அந்நஜாத் ஆகஸ்ட் – 2016

in 2016 ஆகஸ்ட்

ஆகஸ்ட் 2016

வ்வால்  –  துல்கஃதா 1437

முஸ்லிம்களுக்கு விடிவுகாலம் உண்டா?

 

அல்லாஹ்வையும், அவனது இறுதித் தூதரையும், அவனது இறுதி வாழ்க்கை நெறிநூல் குர்ஆனையும் நம்பிக்கை கொண்டிருக்கிறோம் என்று கூறும் முஸ்லிம்கள், இன்று உலகளாவிய அளவில் முஸ்லிம் நாடுகள், முஸ்லிம் அல்லாத நாடுகள் என எவ்விதப் பாகுபாடும் இல்லாமல் கடும் துன்பங்களையும், வேதனைகளையும், மன உறுத்தல்களையும், மன நிம்மதியற்ற நிலையையும் அனுபவித்து வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் முஸ்லிம் அல்லாத நாடுகளை விட முஸ்லிம் நாடுகளிலேயே முஸ் லிம்கள் இத்தகைய வேதனைகளை ஒட்டுமொத்தமாக அனுபவித்து வருகிறார்கள்.

இத்தனைக்கும் அல்லாஹ் “நம்பிக்கையாளர்களைக் காப்பாற்றுவது நம்மீது கடமை” என்று 10:103 இறைவாக்கிலும், நம்பிக்கையாளர்களுக்கு உதவி செய்வது அல்லாஹ்வின் கடமை” என்று 30:47 இறைவாக்கிலும், நம்பிக்கையாளர்களை நிச்சயம் அல்லாஹ் பாதுகாக்கிறான் என்று 22:38 இறைவாக்கிலும், நம்பிக்கையாளர்களின் பாதுகாவலன் அல்லாஹ் என்று 3:68 இறைவாக்கிலும் அல்லாஹ் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைக் காப்பாற்றுபவன் யார் என்று 9:111 இறைவாக்கில் கேட்கிறான். அல்லாஹ் வாக்குறுதி மீறமாட்டான்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? அல்லாஹ் வாக்குறுதி ஒருபோதும் மாறமாட்டான். ஆனால் முஸ்லிம்கள் உண்மையான ஈமான் கொண்ட நம்பிக்கையா ளர்களாக இல்லை. அதற்கு மாறாக இன்றைய முஸ்லிம்கள் 49:14 இறைவாக்குக் கூறுவது போல் உள்ளத்தில் ஈமான்-இறை நம்பிக்கை நுழையாமல் பெயர் அளவில் முஸ்லிம்களாக இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியுமா?

பெயர் தாங்கி முஸ்லிம்களாக இருந்து கொண்டு 10:36 இறைவாக்குக் கூறுவது போல் மவலவிகள் கூறும் யூகங்களை, கற்பனைகளையே பின்பற்றுகின்றனர். 22:8 இறைவாக்குக் கூறுவது போல் எவ்வித ஆதாரமுமின்றி குர்ஆனில் தர்க்கிப்பவர்களாக இருக்கிறார்கள். 6:68 இறைவாக்கை நிராகரித்து குர்ஆன் வசனங்களில் வீண் வாதம் புரியும் மவ்லவிகளைத் தங்களின் ஆபத்பாந்தவனாக நம்பி அவர்கள் பின்னால் கண்மூடிச் செல்கின்றனர். 40:35 இறைவாக்குக் கூறுவது போல் தங்களுக்கு வந்த யாதோர் ஆதாரமுமின்றி குர்ஆனின் வசனங்கள் பற்றித் தர்க்கம் செய்கிறவர்களாக இருக்கிறார்கள்.

2:186 இறைக் கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து எம்மையோ, இம்மவ்லவிகளையோ, மனிதர்களில் எவரையுமோ நம்பாமல் அல்லாஹ்வை மட்டுமே முற்றிலுமே நம்பி, அவனையே முற்றிலும் சார்ந்திருந்து அவன் குர்ஆனில் வழிகாட்டியபடி நடப்பதாக இல்லை. 7:3 இறைவாக்குச் சொல்வது போல், மனிதர்களில் மவ்லவிகளையோ, மவ்லவி அல்லாதவர்களையோ வழிகாட்டியாக, இமாமாகக் கொள்ளாமல் அல்லாஹ்வால் இறக்கப்பட்ட குர்ஆன், சுன்னாவை மட்டும் பின்பற்றுகிறவர்களாக இல்லை. 3:102, 22:78, 41:33 இறைக்கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து நாங்கள் முஸ்லிம்களில் உள்ளவர்கள் என்று மட்டுமே கூறாமல் ஆளாளுக்குத் தனித்தனி பெயர் வைத்துக் கொண்டு அவற்றைப் பிரபல்யப்படுத்தி உலக ஆதாயங்களை அடையவே பெரும் முயற்சி (ஜிஹாது) எடுக்கிறார்கள் முஸ்லிம்கள். முஸ்லிம்களில் 99% ஐங்கால தொழு கைகளைத் தொழுவதில்லை. தொழுபவர்களிலும் 99% நபிவழியில் தொழுவதில்லை. மத்ஹப், இயக்க வழிகளில் தொழுகிறார்கள்.

3:103 குர்ஆன் வசனத்திற்கு முற்றிலும் கட்டுப்படாமல் மனம்போன போக்கில் ஷைத்தானுக்கு, தாஃகூத் என்ற மனித ஷைத்தான்களாகிய மவ்லவிகளுக்குக் கட்டுப்பட்டு, அல்லாஹ் தெளிவாக முஸ்லிம்களாகிய நீங்கள் பிரியாமல் ஒரே ஜமாஅத்தாக குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன் வழிகாட்டல்படி நடங்கள் என்று கட்டளையிட்டிருக்க, இறைவனின் அக்கட்டளையை நிராகரித்து குஃப்ரிலாகிய நிலையில் இருக்கும் இந்த முஸ்லிம்களை அல்லாஹ் பாதுகாப்பானா? இந்த முஸ்லிம்களுக்கு உதவி செய்வானா? சிந்தியுங்கள்.

3:117, 10:44 இறைவாக்குகள் சொல்வது போல் அல்லாஹ் மனிதர்களுக்கு அநியாயம் செய்வதில்லை. மனிதர்கள் தமக்குத்தாமே அநியாயம் செய்து கொள்கின்றனர். முஸ்லிம்கள் தங்கள் கைகளால் தேடிக் கொண்டவற்றையே இங்கு அனுபவிக்கின்றனர். (பார்க்க : 2:95, 4:62, 28:47, 30:36, 42:30,48)

முஸ்லிம்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொள்ளாதவரை நாம் அவர்களது நிலையை மாற்றப் போவதில்லை என 8:53, 13:11 ஆகிய இரண்டு வசனங்களில் மிகத் தெளிவாக அல்லாஹ் கூறியுள்ளான். முஸ்லிம்களே அல்லாஹ்வின் இக்கட்டளைகளுக்கு முற்றிலும் அடிபணிந்து அவனது வழிகாட்டல்படி நடக்க முன்வாருங்கள்.

தவறினால் இங்கு நீங்கள் அனுபவிக்கும் இத்துன்பங்கள் ஜுஜுபி. இங்கு நீங்கள் அனுபவிக்கும் துன்பங்கள், துயரங்கள், வேதனைகளை விட கோடி மடங்கல்ல, கோடானுகோடி மடங்கல்ல அதைவிட மிகக் கடுமையான துன்பங்களை, வேதனைகளை, நரகில் நீங்கள் நிரந்தரமாக அனுபவிக்க இருக்கிறீர்கள். முஸ்லிம்களே எச்சரிக்கை. அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்.

மேலே கண்ட குர்ஆன் வசனங்களின்படி உங்கள் நிலையை மாற்றிக் கொண்டு பெயர் தாங்கி முஸ்லிம்களாக இல்லாமல் உண்மையான முஃமின்களாக ஒன்றுபட்ட ஒரே ஜமாஅத்தாக முஸ்லிம்களில் உள்ளவன் (41:33) என்ற நிலையில் வாழ்ந்து அல்லாஹ்வின் அருளையும், சுவர்க்கத்தையும் அடைய முன்வாருங்கள்.

விரைவாக விரியும் விண்வெளி பிரபஞ்சம்!!

எஸ் ஹலரத் அலி, திருச்சி-1.

நமது பிரபஞ்ச விண்வெளி விரிந்து சென்று கொண்டிருக்கிறது. எப்படியயன்றால் ஒரு பலூனை ஊதினால் அது எல்லாப்புறமும் விரிந்து உப்புவது போல் விண்வெளிப் பெருவெளி விரிந்து கொண்டிருக்கிறது. இந்த பேருண்மையை அல்லாஹ் அல்குர்ஆனில் அன்றே கூறினாலும், அறிவியல் ஆய்வுகள் தற்போதுதான் இதை மெய்பித்து வருகின்றன.

மேலும் நாம் வானத்தை நம் சக்திகளைக் கொண்டு அமைத்தோம். நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையராவோம். அல்குர்ஆன் : 51:47.

பெரு வெடிப்புக் கொள்கையின்படி விரிய ஆரம்பித்த பிரபஞ்சம் இன்றுவரை விரிந்து கொண்டேயிருக்கிறது. இவ்வுண்மையை முதலில் ரஷ்யா அறிஞர் அலெக்ஸ்சாண்டர் பிரைட்மன் என்பவரும், பெல்ஜியம் நாட்டு அறிஞர் ஜார்ஜியஸ் லமைட்ரே என்பவரும் அறிவித்தனர். இதை இன்னும் அதிக சான்றுகளுடன், அமெரிக்கா ஆய்வாளர் எட்வின் ஹப்பிள், நவீன தொலைநோக்கி மூலம் ஆய்வு செய்து 1929ல் இவ்வுண்மையை வெளியிட்டார்.

ஆனால் கடந்த மாதம் (June, 2-2016) வெளியிடப்பட்ட அமெரிக்கா ஜான் ஹாப்கின் பல்கலைக் கழக தொலைநோக்கி அறிவியல் (Space Telescope Science Institute and Johns Hopkins University in Baltimore) ஆய்வின்படி, பிரபஞ்சம் விரியும் வேகம், முன்பு கணிதத்தை விட 5%ல் இருந்து 9% அதிக வேகத்தில் விரிவதாக, இதன் ஆய்வுத் தலைவர் ஆடம் ரைஸ் அறிவித்துள்ளார். இவர் கடந்த 2011ம் ஆண்டு இயற்பியல் துறையில், பிரபஞ்சம் விரியும் வேகத்தின் முடுக்கத்தை (Universe’s Expansion is Accelerating)  கண்டுபிடித்தமைக்காக நோபல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வியப்பூட்டும் கண்டுபிடிப்பின் மூலம், இப்பிரபஞ்ச விண்வெளியை 95% கட்டுப்படுத்தி ஆட்சி செய்யும் கருஞ்சக்தி (Dark Energy) கரும் பிண்டம் (Dark Matter) கருங்கதிர்கள்(Dark Radiation) பற்றிய உண்மைகளை புரிந்து கொள்ள உதவும் என்று கூறியுள்ளார்.

http://phys.org/news/2016-06-hubble-universe-faster.htm

உப்பி விரிந்து விரையும் பிரபஞ்சத்தில் கருஞ்சக்தியின் விளைவுகள்:

கருஞ்சக்தி (Dark Energy) என்பது நமது பிரபஞ்சம் விரிவடைவதற்கு காரணமாகச் சொல்லப்படும் ஒரு கருதுகோள் அளவிலான ஆற்றல் ஆகும். பெரு வெடிப்புக் கொள்கையின்படி நமது பிரபஞ்சம் தோன்றிய நாளிலிருந்து விரிவடைந்து கொண்டே போகிறது. பிரபஞ்சவியலின் திட்டவட்ட வடிவமைப்பின்படி பார்த்தால் நம் பிரபஞ்சத்தின் 74 விழுக்காடு கருஞ்சக்தியே உள்ளது. ஒளியின் திசை வேகத்தை விட அதிகமான திசை வேகத்தை எந்த ஒரு பொருளும் அடைய முடியாது என ஐன்ஸ்டீன் கருதினார். ஆனால் கருஞ்சக்தி அதிகரிக்க அதிகரிக்க காலம் இடப் பரிமாணங்களில் மாற்றம் ஏற்பட்டு ஒரு பொருள் ஒளியின் திசைவேகத்திற்கு அதிகமான திசை வேகத்தை அடைய முடியும் என்று நம்பப்படுகிறது.

பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிக் கருதும் போது வெகு சமீபத்திலேயே அதாவது 1998ஆம் ஆண்டே கரும் சக்தி (Black Energy)  எனும் மறைவான விசை பிரபஞ்சத்தை ஆக்கிரமித்திருக்கிறது என்ற ஊகம் உறுதிப்பட்டது. அதுவரை அதன் இருப்பை அறியாது வானியல் வெறும் குருடாகவே இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கரும் சக்தி குறித்து இரு வரிகளில் சுருக்கமாக சொல்வதானால் பெருவெடிப்புடன் (Big Bang) தோன்றிய காலத்தை வழிநடத்தும் விண்வெளியில் மறைந்துள்ள விலக்கு விசை எனலாம். பிரபஞ்சத்தில் கருஞ்சக்தி, கரும்பிண்டம், கருந்துளை ஆகிய புதிர்கள் இருப்பது கண்ணுக்கு நேராகத் தெரியாதபோதும் கருவிகளின் மூலமே அறியப்பட்டுள்ளன. விலக்கு விசையான கருஞ்சக்தி காலாக்ஸி ஒளிமந்தைகளைத் துரிதமாக விரைவாக்கிப் பிரிப்பது எதற்காகவென்றால், வெறும் ஈர்ப்பு விசை மட்டும் இருந்திருந்தால் கலக்ஸிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ள வாய்ப்புள்ளது. அந்த முறையில் கலக்ஸிகளை மோதவிடாமல் விலக்கு விசை ஈர்ப்பு விசைக்கு எதிராகப் பிரிக்கிறது.

இதைத்தான் அல்லாஹ், நிச்சயமாக வானங்களும், பூமியும் அவை இரண்டும் விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கின்றான். அவை இரண்டும் விலகுமாயின், அதற்குப் பிறகு வெறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்த முடியாது. நிச்சயமாக அவன் பொறுமையுடையவன். மிக மன்னிப்பவன். அல்குர்ஆன் : 35:41.

1300 கோடி ஆண்டுகளுக்கு முன் பிரபஞ்சத்தில் கருஞ்சக்தியே 74% ஆகவும் கரும்பிண்டம் எனும் கரும்பொருள் 22% ஆகவும் அமைந்திருப்பது இன்னும் புதிராக உள்ளது. பிரபஞ்சத்தில் இயற்கையாகக் கருஞ்சக்தி கரும்பிண்டத்தை விட சுமார் மூன்று மடங்கிருப்பது காரணத்தோடுதான். அப்போதுதான் சுழலும் கலக்ஸி ஒளி மந்தைகளுக்கு அகிலத்தில் நகர்ந்து பயணம் செய்ய விலக்கு விசை கிடைக்கிறது. வெறும் ஈர்ப்பு சக்தி மட்டும் இருந்திருந்தால் பிரபஞ்சத்தில் நகர்ச்சி இல்லாது முடக்கமே நிலவி கருஞ்சக்தி, கரும்பிண்டம் ஆகிய இரண்டில் கருஞ்சக்தியே மிக்கப் புதிராக நிலவி இருக்கும்.

பிரபஞ்சம் உப்பி விரிவதில் கரும்பிண்டமும், கருஞ்சக்தியும் வெவ்வேறு கடமைகளைச் செய்து வருகின்றன. கரும்பிண்டம் பெரும்பான்மைக் கவர்ச்சி விசையாகப் பயன்பட்டு பிரபஞ்ச விரிவிற்கு ஓர் உன்னதத் “தடைக் கருவியாக” (Brake) நிலவி வருகிறது. அதேசமயத்தில் கருஞ்சக்தியானது பிரபஞ்ச கலக்ஸி ஒளிமந்தைகளை நகர்த்திச் செல்லும் உந்து விசையாக (Gas Pedal or Accelerator) இயங்கி வருகிறது. பிரபஞ்ச வாகனத்தை இயக்க உந்து விசையும் தேவை, தடை விசையும் தேவை.

அல்லாஹ்வின் சக்தியாகிய கருஞ்சக்தி, விரியும் வானத்தை உயர்த்தி, பிரபஞ்ச நட்சத்திரம் மற்றும் கோள்கள் ஒன்றோடு ஒன்று மோதிவிடாமல் அனைத்துக்கும் அளவான இடைவெளியுடன் சமநிலையை பேணுகிறது. இதை அல்லாஹ் அழகாக கூறுகிறான்.

மேலும் வானம், அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான். அல்குர்ஆன்: 55:7

பிரபஞ்ச முடுக்கம் என்பது நமது பிரபஞ்சம் விரிவடையும் வேகம் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிகழ்வைக் குறிக்கிறது. பிரபஞ்சம் விரிவடைய விரிவடைய கரும் பொருளின் (Dark Matter)  செறிவு குறைந்து கருஞ்சக்தியின் (Dark Energy) அளவு அதிகரிக்கும். குறிப்பாக இப்பிரபஞ்சத்தின் கன அளவு இருமடங்காகும் போது கரும்பொருளின் அளவு பாதியாகிறது. ஆனால் கருஞ்சக்தியின் அளவு மாறாது.

இன்று கண்ணுக்குத் தெரியாத கருஞ்சக்தியை, விண்வெளி ஆய்வாளர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த கருஞ்சக்திதான் விண்வெளியை விரிக்கிறது. விண்ணை விரிக்கும் ஆற்றலுள்ள கருஞ் சக்தியைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்.

மேலும் நாம் வானத்தை நம் சக்திகளைக் கொண்டு அமைத்தோம். நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையராவோம். அல்குர்ஆன்: 51:47.

வல்ல அல்லாஹ்வின் சக்திகளே இம்மாபெரும் பிரபஞ்சத்தை வழிநடத்துகின்றன. வழிகாட்டும் நட்சத்திரங்கள். (Standard Candles, Ceptheid Stars & Type La supernova)

விரியும் பிரபஞ்சத்தின் வேகத்தை அளப்பதற்கு இரண்டு விதமான வழிமுறைகளை ஆய்வாளர்கள் பயன்படுத்துகிறார்கள். (Standard Candles) நமது பால்வெளி பிரபஞ்சத்திற்கு (Milky way Galaxy) அருகில் உள்ள சுமார் 19 கலக்ஸிகளைச் சேர்ந்த 2400  (Cepheid Stars) நட்சத்திரங்களின் ஒளியளவை கணக்கிட்டும், இதற்கும் அப்பால் நீண்ட நெடுந் தொலைவில் உள்ள 300 நட்சத்திரக் கூட்டம் வெடித்துச் சிதறும் சூப்பர் நோவா (Type La Supernova) ஒளியளவை கணக்கிட்டும் விரியும் தூரத்தையும், வேகத்தையும் கணிக்கிறார்கள்.

நட்சத்திரங்களில் வெண் குள்ளன் (White Dwarf)  என்ற ஒருவகை உண்டு. இதுவே நமது சூரியன் அளவு அதிக பொருண்மையுடன். ஆனால் அளவில் பூமியளவில் சிறிதாக இருக்கும். அடர்த்தி மிகுந்தவை அதன் உள்ளிருக்கும் ஏரி ஆற்றல் தீர்ந்தவுடன் இறுதியில் வெடித்துச் சிதறி விடும். அப்படி வெடித்துச் சிதறும் நிகழ்ச்சிக்கு சூப்பர் நோவா என்று பெயர். (Type La Supernova) இவை வெடித்துச் சிதறும்போது மிகப் பிரமாண்ட ஒளியை வெளிப்படுத்தும்.

இவ்வகை சூப்பர் நோவாக்கள் எங்கேயுள்ளன என்று ஹப்பில் தொலைநோக்கி மூலமாக ஆய்வு செய்தனர். இவை பூமியிலிருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளன. நம்மை விட்டு எவ்வளவு வேகத்தில் விலகிக் கொண்டிருக்கின்றன என்பதையெல்லாம் கணக்கிட்டனர்.

பின்னர் மற்றொரு முறையில் இதை சரிகாண அருகில் இருக்கும் இரண்டு கலக்ஸிகள் விரிவடையும் வேகத்தை நிர்ணயித்தால் இரண்டுக்கும் உள்ள வித்தியாசமும், இரண்டு விரிவாக்கத்திற்கும் இடைப்பட்ட கால வித்தியாசமும் சேர்ந்து, பிரபஞ்சப் பெருவெளி விரிவடைவதன் முடுக்க வேகத்தை கண்டுபிடித்தனர்.

சூப்பர் நோவாக்களிலிருந்து வந்த ஒளி விரியும் வேகம் எதிர்ப்பார்த்ததை விடக் குறைவாக இருந்தது. அதாவது அளப்பதற்கு முன்னரே சூப்பர் நோவா அங்கிருந்து மிக விரைவில் எதிர்த்திசையில் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது புலனானது. அப்படியயன்றால் பிரபஞ்சப் பெருவெளியின் விரிவடையும் வேகம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பது புலப்பட்டது. அதாவது, முன்பு விரி வடைந்த வேகத்தை விட தற்போது 5% முதல் 9% வரை விரிவடையும் வேகம் அதிகரித்துள்ளது.

http://www.livescience.com/54975-universe-expanding- faster-than-thought-hubble.html#sthash.7aAXHWcM. dpuf

சூப்பர்நோவா நட்சத்திரக்கூட்டமும், கலக்ஸி நட்சத்திரக் கூட்டமும் விண் ஆய்வாளர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்குகளாக இருக்கின்றன.

பூமியில் உள்ள பிரயாணிகளுக்கு வழிகாட்டவும், பிரபஞ்சத்தை ஆராய்ந்து, அது விரைந்து செல்லும் தூரத்தையும், வேகத்தையும் கணக்கிடும் ஆய்வாளர்களுக்கு, விண்வெளி வழிகாட்டியாகவும் நட்சத்திரத்தை அல்லாஹ் அமைத்துள்ளான்.

(வழிகாட்டும்) அடையாளங்களையும், (வழிகாட்டுவதற்காக அவன் அமைத்துள்ளான்), நட்சத்திரங்களைக் கொண்டும் அவர்கள் வழிகளை அறிந்து கொள்கிறார்கள். அல்குர்ஆன்:16:16.96858

சும்மா கிடைக்குமா சொர்க்கம்!

பஸிஉர் ரஹ்மான்

இஸ்லாத்தின் தூண்களில் ஒன்றுதான் ஜகாத், குர்ஆன் பல்வேறு இடங்களில் தொழுகையையும், ஜகாத்தையும் சேர்த்தே சொல்கிறது. ஜகாத் எந்த அளவுக்கு முக்கியமான வழிபாடு என்பதற்கு இரண்டு குறிப்புகளே போதும்!

முதலாவது, இஸ்லாத்தின் முதல் கலீபாவாக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றுவிட்ட அபுபக்கர் சித்திக்(ரழி) ஜகாத்துக்கு கொடுத்த முக்கியத்துவம்.

அபுபக்கர்(ரழி) ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றதும், இரண்டு, மூன்று பிரச்சனைகள் பேருருவம் எடுத்தன. ஒன்று, நபிகளாரின் மறைவுக்குப் பின், இஸ்லாத்தைப் பின்பற்றாமல், பலர் இஸ்லாத் தைத் துறந்து முர்தத் ஆகிவிட்டனர்.

இவ்வாறு முர்தத் ஆனவர்களை மீண்டும் இஸ்லாமிய நீரோட்டத்தில் கொண்டு வருவதும், இந்தப் போக்கு மேலும் பரவாமல் கட்டுப்படுத்துவதும், இஸ்லாமிய அரசு, அப்போது சந்தித்து நின்ற மிகப் பெரிய சவால் ஆகும்.

இரண்டாவதாக, நபிகளாரின் மறைவைத் தொடர்ந்து பலரும் தம்மை தாமே இறைவனின் தூதர் என்று அறிவித்துக் கொண்டு, சண்டித்தனம் செய்து கொண்டிருந்தனர். இநத்ப் போலி தூதர்களை ஒடுக்குவதும், அரசின் மிகப் பெரும் பொறுப்பாக இருந்தது.

மூன்றாவதாக, முஸ்லிம்களில் சிலர் ஜகாத் கொடுக்க மறுத்தனர். அபுபக்கர்(ரழி) மற்ற பிரச்சனைகளை விட, ஜகாத் பற்றிய நெருக்கடிக்கே முன்னுரிமை கொடுத்தார். முர்தத் பிரச்சனையை விட, போலி தூதர்கள் தலையயடுத்த விவகாரத்தைத் தீர்ப்பதை விட, தொழுகையையும், ஜகாத்தையும் பிரித்துப் பார்த்த முஸ்லிம்களை சீர்திருத்துவ தற்கு அபுபக்கர்(ரழி) முன்னுரிமை கொடுத்தார்.

தொழுகையையும், ஜகாத்தையும் பிரித்துப் பார்ப்பவர்களுக்கும், ஜகாத் கொடுக்க மறுப்பவர்களுக்கும் எதிராக ஜிஹாத் செய்வேன் என்று அபுபக்கர் பிரகடனம் செய்தார். அப்போது அவர் உதிர்த்த வார்த்தைகள் ஜகாத் கொடுத்த பொருளுக்கு வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பது உறுதிப்படுத்துகிறது. இவ்வாறாக, இஸ்லாமிய அரசு மேற்கொண்ட முதல் ஜிஹாத் ஜகாத்தை நிலைநிறுத்துவதற்காகவே மேற்கொள்ளப்பட்டது.

அடுத்து, இன்னொரு கோணத்திலும் ஜகாத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். பொதுவாக, பாவங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். சில பாவங்கள் தொடர்பாக மனிதர்களுக்கு தனித்தனியாகவே தண்டனை அளிக்கப்படும்.

வேறு சில பாவங்களுக்கோ, கூட்டு ரீதியாக தண்டனை அளிக்கப்படும். ஒட்டுமொத்த சமூகத்தைக் கோழைத்தனம் தொற்றிக் கொள்ளும் என்றும், எதிரிகள் அதை வேட்டையாடுவர் என்றும் நபி(ஸல்) எச்சரித்திருக்கிறார். விபசாரத்தின் விளைவாக எயிட்ஸ் போன்ற ஆட்கொல்லி நோய்கள் ஒட்டுமொத்த சமூகத்தைப் பதம் பார்த்த அவலத்தை நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம்.

இதேபோன்று சமுதாயத்தில் பெரும்பாலான மக்கள் ஜகாத் கொடுப்பதை தவிர்ப்பார்களேயானால், அச்சமுதாயத்தை பஞ்சமும், பற்றாக் குறையும் சூழ்ந்து கொள்ளும் என்றும் நபிமொழிகளில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பஞ்சம் பண்டங்களின் பற்றாக்குறையின் வடிவில் தான் வரவேண்டும் என்பதல்ல!

பொருளாதார முன்னேற்றத்திற்கான வழிவகைகள் சுணங்கிப் போகின்ற வடிவிலும் இந்தப் பஞ்சம் மக்களைத் தாக்கலாம். விளைச்சலில் அடி விழலாம். பொருளாதார தேக்க நிலை ஏற்படலாம். வசதியின்மைக்கும், இயலாமைக்கும் தள்ளப்படலாம். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், மக்கள் ஜகாத் கொடுக்க தவறுகிறபோது, அதனால் ஏற்படுகிற துன்பம், தனி மனிதர்களை தாக்குவதாக இருக்காது. மாறாக, ஒட்டுமொத்தச் சமூகமே பாதிப்படைகிற அளவுக்கு அந்த துன்பம் கூர்மையாக இருக்கும்.

இந்த வழிபாட்டை குறித்துச் சொல்வதற்கு, ஜகாத் என்கிற சொல்லை குர்ஆன் ஆள்கிறது. ஜகாத் என்பதற்கு தூய்மைப்படுத்துதல் என்று பொருள். அதுதான், அதன் அசல் பொருள்.

உடலை தூய்மைப்படுத்தும்போது, உடலிலிருந்து அழுக்கு களைந்தால், எவருமே வருத்தப்படமாட்டார்கள். அதேபோன்று ஒருவருடைய பொருளில், பணத்தில், செல்வத்தில், உள்ளத்தில் சேர்ந்துள்ள அழுக்கை நீக்குவதைப் போன்றது தான் ஜகாத்தும். இதனால் தான் ஜகாத் என பெயரிடப்பட்டது.

உண்மையில், இது ஒரு அழகான, புனிதமான, பொருள் செறிவான சொல் ஆகும். ஏழை, எளிய மக்களுக்கு நிதியுதவி செய்வதற்கு இதைவிட அழகான பெயர் கிடையாது. இதிலிருந்து இஸ்லாத்துக்கும், ஜகாத்துக்கும் இருக்கிற சிறப்பையும், முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொள்ளலாம்.

அறியாமைக்கால அழைப்பு!

நல்லூர் செல்வன்

அவன்தான் உங்களுக்கு முஸ்லிம்கள் என்று பெயரிட்டான். (22:78)

அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து நற்செயல்கள் செய்து நான் முஸ்லிம்களில் உள்ளவன் என்று சொல்பவனை விட அழகான சொல்லைச் சொல்பவர் யார்? (41:33) நாங்கள் ஒரு போரில் அல்லது ஒரு படையில் இருந்தோம். அப்போது முஹாஜிர்களில் ஒருவர் அன்சார்களில் ஒருவரின் பிட்டத்தில் அடித்து விட்டார். அடிவாங்கிய அன்சார், அன்சார்களே வாருங்கள்! என்று குரலெழுப்பினார். உடனே அடித்த முஹாஜிர், முஹாஜிர்களே வாருங்கள் என்று குரலெழுப்பினார். இதைச் செவியுற்ற நபி (ஸல்) அவர்கள், இதென்ன அறியாமைக்கால அழைப்பு, கூப்பாடு என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் அல்லாஹ்வின் தூதரே, முஹாஜிர்களில் ஒருவர் அன்சார்களில் ஒருவரை பிட்டத்தில் அடித்து விட்டார் என்று கூறினர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இத்தகைய கூப்பாடுகளைக் கைவிடுங்கள். (பிரிவினையை தூண்டுகின்ற) இவை நாற்றம் பிடித்தவை என்று கூறினார்கள். அறிவிப்பாளர் : ஜாபிர் இப்னு அப்துல்லாஹ்(ரழி), புகாரி:4905

நான் தவ்ஹீத்வாதி, நான் TNTJ நான் ஜாக் என்று சொல்பவர்கள் விளங்காமலேயே படித்துக் கொண்டிருக்கும் வசனங்களில், ஹதீஃத்களில் இவையும் ஒன்று, அப்படி, இந்த வசனங்களும் ஹதீஃதும் என்னதான் சொல்கின்றன? முதல் வசனம் முஸ்லிம்கள் என்பதுதான் பெயர் எனவும், இரண்டாவது வசனம் முஸ்லிம்களில் உள்ளவன் என்ற அந்த பெயரைத்தான் உயர்த்திப் பிடிக்க வேண்டும் எனவும், மூன்றாவதாக வரும் அறிவிப்பு வேறு எந்தப் பெயரையும் உயர்த்திப் பிடிக்கக் கூடாது எனவும், அப்படி பிடித்தால் அது அறியாமைக்கால அழைப்பு-கூப்பாடு, நாற்றம் பிடிப்பது என்பதை தெளிவாக்குகிறதல்லவா?

ஆனால், நாட்டில் என்ன நடக்கிறது? நாங்கள் தான் ஒரிஜினலாக குர்ஆன், ஹதீஃதைப் பின்பற்றுபவர்கள், நாங்கள்தான் மெஜாரிட்டி என்று சொல்லும் தவ்ஹீத் ஜமாஅத்தினரும் சரி, அவர்களால் லட்டர்பேடு இயக்கங்கள் என்று கேலி செய்யப்படும் மற்ற இயக்கங்களும் சரி, தவ்ஹீத் ஜமாஅத் உங்களை அன்புடன் அழைக்கிறது. ஜாக் உங்களை அன்புடன் அழைக்கிறது, என்று போட்டுக் கொள்கிறார்கள். மேலும் டீசர்ட்டில் TNTJ, INTJ, TMMK, JAQH  என்று போட்டுக்கொள்கிறார்கள். போஸ் கொடுக்கிறார்கள்.

இவர்கள் தங்களின் இந்த நிலைப்பாட்டிற்கு ஆதாரமாகக் காட்டுவதெல்லாம் இந்த முஹாஜிர். அன்சாரைத்தான். அல்லாஹ்வே சொல்லியிருக்கிறானே! அல்லாஹ்வின் தூதரே(ஸல்) சொல்லியிருக்கிறார்களே என்கிறார்கள். சொல்லியிருக்கிறார்கள் சரி, அதையும் உயர்த்திப் பிடிக்கலாம் என்று சொல்லியிருக் கிறார்களா? ஃபார்ஸி, ரூமி, மக்கி, மதனீ என்பதெல்லாம் எப்படியோ? அப்படித்தான் முஹாஜிர் என்பதுவும், அன்சார் என்பதுவும் ஆகும். அடையாளம் காண்பதற் காக அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும்(ஸல்) சொல்லியிருக்கிறார்கள்; அவ்வளவுதான். ஃபார்ஸி, ரூமி, மக்கி, மதனீ என்பதையயல்லாம் எப்படி தூக்கிப் பிடிக்க முடியாதோ அதேபோல் தான் முஹாஜிரையும், அன்சாரையும் தூக்கி பிடிக்க முடியாது. அதேபோல்தான் TNTJ, JAQH ஐயும் தூக்கிப் பிடிக்க முடியாது.

அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும்(ஸல்) விதித்த இந்த வரம்பை மீறி தூக்கிப் பிடித்தால் உயர்த்தி பிடித்தால் அது அறியாமைக்கால அழைப்பு. கூப்பாடு, நாற்றம் பிடித்ததாகும். அன்சார் என்பதை தூக்கி பிடிப்பது, முஹாஜிர் என்பதைத் தூக்கி பிடிப்பதே அறியாமைக்கால அழைப்பு, கூப்பாடு, நாற்றம் பிடித்த செயல் என்றால் TNTJவை தூக்கிப் பிடிப்பதும் ஜாக்கை தூக்கிப் பிடிப்பதும் அதைவிட கேடுகெட்ட அறியாமைக்கால அழைப்பு, கூப்பாடு, நாற்றம் பிடித்தது அல்லவா? அந்தோ பரிதாபம்,

நபி(ஸல்) அவர்கள் எதைச் செய்வதைத் தடுத்தார்களோ அதையே ஆதாரமாக வைத்து இன்று ஒரு பெரும் கூட்டத்தையே வழிகெடுத்து விட்டார்கள். இந்த தவ்ஹீது மெளலவிகள். கிறித்தவர்கள் 72 கூட்டமாகப் பிரிந்தார்கள். எனது உம்மத் 73 கூட்டமாகப் பிரியும்.

அதில் ஒரேயொரு கூட்டம் சொர்க்கம் புகும். அவர்கள் யாரென்றால், (இன்றைய தினம்) நானும் எனது தோழர்களும் இருக்கிறோமே (அல்லாஹ்வின் பக்கம்) மக்களை அழைத்து நற்செயல்கள் செய்து நான் முஸ்லிம்களில் உள்ளவன் என்று சொல்கிறோமே இப்படியிருப்பவர்கள் தான். (அஹ்மத்) இவர்கள் உங்கள் அழைப்பை ஏற்றுக் கொள்வார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை. இவர்களில் ஒருசாரார் அல்லாஹ்வின் அருள்மொழிகளைக் கேட்டு நன்கு விளங்கிய பிறகு வேண்டுமென்றே அதை மாற்றக்கூடியவர்கள். (2:75) மற்றொரு சாரார், (படித்த முட்டாள்களும்) படிக்காத முட்டாள்களும் ஆவர்.

அவர்களுக்கு நெறிநூலைப் பற்றிய ஒழுங்கான அறிவு கிடையாது. அவர்களிடம் இருப்பதெல்லாம் அடிப்படையில்லாத நம்பிக்கைகளும் (இட ஒதுக்கீடு, பாபர் மசூதி, இழந்த உரிமை, இருக்கும் உரிமை போன்ற அர்த்தமில்லாத) ஆசைகளும் தான். மேலும், வெறும் யூகங்களிலேதான் அவர்களும் மூழ்கிக் கிடக்கிறார்கள். (2:78) \

(1986க்கு) முன்பு அவர்கள் இந்நெறிநூலை நம்பாமல் (மவ்லவிகளை நம்பி, இன உணர்வில் மூழ்கி) இருந்தது போல (இப்போதும் இந்நெறி நூலை நம்பாமல் மவ்லவிகளை நம்பி, இன உணர்வில் மூழ்கி இருப்பதற்காக) அவர்களின் உள்ளங்களையும், பார்வைகளையும் (மவ்லவிகளின் பக்கமாகவும், இன உணர்வின் பக்கமாகவும்) நாம் திருப்புகின்றோம். மேலும், அவர்களை வரம்பு மீறிய போக்கிலேயே கிடக்குமாறு நாம் விட்டு விடுகின்றோம். (6:110)

நாம் கப்ரு வணக்கத்தை, மத்ஹபுகளை விட்டுவிட்டோம். எனவே நாம் சொர்க்கம் தான் போவோம் என்று மனப்பால் குடிப்போரின் முன்பாக இந்த ஆக்கத்தைச் சமர்ப்பிக்கிறோம். நீங்கள்(அனைவரும்) ஒரே ஜமாஅத்தாக அல்லாஹ்வின் கயிறான குர்ஆனைப் பற்றிப் படித்துக் கொள்ளுங்கள். ஒருபோதும் பிரியாதீர்கள்.
(பார்க்க : 3:103)

(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும் யார் கருத்து வேறுபாடு கொண்டு(பல பிரிவுகளாக) பிரிந்து விட்டார்களோ அவர்களைப் போன்று நீங்களும் ஆகி விடாதீர்கள். அத்தகையோருக்குக் கடுமையான வேதனையுண்டு. (3:105)

நிச்சயமாக இது(மட்டுமே)வே என்னுடைய நேரான வழியாகும். ஆகவே இதனையே பின்பற்றுங்கள் இதர (ஜாக், TNTJ, INTJ போன்ற) வழிகளை நீங்கள் பின்பற்றவேண்டாம். அவை உங்களை அவனுடைய (அல்லாஹ்வுடைய) வழியை விட்டுப் பிரித்து விடும்….(6:153) நிச்சயமாக எவர்கள் தங்களுடைய(ஒரே) மார்க்கத்தை (தம் விருப்பப்படி ஜாக், TNTJ, INTJ மத்ஹப், தரீக்கா என பலவாறவாகப்) பிரித்து பல பிரிவினர்களாகிவிட்டனரோ அவர்களின் முடிவில்(நபியே) உமக்குச் சம்பந்தமில்லை. அவர்களுடைய முடிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நாளை அல்லாஹ் அவர்களுக்கு அறிவிப்பான். (6:159)

எவர்கள் தங்கள்(ஒரே) மார்க்கத்தில் (ஜாக், TNTJ, INTJ மேலும் பல பிரிவுகளாகப்) பிரிவினைகளை உண்டாக்கி பலப்பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ(அவர்களில் ஆகிவிடவேண்டாம்; அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு பிரிவினரும் தங்களிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள் (30:32).

இதுவே என்னுடைய(நேரிய) வழியாகும். நான் அல்லாஹ்வின்பால் (உங்களை) அழைக்கின்றேன், நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஆதாரத்தின்மீதே இருக்கின்றோம், அல்லாஹ் மிகத்தூய்மையானவன், ஆகவே, நான் (அவனுக்கு) இணைவைப் போரில் உள்ளவனல்லன். (12:108)

நீங்கள்(அனைவரும்) மார்க்கத்தை நிலைநிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள் என்பதே; இணைவைப்போருக்கு நீங்கள் எதன் பக்கம் அவர்களை அழைக்கின்றீர்களோ: அது அவர்களுக்கு பெரும் சுமையாகத் தெரிகிறது; தான் நாடியவர்களை அல்லாஹ் தன்பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்; (அவனை) முன் னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான். (42:13)  மேலும் பார்க்க:42:14

“பித்அத் ஓர் ஆய்வு”

– அபூ ஃபாத்திமா 

1988 செப்டம்பர் மறுபதிப்பு :

அல்லாஹ்(ஜல்) கூறுகிறான் :

அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணையாளர்களும் அவர்களுக்கு இருக்கின்றனரா? மேலும் (மறுமையில் விசார ணைக்குப் பிறகு தக்க கூலி கொடுக்கப்படும் எனும் இறைவனின்) வார்த்தை இல்லாதிருப்பின் (இதுவரை) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு. (அல்குர்ஆன் : 42:21)

(நபியே நீர் கூறும்) அல்லாஹ்வுக்கு நீங்கள் உங்கள் மார்க்கத்தை கற்றுக் கொடுக்கிறீர்களா? அல்லாஹ்வோ வானங்களிலுள்ளவற்றையும், பூமியிலுள்ளவற்றையும் நன்கு அறிகிறான். அன்றியும், அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாக இருக்கிறான். (49:16)

இந்த இரண்டு குர்ஆன் வசனங்களும்,

* அல்லாஹ்வுக்கே மார்க்கம் சொந்தம்! ஸ அவனே அனைத்தையும் அறிந்தவனாக இருக்கிறான்!

* ஒன்றை மார்க்கமாக்கும் அதிகாரம் அவனுக்கு மட்டுமே இருக்கிறது!

* அதற்கு மாற்றமாக, மனிதர்களால் மார்க்கமாகப்பட்டதை அதாவது, பித்அத்துக்களை எடுத்து நடப்பவர்கள் அல்லாஹ்வுக்கு இணை(´ர்க்) வைக்கிறார்கள்!

* அந்த பித்அத்துக்களை உண்டாக்கியவர்களை அல்லாஹ்வுக்கு இணையாளர்களாக ஆக்கிவிட்டார்கள்!

* இது இணை(´ர்க்) வைக்கும் மன்னிக்கப்படாத குற்றமே என்பனவற்றை தெள்ளத் தெளிவாக அறிவுறுத்துகின்றன. (4:48,116)

நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் : இப்னு மஸ்ஊத்(ரழி) அறிவிக்கிறார்கள். எனக்கு முன் அல்லாஹ் அனுப்பி வைத்த நபி மார்களுக்கும், உதவியாளர்களும், தோழர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அந்தந்த நபியினுடைய சுன்னத்தை ஏற்று நடந்துள்ளார்கள். இவர்களுக்கு பின்னால் வரக்கூடிய சமூகம் அந்த தோழர்கள் செய்யாததை செய்ததாகச் சொல்வார்கள். அவர்களுக்கு ஏவப்படாததையயல்லாம் செய்வார்கள். எவனொருவன் தனது கையினால் இவர்களுடன் ஜிஹாது செய்கிறானோ அவன் மூமினாவான். தனது நாவினால் எவன் ஜிஹாது செய்கிறானோ அவனும் மூமினாவான். இதன் பின்னர், ஒரு கடுகளவேனும் ஈமான் என்பது கிடையாது, என நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். (முஸ்லிம்)

2. வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்(ஜல்)வின் நெறிநூல், நடைமுறையில் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களின் நடைமுறை. காரியங்களில் கெட்டது (நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இல்லாத) பித்அத்துகள், பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகள், வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத்(ரழி), ஜாபிர் (ரழி), நூல்கள் புகாரீ, முஸ்லிம், நஸயீ.

3. உங்களிடையே இரண்டை விட்டுச் செல்கிறேன். அவற்றைப் பற்றி பிடித்திருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழிதவறவே மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்(ஜல்)வின் நெறிநூல். இரண்டு எனது வழிமுறை. அறிவிப்பாளர் : மாலிக் இப்னு அனஸ் (ரழி) முஅத்தா.

4. அன்னை ஆயிஷா(ரழி) அறிவித்துள்ளார்கள்: எவர் எம்மால் ஏவப்படாத அமல்களைச் செயகின்றாரோ, அவை அல்லாஹ்விடத்தில் மறுக்கப் பட்டவையாகும். அவை நூறு ­ரத்துகளாயினும் சரியே என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ, முஸ்லிம்)

5. ஆயிஷா(ரழி) அறிவித்துள்ளார்கள் : எவர் எம்மால் ஏவப்படாத அமல்களைச் செய்கின்றாரோ, அவை அல்லாஹ்விடத்தில் மறுக்கப்பட்டவையாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ, முஸ்லிம்)

6. நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்லுகிறேன். அதன் இரவும் பகலைப் போன்றது. அதில் அழிந்து நாசமாகக் கூடியவனைத் தவிர வேறு யாரும் வழிதவற மாட்டார்கள். அறிவிப்பவர் : உமர்(ரழி), நூல்: ரஜீன்.

7. ஜாபிர்(ரழி) அறிவிக்கிறார்கள் : மக்கா மாநகரம் வெற்றிக் கொள்ளப்பட்ட ஆண்டு ரமழான் மாதத்தில் நபி(ஸல்) அவர்கள் அங்கு புறப்பட்டனர். குராவுல் கமீம் என்ற இடத் திற்குச் செல்லும் வரை அவர்கள் நோன்போடு சென்றார்கள். மக்களும் நோன்போடு இருந்தனர். பின்னர் நபி(ஸல்) அவர்கள் ஒரு கோப்பையில் நீர் கொணரச் செய்து மக்கள் அனைவரும் பார்க்கும் அளவுக்கு கோப்பையை உயர்த்தி, மக்களும் அதனைப் பார்த்த பின்னர் அதனைப் பருகினார். இதன்பின் மக்களில் சிலர் நோன்போடு இருப்பதாக நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் அத்தகையோர் பாவிகளே! அத்தகையோர் பாவிகளே! என்று கூறினர். முஸ்லிம், திர்மிதி.

8. எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு இடமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வினதும், மலக்குகளினதும், மனிதர்களினதும் சாபம் உண்டாகிறது என நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள். அறிவிப்பவர் : அலி(ரழி), நூல்:அபூதாவூது, நஸயீ.

9. நபி(ஸல்) அவர்கள், நபித்தோழர் பராஉ பின் ஆஜிப்(ரழி) அவர்களுக்கு, இரவில் படுக்கப  போகும் பொழுது ஓதும் துஆ ஒன்றை கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், “…. வ நபியி கல்லதீ அர்ஸல்த்த…” என்று கற்றுக் கொடுத்ததை, நபிதோழர் அதை “…வரசூலி கல்லதீ…” என்று ஓதிக் காண்பித்தபோது, இதைக் கேட்டவுடன் நபி(ஸல்) அவர்கள் இல்லை வநபிய்யி கல்லதீ அர்ஸல்த என்று (தான் ஓதிக் காட்டியபடியே) ஓதுமாறு கூறினார்கள். (புகாரீ) (நபிய்யீ கல்லதீ என்பதை ரசூலிகல்லதீ என்று சொன்னதையே நபி(ஸல்) அவர்கள் அனுமதிக்காமல், அதைக் கண்டித்து திருத்தி இருக்கும்போது, ஒருவர் மார்க்கத்தில் புதிதாக ஒன்றை, அது அழகானது என்று கூறி செய்ய முற்பட்டால் அவருடைய நிலை என்ன என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்) மேற்காணும் குர்ஆனின் வசனங்களும், நபி(ஸல்) அவர்களின் போதனைகளும், மார்க்கத்தில் புதிதாக அணு அளவும் இணைக்க முடியாது என்பதை நடுநிலையோடு சிந்திக்கும் உண்மை விசுவாசிகள் விளங்கிக் கொள்ள முடியும். இனி பித்அத் விசயமாக நபிதோழர்களுடைய அறிவுரைகளைப் பார்ப்போம்.

1. நான் உங்களிடம் அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்வுடைய ரசூல்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் என்று கூறுகிறேன். நீங்களோ அபூபக்கர் சொன்னார், உமர் சொன்னார் என்று கூறுகிறீர்கள்; எனவே உங்கள் மீது வானத்திலிருந்து கல்மாரி பொழியப்படுமோ என்று நான் அஞ்சுகிறேன் என இப்னு அப்பாஸ்(ரழி) கூறுகிறார்கள்.

2. நான் பின்பற்றுகிறவனே அல்லாமல், புதிதாக உண்டாக்குகிறவன் அல்ல. நான் நேராக நடந்தால் என்னைப் பின்பற்றுங்கள். பிழை செய்தால் என்னைத் திருத்துங்கள் என அபூபக்கர் சித்தீக்(ரழி) கூறுகிறார்கள்.

3. ஒரு பள்ளியினுள்ளே அமர்ந்து கூட்டாக திக்ரு, ஸலவாத்து, ஓதிக்கொண்டிருந்தவர்களைப் பார்த்து இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்கள், நான் நபி(ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவனாக இருக்கிறேன். நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில் யாரும் இவ்வாறு திக்ரு, ஸலவாத்து ஓதுவதை நான் பார்த்ததே இல்லை. எனவே, நீங்கள் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத பித்அத்தைச் செய்கிறீர்கள் என்று கூறி அவர்களை பள்ளிவாசலை விட்டும் வெளியேற்றி விட்டார்கள்.

4. ஒருவர் தும்மியதற்குப் பிறகு நபி(ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்தபடி சொல்வதோடு வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ் என்று இணைத்துக் கொண்டார். இதனை பித்அத்து என்று கண்டித்து திருத்தினார்கள் இப்னு உமர்(ரழி) அவர்கள்.

5. பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகள் தான். மனிதர்கள் அவற்றில் சிலதை அழகானது (ஹஸன்) என்று கருதினாலும் சரியே என இப்னு உமர்(ரழி) கூறியுள்ளார்கள்.

6. பின்பற்றுபவனாக இரு, புதிதாக ஒன்றை ஏறபடுத்தாதே, என இப்னு அப்பாஸ்(ரழி) உபதேசம் செய்துள்ளார்கள்.

7. நபிதோழர்கள் செய்யாத வணக்க வழிபாடகள் எதனையும் செய்யாதீர்கள். முன் சென்றவர்கள் பின் சென்றவர்களுக்கு எதனையும் விட்டு வைக்கவில்லை, என ஹுதைபா(ரழி) அறிவித்துள்ளார்கள்.

8. அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல்(ரழி) அவர்கள் பிஸ்மியை சப்தமிட்டு ஓதிக் கொண்டிருந்ததாகவும், அதைக் கண்ட அவருடைய தகப்பனார், மகனே! நான் நபி(ஸல்) அவர்கள், அபூபக்கர் சித்தீக் (ரழி), உமர்(ரழி), உஸ்மான்(ரழி) ஆகியோருக்குப் பின்னே தொழுதிருக்கிறேன், அவர்களில் யாரும் பிஸ்மியை சப்தமிட்டு ஓதியதை நான் கேட்ட தில்லை. எனவே, மார்க்கத்தில் இல்லாத பித்அத்தை நீ செய்வதாக நான் கருதுகிறேன் என்று கண்டித்துள்ளார்கள். இச்செய்தியை அவர்களே அறிவிக்கிறார்கள். (திர்மிதீ, நஸயீ, அஹ்மத்) அடுத்து, தாபிஈன்களில் தலைசிறந்தவரும், சீரிய கலீஃபாவுமான உமர் இப்னு அப்துல் அஜீஸ்(ரஹ்) அவர்களின் பித்அத் விசயமான எச்சரிக்கையையும் தருகிறோம்.

அது பின்வருமாறு உள்ளது.

அல்லாஹ்வின் ஏவல்களைக் கொண்டும், நபி (ஸல்) அவர்களின் நடைமுறைகளைக் கொண்டும் மார்க்கத்தைப் போதுமாக்கிக் கொள்ளுங்கள். அதன் பின்னால் வந்தவர்கள் ஏற்படுத்திய புதுமை (பித்அத்)களை விட்டுவிடுமாறு எச்சரிக்கை செய்கிறேன்.

இமாம்களின் நல் உபதேசங்கள்:

இதற்கு மேலும் இது விசயத்தில் சந்தேகிப்பவர்கள் இமாம்களின் பெயரால் மத்ஹபுகளை அமைத்துக் கொண்டிருக்கும் முகல்லிதுகளேயாகும். ஆனால் அந்த மரியாதைக்குரிய இமாம்கள் எங்களைத் தக்லீது செய்யாதீர்கள் எங்கள் பெயரால் மத்ஹபுகளை அமைக்காதீர்கள் என்றே தெளிவாகக் கூறி இருக்கின்றார்கள். அந்த இமாம்களின் கூற்றுக்கு முரணாக மத்ஹபுகளை அமைத்திருப்பது போல், இங்கு அந்த இமாம்களின் தெளிவான உபதேசங்களுக்கு விரோதமாகவே பித்அத்துகளை உண் டாக்கி செய்து வருகின்றனர். இதோ அந்த மரியாதைக்குரிய இமாம்களின் நல் உபதேசங்கள்.

1. இமாம் அபூஹனீபா(ரஹ்) கூறியுள்ளார்கள்:

நீங்கள் ஹதீஸ் ஆதாரங்களையும், நபிதோழர்களின் நடைமுறைகளையும் பற்றிப் பிடிப்பவர்களாய் இருங்கள். மார்க்கத்தில் புதிதாக தோன்றியவை குறித்து எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில், அனைத்து பித்அத்துகளும் வழிகேடுகளேயாகும்.

2. இமாம் மாலிக்(ரஹ்) கூறியுள்ளார்கள்:

மார்க்கத்தில் பித்அத்தை உண்டாக்கி அதற்கு பித்அத்து ஹஸனா என்று எவன் பெயர் சூட்டுகி றானோ, அவன், நபி(ஸல்) அவர்கள் தனது ரிஸாலத்தில் (தூதுத்துவப் பணியில்) மோசடி செய்து விட்டார்கள் என்றே கருதுகிறான். ஏனென்றால், அல்லாஹ், அல்யவ்ம அக்மல்த்து லக்கும் தீனக்கும்… என்று சொல்லிவிட்டான். அன்று மார்க்கமாக இல் லாதது இன்றும் மார்க்கமாக இருக்க முடியாது.

3. இமாம் ஷாபிஈ(ரஹ்) கூறியுள்ளார்கள்:

எவன் மார்க்கத்தில் புதிதாக ஒன்றை உண்டாக்கி, அதை பித்அத்து ஹஸனா(அழகிய பித்அத்து) என்று சொல்கிறானோ அவன் புதிதாக ஒரு மார்க்கத்தையே (மதம்) உண்டாக்கி விட்டான்.

4. இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்(ரஹ்) கூறியுள்ளார்கள்.

எங்களிடத்தில் சுன்னாவின் அடிப்படையாவது: ரசூல்(ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும் இருந்த வழியை உறுதியாகப் பற்றிப் பிடித்து, அவர்களைப் பின்பற்றி பித்அத்துகளை விடுவதேயாகும். ஏனென்றால் பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடு களேயாகும். நூல் : அஸ்ஸுன்னத்து வல் பித்ஆ. மேற்கூறிய மரியாதைக்குரிய நான்கு இமாம்கள் மீது அளவு கடந்த பிரியம் வைத்திருக்கிறோம் என்று சொல்பவர்கள், அவர்களின் மணியான இந்த உபதேசங்களுக்கு நேர்முரணாக பித்அத்துகளில் ஏன் தான் மூழ்கி இருக்கிறார்களோ? நாம் அறியோம். அதுமட்டுமல்ல, பித்அத்துக்களை வகைவகையாக தரம் பிரித்துக் கொண்டு தாங்களும் குழம்பிப் போய், மக்களையும் குழப்புவது அதைவிட விந்தையாக இருக்கிறது.

அடுத்து, பித்அத்துக்களை நியாயப்படுத்த அவர்கள் கூறும் காரணங்களை ஆராய்வோம்!

கால மாறுதலினால், விஞ்ஞான வளர்ச்சியினால் ஏற்பட்டுள்ள வசதி வாய்ப்புகளை முஸ்லிம்கள் பயன்படுத்துவதைக் காரணமாகக் காட்டி, இவையெல்லாம் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாதவைதானே! புதுமைகள்தானே! பித்அத்து ஸஹனா தானே! என்று நியாயம் கற்பித்து மார்க்கத்திலும் புதுமைகளை நுழைக்க முற்படுகிறார்கள். உதாரணமாக, நவீன வாகனங்களைப் பயன்படுத்துவது, நவீன கட்டிடங்களில் வாழ்வது, நவீன கல்விக் கூடங்கள் கட்டுவது, நவீன கருவிகளை பயன்படுத்துவது, இவற்றையயல்லாம் பித்அத்து ஹஸனா என்று பெயர் சூட்டுகின்றனர்.

இவையெல்லாம் தவிர்க்க முடியாதவை என்று கூறி மார்க்கத்திலும் பித்அத்து ஹஸனாவை உண்டாக்குகின்றனர். ஆழ்ந்து சிந்திப்பவர்கள் இக்கூற்றில் உள்ள தவறை உணர்ந்து கொள்ள முடியும். நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடமிருந்து வஹீ மூலமாகவும் அவனது அங்கீகாரத்தின் மூலமாகவும் போதித்த மார்க்கத்தில், மனித அபிப்பிராயத்தில் நலவாகத் தெரியும் விஷயங்களை புகுத்துவதையே பித்அத்து என்று கண்டித்துள்ளார்களேயல்லாமல், இவையல்லாத உலகக் காரியங்களில் உலகிலேயே நிதர்சனமாக இலாபத்தைப் பெறும், அதே சமயம் குர்ஆனுக்கு, ஹதீஸுக்கு முரண் இல்லாத நவீன கண்டுபிடிப்புகளைப் பற்றி பித்அத்து என்று கூறவில்லை. இதற்கு ஆதாரமான ஹதீஸ்களைக் கீழே தருகிறோம். நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்த ஆரம்பத்தில், அங்கு நடந்து வந்த ஒரு விவசாய முறையைத் தடுத்து விட்டார்கள்.

அதனால் விளைச்சல் பாதிக்கப் பட்டது. இது விஷயம் நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிந்ததும், நானும் உங்களைப் போன்ற மனிதன் தான். உங்களின் மார்க்கம் பற்றி நான் கட்டளையிடுவேனாயின் அதை ஏற்று நடங்கள். அன்றி, நான் எனது ஆலோசனையைக் கொண்டு ஒன்றைக் கூறினால், உங்கள் நோக்கப்படி செய்துகொள்ளுங்கள் என்று அறிவித்தனர். அறிவிப்பவர் : ராபிஃ இப்னு கதீஜ்(ரழி), முஸ்லிம்) இதேபோல் விடுதலைப் பெற்ற பரீரா(ரழி) தனது அடிமைக் கணவர் முகீஸை(ரழி) வேண்டாம் என்று அறிவித்தபோது, முகீஸின்(ரழி) மனவேதனையைக் கேட்டு, நபி(ஸல்) அவர்கள் வருந்தி பரீராவை(ரழி), முகீஸோடு(ரழி) வாழும்படி சொன்னதற்கு, இது மார்க்கக் கட்டளையா? என்று பரீரா (ரழி) கேட்டனர். எனது சிபாரிசு என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர்.

நபி(ஸல்) அவர்களின் சிபாரிசை பரீரா(ரழி) ஏற்றுக் கொள்ளவில்லை. நபி(ஸல்) அவர்களும் அதற்காக அவர்களைக் கண்டிக்கவில்லை. அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி), (நூல்: புகாரி, அபூதாவூத், நஸயீ, திர்மிதீ) பத்ருப் போரின் போது முஸ்லிம்கள் தங்கள் முகாமை எந்த இடத்தில் அமைத்துக் கொள்வது என்ற விஷயத்தில், நபி(ஸல்) அவர்கள் தேர்ந்தெடுத்த இடத்திற்கு மாற்றமாக வேறு இடத்தை ஹப்பாப் இப்னுல் முந்தீர் என்ற நபித்தோழர் தேர்ந்தெடுத்து, இது முகாம் அமைப்பதற்கு மிகப் பொருத்தமான இடம் என்று சொன்னபோது அதை நபி(ஸல்) அவர்கள் ஏற்று தன் கருத்தை, மாற்றிக் கொண்டார்கள். காரணம்,

நபி(ஸல்) அவர்கள் முதலில் தேர்ந்தெடுத்த இடத்தில் தான் முகாம் அமைக்க வேண்டுமென்பது இறைக் கட்டளை அல்ல. இதை நபி(ஸல்) அவர்கள் தன் கருத்தை மாற்றிக் கொண்டதன் மூலம் விளங்க முடிகிறது. மேற்காணும் ஹதீஸ் ஆதாரங்களிலிருந்து உலகக் காரியங்களில் நிதர்சனமாக, பலனைப் பெறும் விஷயங்களை செய்வது பித்அத்து ஆகாது. விபரம் அறியாதவர்களே இவற்றை பித்அத் என்று கூறுகிறார்கள் என்பது தெளிவாகின்றது.

பித்அத்து போல் தோன்றும் காரியங்கள்:

அபூபக்கர் சித்தீக்(ரழி) அவர்கள் காலத்தில் குர்ஆன் ஒரே நூலாக இணைக்கப்பட்டது. உதுமான் (ரழி) காலத்தில் குர்ஆனின் பல பிரதிகள் எடுக்கப்பட்டன, குர்ஆனை எளிதாக ஓத அரபி லிபியில் அகர, இகர, உகர குறிகள் இடப்பட்டன. உமர்(ரழி) அவர்கள் ரமழான் இரவுத் தொழுகையை மீண்டும் ஜமாஅத்தாக ஆக்கியது. இவற்றை ஆதாரமாகக் காட்டி, இவற்றிற்கு பித்அத்து ஹஸனா என்று பெயரிட்டு பித்அத்தை நியாயப்படுத்த முற்படுகின்றனர். அறிவாளிகளும் இவற்றில் தடுமாறவே செய்கின்றனர்.

எனவே இவற்றை மிக நுட்பமாக ஆராய்ந்து விளங்குவோம்.

1. குர்ஆன் ஒரே நூலாக இணைக்கப்படுவது: நபி (ஸல்) அவர்களுடைய காலத்திலேயே குர்ஆனின் முதல் அத்தியாயத்தில் இருந்து 114ம் அத்தியாயம் வரை முறையாக நபி(ஸல்) அவர்களாலேயே கோர்வை செய்யப்பட்டன என்பதே உண்மையாகும். புதிதாக சில வசனங்கள் இறங்கியவுடன் நபி (ஸல்) அவர்கள் அவற்றை ஓதிக்காட்டி இன்ன அத்தியாயத்தில், இன்ன வசனத்திற்கும் இன்ன வசனத்திற்கும் இடையில் இணைத்துக் கொள்ளுங்கள் என்று தெளிவாகக் கூறி அவ்வாறே பதிவு செய்யப்பட்டன. ஒவ்வொரு அத்தியாயத்தினுடைய பிஸ்மி முதற்கொண்டு நபி(ஸல்) அவர்களின் கட்டளையின்படியே எழுதப்பட்டன. 9ஆம் அத்தியாயமான சூரத்துத் தவ்பாவிற்கு பிஸ்மி எழுதும்படி நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை.

இன்றுவரை பிஸ்மி எழுதப்படாமலே இருக்கிறது. இன்று யாரும் அதுவும் ஒரு அத்தியாயம்தானே பிஸ்மி தவறுதலாக விடப்பட்டு இருக்கின்றது என்று கூறி 9ஆம் அத்தியாயத்திற்கு பிஸ்மி எழுத முறபட்டால் அது பித்அத்தே ஆகும். ஆக மார்க்க அடிப்படையில் குர்ஆனில் எவ்விதக் கூடுதல், குறைதல் ஏற்படவில்லை, என்பதே உண்மையாகும்.

நபி(ஸல்) அவர்களுடைய காலத்திலேயே, இவ்வாறு நிறைவு செய்யப்பட்டு, நபிதோழர்கள் சிலர் சிலரிடம் இருந்த சில சில வசனங்கள் அனைத்தையும் அபூபக்கர் சித்தீக்(ரழி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஒன்று திரட்டப்பட்டு ஒரே நூலாக ஆக்கப்பட்டது. உஸ்மான்(ரழி) அவர்கள் காலத்தில் பல பிரதிகள் எடுக்கப்பட்டன. இதனால் வஹீ மூலம் அறிவிக்கப்பட்ட குர்ஆன் வசனங்களிலோ அவற்றின் கருத்துக்களிலோ புதிதாக(பித்அத்) ஒன்றும் இணைக்கப்படவில்லை என்பதே உண்மையாகும். முறையோடு சிந்திப்பவர்கள் இதை மறுக்க மாட்டார்கள்.

இதேபோல் அன்று தோலிலும், எலும்புத் துண்டுகளிலும் எழுதப்பட்ட குர்ஆன் வசனங்கள் இன்று அழகிய காகிதத்தில் எழுதப்படுகின்றன. இதற்கு மேலும் முன்னேறி குர்ஆன் வசனங்கள் காரிகளின் இனிமையான குரல்களில் ஒலிப்பதிவு செய்யப்பட்டு அவற்றை நாம் கேட்டு விளங்கிச் செயல்பட எளிதாக ஆக்கப்பட்டுள்ளது. இன்று கம்ப்யூட்டரில் கொடுக்கப்பட்டு, தேவைப்படும் வசனத்தை, தேவைப்படும் நேரத்தில் மிக எளிதாக எடுத்துப் பார்த்து விளங்கிச் செயல்பட இன்னும் நவீன வசதிகள் ஏற்பட்டுள்ளன. எனவே இவற்றையயல்லாம் பித்அத் எனச் சொல்வது, நபி (ஸல்) அவர்கள் எவற்றை பித்அத் என்று குறிப்பிட்டார்கள் என்பதை முறையாக விளங்கிக் கொள்ளாததேயாகும்.

2. உஸ்மான்(ரழி) அவர்கள் காலத்தில் குர்ஆனின் பல பிரதிகள் எடுக்கப்பட்டதின் நோக்கம், பரந்து விரிந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் உள்ள மக்களுக்கு முறையாக கோர்வை செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்ட குர்ஆன் வசனங்கள் எளிதில் அவர்களுக்கு கிடைத்து, அவர்கள் அவற்றை பார்வையிட்டு விளங்கிச் செயல்பட வேண்டும் என் பதேயாகும். அதல்லாமல், நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டு, மறுமையில் இலாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் செயல்படுத்தும் மார்க்க காரியங்களைப் போல் செய்யப்பட்டது அல்ல. பரக்கத் உண்டாகும் என்ற நம்பிக்கையில் செய்யப்பட்டதும் அல்ல. எனவே, இச் செயலையும் பித்அத் என்று குறிப்பிடுவது அறியாமையேயாகும்.

3. குர்ஆன் நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில், அகர, இகர, உகர குறிகள் இல்லாமல், எழுதப்பட்டு நடைமுறையில் இருந்து வந்தது. நபி(ஸல்) அவர்களது காலத்திற்குப் பிறகு இஸ்லாம் உலகம் முழுவதும் பரவி, அஜமி(அரபி அல்லாதவர்கள்)களும் குர்ஆன் ஓதும் நிலை ஏற்பட்டது. எனவே அவர்கள் எளிதாகவும், முறையாகவும் குர்ஆனை ஓதி விளங்கி, செயல்படும் நோக்கத்தோடு குர்ஆனுக்கு அகர, இகர, உகர குறிகள் இடப்பட்டன. உண்மையில் இது அரபி லிபியில் ஏற்பட்ட ஒரு முன்னேற்றமேயல்லாமல் மார்க்கத்தில் ஏற்பட்ட அல்லது குர்ஆனில் ஏற்பட்ட ஒரு புதுமை (பித்அத்) அல்ல. அரபி தெரிந்தவர், அந்தக் குறிகள் இடப்படாத குர்ஆனை எப்படி ஓதுகின்றாரோ, அதை எப்படி விளங்கிச் செயல்படுகிறாரோ, அதே போல் அதில் எவ்வித மாற்றமும் இல்லாமல் ஓர் அஜமி (அரபி அல்லாதவர்)அந்த குறிகள் இடப்பட்ட குர்ஆனை ஓதவும், விளங்கிச் செயல்படவும் செய்கிறார். எனவே, நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதில் எவ்வித மாற்றமும் இதனால் ஏற்படவில்லை. ஆகவே, இதனையும், பித்அத் என்று கூறுவது தவறேயாகும்.

4. உமர்(ரழி) அவர்களும், ரமழான் இரவுத் தொழுகையும் : உமர்(ரழி) அவர்கள் ரமழான் இரவுத் தொழுகையை தராவீஹ் என்று பெயரிட்டு, அதனை 20 ரகாஅத்துகளாக்கி ஜமாஅத்தாகவும், ஆக்கியதாக முஸ்லிம் சமுதாயம் காலங்காலமாக நம்பி வருகின்றது! சொல்லி வருகின்றது! ஆனால் இவற்றிற்கு ஹதீஸில் நம்மால் எந்தவித ஆதாரத்தையும் பார்க்க முடியவில்லை. நபி(ஸல்) அவர்களும் நபி தோழர்களும் இத்தொழுகையை ரமழான் இரவுத் தொழுகை என்ற பெயரால் 8 ரகாஅத்துகள் தொழுது வந்ததற்கு மூன்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் காணப்படுகின்றன. அதே போல், உமர்(ரழி) அவர்கள் உபை இப்னு கஃபு(ரழி), தமீமுத்தாரி(ரழி) ஆகிய இரு நபித்தோழர்களுக்கு 8 ரகாஅத்துக்கள் தொழவைக்க கட்டளையிட்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸும் காணப்படுகிறது.

நபி(ஸல்) அவர்கள் மூன்று இரவுகள் ஜமாஅத்தாக இத்தொழுகையை தொழுது விட்டு, நான்காவது இரவு அது பர்ளாக ஆக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவே, அவர்கள் ஜமாஅத் செய்வதை விட்டதாக தெளிவான அறிவிப்பு புகாரியில் காணப்படுகிறது. மற்றபடி, நபி(ஸல்) அவர்களே, உபை இப்னு கஃபு(ரழி) அவர்கள் பெண்களுக்கு இத்தொழுகையை 8 ரகாஅத்து ஜமாஅத்தாக நடத்த அங்கீகாரம் அளித்ததற்குரிய ஸஹீஹான ஹதீஸ் காணப்படுகின்றது.

ஆகவே, உமர்(ரழி) அவர்கள் இத்தொழுகையில் செய்த ஒரே மாற்றம் ரசூல்(ஸல்) அவர்கள் 3 நாட்கள் ஒரே ஜமாஅத்தாக செய்து காட்டிய சுன்னத்தைப் பின்பற்றி மீண்டும் அதை அமுல்படுத்தியதாகும். சிறு சிறு ஜமாஅத்துகளாக நடந்து வந்த இத்தொழுகையை ஒரே இமாமின் கீழ், ஒரே ஜமாஅத்தாக ஆக்கியது மட்டுமேயாகும். “அத்தொழுகையை தங்கள் தங்கள் வீடுகளில் தொழுவதே சிறப்பு” என்று நபி(ஸல்) கட்டளையிட்டது புகாரீ பாங்கு பாடம் 731, 6113, 7290 முஸ்லிம் 1431 என பல இடங்களில் ஹதீஃதாக இடம் பெற் றிருப்பதை உமர்(ரழி) அறியாத நிலையில் அப்படி ஏற்பாடு செய்தார்கள் என்று அவர்மீது நல்லெண்ணம் கொள்ள வேண்டுமே அல்லாது பித்அத்தை சரிகண்டார்கள் என்பது பெருந் தவறாகும்.

மேற்கண்ட விபரங்களையயல்லாம் முறையாக சிந்திப்பவர்கள் உமர்(ரழி) அவர்கள் மார்க்கத்தில் புதிதாக (பித்அத்) ஒன்றையும் ஏற்படுத்தவில்லை என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். மற்றபடி, உமர்(ரழி) அவர்கள் தராவீஹ் என்று பெயரிட்டார்கள். 20 ரகாஅத்துகளாக ஆக்கினார்கள் என்பதற்கு ஹதீஸிலோ, சரித்திர நூற்களிலோ எவ்வித ஆதாரமும் இல்லை. அவ்வாறு சொல்வதெல்லாம் அவர்கள் மீது வீண்பழி சுமத்துவதேயாகும். மார்க்கத்தில் இல்லாததை புதிதாக அவர்கள் உண்டாக்கவில்லை என்பதை உறுதியுடன் சொல்ல முடியும்.

மேலும், அவர்கள் நிஃம ஹாதிஹில் பித்அத் என்று கூறியதாக ஹதீஸில் காணப்படுவது மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட பித்அத்தாக அறிஞர்களால் கணிக்கப்படவே இல்லை. நடைமுறையில், ஆச்சரியத்தோடு சொல்லப்பட்ட ஒரு வார்த்தையாகவே கணிக்கப்படுகின்றது. காரணம், நபி(ஸல்) அவர்களால் காட்டித் தரப்படாத புதிய எந்த ஒரு விஷயமும் உமர்(ரழி) அவர்களின் இந்த நடவடிக்கையில் ஏற்படவில்லை என்பதேயாகும்.

இவ்வளவு தெளிவான விளக்கத்திற்குப் பிறகும் கலீஃபாக்களின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட இந்த நடைமுறைகளை ஆதாரமாகக் காட்டி, பித்அத் ஹஸனாவை நியாயப்படுத்த யாரும் முற்பட்டால் அவர்களுக்கு நாம் கூறும் இன்னொரு விளக்கமாவது வருமாறு. நபி(ஸல்) அவர்கள் எனது சுன்னத்தையும், நேர்வழி நடந்த எனது கலீஃபாக்களின் சுன்னத்தையும், பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்ற கருத்துப்பட வரும் ஸஹீஹான ஹதீஸ் ஒன்று காணப்படுகின்றது.

இதில் நபி(ஸல்) அவர்கள் எனது சுன்னத்து என்று குறிப்பிட்டது வஹீயின் தொடர்போடு இருந்த, நபி(ஸல்) அவர்களுடைய சொல், செயல், அங்கீகாரம் ஆகும். நேர்வழி நடந்த கலீஃபாக்களின் சுன்னத்து என்று குறிப்பிட்டது, நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்திற்கு மாற்றமில்லாத கலீஃபாக்களின் நடைமுறை ஆகும். இந்த அடிப்படையில், கலீஃபாக்களுடைய இச் செயல்களுக்கு நபி(ஸல்) அவர்களின் ஒப்புதல் இருக்கின்றது என்பது தெறிகின்றது.

மேலும், அந்த நடவடிக்கைகள் நபி(ஸல்) அவர்களின் சொல், செயல் அங்கீகாரத்திற்கு முரணாக இல்லை என்பதும் தெளிவான விஷயமாகும். இந்த நிலையில், பின்னால் வந்தவர்கள், கலீஃபாக்களின் இந்த நடவடிக்கைகளை பித்அத் ஹஸனாவிற்கு ஆதாரமாகக் காட்டி, இவர்கள், மார்க்கத்தில் புதுமைகளை (பித்அத்) உண்டாக்க, இவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தார்கள்? கலீஃபாக்களின் நடைமுறைகளுக்கு மேலே உள்ள ஹதீஸ் ஆதாரமாக இருப்பது போல், இவர்களின் நடைமுறைகளுக்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸை காட்ட முடியுமா? அப்படி எந்த ஒரு ஹதீஸும் இல்லை என்பதே உண்மையாகும். மேலே காணப்படும் ஹதீஸ் விசேஷமாக நேர்வழி நடந்த கலீஃபாக்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்ட அனுமதி என்பதை தெள்ளத் தெளிவாக குறித்துக்காட்டுகின்றது. எனவே, அவர்களின் இந்த வாதமும் தவறேயாகும்.

குத்பா அரபி அல்லாத மொழிகளில் செய்வது பித்அத்தா?

இன்னொரு முக்கிய விஷயம், நமது தமிழகத்தின் பல பகுதிகளில் குத்பாக்கள் மிம்பரில் தமிழில் செய்யப்பட்டு வருகின்றன. இது பித்அத்து ஹஸனா என்று காரணம் கூறி இதன் மூலம் மற்ற பித்அத்துக்களை நியாயப்படுத்த முற்படுகின்றனர். முன்னர் வெளியான பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பத்வாத் தொகுப்பு. ஓர் அறிமுகம் என்ற நூலிலும் இதை பித்அத் என்றே குறிப்பிடுகின்றனர்.

அதே சமயம் எங்கு அந்த வழக்கம் இருக்கின்றதோ, அங்கு அதை நிறுத்தினால் பிரச்சனை ஏற்படும் என்றிருந்தால் அப்படியே விட்டுவிடுவதில் தவறில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் நமக்கு ஆச்சரியத்தை தருகின்றது. பித்அத் என்றால் அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அது பித்அத்து தான்! இருந்தாலும் பரவாயில்லை! என்பது மார்க்கத்தில் மனித அபிப்பிராயத்தை நுழைப்பதாகும். உண்மையில் பிற மொழிகளில் குத்பா செய்வது பித்அத்தே இல்லை.

ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பி வைத்தோம். (14:4) என்ற வசனத்தின்படி குத்பா என்பது மக்களை நோக்கி, மக்கள் விளங்குவதற்காக செய்யப்படும் உபதேசம் ஆகும். வெள்ளக்கிழமை 2 ரகாஅத் பர்ளூ தொழ வைக்கப்படுவதால் எஞ்சியுள்ள 2 ரகாஅத்துக்கு பகரமாக இந்த குத்பா செய்யப்படுகிறது என்ற தவறான எண்ணம் மக்களிடையே பரவலாக காணப்படுகிறது. தொழுகை அல்லாஹ்வுக்காக தொழப்படுகின் றது. குத்பா-உபதேசம் மக்களுக்காக-மக்கள் விளங்கி செயல்படுவதற்காக-மக்களை நோக்கி செய்யப்படுவதாகும்.

அதனால் தான் இமாம் குத்பா செய்யும்போது கிப்லாவை முன் நோக்காமல், மக்களை முன்னோக்கி நிற்கிறார். நபி(ஸல்) அவர்களு டைய காலத்திலோ, நபி(ஸல்) அவர்கள் போற்றிய மூன்று தலைமுறையினருடைய காலத்திலோ, இப்பழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை என்று காரணங்காட்டி அதனை பித்அத்து என்று சொல்வ தும் சரியாகத் தெரியவில்லை. அந்தக் காலக் கட்டங்களில் இருந்தவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் அரபி தெரிந்தவர்களாக இருந்தமையால் அவர்கள் விளங்கக்கூடிய மொழியான அரபியில் குத்பா-உபதேசம் இடம் பெற்றதே உண்மையாகும்.

ஆக குத்பாவின் பிரதான நோக்கம் எந்த மக்களை நோக்கி குத்பா-உபதேசம் செய்யப்படுகின்றதோ அந்த மக்கள், அந்த குத்பாவை-உபதேசத்தை, விளங்க வேண்டும் என்ற சாதாரண வி­யம் அனைவருக்கும் புரிந்ததே! குர்ஆன் ஒரே நூலாக தொகுக்கப்பட்டது, அதனை பல பிரதிகளாக எடுத்தது, அகர, இகர, உகர குறிகள் இடப்பட்டது. எப்படி பித்அத்து இல்லையோ, மக்கள் இவ்வுலகில் எளிதாக குர்ஆனை படித்து விளங்கி செயல்படுவதை நோக்கமாக கொண்டு செய்யப ்பட்டிருக்கின்றனவோ, அதேபோல் கதீப்-உபதேசிப்பவர், செய்யும் குத்பாவை-உபதேசத்தை எதிரில் உள்ள மக்கள் எளிதில் விளங்கி செயல்படுவதை நோக்கமாகக் கொண்டே குத்பா-உபதேசம், அரபி அல்லாத மொழிகளில் செய்யப்படுகின்றது. எனவே, அதனையும் பித்அத்து என்று சொல்லுவது தவறேயாகும்.

முடிவுரை : மேலே நாம் பார்த்த விளக்கங்கள் எந்த வகையிலும் மார்க்கத்தில் புதிதாக (பித்அத்) ஒன்றை உண்டாக்க முடியாது! உண்டாக்கக் கூடாது! என்பதை தெளிவுபடுத்துகின்றன. இதற்கு மேலும், பித்அத்துகளுக்கு புதிய புதிய விளக்கங்கள் கொடுத்துக் கொண்டு, வகை வகையாக பிரித்துக் கொண்டு, பித்அத்தை நியாயப்படுத்த முற்படுவது மார்க்க முரணான செயலே என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆதத்தினுடைய சந்ததிகளை வழிகெடுத்து நரகில் கொண்டு சேர்க்க ஷைத்தான் பயன்படுத்தும் இரண்டு மிக பயங்கரமான ஆயுதங்கள் ஷிர்க்கும் (இணை வைத்தல்), பித்அத்து(புதுமைகள்)மேயாகும்.

எனவே, முஸ்லிம்கள் இவற்றில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அல்லாஹ்(ஜல்), அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் வழிகேடான முயற்சிகளை மேற்கொண்டு தாங் கள் உண்மையிலேயே அழகான காரியங்களைச் செய்வதாக எண்ணிக் கொள்கிறார்களே! அவர்கள் தாம் தம் செயல்களில் மிகப்பெரும் நஷ்டவாளிகள், ஆவார்கள். (18:103,104) என்று குறிப்பிடுவது போல், ஷைத்தான் வழிகேடான இச்செயல்களை புண்ணியம் தரும் செயல் என்று நம்பி வழிகெடச் செய்துள்ளான். அதன் முடிவையும் அல்லாஹ் மிக பயங்கரமாக எச்சரிக்கிறான். அதாவது, அவர்களது செயல்கள் யாவும் (நற்செயல்கள் உட்பட) வீணாகும். இறுதித் தீர்ப்பு நாளன்று நாம் அவர்களுக்காக நிறுக்கும் தராசையும் நாட்டமாட்டோம். நரகமே அவர்களுக்கு கூலியாகும். (குர்ஆன்: 18:105,106ன் சுருக்கம்)

எனவே, பித்அத்தான (புதுமையான) செயல் களை இவை அழகானவைதானே! நன்மை தரக் கூடியவைதானே! சின்ன விஷயம்தானே! என்று இவர்களே, தம்மை தாமே திருப்தி செய்து கொண்டு பித்அத்துக்களில், இவர்கள் மூழ்குவது ஷைத்தானின் சூழ்ச்சியேயாகும், அல்லாஹ் எச்சரிப்பது போல் நரகம் புக நேரிடும். உண்மையான உள்ளச்சத்துடனும், தெளிவான சிந்தனையுடனும் அறிந்த விஷயங்களில் அல்லாஹ்வை அஞ்சி முறையாக மார்க்க கடமைகளை நிறைவேற்றி வருபவர்கள் மட்டுமே ஷைத்தானின் இந்த மாய வலைகளிலிருந்து, அல்லாஹ்வின் அருள் கொண்டு தப்ப முடியும். அந்த பாக்கியம் பெற்ற கூட்டத்தில் அல்லாஹ், நம் அனைவரையும் இணைத்தருள்வானாக! ஆமீன்!

பிறையைக் கேலிக் கூத்தாக்கும்-பரிகசிக்கும் மவ்லவிகள்!

பிறை பார்ப்பது இபாதத்தோ சுன்னத்தோ அல்ல; மாதத் துவக்கத்தை அறிய அன்றிருந்த ஒரே கருவி மட்டுமே. எப்படி அன்று தூரப்பயணத்திற்கு ஒட்டகம் ஒரே வாகனமாக இருந்ததோ, நேரத்தை அறிய சூரியன் ஒரே கருவியாக இருந்ததோ அதேபோல் பிறை மாதத் துவக்கத்தை அறியும் ஒரே கருவியாக இருந்தது அவ்வளவுதான். அதைப் பார்த்து நோன்பை ஆரம்பியுங்கள்; அதைப் பார்த்து, நோன்பைத் துறங்கள் என்ற நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டலைக் காட்டி பிறை பார்ப்பது இபாதத் சுன்னத் என்ற இந்த மவ்லவிகளின் வாதம் சரி என்றால், அவர்களை ஹஜ்ஜுக்காக அழையும், அவர்கள் நடந்தும், தூரப் பிரதேசங்களிலிருந்து மெலிந்த ஒட்டகங்களிலும் வருவார்கள். (பார்க்க 22:27) என்று அல்லாஹ் குர்ஆனில் கூறியிருப்பதன் மூலம் அது இபாதத் வணக்க வழிபாடு, ஹஜ்ஜுக்கு ஒட்டகத்தில் தான் செல்ல வேண்டும் என்று சொல்வது பிறையைக் கண்ணால் பார்ப்பதை விட வலுவான இபாதத் என்பதை மறுப்பார்களா? இம்மவ்லவிகள். ஆம்! இப்படிக் கூறி முதன் முதலாக ஒட்ட கத்தை விட்டு இதர வாகனத்தில் ஹஜ்ஜுக்கு மக்கள் செல்ல ஆரம்பித்தபோது மறுக்கத்தான் செய்தார்கள். ஆனால் மக்கள் மாறிவிட்டதால் வேறு வழியின்றி இம்மவ்லவிகளும் மாறிவிட்டார்கள்.

அதேபோல் சூரியனின் ஓட்டத்தைக் கண்ணால் பார்த்து நேரம் அறிந்து தொழும் நிலையிலிருந்து கடிகாரம் கண்டு பிடிக்கப்பட்டு, சூரியனைப் பார்க்காமல் கடிகாரம் பார்த்து தொழ ஆரம்பிக்கும் போதும் இப்படி அடம் பிடிக்கத்தான் செய்தார்கள். அவர்கள் மாறவில்லை. காலம் மக்களை மாற்றிய தால் அவர்களும் மாறினார்கள்.

இப்படி நவீன கண்டுபிடிப்புகள் நடைமுறைக்கு வரும்போதெல்லாம் அவற்றை மறுத்து இம்மவ்லவி கள் இப்படி அடம் பிடிப்பது அவர்களின் வாடிக்கை. காரணம் என்ன தெரியுமா?

காரணம் ஒவ்வொரு நவீன கண்டுபிடிப்புப் பற்றியும் அல்குர்ஆன் கூறிக் கொண்டிருப்பதை இன்று உலக மக்கள் அறிந்து வருகிறார்கள். கடந்த 1200 ஆண்டுகளாக மக்களிடமிருந்து இம்மவ்லவி புரோகிதர்களால் மறைக்கப்பட்டிருந்த குர்ஆன் வெளிச்சத்திற்கு வருகிறது. அது இம்மவ்லவிகளின் தில்லுமுல்லுகளை, திருட்டுத்தனங்களை அம்பலப்படுத்தி வருகிறது. அது இம்மவ்லவிகளின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது. தங்களின் முழுக்க முழுக்க ஹராமான வயிற்றுப் பிழைப்புக்கு ஆபத்து வந்து விடுமோ என அஞ்சுகிறார்கள்.

அந்தப் பதற்றத்தில் தான் சந்திரன் துல்லியக் கணக்கின்படி சுழல்கிறது என்று கூறும் உண்மையை-சத்தியத்தை-நேர்வழியைக் கூறிக் கொண்டிருக்கும் 2:189, 6:96, 7:54, 9:36, 37, 10:5, 13:2, 14:33, 16:12, 17:12, 21:33, 25:61, 29:61, 31:29, 35:13, 36:40, 39:5, 55:5 இந்த அத்தனை குர்ஆன் வசனங்களையும் நபி (ஸல்) அவர்கள் நிராகரித்துப் பிறையைப் புறக்கண்ணால் மட்டுமே பார்த்து மாதத்தை துவங்கக் கட்டளையிட்டுள்ளார்கள் என்று வடிகட்டினப் பொய்யை தொடர்ந்து ஓயாது கூறி வருகிறார்கள் இம்மவ்லவிகள்.

அது மட்டுமா? தத்தம் பகுதிப் பிறை, வட்டப் பிறை, மாவட்டப் பிறை மண்டலப் பிறை, மாநிலப் பிறை, சவுதிப் பிறை, சர்வதேசப் பிறை என்றெல்லாம் மனம் போன போக்கில் மனோஇச்சைக்கு அதாவது ஷைத்தானுக்கு வழிபடும் கொடிய ஷிர்க்கில் மூழ்கி இருக்கிறார்கள். இம்மவ்லவிகளோ தாஃகூத் என்ற மனித ஷைத்தான்களாகச் செயல் பட்டு அவர்களை நம்பியுள்ள மக்களை வழிகேட் டில் நரகை நோக்கி நடைபோட வைக்கிறார்கள்.

சட்டவிரோதமாகத் திருட்டுத்தனமாகச் சமுதாயத்தில் இடைத்தரகர்களாகப் புகுந்து கொண்டு தூய இஸ்லாமிய மார்க்கத்தை-தீனை தெளிவாக எடுத்துரைக்கும் குர்ஆனையும், சுன்னாவையும் கேலிக்கூத்தாக, பரிகாசமாக ஆக்கி நிராகரிக்கிறார்கள் என்பதை 2:67,231, 5:57,58, 18:56,106, 21:36, 25:41, 31:6, 45:9,35 ஆகிய குர்ஆன் வசனங்களை நீங் களே நேரடியாகப் படித்து அறிந்து கொள்ளுங்கள்.

குர்ஆன் வசனங்களையும், ஆதாரபூர்வமான ஹதீஃத்களையும் இம்மவ்லவிகள் கேலிக்கூத்தாக, பரிகாசத்திற்குரியதாக ஆக்குவதால் எண்ணற்றக் கேடுகள் ஏற்படுகின்றன. இதர சமுதாயத்தினர் முஸ் லிம்களை நையாண்டி செய்ய, இழிவுபடுத்த வழிகாட்டிக் கொடுக்கின்றனர் இம்மவ்லவிகள்.

ஜூலை 5 செவ்வாய், 6 புதன், 7 வியாழன் என மூன்று நாட்கள் ஒரே நாள் கொண்டாடப்பட வேண்டிய பண்டிகையை-பெருநாளை மூன்று நாட் கள் சமுதாயம் பிளவுபட்டுக் கொண்டாடினார்கள். ஈத் என்றால் பண்டிகை-பெருநாள்-கொண்டாட்டம் என்பதாகும். கொண்டாட்டம் என்றால் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஒட்டுமொத்தச் சமுதாயமும் ஒன்றிணைந்து கொண்டாடுவதாகும். அதில் மாதவிடாய்ப் பெண்கள், கன்னிப் பெண்கள் மைதானத்திற்கு வரக் கட்டளையிடப்பட்டதுடன் உரிய ஆடைகள் இல்லாதவர்களும் இரவல் ஆடை வாங்கி அணிந்து கொண்டு மைதானம் வரக் கட்டளையிடப்பட்டக் காரணம் என்ன?

மதீனா பள்ளியில் தொழும் தொழுகை இதரப் பள்ளிகளில் தொழும் தொழுகையை விட 1000 மடங்கு நன்மை தரும் நிலையில் அப்பள்ளியை விட்டு மைதானத்தில் கூடிக் கொண்டாடக் காரணம் என்ன? தொழத் தடை செய்யப்பட்ட மாதவிடாய்ப் பெண்களையும் மைதானம் வரக் கட்டளையிடக் காரணம் என்ன? வீட்டில் குஞ்சு, குருவான் என யாருமே இல்லாத நிலையில் ஒட்டு மொத்த மக்களையும் மைதானத்தில் கூடக் கட்டளையிடக் காரணம் என்ன? ஃபர்ழு, சுன்னத் என எத்தொழுகையிலும் இல்லாத முறையில் பெருநாள் தொழுகையில் மட்டும் முதல் ரகாஅத்தில் ஏழு முறையும், இரண்டாவது ரகாஅத்தில் 5 முறையும் சத்தமாக “அல்லாஹு அக்பர்” என முழக்குவதின் நோக்கம் என்ன? சிந்தியுங்கள்.

மைதானத்திற்கு ஒரு வழியாகச் செய்து வேறு வழியாக வந்த காரணம் என்ன?

அப்படி எவ்வித சுய நோக்கம், உலகியல் ஆதாயங்கள், வீண் பெருமை இவை எதுவும் இல்லா மல் நடுநிலையுடன் இவை அனைத்தையும் சிந்தித்தால் ஒட்டுமொத்த சமுதாயமும் பிளவுபடாமல் ஒன்றுபட்டு சந்தோசமாகப் பெருநாளைக் கொண்டாடுகிறோம் என்பதை நிலைநாட்டவும், அந்த ஒற்றுமையை மற்ற மக்களுக்குப் பறைசாற்றவும் நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டியிருக்கிறார்கள் என் பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கும்.

இப்படித் தெள்ளத் தெளிவாக நேர்வழி காட்டப்பட்ட முஸ்லிம் சமுதாயம், அந்த நேர்வழியைப் புறக்கணித்து ஒரே நாளில் ஒன்றுபட்டுக் கொண்டாட வேண்டிய பெருநாளை செவ்வாய், புதன், வியாழன் என மூன்று நாட்கள் கொண்டாடியது எதைக் காட்டுகிறது? ஜுமுஆ தொழுகையை ஒரு மூடன் வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட் களும் பிரிந்து, பிரிந்து தொழலாம் என்று சொன்னால் அவனை எப்படிப்பட்ட வழிகெட்ட மூடனாக இருக்கிறான் என்று சொல்லுவோமோ அவனைப் போன்ற மூடர்களாக இம்மவ்லவிகள் இருக்கிறார்கள்.

இன்னும் தெளிவாகச் சொன்னால், உண்மையை உரக்கச் சொல்வதாக இருந்தால், இந்த மவ்லவிகள் இதர மதங்களிலுள்ள மதகுருமார்களை விட ஆகக் கேடுகெட்டவர ்களாகவும், பிறை விவகாரத்தில் பெரும் வழிகேடர்களாகவும் இருக்கிறார்கள் என்பதுதான் மறுக்க முடியாத உண்மையாகும். ஹிந்து மதத்தினர் சங்கமம் (Conjunction) இடம் பெறும் நாளை அமாவாசை என்கின்றனர். சங்கமம் (Conjunction) இடம்பெறும் அமாவாசைத் தினத்தன்றே கழியும் மாதத்தின் இறுதிப் பகுதியும், புதிய மாதத்தின் ஆரம்பப் பகுதியும் இருக்கிறது. எனவே அடுத்த நாளை சந்திர மாதத்தின் முதல் நாள் அதாவது முதல் பிறை-பிரதமை என்று மிகச் சரியாகச் சொல்கின்றனர். இந்த மூட முல்லாக்கள் முதல் நாளைப் பாட்டிமை என்கின்றனர். தமிழ் அகராதியிலேயே இல்லாத இந்தப் பாட்டிமையை இந்த மூடர்கள் எங்கிருந்துப் பெற்றார்கள் என்பதைச் சொல்வார்களா? ஆக பிறை விவகாரத்தில் ஹிந்து மதகுருமார்களிடம் இருக்கும் தெளிவுதானும் இந்த மூட முல்லாக்களுக்கு இல்லவே இல்லை.

இன்னும் பாருங்கள்! உலகத்திலுள்ள வழிகேட்டிலுள்ள எந்த மதத்தினரையும் பாருங்கள். அவர்கள் கொண்டாடும் பண்டிகை மதகுருமார்களின் கற்பனையில் உதித்தவையாக இருக்கலாம். பெரும் வழிகேடாக இருக்கலாம்.

அம்மதத்தினர் பல பிரிவுகளாகப் பிரிந்து சீரழியலாம். ஆனாலும் அவர்கள் தங்கள் பண்டிகைகளை ஒரே நாளில் ஒன்றுபட்டுக் கொண்டாடுவதையே பார்க்கிறோம். அப்படி பண்டிகைகளைக் கொண் டாடுவதில் கூட ஒன்றுபட்டு ஒரே நாளில் கொண்டாடும் உயர் தன்மை இந்த முஸ்லிம் மதகுருமார்களான மவ்லவிகளிடம் இல்லை என்றால், இம் மவ்லவிகளை விட கேடுகெட்டவர்கள், வழிகேடர்கள், நரகத்திற்குரியவர்கள் வேறு யாரும் இருக்க முடியுமா? சிந்தியுங்கள்.

இத்தனைக்கும் ஹிந்து மதத்தினரின் பெரும்பான்மையான மதச் சடங்குகள் சந்திர மாதக் கணக்குப்படி அதாவது பிறைக் கணக்குப்படி அமைந்தவையே. ஹிந்து மதக்குருமார்கள் சந்திர நாட்களான அதாவது பிறைக் கணக்கீட்டை மிகச் சரியாக அறிந்து அதன்படி தங்கள் சடங்குகளை நிறைவேற்றுகிறார்கள். அந்த அறிவு தானும் இந்த மூட முல்லாக்களுக்கு இல்லை என்பதுதான் வேதனையான விஷயமாகும்.

காவி ஆட்சியாளர்கள் இம்மவ்லவிகளையும், அவர்களை தக்லீது செய்யும் முஸ்லிம்களையும் இன்னும் மூடர்களாக்கி அதை மற்ற மக்களுக்குப் பகிரங்கமாகக் காட்ட வேண்டும் என்று சதித்திட்டம் தீட்டி, 6.7.2016 புதன்கிழமை பண்டிகைக்காக அரசு விடுமுறை என அரசு ஆணைகளிலும், நாள் காட்டிகளிலும் முன்னர் அறிவித்திருந்ததை மாற்றி 7.7.2016 வியாழன் அரசு விடுமுறை எனத் திடீரென மாற்றி 5 செவ்வாய் மதியமே அறிவித்தார்கள். அவர்களின் மூடக் கொள்கைப்படி 5.7.2016 செவ்வாய் மஃறிபுக்குப் பின்னர் பிறையைக் கண்ணால் பார்க்காமல் எப்படி இம்முடிவு எடுக்கப்பட்டது என்று கேட்காதீர்கள். ஐ.ஏ.எஸ்., ஐ.பீ.எஸ். ஐ.எஃப்.எஸ், அரசு உயர் அதிகாரிகள் காவல்துறையினர், நீதிபதிகள், ஏனைய உயர் அதிகாரிகள் அனைவரும் காவி அரசின் எடுபிடிகளாக இருக்கும் நிலையில் சுண்டக்காய் அரசு டவுன் காஜி மட்டும் நேர்மையாக, நீதியாக நடக்க முடியுமா? அரசு உத்தரவை அப்படியே கண்மூடி நிறைவேற்றினார்.

அதன் விளைவு செவ்வாய், புதன், வியாழன் என, சரியான துல்லியக் கணக்கின்படியுள்ள 5.7.2016 செவ்வாய் அன்று கொண்டாட வேண்டிய பண் டிகை 5,6,7 செவ்வாய், புதன், வியாழன் என மூன்று நாட்கள் முஸ்லிம்கள் பண்டிகை கொண்டாடியதைப் பார்த்து முஸ்லிம் அல்லாதவர்கள் கைகொட்டிச் சிரிக்கும் பரிதாப நிலைக்கு ஆளாக்கப்பட்டார்கள். அது மட்டுமா ஒரே குடும்பத்தில் மகன் முதல் நாள், தாய் அடுத்த நாள், தகப்பன் மூன்றாம் நாள் என பண்டிகைக் கொண்டாடும் வழிகெட்ட நிலையைப் பார்த்து மற்றவர்கள் கைகொட்டிச் சிரிக்கும், நையாண்டி பண்ணும் இழி நிலைக்கும் முஸ்லிம்கள் பலியானார்கள்.

இந்த இழிநிலை எதனால் ஏற்படுகிறது? எண் ணற்ற குர்ஆன் வசனங்கள் சந்திரன் துல்லியக் கணக்கின்படி சுழல்கிறது என்பதைக் கேலிக் கூத்தாக்கி, பரிகாசம் பண்ணி நிராகரித்துவிட்டு, கி.மு.383ல் அதாவது நபி(ஸல்) அவர்கள் காலத்திற்கும் சுமார் 1000 வருடங்களுக்கு முன்னால் யூதர்கள் நடைமுறைப்படுத்திய மூட நம்பிக்கையின் குருட்டு நடைமுறையை இன்றும் இந்த மவ்லவிகள் சானுக்கு சான், முழத்திற்கு முழம் பின்பற்றி நடைமுறைப்படுத்துவதால் ஏற்பட்ட விபரீதமே! அதிலும் தத்தம் பகுதி பிறை, வட்டப் பிறை, மாவட்டப் பிறை, மண்டலப் பிறை, மாநிலப் பிறை, என ததஜ மூட முட்டாள் மவ்லவிகள் காலத்திற்கு காலம் தங்கள் நிலையை மாற்றிக் கொள்வதால் இந்த விபரீத நிலை தொடர்கிறது.

முஸ்லிம்களே வழிகெடுத்து நரகில் தள்ளும் இம் மவ்லவிகளை நம்பாமல் 2:186, 7:3, 33:36, 59:7 இறைக் கட்டளைகளுக்கு முற்றிலும் அடிபணிந்து குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன் போதனைப்படி நடக்க முன்வாருங்கள். அதுவே ஒரே நேர்வழியாகும்.

அல்லாஹ்வாகிய இறைவன் காட்டும்

சுவர்க்கம் சேர்க்கும் ஒரே நேர்வழி எது?

நரகம் சேர்க்கும் கோணல் வழிகள்-பித்அத்கள் எவை?

அபூ அப்தில்லாஹ்

நிச்சயமாக, இதுவே என்னுடைய நேரான வழியாகும். ஆகவே, இதனையே பின்பற்றுங்கள்; இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம்; அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர்வழியைப் பின்பற்றி, இறைவனிடம்) பயபக்தியுடன் நடக்க இதனை அவன் உங்களுக்கு ஏவுகிறான். (6:153)

”…இன்றைய தினம் நிராகரிப்போர் உங்களுடைய மார்க்கத்தை (அழித்துவிடலாம் என்பதை)ப் பற்றி நம்பிக்கையை இழந்துவிட்டார்கள்; எனவே, நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; என்னையே அஞ்சுங்கள்; இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூரணமாக்கிவிட்டேன்; மேலும், உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாமை மார்க்கமாகப் பொருந்திக் கொண்டேன். (5:3)

நிச்சயமாக இஸ்லாம்தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும். நெறிநூல் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாகவேயன்றி (நெறிநூலில்) மாறுபடவில்லை; எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராக ரிக்கிறாரோ (அவரைப் பற்றி) நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் துரிதமானவன். (3:19)

(மேலும் பார்க்க : 3:20)

இன்னும், இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்படமாட்டாது; மேலும், அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்ட மடைந்தோரில்தான் இருப்பார். (3:85)

மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றி முடிவெடுத்து விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு நம்பிக்கை கொண்டுள்ள எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் மாறு செய்கிறாரோ, நிச்சயமாக அவர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார். (33:36)

(நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்கினாரோ (அதை விட்டும்) விலகிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வுக்கு பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன். (59:7)

2:186, 7:3, 18:102-106 குர்ஆன் வசனங்களை நேரடியாகப் படித்து அல்லாஹ்வை மட்டுமே நம்பவேண்டும், மனிதர்களில் எவரையும் நம்பக்கூடாது, அவர்களை அவுலியாவாக, இமாமாக, வழிகாட்டியாக நம்பிப் பின்பற்றக்கூடாது (தக்லீது) என்பதைத் திட்டமாக நேரடியாக அறிந்து கொள்ள முடியும்.

மேலும் அல்லாஹ்வால் மட்டுமே நேர்வழியைக் காட்ட முடியும். மனிதர்கள் குறிப்பாக மதகுருமார்களான மவ்லவிகள் ஒருபோதும் நேர்வழியைக் காட்டமாட்டார்கள். கோணல் வழிகளையே நேர்வழியாகக் காட்டுவார்கள் என்ற பேருண்மையை 1:5, 2:142,213, 3:51,101, 5:16, 6:39,87,161, 7:16,146, 10:25, 11:56, 15:41, 16:76,121, 17:35, 19:36, 22:54,67, 23:73, 24:46, 36:4,61, 37:118, 42:52, 43:43,61,64, 46:30, 67:22, 4:68,175, 6:126,153, 48:2,20 வசனங்களை நேரடியாகச் சிரமம் பார்க்காமல் 29:69 வசனம் கூறும் கடும் ஜிஹாதாக பெரும் முயற்சி எடுத்து நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் ஒருபோதும் இந்த மவ்லவிகள் பின்னால் செல்லமாட்டார்கள்.

இன்னும் நாங்கள்தான் ஆலிம்கள், மதரஸாவில் ஓதி மவ்லவி பட்டம் வாங்கியவர்கள்; எங்களுக்குத் தான் குர்ஆன் விளங்கும். அவாம்கள் தங்கள் தாய் மொழியில் குர்ஆன் மொழி பெயர்ப்பைப் படித்து விளங்க முடியாது என்று வீண் பெருமை பேசும் இம் மவ்லவிகள் ஒருபோதும் நேர்வழியை அடையவும் முடியாது. மக்களுக்கு நேர்வழியை ஒருபோதும் போதிக்கவும் மாட்டார்கள் என்பதைக் கீழ்க்காணும் குர்ஆன் வசனங்களை நேரடியாகப் படித்து அறிகிறவர்கள் மறுக்காமல் ஒப்புக் கொள்வார்கள். அவ்வசனங்கள் வருமாறு: 2:34, 4:36, 7:36-40,146, 206, 11:10, 16:22,23,49, 17:37, 21:19, 25:63, 28:83, 31:7,18, 32:15, 39:49,72, 40:35,47,48,56,60, 45:37, 57:23, 59:23, புகாரீ (ர.அ.) 4850, 4918,6071,6657.

இதுவரை குறிரப்பிடப்பட்டுள்ள குர்ஆன் வசனங்களை நேரடியாகப் படித்து உள்வாங்கிக் கொண்டவர்கள் அல்லாஹ் மட்டுமே ஒரே நேர்வழியைக் காட்ட முடியும். நாங்கள்தான் ஆலிம்கள் மார்க்கம் கற்ற மேதைகள், அவாம்களான பாமரர்கள், அல்லாஹ் அந்தப் பாமரர்களுக்கென்றே தெளிவாக விளங்கியுள்ள குர்ஆனை (பார்க்க 62:2) விளங்க முடியாது என்று கூறி அல்லாஹ்வுக்கு மேல் அல்லாஹ்வாகி (நவூதுபில்லாஹ் பார்க்க 42:21, 49:16) வீண் பெருமை பேசும் அனைத்துப் பிரிவுகளின் மவ்லவிகளும் பித்அத்களையே அதாவது நரகில் சேர்க்கும் பெருத்த வழிகேடுகளையே நேர்வழியாகக் காட்டி மக்களை ஏமாற்றி வஞ்சித்து வயிறு வளர்ப்பவர்கள், முழுக்க முழுக்க கொடிய ஹராமில் மூழ்கியுள்ளார்கள் என்பதை அறிய முடியும்.

மார்க்கத்தை பித்அத்களாக்கி அதாவது மார்க்கம் அல்லாத வழிகேடுகளான மதங்களாக்கி அவை கொண்டு தங்களின் தொப்பையையும், பையையும் நிரப்பும் இம்மவ்லவிகள் கொடிதிலும் கொடிதான பெரும் ஹராமில் மூழ்கி இருக்கிறார்கள் என்பதைக் கீழ்க்காணும் குர்ஆன் வசனங்களை நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் நிச்சயம் ஏற்பார்கள்.

6:90, 10:72, 11:29,51, 23:72, 25:57, 26:109,127, 145,164,180, 34:47, 38:86, 42:23

மார்க்கப் பணிக்கு மக்களிடம் கூலி கேட்பது ஹராம் என்று 14 வசனங்கள் கூறுகின்றன. மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டு கூலி-சம்பளம் வாங்குவதால் இம்மவ்லவிகள் செய்யும் உருட்டல் புரட்டல், தில்லுமுல்லுகள், திருகு தாளங்களை, பொய்யுரைகளை கீழ்க்கண்ட குர்ஆன் வசனங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன. 2:41,75,76,78,79,109,146, 159,161, 162,174,188, 3:78,187,188, 4:44,46, 5:13,41, 62,63, 6:20,21,25,26, 9:9,10,34, 11:18,19, 31:6.

இந்த குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் அனைத் துப் பிரிவுகளின் மவ்லவிகளும் எப்படிப்பட்டக் கொடிய ஹராமில் மூழ்கி இருக்கிறார்கள் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாக அறிய முடியும்.

மதகுருமார்களான இம்மவ்லவிகள் பற்றி குர்ஆன் கூறும் இந்த வசனங்களை எடுத்து எழுதக் காரணம், குர்ஆனுக்கும், ஆதாரபூர்வமான ஹதீஃத்களுக்கு நேர்முரணான வற்றை அதாவது நரகில் சேர்க்கும் பித்அத்களை முழுக்க முழுக்க அரங்கேற்றி வருவது இம்மவ்லவிகளே என்பதை நிலைநாட்டத்தான். ஹராமை ஹலாலாக்குவதும், ஹலாலை ஹராமாக்குவதும் இம்மவ்லவிகளே. (பார்க்க 5:87, 10:59, 16:116) இம்மவ்லவிகளின் இழிநிலைகள் பற்றிக் கூறும் 2:159-162, 3:77, 4:27, 5:48, 6:157, 7:175-179, 18:57, 45:23, 47:25 இந்த வசனங்களைப் படித்து அறிகிறவர்கள் நிச்சயம் அறிய முடியும்.

மார்க்கத்தை வியாபார பொருளான மதமாக்கி கொடிய ஹராமான வழியில் வயிறு வளர்க்கும் இம் மதகுருமார்களின் இழிநிலை பற்றி ஆயிரக்கணக்கான வசனங்களை குர்ஆனில் பார்க்க முடிகிறது. மக்கள் இந்த உண்மைகளை அறிந்து கொள்ளக் கூடாது என்ற திருட்டு எண்ணத்தில்தான் மக்களை குர்ஆனைப் படித்து விளங்க விடாமல் கடந்த 1000 வரு டங்களாகத் தடுத்து வருகிறார்கள் இம்மவ்லவிகள்.

பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகள், வழிகேடுகள் அனைத்தும் நாளை நரகில் சேர்க்கும் என்ற நபி(ஸல்) அவர்களின் கடும் எச்சரிக்கையைக் கண்டு கொள்ளாமல், இன்று மார்க்கத்தின் பெயரால் மலிந்து காணப்படும் அனைத்து பித்அத்களையும் துணிந்து மக்களிடையே பரப்பி வருகிறவர்கள் இந்த மவ்லவிகளே. பித்அத்தின் அனைத்துக் கேடுகள் பற்றி இந்த இதழில் தனியொரு ஆக்கம் இடம் பெற்றுள்ளது. பார்வையிட்டுத் தெளிவு பெறவும்.

41:33 இறைவாக்குக் கூறும் நபிமார்கள் செய்த இறைப் பணியைச் செய்கிறோம்; அவை நாளை மறுமையில் நன்மைகள் பெற்றுத் தரும் நற்செயல்கள் என நம்பி நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்னர் கற்பனை செய்யப்பட்டு மார்க்கத்தில் புகுத்தப்பட்டவை அனைத்தும் பித்அத்துகள்-வழிகேடுகள்-நாளை நரகில் கொண்டு சேர்க்கும். அவை வருமாறு.

நபி(ஸல்) அவர்களின் நுபுத்துவ காலத்தில் இல்லாத

1. ஆலிம்-அவாம் பிரிவு பித்அத்-வழிகேடு நரகில் சேர்க்கும். மதகுருமார்கள் என்ற பிரிவு பித்அத்-வழிகேடு-நரகில் சேர்க்கும்.

2. நபி(ஸல்)அவர்களின் மரணத்திற்குப் பிறகு மார்க்க அடிப்படையில் தோன்றிய புரோகித மதகுருமார்களை உற்பத்தி செய்யும் மதரஸாக்கள் அனைத்தும் பித்அத்-வழிகேடு-நரகில் சேர்க்கும்.

3. Uஆ-சுன்னத் வல் ஜமாஅத் பிரிவு, பித்அத்-வழிகேடு-நரகில் சேர்க்கும்.

4. Uஆவில் ஏற்பட்ட பிரிவுகள் பித்அத்-வழிகேடு -நரகில் சேர்க்கும்.

5. சுன்னத் ஜமாஅத்தில் ஏற்பட்டப் பிரிவுகள் பித்அத்-வழிகேடு-நரகில் சேர்க்கும். மரியாதைக்குரிய நான்கு இமாம்களின் காலம் ஹி.80 முதல் ஹி.241. இந்த நான்கு இமாம்களுக்கும் மத்ஹபுகளுக்கும் அணுவளவும் சம்பந்தமில்லை. அந்நால்வரும் தக்லீதை-கண்மூடிப் பின்பற்றலை மிகக் கடுமையாகக் கண்டித்த ஆதாரங்களே வரலாற்றில் காணப்படுகின்றன.

6. ஊர் பேர் தெரியாத பொய்யர்கள் ஹி.400க்குப் பிறகு கற்பனை செய்த 4 மத்ஹப்கள் பித்அத்-வழிகேடு-நரகில் சேர்க்கும். அப்துல் காதிர் ஜீலானி(ரஹ்) அவர்களுக்கும் காதிரியா தரீக்காவுக்கும் கடுகளவும் சம்பந்தமில்லை என்பதற்கு அவர்கள் குஃப்ர், ஷிர்க், பித்அத் இந்த வழிகேடுகளைக் கடுமையாகக் கண்டித்து எழுதியுள்ள அவர்களின் நூல்களே போதிய ஆதாரமாகும்.

7. ஊர் பேர் தெரியாத பொய்யர்கள் ஹி.500க்குப் பிறகு கற்பனை செய்த தரீக்காக்கள் பித்அத்-வழிகேடு-நரகில் சேர்க்கும்.

இப்னு தைமிய்யா காலத்தில் தக்லீத்- கண்மூடிப் பின்பற்றல் சமுதாயத்தில் வேரூன்றிப் போயிருந்தது. தக்லீதை ஒழித்துக் கட்டுவது சாத்தியமில்லை என்று எண்ணிய இப்னு தைமிய்யா அப்படியே தக்லீது செய்தே ஆகவேண்டும் என்றிருந்தால் அதிகத் தவறுகளையுடைய ஃகலபுகளை தக்லீது செய்வதை விட குறைந்த தவறுகளையுடைய ஸலஃபுகளை தக்லீது செய்யலாம் என்று சொன்னது (முகல்லிது யுகல்லிதுஸ்ஸலஃப்) பெரிய ஆதாரமாகப் போய்விட்டது ஸலஃபிகளுக்கு. குர்ஆனிலும், நபி (ஸல்) அவர்களின் ஆதாரபூர்வமான ஹதீஃதிலும் மனிதர்களில் எவரையும் நம்பி பின்பற்றக்கூடாது. தக்லீது செய்யக் கூடாது என்றே காணப்படுகிறது. 2:186. 7:3, 18:102-106, 33:36, 59:7 இறைக் கட்டளைகள்படி குர்ஆனையும், ஹதீஃதையும் நேரடியாகப் படித்து விளங்கி நடக்க வேண்டும். அது மட்டுமே நேர்வழி என்பதை விளங்காதவர்களே இந்த ஸலஃபி மவ்லவிகள்.

8. ஆக ஸலஃபி ஜமாஅத்-பித்அத்-வழிகேடு-நரகில் சேர்க்கும் பாக்கிஸ்தானிலும், இலங்கையிலும் “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” என்று அல்லாஹ் பெயரிட்டு, நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்தி முஸ்லிம்களுக்காக விட்டுச்சென்ற சரியான பெயரில் செயல்படுகிறார்கள். ஆனாலும் அவர்கள் நடைமுறை நபி(ஸல்) அவர்களின் நடைமுறையல்ல. நபி(ஸல்) அவர்கள் தமது உம்மத்தில் ஆலிம்-அவாம் என்ற பிரிவை ஏற்படுத்தவில்லை. குரு-சீடர் முறையை நடைமுறைப்படுத்தவில்லை. அதற்கு மாறாக தன்னோடு இருந்தவர்களை தோழர்கள்-ஸஹாபாக்கள் என்றே அறிமுகப்படுத்தினார்கள். நபி(ஸல்) அவர்களை மனப்பூர்வமாக ஒப்புக்கொள்ளாமல் நுனி நாவால் சொல்லி நபி(ஸல்) அவர்களை ஏமாற்றினார்கள் பலர்.

அல்லாஹ்வும் அந்த நயவஞ்சகர்களின் இழிநிலையை ஈமான் கொள்ளாத நிலையை(2:8-20) குர் ஆன் வசனங்களை இறக்கி அம்பலப்படுத்தி உறுதிப்படுத்தியுள்ளான். ஆயினும் நபி(ஸல்) அவர்கள், அவர்களுக்கு காஃபிர், முஷ்ரிக் ஃபத்வா கொடுத்து தமது உம்மத்திலிருந்து வெளியாக்கவில்லை. அவர்களைப் பின்பற்றித் தொழக்கூடாது என்று சட்டம் சொல்லவில்லை. காரணம் அதிகாரம் பெற்ற அல்லாஹ்வே அந்தத் தீர்ப்பை மறுமைக்கென்று ஒத்திவைத்துள்ளான். (பார்க்க : 10:19, 41:45, 42:14, 21) இந்த நிலையில் தன்னை அமீராக ஏற்றுக் கொள்ளாதவர்கள் காஃபிர்கள், அவர்களைப் பின்பற்றித் தொழக்கூடாது என்று சட்டம் சொல்கிறவர்கள் நபியைப் பின்பற்றுகிறவர்களா? மேலும் அவர்களிலும் ஆலிம்-அவாம் பிரிவுகள் உண்டு. அவர்களும் மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டவர்கள் தான்.

9. ஆக பாக்கிஸ்தான், இலங்கை நாடுகளில் செயல்படும் ஜமாஅத்துல் முஸ்லிமீன் ஜமாஅத்தும் பித்அத்-வழிகேடு-நரகில் சேர்க்கும். சென்ற நூற்றாண்டில் காதியானில் குலாம் அஹமது மிர்சாவால் கற்பனை செய்யப்பட்ட அஹமதி ஜமாஅத். காதியானிகள் குலாம் அஹமத் மிக்சாவை நபியாக ஈமான் கொண்டுள்ளனர். மார்க்கம் நிறைவு பெற்றுவிட்டது. அதில் புதிதாகச் சேர்ப்பதற்கு ஒன்றுமே இல்லை. அதனால் நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு புதிதாக நபிமார்கள் வரும் தேவை -அவசியம் இல்லை. இந்த உண்மையை 5:3, 3:19,85, 33:40 வசனங்களை நீங்களே படித்து அறியலாம். காதியானிகளிடமும் குர்ஆன், ஹதீஃத் ஆதாரமில்லாத ஆலிம்-அவாம் பிரிவு, ஹஜ்ரத், மவ்லவி என சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் வழிகேடு உண்டு. காதியானி மவ்லவிகளும் மார்க்கத்தை ஹராமான வழியில் வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டவர்கள் தான். மிர்சாவை நபியாக ஏற்காதவர்கள் காஃபிர்கள், அவர்களைப் பின்பற்றித் தொழக் கூடாது என குருட்டு ஃபத்வா கொடுப்பவர்கள்தான்.

10. ஆக அஹ்மதியா ஜமாஅத்-பித்அத்-வழிகேடு-நரகில் சேர்க்கும்.

11. சமீப காலத்தில் மார்க்கப் பணிக்காக சில மவ்லவிகள் கற்பனை செய்த அஹ்ல ஹதீஃத் அமைப்பு – பித்அத்-வழிகேடு-நரகில் சேர்க்கும்.

12. சமீப காலத்தில் மார்க்கப் பணிக்காக கேரள மவ்லவிகள் கற்பனை செய்த முஜாஹிதுகள் அமைப்பு-பித்அத்-வழிகேடு-நரகில் சேர்க்கும்.

13. சமீப காலத்தில் மார்க்கப் பணிக்காகக் கற்பனை செய்யப்பட்ட தப்லீஃக் ஜமாஅத்-பித்அத்-வழிகேடு -நரகில் சேர்க்கும்.

14. சமீப காலத்தில் மார்க்கப் பணிக்காக கற்பனை செய்யப்பட்ட ஜமாஅத்தே இஸ்லாம்-பித்அத் – வழிகேடு-நரகில் சேர்க்கும்.

15. சமீப காலத்தில் மார்க்கப் பணிக்காக சிலரால் கற்பனை செய்யப்பட்ட அஹ்ல குர்ஆன் அமைப்பு-பித்அத்-வழிகேடு-நரகில் சேர்க்கும்.

16. 1987-ல் பீ.ஜை. & எஸ்.கே. இருவரின் கற்பனையில் உருவான ஜாக் பித்அத்-வழிகேடு-நரகில் சேர்க்கும்.

17. 1995ல் பீ.ஜை. கற்பனை செய்த தமுமுக- பித்அத் – வழிகேடு நரகில் சேர்க்கும்.

18. 2005-ல் பீ.ஜை. கற்பனை செய்த ததஜ- பித்அத் -வழிகேடு-நரகில் சேர்க்கும்.

19. இயக்கங்களின் வழிகேடுகளை உணர்ந்தும், அவற்றிலிருந்து விலகியும், இயக்கம் சாரா அமைப்பு என பெயரிட்டு சிலர் செயல்படுகின்றனர். இதுவும் பித்அத்-வழிகேடு-நரகில்-சேர்க்கும்.

20. இன்னும் சிலர் நாங்கள் எந்த அமைப்பிலும்-பிரிவிலும் இல்லை. நாங்கள் “முஸ்லிம்” என்று கூறி தனித்து மார்க்கப் பணிபுரிகின்றனர். அவர்களும் 22:78, 41:33 இன்னும் நபிமார்கள் அனைவரும் நாங்கள் முஸ்லிம்களில் உள்ளவர்கள் என்று கூறிய பல குர்ஆன் வசனங்களை நிராகரிப்பவர்களே. ஜாஹிலியா காலத்து அறியாமையில் மரணிப்பவர்களே. அதுவும் பித்அத்-வழிகேடு-நரகில் சேர்க்கும்.

21. பீ.ஜையின் வழிகாட்டல்படி இதுவரை, மார்க்க அடிப்படையில் குர்ஆன் ஹதீஃதை மக்களுக்குப் பிரசாரம் பண்ண பலராலும் கற்பனை செய்யப்பட்டு நடைமுறையில் இருக்கும் அனைத்து இயக்கங்களும்,பிரிவுகளும்-பித்அத்-வழிகேடுகள்-நரகில் சேர்ப்பவையே.

இப்படி நாம் அடையாளம் காட்டியுள்ளதை இப்பிரிவினைவாதிகள் ஒருபோதும் சரிகாண மாட்டார்கள். நாமோ குர்ஆன் வசனங்கள், ஆதாரபூர்வமான ஹதீஃத்கள் இவற்றை மட்டுமே எடுத்து வைத்துள்ளோம்.

மேலும் 3:103,105, 6:153,159, 12:108, 30:32, 42:13,14 வசனங்கள் பிரிவினைவாதிகள் வழிகேடர்கள், ஆயினும் அவர்களைப் பற்றிய தீர்ப்பு நாளை மறுமையில் தான் அல்லாஹ்வால் கொடுக்கப்படும். நமது கடமை வழிகேடுகளை குர்ஆன் வசனங்களைக் காட்டி எச்சரிப்பது மட்டுமே. ஆயினும் குர்ஆன் வசனங்கள் பெயர்தாங்கி முஸ்லிம்களுக்கு 17:41,45-47,89, 22:72, 25:60, 39:45 வசனங்கள் கூறுவது போல் எட்டிக்காயாக கசக்கத்தான் செய்யும். சுயவிளக்கம் கொடுத்து மறுக்கத்தான் செய்வார்கள். 2:159 இறைவாக்குக் கூறுவது போல் அல்லாஹ் மனிதர்களுக்கென்றே தெள்ளத் தெளிவாக நேரடியாகச் சந்தேகத்திற்கு இடமின்றி விளக்கியுள்ள வசனங்க ளுக்கு சுயவிளக்கம், மேல் விளக்கம் கொடுத்து குர்ஆன் வசனங்களைப் பொய்யாக்கும் நிலையிலேயே இம்மவ்லவிகள் இருக்கிறார்கள். இதையும் எண்ணற்ற குர்ஆன் வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன.

திருட்டுத்தனமாக சமுதாயங்களில் இடைத்தரகர்களாக, பூசாரிகளாக, புரோகிதர்களாகப் புகுந்து வயிற்றையும், பையையும் நிரப்பும் இம்மதகுருமார் கள் நயவஞ்சகர்கள், பொய்யர்கள், இறைச் செய்தியைப் பொய்ப்பிப்பவர்கள், அநியாயக்காரர்கள், மனசாட்சி இல்லாதவர்கள், நன்றி கெட்டவர்கள், நிராகரிப்பாளர்கள் இன்னும் இவைபோல் பல சுடு சொற்களைக் கொண்டு சுமார் ஆயிரக்கணக்கான குர்ஆன் வசனங்களில் கூறி எச்சரித்திருந்தாலும், 32:13, 11:118,119, 12:106, 25:30 வசனங்கள் கூறும் நரகை நிரப்பும் மிகமிக அதிகமான மக்கள் இம்மவ்லவிகள் பின்னால்தான் செல்வார்கள். புகாரீ 3348, 4741 ஹதீஃத்கள் கூறுவது போல் ஒவ்வொரு 1000லும் 999 பேர் அவர்கள் பின்னால் தான் நரகம் நோக்கிச் செல்வார்கள். எனவே இவ்வுலகில் இம்மவ்லவிகளுக்குப் பயமோ துக்கமோ இல்லை. ஆனால் மறுமையில்?

ஆனால் நாளை மறுமையில் இம்மவ்லவிகள் அடையப்போகும் நரக வேதனை! அப்பப்ப விவரிக்கவே முடியாது. 16:25 இறைவாக்குச் சொல்வது போல் கடந்த 1000 வருடங்களாக உலகில் வாழ்ந்து மரணித்து நரகம் புகும் அனைவரின் பாவச் சுமையையும் இம்மவ்லவிகள்தான் சுமக்கப் போகிறார்கள். காரணம் ஆதத்தின் சந்ததிகள் அனைவருக்கும் சொந்தமான இறவனால் இறுதியாக இறக்கியருளப்பட்ட வாழ்க்கை நெறிநூல் குர்ஆனை அந்த மக்கள் நெருங்க விடாமல் செய்ததோடு, 2:159 இறைவாக்குக் கூறுவது போல் குர்ஆனின் நேரடிக் கருத்துக்களை வளைத்து, திரித்து, மறைத்து பொய்யுரைக்கும் காரணமேயாகும்.

இம்மதகுருமார்களின் நீண்ட கால வரலாறு இதோ. உலகக் காரியங்களுக்காக அல்ல; மார்க்கப் பணி, பிரசாரப் பணி, மக்களை நேர்வழியில் கொண்டுவர செய்யப்படும் முயற்சி-அதற்கான தனித்தனி அமைப்புகள் இவை அனைத்தும் நாம் மேலே எழுதியுள்ள குர்ஆன் வசனங்கள், பித்அத் ஓர் ஆய்வு ஆக்கத்தில் இடம் பெற்றுள்ள குர்ஆன் வசனங்கள் கூறுவது போல் உண்மை முஸ்லிம்களுக்கு ஹதீஃத்கள் நபிதோழர், தாபியீன், தபஅ தாபியீன், இமாம்கள் ஆகியோரின் கடும் எச்சரிக்கைகள்படி பகிரங்க மான பித்அத்கள்-வழிகேடுகள்-நரகில் சேர்க்கும் என்பதை சூரா அல்முஃமினூன் 23:1-11, 51:55, ஆகிய வசனங்கள் கூறுவது போல் உண்மை முஸ்லிம்களுக்கு உறுதிப்படுத்துகின்றன. 49:14 குர்ஆன் வசனம் கூறுவது போல் உள்ளத்தில் ஈமான் நுழையாத பெயர் தாங்கி முஸ்லிம்களுக்கு 17:41, 45-47,89, 22:72, 25:60, 39:45 இறைவாக்குகள் கூறுவது போல் இந்த எச்சரிக்கைகள் எட்டிக்காயாகக் கசக்கவே செய்யும்.

எமது கடமை குர்ஆன் வசனங்களையும், ஹதீஃத்களையும் எடுத்துரைப்பது மட்டுமே. அவற்றை ஏற்பதும் நிராகரிப்பதும் இதைப் படிப்பவர்களின் பொறுப்பிலாகும்.

ஒட்டுமொத்த மனித குலத்தினருக்கும், மனிதனைப் படைத்த இறைவன் இறுதியாக முழுமையாக முற்றுப் பெற்ற நெறிநூல் குர்ஆனை (முஸ்லிம்களின் வேதம் என இந்த மூட முல்லாக்கள் சொல்வது தார்ப்பாயில் வடித்தெடுத்தப் பொய்) மீண்டும் மீண்டும் பொருள் அறிந்து படிக்க, படிக்கத் தெரிய வருவது என்னவென்றால், அல்லாஹ் தனக்கு எந்த வகையிலும் இணை வைக்கக் கூடாது, பித்அத்கள் மூலம் இணை தெய்வங்களைக் கற்பிக்கக் கூடாது என்று பல இடங்களில் கூறியிருப்பதை நிராகரித்து இறைவனுக்கு இணை வைக்கும் கொடிய செயல்களான ஷிர்க், குஃப்ர், பித்அத் அனைத்தையும் புகுத்தி மனித குலத்தினரை வழிகெடுத்து நரகில் தள்ளும் பிதாமகன்களாகத் திகழ்வது இந்த மதகுருமார்களான மூட முல்லாக்கள்தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக, குன்றிலிட்டத் தீபமாக விளங்க முடிகிறது.

இதில் இதர மதங்களின் மதகுருமார்களை விடப் பெரும் பாவிகளாக முஸ்லிம் மதகுருமார்களான மவ்லவிகளே திகழ்கிறார்கள். காரணம் அவர்களிடம்தான் குர்ஆன் இருக்கிறது. வைக்கோல்போரை காக்கும் நாய்கள் போல் குர்ஆனை முறைப்படி அவர்களும் நடைமுறைப்படுத்தாது மட்டுமல்ல பிறரையும் படிக்க விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நாளை நரகில் ஆக அடித்தட்டில் இம்மவ்லவிகளே இருப்பார்கள் (பார்க்க : 4:145)

இம்மவ்லவிகளைவிட கேடுகெட்ட ஒரு படைப்பு ஜந்து இவ்வானத்தின் கீழ் இல்லவே இல்லை என்பதை குர்ஆன் 7:175-179, 45:23, 47:24, 25 வசனங்கள் புகாரீ 3456, 7319, 7320 ஹதீஃத்கள் உறுதிப்படுத்துகின்றன.

5:100, 6:116, 12:106, 25:30, அக்ஃதர்-பெரும்பான்மையினர் என்று 33 இடங்களிலும் அக்ஃதர் ஹும் என்று 45 இடங்களிலும் அக்ஃதரக்கும் என்று 2 இடங்களிலும் ஆக 80 இடங்களில் மிகப் பெரும்பான்மையினர் நரகத்திற்குரியவர்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

மேலும் 32:13, 11:118,119 குர்ஆன் வசனங்களில் ஜின் இனத்தையும் மனித இனத்தையும் கொண்டு நரகத்தை நிரப்பும் எமது வாக்கு நிறைவேறியே தீரும் என்று அல்லாஹ் உறுதிப்படுத்துகின்றான். ஆக இவ்வுலகம் மதகுருமார்களின், குறிப்பாக மவ்லவிகளின் இராஜ்யம்தான். நாளை நரகை நிரப்ப இருக்கும் ஒவ்வொரு ஆயிரத்திலும் 999 பேர் இம்மவ்லவிகளின் பின்னால்தான் கண்மூடி (தக்லீத்) செல்வார்கள். பெருங்கூட்டம் தாஃகூத் என்ற மனித ஷைத்தான்களான இம்மவ்லவிகள் பின்னால்தான் இருப்பார்கள். 6:116 இறைவாக்குக் கூறுவதுபோல் இம்மவ்லவிகளின் ஆதாரமற்ற வெறும் யூகங்களையும், அனுமானங்களையும் அதாவது வெறும் கற்பனைகளையும் தான் வேத வாக்காகக் கொண்டு செயல்பட்டு நாளை நரகை அடைவார்கள். 2:186, 7:3, 18:102-106, 33:36, 59:7 இந்த இறைவாக்குகளை நிராகரித்து, அல்லாஹ்வை நம்பாமல், இம்மவ்லவிகளை நம்பிச் செயல்படும் பெரும்பான்மையினர் நாளை நரகை அடைவதில் சந்தேகம் உண்டா?

மனித படைப்பின் ஆரம்பமே இறைவனுக்கு மாறு செய்யும் நிலையிலேயே ஆரம்பித்திருக்கிறது என்பதை 7:11 முதல் 25 வரையுள்ள வசனங்களைப் படித்து உறுதி செய்து கொள்ளுங்கள். முதல் மனிதரை அல்லாஹ் மண்ணிலிருந்து படைத்து அவருக்கு சுஜூது செய்யக் கட்டளையிட்டதை நிராகரித்து சுஜூது செய்ய மறுத்த இப்லீஸ், தன் செயலுக்கு சுய விளக்கம் கொடுத்து ஷைத்தான் ஆனான். அதேபோல்தான் இம்மவ்லவிகள் குர்ஆனிலுள்ள அல்லாஹ்வின் நேரடிக் கட்டளைகளுக்குச் சுயவிளக்கம் கொடுத்து நிராகரிப்பதின் மூலம் தாஃகூத் என்ற மனித ஷைத்தான்கள் ஆகிறார்கள்.

அடுத்து முதல் மனிதர் ஆதம்(அலை) ஷைத்தானின் சூழ்ச்சி வலையில் சிக்கி அல்லாஹ்வின் கட்டளையை நிராகரித்துப் பாவியானார். ஆயினும் ஆதம்(அலை) அவர்கள் ஷைத்தானைப் போல், தாஃகூத் என்ற மவ்லவிகளைப் போல் சுய விளக்கம் கொடுத்துத் தமது செயலை நியாயப்படுத்த முற்படவில்லை. தன் தவறை உணர்ந்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டார். (பார்க்க : 7:23) அல்லாஹ்வும் அவரது தவ்பாவை ஏற்று மன்னித்தான். இவ்வுலகில் ஆதம்(அலை) அவர்களுக்குப் பிறந்த முதல் மகனே கொலைகாரன் ஆனான். இப்படி இறைக் கட்டளைகள் மறுக்கப்படுவதும், அக்கிரமச் செயல்கள் அதிகப்படுவதும் தான் உலகின் இயற்கை நியதியாக இருக்கிறது.

மனிதன் படைக்கப்பட்டதும் ஷைத்தான் பெற்ற வரத்தின்படி மனித குலத்தினரில் பெரும்பாலோரை நரகில் தள்ள ஷைத்தானுக்கு துணையாக, குலத்தைக் கெடுக்கும் கோடாரிக் காம்பு என்பது போல் இடைத்தரகர்களான புரோகித மதகுருமார்கள் மனித இனத்திலிருந்தே தோன்றிவிட்டார்கள். இவர்களைத்தான் அல்லாஹ் பல இடங்களில் தாஃகூத் என்று அதாவது மனித ஷைத்தான்கள் என்று குறிப்பிடுகிறான்.

அல்லாஹ் ஆதித் தந்தை ஆதம்(அலை) அவர்களைச் சுவர்க்கலோகத்திலிருந்து இவ்வுலகிற்கு அனுப்பும்போதே நேர்வழி வரும்போது யார் என்னுடைய அந்நேர்வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்(2:38) என்று தெளிவாக நேரடியாக விளக்கமாகக் கூறியுள்ளான்.

அல்லாஹ்வைப் பற்றியும், சுவர்க்கத்தைப் பற்றியும், ஷைத்தானைப் பற்றியும் நன்கு அறிந்திருந்த ஆதம்(அலை) அவர்களுக்கே அல்லாஹ்வின் வழிகாட்டல்படி மட்டுமே நடக்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ள நிலையில், அல்லாஹ் தெளிவாக, நேரடியாக, எவ்விதச் சந்தேகத்திற்கும் இடமின்றி அறிவித்திருக்கும் நிலையில், இம்மவ்லவிகள் 25:30 இறைவாக்குக் கூறுவது போல், தங்களின் சுய விளக்கம் மேல் விளக்கம் மூலம் நிராகரிக்கிறார்கள்.

குர்ஆன் வசனங்களின் நேரடிக் கருத்துக்களை 2:159 இறைவாக்குக் கூறுவது போல் திரித்து, வளைத்து இருட்டடிப்புச் செய்கிறார்கள். எடுத்துச் சொன்னாலும் திருந்த மறுக்கிறார்கள். அவர்களின் மறுமை நிலையை 2:161,162 இறைவாக்குகள் அம்பலப்டுத்துகின்றன. இன்னும் அழுத்தமாக 2:39 இறைவாக்கு அன்றி யார் (இதை ஏற்க) மறுத்து நம் வசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்கள் நரகவாசிகள். அவர்கள் அ(ந்நரகத்)தில் என்றென்றும் தங்கி இருப்பார்கள் (2:39) என்று உறுதிப்படுத்துகிறது.

இவ்வளவு தெளிவாகச் சொல்லியிருந்தும் இம் மவ்லவிகள் படிப்பினை பெறவில்லையே! ஆம்! 7:146 இறைவாக்குச் சொல்வது போல், “நாங்கள் தான் ஆலிம்கள், குர்ஆனைக் கரைத்துக் குடித்த மேதைகள், குர்ஆனை சரியாக விளங்குவது நாங்கள்தான். அவாம்கள் அவர்களது மொழியில் குர்ஆனைப் படித்தாலும் விளங்க முடியாது” என்று வீண் பெருமை பேசுவதால், அல்லாஹ்வே அம்மவ்லவிகள் குர்ஆன் வசனங்களை விளங்குவதை விட்டும் திருப்பி விடுகிறான். குர்ஆன் வசனங்களை நேரடியாகக் காட்டினாலும் ஏற்கமாட்டார்கள். சுயவிளக்கம் கொடுத்து அவ்வசனங்களை நிராகரிப்பார்கள். நேர்வழியை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். கோணல் வழிகளையே நேர்வழியாக ஏற்று மக்களை வழிகெடுத்து நரகில் தள்ளுவாங்கள் என்று கூறி இருப்பதற்கு மாறாகப்ப பெருமை பேசும் இம்மவ்லவிகள் நேர்வழிக்கு வரமுடியுமா? பெருமை நிலையில் ஒருபோதும் சாத்தியமில்லை.

இம்மவ்லவிகள் என்ன தந்திரம் செய்து மக்களை ஏமாற்றுவதோடு, அவர்களை வஞ்சித்து நரகில் தள்ளுகிறார்கள் தெரியுமா? குர்ஆனில் பொய்ப்பிக்கிறார்கள், பொய்யாக்குகிறார்கள் என்று மொழி பெயர்க்க வேண்டிய இடங்களில் “பொய்யனக் கூறுகிறார்கள்” என்று படர்க்கையில் மொழி பெயர்த்துள்ளனர். காரணம் என்ன தெரியுமா? முஸ்லிம் அல்லாதவர்கள் குர்ஆன் இறைவனிடமிருந்து வந்தது அல்ல. முஹம்மதே அதை எழுதினார் என்று கூறி குர்ஆனை மறுக்கிறார்களே, அதைத்தான் இவ்வசனங்கள் கூறுகின்றன என்று தங்கள் முகல்லிது பக்தர்களை ஏமாற்றத்தான்.

ஆனால் உண்மை என்ன? குர்ஆன் இறைவனால் அருளப்பட்ட நெறிநூல் என்பதை மறுப்பது மட்டுமல்ல பொய்ப்பிப்பது, பொய்யாக்குவது குர்ஆனின் நேரடிக் கருத்தை 2:159, 33:36 இறைவாக்குகள் கூறுவது போல் மறைத்து, திரித்து, வளைத்து சுய கருத்தை, மேல் விளக்கமாகக் கூறுவதும் குர்ஆனை பொய்ப்பிப்பதுதான், பொய் யாக்குவதுதான்.

உதாரணமாக 7:55,205 வசனங்களுக்கு சுய விளக்கம் கொடுத்து கூட்டு துஆ, கூட்டு திக்ர் இவற்றை நியாயப்படுத்தி அவற்றைச் செயல்படுத்துவது குர்ஆனைப் பொய்பிப்பதுதான், பொய்யாக் குவதுதான் 2:186, 7:3, 18:102-106 குர்ஆன் வசனங்களுக்கு சுய விளக்கம், மேல் விளக்கம் கொடுத்து கபுரு-சமாதி வழிகேடுகளை வழிபாடாக்குவது குர்ஆனை பொய்ப்பிப்பதுதான், பொய்யாக்குவதுதான். 3:103,105, 6:153,159, 12:108, 30:32, 42:13,14 குர்ஆன் வசனங்களுக்கு சுய விளக்கம், மேல் விளக்கம் கொடுத்து நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்னர் மனிதர்களால் கற்பனை செய்யப்பட்ட அனைத்துப் பிரிவுப் பெயர்களையும். நியாயப்படுத்திச் செயல்படுத்துவது குர்ஆனைப் பொய்ப்பிப்பதுதான், பொய்யாக்குவது தான். 25:30 இறைவாக்குக் கூறுவதுபோல் ஒட்டு மொத்த மவ்லவிகளும் குர்ஆனை பொய்ப்பிப்ப வர்களாகவும், பொய்யாக்குகிறவர்களாகவும் இருந்து கொண்டு, அப்பழியை முஸ்லிம் அல்லாதவர்கள் மீது போட்டுவிட்டு அவர்கள் தப்பிக்கப் பார்க்கிறார்கள்.

மக்களை வழிகெடுத்து நரகில் தள்ளும் மதகுருமார்களின் ஆதிக்கம் இந்த அற்பமான அழிந்துபடும் உலகில்தான். இவ்வுலகின் ராஜ்யம் மதகுருமார்களின் கையில்தான் இருக்கிறது. அவர்கள் பின்னால் அவர்களை தக்லீது செய்யும் மக்கள்தான் 99.9%. அல்லாஹ் இறக்கியருளிய நேர்வழியை கோணல் வழிகளாக்கி இம்மதகுருமார்கள் அரசோட்சிக் கொண்டிருப்பார்கள். மக்கள் வழிகேட்டில் மூழ்கி இருப்பதைப் பார்த்து இறைவன் இறைச் செய்திகளுடன் புதிய நபியை அனுப்பி வைப்பான்.

அந்த நபி மக்களிடையே நேர்வழியைப் போதிப்பார். அப்போதனை அவருக்கு முன்னால் வந்த நபி போதித்த போதனையாக, இம்மதகுருமார்கள் போதித்த வழிகேட்டு போதனைகளுக்கு நேர்முரணாக இருக்கும். முன் சென்றவர்கள்மீது முரட்டுப் பக்தியை ஷைத்தான்களும், தாஃகூத் என்ற மனித ஷைத்தான்களாகிய மதகுருமார்களும் கடுமையாக ஊட்டி இருப்பதால், அந்த மக்களும் புதிய நபியை இம்மதகுருமார்களுடன் சேர்ந்து கடுமையாக எதிர்ப்பார்கள்.

புதிய நபியைப் பேயன், பைத்தியக்காரன், பொய்யன், வழிகேடன், முறைப்படி மார்க்கம் அறியாதவன் என்றெல்லாம் வாய்க்கு வந்தவாறு கடுமையாகத் திட்டி அவர்களின் நேர்வழி பேச்சை கேட்கவிடாமல், தாஃகூத்களான மதகுருமார்களுடன் சேர்ந்து கொண்டு கடுமையாக எதிர்ப்பார்கள். அல்லாஹ் நாடும் விரல் விட்டு எண்ணப்படும் ஒரு சிலரே அந்நபியின் பேச்சைக் கேட்டு நேர்வழிக்கு வருவார்கள். 99.9% கடுமையாக எதிர்த்து வழிகேட்டில் இருப்பார்கள்.

இந்த நிலையில் அந்த நபியை தன்னளவில் அல்லாஹ் மீட்டுக் கொண்டவுடன் அந்த நபி தங்களோடு இருக்கும்போது அவரைக் கடுமையாகத் திட்டியவர்கள், சித்திரவதைச் செய்தவர்கள், பேயன். பைத்தியக்காரன், மனநோயாளி இன்னும் இதுபோல் வசைமொழி பாடியவர்கள், அதற்கு மாறாக அவர் மறைந்தவுடன் அவர்களை வரம்பு மீறிப் புகழ்ந்து அல்லாஹ்வுடைய ஸ்தானத்திற்கு உயர்த்தி அந்நபியையே கடவுளாக்கி, அவதார மாக்கி, அவர் சொல்லாததை, அல்லாஹ் சொன்னதாக, அவரே கடவுள் நிலையில் சொன்னதாக இல்லாதக் கற்பனைக் கட்டுக் கதைகளைக் கூறி மக்களை அல்லாஹ்வுக்கு இணை வைக்கச் செய்து, இம்மதகுருமார்கள் அற்பமான உலகியல் ஆதாயங்களை அடைவதோடு (பார்க்க : 9:34) அவர்களை முற்றிலும் நம்பியுள்ள அவர்களின் கண்மூடி (முகல்லிது) பக்தர்களை நரகில் தள்ளி ஷைத்தானின் பாராட்டைப் பெறக் காத்திருப்பார்கள்.

பொய்யன் பீ.ஜை. நபிதோழர்கள் “அண்ணன் எப்போது சாவான், திண்ணை எப்போது காலியாகும்” என்று காத்திருந்தார்கள் என்று சொன்னது பச்சை அவதூறு. உண்மையான நபிதோழர்களில் எவரும், இவரைப் போலவோ இதர மதகுருமார்களைப் போலவோ, மார்க்கத்தை மதமாக்கி அதையே வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டிருக்கவில்லை. இவர்களைப் போல் அற்பமான இவ்வுலகின் பட்டம் பதவி, ஆள் அம்பு, சொத்து சுகம் எனப் பேராசைப்பட்டு மார்க்கப் பணி புரியவில்லை. தூய எண்ணத்துடன் மறுமையில் அல்லாஹ்விடம் கூலியை எதிர்பார்த்து மார்க்கப்பணி புரிந்தார்கள். எனவே அவர்கள் பற்றிய பொய்யன் பீ.ஜையின் அக்கூற்று படு அவதூறாகும். மறுமையில் அதை அவர் கண்டு கொள்வார்.

ஆனால் அதற்கு மாறாக பீ.ஜையின் ஆபாக்களான மதகுருமார்கள் “அண்ணன் எப்போது சாவான், திண்ணை எப்போது காலியாகும்” என்று காத்திருந்தது நூற்றுக்கு நூறு உண்மையாகும்.

ஒரு நபி இம்மதகுருமார்களோடு இருக்கும் நிலையில், அவர் சொன்னதாகவோ, அல்லாஹ் சொன்னதாகவோ சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது. மாட்டிக் கொள்வார்கள். பொய்யர்கள் என்பது அந்நபியின் வாயிலாகவே உறுதியாகிவிடும். எனவே அந்தத் துணிச்சல் இம்மதகுருமார்களுக்கு இல்லவே இல்லை. ஆயினும் இம்மதகுருமார்கள் அந்த நபி எப்போது சாவார்? அவர் பேராலேயே பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு அற்பமான இவ்வுலகியல் ஆதாயங்களை அடையலாம் என்று காத்திருப்பார்கள்.

அந்நபி மறைந்தவுடன் அல்லாஹ் சொன்னதாக அவர் சொல்லியதாக எல்லாம் அப்பட்டமான பொய்களை அவிழ்த்து விட்டு அற்பமான உலகியல் ஆதாயங்களை அடைவது அவர்களின் ஈனப் புத்தி. முன்னைய நபிமார்களுக்கு அல்லாஹ் அருளிய இறைச் செய்திகளோ, அந்நபியின் நேர்வழிச் செய்திகளோ பதிந்து பாதுகாக்கப்படாததால் இப்படி ஜமுக்காளத்தில் வடித்தெடுத்த பொய்களைக் கூறி இம்மதகுருமார்கள் உலகியல் ஆதாயங்களை அடைய முடிந்தது.

இறுதித் தூதருக்கு சுமார் 600 வருடங்களுக்கு முன் இறைவனால் அனுப்பப்பட்ட ஈசா நபி(யேசு) அவர்களின் வரலாற்றைப் பாருங்கள். மூஸா (அலை) அவர்கள் போதித்த தூய இஸ்லாமிய மார்க்கத்தை யூத மதமாக்கி, உஜைர்(அலை) அவர்களை அல்லாஹ்வின் குமாரராக்கி (பார்க்க : 9:30) ஹராமான வழியில் வயிறு வளர்த்துக் கொண்டி ருந்த யூத மதகுருமார்கள், ஈசா(அலை) அவர்களை அல்லாஹ் தனது தூதராக அவர்களிடையே அனுப்பி, மூஸா(அலை) அவர்கள் எந்த இஸ்லாமிய மார்க்கத்தை மக்களுக்குப் போதித்தார்களோ, அதே தூய இஸ்லாமிய மார்க்கத்தை போதிக்க ஆரம்பித்தார்களோ அப்போது யூத மதகுருமார்கள் என்ன செய்தார்கள்?

தங்களின் வருமானம் தடைபட்டு விடுமோ, வயிறு காய ஆரம்பித்து விடுமோ என்ற அச்சத்தில் ஈஸா(அலை) அவர்களைக் கடுமையாகத் திட்ட ஆரம்பித்தார்கள். வேசி மகன் என்றார்கள், பல விதமாக வசைபாடி இறுதியில் ஈஸா(அலை) அவர்களை சிலுவையில் அறைந்து பல நாட்கள் பட்டினி கிடந்து வதைபட்டுச் சாக ஏற்பாடும் செய்து விட்டார்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் தனது வல்லமையையும், ஞானத்தையும் கொண்டு ஈசா(அலை) அவர்களை யூத மதகுருமார்களின் தூண்டுதலின் பேரில் அரசு அதிகாரிகள் கொல்லாமலும், சிலுவையில் அறையாமலும் பாதுகாத்து தன்வசம் உயர்த்திக் கொண்டான். காதியானிகள் மறுக்கும் இந்த உண்மையை குர்ஆன் 4:157-158, 43:61 வசனங்களும், ஈஸா(அலை) அவர்களின் உண்மைச் சீடரான, சம்பவத்தை நேரில் பார்த்த பர்னபாஸ் தனது கோஸ்பலில் தெளிவாக எடுத்துரைப்பதும் உறுதிப் படுத்துகின்றன.

ஈஸா(அலை) அவர்களை அல்லாஹ் தன் வசம் உயர்த்திக் கொண்டானோ இல்லையோ, திண்ணைக் காலியாகிவிட்டது என்ற துணிச்சலில் ஈஸா (அலை) அவர்களை, மிகமிகக் கடுமையாக எதிர்ப்பவர்களாகவும், அவர்களை சிலுவையில் அறைந்து பல நாட்கள் வதைப்பட்டுச் சாக அன்றைய மன்னனிடம் பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சொல்லி சிலுவையில் அறைய ஏற்பாடு செய்த மதகுருமார்கள் அப்படியே பிளேட்டை மாற்றிப் போட்டு, ஈஸா (அலை) அவர்களை ஆகா ஓகோ என வானளாவப் புகழ்ந்து, அவர்களை அல்லாஹ்வின் குமாரராக்கி, முக்கடவுள் கொள்கையை கற்பனை செய்து கிறித்தவ மதத்தை கற்பனை செய்து அது உலகளாவிய அளவில் பரந்து விரிந்திருக்கிறது. ஈஸா(அலை) அவர்கள் அந்த மக்களிடம் உண்மையான இஸ்லாமிய மார்க்கத்தைப் போதித்தபோது அதை ஏற்றுக்கொண்டவர்கள் வெறும் 12 நபர்கள் தான். அதில் ஒருவர்தான் பர்னபாஸ், இன்னொருவர் ஈஸா(அலை) அவர்களைக் காட்டிக் கொடுக்க அரசு அதிகாரிகளுடன் சென்ற ஜூடாஸ். அவனே சிலுவையில் அறையப்பட்டான்.

ஈஸா(அலை) போதித்த ஒரே நேர்வழி மார்க்கத்தை அதாவது இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள் வெறும் 12 நபர்கள். அதற்கு மாறாக வழிகெட்ட முக்கடவுள் கொள்கையை இம்மதகுருமார்கள் கற்பனை செய்த பின்னர் இன்று உலகில் வாழும் கிறித்தவர்களின் எண்ணிக்கை 228 கோடி. கடந்த 2016 ஆண்டுகளில் எத்தனை லட்சம் கோடி மக்கள் இம்மதகுருமார்களின் முக்கடவுள் கொள்கையின் துர்போதனை ஏற்று கிறித்தவர்களாக வாழ்ந்து நாளை நரகை நிரப்ப இருக்கிறார்கள் என்பதை கணக்கிட்டுப் பாருங்கள். இம்மதகுருமார்களின் வக்கிர புத்தியையும், கேடுகெட்ட நிலையையும் நீங்களே புரிந்து கொள்ள முடியும்.

அதே வரிசையில்தான் நபி(ஸல்) அவர்களின் 23 வருட மார்க்கப் பணி காலத்தில், இம்மதகுருமார்கள் “அண்ணன் எப்போது சாவான், திண்ணை எப்போது காலியாகும்” என்று தங்கள் வாலை சுருட்டி மடக்கி வைத்துக் கொண்டுக் காத்திருந்தனர். நபி(ஸல்) அவர்கள் என்று மரணித்தார்களோ அன்றிலிருந்தே தங்களின் ஷைத்தானின் வேலையை ஆரம்பித்து விட்டார்கள். நபி(ஸல்) நுபுத்துவ பணி காலத்திலும் அவர்களின் ஷைத்தானிய வேலைகளில் சில வெளிப்படத்தான் செய்தன. ஆயினும் அவை உட னுக்குடன் வஹி மூலம் அறிவிக்கப்பட்டு ஸஷ்தானின் நேரடி ஏஜண்டான தாஃகூத் என்ற மனித ஷைத்தான்களின் மூக்குகள் உடைபட்டன. நபி(ஸல்) அவர்கள் வஹியின் தொடர்புடன் இருந்த காலத்தில், இம்மதகுருமார்கள் அல்லாஹ் சொன்னான், நபி சொன்னார் என்று கட்டுக்கதைகளைச் சொல்ல வாய்ப்பே இருக்கவில்லை.

எனவே வாயை மூடிக் கொண்டிருந்தார்கள். என்று நபி(ஸல்) அவர்கள் மரணித்தார்களோ அன்றே வஹி முற்றுப் பெற்றுவிட்டது. மார்க்கமும் நிறைவு பெற்று விட்டது. அதன் பின்னர் மார்க்கத்தில் ஓர் அணுவளவும் கூட்டவோ, குறைக்கவோ முடியவே முடியாது என்று 5:3, 3:19,85, 33:36, 59:7 குர்ஆன் வசனங்கள் மூலம் திட்டமாக அறிவிக்கப்பட்டன.

அப்படி இருந்தும் இம்மதகுருமார்கள் தங்க ளின் அற்பமான அழிந்துபடும் இவ்வுலக வாழ்க்கையின் அற்ப சுகத்தை நோக்கமாகக் கொண்டு சுருட்டி இருந்த வாலை நீட்டி ஆட்ட ஆரம்பித்து விட்டார்கள். முன்னைய நபிமார்களுக்கு அருளப்பட்ட நெறிநூல்கள் (மதகுருமார்களின் மொழியில் வேதங்கள்) உடனுக்குடன் பதித்து பாதுகாக்கப் படாததால், இம்மதகுருமார்களால் அல்லாஹ் சொன்னான், தூதர் சொன்னார் என்று துணிந்து ஜமுக்காளத்தில் வடித்தெடுத்தப் பொய்களைச் சொல்லும் பொய்யர்களாக இருந்தார்கள். அதற்கு மாறாக மார்க்கம் நிறைவு பெற்று, முழுமையாகிவிட்டதால், இறுதித் தூதரின் மறைவுக்குப் பிறகு வஹி எவருக்குமே வராது என்பது உறுதியாகி விட்டதால் குர்ஆன் வசனங்களை உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ்வே ஏற்றுக் கொண்டிருக்கிறான். (பார்க்க 15:9)

எனவே அல்லாஹ் சொன்னான் என்று சொல்லி மக்களை ஏமாற்றி வஞ்சிக்க அவர்களுக்கு வழி இல்லாமல் போய்விட்டது. ஆயினும் குர்ஆன் வசனங்களுக்கு அதிலும் குறிப்பாக ஒரே பொருளை மட்டுமே தரும் முஹ்க்கமாத் வசனங்களுக்கு ஆளாளுக்கு தங்கள் வழிகெட்டப் பிரிவுக் கொள்கைக்கு ஏற்றவாறு 2:159 இறைவாக்குக் கூறுவது போல் வளைத்து, திரித்து பொருள் கொடுத்து வருகிறார்கள். 2:161,162 வசனங்கள் கூறும் கடும் எச்சரிக்கை அவர்களுக்கு உறைக்காது. அந்தளவு அவர்களின் உள்ளங்கள் கற்பாறைகளைவிட கடினமாகி இறுதிவிட்டன. (பார்க்க 2:74, 5:13, 6:43,125, 57:16)

இம்மவ்லவிகள் குர்ஆன் வசனங்களுக்கு சுய விளக்கம், மேல்விளக்கம் கொடுத்து மக்களை வழிகெடுப்பதோடு, தூதர் சொன்னார் என்று 10 லட்சத்திற்கு அதிகமான பொய்யான ஹதீஃத்களை மக்களிடையே புழக்கத்தில் விட்டு மக்களை நரகை நோக்கி நடைபோட வைத்துள்ளனர். தாஃகூத் என்ற மனித ஷைத்தானின் நிலையிலிருந்து, ஜின் இன ஷைத்தானின் நேரடி ஏஜண்டாக இருந்து தங்களின் அப்பணியை திறம்படச் செய்து வருகிறார்கள்.

ஆக தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். இறுதி வாழ்க்கை நெறிநூல் குர்ஆனை பொருள் அறிந்து அன்றாடம் மீண்டும், மீண்டும் படித்து வருகிறவர்கள் ஒரு விஷயத்தைத் தெளிவாக நேரடியாக விளங்கிக் கொள்ள முடியும்.

எவர்கள் நாங்கள்தான் ஆலிம்கள் கற்றறிந்த மேதைகள் குர்ஆன் எங்களுக்குத்தான் விளங்கும். அவாம்களான பாமரர்கள் குர்ஆனை தங்கள் தங்கள் மொழிகளில் படித்தாலும் விளங்க முடியாது. நாங்கள் விளக்கித்தான் விளங்க முடியும். அதிலும் ஸலஃபுகள் எப்படி குர்ஆனை விளங்கினார்களோ அதையே நாமும் ஏற்க வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் வடிகட்டின ஜாஹில்கள்-மூடர்கள், அபூ ஜஹீலின் வாரிசுகள் 42:21 இறைவாக்குச் சொல்வது போல் அல்லாஹ்வுக்கு மேல் அல்லாஹ்வாகி அதாவது ஃபிர்அவ்ன் “அனப்புக்கு முல் அஃலா நானே ரப்புகளுக்கெல்லாம் மேலான ரப்பு” என்று சொன்னானே, அந்த ஃபிர்அவ்னின் வாரிசாகி 49:16 இறைவாக்கு சொல்வதுபோல் அல்லாஹ்வுக்கே மார்க்கம் கற்றுக்கொடுக்கும் மேதைகளாகி, நாளை மறுமையில் நரகில் கிடந்து வெந்து கரியாகிக் கொண்டு ஒப்பாரி வைக்கப் போகிறார்கள் என்பதை அறிய முடியும்.

மவ்லவிகளில் தர்கா மவ்லவி, தரீக்கா மவ்லவி, மத்ஹபு மவ்லவி, ததஜ மவ்லவி, இதஜ மவ்லவி, தமுமுக மவ்லவி, அஹ்ல குர்ஆன் மவ்லவி, இன்னும் எத்தனைப் பிரிவுகளின் மவ்லவிகள் இருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. அபூ ஜஹீலின் வாரிசுகளே. எண்ணற்ற குர்ஆன் வசனங்களை நிராகரித்து-குஃப்ரிலாகி, ஒரே தூய மார்க்கத்தை பல வழிகெட்ட மதங்களாக்கி வயிறு வளர்ப்பவர்களே. இவ்வுலகின் அற்ப சுகத்திற்காக மறுமையை பாழ்படுத்துகிறவர்களே. அவர்கள் வழிகெடுவதோடு ஆதத்தின் சந்ததிகளை வழிகெடுத்து நரகில் தள்ளுபவர்களே.

நாளை நரகில் கிடந்து வெந்து கரியாகிக் கொண்டு அவர்களும் அவர்களின் பக்தர்களும் ஒருவரை ஒருவர் திட்டி ஒப்பாரி வைப்பதை 7:35-41, 33:66-68, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45 போன்ற வசனங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன.

அபூ அப்தில்லாஹ் மவ்லவி அல்ல. அவர் சொல்வதை ஏற்க முடியாது. அவர் மக்களை வழிகெடுக்கிறார், அவர் ஒரு மன நோயாளி, இன்னும் பல அவ தூறுகளைக் கூறி மக்களை குர்ஆன், ஹதீஃத் பேச்சை கேட்கவிடாமல் தடுப்பவர்கள் வடிகட்டின மூடர்களா இல்லையா? அபூஜஹீலின் வாரிசுகளா இல்லையா? நாம் அவர்களைப் போல் எமது மேல்விளக்கம், சுயவிளக்கம் என கையிலிருந்தா போட்டாக் கொடுக்கிறோம். வசனங்களின் அத்தியாய எண் வசன எண்களை எழுதி நேரடியாக குர்ஆனில் பார்த்து தெளிவுபெறுங்கள் என்றே கூறுகிறோம், எழுதுகிறோம். மக்களை குர்ஆனுடன் நேரடித் தொடர்பு கொள்ளுங்கள் என்று அல்லாஹ் 2:186, 7:3, 18:102-106 குர்ஆன் வசனங்கள் சொல்வதையே எடுத்துக் கூறுகிறோம். அப்படியானால் இம்மவ்லவிகள் அபூ அப்தில்லாஹ்வை இழிவுபடுத்தவில்லை. தங்களின் மூடத்தனம் காரணமாக அல்லாஹ்வையும், அவனது தூதரை இழிவுபடுத்த முற்படுகிறார்கள். குர்ஆனையும், ஹதீஃதையும் நிராகரிக்கிறார்கள் என்பதை மக்களே புரிந்து கொள்ளுங்கள்.

முஸ்லிம்களே மனிதர்களில் ஆலிம் – அவாம் என்ற வேறுபாடு இல்லாமல், மனிதர்களை நம்பாமல் அல்லாஹ்வை மட்டுமே நம்பி, அவனையே முற்றிலும் சார்ந்திருந்து குர்ஆனைப் பற்றிப்பிடித்து உங்களுக்கு தெரிந்த மொழிகளில் குர்ஆனை அன்றாடம் படித்து விளங்கி அதன்படி நடந்து நேர்வழி பெற முன்வாருங்கள்.

ஐயமும்! தெளிவும்!!

ஐயம் : நமது மதரஸாக்களில் கற்றுத்தரப்படும் ஐந்து கலிமாவின் வாசகங்கள் குர்ஆன், ஹதீஸில் இடம் பெற்றுள்ளதா? அவற்றிற்கு தையிப், ­ஹாதத், தம்ஜீது, தவ்ஹீத், ரத்துல்குப்ர் என பெயரிட்டது யார்? அவ்வல் கலிமா, 2ம் கலிமா என வரிசைப்படுத்தியது யார்? விளக்கமாக அறியத் தருக!
அஹ்மது அப்துல் காதிர், மாத்தளை, இலங்கை.

தெளிவு : தங்களது அடுக்கடுக்கான கேள்விகளும், அவற்றிற்கு குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களில் விளக்கம் கேட்டிருப்பதும் நமது நெஞ்சை புல்லரிக்கச் செய்கிறது. ஐயம் எழுந்தபின் தெளிவுபெற வேண்டியது அவசியம். ஐயமற்ற நிலையில் எதனையும் செய்யவே நபி(ஸல்) நமக்கு ஆணையிட்டுள்ளார்கள். எனவே நாம் தங்களது ஐயங்களை ஒவ் வொன்றாகக் கவனிப்போம்.

முதலில் கலிமா என்றால் என்ன? என்பதைப் பார்ப்போம். கலிமா என்றால் “ஒரு செய்தி” “ஒரு சொல்” “வார்த்தை” எனப் பொருளாகும். “கலிமா” என்ற சொல் குர்ஆனில் ஏறத்தாழ முப்பது இடங்களில் இடம் பெறுகிறது. கலிமாவின் பன்மைச் சொல் “கலிமாத்” இது ஏறத்தாழ15 இடங்களில் வருகிறது. அரபி அகராதிப்படி இது ஒரு வார்த்தை, ஒரு சொல், ஒரு விஷயம் என்ற பொருளைத் தந்தாலும், அல்லாஹ்(ஜல்) தனது திருகுர்ஆனில் பல வார்த்தைகளைக் கொண்ட சொற்றொடர்களுக்கும் கலிமா என்ற சொல்லை பயன்படுத்தியிருக்கிறான்.

உதாரணமாக.

(நபியே! அவர்களிடம்) வேதமுடையோரே! நமக்கும், உங்களுக்குமிடையில் (இசைவான) ஒரு பொது விஷயத்தில் (இலா கலிமத்தின் ஸவாயின்) பக்கம் வாருங்கள்! (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்கமாட்டோம். அவனுக்கு எவரையும் இணை வைக்கமாட்டோம், அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுள்களாக எடுத்துக்கொள்ள மாட்டோம் (எனக்) கூறும். (அல்குர்ஆன்: 3:64)

ஒரு பொது விஷயத்தில் (கலிமத்தின் ஸவாயின்) அழைக்கும்படி நபி(ஸல்) அவர்களை ஏவும் அல்லாஹ் அந்த கலிமா என்ன? என்பதையும் விளக்கியுள்ளதைப் பாரீர். தவ்ஹீதில் ஒருமைப்பாட்டை எடுத்தியம்பவே அல்லாஹ் மூன்று வாசகங்கள் கூறும் கருத்தை கலிமா என உபயோகித் திருப்பதைக் காணலாம். இதுபோன்ற விளக்கத்தை குர்ஆன் மூலம் நாம் அறியமுடிகிறது. ஆனால் இன்று நடைமுறையில் கலிமா என்ற பெயரில் உலவி வருவதைப் பற்றி நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்.

அவ்வல்(முதல்) கலிமா எனக் கூறப்படும் “லாயிலாஹ இல்லல்லாஹு” “முஹம்மது ரசூலுல்லாஹி” என்ற இரு வாசகங்களும் ஒன்றாக இணைத்து குர்ஆனிலும், ஹதீஸிலும் இடம் பெற வில்லை, “லாயிலாஹ இல்லல்லாஹு” என்ற வாசகம் அல்குர்ஆனில் 37:35 வசனத்தில் இடம் பெறுகிறது. ஏகத்துவத்தை தெரிவிக்கும் “லாயிலாஹ இல்லல்லாஹு” என்ற வாசகத்தை “கலிமத்துன் தைய்யிபா” என்பதாகவும் குர்ஆன் வசனம் 14:24 நமக்கு தெளிவாக்குகிறது. “முஹம்மது ரசூலுல்லாஹி” என்ற வாசகம் குர்ஆனில் 48:29ல் தனியாக இடம் பெறுகிறது.

நபி(ஸல்) கூறினார்கள் : எவரொருவர் லாயிலாஹ இல்லல்லாஹு (அல்லாஹ்வைத் தவிர இறைவன் வேறில்லை என்பதை) நன்குணர்ந்த நிலையில் மரணித்து விட்டால் அவர் நிச்சயம் சுவனம் புகுவார். அறிவிப்பு : உஸ்மான்(ரழி), ஆதாரம் : முஸ்லிம், முஸ்னத் அஹ்மது.

இவ்வறிவிப்பில் “லாயிலாஹ இல்லல்லாஹு” என்னும் வாசகத்தை மட்டும் காண்கிறோம். இவ்வாறே மற்றும் பல ஹதீஸ்களில் இவ்விரு வாசகங்களும் இணைந்து இல்லாமல் தனித்தனியே பல்வேறு இடங்களில் காணக்கிடைக்கின்றன.

மற்றும் குர்ஆனில் பற்பல இடங்களில் “அத்தீ உல்லாஹவஅத்திஉர்ரசூல” என அல்லாஹுவை வழிபடவும், ரசூலுல்லாஹுவை கீழ்ப்படியும் இணைந்து இணைந்து கூறப்படுவதால் இவ்விரு வசனங்களையும் இணைத்து மூலக்கலிமாவாக நம்மிடையே உலவி வருகிறது. இது குர்ஆன், ஹதீஸ்களின் கருத்துக்கு முரண்பட்டதல்ல என்பதை உணரலாம்.

ஆனால் முதன்முதலில் இஸ்லாத்தில் சேருபவர் “லாயிலாஹ இல்லல்லாஹி முஹம்மது ரசூலுல் லாஹி” என்ற அவ்வல் கலிமாவை (நடைமுறையில் உள்ளபடி) சொல்லவேண்டும் என்பதற்கு குர்ஆன், ஹதீஸில் ஆதாரமில்லை. அவ்விதம் கூறி இஸ்லாத் தைத் தழுவ நபி(ஸல்) அவர்களோ, அவரது அருமைத் தோழர்களோ சொல்லித் தந்ததற்கு அறவே ஆதாரமில்லை. இந்த இடத்தில் நம்மை, கலிமாவே இல்லை என சொல்ல ஆரம்பித்துவிட்டது அந்நஜாத் என புரளி கட்டிவிட ஆரம்பித்துவிடுவர். எனவே தெளிவாகப் படித்து விளங்கி தெளிவு பெற வேண்டுகிறோம். நபி(ஸல்) அவர்கள் காலத்திலும், ஸஹாபாக்கள், தாபிஈன்கள் காலத்திலும் எதனைக் கூறி இஸ்லாத்தில் புதியவர்கள் இணைந்தனர் என் பது கவனிக்கத்தக்கது. அவர்கள் கற்றுத் தந்தது என்ன? என்பதே நமது கேள்வி.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் புதிதாக இஸ்லாத்தில் இணைந்த அனைவரும் “அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹுவரசூலுஹு”   என்பதே ஆகும்.

பொருள் : அல்லாஹுவைத் தவிர வேறு இறைவன் இல்லை என உறுதிமொழி கூறுகிறேன். முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹுவின் அடிமையாகவும், தூதராகவும் இருக்கிறார் எனவும் உறுதிமொழி கூறுகிறேன் என்பதாகும்.

இந்த கலிமாவை (சொற்றொடர்களை)க் கூறித்தான் அபூபக்கர்(ரழி) முதல் அனைத்து நபிதோழர் களும் இஸ்லாத்தை தழுவினர் என்பதற்கு பற்பல ஆதாரங்கள் ஹதீஃத், சரித்திர நூற்களில் காணக் கிடைக்கிறது. அவர்கள் அனைவரும் ரசூலுல் லாஹுவை “அல்லாஹுவின் அடிமை” என்பதை விளங்கி இருந்தமையால், உறுதி பகர்ந்தமையால் அவர்களை நபியாகவே கண்டனர். அல்லாஹுவுடைய இடத்திற்கு இட்டுச் செல்லவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது எனவே இதுவே மூல கலிமாவாக இருந்துள்ளது என்பது தெளிவாகிறது.

நம்மிடையே அவ்வல்(முதல்) கலிமாவாக உலவி வருவது குர்ஆன் ஹதீஸ் கருத்துக்கு உடன்பட்ட இரு வாசகங்களாக இருந்தாலும் இவ்விரண்டையும் இணைத்து கலிமாவாக நபி(ஸல்) கற்றுத்தரவில்லை என்பதை உணரவும். உண்மையில் கற்றுத் தந்தது எது என்பதையும் மேலே கண்டோம்.

அடுத்து முறையே 2ம், 3ம், 4ம் கலிமாக்களாக உலவி வரக்கூடியவைகள் எவ்வித கூடுதல் குறைத்தலின்றி ஹதீஸ்களில் முழுமையாக இடம் பெற்றுள்ளன. ஆனால் கலிமாக்களாக இடம் பெறவில்லை. பற்பல சமயங்களில் ஓதவேண்டிய திக்ர், தஸ்பீஹ்களாக இடம்பெற்றுள்ளன. இதற்கென தனிப் பெயரிட்டு, வரிசைப்படுத்தியதற்கு குர்ஆனிலோ, ஹதீஸிலோ ஆதாரம் காணமுடியவில்லை.

பின்னால் வந்தவர்களின் புதிய கண்டுபிடிப்புகள் இவை. நபி(ஸல்) கற்றுத் தந்த அனைத்து திக்ரு, தஸ்பீஹ்களை கலிமாக்களாக எடுக்க நினைப்போமானால் ஐந்துக்குள் அடங்காமல் பல நூறு கலிமாக்களாகி விடும் என்பதை நினைவில் கொள்க. எனவே நபி (ஸல்) கற்றுத் தந்த திக்ரு, தஸ்பீஹ்களை அந்தந்த நேரங்களில் ஒதுவதே சிறப்பாகும். அதனை வரிசைப்படுத்தி, தனிப் பெயரிட்டு கொள்வதற்கு நமக்கு அதிகாரமில்லை.

நம்மிடையே நிலவிவரும் ஐந்து கலிமாக்களில், முதல் நான்கு கலிமாக்களின் நிலைமை இப்படி இருக்க, 5வது கலிமாவில் கோளாறுகள் காணப்படுகின்றன. ஒரு பலவீனமான ஹதீஸில் கூறப்பட்டுள்ள வாசகத்தைப் போன்று ஒரு வாசகம் மட்டும் அதில் காணப்படுகின்றது. மற்றவை பின்னால் வந்தவர்களால் இணைக்கப்பட்டுள்ளன என்பதை சிறிது மார்க்க ஞானமுள்ளவரும் எளிதில் உணர முடியும்.

அந்த பலவீனமான ஹதீஸில் காணப்படும் அவ்வாசகம் வருமாறு :

அல்லாஹுவுக்கு இணை கற்பிக்கும் தன்மை எனது சமுதாயத்தில் பாறையில் எறும்பு ஊர்ந்து செல்வதை விட மிகவும் மறைந்த நிலையில் இருக் கிறது என்றார்கள் நபி(ஸல்); அதற்கு அபூபக்கர்(ரழி) அவர்கள், அல்லாஹுவின் தூதரே! அதைவிட்டும் விலகி ஈடேற்றம் பெறுவதற்கான வழி என்ன? என கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) நான் உமக்கு கூடுதலான, குறைவான, சிறிய, பெரிய அனைத்து ஷிர்க்கு(இணை வைப்பு)களையும் நீர் விலகிக் கொள்ள ஒரு வாசகத்தை கற்றுத் தருகிறேன் எனக் கூறி,

“அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக்க அன்உஷ் ரிக்க பிக்கவஅன அஃலமு வஅஸ்தஃபிருக்கலிமாலா அஃலமு” எனக் கற்றுத் தந்தார்கள். அறிவிப்பு: அபூபக்கர்(ரழி), ஆதாரம் : அல்பகவீ.

இந்த ஹதீஃத் அல்பகவியில் மட்டும் இடம் பெற, இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் “யஹ்யா பின் அபீகஸீர்” என்பவர் சரியான வரல்ல, இவரது சொல்லை எடுக்கக் கூடாது. ஏனெனில் இவர் “மத்ரூகுல் ஹதீஃத்” பேச்சு எடுபடாதவர் வகையைச் சார்ந்தவர் என இமாம் தாருகுத்னீ(ரஹ்) அவர்கள் விமர்சிக்கிறார்கள்.

எனவே இவ்விதமாக ஏற்கப்படாத ஹதீஸின் படியுள்ள ஐந்தாம் கலிமாவை ஓதுவது சரியல்ல.

நபி(ஸல்) நமக்குக் கற்றுத்தந்த கலிமா “அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு” என்பதாகும். இதனைக் கூறியே ஒவ்வொருவரும் இஸ்லாத்தில் இணைய வேண்டும். 2,3,4 கலிமாக்கள் தஸ்பீஹ், திக்ருகளாகும். அவற்றிற்கு தனித்தனி பெயர் வைத்தவர் யார்? வரிசைப்படுத்தியவர்கள் யார்? என்பது எவருக்கும் தெரியாத சரித்திர உண்மையாகும். ஐந்தாம் கலிமாவாக உலவி வருவது ஏற்கப்படாத பலஹீனமானவரின் கூற்றாகும். அவரும் அதனை ஐந்தாம் கலிமாவெனக் கூறவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

ஐயம் : சிறு வயது முதல் தொழாமல் பின் ஒரு காலத்தில் தொழ ஆரம்பிக்கிறோம். இப்படி தொழ ஆரம்பித்தவர்கள் விடுபட்ட தொழுகையை கழா செய்து தொழலாமா? சையது முகமது, நாகபட்டினம், சைய்யது முபாரக், ஜுபைல், அரேபியா.

தெளிவு: தொழுகையைப் பற்றிய விஷயத்தில் அந்தந்த சரியான நேரத்தில் தொழுவதே முக்கியம். அவ்விதம் தொழாமல் பின் சேர்த்து, விடுபட்ட (புreழிrவி) தொழுகைகளை தொழ குர்ஆனிலோ, ஹதீஸிலோ ஆதாரமில்லை. ஞாபக மறதி, தூக்கம் போன்றவற்றால் விடுபட்ட தொழுகையை திருப்பித் தொழ ஆதாரமுள்ளது. சிறு வயதில் விடுபட்ட தொழுகைகளை தொடர்ந்து கழாவாக தொழவோ, ரமழானின் தராவீஹ் தொழுகையை (ஷாபிஈ மத்ஹபு படி) “உமர்கழா” நிய்யத்தில் தொழலாம் என்பதற்கோ எவ்வித குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்கள் கிடையாது. சிறு வயது முதல் தொழாமல் இருந்தவர் தொழ ஆரம்பித்தால் தொடர்ந்து இனி விடாமல் அந்தந்த தொழுகைகளை சரியான நேரங்களில் தொழ வேண்டும். தொழாமல் இருந்தமைக்கு அல்லாஹு விடம் இறைஞ்சி பாவமன்னிப்புக் கோரவேண்டும். இனி அவ்விதம் இருக்கமாட்டேன் என கங்கணங் கட்டிக் கொள்ளவேண்டும். சிறுவயது முதல் தொழாமல் இருந்தமைக்கு அல்லாஹுவிடம் பாவமன்னிப்பு கேட்பதைத் தவிர வேறு மார்க்கமில்லை. அல்லாஹ் மிக அறிந்தவன்.

ஐயம் : இன்றைய சூழ்நிலையில் கத்தம், பாத்திஹா, மவ்லிது முதலிய வைபவங்களைப் பள்ளிவாசலில் நடத்தாவிட்டால் பள்ளிக்கு இப்போது வரும் கூட்டம் கூட இல்லாமலாகிவிடும் என்று சிலர் கூறுகிறார்களே. இது சரியா? முஹம்மத் சாஹிப், காயல்பட்டணம்.

தெளிவு : அது எப்படி சரியாகும்? பள்ளிக்குத் தொழ வருபவர்கள் எல்லாம் நாம் பள்ளிக்குச் சென்றால் ஏதேனும் திண்பண்டங்கள் கிடைக்குமென்ற நோக்கிலா வருகிறார்கள்? இவ்வாறெல்லாம் பூச்சாண்டி காட்டியாவது கத்தம், பாத்திஹா, மவ்லிது முதலியவற்றை நியாயப்படுத்தி விடலாம் என்று சில சுயநலமிகள் வேண்டுமானால் கூறுவார்களேயன்றி மற்றெவரும் கூறமாட்டார்கள்.

ஐயம் : குர்ஆன் ஓதப்பட்டால் அதனை செவிமடுங்கள். மேலும் வாய்மூடியிருங்கள். (அவ்வாறிருப்பின்) நீங்கள் ரஹ்மத் செய்யப்படுவீர்கள். (7:204) இதன்படி தொழுகையில் இமாம் பாத்திஹா சூரா ஓதும்போது அதை நாம் கேட்டுக் கொண்டிருந்தால் போதுமானதுதானே? நாமும் அதை ஓதவேண்டியதில்லையே? விளக்கம் தருக!
காஜா மைதீன், விருதுநகர், உமர் ஜஃபர், மணப்பாறை.

தெளிவு : இவ்வசனத்தின் கருத்தையே வலுப்படுத்தி ஸஹீஹ் முஸ்லிமில் அபூமூஸல் அஷ்அரீ(ரழி) வாயிலாக ஒரு ஹதீஸ் காணப்படுகிறது. அவர்கள் அறிவித்துள்ளார்கள். நபி(ஸல்) கூறினார்கள். இமாம் ஓதினால் வாய்மூடியிருங்கள்; ஆகவே அல்குர்ஆனின் வசனத்தையும் நபி(ஸல்) அவர்களின் ஸஹீஹான ஹதீஸையும் பார்க்கும்போது இமாம் கிராஅத் ஓதும்போது மற்றவர் வாய்மூடி நின்று கேட்பது அவசியம் என்பதையே உணருகிறோம். இமாம் மெளனமாக ஓதும் இடங்களில் நாமும் ஓத வேண்டும்.

ஐயம் : குர்பானி இறைச்சியை மாற்று மதத்தவருக்குக் கொடுப்பது கூடுமா? முஹம்மத் பிலால், சீருடையார்புரம்.

தெளிவு : குர்பானி இறைச்சியை மாற்று மதத்தவருக்குக் கொடுக்கக் கூடாது என்று குர்ஆனிலோ, ஹதீஃதிலோ தடை விதிக்கப்படவில்லை. ஆகவே அவர்களுக்கும் குர்பானி இறைச்சியைக் கொடுப்பது ஆகும் என்பதை அறிகிறோம்.

ஐயம் : துல்ஹஜ்ஜுப் பிறை ஆரம்பத்திலிருந்து ஹஜ்ஜு முடியும் வரை இஹ்ராமின்போது இருப்பது போல் முடிகளை வெட்டிக் கொள்ளாமலும், சவரம் செய்து கொள்ளாமலும் இங்கு (துபை யில்) இருந்து வருகிறேன். இதனால் எனக்கு ஹஜ் ஜுடையபலன்கள் ஏதேனும் கிடைக்குமென எதிர்பார்க்கிறேன். என்ன அவ்வாறு கிடைக்குமா? அல்லது இது பித்அத்தாகுமா? பித்அத் என்று நான் தெரிந்த கொண்டால் இன்றிலிருந்து இப்பழக்கத்தை விட்டு விடுகிறேன். உடன் பதில் தேவை. எலந்தை பு.னி.­ப்பீர் அஹ்மத், துபை.

தெளிவு : அப்துல்லாஹ் பின் அம்ரு(ரழி) அறிவித்துள்ளார்கள். நபி(ஸல்) அவர்கல் கூறினார்கள். யவ்முல் அழ்ஹா வென்னும் குர்பானி செய்யப்படும் துல்ஹஜ்ஜு 10ம் நாளைப் பெருநாள் என்பதாக எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. அல்லாஹ் இதை எனது உம்மத்தக்கு அமைத்துத் தந்துள்ளான் என்றார்கள். அப்போது ஒருவர் அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் பால் கறந்து குடிப்பதற்காக மட்டும் பிறரால் இரவலாகத் தரப்பட்ட ஒரு பெண் ஆட்டைத் தவிர வேறு எப்பிராணியுமில்லை. ஆகையால் அதை குர்பானி செய்து விடவா? என்று கேட்டார்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள் வேண்டாம் என்று கூறினார்கள் (அதாவது புண்ணியத்துக்காகத் தரப்பட்டுள்ள பிறருடைய ஆட்டை குர்பானி எனும் பெயரால் அறுத்துவிடாதீர் என்றார்கள்) எனினும் நீர் உமது உரோமங்களையும், நகங்களையும் அகற்றிக் கொள்வதோடு, தொப்புளுக்கும் கீழ் அகற்ற வேண்டிய முடிகளையும் அகற்றிக் கொள்ளும்! இதுவே உமக்கு அல்லாஹ்விடம் முழுமையான குர்பானியாகும். (அபூதாவூத், நஸயீ) மேற்காணும் ஹதீஸின்படி குர்பானி செய்பவர் தான் முடிகளையும், நகங்களையும் களையாது இருப்பது சுன்னத்து, ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியிருப்போருக்குக் கட்டாயம். இவ்விருசாரார் அல்லாதவருக்கு உரோமங்களையும், நகங்களையும் அகற்றி விடுவதே சுன்னத்து என்பதை உணருகிறோம். எனவே தங்களின் இச்செயல் சுன்னத்து அல்ல என்பதை உணருகிறோம். எனவே தங்களின் இச்செயல் சன்மார்க்கத்திலில்லாத புதுமை-பித்அத்தான செயலாகும் என்பதில் ஐயமில்லை.

ஐயம் : நிக்காஹ் மஜ்லிஸில் தம்பதிகளை வாழ்த்து கையில் அல்லாஹும்ம அல்லிஃப்பைனஹுமா. என்று துவங்கி ஓதப்படும் அந்த துஆ ஹதீஸில் இடம் பெற்றுள்ளதா? இல்லை என்பதால் தம்பதிகளை வாழ்த்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த துஆதான் என்ன? முஹம்மத் ஸலீம், திருச்சி

தெளிவு : தாங்கள் கூறும் அல்லாஹும்ம அல்லிஃப் பைன ஹுமா… என்னும் துஆ ஹதீஸில் இடம் பெறவில்லை. நபி(ஸல்) அவர்கள் தம்பதிகளை வாழ்த் தும் வகையில் நமக்குக் கற்றுத்தந்த துஆ பின்வருமாறு. அபூஹுரைரா(ரழி) அறிவித்துள்ளார்கள். நபி(ஸல்) அவர்கள் திருமணம் செய்துகொண்ட ஒருவரை வாழ்த்தும்போது பாரக்கல்லாஹு லக்க வபாரக்கல்லாஹு அலைக்க வஜமஅ பைனக்குமா ஃபீஃகைர். (அபூதாவூத்)

பொருள் : அல்லாஹ் உம்மை பரகத் உடையவராக ஆக்கியருள்வானாக! மேலும் உம்மீது சுபிட்சத்தை நல்குவானாக! உங்கள் இருவருக்கு மத்தியில் சிறப் பான முறையில் இணைப்பை உண்டாக்குவானாக!

ஐயம் : நிக்காஹ்வுக்குப் பின் சிலரால் ஓதப்படும் துஆவில் “கமா அல்லஃப்த்தபைன யூசுபவஜுலைகா”வென்று (அதாவது யூசுபு(அலை) அவர்களையும், ஜுலைகா அவர்களையும் நீ சிறப்பாக இணைத்து வைத்தது போல் இத்தம்பதிகளையும் இணைத்து வைப்பாயாக! எனும் பொருளில்) மவ்லவிகள் கூட ஓதுகிறார்கள். அப்படி என்றால் யூசுபு(அலை) அவர் களுக்கும், ஜுலைகா அவர்களுக்கும் திருமணம் நடந்ததாக குர்ஆனிலோ, ஹதீஸிலோ ஆதார முண்டா? முஹம்மது ஸலீம், திருச்சி.

தெளிவு : அவ்வாறு, மவ்லவிகள் என்று சொல்லப்படு வோர்தான் ஓதுவார்களே தவிர, உண்மையான அசல் உலில் அல்பாப் என்ற ஆலிம்கள் ஒருபோதும் ஓதமாட்டார்கள். காரணம் அவ்விருவருக்கும் திருமணம் நடந்ததாக அல்லாஹ்வும் கூறவில்லை. அவனது ரசூல்(ஸல்) அவர்களும் கூறவில்லை. ஜுலைகாவாக கூறப்படும் அப்பெண்ணைப் பற்றி அல்குர்ஆனில் அல்லாஹ் கூறும்போதெல்லாம் அஜீஸின் மனைவி, அஜீஸின் மனைவி என்றே கூறியிருக்கிறான், ஜுலைகா என்ற பெயரே குர்ஆனில் இல்லை. பைபிள் போன்ற மாற்றுமத நூல்களிலிருந்து எடுத்து எழுதப்பட்ட கப்ஸாக்கள், கட்டுக்கதைகளின் மொத்த உருவமாகிய “கஸஸுல் அன்பியா” போன்றவற்றை ஆதாரமாகக் கொண்டு நாம் அவ்வாறு ஓதிவிட்டால், குர்ஆன், ஹதீஸில் இதற்கு ஆதாரமுண்டா? என்று யாரும் கேட்டுவிட்டால் என்ன பதில் சொல்வது? என்று கருதியே இந்த துன்பத்திற்கு அதை ஓதாமல் விட்டுவிடுவதே மேல் என்ற சிறந்த முடிவுக்கு இவர்கள் வந்துவிட்டார்கள் போலும், எனவே தற்சமயத்தில் பல மவ்லவிகள் இதனை ஓதுவதை விட்டு விட்டனர்.

ஐயம் : நபி(ஸல்) அவர்களின் தொழுகை ஆரம்பத்திலிருந்து கடைசி வரை எவ்வாறு அமைந்திருந்தது என்பதை குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் எழுதுக!
சிக்கந்தர் சேட், விருதுநகர்.

தெளிவு : நபி(ஸல்) அவர்களின் தொழுகை விபரங்களை முழுமையாக அறிந்து அவ்வாறே நாமும் தொழவேண்டும் என்ற ஆர்வத்துடன் தாங்கள் எழுதியிருப்பது கண்டு மகிழ்ச்சி. இவ்வாறே நமது சகோதரர்களின் விருப்பத்திற்கேற்ப நமது இதழில் “நபிவழியில் நம் தொழுகை” எனும் தலைப்பில் முழுமையாக குர்ஆன், ஹதீஸ் இவ்விரண்டையும் அடிப்படையாகக் கொண்டு நபி(ஸல்) அவர்களது தொழுகையின் முழு விபரங்களையும் பெரும் பிரயாசைக்கு மத்தியில் எழுதி வந்தோம். அதனைத் தொடர்ந்து கவனித்து வந்தால் நபி(ஸல்) அவர்களின் தொழுகையை முறையாக புரிந்து கொள்ள ஏதுவாகும். இன்ஷா அல்லாஹ் அந்நூல் விரைவில் வெளிவர இருக்கிறது. ஸவ்பான்(ரழி) அறிவித்துள்ளார்கள்: நபி(ஸல்) அவர்கள் தொழுகையிலிருந்து திரும்பிவிட்டால் மும்முறை “அஸ்தஃ ஃபீருல்லாஹ்” என்று (கூறி) பாவமன்னிப்புத் தேடுவார்கள். (பின்னர்) அல்லாஹும்ம அன்த்தஸ்ஸலாம் வமின்கஸ் ஸலாம் தபாரக்த்த யாதல் ஜலாலி வல்இக்ராம் என்று ஓதுவார்கள். (முஸ்லிம், திர்மிதீ, இப்னுமாஜ்ஜா, அஹ்மத்)

பொருள்: யா அல்லாஹ்! நீயே சாந்தியானவன், மேலும் உன்னிடமிருந்தே சாந்தி பிறக்கிறது கண்ணியமும், மகத்துவமும் மிக்கவனாகிய நீயே மிக மேலானவனாகும். மேற்காணும் துஆவை நபி(ஸல்) அவர்கள் தாம் தொழ வைத்து விட்டுத் தனித்த நிலையில் ஓதினார்களே அன்றி அவர்கள் தொழ வைத்த பின் ஓதிய துஆக்களுக்கு எந்த ஸஹாபியும் ஆமீன் கூறினார்கள் என்பதை ஹதீஸ்களில் காணமுடியவில்லை. ஆகவே நபி(ஸல்) அவர்கள் தனித்து ஓதியது போன்றே மற்ற ஸஹாபாக்களும் தனித்தே ஓதியிருப்பார்கள் என்பதை நம்மால் உணர முடிகிறது.

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

விமர்சனம் : மூட முல்லாக்கள், பொய்யன் பீ.ஜை. போன்ற கடும் சொற்களைத் தவிர்த்துக் கொண்டால், அவர்களின் ஆதரவாளர்களிடம் அந்நஜாத் இதழ்களைக் கொடுத்து படிக்கச் சொல்ல வழி ஏற்படும். இச்சொற்களைப் பார்த்து அவர்கள் வெறுப்புற்று அந்நஜாத்தைப் படிக்க முன் வருவதில்லை. அப்படி எழுதுவதை தவிர்த்தால் அவர்களும் அந்நஜாத்தைப் படிக்க வாய்ப்பு ஏற்படலாம். வானர் நதீர், தேங்காய்பட்டினம்.

விளக்கம் : இது உங்களுடைய கருத்து மட்டுமல்ல. பலரின் கருத்து இதுவாகத்தான் இருக்கிறது. நாமும் எமது 18 வயதிலிருந்து 42 வயது வரை தப்லீஃக் பணியில் தீவிரமாக இருந்த காலக்கட்டங்களில் இம்மவ்லவிகளைத் தலையில் வைத்துக் கொண்டாடத்தான் செய்தோம். பொருள் அறியாமல் கிளிப்பிள்ளைப் பாடமாக குர்ஆனை ஓதிவந்ததை விட்டு விலகி பொருள் அறிந்து படிக்க ஆரம்பித்த பின்னரே இம் மவ்லவிகளின் எதார்த்த நிலையைப் புரிய ஆரம்பித்தோம். அப்போதும் அவர்கள் மீதிருந்த கண்ணியம் முற்றிலுமாக விலகவில்லை. அந்நஜாத் ஆரம்பிப்பதற்கு முன்னர் 1983 முதல் 1985 வரை எமது பேச்சிலும், எழுத்திலும் கடினம் காட்டவில்லை என்பதை அப்பிரசுரங்களின் தொகுப்பான “முஸ்லிம் சமுதாய சிந்தனைக்கு” என்ற நூலைப் படித்து அறிந்து கொள்ளலாம். அந்நஜாத் ஆரம்பித்த 1986 ஏப்ரலிலிருந்து பீ.ஜை. அந்நஜாத்திலிருந்து வெளியேறிய 1987 ஜூன் வரையுள்ள அந்நஜாத் இதழ்களைப் படித்துப் பாருங்கள்.

இம்மவ்லவிகள் மீது பீ.ஜை காட்டிய அளவு கூட நாம் கடினம் காட்டவில்லை. அந்நஜாத் ஆசிரியர் பொறுப்பை நாம் ஏற்ற பின்னரும் நீண்ட நாட்கள் கடினம் காட்டவில்லை. ஆனால் குர்ஆனைப் பொருள் அறிந்து படிக்க படிக்க, குர்ஆனில் பக்கத்திற்கு பக்கம் ஏதாவதொரு வகையில் இம்மவ்லவிகளின் அதாவது சட்டவிரோதமாக, திருட்டுத்தனமாக அல்லாஹ்வுக்கும் அவனது அடியார்களுக்குமிடையில் இடைத்தரகர்களாகப் புகுந்துகொண்டு அல்லாஹ்வின் நேரடிக் கட்டளைகளுக்கு நேர்முரணானவற்றை மார்க்கமாகச் சொல்லி மக்களை வழிகெடுத்து நரகில் தள்ளுவதோடு, இம்மவ்லவிகள் அற்ப உலக ஆதாயங்களை அடைந்து வரும் இம்மவ்லவிகளை கடினமாகக் கண்டித்து குர்ஆன் வசனங்கள் இருப்பதை அறிந்து வருகிறோம்.

பொய்யர்கள், வழிகேடர்கள், நிராகரிப்பாளர்கள், மூடர்கள், நன்றிகெட்டவர்கள், குழப்பவாதிகள், தங்கள் பெற்ற பிள்ளைகளை அறிவது போல் உண்மையை அறிந்த நிலையிலேயே அதை நிராகரிப்பவர்கள், அழிந்துபடும் அற்பமான உலகை நிரந்தர மறுமையை விட அதிகமாக நேசிப்பவர்கள், மக்களை வழிகெடுத்து நரகில் தள்ளுபவர்கள், தாஃகூத் என்ற மனித ஷைத்தான்கள் இன்னும் இவைபோல் பல இழிமொழிகளில் இம்மதகுருமார்களான மவ்லவிகளை கடுமையாக அல்லாஹ் விமர்சித்து இம்மவ்லவிகளை அடையாளம் காட்டியிருப்பதைப் பார்த்த பின்னரே எமக்கு அவர்களை அடையாளம் காட்டும் துணிச்சல் ஏற்பட்டது. அதுவும் 5:67ல் அல்லாஹ் வஹி மூலம் அறிவித் திருப்பதை மக்களுக்கு அறிவிக்காவிட்டால் நீர் நாம் உம்மீது சுமத்தியுள்ள பணியை செய்தவர் ஆகமாட்டீர் என்று கடுமையாக எச்சரித்துள்ளான். இம்மதகுருமார்களின் கடுமையான எதிர்ப்பிலிருந்து அல்லாஹ் உம்மைப் பாதுகாக்கப் போதுமானவன் என்றும் உறுதி அளித்துள்ளான்.

நபி(ஸல்) அவர்கள் இம்மதகுருமார்கள் பின்னால் இருக்கும் பெருங்கூட்டத்தைக் கண்டு மயங்கியபோது அந்த மயக்கம் உமக்கு வேண்டாம். அந்த பெருங் கூட்டத்திற்கு பின்னால் நீர் சென்றால், அவர்கள் உம்மை நேர்வழியிலிருந்து பிறழச் செய்து விடுவார்கள். வெறும் யூகங்களையும், கற்பனைகளையும் நிறைந்த கோணல் வழிகளையே நேர்வழியாக நடைமுறைப்படுத்துவார்கள் என்று 6:116-ல் கடுமையாக எச்சரித்துள்ளான். அதேபோல் தீமைகள்-அதாவது வழிகேடுகள் தான் இவ்வுலகில் அதிகமாக மிகைத்துக் காணப்படும். ஆயினும் அந்த கோணல் வழிகள் ஒருபோதும் நேர்வழிக்குச் சமமாகாது என்று 5:100 இறைவாக்கில் கூறி எச்சரிக்கிறான்.

எனவே மவ்லவிகள் பின்னால் செல்லும் பெருங்கூட்டத்தைக் கண்டு மயங்கவோ, அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளதை மறைத்து அவர்களை நேர்வழிக்குக் கொண்டு வந்துவிடலாம் என்ற வீண் ஆசை ஷைத்தான் நமக்கு ஊட்டுவதாகும். மக்களின் விருப்பு, வெறுப்பைக் கவனித்து அல்லாஹ் வஹீ மூலம் அறிவித்ததை மறைத்தால் எப்படிப்பட்ட தண்டனைக்கு ஆளாக நேரிடும் என அல்லாஹ் நபி(ஸல்) அவர்களையே எச்சரித்துள்ள வசனங்கள் பாரீர். 4:140, 5:49, 6:68, 11:12, 12:108, 17:39,73-75,86, 25:52, 28:85-88, 30:30, 33:1,2, 34:50, 40:35, 42:52, 43:43, 45:18, 69:44-47.

மேலும் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டலைப் பாருங்கள். அன்று அந்த அரபு மக்களுக்கு மத்தியில் இன்றைய ஜமாஅத்துல் உலமா சபை போல், தாருந்நத்வா உலமாக்கள் சபை இருந்தது. அந்த சபையை கற்பனை செய்து அமைத்தவரே நபி(ஸல்) அவர்களின் ஆறு தலைமுறைக்கு முன்னிருந்த குசை என்பவராகும். அமைத்த ஆண்டு கி.பி.440 ஆகும். முஹம்மது(ஸல்)-அப்துல்லாஹ்-அப்துல் முத்தலிப்- ஷாஹிம்-அப்துல் மனாஃப்- குசை. அதாவது நபி(ஸல்) பிறப்பதற்கு (கி.பி.570) சுமார் 130 ஆண்டுகளுக்கு முன்னர் தாருந்நத்வா கற்பனை செய்யப்பட்டது. அதேபோல் சுன்னத் ஜமாஅத்தினரின் ஜமாஅத்துல் உலமா சபை சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னரும், பொய்யன் பீ.ஜையின் ரிஜிஸ்ட்டர்ட் ஜமாஅத்துல் உலமா சபை 1987-லும் ஆரம்பிக்கப்பட்டன.

நபி(ஸல்) அவர்களை அல்லாஹ் இறுதித் தூதராக அனுப்பும்போது அராபியாவிலிருந்த இப்றாஹீம்(அலை), இஸ்மாயில்(அலை) இருவரின் நேரடி வாரிசுகளாக, சுன்னத் செய்யப்பட்டு இஸ்லாமியப் பெயர்களுடன் தொழுது கொண்டு, நோன்பு வைத்துக் கொண்டு, ஹஜ் செய்து கொண்டு, அல்லாஹ்வின் வீடான கஃபாவைச் சுற்றி வாழ்ந்த குரைஷ்களை முழுக்க முழுக்கத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான் அம்ர்-அபுல்ஹிக்கம்-அபூஜஹீல். குரைஷ்களிடம் அம்ர் சொல்வதுதான் வேதவாக்கு. அறிவு ஞானம் எல்லாம் அவனிடமிருந்தே ஊற்றெடுக்கின்றன என்பது குறைஷ்களின் அபார நம்பிக்கை. அதனால்தான் அபுல்ஹிக்கம்-ஞானத்தின் தந்தை எனப் பெயரிட்டு வாயார வாழ்த்தி வந்தார்கள். அவனைத்தான் நபி(ஸல்) அவர்கள் அபூ ஜஹீல்-மடமையின் தந்தை-வழிகேடெல்லாம் அவனிடமிருந்தே ஊற்றெடுக்கின்றன என அறிமுகப்படுத்தி அழைத்து வந்தார்கள்.

கடந்த 1450 ஆண்டுகளாக முஸ்லிம் உலகம் அபூஜஹீல்-முட்டாள்களின் தந்தை என்றே அடையாளம் காட்டி வருகிறது. அவன் கோலோட்சிய அந்தக் காலக் கட்டத்தை அய்யாமுல் ஜாஹிலிய்யா என அறிமுகப்படுத்தினார்கள். குர்ஆனில் ஜாஹிலூன், ஜாஹிலீன், ஜாஹிலிய்யா என 13 இடங்களில் அடையாளம் காட்டியுள்ளான். உண்மையில் இவ்வானத்தின் கீழ் இம்மதகுருமார்களை விட அடிமுட்டாள்கள் வேறு யாரும் இருக்க முடியாது. இம்மதகுருமார்கள் குர்ஆனில் உலில் அல்பாப் என்று கூறும் உண்மையான அறிவு பெற்றவர்கள் அல்லர். உண்மையான அறிவுள்ளவர்கள் என்றால் நாங்கள்தான் ஆலிம்கள் எனப் பெருமையடிப்பார்களா? பாமர மக்களை இழிவாக கேவலமாக எண்ணுவார்களா? குர்ஆன் நேரடியாக, தெளிவாக கூறும் வசனங்களுக்குச் சுய விளக்கம் கொடுத்து அவ்வசனங்களைப் பொய்யாக் குவார்களா? அணுவத்தனை பெருமையுடையவனும் சுவர்க்கம் நுழைய முடியாது என்று நபி(ஸல்) கூறிய போது, பெருமையுடையவன் யார் என்று நபி தோழர்கள் கேட்டபோது நபி(ஸல்) என்ன விளக்கம் கொடுத்தார்கள். குர்ஆன் கூறும் உண்மைகளை ஏற்க மறுப்பவனும், மற்றவர்களை இழிவாக எண்ணுகிறவனும் என்று நபி(ஸல்) பதில் அளித்தது இம்மதகுருமார்களான மவ்லவிகளுக்கு நூற்றுக்கு நூறு பொருந்துகிறதா? இல்லையா? ஒருவன் தன் வாழ்நாளில் 1லட்சம் பேரை கொலை செய்தான், 1 லட்சம் பெண்களை கற் பழித்து கொலை செய்தான். மக்கள் சொத்துக்களை கோடிக்கணக்கில் கொள்ளையடித்தான், திருடினான், வட்டி, சாராயம், குடி, சூதாட்டம், ஆட்டம், பாட்டம் என பஞ்சமா பாவங்கள் அனைத்திலும் மூழ்கிக் கிடந்தான். நாளை மறுமையில் அல்லாஹ் நாடினால் அப்படிப்பட்டவனை மன்னிக்கலாம். ஆனால் இம்மதகுருமார்களான மவ்லவிகளை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.

இது குர்ஆனின் பல வசனங்கள் கூறும் உண்மையாகும்; காரணம் என்ன? முன்னைய மனிதன் அந்த லட்சக்கணக்கான மக்களின் அற்பமான இவ்வுலக வாழ்க்கையைத் தான் பாழ்படுத்தினான். நிரந்தர மறு உலக வாழ்க்கையில் அவன் கை வைக்கவே இல்லை. அதைப் பாழ்படுத்தவில்லை. அதற்கு மாறாக இம்மவ்லவிகளோ அற்பமான இவ்வுலக வாழ்க்கைச் சுகத்திற்காக கோடிக்கணக்கான மக்களின் இவ்வுலக வாழ்க் கையையும் (9:34) நிரந்தரமான மறு உலக வாழ்க்கையையும் பாழ்படுத்துகிறார்கள். முன்னையவனை விடக் கேடுகெட்டவர்களா? இல்லையா? அடிமுட்டாள்களா? இல்லையா? சொல்லுங்கள்! நிரந்தரமான மறுஉலக வாழ்க்கையோடு, அற்பமான இவ்வுலக வாழ்க்கையை ஒப்பிட்டால், ஒரு வினாடியில் கோடியில் ஒரு பங்கு கூட தேராது. இப்படிப்பட்ட நிலையில் இம்மவ்லவிகளோ 7:146,175- 179, 45:23, 47:25,26 இறைவாக்குகளை நிராகரித்து குஃப்ரிலாகி மனோ இச்சைக்கு அடிமையாகி, நிரந்தரமான மறு உலக வாழ்க்கையை மறந்து இவ்வுலக வாழ்க்கையில் தங்கள் ஒரு ஜான் வயிற்றை ஹராமான வழியில் நிரப்ப நூற்றுக்கணக்கான குர்ஆன் வசனங்களை நிராகரிப்பார்களா? சிந்தியுங்கள்.

இவர்கள் அடிமுட்டாள்களா? இல்லையா? அன்றைய தாருந் நத்வா உலமா சபையினரை முட்டாள் என்றும்(ஜாஹில்கள்) அதன் தலைவனை அபூஜஹீல் என்றும் அதாவது மடையர்களின் தந்தை என்றும் நபி(ஸல்) தெளிவாக அடையாளம் காட்டினார்களே அந்த அபூ ஜஹீலின் வாரிசாக இருந்து கொண்டு, அன்று அபூ ஜஹீலும் அவனது கூட்டத்தாரும் செய்த அதே இழிவான செயல்களைச் செய்து வரும் இம்மவ்லவிகள் அடிமுட்டாள்களா? இல்லையா? அன்று அபூ ஜஹீலும், அவனது கூட்டத்தாரும் எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது எப்படி மார்க்கம் சொல்லலாம் என்று கூறி மக்களை குர்ஆன் வசனங்களை கேட்க விடாமல், தடுத்தார்கள். இன்று இம்மவ்லவிள் அபூஅப்தில்லாஹ் மவ்லவி இல்லை, இவர் எப்படி மார்க்கம் சொல்லலாம் என்று கூறி மக்களை குர்ஆன் ஹதீஃத் போதனைகளைக் கேட்கவிடாமல், தடுக்கிறார்கள். அன்று அபூஜஹீலும் அவனது கூட்டமும், முகல்லிது ஆதரவாளர்களும் நபி(ஸல்) அவர்கள் கூறிய நேரடி குர்ஆன் வசனங்களை நிராகரித்து முஹம்மது சொல்வது நேர்வழி இல்லை. வழிகேடு, முஹம்மது குழப்பவாதி, பைத்தியக்காரர், மனநோயாளி, பொய்யர் என்று கூறி மக்கள் நேர்வழி கருத்தை-குர்ஆன் வசனங்களை கேட்க விடாமல் தடுத்தனர். இன்று இம்மவ்லவிகள் நாம் கூறும் நேரடி குர்ஆன் வசனங்களை நிராகரித்து அபூ அப்தில்லாஹ் குழப்பவாதி, பைத்தியக்காரர், மன நோயாளி, பொய்யர் என்று கூறி மக்கள் நேர்வழி கருத்தைக் கூறும் குர்ஆன், வசனங்களை கேட்க விடாமல், பார்க்க விடாமல் தடுக்கிறார்கள்.

இப்படி இந்த மவ்லவிகள் அன்றைய அபூ ஜஹீலையும், அன்றைய தாருந்நத்வா உலமாக்களையும் ஜானுக்கு ஜான் முழத்திற்கு முழம் பின்பற்றி மக்கள் நேர்வழிக்கு வரவிடாமல் தடுத்து வருகிறார்கள். இப்போது சொல்லுங்கள் இந்த மவ்லவிகள் அடி முட்டாள்களா? இல்லையா? நீங்களே முடிவு செய்யுங்கள். அன்று நபி(ஸல்) அவர்கள் அபூ ஜஹீலையும், உலமா சபையினரையும் அடிமுட்டாள்கள் என்று தெளிவாக மக்களுக்கு அடையாளம் காட்டியே, அல்லாஹ் நாடிய மக்களை நேர்வழிக்கு-சத்திய மார்க்கத்திற்கு கொண்டுவர முடிந்தது. வழிகெட்டப் பெருங்கூட்டத்தை கண்டு நபி(ஸல்) மலைத்த போது (பார்க்க : 6:116, 5:100) அல்லாஹ் 5:67 வசனத்தை இறக்கி, அல்லாஹ் குர்ஆனில் கூறுவதை யாருக்கும் அஞ்சாமல் சொல்லிவிடும். அப்போதுதான் நீர் உமது தூதுவப் பணியை நிறைவேற்றிய வராவீர். மக்களிடமிருந்து உம்மைப் பாதுகாக்க நானே போதுமானவன் என்று கூறி அல்லாஹ் துணிவைக்கொடுக்கிறான்.

இன்னும் எண்ணற்ற இடங்களில் நீர் மக்களுக்கு அஞ்சாதீர், என்னையே அஞ்சி குர்ஆன் வசனங்களைத் துணிவுடன் மக்கள் மன்றத்தில் எடுத்துச் சொல்லும் என்று வழிகாட்டி இருக்கிறான். பொதுவாக மனித மனம் ஷைத்தான் பக்கம் சாயத்தான் செய்யும். 15:39 இறைவாக்குக் கூறுவது போல் ஷைத்தான் வழிகேடுகளைத்தான் அழகாகக் காட்டுவான். அவனுக்கு வழிபடுகிறவர்கள்தான் பெருங்கூட்டத்தைக் கண்டு மயங்கி குர்ஆன் கூறுவதை மறைக்க முற்படுவார்கள். இவர்கள் உலகியல் பட்டம், பதவி, ஆள் அம்பு, சொத்து சுகம், பேர் புகழ் இவற்றில் மயங்கி மறுமையைப் பாழ்படுத்தும் பெரும்பாவிகள். இம்மையை அற்பமாகக் கருதி, எல்லையே இல்லா மறுமையை உறுதியாக நேசிப்பவர்கள் ஒருபோதும் மக்களின் தயவுக்காக மறுமையைப் பாழ்படுத்த முற்படமாட்டார்கள். இந்த மவ்லவிகளுக்கு மதிப்புக் கொடுத்து அவர்களைத் தலையில் வைத்துக் கொண்டாடுகிறவர்கள் அன்றாடம் குர்ஆனை பொருள் அறிந்து படித்து குர்ஆன் கூறும் நல் உபதேசங்களை அறியா மூடர்களாக இருக்க வெண்டும். இம்மதகுருமார்களின் இழிநிலையை, மனோ இச்சையை தங்களின் இறைவனாக்கிக் கொண்ட அவர்களின் ஈனப் புத்தியை அதாவது குர்ஆன் கூறும் இந்த உண்மையை அறியாதிருக்க வேண்டும் அல்லது ஓரளவு அறிந்திருந்தாலும் அவர்களை நேரடியாக, தெளிவாக அடையாளம் காட்ட முற்பட்டால் மக்களிடம் தங்களுக்கிருக்கும் செல்வாக்குச் சரிந்து விடும்.

நாம் சொல்லும் நேரிய கருத்துக்களையும் மக்கள் ஏற்கமாட்டார்கள் என்ற குறுகிய புத்தியில் மயங்க வேண்டும். இவர்கள் தங்கள் திறமையால், ஆற்றலால் மக்களை நேர்வழிப்படுத்த முடியும் என்று அல்லாஹ்வை மறந்து செயல்படுவதாகும். பொய்யன் பீ.ஜையும் மக்களை வழிகெடுக்கும் இம்மவ்லவிகளின் வரிசையில் ஆக உச்சியில் இருப்பவர். 1985,86,87களில் சத்தியத்தை நேர்வழியை விளங்கிய பின்னர்தான் தனது புரோகித வர்க்கத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் வழிகெட்ட தீய நோக்கத்துடன் அந்தர்பல்ட்டி அடித்து மீண்டும் அந்த புரோகிதக் கும்பலுடன் சேர்ந்து கொண்டார் என்பதை அவர் அந்நஜாத்தில் 1986 ஏப்ரல் முதல் 1987 ஜூன் முதல் ஆசிரியராக இருந்தபோது அவர் எழுதிய எழுத்துக்களே போதிய சான்றாகும்.

7:146, 175-179, 45:23, 47:25,26 குர்ஆன் வசனங்கள் அவருக்கு மிகமிகப் பொருந்தும். அழிந்துபடும் உலகில் கிடைக்கும் பட்டம் பதவி, ஆள் அம்பு, பணம் காசு, பெருங்கூட்டம் உலகியல் ஆதாயங்களை நோக்கமாகக் கொண்டே அவர் அந்நஜாத்திலிருந்து விலகி, அந்நஜாத்தையும் எம்மையும் கடுமையாக தூற்றி, அவதூறுகளைப் பரப்பி, அபூ அப்தில்லாஹ் மவ்லவி இல்லை.

எனவே அவர் சொல்வது நேர்வழி இல்லை, ஜமாஅத்துல் முஸ்லிமீன் அபூ அப்தில்லாஹ்வின் ஜமாஅத் என ஜமுக்காளத்தில் வடித்தெடுத்த பொய்களைக் கூறி மக்களை குர்ஆன் கூறும் நேர்வழிக்கு வராமல் தடுத்து வருகிறார். ஹராமை ஹலாலாக்குகிறார்-ஹலாலை ஹராமாக் குகிறார். ஆதாரபூர்வமான ஹதீஃத்களை பலவீனமானது என்றும், பலவீனமான ஹதீஃத்களை ஆதாரபூர்வமானதென்றும் கூறி அவரது முகல்லிது பக்தர்களை பெரும் வழிகேட்டில் இட்டுச் செல்கிறார். நம்மோடு இருக்கும்போதே சுன்னத் ஜமாஅத் மவ்லவிகள் பற்றி அப்பட்டமான பொய்களைக் கூறி, நாம் அவரைக் கண்டித்து இருக்கிறோம். அவரது நீண்டகால நண்பர் கலீல் ரசூல் பீ.ஜை. பொய் பேசத்தான் செய்வார் என்று நம்மிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

நாம் அவரை அறிந்த 1985லிருந்து இன்று 2016 வரை அவர் பேசியுள்ள பொய்களை எழுதினால் பல வால்யூம்கள் எடுக்கும். பொய்யிலே தவழ்ந்து பொய்யிலே வளரும் பொய்யன் பெருமானே என்று பல ஆண்டுகளுக்கு முன்னரே அவரை அடையாளம் காட்டியுள்ளோம். மேலும் 1993லேயே சென்ற நூற்றாண்டில் ஒரு காதியானி, இந்த நூற்றாண்டில் ஒரு தொண்டியானியா? என்றும் கூறி அவரை அடையாளம் காட்டினோம். அன்று எமது இக்கூற்றை ஏற்காத பலர் இன்று ஏற்கிறார்கள். எமது 56 வருடங்கள் அனுபவத்தில் பொய்யன் பீ.ஜையைப் போல் துணிந்து அப்பட்டமான பொய்களைக் கூறும் வேறு எந்த மவ்லவியையும் நாம் கண்டதில்லை. பொய்யிலே மன்னாதி மன்னன் என்று அவருக்குப் பட்டம் கொடுக்கலாம்.

அந்தளவு மகாப் பொய்யன் பீ.ஜை. பொய்யன் பீ.ஜை. எம்மோடு இருக்கும்போது எம்மை வரம்பு மீறி வானளாவப் புகழ்ந்தார். எம்மைவிட்டு வெளியேறிய பின்னர் 1987லிருந்து 2016 இன்றுவரை கடந்த 30 வருடங்களாக எம்மைப் பற்றி வரம்பு மீறி, அளவு கடந்து பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு வருகிறார். மிகமிகச் சமீபத்தில் “உணர்வு” மே 27, ஜூன் 2, 2016 இதழின் பக்கம் 2-ல் “ஏகத்துவம் மாத இதழ் புதுப்பொழிவு பெறுகிறது” என்ற தலைப்பில் ஏராளமான பொய்களை வாரி இறைத்திருக்கிறார்.

அதில் ஓர் அண்டப் புளுகைப் பாருங்கள். “திருச்சியிலிருந்து வெளிவந்த இதழ். அதில் வேலை செய்த பணியாளரால் மோசடியாக ஏமாற்றி அபகரிக்கப்பட்டது” என்று ஆகாசப் பொய்யை எழுதி தனது முகல்லிது பக்தர்களை ஏமாற்றியுள்ளார். அந்நஜாத் மாத இதழ் என்றோ அபூ அப்தில்லாஹ் என்றோ எழுதினால் பொய்யன் பீ.ஜை. வகையாக மாட்டிக்கொள்வார். அதற்காக இந்த தந்திரம். உண்மையில் இந்த மவ்லவிகளுக்கு அந்நஜாத்தில் கடுகளவும் சம்பந்தமில்லை. பொய்யன் பீ.ஜை. மாதம் ரூ.1000/- சம்பளத்திற்கும், 2 மவ்லவிகள் தலா ரூ.750/- சம்பளத்திற்கும் அவர்கள் பணியாற்றினார்கள். எம்மிடமிருந்து கையேந்தி சம்பளம் வாங்கியவர்கள் அவர்கள்தான். நாமோ அன்று 1986லிருந்து இன்று 2016 வரை பைசா சம்பளம் இல்லாமல் அல்லாஹ்வுக்காக பணியாற்றி வருகிறோம். நம்மை வேலை செய்த பணியாளர் என்று குறிப்பிடிருப்பது அண்டப் பொய்யா? இல்லையா? மேலும் அந்நஜாத் ஆரம்பக்காலத்தில் இந்த மவ்லவிகளுக்கு அணுவளவும் சம்பந்தமில்லை.

துபையில் இஸ்லாமிய இளைஞர் இயக்கம் (இ.இ.இ.) என்ற பெயரில் செயல்பட்ட சகோதரர் மீறான், சகோதரர் குத்புத்தீன் ஆகியோர்தான் எம்மை வற்புறுத்தி அந் நஜாத்தை துவங்க வைத்தார்கள். நஜாத் 1966ல் எமது கடைக்கு வைத்த பெயராகும். அதற்கு அரசில் அனுமதி கிடைக்கவில்லை. அதனால் அந்நஜாத் என்று போட்டு அரசு அனுமதி பெற்றோம். இப்படிப்பட்ட பரம அயோக்கியனை, அவதூறு மன்னனை, பெரும் பொய்யனை, பொய்யன் பீ.ஜை. என்று சொல்வதில் தவறென்ன? திருடனை திருடன் என அடையாளம் காட்டி மக்களின் பொருட்களைக் காப்பது எந்த அளவு அவசியமோ அந்தளவு பொய்யனை பொய்யன் என அடையாளம் காட்டுவது அவசியமாகும். திருடன் மக்களின் சாமான்-பொருட்களை மட்டுமே திருடுவான். பொய்யன் பீ.ஜையோ மக்களின் மதிப்பு மிக்க ஈமானையும், சாமானையும் சேர்த்தே திருடும் பலே திருடனாக இருக்கிறார்.

எனவே அவரை பொய்யன் பீ.ஜை. என்று அடையாளம் காட்டுவது காலத்தின் கட்டாயமாகும். இல்லை என்றால் உலகளாவிய அளவில் காதியானிகள் பரவியது போல், உலகளவில் தொண்டியானிகள் பரவும் ஒரு பேரபாயம் காத்திருக்கிறது. பொய்யன் பீ.ஜை. என்றும் மூட முல்லாக்கள் என்றும் போடுவதைத் தவிர்த்தால் அவர்கள் அந்நஜாத்தைப் படிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்று எழுதியுள்ளீர்கள்.

இதையும் நாம் தீவிரமாக ஆராய்ந்தோம். இதுவும் ஒரு வகையில் குர்ஆனை மறைக்கும் செயல் என்றே எமது அறிவில்படுகிறது. மதகுருமார்களைப் பொய்யர்கள் என்றும் அபுல் ஹிக்கமை அபூஜஹீல் என்றும் அல்லாஹ்வும், அவனது தூதரும் தெளிவாக வழிகாட்டி இருக்க, அவற்றை மக்களிடம் எடுத்து வைக்காமல் மறைப்பது மூலம் அவர்களை நேர்வழி பெற வைக்க முடியும் என்று நினைப்பது அல்லாஹ்வை மறந்து நமது சுய முயற்சி மூலம் மக்களை நேர்வழிக்கு கொண்டுவர முடியும் என்ற ஷைத்தானின் சூழ்ச்சிக்கு நாம் அடிமையாகும் செயலாகும். 51:55ல் அல்லாஹ் “நீர் உபதேசம் செய்வீராக. ஏனெனில் நிச்சயமாக நல்லுபதேசம் நம்பிக்கையாளர்களுக்கு பலன் தரும் என்று அல்லாஹ் கூறுகிறான்.

எனவே ஜனங்களின் விருப்பு வெறுப்பைப் பார்க்காமல் குர்ஆனில் உள்ளதை உள்ளபடி எடுத்துச் சொல்வது மட்டும்தான் நம் கடமை. அல்லாஹ்வுடைய நாட்டத்தில் யாருக்கு நேர்வழி இல்லை என்றாகிவிட்டதோ அவர்களுக்கு குர்ஆனின் நேரடி உபதேசம் எட்டிக் காயாகக் கசக்கும் என்ற பேருண்மையை 17:41,45-47,89, 22:72, 25:60, 39:45. இந்த வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. ஹதீஃத்கள் 3348, 4741 கூறுகிறபடி 1000ல் ஒன்றாகத் தேரும் உண்மை விடுவாசிகளுக்கே குர்ஆன் உபதேசம் பலன் தரும். 1000ல் 999 ஆக தேரும் நரக8வாசிகளுக்கு குர்ஆன் உபதேசம் பலன் தராது. எனவே நமது நோக்கம் 1000ல் ஒன்றாகத் தேரும் மக்களைப் பற்றியதாக இருக்க வேண்டுமே அல்லாது 1000ல் 999ஆக தேரும். நரகவாசிகள் பற்றியதாக இருக்கவே கூடாது. அல்லாஹ் அருள் புரிவானாக.

Previous post:

Next post: