எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7.
அல்லாஹ்வுக்கு ஒருமுகப்பட்ட அடிமைகளாக திகழுங்கள்.அவனோடு எதனையும் இணை வைக்காதீர்கள். யாரேனும் அல்லாஹ்வுக்கு இணை வைப்பாராயின் அவர் வானத்திலிருந்து விழுந்து விட்டவரைப் போன்று ஆகிவிடுகின்றார். இனி பறவைகள் அவரை இராஞ்சிக் கொண்டு செல்லும் அல்லது காற்று அவரைத் தூக்கிச் சென்று ஏதேனும் அதலபாதாளத்தில் எறிந்து விடும். அங்கு அவர் சின்னாபின்னமாகிவிடுவார்.
–அல் குர்ஆன்.22::31.
இணைவைக்கும் செயலை செய்யும் ஒரு மனிதனின் நிலையை, ஒரு உதாரணம் மூலம் அல்லாஹ் விளக்குகின்றான். பிற படைப்பினங்களை கடவுளாக வணங்குபவன் எந்த பிடிமானமும் இல்லாமல் வானத்திலிருந்து கீழே விழுந்து பறவைகளால் இழுத்துத் செல்லப்படும் பிணம் போன்றவன் என்று கூறுகிறான்.
அல்லாஹ் உதாரணமாக எதைச் சொன்னாலும் உண்மையல்லாததை ஒரு போதும் சொல்ல மாட்டான். இது அவனது சுன்னத் வழிமுறை. ஆனால் இன்று நாம் வாழும் உலகில், ஒரு மனிதனை இறாஞ்சிச் செல்லும் அளவிற்கு எந்தப் பறவையும் இல்லை.
மனித இனம் தோன்றுவதற்கு சுமார் 65 மில்லியன் வருடங்களுக்கு முன்பு இப்பூவுலகை ஆட்சி செய்தவைகள் இராட்சத டைனசராஸ் மிருகங்களும்,பறவைகளுமே. ஆனால் மனித இனம் தோன்றியதற்கு பிறகு பெரும் இராட்சதப் பறவைகள் இருந்ததாக புராணக் கதைகளில் குறிப்புகள் காணப்படுகின்றன. இந்துக் கடவுளான விஷ்ணுவின் வாகனம் கருடன். மகாபாரதக் கதையில் வரும் கருடன் யானையையே தூக்கிச் செல்லும் வலிமை கொண்டது.
அரபு மொழியில் இதை “ரூக்’ பறவை என்று அழைக்கின்றனர். பறவைகளின் அரசன் என்ற பொருளில் பார்ஸி மொழியில் “ஷாரூக்”. “ஷா” என்றால் அரசன், ரூக் என்றால் பறவை, பட்சி, “பட்சிராஜா”. சிந்துபாத்தின் கடற்பயண கதைகளின் போது இராட்சத ரூக் பறவைகள் இரு முறை கப்பல்களை தாக்கி சேதப்படுத்தியதாகவும், ஒரு முறை பறவையின் கால்களில் தன்னை கட்டிக் கொண்டு தனித் தீவிலிருந்து சிந்துபாத் தப்பித்ததாக குறிப்பிடுகிறார்.
தற்போது நம்மிடையே வாழும் பறவைகளில் மிகப் பெரியது..பறக்க இயலா நெருப்புக் கோழி சுமார் ஒன்பது அடி உயரமும், 150 கிலோ எடையும் கொண்டது.தன்னை விட எடை குறைந்த மனிதர்களை சுமக்கக் கூடியதே.ஆனால் மனிதர்களை இழுத்துச் செல்லும் ஆற்றல் இல்லை. பறக்கும் பறவைககளில் கோரி பஸ்டார்ட் (kori bustard) என்னும் தென் ஆப்பிரிக்கா பறவையானது 19 கிலோ எடையும் 2.5 அடி விரிந்த இறக்கையும் உடையது. அடுத்தது “ஆண்டியன் கழுகு” இது பதினைந்து கிலோ எடையும், பத்தரை அடிவிரிந்த இறக்கையும்கொண்டது. இவையெல்லாம் சிறு பிராணிகளை மட்டுமே தூக்கிச் செல்லும் வலிமை உள்ளவை..
அல்லாஹ் உதாரணம் காட்டும், மனிதர்களை இறாஞ்சிச் செல்லும் பறவைகள் இவ்வுலகில் இருந்ததாக தொல்லியல் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. அதற்கான தொல்லியல் எச்சங்கள் இன்றும் அருங்காட்சி ஆய்வுக்கூடங்களில் (Museum) இருக்கின்றன. நியூசிலாந்து பூர்வீக குடிகளான மாவோரிகளின் கதைகளில் வரும் ராட்சதப் பறவைகள் (Hasst Eagles) உண்மையில் வாழ்ந்த பறவைதான் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
https://www.smithsonianmag.com/smart-news/legendary-human-eating-bird-was-real-probably-could-have-eaten-people-89257268/
A massive man-eating bird of prey from ancient Maori legend really did exist, according to new research.
Scientists have known about the existence of Haast’s eagle for over a century based on excavated bones, but the behaviour of these giant birds was not clear.
Thunder bird என்று சொல்லக்கூடிய இடியோசை இராட்சத பறவைகளும் இவ்வுலகத்தில் வாழ்ந்துள்ளதாக தொல்லியல் எச்சங்கள் கூறுகின்றன. சமீபத்தில் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் இது போன்ற இராட்சத பறவைகளை பார்த்ததாக ஏராளமான மக்களின் சாட்சியம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
https://www.thoughtco.com/the-giant-thunderbird-returns-3862215
https://www.juneauempire.com/life/impossibly-large-bird-spotted-in-mendenhall-valley/
கடந்த 24,- மார்ச்,2018 அன்று இலங்கை முல்லைத்தீவு கடற்பரப்பில் ஒரு இராட்சதப் பறவை ஆழ்கடலை நோக்கி பறந்து சென்றதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு ஆழ்கடலில் நடந்த சம்பவத்தால் அதிர்ச்சியில் மக்கள்!
ஒன்று பறந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடற்கரையில் இருந்து 500 மீற்றர் தொலைவில் தென்பட்ட இந்த இராட்சத பறவை வட-கிழக்கு கடல் நேராக ஆழ்கடல் நோக்கி பறந்து சென்று மறைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
www.yarlitrnews.com/2018/03/blog-post_578.html
(24,- மார்ச்,2018) அன்று முல்லைத்தீவு ஆழ்கடல் நோக்கி இராட்சத பறவை.
இதல்லாமல் கடந்த வாரம் (12- Sep.2018. )வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரையில் தென் ஆப்பிரிக்காவிற்கு கிழக்கே உள்ள மடகாஸ்கர் தீவில் நடந்த தொல்லியல் ஆய்வில், சுமார் 750 வருடங்களுக்கு முன்பு இருந்ததாக சொல்லப்படும் இராட்சதப் யானைப் பறவை (Elephant bird) களின் எலும்புக் கூட்டை கண்டெடுத்தனர். அந்த எலும்புகளில் காணப்பட்ட வெட்டுக் காய அடையாளம் மூலம் அங்கிருந்த பூர்வ குடிகள் இப்பறவைகளை வேட்டையாடி அழித்திருக்கலாம் என்று கருதுகிறார்கள்.
யானைப் பறவையானது (ஏப்யோர்னிஸ்) சுமார் பத்தடி உயரமும், சுமார் 650-860 கிலோ எடையும் கொண்டது. ஆனாலும் இது நெருப்புக் கோழியைப் போல் பறக்கவியலாத ஒன்று ஆயினும் மணிக்கு எழுபது கி.மீ வேகத்தில் குதிரையை விட வேகமாக ஓடக் கூடியது. கடினமான அலகும்,,, உறுதியான கழுத்தும் கொண்டவை. சுமார் எழுபது கிலோ எடை கொண்ட மனிதனை இழுத்துச் செல்லும் வலிமை உடையது.
இது இடும் முட்டை, அழிந்து போன டைனாசராஸ் முட்டைகளை விட மிகப் பெரியவை. பதினேழாம் நுற்றாண்டு வரை உயிர் வாழ்ந்த இந்தப் பறவைதான் உலகிலேயே மிகப்பெரியது.அதே வசனத்தில் அல்லாஹ் வேறொரு உதாரணம் மூலம் இணை வைப்பவர்களின் நிலையை சுட்டிக் காட்டுகின்றான்…”… பறவைகள் அவரை இராஞ்சிக் கொண்டு செல்லும் அல்லது காற்று அவரைத் தூக்கிச் சென்று ஏதேனும் அதலபாதாளத்தில் எறிந்து விடும். அங்கு அவர் சின்னாபின்னமாகி விடுவார்.
–அல் குர்ஆன்.22::31.
புயல், சூறாவளி காற்று கடும்வேகத்தில் அடிக்கும் போது அதில் மாட்டிய மனிதனை அது தூக்கிச் சென்று வேறிடத்தில் எறிந்து விடுவதை நாம் பார்க்கிறோம்.பொதுவாக புயலானது சுமார் மணிக்கு ஐம்பது மைல் வேகத்தில் வீசும்போது… நம்மால் நேரடியாக நடக்க முடியாது. அதே சமயம் அப்புயல் மணிக்கு நூறு மைல் வேகத்தை எட்டும் போது .நமது கால்கள் தரையை தொட முடியாமல் அலக்காக நம்மை தூக்கி சென்றுவிடும்.புயல் வேகம் குறைந்து நமது எடையை தூக்க இயலாநிலையில் கீழே எறிந்து விடும். இதே கதியையே, பிற படைப்புகளை கடவுளாக வணங்குகிறவர்களின் நிலையும் இருக்கும். என்பதை அல்லாஹ் உதாரணமாக விளக்குகிறான்.
ஆகவே கொடிய இணை வைக்கும் பாவத்திலிருந்து நாம் விலகிக் கொள்வோம்.