ஹஜ்ஜத்துல்விதா அரஃபாவின் உண்மை கிழமையும் ஹிஜிரி கமீட்டி காலண்டரின் லண்டன் கணக்கீடும்!

in 2019 ஆகஸ்ட்

 

ஹஜ்ஜத்துல்விதா அரஃபாவின் உண்மை கிழமையும்

ஹிஜிரி கமீட்டி காலண்டரும் லண்டன் கணக்கீடும்

S.H. அப்துர் ரஹ்மான்

அன்புடைய சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இதற்கு முன் ஏற்கனவே ஹிஜிரி கமீட்டி காலண்டரில் உள்ள பிழைகள் பற்றி சுட்டிகாட்டி இருந்தேன். அவர்கள் காலண்டர் கணக்கிட பயன்படுத்துவது ஆங்கிலேயரின் தேதிக்கோடு (IDL) உலகநேரம் (UTC) போன்றவை லண்டனை மையமாக கொண்டும் லண்டனின் நள்ளிரவை அடிப்படையாக கொண்டும் கட்டமைக்கப்பட்டுள்ளன. இதனை கொண்டு கணக்கிடுவது தவறு. நாளின் ஆரம்பம் நள்ளிரவு என்பதை ஏற்றுக் கொண்டால் தான் இதனைப் பயன்படுத்தி கணக்கிட முடியும்.

முஸ்லிம்களில் ஒரு சாரார் நாளின் ஆரம்பம் மக்ரிப் என்று கூறுகின்றனர். ஹிஜிரி கமீட்டி நாளின் ஆரம்பம் பஜர் என்று கூறுகிறது. இவை இரண்டையும் விட்டு விட்டு கமீட்டி, நாளின் ஆரம்பம் நள்ளிரவு என்ற அடிப்படையில் அமைந்த UTCஐ வைத்து கணக்கிடுகிறது. நாளின் ஆரம்பம் நள்ளிரவு என்பதற்கு இஸ்லாத்தில் எந்த ஆதாரமும் இல்லை. இது குறித்து விளக்கிய பின்பும், கமீட்டி காலண்டரை பின்பற்றுபவர்கள் எங்களுக்கு அறிவியல் புரியவில்லை என்று கூறுகின்றனர். UTC, IDL போன்றவை படித்து புரியாத அளவு கடினமானது அல்ல இன்று இன்டர்நெட் மூலம் உலகம் கையில் வந்து விட்டது. எதனையும் எளிதாக படித்துப் பார்க்க முடியும். இவ்வளவு வசதிகளுக்கு பின்பும் எங்களுக்கு நேரம் இல்லை என்பவர்கள் எளிதில் கமீட்டி காலண்டர் தவறு என்று புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு உண்டு. அதுவும் கமீட்டி வழங்கிய வாய்ப்புதான். கமீட்டியினர் தங்களின் காலண்டரை தேதிகள் சரிவர பொருத்தி போகிறதா என்று பின்னோக்கி சென்று கணக்கிட்டு பார்க்க சொல்கிறார்கள்.

ஹிஜ்ரி 01.01.01 அன்று வியாழக்கிழமை என்ற அளவுகோலை வைத்தும் ஹிஜ்ரி 10.12.10 அன்று வெள்ளிக்கிழமை என்பதை வைத்தும் நம்முடைய ஹிஜ்ரி நாள்காட்டியின் தேதிகள் சரிவர பொருந்தி போகிறதா? என்பதை பின்னோக்கிச் சென்று கணக்கிட்டு யாரும் பரிசோதித்துக் கொள்ளலாம்.
ஹிஜ்ரி கமீட்டி வெளியீடு

இஸ்லாமிய ஹிஜ்ரி நாள்காட்டி ஓர் அவசர அவசியம் பக்கம் 10ல்

அதாவது ஹிஜ்ரி 1-ம் வருடம் முஹர்ரம் பிறை 01 அன்று வியாழக்கிழமை என்று கூறுகின்றனர். அடுத்தபடியாக ஹிஜ்ரி 10ம் வருடம் துல்ஹஜ் மாதம் நடந்த ஹஜ்ஜத்துல் விதாவின் பெருநாள் பிறை 10 அன்று வெள்ளிக்கிழமை என்று கூறி உள்ளனர்.

இவர்களின் காலண்டர்படி பிறை 9 அரஃபா தினம் வியாழக்கிழமையில் வந்து உள்ளது. இதனை நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம். கமீட்டியின் காலண்டர்படி

பிறை 4 – சனிக்கிழமை
பிறை 5 – ஞாயிற்றுக்கிழமை
பிறை 6 – திங்கள்கிழமை
பிறை 7 – செவ்வாய்க்கிழமை
பிறை 8 – புதன்கிழமை
பிறை 9 -அரபாநாள் – வியாழக்கிழமை
பிறை 10 -பெருநாள் – வெள்ளிக்கிழமை

மேலே உள்ள பிறைகளும், கிழமைகளும் கமீட்டி காலண்டர்படி உள்ளவை அதனை ஹதீஃத்கள் கொண்டும் வரலாறுகள் கொண்டும் சரிபார்க்க முயற்சிப்போம். இன்ஷா அல்லாஹ்.

ஹஜ்ஜத்துல்விதா பற்றி தெரிந்து கொள்ள நபி(ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான வரலாறு தொகுப்பு அர்ரஹிக் அல்மக்தூம் புத்தகத்தை பார்ப்போம். இந்த புத்தகத்தில் ஹஜ்ஜத்துல்விதா பற்றி எழுதப்பட்டு உள்ளதில் 559ம் பக்கத்தில் 5ம் வரியில்

…ஸூப்ஹ் தொழுகையை முடித்துக் கொண்டு குளித்து விட்டு மக்கா நோக்கி புறப்பட்டார்கள். அது ஹிஜ்ரி 10, துல்ஹஜ் பிறை 4, ஞாயிறு காலை நேரமாகும்… (பக்கம் 559, புத்தகம் அர்ரஹீக் அல்மக்தூம்.)

இந்த ஆதாரப்பூர்வமான வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் துல்ஹஜ் பிறை 4, ஞாயிற்றுக்கிழமை காலை மக்கா நோக்கி புறப்பட்டதாக கூறுகிறது. ஆனால் கமீட்டி காலண்டரோ பிறை 4, சனிக்கிழமை என்று தவறாக காட்டுகிறது. இதுவே கமீட்டியின் காலண்டர் தவறு என்பதற்கு போதுமான ஆதாரம் ஆகும். ஆனால் கமீட்டி காலண்டரை காப்பாற்ற இந்த வரலாற்று ஆதாரங்கள் மீது சந்தேகம் எழுப்புவார்கள். வரலாற்று தவறாக எழுதப்பட்டிருக்கலாம் என்று தங்கள் யூகங்களைக் கொண்டு வரலாற்று ஆதாரத்தை எதிர்ப்பார்கள்.

எனவே அடுத்து நாம் ஹதீஃத் ஆதாரங்களுக்குள் நுழைவோம் அரஃபா நாள் எந்த கிழமையில் நடந்தது என்பதற்கு பல ஹதீஃத்களில் ஆதாரங்கள் காணக்கிடைக்கின்றன. அரஃபா நாளில் நபி(ஸல்) அரஃபா மைதானத்தில் மாலை நேரம் நின்று கொண்டிருந்தபோது “இன்று உங்கள் மார்க்கத்தை நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருத்திக் கொண்டேன் என்ற 5:3வது வசனம் இறங்கியது பல

ஹதீஃதுகளில் பதியப்பட்டு உள்ளது அதற்கான ஹதீஃத் ஆதாரங்கள் கீழே.

திர்மிதி 3044, அம்மார் இப்னு அபி அம்மார் அறிவிக்கிறார்கள் :

“இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்” எனும் வசனத்தை இப்னு அப்பாஸ் (ரழி)ஓதினார்கள். (அல்குர்ஆன்:5:3) அப்போது உடனிருந்த யூதர் ஒருவர் இந்த இறை வசனம் எங்களுக்கு அருளப்பட்டிருந்தால் நாங்கள் அந்த நாளை பண்டிகை நாளாக ஆக்கிக் கொண்டிருப்போம் என்றார். அப்போது இப்னு அப்பாஸ்(ரழி) “அது நிச்சயம், இரு பெருநாட்களின் தினத்தில் தான் அருளப்பட்டது வெள்ளிக்கிழமையில், அரஃபா நாளில்” என்றார்கள்.

அரஃபா பெருவெளியில் நின்ற கிழமை எது?

புகாரி 7268, தாரிக் இப்னு ´ஹாப்(ரஹ்) அவர்கள் அறிவித்தார் :

யூதர்களில் ஒருவர் உமர் (ரழி) அவர்களிடம் “இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்” எனும் (அல்குர்ஆன் 5:3வது) இறை வசனம் எங்களுக்கு அருளப்பட்டிருந்தால் நாங்கள் அந்த நாளை பண்டிகை நாளாக ஆக்கிக் கொண்டிருப்போம்” என்றார். அப்போது உமர்(ரழி) அவர்கள், “இந்த வசனம் எந்த நாளில் இறங்கியது என்பதை அறிவேன். இது அரஃபா நாள் வெள்ளிக்கிழமையன்று அருளப்பெற்றது” என்றார்கள்.

அரஃபா அந்திப் பொழுதில், வெள்ளிக் கிழமையில் :

தாரிக் இப்னு ´ஹாப்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள் : (முஸ்னத் அஹ்மத் 188)

யஹூதிகளில் ஒரு மனிதர் உமர்(ரழி) இடம் வந்து “முஃமீன்களின் தலைவரே! நீங்கள் உங்களின் வேதத்தில் ஓதிக்கொண்டிருக்கும் ஒரு வசனம் யூதர்களாகிய எங்களுக்கு இறக்கப்பட்டிருந்தால் அந்நாளை பெருநாள் ஆக்கியிருப்போம்” என்றார். “அது எந்த வசனம்” என்றார்கள். “இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்துவிட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன்” எனும் (அல்குர்ஆன்:5:3வது) இறை வசனம் என்றார் அவர். அதற்கு உமர்(ரழி) “அல்லாஹ்வின் மீதாணையாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுக்கு அந்த வசனம் என்று அருளப்பட்டது என்பதையும் எந்நேரத்தில் அருளப்பட்டது என்பதையும் நானறிவேன். அரஃபா நாளின்(அ´யத்) அந்திப் பொழுதில் வெள்ளிக்கிழமையில்” என்று கூறினார்கள்.

“ஜம்உ” உடைய இரவில், “அரஃபாத்” பெரு வெளியில்:
முஸ்லிம் : 3017

முஸ்லிம் 5741, தாரிக் பின் ´ஹாப்(ரஹ்) அவர்கள் கூறியதாவது :

யூதர்கள் (கலீஃபா) உமர்(ரழி) அவர்களிடம், “இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்” (5:3) எனும் இறைவசனம் யூதர் சமுதாயமான எங்களுக்கு அருளப்பெற்றிருந் தால், அது அருளப்பெற்ற தினத்தை நாங்கள் பண்டிகை நாளாக ஆக்கிக் கொண்டாடியிருப்போம்” என்று கூறினர். அதற்கு உமர் (ரழி) அவர்கள், “அது அருளப்பெற்ற நாளையும் நேரத்தையும் அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எங்கே இருந்தார்கள் என்பதையயல்லாம் நான் அறிந்துள்ளேன். அது “ஜம்உ” உடைய நாளில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்களுடன் “அரஃபாத்” பெருவெளியில் இருந்த போது அருளப்பெற்றது” என்று கூறினார்கள்.

அரஃபா மைதானத்தில், வெள்ளிக்கிழமை அந்திப் பொழுதில் :

தாரிக் இப்னு ஷ´ஹாப்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்:

யூதர் ஒருவர்(கலீஃபா) உமர்(ரழி) அவர்களிடம், இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். “இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். (5:3) எனும் இறைவசனம் யூதர் சமுதாயமான எங்களுக்கு அருளப்பெற்றிருந் தது. அது அருளப்பெற்ற தினத்தை நாங்கள் அறிந்திருந்தால், அந்நாளைப் பண்டிகை நாளாக நாங்கள் ஆக்கிக்கொண்டாடியிருப்போம்” என்றார். அப்போது உமர்(ரழி) அவர்கள், “இந்த வசனம் இறங்கிய இடத்தையும் நானறிவேன். இது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அரஃபாத் பெருவெளியில் இருக்கும்போது வெள்ளிக் கிழமையன்று (அ´யத்) அந்திப் பொழுதில் அருளப் பெற்றது என்றார்கள். பைஹகி : 9479

தஃப்சீர்களிலும் அரபா நாள் வெள்ளிக்கிழமையே :

கஅப்(ரழி) அவர்கள், “இந்த வசனம் மட்டும் வேறொரு சமுதாயத்தாருக்கு அருளப் பெற்றிருந்தால், எந்த நாளில் அது அருளப் பெற்றதோ அதைக் கவனத்தில் கொண்டு, அதைக் கூடி மகிழும் பண்டிகை நாளாக ஆக்கிக் கொண்டிருப்பார்கள்” என்று ஒரு முறை கூறினார்கள்.

அப்போது உமர்(ரழி) அவர்கள், “கஅபே அது எந்த வசனம்?” என்று கேட்டார்கள். உடனே அவர், “இன்று உங்களது மார்க் கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன்” எனும் வசனம் என்றார்.

அப்போது உமர்(ரழி) அவர்கள் “அந்த வசனம் அருளப்பெற்ற நாளையும் அது அருளப் பெற்ற இடத்தையும் நான் நிச்சயமாக அறிந்துள்ளேன் “அரஃபா” (துல்ஹிஜ்ஜா 9ஆவது) நாள் வெள்ளிக்கிழமை (அருளப் பெற்றது) அல்லாஹ் புகழுக்குரியவன், அவ்விரு நாட்களுமே நமக்குப் பண்டிகை நாட்கள்தான்” என்றார்கள். நூல் : தஃப்சீர் தபரீ.

(அலீ (ரழி) அவர்கள் கூறியதாவது :

இந்த வசனமானது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அரஃபா” (துல்ஹிஜ்ஜா 9ஆவது) நாள் மாலையில் (அரஃபாவில்) நின்று கொண்டிருக்கும்போது அவர்களுக்கு அருளப்பெற்றது. நூல்: தஃப்சீர் இப்னு மர்தவைஹி.

மேலே உள்ள இத்தனை ஹதீஃத்களும் தஃப்சீர்களும் அந்த வசனம் இறக்கப்பட்டது. அரபா நாள் மற்றும் வெள்ளிக்கிழமையன்று இறக்கப்பட்டது என்று தெளிவாக கூறுகின்றன. துல்ஹஜ் 9வது நாள் அரபா நாள் என்று அனைவரும் அறிந்ததே 9ம் நாள் அரபா நாள் வெள்ளிக்கிழமை என்று பல ஹதீஃத் புத்தகங்களில் பல அறிவிப்பாளர் வரிசையில் வந்து இருக்க, ஹிஜிரி கமீட்டியின் காலண்டர் வியாழன் என்று தவறாக காட்டுகிறது. பின் சென்று கணக்கிட்டு யாரும் பார்க்கப்போவது இல்லை என்ற நம்பிக்கை யில் இவ்வாறு கூறி உள்ளனரோ தெரியவில்லை.

கமீட்டியின் காலண்டர் பிறை 4ம் வரலாற்று ஆதாரத்துடன் ஒருநாள் குறைவாக காட்டுகிறது. பிறை 9ம் ஹதீஃத் ஆதாரத்துடன் ஒரு நாள் குறைவாக காட்டுகிறது.

ஆனால் வரலாற்று ஆதாரமும் ஹதீஃத் ஆதாரமும் ஒன்றாக ஒத்துபோகிறது அதனைக் காண நாம் பிறையையும், அதன் கிழமையையும் ஆதாரப்பூர்வ வரலாறு தஃப்சீர்கள், ஹதீஃத்களின் அடிப்படையில் கவனிப்போம்.

பிறை 4 – ஞாயிற்றுகிழமை (அர்ரஹீக் அல்மக்தூம் வரலாற்றுபடி)

பிறை 5 – திங்கள்கிழமை

பிறை 6 – செவ்வாய்க்கிழமை

பிறை 7 – புதன்கிழமை

பிறை 8 – வியாழக்கிழமை

பிறை 9 – வெள்ளிக்கிழமை

ஆதாரப்பூர்வமான தஃப்சீர்கள், ஹதீஃத்களின்படி அரஃபா வெள்ளிக்கிழமையாக உள்ளது.

கமீட்டியின் காலண்டர் வரலாற்று ஆதாரத்தின்படி சரியாக இல்லை. தஃப்சீர், ஹதீஃத்படியும் சரியாக இல்லை, வரலாறும், தஃப்சீர், ஹதீஃதும் இந்த விஷயத்தில் ஒத்துபோகின்றன என்பதை இதில் இருந்து நாம் புரிந்து கொள்ளலாம் கமீட்டியின் கணக்கீட்டில் பிழை உள்ளது ஒரு கிழமை குறைகிறது என்று அறிவியல் தெரியாதவர் களும் முடிவு செய்துவிடலாம்.

கீழே உள்ள விளக்கம் அறிவியல் தெரிந்தவர்களுக்கு இந்த பிழை ஏற்படுவதற்கு காரணம் ஆங்கிலேயரின் UTCஐயும், IDLஐயும் பயன்படுத்தி இவர்கள் கணக்கிடுவதுதான். 14UTக்கு மேல் பூமி புதிய தேதிக்குள் நுழைந்து விடும் என்று தெரிந்தும் அதற்கு மேல் வரும் சங்கமங்களை லண்டனின் தேதிப்படி குறிப்பதால் வரும் பிழை, சங்கமம் நடக்கும் முன்பே தேதிகோட்டில் புதிய மாதத்தை ஆரம்பிக்கும் நிலை வருகிறது. மாதத்தை ஆரம்பித்த பின் சங்கமம் நடக்கும் நிலை வருகிறது. இதனை புரிந்து கொள்ள கமீட்டி தயாராக இல்லை. காரணம் 300 வருட காலண்டரை வெளியிட்டுவிட்டு பின் மாற்றம் செய்வது பல பின்னடைவுகளை ஏற்படுத்தும் என்பதுதான்.

ஹஜ்ஜத்துல்விதா அரபா கிழமை மாறுவதற்கு காரணம் ஹிஜ்ரி 10ம் வருடம் துல்ஹஜ் மாத சங்கமம் 21:00UTக்கு நிகழ்வதுதான். கி.பி. 632ம் வருடம் பிப்ரவரி 25ம் தேதி 21:00UTக்கு துல்ஹஜ் மாத ஆரம்ப சங்கமம் நிகழ்கிறது. இது பிப்ரவரி 26ம் தேதி பூமியில் துவங்கி 9 மணி நேரத்திற்கு பின் நடக்கும் சங்கமம் ஆகும். பூமியில் 26ம் தேதியில் நுழைந்த பின் நடந்த சங்கமத்தை லண்டன் தேதிபடி முந்தைய நாளில் குறிப்பிடுவதால் வந்த பிழை இது. சங்கம நாளிலேயே மாதத்தை துவங்கும் நிலை, பிப்ரவரி 26ம் தேதியை சங்கம நாளாக விட்டுவிட்டு பிப்ரவரி 27ல் முதல் பிறையை துவங்கினால் துல்ஹஜ் 4ம் பிறை-ஞாயிற்றுக்கிழமையாகவும், 9ம் பிறை வெள்ளிக்கிழமையாகவும், வரலாறுபடியும் ஹதீஃத்படியும் சரியாக வருகிறது.

இந்த உண்மைகளை உணர்ந்து கமீட்டி தங்கள் கணக்கை பரிசீலிக்குமா? அல்லது சமாளிப்புகள் கூறி ஹதீஃத்களையும், வரலாறு ஆதாரத்தையும், தஃப்சீர்களையும் மறுக்குமா? என்று காத்திருந்து பார்ப்போம்.

அறிவியல் தெரியாது என்று கூறும் மக்களுக்கு ஆதாரபூர்வமான வரலாறும் ஹதீஃதும், தஃப்ஸீரும் காலண்டரில் உள்ள பிழையை அறிந்து கொள்ள உதவியிருக்கும். இதனையும் அறிந்து கொள்ள முடியாதவர்கள் தங்கள் நம்பிக்கை கொண்ட வயதில் மூத்த அரபி படித்த அறிஞர்களிடம் ஹஜ்ஜத்துல் விதா அரபா நாள் என்ன கிழமை நடந்தது என்று கேட்டு தெரிந்து கொள்ளவும்.

பெரும்பாலான சகோதரர்களிடம் ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஒரு கருத்தை கூறும் நபர் யார்? அவருக்கு என்ன வயது? என்று பார்க்கின்றனர். வயதில், அனுபவத்தில் குறைந்தவர் கூறும்போது அதனை அவர்கள் மதிப்பதும் இல்லை, ஆய்வுக்கு எடுப்பதும் இல்லை, இது ஒருவகையான தக்லீதுதான், வயதானவர் சொன்னால் சரியாக இருக்கும் என்றும், வயதில் குறைந்தவர் சொன்னால் அவன் சிறுவன் அவனுக்கு என்ன தெரியும் என்ற எண்ணம் உள்ளது. இது இஸ்லாத்தில் தவறான சிந்தனையாகும். யார் சொல்கிறார் என்று பார்க்காமல், சொல்லும் கருத்து குர்ஆன், ஹதீஃதில் உள்ளதா? என்று மட்டுமே பார்க்க வேண்டும். அதுவே சரியானதாகும்.

அப்படி ஒரு சகோதரர் ம்r.சைத் கராமதுல்லாஹ் பஹ்மானி என்ற மூத்த அரபி பேராசிரியர் ஒருவரிடம் கேட்ட போது 5:3 வசனம் அருளப்பட்ட நாள் வெள்ளிக்கிழமை மற்றும் அரபா ஆகிய இரு பெரு நாட்களும் ஒருங்கே சேர்ந்த சிறப்புமிக்க நாள் என்று கூறியுள்ளார்.

அரபா நாள் பெருநாளா? என்று கேட்கும் சகோதரர்களுக்கு அதற்கான ஹதீஃத் கீழே:

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “முஸ்லிம்களாகிய நமக்கு அரபா நாள் (துல்ஹஜ் 9), பலியிடும் நாள் (துல்ஹஜ் 10), தஷ்ரீக் நாள்கள் (துல்ஹஜ் 11.12,13) ஆகியவை பெருநாட்கள் ஆகும். அவை உண்பதற்கும் பருகுவதற்குமான நாட்களாகும். அறிவித்தவர் : உக்பா பின் ஆமிர்(ரழி) திர்மிதீ : 773, நஸாயி : 3004, அபூதாவூத் : 2419

அரபா பெருநாள் என்பதற்கு ஆதாரம் தந்த பின்பும் அதை மறுத்து ஒரு சகோதரர் பெருநாளில் நோன்புக்கு தடை உண்டு ஆனால் ஹாஜிகள் அரபா நாளின் நோன்பு வைக்கலாம் என்று ஆதாரம் தராமல் தனது கருத்தை மார்க்கமாக்க முயன்றார் அதற்கும் ஹதீஃதில் நபி(ஸல்) அவர்களின் நேரடியான தடை கிடைத்தது. அது கீழே:

அரஃபா பெருவெளியில் தங்கியிருப்போர் அரஃபா நாளில் நோன்பு நோற்பதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல் : இப்னு மாஜா:172

It was narrated that “Ikrimah said: “I entered upon Abu Hurairah in his house and asked him about fasting the Day of “Arafah at “Arafat. Abu Hurairah said: “The Messenger of Allah (ﷺ) forbade fasting the Day of “Arafah at”Arafat.'”

Hasan (Darussalam) English : Vol. 1, Book 7, Hadith 1732 Arabic : Book 7, Hadith 1804 Sunan Ibn Majah

பி(ஸல்) ஹஜ்ஜின் போது அரபா அன்று நோன்பு வைத்திருந்தார்களா என்று ஹதீஃத்களில் பார்த்தபோது அவர்களும் நோன்பு வைக்கவில்லை என்பதே பதிலாக கிடைத்தது அரஃபா அன்று ஹாஜி அல்லாத மற்றவர் நோன்பு நோற்க வேண்டும் என்ற நபி(ஸல்) அவர்களின் சொல் மக்களுக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது கீழ் காணும் ஹதீஃத் அந்த சந்தேகத்தை போக்கி யிருக்கிறது.

மைமூனா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அரஃபா நாளில் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கிறார்களா என்பதில் மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது நான் அரஃபாவில் தங்கியிருந்த நபி(ஸல்) அவர்களிடம் பால் பாத்திரத்தைக் கொடுத்தனுப்பினேன். மக்களெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க அதை நபி(ஸல்) அவர்கள் குடித்தார்கள். புகாரி : (1989)

நபி(ஸல்) அவர்கள் முன்மாதிரி அவர்களின் சொல்லை பின்பற்றி ஹஜ் செல்லாதவர்கள் அரஃபா அன்று நோன்பு நோற்க வேண்டும்.

நபி(ஸல்) அவர்களின் செயலை பின்பற்றி ஹாஜிகள் நோன்பு நோற்க கூடாது என்பதும் அரபா அன்று ஹாஜிகளுக்கு பெருநாள் என்பதும் தெளிவாகிறது.

இதற்கு மேலும் தவறாக இருந்தாலும் நான் கமீட்டி காலண்டரை தான் பின்பற்றுவேன் என்று அடம் பிடிக்கும் சகோதரர் தடுக்கும் சக்தி எனக்கு இல்லை நான் சரியானதின்பால் செல்ல முயற்சிக்கிறேன். அதனை உங்களுக்கு சொல்ல முயற்சிக்கின்றேன், சொல்லுவது மட்டும் தான் என் கடமை, அதை நிறைவேற்றி விட்டேன்.

அதற்கு நீங்களே சாட்சி! அல்லாஹ் நாம் அறியாமல் செய்த பாவங்களை மன்னிப்பானாக.

“நம் அனைவரையும் நேரான சரியான பாதையில் செலுத்துவானாக, சரியான காலண்டரில் நம்மை ஒன்றிணைப்பானாக.” – ஆமீன்.

******************************************************

பிறை கணக்கு பிழையாகுமா?

அஜ்மாலகான், ஜெகதாப்பட்டினம்.

  1. பிறை கணக்கு உள்ளது எனும் வசனம் எவை?
    2:189,9:36,10:5 குர்ஆன் வசனங்கள்.
  2. ஹிஜ்ரா காலண்டர் (நாட்காட்டி) யாருடைய ஆட்சியில் அமல் செய்யப்பட்டது?
    உமர்(ரழி) ஆட்சி காலத்தில்.
  3. நபி(ஸல்) காலத்தில் ஆண்டுகளை எவ்வாறு கணக்கிட்டார்கள்? ஒரு உதாரணம் தருக.
    கபாவை அழிக்க வந்த யானை படையினரை பறவைகளைக் கொண்டு அழித்த ஆண்டை யானை ஆண்டு என்று கணக்கிட்டார்கள்.
  4. இன்றைய கிரிகோரியன் (ஆங்கில காலண்டர்) எந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது? அதில் உள்ள திருத் தங்கள் எந்த ஆண்டு செய்யப்பட்டது?
    பிப்ரவரி 24, 1582ல் பாதிரியார் 13ம் கிரிகோரியன் ஆணைப்படி தொடங்கப்பட்டது.
  5. பூமி உருண்டையில் கிழக்கிற்கும், மேற்கு திசைக்கும் மையமாக (Center) அமைந்த நகரம் எது?
    மக்காவில் உள்ள காபா.
  6. அப்படி மக்கா மையமாக இருப்பதை விரும்பாத வரலாற்று திரிபுவாதிகளால் லண்டன் அருகில் உள்ள கிரீன்விச்சை உலகின் மையமாக எந்த ஆண்டு?
    யாரால் அமைக்கப்பட்டது?
    1867ல் அலாஸ்காவை அமெரிக்காவுடன் இணைப்பதன் மூலம் ஆங்கிலேயரால் அமைக்கப்பட்டது.
  7. உலகின் மையம் மக்கா என்பதற்கு குர்ஆன், நபிவழியில் ஆதாரம் தருக?
    கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையில் எது உள்ளதோ அது கிப்லாவாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
    அறிவிப்பாளர் அபூ ஹுரைரா(ரழி) நூல்: திர்மிதி 342, இப்னு மாஜா 1064.
  8. கிரீன்விச்சை உலகின் மையமாக ஆக்குவதற்கு ஆங்கிலேயர்களின் சூழ்ச்சி என்ன?
    அலாஸ்காவை இடம் மாற்றி அதன் கிழமையையும் மாற்றி. அலாஸ்காவில் உள்ள தேதிக்கோட்டை பீஜி தீவுகளின் இடையே ZigZag அமைப்பில்
    தேதிக்கோட்டை 1867க்கு பின் போட்டது.
  9. இப்படி தங்களுக்கு சாதகமாக தேதிக் கோட்டை மாற்றியதால் ஏற்பட்ட பாதிப்பு எவை?
    இயற்கையாக மையமாக உள்ள மக்கா மாற்றப்பட்டு மையம் கிரீன்விச்சுக்கு கொண்டு செல்லப்பட்டது.
    கி.பி. 1867க்கு முன் அலாஸ்காவில் வெள்ளிக்கிழமையாக இருந்த கிழமையை வியாழனாக மாற்றியது.
    அங்குள்ள மக்கள் சனிக்கிழமை ஜும்மா தொழும்படி நேர்ந்ததும்.
  10. உலகில் எந்த இடத்திலும் கிழமைகளை மாற்றிக் கொள்ள எந்த மதத்தவருக்கும், நாட்டிற்கும் உரிமை உண்டா?
    கிழமைகளை இறைவன் உலகை படைக்கும் முன் படைத்துவிட்டான். அவனே காலமாக இருக்கின்றான் அவனையன்றி பூமியில் யாருக்கும் ஒரு பகுதியில் உள்ள
    கிழமையை மாற்ற அதிகாரம் இல்லை.
  11. அப்படி மாற்றிக் கொள்ளலாம் என்றால் நம்மூரில் இயற்கையாக வரும் வெள்ளிக்கிழமையை மாற்றி வியாழன் (அ) சனிக்கிழமைகளில் ஜும்ஆ நடத்த லாமா?
    என்று கேட்டால்?
    அனைவரும் கூடாது என்றே சொல்வார்கள். ஆனால் அலாஸ்காவில் நடந் ததை கண்டு கொள்ளமாட்டார்கள்.
  12. IDL என்பதன் விரிவாக்கம் என்ன?
    சர்வதேச தேதிக்கோடு (International Dateline)
  13. UTC என்பதன் விரிவாக்கம் என்ன?
    ஒருங்கிணைக்கப்பட்ட உலக நேரம். ஆங்கிலேயர் லண்டன் நேரத்தை உலக நேரம் ஆக்கியுள்ளனர்.
  14. சங்கமம் (Conjunction)  என்றால் என்ன?
    பூமி, சந்திரன், சூரியன் மூன்றும் நேர் கோட்டில் வருவது.
  15. “உர்ஜுனில் கதீம்’ என்ற வசனம் குர்ஆனில் எங்குள்ளது?
    36:39 வசனத்தில் குர்ஆனில் உள்ளது.
  16. உர்ஜுனில் கதீமை கண்ணால் பார்க்க முடியுமா?
    முதல் பிறையை சில மாதம் பார்க்க லாம், சில மாதம் பார்க்க முடியாமல் போகலாம், அதுபோலதான் இந்த உர்ஜுதுல் கதீம் என்ற இறுதி பிறை சில மாதம்
    பார்க்கலாம், சில மாதம் பார்க்க முடியாமல் போகலாம்.
  17. வெள்ளை நாட்கள் என்றால் என்ன?
    ஒவ்வொரு சந்திர மாதத்திலும் பெளர்ணமி வரும் நாளை வெள்ளை நாள் என்று 13,14,15 ஆகிய தேதிகளில் வரும்.
  18. வெள்ளை நாட்களில் நோன்பு வைக்க நபி(ஸல்) நடைமுறையில் உள்ள ஹதீஃத் ஆதாரம் தருக?
    ஜரீர் இப்னு அப்துல்லாஹ்(ரழி) அறிவித்தார்கள்: மாதத்தில் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது வாழ்க்கை முழுதும் நோன்பு நோற்றதைப் போலாகும். அவை வெள்ளை
    நாட்களாகிய 13,14,15 ஆகும் என்று நபி(ஸல்) நவின்றார்கள். நஸாயி: 2420, 2422, 2428, 2429, 4311, திர்மிதி: 761, அபூதாவூத் : 2449.
  19. பிறை 16ல் வெள்ள நாட்கள் வராது என அறிந்திருந்தும் ஹிஜ்ரா கமிட்டி வெளியிட்ட காலண்டரில் ஹிஜ்ரி 1440 முஹர்ரம் மாதத்திலும், ரபியுல் அவ்வல் மாதத்திலும்
    பெளர்ணமி பிறை 16 வந்தது எப்படி?
    சங்கமம் நடக்கும் முன் மாதத்தை துவங்குவதால் UTC 14:00க்கு மேல் சங்கமம் நிகழும்போது ஆங்கிலேயரால் போடப்பட்ட IDL / UTCஐ ஆய்வு செய்யாமல்
    அப்படியே பின்பற்றி தவறாகக் கணக்கிட்டு பெளர்ணமி பிறை 16 என தவறாக ஹிஜ்ரா கமீட்டி காலண்டர் வெளியிட்டுள்ளது.
  20. ஹிஜ்ரா கமிட்டியில் நாட்காட்டியில் உள்ள குறைபாடுகள் எவை?
    1. ஆங்கிலேயர்களின் IDL-ஐ ஆய்வு செய்யாமல் ஏற்றுக்கொண்டது.
    2. நாட்கள் குர்ஆன், நபிவழி அடிப்படையில் நாளின் ஆரம்பம் பஜ்ர்-ஐ ஏற்காமல் IDL-ல் Noon to Noonல் நாளின் தொடக்கத்தை அங்கீகாரம் வழங்கி
    அதன்படி காலண்டர் கணக்கிட்டது.
  21. திருத்தப்பட்ட இஸ்லாமிய ஹிஜ்ரா காலண்டர் UTCயில் செய்த மாற்றமும், கணக்கீடும் தருக?
    தேதிக்கோட்டை சரிசெய்ய 3UTயும் உச்சியை பஜர் ஆக்குவதற்கு, 7UTயும் கழித்திருப்பது.
  22. திருத்தப்பட்ட இஸ்லாமிய காலண்டரின் நன்மைகள் என்ன?
    1. இஸ்லாமிய அடிப்படையில் உலகின் மையமாக (Center) மக்காவை வைத்து கணக்கிடப்பட்டுள்ளது.
    2. பெளர்ணமி பிறை 16ல் வராது நாளை ஆரம்பித்தபின் சங்கமம் நிகழாது.
    3. 14UT நேரத்தில் உலகம் முழுதும் ஒரே கிழமை.
    4. சரியான நாளில் நோன்பு வைப்பதற்கும், பெருநாள் கொண்டாடுவதற்கும், அரஃபாவுடைய நாளை அடைவதற்கும் முஹர்ரம் மாதம் பிறை 9,10 நோன்பு நோற்பதற்கும்

ஒவ்வொரு மாதமும் பிறை 13,14,15 நாட்களில் (வெள்ளை நாட்களில்) நோன்பு வைப்பது போன்ற வணக்க வழிபாடுகளை நிறைவேற்ற இஸ்லாமிய ஹிஜ்ரா நாட்காட்டி அவசியம்

  1. ஜமாஅத்அல் முஸ்லிமீன் மறைந்த அமீர் அபூ அப்தில்லாஹ் அவர்கள் பழைய ஹிஜ்ரா கமிட்டியின் நாட்காட்டியை தான் பின்பற்றினார். அவர்களின் நிலையில் இருந்து
    ஜமாஅத்அல் முஸ்லிமீன் திருத்தங்களுடன் இஸ்லாமிய ஹிஜ்ரா நாட்காட்டியாக்கி ஏன் வெளியிடுகிறது?
    ஆங்கிலேயர் லண்டனை மையமாக கொண்ட IDLல் நள்ளிரவை அடிப்படையாக கொண்ட UTC ஆகியவைகளை திருத்தம் செய்து வெளியிடுகிறது.
  2. திருத்தங்களுடன் வெளிவரும் இஸ்லாமிய ஹிஜ்ரா காலண்டரும் இன்றைய சவுதியில் உள்ள தற்போதைய உம்முல்குரா காலண்டரும் கிட்டத்தட்ட ஒத்துப்போகிறதா?
    ஆம் இரண்டு ஒத்துப்போகின்றன. அவர்களும் 14UTக்கு நெருக்கமான கணக்கீட்டில் தான் உள்ளது.
  3. அலாஸ்காவில் நாளின் தொடக்கம் பஜ்ராக அங்கீகரித்தால் சில நாட்கள் பஜ்ர் உள்ளூர் நேரப்படி 5.00க்கும், சில நாட்கள் 5.45க்கும் உள்ள மாற்றத்தை எவ்வாறு
    நாளின் தொடக்கம் கொண்டு காலண்டரை முன்கூட்டியே தயாரிக்க முடியும்?
    இரவு பகலை மனிதனால் அளவிட முடியாது அதனை இறைவன் மன்னித்து விட்டான் என்ற இறைசெய்தி அடிப்படையில் ஆரம்ப நேரம் 5 மணியாக
    அமைக்கப்பட்டுள்ளது .
  4. நபி(ஸல்) காலத்தில் அரஃபா உடைய நாளில் வெள்ளிக்கிழமைதான் என்று ஹதீஃத் கூறும்போது ஹிஜ்ரா கமீட்டி காலண்டரின் கணக்கீட்டின்படி வியாழனாக
    (Reverse) ல் பார்க்கும்போது அமைகிறது இது பிழையான கணக்கீடு இல்லையா?
    ஆம்! தெளிவான பிழையான கணக்கீடு ஆகும்.
  5. பூமி உருண்டையில் காபாவின் எதிர் திசை அலாஸ்கா அமைகிறது அதன் தேதிகோட்டில் ஒரு புள்ளியில் கிப்லா திசையும், கிழமையும் விளக்கும் படம் தருக?
    கமீட்டி கிப்லா ஆங்கிலேயர் IDL மாறுவதாக கூறுவது பொய்யான செய்தியாகும் உண்மையில் கிப்லா அலாஸ்காவிற்கும் கனடாவிற்கும் இடையே மாறுகிறது.

காரணம் : 1. பூமி உருண்டையாக இருப்பதால் இரு கீழ் திசைகளும் இரு மேல் திசைகளும் IDL-ல் சந்திப்பதால் (மக்காவை நோக்கி முஸ்லிம்கள் தொழும் இறை கட்டளைக்கேற்ப இது அமைந்துள்ளது)

  1. கி.பி 1884ல் தேதி கோடிட்ட கிருத்தவர்களால் அலாஸ்கா முதல் இன்றைய IDL-ஆக கருதப்படும் உள்ள பகுதிகளைச் சேர்ந்த தீவுகளில் உள்ள முஸ்லிம்களின்
    வெள்ளிக்கிழமையை வியாழனாக மாற்றியது மோசடி இல்லையா?
    ஆம் மிகப்பெரிய மோசடி அதை ஆங்கிலேயர் அலாஸ்கா மாற்றம் மூலம் செய்து உள்ளனர். ஒரு இடத்தில் ஜும்ஆ தொழும் முஸ்லிம்களை அடுத்தபடி சனிக்கிழமை
    தொழும்படி செய்வது இறை நிராகரிப்பு ஆகும். ஆங்கிலேயர் அந்தப் பகுதி மக்களும் மீது இதை தன் ஆட்சி அதிகாரம் மூலம் நிறைவேற்றியுள்ளது ஏற்றுக்கொள்ள
    முடியாத ஒன்று ஆகும்.
  2. தற்போது ஹிஜிரி கமீட்டியின் காலண்டர் கணக்கீட்டில் நீங்கள் செய்த மாற்றம் என்ன?
    A.   கமீட்டியின் கண

Previous post:

Next post: