நவீன தாருந் நத்வா பாரீர்!
இப்னு ஹத்தாது
திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை அனைத்து மஸ்ஜிதுகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையை அப்படியே கீழே தந்துள்ளோம்.
திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா, பேகம் மஸ்ஜித்
திருச்சிராப்பள்ளி – 8. 20-12-89
பிஸ்மிஹீ தஆலா
கண்ணியத்துக்குரிய …………….. பள்ளிவாசல் முத்தவல்லி சாஹிப் மற்றும் நிர்வாகக் குழுவினருக்கு திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையினரின்
அஸ்ஸலாமு அலைக்கும்
தங்களின் மேலான சமூகத்திற்கு நாங்கள் தெரிவித்துக்கொள்ளும் முக்கியமான வியம் யாதெனில் சமீப காலமாக தமிழகத்தில் புதிய சில குழப்பவாதிகள் தோன்றி குர்ஆன்- ஹதீஸ் மட்டும் என்ற பெயரைச் சொல்லி பாமர மக்களுக்கு மத்தியில் குழப்பம் விளைவித்து வருவதைத் தாங்கள் அறிவீர்கள்.
ஸஹீஹான ஹதீஸின்படி இஸ்லாத்தில் தோன்றும் 73 கூட்டத்தாரில் சுவர்க்கவாதியான ஒரு பிரிவு சுன்னத் வல் ஜமாஅத் என்பது தெளிவான ஒன்று. இந்தப் பெயரைச் சூட்டிக்கொள்ள வெட்கப்படும் குழப்பவாதிகள் சில வருடங்களாக தவ்ஹீது, ஹதீஸ், குர்ஆன், என்ற பெயருடன் மக்களுக்கு மத்தியில் குழப்பத்தை உண்டுபண்ணி இளைஞர்களை விழிகெடச் செய்து வருகிறார்கள். இவர்கள், ஸஹாபாக்கள், இமாம்கள் மீது சந்தேகங்களை ஏற்படுத்தி அவர்கள் மீது விமர்சனங்கள் எழுதி அவர்களின் கண்ணியத்தை குறைவுபடுத்தி அவர்களைப் பின்பற்றக் கூடாத முறையில் மக்களை திசைத் திருப்ப முயல்கின்றனர்.
ஆகவே தான் திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக 1987 மார்ச் 14, 15 தேதிகளில் திருச்சி நகரில் ரீ அத் மாநாடு நடத்தி மக்களுக்கு பிரசுரங்கள் மூலமாகவும், பிரசுங்கங்கள் மூலமாகவும் உண்மை வழியை எடுத்துக் காட்டப்பட்டது.
தற்போது அக்குழப்பவாதிகள் ஆலிம்களை உருவாக்கி வருகின்ற அரபிக் கல்லூரிகளைப் பற்றியும் அதன் பாடத் திட்டங்களைப் பற்றியும் கேவலமான முறையில் விமர்சித்து மக்களுக்கு மத்தியில் ஆலிம்களுக்குள்ள மரியாதையைக் குறைத்திட முயன்று வருகிறார்கள்.
குறிப்பாக பல நூற்றாண்டுகளாக நடந்துவரும் தர்யஸ நிஜாமி என்ற பாடத் திட்டத்தைக் குறை கூறி அது குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக அமைந்துள்ளது என்றும் ´ர்க், பித்அத்தைப் போதிக்கிறது என்றும் கூறிக்கொண்டு இமாம் கஸ்ஸாலி(ரஹ்) போன்ற பெரியார்கள் மீதும் அவதூறுகள் கிளப்பி இமாம் அவர்கள் இஸ்லாத்துக்கு முரண்பட்ட சித்தாந்தங்களை இஸ்லாத்தில் புகுத்திவிட்டதாகக் குற்றம் சாட்டுகிறார்கள்.
அது மட்டுமின்றி வாரத்தில் ஓரிரு நாட்களில் மார்க்கம் தெரியாத வாலிபர்களையும், “”ஆலிம்” ஆக்குகிறோம் என்று கூறிக்கொண்டு ஸஹாபாக்களையும், இமாம்களையும் நேரடியாக பின்பற்றக்கூடாது என்றும், அவர்கள் காட்டிய வழியை நாமே நேரடியாக பரிசீலித்து ஆராய்ந்து இஸ்லாத்தைப் பின்பற்ற முடியும் என்றும், குர்ஆன், ஹதீஸை சொந்த ஆராய்ச்சியில் பின்பற்ற முடியும் என்றும் போதித்து வழிகெடச் செய்து வருகின்றார்கள்.
இவர்களின் குழப்பத்தின் காரணமாக ஒற்றுமையாக வாழ்ந்த முஸ்லிம்களுக்கிடையே வேற்றுமைகள் ஏறபட்டு பல இடங்களில் சர்ச்சைகளும் சச்சரவுகளும் ஏற்பட்டுள்ளது தெரிந்த வியமே.\
ஆகவே இவ்வகையான குழப்பவாதிகளை நமது மஸ்ஜிதுகளில் ஊடுருவ விடாமல் எச்சரிக்கையாக இருப்பது நமது கடமையாகும். வியத்தை முக்கியஸ்தர்களாகிய தங்கள் சமூகத்தில் திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தெரிவித்துக் கொள்கிறது. வஸ்ஸலாம்.
ஆசிரியர் விளக்கம் !
(முஹம்மது(ஸல்) அவர்களை அல்லாஹ் நபியாக பிரகடனப்படுத்தியபோது மக்காவில் ஒரு அறிஞர்கள் சபையிருந்தது. அதில் அரபி எழுத படிக்கத் தெரிந்தவர்களே அங்கத்தினராக முடியும். மற்றவர்கள் அச்சபையில் கால் வைக்கக்கூட முடியாது. அன்று அச்சபையினர் வைத்ததுதான் சட்டம் மதம், உலகியல் வியங்களில் அவர்களது தீர்ப்பே முடிவானது. அவர்கள் முஹம்மது(ஸல்) நபியாக வந்ததை ஏற்கவில்லை. நபி(ஸல்) அவர்களுக்கு முதல் எதிரியாக எழுந்ததே இச்சபைதான். இதற்கு “”தாருந் நத்வா” என்று பெயர். இதனைப் பற்றி தெளிவான ஒரு ஆய்வுக் கட்டுரையை நாம் முன்பே “”முஸ்லிம் சமுதாய சிந்தனைக்கு” என்ற நூலில் (இணைத்துள்ளோம். மேல் விளக்கத்திற்கு அதனைப் பார்வையிடுக!)
ஜமாஅத்துல் உலமா சபையை தாருந் நத்வா என்று நாம் வர்ணிப்பதையும், அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் இடையில் தரகர்களாக இருந்து கொண்டு அரபி மொழி கொண்டு பெருமை பேசும் மவ்லவிகளை நாம் கடுமையாக சாடுவதையும் சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த மவ்லவிகளுக்காக மவ்லவி அல்லாத சிலரும் பரிந்து பேசி வருகிறார்கள். அவர்களுக்காக நாம் அனுதாபப் படுகிறோம். மவ்லவி வர்க்கத்தின் வித்தன்மையைப் புரிந்து கொள்ளாமல் அவ்வாறு பரிந்து பேசுகிறார்கள் என்றே சொல்லுவோம். மவ்லவி வர்க்கத்தை இப்படிப்பட்டவர்களுக்கும் அடையாளம் காட்ட திருச்சி, ஜ. உ சபையாரின் மேற்படி கூற்றறிக்கை நமக்கு பெரிதும் உதவுகின்றது. இவர்களும் தாருந் நத்வாவினர்தான் என்பதற்கு அவர்களின் சுற்றறிக்கையிலேயே பல சான்றுகள் இருக்கின்றன.\
ஹுதைபியா உடன்படிக்கை சமயம் அந்த உடன்படிக்கையில் “”பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” என்று எழுதப்பட்டதை தாருந் நத்வாவின் பிரதிநிதியாக வந்திருந்த சுகைல் என்பவர் ஆட்சேபித்தார். “”பிஸ்மிகல்லாஹும்ம” என்று எழுதுமாறு வற்புறத்தினார். அதே போல், நம் ஜ.உ. சபையினர் “”பிஸ்மிஹீ தஆலா” என்ற எழுதியுள்ளனர். இதுகாலம் வரை தாருந் நத்தாவினரும் வெட்கப்படும் அளவில் 786 என்று எழுதி வந்தவர்கள் இப்போது தாருந் நத்வா வினரைப் பின்பற்றி “”பிஸ்மிஹீ தஆலா” என்று எழுத முற்பட்டுள்ளனர். “”பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” என்று அல்லாஹ்வும் (அல்குர்ஆன் 27:30) நபி(ஸல்) அவர்களும் கற்றுத் தந்ததுபோல் முழுமையாக எழுத அவர்களுக்குள்ள தயக்கம் என்னவோ நாம் அறிவோம். ஆக, கடிதத்தின் ஆரம்பத்திலேயே நாங்கள் தாருந் நத்வாவினர்தான் என்பதைப் பறை சாற்றியுள்ளனர். இது முதல் ஆதாரம்.
நாங்கள் குர்ஆனையும், ஹதீஸையும் மட்டுமே சொல்லுவதாக அவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் எங்களை அவர்களை குழப்பவாதிகள் என்று சொன்னால் அதன்பொருள் என்ன? குர்ஆனையும் ஹதீஸையும் மட்டும் சொல்லுவது குழப்பம் விளைவிப்பதாகும் என்றால் குர்ஆனும், ஹதீஸும் குழப்பத்தை விளைவிக்கக் கூடியவை என்பது தானே அதன் பொருளாகும். இந்தக் குர்ஆனை கேட்காமல் காதைப் பொத்திக் கொள்ளும்படிதானே அன்றைய தாருந் நத்வாவினர் பொது மக்களைத் தூண்டினர். இன்று குர்ஆன் பொதுமக்களிடம் போய் சேராமல் தடுக்கும் இந்த ஜ.உ.ச வினரும் தாருந் நத்வாவினர் தான் என்பதில் ஐயம் இருக்க முடியுமா? ஜ.உ.ச.வினரும் தாருந் நத்வாவினர்தான் என்பதற்கு இது இரண்டாவது ஆதாரம்.
“சுவர்க்கவாதியான ஒரு பிரிவு சுன்னத்வல் ஜமாஅத் என்பது தெளிவான ஒன்று” என்று எழுதியுள்ளனர். இதனை அல்லாஹ் சொல்லியிருக்கிறானா? அல்லது அவனது தூதர் சொல்லியிருக்கின்றார்களா? அல்லாஹ்வும் அவனது தூதரும் சொல்லாத ஒன்றை மார்க்கமாகச் சொல்லுவதன் மூலம் அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுகின்றனர். அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக் கூடிய இணையாளர்கள் அவர்களுக்கு இருக்கின்றனரா? (42:21) என்று அல்லாஹ் கூறுவதை அறியாது செயல்படுகிறவர்கள் ஆலிம்களாக இருக்க முடியுமா? தங்களை ஆலிம்கள் என்று சொல்லிக் கொண்டு அல்லாஹ்வுக்கு இணை வைத்ததாருந் நத்வாவின ரையே பின்பற்றுகின்றனர் என்பதில் சந்தேகமுண்டோ? இது ஜ. உ. சபையினரும் தாருந் நத்வாவினரே என்பதற்கு மூன்றாவது ஆதாரமாகும்.
அல்லாஹ்வுக்கு இணைவைத்துக் கொண்டு “”யூதர்கள் கிறிஸ்தவர்களைத் த வேறு யாரும் சுவனபதியில் நுழையவே மாட்டார்கள்” என்று வேதத்தை உடையவர்கள் கூறியதற்கும் “”அஹ்ல சுன்னத்வல் ஜமாஅத்தினர் தவிர வேறு யாரும் சுவனபதியில் நுழையவே மாட்டார்கள்” என்று இந்த ஜ.உ.ச.வினர் கூறுவதற்கும் வித்தியாசம் இருக்கிறதா? அதுவும் வேதத்தை உடையவர்கள் தங்கள் மத அறிஞர்களைத் தக்லீது செய்தது போல் இவர்களும் தங்கள் இமாம்களை தக்லீது செய்யும் நிலையில் இவ்வாறு கூறுகிறார்கள். இது அல்லாஹ் சொல்லுவது போல் வீணாசையேயாகும். “” நீங்கள் உண்மையுடையோராக இருந்தால் இதற்கு சான்று கூறுங்கள்” என்று அல்லாஹ் வேதத்தை உடையவர்களிடம் கேட்ட கேள்வியையே இந்த ஜ.உ. சபையினரிடமும் கேட்கிறோம் (பார்க்க 2:111, 112) பதில் தருவார்களா?
நபித்தோழர்களையும் இமாம்களையும் நாங்கள் இழிவுபடுத்தவில்லை. “”மற்றவர்களை உங்கள் பாதுகாவலர்களாக (ஆக்கி) அவர்களைப் பின்பற்ற வேண்டாம்” (7:3) என்ற அல்லாஹ்வின் கட்டளைப்படியும் “”எங்களைத் தக்லீது செய்யாதீர்கள்; குர்ஆன், ஹதீஸையே பின்பற்றுங்கள்” என்ற இமாம்களின் தெளிவான அறிவுரையின்படியும், நேரடியாக குர்ஆன், ஹதீஸை விளங்கிச் செயல்படும்படி மக்களுக்குக் கூறி வருகிறோம். இந்த நிலையில் கலப்பட மற்ற பொய்களைக் கூறி மக்களை குர்ஆன் ஹதீஸிலிருந்து திசை திருப்பிக் கொண்டு நாங்கள் திசை திருப்ப முயல்வதாகக் கூறும் ஜ. உ.சபையினர் தாருந் நத்வாவினரைப் பின்பற்றியே பொய்களைப் பரப்புகின்றனர் என்பதில் சந்தேகமுண்டோ? இது நான்காவது ஆதாரம்.
இந்த மவ்லவிகளை வெளியாக்கும் மதரஸாக்களில் போதிக்கப்படும் “”தர்யஸ நிஜாமி” கல்வித் திட்டம் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலானது அல்ல. தக்லீதையும், தஸவ்வுஃபையும் நுழைத்து முகல் லிதுகளால் உருவாக்கப்பட்ட கல்வித் திட்டம் இதற்கு இவர்கள் ஐந்தாவது இமாமாகப் போற்றும் கஸ்ஸாலியின் நூல்களிலேயே போதிய சான்றுகளைத் தந்து குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் விளக்கி இருந்தோம்.
இவர்கள் உண்மையிலேயே ஆலிம்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? இமாம் கஸ்ஸாலியின் நூல்களிலிருந்து இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் பலவீனமான ஹதீஸ்கள் என்று நாம் குறிப்பிட்டிருந்த வற்றின் “மதன்” “ஸனத்” இவற்றை உரிய ஆதாரங்களுடன் எடுத்து எழுதி அவை அனைத்தும் ஸஹீஹான ஹதீஸ்கள் தான் என்று நிரூபித்துக் காட்டியிருக்க வேண்டும். அதைச் செய்வதற்குரிய தகுதி இல்லாத இவர்கள் தங்களை எப்படி அரபி கற்ற பண்டிதர்கள் என்று தம்பட்டம் அடிக்கிறார்கள்? அது மட்டுமா? நாங்கள் தாருந் நத்வாவினரேதான் என்று சந்தேகத்திற்கிடமின்றி வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளனர்.
இப்றாஹீம், இஸ்மாயீல் (அலை) ஆகிய இருநபிமார்களும் போதித்த இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றியே கஃபாவில் சிலை வணக்கத்தையும், கபுரு வணக்கத்தையும் செய்வதாக நம்பிச் செயல்படக் கொண்டிருந்த குறை´களுக்கு மத்தியில், நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ் இறக்கிய குர்ஆனின் ஆதாரத்தைக் கொண்டு சிலை வணக்கம், கபுரு வணக்கம் கூடாது என்று போதித்த சமயம் தாருந் நத்வாவினர் என்ன செய்தார்கள் தெரியுமா? அல்லாஹ்வின் கட்டளையை அவனது நபி சொல்லுகிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், தங்களது மூதாதையர்கள் காலங்காலமாக செய்து வந்த சிலை, கபுரு வணக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தனர் பல ஆயிரம் ஆண்டுகளாக நடந்து வருவதாக நியாயப்படுத்தினர்.
” இவர் எல்லா தெய்வங்களையும் ஒரே நாயனாக ஆக்கி விட்டாரா? நிச்சயமாக இது ஒரு ஆச்சரியமான விசயமே”. (38:5)
அல்குர்ஆனில் மிகவும் கடுமையாக சபிக்கப்பட்டவன் அபூலஹப் அவன் இப்றாஹீம், இஸ்மாயீல் (அலை) அகிய இரு நபிமார்களின் நேரடி சந்ததி. இறுதி நபி(ஸல்) அவர்களின் தகப்பனார் கூடப்பிறந்த சகோதரன், நபி(ஸல்) அவர்களின் இரண்டு பெண் மக்களுக்கு தன் இரு ஆண் மக்களைக் கொடுத்த சம்பந்தி இந்தத் தனிச் சிறப்புகளையயல்லாம் பொருட்படுத்தாமல் அல்லாஹ் அவனை மிகக் கடுமையாகச் சபிக்கிறான். இதற்குக் காரணம் என்ன? அல்லாஹ்வின் நேரடிக் கட்டளையைப் பொருட்படுத்தாமல் தனது முன்னோர்கள் நில ஆயிரம் ஆண்டுகளாக கடைபிடித்து வந்த அனாச்சாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததேயாகும்.
அப்படியானால் அல்லாஹ்வின் கட்டளைகளையும், நபி(ஸல்) அவர்களின் நடைமுறைகளையும் மிகத் தெளிவாக நாம் எடுத்து வைத்து நிரூபித்திருக்க, அவை குர்ஆன், ஹதீஸுக்கு முரணானவை என்று தக்க ஆதாரங்களுடன் நிரூபிக்காத நிலையில், சில நூற்றாண்டுகளாக நடந்து வருவதை மட்டும் ஆதாரமாகக்காட்டி தங்கள் “”தர்யஸ நிஜாமி” கல்வித்திட்டத்தை நியாயப்படுத்த முற்பட்டுள்ளனரே! இவர்களின் நிலை என்ன?
சில நூற்றாண்டு காலமாக நடந்து வருவதை பெரிய ஆதாரமாகக் காட்டுகின்றனரே! அப்படியானால் சில ஆயிரம் ஆண்டுகளாக நடந்து வந்ததை அபூலஹப் ஆதாரமாகக் காட்டியதைப் பற்றி என்ன சொல்லப் போகிறார்கள். இந்த ஜ.உ. சபையினர் அபூலஹபை நல்லவனாக ஆக்கி விட்டனர் என்று சொன்னால் அதில் தவறு இருக்க முடியமா? அல்லாஹ்வின் கோபப்பார்வை இவர்கள் மீது ஏற்படாமல் போகுமா? அன்றைய தாருந் நத்வாவை அப்படியே இந்த ஜ.உ. சபையினர் பிரதிபலிக்கின்றனர் என்பதற்கு இதற்கு மேலும் ஆதாரம் தேவையா? இது ஐந்தாவது ஆதாரமாகும்.
நபி(ஸல்) அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாத நபித்தோழர்களுக்கு அன்று கொடுத்த அதே பயிற்சி முறையை இன்றும் நடைமுறைப் படுத்தி முஸ்லிம்களை குர்ஆன், ஹதீஸை தரகர்கள் இல்லாமல் நேரடியாக விளங்கிச் செயல்பட பயிற்சி அளித்து, இப்போது தமிழ்பேசும் மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் இந்த பயிற்சி முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. அப்படித் தயாராகியுள்ள சகோதரர்களுக்கு முன்னால் இந்த மவ்லவிகள் அரபி மொழி பற்றி பெருமை பேசாமல் மார்க்கம் பற்றிய – குர்ஆன், ஹதீஸ் பற்றி விவாதம் செய்யத் தயாரா? அப்படி விவாதம் நடத்தி பார்த்தால் நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த பயிற்சி முறைக்கு முன்னால் இவர்கள் மதரஸாவில் கடைபிடிக்கும் “”தர்யஸ நிஜாமி” கல்வித் திட்டம் கால் தூசு பெறாது என்பதை இந்த மவல்விகளும் உணர்ந்து கொள்ள முடியும் ஜ.உ.ச விவாதிக்கத் தயாரா?
மீண்டும் உறுதியாகச் சொல்லுகிறோம். இன்றைய ஜ.உ. சபையினர் அன்றைய தாருந் நத்வாவின் மறு அவதாரமே. அதனால் தான் அன்றைய தாருந் நத்வாவினர் தங்கள் அரபி மொழித் திறமையை வைத்து எழுதப் படிக்கத்தெரியாத நபி(ஸல்) அவர்களையும், நபித்தோழர்களையும் இழிவாக மதித்து அகந்தை பேசியது போல், இன்றைய ஜ.உ. சபையினரும் அரபி மொழியைக் கொண்டு ஆணவம் பேசி குர்ஆன், ஹதீஸை நேரடியாக அறிந்து செயல்படும் மவ்லவி அல்லாத நம் போன்றவர்களைப் பற்றி இழிவாகப் பேசி வருகின்றனர். அன்றைய தாருந் நத்வாவினர் குர்ஆனை விளங்கவிடாமல் மக்களைத் தடுத்தது போல், இன்றைய ஜ.உ. சபையினரும் அந்நஜாத் குர்ஆன், ஹதீஸை மட்டுமே சொல்லுகிறது எனப்தை அவர்களே ஒப்புக்கொண்ட நிலையில் அதனைப் படிக்கவிடாமல் மக்களைத் தடுத்து வருகின்றனர்.
அன்றைய தாருந் நத்வாவினர் குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் நடைமுறைகளையும் அறிவது குழப்பம் விளைவிப்பதாகும் என்று சொன்னதுபோல் இன்றைய ஜ.உ. சபையினர் குர்ஆன். ஹதீஸை விளங்குவது குழப்பம் விளைவிப்பதாகும் என்று பறை சாற்றி வருகின்றனர். அன்றைய தாருந் நத்வாவினர் தங்கள் சொந்த கற்பனைக் கட்டுக்கதைகளை மார்க்கமாக போதித்தது போல் இன்றைய ஜ.உ. சபையினரும் தங்கள் சொந்த கற்பனை கட்டுக்கதைகளை மார்க்கமாக மக்களுக்குப் போதித்து வருகின்றனர். அன்று தாருந் நத்வாவினர் அல்லாஹ்வுக்கும், அடியானுக்கும் இடையில் தரகர்களாக இருந்து வயிறு வளர்த்தது போல் இன்றைய ஜ.உ சபையினர் அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் இடையில் தரகர்களாக இருந்து வயிறு வளர்த்து வருகின்றனர். பொதுமக்களே இன்னுமா இந்த ஜ.உ. சபையினரை நம்பி உங்கள் சத்திய மார்க்கத்தைப் பாழாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்? விழிப்படையுங்கள்; தெளிவு பெறுங்கள். கலப்படமற்ற சத்திய மார்க்கத்தை அறிந்து கொள்ள முன்வாருங்கள்.
இந்த சமுதாயத்தை ஹனபி, ஷாபி, மாலிக்கி, ஹன்பலி என்று நான்கு பிரிவினராக்கி முஸ்லிம்களுக் கிடையே வேற்றுமைகளை உண்டாக்கி வைத்திருப்பது இந்த ஜ.உ. சபையினர் தான். ஆனால் பிரிவுகள் இல்லாமல் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஒற்றுமையாகச் செயல்படத் தூண்டும் எங்களைப் பார்த்து குழப்பவாதிகள், பிரிவினை வாதிகள் வேற்றுமைகளை ஏற்படுத்துகிறவர்கள் என்றும் துணிந்து பொய் கூறி பொது மக்களை எங்களுக்கெதிராகத் தூண்டி வருகின்றனர். அன்றைய தாருந் நத்வாவினரின் செயலை தப்பாமல் அப்படியே செய்து வருகின்றனர் இந்த ஜ.உ சபையினரின் தூண்டுதல் காரணமாகவும், மேற்படி சுற்றறிக்கையின் காரணமாகவும் பல இடங்களின் சர்ச்சையும், சச்சரவுகளும் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு முழுப் பொறுப்பு ஜ.உ. சபையினர் தான் என்பதை இப்போதைக்கு எச்சரித்து வைக்கிறோம்.