பெரும்பான்மை…

in 2018 அக்டோபர்

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.

செப்டம்பர் தொடர்ச்சி…

அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந் துரைப்பவர்கள் மறுமை நாள் (அன்று நடக்க இருப்பது) குறித்து என்ன நினைக் கின்றனர்? நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது அருள் உடையவன் ஆவான் எனினும் அவர்களில் பெரும்பாலானவர்கள் நன்றி செலுத்துவதில்லை. 10:60 நான் எனது தந்தையரான இப்ராஹீம் இஸ்ஹாக் யாக்கூப் ஆகியோரின் மார்க்கத்தையே பின்பற்றுகிறேன் அல்லாஹ்வுக்கு நாம் எதையும் இணையாக்குவது நமக்குத் தகாது இது எங்கள் மீதும் (இதர) மக்கள் மீதும் அல்லாஹ் புரிந்த அருளாகும். எனினும் மனிதர்களில் பெரும்பாலானோர் நன்றி செலுத்துவதில்லை. (என்றும் யூசூப் கூறினார்) 2:38 நிச்சயமாக உம்முடைய இறைவன் மனிதர்கள் மீது அருள் உடையவன் ஆவான்.

எனினும் அவர்களில் பெரும்பாலானவர் கள் நன்றி செலுத்துவதில்லை. 27:73, 14:34, 32:7-9, 7:10, 34:13, 23:78, 67:23 நீங்கள் இளைப்பாறுவதற்காக இரவையும், நீங்கள் பார்ப்பதற்காகப் பகலையும் அல்லாஹ் தான் படைத்தான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது அருள் பொழிகின்றான். ஆயினும் மனிதர்களில் பெரும்பாலானோர் நன்றி செலுத்துவதில்லை. 40:61

மனிதர்களில் பெரும்பாலானோர் பொய்யர்கள் : ஷைத்தான்கள் யார் மீது இறங்குகின்றனர் என்பதை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? புனைந்து பொய் கூறும் பாவிகள் ஒவ்வொருவர் மீதும் ஷைத்தான்கள் இறங் குகின்றனர். (ஒட்டுக்) கேட்டதை அவர்கள் (மனிதர்களின் காதில்) போடுகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் பொய் யர்கள் ஆவர். 26:221,223 ஷைத்தான் பெரும்பாலான மனிதர்களை வழி தவறச் செய்திருக்கிறான் : ஆதமின் மக்களே நீங்கள் ஷைத்தானை வழிபடக் கூடாது நிச்சயமாக அவன் உங்க ளுக்குப் பகிரங்கமான எதிரியாவான் என்று உங்களிடம் நான் உறுதிமொழி பெறவில்லையா? மேலும் என்னையே நீங்கள் வழி படுங்கள். இதுவே நேரான வழியாகும். (என்றும் உறுதிமொழி பெறவில்லையா?)

நிச்சயமாக அவன் உங்களில் ஒரு பெரும் கூட்டத்தையே வழி தவறச் செய்திருக்கின்றான். (இதை) நீங்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டாமா? 36:60-62, 17:62, 34:20

பெரும்பாலானோர் ஜின்களையே வழிப்பட்டு வந்தனர் : அந்நாளில் அவர்கள் அனைவரையும் அவன் ஒன்று திரட்டி பின்னர் வானவர்களிடம் இவர்கள் உங்களைத் தான் வழிபட்டு வந்தார்களா? என்று வினவுவான் அதற்கு அவர்கள் (இறைவா) நீ தூயவன் நீயே எங்கள் பொறுப்பாளன் அவர்கள் (உடன் எமக்கு சம்பந்தம்) இல்லை மாறாக அவர்கள் ஜின்களையே வழிப்பட்டு வந்தனர் அவர்கள் மீதே அவர்களில் பெரும் பாலானோர் நம்பிக்கை கொண்டிருந்தனர் என்று கூறுவர். 34:40,41

மனிதர்களின் பெரும்பாலானோரை கெட்ட ஜின்கள் வழிகெடுத்து அவர்களுடன் சேர்த்துக் கொண்டார்கள்: அவர்கள் யாவரையும் ஒன்று சேர்க்கும் (மறுமை) நாளில் அவன் (கெட்ட ஜின்களை நோக்கி) ஓ ஜின்களின் கூட்டத்தாரே நீங்கள் மனிதர்களில் பெரும்பாலானோரை (வழிகெடுத்து) உங்களுடன் சேர்த்துக் கொண்டீர்கள் அல்லவா? என்று கேட்பான். 6:128, 43:36 சிலைகள் பெரும்பாலானோரை வழிதவறச் செய்துவிட்டன : இப்ராஹீம் “என் இறைவா! இவ்வூரைப் பாதுகாப்பு அளிக்கக் கூடியதாக ஆக்கு வாயாக! என்னையும் என் பிள்ளைகளை யும், சிலைகளை வழிபடுவதில் இருந்து விலக்கி வைப்பாயாக” என்று வேண்டியதை எண்ணிப் பாருங்கள்!

“என் இறைவா! நிச்சயமாக (சிலைகளான) அவை மனிதர்களில் பெரும்பாலானோரை வழிதவறச் செய்து விட்டன. எனவே என்னைப் பின்பற்றியவர் என்னைச் சேர்ந்தவராவார்” 14:35,36 என்று கூறினார். இணை வைப்போரில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களுடைய குழந்தை களையே கொலை செய்வதை அவர்களுடைய தெய்வங்கள் அழகாக்கி வைத்துள் ளன அவர்களை நாசப்படுத்தி அவர்களுடைய மார்க்கத்தையும் குழப்பத்திலாக்கி விட்டன. 6:137

பெரும்பாலானோர் பூமியில் வரம்பு மீறுபவர்களாகவே இருக்கின்றார்கள்: இதன் காரணமாகவே கொலைக்குப் பகரமாகவோ பூமியில் (ஏற்பட்ட) குழப்பத்தி(னை ஒடுக்குவத)ற்காகவோ தவிர ஒருவர் மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொன்றவரைப் போன்றவராவார் என்றும், ஒரு மனிதரை உயிர் வாழச் செய்தவர் எல்லா மனிதர்களை யும் உயிர் வாழச் செய்தவரைப் போன்றவர் ஆவார் என்றும் இஸ்ராயீலின் மக்களுக்கு நாம் விதியாக்கினோம் அவர்களிடம் நமது தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர்.

அதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலானவர்கள் பூமியில் எல்லை மீறுவோராகவே இருக்கின்றனர். 5:32,62,77 பெரும்பாலானவர்கள் பாவிகளாவார்கள் : (இறை நம்பிக்கை கொண்டோரே) மனித குல(த்தினரின் சீர்திருத்த)த்திற்காகத் தோற்றுவிக்கப்பட்டவர்களில் நீங்களே சிறந்த சமுதாயமாக உள்ளீர்கள். நீங்கள் நன்மையை ஏவுகிறீர்கள், தீமையைத் தடுக்கிறீர்கள், அல்லாஹ்வை நம்புகிறீர்கள் (இதுபோன்று) வேதக்காரர்களும் இறை நம்பிக்கை கொண்டிருந்தால் அவர்களுக்கு அது நன்மையாக இருந்திருக்கும். அவர்களில் இறை நம்பிக்கையாளர்களும் இருக்கின்றார்கள் இருப்பினும் அவர்களில் பெரும் பாலானவர்கள் பாவிகளாவார்கள். 3:110 அவர்கள் அல்லாஹ்வின் மீதும் இந்த நபியின் மீதும் அவர்களுக்கு அருளப்பெற்றதன் மீதும் நம்பிக்கை கொண்டிருப்பார்களாயின் (இறைவனை மறுக்கும்) அவர்களை உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொண்டிருக்க மாட்டார்கள்.

எனினும் அவர்களில் பெரும்பாலானவர்கள் பாவிகளாவார்கள். 5:81,59 எப்படி (அவர்களுக்குப் பாதுகாப்பு ஒப்பந்தம் நிலைத்திருக்க முடியும்) அவர்களோ உங்களை விட மேலோங்கும்போது உறவையோ, உடன்படிக்கையையோ பொருட்படுத்த மாட்டார்கள் அவர்கள் தமது வாய்(ப் பேச்சு)களால் உங்களைத் திருப்திப்படுத்துகின்றனர். அவர்களின் உள்ளங்களோ (அதை) மறுக்கின்றன அவர்களில் பெரும்பாலானவர்கள் பாவிகள் ஆவர். 9:8 (நபியே!) அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவீராக! அவர்கள் மனோ விருப்பங்களைப் பின்பற்றி விடாதீர்கள் அல்லாஹ் உமக்கு அருளிய சிலவற்றின் தொடர்பாக உம்மை அவர்கள் குழப்பி விடலாம் என்பதால் அவர்களிடம் விளிப்போடு இருப்பீராக! அவர்கள் (உமது தீர்ப்பையும்) புறக்கணித்தால் அவர்கள் புரிந்த பாவங்கள் சிலவற்றுக் காக அவர்களைச் சோதிப்பதற்காகவே அல்லாஹ் விரும்புகின்றான் என்பதைப் புரிந்து கொள்வீராக!

மனிதர்களில் பெரும் பாலானோர் பாவிகளாகவே உள்ளனர். 5:49,62 பெரும்பாலானவர்களைப் பாவிகளாகவே கண்டோம் : அவர்களில் பெரும்பாலானோரிடம் (கொடுத்த) வாக்கைப் பாதுகாக்கும் பண்பை நாம் காணவில்லை அவர்களில் பெரும்பாலானோரைப் பாவிகளாகவே கண்டோம். 7:102, 5:62 பெரும்பாலானோர் பாவிகளாகவே இருந்தனர் : அன்றியும் திடமாக நாமே நூஹையும் இப்ராஹீமையும் (தூதர்களாக) அனுப்பினோம். இன்னும் அவ்விருவரின் சந்ததியில் நபித்துவத்தையும், நெறிநூலையும் ஏற்படுத் தினோம் (எனினும் அவர்களில்) நேர்வழி பெற்றவர்களும் உண்டு எனினும் அவர்களில் பெரும்பாலானோர் பாவிகளாகவே இருந்தனர். 57:26

அவர்களில் பெரும்பாலானோர் பாவத்திலும், அக்கிரமத்திலும் விலக்கப்பட்ட பொருட்களை உண்பதிலும் விரைந்து செயல்படுவதை (நபியே!) நீர் காண்பீர் அவர்கள் செய்வதெல்லாம் தீமையேதாம். 5:62 பெரும்பாலானோர் பாவிகளாகவே இருக்கின்றனர் : அவர்கள் அல்லாஹ்வின் மீதும் நபியின் மீதும் அவர்கள் மீது இறக்கப்பட்ட (நெறி நூல்)லின் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தார்களானால் அவர்கள் காஃபிர்களைத் (தங்களின்) உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொண்டிருக்கமாட்டார்கள்.

ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் பாவிகளாகவே இருக்கின்றனர். 5:81 இன்னும் அல்லாஹ் அருள் செய்த (சட்டதிட்டத்)தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக. அவர்களுடைய மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர் அல்லாஹ் உம்மீது இறக்கி வைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பி விடாதபடி அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக! (உமது தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விடுவார்களானால் சில பாவங்களின் காரணமாக அவர்களைப் பிடிக்க நிச்சயமாக அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக! மேலும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலானோர் பாவிகளாகவே இருக்கின்றனர். 5:49

பெரும்பாலானோர் பாவிகளாக இருக்கின் றீர்கள் : வேதம் உடையவர்களே! அல்லாஹ்வின் மீதும், எங்கள் மீது இறக்கப்பட்ட (நெறிநூல்)தின் மீதும் எங்களுக்கு முன்னர் இறக்கப்பட்டவை மீதும் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்பதைத் தவிர வேறு எதற்காகவும் நீங்கள் எங்களைப் பழிக்கவில்லை. நிச்சயமாக உங்களில் பெரும்பாலானோர் பாவிகளாக இருக்கின்றீர்கள் என்று (நபியே!)நீர் கூறுவீராக. 5:59

பெரும்பாலானோர் பாவிகளாகவே ஆகிவிட்டனர் : இறை நம்பிக்கை கொண்டோர்களே அவர்களுக்கு அவர்களுடைய இருதயங்கள் அல்லாஹ்வையும், (அவனிடத்திலிருந்து) இறங்கியுள்ள உண்மையான (இந்)நெறி நூலையும் நினைத்தால் அஞ்சி நடுங்கும் நேரம் (இன்னும்) வரவில்லையா? மேலும் அவர்கள் முன்னர் நெறிநூல் கொடுக்கப் பட்டவர்களைப் போன்று ஆகிவிட வேண்டாம் (ஏனெனில்) அவர்கள் மீது நீண்ட காலம் சென்றபின் அவர்களுடைய இருதயங்கள் கடினமாகிவிட்டன. அன்றி யும் அவர்களில் பெரும்பாலானோர் பாவிகளாகவே ஆகிவிட்டனர். 57:16

பெரும்பாலானோர் அறியாதவர்கள் ஆவர்: நாம் அவர்களிடம் வானவர்களையே அனுப்பினாலும் இறந்தவர்களை அவர்களிடம் (வந்து நேரில்) பேசும்படி செய்தாலும் எல்லாப் பொருட்களையும் அவர்களின் கண் எதிரே நாம் ஒன்று திரட்டினாலும் அல்லாஹ் நாடினால் தவிர அவர்கள் நம்பிக்கை கொள்ளப் போவதில்லை. ஆயினும் அவர்களில் பெரும்பாலானோர் அறியாத வர்களே ஆவர். 6:111

பெரும்பாலானோர் (உண்மையை) அறிவதில்லை : இந்தப் பூமியை உறுதி வாய்ந்த வசிப்பிடமாக ஆக்கி அதனிடையே ஆறுகளை உருவாக்கி அதற்கு முளைக(ளான மலைக)ளை அமைத்து இரு கடல்களுக்கிடையே ஒரு தடுப்பையும் ஏற்படுத்தியவன் தானே (சிறந்தவன்) அல்லாஹ்வுடன் வேறொரு கடவுளா? இல்லை அவர்களில் பெரும்பாலானோர் (உண்மையை) அறிவதில்லை. 27:61

(நபியே!) நிச்சயமாக என் இறைவன் தான் நாடுவோருக்கு வாழ்வாதாரத்தைத் தாராளமாக வழங்குகின்றான் (தான் நாடு வோருக்கு) அளவோடு வழங்குகின்றான் என்று நீர் கூறுவீராக! எனினும் மக்களில் பெரும்பாலானோர் (இதை) அறிவதில்லை. 34:36 மனிதனுக்கு ஒரு துன்பம் நேரும்போது அவன்(உதவி கேட்டு) நம்மை அழைக்கின் றான். பின்னர் நம்மிடம் இருந்து ஏதேனும் (ஓர்) அருட்கொடையை அவனுக்கு நாம் நல்கினால் தெரிந்துதான் இது எனக்கு வழங் கப்பட்டுள்ளது என்று கூறுகிறான் இல்லை அது ஒரு சோதனையாகும் எனினும் அவர் களில் பெரும்பாலானோர் (அதனை) அறிவதில்லை. 39:49

அவர்களுடைய தந்தை (யாகூப்) அவர்களுக்குக் கட்டளையிட்ட முறையில் அவர் கள் (ஊருக்குள்) நுழைந்தபோது (அவ்வாறு அவர்கள் நுழைந்தது) அல்லாஹ்விடமிருந்து அவர்களை எந்த வகையிலும் காப் பாற்றிவிடவில்லை. (எனினும்) யாகூப் தமது மனதில் இருந்த ஒரு தேவையை நிறைவேற்றிப் கொண்டார் (அவ்வளவுதான்) அவருக்கு நாம் கற்பித்தால் நிச்சயமாக அவர் அறிவுடையோராகவே இருந்தார். எனினும் மக்களில் பெரும்பாலானோர் (இதனை) அறிவதில்லை. 12:68

(நபியே!) ஒரு வசனத்தின் இடத்தில் மற்றொரு வசனத்தை நாம் மாற்றி அமைத்தால் “நீர் புனைந்துரைப்பவரே” என்று அவர்கள் கூறுகின்றனர். (உண்மையில்) தான் எதை அருளவேண்டும் என்பதை அல்லாஹ் நன்கறிந்தவன் மாறாக அவர்களில் பெரும்பா லானோர் அறிவதில்லை. 16:101

அதையடுத்து அவரை அவருடைய தாயாரிடமே திரும்பச் சேர்த்து விட்டோம் அவர் கண் குளிர்ச்சி அடைவதற்காகவும் கவலை கொள்ளாமல் இருப்பதற்காகவும் நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு மெய்யானதுதான் என்பதை அவர் அறிந்து கொள்வதற்காகவும் (இவ்வாறு செய்தோம்) ஆயினும் அவர்களில் பெரும்பாலானோர் இதை அறிவதில்லை. 28:13

(நபியே!) நீர் அவர்களிடம் வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று கேட்டால் அவர்கள் அல்லாஹ் என்றே நிச்சயமாகக் கூறுவார்கள். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று நீர் கூறுவீராக. ஆயினும் அவர்களில் பெரும்பாலானோர் (உண்மையை) அறிவதில்லை. 31:25

(நபியே! உம்மிடம்) இவர்கள் உம்முடன் சேர்ந்து நாங்களும் (நீர் செல்லும்) வழியைப் பின்பற்றினால் எங்கள் பூமியில் இருந்து நாங்கள் சூரையாடப்பட்டு விடுவோம் என்று கூறுகின்றனர். பாதுகாப்பான புனிதத்தலத்தில் இவர்களுக்கு நாம் இட மளிக்கவில்லையா? உணவாதாரத்திற்காக நம்மிடம் இருந்து எல்லா வகையான கனி வகைகளும் அங்கு கொண்டு வந்து குவிக்கப் படுகின்றன. ஆயினும் அவர்களில் பெரும் பாலானோர் அறிவதில்லை. 28:57

(நபியே!) நிச்சயமாக என் இறைவன் தான் நாடுவோருக்கு வாழ்வாதாரத்தைத் தாராளமாக வழங்குகின்றான். (தான் நாடு லோருக்கு) அளவோடு வழங்குகின்றான் என்று நீர் கூறுவீராக எனினும் மக்களில் பெரும்பாலானோர் (இதை) அறிவதில்லை. 34:36 (நபியே!) உண்மை வழியில் நின்று இம் மார்க்கத்தை நோக்கி உமது முகத்தைத் திருப்புவீராக எந்த இயற்கையோடு மனிதர்களை அல்லாஹ் படைத்துள்ளானோ அந்த இயற்கையான (இறை மார்க்கத்)தையே (நீர் பின்பற்றுவீராக) அல்லாஹ்வின் படைப்பிற்கு மாற்றம் கிடையாது. இதுவே சீரான மார்க்கமாகும். எனினும் மக்களில் பெரும்பாலானோர் (இதை) அறிவதில்லை. 30:30

இதோ வானங்களிலுள்ளவையும், பூமி யில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன அறிக! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மை யானதாகும். ஆயினும் அவர்களில் பெரும் பாலானோர் (இதை) அறிவதில்லை. 10:55

எகிப்தில் அவரை விலைக்கு வாங்கியவர் தமது மனைவியிடம் இவரை (நம்மிடம்) கண்ணியமாகத் தங்கவை. இவர் நமக்குப் பயன்படலாம் அல்லது நாம் இவரை (வளர்ப்பு) மகனாக ஆக்கிக் கொள்ளலாம் என்று கூறினார். இவ்வாறு அப்பூமியில் யூசூபுக்கு நாம் வாய்ப்புகளை வழங்கினோம். (மேலும் கனவு உள்ளிட்ட) செய்திகளின் விளக்கத்தை (யும்) அவருக்கு நாம் கற்பிப்பதற்காக(வும் இவ்வாறு செய்தோம்) அல்லாஹ் தனது காரியத்தைச் சாதிப்பவன் ஆவான் எனினும் மக்களில் பெரும்பாலானோர் (இதை) அறிவதில்லை 12:21

அவர்களை அல்லாஹ் ஏன் வேதனை செய்யக்கூடாது? அவர்களோ (கஃபாவாகிய) புனிதப் பள்ளிவாசலுக்கு உரிமை படைத்தவர்களாக இல்லாமலிருந்தும் அதை விட்டு (மக்களை)த் தடுக்கின்றனர். இறையச்சமுடையோரைத் தவிர (வேறு யாரும்) அதற்கு உரிமை படைத்தோர் அல்லர் எனினும் அவர்களில் பெரும்பாலானோர் அறிவதில்லை. 8:34

(நபியே!) யுக முடிவு நாள் எப்போது வரும்? என்று உம்மிடம் அவர்கள் வினவுகின்றனர். அதைப் பற்றிய அறிவு எனது இறைவனிடமே உள்ளது. அது வரும் நேரத்தை அவனைத் தவிர வேறு யாரும் வெளியிட முடியாது அது வானங்களிலும், பூமியிலும் கனமான(தொரு) நிகழ்ச்சியாக அமையும். அது உங்களிடம் திடீரென்றே வரும் என்று நீர் கூறுவீராக! நீர் அதைப் பற்றி நன்கு பரீட்ஷயம் உள்ளவர் என்ப தைப் போன்று உம்மிடம் அவர்கள் வினவு கின்றனர். அதைப் பற்றிய அறிவு அல்லாஹ் விடமே உண்டு என நீர் கூறுவீராக. எனினும் மக்களில் பெரும்பாலானோர் (இதை) அறிவதில்லை. 7:187

இறந்தோரை அல்லாஹ் மீண்டும் (உயிர் கொடுத்து) எழுப்ப மாட்டான் என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுப் பலமாகச் சத்தியம் செய்கின்றனர். அவ்வாறன்று அல்லாஹ் தன்மீது விதியாக்கிக் கொண்ட வாக்குறுதியாகும் (இது) ஆயி னும் மனிதர்களில் பெரும்பாலானோர் (இதை) அறிவதில்லை. 16:38 (நபியே!) அவர்கள் அல்லாஹ்வை அன்றி வேறு கடவுள்களை ஏற்படுத்திக் கொண்டனரா? நீங்கள் உங்கள் சான்றைக் கொண்டு வாருங்கள்.

இதோ என்னுடன் இருப்பவர்களுக்கான அறிவுரையும் உண்டு எனக்கு முன் இருந்தவர்களுக்கான அறிவுரையும் உண்டு என்று நீர் கூறுவீராக எனினும் அவர்களில் பெரும்பாலானோர் உண்மையை அறிவதில்லை. 21:24 அவருடைய இறைவனிடமிருந்து அவருக்கு (நாங்கள் விரும்புகின்ற) ஓர் அற்புதம் அருளப்பட்டிருக்க வேண்டாமா? என்று அவர்கள் கேட்கின்றனர். (அத்தகைய) அற்புதத்தை அருள அல்லாஹ் ஆற்றல் உள்ளவன்தான் என்று (நபியே!) நீர் கூறு வீராக.

ஆயினும் அவர்களில் பெரும்பாலா னோர் (இதை) அறிவதில்லை 6:37 அவர்களுக்கு நன்மை வந்தால் இது எங்களுக்காகவே (வந்தது) என்றனர். (அதே நேரத்தில்) அவர்களுக்கு ஒரு துன்பம் நேர்ந்தால் மூஸாவையும் அவருடன் இருந்தவர்களையும் துர்க்குறியாகக் கருதினர். இதோ (பாருங்கள்) அவர்கள் துர்க்குறி(யாகக் கருதியது) அல்லாஹ்விடம் இருந்து வந்ததே எனினும் மனிதர்களில் பெரும்பாலானோர் (இதனை) அறிவதில்லை. 7:131 பெரும்பாலானோர் அறியமாட்டார்கள்:

அல்லாஹ்வின் வாக்குறுதியாகும். (இது) அல்லாஹ் தனது வாக்குறுதியை மீறமாட்டான். எனினும் மக்களில் பெரும்பாலா னோர் (இதை) அறியமாட்டார்கள். 30:6 அன்றியும் அநியாயம் செய்துகொண்டு இருந்தவர்களுக்கு நிச்சயமாக மற்றொரு வேதனையும் (இம்மையில்) உண்டு எனினும் அவர்களில் பெரும்பாலானோர் இதை அறியமாட்டார்கள். 52:47

மேலும் வானங்களையும், பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றை யும் விளையாட்டிற்காக நாம் படைக்கவில்லை. இவ்விரண்டையும் சத்தியத்தைக் கொண்டே அன்றி நாம் படைக்கவில்லை. எனினும் அவர்களில் பெரும்பாலானோர் (இதை) அறியமாட்டார்கள். 44:39 அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கின்றான். பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கின்றான். பின்னர் கியாம நாள் அன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான். இதில் சந்தேகமே இல்லை. எனினும் மனிதர்களில் பெரும்பாலானோர் (இதை) அறியமாட்டார்கள். 45:26

நிச்சயமாக வானங்களையும், பூமியை யும் படைப்பது மனிதர்களைப் படைப்பதை விட மிகவும் பெரியதாகும். எனினும் மனிதர்களில் பெரும்பாலானோர் அறிய மாட்டார்கள். 40:57 பெரும்பாலோர் அறிந்து கொள்வதில்லை: அல்லாஹ் (இருவரை) உவமை காட்டுகிறான். (ஒருவன் பிறரால்) உடைமையாக்கப்பட்ட அடிமை எதையும் (சுயமாகச்) செய்ய அவனால் முடியாது. இன்னொருவன் (யாரெனில்) அவருக்கு நாம் நம்மிடம் இருந்து எழிலான வாழ்வாதாரத்தை வழங் கினோம். அவர் அதிலிருந்து மறைமுகமா கவும், வெளிப்படையாகவும் (அறவழியில்) செலவு செய்கிறார் இவர்கள் இருவரும் சமமாவார்களா?

 எல்லாப் புகழும் அல் லாஹ்வுக்கே உரியன ஆயினும் அவர்களில் பெரும்பாலானோர் அறிந்து கொள்வ தில்லை. 16:75 அல்லாஹ் (இரு அடிமை மனிதர்களை) எடுத்துக்காட்டாகக் கூறுகின்றான். ஒரு மனிதனுக்கு சண்டைக்காரர்களான பங்காளிகள் (பலர் உரிமையாளர்களாக) உள்ளனர். இன்னொரு மனிதன் ஒரே ஆளுக்கு மட்டும் உரியவன் இவ்விருவரும் எடுத்துக்காட் டால் சமமானவர்களா? எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

ஆயினும் அவர்களில் பெரும்பாலானோர் அறிந்து கொள்வதில்லை. 39:29 அவனே அன்றி நீங்கள் வழிபட்டுக் கொண்டிருப்பவை யாவும் நீங்களும், உங்கள் முன்னோர்களும் சூட்டிக் கொண்ட (வெறும் கற்பனைப்) பெயர்கள் தவிர வேறில்லை. அவற்றுக்கு அல்லாஹ் எந்தச் சான்றையும் இறக்கி வைக்கவில்லை ஆட்சி அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. அவனே அன்றி (வேறு யாரையும்) நீங்கள் வழிபடக் கூடாது என்று அவன் (உங்களுக்குக்) கட்டளை இட்டிருக்கின்றான்.

இதுவே நேரான மார்க்கமாகும். ஆனால் மனிதர்களில் பெரும்பாலானோர் (இதை) அறிந்து கொள்வதில்லை. 12:40 (நபியே!) உம்மை நாம் மனிதர்கள் அனைவருக்கும் நற்செய்தி கூறுபவராகவும் எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பி உள்ளோம். எனினும் மக்களில் பெரும்பாலானோர் (இதை) அறிந்து கொள்வதில்லை. 34:28 பெரும்பாலானோர் அறியாமையால் தமது மனோ விருப்பப்படி மக்களை வழிதவறச் செய்கின்றனர்.

அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டதை உண்ணாமல் இருக்க உங்களுக்கு என்ன (நேர்ந்தது?) உங்களை நிர்ப்பந்திக்கப்பட்டாலன்றி (வேறு சமயங்களில் உண்ணக் கூடாதென) உங்களுக்கு அவன் எதை எல்லாம் தடை செய்திருக்கின்றான் என்பதை அவன் முன்பே விபரித்து விட்டான். ஆயினும் பெரும்பாலானோர் அறியாமையால் தமது மனோ விருப்பப்படி (மக்களை) வழி தவறச் செய்கின்றனர். 6:119, 5:77

வேதமுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் உண்மையில்லாததைக் கூறி வரம்பு மீறாதீர்கள்(உங்களுக்கு) முன்பு வழி தவறிச் சென்ற கூட்டத்தாரின் மனோ இச்சைகளை நீங்கள் பின்பற்றாதீர்கள். பெரும்பாலானோரை இவர்கள் வழி தவறச் செய்த துடன் தாங்களும் நேர்வழியை விட்டு விலகி விட்டனர் என்றும் (நபியே!) நீர் கூறுவீராக. 5:77

பெரும்பாலானோர் விளங்கிக் கொள்ளாதவர்களே! (நபியே!) நிச்சயமாக எவர்கள் (உமது) அறைகளுக்கு வெளியே இருந்து உம்மை இறைந்து அழைக்கின்றார்களோ அவர்களில் பெரும்பாலானோர் விளங்கிக் கொள்ளாதவர்களே! 49:4 பெரும்பாலானோர் விளங்கிக் கொள்வதில்லை : (அன்றைய அரபியரின் மூடப் பழக்க வழக்கங்களான) பஹீரா, சாயிபா, வஸீலா, ஹாம் ஆகியவற்றை அல்லாஹ் ஏற்படுத்த வில்லை மாறாக (ஏக இறையை) மறுத்தோர் தான் அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுகின்றனர் அவர்களில் பெரும் பாலானோர் விளங்கிக் கொள்வதில்லை. 5:103 ஷ

(நபியே!) வானில் இருந்து (மழை) நீரைப் பொழியச் செய்து அதன் மூலம் பூமியை அது செத்துப் போன பின்னர் உயிர் பெறச் செய்பவன் யார்? என்று அவர்களிடம் கேட்டால் (அப்போதும்) அல்லாஹ் தான் என்று நிச்சயமாக அவர்கள் (பதில்) கூறுவார்கள். “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

ஆயி னும் அவர்களில் பெரும்பாலானோர் (தமது முரண்பாட்டை) விளங்கிக் கொள்வதில்லை. 29:63 (நபியே!) தனது மனோ விருப்பத்தைக் கடவுளாக ஆக்கிக் கொண்டவனை நீர் கவனித்தீரா? அவனுக்கு நீர் பாதுகாவலன் ஆவீரா? அவர்களில் பெரும்பாலானோர் (உண்மையிலேயே) செவியுறுகிறார்கள் என்றோ விளங்கிக் கொள்கிறார்கள் என்றோ நீர் எண்ணிக் கொண்டீரா? அவர்கள் கால்நடைகளைப் போன்றவர்கள் தவிர வேறில்லை ஏன் (கால்நடைகளை விடவும்) மிகவும் வழிகெட்டவர்கள் ஆவர். 25:44

பெரும்பாலானோர் புறக்கணிக்கின்றனர் செவியேற்பதுமில்லை : அரபு மொழியில் அமைந்த இக்குர்ஆனுடைய வசனங்கள் அறிந்துணரும் மக்களுக் குத் தெளிவாக்கப்பட்டுள்ளன. நன்மாரா யம் கூறுவதாகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாகவும் (அது இருக்கிறது) ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் புறக்கணிக் கின்றனர் அவர்கள் செவியேற்பதுமில்லை. 41:3,4

பெரும்பாலானோர் உண்மையை அறிவதுமில்லை,  செவியேற்பதுமில்லை (மேலும்) அலட்சியம் செய்பவருமாவர். (நபியே!) அவர்கள் அல்லாஹ்வை அன்றி வேறு கடவுள்களை ஏற்படுத்திக் கொண்டனரா? நீங்கள் உங்கள் சான்றைக் கொண்டு வாருங்கள். இதோ என்னுடன் இருப்பவர்களுக்கான அறிவுரையும் உண்டு, எனக்கு முன் இருந்தவர்களுக்கான அறிவுரையும் உண்டு என்று நீர் கூறுவீராக. எனினும் அவர்களில் பெரும்பாலானோர் உண்மையை அறிவதுமில்லை. (மேலும்) அவர்கள் அலட்சியம் செய்பவருமாவர். 21:24

Previous post:

Next post: