அறிந்து கொள்வோம்!
மர்யம்பீ, குண்டூர்,
- எதனை முன்னிலைப்படுத்தி என்னிடம் உதவி தேடுங்கள் என அல்லாஹ் கூறுகிறான்?
பொறுமையை கொண்டு. அத். 2:45 - பிர்அவ்னின் கூட்டத்தாரை எப்படி அழித் ததாக அல்லாஹ் கூறுகிறான்?
கடலை பிளந்து மூழ்கடித்ததாக கூறுகிறான். குர்ஆன் : 2:50 - இறுதி நாளையும், நம்பிக்கை கொண்டு நல்லறம் புரிபவரின் கூலி யாரிடம் இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்?
தன்னிடம் இருப்பதாக கூறுகிறான். குர்ஆன் : 2:62 - ஷைத்தான் விரும்புவது எது என அல்லாஹ் கூறுகிறான்?
மது, சூதாட்டம் மற்றும் தொழுகையை தடுப்பது. அத். 5:91 - மூஸா(அலை) அவர்களுக்கு துணையாக எந்த நபியை வழங்கியதாக அல்லாஹ் கூறுகிறான்?
ஹாரூன்(அலை) குர்ஆன்: 19:53 - யூஸுப்(நபி) தனது தந்தையிடம் எதனை கனவில் கண்டதாக கூறினார்கள்?
பதினோரு நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும். குர்ஆன்:12:4 - பரிந்துரைகள் அனைத்தும் யாருக்கு உரியன?
அல்லாஹ்வுக்கே. குர்ஆன்: 39:44 - யாருக்கு இரு மடங்கு வேதனை தரப்படும்?
மானக்கேடான ஒன்றைச் செய்யும் நபியின் மனைவியருக்கு. குர்ஆன் : 33:30 - யாரை நேர்வழியில் செலுத்துவதாக அல்லாஹ் கூறுகிறான்?
தான் நாடுவோரை. குர்ஆன்: 16:93 - எவர்களை நிச்சயமாக விசாரிப்பதாக அல்லாஹ் கூறுகிறான்?
தூதர்களாக அனுப்பப்பட்டவர்களை. குர்ஆன் : 7:6 - இம்மை மறுமையின் பயன் யாரிடத்தில் இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்?
தன்னிடத்தில். குர்ஆன் : 4:134 - பூமியிலுள்ள அனைத்து(ஜீவராசிகளின்) உயிரினங்களுக்கு உணவு அளிக்கும் பொறுப்பு யாரிடம் உள்ளது?
அல்லாஹ்விடம். குர்ஆன் : 11:6 - அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிப்பவர்களுக்கு எவ்விதமான கூலி தரப்படும்?
நரகம் என்ற நிலையான வீடு. குர்ஆன் : 41:28 - நபி(ஸல்) அவர்கள் எந்த அளவுக்கு திருடியதற்காகத் திருடியவனின் கையை துண்டித்தார்கள்?
¼ தீனர்(பொற்காசு) அல்லது அதற்கு மேல் திருடியதற்காக. ஆயிஷா(ரழி), முஸ்லிம்: 3478 - மனிதர்களிலேயே அல்லாஹ்விடம் மிகவும் கோபத்திற்கு உரியவன் யார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
உண்மையை மறைத்து பொய்மையை நிலைநாட்ட கடுமையாக சச்சரவு செய்பவன். ஆயிஷா(ரழி), முஸ்லிம்: 5183 - யார் பெயரால் சத்தியம் செய்வதை நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்?
தெய்வச் சிலைகள், தந்தையர் மற்றும் அல்லாஹ் அல்லாதவைகள் மீது. அப்துர் ரஹ்மான் பின் சமுரா(ரழி), முஸ்லிம் : 3385 - நேர்த்திக்கடன் செய்வதால் என்ன பலன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
எவ்வித நன்மையும் இல்லை. கஞ்சனின் செல்வம் வெளிக்கொணரப்படும். இப்னு உமர்(ரழி) முஸ்லிம்: 3370 - சூரிய கிரகணம் ஏற்பட்டபோது என்ன நிகழ்ந்ததாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
நரகம் காட்டப்பட்டதாக. புகாரி: 431 - தொழுகை நடபெறாத சவக்குழிகளாக ஆக்காதீர்கள் என நபி(ஸல்) அவர்கள் எதனை பற்றி கூறினார்கள்?
இல்லங்களை (வீடுகளை)ப் பற்றி. இப்னு உமர்(ரழி) முஸ்லிம் : 1426 - மனிதன் எப்போது தன்னை பிரார்த்திப்பதாக அல்லாஹ் கூறுகிறான்?
தீங்கு ஏற்படும்போது படுத்தவனாக, அமர்ந்தவனாக, நின்றவனாக பிரார்த்திக்கின்றான். அல்குர்ஆன்: 10:12