எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.
சத்தியத்தைப் போதனை செய்வோர் அதனை நிலைநிறுத்துவதற்கான மூலாதார அளவுகோலாகக் கொண்டது பெரும்பான் மையை அல்ல. அன்று முதல் இன்று வரை உள்ள பெரும்பாலான மனிதர்கள் சத்தியத்தை பெரும்பாலும் ஏற்றுக்கொள்ள மறுத்ததற்கு மூலாதார அளவுகோலாகக் கொண்டது பெரும் பான்மையையே. அதனால்தான் கடந்த காலங்களில் பெரும்பாலான மனிதர்கள் இறை தூதர்களான மனிதர்களில் புனிதர்களான நபிமார்கள் மனிதர்களின் சுய விருப்பங்களுக்கும் அவர்களது கருத்துக்களுக்கும் நடைமுறைகளுக்கும் பிரதேச வணக்க வழிபாடுகளுக்கும் முரணாக அவர்களது உள் ளம் விரும்பாத ஒன்றை இறைவனின் தெளி வான சான்றுகளுடன் புதிதாகக் கொண்டுவந்தார்கள் அப்போதெல்லாம் சத்திய மார்க்கத்தை வெறுத்துத் தம்மிடம் இருந்த பெரும்பாலானவர்களின் பெருமை, பகட்டு அகம்பாவம், மேலெண்ணம் என்பவற்றைக் காரணமாகக் கொண்டு அவர்கள் சத்தியத்தை ஏற்றுக் கொள்ள மறுத்ததுடன் இறைவனிடமிருந்து அவனது ஆணையின் பேரில் தூய வழிகாட்டலைப் பின்பற்றி சத்தியத்தைக் கொண்டு வந்த (2:38, 20:123, 124) நபிமார்களையும் (2:87,91,3:21,112, 181,183, 4:155, 5:70) அவர்களுக்குத் துணையாக வந்தவர்களையும் (36:13-29) எந்தக் காரணமும் இல்லாமல் நியாயமேயன்றி அநீதியான முறையில் கொடூரமாகக் கொலையும் செய்து வரம்பு மீறியதால் இவ்வுலகில் நிரந்தர இழிவும், வறுமையும், அழிவும் விதிக்கப்பட்டு (3:122) இரு உலகி லும் பெரும் நஷ்டவாளர்களானார்கள்.
அபூ உபைதா பின் அல்ஜர்ராஹ்(ரழி) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அவர்களிடம் நான் அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் மக்களி டையே கடுமையான வேதனைக்குரியவர் யார்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஒரு நபியையோ நன்மையை ஏவி தீமையைத் தடுப்பவரையோ கொன்றவன்தான் கடுமையான தண்டனைக்குரியவன் என்று கூறிவிட்டு அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுத்து நியாயமேயன்றி இறை தூதர் களைப் படுகொலை செய்ததுடன் நீதியை நிலை நிறுத்துமாறு ஏவுகின்ற மக்களையும் கொலை செய்தவர்களுக்கு வதைக்கும் வேதனையே உண்டு என்று (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக. எனும்(3:21) இந்த வசனத்தை ஓதினார்கள். பின்னர் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூ உபைதா இஸ்ரவேலர்கள் முற்பகலில் ஒரே நேரத்தில் 43 நபிமார்களைப் படுகொலை செய்தனர் அப்போது அந்த இஸ்ர வேலர்களில் வணக்கசாலிகள் 170 பேர் புறப்பட்டுச் சென்று அக்கொலையாளிகளிடம் நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தனர் அதனால் அதே நாளின் இறுதியில் அந்த நல்லவர்களையும் அந்த இஸ்ரவேலர்கள் கொன்றார்கள். அவர்கள் குறித்த வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் இந்த (3:21) வசனத்தில் குறிப்பிடுகின்றான். தஃப்சீர் இப்னு, அபீ ஹாத்திம் தஃப்சீர் தபரீ, முஸ்னது அல் பஸ்ஸாரி, தஃப்சீர் இப்னு கஸீர்.
மற்றுமோர் ஆதாரபூர்வமான அறிவிப்பில் இவ்வுலகில் ஒரு நாளில் மாத்திரம் முன்னூறு நபிமார்கள் பனு இஸ்ரவேலர்களால் கொல்லப்பட்டார்கள் என்றுள்ளது. தீர்க்க தரிசிகளையும், ஞானிகளையும், வேதபாரகரையும் உங்களிடத்தில் அனுப்புகிறேன் அவர்களில் சிலரைக் கொன்று சிலுவைகளில் அறைவீர்கள், சிலரை உங்கள் ஆலயங்களில் வாரினால் அடித்து ஊருக்கு ஊர் துன்பப்படுத்துவீர்கள், பைபிள் புதிய ஏற்பாடு மத்தேயு 24:34 தஃப்சீர் இப்னு கஸீர் பாகம் 3, பக்கம் 258. அன்று இருந்து இன்று உள்ள இறுதி இறை நெறி நூலாக வந்த அல்குர்ஆன் வரை சத்தியத்திற்கான மூலாதார அளவுகோல் பெரும்பான்மை என்று எதிலுமே வரவில்லை மாறாக இதுவரை வந்த வேதங்களில் பெரும்பான்மை வழிகேடு என்றே வந்துள்ளது. எனினும் இறைவனுடையதும், மனிதர்களினதும் முதலாவது எதிரியும் பகிரங்கமான பகைவனுமான இப்லீஸ் (35:6, 25:23, 36:60-62, 12:5, 7:22, 6:142, 17:53,61, 43:62, 28:15, 2:168,169,208, 5:90, 23:97,98, 16:100, 38:82)
இறைவனிடம் அவர்கள் எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் வழங்கு வாயாக என்று அவன் கேட்டான் (அதற்கு அல்லாஹ்) நிச்சயமாக நீ அவகாசம் அளிக் கப்பட்டோரில் ஒருவன் என்று கூறினான். அ(தற்க)வன் என்னை நீ வழிகெட்டவனாக ஆக்கிய காரணத்தினால் உனது நேரான வழியில் அவர்களுக்கு எதிராக நான் அமர்ந்திருப்பேன் என்றான். பின்னர் அவர்களுக்கு முன்னாலும், பின்னாலும் அவர் களுக்கு வலதாலும், இடதாலும் நிச்சயமாக நான் அவர்களிடம் வருவேன். அவர்களில் பெரும்பாலானோரை நன்றி செலுத்துவோராக நீ பெற்றுக் கொள்ள மாட்டாய் என்றும் கூறி னான். (7:14-27)
அதன் அடிப்படையில் இறைவன் அவனுக்குக் கொடுத்த அவகாசத்தைப் பயன்படுத்திமனிதர்களில் ஒரு பெரும் கூட்டத்தையே வழி தவறச் செய்திருக்கின்றான் (36:60-62) இதன் காரணமாகவே, பெரும்பாலானோர்களை நன்றி செலுத்து வோராகக் காண முடியாது: அல்லாஹ் (இப்லீஸிடம்) நீ இங்கிருந்து (கீழே) இறங்கிவிடு இங்கு இருந்து கொண்டு தற்பெருமை கொள்ள உனக்கு (உரிமை) எதுவும் இல்லை. எனவே நீ வெளியேறி விடு நீ சிறுமை அடைந்தோரில் ஒருவன் ஆவாய் என்றான். அதற்கு இப்லீஸ் இவர்கள் (வாழ்ந்து இறந்த பின்னர் மறுபடியும் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாள் வரை எனக்கு நீ அவகாசம் அளிப்பாயாக என்றான், அதற்கு அல்லாஹ் நிச்சயமாக நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில் ஒருவன் ஆவாய் என்றான். அதற்கு இப்லீஸ் (இறைவா!) நீ என்னைத் தவறான வழியில் விட்டுவிட்டதால் நிச்சயமாக உனது நேரான வழியில் (வரும்) அவர்களுக்காக நான் (குறுக்கே) அமர்ந்து கொள்வேன் என்று கூறினான்.
பின்னர் அவர்களுக்கு முன்னால் இருந்தும் அவர்களுக்குப் பின்னால் இருந்தும் அவர்களுக்கு வலப்புறங்களில் இருந்தும் அவர்களுக்கு இடப்புறங்களில் இருந்தும் (அவர் களைக் கெடுக்க) அவர்களிடம் நிச்சயமாக நான் வருவேன் (எனவே) அவர்களில் பெரும்பாலானோர்களை நன்றி செலுத்து வோராக நீ காணமாட்டாய் (என்றும் கூறினான்) 7:13-17 மனிதர்களில் பெரும்பாலானவர்கள் நன்றி செலுத்துவதில்லை : இறப்பை அஞ்சி ஆயிரக்கணக்கில் தங்கள் இல்லங்களில் இருந்து வெளியேறியவர்களை (நபியே!) அறியவில்லையா? அவர்களிடம் நீங்கள் இறந்து விடுங்கள் என அல்லாஹ் கூறினான். பின்னர் அவன் அவர்களை உயிர்ப்பித்தான் அல்லாஹ் மனிதர்கள் மீது அருள் உடையவன் எனினும் மனிதர்களில் பெரும்பாலானோர் நன்றி செலுத்துவதில்லை. 2:243 இன்ஷா அல்லாஹ் தொடரும்…