தலையங்கம்!
இணைய வழி ரம்மி சூதாட்டம்!
இளைஞர்களை தற்கொலைக்குத் தூண்டும் இணைய வழி ரம்மி சூதாட்டத்தை, சமுதாய நலன் கருதி, தடை செய்ய வேண்டும் என, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் வலியுறுத்தி 17.06.2020 அன்று “இந்து தமிழ் திசை’யில் பாராட்டிற்குரிய ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையாவது :
கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக அனைத்துத் தரப்பினரும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில், இணையவழி சூதாட்டத் தளங்கள் இளைஞர்களை அடிமையாக்கி அவர்களின் வாழ்க்கையில் பொருளாதாரத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அத்தளங்களை உடனடியாக கட்டுப்படுத்தாவிட்டால், அவை மிகப் பெரிய சமூகச் சிக்கலை ஏற்படுத்தி விடும் ஆபத்து உள்ளது.
கரோனா ஊரடங்கு காரணமாக ஏராளமான இளைஞர்கள் வேலையிழந்து வீடுகளில் உள்ளனர். பணியில் இருக்கும் இளைஞர்களிலும் பெரும்பான்மையினர் வீடுகளில் இருந்தபடியே பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் பொழுதுபோக்குவதற்கு வழியில்லாத நிலையில், அவர்களை குறி வைத்து இணையவழி சூதாட்டங்கள் படையயடுத்து வருகின்றன.
ஒவ்வொரு நாளும் காலையில் செல்பேசியை திறந்தவுடனேயே “இன்றைய அறிமுக ஊக்கத் தொகையாக ரூ. 10 ஆயிரம், +2,000 வழங்குகிறோம். அதைக் கொண்டு ஆன்லைன் ரம்மி ஆட்டத்தைத் தொடருங்கள். லட்சக்கணக்கில் வெல்லுங்கள் என்ற செய்தி வருகிறது.
வீடுகளுக்குள்ளேயே அடைந்து கிடப்பதால் ஏற்பட்ட வெறுமை ஒரு புறம், இணையவழி ரம்மி ஆடி லட்சக்கணக்கில் சம்பாதித்தால் அது வருமானம் இல்லாத காலத்தில் உதவியாக இருக்குமே என்ற ஆசை ஒரு புறம் என இரண்டும் சேர்ந்து இணையவழி ரம்மிக்கு இளைஞர்களை அடிமையாக்குகின்றன.
அறிமுக ஊக்கத் தொகையாக இணைய வழி ரம்மி நிறுவனம் கொடுக்கும் பணம் சில நிமிடங்களில் கரைந்து விடும். அதன் பின் அந்த இளைஞர்கள் தங்களிடம் உள்ள சிறிய அளவு சேமிப்பைக் கொண்டு இணைய வழி ரம்மி எனும் சூதாட்டத்தைத் தொடருவார்கள். அடுத்த சில மணி நேரங்களில் அவர்களின் சேமிப்புகள் முழுவதுமாக கரைந்து விடும்.
அதற்கு அடுத்த நாட்களில் அந்த இளை ஞர்களை எவரும் தூண்டத் தேவையில்லை. மாறாக, காலையில் எழுந்தவுடனேயே நண் பர்கள், உறவினர்கள் என தெரிந்தவர்களை எல்லாம் தொடர்பு கொண்டு, கடன் வாங்கி சூதாடுவார்கள். எவ்வளவு பணம் வைத் திருந்தாலும் அதை முழுமையாக இழப்பார் கள். காரணம், இணைய வழி ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களே அப்படித்தான் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இணையவழி சூதாட்டத்துக்கு அடிமையாகி குடும்ப விஷேசங்களுக்காக சேமித்து வைத்த தொகை, தொழில் தொடங்குவதற்காக ஒதுக்கி வைத்த பணம் என லட்சக் கணக்கான தொகையை இழந்து விட்டு, அதிலிருந்து மீண்டு வரமுடியாமலும், இழந்த பணத்தை மீட்க முடியாமலும் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்களின் எண்ணிக்கை ஏராளம், இணைய வழி சூதாட்டத்திற்கு அடிமையாகி பணத்தை இழந்த பலர், மனநலம் பாதித்து நடைபிணமாக வாழ்ந்து கொண்டிருப்பதும் உண்மையாகும்.
கணினி வசதி இருப்போர் மட்டும் தான் இணையதளங்களை பார்க்க முடியும் என்ற காலம் மாறிவிட்டது. ஸ்மார்ட் தொலை பேசிகளின் வருகையால் செல்பேசியிலேயே இணையத்தை பயன்படுத்த முடியும் என்பதால் மிகவும் எளிதாக இந்த சூதாட்ட வலையில் விழுந்து விடும் ஆபத்து உள்ளது. சூதாட்டம் என்பது மது புகையை விட மோசமான போதை, மீளமுடியா புதை மணல் என்பது உலகம் அறிந்த உண்மை. ஒருமுறை இப்புதை மணலில் சிக்கினால் அதிலிருந்து மீண்டு வருவது மிகவும் கடினம்.
17 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் தலை விரித்தாடிய பரிசு சீட்டு கலாச்சாரத் தால் லட்சக்கணக்கான குடும்பங்கள் நடுத் தெருவுக்கு வந்தன. மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களால் அரசு அந்தக் கலாச்சாரத்திற்கு முடிவு கட்டியது. அதே போல், இப்போது ஆன்லைன் சூதாட்டங்களுக்கும் முடிவு கட்டப்பட வேண்டும். இல்லாவிட்டால் இளைஞர் சமுதாயத்தை சீரழிவிலிருந்து காப்பாற்ற முடியாது.
சூதாட்டங்கள் தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றின்போது, இணைய வழி ரம்மி சூதாட்டமா என்ற கேள்வியே எழ வில்லை என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. அதைப் பயன்படுத்திக் கொண்டு அனைத்து இணையவழி சூதாட்ட நிறுவனங்களும் ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான இளைஞர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வருகின்றன. இணைய வழி ரம்மி எனப்படும் சூதாட்டம் உடனடியாக தடுக்கப்படாவிட்டால், எதிர் காலத்தில் மிக மோசமான சமூக, பொருளாதார பிரச்சி னைகள் ஏற்படக்கூடும்.
எனவே, புதிய விதிகளை உருவாக்கியோ, ஏற்கனவே உள்ள விதிகளின்படியோ இணைய வழி ரம்மி சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நன்றி : இந்து தமிழ் திசை
==================
குர்பானி கொடுக்க ஆள், இட, பண வசதி குறைவா?
உங்களுக்கென்றே இந்த ஏற்பாடு!
குர்பானி கொடுக்கக் கடமைப்பட்டவர்கள் அதை நிறைவேற்ற விரும்பினாலும், பெருநகர் களில் ஆள், இடம் தோதில்லாமல் தயங்குகிறார்கள். வெளிநாடுகளிலுள்ளவர்களுக்கு, அங்கு குர்பானி மிருகங்களின் அதிக விலை உயர்வு பெரும் தயக்கத்தைத் தருகிறது. அவர்களுக்காகவே இந்த ஏற்பாடு. ஆடு ஒன்றுக்கு ரூ.10,500/- அல்லது மாடு ஒரு பங்குக்கு ரூ.2300/- அனுப்பித் தந்தால், உங்களுக்குரிய குர்பானியை இங்கு தமிழகத்தில் நிறைவேற்றித் தருகிறோம். இன்ஷா அல்லாஹ்.
குர்பானி வகைக்கு எனக் குறிப்பிட்டு M.O.அல்முஸ்லிமீன் சாரிட்டபிள் டிரஸ்ட், 51, திப்பிரான் தொட்டித் தெரு, திருச்சி-8. என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க அன்புடன் வேண்டுகிறோம்.
கீழ்காணும் வங்கி கணக்கில் பணம் செலுத்துபவர்கள் அலைபேசியில் விபரம் தெரிவிக்கவும்.
- ABDUL RAHEEM
STATE BANK OF INDIA
A/c. No. 30519929394 IFS CODE : SBIN0008676
Branch ROCKFORT CITY
Cell: 9345100888
ஹிஜ்ரி 1441 வருட ஹஜ் பெருநாள் & அரபா தினம்
09.12.1441 அரஃபா நோன்பு – 2020 ஜூலை 30 வியாழக்கிழமை
10.12.1441 ஹஜ் பெருநாள் – 2020 ஜூலை 31 வெள்ளிக்கிழமை