குர்ஆனின் நற்போதனைகள்
தொடர் : 20
அல்லாஹ்வும் அவனது தூதரும் போதுமே:
A. முஹம்மது அலி
வழிபடாதீர்கள்; பின்பற்றாதீர்கள்;
1. நம்பிக்கை (ஈமான்) கொண்டோரே; காஃபிர்களுக்கு நீங்கள் வழிபட்டால், அவர்கள் உங்களை உங்கள் குதிகால்களின் மீது திருப்பி விடுவார்கள்; அப்போது நீங்கள் நஷ்டமடைந்தவர்களாக (இறை நம்பிக்கையிலிருந்து ) திரும்பி விடுவீர்கள் (3:149)
2. நீங்கள் வரம்பு மீறியோரின் கட்டளைக்கு வழிபடாதீர்கள் (26:151)
3. நம்பிக்கை (ஈமான் கொண்டோரே! வேதத்தையுடையோரில் ஒரு பிரிவினரை நீங்கள் பின்பற்றினால், அவர்கள் உங்களை, நீங்கள் ஈமான் கொண்டபின் காஃபிர்களாக திருப்பி விடுவார்கள். (3:100)
4. (நபியே!) எவனுடைய இதயத்தை நம்மை நினைவு கூர்வதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனை நீர் வழிபடாதீர்; ஏனெனில் அவன் தன் இச்சையைப் பின்பற்றியதால் அவனுடைய காரியம் வரம்பு மீறியதாகி விட்டது. (18:28)
5. (நபியே!) நீர் இந்த காஃபிர்களுக்கு வழிபடாதீர்; இதன் (குர்ஆன்) மூலம் அவர்களுடன் பெரும் முயற்சியை மேற்க் கொள்வீராக. (25:52)
6. (நபியே!) காஃபிர் (இறை மறுப்பாளர்)களுக்கும், முனாஃபி(நயவஞ்சகர்களு)க்குகளுக்கும் நீங்கள் வழிபடாதீர். (33:48)
7. (சன்மார்க்க – இஸ்லாத்தைப்) பொய்ப்பிப்பவர்களுக்கு நீர் வழிபடாதீர். (68:8)
8. அன்றியும், இழிவானவனான அதிகம் சத்தியம் செய்யும் எவருக்கும் நீர் வழிபடாதீர்; (அத்தகையவன்) குறைக் கூறித் திரிபவன்; கோள் சொல்லி அலைபவன்; (எப்போதும்) நன்மையானவற்றைத் தடுப்பவன்; வரம்பு மீறிய கொடும்பாவி: கடின சித்தமுடையவன்; மேலும் இழிப்பிறப்புடையவன். (68: 10-13)
9. (நபியே!) நீர் எந்தப் பாவிக்கோ அல்லது நன்றி கொன்றவனுக்கோ வழிபடாதீர். (76:24)
10. அல்லாவின் விருப்பத்தைப் பின்பற்றி நடப்போர், அல்லாஹ்வின் கோபத்தை தன் மீது வரவழைத்து கொண்டவர் போல் ஆவாரா? (ஆகமாட்டார்) (3 : 162)
11. யார் அநியாயம் செய்தார்களோ அவர்கள் தங்கள் செல்வசெருக்கையே பின்பற்றுகிறார்கள்; மேலும் குற்றவளிகளாகவும் இருந்தார்கள். (11:116)
12. உமக்கு அவர்கள் பதில் கூறாவிட்டால், நிச்சயமாக அவர்கள் தம் மனோ இச்சைகளையே பின்பற்றுகிறார்கள் என்று நீர் அறிந்துக் கொள்ளும்; இன்னும் அல்லாஹ்விடமிருந்து நேர்வழிகாட்டியின்றித் தன் மனோஇச்சையைப் பின்பற்றுபவனைவிட மிக வழிகெட்டவன் எவன் இருக்கின்றான் நிச்சயமாக அல்லாஹ் அக்கிரமக்கார சமூதாயத்திற்கு நேர்வழிக் காட்ட மாட்டான். (28:50)
13. நிச்சயமாக நிராகரிப்போர் அசத்தியத்தையே பின்பற்றுகிறார்கள். நம்பிக்கை (ஈமான்) கொண்டவர்களோ, நிச்சயமாக தங்களுடைய இறைவனிடமிருந்து(வந்து)ள்ளதையோ பின்பற்றுகிறார்கள். (47:3)
14. நிச்சயமாக இவர்கள் அல்லாஹ்வுக்குக் கோபமூட்டுவதையே பின்பற்றி, அவனுடைய திருப்தியை (ஷைத்தான்) வெறுக்க வைத்தான்; ஆகவே அவர்களுடைய செய்கைகளை அவன் பயனற்றதாக்கி விட்டான். (47:28)
15. (நபியே!) வெகு விரைவில் இலாபம் கிடைக்கும் என்ற நிலையிலிருந்து, பிரயாணமும் சுலபமாக இருந்திருந்தால் அவர்கள் உங்களைப் பின்பற்றி வந்திருப்பார்கள். (9:42)
16. நம் வசனங்களைப் பொய்ப்பிக்கின்றவர்கள்; மறுமையை நம்பாதவர்கள் ஆகியோரின் வீணான மனே இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். ஏனெனில் அவர்கள் தாம் தங்கள் இறைவனுக்கு பல தெய்வங்களை இணையாக்(ஷிர்க்கா)க்குகின்றனர். (6:150)
17. குழப்பமுண்டாக்குபவரின் வழியைப் பின்பற்றாதிருப்பீராக (7:142)
18. அறியாதவர்களாக இருக்கின்றார்களே அவர்களின் வழியை நீங்கள் இருவரும் (மூஸா – ஹாரூன் ஒரு போதும்)
19. நீதம் வழங்குவதில் மனோ இச்சையைப் பின்பற்றி விடாதீர் (4:135)
20. (மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதை பின்பற்றுங்கள்; அவனையன்றி வேறெவரையும் பாதுகாவலர்களாக்கி(க் கொண்டு) அவர்களைப் பின்பற்றாதீர்கள். (7:3)
21. நிச்சயமாக (இஸ்லாம்) இதுவே என்னுடைய நேரான வழியாகும். ஆகவே இதனையேப் பின்பற்றுங்கள். இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம். அவை உங்களை அவனுடைய வழியை விட்டுப் பிரித்து விடும். (6:153)
22. எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும் (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து மூமின்கள் செல்லாத வழியில் அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம். (4:115)
23. புலவர்களை வழிக்கேடர்களேப் பின்பற்றுகிறார்கள். (26:224)
24. (இந்த முஷ்ரிக்குகளை) நீங்கள் நேர்வழிக்கு அழைத்தாலும் உங்களை அவர்கள் பின்பற்ற மாட்டார்கள்; நீங்கள் அவர்களை அழைப்பதும் அல்லது (அழையாது) வாய் மூடியிருப்பினும் உங்களுக்கு சமமேயாகும். (7:193)
25. நிராகரிப்பவர்கள் நம்பிக்கைக் கொண்டவர்களிடம்: நீங்கள் எங்கள் வழியை (மார்க்கத்தைப்) பின்பற்றுங்கள்: உங்கள் குற்றங்களை நாங்கள் சுமந்துக் கொள்கிறோம் என்று கூறுகின்றார்கள். ஆனால் அவர்கள் தம் குற்றங்களிலிருந்தும் எதையும் சுமப்பவர்களாக (தாங்குபவர்களாக) இல்லையே! எனவே (உங்கள் குற்றங்களைச் சுமப்பதாக சொல்லும்) அவர்கள் நிச்சயமாக பொய்யர்களே.