ஐயமும்! தெளிவும்!!
ஐயம் : மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுந் நபவீ, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய பள்ளிகளில் கிடைக்கும் நன்மையில் ஏற்றத் தாழ்வு இருப்பதாகக் கூறப்படும் ஹதீஸின் நிலை என்ன? ரஜின் அஹ்மத், சென்னை
தெளிவு : “எனது இப்பள்ளியில் தொழும் ஒரு தொழுகையானது இதரப் பள்ளிகளில் தொழும் 1000 தொழுகைகளை விட சிறப்பானதாகும். எனினும் மஸ்ஜிதுல் ஹராம் நீங்குதலாக” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.(அபூஹுரைரா(ரழி), புகாரீ, முஸ்லிம்)
ஆகவே இவ்வறிவிப்பின்படி மஸ்ஜித் நபவியில் தொழுவதைவிட மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவது சிறப்புமிக்கது என்பதை அறிவதோடு, மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர, இவ்வுலகில் உள்ள அனைத்துப் பள்ளிகளைப் பார்க்கினும் மஸ்ஜிதுந் நபவியே உயர்ந்தது என்பதையும் அறிகிறோம்.
“ஒருவர் தமது வீட்டில் தொழும் தொழுகைக்கு ஒரு தொழுகையின் நன்மை மட்டுமேக் கிடைக்கும். ஆனால் அவர் தமது மஹல்லாவின் பள்ளியில் தொழுவதானஃத 25 தொழுகையின் பலனைத் தருகிறது. இவ்வாறே ஒருவர் ஜும்ஆ நடக்கும் பள்ளியில் தொழுவதானது 500 தொழுகையின் பலனை அளிக்கிறது. ஒருவர் மஸ்ஜிதுல் அக்ஸாவில் தொழுவதானது 50,000 தொழுகைகளின் நன்மையையும், இவ்வாறே எனது இப்பள்ளியில் மஸ்ஜிதுந்நபவியில் தொழுதாலும் 50,000 தொழுகைகளின் பலனை அளிக்கிறது. ஆனால் மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவதானது 1,00,000 தொழுகைகளின் பலனைத் தருகிறது. என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்” என்று அனஸ்பின் மாலிக்(ரழி) அவர்களின் வாயிலாக இப்னுமாஜ்ஜாவில் ஓர் அறிவிப்பு இடம் பெற்றுள்ளது.
இதன் அறிவிப்பாளர் தொடரில் “ரஜீக் அபூ அப்தில்லாஹில் அல்ஹானீ” எனும் நபர் இடம்பெற்றுள்ளார். இவரைப் பற்றி ஹதீஸ் கலாவல்லுநர்கள் மிக மோசமானவர் என்பதாக விமர்சித்துள்ளார்கள். ஆகவே இவ்வறிவிப்பு பலகீனமானது என்பதாக ஹதீஸ் கலாவல்லுநர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஐயம்: பத்து இரவுகளின் மீது சத்தியமாக (89:2) என்ற வசனத்தில்க் கூறப்பட்டுள்ள அந்த பத்து இரவுகள் யாவை?எம்.ஏ.ஹாஜி முஹம்மது, நிரவி
தெளிவு : (89:2) வசனத்தில் குறிப்பிட்டுள்ள 10 இரவுகள் என்பதற்கு இப்னு அப்பாஸ்(ரழி), இப்னு ஜுபைர்(ரழி), முஜாஹித்(ரஹ்) ஆகியோரும் மற்றும் குர்ஆன் விரிவுரையாளர்களில் அநேகரும் துல்ஹஜ்ஜு மாதத்தின் முந்தைய பத்து இரவுகள் என்பதாக குறிப்பிட்டுள்ளார்கள். (தப்ஸீர் இப்னு காதீர் பாகம்4, பக்கம் 505)
ஐயம் : பெண் கொடுத்து, பெண் எடுக்கும் முறையை இஸ்லாம் அங்கிகரித்துள்ளதா? ஹாஜி முஹம்மது, நிரவி
தெளிவு : குர்ஆனிலோ, ஹதீஸிலோ பெண் கொடுத்து பெண் எடுக்கும் முறைக்கு தடை ஏதுமில்லை. பொதுவாக குர்ஆனும் ஹதீதும் எவற்றைத் தடை செய்யவில்லையோ அவை ஆகும் என்பது தெளிவு. ஆகவே தாரளமாக பெண் கொடுத்து பெண் எடுத்துக் கொள்ளலாம்.
ஐயம் : ஒட்டகம் வழக்கமாக்கி கொள்வது போல் பள்ளியில் ஓர் இடத்தையே குறிப்பாக்கிக் கொண்டு அதே இடத்தில் தொழுதுக் கொண்டிருப்பதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளதாக ஹதீஸில் காணப்படுகிறது. அதற்கு காரணம் என்ன?எம்.எம். அப்துர்ரஹ்மான் பைஜீ, பிரக்கிராமம்
தெளிவு : நபி(ஸல்) அவர்கள் ஒன்றைத் தடை செய்துள்ளார்கள் என்றால் அதற்குப் பல காரணங்கள் இருக்கத்தான் வேண்டும். காரணமில்லாமல் அவர்கள் எதையும் செய்யவேண்டாம் என்றுக் கூறமாட்டார்கள் என்ற நம்பிக்கை நமக்கு இருந்தாக வேண்டும் . அப்போது தான் முறையாக அவர்களின் கட்டளைகளை செயல்படுத்த முடியும்.
எதற்காக நபி(ஸல்) அவர்கள் இதைத் தடை செய்துள்ளார்கள் என்பதை நாமே சிந்தித்து அறிந்துக் கொள்ள வேண்டுமே தவிர குறிப்பாக அதற்காக வேண்டித்தான் என்று நாம் சொல்வதற்கில்லை. அவ்வாறு கூறினால் அதல்லாத வேறு காரணத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் தடை செய்திருந்தால் நாம் கூறிய காரணம் சரியில்லாமல் ஆகிவிடும். டாக்டர் ஒன்றைச் சாப்பிட வேண்டாம் என்றுக் கூறினால் அதில் ஏதொ தீமை இருக்கிறது என்று கருதி அதைச் சாப்பிடாமல் நாம் நம்மை தவிர்த்துக்கொள்ளவே செய்கிறோம்.
இந்த அடிப்படையில் அல்லாஹ்வோ, அல்லது அவனுடைய தூதரோ ஒரு விஷயத்தை நமக்கு கட்டளையிட்டார்கள் என்றால் அது நமது நன்மைக்காகத் தான் இருக்கும் என்பதாக நாம் நம்பி செயல்படவேண்டும்.
ஐயம் : ஒருவர் மஃரிபுத் தொழுகையில் கடைசி ரகாஅத்தில் இமாமுடன் சேர்ந்துக் கொண்டால் எஞ்சியுள்ள இரு ரகாஅத்துக்களை எவ்வாறு தொழ வேண்டும் என்பதை ஹதீஸ் அடிப்படையில் விளக்கம் தருக!
தெளிவு: அவர் இமாம் ஸலாம் கொடுத்தவுடன் எழுந்திருந்து சூரத்துல் பாத்திஹாவையும் மற்றொரு சூரவையும் ஓதிவிட்டு ருகூஃ, சுஜுதுகள் செய்துவிட்டு நடு, இருப்பில் உட்கார வேண்டும். பிறகு எழுந்து மூன்றாவது ரக்காத்தை தொழவேண்டும். அப்போதும் சூரத்துல் பாத்திஹாவுடன் மற்றைாரு சூராவையும் சேர்த்து ஓதிவிட்டு, ருகூஃ, சுஜுக்கள் செய்து, கடைசி இருப்பு இருந்து ஸலாம் கொடுக்க வேண்டும் இதன் விபரங்கள் பின்வருமாறு: இமாமுடன் இவர் சேர்ந்து தொழுதது இமாமுக்கு மூன்றாவது ரகாஅத்தாக இருப்பினும் பின்பற்றிய இவருக்கு அது முதலாவது ரகாஅத்தேயாகும்.
“உங்களுக்கு (இமாமுடன்) கிடைத்தவற்றைத் தொழுங்கள். விடுபட்டவற்றைப் பூர்த்தி செய்து விடுங்கள்” (அபூஹுரைரா(ரழி), முஸ்லிம்)
என்ற ஹதீஸுக்கேற்ப முறைப்படி தமக்கு விடுபட்டுள்ள இரு ரகாஅத்துக்களையும் அவற்றில் அடங்கியுள்ள சூரத்துல் பாத்திஹா, அத்துடன் சேர்த்து ஓதும் சூரா, நடு இருப்பு ஆகியவை அனைத்தையும் பூர்த்தி செய்ய வேண்டியிருப்பதால் அவர் எழுந்து தொழும்போது ஒரு ரகாஅத்து தொழுதவுடன் உட்கார்ந்துவிட்டால் நடு இருப்பு கிடைத்து விடுகிறது. இவ்வாறே தாம் எழுந்து தொழும் இரு ரகாஅத்துக்களிலும் சூரத்துல் பாத்திஹாவுடன் மற்றொரு சூராவையும் சேர்த்து ஓதிவிட்டாலோ தமக்கு இமாமின் தொழுகையில் இருந்து விடுபட்டுவிட்ட சூரத்துல் பாத்திஹாவுக்குப் பின் ஓத வேண்டிய சூராவை ஓதுவதும் கிடைத்துவிடும்.
இமாமுடன் தாம் சேர்ந்து தொழும்போது இருந்துள்ள கடைசி இருப்பு, ஓதிய அத்தஹிய்யாத்து முதலியவை அனைத்தும் தாம் இமாமைப் பின்பற்றியவரும் செய்ய வேண்டும் என்ற ஹதீஸின் அடிப்படையில் செய்யப்பட்டவையே அன்றி அதற்கு தாம் எழுந்து தொழும் விடுபட்ட ரகாஅத்துக்களுக்கும் சம்பந்தமில்’லை, அவற்றை எழுந்து தொழும் தமது தொகையோடு சம்பந்தப் படுத்தக்கூடாது.
ஐயம் : சிலர் தொழுகைக்கு தக்பீர் கட்டும்போது காதுகளின் கீழ் பகுதியை தமது பெருவிரல்களால் தொட்டு தக்பிர் கட்டுகிறார்களே இதற்கு நபிவழியில் ஆதாரம் உண்டா? அனீஸ் அஹ்மத், ஸவூதி,
தெளிவு: நபி(ஸல்) அவர்கள்தாம் தொழ எழுந்திருந்தார் தமது இரு கைகளையும் தமது இரு புஜங்களுக்கு நேராக உயர்த்தி பின்னர் தக்பீர் கூறுவார்கள்.
(இப்னு உமர்(ரழி), புகாரீ, முஸ்லிம்)
நபி(ஸல்) அவர்கள் தாம் தொழுவதற்காக தக்பீர் கூறும்போது தமது இரு கைகளையும் தமது காதுகளுக்கு நேராக உயர்த்துவார்கள். ‘
(மாலிக்குப்னுல் ஹுவைரிஸ்(ரழி), முஸ்லிம்)
ஆகவே மேற்காணும் படி நபி(ஸல்) அவர்கள் தமது கைகளை புஜம், காதுகளுக்கு நேராக இருவிதமாக மட்டுமே தூக்கியுள்ளார்கள். என்பதைப் பார்க்கின்றோம். ஆனால் தாம் தொழுகைக்காக தக்பீர் கேட்கும்போது தமது காதுகளைத் தமது பெருவிரல்களால் தொட்டார்கள் என்பதாக ஒரு ஹதீஸும் கிடையாது. இவ்வாறு காதுகளைத் தமது கண்ணால் சாதாரணமாகப் பார்க்க முடியாமல் இருப்பதால் நபி(ஸல்) அவர்களின் ஹதீஸின்படி தமது காதுகளுக்கு நேராக கைகள் உயர்த்தப்பட்டிருக்கின்றனவா இல்லையா? என்ற சந்தேகத்தை காதுகளைத் தமது பெருவிரல்களால் தொடுவதன் மூலம் நிவர்த்தித்துக் கொள்கிறோம் என்கிறார்கள்.
காதுகளை தமது பெருவிரல்களால் தொட்டுப் பார்த்து சரி செய்துக் கொள்ளும் அளவிற்கு ” காதுகளுக்கு சற்று முன்பின் இல்லாமல் சரியாக நேராக நபி(ஸல்) அவர்கள் தமது கைகளை உயர்த்துவார்கள்” என்ற வாசகம் ஹதீஸில் இடம் பெற்றிருந்தாலும் சரி என்று கருதலாம் அவ்வாறின்றி பொதுவாக இரு கைகளையும் தமது இரு காதுகளுக்கு நேராக என்ற வாசகம் மட்டுமே இடம் பெற்றுள்ளது ஆகவே அனுமானமாக காதுக்கு நேராக கைகளை உயர்த்தினாலும் போதும் என்பதையே ஹதீஸின் வாசகம் காட்டுகிறது அதற்காக கைகளால் காதுகளைத் தொடத்தான் வேண்டும் என்பது அவசியமில்லை என்பது தெளிவாகிறது.
ஸஹீஹான ஹதீஸ்களில் இருவிதமாக காதுக்கு நேராகவும், புஜத்துக்கு நேராகவும் கைகளை உயர்த்துவதென்பது இடம் பெற்றிருப்பினும், “புஜத்துக்கு நேராக நபி(ஸல்) அவர்கள் தமது கைகளை உயர்த்தியுள்ளார்கள்” என்ற அறிவிப்பே மிக அதிகமாக இடம்பெற்றிருப்பதால் இதன்படி புஜத்துக்கு நேராக கைகளை உயர்த்துவதே மேல் என்பதை அறிகிறோம்.
ஐயம் : “தக்லீத் வாசிகளின் தக்வாவுக்கும், குர்ஆன் ஹதீஸ் வழியில் செல்லும் “தெளஹீத்” வாசிகளின் தக்வாவுக்கும் மறுமையில் என்ன பயன்? கதீஜா பர்வின், திருச்சி
தெளிவு : எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய ரசூலுக்கும் வழிபட்டு நடக்கிறார்களோ, அவர்கள் மகத்தான வெற்றியடைந்து விட்டார்கள் (33:71) என்பதாக குர்ஆனையும், ஹதீஸையும் பின்பற்றி நடக்கும் “தெளஹீத்” வாசிகளைப் பற்றி அவர்களுக்கு மகத்தான வெற்றி கிடைக்கும்” என்று கூட கூறாமல் அவர்கள் வெற்றி உறுதியாக இருப்பதால் அவர்கள் மகத்தான் வெற்றி அடைந்து விட்டார்கள் என்றே மிகத் தெளிவாகக் கூறி விட்டான்.
இமாம்களைப் பின்பற்றி நடக்கும் “தகலீத்” வாசிகள் அந்த இமாம்களுடைய சொற்களை குர்ஆன் ஹதீஸ்களோடு ஒத்துப்பார்த்தால் குர்ஆன் ஹதீஸ்களுக்கு உடன்பாடான நிலையில் உள்ளதை மட்டும் எடுத்து நடந்திருந்தால் மேற்காணும் தவ்ஹீத் வாசிகளைப் போல் இவர்களும் மகத்தான வெற்றியடைவார்கள். அவர்கள் முகல்லிதுகள் ஆகவும் மாட்டார்கள். அவ்வாறின்றி இமாம்களுடைய சொற்கள் குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முரண்படுவதைக் கூட பொருட்படுத்தாமல் கண்மூடித்தனமாக அந்த இமாமுடைய சொற்களை அவர்கள் எடுத்து அமல் செய்திருந்தால் நிச்சயமாக அவர்கள் மறுமையில் அல்லாஹ்விடம் மாட்டிக் கொண்டு விழிப்பார்கள். இதுதான் தகலீத் வாசிகளுக்கு மறுமையில் கிடைக்க போகும் பயன்.
ஐயம்: சிலர் தொழுகையை முடித்துவிட்டு நெற்றியில் கையை வைத்துக் கொணடு “யாகவிய்யு” என்று 11 தடவை ஓதுகிறார்களே இது நபி வழியா? இவ்வாறு செய்யலாமா? ஏ. அப்துல் ஹக், நிரவி
தெளிவு : யாகவிய்யு என்றால் பலன் மிக்கவனே! என்பது பொருள். இவ்வாறு அவர்கள் தொழுதவுடன் நெற்றியில் கை வைத்துக் கொண்டு ஓதும்படி நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஹதீஸ் ஏதுவுமிலர்லை. இவ்வாறு அவர்கள் தொழுமவுடன் நெற்றியில் கை வைத்துக் கொண்டு ஓதியதாக வரும் எந்த துஆவும் ஸஹீஹானதாகவும் இல்லை என்பது தெளிவு.
ஐயம் : சிலர் அரபுநாடுகளில் இருந்துக் கொண்டு ஹஜ்ஜு செய்கிறார்கள். இவ்வாறு ஹஜ்ஜு செய்யலாமா? ஏ. அப்துல் ஹக், நிரவி
தெளிவு : எந்த நாட்டில் இருந்தால் என்ன? ஹஜ்ஜு செய்வதற்கான வாய்ப்பு வசதிகள் எந்தநாட்டில் இருக்கும்போது ஏற்ப்பட்டாலும் ஹஜ்ஜு செய்வது தானே முறை, ஹஜ்ஜுக்கு தமது தாய்நாட்டிலிரந்துதான் செல்ல வேண்டுமா? இல்லையே!
ஐயம் : என் பையனுக்கு வயது 4 ஆகிறது. அவன் பிறந்ததிலிருந்து அவனுக்கு “அகீக்கா” கொடுக்கும் விபரம் அறியாது இருந்துவிட்டேன். இப்போது செய்யலாம் என்று கருதுகிறேன்; இப்போது செய்யலாமா?
தெளிவு : ஓ தாராளமாக செய்யலாம் செய்துவிடுங்கள்; ஏனெனில் “ஒவ்வொரு பிள்ளைகளுக்கும்; அகீக்கா உண்டு. ஆகவே அதற்காக “அகீக்கா கொடுத்துவிட்டு அக்குழந்தையின் தலைமுடியை அகற்றி விடுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஸல்மானுபின் ஆமிரிழ்ழப்பி(ஸல்), புகாரீ)
ஒவ்வொருக் குழந்தையும் தமது “அகீக்கா” வுக்கு பிணையாகவே இருக்கிறது. பிறந்த ஏழாம் நாள் அது (அதற்கான பிராணி) அறுக்கப்பட்டு நிறைவேற்றப்படுவதோடு, குழந்தையின் தலைமுடியும் அகற்பஷறப்பட்டு, பெயரிடப்பட வேண்டும்” என்டறு நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஸமுரத்துப்னின் ஜுன்துபு(ரழி), அபூதாவூத், திர்மீதி, நஸயீ)
மேற்குறிப்பிட்டுள்ள 7-ம் நாள் அகீக்கா கொடுக்க இயலாவிட்டால் அத்தோடு அது முடிந்து விடுவதில்லை “அகீக்க” கொடுக்க வசதியுடையவர்கள் அதைக் கொடுக்கும் வரை அதற்கு பொறுப்பாளியாகஆவ உள்ளார்கள் என்ற கருத்து ஹதீஸில் காணப்பமுவதால் வசதிப்டைத்தவர்கள் காலதாமதமானாலும் தனது பிள்ளைகளுக்காக அகீக்கா கொமுத்து விமுவதே முழறயாகும் என்பதை மேற்காணும் ஹதீஸ் தெளிவுப்படுத்துகிறது.
ஐயம் : பிறருக்கு தபால் எழுதும் போது ஆரம்பத்தில் பிஸ்மில்லாஹ்.. எழுதுவதும், மேலும் ஸலாம் கூறி எழுதுவதும் சுன்னத்தா-நபிவழியா? தபால் எழுதி முடிக்கும்போதும் சிலர் வஸல்லாம் என்றும் எழுதுகிறார்களே அதற்கு ஏதேனும் ஆதாரம் உண்டா? இம்ரான், திருச்சி.
தெளிவு : தபால் எழுதும் போது “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம்” என்று எழுத வேண்டும் என்ற முறையை “நிச்’சயமாக சுலைமடானிடமிருந்து வந்துள்ளது இன்னும் இது ” “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம்” என்று (துவங்கி) இருக்கிறது” (27:30) எனும் குர்ஆன் வசனம் காட்டுகிறது.
மேலும் நபி(ஸல்) அவர்கள் வெளிநாட்டு அரசர்களுக்கு தாம் அனுப்பிய தபால்களில் ஆரம்பத்தில் “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம்” என்று எழுதியதாக ஸஹீஹான ஹதீஸ்களில் காணப்படுகிறது.
இப்னு உமர்(ரழி) அவர்கள் “அப்துல் மாலிக் பின் மர்வான்’ அவர்களுக்கு தாம் “பைஅத்து” செய்து அவர்களைத் தாம் அமீராக ஏற்றுக் கொள்ளும் விதமாக பின்வறுமாறு தபால் எழுதியுள்ளார்கள் அதாவது
“பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம்” அப்துல்லாஹ்பின் உமரிடமிருந்து அமீருல் மூமினாகிய அப்துல்மாலிக் அவர்களுக்கு (எழுதுவது) “ஸலாமுன் அலைக்கும்” நிச்சயமாக நான் உங்களுடன் செர்ந்து அல்லாஹ்வைப் புகழ்கிறேளன் வென்தான் வணகிகத்திற்குரியவனே அன்றி வேறு யாருமில்லை. மேலும் என்னால் இயன்றளவு அல்லாஹ்வின் சட்டம், அவன்தூதரின் சுன்னத்-நடைமுறைப்படி உங்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதற்கு உறுதிமொழி அளிக்கிறேன். (அப்துல்லாஹ்பின் தீனார்(ரழி), அதபுல்முப்ரத், புகாரீ)
இவ்வறிவிப்பின் ஆரம்பத்தில் நபி(ஸல்) அவர்களின் நடைமுறைகளை ஒட்டி இப்னு உமர்(ரழி) அவர்கள் தமது தபாலின் ஆரம்பத்தில் “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம்” என துவங்கியிருப்பதையும், “ஸலாமுன் அலைக்கும்” என்று ஸலாம் எழுதியிருப்பதையும் அறிகிறோம். “ஸலாமுன் அலைக்கும் என்றாலும் “அஸ்ஸலாமு அலைக்கும் என்றாலும் பொருளில் பெரியதொரு வித்தியாசமில்லை. ஆகவே இரு வகையாகவும் சொல்லலாம் எழுதலாம்.
தபாலின் ஆரம்பத்திலும் கடைசியிலும் “ஸலாம்” எழுதுவதோடு கிழமை, தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் குறித்து எழுதுவதற்கான ஆதாரம்:
எனக்கு கரிஜாபின் ஜைது” என்பவரிடத்திலும், ஜைதுடைய குடும்பத்தவர்களில் பெரியவர்களிடத்திலிருந்தும் இக்கடிதம் கிடைத்துள்ளது என்று என் தந்தை எனக்கு கூறினார்கள். அதாவது:
“பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம்” ஜைதுபின் “தாபித்” இடமிருந்து அமீருல் மூமினாகிய “அப்துல்லாஹ் மு ஆவியா(ரழி)” அவர்களுக்கு (எழுதுவது) அமீருல் மூமினீனே! ஸலாமுன் அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி” நான் உங்களுடன் சேர்ந்து அல்லாஹ்வைப் புகழ்சிறேன். அவன்தான் வணக்கத்திற்கரியவனே அன்றி வேறு யாருமில்லை, நீங்கள் என்னிடத்தில் இறந்துவிட்ட நபருடைய பாட்டனாருக்கும், சகோதரர்களுக்கும் சொத்தில் பங்கு உண்டா? என்பதுப் பற்றி கேட்டு எழுதியுள்ளீர்கள் (என்பதாக கடிதத்திலுள்ள வாசகத்தை வாசித்துவிட்டு, அதன் கடைசியில் ) நாம் அல்லாஹ்விடத்தில் நமது எல்லா காரியங்களிலும் நேர்வழியையும், நிலையான தன்மையையும் பாதுகாப்பையும் வேண்டுகிறோம். மேலும் நம் வழி தவறுதல், அறியாமல் எதையும் செய்தல், நமக்கு ஊர்ஜிதமில்லாத விஷயங்களில் நம்மை நாம் வீணாக ஈடுபடுத்துதல் ஆகியவற்றிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறோம்.
“வஸ்ஸலாமு அலைக்க அமீரல்முமினீன் வரஹ்மத்துல்லாஹிவபா காத்துஹூ வமஃபிரத்துஹூ” (மேலும் அமீருல் மூமினீனே! உங்கள் மீது ஸலாமும் அல்லாஹ்வின் அருளும் உண்டாகுக! என்று உள்ளது. இக்கடிதத்தை எழுதியுள்ள “வுஹைபு” என்பவர் அதில் வியாழக்கிழமை ஹிஜ்ரீ 42 ரமழான் 12 என்பதாக குறிப்பிட்டுள்ளார். (இப்னு அபீஜனாத்(ரழி), அதபுல்முஃப்ரத், புகாரீ)
இவ்வறிவிப்பில் ஜைதுபின் தாபித்(ரழி) அவர்கள் எழுதிய கடிதம் இடம்பெற்றுள்ளது. நபி(ஸல்) அவர்களுக்கு “வஹீ” வந்தவுடன் அவற்றைப் பதிவு செய்வதற்காக நியமிக்கப்பட்டவர்களில் ஜைதுபின் தாபித்(ரழி) அவர்களும் ஒருவராவார்கள். அல்லாஹ்வின் வஹீ-யை நபி(ஸல்) அவர்கள் கூற அவற்றைப் பதிவு செய்யும் பண்பாட்டை உடையவர்கள் பிறருக்கு தபால் எழுதும் ஒழுக்க முறைகளை மெற்காணும் அறிவிப்பு தெளிவுபடுத்துகிறது.
இதில் ஆரம்பத்தில் “”பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம்” ஸலாம் முதலியவை எழுதியிருப்பதோடு கடிதத்தை முடிக்கும்போதும் ஸலாம் எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். மேலும் கிழமை, தேதி, மாதம், வருடம் முதலியவை குறிப்பிட்டிருப்பதையும் பார்க்கிறோம். இத்தகைய சிறந்த நடைமுறைகள் எல்லாம் நபி(ஸல்) அவர்களின் வாயிலாக ஸஹாபாக்கள் காலத்திலேயே நடைமுறைப்பமுத்தியிருந்தும், நம்மில் அநேகர் தபால் எழுதும் போது இவற்றைப் பொருட்படுத்தவதில்லை.
குர்ஆன் ஹதீஸ்களின் விளக்கம் மக்களுக்கு ஓரளவு பரவலாக கிடைத்துக் கொண்டிருக்கும் இக்காலக் கட்டத்தில் கூட முறையாக தபால் எழுதுவோர் மிகக் குறைவு. சிலர் தபாலின் ஆரம்பத்தில் “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம்” என்று முழுமையாக எழுதாமல் “பிஸ்மில்லாஹ்” என்று மட்டும் எழுதுகின்றனர். சிலரோ பிஸ்மிஹீ தஆலா” என்றும் வேறு சிலர் பிஸ்மிக்கல்லாஹும்ம” என்றும் தன்னிச்சையாக எழுதுகிறார்கள். இன்னும் சிலரோ நமக்கும் ஒரு வம்பும் வேண்டாம் என்று 786 என்று தபாலின் தலைப்பில் எழுதிவிட்டு தாம் முறையாக தபால் எழுதிவிட்டோம் என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள்.
நபி(ஸல்) அவர்கள் எதை நடைமுறைப்படுத்திவிட்டு சென்றுள்ளார்களோ, அதுதான் முறையாக இருக்க முடியுமே தவிர பிறரால் நடைமுறைப்படுத்தப்பட்டவை எவையும் சரியான முறையாக இருக்க முடியாது.