புளியங்குடி அபூ கனிபா
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் (பிறை மறைக்கப்பட்டால்) ஷஃபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமைப்படுத்துங்கள்.” என அபூ ஹுரைரா(ரழி) அறிவித்தார். (1909) இந்த ஹதீஃதின் அடிப்படையில் இந்த முஸ்லிம் சமுதாயம் பிறை பார்க்கிறார்களா? என்றால் நிச்சயமாக இல்லை. ஏன்? நபி(ஸல்) அவர்கள் பிறையை பார்ப்பது சம்பந்தமாக சில கட்டளைகள் இடுகி றார்கள். அதன் அடிப்படையில் செயல்பட்டால் மட்டுமே மாதத்தை சரியாக கணக்கிட முடியும்.
மாதத்தை சரியான முறையில் முழுமைப்படுத்த முடியும். என்ன கட்டளை?
கட்டளை எண் : 1.
பிறை பார்த்து நோன்பு வையுங்கள்…. பிறையை பார்த்து நோன்பை ஆரம்பி யுங்கள் என்று தான் சொல்லியிருக்கிறார் கள். முதல் பிறையை பார்க்க சொல்ல வில்லை. எந்த ஒரு ஹதீஃதிலும் நேரடியான முதல் பிறையை பார்த்து நோன்பை வையுங் கள் என்று நபி(ஸல்) அவர்கள் சொல்லவே இல்லை.
ஆனால் முஸ்லிம் சமுதாயம் முதல் பிறையை பார்க்க வேண்டும் என்ற கட்டா யத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் முதல் பிறை என்றைக்கு தெரிகிறதோ அன்றைக்கு நோன்பை ஆரம்பிக்கிறார்கள் மாதத்தை ஆரம்பிக்கிறார்கள். இது நபி வழியா?
கட்டளை எண் 2 :
பிறையை பார்த்து நோன்பை விடுங்கள் …. பிறையை பார்த்து நோன்பை விடுங் கள் என்று சொல்லியிருக்கிறார்களே அல்லாமல் மறு மாதத்தின் முதல் பிறையை பார்த்து பின்னர் நோன்பை விட சொல்லவில்லை. எந்த ஒரு நேரடி ஆதாரமும் இல்லை. நீங்கள் மாதத்தின் முதல் பிறை தெரியும் போது நோன்பை விடுங்கள் அல்லது மாதத்தை பூர்த்தி செய்யுங்கள் என்று சொல்லவில்லை. ஆனால் மறு மாதத்தின் பிறை தெரியும்போதுதான் மாதம் ஆரம்பம் செய்கிறார்கள். மாதத்தை முடிக்கிறார்கள்.
கட்டளை எண் : 3 :
உங்களுக்கு பிறை மறைக்கப்பட்டால் ஷஃபான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்யுங்கள்… பிறை மறைக்கப்பட்டால் மாதத்தை பூர்த்தி செய்யுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். முதல் இரண்டு கட்டளைகளுக்கு பார்க்க வேண்டும் என்று சுயவிளக்கம் கொடுத்து தப்பிக்கும் இந்த முஸ்லிம் சமுதாயம் மறைக்கப்பட்டால் மாதத்தை பூர்த்தி செய்யுங்கள் என்று சொல்லக்கூடிய கட்டளைக்கும் முதல் பிறையை பார்த்தே மாதத்தை பூர்த்தி செய்யவேண்டும் என்று சொல்கிறது. அது எப்படி 30 நாட்கள் கொண்ட மாதத்தை பூர்த்தி செய்துவிட்டால் முதல் பிறையை எதற்காக பார்க்க வேண்டும் அல்லது 29 நாட்கள் கொண்ட மாதத்தை 29 நாட்களாக பூர்த்தி செய்தபின் ஏன் முதல் பிறைய பார்க்க வேண்டும். புரியவில்லையா?
ஷஃபான் மாதத்தில் 29 பிறைகள் தெரிந்து 30வது பிறை நாள் தெரியவில்லை என்று வைத்துக் கொள்வோம். ஷஃபானை நாம் 30தாக பூர்த்தி செய்கிறோம். பூர்த்தி செய்யப்பட்ட ஷஃபான் மாதத்திற்கு அடுத்த நாள் ரமழான் 1 என்பதை யாரும் மறுக்க முடியாது. காரணம் ஷஃபான் மாதம் முழுமை அடைந்து ரமழான் ஆரம்பித்து விட்டது. இங்கே கவனியுங்கள். ஷஃபான் முழுமை அடைந்த பின்னர் ரமழான் முதல் பிறையை நாம் பார்க்கிறோமா? இல்லையே முதல் பிறையை பார்க்காமலே ரமழான் முதல் நாள் ஆரம்பம் ஆகிவிட்டதே. இதைத்தானே அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
உங்களுக்கு மறைக்கப்பட்டால் மாதத்தை பூர்த்தி செய்யுங்கள் என்று. அப்படி இருக்கும்போது எங்கள் கண்களுக்கு என்றைக்கு பிறை தெரிகிறதோ அன்றைக்கு மாதம் ஆரம்பிக்கிறது எங்கள் கண்களுக்கு என்றைக்கு பிறை தெரிகிறதோ அன்றைக்கு மாதம் முடிகிறது என்று சொன்னால் அது நபி வழியா? அல்லது மனோ இச் சைப்படி செயல்படும் ஷைத்தானின் வழியா? சிந்தித்து பாருங்கள்.
உலகம் அறிந்து ஒரு உண்மை. சந்திரன் (பிறை) மாதத்தில் ஒரு நாள் சில நிமிடங்கள் முழுமையாக மறைக்கப்படும் என்பது. அதை நாம் அமாவாசை என்போம். அந்த நாளில் சில நிமிடங்கள் உலகில் எங்குமே பிறை தெரியாது. அதைத்தான் பிறை (சந்திரன்) மறைக்கப்பட்டால் மாதத்தை பூர்த்தி செய்யுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
எந்த ஒரு விஞ்ஞானமும், அறிவியலும் இல்லாத காலத்தில் சூரியன், சந்திரன், பூமி மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வந்து மாதத்தை முழுமைப்படுத்தும் அற்புதத்தை கும்மா என்ற வார்த்தையில் தெளிவுபடுத்தி சந்திரன் தான் உலகத்திற்கே காலம் காட்டி அல்குர்ஆன் 2:189 என்பதை உண்மைப்படுத்திய பின்னரும் நபி(ஸல்) அவர்களை பின்பற்றுவதாக கூறிக்கொண்டு அல்லாஹ்வின் அத்தாட்சியான காலம் காட்டியை தூர எறிந்துவிட்டு அல்குர்ஆன் 36:39 வசனம் சொல்லும் உர்ஜூனில் கதிம் என்று சொல்லக்கூடிய இறுதி பிறை வரைக்கும் தான் பிறை தெரியும் என்பதை புறக் கணித்துவிட்டு உர்ஹூனில் கதிம்க்கு அடுத்த நிலை பிறை முழுவதுமாக மறைக் கப்பட்டுவிடும்.
உங்களுக்கு மறைக்கப்பட்டால் (கும்மா) மாதத்தை பூர்த்தி செய்யுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொல்லியிருக்கும்போது. எங்கள் கண்ணுக்கு என்றைக்கு பிறை தெரிகிறதோ அன்றைக்குத்தான் நோன்பு வைப்போம். மாதத்தை ஆரம்பிப்போம் என்று சொல்வார்கள் என்றால் அவர்கள் நபி வழியை பின்பற்றுகிறார்களா அல்லது தாக்கூத் என்று சொல்லக்கூடிய மனித ஷைத்தான்களின் வழியைப் பின்பற்றுகிறார்கள் சிந்தித்துப் பாருங்கள்.