குர்ஆனின் நற்போதனைகள்:
தொடர்: 15
அல்லாஹ்வும் அவனது தூதரும் போதுமே!
ஏ. முஹம்மது அலி, எம்.ஏ.,எம்.பில்.,
1. நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டு இறங்கி விடுங்கள்: என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறவுரைகள்) வரும்போது யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தைகைய பயமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள் (என ஆதிமனிதர் ஆதம்(அலை), ஹவ்வா(அலை) பூமியில் இறக்கப்பட்ட போது அல்லாஹ் உரைத்தது) (2:38)
2. நிச்சயமாக நாம் ஒவ்வொரு சமுதாயத்திலும்
“அல்லாஹ்வையே வணங்குங்கள்;
“ஷைத்தானை விட்டு விலகிச் செல்லுங்கள்” என (உபதேசிக்குமாறுநம் தூதர்களை அனுப்பி வைத்தோம். (16:36)
3. அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ் படிவதற்காகவேயன்றி (மனிதர்களிடம்) நாம் தூதர்களில் எவரையும் அனுப்பவில்லை. (4:64)
முந்திய இறைத்தூதர்களின் கூற்றுகள்:
4. அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள். அவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். என்னைப் பின்பற்றுங்கள். (நூஹ்(அலை) கூறியது) (71:3)
5.அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். என்னைப் பின்பற்றுங்கள். (நூஹ்(அலை) கூறியது) (26:108,110)
6.அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். என்னைப் பின்பற்றுங்கள். (ஹுது(அலை) கூறியது) (26:126,131)
7.அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். என்னைப் பின்பற்றுங்கள். (ஸாலிஹ்(அலை) கூறியது) (26:144,150)
8.அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். என்னைப் பின்பற்றுங்கள். (லூத்(அலை) கூறியது) (26:163)
9.அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள். அவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். என்னைப் பின்பற்றுங்கள். (ஷுஐபு(அலை) கூறியது) (26:179)
10. நீங்கள் என்னைப் பின்பற்றியிருக்க வேண்டாமா? (மூஸா(அலை) தனது கூட்டத்தாரை நோக்கி கேட்டது) (20:93)
11. எனது சமுகத்தவரே! என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களுக்கு நேரான பாதையைக் காண்பிக்கிறேன்(மூஸா(அலை) கூறியது), (40:38)
12. நிச்சயமாக உங்களுடைய இரட்சகன், அர்-ரஹ்மானே! எனவே என்னைப் பின்பற்றுங்கள்; என் கட்டளைக்குக் கீழ்படியுங்கள் (ஹாரூன்(அலை) கூறியது). (20:90)
13. என் தந்தையே! உண்மையாக உங்களிடம் வந்திராத கல்விஞானம்(வஹி மூலம்) நிச்சயமாக எனக்கு வந்திருக்கிறது. ஆகவே நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களை செம்மையான நேர்வழியில் நடத்துகிறேன்(இப்ராஹிம்(அலை) தனது தந்தையிடம் கூறியது) (19:43)
14. உங்களிடம் ஒரு கூலியும் கேட்காத இவர்களையே நீங்கள் பின்பற்றுங்கள்; இன்னும் இவர்களே நேர்வழிப் பெற்றவர்கள். (36:21)
ஒவ்வொரு இறைத்தூதரும் தத்தமது கூட்டத்தினருக்கு உபதேசித்ததைக் கண்டீர்கள்.
***************************
பாவத்தை விட்டொழிக்காது பட்டினி கிடப்பதால் என்ன பலன்?
ஒருவர் தமது பொய்யையும், தீய செயலையும் விட்டொழிக்க இல்லை என்றால் அவர் உண்ணாமலும், பருகாமலும் இருப்பதில் அல்லாஹ்வுக்கு எத்தேவையுமில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரீ)