அறிந்து கொள்வோம்!
மர்யம்பீ, குண்டூர்.
- நரகத்தின் வேதனை எப்படி இருக்கும் என அல்னனளலாஹ் கூறுகிறான்?
நிச்சயமாக அது வாழ்வதற்கும், வசிப்பதற்கும் மிகக் கெட்ட இடமாகும், (25:66) - இறை நம்பிக்கையாளர்களுக்கு இவ்வுலகம் எப்படிப்பட்டது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
சிறைச்சாலை. (முஸ்லிம் : 5663) - அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பியவர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
அண்டை வீட்டாருக்கு தொல்லை தரக்கூடாது, விருந்தாளியை கண்ணியப்படுத்த வேண்டும், நல்லதை பேசவும் அல்லது வாய்மூடி இருக்கவேண்டும்.
(முஸ்லிம் : 75) - செல்வத்திலும், தோற்றத்திலும் ஒருவரை மேலானவரை கண்டால் அவர் என்ன செய்யவேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
தம்மைவிட கீழிருப்பவர்களை (நினைத்து) பார்க்கவேண்டும். (முஸ்லிம் : 5670) - எந்த குழந்தை நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியான் என பேசியது?
ஈஸா(அலை) அவர்கள். (அல்குர்ஆன் : 19:30) - இறப்பின் நெருக்கத்தில் இருப்பவர்களிடம் என்ன நினைவுபடுத்த வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
“லாஇலாஹா இல்லல்லாஹ்” (என்னும் கலிமாவை). (முஸ்லிம் : 1673) - பலஹீனமான சந்ததிகளின் நிலைமை என்னவாகும் என அஞ்சுபவர் என்ன செய்யவேண்டும் என அல்லாஹ் கூறுகிறான்?
முன் ஜாக்கிரதை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளவேண்டும். (குர்ஆன் : 4:9) - ஒரு முஸ்லிம். தம் (முஸ்லிம்) சகோதரர் விலை பேசும்போது எப்படி நடந்து கொள்ளவேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
தாமும் விலை பேசவேண்டாம். (முஸ்லிம் : 3038) - தொழுகை அறிவிப்பை செவியுறுபவர் என்ன செய்யவேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
ஹய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ் கூறும்போது லாஹவ்ல வலாகுல்வத்த இல்லா பில்லாஹ் என்று கூறவேண்டும். (முஸ்லிம் : 629) - சினை ஒட்டகம் குட்டி போட்டு அந்த குட்டி சினையாகி பெறப்போகும் குட்டிக்காக எது தடை செய்யப்பட்டது?
ஒட்டக இறைச்சியை விற்கவும் தடை செய்தார்கள். (முஸ்லிம் : 3035) - அரபியர் லபீத் அவர்கள் கூறிய, சொன்ன சொற்களில் சிறந்தது எது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
அல்லாஹ்வை தவிர அனைத்தும் அழியக் கூடியவையே என்பதுதான். (முஸ்லிம் : 4541) - நரகம் எப்படி சூழப்பட்டுள்ளது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்?
மனோ இச்சைகளால். (முஸ்லிம் : 5436) - பாம்பு புற்றில் (சென்று) அபயம் பெறுவது போன்று இறை நம்பிக்கை (ஈமான்) எங்கு அபயம் பெறும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
மதீனாவில். (புகாரி : 1876) - யாசகம் கேட்பதை விட எது சிறந்தது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
விறகு கட்டை சுமந்து விற்று வாழ்வது. (புகாரி : 1471) - யாருடைய உள்ளங்களில் நயவஞ்சகத்தை போட்டுவிட்டதாக அல்லாஹ் கூறுகிறான்?
அவனிடம் செய்த வாக்குறுதியை மீறியவர்களும், பொய் சொல்லிக் கொண்டே இருப்பவர்களும். (அல்குர்ஆன் : 9:77) - சொர்க்கம் யாருக்கு தருவதாக அல்லாஹ் வாக்களித்தான்?
நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும். (அல்குர்ஆன் : 9:72) - எவ்வித பேரமோ, நட்போ இல்லாத நாள் வருவதற்குள் என்ன செய்யவேண்டும் என அல்லாஹ் கூறுகிறான்?
தொழுகையை முறையாகத் தொழவேண்டும், அல்லாஹ் கொடுத்தவற்றிலிருந்து ரகசியமாக, பகிரங்கமாகவும் செலவு செய்யவேண்டும். (அல்குர்ஆன்:14:31) - பூமியிலுள்ளவற்றை அலங்காரமாக ஆக்கியது யாருக்காக என அல்லாஹ் கூறுகிறான்?
அழகிய செயலுடையவர் யார் என சோதிப்பதற்கு. (அல்குர்ஆன் : 18:7) - நபி(ஸல்) அவர்களிடம் நீர் எவ்வாறு இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்?
நேரான பாதையின் மீது இருப்பதாக. (அல்குர்ஆன் : 43:43)