ஷக்குடைய (சந்தேகத்திற்குரிய) நாள் உண்டா?
S. முஹம்மது சலீம், ஈரோடு
வருகிற 16.05.2018 அன்று ஷக்குடைய நாளாக இருப்பதால் இன்று மட்டும் இஷாத் தொழுகை 9.30 மணிக்கு நடைபெறும் என்று தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிவாசல்களில் அறிவிப்பு பலகைகளில் எழுதப்பட்டிருப்பதை காணலாம். ஷஃபான் மாதத்தின் இருபத்தொன்பதாவது நாளின் மஃரிபுக்கு பிறகு ஷக்குடைய நாள் ஆரம்பமாகிறது இந்த நேரத்தில் பிறை தகவல் குறிப்பிட்ட எல்லையிலிருந்து வருகிறதா என்று எதிர்பார்க்க வேண்டும். பிறை தகவல் வந்துவிட்டால் ரமழான் மாதம் ஆரம்பித்துவிட்டது. பிறை தகவல் வரவில்லையயன்றால் ஷஃபானை முப்பதாவது நாளாக அறிவிப்பது இந்த கருத்தைத்தான் மேற்கண்ட அறிவிப்பின் வாயிலாக பகிரங்கப்படுத்துகிறது. முஸ்லிம் சமுதாயமும் எந்தவிதமான ஆட்சேபனையுமின்றி இந்த கருத்தை ஏற்றுக்கொண்டு காலங்காலமாக நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். நாம் நடைமுறைப்படுத்தும் இந்த வழிமுறை நபிவழியில் உள்ளதுதானா என்று சிந்திப்பதும் இல்லை. சிந்திப்பதற்கு முயல்வதற்கு முஸ்லிம் பெருமக்கள் விளைவதும் இல்லை. ஷக்குடைய நாள் குறித்து ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்து கொள்ளும் பொருட்டு சில வியங்களை குறித்து நாம் அலசுவோம்.
தூதரிடம் முன்மாதிரி உண்டா?
நபி(ஸல்) அவர்கள் ஷக்குடைய நாள் என்ற பெயரில் ஒரு நாளை உருவாக்கி அதற்கு செயல் வடிவம் கொடுத்தார்களா என்று மார்க்கப் பிரசாரங்கள் பெருகிவிட்ட இந்த காலகட்டத்திலாவது நாம் சற்று நேரம் ஒதுக்கி சிந்திக்க வேண்டும். பொதுவாக நபி(ஸல்) அவர்கள் ஒரு நாளை குறிப்பிட்டு இந்த நாளில் இந்தந்த வழிபாடுகளை செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டால் முதலில் நபி(ஸல்) அவர்கள் அந்த வழிபாட்டை செய்து பிற மக்களுக்கு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்வார்கள். உதாரணத்திற்கு நபி(ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறிய நாட்களில் அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்ற செய்திகள் நபி மொழித் தொகுப்புகளில் ஆதாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த விபரங்களை வரிசையாக பார்ப்போம்.
யவ்முல் ஆஷீரா :
இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது, யூதர்கள் முஹர்ரம் பத்தாவது நாளில் (அஷீரா) நோன்பு நோற்றிருப்பதைக் கண்டார்கள். நீங்கள் நோன்பு நோற்றிருக்கும் இது என்ன நாள்? என்று கேட்டார்கள். அதற்கு யூதர்கள் இது ஒரு மகத்தான நாள். இந்த நாளில்தான் மூசாவையும் அவருடைய சமுதாயத்தாரையும் இறைவன் காப்பாற்றி ஃபிர்அவ்னையும் அவனுடைய சமுதாயத்தாரையும் (செங்கடலில்) மூழ்கடித்தான். எனவே மூசா(அலை) அவர்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி தெரிவிக்கும் முகமாக (இந்நாளில்) நோன்பு நோற்றார்கள். ஆகவே நாங்களும் இந்நாளில் நோன்பு நோற்கிறோம் என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்) அவர்கள் உங்களைவிட நாங்களே மூசா(அலை) அவர்களுக்கு மிகவும் உரியவர்களும் நெருக்கமானவர்களும் ஆவோம்” என்று கூறினார்கள். பின்னர் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (அந்நாளில்) தாமும் நோன்பு நோற்று நோன்பு நோற்குமாறு (மக் களுக்குக்) கட்டளையிட்டார்கள். நூல்:முஸ்லிம் 2083
முஹர்ரம் பத்தாம் தேதியை ஆஷீராவுடைய நாள் என்று கூறிய நபி(ஸல்) அவர்கள் அந்த நாளில் என்ன செய்யவேண்டும் என்பதை தோழர்களுக்கு கற்றுக் கொடுத்ததோடு தானும் அதில் நோன்பு நோற்று வழிகாட்டிய செய்தியை பல்வேறு ஹதீஃத் நூற்களில் காணமுடியும்.
யவ்முத் தர்வியா :
அப்துல் அஸீஸ் பின் ருஃபைஉ(ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அனஸ் பின் மாலிக்(ரழி) அவர்களி டம் “நீங்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து அறிந்த ஏதேனும் செய்தி ஒன்றை அறிவியுங்கள். அல்லாஹ் வின் தூதர்(ஸல்) அவர்கள் துல்ஹஜ் எட்டாம் தேதி (தர்வியா உடைய நாளில்) லுஹர் தொழுகையை எங்கு தொழுதார்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் மினா வில் (தொழுதார்கள்) என்று கூறினார்கள். நூற்கள்: நஸயீ 2947, முஸ்லிம் 2523 திர்மிதி 887 துல்ஹஜ் மாதத்தின் எட்டாம் நாளை யவ்முத் தர்வியா என்று கூறிய நபி(ஸல்) அவர்கள் அந்த நாளில் என்னென்ன வழிபாடுகளை செய்தார்கள் என்பதை குறித்த விபரங்கள் ஹீதீஃத் நூற்களில் விரிவாக கூறப்பட்டுள்ளது.
யவ்முல் அரஃபா :
நுபைத் பின் ரீத்(ரழி) அவர்கள் கூறியதாவது:
அரஃபாவில் நண்பகல் தொழுகைக்கு முன்னர் செந்நிற ஒட்டகத்தின் மீது அமர்ந்து அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர் கள் உரையாற்றியதை நான் கண்டேன். நூல்: நஸாயீ 2957
துல்ஹஜ் மாதத்தின் ஒன்பதாம் நாளை யவ்முல் அரஃபா என்று கூறிய நபி(ஸல்) அவர்கள் அந்த நாளில் எப்படியயல்லாம் வழிகாட்டியுள்ளார்கள் என்பதை குறித்த விரிவான விபரங்கள் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
யவவ்முன் நஹ்ர் :
பராஉ பின் ஆஸிப்(ரழி) அவர்கள் கூறியதாவது :
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் எங்களிடையே உரையாற்றினார்கள். அப்போது (பெருநாள் தொழுகை) தொழாத வரையில் உங்களில் யாரும் (குர்பானி பிரா ணியை) கண்டிப்பாக அறுக்க வேண்டாம் என்று கூறினார்கள். நூல்: திர்மிதி 1428
துல்ஹஜ் மாதத்தின் பத்தாம் தேதியை யவ்முன் நஹ்ர் என்றுகூறிய நபி(ஸல்) அவர் கள் அந்த நாளில் செய்த வழிபாடுகள் மற்றும் முஸ்லிம்களுக்கு கூறிய அறிவுரை கள் குறித்த விபரங்கள் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அய்யாமு மினா :
அப்துல்லாஹ் பின் அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறியதாவது :
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மினா நாள்களில் (கேட்கப்படும் கேள்வி களுக்குப்) பதிலளித்து வந்தபோது அவர்கள் (பதிலில்) குற்றமில்லை என்றே (அநேக மாகக்) கூறினார்கள். நூல்: நஸாயீ 3017
மினாவுடைய நாட்கள் என்று சொல்லக் கூடிய துல்ஹஜ் 11,12,13 ஆகிய தேதிகளில் செய்ய வேண்டிய வழிபாடுகள் குறித்து நபி (ஸல்) அவர்கள் நேரடியாக வழிகாட்டியுள் ளார்கள். மேலும் மினாவில் செய்ய வேண் டிய வழிபாடுகளை முடித்துவிட்டு புறப்படும் நாளான துல்ஹஜ் 12 அல்லது 13ஆம் நாளை “யவ்முல் நஃப்ர்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறிய செய்தியை முஸ்லிம் ஹதீஃத் எண் 2319ல் பார்க்கலாம்.
யவ்முல் ஃபுர்கான் :
சூரா அன்ஃபாலில் 41வது வசனத்தில் “”யவ்முல் ஃபுர்கான்” என்று ஒரு நாளை அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அல்லாஹ் குறிப்பிடும் இந்த நாளை குறித்து இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறியதாவது: “”யவ்முல் ஃபுர்கான்” என்பது பத்ருப் போர் நடந்த நாள் ஆகும். இந்நாளில்தான் அல்லாஹ் உண்மைக்கும் பொய்மைக்கும் இடையே இனம் பிரித்துக் காட்டினான். நூல் : ஹாகிம். யவ்முல் ஃபுர்கான் என்ற பத்ருடைய நாளில் நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் படைகளை எப்படி வழிநடத்தினார்கள். காஃபிர்களை எவ்வாறு தாக்கினார்கள். இன்னும் இதுபோன்று அந்நாளில் நடந்த பல்வேறு நிகழ்வுகள் குறித்து செய்திகள் அனைத்தும் துல்லியமாக ஹதீஃத்களில் காணப்படுகிறது.
யவ்முஷ் க் :
தனது வாழ்நாளில் ஒரே ஒருமுறை மட்டுமே ஹஜ் செய்த நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் எட்டாம் தேதி முதல் பதிமூன்றாம் தேதி வரை எப்படியயல்லாம், எங்கெல் லாம் வழிபாடுகளை செய்தார்கள் என்ற விபரங்கள் மிகத் துல்லியமாக, தெளிவாக ஏராளமான ஹதீஃத்கள் கிடைத்திருக்கும் போது, ஒன்பது வருடம் ரமழானை அடைந்து அதில் நோன்பு நோற்ற நபி(ஸல்) அவர்கள் க்குடைய நாள் என்று கூறி நாம் நடைமுறைப்படுத்தும் காரியங்களைப் போன்று அவர்களும் நடைமுறைப்படுத்தி யிருந்தால் க்குடைய நாள் குறித்து ஆதாரப்பூர்வமான ஹதீஃத்கள் ஏராளமாக பல்வேறு கோணங்களில் கிடைத்திருக்கும். க்குடைய நாள் என்று கூறிக்கொண்டு பிறைத் தகவலை எதிர்பார்த்து இஷாத் தொழுகையை வழக்கத்திற்கு மாற்றமாக தாமதமாக நபி(ஸல்) அவர்கள் தொழுதார் கள் என்று கூறக்கூடிய ஒரே ஒரு ஆதாரப் பூர்வமான ஹதீஃதும் கிடையாது என்பதே உண்மை. க்குடைய நாள் என்று கூறிக் கொண்டு நாம் இன்று நடைமுறைப்படுத் தும் செயல்பாட்டிற்கும் நபி(ஸல்) அவர் களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்பதை முஸ்லிம்கள் உணரவேண்டும்.
க்கை உருவாக்கினார்களா?
அய்யாமு ஜாஹீலிய்யா என்று அழைக் கப்படக்கூடிய அறியாமைக் காலத்தில் கூட க்குடைய நாள் என்ற பெயரில் ஒரு நாள் இருந்ததில்லை. இந்நிலையில் மக்களின் அறியாமையைப் போக்கி தெளிவை தருவதற்காக அனுப்பப்பட்ட நபி(ஸல்) அவர்கள் க்குடைய நாளை உருவாக்கி னார்கள் என்று கூறுவது தெளிவான அவ தூறாகும். நாம் கேட்பது என்னவென்றால் நபி(ஸல்) அவர்கள் சமுதாயத்தில் நிலவி வந்த சந்தேகங்களை நீக்க வந்தார்களா அல்லது புதிய புதிய சந்தேகங்களை உருவாக்க வந்தார்களா?
உள்ளத்தில் சிறிதளவு ஈமான் உள்ளவர் கள் கூட நபி(ஸல்) அவர்கள் க்கை உரு வாக்க வந்தார்கள் என்று சொல்லமாட்டார் கள். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் நான் உங்களை வெள்ளை வெளேர் என்ற நிலை யில் விட்டுச் செல்கிறேன் அதில் இரவும் பகலைப் போன்றது (அழிந்து) நாசமாகி விடுபவனைத் தவிர வேறு எவரும் அந்த பாதையிலிருந்து வழித்தவற மாட்டார்கள். அறிவிப்பாளர் : இர்பாழ் இப்னு ஸாரியா (ரழி), நூல் : இப்னுமாஜா 43
எந்த சந்தேகமுமில்லாத தெள்ளத் தெளி வான ஒரு வழியில் நபி(ஸல்) அவர்கள் இந்த சமுதாயத்தை விட்டுச் சென்றுள்ளார்கள் என்று உறுதியாக நம்புபவர்கள் எவரும் க்குடைய நாளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
க்கை உடைக்கும் அத்தாட்சிகள் :
க்குடைய நாள் என்ற பெயரில் நபி (ஸல்) அவர்கள் ஒரு நாளை நமக்கு அறிமுகப்படுத்தவேயில்லை. இதை உறுதிப் படுத்தும் விதமாக அத்தாட்சிகளை சந்திர சூரிய கிரகணத்தின் மூலமாக நேரடியாக புரியும் வாய்ப்பை அல்லாஹ் வருடத்திற்கு இரண்டு முறை வழங்கி வருகிறான். அதாவது சந்திர மாதத்தின் முழு நிலவில் தான் சந்திர கிரகணம் ஏற்படும் இதைப் போன்றே சந்திர மாதத்தின் கடைசி நாளில் தான் சூரிய கிரகணம் ஏற்படும் இது அனை வரும் ஒப்புக்கொள்ளும் ஒரு அடிப்படை வியமாகும். சந்திர மாதத்தின் கடைசி நாளில்தான் சூரிய கிரகணம் ஏற்படும் என்று தெரிந்து கொண்டே பிறை 29ல் சூரிய கிரகணம் ஏற்பட்டாலும் இந்த நாளை சந்தேகத்திற்குரிய நாள்தான் என்று அல்லாஹ்வின் அத்தாட்சியை பார்த்த பிறகும் முரண்பட்டு கூறுவது எந்த வகையில் நியாயம் என்பதை சம்பந்தப் பட்டவர்கள் சிந்திக்க வேண்டும்.
முஸ்லிம்களே ஏமாறாதீர்கள் :
க்குடைய நாள் என்ற பெயரில் ஒரு நாளை நபி(ஸல்) அவர்கள் உருவாக்கவுமில்லை அதை நடைமுறைப்படுத்தவு மில்லை இந்த நாளின் பெயரால் செய்யப் படும் எந்த ஒரு செயலுக்கும் இறைத் தூதர் (ஸல்) அவர்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று உறுதியான பிறகும் க்குடைய நாளை ஆதரிப்பவர்கள் “”யார் சந்தேகத்திற்குரிய நாளில் நோன்பு நோற்கிறாரோ அவர் அபுல்காசிம் அவர்களுக்கு மாறு செய்து விட்டார்” என்ற செய்தியை ஹதீஃத் என்று கூறி மக்களை திசை திருப்பி வருகிறார்கள் புகாரீ இமாம் தனது புத்தகத்தில் இந்த செய்தியை தஃலீகாக அதாவது அறிவிப்பாளர் தொடர் இல்லாமல் பதிவு செய்துள்ளார்.
இதே செய்தி ஹாகிமில் பலவீனமான அறிவிப்பாளர் தொடர் வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த செய்தி எந்த ஒரு நூலில் இருந்தாலும் அது அனைத்தும் அம்மார்(ரழி) அவர்களின் சொந்தக் கருத்தாகவே (மவ்கூஃப்) பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்த செய்தி ஆதாரத்திற்கு தகுதியற்ற செய்தியாகும். மார்க்கத்தில் க்குடைய நாள் சொல்லப் பட்டிருந்தால் ஆதாரப்பூர்வமான நபி மொழிகளை மக்கள் முன் வைப்பதற்கு இவ் வளவு தூரம் சிரமப்படவேண்டியதில்லை என்பதை அறிஞர்கள் உணர வேண்டும்.
உண்மை முஸ்லிம்களின் நிலை :
அல்லாஹ்வையும் அவனது தூதரையும் ஏற்றுக்கொண்ட ஒரு உண்மையான முஸ்லிம் நபி(ஸல்) அவர்களை குறித்து எப்படி நினைப்பார்கள் என்பதை பின்வரும் நபிமொழி நமக்கு தெளிவுபடுத்துகிறது. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் உங் கள் மண்ணறைகளில் மஸுஹூத் தஜ்ஜாலின் சோதனைக்கு நிகரான அல்லது நெருக்கமான அளவுக்குச் சோதிக்கப்படுவீர்கள். அப்போது (கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவரிடம்) இந்த மனிதரைப் பற்றி உமக்கு என்ன தெரியும்? என்று (நபியாகிய என்னைப் பற்றிக்) கேட்கப்படும் அப்போது இறை நம்பிக்கையாளர் அல்லது உறுதி கொண்டவர் இவர் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்(ஸல்) ஆவார்கள்.
அவர்கள் எங்களிடம் தெளிவான சான்றுகளையும் நல்வழியையும் கொண்டு வந்தார்கள். நாங்கள் (அவர்களது அழைப்பை) ஏற்றோம். அவர்களை பின் பற்றினோம். இவர் முஹம்மத் (ஸல்) அவர்கள்தாம் என்று மும்முறை கூறுவர் (ஹதீஃதின் ஒரு பகுதி) நூல் : புகாரீ 86 கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே மேற்கண்ட சான்றுகளையும், நல் வழியையும் கொண்டு வந்தார்கள் என்று கூறக்கூடிய நல்லோர்களில் நாம் இருக்க வேண்டும். மேலும் நபி(ஸல்) அவர்கள் ஒரு போதும் நம்மை சந்தேகத்தில் மூழ்கி கிடந்து சர்ச்சை செய்து தவிக்குமாறு விட்டுச் செல்லவில்லை என்பதை உணர்ந்து இனி வரும் காலங்களில் சரியான நாளில் நோன்பை ஆரம்பித்து சரியான நாளில் நோன்பை நிறைவு செய்து பெருநாளை முறையாக அடையக்கூடிய மக்களாக நாம் ஆக வேண்டும். அதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக.
ரமழான் அறிவிப்பு :
சந்திரச் சுழற்சியின் கணக்குப்படி 1439ம் வருட ரமழான் நோன்பு 16.05.2018 புதன் அன்று ஆரம்பித்து 13.06.2018 புதன் அன்று 29 நோன்புகளுடன் முடிவடைகிறது. 14.06.2018 வியாழன் நோன்புப் பெருநாள்.