அல்லாஹ்வின் அழகிய சொல்லே என்றென்றும் உண்மையானது! நம்பிப் பின்பற்றத் தகுந்தது! சத்தியமானது!
எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.
அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களில் ஒன்று “மெய்யானவன்” எனும் பொருள் கொண்ட “ஹக்” என்பதாகும். 6:62, 10:30, 32, 18:44, 20:114, 22:6,62, 23:116, 24:25, 31:30 அவன் என்றென்றும் உண்மை மாத்திரமே பேசுபவன். நிச்சயமாக(க் குர்ஆனாகிய) இது உம்முடைய இறைவனால் அருளப்பெற்ற உண்மை அடங்கிய நெறிநூலாகும். 6:114 நிச்சயமாக (இந்த) உண்மை உம்முடைய இறைவனிடமிருந்தே வந்திருக்கிறது. எனவே நீர் (இதில்) சந்தேகம் கொள்வோரில் ஒருவராக ஆகிவிடாதீர். 10:94
மேலும் உம்முடைய இறைவனின் வார்த்தை உண்மையாலும், நியாயத்தாலும் முழுமையாகிவிட்டது. 6:115, 17:9, 10:37, 17:41 இன்னும் இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக எல்லாவிதமான உதாரணங்களையும் அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதற்காக நாம் திடமாக எடுத்துக் கூறியுள்ளோம். 39:17, 18:54, 17:41,89 அவனுடைய வார்த்தைகளை மாற்றுவோர் எவரும் இல்லை. 6:115 என்றெல்லாம் உண்மை சொன்ன அல்லாஹ் தான் குர்ஆனில் (சவூதி பிறைக் குழுவினர் அல்ல மாறாக) ஹஜ்ஜை அறிவிப்பது பிறை 2:189 என்றுதான் செல்கின்றான் என்றென்றும் சொல்லில் வாய்மையும் விசாரணையில் நேர்மையும் தீர்ப்பளிப்பதில் நீதியும் நிறைந்த அல்லாஹ் அவனது நெறிநூலில் அறிவித்த செய்திகள் அனைத்தும் உண்மையானவை சந்தேகத்திற்கப்பாற்பட்டவையாகும்.
ஹஜ்ஜை அறிவிப்பது பிறைகள் தான் 2:189 என்ற இந்த அல்லாஹ்வுடைய கூற்றில் மனதளவிலாவது சிறிது சந்தேகம் ஏற்படுமாயின் அவன் உண்மை முஸ்லிமாக இருக்க முடியாது ஆனால் நடப்பது என்ன? அண்மைக்காலமாக உலகிற்கோர் பிறை என்ற பெயரில் சர்வதேசப் பிறை என்று சொல்லிக்கொண்டு சவூதி தேசப் பிறை அறிவிப்பதற்கு ஏற்ப நோன்பையும், பெருநாளையும், ஹஜ்ஜையும் உலகினர் எடுக்க வேண்டும் என்று ஒரு சகோதரர் குர்ஆன், ஹதீஃத் அடிப்படையில்லாமல் பிடிவாதமாகவும், சிறுபிள்ளைத்தனமாக வும், எழுதுவதையும், பேசுவதையும் அவ தானிக்கும்போது பரிதாபமாக இருக்கிறது.
ஆனாலும் இன்னும் இவர் மீது நாம் நல்லா தரவு வைத்து தூய மனமாற்றத்தை வேண்டிப் பிரார்த்தனை செய்கின்றோம். அல்லாஹ்வைப் போன்றே என்றும் உண்மையையே பேசியவரும் உண்மையையே அறிவிக்கப்பட்டவருமான அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார் கள். நான் எவ்வாறு ஹஜ் கடமையை நிறை வேற்றக் கண்டீர்களோ அப்படியே நீங்களும் ஹஜ் செய்ய வேண்டும் என்று முஸ்லிம் ஹஜ்ஜுக்கான ஆரம்ப நாளாகிய துல்ஹஜ் பிறை எட்டாவது நாளாகிய மினாவிலிருந்து அரஃபா, முஜ்தலிஃபா, மீண்டும் மினா, மக்கா என அதன் திகதிகளைத் துல்லியமாகக் காட்டித் தந்தவர்கள் அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்கள். எனவே அவர்களின் நடைமுறைக்கு மாற்ற மாக நாம் செயற்பட முடியாது.
எனவே மினா, அரஃபா, முஜ்தலிஃபா மறுபடியும் மினா, மக்கா போன்றவற்றின் திகதிகளைத் தீர்மானிப்பது பிறையாகும் மாறாகப் பிறையைத் தீர்மானிப்பது அரஃபா அல்ல அரஃபா நாளைத் தீர்மானிப்பது பிறையாகும். 2:189 பிறையைத் தீர்மானிப்பது அரஃபா நாள் அல்ல என்பதனைப் புத்தி ஜீவிகள் புரிந்து கொள்ள வேண்டும். பிறைகளைப் புறக்கண்ணால் மாத்திரமே பார்த்துத் தீர்மானிக்கக் கூடிய கால கட்டத்தில் வாழ்ந்து வந்த அன்றைய புனித மக்கா ஆலயத்தின் பரிபாலனப் பொறுப்பாளர்கள் சொந்த சுயநலனுக்காகப் புனித மாதங்களையே முன் பின்னாக மாற்றி வந்துள்ளதாகக் குர்ஆன் கூறுகின்றது.
(போர் செய்யக் கூடாது என்று ஏக இறைவனால் தடை செய்யப்பட்ட ரஜப், துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய புனித மாதங்களைத் தங்கள் விருப்பப்படி) முன்னும், பின்னும் மாற்றுவது என்பதெல்லாம் கூடுதல் இறை மறுப்பாகும் 9:37. மேலும் பார்க்க தஃப்சீர் இப்னு கஸீர் பாகம் 4, பக்கம் 270-273. இதன் காரணமாக அன்றைய ஜாஹி லிய்ய அரபியர் தமது வசதிக்கும் சொந்த சுயநலத்திற்கும் தக்கவாறு பல்லாண்டு கால மாக மாதங்களை முன்னும், பின்னுமாக மாற்றி வந்ததால் அவர்கள் செய்த ஹஜ்ஜில் கூட பெரும்பாலானவை துல்ஹஜ் அல்லாத வேறு மாதங்களில் தான் நிகழ்ந்துள்ளன என்று வரலாற்றாசிரியர்கள் அபிப்பிராயம் கொள்கின்றனர். பார்க்க : தஃப்சீர் இப்னு கஸீர் பாகம் 4, பக்கம் 261-269.
இன்னும் சொல்லப்போனால் ஹிஜ்ரி ஒன்பதாம் ஆண்டு அபூபக்கர்(ரழி) அவர் கள் செய்த ஹஜ் கூட அசல் கணக்குப்படி ஹஜ் மாதமல்லாத துல்கஃதா மாதத்தில் தான் நிகழ்ந்தது என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். இக்குளறுபடிகள் சீர் செய்யப்பட்டது. அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்களது இறுதி ஹஜ்ஜின் போதாகும். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (தாம் செய்த) விடைபெறும் ஹஜ்ஜின் போது அய்யாமமுத் தஷ்ரீக் நாட்களில் இரண்டாவது நாளில் மினாவில் வைத்து உரை நிகழ்த்தினார்கள். அப்போது “மக்களே! காலம் என்பது வானங்களையும், பூமியையும் அல்லாஹ் படைத்த (ஆதி) நாளில் எந்த (த்தூய) நிலையில் இருந்ததோ அதே(தூய) நிலைக்கு இன்று (திரும்பி) வந்துவிட்டது. அல்லாஹ்விடம் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும். அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை என்று கூறி னார்கள்” புகாரி : 3197, 4406, 4662, 5550, 7447, முஸ்லிம் 3467, தஃப்சீர் இப்னு மர்தவைஹி தஃப்சீர் இப்னு கஸீர் பாகம் 4, பக்கம் 261-269, 9:36.
மேற்கண்ட அறிவிப்பில் “காலம் என்பது வானங்களையும், பூமியையும் அல்லாஹ் படைத்த ஆதி நாளில் எப்படி இருந்ததோ அந்த அசல் நிலைக்கே திரும்பி வந்து விட் டது என்பதை உறுதிப்படுத்துகின்றார்கள். நபி(ஸல்) அவர்களது அந்த விடை பெறும் ஹஜ்ஜானது துல்கஃதா மாதத்தின் புவி மைய்ய சங்கம நிகழ்வு ஏற்பட்டு மிகச் சரியாக அடுத்த நாளை முதலாவது ஹஜ்ஜுடைய நாளாகக் கணக்கிட்டுச் செயல்படுத்தியமை பின்னோக்கிக் கணக்கிட்டுப் பார்த்ததில் தெளிவாகப் புரிகிறது. அதே போன்று நபி வழிப்படி இன்றும் சவூதியிலுள்ள பூர்வீக பழங்குடியினரான அரபிகள் பிந்திய தேய் பிறைகளைச் சுபுஹ் நேரம் உர்ஜூனில் கதீம் வரை பார்த்து வந்து அடுத்த புவி மைய்ய சங்கம நாளை நபி வழிப்படி நடப்பு மாதத்துடன் சேர்த்துக் கணக்கிட்டுக் கொண்டு அடுத்த நாளை என்று சொல்லி முதலாவது நாளாக எடுப்பது அங்கே பன்னி ரண்டு ஆண்டுகள் வாழ்ந்த உலகிற்கோர் பிறையின் ஸ்தாபகரான சகோதரருக்குத் தெரியவில்லையா? பிறை பார்ப்பது என்றாலே அது, மஃரிபு நேரம் மேற்குத் திசையில்தான் என்று அடம் பிடிக்கின்றாரே!
ஏன் சவுதி அரசு கடந்த 1437 ரமழான் மாத இறுதியில் இடம் பெற்ற புவி மைய்ய சங்கம நிகழ்வு 16.07.2015, வியாழக்கிழமை சர்வதேச Uவீ நேரப்படி 01:24:06 சவூதி நாட்டிற்கு மிகவும் கிழக்கே ஏற்பட்ட போது அதற்கு அடுத்த நாளான 17.7.2015 வெள்ளிக்கிழமையை சவூதி ஷவ்வால் மாத முதல் நாளாக ஏற்றுப் பெருநாளாக அறிவித் ததும் அன்று துல்லியமாகக் கணக்கிடப்பட்ட ஹிஜ்ரிக் காலண்டருடன் திகதி பொருந்தி வந்து எல்லோரும் ஒரே நாளில் தொழுததும் மிகச் சிறந்த முன்மாதிரியாக இருந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
ஆனாலும் நாளின் ஆரம்பம் மஃரிபில் ஏற்படுகிறது என்ற மூடத்தனமான நடை முறையால் சவூதி அரேபியாவிற்கு மேற்குத் திசையில் புவி மைய்ய சங்கம நிகழ்வு ஏற் பட்டால் அடுத்த நாளை அவர்கள் முதலா வது நாளாக எடுப்பதில்லை. யூதர்களின் வழி முறையைப் பின்பற்றிக் கொண்டு அதிகாலையில் கிழக்குத் திசையில் சூரிய னைப் பின்தொடர்ந்து 91:01,02, சுமார் நாற்பத்தெட்டு நிமிடங்களின் பின்னர் உதித்து அதன் பின்னாலேயே பயணித்து சுமார் பன்னிரண்டு மணி நேரங்களைக் கடந்து மேற்குத் திசையில் மறையப் போகும் பிறையைப் பார்த்துவிட்டு ”ஆ” பிறை பிறந்துவிட்டது மாதம் ஆரம்பித்து விட்டது என்று கோசமிட்டு அடுத்த இரண்டாவது நாளை அல்லது மூன்றாவது நாளை முதலாவது நாளாக எடுப்பது பெரும் தவறு என்று அறிந்து அப்பாவத்தை நிறுத்திக் கொள்ளும் வரை பிறை விஷயத்தில் இச்சமுதாயத்திற்கு விடிவு கிட்டாது.
உண்மையையே உரைத்தவரும், உண்மையையே அருளப்பட்டவருமான அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்களது சொல் செயல் அங்கீகாரம் கொண்டதாக வுள்ள அடிப்படையில் கடந்த 1439 ஷஃபான் மாத பிறைகளின் படித்தரங்களை கண்ணுக்குத் தெரியக்கூடிய கடைசிப் படித்தரமான உர்ஜூனில் கதீம் 36:39 வரை பார்த்து வந்து அம்மாதத்தின் 29ஆவது நாள் 15.5.2018 செவ்வாய்க்கிழமை சர்வதேச நேரப்படி 11:48ற்கு புவிமைய்ய சங்கம நிகழ்வு ஏற்பட்டு உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும் 2:185 என்று அல்லாஹ் கட்டளையிட்டதற்கு ஏற்ப அன்று உலகினர் ரமழானை அடைந்திட்ட போதிலும் நபிவழிப்படி அதனை ஸஃபானுடன் சேர்த்துப் பூர்த்தி செய்துவிட்டு அடுத்த 16.05.2018 புதன் கிழமையான சரியான நாளில் நோன்பை ஆரம்பித்து ரமழானின் பிறைகளையும் கண்ணுக்குத் தெரியக்கூடிய கடைசிப் படித்தரமான உர்ஜூனில் கதீம் 36:39 வரை பார்த்து வந்து ரமழானின் 29ஆவது நாள் 13.06.2018 புதன்கிழமை சர்வதேச Uவீ நேரப்படி 19:43ற்கு புவிமைய்ய சங்கம நிகழ்வு ஏற்பட்டு உலகம் ஷவ்வால் மாதத்தை அடைந்திட்ட போதிலும் நபிவழிப்படி அதனை ரமழான் மாதத்துடன் சேர்த்துப் பூர்த்தி செய்துவிட்டு அடுத்த நாளான 14.06.2018 வியாழக்கிழமை சரியான நாளில் பெருநாளைக் கொண்டாடியவர்களைப் பார்த்து ரமழானின் ஆரம்ப ஒரு நாளைத் தவற விட்டுவிட்டு அதன் இரண்டாவது நாளை முதலாவது நாளாக எடுத்ததல்லாமல் ஷவ்வால் மாத ஆரம்ப நாளைத் தவற விட்டுவிட்டு அதன் இரண்டாவது நாளை முதலாவது நாளாக எடுத்துத் தவறான நாளில் பெருநாளைக் கொண்டாடிய உலகிற்கோர் பிறையின் ஸ்தாபகர். இது சுத்தமான வழிகேடு என்று எடுத்த எடுப்பில் எம்மைக் குறித்து எழுதியது சிறுபிள்ளைத் தனமாக இருக்கிறது. மக்கள் உண்மையை அறிவார்கள்.
மேலும் சவூதி அரேபியாவின் பிறைக் குழுவினர் அல்ல. ஹஜ்ஜை அறிவிப்பது பிறை 2:189 என்ற அல்லாஹ்வின் சொல்லில் நாம் முழு நம்பிக்கை வைத்து கடந்த 1438 துல்ஹஜ் மாதத்தின் ஆரம்ப நாளைச் சரியாக அறிந்து கொள்வதற்காக அதற்கு முந்திய துல்கஃதா மாதத்தின் பிறைகளை கண்ணுக்குத் தெரியக்கூடிய கடைசிப் படித் தரமான உர்ஜூனில் கதீம் வரை 36:39 பார்த்து வந்து அடுத்த நாளான பிறை தென்படாத 21.08.2017 திங்கட்கிழமை கும்மவுடைய மறைக்கப்படும் புவி மைய்ய சங்கம நிகழ்வு ஏற்பட்டு சர்வதேச நேரப்படி 18:30திற்கு துல்ஹஜ் மாதத்தை உலகம் அடைந்திட்ட போதிலும் அதனை நபிவழிப்படி நடப்பு மாதத்துடன் சேர்த்துக் கணக்கிட்டுக் கொண்டு அதற்கு அடுத்த நாளான 22.08.2017 செவ்வாய்க்கிழமையன்று துல்ஹஜ் பிறை ஒன்றாக எடுத்துக் கணக்கிட்டு அம்மாதத்தின் ஒன்பதாவது நாள் 30.08.2017 புதன்கிழமை அரபா நோன்பும் பத்தாவது நாள் 31.08.2017 வியாழக்கிழமை ஹஜ் பெருநாளையும் நாம் எடுத்துக் கொண்டதற்குப் பிரதானமாக நான்கு வியங்கள் ஆதாரங்களாகும்.
01. உர்ஜூனில் கதீமைப் பார்த்தது,
02. சங்கம நாளைக் கணக்கிட்டது, 03. அன்று உண்மையிலேயே புவி மைய்ய சங்கம நாள் தான் என்பதை 99 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் முழுமை யான அரிய சூரிய கிரகணம் ஏற்பட்டு உறுதிப்படுத்தியமை,
04. துல்லியமான கணக்கீட்டுக் காலண்டரும் அதற்குச் சரியான திகதியை சான்று பகர்ந்தமை என்பனவாகும்.
ஆனால் அன்று நடந்தது என்ன? உலகின் பல பாகங்களிலும், தமிழகத்திலும் அன்று மக்கள் துல்ஹஜ் பிறை பத்து பெருநாளைக் கொண்டாடியபோது உலகின் பல பாகங் களிலுமிருந்து வந்த ஹாஜிகள் அன்று அரஃபா மைதானத்தில் நின்ற அசிங்கமான அவலம் உலகறிந்ததே. அதே போன்றுதான் கடந்த 1437 துல்ஹஜ் மாதம் சரியாக 10.09.2016 சனிக் கிழமை அரஃபா தினமும் 11.09.2016 ஞாயிற்றுக்கிழமை ஹஜ்ஜுப் பெருநாள் தினமுமாகும்.
ஆனால் துல்ஹஜ் பிறை பத்தாவது நாளாகிய அன்றும் ஹாஜிகள் அரஃபா மைதானத்தில் நிறுத்தப்பட்டார்கள். (காரணம் கடந்த 2001 செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து செப்டம்பர் 11ம் தேதியை கறுப்பு தினமாக மேற்குலகம் கருதுவதால் அவ்வருடத்தின் ஹஜ்ஜுப் பெருநாளும் செப்டம்பர் 11ஆம் தேதி வந்துவிட்டால் மேற்குலகத்தினரின் துக்க தினத்தன்று உலக முஸ்லிம்கள் பெருநாள் கொண்டாடுவது சரியாகாது என்று சவூதி அரசு கருதியதாகவும் செய்திகள் வந்தன) எது எப்படியிருந்தாலும் அப்போது உலகின் பல பாகங்களிலும் இருந்து சவூதியை நோக்கி அதிகளவான கண்டனங்கள் சென்றபோது அதே ஹஜ்ஜு மாதம் ஹாஜிகளெல்லாம் கலைந்து சென்ற பின்னர் அவர்களது பிறை அறிவிப்பின்படி 23.09.2016 வெள்ளிக் கிழமை அன்று பிறை 23 ஆகும்.
ஆனால் அன்று அவர்கள் அன்றைய தேதியைத் திடீரென 22 ஆக மாற்றி சவூதி தொலைக்காட்சி மற்றும் சவூதி அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியிட்டுத் தமது ஹஜ்ஜுடைய அறிவிப்புத் தவறானதுதான் என்பதை பகிரங்கமான ஒப்புக்கொண்டார்கள் என்பது வரலாறு. அது போன்றே கடந்த 1436 ஹஜ் மாதத்திலும், துல்ஹஜ் பிறை பத்தாவது தவறான நாளில் ஹாஜிகளை அரஃபா மைதானத்தில் நிறுத்தினார்கள்.
உலக நாடுகளின் கண்டனங்கள் வலுத்தபோது அவர்களது பிறை அறிவிப்பின்படி 25ஆவது நாளன்று 24 என்று ஹிஜ்ரிக் காலண்டருக்கு ஏற்றவாறு தேதியை மாற்றினார்கள். (அவ்வருடம் தான் ஹரம் ஸரீஃபில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழுதூக்கி உடைந்து விழுந்து ஏராளமான உயிர்ச்சேதம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது) இப்படித் தொடர்ச்சியாகவே பல வருடங்களாக சவூதி அரசைப் பெரிதும் நம்பிய கோடிக்கணக்கான அப்பாவி உலக முஸ்லிம்களையும் தவறான துல்ஹஜ் பத்தாவது நாளில் அரஃபா மைதானத்தில் நிறுத்தி வருவது வரலாறு மன்னிக்காத பெரும் துரோகமாகும். தவறு என்பது அறியாதுசெய்வது, உங்களில் எவரேனும் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்துவிட்டு அதற்குப் பின்னர் (அப்) பாவத்தை விட்டும் திரும்பி (உடனே) திருத்திக் கொண்டால் நிச்சயமாக அவனை மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடை யவனாகவும் இருக்கின்றான். 6:54
ஆனால் இவர்களோ அறியாது செய்யவில்லை பாவம் என்பது அறிந்து செய்வது அவர்கள்தாம் செய்த (பாவச்) செயல்களில் தெரிந்து கொண்டே பிடிவாதமாக இருக்கவுமாட்டார்கள். 3:135 அறிந்து கொண்டே தொடர்ந்து பாவம் செய்கின்றார்கள்கள், உலகில் நிறுவப்பட்ட முதலாவது புனித ஆலயம் “அல் மஸ்ஜிதுல் ஹராம்” 3:96, 9:108, 22:25, 2:125, புகாரி: 1349, 1587, 1833, 2090, 3113, 3366, 3425, 3189, 1834, 4313, முஸ்லிம் : 2632, 903, 904, 2701, முஸ்னத் அஹமத், அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா என்பதிலும் முழு உலக மனிதர்களுக்குமான ஒரே “கிப்லா” கஃஅபா 2:149,150,144 என்பதிலும் எமக்கு சந்தேகம் இல்லை. அதனால் உலகில் எங்கிருந்தாலும் தொழுவதற்கான திசை புனித “கஃஅபா தான்” என்பதிலும் எமக்குத் துளி கூட சந்தேகம் இல்லை அது நமக்கு வலியுறுத்தப் பட்டதொன்றுதான்.
ஆனால் அதற்காகப் பிறை விஷயத்திலும் சவூதி அரேபியாவைக் குருட்டுத்தனமாகக் கண்மூடிப் பின்பற்ற வேண்டும் என்று சொல்வதற்கு எவருக்கும் உரிமை யில்லை. மஸ்ஜிதுல் ஹராமைத் தவிரவுள்ள ஏனைய பள்ளிவாசல்களில் தொழுவதை விட எனது பள்ளியில் தொழுவது 1000, தொழுகைகளை விடச் சிறந்தது (புகாரி 1190, அஹ்மத் இப்னு ஹிப்பான்) என்று சொன்ன நபி(ஸல்) அவர்களே பெருநாள் தொழுகையை மஸ்ஜிதுன் நபவியில் தொழாமல் அதனை அண்டிய மைதானத்தில் தான் தொழுதார்கள் என்று நாம் நபி வழியைச் சொன்னால், மதீனாவில் நபவி பள்ளியில்தானே தொழுகிறார்கள் என்றும், நபி(ஸல்) அவர்கள் ரமழானிலும் அது அல்லாத மற்ற காலங்களிலும் இரவுத் தொழுகை 11 ரகாஅத்துகளுக்கு மேல் அதிகமாக அறவே தொழுததில்லை (புகாரி) எனும் நபி வழியைச் சொன்னால் மக்காவிலும், மதீனாவிலும் 23 தொழுகிறார்களே என்றும் தஸ்ஃபீஹ் விரல்களால் எண்ணுவது தான் நபிவழி மாறாக ஹிந்துக்களின் ருத்திராட்ஷ மாலை கிறிஸ்தவர்களின் ஜெபமாலை போன்ற தஸ்ஃபீஹ் மாலைகளால் எண்ணுவது பித்அத்தும் அன்னிய கலாச்சாரத்தைப் பின்பற்றுவதுமாகும் என்று சொன்னால் அட நீங்க ஒண்ணு மக்காவிலும், மதீனாவிலும் உள்ள பள்ளிவாசலைச் சூழவுள்ள கடைத் தெருவில் தானே லட்சக்கணக்கான தஸ்ஃபீஹ் மாலைகள் விதம் விதமாக ரகம் ரகமாக கலர் கலராகக் கிடைக்கிறது முழு உலகிற்கும் அங்கிருந்து தானே செல்கிறது அங்கே இருக்கிற உலமாக்களை விட நீங்க பெரிய ஆட்களா என்றெல்லாம் உலக மக்கள் சத்தியத்தை மறுத்துப் பேசுவதற்குக் கெட்ட ஆதாரமாகக் கொண்டவர்கள் இப்படியான விஷயங்களில் உலக மக்கள் சத்தியத்தை விளங்கு வதற்கு முதலாவது தடைக் கல்லாகவும் இஸ்லாத்தின் எதிரிகளாகவும், துரோகிகளாகவும் உள்ள இவர்களை இன்னும் மக்கள் நம்ப வேண்டுமா? நம்ப முடியுமா?
அது போலத்தான் இன்று இந்தப் பிறை சம்பந்தமான வியத்திலும் மக்கள் சத்தியத்தை விளங்குவதற்கு முதலாவது தடைக் கல்லாகவும் இஸ்லாத்தின் எதிரிகளாகவும் துரோகிகளாகவும் இவர்களது செயற்பாடுகள் உள்ளது நாம் சரியாகச் சொன்னாலும் அவர்களை இவர்கள் உதாரணம்காட்டி சும்மா போங்க சாரு சவூதியிலேயே பெரு நாள் அறிவிக்கவில்லை நீங்க எப்படி பெருநாளென்று சொல்ல முடியும் என்று சத்தியத்தை மறுத்துப் பேசி விடுகின்றார்கள் தான் சரியாகச் செய்வதும் இல்லை சரியாகச் சொல்லும்போது சவூதியைக் காரணம் காட்டி சத்தியத்தை மக்கள் மறுப்பதற்குக் கெட்ட உதாரணமாகத் திகழும் இவர்கள் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள். படைத்தவனுக்கு மாறு செய்யும் வகையில் படைப்பினங்கள் யாருக்கும் கட்டுப்பட்டு நடப்பது கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், ஸரஹுஸ்ஸுன்னா : 4:135, 29″8, 7:3) கீழ்ப்படிதல் என்பதெல்லாம் நற்செயல்களில் தான் பாவமானவற்றுக்குக் கட்டுப்பட முடியாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி : 4340, 7145, 7257, முஸ்லிம் : அபூதாவூத் நஸயீ, முஸ்னத் அஹமத்)
அந்த அல்லாஹ்வுடைய தூதருடைய பயிற்சிப் பாசறையில் பயின்ற நபித்தோழர் களில் ஒருவரான உமர்(ரழி) அவர்கள் அரே பிய சாம்ராஜ்யத்தின் ஆட்சியாளராக இருந்த போது அதிகரித்த “மஹர்” தொகைக்காகச் சிரமப்பட்ட ஆண் குமர்களின் நலன் கருதி அதே நபிகளாரின் மிம்பரில் ஏறி அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்கள் தமது துணைவியரில் எவருக்கும் 400 திர்கங்களை விட அதிகமாக மஹர் தொகை வழங்கவில்லை. எனவே அதற்கு மேல் அதை உயர்த்தாதீர்கள் என்று நபி(ஸல்) அவர்களின் நடைமுறையைச் சொல்லி விட்டு மிம்பரில் இருந்து கீழே இறங்கி னார்கள். அப்போது குறைஷிப் பெண் ஒருவர் ஆட்சித் தலைவர் என்று பார்க்கவில்லை.
கலிஃபா உமர்(ரழி) அவர்களை இடை மறித்து 400 திர்கங்களை விட அதிகமாகப் பெண்களுக்கு மஹர் கொடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டீர்கள் அவளுக்கு நீங்கள் ஒரு பொருட் குவியலையே மகராகக் கொடுத்திருந்தாலும் அதிலிருந்து எதையும் திரும்ப எடுத்துக் கொள்ளாதீர்கள் 4:20 என்று அல்லாஹ் கூறுவதை நீங்கள் பார்க்க வில்லையா? என்று வினவினார்கள். உடனே உமர்(ரழி) அவர்கள் இறைவா என்னை மன்னித்துவிடு! இந்தப் பெண் உண்மையையே சொன்னார் நான்தான் தவறிழைத்துவிட்டேன் என்று கூறிவிட்டு மீண்டும் மிம்பரில் ஏறி தமது பொருளிலிருந்து எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கட்டும் என்று கூறினார்கள். (சுருக்கம்) திர்மிதி, அபூதாவூத், இப்னுமாஜா, முஸ்னத் அஹமத், தாரமி, முஸ்னது அபீய அலா பைககீ, தஃப்சீர் இப்னு கஸீர் பாகம் 2, பக்கம் : 440, 441)
படைத்தவனுக்கு மாறு செய்யும் வகையில் படைப்பினங்கள் யாருக்கும் கட்டுப்படாத இது போன்ற ஆட்சித் தலைவரும், ஆட்சித் தலைவராக இருந்தாலும் அவரைக் கண்மூடிப் பின்பற்றாமல் ஆதாரங்களைக் காட்டி நெறிப்படுத்தக்கூடிய இதுபோன்ற ஆரோக்கியமான குடிமக்களும் உருவாகாத வரையில் இச்சமுதாயத்தினருக்குப் பிறை வியத்திலும் விமோசனம் இல்லை. அதே நேரத்தில் கிழக்குத் திசையின் ஆரம்ப நாடாகிய நியூசிலாந்து மக்கள் வெள்ளிக்கிழமை அன்று ஜும்ஆ தொழுது சுமார் பத்து மணி நேரம் கடந்த பிறகு அன்றைய ஜும்ஆவுடைய நேரத்தைப் பத்து மணி நேரம் பின்தங்கியே அடைந்து கொள்ளக்கூடிய சவூதி அரசு தாங்கள் ஜும்ஆ தொழுத பிறகுதான் மற்ற நாடுகள் ஜும்ஆ தொழவேண்டும் என்ற நிபந்தனையை வைக்கவில்லை அப்படிச் சொல்லவும் முடியாது.
உலகத்தாரின் கிப்லா என்பதற்காக சவூதி அரசின் பிறை அறிவிப்பைத்தான் உலக நாடுகள் பின்பற்ற வேண்டும் என்ற அர்த்தமில்லாத நிபந்தனைகளை உலகிற்கோர் பிறை ஸ்தாபகரான சங்கையான சகோதரர் முபாரக் மெளலவி அவர்கள் இடுவது மீள் பரிசீலனைக்குட்பட்டதாகும். சவூதி அரேபிய அரசு ஜும்மா தொழுத பிறகு தான் மற்ற நாடுகள் ஜும்ஆ தொழ வேண்டும் என்ற அடிப்படையில்லாத நிபந்தனைகளை விதிப்பது போன்றதுமாகும். சில மனிதர்களுக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளையயல்லாம் விதிக்கின்றார்களே! அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகள் எதுவாயினும் அது செல்லுபடியற்றதாகும். அவர்கள் நூறு முறை நிபந்தனையிட்டாலும் சரியே (புகாரி : 2047, 2729) என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.