மர்யம்பீ, குண்டூர்,
- அல்லாஹ் நம்மிடத்தே எதை பார்க்கிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்?
உங்களுடைய உள்ளங்களையும், செயல்களையுமே பார்க்கிறான். அபூஹுரைரா (ரழி), முஸ்லிம்: 5012 - எதனை வலுவாக பிடித்துக் கொள்ளும்படி அல்லாஹ் கூறுகிறான்?
அல்லாஹ்வின் கயிற்றை (குர்ஆனை) வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளும்படி அல்லாஹ் கூறுகிறான். அல்குர்ஆன்: 3:103 - ஜும்ஆ நாளில் பள்ளிக்கு முதலில் வருபவரின் சிறப்பு பற்றி நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு கூறுகிறார்கள்?
கடமையான குளிப்பு போல் குளித்து விட்டு பள்ளிக்கு முதலில் வருபவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவர் போலாவார்.
அபூ ஹுரைரா(ரழி), புகாரி: 881 - கொள்ளையடிப்பவனைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறுவதென்ன?
அவர் நம்மைச் சார்ந்தவரல்ல என கூறுகிறார். அனஸ்(ரழி), நஸயீ: 3284 - ஜோதிடம் பார்ப்பவரின் நிலை பற்றி நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு எச்சரிக்கிறார் கள்?
அவரின் நாற்பது நாட்களின் தொழுகை அங்கீகரிக்கப்படுவதில்லை. ஸஃபிய்யா (ரழி), முஸ்லிம் : 4488 - இஸ்லாத்தில் கொள்ளை நோய் பற்றிய கருத்து என்ன?
கொள்ளை நோய் என்பது தண்டனையின் அடையாளம். இதன் மூலம் அல்லாஹ் தன் அடியார்களில் சிலரைச் சோதிக்கிறான். உஸாமா பின்ஸைத்(ரழி), முஸ்லிம்:4456 - மலைகளை எதற்காக படைத்தான் என அல்லாஹ் கூறுகிறான்?
உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக உறுதியாக நிறுத்தினான். அல்குர்ஆன்:16:15 - செல்வங்களில் மேலான செல்வம் எது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
நல்ல மனைவி என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்துல்லாஹ் பின் அம்ர் அல் ஆஸ்(ரழி), நஸயீ: 3180 - அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான பெயர்கள் எது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
அப்துல்லாஹ் பின் உமர்(ரழி), முஸ்லிம்:4320 - அல்லாஹ் உங்களிடம் எதைப் பார்ப்ப தில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்?
உங்கள் தோற்றங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. அபூ ஹுரைரா(ரழி), முஸ்லிம்: 5012 - நளினத்தை இழந்தவரின் நிலை பற்றி நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு கூறுகிறார்கள்?
நன்மைகளை இழந்தவர் ஆவார். ஜரீர்பின் அப்துல்லாஹ்(ரழி), முஸ்லிம் : 5052 - தக்க காரணமின்றி கணவனிடம் குலா (பிரி வினை) கோரும் பெண்களை நபி (ஸல்)அவர்கள் எவ்வாறு கூறுகிறார்கள்?
ஈட்டுத் தொகை கொடுத்து குலா (பிரிவினை) கோரும் பெண்கள். நயவஞ்சகியர் ஆவர். அபூஹுரைரா(ரழி), நஸாயீ:3407 - நோன்புப் பெருநாள் ஃபித்ரா (தர்மத்தை)வை எப்போது தரவேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்?
பெருநாள் தொழுகைக்கு புறப்படுவதற்கு முன் தரவேண்டும் என கூறினார்கள். இப்னு உமர்(ரழி), புகாரி: 1509 - மாபெரும் பொய்களில் ஒன்றைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறுவதென்ன?
தமது கண் காணாத ஒன்றை அது கண்டதாக கூறுவது. இப்னு உமர்(ரழி), புகாரி:7043 - உங்களில் சிறந்தவர் யார் என நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்?
தான் வாங்கிய கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே. அபூஹுரைரா (ரழி), புகாரி: 2393 - அல்குர்ஆனின் நிலை பற்றி அல்லாஹ் கூறுவதென்ன?
மக்கள் திரட்டி வைத்திருக்கும் செல்வங்களை விட இது மிக்க மேலானது. அல்குர்ஆன்: 10:58 - காரியங்களில் உறுதியானது எது என அல்லாஹ் கூறுகிறான்?
எவரொருவர் பொறுமையைக் கொண்டு மன்னித்து விட்டாரோ இதுவே காரியங்களில் உறுதியானது. அல்குர்ஆன் : 42:43 - நபியின் மீது யார் யார் அருளும், ஸலா மும் கூறுவதாக அல்லாஹ் கூறுகிறான்?
அல்லாஹ்வும், மலக்குகளும் அருளை தேடுவதாகவும், ஆகவே நீங்களும், ஸலாமும், ஸலாத்தும் சொல்லுங்கள். அல்குர்ஆன் : 33:58 - உலகில் செயல்களில் சிறந்தது எது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
பாவச் செயல்கள் எதுவும் கலக்காத ஹஜ் என கூறினார்கள். அபூஹுரைரா(ரழி), புகாரி : 1519 - எந்த மாதிரியான பிராணிகளை குர்பானி கொடுக்க வேண்டாம் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
கொம்பு உடைந்த, காது கிழிந்தவைகளை குர்பானி கொடுக்கவேண்டாம் என கூறினார்கள். அலீ(ரழி), அஹமத் : 599