முஹம்மத் சலீம், ஈரோடு.
சகோதரர் அபூ அப்தில்லாஹ் அவர்கள் அந்நஜாத் ஆரம்பித்த 1986 ஏப்ரல் மாதத்திலிருந்து 1987 ஜுன் வரை PJவுடன் மிக நெருங்கிய தொடர்பில் இருந்தார். PJவுடன் 15 மாதங்கள் நெருங்கி பழகியதன் அடிப் படையில் PJ ஒரு பெரும் பொய்யன், உள் ஒன்று வைத்து வெளியில் வேறொன்றை பேசும் நயவஞ்சகத்தன்மை உடையவர், அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு துணிந்து பொய் சத்தியம் செய்பவர், தனக்குத் தேவைப்பட்டால் ஒருவரை வானளாவப் புகழ்பவர், தனக்கு வேண்டாதவர்கள் மீது வீண் பழி சுமத்துபவர், அவதூறுகளை அள்ளி வீசுபவர், அண்டப்புளுகர், வாக்குறுதிகளை அலட்சியம் செய்பவர், மத வியாபாரி, தொழுகையில்லாதவர், குர்ஆன் ஹதீஃதை தனது கருத்துக்கு ஏற்றவாறு தவறான பொருள் கொடுத்து மார்க்கத்தை வளைப்பவர், தன்னை கண்மூடி பின்பற்றும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளவர், கேடுகெட்ட பேச்சாளர் என்றெல்லாம் PJவை குறித்து கடும் குற்றச்சாட்டுகளை அபூ அப்தில்லாஹ் அவர்கள் தான் மரணிக்கும் வரை உரிய ஆதாரத்துடன் தொடர்ந்து அந்நஜாத்தில் எழுதி வந்தார்கள். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை PJ சிறிதும் கண்டு கொள்ளாமலும், தன்னைத் திருத்திக் கொள்ளாமலும் குற்றச்சாட்டுகளுக்கு முறையான பதிலை தராமல் தன்னை மிகப் பெரிய சீர்திருத்தவாதி என்பதை போன்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருந்தார்.
மேலும் தனது ரசிகர் பட்டாளத்தை வைத்து அபூ அப்தில்லாஹ் அவர்களை இழிவுபடுத்தியும், தரக்குறைவான வார்த்தைகளை எழுத வைத்தும் தனது வழிகேட்டை மேலும் மேலும் உறுதிப்படுத்தி வந்தார். இந் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு பெண்ணிடம் ஆபாசமாக PJ பேசிய பத்து நிமிட ஆடியோ ஒன்று வெளியானது. அந்த ஆடியோவில் பேசியது PJதான் என்பது ஊர்ஜிதமானவுடன் TNTJவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அவர் தூக்கியயறியப்பட்டார். ஜமாஅத்திலிருந்து நீக்கிய பிறகு மூன்று மாதங் கள் வாய் திறக்காமல் மெளனமாக இருந்து விட்டு தற்போது LIVE நிகழ்ச்சி என்ற பெயரில் பாலியல் தொடர்பாக தன்மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார். அந்த பதிலில் TNTJ மாநில நிர்வாகிகள் குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு என்னை கட்டாயப்படுத்தினார்கள். ஆகவேதான் சில சூழ்நிலை காரணமாக நான் செய்யாத குற்றத்தை செய்ததாக கூறினேன். நான் நிரபராதி, TNTJ மாநில நிர்வாகிகள் சதி செய்து என்னை சிக்க வைத்துவிட்டனர்.
நான் நிரபராதி என் பதை நிரூபிக்க இப்போது தயாராக உள்ளேன். ஆகையால் PJ பொது விசாரணைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என் றெல்லாம் கூறினார். Pமூவின் இந்த பதிவை அடுத்து அவர் உருவாக்கிய கொள்கை கூட்டம் அவருக்கெதிராக பேசி பல வீடியோக்கள் வெளியிட்டுள்ளனர். அவை க்ஷுலிற் TNTjல் வலம் வருகின்றன.
PJவின் மற்றொரு ஸிஷ்ஸe நிகழ்ச்சியில் ஒருவன் நீண்ட நாள் வெளியூரில் தங்கியிருந்து இரவு நேரத்தில் ஊருக்கு வந்தால் மனைவியிடம் முன்னரே தகவல் தெரிவிக்காமல் திடீரென்று செல்லக் கூடாது என்ற ஹதீஃதை சொல்லி விட்டு, இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் ஏன் கூறினார்கள் என்றால் மனைவி ஏதேனும் தவறான செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அதை கணவன் பார்த்துவிடக்கூடாது ஆகவே தான் இந்த தடையை நபி(ஸல்) அவர்கள் போட்டார்கள் என்ற படுமோசமான கருத்தை PJ கூறினார். இந்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்து TNTJ இயக்கத்தினர் ஐந்து கட்டுரைகள் எழுதி பதிலளித்துள்ளனர். அந்த பதிலில் PJவை குறித்து எழுத்துப்பூர்வமாக அவர்கள் செய்த விமர்சனத்தையும் பாருங்கள்.
- தனது குற்றச்சாட்டை திசை திருப்பி ஹதீஃத்களில் இல்லாத கருத்து திணித்து நபி (ஸல்) அவர்கள் மீது இட்டுக்கட்டி பல கருத்துக்களை பீ.ஜே. கூறுகிறார்.
- விஷம கருத்தை சொல்கிறார்.
- கோணல் புத்தியை செலுத்துகிறார்.
- தன்னுடைய தவறை நியாயப்படுத்த பீ.ஜே. எந்த எல்லைக்கும் செல்வார்.
- பலவீனமான ஹதீஃதை தெரிந்து கொண்டேதான் இமாம்களின் மீது பழி போட்டு அதை ஸஹீஹாக முயல்கிறார்.
- ஹதீஃத்களை தனக்கு ஏற்றார்போல் வளைத்து திரிக்கும் வேலையை செய்கிறார்.
- உண்மையில் பல திருகுதாளங்கள், ஹதீஃத்களை திரிக்கும் ஈனச் செயல்களை பீ.ஜே. அரங்கேற்றம் செய்கிறார்.
- தனது தவறை நியாயப்படுத்த மார்க்கத்தில் விளையாடும் பீ.ஜே.
- வரம்பு மீறி விமர்சிப்பவர்
PJவை குறித்து இன்னும் இதுபோன்ற பற்பல விமர்சனங்களாலும் வீஹிவீமூ இயக்கத் தினர்கள் எழுத்துப்பூர்வமாகவும் செய்து வருகிறார்கள். PJவை தக்லீத் செய்வதை குறித்தும் ஏகத்துவம் அக்டோபர் 2018 இதழில் எழுதப்பட்டிருப்பதையும் பாருங்கள். தமிழகத்திலும் இப்போது மிகச் சிலர் அவருக்கு (PJவுக்கு) ஆதரவாகப் பேச ஆரம்பித்திருக்கின்றனர். இவர்களை நோக்கி நாம் சொல்வது என்ன தெரியுமா? இவர்களின் தக்லீத், மத்ஹப்வாதிகளிடம் நாம் கண்ட தக்லீதை விட கொடுமையானது. சகிக்க முடியாதது என்பது தான் காரணம், மத்ஹபுவாதிகள் ஏற்றுக் கொண்டிருக்கின்ற இமாம்கள் வெளிப்படையை வைத்துப் பார்க்கும்போது இறையச்சத்தின் உச்சத்தில் இருந்தவர்கள் ஒழுக்கசீலர்களாக வாழ்ந்தவர்கள். அந்த இமாம்களின் பகிரங்க மற்றும் அந்தரங்க வாழ்க்கை கேள்விக்குரியதாக ஆனதில்லை, அவர்களின் ஒழுக்கத்தில் சிறு கீறல் கூட விழவில்லை. அதை வைத்துத் தான் அந்த இமாம்கள் ஆய்வில் தவறே வராது என்று மத்ஹபுவாதிகள் முடிவு செய்து அவர்களை தக்லீது செய்கின்றார்கள். அது கண்டிக்கத்தக்கது. அதை எதிர்த்துத் தான் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம் என்பது தனி விஷயம்.
ஆனால் நமது ஜமாஅத்தில் தலைவராக இருந்து பாலியல் குற்றச்சாட்டு காரணமாக நீக்கப்பட்ட இவரது வாழ்க்கையோ ஒழுக்கக் கேட்டின் மொத்த உருவமாக அமைந்து விட்டது. அப்படிப்பட்டவரையும் ஒருசிலர் பின்பற்றுகின்றனர். பின்தொடர்கின்றனர் என்றால் அது தக்லீதில் கடைந்தெடுத்த தக்லீதாகும். மத்ஹபுவாதிகளை தக்லீத்வாதி கள் என்று சொல்வதற்கும் அவர்களை விமர்சனம் செய்வதற்கும் இவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை என்று தெளிவு படுத்திக் கொள்கிறோம்.
சகோதரர் அபூ அப்தில்லாஹ் அவர்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக PJவை குறித்து சொன்ன குற்றச்சாட்டுகள் அனைத்தும் நூறு சதவீதம் உண்மை என்பதை PJ எதை சொன்னாலும், எதை செய்தாலும் அதை சரிகண்டு அவருக்கு வக்காலத்து வாங்கி அவரை கண்மூடி பின்பற்றி வந்த குருட்டு கூட்டத்தினர்களே இப்போது ஒத்துக் கொள்கிறார்கள்.
PJவை குறித்து அபூ அப்தில்லாஹ் கூறிய உண்மைகள் இப்போது வெளிவருவதை போன்று வீஹிவீமூ என்பது வழிகெட்ட அமைப்பு. குர்ஆன், ஹதீஃதை கூறுகிறோம் என்ற பெயரில் மக்களை தவறான வழிக்கு அழைத்துச் சென்று அப்பாவிகளை ஏமாற்றி பிழைக்கும் ஒரு கேடுகெட்ட அமைப்பு என்ற உண்மையும் வெகு விரைவில் வெளிவரும். இன்ஷா அல்லாஹ்.