அறிந்து கொள்வோம்!
மர்யம்பீ, குண்டூர்,
- ஸபவு வாசிகளுக்கு அல்லாஹ் அனுப்பிய பெருவெள்ளத்தின் பெயர் என்ன?
அல்அரீம். அல்குர்ஆன்: 34:16 - எவர்கள் வேதனையில் முன் நிறுத்தப்படுவார்கள் என அல்லாஹ் கூறுகிறான்?
அல்லாஹ்வின் வசனங்களை தோற்கடிக்க முயற்சிப்பவர்கள். அல்குர்ஆன் : 34:38 - அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டான் என்று யாரை கூறுகிறான்?
நிராகரிப்பர்களாகவே மரணிப்பவரை. அல்குர்ஆன் : 47:34 - அற்ப அளவும் அநீதி செய்யப்படமாட்டார்கள் என யாரை அல்லாஹ் கூறுகிறான்?
எவர்கள் உண்மையிலேயே நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை. அல்குர்ஆன் : 4:12 - அல்லாஹ்விடத்தில் நிராகரிக்கப்பட்ட செயல் எது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
நம்முடைய மார்க்கத்தில் இல்லாத செயல். முஸ்லிம் : 3541 - நோன்பு துறப்பதை விரைந்து செய்வதினால் என்ன பலன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
நன்மையில் ஈடுபட்ட பலன். புகாரி : 1957 - அல்லாஹ்வை நேசிப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என அல்லாஹ் கூறுகிறான்?
நபி(ஸல்) அவர்களை பின்பற்ற வேண்டும். அல்குர்ஆன் : 3:31 - நம்மைச் சார்ந்தவனில்லை என யாரை எல்லாம் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
துக்கத்தில் கன்னங்களில் அறைந்து கொள்பவர், சட்டைப் பைகளை கிழித்துக் கொள்பவன், அறியாமை கால அழைப்பை விடுபவன். புகாரி: 3519 - சுவர்க்கத்தில் அதிகமானோர் யார் இருப்பார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
ஏழைகள். புகாரி : 3241 - நாயும், உயிரினங்களின் உருவப்படங்கள் உள்ள வீட்டினுள் யார் நுழைய மாட்டார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
வானவர்கள். புகாரி: 3225 - தாம் இறைவனிடத்தில் இருக்கும் நிலைகளில் மிக நெருக்கமானது எது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
ஸஜ்தாவிலிருக்கும்போதேயாகும். முஸ்லிம் : 832 - குறை கூறி புறம் பேசித் திரிபவர்களுக்கு ஏற்படும் நிலை எது என அல்லாஹ் கூறுகிறான்?
குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். குர்ஆன்:104:1 - சூனியக்காரர்கள் எப்போது ஒன்று சேர்க்கப்பட்டார்கள் என அல்லாஹ் கூறுகிறான்?
குறிப்பிட்ட நாள், குறித்த நேரத்தில். அல்குர்ஆன்: 26:38 - லூத்(அலை) அவர்கள் தனது சமூகத்தாரிடம் எது மாதிரியான விஷயத்தை கூறினார்கள் என அல்லாஹ் கூறுகிறான்?
அகிலத்தாரில் உங்களுக்கு முன்னர் எவரும் செய்திராத மானக்கேடானதை நீங்கள் செய்கிறீர்கள். அல்குர்ஆன்: 29:28 - கீழ்வானத்தை எதை கொண்டு அல்லாஹ் அலங்கரித்துள்ளான்?
நட்சத்திரங்களை கொண்டு. குர்ஆன்:37:6 - வலிமையும், அறிவும் மிக்க எமது அடியார்கள் யார் யார் என அல்லாஹ் கூறுகிறான்?
இப்றாஹீம்(அலை) இஸ்ஹாக்(அலை) யாஃகூப்(அலை). அல்குர்ஆன்: 38:45 - யாரை கடிந்து கொள்ள வேண்டாம் என நபி(ஸல்) அவர்களிடம் அல்லாஹ் கூறினான்?
அநாதையை. அல்குர்ஆன் : 93:9 - ஒவ்வொரு ஆன்மாவும் எதை எப்போது அறிந்து கொள்ளும் என அல்லாஹ் கூறுகிறான்
முற்படுத்தியதையும், பிற்படுத்தியதையும். கப்ருகள் திறக்கப்படும்போது அறிந்து கொள்ளும். அல்குர்ஆன் : 82:5 - மனிதனை எப்பொருளிலிருந்து அல்லாஹ் படைத்தான்?
இந்திரியத் துளியில் இருந்து. 80:18,19 - நபி(ஸல்) அவர்களை எதை கொண்டு கற்பித்தேன் என அல்லாஹ் கூறுகிறான்?
எழுதுகோல் கொண்டு. குர்ஆன் : 96:4