ரமழான்-ஷவ்வல் 1430
அந்நஜாத் செப்டம்பர் 2009
ரமழான் – ஈத் சிந்தனை!
ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை-தீமைகளை) பிரித்தறிவிப்பதுமான அல்குர் ஆன் இறக்கியருளப்பட்டது ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமத்தை நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப்போனதை) பூர்த்தி செய்யவும்; உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்) (அல்குர்ஆன் பகரா 2:185)
மனித சமுதாயத்திற்கு நேர்வழியையும், நல்லது கெட்டதையும் தள்ளத்தெளிவாக சந்தேகத்திற்கிடமின்றி அறிவிக்கவே அல்குர் ஆன் இறக்கப்பட்டதாக அல்லாஹ் கூறுகிறான். சாந்தி மார்க்கம் 1430 ஆண்டுகளுக்கு முன்னரே முழுமையாக நிறைவுபெற்றுவிட்டது. ஹிஜ்ரி 11க்குப் பிறகு இஸ்லாம் மார்க்கத்தில் அணு அளவும் கூட்டவோ, குறைக்கவோ முடியாது என்பதை 5:3, 7:3, 3:19, 85, 33:36, இறை வாக்குகள் உறுதிப்படுத்துகின்றன. அல்லாஹ் வுக்கும் அடியானுக்கும் இடையில் மனிதர்களில் யாருமே இடைத்தரகர்களாக-புரோகிதர்களாக வர முடியாது. அப்படி யாரும் தங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் மனிதர் களில் யாரையும் இடைத்தரகர்களாகக் கொண்டால், அவர்கள் நாளை மறுமையில் நரகில் கிடந்து வெந்து வேதனைப்பட்டுக் கொண்டு அந்த இடைத்தரகர்களைக் கடுமையாகத் திட்டி சபிப்பார்கள் என்பதை 33:66,67,68 இறை வாக்குகள் திட்டமாகக் கூறுகின்றன.
ஆக! ஒவ்வொரு ஆணும், பெண்ணும் எந்தப் புரோகிதர்களுக்குப் பின்னாலும் செல்லாமல் குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஃத்களை படித்து, ஆய்ந்து, விளங்கி அதன்படி நடக்க வேண்டும் என்பது குன்றிலிட்ட தீபமாக விளங்குகிறது. அதிலும் குறிப்பாக இஸ்லாமிய மார்க்கத்தைத் தொழிலாக, வயிற்றுப் பிழைப் பாகக் கொண்டுள்ள புரோகித மவ்லவிகள் ஒருபோதும் 6:153 சொல்லும் நேர்வழியைக் காட்டமாட்டார்கள்; கோணல் வழிகளையே நேர்வழியாகக் காட்டி, அவர்களை நம்பி அவர் கள் பின்னால் செல்பவர்களை வழிகெடுத்து நரகில் தள்ளுவார்கள் என எண்ணற்ற இறை வாக்குகள் எச்சரிக்கின்றன.
யாரெல்லாம் நாங்கள் அரபிமொழி கற்ற ஆலிம்கள்-மவ்லவிகள் எங்களுக்கே மார்க்கம் விளங்கும் மார்க்கத்தைச் சொல்லும் அதிகாரம் எங்களுக்கே இருக்கிறது அரபி மொழி கல்லாத அவாம்களான பாமரர்களுக்கு குர்ஆன் விளங்காது மார்க்கம் விளங்காது என்று ஆணவம்-அகந்தை பேசுகிறார்களோ அவர்கள் ஆலிம்களே அல்ல தாருந்நத்வா அரபி பண்டி தர்கள் எப்படி அகந்தை பேசினார்களோ அதே அகந்தைதான் இவர்களிடமும் இருக்கிறது. எனவே நபி(ஸல்) அவர்கள் அப்பண்டிதர்களை எப்படி ஜாஹில்கள் என்றும், அவர்களின் தலைவனை அபூஜஹீல் என்றும் அடையாளப் படுத்தினார்களோ அதே நிலையில்தான் இன்றைய அரபி பண்டிதர்களும் இருக்கிறார்கள்.
அன்றைய அரபி பண்டிதர்களைப் போல் இன்றைய அரபி பண்டிதர்களும் மார்க்கத்தைத் தொழிலாக-பிழைக்கும் வழியாக கொண்டிருப் பதால், அவர்களைப் போல் நேர்வழியை மறுத்து கோணல் வழிகளில் மக்களை இட்டுச் செல்லவே முனைவார்கள். நபிமார்களைப் போல் மார்க்கத்தைத் தொழிலாகக் கொள் ளாமல் மக்களிடம் எதையும் எதிர்பாராமல், அல்லாஹ்விடமே தங்களுக்குரிய கூலி இருக்கிறது என்று தொண்டாக மார்க்கப்பணியை செய்ய முன் வந்தால் மட்டுமே, அவர்கள் நபிமார்களின் வாரிசாக இருப்பார்கள்; இல்லை என்றால் நபிமார்களை எதிர்த்தவர்களின் வாரிசாக மட்டுமே இருக்க முடியும். அன்பு சகோதர, சகோதரிகளே நாளை மறுமையில் வெற்றி பெற்று சுவர்க்கம் செல்ல வேண்டுமா? அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் இடையில் தரகர்களாக எங்களையும் ஆக்காதீர்கள்; புரோகித மவ்லவிகளையும் ஆக்காதீர்கள். நேரடியாக குர்ஆன், ஹதீஃதைப் படித்து விளங்கி அதன்படி நடங்கள். அல்லாஹ் 7:3, 33:36 இறைவாக்குகளில் கட்டளையிடுவது இதையே. ரமழானின் நோன்பு நோற்ற நிலையில் அல்குர்ஆனை, குறிப்பாக இங்கு எழுதியுள்ள அல்குர்ஆன் வசனங்களை நடுநிலையுடன் மீண்டும், மீண்டும் படித்து, விளங்கி, உணர்ந்து அவற்றிலுள்ள அல்லாஹ்வின் கட்டளைகளை அப்படியே எடுத்து நடங்கள். அதுவே மறுமை வெற்றிக்கு வழி வகுக்கும். அல்லாஹ் அருள் புரிவானாக! இதனையே ரமழான் ஈத் சிந்தனை யாகக் கொள்ள வேண்டுகிறோம்.
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம் தான். நெறிநூல் அளிக்கப்பட்டவர்கள் (~இதுதான் உண்மையான நெறிநூல்;| என்ற) ஞானம் அவர்களுக்கு கிடைத்த பின்னர் தங்களுக்கிடையே உள்ள பொறாமையின் காரணமாகவே (இதற்கு) மாறு பட்;டனர். ஆகவே, (இவ்வாறு) எவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரிக்கின்றார் களோ அவர்களுடைய கணக்கை நிச்சயமாக அல்லாஹ் வெகு சீக்கிரத்தில் எடுப்பான்.(3:19)
இஸ்லாமையன்றி (வேறொரு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் நிச்சயமாக அவரிட மிருந்து (அது) அங்கீகரிக்கப்பட மாட்டாது. மறுமையில் அவர் நஷ்டமடைந்தவராகவே இருப்பார். (3:85)
“நிச்சயமாக இதுதான் என்னுடைய நேரான வழியாகும். அதனையே நீங்கள் பின்பற்றுங்கள்; மற்ற வழிகளைப் பின்பற்றாதீர்கள். அவை அல் லாஹ்வுடைய வழியிலிருந்து உங்களைப் பிரித்துவிடும். நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆவதற்காக இறைவன் இவற்றை உங்களுக்கு உபதேசிக்கின்றான்” (என்று கூறுங்கள்). (6:153)
(மனிதர்களே!) உங்களுக்காக உங்கள் இறைவன் அருளியதையே பின்பற்றுங்கள். அவ னையன்றி (மற்றெவரையும் உங்களுக்கு) பொறுப்பாளர்(களாக ஆக்கி, அவர்)களை நீங்கள் பின்பற்றாதீர்கள். (எனினும், இதனைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உங்க ளில் மிகக் குறைவு. (7:3)
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் யாதொரு விஷயத்தைப் பற்றிக் கட்டளையிட்ட பின்னர், அவ்விஷயத்தில் (அதனைவிட்டு) வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு நம்பிக்கையாளரான எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமையில்லை. (இவ்விஷயத்தில்) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால், நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள். (33:36)
நரகத்தில் அவர்களுடைய முகங்களை புரட்டிப் புரட்டிப் பொசுக்கும் நாளில் “எங்களுடைய கேடே! நாங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிப்பட்டிருக்க வேண்டாமா?” என்று கதறுவார்கள். (33:66)
அன்றி “எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம். நாங்கள் தப்பான வழியில் செல்லும்படி அவர்கள் செய்துவிட்டார்கள். (33:67)
(ஆகவே) எங்கள் இறைவனே! நீ அவர்க ளுக்கு இரு மடங்கு வேதனையைக் கொடுத்து, அவர்கள் மீது பெரிய சாபத்தைப் போடு” என்று கதறுவார்கள். (33:68)