எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.
காலமாறுதலினாலும் கலியுகம் தோன்றியதாலும் கணிணி வடிவ உலகமானதாலும் அதி நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளின் முன்னேற்றம் காரணமாக நேரடி அர்த்த முள்ளதும் மறைமுக அர்த்தமுள்ளதுமான எத்தனையோ குர்ஆன் வசனங்களும் ஆதாரப்பூர்வமான ஹதீஃத்களும் இவர்களால் கண்டுகொள்ளப்படாமல் கிடப்பில் இருக்கின்றன என்பதை நாம் அறிவோம். இந்நிலையில் பிறை விஷயத்தில் மாத்திரம் பலபொருள் கொண்ட ஸூமுலி ருஃயத்திஹி வ அப்ஃதிரூலி ருஃயத்திஹி பிறையைப் பார்த்துப் பிடியுங்கள், பிறையைப் பார்த்து விடுங்கள் என்ற ஹதீஃதிற்கு மாத்திரம் தவறான அர்த்தம் கற்பித்துத் தொக்கிப் பிடித்துக் கொண்டுள்ள சிறிய கூட்டமொன்று மக்களைச் சின்னாபின்ன மாக்கிச் சல்லடையாக்கியுள்ளனர்.
இதிலே நாம் விழிப்புடன் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து கொண்டிருக்கிறோம். அதிநவீன அறிவியல் கண்டுபிடிப்பு களின் அறிமுகத்திற்கு ஏற்ப நாமும் குர்ஆன் ஹதீஃதுக்கு முரணில்லாமல் நம்மையும் மாற்றிக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். புதிய கண்டுபிடிப்புகளின் முன்னேற்றம் காரணமாக நேரடி அர்த்தமுள்ள எத்தனையோ குர்ஆன் வசனங்களும் ஆதாரபூர்வமான ஹதீஃத்களும் கண்டுகொள்ளப்படாமல் கிடப்பில் இருக்கின்றது அவற்றில் சிலவற்றை மட்டும் உங்கள் சிந்த னைக்கு முன் வைக்கின்றேன்.
ஹஜ் செய்ய வருமாறு மக்களிடையே நீர் அறிவிப்புச் செய்வீராக 22:27, என்று அல்லாஹ் சொன்னபோது அன்று இருந்த அறிவியல் வசதிக்கு ஏற்ப நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் உயரமான “அபூ குபைஸ்” என்ற மலையின் மேல் ஏறி நின்று அறிவித் தார்கள் (தஃப்சீர் இப்னு கஸீர் பாகம் 6, பக்கம் 54:58) இம்முறையானது எதுவரை யயனில், (நபியே!) உம்முடைய நெருங்கிய உறவி னர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக 2:214 என்ற வசனம் அருளப்பட்ட போது நபி (ஸல்) அவர்கள் அன்று இருந்த அறிவியல் வசதிக்கு ஏற்ப “ஸஃபா” மலை உச்சியின் மேலே ஏறி நின்று “யா ஸபாஹா” அதிகாலை ஆபத்து உதவி உதவி என்று கூவி அழைத் தார்கள். (புகாரி : 4700, 3527, 4771, 2753, 3073, 3525) முஸ்லிம் 355, 350, 348, 353 முஸ்னத் அஹமத் முஸ்னது அபீ பஅலா & ரஹீக் 100) இம்முறையானது எதுவரையயனில், நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெரு நாளில் ஆண்களுக்கு உரை நிகழ்த்திவிட்டுப் பின்னர் ஆண்களைக் கடந்து பெண்கள் பகுதிக்கு வந்து வேறாக அவர்களுக்கும் உரை நிகழ்த்தினார் (புகாரி : 977-979, 4895, 5249) அன்று அவ்வாறுதான் அவர்களால் செய்ய முடிந்தது ஆனால் அது எதுவரை யயனில், மஸ்ஜிதுன் நபவியில் பாங்கு சொல்வ தற்காக ஏணிப் படிகளில் ஏறிச் சென்று உயர மான மேடையில் நின்றுதான் அன்று பாங்கு சொல்லப்பட்டது. (புஹாரி : 1919, புஹாரி பாகம் 2, பக்கம் 593)
இது எதுவரையெனில், மக்கா வெற்றி கொள்ளப்பட்டபோது தொழுகை நேரம் வந்ததும் நபி(ஸல்) அவர்களின் கட்டளையிட்டபடி பிலால்(ரழி) அவர்கள் கஃபாவின் மேலே ஏறி நின்று பாங்கு சொன்னார்கள் (ரஹீக் 496) இது எதுவரையயனில், இறுதி ஹஜ்ஜின்போது நபி(ஸல்) அவர்கள் தங்களது உயரமான ஒட்டகத்தின் மேல் அமர்ந்த நிலையில் மக்களுக்கு உரை நிகழ்த் தினார்கள். (அஹ்மத் திர்மிதி புலூஹுல் மராம் 29) இது எதுவரையயனில், நவீன வசதிகளுடன் கூடிய ஒலி பெருக்கி சாதனங்கள் கண்டுபிடிக்கப்படும் காலம் வரைக்கும் தான், ஹஜ் செய்ய வருமாறு மக்களிடையே நீர் அறிவிப்புச் செய்வீராக, அவர்கள் நடத் தும் வெகு தொலைவிலுள்ள ஒவ்வொரு பாதையிலிருந்தும் மெலிந்த ஒவ்வொரு ஒட்டகத்தின் மீது பயணம் செய்து உம்மிடம் வருவார்கள் (22:27),
இந்த ஒட்டகப் பிரயாணம் எதுவரையயனில், குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச் செல்வதற்காகவும் அலங்காரத்திற்காகவும் அவன் படைத்தான் (16:8) இவைகளில் பிர யாணம் எதுவரையயனில், நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கின்றான். நிராகரிப்பாளர்களை எதிர்ப்பதற்காக திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள். (8:60) இவைகளின் பயன்பாடுகள் எதுவரை யயனில், ஒரு ஹதீஃதைத் தெரிந்து கொள்வதற்காக ஒரு மாத காலம் பிரயாணம் செய்ததும் (புகாரி : 01, பக்கம் 86, பாடம் 19, 2052, 2645, 2647, 2659, 2660, 4796, 5103, 5104, 5339, 5100, 3105, 5097, 5105, 5099, 88, அஹ்மத் ஹாக்கிம் தபராணி) இது எதுவரையெனில், அறிவியல் முன்னேற்றம் காரணமாக அதி நவீன கனரக வாகனங்கள் கண்டுபிடிக் கப்படும் வரைதான். கணவன் இறந்தவுடனேயே மனைவி இத்தா இருப்பது கட்டாயக் கடமை. (2:232, 234, 237, 271, 65:1-7)
நபி(ஸல்) அவர்களது காலம் உட்பட்ட கடந்த பல நூற்றாண்டுகளாக ஹஜ் மற்றும் தொலைதூரப் பயணம் போன ஒருவர் அங்கு மரணித்துவிட்டால் அவருடன் பய ணம் சென்றவர்கள் திரும்பி ஊருக்குள் வந்த பிறகு இறந்தவரின் மனைவியிடம் தகவல் சொன்னபிறகே இத்தா இருக்கும் நிலை இருந்துள்ளது எதுவரையயனில், பத்ர் களத்தில் ஸகீதானவர்களின் விபரம் கூட படையினர் மதீனாவிற்குத் திரும்பி வந்து தகவல் சொன்னதற்குப் பிறகே இத்தா இருக்க முடிந்தது (புகாரி: 3982, முஸ்னத் அஹ்மத் முஸ்தத்ரகுல் ஹாக்கிம் சுனன் அபூதாவூத் ரஹீக் 283-289) இது எதுவரையயனில், ஏன் உஹத் களத்தில் சகீதானவர்களின் விபரம் கூட படையினர், மதீனாவிற்குத் திரும்பி வந்து தகவல் சொன்னதற்குப் பிறகே இத்தா இருக்க முடிந்தது (புகாரி பாகம 4, பக்கம் 675, பாடம் 27 சிறு குறிப்பு எண் 147, 148, ரஹீக் 344, 346 இப்னு ஹிஸாம)
இந்நிலை எதுவரையயனில், வெளியூர் சென்று பயணத்தை முடித்துக் கொண்டு தமது ஊருக்கு வந்தவர் திடீரெனத் தமது வீட்டாரிடம் செல்ல வேண்டாம் உள்ளூருக்குள் வந்தபின் தனது மனைவிக்குத் தகவல் கொடுத்துவிட்டுச் சிறிது தாமதித்துத் தமது வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள். (புகாரி : 1800-1802, 5079, 5243-5247, 2097, 2861, 2470, 2718, 1801) முஸ்லிம் நஸயீ ஃபத்ஹுல் பாரி,
இந்த நடைமுறை எதுவரை காலம் கடைப்பிடிக் கபட்டது எனில், ஒரு ஹதீஃதைத் தெரிந்து கொள்வதற்காக ஒரு மாதகாலம் பிரயாணம் செய்து உரியவரை நேரில் சென்று சந்தித்துப் பெற்றுக் கொண்ட காலம் (புகாரி : பாகம் 1, பக்கம் 86, பாடம் 19, 2052, 2645, 2647, 2659, 2660, 4796, 5103, 5104, 5339, 5100, 3105, 5097, 5105, 5099, அஹ்மத் ஹாக்கிம் தபராணி அல் அதபுல் முஃப்ரத்)
எதுவரையயனில், நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளின் முன்னேற்றம் காரணமாக விதவிதமான தொலைத்தொடர்பு சாதனங்கள் அறிமுக மாகும் வரைதான். என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அப்படியே நீங்களும் தொழ வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி : 6008, 628, 685, முஸ்லிம்) “ஸுபுஹ்” தொழுகைக்காக விடியல் வெளிச்சத்தைப் பார்த்தது (புகாரி : 575-577, 579, 541, 547,560, 554, 573, 579, 556, 565, 574)
தொழுதார்கள் எதுவரையயனில், “ளுஹாத்” தொழுகைக்காக ஒட்டகக் குட்டி பூமியில் சூடு தாங்காமல் எழுந்து நிற் கும் அளவுக்கு சூரியனால் ஏற்படும் சூடு நேரம் பார்த்து (புகாரி : 533-543, முஸ்லிம் 1073-1076, 1079-1081) தொழுதார்கள் எதுவரையயனில், “ளுஹர்” தொழுகைக்காக சூரியன் உச்சி சாய்வதைப் பார்த்து (புகாரி 533-543) எது வரையயனில், “”அஸர்” தொழுகைக்காக சூரிய நிழலின் நீள அளவு பார்த்து (புகாரி : 522, 544, 556, 554, 573, 579, முஸ்லிம் 1070-1076)
ுச்சிய நட்டது எதுவரையயனில், “மஃரிப்” தொழுகைக்காக சூரியன் மறைவதைப் பார்த்து (புகாரி : 559, 563, முஸ்லிம் 1073-1076) தொழுதார்கள். “”இஷாத்” தொழுகைக்காக செவ்வானம் மறைந்து இரவின் இருளைப் பார்த்து (புகாரி : 864, 566-572, முஸ்லிம் 1073, 1076-1080) தொழுதார்கள் எதுவரையயனில், “”ஃபஜ்ரு” எனும் அதிகாலை நேரம் என்ற வெள்ளை நூல் இரவு என்ற கறுப்பு நூலிலி ருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள் 2:187 என்ற நேரடிப் பொருள் கொண்ட குர்ஆன் வசனத்திற்கு, “ஸஹர்” செய்வதற்காக வெள்ளை நூலையும் கறுப்பு நூலையும் பார்த்து (புகாரி பாகம் 2, பக்கம் 590, பாடம் 16, 1916, 1917, 4509, 4510, 4511 முஸ்லிம்) அன்று அவர்கள் செயற்பட்டார்கள். “இப்தார்” செய்வதற்காகக் கிழக்குத் திசையிலிருந்து மேற்குச் திசை நோக்கி இருள் படருவதைப் பார்த்து (புகாரி : 1941, 1956, 5297, முஸ்லிம் 2007-2008)
நோன்புப் பெருநாள் தொழுகைக்காக இரண்டு ஈட்டி அளவுக்கு சூரியன் உயர் வதைப் பார்த்து, (புகாரி பாகம் 1, பக்கம் 730, பாடம் 10 ஹஸன் பின் அஹ்மத் கிதாபுல் அழகீ தல்கீஸ்) தொழுதார்கள். ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்காக ஒரு ஈட்டி அளவு சூரியன் உயர்வதைப் பார்த்து (இப்னு ஹஜர்) தொழுவதற்கு தடை செய்யப்பட்ட நேரங்களை அறிந்து கொள்வதற்காக சூரியன் உதிப்பது உச்சிக்கு வருவது மறைவது போன்ற காட்சிகளைப் பார்த்து (புகாரி : 581-588, 1864, 1995, 3272, 5819, 1628, 1629, 3273, முஸ்லிம் 210, 219) நடைமுறைப்படுத்தினார்கள்.
கிரகணத் தொழுகைக்காக சூரிய கிரகணத்தின் காட்சியையும் சந்திர கிரகணக் காட்சியையும் கண்ணால் பார்த்துவிட்டு அழைப்புக் கொடுத்த பின் ஜமாஅத்தாகத் தொழுதார்கள். (புகாரி : 1006, 1007, 1009, 1010, 1040, 1066) இவைகளெல்லாம் நடைமுறைப்படுத் தப்பட்டது எதுவரையயனில் நேரங்களைத் துல்லியமாகக் கணக்கிடக்கூடிய கடிகாரங்கள் கண்டுபிடிக்கப்படும் வரைதான் என்பதை நாமனைவரும் அறிவோம்.
இன்னும் இதுபோன்ற ஏராளமான குர்ஆன் வசனங்களும் ஆதாரப்பூர்வமான ஹதீஃத்களும் இவர்களால் கண்டுகொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது விரிவை அஞ்சுவதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். கசப்பான உண்மை என்னவெனில் நேரடி அர்த்தமுள்ளதும், மறைமுக அர்த்த முள்ளதுமான எத்தனையோ குர்ஆன் வசனங்களும் ஆதாரப்பூர்வமான ஹதீஃத்களும் இவர்களால் கண்டுகொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் பிறை விஷயத்தில் மாத்திரம் பலபொருள் கொண்ட “ருஃயத்” எனும் பதமானது. கண்ணால், அறிவால், உள்ளத்தால், கனவால், ஆய்வால், கணிப்பால், கணக்கீட்டால், கவனித்தலால், தகவலால், உணர்வால், சிந்தனையால் என ஏராளமான அர்த்தமுள்ளதும் காலத்துக்கு ஏற்ப புரிந்து செயற்படுத்தக்கூடியதுமான இலகுவான ஹதீஃதை வெறும் கண்ணால் மட்டும் பார்ப்பது என்று அர்த்தம் கற்பித்து சமூகத்தை சல்லடையாக்கியுள்ளனர்.
நபி(ஸல்) அவர்களது காலத்தில் மேக மூட்டம் சூழ்ந்த ஒரு நாளில் மக்கள் (இருளின் காரணமாக சூரியன் மறைந்து விட் டது என்றெண்ணி) நோன்பை நிறைவு செய்தனர். பின்னர் (சிறிது நேரத்தில்) சூரியன் தென்பட்டது. (புகாரி 1959, அபூதாவூத் 3873.
இதுபோன்று இன்றைய நாட்களிலும் மேகமூட்டம் சூழ்ந்து இருளானால் சூரியன் மறைந்துவிட்டது என்றெண்ணி கடிகாரத்தை பார்க்காமலேயே இவர்களில் யாராவது நோன்பை நிறைவு செய்வார்களா? அறிவியல் கண்டுபிடிப்புகளின் முன்னேற்றம் காரணமாக இன்று நமது அன்றாட வாழ்வில் ஏராளமான மாற்றங்கள் இயல்பாகவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பிறை வியத்தில் மாத்திரம் பிறையைப் பார்த்துப் பிடியுங்கள்,
பிறையைப் பார்த்து விடுங்கள் என்று பல்லாண்டு காலமாகச் சொல்லிச் சொல்லியே படித்த வர்களையும், பட்டம் பெற்றவர்களையும், பாமரர்களையும் பயந்து போக வைத்துள் ளார்கள் பிறை என்றாலே மக்கள் பயந்து ஓடுகின்றார்கள். இதிலே பிறை பார்ப்பது சம்பந்தமாக நபி(ஸல்) அவர்கள் பயன்படுத்திய “ருஃயத்” “”ரஅய்து” அராதரா “ரஆ” போன்ற அரபுப் ப தங்கள் குர்ஆனில் சுமார் 333 இடங்களுக்கும் மேலான பகுதிகளில் காணப்படுகிறது.
அவற்றில் பெரும்பாலானவை தகவல் மூலம் பெறப்படுவதையே குறிக்கின்றன உதாரணம், (நபியே!) யானைப்படைக்காரர்களை உமது இறைவன் என்ன செய்தான் என் பதை நீர் பார்க்கவில்லையா? 105:1 இது நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்னர் நடந்த சம்பவமாகும். (நபியே!) மரண பயத்தால் தமது வீடுகளை விட்டும் ஆயிரக்கணக்கில் வெளியேறியவர்கள் நீர் பார்க்கவில்லையா? 2:243
இது மூஸா(அலை) அவர்களது காலத்தில் நடந்த சம்பவமாகும். (உம்முடைய) இறைவன் ஆது கூட் டத்தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? 89:06 அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்த தன் காரணமாக (ஆணவம் கொண்டு) இப்ராஹீமிடத்தில் அவருடைய இறை வனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் பார்த்தீரா? 2:258 பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்து வசித்து வந்த “”ஸமூது” கூட்டத் தையும் (இறைவன் என்ன செய்தான் என் பதை நீர் பார்க்கவில்லையா?) 89:9
மேலும் பெரும் படையணிகளைக் கொண்ட ஃபிர்அவ்னையும் (உமது இறை வன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்க வில்லையா? 89:10 மேலும் பார்க்க 19:77,83, 24:41,43, 25:45, 14:19, 22:18,63,65 கனவின் மூலம் பார்த்தல் 37:102, 12:4, 36,43. என ருஃயத், ரஅய்து, அரா தரா ரஆ என்பதானது, கண்ணால், கனவால், கணக்கீட்டால், கவனித்தலால், தகவலால், ஆய் வால், உள்ளத்தால், உணர்வால், சிந்தனையால், அறிவால், ருஃயத் என்பது பல பொருள் கொண்ட ஜவாமிவுல் கலாம் எனும் பரந்த சொல்லாகும். எனவே இவர்கள் காலத்தின் தேவைக்கு ஏற்ப தம்மை மாற்றிக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் அல்லது காலம் இவர்களை மாற்றும் இன்ஷா அல்லாஹ். 1400 வருடங்களுக்கு முன்னர் அன்று இருந்த அறிவியலுக்கு ஏற்ப குர்ஆன் விரிவுரையில் மிகவும் தேர்ச்சி பெற்ற இப்னு அப்பாஸ்(ரழி) போன்ற பிரபல்யமான நபித் தோழர்கள் “அலக்” என்ற பதத்திற்கு 96:2 “இரத்தக்கட்டி” என்றே பொருள் கொண்டனர்.
ஆனால் இன்று அதை, ஒட்டித் தொங் கிக் கொண்டு உறிஞ்சி வளரும் ஒன்று என்று சொல்வதையே மிகப் பொருத்தமானது என்று அறிவியல் உண்மைப்படுத்துகிறது. அது போன்றே கரு வளர்ச்சி பற்றிய ஆதாரப்பூர்வமான ஹதீஃத்களின் (புகாரி : 3208, 3332, 6594, 7454, முஸ்லிம் 5145, 5146) (முஸ்னத் அஹ்மத்) அறிவிப்புகளின்படி அதேபோன்று நாற்பது நாட்களில்… அதே போன்று நாற்பது நாட்களில்… அதே போன்று நாற்பது நாட்களில்…. மொத்தம் 120 நாட்களின் பின்னர் ரூஹ் ஊதப்படுகி றது எனும் மொழி பெயர்ப்பு தவறானது மொத்தம் 42ஆம் நாளன்று ரூஹ் ஊதப்படு கின்றது என்பதே இன்று நிரூபிக்கப்பட்ட அறிவியல் பேருண்மையாகும்.
எனினும் மேலேயுள்ள இரண்டு விஷயங்களும் அறிவியல் ஏற்ற இறக்கத்தால் மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட மாற்றங்களே அல்லாது குர்ஆன் ஹதீஃத் மூலங்களின் ஏற்பட்ட குறைபாடு எதுவும் இல்லை. அதே நேரத்தில் பிறை சம்பந்தமான பல பொருள் கொண்ட ருஃயத் எனும் ஹதீஃதை வைத்துக்கொண்டு மேற்குத் திசையில் மாத்திரம் தான், மஃரிப் நேரம் மாத்திரம் தான், ஒரு நாளைக்கு மாத்திரம் தான் நாங்கள் பிறை பார்ப்போம் என்று அடம் பிடித்து மக்களைக் கசக்கிப் பிழிவது கொடூரமானதாகும். பல நூற்றாண்டுகளாகவே இக்கொடுமை அரங்கேறி வருவதும் வேதனையானதே.
நடுநிலையாளர்களே, சிந்தனையாளர் களே புத்தி ஜீவிகளே சற்று இதிலே கவனம் செலுத்துங்கள், மார்க்கத்தின் பெயரால் ஒரு சிறிய கூட்டமே இருந்து கொண்டு மக்களை மாக்களாக்கும் கொடுமைக்கு குரல் கொடுக்கத் துணியுங்கள். நாம் விண்ணியல் கணித கணக்கீட்டுக் கலையை அறியாத உம்மு சமுதாயம் ஆவோம். (புகாரி 1907, 1903) என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து தமக்குப் பின் வரவிருக்கும் சந்திர ஓட்டத்தைத் துல் லியமாகக் கணக்கிடவும் அதனை எழுதவும் தெரிந்த சமுதாயம் இது வஷயத்தில் சரியான தீர்வை எட்டும் என்பதை மறைமுக மாகக் குறிப்பிட்டு இப்போது நமக்குள்ள வசதிக்கேற்ப கணக்கிட்டும் செயல்படலாம் என்பதை வலியுறுத்தும் பொருட்டு பிறை பார்த்தல் சம்பந்தமாக வரும் வசனங்களி லெல்லாம் கண்ணால் மாத்திரமே பார்ப்ப தற்குண்டான “ரஃயல் ஐன்” என்ற 3:13 குர் ஆனின் வார்த்தையைப் போடாமல் பல பொருள் கொண்ட “கணக்கிட்டுப் பார்த்து” என்ற மறைமுகப் பொருளையு டைய “ருஃயத்” என்ற வார்த்தையை நபி (ஸல்) அவர்கள் பாவித்துள்ளார்கள் என் பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
கண்ணால் பார்ப்பதையும் நாம் மறுக்க வில்லை ரமழானின் ஆரம்பத்தைச் சரியாக அறிந்து கொள்வதற்காக அதற்கு முந்திய ஸஃபான் மாத பிறைகளைப் பார்த்துக் கணக்கிட்டு வந்த நபி(ஸல்) அவர்களின் நடைமுறை பற்றிய ஹதீஃத் (ஆயிஷா (ரழி) அவர்கள் அபூதாவூத் 1993 அஹ்மத்) இவர் களது கண்களில் படவில்லையா? ரமழானின் ஆரம்பத்தைச் சரியாக அறிந்துகொள்வதற்காக ஸஃபான் மாத பிறைகளைப் பார்த்துக் கணக்கிட்டு வாருங் கள் என்று எமக்கு நபி(ஸல்) அவர்கள் ஏவிய ஹதீஃதும் (அபூஹுரைரா(ரழி) திர்மிதி அபூதாவூத்) இவர்களது கண்களில் படவில்லையா?
அல்லாஹ் சொல்கிறபடி 36:39 உர்ஜூனில் கதீம் வரையில் பார்த்து வந்து அடுத்த நாளான புவி மைய சங்கம நாளை நபி வழிப்படி நடப்பு மாதத்துடன் சேர்த்துக் கணக்கிட்டுக் கொண்டு அடுத்த நாளை முதலாவது நாளாக எடுப்பது எவ்வளவோ இலகுவானதும் இயற்கையானதும் பேருந்துக்கு முன்னே நின்று கைகாட்டுவது போன்றதுமாகும். ஆனால் இவர்களது நடைமுறையோ பஸ்ஸைப் போக விட்டுப் பின்னால் கைகாட்டுவது போன்ற மடமைத் தனமாகும். இவர்களது இந்த மூடத்தனமான நடை முறையால் மார்க்க அடிப்படையில் பெரிதும் பாதிக்கப்படுவது அப்பாவி முஸ்லிம்களேயாகும் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
பிறைகளைப் பார்த்து வாருங்கள். அவை உங்கள் மீது மறைக்கப்படும்போது கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அனுபவரீதியாக இது மிகவும் பொருத்த மானது சுப்ஹ் நேரம் கிழக்குத் திசையில் உர்ஜூனில் கதீம் வரையில் பார்த்து வந்து அடுத்த நாளான புவி மைய்ய சங்கம் நாளை நபிவழிப்படி நடப்பு மாதத்துடன் சேர்த்துக் கணக்கிட்டுக் கொண்டு அடுத்த நாளை முதலாவது நாளாக எடுப்பது எவ்வளவோ இலகுவானதும் இரண்டு நாட்களுக்கு முன்பே முடிவெடுக்கக்கூடிய இயற்கையா னதுமாக இருக்கிறது என்பதே உண்மையாகும்.
இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலங் களிலாவது பிந்திய பிறைகளை உர்ஜூனில் கதீம் வரை சுப்ஹ் நேரம் கிழக்குத் திசையில் உதித்து வரும் பிறைகளின் படித்தரங்களைப் பார்த்து வருவதற்கு முயற்சிப்போம். இங்கே ஒரு நியாயமான கேள்வி எழுகின்றது உலகில் பல மாதங்களுக்கு சூரிய னையோ, சந்திரனையோ காண முடியாத நார்வே போன்ற துருவப் பிரதேசங்களில் வாழ்பவர்கள் எவ்வாறு பிறை பார்ப்பது? ஏன் எமது பிரதேசத்தில் கூட பல மாதங் களுக்கு மழையும், இருளுமாக இருந்தால் எவ்வாறு பிறை பார்ப்பது?
இதற்கு நமது மார்க்கத்தில் என்னதான் தீர்வு? அவனே சூரியனை ஒளியாகவும், சந்திரனை வெளிச்சம் தரக்கூடியதாகவும் ஆக்கி (பல) வருடங்களின் எண்ணிக்கையை யும் (பல மாதங்களின்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு (சந்திரனா கிய) அதற்கு (மாறி மாறி வரக்கூடிய பல) படித்தரங்களையும் ஏற்படுத்தினான். 10:5, 55:5, 2:189, 6:96, 7:54, 13:2, 14:33, 16:12, 21:23, 29:61, 31:29, 35:13, 36:39, 39:5, 17:12, 36:40, 6:77, 71:16, 74:32, 75:08, 84:18, 25:61, 7:54, 22:18, 41:37. இதுபோன்ற வசனங்களில் சூரியனும், சந்திரனும் மனிதகுல நாட்காட்டி என்று அல்லாஹ் கூறுகின்றான்,
அதன்படி, சூரியன் உச்சியில் இருக்கும்போது பூமி தனது சர்வதேச திகதிக் கோடை அடிப் படையாகக் கொண்டு பூமி தனது அச்சில் ஒரு முறை சுற்றி வருவதை ஒரு நாள் எனவும், ஏழு முறை சுற்றி வருவதை ஒரு வாரம் என்றும், சந்திரன் பூமியை ஒரு முறை சுற்றி வரும் கால அளவை ஒரு மாதம் என்றும், சந்திரன் “”12” முறை பூமியைச் சுற்றி வருவதை ஒரு ஆண்டு என்றும் அல்லாஹ் பிரபஞ்ச அசைவுகளால் ஆன கணக்கை நமக்குப் போதித்துள்ளான் இதனைத்தான் உலக மக்கள் அனைவருக்கும் காலண்டர் (2:189) என அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இந்த அடிப்படையில் மட்டுமே பல ஆண்டுகளின் கணக்கை நாம் துல்லியமாகக் கணக்கிட முடியும் என்று அல்லாஹ் (10:5) வசனத்தில் கூறுயுள்ளான்.
இந்த அடிப்படையில் பல வருடங்களுக்கான நாட்களையும், மாதங்களையும், வரு டங்களையும் மிகமிகத் துல்லியமாகக் கணக்கிடக்கூடிய பேரறிவு நிறைந்த காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என் பதை எவராலும் மறுக்க முடியாது. குர்ஆனும், ஹதீஃதும் தெளிவாக இதனையே நமக்கும் வலியுறுத்துகிறது அந்த அடிப்படையில், தொழுகை இஃப்தார் ஷஹர் போன்ற வற்றுக்காக சூரியனின் கணக்கீட்டை ஏற்றுக்கொண்டு செயற்படுத்தி வரும் நாம் சந்திரனும் கணக்கின்படியே உள்ளன. (55:5) என்று அல்லாஹ் சொல்வதையும் நம்பி எத்தனை கோடி ஆண்டுகளுக்குக் கணக்கிட்டாலும் துல்லியம் தவறாத இலகுவான பாவனைக்குரிய உமர்(ரழி) அவர்கள் இச்சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்திய ஹிஜ்ரிக் காலண்டரை மறுபடியும் உயிர்ப்பிக்க முன்வரவேண்டும்.
இன்றைய காலக்கட்டத்தில் உலகிற்கு அருட்கொடையாக வந்த அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் இருப்பார்களேயானால் அவர்களும் இதனையே தேர்ந்தெடுப்பார்கள் காரணம் என்னவெனில், நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு எப்போதும் எதையும் சுலபமானதையுமே விரும்பி வந்துள்ளார்கள். (புகாரி, பாகம் 6, பக்கம் 628, பாடம் 80)
மக்களிடம் எளிதாக நடந்துகொள்ளுங் கள், அவர்களைச் சிரமப்படுத்தாதீர்கள் (புகாரி பாகம் 6, பக்கம் 628, பாடம் 80, ஹதீஃத் எண் 68:69, 6124-6128, 4344, 4345) இரண்டு வியங்களில் தாம் விரும்பிய தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி அல்லாஹ்வின் தூதரிடம் கூறப்பட்டால் நபி (ஸல்) அவர்கள் அவ்விரண்டில் இலேசானதையே எப்போதும் தேர்ந்தெடுப்பார்கள் (ஆயிஷா(ரழி), புகாரி : 3560, 6126, 6786, 6853, 4435, 4436, 4437, 4463, 4586)
எனவே நாமும் நபிவழியைப் பின்பற்றி காலமாறுதலுக்கு ஏற்ப பிறை வியத்தில் இதுவரை கண்டுகொள்ளப்படாமல் இருந்த மனிதகுலத்திற்கு இலகுவை ஏற்படுத்தக்கூடிய நேரடி அர்த்தமுள்ளதும், மறைமுக அர்த்தமுள்ளதுமான எத்த னையோ குர்ஆன் வசனங்களையும், ஆதாரப்பூர்வமான ஹதீஃத்களையும் எடுத்துச் செயற்படுத்தி சமுதாயத்திற்கு இலகுவை ஏற்படுத்துவோம் வாருங்கள்.