந்தக் காலத்து முஸ்லிம் பெயர் தாங்கிகளுக்கு காஃபிர், முஷ்ரிக் ஃபத்வா கொடுக்கலாமா? அவர்களைப் பின்பற்றித் தொழக் கூடாது என்று ஃபத்வா கொடுக்கலாமா?

அப்படி குஃப்ர், ஷிர்க் ஃபத்வா கொடுப்பவர்கள் அவர்களைப் பின்பற்றித் தொழக்கூடாது என்று ஃபத்வா கொடுப்பவர்கள் யாராக இருக்க முடியும்? சிந்தியுங்கள்! இஸ்லாமிய மார்க்கத்தில் அல்லாஹ்வை விட அவனது தூதரை விட அதிக அதிகாரம் உடையவர்கள் என்று தங்களைப் பெருமையாக நினைப்பவர்கள் மட்டுமே முஸ்லிமை காஃபிராக்கும் மகாக் கொடிய செயலைச் செய்ய முடியும். அப்படி குஃப்ர் ஃபத்வா கொடுப்பவர்கள் நாளை 4:145 இறைவாக்குக் கூறும் நரகின் ஆக அடித்தட்டில் கிடந்தே வெந்து கரியாவார்கள்.

இந்த உண்மையை 4:145, 42:21, 49:16 இறைவாக்குகளை நீங்களே நேரடியாகப் படித்து அறிந்து கொள்ளுங்கள். நாளை மறுமை யில் நரகை விட்டுத் தப்ப நினைப்பவர்கள் முஸ்லிம் என்று சொல்லும் எவரையும் இவ்வுலகிலேயே காஃபிராக்க முற்படாதீர்கள்.

அந்த அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. நபிமார்களுக்கும் இல்லவே இல்லை. மூஸா (அலை) அவர்கள் தெளிவாகச் சொல்லி இருக்கிறார்கள். அவர்களுக்குரிய முடிவு அல்லாஹ்வின் ஏட்டில் தெளிவாகப் பதிவாகி இருக்கிறது. அல்லாஹ் மறதியாளனோ தவறிழைப்பவனோ இல்லை (பார்க்க : 20:52)

இந்த மூட சுயநல மவ்லவிகள், 2:8-20 வரையுள்ள குர்ஆன் வசனங்கள் முனாஃபிக்-நயவஞ்சகர்கள் பற்றிய வசனங்கள். காஃபிர், முஷ்ரிக்கள் பற்றிய வசனங்கள் இல்லை என்று மூடத்தனமாகச் சொல்லி, அவர்களது முகல்லிது பக்தர்களை திசை திருப்ப முற்படுவார்கள். அந்த வசனங்களை யார் நேரடியாக, சுயமாகப் படித்து விளங்குகிறார்களோ அவர்கள் அந்த வசனங்கள் நயவஞ்சகர்கள், காஃபிர்கள், முஷ்ரிக்கள் பற்றியவைதான் என்பதை உறுதியாக, தெளிவாக விளங்க முடியும்.

கடமையான மார்க்கப் பணியை வியாபார பொருளாக்கக் கூடாது, அற்பக் காசுக்கு விற்று விட்டு நாளை மறுமையில் வெறுங்கையாக நிற்கக் கூடாது என்று கடுமையாக எச்சரிக்கும் எண்ணற்ற வசனங்களைக் கண்டு கொள்ளாமல் நிராகரித்து விட்டு கூலிக்கு மாரடிக்கும் இம்மவ்லவிகளை உலகிலேயே எங்கும் யாரும் விமர்சிக்காத அளவுக்கு மிக மிகக் கடுமையாகக் கடந்த 33 ஆண்டுகளாக எச்சரித்து வருகிறோம். அவர்களை நாய், குரங்கு, பன்றி போன்ற நாற்கால் ஜன்மங்களை விட கேடுகெட்ட வர்கள் என்பதை சம்பந்தப்பட்ட குர்ஆன் வசனங்களைக் காட்டியே தொடர்ந்து எச்சரித்து வருகிறோம். ஆயினும் அனைத்துப் பள்ளிகளிலும் அவர்கள் தான் இமாமாகக் கூலிக்கு மாரடிக்கிறார்கள்.

எனவே அவர்களைப் பின்பற்றித் தொழவும் செய்கிறோம். அதனால் பொய்யன் பீ.ஜை தனது பக்தர்களைக் கொண்டு “அபூ அப்தில்லாஹ் கொள்கையற்ற கோமாளி, உம்மாட்ட சாப்பிட்டியா? ஆமாம்! வாப்பாட்ட சாப்பிட்டியா? ஆமாம்! என்று ஒரே நேரத்தில் சொல்லும் சிறு குழந்தை போன்றவர், சிறிதும் மானம், ரோஷம், வெட்கம் இல்லாதவர் இன்னும் இப்படி பலவிதமாக அவதூறு பரப்பி வருகிறார். உண்மை என்ன? நாளை மறுமையில் நரகின் அடித்தட்டில் கிடந்து கரியாகும் பெருமை பேசும் இம்மவ்லவிகளின் வழிகெட்ட நிலைகளை குர்ஆனின் எண்ணற்ற வசனங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. அவற்றை 5:67 இறைக் கட்டளைக்கு அடிபணிந்து, மக்களின் ஏச்சுப் பேச்சுக் களைக் கண்டு கொள்ளாமல் மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கிறோம்.

அதே சமயம் இவ்வுலகி லேயே அவர்களுக்கு குஃப்ர், ஷிர்க் ஃபத்வா கொடுத்து அவர்களைப் பின்பற்றித் தொழக் கூடாது என்று ஃபத்வா கொடுக்கும் அதிகாரத்தை அல்லாஹ் இறுதித் தூதருக்கே கொடுக்கவில்லை. இந்த நிலை யில் சாதாரண அவாமான நாம் அப்படியயாரு ஃபத்வாவைக் கொடுக்க முடியுமா? ஒருபோதும் முடியாது. அது 42:21, 49:16 இறைவாக்குகளை நிராகரித்து காஃபிராகும் கொடிய செயலாகும். அதனால் தான் பள்ளிகள் அனைத்தும் அல்லாஹ்வின் பள்ளிகள் என்ற அடிப்படையில், எல்லாப் பள்ளிகளிலும் எவ்விதப் பாகுபாடும் காட்டாமல் அப்பள்ளியில் பணியாற்றும் இமாமைப் பின்பற்றித் தொழுது கொள்கிறோம்.

அன்பார்ந்த சகோதரர்களே, சகோதரிகளே, முழுக்க முழுக்க கொடிய ஹராமான வழிகளில் தங்கள் வயிற்றை நிரப்பும் பெருமை, அறியாமை, மெளட்டீகம் நிறைந்த இந்த மவ்லவி வர்க்கத்தை நம்பி முஸ்லிம்கள் என்று சொல்பவர்களுக்கு முஷ்ரிக், காஃபிர் ஃபத்வா கொடுத்து அவர்களைப் பின்பற்றித் தொழக்கூடாது என்று கூறி செயல்பட முற் படாதீர்கள். அது உங்களை நரகில் கொண்டு சேர்க்கும். அவர்களது இறுதி முடிவை அல்லாஹ்விடம் விட்டு, நீங்கள் முஸ்லிம் சமுதாயத்தை ஒன்றுபட்ட ஒரே சமுதாயமாகவே (21:92, 23:52) மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளுங்கள். இதை ஈத் சிந்தனையாகக் கொள்ளுங்கள். அல்லாஹ் அருள் புரிவானாக!

ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்

 MTM. முஜீபுதீன், இலங்கை

மே 2016 தொடர்ச்சி……

பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை நிராகரித்து அவனுக்கு இணைகளையும் நிச்சயமாக நீங்கள்தானா ஏற்படுத்துகிறீர்கள்? அவன் அகிலத்தாருக்கெல்லாம் இறைவன் என்று (நபியே!) கூறுவீராக.

அவனே, அதன் மேலிருந்து உயரமான மலைகளை அமைத்தான்; அதன்மீது (சகலவிதமான) பாக்கியங்களையும் பொழிந்தான்; இன்னும், அதில் அவற்றின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான் (இதைப் பற்றி) கேட்கக் கூடியவர்களுக்கு (இதுவே விளக்கமாகும்)

பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான். ஆகவே அவன் அதற்கும், பூமிக்கும் நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள் என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் நாங்கள் விருப்புடனேயே வருகிறோம் என்று கூறின.

ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான்; ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான். இன்னும் அதனைப் பாதுகாப்பான தாகவும் ஆக்கினோம். இது யாரையும் மிகைத்த வனும், ஞானம் மிக்கோனுமாகிய (இறை)வனுடைய ஏற்பாடேயாகும். (அல்குர்ஆன்: 41:9-12)

ஆரம்பத்தில் வானம் புகையாக இருந்தது. அதை அல்லாஹ் ஏழு வானங்களாக அமைத்து, பூமிக்கு அருகிலுள்ள வானத்தை நட்சத்திரங்களைக் கொண்டு விளக்குகளாக அலங்கரித்ததாகவும் குறிப்பிடுகிறான். அதைப் பாதுகாப்பாகவும் அமைத்தான். இன்று விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்ததாக கருதப்பட்டாலும் வெகுதூரம் முன்னேற்றம் அடையவில்லை என்பதே உண்மையாகும். காரணம் சூரியன் என்று விளக்கைச் சூழவுள்ள கோள்களைக் கூட எமது விஞ்ஞான வளர்ச்சி இன்னும் வெற்றி கொள்ளவில்லை என்பதே உண்மை நிலை ஆகும். அத்துடன் அல்லாஹ் பூமிக்கு அண்மையிலுள்ள வானத்திற்கும், பூமிக்கும் இடையிலுள்ள தூரத் தினை முடியுமானவர்கள் சென்று பார்ப்பது சம்பந்தமாக பின்வருமாறு விளக்குகிறான். அவதானியுங்கள்.

மனு, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள் பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள். ஆனால், (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது. (அல்குர்ஆன்:55:33)

மனிதன் பூமியின் எல்லையைக் கடந்து சென்று விட்டான். ஆனால் அவனால் பூமிக்கு அண்மையில் உள்ள வானத்தைக் கடக்க வல்லமையடைய முடியவில்லை. ஆனால் ஜின் கூட்டத்தினர் பூமிக்கு அண்மையிலுள்ள வானத்தில் முட்டி வானவர்கள் கதைப்பதை ஒட்டுக்கேட்டு தீய மனிதர்களைப் பயன்படுத்தி, அதனுடன் நூறு பொய்களைக் கலந்து சொல்வதற்கு வல்லமை அடைந்திருந்ததாக அல்குர்ஆன் கூறுகின்றது. அவர்களுக்குப் போகும் வழியில் காணப்படும் நட்சத்திர விளக்குகள் தடையாக இருக்கின்றன. அத்துடன் ஒருநாள் வானவர்களில் சிலர் அவனிடம் (அல்லாஹ்விடம்) ஏறிச் செல்லும் காலம் யாது? என அல்குர்ஆன் கூறுவதை அவதானியுங்கள். அல்லாஹ்வின் வல்லமை எத்தகையது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

ஒருநாள் மலக்குகளும் (ஜிப்ரயீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள்; அ(த் தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும். (அல்குர்ஆன் : 70:4)

அதே வேளை வானவர்கள் பூமிக்கு ஒரு நாளுக்குள் இறங்கி வருவதாக பல ஹதீஸ்கள் காணப்படுகின்றன. பின்வரும் அல்குர்ஆன் வசனங்களை அவதானியுங்கள்.

நிச்சயமாக நாம் அதை(குர்ஆனை) கண்ணிய மிக்க (லைலத்துல் கத்ர்) என்ற நாளில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க நாள் என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க (அந்த) நாள் ஆயிரம் மாதங்களை விட மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின்படி (நடைபெற வேண் டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (அல்குர்ஆன்: 97:1-5)

அல்லாஹ் மலைகளை பூமியில் அமைத்ததைப் பற்றிக் கூறுவதை அவதானியுங்கள்.

உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுத்தினான்; இன்னும் நீங்கள் சரியான வழியை அறிந்து செல்வதற்காக அவன் ஆறுகளையும், பாதைகளையும் அமைத்தான். (அல்குர்ஆன்: 16:15)

இன்று மனிதன் ஆறுகள் பாய்ந்து செல்லக்கூடிய பள்ளத்தாக்குகளினூடாக பாதைகளை அமைப்பதைக் காணலாம்.

வானமும், பூமியும் விலகிச் செல்லாதவாறு ஓர் ஈர்ப்பு சக்தியை அமைத்தவன் :

வானங்களும், பூமியும் அதன் பாதையிலேயே பயணிப்பதற்கு வசதியாக ஓர் ஈர்ப்புச் சக்தியை அல்லாஹ் அமைத்துள்ளதாக அல்குர்ஆன் மூலம் அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்.

நிச்சயமாக வானங்களும், பூமியும் அவை இரண் டும் விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கிறான். அவை இரண்டும் விலகுமாயின், அதற்குப் பிறகு வேறெவரும் அவ் விரண்டையும் தடுத்து நிறுத்த முடியாது. நிச்சயமாக அவன் பொறுமையுடையவன் மிக மன்னிப்பவன். (அல்குர்ஆன் : 35:41)

இரு கடல்களுக்கிடையில் தடுப்பு இருப்பதாக அல்குர்ஆன் கூறுவதை விஞ்ஞானிகள் அறிந்துள் ளனர். அவன் தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான். ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள் ளது. மற்றொன்று உப்பும் கசப்புமானது. இவ்விரண்டுக்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான்.

இன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும், சம்பந்தங்களையும் ஏற்படுத்தினான். மேலும் உம் இறைவன் பேராற்றலுடையவன்.

இவ்வாறிருந்தும், அவர்கள் அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு நன்மை செய்யவோ, தீமையை செய்யவோ இயலாதவற்றை வணங்குகின்றனர். நிராகரிப்பவன் தன் இறைவனுக்கு எதிராக(தீய சக்திகளுக்கு) உதவி செய்பவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் : 25:53-55)

இவ்வாறு பல வழிகளில் அல்லாஹ்வின் வல்லமைகளை எடுத்துக்காட்டி, அல்லாஹ்வை மட்டுமே வணங்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறான். இன்னும் அவன் தன் வல்லமையை வெளிப்படுத்தி அல்குர்ஆன் அல்லாஹ்விடம் இருந்து வந்தது என்ற உண்மையை வெளிப்படுத்தி முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இறுதி இறைத்தூதர் என்பதை உண்மைப் படுத்தி அவரை விசுவாசிக்கும்படி வலியுறுத்துகிறான்.

மேலும் அல்குர்ஆன் மழை பொழியும் முறை, கருவறையில் குழந்தையின் வளர்ச்சி, தேனீயின் செயற்பாடு, பசும்பால் எவ்வாறு கிடைக்கின்றது, புவியின் அதிசயங்கள், இறைத்தூதர்களின் வரலாறுகள், எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் சம்பவங்கள் போன்றவற்றை எடுத்துக்காட்டி மக்களை ஷைத்தான் வழிகெடுக்காது பாதுகாப்பதற்காக அல்குர் ஆனை இறக்கி வைத்தான். மேலும் அவதானியுங்கள்.

பெண்களின் கருவறையினை விளக்கும் அல்குர்ஆன்:

ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பத்தில் சுமந்து கொண்டிருப்பதையும், கர்ப்பப்பைகள் சுருங்கிக் குறைவதையும், அவை விரிந்து அதிகரிப்பதையும் அல்லாஹ் நன்கறிவான். ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கின்றது. (அல்குர்ஆன்:13:8)

கருவறையில் நிலைகளை மனிதன் அறிந்து அளவிட அல்லாஹ் ஆர்வமூட்டுகிறான். அத்துடன் குழந்தையின் வளர்ச்சி பற்றி பின்வருமாறு விளக்குகின்றான். நிச்சயமாக நாம்(ஆதி) மனிதரைக் களிமண்ணிலுள்ள சத்தினால் படைத்தோம். பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம் பின்னர் அத்தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்.

பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணி வித்தோம். பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன். (படைப்பாளரில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (அல்குர்ஆன் : 23:12-14)

நவீன கருவிகள் இல்லாத காலத்தில் அல்லாஹ் அல்குர்ஆன் மூலம் மனித படைப்பின் உண்மைகளை விபரித்தான். இந்த உண்மைகள் போதுமானது இல்லையா? அல்குர்ஆன் படைத்துப் பாதுகாக்கும் இறைவனிடம் இருந்து அருளப்பட்டது என்பதற்கு சிந்தியுங்கள்!

கால்நடை, பழங்கள், தேனீயின் செயற்பாடுகள் பற்றி அல்குர்ஆன் விபரிப்பதைப் பாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும்(தக்க) படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம்.

பேரீச்சை, திராட்சைப் பழங்களிலிருந்து மதுவை யும், நல்ல ஆகாரங்களையும் நீங்கள் உண்டாக்குகிறீர்கள்; நிச்சயமாக இதிலும் சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.

உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டிடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்), பின் நீ எல்லாவிதமான கனி(களின் மலர்) களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல் (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்) அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம்(தேன்) வெளியாகிறது. அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு. நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (அல்குர்ஆன்: 16:66-69)

இவ்வாறு பலவிதமான முறையில் அன்றைய மக்களுக்கும் விளங்கக்கூடிய முறையில் பல உதாரணங்களை முன் வைத்து இது அல்லாஹ்விடம் இருந்து வந்த இறைநெறிநுல் தான் என்பதை உறுதிப்படுத்துகிறான். அத்துடன் நபி(ஸல்) அவர்கள் வாழும் காலத்திலும், அதன் பின் நிகழ இருக்கும் சில நிகழ்வுகளை முன்கூட்டி முன்னறிவிப்புச் செய்யப்பட்டு அது நிகழ்ந்தும் இருக்கின்றன. இவை யாவும் முஹம்மது நபி(ஸல்) அல்லாஹ்வின் தூதர் என்பதற்கு அத்தாட்சியாக அறிவிக்கப்பட்டவ ையாகும்.

ரோம் சாம்ராஜ்யம் சில ஆண்டுகளில் பாரசீகர்களை வெற்றி கொள்ளும் என்ற முன்னறிவிப்பு :

நபி(ஸல்) வாழ்ந்த காலத்தில் நெருப்பு வணங்கி களான, குறை´ நிராகரிப்பாளர்களுக்கு நெருக்க மான பாரசீக அரசு, முஸ்லிம்களுக்கு நெருக்கமான ரோமர்களை வெற்றி கொண்டது; இதைக் கண்டு முஸ்லிம்கள் கவலை அடைந்தனர். அப்போது அல்லாஹ் பின்வரும் முன் அறிவிப்பை அல்குர்ஆன் மூலம் அறிவித்தான். அவதானியுங்கள்.

ரோம் தோல்வியடைந்து விட்டது அருகிலுள்ள பூமியில்; ஆனால் அவர்கள் (ரோமர்கள்) தங்கள் தோல்விக்குப் பின் விரைவில் வெற்றியடைவார்கள்.

சில வருடங்களுக்குள்ளேயே! (இதற்கு) முன்னும், (இதற்கு) பின்னும், (வெற்றி, தோல்வி குறித்த) அதிகாரம் அல்லாஹ்வுக்குத்தான் (ரோமர்கள் வெற்றி பெறும்) அந்நாளில் முஃமின்கள் மகிழ்வடைவார்கள். (அல்குர்ஆன்: 30:24)

அல்குர்ஆனின் அறிவிப்பின்படி சில வருடங்களிலேயே பாரசீகர்களை ரோமர்கள் வெற்றி கொண்டனர். இது மெய்ப்படுத்தப்பட்ட வரலாற்றுச் சான்றாகும்.

நபி(ஸல்) அவர்களினால் மக்கா நகர் வெற்றி கொள்ளப்படும் என முன்னறிவிப்பு :

நபியே! நிச்சயமாக எவன் இந்த குர்ஆனை உம்மீது விதியாக்கினானோ, அவன் நிச்சயமாக உம்மைத் திருப்பிக் கொண்டு வந்து மக்காவென்னும் அம்மீளும் தலத்தில் சேர்ப்பான்; என் இறைவன் நேர்வழியைக் கொண்டு வந்திருப்பவர் யார்? வெளிப் படையான வழிகேட்டில் இருப்பவர் யார்? என்பதை நன்கறிந்தவன் என்று நீர் கூறுவீராக!. (அல்குர்ஆன் : 28:85)

ஓர் இறைவனையே வணங்கி வழிபட வேண்டும் எனக் கூறிய காரணத்தினால் இறுதி இறைத் தூதரும், அவர்களின் தோழர்களும் தாம் பிறந்த மக்கா நகரிலிருந்து மதீனாவுக்கு துரத்தப்பட்டார்கள். கவலையுடன் சென்ற நபி(ஸல்) அவர்களை நோக்கி மக்கா மீண்டும் வெற்றி கொள்ளப்பட்டு நபி (ஸல்) அவர்கள் மீண்டும் மக்காவுக்கு செல்வார்கள் என்ற செய்தி முன்னறிவிப்புச் செய்யப்பட்டு, அது உண்மையாக்கப்பட்டது. சந்திரன்(இரண்டாகப்) பிளந்த சம்பவம்: மக்காவாசிகள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் ஓர் அற்புதச் சான்றைக் காட்டும்படிகேட்டார்கள். ஆகவே, சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளப்பதை (தாம் இறைவனின் தூதர் என்பதற்குச் சான்றாக) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் காட்டினார்கள். (முஸ்லிம்: 5398, புகாரீ: 3637,3868)

இந்த ஹதீஃத் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அல்குர்ஆனிலும் அல்லாஹ் இந்த சம்பவத்தை குறிப்பிடுவதைப் பாருங்கள். (இறுதி) நேரம் நெருங்கிவிட்டது. சந்திரனும் பிளந்து விட்டது. எனினும், அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால், அதைப் புறக்கணித்து விடுகிறார்கள். இது வழமையாக நடைபெறும் சூனியம்தான் என்றும் கூறினார்கள். (அல்குர்ஆன்: 54:1-2) அவ்வாறு அல்குர்ஆன் பல உண்மைகளை 1437ஆண்டுகளுக்கு முன்னமே வெளிப்படுத்திக் காட்டியது. அல்குர்ஆனில் எந்த முரண்பாடுகளையும் காண முடியாது உள்ளது.

ஆகவே ஒவ்வொரு இறை விசுவாசியும் அல்லாஹ்வையும், மலக்குகளையும், நெறிநூல்களையும், நபிமார்களையும், இறுதித் தீர்ப்பு நாளையும் நம்பிக்கை கொள்வதுடன் எல்லா செயற்பாடுகளும் அல்லாஹ்வின் விதிக்கமையவே நடைபெறுகின்றன என நம்புவது அவசியமாகும். இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெற அல்லாஹ் இறுதி இறைநெறி நூலை இறக்கி நேர்வழி காட்டினான். அந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகும். அல்குர்ஆனை பலமாக பற்றிப் பிடித்துக் கொள்வோமாக. இறுதி இறைத் தூதர், முஹம்மது(ஸல்) அவர்கள் என நம்பிக்கை கொண்டு தூய முஸ்லிம் ஆக வாழ்வோமாக.

தொப்பியும், தொழுகையும்!

K. ரஹிமுத்தீன், குண்டூர், திருச்சி.

அன்பு இஸ்லாமிய தோழர்களே, கடந்த 30 வருடங்களுக்கு முன் தொழுகையின் போது தொப்பி அணிவது, அணியாமல் தொழுவது போன்ற பிரச்சனைகள் எந்தப் பள்ளிவாசலிலும் எழவில்லை. தற்போது இந்த தொப்பி விவகாரம் ஒரு சில பள்ளிவாசலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கு உரியன என அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டாலும் ஜமாஅத்துல் உலமாக சபைக்கு கீழ் இயங்கும் பள்ளிவாசல்கள் நான்கு மத்ஹப்களை பின்பற்றுபவர்களுக்குச் சொந்தமானது என பகிரங்கமாகவே விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து அல்லாஹ்வுக்கும், நபி(ஸல்) அவர்களுக்கும் இவர்கள் எந்த அளவுக்கு கட்டுபடுகிறார்கள் என்பது தெரிகிறது. ஓர் இம்மி அளவும் அல்குர்ஆனையும், சஹீ ஹதீதுகளையும் பின்பற்றுவதில்லை. பள்ளிவாசலுக்குத் தொழ வருபவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டிய நிர்வாகத்தினர் கேலிக் கூத்துக்கு ஆளாகியுள்ளனர்.

உதாரணம் :

1. ஜுமுஆ தொழுகைக்கு மட்டுமே வரும் பள்ளி வாசலின் நிர்வாகி தொழுகிறாரோ இல்லையோ அவரது பார்வை எப்போதும் பள்ளிவாசலின் வாசல் பகுதியையே நோக்கியிருக்கும். உள்ளே வருபவர்கள் தொப்பி அணிந்து வருகின்றனரா இல்லையா? என்பதை பார்த்தபின் தொப்பி அணியாத நபரை நோக்கி சென்று அட்டைப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருக்கும் தொப்பியை எடுத்துச் சென்று தலையில் வைத்து அழுத்துவதும், அந்த நபரை கோபப் பார்வை பார்ப்பதும் வாடிக்கையாகி விட்டது. தொப்பி அணிவது ஆதத்-வழமை மட்டுமே. ஆனால் அதே நிர்வாகி சுன்னத்தான காரியத்தை பின்பற்றுவதில்லை. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். கெண்டைக் காலுக்கு கீழ் ஆடை அணிபவர்கள் நரகவாதி மற்றும் என்னை சார்ந்தவனில்லை என்று கூறியிருந்தும் தனது (பேண்டை) கீழாடையை கெண்டை காலுக்கும் கீழே அணிந்து வருகிறார். (சில நபர்கள் பேண்டை கெண்டை காலுக்கு மேலே மடித்து விட்டு தொழும் நிலையில்) பேண்டை இவர் மடித்தும் விடுவதில்லை. இந்த நிலையில் சுன்னத் தான தாடி வைப்பதும் இல்லை, யூத கலாச்சாரத்தை பின்பற்றி அல்லாஹ்வினால் சபிக்கப்பட்டவர்களின் வழிமுறையில் கொஞ்சமும் பிசகாமல் தாடியை மழித்து வைத்துள்ளார். மற்ற நிர்வாகிகளும் இதே நிலையில் இருக்கிறார்கள். இவர்கள் மற்றவர்களுக்கு சொல்லித்தரும் நிலையில் இருக்க வேண்டியவர்கள் மற்ற தொழுகையாளியின் கோபப் பேச்சுக்கு ஆளாகி இருக்கிறார்கள். ஒரு நிர்வாகி தொழுகையின் போது தற்காலிக தொப்பியை அனிவதும், சுஜூது, சஜ்தா செய்யும் போது அந்த தொப்பி கீழே விழுந்து பந்து போல் ஓடுவது தினசரி நடக்கும் சுபுஹு தொழுகையின் கூத்து; இவர்கள் தான் நிர்வாகிகள். இப்படி சுன்னத்தான செயல்களைக் கேலிக் கூத்தாக்கி வருபவர்கள் திருந்தி மற்ற வர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவும், இல்லையேல் மற்றவர்களிடம் நல்லவிதமாக நடந்து கொள்ளவும்.

2. பள்ளிவாசலுக்கு தொழ வரும் நபர்களில் சிலர் தற்காலிக தொப்பி அணிந்து அது விழுந்து மற்றவர் களுக்கு இடைஞ்சல் தரும் செயலை செய்யாமல் நிரந்தர தொப்பி அணிவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லது நபி(ஸல்) அவர்களின் வழி முறையை (தொப்பி அணிவது/அணியாமல் இருப் பது) தொடர்ந்து கடைபிடிக்கவும்.

3. பள்ளிவாசலுக்கு தொழ வரும் ஒரு சிலர் ஒளூ செய்ய நஜீசுடன் இருக்கும் பேண்டை மடிப்பதால் ஒளூவும், தொழுகையும் பாழாகிறது. ஆகவே, நிரந்தரமாக கெண்டைக் காலுக்கு மேலே ஆடை அணியும் பழக்கத்தினைக் கடைபிடித்து அல்லாஹ்வின் கோபத்திலிருந்து விலகிட வேண்டுகிறேன்.

மேற்கண்ட நிகழ்ச்சிகளை பார்த்து பலரும் கீழ்க்கண்டவாறு எண்ணுகிறார்கள். அதாவது மேடையேறும் நடிகர்கள் மேக்கப் (அலங்கார) மேனாகவும் எண்ணுகிறார்கள். ஆகவே மேற்கண்ட நடிப்புகளையும், மேக்கப் வேலைகளையும் தவிர்த்து அல்குர் ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வழிமுறைகளையும் அனைவரும் பின்பற்றி முழு ஈமானுடன் தொழுது அல்லாஹ்வின் அருள் பெறவும், அனைவருக்கும் துஆ செய்தவனாகவும் முடிக்கிறேன். இதில் ஏதேனும் அல்குர்ஆனுக்கும், சஹீஹ் ஹதீஃ துக்கும் முரணாக இருந்தால் சரியான அல்குர்ஆன் வசனங்களையும், சஹீஹ் ஹதீஃதுகளையும் கொண்டும் என்னை தெளிவுபடுத்தவும், திருந்துகிறேன். இதில் ஏதேனும் எழுத்துப் பிழை இருந்தால் திருத்தி வாசிக்கவும், சுட்டிக் காட்டவும் திருந்துகிறேன்.

குறிப்பு : அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளும் இதனைக் கடைபிடித்து இதனை பயான் செய்யும் போது மக்களுக்கு தெளிவாக்கவும் மற்றும் தாங்க ளும் (கடைபிடிக்காதவர்கள்) தெளிவடையவும், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவும்.

ஆதாரங்கள் :

1. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவன், என் மீது (நான் சொன்னதாக) வேண்டுமென்றே பொய் யுரைக்கின்றானோ, அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அமர்(ரழி) புகாரி: 3461 2. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னைப் பற்றி (நான் சொல்லாத ஒன்றைச் சொன்னதாக)ப் பொய்யுரைக்கிறானோ அவன் நரகம் தான் செல்வான். அறிவிப்பவர்: அலீபின் அபீதாலிப்(ரழி) முஸ்லிம்:2

3. யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற் பெருமை இருக்கிறதோ, அவர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரழி) முஸ்லிம்: 147

4. அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இணை வைப்பாளர்களுக்கு மாறு செய் யுங்கள், மீசையை ஒட்ட நறுக்குங்கள். தாடியை வளர விடுங்கள். அறிவிப்பவர் : இப்னு உமர்(ரழி) முஸ்லிம் : 434

5. உங்களில் ஒருவர் பள்ளியில் நுழைந்தவுடன் இரண்டு ரக்அத்துகள் தொழாமல் (தஹ்யத்துல் மஜ்ஜித்) உட்கார வேண்டாம் என்று நபி(ஸல்) அவர் கள் கூறினார்கள். புகாரி : 444

6. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். தன் வேஷ் டியை (கீழாடையை) பெருமைக்காக (தரை கூட்ட) இழுத்துச் செல்பவன் நரகவாதி; அவனை அல்லாஹ் தன் அருட்பார்வையால் பார்க்க மாட்டான். அறி விப்பாளர்கள்: அபூஸயீத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் புகாரீ: 5887, 5787, முஸ்லிம்:2087, அபூதாவூத்:638, சமுரா(ரழி) அவர்கள் அஹ்மத் 19309, அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) அவர்கள், புகாரி : 3665, முஸ்லிம்: 2085, அபுதர் (ரழி) அவர்கள், முஸ்லிம் 106.

7. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தங்க மோதிரத்தை (தங்கத்தை) அணிய வேண்டாமென்று ஆண்களுக்கு தடை விதித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரி : 5864

8. உலக (இம்மை மீது) ஆசை அதிகரித்தவரின் எண்ணங்கள் செல்லும் திசை பணம் இருக்கும் பக்கமே யாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நஸயீ.

9. எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார். எனக்கு மாறு செய்பவர் சத்தியத்தை ஏற்க மறுத்தவர் ஆவார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரழி), புகாரி : 7280

ஆசிரியர் குறிப்பு :

மார்க்கம் கற்ற மாமேதைகள் என மார்தட்டும் மவ்லவிகள் குர்ஆனையும் பின்பற்றுவதில்லை, ஆதாரபூர்வமான ஹதீஃத்களையும் பின்பற்றுவ தில்லை, நான்கு இமாம்களின் வழிகாட்டலையும் பின்பற்றுவதில்லை. பித்அத்கள் அனைத்தும் வழிகேடுகள் நரகில் கொண்டு சேர்க்கும் என்று நபி(ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்ததை நிராகரித்து பித்அத்களை அரங்கேற்றுவதில் மிகமிகக் குறியாகவும், வெறியாகவும் இருக்கிறார்கள் என்பதற்கு இந்தத் தொப்பி விவகாரமும் நல்லதொரு ஆதாரமாகும். தொப்பி அணிவது சுன்னத்தும் அல்ல, பித்அத்தும் அல்ல, ஆதத் ஆகும். ஒருவர் வழமையாக தொப்பி அணிந்தே காணப்படுகிறார். அவர் தொப்பியோடு தொழலாம். வழமையாக தொப்பியின்றித் திரிபவர் தொப்பியின்றித் தொழுவதே சிறப்பு. தொழுகைக்கென்று தொப்பி அணிய வற்புறுத்துவது பாவம். அது தொப்பி அணிந்து தொழ வற்புறுத்துவரையே சாரும்.

இந்த மவ்லவிகள் முஸ்லிம்களை பித்அத்தை செய்ய வைத்து அவர்களை நரகில் தள்ள எந்தளவு வெறித் தனமாகச் செயல்படுகிறார்கள் பாருங்கள்! தாடியை வளர விடுவதும், மீசையைக் கத்தரிப்பதும் எனது எஜமானின் (அல்லாஹ்வின்) கட்டளை என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருக்க, அதைக் கண்டு கொள்ளாமல் சு.ஜ. மவ்லவிகள் பித்அத்தான முறையில் தொப்பி அணிவதை வற்புறுத்து கிறார்கள். அதற்கு மாறாக ததஜவினரின் பித்அத்தைப் பாருங்கள். எப்போதும் தொப்பியுடன் காட்சி தரும் ஓர் இமாம் தொழ வைக்கும்போது தொப்பியைக் கழற்றி மிம்பரில் வைத்து விட்டுத் தொழ வைக்கும் காட்சியையும் பார்த்தோம் சு.ஜ.வினர் தொப்பிப் போட்டுத்தான் தொழ வேண்டும் என்பது எப்படி பித்அத்தோ வழிகேடோ அதேபோல் ததஜாவினர் தொப்பி போடாமல் தொழனும் என்பதும் பித்அத்தே வழிகேடே. மவ்லவிகள் அனைவரும் முஸ்லிம்களை வழிகெடுத்து நரகில் தள்ளவே மிக ஆர்வமாக உள்ளனர்!

இஸ்லாத்தில் இடைத்தரகர்களுக்கு இடமுண்டா?

– இப்னு ஹத்தாது.

(நபியே!) என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த் தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன், அவர்கள் என்னிடமே (பிரார்த்திக்) கேட்கட்டும், என்னையே நம்பட்டும், அப்பொழுதே அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக! (2:186)

(மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதையே பின்பற்றுங்கள், அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர் (களாக்கி கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள், நீங்கள் குறைவாகவே உபதேசம் பெறுகிறீர்கள். (7:3)

நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக நிராகரிப்போருக்கு நரகத்தைத் தங்குமிடமாக நாம் தயார் செய்து வைத்திருக்கிறோம். (18:102)

மேலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றி முடிவெடுத்துவிட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பி ராயம் கொள்வதற்கு நம்பிக்கை கொண்டுள்ள எந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் உரிமையில்லை, ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் மாறு செய்கிறாரோ, நிச்சயமாக அவர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார். (33:36)

 (வெற்றி கொள்ளப்படும் அனைத்து) ஊரார்களிடமிருந்து அல்லாஹ் தன் தூதருக்கு மீட்டுக் கொடுத்தவை அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்கும் உரியதாகும். உங்க ளிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ் வாறு பங்கிட்டுக் கொடுக்கக் கட்டளையிடப்பட் டுள்ளது) மேலும் (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள், இன்னும் எதை விட்டும் உங்களை விலக்கினாரோ (அதை விட்டும்) விலகிக் கொள்ளுங்கள், மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமான வன். (59:7)

இந்த ஐந்து வசனங்களையும் யார் தங்கள் உள்ளங்களில் பதிய வைத்துக் கொள்கிறார்களோ, அவர்கள் அல்லாஹ்வுக்கும், தங்களுக்கும் இடையில் ஆலிமையோ, அரசியல் தலைவரையோ, அவா மையோ ஒருபோதும் புகுத்தமாட்டார். நேரடியாக 2:186 கட்டளைப்படி அல்லாஹ்வை மட்டுமே நம்பி, 3:103

இறைக்கட்டளைப்படி முஸ்லிம்களை பிளவுபடுத்தாமல், குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன் வழிகாட்டல்படி மட்டுமே நடப்பார்கள். இந்த உண்மையைத்தான் அந்நஜாத் ஆரம்பத்தி லிருந்து “இஸ்லாத்தில் புரோகிதத்திற்கு அணுவின் முனை அளவும் அனுமதி இல்லை, புரோகிதம் பஞ்சமா பாவங்களை விடப் பெரும் பாவம். கொடிய ஹராம் (கண்டிப்பாகத் தடுக்கப்பட்டது) என்று தொடர்ந்து கூறி வருகிறது. அதற்கு ஆதாரமாக குர்ஆன் வசனங்களையும், ஆதாரபூர்வமான ஹதீஃத்களையும் மட்டுமே எடுத்து வைக்கிறது. ஆயினும் இந்த முயற்சி 51:55 இறைவாக்குக் கூறுவது போல் ஆயிரத்தில் ஒன்றாகத் தேரும் உள்ளத்தில் ஈமான்-இறை நம்பிக்கையுள்ளவர்களுக்கு மட்டுமே பலன் தரும், 1000ல் 999ஆகத் தேரும் பெயர் தாங்கி முஸ்லிம்களுக்குப் பலன் தராது என்பதையும் அறிந்த நிலையிலேயே அந்நஜாத் தன் பணியைத் தொடர்கிறது. (32:13, 11:118,119) (பார்க்க : புகாரீ(ர.அ) 3348, 4741, முஸ்லிம் (ர.அ.) 379) நரகை நிரப்ப இருக்கும் 1000ல் 999 பேரைத் தங்களின் வசீகர உடும்புப் பிடியில் சிக்கவைத்துக் கொண்டு, நரகை நோக்கி நடைபோட வைக்கிறார்கள் இந்த ஆலிம் என பெருமை பேசும் மவ்லவிகள். (பார்க்க : 7:146)

நாங்கள்தான் மார்க்கம் கற்ற மேதைகள் என பெருமை பேசும் மவ்லவிகள் ஒருபோதும் நேர்வழியை ஏற்கமாட்டார்கள், வழிகேடுகளைத்தான் நேர்வழியாக ஏற்று அவற்றையே மக்களுக்குப் போதிப்பார்கள் என்பதை 7:146 இறைவாக்கை நேரடியாகப் படித்து அறிகிறவர்கள் ஏற்பார்கள். மேலும் 2:256 இறைவாக்கு மார்க்கத்தில் எவ்வித நிர்பந்தமோ, சிரமமோ இல்லை, வழிகேட்டி லிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகி விட்டது. ஆகையால் எவர் தாஃகூத் என்ற மனித ஷைத்தானாகிய மவ்லவிகளை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ, அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை (குர்ஆனை) நிச்சயமாகப் பற்றிக் கொண்டார்… (2:256) அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்). அவன் அவர்களை இருள் களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகிறான்.

ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ (வழி கெடுக்கும்) தாஃகூத்(என்ற மனித ஷைத்தான் களான மவ்லவிகள்) தாம் அவர்களின் பாதுகாவலர்கள். அவர்கள் அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களின் பக்கம் (பார்க்க : 7:146) கொண்டு வருகிறார்கள். அவர்களே நரகவாசிகள் அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பர். (2:257)

இன்னும் எண்ணற்ற குர்ஆன் வசனங்கள் வீண் பெருமை பேசி, மார்க்கத்தை மதமாக்கி அதையே வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டுள்ள இந்த மவ்லவிகளைத் தெளிவாக அடையாளம் காட்டு கின்றன. பெருங் கொண்ட மக்களை வழிகெடுத்து நரகில் தள்ளி நரகத்தை நிரப்ப ஜின் இன ஷைத் தானுக்குத் துணை போய், அவனது நேரடி ஏஜண் டாகச் செயல்படும் மனித இன ஷைத்தான்களான-தாஃகூத்களான இம்மவ்லவிகளே வானத்தின் கீழுள்ள படைப்புகளியே ஆகக் கேடுகெட்டப் படைப்பு என்பதை குர்ஆனும், ஹதீஃத்களும் உறுதிப்படுத்துகின்றன. (பார்க்க : 7:175-179, 45:23, 47:25. பைஹகி 1908)

இப்போது ஆயிரம் மாதங்களை விட சிறப்புப் பெற்ற லைலத்துல் கத்ர் என்ற நாளைக் கொண்ட ரமழான் மாதத்தில் இருக்கிறோம். நன்மைகளை வாரித் தரும் மாதம். பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம். இன்னும் எண்ணற்றச் சிறப்புகளைக் கொண்ட மாதம் இந்த ரமழான் மாதம். இந்த மிகமிக கண்ணியமிக்க மாதத்தில் 6:116 இறைவாக் குக் கூறுவது போல் எப்படி வழிகெடுக்கும் இம் மவ்லவிகள் தங்களின் யூகங்களையும், கற்பனை களையும், அனுமானங்களையும் புகுத்தி வழி கேட்டிலாக்கி பெருங்கொண்ட முஸ்லிம்களை நரகில் தள்ளுகிறார்கள் என்று பாருங்கள்.

அவர்களின் கற்பனைகள், சுய புராணங்கள் எண்ணற்ற குர்ஆன் வசனங்களுக்கும், ஆதாரபூர்வ மான ஹதீஃத்களுக்கும் முரணாக இருப்பதையும் நீங்களே கவனமாக, சுயசிந்தனையுடன் படித்தால் அறிய முடியும். 2:189, 6:96, 7:54, 9:36,37, 10:5, 13:2, 14:33, 16:12, 17:12, 21:33, 25:61, 29:61, 31:29, 35:13, 36:40, 39:5, 55:5 இந்த இறைவாக்குகள் அனைத்தையும் எவர் எப்பக்கமும் சாராமல், நடுநிலையுடன், சுய சிந்தனையுடன் படித்து அறிகிறார்களோ அவர்கள் சூரியனும், சந்திரனும் அல்லாஹ்வின் முழுக் கட்டுப்பாட்டில் ஒரு வினாடி கூட முன்பின் ஆகாமல் சுழல்கின்றன. துல்லிய கணக்கீட்டின்படியே சுழல்கின் றன. அக்கணக்கீட்டை கணக்கிடும் வகையில் மனிதனுக்கு வசப்படுத்தித் தந்திருப்பதாகவும் இறைவன் கூறுகிறான்.

அக்கணக்கும் நவீன கண்டுபிடிப்பும் நபி(ஸல்) அவர்களது காலத்தில் இல்லை என்பதை நபி(ஸல்) “”லாநக்த்துபு வலா நஹ்சுபு” நமக்கு எழுதவும் தெரியாது, கணக்கிடவும் தெரியாது என்று தெளிவாக அறிவித்தும் உள்ளார்கள். இத்தனை குர்ஆன் வசனங்களையும் நிராகரித்து குஃப்ரிலாகி இந்த வழிகெடுக்கும் மவ்லவிகள் என்ன சொல்லி பெருங்கொண்ட மக்களை ஏமாற்றி வழி கெடுக்கிறார்கள் தெரியுமா?

நபி(ஸல்) அவர்கள் இந்த அனைத்து குர்ஆன் வசனங்களையும் நிரா கரித்து குஃப்ரிலாகி சந்திரனை புறக்கண்ணால் பார்த்து மட்டுமே மாதத்தை ஆரம்பிக்கச் சொன்ன தாகத் தார்ப்பாயில் வடித்தெடுத்தப் பொய்யைக் கூறி மக்களை வழிகெடுக்கிறார்கள். நபி(ஸல்) புறக்கண்ணால் மட்டுமே பிறையைப் பார்த்து மாதத்தைத் துவங்கக் கட்டளையிட்ட ஹதீஃதைக் காட்டுக்கள் என்று கேட்டால், அப்படி ஒரு ஹதீஃத் இருந்தால்தானே காட்ட முடியும்.

பொதுவாக கண்ணால், உள்ளத்தால், தகவலால், ஆய்வால், கணிப்பால், கணக்கீட்டால் என அனைத்தையும் குறிக்கும் ஹதீஃத்கள்தானே இருக்கின்றன. குர்ஆனிலும் இந்த அனைத்து கருத்துக்களையும் கொண்ட எண்ணற்ற வசனங்கள் காணப்படுகின்றன. ஆகப் புறக்கண்ணால் மட்டுமே பிறையைப் பார்க்கச் சொன்ன ஒரு பலவீனமான, இட்டுக்கட் டப்பட்ட ஹதீஃதும் இல்லாத நிலையில், எப்படித் தங்களின் விதண்டாவாதத்தை எடுத்து வைக்கின்ற னர் என்று பாருங்கள். அன்று 1437 வருடங்களுக்கு முன் நபி(ஸல்) அவர்கள் புறக்கண்ணால் பிறையைப் பார்த்துத் தானே மாதத்தைத் துவங்கினார்கள் என்ற வாதத்தை வைக்கின்றனர்.

அன்று நபி(ஸல்) அவர்கள் ஒட்டகத்தில்தான் தூரப் பயணம் செய்தார்கள். சூரியனைப் புறக்கண்ணால் பார்த்துத்தான் தொழுகை நேரத்தை அறிந்து தொழுதார்கள். அவற்றை அப்படியே நீங்கள் பின்பற்றுகிறீர்களா? என்று கேட்டால் திருதிருவென விழிக்கிறார்கள். 6:68, 40:35 இறைவாக்குகளை நிராகரித்து எவ்வித ஆதாரமும் இல்லாமல் குர்ஆன் வசனங்களின் வீண் தர்க்கம் புரிகின்றனர். அதனால் அல்லாஹ் இம் மவ்லவிகளின் இதயத்தின் மீதும் முத்திரை இட்டு விடுகிறான்.

எனவே 7:146 இறைவாக்குக் கூறுவது போல், நேர்வழியை ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நீங்கள் இன்று பார்ப்பது போல் மாத இறுதியில் மஃறிபுக்குப் பிறகு மேற்கில் பிறை பார்த்த ஒரே யயாரு ஹதீஃதையாவது காட்டுங்கள் என்று கேட் டால், குர்ஆனுக்கும், ஆதாரபூர்வமான ஹதீஃத்களுக்கும் முற்றிலும் முரணான ஒரு தாபியீ சொல் லும் அஃதர் என்ற செய்தியைத் தூக்கிப் பிடிக்கிறார்கள். கலீஃபாக்கள், நபிதோழர்களின் செய்தியை நிராகரிக்கும் ததஜவினர் பிறை விவகாரத்தில் ஒரு தாபியியின் பலவீனமான செய்தியைப் பிடிவாதமாகப் பிடித்துத் தொங்குவதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். ஆதாரபூர்வமான ஹதீஃத்களின்படி அன்று, மாதக் கடைசியில் மேற்கில் மறையும் பிறையைப் பார்த்து மாதத்தைத் துவங்கியதற்கு அணுவளவும் ஆதாரமில்லை.

மாதக் கடைசியில் மேற்கில் மறையும் பிறையைப் பார்த்து பிறை பிறந்துவிட்டது, மாதம் துவங்கிவிட்டது, நாள் மஃறிபில் ஆரம்பிக்கிறது என்ற வடிகட்டின மூடத்தனமான நடைமுறை கி.மு. 383ல் அதாவது நபி(ஸல்) அவர்களது காலத்திற்கும் சுமார் 1000 வருடங்களுக்கு முன்னர் யூதர்கள் நடைமுறைப்படுத்தியது என்ற மறுக்க முடியாத செய்தி வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. யூதர்களை ஜானுக்கு ஜான், முழத்திற்கு முழம் பின்பற்றுகிறவர்களே இம்மவ்லவிகள், அவர்கள் ஓர் உடும்பின் பொந்தில் நுழைந்திருந்தால் இம்மவ்லவி களும் நுழைவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் முன் அறிவிப்புச் செய்துள்ளது பொய்யாகுமா? ஒருபோதும் பொய்யாகாது.

ஆக இன்று இந்த மூட முல்லாக்கள் மாதக் கடைசியில் மேற்கே மறையும் பிறையைப் பார்த்து பிறை பிறந்துவிட்டது, மாதம் துவங்கி விட்டது, நாள் ஆரம்பித்துவிட்டது, நாள் மாலை மஃறிபில் ஆரம்பிக்கிறது என்று தொடர்ந்து விடாது ஒப்பாரி வைப்பது வடிகட்டின மூடத்தனமும் பெருத்த வழிகேடும் ஆகும். நாளை இம் மவ்லவிகளும், அவர்களது முகல்லிது பக்தர்களும் நரகை நிரப்ப இருக்கிறார்கள் என்பதே 33:36, 66-68 இறைவாக்குகளும், மேலும் எண்ணற்ற இறை வாக்குகளும் உறுதிப்படுத்தும் உண்மையாகும்.

அன்று நபி(ஸல்) அவர்கள் யூத நடைமுறையைப் பின் பற்றவில்லை. இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் தினசரி பிறையின் சுழற்சியை அவதானித்து வந்தார்கள். பிறையின் தோற்றத்தைப் பார்த்தே அது இன்ன தேதியின் பிறை என்பதை அவர்களால் தீர்மானிக்க முடிந்தது. 36:39 இறைவாக்குச் சொல்லும். “உர்ஜூனில் கதீம்’ என்ற மாதத்தின் இறுதி நாளிற்கு முதல் நாளை கிழக்கே சூரிய உதயத்திற்கு முன்னர் கண்ணால் பார்த்தனர்.

அடுத்த நாளை கழியும் மாதத்தின் கடைசி நாளாகக் கணக்கிட்டனர். அவ்வாறே கட்டளையும் இட்டுள்ளனர். அதற்கடுத்த நாள் புதிய மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளவே வழிகாட்டியுள்ளனர். குர்ஆனும், ஹதீஃதும் கூறும் நேர்வழி கருத்துக் கள், தூய மார்க்கத்தை கோணல் வழிகள் மதங்களாக்கி அவற்றையே தங்களின் வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட இம்மவ்லவிகளுக்கு 17:41,45-47,89, 22:72, 25:60, 39:45 குர்ஆன் வசனங்கள் கூறுவது போல் நேரடி குர்ஆன் வசனங்கள் எட்டிக் காயாகக் கசக்கின்றன. அதற்கு மாறாக யூதர்கள் கி.மு. 383-ல் நடைமுறைப்படுத்திய காலையில் உதித்து மாலையில் மறையும் கண்ணுக்குத் தெரியும் 2-ம் பிறையோ, 3-ம் பிறையோ தான் இம்மூட முல்லாக்களுக்கு முதல் பிறையாக, நேர்வழியாகத் தெரிகிறது. (பார்க்க : 7:146)

ஆக 2-ம் நாளையோ, 3ம் நாளையோ முதல் நாளாக முஸ்லிம்களை நம்ப வைத்து அவர்களின் முதல் ஒரு நோன்பையோ இரு நோன்புகளையோ பாழாக்கி, அதன் பின்னர் வாழ் நாள் முழுவதும் நோன்பு நோற்றாலும் அதற்கு ஈடா காதே அப்படிப்பட்ட பேரிழப்பில் மூழ்க வைப்பதே இம்மூட மவ்லவிகளின் பெருத்த சாதனை. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்று சொல்வது போல், மூன்றாம் நாளை முதல் நாளாக அறிவீனமாக முஸ்லிம்களை நம்ப வைத்தது போல், ரமழான் மாதம் முழுக்க இம்மவ்லவிகள் முஸ்லிம்களை செய்ய வைப்பவை அனைத்தும் பித்அத்களே-வழிகேடுகளே-நரகில் சேர்ப்பவையே.

இவை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்! கண்ணால் மாதக் கடைசியில் மேற்கில் மறையும் பிறையைப் பார்க்கும் யூத மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றி ரமழான் முதல் இரண்டு நாட்களைப் பாழாக்கியது போல், அதே வழியில் முஸ்லிம் சமுதாயத்தை ஷவ்வால் ஒன்றில் நோன்பு நோற்பது ஹராம் என்று நபி(ஸல்) எச்சரிப்பதை நிராகரித்து அன்று முஸ்லிம்களை ஹராமான முறையில் நோன்பு நோற்க வைப்பது இம்மவ்லவிகளின் அடுத்த வழிகேடு. நரகை நோக்கி நடைபோட வைக்கிறார்கள்.

அடுத்து சஹரிலும், இஃப்தாரிலும் இம் மூட முல்லாக்கள் போதிக்கும் குர்ஆனுக்கும், ஹதீஃ துக்கும் முரணான போதனையைப் பாருங்கள். இதோ குர்ஆன் கூறுகிறது: “… அதிகாலை (ஃபஜ்ர்) நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கறுப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள், பின்னர் இரவு வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்…” (2:187)

இந்த இறைக்கட்டளைக்கு விளக்கமாக நபி (ஸல்) அவர்கள் “எதுவரை இந்தச் சமுதாயம் சஹரைப் பிற்படுத்தி இஃப்தாரை முற்படுத்துகிறதோ அதுவரை நலவிலே இருக்கும் என்று கூறினார்கள். அதற்கு மாறாக இம் மூட முல்லாக்கள் 2:187 குர்ஆன் வசனம், மேற்படி ஹதீஃத் இரண்டையும் நிராகரித்து ஃபஜ்ர் வக்துக்கு 20 நிமிடங்கள் முன்னர் சஹரை முடித்து, சுமார் 7 நிமிடங்கள் இஃப்தாரைப் பிற் படுத்துகின்றனர். கேட்டால் அவாம்கள் தவறிழைத்து விடுவார்கள் என்ற பேணுதலுக்காக இப்படிச் சட் டம் சொல்கிறோம் என்கிறார்கள். அதாவது அல்லாஹ்வுக்கு அவனது தூதருக்கும் தெரியாத சட்டம் இவர்களுக்குத் தெரிகிறதாம். (பார்க்க : 42:21, 49:16)

ஆக ரமழான் மாதம் ஆரம்பிப்பதையும், முடிவதையும் பாழாக்கி முஸ்லிம்களை பாவிகளாக்குவதோடு, நோன்பு ஆரம்பிப்பதையும், முடிப்பதையும் பாழாக்கி முஸ்லிம்களை பாவியாக்கி நரகில் விழ வழி வகுத்தாகி விட்டது. அடுத்து பர்ழான தொழுகையைப் பாழாக்கும் விதம் பாருங்கள்! வழிகெட்ட நான்கு மத்ஹபுகளில் ஆக வழிகெட்ட மத்ஹப் ஹனஃபி மத்ஹப்; அதில்தான் “சூரத்துல் ஃபாத்திஹா இல்லாமல் தொழுகை இல்லை” என்ற நபி(ஸல்) அவர்களின் தெளிவான வழிகாட்டலுக்கு மாறாக சூரத்துல் ஃபாத்திஹா ஓதாவிட்டாலும் தொழுகை நிறை வேறிவிடும் என்ற குருட்டு வழிகேட்டு ஃபத்வா. முன் காலத்தில் கடிகாரம் பார்த்துத் தொழுவதை வீம்பாக மறுத்துக் கொண்டிருந்து விட்டு இப்போது மக்கள் மாறிவிட்டதால் தங்களையும் மாற்றிக் கொண்ட இம்மவ்லவிகள் அதிலும் வழிகேட்டைப் புகுத்துவதைப் பாருங்கள். சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னர் தோராயமாகக் கணித்த தொழுகை நேரங் களையே இன்றும் பள்ளிகளில் மாட்டியுள்ளனர்.

அவை இன்றைய நவீன துல்லிய கணக்கீட்டின்படி யுள்ள தொழுகை நேரங்களில் சில நிமிடங்கள் வித்தியாசப்படுகின்றன. உதாரணமாக இப்போது துல்லிய கணக்கீட்டின் படி திருச்சியில் ஃபஜ்ருடைய நேரம் அதிகாலை 4:36 (13.6.2016) இவர்களின் தோராயக் கணிப்பின்படி 4:30. சரியான கணக்கிற்கு 6 நிமிடம் முன்னராகும். மற்றக் காலங்களில் வழமையாக வக்து வந்த பின்னர் சுமார் 10 நிமிடங்கள் கழித்து 4.50க்கு பாங்கு சொல்வார்கள். ஆனால் நோன்பு காலத்தில் வக்து வருவதற்கு முன்னரே 4.30க்கு பாங்கு சொல்லி மக்களும் வக்து வருவதற்கு முன்னரே ஃபஜ்ர் சுன்னத்து தொழுகிறார்கள். அதேபோல் இமாம் சப்தமிடடு ஓதும் ரகாஅத்துகளில் முக்ததி வாய் மூடி காது தாழ்த்தி அதைக் கேட்கவேண்டும் என்பது இறைக் கட்டளை. (பார்க்க 7:204)

இமாம் சூரத்துல் ஃபாத்திஹாவை சப்தமிட்டு ஓதாமல் மெளனமாக நிற்கும் நிலையிலும் முக்ததிகள் சூரத்துல் ஃபாத்தி ஹாவை மெளனமாக ஓதாமல் நிற்க வேண்டும் என்பதுதான் ஹனஃபி மத்ஹப் சட்டம். இன்னும் வேடிக்கை ஜனஸா தொழுகையில் இமாம் சூரத்துல் ஃபாத்திஹா ஓதாமல் ஃதனாவை ஓத வேண்டும். ஆக சூரத்துல் ஃபாத்திஹா இல்லாமல் தொழுகையே இல்லை என்ற நபி(ஸல்) அவர்களின் கட்டளையை நிராகரித்து மக்களை வழிகேட்டில் இட்டுச் செல்வதுதான் ஹனஃபி மத்ஹப். தொழுகையிலேயே இந்த அளவு குர்ஆன், சுன்னாவுக்கு முற்றிலும் முரண்பட்ட செயல்கள் என்றால், இன்னும் பாருங்கள் : 97:5 இறைவாக்கும், 2:238 இறைவாக்குக் கூறும் நடுத்தொழுகை அஸர் தொழுகை என நபி(ஸல்) அவர்களின் மனைவியரில் சிலரும், நபிதோழர்களில் சிலரும் அறிவிக்கும் முத்தவாத்திரான ஹதீஃத்களையும், 2:51, 19:10. இந்த இறைவாக்குகள் அனைத்தையும் நடுநிலையுடன் படித்து உணர்கிறவர்கள் நாள் ஃபஜ்ரில் ஆரம்பித்து, ஃபஜ்ரில் முடிகிறது என்பதை மிக எளிதாகத் திட்டமாக உணர முடியும்.

இந்த 97:5 வசனத்திலுள்ள லைலத் என்ற பதத்தை நாள் என்று மொழி பெயர்க்காமல் இரவு என்று மொழி பெயர்த்து இந்த மவ்லவிகள் மூடர் களாவதோடு, அவர்களை நம்பியுள்ள மக்களையும் மூடர்களாக ஆக்குகிறார்கள்.

இதிலுள்ள லைலத் இரவு என்றால் அது மஃறிபில் ஆரம்பித்து சூரிய உதயம் வரை இருக்க வேண்டுமே. அது எப்படி ஃபஜ்ருடன் முடிவடையும். அப்படியானால் கத்ர் வெறும் 10¾ மணி நேரம் மட்டுமே இருக்குமா? எஞ்சியுள்ள 13¼ மணி நேரப் பகுதியிலுள்ள மக்க ளுக்கு கத்ருடைய பாக்கியம் இல்லையா? அவர் களுக்கும் அந்தப் பாக்கியம் உண்டு என்றால் 10¾ + 13¼=24 மணி நேரம் அது ஒரு நாள் இரவல்ல என்ற சாதாரண கணக்கும் இந்த மவ்லவிகளுக்குத் தெரியாதா? நாம் அவர்களை மூட முல்லாக்கள் என்று சொல்வது தவறா?

யூத மதக் கலாச்சாரமான நாள் மஃறிபில் ஆரம் பிக்கிறது என்ற இம்மவ்லவிகளின் மூடத்தனத்தில் மக்கள் ஒற்றைப் படை இரவு என்ற மூட நம்பிக்கை யில் இரட்டைப் படை இரவுகளில் லாலத்துல் கத்ரின் அமல்களைச் செய்து அதைப் பாழாக்குகிறார்கள். நாளை நரகை அடையச் செய்யும் பித்அத் களான வழிகேடுகளை அரங்கேற்றுவதில் இந்த மவ்லவிகள் எந்தளவு குறியாகவும் அக்கறையுடனும் செயல்படுகிறார்கள் என்று பாருங்கள். வழமையாக 10 அல்லது 12 நிமிடங்கள் தொழும் ஃபஜ்ர் தொழுகையை 5 நிமிடங்களாகக் குறைத்து விடுகின்றனர். சமீப காலமாக படித்து வரும் ஸஹீஹ், பலவீன, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஃத் களையும் ரமழானில் நிறுத்தி விடுகிறார்கள்.

அதே சமயம் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத பித்அத் தான முறையில் ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்னர் பொருள் அறியாமல் பரக்கத் என்ற நம்பிக்கையில் ஓதப்படும் யாஸீனையும், பித்அத்தான கூட்டு துஆ வையும் விடாமல் கடைபிடிக்கிறார்கள். இன்னும் பாருங்கள்! புகாரி 731வது ஹதீஃதில் ரமழான் இரவுத் தொழுகையை பிந்திய இரவில் தங்கள் தங்கள் வீடுகளின் தொழுவதே சிறப்பு என்று நபி(ஸல்) நேரடியாகக் கட்டளையிட்டுள்ளார்கள். இஷாவுக்குப் பிறகு தராவீஹ் என்ற பெயரால் 20+3=23 ரகாஅத்துகள் தொழுதாக ஒரு ஆதூரபூர்வ மான ஹதீஃதும் இல்லை.

அனைத்துப் பலவீன மானவை! அல்லாஹ்வோ, அவனது தூதரோ காட்டித் தராத ஒரு அமல் ஒருபோதும் மார்க்கம் ஆகாது என்று 33:36 குர்ஆன் வசனம் கூறுகிறது. மேலும் அது பகிரங்கமான வழிகேடு என்று அதே வசனம் கூறுகி றது. மீறி அப்படிப்பட்ட பித்அத்களை செய்யச் சொல்லும் இம்மவ்லவிகளும், அவர்களை தக்லீது செய்யும் முஸ்லிம்களும் நாளை நரகில் கிடந்து வெந்து கரியாகிக் கொண்டு ஒருவரை ஒருவர் சபித் துப் புலம்புவதை 33:66-68 இறைவாக்குகளே உறு திப்படுத்துகின்றன. (மேலும் பார்க்க : 7:35-41, 34:31 -33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45) சரி அப்படித் தொழுகிறார்களே, அத்தொழுகைகளின் சட்டங்களை முறையாகப் பேணுகிறார்களா? அதுவும் இல்லை.

குர்ஆன் ஓதும் வேகம் ஜெட் விமான வேகத்தைத் தோற்கடித்து விடும். ஓதுவது இன்னதுதான் என்று ஓதுபவருக்கும் தெரியாது. முகல்லிதுகளான முக்ததிகளுக்கும் தெரியாது. தொழுகையின் நிலையிலேயே திருடும் பலே திருடர்களாக இருக்கிறார்கள் தொழ வைப்பவரும், அவர் பின்னால் தொழுபவர்களும். அத் தொழு கையே நபி(ஸல்) காட்டித் தராத பித்அத். அந்த பித்அத்தான தொழுகையை தொழும் முறையும், அத்தொழுகை அவர்கள் முகத்தில் எறியப்படும் முறையில் பித்அத்தாக அமைந்துள்ளது. அல்லாஹ்வுடன் மிகமிக நெருக்கத்தை உண் டாக்கும் தொழுகையையே கேலிக் கூத்தாக்கும் இம்மவ்லவிகள், மார்க்கத்தில் வேறு எதைக் கேலிக் கூத்தாக்காமல் இருப்பார்கள். சிந்தியுங்கள்! இந்த மூட முல்லாக்கள் அப்பாவி முகல்லிது முஸ்லிம்களை என்ன சொல்லி ஏமாற்றுகிறார்கள் தெரியுமா? தொழுகை நன்மை தரும் செயல், யாஸீன் ஓதுவது நன்மை தரும் செயல். இவற்றையே பித்அத் வழிகேடு என்கிறாரே, இவர் யூதக் கைக்கூலி யாகத்தான் இருப்பார் என்று மக்களைத் திசை திருப்பி ஏமாற்றி வருகிறார்கள்.

4:112 இறைவாக்குக் கூறுவது போல் அவர்கள் யூதக் கைக்கூலிகளாக இருந்து கொண்டு அப்பழியை குர்ஆன், ஹதீஃதை மட்டும் சொல்பவர்கள் மீது சுமத்துகிறார்கள். முதலில் இந்த மூட முல்லாக்களுக்கு எது மார்க்கம்? எது பித்அத் என்ற அடிப்படையே தெரியாத வடிகட்டின மூடர்களாக இருக்கிறார்கள். 5:3, 3:19, 85, 33:36, 59:7 குர்ஆன் வசனங்கள் வழிகாட்டல்படி அல்லாஹ் குர்ஆனில் கூறி, நபி(ஸல்) அவர்கள் தமது 23 வருட வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தியவை மட்டுமே மார்க்கத்திற்கு உட்பட்டவையாகும். நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்னர் மார்க் கத்தை வயிற்றுப் பிழைப்பாக்கிய இம்மவ்லவிகளின் முன்னோர்களான மதகுருமார்கள் கற்பனை செய்தவை அனைத்தும் பித்அத்கள் வழிகேடுகள் நரகை அடையச் செய்பவை என்பதை எளிதாக உணர முடியும். ஆயினும் இம்மவ்லவிகள் 7:146 வசனம் கூறுவதுபோல் இந்த உண்மையை நேர்வழியை ஒரு போதும் ஏற்கமாட்டார்கள்.

மார்க்க அடிப்படையில், தீனுடைய அடிப் படையில் நன்மை தரும் செயல் என்றால் அது குர்ஆனில் இருக்க வேண்டும். ஆதாரபூர்வமான ஹதீஃதில் இருக்க வேண்டும். அல்லாஹ்வோ அவனது தூதரோ காட்டித்தராத மறுமையில் நன்மைகளைப் பெற்றுத் தரும் செயல்கள் இருக்கின் றன என்று கூறும் இம்மூடமுல்லாக்கள் அல்லாஹ் மீதும் அவனது தூதர் மீது எப்படிப்பட்ட மாபெரும் பழி சுமத்துகிறார்கள் தெரியுமா? இந்த நன்மையான செயல்களை அல்லாஹ்வும், அவனது தூதரும் மக்களிடமிருந்து மறைத்துவிட்டார்கள். (நவூது பில்லாஹ்) அந்த நன்மையான செயல்களையே நாங்கள் செயல்படுத்துகிறோம் என்கிறார்கள்.

அதாவது 42:21 இறைவாக்குக் கூறுவது போல் அல்லாஹ்வுக்கு மேல் அல்லாஹ்வாகி (நவூது பில்லாஹ்) 49:16 இறைவாக்குக் கூறுவது போல் அல்லாஹ்வுக்கே மார்க்கம் கற்றுக் கொடுக்க முற் பட்டிருக்கிறார்கள். நாளை இம்மவ்லவிகளையும் அவர்களது முகல்லிது பக்தர்களையும் எந்த நரகத்தில் போட்டு எப்படியயல்லாம் வேதனைப் படுத்துவான் என்பதை எண்ணற்ற குர்ஆன் வசனங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன.

நன்மைகளைக் கோடிகோடியாகக் கொள்ளை யடிக்க வாய்ப்புள்ள புனித ரமழான் மாதத்தில் அப்பாவி முஸ்லிம்களை நரகில் கொண்டு தள்ளும் பித்அத்களை செய்ய வைத்து கேவலம் ஒரு ஜான் வயிற்றை நிரப்பும் இப் பாவிகளான மவ்லவிகள் அரங்கேற்றும் கொடிய செயல்களை குர்ஆன் வசனங்களைத் தினசரி தொடர்ந்து பொருள் அறிந்து படித்து வருகிறவர்கள் மட்டுமே அறிய முடியும். அப்பெரும் பாக்கியத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் அவன் நாடும் மக்களுக்குக் கொடுத்தருள்வானாக.

ஹத்யு-உழுகியா-குர்பானி

– அபூ ஃபாத்திமா

இன்று முஸ்லிம்களிடையே மறுமையில் நன்மையை எதிர்பார்த்துச் செய்யும் நற்செயல்கள் எல்லாம் இம்மவ்லவிகளால் உலக ஆதாயங்களைப் பெற்றுத்தரும் வியாபாரப் பொருள்கள் ஆகிவிட்டன. அந்த வரிசையில் ஐங்காலத் தொழுகை ரமழான் இரவுத் தொழுகை போல், குர்பானியும் வியாபாரப் பொருள் ஆகிவிட்டது. அதன் விளைவு இன்று சுயசிந்தனையுள்ள அறிவு ஜீவிகளிடம் ஹஜ்ஜுக்குச் செல்லும் ஹாஜிகள் மட்டுமே குர்பானி கொடுக்க வேண்டும். உள்ளூர்களில் உள்ளவர்கள் குர்பானி கொடுக்க வேண்டியதில்லை என்ற புதிய கருத்து உருவாகி வருகிறது. அந்தக் கருத்தில் சென்ற வருடமே சில சகோதரர்கள் ஐயத்தைக் கிளப்பி இருந்தனர். அது பெருநாள் தீர்ந்துவிட்ட சமயமாக இருந்தால் அப்போதைக்கு அது பற்றி எழுதும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. அது பற்றிய தெளிவுக்காகவே இக்கட்டுரை எழுதப்படுகிறது.

மார்க்க வி­யங்களில் காலத்திற்குக் காலம் இப்படி நவீன சிந்தனைகள் எழுவது இயல்பே. உதாரணமாக இதே ஹத்யு என்ற ஹஜ்ஜில் குர்பானி கொடுப்பதையும் மறுத்து சர்ச்சை எழத்தான் செய்தது. அக்காலக்கட்டத்தில் இன்று ஹாஜ்ஜிகள் குர்பானி கொடுக்கப்படும் ஆடு, மாடு, ஒட்டகம் இவற்றை உடனடியாக சுத்தப்படுத்தி, பாதுகாத்து தேவைப்படும் ஏழை நாடுகளுக்கு அனுப்பும் நவீன வசதிகள் இருக்கவில்லை. குர்பானி கொடுக்கப்படும் அவற்றில் மிகப் பெரிய பகுதி குழிகள் தோண்டி அவற்றில் புதைக்கப்படும் அவல நிலையே இருந்தது. அப்போதிருந்த அறிவு ஜீவிகள் ஹஜ்ஜில் இப்படி குர்பானி கொடுத்து மக்கள் சாப்பிட வேண்டிய உணவுப் பொருளைக் குழி தோண்டிப் புதைப்பது என்ன நியாயம்? குர்பானி ஹஜ்ஜில் கொடுக்க வேண்டியதில்லை என்ற தங்களின் சுயக் கருத்துக்களை வெளியாக்கினர். இது 33:36 இறைவாக்குக்கு முரணானது என்பதை அவர்களால் உணர முடியவில்லை.

அதேபோல் இன்று முஸ்லிம்களில் ஹஜ்ஜுக்குச் செல்லாதவர்கள் ஊரில் குர்பானி கொடுப்பதை வைத்து மதவியாபாரிகள் செய்யும் அநியாய அக்கிரமச் செயல்களைக் காட்டி ஹஜ்ஜில் மட்டும் தான் குர்பானி கொடுக்க வேண்டும். ஊர்களில் குர்பானி கொடுக்க வேண்டியதில்லை என்ற கருத்தை வெளிப்படுத்துகின்றனர்.

மார்க்கம் முழுக்க முழுக்க அல்லாஹ்வுக்கு மட் டுமே சொந்தம். அதில் மனிதன் தனது மூக்கை நுழைக்க அணுவளவும் அனுமதி இல்லை. அது பகிரங்கமான வழிகேடு என்று பல குர்ஆன் வசனங்கள் கூறுகின்றன. மேலும் மனிதன் இவ்வுலகில் பரீட்சை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறான். (67:2) அல்லாஹ்வின் கட்டளை குர்ஆன் மூலமாகவோ, சுன்னா மூலமாகவே உறுதிப்படுத்தப்பட்டால் அதில் தனது சுய அறிவை நுழைக்காமல் அப்படியே நிறைவேற்றுவதுதான் ஈமானின் அடையாளம்.

இப்றாஹீம்(அலை) அவர்கள் அல்லாஹ்வின் நேசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஒரே காரணம், அவர்களுக்கு அல்லாஹ் இட்டக் கட்டளைகள் மிகமிகக் கடினமாக அறிவுக்குப் பொருந் தாமலும் இருந்தும், அவற்றைப் பொருட்படுத்தா மல், அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு முற்றிலும் அடிபணிந்ததே காரணமாகும். அவர்களது அறிவு சரி கண்டா பச்சிளம் பாலகனையும், தாயையும் மனித சஞ்சாரமே அற்ற சொட்டு நீர் கூட கிடைக்காத, புல்பூண்டுகள் முளைக்காதக் கடும் பாலைவனத்தில் தனியாக விட்டுச் செல்லத் துணிந்தார்கள். அறிவு சரிகண்டா துள்ளித் திரியும் பருவத்திலுள்ள தவம் கிடந்து பெற்ற அருமை மகனை அறுத்துப் பலியிடத் துணிந்தார்கள்? சிந்தியுங்கள்.

அல்லாஹ்வின் நேரடிக் கட்டளை என்றால் அங்கு மனித அறிவுக்கு வேலையே இல்லை! அல்லாஹ் நீ எனது எஜமானன், நான் உனது அடிமை. அடிமைக்கு எஜ மானனின் கட்டளைக்கு மாறு செய்ய அணுவளவும் அனுமதி இல்லை என்பதை விளங்கி நடப்பவர்களே உண்மையிலேயே ஈமான் கொண்ட இறை விசுவாசிகள், அவர்களே நாளை சுவர்க்கம் போக முடியும்.

அல்லாஹ்வின் நேரடிக் கட்டளைகளில் தன் சுய கருத்தினைப் புகுத்திச் செயல்படுகிறவர்கள் நாளை நரகை அடைந்து ஒப்பாரி வைக்கலாம். (பார்க்க: 33:36, 66-68)

3:7 இறைவாக்கு இரண்டாவது பொருளை எடுக்கவே முடியாத ஒரே பொருளை மட்டுமே தரும் முஹ்க்கமாத் வசனங்களையும், ஒன்றுக்கு மேல் பொருள் எடுக்க முடிந்த முத்தஷாபிஹாத் வசனங்களையும் கூறுகிறதே அல்லாமல், இந்த மூட முல்லாக்கள், குறிப்பாக பொய்யன் பீ.ஜை. சொல் வது போல விளக்கமான வசனங்கள் பற்றியும், விளக்கமற்ற வசனங்கள் பற்றியும் கூறவில்லை. இந்த 3:7ல் இடம் பெற்றுள்ள தஃவீல் பதத்திற்கு 4:59ல் வரும் முடிவான கருத்து என்பதற்கு மாற்றமாக விளக்கம் என்று பொருள் எடுப்பது வடிகட்டின மூடத்தனம் என்று 1987லிலிருந்தே எழுதி வருகிறோம். ஆனால் 7:146 இறைவாக்குக் கூறுவது போல் பெருமையடிக்கும் இந்த மூட முல்லாக்கள் சத்தியத்தை-நேர்வழியை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள் என்பதை அவர்களின் பக்தர்களில் அல்லாஹ் நாடும் ஒரு சிலராவது உணர்ந்து நேர் வழிக்கு வரமாட்டார் களா என்ற ஆதங்கத்தில் இப்படிக் கடுமையாக எழுத நேரிடுகிறது.

குர்ஆன் வசனங்களுக்கு விளக்கமான வசனங்கள், விளக்கமற்ற வசனங்கள் என்று இம்மவ்லவிகள் சுயவிளக்கம் கொடுத்து மொழி பெயர்த்துக் கொண்டு ஒரே பொருளுள்ள முஹ்க்கமாத் வசனங்களுக்கு விதவிதமான பொருள்களை அவரவர்களின் வழிகெட்டக் கொள்கைக்கு ஏற்றவாறு கொடுப்பது பகிரங்கமான வழிகேடு என்று 33:36 இறைவாக்கு நேரடியாகக் கூறுவதைக் கவனத்தில் கொள்ளவும். இன்று சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள எண்ணற்றப் பிரிவுகளுக்கும், பிளவுகளுக்கும், வழிகேடுகளுக்கும் இதுவே மிக முக்கியக் காரணம்.

முஹ்க்கமாத் வசனங்களுக்கு தஃப்ஸீர்-விரி வுரை என்ற பெயரால் இந்த மவ்லவிகள் கொடுத்திருக்கும் சுய விளக்கங்கள் அனைத்தும் பெருத்த வழிகேடு. முஹ்க்கமாத் வசனங்கள் கூறும் நேரடிக் கருத்தை வலியுறுத்திக் கூறுவது தவறல்ல. அதற்கு மாறாக 2:159 இறைவாக்குக் கூறுவது போல் அல்லாஹ்வாலேயே பாமர மக்களுக்கென்றே தெள்ளத் தெளிவாக நேரடியாக விளக்கப்பட்டுள்ள முஹ்க்கமாத் வசனங்களின் நேரடிக் கருத்துக்களை வளைத்து மறைத்து இருட்டடிப்புச் செய்து சுய கருத்துக்களைப் புகுத்தும் இம்மவ்லவிகள் அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் அனைவரின் சாபத்திற்குரியவர்கள். (பார்க்க : 2:159-162)

இதுகாலம் வரை ஹராமான வழியில் வயிறு வளர்க்கும் இம்மவ்லவிகள் செய்து வந்த இந்த வழிகேட்டை, அவர்களின் பிடியிலிருந்து விடுபட்டு, குர்ஆன், சுன்னாவைப் பற்றிப் பிடித்து நடக்க முற் படும் சகோதரர்களையும் இந்த வழிகேடு பற்றிக் கொள்வது பெரும் வேதனையைத் தருகிறது.

அந்த அடிப்படையில் குர்ஆன் வசனங்களுக்கு தங்கள் மனதில் பட்டதை எல்லாம் மேல் விளக்கமாகத் தந்து அவர்களும் வழி தவறுவதோடு மக்களையும் வழி தவறச் செய்கிறார்கள். அந்த அடிப் படையில் அவர்களின் கருத்துக்களை குர்ஆன், ஹதீஃத் நேரடிக் கருத்துக்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம்.

குர்பானி-பலி கொடுப்பது ஆதம்(அலை) அவர் கள் காலத்திலிருந்தே ஆரம்பித்து விட்டது என்பதை 5:27 குர்ஆன் வசனம் உறுதிப்படுத்துகிறது. எப்படி அலலாஹ்வை அடிபணிவது-வணங்குவது, நோன்பு நோற்பது முன்னைய சமுதாயங்களுக்கு விதிக்கப்பட்டதோ அதேபோல் குர்பானி-பலி கொடுப்பதும் விதிக்கப்பட்டதையே இந்த 5:27 வசனம் உறுதிப்படுத்துகிறது. மேலும் 3:183, 108:2 வசனங்களும் குர்பானியை உறுதிப்படுத்துகின்றன. அதேபோல் ஹஜ்ஜில் கொடுக்கும் குர்பானியை அல்லாஹ் 2:196, 5:2, 97 போன்ற வசனங்களில் “ஹத்யு” என்று அடையாளப்படுத்துகின்றான்.

இப்படித் தெளிவுபடுத்தியுள்ள அல்லாஹ் ஹஜ் ஜுக்குப் போகாதவர்கள் தங்கள் தங்கள் வீடுகளில் துல்ஹஜ் மாதம் 10,11,12 தேதிகளில் குர்பானி கொடுப்பதை ஈதுல் அழுஹா பெருநாளில் கொடுப்பதை உழுஹியா என்று அடையாளப்படுத்தியுள்ளான். இந்த விபரங்களை புகாரீ(ர.அ) ஹஜ்ஜு பெருநாள் அன்று உணவு உண்பது என்ற உப தலைப்பில் 954, 955, முஸ்லிம்(ர.அ) அத்தியாயம் 35. குர்பானிப் பிராணிகள் என்ற தலைப்பில் 3959 முதல் 4003 வரையுள்ள ஹதீஃத்களை யார் நேரடியாகப் படித்து விளங்குகிறார்களோ அவர்கள் ஒருபோதும், அரசியல் வியாபாரிகள் போல் மத வியாபாரிகள் குர்பானி விஷயத்தில் செய்யும் அட்டூழியங்களைப் பார்த்து ஹஜ்ஜில் மட்டும்தான் குர்பானி கொடுக்க வேண்டும். ஊரில் ஈதுல் அழுஹா என்ற பெருநாள் தினத்திலோ அடுத்தடுத்த 3 நாட்களிலோ குர்பானி கொடுப்பது தவறு என்று ஒருபோதும் சொல்ல மாட்டார்கள்.

ஒவ்வொரு முஸ்லிம் ஆணும் பெண்ணும் கண்டிப்பாக அறிய வேண்டியது, மறுமையில் அல்லாஹ்வின் பொருத்தத்துடன் சுவர்க்கம் நுழைய விரும்பினால், அவர்கள் நன்மைகள், மறுமையில் வெற்றியை ஈட்டித்தரும் என்றால் அதைக் கண்டிப்பாக அல்லாஹ் குர்ஆனில் கூறி இருக்க வேண்டும். அல்லது நபி(ஸல்) காட்டித் தந்திருக்க வேண்டும். அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித்தராத ஒன்றை ஒருவன் நன்மைதரும் நல்லமல் என்று நம்பிச் செய்வானாயேனால், அந்த நன்மையை அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித்தரவில்லை என்று அல்லாஹ் மீதும், ரசூலின் மீதும் குற்றம் சுமத்துகிறான்.

42:21, இறைவாக்குச் சொல்வது போல் அல்லாஹ் சட்டமாக்காததை இவன் சட்ட மாக்குகிறான். 49:16 இறைவாக்குக் கூறுவது போல் அல்லாஹ்வுக்கே மார்க்கம் கற்றுக் கொடுக்க முற்படுகிறான். இவன் நாளை நரகில் கிடந்து வெந்து கரியாகிக் கொண்டு ஒப்பாரி வைப்பானா இல்லையா?. அதேபோல் அல்லாஹ் அவனது தூதர் மூலம் நடை முறைப்படுத்திய குர்பானி மற்றும் நல்லமல்களை மனித அறிவில் படும் சுய விளக்கங்களைக் கூறி நிராகரிப் பானேயானால் அவனும் நாளை நரகம் புக நேரிடும் என்று எச்சரிப்பதே எம் கடமை. அவர்களைத் திருத்தும் அதிகாரம் எம்மிடமில்லை.

இதோ இமாம் மாலிக்(ரஹ்) கூறுகிறார்கள். நபி (ஸல்) அவர்களின் சொல்லைத் தவிர வேறு எவரது சொற்களிலும் எடுக்கத்தக்கவையும் உண்டு. விடப்படக்கூடியவையும் உண்டு; நபி(ஸல்) அவர்கள் சொல் மட்டுமே முற்றாக ஏற்கப்பட வேண்டியவை! இமாம் மாலிக்(ரஹ்) இர்ஷாதுஸ்ஸாலிக் பாகம்: 1, பக்கம் : 227

இந்த மவ்லவிகள் குர்ஆனையும் பின்பற்றுவதில்லை. நபி(ஸல்) அவர்களையும் பின்பற்றுவதில்லை. நான்கு இமாம்களையும் பின்பற்றுவதில்லை. ஷைத்தானையே பின்பற்றுகின்றனர்.

ஆம்! தாஃகூத் என்ற மனித ஷைத்தான்களாகிய இம்மவ்லவிகள் ஜின் இன ஷைத்தானையே பின்பற்றுகின்றனர்.

சர்வதேச திகதிக்கோடு ஏக இறைவன் இட்ட அடையாளச் சின்னங்களில் ஒன்றாகும்

S.M. அமீர், நிந்தாவூர், இலங்கை 2

மே மாத தொடர்ச்சி…..

* பெரும்பாலான மக்கள் இன்று கூட தேன் எப்படி உற்பத்தியாகிறது என்பதை அறிந்திருக்கவில்லை. தேனீக்கள் மலர்களில் இருந்து தேனை உறிஞ்சி வந்து கூடுகளில் சேமித்து வைக்கின்றன என்றுதான் விளங்கி வைத்திருக்கின்றனர். உண்மை என்னவென்றால் மலர்களிலும், கனிகளிலும் உள்ள குளுக்கோசை தேனீக்கள் தமது உணவாக உட்கொள்ளுகின்றன. அவ்வாறு உட்கொண்ட பிறகு அவற்றின் வயிற்றுக்குள் சென்ற பொருள் மாற்ற மடைந்து அதன் வயிற்றில் இருந்து வெளிப்படுகின்ற ஒரு கழிவுப் பொருள்தான் தேன். இதை இன்றைய விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கின்றார்கள். ஆனால் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் அருளப்பட்ட குர்ஆன் தேனீக்கள் தேனை உணவாகச் சாப்பிடுகின்றன எனக் கூறுகின்றது. “நீ சாப்பிடு” என்ற கட்டளையிலிருந்து இதனை நாம் விளங்கலாம்; சாப்பிட்ட பிறகு அதன் வாயில் இருந்து தேன் வெளிப்படுகிறது என்றும் கூறுகிறது.

(நபியே) உம்முடைய இறைவன் தேனீக்களுக்கு மலைகளிலும், மரங்களிலும் (மனிதர்கள்) கட்டுகின் றவற்றிலும் கூடுகளை அமைத்துக்கொள் என்று அறிவித்தான். பின்னர் நீ அனைத்து வகையான கனி(களின் மலர்)களிலிருந்தும் சாப்பிடு! உன் இறைவன் (காட்டிய) வழிகளில் எளிதாக(ப் பறந்து) செல்(என்றும் அறிவித்தான்) அதன் வயிறுகளிலிருந்து பல வண்ணப் பானம் ஒன்று வெளிப்படுகிறது, அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்தித் துணரும் மக்களுக்கு நிச்சயமாக இதில் சான்று உள்ளது. 16:63,69, புகாரி: 5684, 5716, 5680, 5681, 5683, 5702, முஸ்லிம்:4454, இப்னு மாஜா, தஃப்ஸீர் இப்னு கஸீர்:5, பக்.69:75.

உதாரணத்திற்காக மேற்குறிப்பிடப்பட்ட சில விசயங்கள் வளர்ந்து வரும் அறிவியலுக்கு சான்றாகத் திகழும் மனித கண்டுபிடிப்புகளாகும். ஆக ஆரம்பமும் முடிவுமில்லாத அல்லாஹ் ஜல்லஜலாலுஹு அண்டசராசரங்கள் அனைத்திலும் அவனது ஆளுமையை நிறுவியுள்ளான். அவ்வப்போது மனிதன் அவற்றைக் கண்டு கொள்கின்றான். அவற்றின் தொடரில் நிச்சயமாக அல்லாஹ்விடம் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும். வானங்களையும், பூமியையும் அல்லாஹ் படைத்த நாளிலேயே அவனது பதிவேட்டில் (இவ்வாறே இருந்தது) அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை. இதுவே சீரான மார்க்கமாகும் (9:36) என்று குர்ஆன் பேசுகின்றது. மேற்கூறிய பன்னிரண்டு மாதங் களின் நாட்களும், வாரங்களும் பிரபஞ்ச இறை நியதிகளுக்கு ஏற்ப சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்று கோள்களின் துணை கொண்டு கணக்கிடப்படல் வேண்டும்.

அவனே சூரியனை ஒளி வீசக்கூடியதாகவும், சந்திரனை ஒளியாகவும் ஆக்கி உள்ளான். நீங்கள் (பல) ஆண்டுகளின் எண்ணிக்கையையும் (அதற்கான மாதங்களின்) கணக்கையும் அறிந்து கொள்வதற்காக அதற்குப் பல படித்தரங்களை அவன் ஏற்படுத்தி உள்ளான். இவற்றை அல்லாஹ் தகுந்த காரணத்துடன்தான் படைத்தான் (10:5)

சூரியன் மூலம் நாட்களும், சந்திரன் மூலம் மாதங்களும், ஆண்டுகளும் அறியப்படுகின்றன. சிடேரியல் மாதம் (Sidereal Month) அல்லது Solar System என்பது நுஜூமிய்யா எனும் மார்க்கம் தடை செய்த நட்சத்திரக் கணிப்பின் அடிப்படையில் கி.பி. 1582 அளவில் பதிமூன்றாவது கிறிஸ்தவ போப் ஆண்டவர் “கிரகரீ’ என்பவரால் வரையறுக்கப்பட்டு இஸ்லாத்திற்கு முற்றிலும் முரணான கிறிஸ்தவர்களின் கி.மு. – கி.பி. என்ற ஈசவி ஆண்டு கணக்கின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட சூரிய காலண்டர் கணக்கீட்டு முறையானது மூன்றில் ஒன்றாகிய சந்திரன் முற்று முழுதாக விடுபட்டு வருகிறது. காரணம் சூரிய கணக்கிற்கு சந்திரன் தேவையற் றதாக ஆகிவிடுகின்றது. அதற்கு சுய ஒளி இல்லை என்பதனாலாகும். அதன் காரணமாக சூரியன், பூமி ஆகிய இரு கிரகங்கள் மாத்திரமே கணக்கிடுவதற்கு உபயோகப்படுவதனால் துல்லியம் இழந்து நான்கு வருடங்களுக்கு ஒரு முறை ஒரு நாள் கூடுவதும் நூற்றி இருபத்தி ஏழு வருடங்களுக்கு ஒரு முறை ஒரு நாள் குறைக்க வேண்டியும் ஏற்படுகிறது. (சூரியனுடனான) இரவையும், பகலையும் அல்லாஹ்வே (துல்லிய) அளவாகக் கணக்கிடுகின்றான். அதை நீங்கள் சரியாகக் கணக்கிட்டுக் கொள்ள மாட்டீர் கள் 73:20 என்றே அல்லாஹ்வும் சொல்கின்றான்.

சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்று கோள்களின் துணை கொண்டு கணக்கிடப்படும் சந்திரக் காலண்டர் கணக்கீடானது பல நூறு ஆயிரம் ஆண்டுகளானாலும் கூடுதல், குறைவு ஏற்படுவதில்லை என்றே இன்றைய அறிவியல் உலகம் சான்று கூறுகின்றது. 2:189, 10:5

எமது தலைப்புடனான நாட்களும், வாரங்களும் மாறுவதற்கான சர்வதேச தேதிக் கோட்டுப் பகுதியில் தினமும் சூரியன் 90டிகிரி கோணத்தில் உச்சியில் வரும்போது குறிப்பிட்ட ஒரு நாளை அளவிட்டு கணக்கிட்டு வருகின்றோம்.

நாளின் ஆரம்பப் பகுதியாகவும், முடியும் பகுதியாகவும் கணக்கிடுவதற்கு ஏதுவாக அந்த இடத்தை மக்கள் பெரும்பான்மையாக வசிக்காத கடல் பகுதியாக அமைத்து இறைவன் நமக்கு இலகுவாக்கி உள்ளான். அவ்வாறே உலகத் தேதிக் கோட்டுப் பகுதி யில் சூரியன் அதன் உச்சியில் (அதாவது அங்குள்ளவர்களின் தலைக்கு மேல்) நன்பகல் நேரம் 90 டிகிரியில் வரும்போது நமது கிப்லாவான மக்காவில் உள்ள கஅபாவின் பகுதிகள் உள்ளூர் நேரப்படி 3.00 மணி அதிகாலை நேர அளவில் அதாவது தஹஜ்ஜத் நேரத்தில் இருந்து ஃபஜ்ர் நேரத்தை நெருங்கி இருக்கும் அளவுக்கு பொருத்தமாக இறைவன் அமைத் துள்ளான். எனவே பரிசுத்த குர்ஆனின் போதனை களின் படியும் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் படியும் முழு உலக மக்களும் நமது கிப்லாவாகிய கஅபாவிற்கு முக்கியத்துவம் கொடுத்து குறிப்பிட்ட நாளின் ஆரம்பத்தை தினமும் ஃபஜ்ரில் இருந்து ஆரம்பித்து குர்ஆன் கூறுவது போல் நாம் மற்ற மனிதர்களின் சாட்சியாளர்களாக இருப்பதாகவும் நபி(ஸல்) அவர்கள் நமக்கு சாட்சியாளராக திகழ வேண்டும் (2:143) என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

மக்கள் பெரும்பான்மையாக வசிக்காத மேற்கத்திய நாடுகளின் முடியும் பகுதிகளான அமெரிக்கன், சமோவா தீவுகளையும் கிழக்கத்தைய நாடுகளின் ஆரம்பப் பகுதிகளான நியூசிலாந்து ஆஸ்திரேலியா பகுதியை அண்டிய ஃபிஜி தீவுகளையும் பிரிக்கும்படியான பசிபிக் பெருங்கடலில் இயற்கையாகவே இறைவனால் போடப்பட்டுள்ள சர்வதேச தேதிக் கோட்டை அண்மைக் காலத்து மனிதன் தான் ஆய்வு செய்து கண்டுபிடித்தான் என்பது உண்மைதான், என்றாலும் அதற்கும் பலநூறு நூற்றாண்டுகளுக்கு முன்னர் உலகச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட மன்னர் துல்கர்னைன் இஸ்க்கந்தர் அவ்வழியே சென்றதாக குர்ஆன் கூறுகிறது. அத்துடன் அங்கு தேதியும், வாரமும் முஸ்லிம்களின் ஜும்ஆ தொழுகையும் மாறுவது அல்லாஹ் இந்த மனித சமூகத்திற்கு அளித்துள்ள மாபெரும் அத்தாட்சியாகும்.

இங்கு மன்னர் துல்கர்னைன் பற்றி குர்ஆன் பேசும்போது,

எனவே அவர்(பூமியில்) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார் (18:85) என்று இறைவன் தெரிவிக்கின்றான். இங்கு “வழி” என்பதைக் குறிக்க “சபப்” எனும் சொல் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது.

* இது (குறிப்பிட்ட) நிலையத்தைக் குறிக்கும் என இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களும்,

* கிழக்கிற்கும், மேற்கிற்கும் இடையிலான (சர்வதேச தேதிக் கோட்டு) பாதையையும் நிலையத்தையும் குறிக்கும் என்று முஜாகித்(ரஹ்) அவர்களும்,

* பூமியிலுள்ள வசிப்பிடங்களையும் (சர்வதேச திகதிக் கோட்டின்) அடையாளச் சின்னங்களையும் தேடிச் சென்றார் என்று கத்தாதா(ரஹ்) அவர்களும்,

* (சர்வதேச தேதிக் கோட்டின்) அடையாளம் என்று மத்தர்(ரஹ்) அவர்களும்,

* முன்பு இருந்த (சர்வதேச தேதிக் கோட்டின்) சின்னங்கள் மற்றும் சுவடுகள் என்று சயித்பின் ஜுபைர் (ரஹ்) அவர்களும் பொருள் கூறி உள்ளார்கள். தஃப்ஸீர் இப்னு கஸீர் தமிழ் மொழி பெயர்ப்பு பாகம் : 5, பக்கம் : 510.

ஆக 1400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நபி தோழர் இப்னு அப்பாஸ்(ரழி) உட்பட ஏனைய அறிஞர்களும் தடய விபரமில்லாமல் இவ்வாறு தெளிவாக சொல்வதற்கு வாய்ப்பே இல்லை. நிச்சயமாக நாம் (துல்கர்னைன் மன்னராகிய) அவருக்குப் பூமியில் (முழுவதும் ஆட்சி, அதிகாரம் செய்ய) இடம் அளித்திருந்தோம். மேலும் அவருக்கு ஒவ் வொரு பொருட்களையும்(அதற்கான இடங்களையும்) அடைவதற்கான வழியை நாம் வழங்கி இருந்தோம் (18:84)

அவர் சூரியன் மறையும் இடத்தை அடைந்த போது அது சேற்று நீரில் மறைந்து கொண்டிருப்பதைக் கண்டார் (18:86) இறுதியில் அவர் சூரியன் உதிக்கும் இடத்தை அடைந்தபோது ஒரு சமூகத்தார் மீது அது உதிப்பதைக் கண்டார் (18:90) அவர் சூரியன் உதயமாகும் இடங்களையும், அஸ்தமிக்கும் இடங்களையும் சென்றடைந்ததால் “துல்கர்னைன்” (இரு முனைகள் உடையவர், எனும் பெயர் பெற்றார்.

தப்ஸீர் தபரி, தஃப்ஸீர் இப்னு கஸீர்:5, பக்கம்: 507 உலக முஸ்லிம்களுக்கு அல்லாஹ் ஏற்படுத்தித் தந்த கிப்லாவிற்கு முன்னர் சூரியன் உதிக்கும் முதல் பகுதியாகவும் கிப்லாவிற்குப் பின் சூரியன் மறையும் இறுதிப் பகுதியாகவும், அவ்விரு பகுதிகளும் சந்திக்கும் இடமாகவும் இந்த சர்வதேச தேதிக் கோட்டுப் பகுதிதான் உள்ளது. அந்த இடத்தைக் குறிப்பிட்டு நெறிநூலான குர்ஆன், இரண்டு கிழக்குகளின், இரண்டு மேற்குகளின் இறைவன் அல்லாஹ்தான். (55:17) என்று கூறுகின்றது.

மேற்குறிப்பிட்ட இந்த இறை வசனம் எவ்வாறு அந்த இடத்திற்கு பொருந்தும்? என்ற கேள்வி எழுவது இயற்கையே.    (இன்ஷா அல்லாஹ் தொடரும்.)

ஐயமும்! தெளிவும்!!

ஐயம் : ஒருவர் தாம் நோன்பு என்று ஞாபகமின்றி உண்ணவோ, குடிக்கவோ செய்துவிட்டால் அவருடைய நோன்பு முறிந்து விடுமா? ஹபீபுல்லாஹ், மாயூரம்

தெளிவு : ஒருவர் மறதியாக உண்ணவோ, குடிக்கவோ செய்தால் நோன்பு முறியாது. ஒருவர் நோன்பாளியாக இருந்து தாம் மறந்த நிலையில் உண்ணவோ, குடிக்கவோ செய்துவிட்டால் அவர் தமது நோன்பை நிறைவு செய்து விடுவாராக! ஏனெனில் அவருக்கு உணவளித்ததும், தண்ணீர் புகட்டியதும் அல்லாஹ்தன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரி, முஸ்லிம்)

ஐயம் : அம்மை நோய் வந்தால் டாக்டரிடம் போகக் கூடாது என்று அந்த நோயின் பின்னணியில் ஒரு பெரிய வரலாற்றை கற்பிக்கும் நம் சமுதாயத்திற்கு தாங்கள் கூறுவது என்ன? ரஹ்மத் அலி, பொள்ளாச்சி

தெளிவு : அம்மை நோயும் அல்லாஹ் மனிதருக்கு விடும் நோய்களில் ஒன்றே. சிலருக்கு அதனால் பேராபத்துகள் விளைந்து விடுவதால் சிலர் பீதியடைந்து, செய்ய வேண்டிய முறையான பரிகாரம் செய்யாமல், நேர்ச்சை, காணிக்கையின் பெயரால் பல வகையான ஷிர்க்கான காரியங்களைச் செய்து அரைகுறை ஈமானையும் பறிகொடுத்து விடுகிறார்கள். சிலர் வியாதியை ஏற்படுத்திய அல்லாஹ்வுக்கு அதை குணப்படுத்தவும் முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் ஹோமியோபதி, அல்லோபதி முறைப்படி அதற்கு மருந்து மாத்திரைகளைக் கொடுத்து பரிகாரம் தேடிக் கொள்கிறார்கள் என்பதை அறிகிறோம். நபி இப்ராஹீம்(அலை) அவர்கள் பொதுவாக வியாதிகளுக்கு பரிகாரம் அல்லாஹ்விடமே உள்ளது என்று கூறியதை அல்லாஹ் மூமின்களுக்கு நினைவூட்டு வதைப் பாருங்கள். “வ-இதா-மரிழ்த்து-ஃபஹுவ-யஷ்ஃபீன்” நான் வியாதியஸ்தனாகிவிட்டால் அவனே எனக்கு குணமளிப்பவனாயிருக்கிறான். (26:80) என்று அல்குர்ஆன் கூறுவதை நினைவில் கொண்டு முறையான பரிகாரம் தேட முற்படுவோமாக, அல்லாஹ் அனைவருக்கும் ஹிதாயத் செய்வானாக!

ஐயம் : நாங்கள் ஒரு சகோதரியையும், இரு சகோதரர்களையும் கொண்டுள்ள ஒரு குடும்பம். எமது சகோதரிக்கு சீதனம் கொடுத்து திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அந்தச் சகோதரிக்கு உயி ரோடிருக்கும் எங்கள் தந்தையின் சொத்துக்களில் பங்கு உண்டா? குர்ஆன், ஹதீஃத்படி விளக்கம் தருக! மக்பூல் ரஹ்மான், திருவனந்தபுரம்.

தெளிவு : உங்கள் தந்தை உயிரோடிருக்கும் வரை அவருடைய சொத்துக்கு அவரே உரிமையாளரா வார். இந்நிலையில் உங்களுக்கோ, உங்கள் சகோதரிக்கோ எவ்வித பங்குமில்லை. ஒருவர் இறந்ததன் பின்னரே அவருடைய சொத்திலிருந்து, அவருடைய வாரிசுகளுக்கு பங்கு கிடைக்கும். ஒருவர் தமது மகளுக்கு சீதனமாக எவ்வளவு கொடுத்திருப்பினும், தகப்பனின் சொத்தில் மகளுக்கு பங்கு நிச்சயம் உண்டு என்பதை அல்குர்ஆன் (4:11) வசனம் தெளிவுபடுத்துகிறது. சீதனம் கழிக்கப்படமாட்டாது.

ஐயம் :  ஒருவர் மனைவியை மட்டும் விட்டுவிட்டு வாரிசுகள் எவருமின்றி இறந்து விட்டார். அவரது சகோதரர் இறந்தவரின் சொத்தை 4 பாகமாகப் பிரித்து, ஒரு பாகத்தை இறந்தவரின் மனைவிக்குக் கொடுத்துவிட்டு, மீதமுள்ள 3 பாகத்தையும் தாம் வைத்துக் கொண்டார். இந்த 3 பாகங்களையும் அடைந்து கொண்டவருக்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். இந்த அவருடைய பிள்ளைகளுக்கு அந்த சொத்தில் பாகம் கிடைக்குமா? மக்பூல் ரஹமான், திருவனந்தபுரம்.

தெளிவு : 3 பாகங்களையும் அடைந்த அவர் இறந்த பின்னரே அந்த சொத்திலிருந்து அவருடைய பிள்ளைகளுக்குப் பங்கு கிடைக்கும். அவர் உயிருடனிருக்கும் வரை அந்த சொத்தில் அவருடைய பிள்ளைகளுக்கு எவ்வித உரிமையுமில்லை. ஒருவர் உயிரோடிருக்கும் வரை தமது சொத்துக்கு தாமே முழுமையான உரிமையாளராவார். ஏனெனில் பாகப் பிரிவினை சம்பந்தப்பட்ட வசனங்கள் அனைத்தும் சம்மந்தப்பட்டவர் இறந்த பின்னர் என்றே உள்ளது.

ஐயம் : நாம் புது வீடு புகும்போதும், புதுக்கடைத் திறக்கும் போதும், நிக்காஹ்வுக்காக நிச்சயம் செய்யும்போதும் நாம் நடந்து கொள்ள வேண்டிய முறை என்ன? என். ரஹ்மத் அலி, பொள்ளாச்சி.

தெளிவு : தங்கள் கேள்வியில் இடம் பெற்றுள்ள அந்த சந்தர்ப்பங்களில் நாம் எதுவும் செய்ய வேண்டும் என்று நமக்கு மார்க்கம் கூறவில்லை. ஆனால் பொதுவாக நீங்கள் அல்லாஹுவை அதிகமாக நினைவு கூறுங்கள் நீங்கள் வெற்றியடைவீர்கள். (62:10) என்று அல்குர்ஆன் கூறுவதால் வீண் சடங்கு கள் எதுவும் செய்யாது அல்லாஹ்வை நினைவு கூர்ந்து பிஸ்மில்லாஹ் சொல்லி துவங்குவதே மேலாகும்.

ஐயம் : குழந்தைக்குப் பால் கொடுக்கும் தாய் கட்டாயம் நோன்பு பிடிக்க வேண்டுமா? நோன்பு பிடித்தி ருக்கும் ஒரு பெண் தனது குழந்தைக்குப் பால் கொடுப்பது கூடுமா? முஹம்மத் இத்ரீஸ், அந்தமான்.

தெளிவு : குழந்தைக்குப் பால் கொடுக்கும் தாய் நோன்பை விடுவதற்கு மார்க்கம் சலுகை தந்துள் ளது. அல்லாஹ் பிரயாணம் செய்பவருக்கு தொழு கையில் பாதியை சலுகை செய்துள்ளான். இவ்வாறே பிரயாணி, பால் கொடுப்பவள், கர்ப்பிணி ஆகியோ ருக்கும் நோன்பை (முழுமையாக) விடுவதற்கு சலுகை செய்துள்ளான் என்று நபி(ஸல்) கூறியுள் ளார்கள். (அனஸ்பின் மாலிக்கில் கஃபீ(ரழி), அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, இப்னு மாஜ்ஜா) மேற்காணும் ஹதீஃதில் பால் கொடுப்பவள் மட்டுமின்றி, கர்ப்பிணிக்கும் மற்றும் பிரயாணிக் கும் அல்லாஹ் சலுகை செய்திருப்பதைப் பார்க்கி றோம். நோன்பு நோற்றிருக்கும் ஒரு பெண், குழந்தைக்குப் பால் கொடுப்பதால் நோன்பு முறிந்து விடாது.

ஐயம் : நோன்புக் காலங்களில் நோன்பு திறப்பதற் காகப் பள்ளியில் கஞ்சி காய்ச்சி வினியோகிப்பதும், சில விசே­ இரவுகளில் ஸஹர் உணவு தயாரித்து பள்ளியில் கூட்டமாக இருந்து சாப்பிடுவது போன்ற சில காரியங்கள் நமது நாட்டில் சில பகுதிகளில் நடைபெறுகின்றன. இதனால் மஃரிபு தொழுகை யில் ஜமாஅத்து பலருக்கும் கிடைப்பதில்லை. பள்ளி யில் கூச்சல் குழப்பம் ஏற்படுகிறது. இவ்வாறு செய் வதை மார்க்கம் அனுமதிக்கின்றதா? முஹம்மத் இத்ரீஸ், அந்தமான்.

தெளிவு : பொதுவாக நோன்பு திறப்பதற்கு எதையும் தயாரித்துப் பிறருக்குக் கொடுப்பது நன்மையாயிருப்பது போன்றே நோன்பு பிடிப்பதற்கு எதையும் தயாரித்துக் கொடுப்பதும் நன்மையே. ஆனால் பள்ளியில் நோன்பு திறப்பதற்கோ, பிடிப்பதற்கோ உணவு, கஞ்சி முதலியவற்றைத் தயாரித்து உபயோகிப்பவர்கள் கூச்சம், குழப்பமின்றி தொழுகை, ஜமாஅத் முதலியவற்றிற்குப் பாதிப்பு ஏற்படாது பள்ளியில் ஒழுக்கங்களைப் பேணி மேற்காணும் காரியங்களைச் செய்து கொள்வதை மார்க்கம் தடை செய்யவில்லை.

நபி(ஸல்) அவர்களும் மற்றும் சஹாபாக்களும் ரமழான் கடைசி பத்தில் பள்ளியில் இஃதிகாஃபு இருநத சமயம். அங்கேயே ஸஹர் உணவு சாப்பிட்டுள்ளார்கள். அங்கேயே நோன்பு திறந்துள்ளார்கள் என்பதைக் காட்டுகிறது.

சில ஊர்களில் கஞ்சி தயாரிப்பதற்காக ஹலால், ஹராம் என்ற பாகுபாடின்றி பணம் கிடைத்தால் போதும் அது யார் மூலம், எந்த வழியில் சம்பாதிக்கப் பட்டிருந்தாலும் பரவாயில்லை என்ற நிலையில் வசூலித்துத் தயாரிக்கப்பட்டிருக்கும் கஞ்சிகளை சாப்பிடாமலிருப்பதே உசிதமாகும். காரணம், பகல் முழுவதும் ஹலாலான நமது உணவைச் சாப்பிட்டு நோன்பு வைத்துவிட்டு, இறுதியில் ஓசியாகக் கிடைக்கும் சந்தேகமான உணவைக் கொண்டா நோன்பு திறப்பது? இது வகையில் மிகவும் எச்சரிக் கையாக இருத்தல் அவசியமாகும்.

ஐயம் : சிலர் ரமழான் மாதம், 29 நோன்போடு நிறைவு பெற்று விட்டால், ஆ…. இந்த வருடம் நமக்கு ஒரு நோன்பு குறைந்து போய்விட்டதே என்று ஆதங்கப்பட்டுக் கொள்கின்றனரே, இது முறைதானா? சிஹாப்தீன், திருச்சி

தெளிவு : ரமழான் மாதம் முழுவதும் நோன்பு பிடிக்கும்படி கட்டளையிட்ட அல்லாஹ். 29 என்றோ 30 என்றோ கூறவில்லை. ஒரு மாதம் என்பது 29 நாள்களைக் கொண்டதாகவும், 30 நாள்களைக் கொண்டதாகவும் இருக்கும். எக்காரணங்களைக் கொண் டும் 28 நாள்களாகவோ, அல்லது 31 நாள்களாகவோ அறவே இராது. பிறையைக் கண்டு நோன்பு பிடியுங்கள், பிறையைக் கண்டு நோன்பை விடுங்கள். அது மறைக்கப்பட்டால் ஷஃபான் மாதத்தை 30 நாட்களாக கணக்கிட்டு நிறைவு செய்து விடுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு உமர்(ரழி), புகாரீ, முஸ்லிம். நிச்சயமாக நாம் எழுதப் படிக்கத் தெரியாத “உம்மியான” சமுதாயம், நமக்கு எழுதவோ, கணக் குப் பார்க்கவோ தெரியாது என்று கூறிவிட்டு, ஒரு மாதம் என்பது இப்படி இப்படி என்று தமது இரு கைவிரல்கள் பத்தையும் விரித்துக் காட்டினார்கள். மூன்றாம் முறையாக ஒரு கையின் கட்டை விரலை மட்டும் மடக்கிக் கொண்டார்கள். மறுமுறை10 விரல்களையும் (முழுமையாக) மும்முறை விரித்துக் காட்டினார்கள். முதல் முறை 29 நாள்கள் என்றும், மறுமுறை 30 நாள்கள் என்றும் தெளிவுபடுத்தினார் கள். இப்னு உமர்(ரழி), புகாரி, முஸ்லிம்)

ஐயம் : மரணித்தவர்களின் மீது கத்தம், பாத்திஹா போன்றவைகளை ஓதி அவர்களுக்கு ஹதியா செய்யலாமா? உங்களுக்கு கருத்து என்ன?
எஸ்.ஏ.ஹாஜா, காயல்பட்டணம்

தெளிவு : மார்க்க விஷயத்தில் எங்களுக்கு என்று ஒரு கருத்து இல்லவே இல்லை. அல்லாஹ்வும், அவனது ரசூல்(ஸல்) அவர்களும் கூறியவைதான் எங்கள் கருத்தாகும். அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லா ஹுவ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரஸூலுஹூ என ஏற்றிருக்கும் தாங்கள் அவ்வாக்கியத்தில் குறிப்பிடப்படும் அல்லாஹ், ரசூல்(ஸல்) அவர்களின் கட்டளைகளை கூறினால் ஏற்பீர்கள் என்ற முழு நம்பிக்கையில் இக்கேள்விக்கு விடையளிக்கிறோம். குர்ஆனில் கத்தம், பாத்திஹாவிற்கு ஆதாரமில்லை.

பாத்திஹா சூரா நபி(ஸல்) அவர்களுக்கு ஆரம்பத்தில் இறங்கிய (வரிசையில் 5வது) இறை வசனங்களாகும். இவ்விறை வசனம் இறங்கிய பின் பலர் மரணத்திருக்கிறார்கள். நபி(ஸல்) அவர்களின் அன்பு மக்கள் ஜைனப், உம்முகுல்தும், ருகையா இப்ராஹீம் (ரழி) அன்பு மனைவி கதீஜா(ரழி) மற்றும் பல நபி தோழர்கள் போன்றோர் மரணித்தனர். அவர்களுக்காக நபி(ஸல்) பாத்திஹா கத்தம் ஓதியதாக ஆதாரமில்லை.

நபி(ஸல்) மறைவுக்குப் பின் ஸஹாபாக்கள் காலத்தில் முழு குர்ஆனும், பாத்திஹாவும் இருந்தது. நபி தோழர்கள் எவரும் கத்தம் பாத்திஹா மரணித்தவர்களுக்காக ஓதியதற்கு ஆதாரமில்லை. ஹதியா செய்ததற்கும் ஆதாரமில்லை.

ஒருவரின் மரணத்திற்குப் பின் நன்மைகள் மூன்று விதமாகக் கிடைக்கும்.

1. மக்களுக்கு நன்மை பயக்கும்படியான (பள் ளிக்கூடங்கள் மஸ்ஜித், பரோபகார) செயல்கள் இதற்கு ஸதகத்துல் ஜாரியா எனப் பெயர்.

2. ஒருவர் கற்றுத் தந்த நல்ல மார்க்கக் கல்வி.

3. ஒருவரின் மக்கள் செய்யும் நல்லமல்கள். (அபூஹுரைரா(ரழி), முஸ்லிம்.

இதனடிப்படையில்,

மரணித்தவர் உயிருடனிருக்கும்போது ஒருவருக்கு குர்ஆன் கற்றுக் கொடுத்திருந்தால், கற்றுக் கொண்டவர் குர்ஆன் ஓதும்போதெல்லாம் கற்றுக் கொடுத்தவருக்கு அவர் உயிருடனிருந்தாலும், மரணித்துவிட்டாலும் நன்மைகள் கிட்டும். ஆனால் ஓதியவருக்குரிய நன்மையில் பங்கம் ஏற்படாது என்பதே நபிவழியாகும்.

நமது தூதர் உங்களிடத்தில் கொண்டு வந்த வற்றை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் தடை செய்தவற்றை விட்டுவிடுங்கள். (59:7)

மார்க்க விஷயத்தில் நாம் கட்டளையிடாத ஒன்றை எவர் செய்கின்றாரோ அது மறுக்கப்பட வேண்டிய ஒன்றாகும் என்றும் நபி(ஸல்) அறிவித்தார்கள். (ஆயிஷா(ரழி), புகாரீ, முஸ்லிம்) என்ற குர்ஆன், ஹதீஃத் அடிப்படையில் நபி (ஸல்) காட்டித் தராத கத்தம், பாத்திஹா மரணித்த வர்களுக்கு ஒதுவது இஸ்லாமிய வழியல்ல. புதுமை வாதிகளின் புது(பித்அத்) வழியாகும் என்பதை உணரலாம்.

ஐயம் : ஜமாஅத்தோடு தொழுத ஒருவர் பின்னால் வரக்கூடியவர்களுக்கு இமாமத் செய்வது கூடுமா? அஹ்மது மகீன், தோஹா கத்தர்.

தெளிவு : முஆத் இப்னு ஜபல்(ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்து தொழுத பின் தமது கூட்டத்தாரிடம் வந்து அவர்களுக்குத் தொழ வைத்துக் கொண்டிருந்தார்கள். (ஜாபிர்(ரழி), புகாரீ, முஸ்லிம், அஹ்மது)

நபி(ஸல்) அவர்கள் (ஜமாஅத்தாக) தொழுது முடித்தபின் ஒருவர் வந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் (ஜமாஅத்தில் தொழுதிருந்த நபி தோழர் களை நோக்கி) இவருடன் தொழுது இவருக்கு உதவி செய்வோர் உங்களில் எவரும் உள்ளனரா? என வின வினார்கள். உடேன ஒருவர் எழுந்திருந்து அவருடன் தொழுதார். (அபூஸயீத், அல்குத்ரீ(ரழி), அபூதாவூத், திர்மிதீ) மேற்காணும் ஹதீஃத்களின்படி ஜமாஅத்தோடு தொழுதவர் பின்னால் வரக்கூடியவருடன் தொழலாம். இமாமத் செய்யலாம் என்பதை உணரலாம்.

ஐயம் : உபை இப்னு கஃபை இமாமாகத் தொழுகை நடத்த உமர்(ரழி) ஏற்பாடு செய்த பின் உபை 20 ரகாஅத்து தொழுகை நடத்தி வந்தார். அறிவிப்பவர்: அல்ஹஸன், நூல் : அபூதாவூத்

அலீ(ரழி) அவர்களும் பலமுறை இமாமாக இத் தொழுகை புரிந்துள்ளதையும், 20 ரகாஅத் தொழுத தாகவும் பல ஹதீஸ்கள் மூலம் காண்கிறோம். அறிவிப்பாளரோ, நூலோ குறிப்பிடப்படவில்லை. இச் செய்திகள் ஆதாரப்பூர்வமானவையா? முஹம்மது ஸலீம், பாலக்கரை.

தெளிவு : உபை இப்னு கஃபு(ரழி), தமீமுத்தாரி(ரழி) இருவரையும் 11 ரகாஅத் தொழவைக்கும்படி உமர் (ரழி) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் : ஸாயிப் இப்னுயஸீத்(ரழி), நூல்: முஅத்தா.

இப்படி ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஃத் இமாம் மாலிக்(ரழி) அவர்களால் பதிவு செய்யப்பட்டிருககிறதேயல்லாமல், உபை இப்னு கஃபு(ரழி) 20 ரகாஅத் தொழவைத்ததாக அபூதாவூதில் மட்டுமல்ல, எந்த ஹதீஃத் நூலிலும் இல்லை என்பதே உண்மையாகும்.

அலீ(ரழி) 20 ரகாஅத்துகள் தொழுததாக ஆதாரபூர்வமான செய்தி எதுவுமே இல்லை.

ஐயம் : நோன்பு எந்த நேரத்தில் ஆரம்பித்து, எந்த நேரத்தில் முடிகிறது? ஹஸன், மணப்பாறை.

தெளிவு : கிழக்கு வெளுத்தவுடன் ஆரம்பித்து, சூரியன் அஸ்தமித்தவுடன் முடிகிறது. இரவின் இருளை விட்டும், பகலின் வெளிச்சம் தெளிவாக உங்களுக்குத் தெரியும் வரை-பஜ்ரு நேரம் வரை உண்ணுங்கள், பருகுங்கள், பின்னர் இரவு வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள். (2:187) ஒருபுறம் இரவு முன்னோக்கி வந்து, மறுபுறம் பகல் பின்னோக்கிச் சென்று சூரியன் அஸ்தமித்து விட்டால் நோன்பாளி நோன்பு திறந்து விட வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (உமர்(ரழி), புகாரீ, முஸ்லிம்) மேற்காணும் திருவசனமும், நபி மொழியும் எப்போது நோன்பு ஆரம்பித்து, எப்போது முடிக்க வேண்டும் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன.

ஐயம் : அகீகா கொடுப்பவர் தமது குழந்தையின் முடியை களைந்து அந்த முடியின் எடைக்கு வெள்ளியை தர்மம் செய்ய வேண்டும் எனும் ஹதீஃதின் நிலை என்ன?
ஷைக் முஹம்மத், திருச்சி.

தெளிவு : இந்த அறிவிப்பு அலிபின் அபீதாலிப் (ரழி) அவர்களின் வாயிலாக அறிவிக்கப்பட்டு திர்மிதீயில் இடம் பெற்றிருப்பினும் இதன் அறிவிப்பாளரின் ஒருவரான முஹம்மதுபின் அலிய்யிபின் ஹுஸைன் என்பவர் அலிய்யிபின் அபீதாலிப்(ரழி) அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பிழந்தவராயிருப்பதால் இந்த அறிவிப்பு ஸனது துண்டிக்கப்பட்டிருப்பதோடு, ஒரே அறிவிப்பாளரைக் கொண்ட “கரீபா”ன அறிவிப்பாக வுமிருப்பதால் எற்புக்குரியதல்ல.

ஐயம் : சிலர் நோன்பு திறப்பதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள நேரத்தைப் பார்க்கினும் சில நிமிடங்கள் கழிந்த பின்னர் நோன்பு திறப்பதோடு, இவ்வாறு கால தாமதமாக நோன்பு திறப்பதுதான் பேணுதல் என்று கூறி தமது செய்கையை நியாயப்படுத்துகிறார்களே! இது முறைதானா? அப்துல்லாஹ், திருச்சி

தெளிவு : (கால தாமதமின்றி குறிப்பிட்ட நேரத்தில்) விரைவாக நோன்பு திறக்கும் வரை மக்கள் கைரான-நல்ல நிலையில் இருந்து கொண்டிருப்பார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஸஹ்லு(ரழி), புகாரீ, முஸ்லிம்) இவ்வறிவிப்பு நோன்பு திறக்கும் நேரம் வந்தவுடன் சுணக்கமின்றி நோன்பு திறப்பதுதான் முறையான செயல் என்பதை மிகத் தெளிவாகக் காட்டுகிறது.

ஐயம் : ரமழான் முழுவதும், நோன்பு பிடித்து விட்டு ­ஷவ்வால் மாதத்தில் 6 நோன்புகள் பிடித்தால் வருடம் முழுவதும் நோன்பு பிடித்த நன்மை உண்டு என்று கூறப்படுவது ஸஹீஹான ஹதீஃதுதானா? ஹபீபுல்லாஹ், சேலம்.

தெளிவு : ஒருவர் ரமழான் நோன்பு பிடித்துவிட்டு பின்னர் ஷவ்வால் மாதம் பிடிக்கும் 6 நோன்புகள் பிடிப்பாரானால் அவர் வருடம் முழுதும் நோன்பு பிடித்தவரைப் போன்றாகிவிடுவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூ அய்யூபில் அன்ஸாரீ(ரழி), முஸ்லிம். மேற்காணும் இந்த ஹதீஃத் ஸஹீஹான ஹதீஃத் தான், இதன்படி அமல் செய்வோருக்கு நிச்சயமாக மேற்காணும் ஸவாபு உண்டு. ­ஷவ்வால் மாதம் பிடிக்கும் ஆறு நோன்புகளைத் தொடராகப் பேண வேண்டும் என்பதல்ல. அந்த மாதத்திற்குள் எப்படிப் பிடித்தாலும் சரி. எப்படியும் அந்த மாதத்திற்குள் 6 நோன்புகள் பிடித்தால் போதும்.

ஐயம் : சவூதி அரேபியாவில் பள்ளியில் தொழும் போது சிலர் தமது பாத அணிகளோடு தொழுகிறார்கள். இவ்வாறு தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா? எம்.எம்.ஜுபைர்(இலங்கை), ரியாத்.

தெளிவு : ஒருமுறை நான் அனஸ்(ரழி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் தமது பாத அணி செருப்புகளுடன் தொழுதுள்ளார்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “ஆமாம்” என்றார்கள். அபூமஸ் லமா ஸயீதுபின் யஜீத்(ரழி), புகாரீ.

ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்கு தொழ வைத்துக் கொண்டிருக்கும்போது, தமது பாத அணிகளைக் கழற்றி, தமது இடப்பக்கம் வைத்தார்கள். அப்போது (அவர்களுடந் தொழுது கொண்டிருந்த) மக்களும் தமது பாத அணிகளைக் கழற்றி வைத்து விட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் தமது தொழுகையை நிறைவு செய்து விட்டு, (அவர்களை நோக்கி) ஏன் உங்கள் பாத அணிகளைக் கழற்றி வைத்தீர்கள் என்றார்கள். அதற்கு அவர்கள் நீங்கள் பாத அணிகளைக் கழற்றுவதைப் பார்த்து நாங்களும் எங்கள் பாத அணிகளைக் கழற்றி வைத்து விட்டோம் என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் வந்து அவற்றில் அசுத்தம் இருப்பதாகக் கூறினார்கள் என்றார்கள். (அபூஸயீதில் குத்ரீ(ரழி), அபூதாவூத்)

ஆகவே மேற்காணும் ஹதீஸ்களை அடிப்படையாகக் கொண்டு செருப்புகளை அணிந்த நிலையில் தொழுவது ஆகும் என்பதை அறிகிறோம். அவற்றில் அசுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஐயம் : தக்வாவின் சிறப்பம்சம் என்ன? எம். முஹம்மது காசிம், பொறையாறு.

தெளிவு : தக்வா என்பது பயபக்தி, இறை உணர்வு, பாவ தடுப்பு சக்தி முதலியவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளதோர் சிறப்புத் தன்மையாகும். தக்வாவுடன் செய்யப்படும் அமலுக்குத்தான் அல்லாஹ்விடம் அங்கீகாரம் உள்ளது. அல்லாஹ் (அமல்களை ஏற்றுக் கொள்வதெல்லாம் தக்வா பயபக்தி இறையுணர்வு உள்ளவர்களிடமிருந்துதான் (5:27) என்று குர்ஆன் கூறுகிறது.

ஆகவே நாம் செய்யும் ஒவ்வொரு அமலிலும் தக்வா இருந்தாக வேண்டும். இல்லையேல் அதன் பலனை அடையும் வாய்ப்பினை இழக்க நேரிடும்.

ஓர் அடியான் பாவமில்லாதவற்றையும் அவை பாவமாக இருந்து விடுமோ என்று பயந்து அவற்றை விட்டொழிக்கும் வரை முத்தக்கீன் பயபக்தியாளர் – இறை உணர்வு மிக்கவர் என்ற உயர்நிலையைத் தான் அடைந்து கொள்ள முடியாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அத்திய்யத்துஸ் ஸஃதீ (ரழி), திர்மிதீ, இப்னு மாஜ்ஜா)

தக்வா ஒருவருடைய உள்ளத்தில் ஏற்பட்டு விட்டால், அவர் சதாகாலமும் தாம் அல்லாஹ்வின் முன் நிலையில் இருப்பதான உணர்வு அவருக்கு உண்டாகி விடுகிறது. அதன் காரணமாக அவர் தாம் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் அது பாவமாக இருந்து விடக்கூடாது என்ற வகையில் மிகவும் எச்சரிக்கையாக இருந்து கொள்வார்.

ஐயம் : ஹதீஃத் குத்ஸீ என்றால் என்ன? ஹதீஃதுக்கும், ஹதீஃத் குத்ஸீக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை என்ன? ஏ.அப்துஸ்ஸலாம், மஞ்சக்கொல்லை.

தெளிவு : ஹதீஃத் குத்ஸீ என்பது அல்லாஹ்வின் புறத்திலிருந்து நபி(ஸல்) அவர்களுக்கு கனவின் மூலமா கவோ அல்லது உள்ளதில் உதிப்பை உண்டு பண்ணுவதன் மூலமாகவோ அல்லது மலக்கின் மூலமாகவோ கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு, அவற்றை நபி(ஸல்) அவர்கள் தமது சொந்த வார்த்தைகளால் அறிவிக்கும் விஷயங்களாகும். ஹதீஃத் என்பது நபி(ஸல்) அவர்களின் சொற் செயல் அங்கீகாரம் ஆகியவையாகும். குர்ஆன் என்பது வஹீயின் மூலமாக கருத்துக்களை அறிவிப்பதோடு, அவற்றுக்குரிய வாசகத்தையும் அல்லாஹ்வின் புறத்திலிருந்தே வஹீயின் மூலம் அறிவிக்கப்படும் ஒன்றாகும்.

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

விமர்சனம் : 29.05.2016 ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் நடந்த மார்க்க விளக்கக் கூட்டத்தில் முஃப்தி உமர் ­ரீஃப் அவர்கள் ரமழான் இரவுத் தொழுகையை ஜமாஅத்தோடு தொழுவதுதான் சிறப்பு என்று ஃபத்வா கொடுத்தார். குர்ஆன், ஹதீஃத் வெளிச்சத்தில் இது சரியா? உமர், தஞ்சாவூர் ரோடு, திருச்சி-8.

விளக்கம் : யார் மார்க்கத்தில் ஃபத்வா கொடுத்தாலும் அவர்களிடம் அதற்குரிய குர்ஆன், ஹதீஃத் ஆதாரத்தைக் கேட்க வேண்டும். அவர்கள் உரிய பதிலைத் தராமல் வீணாக வாயடித்தால் அவர்கள் நேர்வழியில் இல்லை. கோணல் வழியில் இருக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்த 7:146 குர்ஆன் வசனத்தைப் படித்துக் காட்டுங்கள். மேலும் 2:159-162 வசனங்களையும் படித்துக்காட்டுங்கள். மவ்லவி கள் குர்ஆன் வசனங்கள் நேரடியாகக் கூறுவதை ஏற்கமாட்டார்கள். (பார்க்க : 7:146)

ரமழான் இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவது தான் சிறப்பு என்று குர்ஆனிலும் இல்லை. ஆதாரபூர்வமான ஹதீஃதிலும் இல்லை. யார் குர்ஆனிலோ, ஹதீஃதிலோ இல்லாததை மார்க்கமாக்குகிறாரோ அவர் 33:36,66-68 இறைவாக்குகள் சொல்வது போல் நரகிற்கு இட்டுச் செல்லும் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதற்கு மாறாக நடுநிசியில் சஹர் செய்வதற்கு முன் வீட்டில் தனியாகத் தொழுவது தான் சிறப்பு என்று நபி(ஸல்) அறிவுறுத்திய ஹதீஃத் புஹாரீ முதல் பாகம் பாங்கு பாடத்தில் இரவுத் தொழுகை என்ற உபதலைப்பில் 731 ஹதீஃதாகப் பதிவிட்டுள்ளார். படித்துப் பாருங்கள்!

ஸைத் பின் ஸாபித்(ரழி) கூறியதாவது :

நபி(ஸல்) அவர்கள் ரமழான் மாதத்தில் பாயி னால் ஒரு அறையை அமைத்துக் கொண்டார்கள். சில இரவுகள் அதனுள் தொழுதார்கள். அவர்களது தோழர்களில் சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழலானார்கள். இதைப் பற்றி அறிந்த நபி(ஸல்) அவர்கள் (அந்த அறைக்கு வராமல்) உட்கார்ந்து விட்டார்கள். பின்பு மக்களை நோக்கி வந்து, “”உங்களது செயல்களை நான் கண்டேன். மக்களே! உங்களது இல்லங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்! கடமையான தொழுகை தவிர மற்ற தொழுகைகளைத் தமது வீட்டில் தொழுவதே சிறப்பாகும்” என்று கூறினார்கள். (புகாரீ : 731)

சுன்னத்தான ரமழான் இரவுத் தொழுகையை தத்தமது வீட்டில் தொழுது கொள்வதே சிறப்பு என்று இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் கட்டளை யிட்டுள்ளார்கள். அதை நிராகரித்து முஃப்தி உமர் ­ரீஃப் இரவுத் தொழுகையை ஜமாஅத்தோடு தொழுவது தான் சிறப்பு என ஃபத்வா கொடுக்கிறார். இப்போது சிந்தியுங்கள்! அல்லாஹ்வின் தூதர் சொல்வது மார்க்கமா? உமர் ­ரீஃப் கூறுவது மார்க்கமா? 33:36 வசனப்படி இது பகிரங்க வழிகேடு இல்லையா?

உமர் ­ரீஃப் கூறுவதை மார்க்கமாக எடுத்து நடப்பவர்கள் நாளை எங்கே போய் எப்படி நரகில் தண்டிக்கப்படுவார்கள் என்பதை 2:159-162, 33:36, 66-68 வசனங்களை நீங்கள் நேரடியாகப் படித்து அறிந்து கொள்ளுங்கள்.

மார்க்கத்தைக் கொடிய ஹராமான வழியில் தங்கள் வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட இம் மவ்லவிகளுக்கு அல்லாஹ்வின் தூதரின் நேரடிக் கட்டளையை விட உமர்(ரழி) அவர்களின் நடவடிக்கை தான் மார்க்கமாகத் தெரியும். உண்மையில் உமர் (ரழி) அவர்களுக்கு “நபி (ஸல்) அவர்கள் இத் தொழுகையை வீட்டில் தொழுது கொள்வதுதான் சிறப்பு என்று கட்டளையிட்டுள்ளது தெரிந்த நிலையில் ஒருபோதும் தனித்தனியாகவும், சிறிய சிறிய ஜமா அத்தாகவும் தொழுதவர்களை ஒரே ஜமாஅத்தாக ஆக்கி இருக்கமாட்டார்கள். உங்கள் உங்கள் வீடுகளுக்குப் போய் நடுநிசியில் ஸஹர் செய்வதற்கு முன்னர் தொழுது கொள்ளுங்கள் என்றே கட்டளையிட்டிருப்பார்கள் என்றே அவர்கள் மீது நல்லெண்ணம் கொள்வதே நேர்வழியாகும்.

காரணம் உமர்(ரழி) அவர்கள் மார்க்கத்தையும், ரமழான் இரவுத் தொழுகையையும் தங்களின் வயிற்றுப் பிழைப்பாக இம்மவ்லவிகளைப் போல் கொண்டிருக்கவில்லை. 36:21 இறைவாக்குக்கு அடிபணிந்தார்கள். எனவே நபி(ஸல்) அவர்களின் நேரடிக் கட்டளையை நிராகரித்துச் சொந்தக் கருத்தை நிலைநாட்ட முற்பட்டிருக்க மாட்டார்கள். அவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தங்களின் வயிற்றுப் பிழைப்பைத் தேட, வியாபாரம் செய்ய செல்பவர்களாக இருந்தார்கள். அந்த சமயங்களில் நபி(ஸல்) கூறியவற்றில் ஒருசில அவர்களுக்குத் தெரியாதிருக்கலாம். ஒருவர் பிறர் வீட்டுக்குப் போய் மூன்று முறை ஸலாம் சொல்லியும் பதில் இல்லை என்றால் திரும்பி விடவேண்டும் என்ற நபி(ஸல்) அவர்களின் வழி காட்டல், உமர்(ரழி) அவர்களுக்குத் தெரியாதிருந்து அதற்கு இரண்டாவது சாட்சியை அழைத்துவரக் கட்டளையிட்டது பிரபல்யமானது.

எனவே நபி(ஸல்) அவர்கள் ரமழான் இரவுத் தொழுகையை தங்கள் தங்கள் வீட்டில் நடுநிசியில் ஸஹருக்கு முன்னர் தொழுது கொள்வதே சிறப்பு என்று கட்டளையிட்டது உமர்(ரழி) அவர்களுக்குத் தெரியாத நிலையில்தான் ஜமாஅத்தாக தொழ ஏற்பாடு செய்தார்கள் என்று அவர்கள் மீது நல்லெண்ணம் கொள்வதே நேர்வழி. அதுவும் அவர்கள் யாரையும் தக்லீது செய்யாமல் சுயமாக எடுத்த முடிவு. எனவே அவர்களை அல்லாஹ் மன்னிக்கவும் செய்யலாம். அதை அவர்களுக்கு நன்மையாக மாற்றியும் கொடுக்கலாம்.

அதற்கு மாறாக இந்த மவ்லவிகள் அவர்களை தக்லீது செய்வதுடன், புகாரீ 731ல் காணப்படும் நடுநிசியில் வீட்டில் தனித்துத் தொழுவதே சிறப்பு என்ற நபி(ஸல்) அவர்களின் நேரடிக் கட்டளையை நிராகரித்துக் கொடிய ஹராமான வழியில் கிடைக்கும் 30,000/-, 20,000/-, 15,000/- என்ற அற்பக் காசுக்காக வீட்டில் தொழ வேண்டிய சுன்னத்தான ரமழான் இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழ வேண்டும் என்று 2:159-162, 33:36 இன்னும் பல இறைவாக்குகளை நிராகரித்துத் தங்களின் சுய ஃபத்வாக்களை கொடுப்பவர்களின் நிலை பற்றிய செய்தியாக அவர்கள் சென்றடைவது நரகம். அவர்கள் அல்லாஹ் மலக்குகள், மனிதர்கள் அனைவரின் சாபத்திற்கு ஆளாகின்றனர் என்பதை ஜின் இன ஷைத்தான் அவர்களுக்கு மறக்கடிக்கச் செய்கிறான். இந்த மவ்லவிகளும் தாஃகூத் என்ற மனித இன ஷைத்தான்களாகச் செயல்பட்டு, தாங்களும் வழிகெட்டு, தங்களை நம்பியுள்ள அப்பாவிகளையும் வழிகெடுப்பதில் குறியாக இருக்கிறார்கள். (பார்க்க : 4:44, 27:14)

2:186, 7:3, 18:102-106, 59:7 வசனங்களுக்குக் கட்டுப்பட்டு வழிகெடுக்கும் இம்மவ்லவிகளை முற்றிலும் புறக்கணித்து 3:103 இறைக் கட்டளைப்படி குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன் வழிகாட்டல்படி நடப்பவர்களே நேர்வழி நடப்பவர்கள்.

நபி(ஸல்) காட்டித்தந்த 8+3 ரகாஅத்துகளுக்கு அதிகமாக 20+3 ரகாஅத்துகள் தொழுவது நன்மை தானே, நபி(ஸல்) ரமழான் இரவுத் தொழுகையை வீட்டில் நடுநிசியில் தனியாகத் தொழுவதே சிறப்பு என்று கட்டளையிட்டுள்ளதற்கு மாறாகப் பள்ளியில் ஜமாஅத்தாக 20+3 தொழுவது நன்மைதானே என்று கூறும் இம்மவ்லவிகள், அந்த நன்மைகள் தங்கள் பின்னால் நின்று தொழுபவர்களுக்கு மட்டுமா? இம்மவ்லவிகளுக்கு வேண்டாமா? சிந்தியுங்கள்! அப்படியானால் மறுமையில் கூலி பெறவேண்டிய மார்க்கப் பணிகளை இவ்வுலகில் அற்பக் காசுக்கு விற்றுவிட்டு மறுமையில் வெறுங்கையுடன் அல்லாஹ்வின் முன்னால் நிற்கலாமா?

கூலி வாங்காமல் மார்க்கப் பணி புரிந்த, நேர்வழி (6:153) நடந்த நன்மக்களைப் புறந்தள்ளிவிட்டு 36:21 இறைவாக்கை நிராகரித்து, ஒரே மார்க்கத்தை எண்ணற்ற மதங்களாக்கி கொடிய ஹராமான வழியில் தங்கள் வயிற்றையும், பையையும் நிரப்பும் பெரும்பாவிகளின் கோணல் வழியைப் பின்பற்றும் ஒட்டுமொத்தப் பெருமை பேசும் மவ்லவிகளும் 2:41,79, 3:78,187,188, 4:44, 5:62,63, 6:21,26, 9:9,34, 11:18,19, 31:6 குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் நிராகரித்து குஃப்ரிலாகி, தங்களின் மார்க்கப்பணி, கடமையான ஐங்காலத் தொழுகை, தராவீஹ் என்ற கற்பனைப் பெயரில் ரமழான் இரவுத் தொழுகை இவை அனைத்தையும், இவ்வுலகில் அற்பக் காசுக்கு விற்றுவிட்டு, நாளை மறுமையில் தொழுகையற்ற, சிறிதும் நன்மைகளற்ற ஃபிர்அவ்ன், காரூன், நம்ரூது, அபூ ஜஹீல் போன்றோருடன் நிற்க வேண்டுமே என்ற அச்சம் இம்மவ்லவிகளுக்கு இருக்கிறதா?

அல்லாஹ்வின் மீதும், மறுமையிலும், சுவர்க்கம், நரகம், கேள்வி கணக்கு இவற்றைத் தங்களை மறந்து ஊருக்கு உபதேசம் (பார்க்க 61:2,3) செய்யும் இம் மவ்லவிகள் அல்லாஹ்வின் பெரும் வெறுப்புக்கு ஆளாகிறார்கள் என்பதில் சந்தேகமுண்டா? உண்மையில் இம்மவ்லவிகளுக்கு அல்லாஹ் மீதும் மறுமையிலும் உறுதியாக நம்பிக்கை இருந்தால் இப்படி நடப்பார்களா? சிந்தியுங்கள்!

10:5, 55:5 குர்ஆன் வசனங்கள் கூறும் கணக்கின்படி வரும் ரமழான் ஜூன் 06 திங்கள் அன்று நோன்பு ஆரம்பித்து ஜூலை 04 திங்களுடன் நிறைவு பெறுகிறது. இந்தச் சுயநல மூட மவ்லவிகளின் பேச்சை நம்பி கண்ணுக்குத் தெரியும் காலையில் கிழக்கில் உதித்து மாலையில் மேற்கில் மறையும் பிறையைக் கண்ணால் பார்த்து விட்டு, பிறந்த பிறை சில நிமிடங்களில் மறையுமா? குறைந்தது 12 மணி நேரம் மறையாமல் இருக்க வேண் டுமே என்ற நாலாம் வகுப்பு மாணவன் அறிந்த வி­யத்தைக் கூட அறியாத இம்மவ்லவிகள் எப் படிப்பட்ட மூடர்களாக இருப்பார்கள் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

அதிலும் பொய்யன் பீ.ஜை. சந்திரன் மேற்கில் மாலையில் உதித்து கிழக்கில் மறைகிறது என்று கூறி தான் எப்படிப்பட்ட வடிகட்டின மூடனாக இருக்கிறார் என்பதை சுய சிந்தனையாளர்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.

இந்த வானத்தின் கீழ் இம்மவ்லவிகளை விட வடிகட்டிய மூடர்கள் வேறு யாரும் இல்லை என் பதை பல குர்ஆன் வசனங்களும், ஹதீஃத்களும் கூறுகின்றன. குர்ஆனில் ஜாஹில், ஜாஹிலூன், ஜாஹிலீன், ஜாஹிலிய்யா என சுமார் 14 இடங்களில் காணப்படுவது ஒரே நேர்வழி மார்க்கத்தை பல மதங்களாக்கி அவை மூலம் தங்கள் வயிறுகளைக் கொடிய ஹராமான வழியில் நிரப்பும் இம்மதகுருமார்களைக் குறித்துத்தான், அவர்கள் தான் வடிகட்டின மூடர்கள் எனப் பறை சாற்றுகின்றன.

இந்த வசனங்கள் எல்லாம் முன்சென்ற மதகுரு மார்களையே குறிக்கும்; எங்களை அல்ல என்று வாய் சவடால் விடுவார்கள். அவர்களை அப்படியே ஜானுக்கு ஜான் முழத்திற்கு முழம் பின்பற்றும் இம்மவ்லவிகள், அவர்கள் ஓர் உடும்பின் பொந்தில் நுழைந்திருந்தால் இம்மவ்லவிகளும் அதில் போய் நுழைபவர்களாக இருந்து கொண்டு மேற்படி வசனங்கள் எங்களைக் குறித்து அல்ல என்று சொல்வது வடிகட்டின பொய்யா? இல்லையா?

சகோதர, சகோதரிகளே வழிகெடுக்கும் மனித ஷைத்தான்களான(தாஃகூத்) வீண் பெருமை பேசும் இம்மவ்லவிகளின் (பார்க்க : 7:146) வசீகர வலையில் சிக்காமல், அவர்களிடமிருந்து விடுபட்டு குர்ஆன் 3:103 வசனக் கட்டளைப்படி குர்ஆனைப் பற்றிப் பிடித்து ஜூன் 06 திங்கள் அன்று நோன்பை ஆரம்பித்து ஜூலை 04 திங்கள் அன்று 29 நோன்புகளுடன் நிறைவு செய்யுங்கள். பகலுக்குப் பின் இரவு என்று அடிப்படையில் கணக்கிட்டு முதல் நோன்பு முடிந்தபின் ரமழான் இரவுகளின் சஹர் செய்ய 1 மணிக்கு முன்னர் எழுந்து தனியாக வீட்டில் ரமழான் இரவுத் தொழுகையைத் தொழுது, அல்லாஹ்விடம் பாவமன்னிப்பும், பெரும் பாக்கியங்களையும் அடைய முன்வாருங்கள். இந்த மவ்லவிகளுக்குப் பின்னால் சென்றால் நாளை நரகை அடைந்து ஒப்பாரி வைக்க நேரிடும். எச்சரிக்கை. (பார்க்க : 7:35-41, 33:66-68, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45) இவற்றில் பெருமையடித்தோர் என்று கூறப்படுவது சாட்சாத் இம்மவ்லவிகளைத்தான்.

அல்லாஹ் காட்டுவது ஒரே நேர்வழி (6:153) அனைத்து மதங்களும் ஊட்டுவது போதை. அனைத்து மதங்களின் மதகுருமார்களும் காட்டு வது நரகிற்கு இட்டுச் செல்லும் கோணல் வழிகளையே. அனைத்து மதங்களின் மதகுருமார்களை விட ஆகக் கேடுகெட்டவர்கள், உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமான இறைவன் இறுதியாக அளித்துள்ள இறுதி வாழ்க்கை நெறிநூல் குர்ஆன் முஸ்லிம்களின் வேதம்(?) முஸ்லிம் அல்லாதவர்களுக்குக் கொடுக்கக்கூடாது. மவ்லவி அல்லாத முஸ்லிம்களும் குர்ஆனை தங்களின் தாய் மொழியில் படித்தும் விளங்க முடியாது என்று அண்டப் புளுகை, ஆகாசப் பொய்யைத் தொடர்ந்து கூறி வரும் மவ்லவி ஆலிம் என பெருமை பேசும் முஸ்லிம் மதகுருமார்களே! அவர்களிலும் ஆகக் கேடு கெட்டவர் 1986-ல் நேர்வழியை அறிந்த பின்னர் 7:175,176, 47:25, 45:23 இறைவாக்குகள் கூறுவது போல் வழிகேட்டில் சென்றுள்ள பொய்யன் பீ.ஜை.யாகும். இதை நாம் சொல்லவில்லை. இறுதி நெறிநூல் குர்ஆன் சொல்கிறது. 7:146 குர்ஆன் வச னத்தை நீங்களே நேரடியாகப் படித்து விளங்குங் கள்! குர்ஆனை மக்களிடமிருந்து மறைக்கும் இரகசியம் புரிகிறதா?

(எவ்வித) நியாயமுமின்றி, பூமியில் பெருமை யடிப்பவர்களை, என் வசனங்களை (விளங்கிக் கொள்வதை) விட்டும் திருப்பிவிடுவேன், அவர்கள் அத்தாட்சிகள் யாவையும் கண்டபோதிலும் அவற்றை நம்ப மாட்டார்கள், அவர்கள் நேர்வழியைக் கண்டால் அதனை (தங்களுக்குரிய) வழியாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள், ஆனால், தவறான வழியைக் கண்டால், அதனை(த் தங்களுக்கு நேர்) வழியாக எடுத்துக் கொள்வார்கள், அது (ஏனெனில்), அவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்குகிறார்கள். இன்னும், அவற்றை விட்டும் அலட்சியமான வர்களாக இருக்கிறார்கள் என்ற காரணத்தினாலாகும். (7:146) இதுவே மவ்லவிகளின் வழிகெட்ட நிலை!

மேலும் நாங்கள்தான் ஆலிம்கள், மார்க்கம் கற்ற மேதைகள், அவாம்களான பாமரர்களுக்கு குர்ஆன் விளங்காது, அவர்களின் தாய்மொழியில் குர் ஆனைப் படித்தாலும் அவர்களால் குர்ஆனை விளங்க முடியாது என்று வீண் பெருமை பேசும் இம் மவ்லவிகளின் இழி நிலையை கீழே குறிப்பிடப்பட்டுள்ள குர்ஆன் வசனங்களை நீங்களே நேரடியாகப் படித்து அவர்கள் ஃபிர்அவ்ன், காரூன், நம்ரூது, அபூ ஜஹீல் இவர்கள் போன்ற வழிகேடர்களின் வாரிசுகளே அல்லாமல், நபிமார்களின் வாரிசு கள் இல்லவே இல்லை என்பதை நீங்களே நேரடியாக அறிந்து கொள்ள முடியும்.

2:159-162, 3:77, 4:27, 5:48, 6:157, 7:175-179, 15:39, 18:57, 45:23, 47:25, 2:34, 4:36, 7:36-40,146, 206, 11:10, 16:22,23, 49, 17:37, 21:19, 25:63, 28:83, 31:7,18, 32:15, 35:10, 39:49,72, 40:35,47,48,56,60, 45:37, 49:13, 57:23, 59:23, 74:1-3, 34:31-33. இந்த வசனங்களை நேரடியாக குர்ஆனிலிருந்து படித்து நேர்வழியை அடையுங்கள்.

விமர்சனம் : நாம் அந்நஜாத் ஜூன் இதழிலும், வலைதளங்களிலும்

நோன்பு ஆரம்பம் : 06.06.2016

நோன்பு முடிவு : 04.07.2016

பெருநாள் : 05.07.2016  என்று வெளியிட்டிருந்ததை அவற்றில் X என்று போட்டு மறுத்திருக்கிறார்.

அவரது விமர்சனம் நமது மனோ இச்சையை விட விஞ்ஞான வளர்ச்சியின் மனித அறிவை விட நம் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வார்த்தை மற்றும் வாழ்க்கை (ஆதாரபூர்வ ஹதீஃத்) நமக்குப் பெரியது” என்று பதிவு செய்திருக்கிறார். இந்த 9942093797 செல் நம்பருக்குரியவர்.

விளக்கம் : சூரியனும், சந்திரனும் துல்லியக் கணக்கின்படி சுழல்கின்றன என்று 10:5, 55:5 குர்ஆனின் வசனங்கள் நேரடியாகக் கூறுகின்றன. துல்லியக் கணக்கின்படி சூரியனும், சந்திரனும் சுழல்கின்றன; அவை எனது கட்டுப்பாட்டில் இருக்கின் றன என்று அல்லாஹ் கூறுவதை மறுத்து இல்லை இல்லை சந்திரனின் சுழற்சி மனிதக் கண்ணின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாகத் தார்ப்பாயில் வடித்தெடுத்தப் பொய்யை பொய்யன் பீ.ஜை தொடர்ந்து கூறி வருகிறார். அப் பொய்க் கூற்றையே சகோதரர் எவ்வித சுய சிந்தனையும் இல்லாமல் கண்மூடி ஏற்று விமர்சித்துள்ளார்.

சந்திரன் மாலையில் மேற்கில் உதித்து கிழக்கில் மறைகிறது என்றும் சாப்பிடுவது என்றால் வாயால் மட்டுமே சாப்பிடுவது என்பது போல், பார்ப்பது என்றால் கண்ணால் மட்டுமே பார்ப்பது என்று, பார்ப்பது என்றால் கண்ணால், உள்ளத்தால், தகவலால், ஆய்வால், கணிப்பால், கணக்கீட்டால் என்று பல பொருட்கள் இருக்கின்றன என்று பல குர்ஆன் வசனங்கள் இருக்க அவை அனைத்தையும் நிராகரித்து குஃப்ரிலாகி பொய்யன் பீ.ஜை. பிதற்றுவதுதான் உங்களைப் போன்றவர்களுக்கு வேதவாக்காகத் தெரிகிறது.

குர்ஆனின் பல வசனங்கள் சூரியனும், சந்திர னும் துல்லிய கணக்கின்படி சுழல்கின்றன என்று சொல்லுவதை நபி(ஸல்) அவர்கள் நிராகரித்து சந்திரன் மனிதக் கண் பட்டால்தான் சுழலும், கண் படாதவரை சுழலாமல் அங்கே நிற்கும் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று சொல்வதை விட வடிகட்டின மூடத்தனம் இருக்க முடியுமா? என்ற சாதாரண அறிவும் பொய்யன் பீ.ஜைக்கும் அவரது கண்மூடி தக்லீது பக்தர்களுக்கும் இல்லை என்பதுதான் உண்மை.

அது சரி! அன்று நபி(ஸல்) அவர்கள் நோன்பை ஆரம்பிப்பதையும், துறப்பதையும் சூரிய சுழற்சியைக் கண்ணால் பார்த்துத்தான் செயல்படுத்தினர். செயல்படுத்தக் கூறினர். இன்று பொய்யன் பீ.ஜையும் அவரது பக்தகோடிகளும் சூரியனைப் பார்க்காமல் கடிகாரத்தைப் பார்த்து நோன்பை ஆரம்பிக் கலாமா? நோன்பைத் துறக்கலாமா? நபி(ஸல்) அவர் களின் வார்த்தை மற்றும் வாழ்க்கை (ஆதாரபூர்வ ஹதீஃத்) நமக்குப் பெரியது என்பது எங்கே போயிற்று?

ததஜவினருக்கு ஹதீஃத் தேவைப்பட்டால் அதைத் தூக்கிப் பிடிப்பார்கள். அவர்களது வழி கெட்ட மூடக் கொள்கைக்கு எதிராக இருந்தால் அதை நிராகரிப்பார்கள். வழிகெட்ட ததஜ பிரிவுப் பெயருக்கு, ஆர்ப்பாட்டம், போராட்டம், பந்த், சாலை மறியல், ஆண்களையும், பெண்களையும் சாலைகளில் இறக்கி, போக்குவரத்துக்கு இடையூறு பண்ணி, பொதுமக்களின் அன்றாட அதி அத்தியாவசிய செயல்களை முடக்குவது, இப்படிப்பட்ட அதி அக்கிரமச் செயல்பாடுகள் நபி(ஸல்) காட்டித் தந்ததா? இவர்கள்தான் குர்ஆன் ஹதீஃத்படி நடக்கிறவர்களா?

இன்றைய முஸ்லிம்களிலேயே ஆக ஆகப் பெரும் வழிகேட்டில் இருப்பது ததஜவினரே. இதற்கு எண்ணற்ற குர்ஆன் வசனங்களையே அந்நஜாத்தில் கொடுத்து வருகிறோம். ததஜவினர் தான் பொய்யன் பீ.ஜைக்கு அடிபணிந்து ஷிர்க்கிலாகி (பார்க்க : 9:31, 39:17,18) அந்நஜாத்தைத் தொட்டுக் கூட பார்ப்பதில்லையே. குர்ஆனையும் நேரடியாகப் படிக்காமலேயே அண்ணன் சொன்னால் போதுமே. நாங்கள் குர்ஆனைப் படிக்க வேண் டிய அவசியம் இல்லையே! என்று பிதற்றுகிறவர்கள் தானே? அண்ணன் நரகிற்குப் போனால் நாங்களும் போகிறோம். உங்களுக்கு ஏன் கவலை என்று கேட்பவர்கள்தானே! 29:69 இறைவாக்குச் சொல்வது போல் அவர்களுக்கு நேர்வழி கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா? ஒருபோதும் வாய்ப்புக் கிடைக்காது. யார் இந்த வழிகெடுத்து நரகில் தள்ளும் மவ்லவிகளை நிராகரிததுப் புறம் தள்ளிவிட்டு நேரடியாக குர்ஆன், ஹதீஃதுடன் தொடர்பு கொள்கிறார்களோ அவர்களுக்கே அல்லாஹ் நேர்வழி காட்டுவான். இதுவே நிச்சயம். (பார்க்க : குர்ஆன்: 29:69, 28:56)

“விஞ்ஞான வளர்ச்சியின் மனித அறிவை விட நம் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்) அவர் களின் வார்த்தை மற்றும் வாழ்க்கை (ஆதாரபூர்வமான ஹதீஃத்) நமக்குப் பெரியது” என்று வாயளவில் பிதற்றியுள்ள சகோதரர், நபி(ஸல்) ஒட்டகத்தில் பயணித்தார்கள். இன்று இவர் ஒட்டகத்திலா பயணிக்கிறார். நபி(ஸல்) அவர்கள் சூரிய சுழற்சியைக் கண்ணால் பார்த்துத்தான் ஐங்காலத் தொழுகைகளைத் தொழுதார்கள். இன்று இவர்கள் சூரியனைக் கண்ணால் பார்த்துத்தான் தொழுகிறார்களா? இல் லையே! உண்மை இதுதான்.

முதன் முதலில் மக்கள் ஒட்டகத்தை விட்டு பிற வாகனங்களில் பயணிக்க ஆரம்பித்த போதும் இம்மவ்லவிகளும் அவர்களது முகல்லிது பக்தர்களும் ஒட்டகத்தில் தான் பயணிக்க வேண்டும். அதுவே நபிவழி எனப் பிதற்றத்தான் செய்தார்கள்; அவர்கள் மாறவில்லை. காலம்தான் அவர்களை மாற்றியது.

நாமே எமது 18 வயதிலிருந்து 42 வயது வரை 24 வருடங்களாக ஐங்கால தொழுகை, தஹஜ்ஜுத், இஷ்ராக், அவ்வாபீன் என விடாது தொழுது கொண்டு, இம்மவ்லவிகள் மீது பெற்றோரை விட அதிகப் பக்தியுடன் தலையில் வைத்துக் கொண்டாடுவதுடன் தினசரி குர்ஆனை ஒரு பாகம் என ஒரு மாதத்திற்கு ஒரு குர்ஆன் என பொருள் அறியாமல் ஓதிக் கொண்டிருந்தோம். தப்லீஃக் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தோம். 1971ல் இம்மவ்லவிகளிடம் காணப்பட்ட மிகமிக இழிவான செயல்களை எமது கண்ணாலேயே நேரடியாகப் பார்த்துத் திடுக்கிட்டோம். அதன் பின்னரே குர்ஆனை நேரடியாகப் பொருள் அறிந்து படித்துச் சிந்திக்க ஆரம்பித்தோம். அதன் விளைவு அன்று இம்மவ்லவிகளை பெற்றோரை விட அதிகமாக மதித்து வந்த நாம், தலையில் வைத்துக் கொண்டாடிய நாம், இன்று ஒரு நாய்க்கு, பன்றிக்குக் கொடுக்கும் மதிப்பைக் கூட இம்மவ்லவிகளுக்கு கொடுப்பதாக இல்லை. இந்த அறிவை 7:146,175-179, 45:23, 47:25 இன்னும் பல குர்ஆன் வசனங்களே எமக்குத் தந்தன.

எவர்கள் குர்ஆனைத் தொட்டுப் பார்க்காமலும், வேறு சிலர் தினசரி பொருள் அறியாமல் கிளிப்பிள்ளைப் பாடமாக ஓதி வருகிறார்களோ அவர்களும் இம்மவ்லவிகளைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடத்தான் செய்வார்கள், அவர்களின் மார்க்க முரணான போதனைகளை வேதவாக்காகக் கொண்டு செயல்பட்டு நாளை நரகை நிரப்ப இருக்கிறார்கள். இதை நாம் சொல்லவில்லை; குர்ஆனே கூறுகிறது. நேரடியாக 7:35-41, 33:66-68, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45, இந்த வசனங்களைப் படித்து அறிந்து கொள்ளுங்கள்.

நாங்கள்தான் ஆலிம்கள், மார்க்க விற்பன்னர்கள், குர்ஆன் எங்களுக்குத் தான் விளங்கும். அவாம் களான பாமரர்கள் அவர்களது தாய்மொழியில் குர் ஆனைப் படித்தாலும் விளங்க முடியாது என்று உண்மையன்றி வீண் பெருமை பேசும் இம்மவ்லவிகள் வழிகேட்டிலும், நரகத்திற்கு மக்களைத் திரட்டும் பெரும்பாவிகளுமாகவும் இருக்கிறார்கள், ஷைத்தானின் நேரடி ஏஜண்டுகள், தாஃகூத் என்று குர்ஆன் கூறும் 2:256,257, 4:51,60,76, 5:60, 16:36, 39:17 இந்த வசனங்கள் அனைத்தையும் நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் நிச்சயம் அறிய முடியும்.

வடிகட்டின மூடர்களாகிய இம்மவ்லவிகளுக்கு எவையயல்லாம் வஹி மூலம் பெறப்பட்ட மார்க்கத்திற்கு உட்பட்டவை, எவையயல்லாம் மார்க்கத்திற்கு உட்படாத உலகியல் நடைமுறைகள் என்ற வேறுபாட்டை விளங்க முடியாத அல்லது விளங்க முடியாதது போல் நடிக்கும் நடிகர்களாக இருக்கிறார்கள் என்பதை குர்ஆனைத் தினசரி பொருள் அறிந்து படித்து வருகிறவர்கள் நிச்சயம் விளங்க முடியும்.

மார்க்கத்தை மார்க்கம் அல்லாததாக ஆக்குவதும், மார்க்கம் அல்லாததை மார்க்கம் ஆக்குவதும் இம்மூட மவ்லவிகளுக்குக் கைவந்த கலை. மார்க்கத்தில் ஹலாலை ஹராமாக்குவதிலும், ஹராமை ஹலாக்குவதிலும் மார்க்கம் கற்ற அதிமேதாவிகள் எனப் பெருமை பேசும் இம்மவ்லவிகளுக்கிருக்கும் அசாத்தியத் துணிச்சல் வேறு யாருக்கும் இருப்பதாக, குர்ஆனை நேரடியாகப் பொருள் அறிந்து படித்து வரும் கடந்த 32 வருட அனுபவத்தில் நாம் காணவில்லை. (பார்க்க : 5:87,10:59,16:116)

ஒரே தூய மார்க்கத்தை எண்ணற்ற கோணல் மதங்களாக்கி வட்டி, மது, மோசடி, கொள்ளை, விபச்சாரம் என ஹராமாக்கப்பட்ட அனைத்து ஹராம்களிலும் மிகமிகக் கொடிய ஹராமாகிய எண்ணற்ற குர்ஆன் வசனங்கள் கடுமையாக மறுப்பதைச் சிறிதும் கண்டு கொள்ளாமல் புறக்கணித்து, நிராகரித்து விட்டு, சமுதாயத்தை ஆலிம்-அவாம் என பிளவுபடுத்தி வயிறு வளர்க்கும் இம்மவ்லவிகளை விட கேடுகெட்டவர்கள் யாரும் இப்பூமியில் இல்லை என்பதை கீழ்க்கண்ட குர்ஆன் வசனங் களை நேரடியாகப் படித்து அறிகிறவர்கள் நிச்சயம் ஏற்பார்கள்.

6:90, 10:72, 11:29, 51, 25:57, 26:109,127,145, 164,180, 34:47, 38:86, 42:23, 36:21, 52:40, 68:46, 2:41,79, 3:78,187, 188, 4:44,46, 5:41,63, 6:21,25,26, 9:2,9,10,34, 11:18,19, 31:6, 2:75,78,79,109,146, 6:20, 5:13, 2:159,160,161,162, 174,188 இந்த இறைவாக்குகள் அனைத்தையும் சிரமம் பாராமல் கடும் முயற்சியாக 29:69 வசனத்திற்கு அடிபணிந்து குர்ஆனை நேரடியாகப் படித்து அறிகிறவர்கள் மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டுள்ள இம்மவ்லவிகளின் இழி நிலையை, வழிகேட்டின் ஆழத்தை அறிந்து கொள்ள முடியும்.

பெருமை பேசும் இம்மவ்லவிகளை விட கேடுகெட்ட ஒரு படைப்பு இவ்வானத்தின் கீழ் இல்லை என்பதை அறிய முடியும். இதை 7:146,175-179, 45:23, 47:25 குர்ஆன் வசனங்கள் அம்பலப்படுத்துகின்றன.

மேலும் இம்மவ்லவிகளை அன்றே முன் அறிவிப்பாக அடையாளம் காட்டியுள்ளனர் நபி(ஸல்) அவர்கள்.

ஒருகாலம் வரும். இஸ்லாத்தின் பெயரைத் தவிர வேறொன்றும் எஞ்சி இருக்காது. குர்ஆன் ஏட்டில் இருக்குமே அல்லாமல் வேறொன்றும் எஞ்சி இருக்காது. அவர்களின் பள்ளிகள் முற்றிலும் நேர்மைத் தவறியவர்களைக் கொண்டே நிரம்பி இருக்கும். அவர்களின் ஆலிம்கள் என்ற மார்க்க அறிஞர்கள் வானத்தின் கீழுள்ள படைப்புகளிலேயே ஆகக் கேடுகெட்டப் படைப்பாக இருப்பார்கள். தீய செயல்கள் அனைத்தும் அவர்களிலிருந்தே (கோழி குஞ்சுகளைப் பொரிப்பது போல்) பொரிச்சி வெளியாகும்.
பைஹகி 1908, மிஷ்காத் பாகம் 1, பக்கம் 91

இன்னும் நாங்கள்தான் ஆலிம்கள், மார்க்கம் கற்றவர்கள், நீங்கள் எல்லாம் அவாம்கள், மார்க்கம் அறிய முடியாத மூடர்கள் என்று உண்மையின்றி வீண் பெருமை பேசும் இம்மவ்லவிகள் பற்றி அவர்களின் இழி நிலை பற்றி அவர்கள் நாளை நரகை நிரப்புகிறவர்கள், அவர்களும் அவர்களது முரட்டு முகல்லிது பக்தர்களும், நரகில் ஒருவரை ஒருவர் திட்டிச் சபித்து ஒப்பாரி வைப்பது பற்றி நூற்றுக் கணக்கான குர்ஆன் வசனங்கள் இருக்கின்றன. ஆனால் வல்லமை பெற்ற அல்லாஹ் இம்மவ்லவி களின் வீண் பெருமை காரணமாக இந்த குர்ஆன் வசனங்களை விட்டும் திருப்பிவிடுவதாகவும், அவர்களுக்கு குர்ஆன் வசனங்களையே நேரடியாகக் காட்டினாலும் ஏற்கமாட்டார்கள். நேர்வழியை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள், கோணல் வழிகளையே நேர்வழியாக ஏற்று அவற்றையே மக்களுக்குப் போதிப்பார்கள் என்று குர்ஆன் 7:146 வசனம் நெற்றிப் பொட்டில் அடிப்பது போல், உள்ளங்கை நெல்லிக்கனி போல், குன்றிலிட்ட தீபம் போல், இரவும் பகலைப் போல் வெள்ளை வெளேர் என்று கடந்த 1450 வருடங்களாக பகிரங்கப்படுத்திக் கொண்டிருக்கிறது.

ஆனால் இந்த வசனங்கள் அனைத்தும் பெருமை பேசும் இம்மவ்லவிகளுக்கு ஒருபோதும் பலன் தாராது. ஆயினும் நரகை நிரப்ப இருக்கும் ஒவ் வொரு ஆயிரத்திலும் 999 பேர் இம்மவ்லவிகளை தக்லீது செய்யத்தான் செய்வார்கள். பெருங்கூட்டம் அவர்கள் பின்னால்தான் அணிவகுப்பார்கள். நாளை நரகில் கிடந்து வெந்து கரியாகிக் கொண்டு ஒருவரை ஒருவர் சபித்து ஒப்பாரி வைக்கப் போகிறார்கள். (பார்க்க : 33:36,66-68)

மேலும் பார்க்க : 7:35-41, 34:31-33,37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45.

எனவே இவ்வுலகில் இம்மவ்லவிகளின் காட்டில் தான் மழை. அவர்கள் விரும்பும் அனைத்தும் கிடைக்கும். ஆனால் இவ்வுலக வாழ்க்கையை நரகில் வெந்து கரியாகும். நித்திய நிரந்தர மறு உலக வாழ்க்கையுடன் ஒப்பிட்டால், இவ்வுலக வாழ்க்கை 0.000000000001 வினாடி கூடத் தேறாது என்பதை அறியாத மூடர்களாக இம்மவ்லவிகளும், அவர்களது முரட்டு மூட முகல்லிது பக்தர்களும் இருக்கிறார்கள். அல்லாஹ் அவன் நாடுபவர்களுக்கு மட்டுமே நேர்வழியைக் காட்டுகிறான். (பார்க்க: 28:56)

இம்மவ்லவிகளின் ஆகக் கேடுகெட்ட நிலையை, ஆக இழிநிலையை அறிந்து அவர்களைப் புறக்கணிக் கக் கீழ்க்கண்ட குர்ஆன் வசனங்களை நேரடியாகப் படித்து அறிந்தால், அப்படிப் படித்து அறிகிறவர்கள் ஆலிம் என பெருமை பேசும் ஆலிம், மவ்லவிகளுக்கு நாய், பன்றி இவற்றிற்கு கொடுக்கும் மரியாதையைக் கூட கொடுக்க மாட்டார்கள்.

2:159-162, 3:77, 5:48, 6:157, 7:146,175,179,206, 18:57, 45:23, 47:25, 2:34, 4:36, 7:36-40, 11:10, 16:22, 23,49,17:37, 21:19, 25:63, 28:83, 31:7,18, 32:15, 35:10, 39:49,72,40:35,47,48,56,60, 45:23,37, 49:13, 57:23, 59:23, 74:1-3, 34:31-33, புகாரீ : 4850, 4918, 6071, 6657, முஸ்லிம் : 2620.

இந்த வசனங்கள் அனைத்தையும் எவர் சிரமம் பாராமல் சோம்பல் படாமல், நேரடியாக தங்களுக் குத் தெரிந்த மொழிகளில் உள்ள குர்ஆனை 29:69 இறைவாக்குக் கூறும் பெரும் ஜிஹாதாக நேரடியாகப் புரட்டிப் பார்ப்பார்களேயானால் இம்மவ்லவி களின் ஆணவம், பெருமை, அகங்காரம் இவை அனைத்தையும் அறிவதோடு, அவர்களைப் புறக் கணித்து நிராகரிப்பதோடு, அவர்கள் மவ்லவி அல்லாதமவர்களை குர்ஆனை நெருங்க விடாது கடந்த 1200 வருடங்களாகத் தடுப்பதில் பெருங் குறியாக இருக்கும் இரகசியத்தையும் அறிந்துகொள்ள முடியும். ரமழான் மாதம் நல்ல சந்தர்ப்பம்; ரமழானைப் பயன்படுத்தி அதிகம் அதிகம் குர்ஆனைப் பொருள் அறிந்து படிப்பதோடு, மேலே கண்ட குர்ஆன் வசனங்களையும், ஹதீஃத்களையும் படித்து நேர்வழி (6:153) பெற முன்வாருங்கள்.

இந்த விமர்சனத்திற்கு விளக்கமாக குர்ஆன், ஹதீஃதை மட்டுமே கொடுத்துள்ளோம். எம்மீது ஆத்திரப்படுகிறவர்கள் எம்மீது ஆத்திரப்படவில்லை. மாறாக அல்லாஹ்வின் மீதும், அவனது தூதரின் மீதும் ஆத்திரப்படுகிறார்கள் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்களாக. அது பற்றியும் அல்லாஹ் 17:41,45-47, 89, 22:72, 25:60, 39:45 இறை வாக்குகளில் தெளிவாகவே எச்சரிக்கிறான். பாடம் பெறுவோர் பெற்றுக் கொள்வார்களாக. நல்லெண்ணத்துடன் முயற்சி செய்வோரின் முயற்சியை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்க மாட்டான். (பார்க்க : 28:56, 29:69)

விமர்சனம் : ஜமாஅத்துல் முஸ்லிமீன் வெளியிட்டுள்ள சந்திர நாள்காட்டியில் கடந்த 05.06.2016 ஞாயிறு சங்கமம். UTC 02.59 (இந்திய நேரம் காலை 8.29)க்கு ரமழான் பிறை தோன்று வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால் அன்றைய தினம் ஃபஜ்ருக்கு முந்திய பகுதியில் உள்ளவர்கள் முதல் நோன்பை ஞாயிற்றுக்கிழமையல்லவா நோற்க வேண்டும்? மாறாக 06.06.2016 அன்று நோற்பது எப்படி? M. அபூ நபீல், தேங்காய்பட்டணம்

விளக்கம் : பிறை மறைக்கப்படும் நாளை (அமாவாசை) நபி(ஸல்) அவர்கள் கழிந்த மாதத்துடன் சேர்க்கக் கட்டளையிட்டுள்ளார்களே அல்லாமல் புதிய மாதத்துடன் சேர்த்துக் கணக்கிடக் கட்டளையிடவில்லை. இதை ஃபக்துரு, ஃபக்மிலூ, ஃபஅதிம்மூ, ஃபஉத்தூ போன்ற அரபு பதங்கள் உறுதிப்படுத்துகின்றன. அது ஏன் தெரியுமா? சங்கமம் இடம் பெறும் 05.06.2016 ஞாயிறன்று ­ஃபானின் இறுதிப் பகுதியும், ரமழானின் ஆரம்பப் பகுதியும் கலந்திருக்கின்றன.

எனவே 05.06.2016-ஐ ரமழானின் முழு நாளாகக் கொள்ள முடியாது. அதனால் ரமழானை முழு நாளாகக் கொண்டுள்ள 06.06.2016 திங்கள் அன்று தேதிக் கோட்டிற்கு மேற்கில் இருப்பவர்கள் முதலில் ஃபஜ்ரை அடையும் போது நோன்பை ஆரம்பித்து அப்படியே படிப்படியாக 24 மணி நேரத்திற்குள் முழு உலகமும் நோன்பை ஆரம்பிக்க வேண்டும். தேதிக் கோட்டிற்குச் சமீபத்தில் கிழக்கில் இருப்பவர்கள் நோன்பை ஆரம்பித்து 14 மணி நேரத்தில் நோன்பு துறந்து விடுவார்கள். அதே சமயம் 14 மணி நேரத்திலிருந்து 24 மணி வரையுள்ள மேற்குப் பகுதியினர் இன்னும் ஃபஜ்ரை அடைந்து நோன்பை ஆரம்பித்திருக்க மாட்டார்கள். ஆக 24 மணி நேரம் ஒரு நாளைக்குள் உலகம் முழுவதும் நோன்பை ஆரம்பித்து விடுவார்கள்.

இதையே அல்லாஹ் 2:185 இறைவாக்கில் “உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்க வேண்டும்” என்று கட்டளையிடுகிறான். அதாவது 24 மணி ஒரு நாளுக்குள் ரமழானை அடைந்து நோன்பை ஆரம்பித்துவிட வேண்டும் என்றே கட்டளையிடுகிறான். பொய்யன் பீ.ஜை. சொல்வது போல் முதல் நாள், இரண்டாம் நாள், மூன்றாம் நாள் நோன்பு ஆரம்பிக்கலாம் என்பது தார்ப்பாயில் வடிகட்டின மூடத்தனமாகும். அதிலும் நாம் ஒரே நாளில் நோன்பை ஆரம்பித்துவிட வேண்டும் என்று சொல்கிறோம்! 2:159 இறைவாக்குக் கூறுவது போல் நாம் ஒரே நாளில் என்று கூறுவதை ஒரே நேரத்தில் நோன்பை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறுவதாக திரித்து மறைத்துக் கூறித்தன் முகல்லிது பக்தர்களை கடந்த பல்லாண்டுகளாக ஏமாற்றி நரகை நோக்கி நடைபோட வைக்கிறார். இன்று தொடர்ந்து மறுத்தாலும் நாளை நிச்சயம் தனது பாரிய வழிகேட்டைக் காணத்தான் போகிறார்.

எனவே இப்படிப்பட்ட மூடத்தனமான வரட்டு வாதங்களில் ஏமாறாதீர்கள். ஃபானும் ரமழானும் கலந்துள்ள 05.06.2016 ஞாயிறன்று ரமழான் நோன்பை ஆரம்பிப்பது அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்வதாகும். 15:39 இறைவாக்குக் கூறுவது போல் ஷைத்தான் வழிகேடுகளையே நேர்வழியாக அழகாகக் காட்டுவான்.

விமர்சனம் : சங்கமம் அன்று முதல் பிறையை புறக்கண்ணால் பார்க்க முடியாது என்றும் கண்ணுக் குத் தெரியும் மூன்றாம் பிறையைத்தான் முதல் பிறை என்று நம்பி நோன்பு நோற்கிறீர்கள் என்றும் தாங்கள் தொடர்ந்து குற்றம் சாட்டுகிறீர்கள். ஆனால் கடந்த 05.06.2016 (ஞாயிறு) மாலை கேரளாவில் முதல் பிறையைப் புறக்கண்ணால் பார்த்துள்ளார்கள். தொடர்ந்து தாங்கள் கூறும் குற்றச்சாட்டுப் பொய்ப்படுத்தப்பட்டுள்ளதே. தங்களின் விளக்கம் என்ன? M. அபூ நபீல், தேங்காப்பட்டணம்.

விளக்கம் : எமக்கு மார்க்கத்தில் கருத்துச் சொல்வதற்கு அணுவின் முனை அளவும் அனுமதி இல்லை என்று பல முறை எழுதிவிட்டோம். வழிகெடுக்கும் மவ்லவிகள் தங்கள் சுயகருத்துக்களை மார்க்கத்தில் புகுத்துவதால் (2:159-162) அவை உங்கள் உள்ளத்தில் புரையோடிப் போயிருப்பதால் இப்படி விமர்சிக்கிறீர்கள். சந்திர மாதத்தின் கடைசி நாள் மறைக்கப்படும் நாள் என்று கும்ம, குப்பிய போன்ற அரபு பதங்களால் நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள்.

05.06.2016 ஞாயிறு அன்று சந்திர உதயம் காலை கிழக்கில் 5.57 A.M.E மறையும் நேரம் மாலை 6.55 P.M.W. வெளிச்சம் 0.3%. இந்த நிலையில் 5.6.2016 ஞாயிற்றுக்கிழமை சூரியன் மறைந்தபின் பிறை யைப் புறக்கண்ணால் பார்த்திருக்க முடியுமா? ஒருபோதும் முடியாது. சவுதி அரசு சங்கமம் ஆகக் கிழக்கே இடம் பெற்றால் அடுத்த நாளை புதிய மாதத்தின் முதல் நாளாகவே கொள்வார்கள் என்று முன்னர் பலமுறை விளக்கி இருக்கிறோம்.

எனவே பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பதும் பார்ப்பது தான்; கணினி கணக்கீட்டால் பார்ப்பதும் பார்ப்பது தான். அவர்கள் 5.6.16 அன்று பிறை பார்க்கப்பட்டதாக அறிவிப்பது கணக்கீட்டின் அடிப்படையிலேயே. மக்கள், பொய்யன் பீ.ஜை. சொல்வது போல் பார்ப்பது என்றால் கண்ணால் மட்டுமே பார்ப்பது என்ற மூட நம்பிக்கையில் மூழ்கி இருப்பதால் இந்தத் தடுமாற்றம்.

விமர்சனம் : ஐஸ்லாந்து, ரஷ்யா, ஜெர்மனி போன்ற நாட்டவர்கள் 20 மணி நேரத்திற்கும் அதிகமாகவும், இந்தியா போன்ற நாடுகள் 14 மணி நேரமும் நோன்பு நோற்கும் போது இருவருடைய நன்மையி லும் உயர்வு தாழ்வு உண்டா? சமமான நன்மை என்றால் பாரபட்சமாகத் தெரிகிறதல்லவா? விளக்கம் தாருங்கள்.
வானர் நதீர், நாகர்கோவில்.

விளக்கம் : இப்படிப்பட்ட சிந்தனைகளில் நமது கவனத்தை ஷைத்தானும், தாஃகூத்களும் திசை திருப்பி நமக்கு அத்தியாவசியமான நேர்வழிச் சிந் தனைகளை விட்டும் தடுத்து விடுகிறார்கள். மவ்லவிகள் என்று பெருமை பேசுவோர் சமுதாயத்தில் நடைமுறைப்படுத்தும் செய்திகள், கேள்விகள் இத் தரத்தவையே. (பார்க்க : 23:3) இப்படிப்பட்ட வீண் சிந்தனைகளைத் தவிர்த்து அன்றாடம் நேரடியாக குர்ஆனைப் பொருள் அறிந்து படித்து வாருங்கள். அது மட்டுமே நேர்வழி காட்டும். அல்லாஹ்வுடைய ஃகஜானாவை எவராலும் அளவிட முடியாது; நன்மை செய்யும் எவரது கூலியையும் அல்லாஹ் அணுவளவும் குறைக்கமாட்டான். அதற்கு மாறாக ஒன்றுக்குப் பத்தாக, நூறாக, ஆயிரமாகக் கொடுக்கும் பெரும் கொடையாளி அல்லாஹ் என்பதை மனதில் நிறுத்துங்கள். அல்லாஹவே போதுமானவன்.

விமர்சனம் : நீங்கள் சொல்வது போல் நடுநிசியில் வீடுகளில் தனியாக தராவீஹ் தொழுவதாக இருந்தால் ஒவ்வொருவரும் முழு குர்ஆனையும் மனப்பாடமிட்ட ஹாபிழாக இருக்க வேண்டுமே; இது சாத்தியமா? தொலைபேசி விமர்சனம்.

விளக்கம் : ரமழான் இரவுத் தொழுகையில் குர்ஆன் முழுவதையும் பொருள் அறியாமல் ஓதி முடிக்க வேண்டும் என்று நபி(ஸல்) கூறி இருக்கிறார்களா? இல்லையே. நபி(ஸல்) காலத்திலும் அப்படி முழு குர்ஆனும் ஓதி முடிக்கப்பட்டதாக ஆதாரம் இருக்கிறதா? இல்லையே! 8+3=11 ரகாஅத்துகளாக இருந்த ரமழான் இரவுத் தொழுகையை தராவீஹ் என்றும் 20+3=23 என்றும் நபி(ஸல்) காட்டித்தராத பித்அத்தான முறையில் கற்பனை செய்த இடைத்தரகர்களான மவ்லவிகளின் கைங்கர்யம்தான் முழு குர்ஆனையும் பொருள் அறியாமல் ஓத வேண்டும். ஒவ்வொரு இரண்டு ரகாஅத்துகளுக்குப் பின்னர் கற்பனையாக சிலவற்றை ஓதுவது, ஒவ்வொரு 4 ரகா அத்துகளுக்கும் 4 கலீஃபாக்களின் பெயரைக் குறிப்பிட்டு சில கற்பனைகளை ஓதுவது இவை நபி(ஸல்) அவர்களது காலத்தில் இருந்திருக்க முடியுமா? முறையாகச் சிந்தித்துப் பாருங்கள். அதுவும் அரபு மொழியில் இருப்பதை அப்படியே தமிழில் எழுதிப் போட்டு அவற்றை அல்லாஹும்ம மஃக்பிர்லி-யா அல்லாஹ் என்னை மன்னிப்பாயாக என்றிருப்பதை அல்லாஹும்ம மக்பிர்லி-யா அல்லாஹ் என்னை காஃபிர் ஆக்குவாயாக என ஓத வைத்து குஃப்ரான அர்த்தங்கள் வரும் நிலையில் ஓதுவது இவை நபிவழியா? நபி(ஸல்) செய்து காட்டி இருக்க முடியுமா? கடைந்தெடுத்த பித்அத்-வழிகேடு நரகில் சேர்க்கும் என்பதில் ஐயமுண்டா? மார்க்க அடிப்படையில் நபி(ஸல்) காட்டித் தராத அனைத்தும் பித்அத்கள், வழிகேடுகள், நரகில் சேர்ப்பவை என்பது இம்மவ்லவிகள் அறியாததா? நாள் ஃபஜ்ரில் அல்ல மஃறிபில் ஆரம்பிக்கிறது என்ற யூத மதக் கலாச் சாரத்தைப் பின்பற்றி இந்த மவ்லவிகள் ரமழான் இரவுகளில் தராவீஹ் என்ற பெயரால் நடைமுறைப்படுத்தும் அனைத்தும் நபி(ஸல்) அவர்கள் மார்க்கமாகக் காட்டித்தராத பகிரங்கமான பித்அத்களே அல்லாமல் வேறல்ல. நாளை நரகில் சேர்க்கும் கொடிய செயல்களே அல்லாமல் வேறில்லை.

கேவலம் இத்தொழுகைப் பெயரைச் சொல்லி, 30,000/-, 20,000/-, 10,000/-, 5,000/- என இடத்திற் கேற்றவாறு பேரம் பேசி அற்பமான இந்த காசுக்காக ஈமானைவிற்கும் இம்மவ்லவிகள் 18:102-106 இறை வாக்குகள் சொல்வது போல் நட்டத்திலும் பெரும் நட்டவாளிகள். இந்த பித்அத்தான நரகில் சேர்க்கும் தொழுகை மூலம் (பார்க்க : 107:4-6) கேட்டையே சந்திக்கின்றனர்.

நாம் இப்படிக் கூறுவது உண்மை இல்லை என்றால், இஷாவுக்குப் பின் முன்னிரவில் தொழும் இத்தராவீஹ் தொழுகை மூலம் நன்மைகள் குவியும் என்று இவர்கள் சொல்வது உண்மையானால் இந்த மவ்லவிகளுக்கு அந்த நன்மைகள் வேண்டாமா? தங்களின் அத்தொழுகையை அற்பக் காசுக்கு விற்று விட்டு, நாளை மறுமையில் அல்லாஹ்வுக்கு முன் வெறுங்கையுடன் நிற்கலாமா? அவர்கள் பின்னால் நின்று தொழுபவர்கள் கூலியை நாளை மறுமையில் அல்லாஹ்விடம் எதிர்பார்த்து தொழுவது போல். இந்த மவ்லவிகளும் 36:21 குர்ஆன் வசனத்தை நிராகரித்து மக்களிடம் அற்பமான கூலி வாங்காமல் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் மட்டுமே கூலியை எதிர்பார்த்து ரமழான் இரவுத் தொழுகையை தொழ முன்வரட்டுமே பார்க்கலாம். அப்படிக் கூலிக்காக இம்மவ்லவிகள் மாரடிக்காமல், 36:21 இறைவாக்கை நிராகரித்து குஃப்ரிலாகாமல், நபிமார்கள் பிரகடணம் செய்துள்ளது போல் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் மட்டுமே கூலியை எதிர்பார்த்துக் கடமையான மார்க்கப் பணியைச் செய்ய முன்வரச் சொல்லுங்கள். அப்படி இம் மவ்லவிகள் முன்வந்து விட்டால், முஸ்லிம்கள் மீண்டும் உன்னத சமுதாயமாக, உலக மக்களுக்கே வழிகாட்டும் சமுதாயமாக உயர்ந்து விடும். (பார்க்க : 3:139)

ஹராமான வழியில் கூலிக்கு மாரடிக்கும் இம் மவ்லவிகளின் இப்படிப்பட்ட உளறல்களை ஷைத்தான் உங்களுக்கு அழகாகக் காட்டத்தான் செய்வான். (பார்க்க :15:39) ஏமாறாதீர்கள்.

சஹர் செய்ய 1 மணி நேரத்திற்கு முன் எழுந்து நல்ல முறையில் ஒளூ செய்து கொண்டு உங்களுக்குத் தெரிந்த சூராக்களையே படித்து 8+3=11 ரகாஅத்துக்களைப் பூர்த்தி பண்ணுங்கள். அதிக நேரம் நின்று தொழ விரும்பினால், நீங்கள் ஓதிய சூராக்களையே மீண்டும் மீண்டும் ஓதலாம். முடிந்தமட்டிலும் நீங்கள் ஓதும் சூராக்களின் பொருள் அறிந்து படிக்க முயற்சி செய்யுங்கள். அதுவே அதிக நன்மைகளைப் பெற்றுத்தரும். அல்லாஹ் போதுமானவன்.

விமர்சனம் : நபி(ஸல்) அவர்களே சில நாட்கள் இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுது காட்டி விட்டுப் பின்னரே நிறுத்தினார்கள் என்று காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது. மவ்தூதி கூட இந்த அடிப்படையில் ஜமாஅத்தாகத் தொழுவதை சரிகண்டுள்ளதாக சமரசத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீங்கள் அவ்வழக்கத் தைக் கடுமையாக மறுப்பதின் நோக்கம் என்ன? தொலைபேசி விமர்சனம்.

விளக்கம் : 1986 மே அந்நஜாத் இதழில் ரமழான் இரவுத் தொழுகை பற்றி எழுதியபோது, 20+3=23 ரகாஅத்துகளைக் கடுமையாக விமர்சித்து அது பித்அத்-வழிகேடு என்று குர்ஆன், ஹதீஃத் ஆதாரங்களைக் கொடுத்திருந்தோமே அல்லாமல் இஷாவுக்குப் பின்னர் ஜமாஅத்தாகத் தொழுவதை மறுக்கவில்லை. உமர்(ரழி) அவர்கள் நடைமுறைப்படுத்தியது என்ற அடிப்படையில் சரிகண்டோம். அப்போது புகாரீ 731 ஹதீஃத் ரமழான் இரவுத் தொழுகை பாடத்தில் இடம் பெறாமல், பாங்கு பாடத்தில் இடம் பெற்றுள்ளதால் அதை அறியாத நிலையில் இந்தத் தடுமாற்றம்.

பாங்கு பாடம் புகாரீ 731-ல் நபி(ஸல்) அவர்கள் ரமழான் மாதத்தில் பாயினால் ஓர் அறையை அமைத்துக் கொண்டார்கள். சில இரவுகள் அதனுள் தொழுதார்கள். அவர்களது தோழர்கள் சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழலானார்கள். இதைப் பற்றி அறிந்த நபி(ஸல்) அவர்கள் (அந்த அறைக்கு வராமல்) உட்கார்ந்துவிட்டார்கள். பின்பு மக்களை நோக்கி வந்து “உங்கள் செயல்களை நான் கண்டேன். மக்களே! உங்களது இல்லங்களிலேயே தொழுது கொள்ளுங்கள். கடமையான தொழுகை தவிர மற்ற தொழுகைகளைத் தமது வீட்டில் தொழுவதே சிறப்பாகும்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஃதும், தராவீஹ் தொழுகை பாடத் தில் 2012வது இடம் பெறும் ஹதீஃதில் நபி(ஸல்) அவர்கள் நள்ளிரவில் பள்ளிக்குச் சென்று தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதார்கள் என்ற பாகமும், அதன் இறுதியில் “நிலைமை இப்படியே இருக்க (ரமழானின் இரவுத் தொழுகையை மக்கள் தனித்தனியாகவே தொழுது கொண்டிருக்க) நபி (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்” என்ற பகுதியும் திட்டமாக நமக்கு எதை அறிவிக்கின்றன.

நபி(ஸல்) அவர்கள் ரமழான் இரவுத் தொழுகையை நிடுநிசியில் கூட ஜமாஅத்தாகத் தொழ எவ்வித ஏற்பாடும் செய்யவில்லை. தனித்தனியாக வீடுகளில் தொழக் கட்டளையிட்டார்கள் என்பது உறுதியாகத் தெரியவில்லையா? இந்த நிலையில் முன்னிரவில் இஷாவுக்குப் பின் தராவீஹ் என்ற பெயரால் இந்த கொடிய பித்அத்களை, தங்களின் ஹரமான வயிற்றுப் பிழைப்பை நோக்ககமாகக் கொண்டு அரங்கேற்ற யார் வழிகாட்டினார்கள்? அது மார்க்கமாகுமா? சிந்தியுங்கள்.

மார்க்க அடிப்படையில் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத இந்த பித்அத்களை துணிந்து அரங் கேற்றி வயிறு வளர்க்கும் இம்மவ்லவிகள், மார்க்க அடிப்படை அல்லாத அன்றைய நிலையில் மாதம் துவங்குவதை அறிய அன்றைய காலகட்டத்தில் இருந்த ஒரே கருவியான பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பதை மார்க்கமாக்கி இம்மவ்லவிகள் வீண் பெருமை, அடம்பிடிப்பது வேடிக்கையாக இல் லையா? பிறை பார்ப்பது மார்க்கமாக இருந்தால் அன்று நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஆணையும், பெண்ணையும் பிறை பார்க்கக் கட்டளையிட்டிருப்பார்கள் என்ற அடிப்படை அறிவும் இல்லாத மூடர்களா இம்மவ்லவிகள்? ஆம்! அவர்களின் வீண் பெருமை, ஆணவம் அவர்களை ஒருபோதும் நேர்வழியை ஏற்கவிடாது என்று அல்லாஹ் அல்குர்ஆன் 7:146 இறைவாக்கில் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மையே ஆகும். இம்மவ்லவிகளை தக்லீது செய்யும் முகல்லிதுகளே, எச்சரிக்கை. நாளை நரகில் கிடந்து வெந்து கரியாகிக் கொண்டு நீங்கள் தக்லீது செய்ய மவ்லவிகளையே திட்டிச் சபிக்கப் போகிறீர் கள். (பார்க்க : 7:35-41, 33:66-68, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45)

இவ்வுலகிலேயே அறிவு பெற்று நேரடியாக எந்த இடைத்தரகர்களுமில்லாமல் குர்ஆன், ஹதீஃதைப் பற்றிப் பிடித்து 6:153 குர்ஆன் வசனம் சொல்லும் நேர்வழி பெறுங்கள்.

இந்த விமர்சனங்களில் உள்ள குர்ஆன் வசனங்கள் தங்கள் உள்ளங்களில் ஈமான் உடையவர்களுக்கு மட்டுமே பலன் தரும். இதை குர்ஆன் 51:55 வசனம் உறுதிப்படுத்துகிறது. எவரது உள்ளத்தில் ஈமான் இல்லையோ, பெயர் தாங்கி முஸ்லிம்களாக இருக்கிறார்களோ அவர்களுக்கு மேலே கண்ட குர்ஆன் வசனங்கள் அனைத்தும் எட்டிக்காயாகக் கசக்கும். இதையும் குர்ஆன் 17:41,45-47,89, 22:72, 25:60, 39:45 வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. எச்சரிக்கை! எம்மைக் குற்றப்படுத்துகிறவர்கள், எம்மைக் குற்றப்படுத்தவில்லை. அல்லாஹ்வையும், அவனது தூதரையுமே குற்றப்படுத்துகிறார்கள். (நவூதுபில்லாஹ்) நாளை மறுமையில் அதன் பலனை, நரகைக் காணத்தான் போகிறார்கள். அல்லாஹ்வை பயந்து கொள்ளவும்.

Previous post:

Next post: