அறிந்து கொள்வோம்!
மர்யம்பீ, குண்டூர்,
- சுலைமான்(அலை) அவர்களின் படைகளில் கலந்துகொண்டவர்கள் யார் என அல்லாஹ் கூறுகிறான்?
ஜின்கள், மனிதர்கள், பறவைகள். 27:17 - யார் தேவை உள்ளவர்கள், யார் தேவை அற்றவர் என அல்லாஹ் கூறுகிறான்?
அல்லாஹ்வை தவிர மற்ற அனைவரும் தேவை உள்ளவர்கள். அல்லாஹ் தேவை அற்றவன். குர்ஆன் : 35:15 - ஸபா நாட்டு இளவரசியின் சிம்மாசனத்தை கொண்டு வந்தது யார் என அல்லாஹ் கூறுகிறான்?
வேதம் பற்றி அறிவுள்ள ஒருவர். 27:40 - நபி(ஸல்) அவர்களுக்கு அய்லாவின் மன்னர் அன்பளிப்பாக கொடுத்து எது?
வெள்ளை நிற கோவேறு கழுதை. புகாரி: 1481, 1482, 3161 - கிராமவாசியின் ஒட்டகத்திடம் தோற்றுப் போன நபி(ஸல்) அவர்களுடைய ஒட்டகத்தின் பெயர் என்ன?
அள்பா. புகாரி : 2872 - ஸபா நாட்டினர் எதனை சுஜூது செய்து கொண்டிருந்தனர்?
சூரியனுக்கு சுஜூது செய்தனர். 27:24 - பெண்கள் தமது அலங்காரங்களை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டாம் என அல்லாஹ் கூறுகிறான்?
தமது அழகு அலங்காரத்தை, அதிலிருந்து தெரியக்கூடியதைத் தவிர, வேறு எதையும் வெளிக்காட்டலாகாது. 24:31 - கடலின் நடுவே ஒரு தடுப்பு இருப்பதாக கூறிய வசனம் எது?
அல்குர்ஆன் : 55:20 - மனிதர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்பிக்கை கொள்ளாமல் இருந்தது குறித்து மறுமை நாளில் எது வெளிப்படுத்தும்?
பூமியிலிருந்தது வெளிப்படும் பிராணி. 27:82 - தர்மத்தை வரையறுத்தால் அல்லாஹ் என்ன செய்வான்?
அவனும் வரையறுத்து விடுவான். புகாரி : 1433 - மறுமை நாளில் மலைகள் எது போன்று நகரும் என அல்லாஹ் கூறுகிறான்?
மேகத்தைப் போல பறந்தோடும். 27:88\ - மறுமை நாளில் திடுக்கத்தில் இருந்து அச்சமற்றவர்கள் யார்?
நன்மையை கொண்டு வருகின்றவர். குர்ஆன் : 27:89 - ஒரே வியாபாரத்தில் எத்தனை நிபந்தனைகளை நபி(ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை?
இரண்டு நிபந்தனைகளை. திர்மிதி: 1155 - எந்த மாதிரியான வியாபாரத்தை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்?
கல்லெறி வியாபாரம், மோசடி வியாபாரம். முஸ்லிம் : 3033 - அல்லாஹ்விடம் ஒரு நாள் என்பது எத்தனை ஆண்டு என அல்லாஹ் கூறுகிறான்?
நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகள். குர்ஆன் : 22:47 - பராஉ இப்னு ஆஸிப்(ரழி) இப்னு உமர் (ரழி) இருவரையும் எதனால் பத்ரு போரில் கலந்து கொள்ள நபி(ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை?
இருவரும் சிறுவர்களாக இருந்ததால். புகாரி : 3955 - நபி(ஸல்) அவர்கள் ஹுனைன் போரில் பயன்படுத்திய கழுதையின் பெயர் என்ன?
பைளா. புகாரி : 2864 - மறுமை நாளின் அடையாளங்கள் சிலவற்றை பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறுவது எதை பற்றி?
கல்வி மக்களிடம் மறைவது, அறியாமை நிலைத்து விடுவது, மது அருந்துவது, வெளிப்படையாய் விபச்சாரம் நடப்பது. புகாரி : 80