அறிந்து கொள்வோம்!
மர்யம்பீ, குண்டூர்,
- சுலைமான்(அலை) அவர்களின் படைகளில் கலந்துகொண்டவர்கள் யார் யார் என அல்லாஹ் கூறுகிறான்?
ஜின்கள், மனிதர்கள், பறவைகள். (27:17) - நபி(ஸல்) அவர்கள் மீது ஒட்டகத்து சாணம் நிரம்பிய குடலை போட்டவன் யார்?
உக்பா இப்னு அபீ அபூ முஐத், புகாரி : 3185 - தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என விரும்புகிறவனின் நிலை என்ன?
தனது தங்குமிடத்தை நரகில் ஏற்படுத்திக் கொள்கிறான். அபூதாவூத் : 4552 - யார் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தவர்களின் தங்கும் இடங்கள் எதுவாக இருக்கும்;
ஃபிர்தவ்ஸ் என்னும் சொர்க்கம். குர்ஆன் : 18:107 - நபி(ஸல்) அவர்கள் நல்ல தண்ணீரை குடிப்பதற்கு எங்கு செல்வார்கள்?
பைரூஹா என்ற தோட்டத்திற்கு செல்வார்கள். புகாரி : 1461 - ஈமான் கொண்டு நல்லறங்கள் செய்பவர்களுக்கு என்ன கிடைக்கும்?
முடிவேயில்லாத கூலி உண்டு. (84:25) - யாருக்கு கட்டுப்படாதீர் என அல்லாஹ் கூறுகிறான்?
பாவிக்கும், நன்றி கெட்டவனுக்கும். 76:24 - வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் யாருக்குச் சொந்தம் என அல்லாஹ் கூறுகிறான்?
தனக்கே சொந்தம் என அல்லாஹ் கூறுகிறான். குர்ஆன்: 14:2 - வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ள வையும் என்ன செய்து கொண்டுள்ளன என அல்லாஹ் கூறுகிறான்?
ஸுஜுது (சிரம் பணிகின்றன) செய்கின்றன. குர்ஆன் : 13:15 - மறுமை நாளில் பயன் தராதவர்கள் யார் யார் என அல்லாஹ் கூறுகிறான்?
உறவினர்களும், பிள்ளைகளும். குர்ஆன்:60:3 - யாரை சொர்க்கத்தில் நடமாடுபவரை தாம் பார்த்ததாக கூறினார்கள்?
மக்கள் நடமாடும் வழியில் இருந்த மரம் ஒன்றை வெட்டியவரை. அபூ ஹுரைரா(ரழி) முஸ்லிம்: 5107 - உண்மையான வீரன் என்பவன் எப்படி இருப்பான்?
கோபத்தில் தன்னை கட்டுப்படுத்திக் கொள்வான். அபூஹுரைரா(ரழி), முஸ்லிம்:5085 - உங்களை எந்த வகையில் அல்லாஹ் சோதிப்பதாக கூறுகிறான்?
உங்களில் சிலருக்கு உயர்ந்த படித்தரங்களை வழங்கி சோதிக்கிறான். குர்ஆன் : 6:165 - நபி(ஸல்) அவர்கள் கஅபாவில் நுழைந்து என்ன செய்தார்கள்?
எல்லா ஓரங்களில் நின்று பிரார்த்தனை செய்தார்கள். இப்னு அப்பாஸ்(ரழி), புகாரி : 398 - எந்தவிதத்தில் தன்னிடம் உதவி தேடிக் கொள்ளுங்கள் என அல்லாஹ் கூறுகிறான்?
பொறுமையைக்கொண்டும் தொழுகையை கொண்டும். குர்ஆன் : 2:45 - குளிப்பு கடமையான நிலையில் தூங்கு வதற்கு நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு அனு மதித்தார்கள்?
உளூச் செய்துவிட்டு தூங்கலாம் என கூறினார்கள். இப்னு உமர்(ரழி),புகாரி:288 - யாருடைய உள்ளத்தில் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
அலட்சியமாக மூன்று ஜும்ஆக்களை தொழாமல் விட்டுவிட்டவர்கள். திர்மிதி:460 - இறந்துவிட்டவருக்கு யாருடைய பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இணை வைக்காத நாற்பது நபர்கள் ஜனாஸா தொழுகையின்போது செய்யும் பரிந்துரையை. இப்னு அப்பாஸ்(ரழி), முஸ்லிம்: 1730 - யாரை நேர்வழியில் சேர்ப்பதாக அல்லாஹ் கூறுகிறான்?
தான் நாடியவர்களை. குர்ஆன்: 22:16 - யாருக்கு அல்லாஹ் வழிகாட்டமாட்டான் மற்றும் துன்புறுத்தும் வேதனை உண்டு என அல்லாஹ் கூறுகிறான்?
தன்னுடைய வசனங்களை நம்பாதோருக்கு. அல்குர்ஆன்: 16:37