அறிந்து கொள்வோம்!
மர்யம்பீ, குண்டூர்,
- தான் எந்த தினத்தில் பிறந்ததாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
திங்கட்கிழமை. அபூகத்தாதா அல்அன்சாரி (ரழி), முஸ்லிம் : 2153 - யாரை மறுமை நாளில் குருடனாக எழுப்புவேன் என அல்லாஹ் கூறுகிறான்?
அல்லாஹ்வுடைய உபதேசத்தை புறக்கணிப்பவன். அல்குர்ஆன் : 20:124 - எந்த நோயானாலும் நிவாரணம் இருக்கும் பொருள் எது? என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
கருஞ்சீரகம், மரணத்தை தவிர எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உண்டு. அபூஹுஹைரா (ரழி), முஸ்லிம்: 4452 - உறங்கச் செல்லும் முன் எதனை அணைக்காமல் விட்டுவிடவேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
வீட்டிலுள்ள நெருப்பை. அப்துல்லாஹ் பின் உமர்(ரழி) முஸ்லிம் : 4103. - ஒவ்வொரு ஆண்டின் ஓர் இரவில் என்ன நடக்கிறது என நபி(ஸல்) அவர்கள் கூறி னார்கள்?
கொள்ளைநோய் இறங்குவதாக. ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரழி), முஸ்லிம்: 4102 - நபி(ஸல்) அவர்கள் பிராத்திக்கும் போது கைகளை உயர்த்தும் பிரார்த்தனை எது?
மழை வேண்டி பிரார்த்திக்கும் போது மட்டுமே கைகளை உயர்த்துவார்கள். அனஸ் (ரழி) அபூதாவூத். 989 - பெண் குழந்தைகளால் இம்மையில் யார் சோதிக்கப்படுகிறார்களோ மறுமையில் அவரது நிலமை என்னவாக இருக்கும்?
அக்குழந்தைகள் நரகத்திலிருந்து அவரை காக்கும் திரையாக இருப்பார்கள். ஆயிஷா (ரழி), புகாரி: 1418 - ஈமான் கொண்ட பெண்யாருடைய மரணத்திற்கு மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் பிடிக்கக்கூடாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
கணவரைத் தவிர வேறு யாருடைய மரணத்திற்கும். (உம்முஹபீபா(ரழி),புகாரி: 1281) - இஸ்லாமிய மார்க்கத்தில் எது இல்லை என அல்லாஹ் கூறுகிறான்?
எவ்வித நிர்பந்தமும் இல்லை. குர்ஆன் : 2:256 - எது ஹலால் இல்லை என நபி(ஸல்) அவர் கள் கூறினார்கள்?
கொள்ளையடிக்கப்பட்ட பொருளும், கீறி கிழிக்கும் (கோரைப்) பற்களையுடைய வன விலங்குகளும். நஸயீ : 4252 - ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் நபியாக அனுப்பப்பட்ட நபி யார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
நான் மட்டுமே என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நஸயீ : 429 - பேரீத்தம் பழ சிறுதுண்டை ஸதகா(தர்மம்) செய்து எதிலிருந்து தங்களை காத்துக் கொள்ளும்படி நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
நரகிலிருந்து. புகாரி: 1417 - குர்பானிப் பிராணிகளில் எவை அறுப்பதற்கு தகுதியற்றவை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
வெளிப்படையாக தெரியக்கூடிய ஒற்றைக் கண் குருடு, நொண்டி, நோய் உள்ளவை எலும்பு வலுவிழந்தவை. பராஉபின்ஆஸிப் (ரழி), நஸாயீ : 4295\ - குர்பானிப் பிராணியிடம் எந்த இடத்தில் சிறப்பு கவனம் செலுத்த நபி(ஸல்) அவர் கள் கூறினார்கள்?
கண், காது. அலி(ரழி), நஸயீ: 4296 - செயல்களில் எது சிறந்தது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
அல்லாஹ்வையும் அனது தூதரையும் நம்புவது. அபூ ஹுரைரா(ரழி), புகாரி: 1519 - நபி(ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்ததில் மிகப் பெரிய பொய் என எதனை கூறினார்கள்?
சந்தேகப்படுவதை. அபூஹுரைரா (ரழி), புகாரி : 6064 - எதனை பின் தொடரவேண்டாம் என அல்லாஹ் கூறுகிறான்?
எதனைப் பற்றி உமக்கு அறிவு இல்லையோ அதனை பின்தொடரவேண்டாம். அல்குர்ஆன் : 17:36 - குளிப்பு கடமையான ஒருவர் எந்த தண்ணீரில் குளிக்கக்கூடாது என கூறினார்கள்?
தேங்கி நிற்கும் தண்ணீரில். நஸயீ : 220 - பரிந்துரை செய்யக்கூடிய வாய்ப்பு எந்தத் தூதருக்கு அல்லாஹ் வழங்கியுள்ளான்?
எனக்கு மட்டும்தான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நஸயீ : 429