குர்ஆனின் நற்போதனைகள்:
தொடர்:18
அல்லாஹ்வும், அவனது தூதரும் போதுமே!
A. முஹம்மது அலி
பகுதி:4. நேர்வழி எதுவோ அதுவே நபிவழி; அதுவே நம்வழி.
1. (நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக நேர்வழி என்பது அல்லாஹ்வின் வழியேயாகும். (3:73)
2. மனிதர்களே! இது வேதமாகும். இதனை நாமே இறக்கி வைத்தோம். இது மிக்க பாக்கியம் வாய்ந்ததாகும். ஆகவே இதனைப் பின்பற்றுங்கள்; இன்னும் அவனை அஞ்சி (பாவத்தை விட்டு விலகிக் கொள்ளுங்கள். நீங்கள் கிருபை செய்யப்படுவீர்கள். (6:155)
3. எவர் எனது நேர்வழியை பின்பற்றுகின்றார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை; துக்கப்படவும் மாட்டார்கள். (2:38)
4. எவர் நேர்வழியைப் பின்பற்றி நடக்கின்றாரோ அவர் மீது சாந்தி(சலாம்) உண்டாகட்டும். (20:47)
5. எவர் எனது நேர்வழியைப் பின்பற்றி நடக்கின்றாரோ அவர் வழிதவறவும் மாட்டார். நற்பேரிழக்கவும் மாட்டார். (20:123)
6. நேர்மையாளரான இப்ராஹீமின் சன்மார்க்கத்தை பின்பற்ற வேண்டும் என நாம் உனக்கு இறை செய்தி(வஹீ) மூலம் அறிவித்தோம். அவர் இணை வைப்போரி(முஷ்ரிக்குகளி)ல் ஒருவராக இருந்ததில்லை. (16:123)
7. இறை நம்பிக்கையாளர் (மூஃமின்கள்)களே! நேர்வழி சென்ற இப்றாஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுங்கள்; அவர் முஷ்ரிக்கு(இணை வைப்போர்)களில் ஒருவராக இருக்கவில்லை. (3:95)
8. எவர் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்டு, இப்றாஹீமுடைய தூய மார்க்கத்தையும் பின்பற்றுகின்றாரோ அவரை விட அழகிய மார்க்கத்தை உடையவர் யார்? (4:125)
9. நான் என் மூதாதையர்களான இப்றாஹீம், இ-ஸ்ஹாக் யாகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன். அல்லாஹ்வுக்கு நாங்கள் எதையும் இணை வைப்பது தகுமானதல்ல. இது எங்கள் மீதும், (இதர) மக்கள் மீதும் அல்லாஹ் புரிந்த அருளாகும். எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதில்லை. (12:38)
10. நிச்சயமாக, மனிதர்களில் இப்றாஹீமுக்கு மிகவும் நெருங்கியவர்கள் (அவருடைய காலத்தில்) அவரைப் பின்பற்றியோரும், இந்த நபியும், (அல்லாஹ்வின் மீதும், இந்த நபியின் மீதும்) ஈமான் கொண்டோருமே ஆவார்; (3:88)
11. (நபியே!) யூதர்களும், கிறித்துவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாத வரையிலும் உம்மைப் பற்றி திருப்பதியடைய மாட்டார்கள். (ஆகவே அவர்களை நோக்கி) நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-இஸ்லாம்-அதுவே நேர்வழி என்று சொல்லும். (2:120)
12. உமக்கு அவர்கள் பதில் கூறாவிட்டால், நிச்சயமாக அவர்கள் தம் மனோ இச்சைகளையே பின்பற்றுகிறார்கள் என்று நீர் அறிந்துக் கொள்ளும்; மேலும் அல்லாஹ்விடமிருந்து நேர்வழி வந்தப் பின்னும், தம் மனோ இச்சைகளை பின்பற்றுகிறவனை விட மிக கெட்டவன் எவன்? நிச்சயமாக அல்லாஹ் அக்கிரமக்கார சமூகத்திற்கு நேர்வழிக் காட்ட மாட்டான். (28:50)
13. (இந்த முஷ்ரிக்குகளை) நாங்கள் நேர்வழிக்கு அழைத்தாலும், உங்களை அவர்கள் பின்பற்ற மாட்டார்கள். (7,193)
14. நிச்சயமாக நிராகரிப்போர் (காஃபிர்)கள் அசத்தியத்தையே பின்பற்றுகிறார்கள்; நம்பிக்கை(ஈமான்) கொண்டவர்களோ நிச்சயமாகத் தங்களுடைய ரப்பிடமிருந்து (வந்து)ள்ளதையே பின்பற்றுகிறார்கள். (47:3)
15. யார் நம் தூதரைப் பின்பற்றுகிறார்கள்; யார் அவரைப் பின்பற்றாமல் தம் இருக் குதிகால்கள் மீது திரும்பி செல்கிறார்கள்? என்பதை அறி(வித்து விடு)வான் வேண்டியே கிப்லாவை நிர்ணயித்தோம். (2:143)
16. எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்கு தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் சொல்லாத வழியில் செல்கிறானோ அவனை அவன் செல்லும் (தவறான) தவறான வழியிலேயே செல்ல விட்டு நரகத்திலும் அவனை நுழைய செய்வோம். (4:115)
17. வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் நீர் எல்லாவிதமான அத்தாட்சிகளையும் எடுத்துக்காட்டிய போதிலும் அவர்கள் உம் கிப்லாவைப் பின்பற்ற மாட்டார்கள். நீரும் அவர்களது கிப்லாவைப் பின்பற்றுவரல்ல. இன்னும் அவர்களில் சிலர் மற்றவர்களின் கிப்லாவைப் பின்பற்றுவருமல்ல. இன்னும் அவர்களில் சிலர் மற்றவர்களின் கிப்லாவை பின்பற்றுவர்களும் அல்லர். எனவே (அதைப் பற்றிய) ஞானம் உம்மை எய்திய பின் நீர் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றி நடப்பாராயின், நிச்சயமாக நீர் அநியாக்காரர்களில் ஒருவராக இருப்பீர்.
18. நிச்சயமாக(இஸ்லாம்) இதுவே என்னுடைய நேரான வழியாகும். ஆகவே இதனையே பின்பற்றுங்கள்; இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம்; அவை உங்களுடைய வழியை விட்டு பிரித்து விடும். (6:153)
19. என்னையே பின்பற்றுங்கள். இதுவே ஸிராத்துல் முஸ்தஹிம் (நேரான வழி) ஆகும்.