ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்

in 2019 ஜனவரி

 MTM  முஜீபுதீன், இலங்கை

2018 டிசம்பர் தொடர்ச்சி……

மனிதன் பொருளாதாரப் பொருட் களைப் பரிமாற்றிக் கொள்வதற்கு பல பரிமாற்றச் சாதனங்களைப் பயன்படுத்து கிறான். அவை சரக்குப் பண்டங்களும், பண வகைகள், பிரதிப் பணங்கள் பிரதானமாக அமைகின்றது. இன்று உள்ளீட்டுப் பெறுமதி குறைந்ததால், சில்லரை நாணயங்களும் முக்கியம் பெறுகின்றன. அத்துடன் இலத் திரனியல் பணவகைகளும் பண பதுக்கலில் தாக்கத்தினை ஏற்படுத்துவதைக் காணலாம். இன்று பொருட்களின் விலை ஏற்ற இறக்கங்களுக்கு பொருட்களின் கேள்வி பதுக்கல் சக்திகள் மட்டும் காரணமாக அமைவதில்லை.

ஒவ்வொரு நாடுகளும் ஏட்டிக்கு போட்டியாக மேற்கொள்கின்ற பணக் கொள்கை, இறைக் கொள்கை, அந்நிய செல வாணிக் கொள்கை, நேரடிக் கொள்கை சார்ந்த கருவிகளை பயன்படுத்தி மேற் கொள்கின்ற வணிக, பொருளாதார போர்களும் பணச் சந்தையிலும் மூலதனச் சந்தை யிலும் பெரும் பாதிப்புகளை தோற்றுவிக்கின்றன. இது பொருட்களின் விலைகள் இடத்துக்கிடம் பெரிய ஏற்றத்தாழ்வுகளைத் தோற்றுவித்து உலக மனித சமுதாயங்களில் வருமான பகிர்வில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. இது மக்கள் மத்தியில் வறுமையும், கீழ் உழைப்பும், ஊட்டச்சத்து குறைபாடும், நோய்களும், தாய், சிசு, இறப்பு விகிதங்கள் அதிகரிக்க காரணமாக அமை கின்றது. இதனால் குற்றச் செயல்களும் அதி கரிக்கின்றன. சமுதாயங்கள் அரசுகளாலும், மத புரோகிதர்களாலும் சமுதாயத்தினைப் பிரித்து பயங்கரவாதத்தினை விதைக்க அடிப்படையாக அமைகின்றன.

அவற்றைத் தடுப்பதற்கு ஒரே வழி இறுதி இறைநெறி நூலான அல்குர்ஆன் போதனைப்படி நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழியில் செல்வதா கும். இதற்கு இஸ்லாம் என்ன நிவாரணங் களை காட்டுகின்றது என அறிந்து, இறுதி இறைத் தூதர் அவர்கள் நடைமுறைப்படுத்திய பொருளாதார திட்டங்களை கவனிப்போம். வறுமையை நீக்க வழிகாட்டும் ஜகாத்தும், ஸதகாவும் : ஜகாத் என்பதற்கு கட்டாயக் கொடை எனலாம். ஜகாத் என்னும் சொல்லுக்கு வளர்ச்சி, தூய்மை ஆகிய கருத்துக்களும் உண்டு. ஒரு முஸ்லிம் ஹதீஃத்களில் குறிப் பிட்ட அளவிலும் மேலதிகமாக விற்பனைக்கு பொருட்களை இருப்பாக வைத்திருத்தல், அல்லது தங்கம், வெள்ளி அல்லது பணத்தை ஒரு வருடத்திற்கு மேல் இருப்பாக தேக்கி வைத்திருந்தால் அதிலிருந்து இரண்டரை சதவீதம் கட்டாயமாகத் ஜகாத் வழங்க வேண்டும். அதுபோல் வேளாண்மைப் பயிர்களான கோதுமை, அரிசி, பேரீச்சம்பழம் போன்றவற்றுக்கு ஹதீஃத்களில் கூறப்பட்டுள்ள அளவுக்கு அதிகமாக விளைந்த பொருளில் அறுவடை செய்யும்போது, நீர்ப்பாசன செலவு செய்து பின் விளைந்த பயிருக்கு 5 சதவீதமும் ஜகாத் வழங்க வேண்டும்.

அதுபோல் ஆடு, மாடு, ஒட்டகம் வைத்திருப்பவர்கள் ஹதீஃத்களில் குறிப்பிட்ட நியதியின்படி ஜகாத் வழங்குவது கட்டாய கடமையா கும். ஒவ்வொரு வருடமும் இவ்வாறு ஜகாத் சேகரிக்கப்பட்டு ஹதீஃதில் கூறப்பட்ட 8 கூட்டத்தினருக்கு பகிர்ந்தளிப்பது கடமையாகும். அல்குர்ஆன் ஜகாத் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

அல்லாஹ் கூறுகின்றான் :

“தொழுகையை நிலைநிறுத்துங்கள், ஜகாத்தையும் ஒழுங்காகக் கொடுங்கள். ருகூஃ செய்பவரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்” (அல்குர்ஆன் : 2:43) அல்லாஹ் மனித சமுதாயம் வாழ்வதற் காக பல மூலவளங்களை படைத்துள்ளான். அவற்றைக் கொண்டு மனிதன் தமக்குத் தேவையான வடிவிலும், தரத்திலும் பொருட்களையும், சேவைகளையும் உற்பத்தி செய்து கொள்ள முடிகின்றது. அல்லாஹ்வின் ஏற்பாட்டின்படி மனிதன் பல வழிகளிலும் தமது வருமானங்களைத் திரட்டிக் கொள்கிறான். இவ்வருமானத்தினைப் பயன்படுத்தியே மனிதர்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

காரணிச் சந்தையில் ஏற்படுத்திய மாற்றங்களுக்கமைய மக்களில் ஒரு பகுதியினர் வாழ்க்கைத் தேவைக்கு மேலதிகமான வருமானத்தினைப் பெறுகின்றனர். அத்துடன் குறைந்த விலையுடைய வளங்களை உரிமை கொண்டுள்ள இன்னும் ஓர் பிரிவு மக்கள் குறைந்தளவு வருமானத்தினைப் பெற்றுக் கொள்கின்றனர். அதில் ஒரு பகுதியினர் தனது வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்வதற்குரிய வருமானம் இன்றி முழு வறுமையில் வாழ்கின்றனர். இவர்களை அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வரு மாறு இனங்காட்டுகிறான். கவனியுங்கள். (ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ் லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகள் விடுதலை செய்வதற்காகவும், கடன்பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், வழிப்போக்கர்களுக்குமே உரியவை.

(இது) அல்லாஹ் விதித்த கடமையாகும். அல்லாஹ் யாவும் அறிபவன், மிக்க ஞானமுடையோன். (அல்குர்ஆன் : 9:60) அந்த வசதியற்ற வகுப்பினரே ஜகாத் பெற தகுதியுடையோர் ஆவர். அவர்களைப் பற்றி கவனிப்போம். ஜகாத் பெறத் தகுதி பெற்றோர் :

  1. ஃபகீர் : இவர் முழு வறுமையால் பாதிக்கப்பட்ட ஏழைகள். இவர்கள் தொழில் இல்லாதவர்களும், மிகவும் வறுமையில் உயிர் வாழ்வதற்கு முடியாது இருப்போர்.
  2. மிஸ்கீன் : தமது தேவைகளை முழுமை யாக நிறைவு செய்ய முடியாத தரித்திர நிலையிலுள்ள மக்கள், இவர்கள் கீழ் உழைப்பைப் பெற்றுக் கொள்வோர்கள்.
  3. ஆமில் : தானத்தை வசூல் செய்யும் ஊழியர்கள்.
  4. முஅல்லபதுல் குலூப் :இஸ்லாத்தின்பால் அவர்களின் உள்ளங்கள் ஈர்க்கப்படு வதற்காக,
  5. அடிமைகளை விடுதலை செய்வதற்கா கவும்,
  6. காரிமூன் : கடன்பட்டிருப்பவர்கள்,
  7. பீஸபீலில்லாஹ் : அவர்கள் அல்லாஹ் வின் பாதையில் பல்வேறு வகைகளிலும் ஜிஹாத் செய்வோர்,
  8. இப்னு ஜபீல் : உரிய இடம் அடைவதற்கு முடியாது துன்புறும் வழிப்போக்கர். இவ்வாறு தமது அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய முடியாது தவிக்கும் மக்களுக்கு உதவுவதன் மூலம் மக்களிடம் ஏற்படும் வறுமையைப் போக்க முடியும். இதனால் எல்லா மக்களையும் தமது அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்த மக்களாக மாற்ற முடியும். இதனால் பொருளாதார வளர்ச்சியின் நன்மைகளை எல்லா மக்களும் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். ஒரு தனி நபரின் செல்வங்களில் பின்வரும் அளவுக்கு மேல் பொருள் காணப் படின் அவற்றுக்கு ஜகாத் கொடுத்தல் கட்டாயமாகின்றது.

பின்வரும் ஹதீஃதை கவனியுங்கள் :

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :

“ஐந்து ஊக்கியாவுக்குக் குறைந்த அளவு (வெள்ளியில்) ஜகாத் இல்லை. ஐந்து ஒட்டகங்களுக்குக் குறைவாக இருந்தால் அவற்றில் ஜகாத் இல்லை. ஐந்து வஸக்குக்குக் குறைவான(ஒரு வஸக்ஸ்ரீ 60 ஸாவு) தானியத்தில் ஜகாத் இல்லை.” (புகாரி:1405) சாதாரணமாக பின்வரும் அடிப்படையில் ஜகாத் கடமையாகிறது. தங்கத்தின் உச்சவரம்பு (நிஸாப்) 20 மிஸ்கால் ஆகும். (85 அல்லது 87.48கி.கிராம்) மேல் உள்ளவற் றுக்கு 2.5 சதவீதம் வெள்ளியின் உச்சவரம்பு 5 ஊகியா, சுமார் 615 கிராம் இருப்பின் 2.5 சதவீதம் ஜகாத் கடமை. வேளாண்மை பயிர்களுக்கு 5 வஸ்க்களுக்கு மேல் 957 கிராம்களுக்கு அல்லது அதற்கு மேல் ஜகாத் கடமையாகும். அறுவடையின் போது கொடுத்தல் வேண்டும். ஜகாத் இரு முறையில் வழங்கப்படலாம்.

அவை:

  1. பொருட்கள் அடிப்படையில் 2. பண வடிவம் சார்ந்த அடிப்படையில் சில இஸ்லாமிய புரோகிதர்கள் பொருள் வடிவில் கொடுப்பதற்குப் பணிக்கப்பட்ட ஜகாத் முறையை பண வடிவில் கொடுக்க வழிகாட்டுகின்றனர். இதனால் ஜகாத் பெறத் தகுதியுடையோர் பாதிக்கவும், இதனால் அல்லாஹ் வகுத்த பொருளாதார சமநிலை பாதிக்கப்படவும் இட முண்டு. ஆகவே இவ்வாறான பாதிப்புகள் ஏற்படாது பாதுகாப்பது இஸ்லாமிய அறிஞர்களின் கடமையாகும். (அ) வியாபாரச் சரக்குகள், வேளாண்மைப் பொருட்கள், உண்பதற்கு அனுமதித்த கால்நடைகள். இவ்வாறு பொருட்களில் ஜகாத் வழங்குவதனால் பல அனுகூலங்களை ஜகாத் பெறத் தகுதியுடையோர் பெற்றுக் கொள்ள முடியும்.

அவை.

  1. நுகர்வோருக்கு தமது தேவைக்கான பொருள் கிடைப்பதனால், சந்தைக் கேள்வி அதிகரித்து விலைகள் சந்தையில் அதிகரித்து பணவீக்கம் அதிகரிப்பதில்லை.
  2. உற்பத்தியாளர், மொத்த வியாபாரி களுடன் கூடிய தொடர்பு ஜகாத் பெறத் தகுதியுடையோருக்கு ஏற்படுகின்றது.
  3. ஜகாத் பெறத் தகுதியுடையவர்களுக்குக் கிடைத்த மேலதிக பொருட்களை சந்தையில் விற்பனை செய்யக்கூடிய சந்தர்ப் பங்கள் இருக்கின்றன. இதனால் சந்தை யில் வியாபாரத் தொடர்பு ஏற்படுவ தனால், புது வியாபார வருமான வாய்ப் புகள் ஏற்படும். இதனால் வருகின்ற வருடங்களில் ஜகாத் கொடுக்கக் கூடியவராக மாற முடிகின்றது.
  4. தமக்கு இலவசமாக உணவுப் பொருட் கள் கிடைப்பதால் சந்தையில் கூடிய சில்லறை விலையில் பொருட்கள் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை.
  5. கால்நடைகளான ஒட்டகம், மாடு, வெள்ளாடு, செம்மறி ஆடு ஜகாத்தாக கிடைப்பதால் அவற்றிலிருந்து பால், செம்மறி உடை, விவசாய உரம், போக்கு வரத்துச் சாதனம், விவசாய உற்பத்தித் தேவைகளுக்குப் பயன்படுத்தல், கால்நடைப் பண்ணைகள் அமைத்து உற்பத்தித் துறைக்கு பங்களிக்க முடியும். இதனால் அவர்களின் வறுமை நீங்கி பொருளாதாரத்திற்கு பங்களிப்புச் செய்பவர்களாக மாறமுடியும்.
  6. வியாபாரிகள் விற்பனைக்காக வைத்திருக்கும் பொருட்களின் இருப்புகளுக்கும் ஜகாத் 2.5 சதவீதம் வருட இருப்புகளுக்கு கடமையாகிறது. இந்த வியாபாரப் பொருட்கள் உற்பத்தியாளர்களிடமும், மொத்த, சில்லçரை வியாபாரி களிடமும் இருப்பாக காணப்படுகின்றன. அப்பொருட்கள் நுகர்வுப் பொருட்களாகவும், கைத்தொழில் பொருட்களாகவும், பங்கு முதல்களாகவும் காணப்படலாம். இவற்றை உரிய முறையில் ஜகாத் பொருளாக வசூலித்து பல்வேறு வழிகளில் எளிய மக்களுக்கு வழங்குவதன் மூலமாக ஜகாத் பெறத் தகுதியுடையவர்களின் வறுமையைப் போக்கலாம், அடிமைத் தன்மையை போக்கலாம், கடன் சுமையைத் தவிர்க்கலாம், திக்கற்ற வழிப்போக்கர் களுக்கு நிவாரணம் கிட்டும். இவற்றில் நுகர்வுப் பொருட்கள் பல்வேறு வகைப்பட்டவைகளாக காணப்படலாம். இந்த நுகர்வுப் பொருட்கள் ஏழைகளின் அத்தியாவசியத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, சமூக நலன்கள் சார்ந்ததாக இருக்க முடியும். அவற்றைப் பொருத்தமான ஏழைகளுக்கு வழங்குவதன் மூலம் அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து அவர்களை, அத்தேவை களில் தன்னிறைவுடையவர்களாக மாற்ற முடியும்.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்…)

Previous post:

Next post: