ஹதீஸ் பெட்டகம்

in 1990 ஜூலை-ஆகஸ்ட்

ஹதீஸ் பெட்டகம்

தொடர்: 5       

A. முஹம்மது அலி.

சப்தமிட்டு  “ஆமின்”  சொல்லுங்கள் :

அல்லாஹுவின் ஆணைகள்:

(நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கிறாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்;

மேலும் எதை விட்டு உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்;   

நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடுமையானவன். (59:7)

அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு காரியத்தைப் பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்ராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ உரிமையில்லை. எனவே, அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்தால், நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (33:36)

நபி(ஸல்) அறிவுறுத்தினார்கள்.

(நீங்கள் பின்பற்றித் தொழும்) இமாம்களில் மஃலூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன் என ஓதி முடித்தால் நீங்கள் ஆமின் எனச் சொல்லுங்கள். எவரது ஆமின் வானவர் (மலக்கு)களின் ஆமினுடன் ஒன்று சேர்கிறதோ அவரது முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும். மற்றொரு அறிவிப்புப்படி: இமாம் (அல்ஹம்து சூரா) ஓதி ஆமின் என்று சொன்னால், நீங்களும் ஆமின் சொல்லுங்கள். எவரது ஆமின், வானவர் (மலக்கு)களின் ஆமினடன் ஒன்று சேர்கிறதோ அவரது முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.

    இந்நபிமொழி பெரும்பாலும் அபூஹுரைரா (ரழி-இ59ஹி) அவர்களால் அறிவிக்கப்பட்டு பற்பல நூல்களில் இடம் பெற்றுள்ளது. அதன் விபரமாவது;   

        ஆதார நூல்கள்                                                            பாடங்கள்  

    1.     புகாரி                                 தப்ஸீர் சூரா1        விளக்கம் அத்தி. எண்1

                                                                                            அதான்                     பாங்கு

    2.     முஸ்லிம்                             ஸலாத்                     தொழுகை

    3.     நஸயீ                                                                  இமாமா                     தமை

                                                                                             தக்பீக்                         ஓதிடல்

                                                                                             ஸஹ்வு = மறதி

                                                                                             இஃப்திதாஹ் = ஆரம்பம்

    4.     அபூதாவூத்                            ஸலாத்=தொழுகை

    5.     திர்மிதீ                                ஸலாத் = தொழுகை

    6.     முஅத்தா மாலிக்கி                   ஸலாத் = தொழுகை

    7.     ஸஹீ ஃபா ஹம்மாம்               ஹதீஸ் எண் 10

    8.     தாரிமி                                 ஸலாத் = தொழுகை

    9.     இப்னு மாஜ்ஜா                        இகாமத்=தொழுகைக்கு நிற்குதல்

    10.     முஸ்னது அஹ்மத்                  முஸ்னது அபீ ஹுரைரா பாகம் 2ல்

                                                                                            பக்கங்கள் 233,270,376,440,450,497

    11.     அபூ தாவூத் தயாலிஸி             ஹதீஸ் எண் 2577

    12.     தாரகுத்னி                           ஸலாத் = தொழுகை

    13.     அபூ யஃலா                                                            __

***************************************************************************

இந் நபிமொழிகளை உறுதிப்படுத்தும் நபிமொழிகளையும் பார்ப்போம்.

நபி(ஸல்) கூறினார்கள்:

இமாமைப் பின்பற்றி  தொழுவதில் குழப்பம் அடையாதீர்கள். அவர் தக்பீர் கூறினால் நீங்களும் தக்பீர்க் கூறுங்கள். அவர் வழழ்ள்ளீன்” என்றால் ஆமின்க் கூறுங்கள். அவர் ருகூஃ செய்தால் நீங்களளும் ருகூஉ செய்யுங்கள். அவர் ஸமீ அல்லாஹு லிமன் ஹமீதஹ்’ என்று கூறினால் ரப்பனா லகல் ஹம்து’ என்று கூறுங்கள். என்று அபூமூஸா அல்-அஷ்அரீ(ரழி) ஒர தடவை இமாமாக நின்று தொழ வைத்து விட்டு கூடியிருந்த மக்களுக்கு உபதேசித்துள்ளதை நஸயீ, தாரிமி முஸ்னது அஹ்மது போன்ற நூல்களில் பதிவு செய்து வைத்துள்ளனர்.

உங்களில் ஒருவர் ஆமின் கூற, வானிலுள்ள வனவர்களும் ஆமின் கூற, இவ்விரு ஆமின்களும் ஒன்று சேர்ந்தால் அவரது முந்தியப் பாவங்கள் மன்னிக்கப்படும் என அபூஹுரைரா(ரழி) அறிவிக்கும் நபி மொழி புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், முஅத்தா மாலிகி, முஸ்னது அஹ்மது போன்ற நூல்களில் பதிவாகியுள்ளது.

அல்லாஹுவின் அருளால் நாம் ஆய்ந்தறிந்த வரையில் இந்நபிமொழிகள்(13) பதிமூன்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ் நூல்களில் இடம் பெற்றுள்ளது. ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்ப்பட்ட அறிவிப்பாளர் வரிசையில் அபூஹுரைரா, அபூமுஸா அல்-அஸ். அரி வாயிலுபின் ஹுஜ்ர்(ரழி-அன்கும்) போன்ற நபித் தோழர்களும் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

வேறுபட்ட கருத்துக்கள்

இமாம் உஎன்று கூறியதும் ‘ஆமின்’ என பின்பற்றித் தொழுபவர்கள் சப்தமிட்டுக் கூற வேண்டுமா? மெதுவாகக் கூற வேண்டுமா? என்பதில் நம்மிடையே வேறுபட்டக் கருத்துக்கள் நிலவி வருகின்றன. அபூமூஸா அல்-அஷ்ரீ(ரழி) அவர்களின் அறிவிப்பில் இமாம் தக்பீர் சொன்னால் நீங்களும் தக்பீர் சொல்லுங்கள். அவர் ருகூஃ செய்தால் நீங்களும் ருகூஃ செய்யுங்கள். ஸமீ அல்லாஹு லிமன் ஹமிதஹ்  என கூறினால் நீங்கள் ரப்பனா லகல் ஹம்து கூறுங்கள்  என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இமாம் தக்பீர் சொன்னால் பின்பற்றி தொழுபவர்கள் சப்தமிட்டு தக்பீர் சொல்லுவதில்லை.

இமாம் ஸமீ அல்லாஹு லிமன் ஹமீதஹ் என்று சொன்னால் பின்பற்றித் தொழுபவர்கள் சப்தமிட்டு ரப்பனா லகல் ஹம்து சொல்லுவதில்லை. எனவே இமாம் வலழ்ழாள்ளீன் என அல்ஹம்து சூராவை முடித்ததும் பின்பற்றி தொழுபவர்கள் ஆமின் என சப்தமிட்டுக் கூற வேண்டாம் என ஒரு வாரர் வாதிட்டு ஆமின் சப்தமிட்டுக் கூறுவதில்லை. இவர்களது கூற்று சரியானதாக தோன்றலாம்.

மேலும் வானவர்(மலக்கு)களின் ஆமீனுடன் ஒன்று சேர சப்தமிட்டு கூறத் தான் வேண்டும் என்ற அவசியமும் இல்லை. மெதுவாகக் கூறினாலும் வானவர்களின் ஆமினுடன் ஒன்று சேர்கிறதா? இல்லையா? என்பதை எல்லாமறிந்த அல்லாஹ்வால் கணிக்க முடியும். எனவே ஆமின் சப்தமிட்டு கூறத் தேவையில்லை எனவும் வாதிடுகிறார்கள். மேற்கண்ட இவ்வாதங்களை, வலழ்ழாள்ளீன் கூறியதும் ஆமின் சொல்வதற்கு அந்நபிமொழிகள் மட்டுமிருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். மாறாக பல நபிமொழிகள் ‘அதர்கள்’ ஆமின் சப்தமிட்டுத் தான் கூற வேண்டுமென பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன.

அவையாவன:

நபி(ஸல்) அவர்கள் “வலழ்ழாள்ளீன்” என்று கூறியதும் ‘ஆமின்’ என்பதை முதல் வரிசைக்குக் கேட்குமளவு கூறுவார்கள் என்று அபூஹுரைரா(ரழி) அறிவிக்கும் ஹதீஸ் அபூதாவூத், இப்னுமாஜ்ஜா, தாரகுத்னீ, ஹாக்கிம், பைஹகி போன்ற நூல்களில் இடம் பெற்றுள்ளது.

இதனை உறுதி செய்யும் விதமாக, அபூஹுரைரா(ரழி) அவர்களின் அறிவிப்பைத் தொடர்ந்து நபி(ஸல்) அவர்கள் ஆமின் சொல்லக்கூடியவர்களாக இருந்தார்கள். என இப்னு ஷிஹாப்(ரஹ்) அறிவிக்கும் செய்திகளை புகாரீ, முஸ்லிம், மு அத்தாமாலிகி போன்ற நூல்களில் இடம் பெற்றுள்ளது.

மேற்கண்ட நபிமொழிகள் மூலம், நபி(ஸல்) அவர்கள் சப்தமிட்டு ஆமின் சொல்லியிருப்பதையும் அந்த சப்தம் முதல் வரிசையிலுள்ள எவர்கள் கேட்குமளவு இருந்துள்ளதையும் அறியலாம். இப்படிப்பட்ட நிகழ்ச்சி ரஸுல்(ஸல்) அவர்களின் ஆரம்பக் காலத்தில் நிகழ்ந்து இருக்கலாம். அவர்களின் பிந்திய காலத்தில் அப்படி சப்தமிட்டுக் கூறவில்லை என வாதிடவும் முடியாது. ஏனெனில் முதல் வரிசைக்கு கேட்குமளவு நபி(ஸல்) அவர்கள் சப்தமிட்: ஆமின் கூறினார்கள் என்று அறிவி்க்கும் அபுதஹுரைரா(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் கடைசி காலத்தில் ஹிஜ்ரி 5 அல்லது 6ல்) தான் இஸ்லாத்தில் இணைந்தார்கள். அவர்கள் உரைத்துள்ளது நபி(ஸல்) அவர்களின் கடைசி காலத்திய வழக்கமாகும் என்பதையும் உணரலாம்.

அதுமட்டுமின்றி நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றிய நபித்தோழர்கள் இவ்விதமே ஆமினை சப்தமிட்டு கூறியுள்ளனர். அபூஹுரைரா(ரழி) ஒரு தடவை இமாமாக நின்று தொழ வைத்த போது ‘ஆமின்’ எனக் கூற, பின்பற்றி தொழுத மக்களும் அஹ்மதுப் போன்ற நூல்களில் இடம் பெற்றுள்ளது.

அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரழி) அவர்கள் தொழ வைக்கும் போது பள்ளிவசல் அதிரும் அளவுக்கு பின்பற்றித் தொழுபவர்கள் சப்தமிட்டு ஆமின் கூறினார்கள் என்ற செய்தி புகாரீயில் இடம் பெற்றுள்ளது. நபித்தோழர்களின் இச்செயல்கள் நபி(ஸல்) சப்தமிட்டு ஆமின் எனக் கூறுங்கள் என்பதற்கு தெள்ள தெளிவான விளக்கமாக அமைந்துள்ளதை அறியலாம்.

நான் நபி(ஸல்) அவர்களுடன் தொழுதேன். அவர்கள் வலழ்ழாள்ளீன் என்று கூறியதும் ‘ஆமின்’ என்றார்கள். அதனை நாங்கள் செவியுற்றோம் என அப்துல் ஜப்பார் இப்னு வாயில்(ரழி) அவர்கள் தனது தந்தையிடமிருந்து அறிந்ததாக கூறும் நபிமொழி இப்னு மாஜ்ஜாவில் இடம் பெற்றுள்ளது. இது முர்சலான ஹதஸாகும். அப்தல் ஜப்பார் இப்னு வாயிலு(ரழி) அவர்கள் அவரது தந்தையின் அறப்பிற்கு பின் தான் பிறந்துள்ளார் என்பதை சரித்திர சான்றுகள்  கூறுகின்றன.

நம்மிடையே ஆமின் :

இமாம் தொழுகையில் வலழ்ழாள்ளீன் என்றதும் ஆமின் சப்தமிட்டு கூற வேண்டுமென்பதற்கு தெள்ளத் தெளிவான ஆதாரங்களை கண்டோம். நபி(ஸல்) அவர்கள் ஆமின் எனக் கூறுங்கள் என ஆணையிட்டுள்ளார்கள். நபி(ஸல்) முதல் வரிசைக்கு கேட்குமளவு ஆமின் சப்தமிட்டுக் கூறியுள்ளார்கள். நபித்தோழர்களும் ஆமின் என சப்தமிட்டு கூறியுள்ளனர். பள்ளிவாசல் அதிரும் அளவு சப்தமிட்டுள்ளனர். இன்றைக்கும் சுன்னத் வல்-ஜமாஅத் தங்களை அழைத்துக் கொள்ளும் ஹனஃபி, ஷாஃபி, மாலிகி, ஹம்பலி என்ற மத்ஹபுகளில் ஹனபி மத்ஹபை தவிர மற்ற மூன்று மத்ஹபுகளிலும் சப்தமிட்டே ஆமின் உரைக்கின்றனர்.

ஹனபி மத்ஹபைச் சார்ந்தவர்கள் ‘ஆமின்’ என சப்தமிட்டு கூறுவதில்லை. அதனை நாம் விமர்சிக்க தேவையுமில்லை. ஏனெனில் இந்த சுன்னத்தை செய்யாததால்  அவர்களின் தொழுகை வீணாகி விடாது. தெரிந்தே ஒரு சுன்னத்தை விட்ட குறை ஏற்படவே செய்யும். ஆயினும் அவர்கள் நபிவழியில் ஆமின் சொல்பவர்களைத் தடுப்பது, சப்தமிட்டு சொல்பவர்களுக்கு தண்டனை அளிப்பதும் கடிய விமர்சனத்திற்குரியது என்பது எவரும் மறுக்க முடியாது.

நபிவழியில் ஆமின் சொல்பவர்களைத் தடுப்பதும், சப்தமிட்டு ஆமின் சொன்னார்கள் என்பதற்காக அபராதம், தண்டனை விதிப்பது நபி(ஸல்) அவர்களின் வழிமுறைக்கு மாறு செய்வதாகும். இவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கும், அவர்களை முழுமையாக பின்பற்றி நடந்த நபித்தோழர்களுக்கும் எதிராக போர் புரிகிறார்கள் என்றால் மிகையாகாது. இங்கு மீண்டும் ஒருமுறை நாம் ஆரம்பத்தில் எடுத்துரைத்த அல்லாஹுவின் ஆணை (குர்ஆன் வசனம் 33:36)யை பார்வையிட வேண்டுகிறோம். இவ்வசனப்படி இவர்கள் வழிகேட்டிலேயே இருப்பதை நாம் உணரலாம்.

டவுன் காஜி போன்ற பொறுப்பிலிருந்து மக்களை நேர்வழிப்படுத்த வேண்டியவர்கள் கூட இது போன்ற வழிகேட்டில் சிக்கியிருப்பது வருந்தத்க்க விஷயமாகும். திருச்சி டவுன் காஜி அவர்கள் தான் இமாமாக உள்ள பள்ளியில் எவராவது தொழுகையில் ஆமின் சப்தமிட்டுக் கூறிவிட்டால் தொழுது முடிந்ததும் இது ஹனபி பள்ளிவாசல். இங்கு (ஷாபி போல்) சப்தமிட்டு ஆமின் கூற கூடாது எனத் தடுத்தும் வருகிறார். இது மட்டுமின்றி, அப்படியும் எவராவது ஆமின் சொல்லி விடுவாரோ என வழல்லாள்ளீன்” என்று ஓதியவுடன் ஆமின் சொல்ல இடம் கொடாமல் உடனே பிஸ்மிக் கூட ஓதாமல் அடுத்த சூராவை ஓதி விடுகிறார். தற்சமயம் ஹஜ்ஜுக்குச் சென்று வந்த இந்த திருச்சி டவுன் காஜி மக்கா, மதினாவில் தொழுதவர்களின் நிலையை இவர் கண்டிருப்பார். அங்கு இவரது நிலை என்னவோ!

தென்அற்காடு மாவட்டத்தில் ஒரு ஊரில் ஒரு சில இஸ்லாமியத் தோழர்கள் தொழுகையில் ஆமின் சப்தமிட்டுக் கூறியதற்காக தலைக்கு ரூ.500/ என அபராதம் விதித்துள்ளனர். இச்செய்தி நமது அந்நஜாத் இதழில் வெளியானதை அனைவரும் அறிவீர்கள். இவ்வூர் ஜமாஅத்தார் நபி(ஸல்) காலத்திலோ, நபித்தோழர்கள் காலத்திலோ இருந்திருந்தால் நபி(ஸல்) அவர்களுக்கும், நபித்தோழர்களுக்கும் மேலே நாம் எடுத்து வைத்துள்ள ஹதீஸ் அறிவிப்பாளர்களுக்கும் சேர்த்து தலைக்கு ரூ 500/ என அபராதம் விதித்து, கொள்ளை அடித்து இருப்பார்களோ என்னவோ?

ஆமின் சப்தமிட்டு கூறியதற்காக அபராதம் விதித்த ஊர் ஜமாஅத்தாரும், திருச்சி டவுன் காஜியும் தங்களை சுன்னத்து வல் ஜமாஅத் என அழைத்துக் கொள்கின்றனர். அவர்களதுப் பள்ளிகளில் சுன்னத்து வல் ஜமாஅத்தைச் சார்ந்த ஹனபி, ஷாபி, மாலிக், ஹம்பலி மத்ஹபுக்காரர்கள் மட்டுமேத் தொழ வேண்டும். நான்கு மத்ஹபுகளில் ஒன்றையாவது பின்பற்றியவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர் என பிரகடனமும் படுத்துகின்றனர்.

திருச்சி டவுன் காஜி இதனை தீர்மானமாகவும் போட்டு ஊர் முழுவதும் பரப்பியது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் தாம் இகாமத் செய்யும் பள்ளி ஹனபி பள்ளி, இங்கு (ஷாபி போல) ஆமின் சப்தமிட்டு சொல்லக்கூடாது என சொல்லிவருவது சரியானதா, அவரது ஜமாஅத்துல் உலமா சபை, சுன்னத்து வல் ஜமாஅத்தாக அங்கீகரித்து ஷாஃபி மத்ஹபை, இவர் அந்த ஜமாஅத்திலிருந்து அகற்றிவிட்டார். ஏன் இவருக்கு இந்த ஷாஃபி மத்ஹபு மீது இவ்வளவு வெறுப்பு? என்பதை வாசகர்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

(நான்கு மத்ஹபுகளும் ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறோம் என்று கூறிவருவதும் பொய்யென உணர்ந்துக் கொள்ளுங்கள்.)

இவர்கள் நபிவழியை மட்டும் மறுக்கவில்லை. இவர்களாலேயே மதிக்கப்படும் ஷாஃபி, மாலிக், ஹம்பலி. இமாம்களின் கூற்றையும் அவமதித்து வருகின்றனர் என்பது டவுன் காஜி போன்றோரின் செயல் மூலம் விளங்கும் மேலும் ஹனபி மத்ஹபைச் சார்ந்த இவர்கள் உண்மையான ஹதீஸே(நபி மொழியே) என் வழி எனக் கூறிய இவர்களது இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களையும் அவமதித்துள்ளது தெளிவாகும்.

இவ்விதம் இவர்கள் நபிமொழியையும், இமாம்களின் கூற்றையும் அவமதித்து வருவது இவர்கள் தங்களது மத்ஹபைக் கண்மூடிப் பின்பற்றுவதால் தான். மத்ஹபின் பெயரால் அரபிமொழியில் எழுதப்பட்டது அனைத்தும் இவர்களுக்கு ஆதாரமாகி விடுகிறது. உண்மையான நபிமொழிகள் பலவிருந்தாலும் தூக்கி எறியவும் அதற்கு மாறாக செயலாற்றவும் செய்துள்ளது.

அந்த அளவு இவர்களது மத்ஹபு வெறி நபி(ஸல்) அவர்களது தோழர்களின் வழி முறைக்கு எதிராக போர் புரியவைக்கும் வழிக்கேட்டில் தள்ளியுள்ளது. டவுன் காஜி போன்றவர்கள் உண்மை தெரிந்த நிலையிலும் இப்படி நடந்துக் கொள்வது சகிக்க முடியாம கொடுமையாகும். சத்தியத்தை ஏற்க மறுக்கும் அசத்திய வாதிகளின் பண்பை ஒத்திருப்பதை அனைவரும் அறியலாம். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் இப்படிப் பட்டவர்களை நேர்வழிப்படுத்த முடியாது. எல்லாம் வல்ல அல்லாஹ் அனைவருக்கும், குறிப்பாக இதுப் போன்றோருக்கும் நேர்வழிக் காட்ட நாம் பிரார்த்திப்போமாக! ஆமின்.

தொழுகையில் இமாம் வழல்லாள்ளீன்” என்றவுடன் சப்தமிட்டு ஆமின் சொல்ல பல நூறு உண்மையான நபிமொழிகள் இருப்பதைக் கண்டீர்கள். அதனையே பல வேறுபட்ட கருத்துக்களால் ஊனப்படுத்தியுள்ள இன்றைய முஸ்லிம்கள் நபி(ஸல்) அவர்களோ, அவர்களது தோழர்களோ காட்டித் தராத ஒரு “ஆமின்” வழக்கத்தை ஒவ்வொரு பர்லான(கடமையான) தொழுகை முடிந்ததும் செயல்படுத்தி வருகின்றனர்.

நபி(ஸல்) அவர்களுக்கு தொழுகை கடமையாகி சுமார் 12 வருடங்கள் தனியாகவும், ஜமாஅத்தாகவும், பிரயாணத்திலும், பல நிலையிலும் தொழுதுள்ளார்கள். ஒரு நாள் கூட ஒரு பர்லான தொழுகைக்குப் பின் நபி(ஸல்) அவர்கள் இன்று பள்ளி இமாம்கள் ஓதி வருவதுப் போல் கூட்டு துஆ ஓதியது இல்லை. பின்பற்றி தொழுதவர்கள் இன்று அனைவரும் உரத்தக் குரலில்  “ஆமின்” சொல்வது போல் சொன்னதும் இல்லை. இதற்கு ஒரு பலஹீனமான ஹதீஸ்-நபி-மொழி-கூட இல்லாதது கவனிக்கத்தக்கது. இது ஒரு பித்அத்(நவீன) வழக்கம் என ஒரு சில மெளலவிகள் விளங்கி வருவது வரவேற்கத் தக்க விஷயமாகும். ஆனால் வழமையாக செய்து வந்ததை விட்டு விட்டால் மக்கள் என்ன சொல்வார்களோ என்ற பயத்தில் செயல்படுத்தத் தயங்குகிறார்கள்.

எனவே தோழர்களே! நபி(ஸல்) வழியில் தொழுகையை நடத்தும் படி உங்களது இமாம்களை வலியுறுத்துங்கள். மத்ஹபு வெறியினை தூக்கி எறிந்து நபி வழி நடக்க முன் வாருங்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டப் போதுமானவன்.

Previous post:

Next post: