தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூல் அமல்களின் சிறப்புகள்….
ஒரு திறனாய்வு!
- அப்துல் ஹமீத்
ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் :
புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம்.
தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள்.
தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல்.
பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து,12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை முடிய எங்குமே குறிப்பிடப்படவில்லை.
திக்ரின் சிறப்புகள் தொடர்ச்சி…
அமல்களின் சிறப்பு (அசி) புத்தகம் நல்ல பிள்ளை வேஷம் போட்டு, மக்களை அமல்கள் என்ற பெயரில் எப்படி வழிகெடுக்கிறார்கள் என்பதை இந்த இதழில் இப்போது காண்போம்.
இவர்களின் வழிகேட்டில் கொடுமையான முதன்மை அமல் என்னவென்றால் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறு செய்வதும், அல்லாஹ் உலகத்தாருக்கு இறக்கி அருள் புரிந்திருக்கின்ற நேர்வழி காட்டியான நெறிநூல் அல்குர்ஆனைப் புறக்கணித்து, ஓரம் கட்டி வைத்து விட்டது தான் கொடுமையில் மிகப் பெரிய கொடுமை.
அல்லாஹ்வின் குர்ஆன் புறக்கணிக்கப்படுகிறது!
அல்லாஹ்(ஜல்) இறக்கியருளிய குர்ஆனை யார் புறக்கணிப்பார்கள்? இப்லீஸ் ஆகிய ஷைத்தான் பெருமையின் காரணமாக அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்ப்படிய மறுத்தான்.
எனவே, அவன் தனது எதிர் வேலையை அன்றே ஆரம்பித்து விட்டான். அந்த வேலையை உலக முடிவு நாள் வரை செய்வதற்கான கால அவகாசத்தை அல்லாஹ்விடமிருந்தே அனுமதி பெற்று இன்றுவரை அந்த வேலையை நடத்திக் கொண்டு இருக்கிறான். உலக முடிவு நாள் வரை நடத்தவும் இருக்கிறான். இப்லீஸின் வேலைதான் என்ன என்று கேட்கத் தோன்றுகிறதா? கீழே உள்ளதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
- அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு, எதிராக செயல்படுவதை அழகாகக் காண்பித்து மக்களை வழிகேட்டில் இட்டுச் செல்வது.
- இறைக்கட்டளைகள் சுஹுபு எனும் ஏடுகளிலும், பலகைகளிலும், மேலும் தவ் ராத், இன்ஜீல், குர்ஆன் என பல வகைகளில் அல்லாஹ்விடமிருந்து நபிமார்களுக்கு இறக்கி அருளப்பட்டன. இவைகளுக்கு எதி ராக செயல்படுவதை அழகாகக் காண்பித்து மக்களை வழிகேட்டில் இட்டுச் செல்வது.
- அல்லாஹ்வின் கட்டளைகளை செயல்படுத்திக் காண்பித்த அல்லாஹ்வின் தூதர்களுக்கும், அந்த தூதர்கள் அவரவர் காலங்களில் காட்டிச் சென்ற ஏக இறை வழிகாட்ட லுக்கும், எதிராக செயல்படுவதை அழகாகக் காண்பித்து மக்களை வழிகேட்டில் இட்டுச் செல்வது நபிமார்களுக்கு ஏற்பட்ட எதிர்ப்புகள், இதை நிரூபிக்க போதிய சான்றாகும். நபிமார்கள் கல்லால் அடிக்கப்பட்டனர், ஊரை விட்டு விரட்டப்பட்டனர், கொலை செய்யப்பட்டனர், அல்லாஹ் நபிமார்களை காப்பாற்றவும் செய்தான்.
உதாரணமாக நூஹ்(அலை) மற்றும் மூசா(அலை) முதலானோர், மூசா(அலை) அவர்களுக்கு எதிராக கொடுங்கோல் அரசன் பிர்அவ்ன் அம்மக்கள் காளைக்கன்று ஒன்றை வடிவமைத்து வழிபடுவதை ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காண்பித்து வழிகேட்டில் இட்டுச் சென்றான், மூசா(அலை) அவர்களை கொல் வதற்கு பிர்அவுனும், அவன் கூட்டத்தாரும் துரத்தினர், எதிரிகளை கடலில் மூழ்கச் செய்து மூசா(அலை) அவர்களையும் அவரது கூட்டத்தினரையும் அல்லாஹ் காப்பாற்றினான்.
- தூதர்களின் வருகை இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வருகையுடன் முற்றுப் பெற்றதால், உலக முடிவுநாள் வரை மக்கள் ஏக இறைக் கொள்கையுடன் வாழவேண்டிய வாழ்க்கை வழிமுறைகளை இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் அல்குர்ஆன் காட்டிய வழியில் வாழ்ந்து காட்டி, அந்த வாழ்க்கையின் பிரதிபலிப்பை அப்படியே ஹதீஃத்களின் மூலம் விட்டுச் சென்றார்கள். எனவே ஹதீஃத்களுக்கு எதிராக செயல்படுவதை அழகாகக் காண்பித்து, மக்களை வழிகேட்டில் இட்டுச் செல்வது, குறிப்பாக குர்ஆன் மட்டுமே போதும் என்பவர்களுக்கு.
மேற்கூறிய நான்கு விஷயங்களும் ஷைத்தானின் தலையாயப் பணி. இது எமது சுய சிந்தனையின் வெளிப்பாடு அல்ல. அனைத்தையும் படைத்த அல்லாஹ்வின் நாட்டத்தில் உள்ள விசயம் என்பதை அல் குர்ஆன் விவரிப்பதை இனி காண்போம்.
எல்லா வழிகளிலும் இருந்து கொண்டு உம்மத்தைக் கெடுக்கப் போவதாக அல்லாஹ்விடமே சவால் விட்டு வந்தவன் இப்லீஸ். “நீ என்னை வழிகெட்டவனாக (வெளியேற்றி) விட்டதின் காரணத்தால், (ஆதமுடைய சந்ததியரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன்” என்று கூறினான். (அல்குர்ஆன் : 7:16)
நிச்சயமாக நான் அவர்கள் முன்னும், அவர்கள் பின்னும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (அவர்களை வழிகெடுத்துக்)கொண்டிருப்பேன். ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாகக் காணமாட்டாய்” என்றும் கூறினான். (அல்குர்ஆன்: 7:17)
“என் இறைவனே! என்னை நீ வழிகேட் டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில் (வழிகேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனை வரையும் வழிகெடுத்தும் விடுவேன்” என்று இப்லீஸ் கூறினான். (அல்குர்ஆன்: 15:39)
“எனக்கு மேலாக கண்ணியப்படுத்திய இவரைப் பார்த்தாயா? நீ எனக்கு கியாம நாள் வரை அவகாசம் கொடுத்தால், நான் இவருடைய சந்ததிகளில் சிலரைத் தவிர, மற்றவர்களை நிச்சயமாக வழிகெடுத்து விடுவேன்” என்று (இப்லீஸ்) கூறினான். (அல்குர்ஆன் : 17:62)
மக்களைப் கெடுப்பதற்கு இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள் வரை அல்லாஹ்விடம் அவகாசம் கேட்டவன் இப்லீஸ். “(இறந்தவர்) எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக” என (இப்லீஸாகிய) அவன் வேண்டினான். (அல்குர்ஆன் : 7:14 ,15:36)
அல்லாஹ்விடமே அனுமதி பெற்று வந்தவன் இப்லீஸ்: (அதற்கு அல்லாஹ்) “நிச்சயமாக நீ அவகாசம் கொடுக்கப்பட்டவர்களில் ஒருவனாவாய்” என்று கூறினான். (அல்குர்ஆன்:7:15, 15:37)
இவ்வாறாக ஷைத்தானின் தூண்டுதலின் பேரில் பெரும்பான்மை மக்கள் வழிகேட்டில் சென்று விடுவர். அல்லாஹ்வின் அடியார்கள் மட்டும் பாதுகாக் கப்படுகின்றனர் :
“உன்னைப் பின்பற்றி வழிகெட்டவர் களைத் தவிர, என் அடியார்கள் மீது நிச்சயமாக உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை” என்று (அல்லாஹ்) கூறினான். (அல்குர்ஆன்: 15:42) “”நிச்சயமாக என்னுடைய அடியார்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை. அந்த என் நல்லடியார்களைக் காத்துக் கொள்ள மேலான இறைவன் போதுமான வன்” என்று அல்லாஹ் கூறினான். (அல்குர்ஆன்: 17:65)
இப்லீஸ் தனது வேலையை முதன் முதலில் துவங்கியது ஆதம்(அலை) அவர்க ளின் வியத்தில்தான். அந்த மரத்தை நெருங்க வேண்டாம் என்பதே ஆதம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ்வின் கட் டளை. இப்லீஸின் தூண்டுதலின் பேரில், அல்லாஹ்வின் கட்டளைக்கு ஆதம் (அலை) அவர்கள் மாறு செய்தார்கள். பிறகு தமது தவறை உணர்ந்து அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரினார்கள். அல்லாஹ் அவர்களைக் காத்தான்.
குர்ஆனில் கூறப்பட்டுள்ள மேற்கண்ட இறை வசனங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஹதீஃத்களும் விவரித்துள்ளது. இனி, ஷைத்தான் உம்மத்தை இன்னும் எப்படி எப்படியயல்லாம் வழிகெடுத்துக்கொண்டிருக்கிறான் என்பதை நடைபெற்ற, நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற சம்பவங்களைக் கொண்டும் அறிந்து கொள்வோம். ஒவ்வொரு நபிமார்களின் காலங்களிலும் மக்களில் கணிசமானோரை, நபிமார்களுக்கு எதிராக செயல்பட வைத்தான் இப்லீஸ். அப்படி செயல்பட்டவர்கள், நபி (ஸல்) அவர்களின் ஜீவித காலத்தில் குர்ஆனை மனனம் செய்த எழுபது சஹாபாக் களை நயவஞ்சகமாக கொன்று குவித்தனர். இந்த சம்பவத்தை ஸஹீஹுல் புகாரியின் ஹதீஃத் எண் 3064 விவரிப்பதை இப்போது பார்ப்போம்.
அனஸ்(ரழி) அவர்கள் அறிவித்ததாவது: நபி(ஸல்) அவர்களிடம் ரிஅல், தக்வான், உஸய்யா, பனூ லிஹ்யான் ஆகிய குலத்தார் (சிலர்) வந்து, தாங்கள் இஸ்லாத்தை ஏற்றதாகக் கூறினர். மேலும், தம் சமுதாயத் தினரை நோக்கி ஒரு படையனுப்ப உத்தர விடும்படியும் நபி(ஸல்) அவர்களிடம், அவர்கள் கேட்டுக் கொண்டனர். நபி(ஸல்) அவர்கள், அன்சாரிகளிலிருந்து எழுபது பேரை அனுப்பி அவர்களுக்கு உதவினார் கள். அவர்களை நாங்கள் “காரீகள்” (குர்ஆனை மனனம் செய்து முறைப்படி ஓது வோர்) என்று அழைத்து வந்தோம். அவர்கள் பகல் நேரத்தில் விறகு சேகரிப்பார்கள், இரவு நேரத்தில் தொழுவார்கள், அவர்களை அழைத்துக் கொண்டு அந்த குலத்தார் சென்றனர். இறுதியில், “பீரு மஊனா” என்னுமிடத்தை அவர்கள்அடைந்தவுடன் முஸ்லிம்களை ஏமாற்றிக் கொன்றுவிட்டனர்.
உடனே, நபி(ஸல்) அவர்கள் ஒரு மாதம் (முழுவதும்) ரிஅல், தக்வான், பனூலிஹ்யான் ஆகிய குலங்களுக்குத் தீங்கு நேரப் பிரார்த்தனை செய்தார்கள். அந்த எழுபது பேரைக் குறித்து, அவர்கள் சொன்னதாக அருளப்பட்ட ஓர் இறை வசனத்தை குர்ஆனில் நாங்கள் ஓதி வந்தோம். நாங்கள் எங்கள் இறைவனைச் சந்திக்கச் சென்று விட்டோம் என்றும், அவன் எங்களைக் குறித்துத் திருப்தியடைந்தான், நாங்களும் அவனைக் குறித்துத் திருப்தியடைந்தோம் என்றும் எங்கள் சமுதாயத்திற்கு எங்களைப் பற்றித் தெரிவித்து விடுங்கள் என்பதே அந்த வசனம். பின்னர், இந்த வசனத்தை ஓதுவது(இறைவனாலேயே) ரத்து செய்யப்பட்டுவிட்டது” (ஆதாரம்: ஸஹீஹ் புகாரி அத்தியாயம் 56 அறப்போரும் அதன் வழிமுறைகளும் ஹதீஃத் எண் : 3064) இஸ்லாத்தை ஏற்றதாகப் பொய் சொல்லி, அந்த எழுபது முஸ்லிம்களையும் ஏமாற்றிக் கொன்ற செயல் ஷைத்தானின் தூண்டுதல் என்பதை எவரும் மறுக்க முடியாதல்லவா? சத்தியத்தின் மீது இருப்பவர்களை கொல்வது என்பது ஷைத்தானின் தூண்டுதலால், இன்றளவும் நடைபெற்றுக் கொண்டு தானே இருந்து வருகிறது.
அல்லாஹ், குர்ஆனைப் பாதுகாப்பதாக கூறியிருப்பதால், இப்லீஸின் அடுத்த திட்டத்தின்படி குர்ஆனில் மாற்றம் செய்ய அவனும் அவனது ஆட்களும் முனையும் போதெல்லாம், அவை உடனுக்குடன் கண்டுபிடிக்கப்பட்டு அவைகள் தடை செய்யப்பட்டும் விடுகிறது. எனவே, குர்ஆனுக்கு அடுத்து நபி(ஸல்) அவர்கள் அறிவித்துத் தந்த மாபெரும் பொக்கிஷம் ஹதீஃத்களாக இருப்பதால், இப்லீஸ் தனது ஈடுபாட்டை ஹதீஃத்களில் செலுத்தும் முயற்சியாக ஹதீஃத்களை இட்டுக்கட்டும் ஆர்வத்தை மக்களிடம் திணித்தான். நாமாக எதையும் சொல்லிக்கொண்டு போகவில்லை. நடைபெற்ற சம்பவங்களைப் பாருங்கள். நபி(ஸல்) அவர்களின் மறைவிற்குப் பின் அலீ(ரழி) அவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் (அஹ்லு பைத்) தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தை சிலரின் மனதில் விதைத்து அரசியல் காழ்ப்புணர்ச்சியை துவக்கி வைத்தான். எப்படி? நபி (ஸல்) அவர்களின் முன்மாதிரியை பின்பற்றி வாழ்ந்த கலீபாக்கள் அனைவரையும் எதிர்க் கக்கூடிய ´யா எனும் பிரிவை மெல்ல மெல்ல புகுத்தி உம்மத்தில் பிரிவினையை உருவாக்கினான். அப்துல்லாஹ் பின் அத்தீஸ் என்ற முஸ்லிமின் மூலம் உஸ்மான் (ரழி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் இட்டுக்கட்டப்பட்ட முதல் ஹதீஃத் அறிமுகம் செய்யப்பட்டது.
இப்லீஸ், தனது வழியில் செயல்பட ஏஜெண்டுகளை எப்படி தேர்ந்தெடுக்கிறான் பாருங்கள். அந்த ஏஜண்டுகள் இப்லீஸின் வழியில் செயல்பட மக்களை எப்படி தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதையும் இப்போது கவனிப்போம். அல்லாஹ்வின் வாக்கிற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இப்லீஸ், அல்லாஹ்வின் தூதர் யாரிடமிருந்து விலகி இருக்கவேண்டும் என்று அல்லாஹ் எச்சரித்தானோ, அதுபோன்றே மக்களை மாற்ற முயற்சித்தான். “நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தைப் பிரித்து, பல பிரிவினர்களாக ஆகிவிட்டனரோ, அவர்களின் எந்தக் காரியத்திலும் (நபியே) உமக்கு சம்பந்தமில்லை” (அல்குர்ஆன்:6:159) என்கின்ற இறைவசனத்திற்காக வேண்டி, அவனது ஏஜெண்டுகளாக பற்பல பிரிவுகளை முஸ்லிம்களைக் கொண்டே முஸ்லிம்களுக்குள் ஏற்படுத்தச் செய்தான்.
அதன் விளைவாக, நபி(ஸல்) அவர்க ளின் மறைவிற்கு பிறகு உதயமான சுன்னத் ஜமாஅத் என்ற பெயரில் உள்ள ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போகாத சட்டதிட்டங்களைக் கொண்ட ஹனபி, ஷாபி, மாலிகி, ஹன்பலி என்ற (1/4) ஒன்-பைஃபோர் நான்கு மத்ஹப்கள், (1/4) ஒன்-பைஃபோருக்குள்ளும் எண்ணற்ற தரீக்காக்கள், இவைகளுக்குள்ளும் ஆட்டம், பாட்டம், கேலிக்கூத்து கொண்டாட்டங்கள் கொண்ட தரீக்காக்கள், காதியானிகள், நான்கு மத்ஹபுகளிலிருந்தும், தரீக்காக்களிலிருந்தும் ஏற்பட்ட கவலையா(?) நபர்கள் கொண்ட கலவைக்கூட்டம் தப்லீக் ஜமாஅத், காரிஜியாக்கள், சியாக்கள், சியாவிலிருந்து பிரிந்த ராபிழாக்கள், கத்ரிய்யாக்கள் (முஃதஸிலாக்கள்), ஜஹமிய்யாக் கள், அஹ்லே ஹதீஃத், அஹ்லுல் குர்ஆன், தவ்ஹீத் என்ற போர்வையில் ஜாக், டிஎன்டிஜே, இதிலிருந்தும் பிரிவுகள், அரசியலுக்காக தனி ஜமாஅத் இதிலிருந்தும் பற்பல அரசியல் ஜமாஅத்கள், பிரிந்து வந்தவர்கள் பெயர் வைத்தால் மாட்டிக் கொள்வோமோ என்றஞ்சி, தமது பேச்சாற்றலை மூலதனமாக்கி அதன் மூலம் பணம் சம்பாதித்துக் கொண்டு குர்ஆன், ஹதீஃதில் இல்லாத விதவிதமான ஃபத்வாக்களை வாரி வழங்கி தமக்குத்தானே கூட்டம் சேர்த்துக் கொண்டு திரியும் தனித்தனி தலைவர்கள், இத்தலைவர்களின் பேச்சாற்றலால் கவரப்பட்டு அவரைப் பின்பற்றும் இன்னும் இன்னும் என பற்பல ஜமாஅத்கள், தனித் தலைவர்களும் அவர்கள் சேர்க்கும் கூட்டத்தினரும், பிரிவு பெயர் கொண்ட எல்லா ஜமாஅத்தின் தலைவர்களும், அந்தந்த ஜமாஅத்தினரும், “எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி, பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ, ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள்” என்று அல்குர்ஆன் : 30:32ல் கூறப்பட்டுள்ள அல்லாஹ்வின் அறிவுரையை ஒன்றுக்கு பலமுறை படித்து சிந்தித்து, உங்கள் அனைவரிடமும் மேலே காட்டியுள்ள அல்குர்ஆன் : 6:159 இறை வசனத்தை நீங்கள் பார்த்ததே இல்லையா என்று மேன்மைமிகு அல்லாஹ் (ஜல்) உங்களிடம் ஒரே ஒரு கேள்வியைக் கேட்டால், அக்கேள்விக்கு என்ன பதில் வைத்திருக்கின்றீர்கள்? தயவு செய்து சொல்லுங்க ளேன்! நாங்களும் தெரிந்து கொள்கிறோம். தப்லீக் ஜமாஅத்தின் அமல்களின் சிறப்பு புத்தகம், “அமல்கள்” என்ற பெயரில் மக்களை வழிகெடுக்கும் மற்ற அமல்களை அடுத்த இதழிலும் தொடருவோம். இன்ஷா அல்லாஹ்…..