பிறையை புறக்கண்ணால் பார்க்கத்தான் வேண்டுமா?

Post image for பிறையை புறக்கண்ணால் பார்க்கத்தான் வேண்டுமா?

in ஹிஜ்ரி காலண்டர் விமர்சனமும், விளக்கங்களும்

விமர்சனம்: மாதம் பிறந்ததை பிறையை புறக்கண்ணால் பார்த்தால் மட்டுமே மாதம் பிறந்ததை ஏற்போம் சிலர் வாதிடுகிறார்களே…

விளக்கம்: சந்திரன் பூமியைச் சுற்றிவர எடுக்கும் நாட்கள் 29.53059 என்று ஐந்து எண்கள் தசம பின்னத்தில் (DECIMAL) இவ்வளவு துள்ளியமாககச்சிதமாகக் கணினி மூலம் அறியப்பட்டுள்ளபார்க்கப்பட்டுள்ள (ருஃயத்) இந்த நவீன யுகத்தில், அதாவது சந்திரன் தனது முதல் மாத சுற்றை இந்த நாள் இன்ன தேதி, இத்தனை மணி, இத்தனை நிமிடம், இத்தனை வினாடியில் முடித்துக் கொண்டு அடுத்த மாதச் சுற்றை ஆரம்பித்துவிட்டது என திட்டமாகத்  தெரிந்த நிலையில், இன்றும் பிறையைப் புறக் கண்ணால் பார்த்தே ஏற்போம் என்பவர்கள் எத்தனை பெரிய அறிவீனர்களாக இருக்க முடியும்?

இன்றுபோல் அன்று நாள், தேதி, மணி, நிமிடம், வினாடி அத்தனையையும் துள்ளியமாக நபி(ஸல்) அவர்கள் துள்ளியமாகத் தெரிந்து வைத்துக்காண்டா பிறையைப் புறக்கண்ணால் பார்க்கும் வரை காத்திருக்கிறார்கள் என்ற எமது கேள்விக்குப் பதில் அளித்துவிட்டு அவர்கள் தங்கள் பக்தகோடிகளைஏமாற்றட்டும். அவர்கள் அறிவீனர்கள்தான் என்பதற்கு வானில் சந்திரன் இல்லை என்று ஓரிடத்தில் மட்டுமல்ல இரண்டு இடங்களில் குறிப்பிட்டிருப்பதே போதிய சான்றாகும். இது அல்குர்ஆன் 36:40ல் அல்லாஹ் தெளிவாகக் கூறி இருப்பதற்கு நேர் முரணான கருத்தாகும்.

 لَا الشَّمْسُ يَنْۢبَغِىْ لَهَاۤ اَنْ تُدْرِكَ الْقَمَرَ وَلَا الَّيْلُ سَابِقُ النَّهَارِ‌ؕ وَكُلٌّ فِىْ فَلَكٍ يَّسْبَحُوْنَ

சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது; இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன. அல்குர்ஆன் 36:40

சந்திரன் வானில் ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்குதானும் இல்லாமலும் போகாத அதனது சுற்றுப் பாதையில் சூழலாமலும் இருக்காது. இதுதான் உண்மை, மனிதனது புறக்கண் பார்வையில் பட்டால்தான் சந்திரன் வானில் இருக்கிறது. அது சுழல்கிறது என்பதைவிட அறிவீனமான வாதத்தை இந்தப் புரோகித மவ்லவிகளும், அவர்களது கண்மூடடி பக்தர்களுக்கு மட்டுமே சொல்ல முடியும். சூரியன், பூமி, சந்திரன் இவற்றின் சுழற்சிகளை அறிந்த ஒரு நான்காம் வகுப்பு மாணவனிடம் கூட இந்த அறியாமை இருக்க முடியாது.

சந்திரன் எப்போதும் வானில் சுழன்று கொண்டுதான் இருக்கிறது. அதுவும் மனிதன் கண்டுபிடித்துள்ள வேகமான விமானத்தை விட அதிவேகமாகச் சுழல்கின்றது. அதன் ஒரு பகுதி தன்னில் விழும் சூரியக் கதிர்களை அப்படியே பிரதிபலிக்கிறது. அதன் கீழ் பகுதிக்கு அந்த ஆற்றல் இல்லை. முகம் பார்க்கும் கண்ணாடி போல், எனவே சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நேர்கோட்டில் வரும்போது, அதில் படும் சூரியக்கதிர்களை அப்படியே பிரதி பலிக்கிறது. அதன் கீழ் பகுதிக்கு அந்த ஆற்றல் இல்லை. முகம் பார்க்கும் கண்ணாடி போல், எனவே சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நேர்கோட்டில் வரும்போது, அதில் படும் சூரியக்கதிர்கள் அந்த சூரியனை நோக்கியே பிரதிபலிக்கிறது. அவை பூமியை எட்டுவதில்லை; அதனால் இருட்டாக இருக்கிறது. அதையே ஹிந்துக்கள்அமாவாசைஎன்கின்றனர். இந்த அடிப்படையில் முதல் மாதத்தை முடித்து இரண்டாவது மாதத்தின் சுழற்சியை ஆரம்பிக்கும் சந்திரன், பூமி உருண்டையாக இருப்பதில் அடிப்படையில் சாய்கிறது.

அப்படி சாயும்போது சந்திரனின் மேற்பரப்பில் பட்டு பிரதிபலிக்கும் சூரியக் கதிர்களின் ஒரு சன்னக் கீற்று பூமியில் படுகிறது. அதையே பூமியிலுள்ளவர்கள் தங்களின் புறக்கண்ணால் பார்க்கின்றனர். அதுவும் அன்று 1427 ஆண்டுகளுக்கு முன்னர் வானம் எவ்வித, மாசு மரு இல்லாமல் தெளிவாக இருந்ததால் அந்தச் சன்னக் கீற்றை துள்ளியமாகப் பார்க்க முடிந்தது. ஆனால் இன்றோ வானம் மனிதர்களின் பயன்பாட்டிலுள்ள தரை, கடல், ஆகாயம் என பலவித வாகனங்கள், வீட்டு வேடிக்கைகள், இன்னும் இவைபோல் பலவித வாயுக்களை வெளியேற்றும் இயந்திரங்கள் இவை காரணமாக வானம் மாசடைந்து (POLLUTED) இருளடைந்து காணப்படுகிறது. எனவே அன்று போல் இன்று பறையின் சன்னக்கீற்றைப் பார்ப்பது இயலாத காரியமாகும். இரண்டாம், மூன்றாம் நாளில்தான் புறக்கண் பார்வைக்கும் தெரியும் அளவில் பெரிதாகின்றது. சந்திரன பூமியைச் சுற்றி சுழல்பதின் காரணமாக அந்தச் சன்னக் கீற்று பெரிதாகி, பெரிதாகி மாதத்தின் சரியான நடுப்பகுதியில் முழு நிலாவாகபூர்ணசந்திரனாக, பெளர்ணமியாக முழுமை அடைகிறது. இந்த நிலையில் சந்திரனில் படும் சூரியக் கதிர்கள் அப்படியே முழுமையாக பூமியை நோக்கி பிரதிபலிக்கிறது.

சந்திரன் மாதத்தின் நடுப்பகுதியைத் தாண்டியதும் மீண்டும் அதன் திரும்புதல் எதிர்வரிசையில் இருப்பதால் எதிர்பக்கம் படிப்படியாகத் தேய்த்து, மாதத்தின் இறுதி நாளில் மீண்டும் முழு இருட்டாகஅமாவாசையாக ஆகிவிடுகிறது. சந்திரனின் மையப்பகுதி, சூரியன், நேர்கோட்டத் தாண்டியவுடன், அடுத்த மாத சுற்றை சந்திரன் ஆரம்பித்து விடுகிறது. வளர்பிறை, தேய்பிறை, முழுநிலா, முழு இருட்டு(அமாவாசை) இவை அனைத்தையும் அன்றைய கால மக்களும் அறிந்துதான் வைத்திருந்தனர். ஆனால் அவை எப்படி நிகழ்கின்றன என்பதைத்தான் அறியாது இருந்தனர். ஆயினும் இறைவனின் இறுதி வழிகாட்டி நூல் அல்குர்ஆன் இதை அதி அற்புதமாக அன்றிலிருந்து சொல்லிக் கொண்டுதான் இருக்கிறது. இன்றுதான் அவற்றின் உண்மை நிலையை மனிதன் அளித்து வருகிறான். (பார்க்க:10:5, 36:39,40, 84:18)

அன்று நபி(ஸல்) அவர்கள் சூரிய கிரஹணத்தை இறைவனின் அத்தாட்சிகளில் உள்ளது என்று தெளிவுபடுத்தி, மக்களிடம் ஏற்பட்ட மூட நம்பிக்கையை அகற்றினார்கள். ஆனால் இன்று சூரியன், பூமி, சந்திரன் இந்த மூன்றும் நேர்கோட்டில் வரும்போது (CONJUNCTION) சூரிய, சந்திர கிரஹணங்கள் ஏற்படுகின்றன. சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வந்து, சூரியனிலிருந்து வரும் வெளிச்சத்தை பூமியில் விழாமல் சந்திரன் மறைத்தால் இதை சூரிய கிரஹணம் என்றும், அதே சமயம் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி வந்து சந்திரனில் விழும் சூரிய வெளிச்சத்தை பூமி மறைத்தால் அது சந்திர கிரஹணம் என்றும் அறிந்து வைத்திருக்கிறோம்.

அது மட்டுமல்ல, சூரிய கிரஹணம் சந்திர மாதத்தின் கடைசி இறுதி நாளில் 29 அல்லது 30-ல் இடம் பெறும் என்பதும சந்திர கிரஹணம் சந்திர மாதத்தின் நடுப்பகுதியில் 14 அல்லது 15-ல் இடம் பெறும் என்பதும் இன்று நிரூபிக்கப்பட்ட உண்மையாக இருக்கிறது. இந்த நிலையில் இந்தப் புரோகித மவ்லவிகள் பிறையைக் கண்ணால் பார்த்தே நாளைத் தீர்மானிக்க வேண்டும்  என்ற நிலையில் 3-ம் பிறையை முதல் பிறையாகக் கொள்வதால், சந்திர கிரஹணம் பிறை 12 அல்லது 13லும், சூரிய கிரஹணம் 27 அல்லது 28-லும் இடம் பெறும் பரிதாப நிலையைநூற்றுக்கு நூறு உறுதியாக நிரூபிக்கப்பட்ட உண்மைக்கு புறம்பான மூட நம்பிக்கை ஆகும்.

புதிய மாத சந்திரன் பிரதிபலிக்கும் ஒளி அதாவது சன்னக்கீற்று எங்கள் கண்ணில் பட்டால்தான் அதைப் பிறையாக ஏற்றுக் கொள்வோம். அதாவது அந்த ஒளிக்கீற்று எங்கள் கண்ணில் பட்டபின்னரே சந்திரன் சுற்ற ஆரம்பிக்கிறது. அதுவரை அது தனது ஓடுபாதையில் சுற்றாமல் அப்படியே நிற்கிறது என்ற நம்பிக்கை, மூடத்தனமான நம்பிக்கை இல்லையா?


ஜனவரி 2007

Previous post:

Next post: