குர்ஆனின் நற்போதனைகள்

in 1990 செப்டம்பர்

குர்ஆனின் நற்போதனைகள்:

   தொடர் : 19

அல்லாஹ்வும் அவனது தூதரும் போதுமே!

A. முஹம்மது அலி.

பகுதி:5

நபியின் கடமையும், நாம் ஈடேற்றம் பெற வழியும்.

1. எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ-அவர்கள் தங்களிடமுள்ள தெளராத்திலும், இன்ஜீலிலும் அவரது புகழ் எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள். அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலகுவார்;

தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்க ஆகுமாக்குவார்;

கெட்டவற்றை அவர்களுக்கு தடுத்து விடுவார்;

அவர்களுடைய பளுவான சுமைகளையும்,

அவர்கள் மீது இருந்த விலங்குகளையும்

(கடிய கட்டளைகளையும்) இறக்கி விடுவார்;

எனவே எவர் அவரை உண்மையாக நம்பி,

அவரை கண்ணியப்படுத்தி,

அவருக்கு உதவி செய்து,

அவருடன் அருளப்பட்ட

ஒளிமயமான (வேதத்)தையும் பின்பற்றுகிறார்களோ,

அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள்.                 (7:157)

2.    (நபியே!) நீர் கூறுவீராக! மனிதர்களே!

நிச்சயமாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹுவின் தூதராக இருக்கிறேன்;

வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது;

அவனைத் தவிர வேறு நாயனில்லை;

அவனே உயிர்ப்பிக்கின்றான்;

அவனே மரணமடையும் படியும் செய்கிறான்;

ஆகவே அல்லாஹுவின் மீதும், எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய, அவன் தூதரின் மீதும் ஈமான்க் கொள்ளுங்கள்.

அவரும் அல்லாஹ்வின் மீதும் அவர் வசனங்கள் மீதும் ஈமான்க் கொள்கிறார்-

அவரையேப் பின்பற்றுங்கள்.

நீங்கள் நேர்வழிப் பெறுவீர்கள். (7:158)

3. (மனிதர்களே!) இது வேதமாகும்.

இதனை நாமே இறக்கி வைத்தோம். இது மிக பாக்கியம் வாய்ந்தது;

ஆகவே இதனைப் பின்பற்றுங்கள்

இன்னும் அவனை அஞ்சி (பாவத்தை விட்டு விலகிக்) கொள்ளுங்கள். நீங்கள் கிருபை செய்யப்படுவீர்கள். (6:155)

4. (நபியே) அல்லாஹ் அருள் செய்த (சட்ட திட்டத்)தைக் கொண்டே அவர்களுக்கிடையில் தீர்ப்பு செய்வீராக. (5:49)

5. நிச்சயமாக நான் ஒரு வானவர்(மலக்கு) என்று சொல்லவில்லை; எனக்கு இறைச்செய்தி (வஹி)யாக அறிவிக்கப்பட்டதைத் தவிர வேறு எதையும் பின்பற்றவில்லை. (6:50)

6. (நபியே) நீர் கூறும்; நான் பின்பற்றுவதெல்லாம் எனக்கு என் இறைவன் இறைச்செய்தி(வஹீ) மூலம் அறிவித்ததைத் தான். (10:15, 7:203)

7. (இறைத்) தூதர்களில் நான் புதிதாக வந்தவனல்லன். மேலும் என்னைப் பற்றியோ, உன்னைப் பற்றியோ என்ன செய்யப்படும் என்பதை நான் அறியமாட்டேன்.

எனக்கு என்ன இறைச் செயதி(வஹீ) மூலம்

அறிவிக்கப்படுகிறதோ அதைத் தவிர வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை.

தெளிவாக அச்சமூட்டி எச்சரிப்பவனேயன்றி நான் வேறில்லை என (நபியே!) நீர் கூறுவீராக. (46:9)

8. (நபியே!-நீர்) கூறுவீராக! அல்லாஹ்வுக்கும் வழிபடுங்கள்!

மேலும் (அவனது) தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்.

நீங்கள் புறக்கணித்துப்பின் திரும்பி விடுவீர்களாயின், அவர் (தூதர்) மீதுள்ள கடமையெல்லாம் தம்மீது சுமத்தப்பட்ட (தூது செய்தியை உங்களிடம் அறிவிப்ப)து தான்.

இன்னும் உங்கள் மீதுள்ள(கடமையான)து.

உங்கள் மீது சுமத்தப்பட்ட(படி வழி படுவ)துதான்.

எனவே நீங்கள் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால் நீங்கள் நேர்வழி பெறுவீர்கள். (24:54)

9. இன்னும் அல்லாஹ்வுக்கும் வழிபடுங்கள்;

(அவனது) தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்;

எச்சரிக்கையாக இருந்துக் கொள்ளுங்கள்;

இதனை நீங்கள் புறக்கணித்து

விட்டால் (ஏற்படும் இழப்புக்கு நாம் பொறுப்பல்ல. நம் கட்டளைகளைத் தெளிவாக எடுத்து விளக்குவது மட்டுமே நம் தூதர் மீதுக் கடமையாகும் என்பதை நீங்கள் நிச்சயமாக அறிந்துக் கொள்ளுங்கள். (5:92,64:12)

10. எவர் அல்லாஹ்வின் தூதருக்கு கீழ்ப்படிகிறாரோ, அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிகிறார்.

யாராவது ஒருவன் (கீழ்ப்படிவதை) நிராகரித்தால்  (நீர் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில்) நாம் உம்மை அவர்களின் மேல் பாதுகாவலராக அனுப்பவில்லை. (4:80)

11. உம்மைப் பின்பற்றி நடக்கும் முஃமின்களிடத்தில் தோள் தாழ்த்தி (க் கனிவுடன் நடந்துக் கொள்வீராக. (26:215)

12. (நபியே!) உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு இறைச்செய்தி(வஹீ) மூலம் அறிவிக்கப்பட்டதையே நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர இறைவன் வேறில்லை. இணை வைப்போரை நீர் புறக்கணித்து விடும். (6:106)

13. (நபியே!) உங்களுக்கு இறைச் செய்தி(வஹீ) மூலம் அறிவிக்கப்பட்டதையே பின்பற்றி நடந்துக் கொள்வீராக. (10:109,33:2)

14. அவர்கள் அல்லாஹ்விடமிருந்து (நிஃமத்தையும், அருட்கொடையையும்) மேன்மையையும் பெற்று திரும்பினார்கள். எத்தகைய தீங்கும் அவர்களைத் தீண்டவில்லை. (ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றினார்கள். (3:174)

Previous post:

Next post: