தலையங்கம்!
விவசாயம்!
அவனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்திலிருந்து மழை பொழியச் செய்து. அதிலிருந்து உங்கள் உணவுக்காக கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான். (இதை) நீங்கள் தெரிந்துகொண்டே இருக்கும் நிலையில், அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள். (அல்குர்ஆன் : 2:22) மேலும் பார்க்க : (அல்குர்ஆன்: 80:24 To 32)
தான் படைத்த உயிரினங்கள் அனைத்தும், உயிர்வாழத் தேவையான உணவைப் பெறுவதற்கான அடிப்படையை, அகிலங்களைப் படைத்த ஒரே இறைவன் கொடுத்துவிட்டான். அவற்றிலிருந்து தேவையானதைப் பெற்றிட விவசாயத்தில் மனிதன் என்கிற விவசாயி முயற்சிக்கிறான்.
இறைத் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் கூறினார்கள். “ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து ஒரு பறவையோ, ஒரு மனிதனோ, அல்லது ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்” (அறி.அனஸ் இப்னு மாலிக்(ரழி), புகாரி, ஹதீத் எண். 2320)
இஸ்லாத்தின் பார்வையில் விவசாயிக்கு அது தர்மமாகி விடுவதைப் பாருங்கள். விவசாயியை இதுபோன்று வேறெங்கும் மதித்திருக்கிறார்களா?
நடைமுறையிலிருக்கும் விவசாய சட்டத்தின் மூலம் முதலுக்கேற்றி லாபம், உழைப்புற்கேற்ற ஊதியம் விவசாயிக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே திருத்தப்பட்ட மூன்று வேளாண் மசோதாவை பி.ஜே.பி. அரசு சட்டமாக்கி விட்டது. கொஞ்சம் நஞ்சம் உள்ளதும் போனது. இதன் மூலம் விவசாயிகள் ஒடுக்கப்படுவர்,அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். பெரும் நிறுவனங்கள், கார்பரேட்டுகள் மட்டுமே வளம் பெறுவார்கள் என்பதால், விவசாயிகள், புதிய சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டி போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
தலைநகர் டெல்லியின் புறநகர் பகுதி நெடுஞ்சாலைகளில் 26.11.2020 அன்று ஆரம்பித்த போராட்டம் இன்று 18 கி.மீ. தூரம் நடுங்கும் குறிரில் ஆயிரக்கணக்கில் பசு மாடுகள், விவசாய டிராக்டர்கள். உணவு தயாரிக்க 6 மாத காலத்திற்கான அத்தியாவசிய பொருட்களுடன் “சட்டத்தை திரும்பப் பெறும்வரை நாங்களும் திரும்பப் போவதில்லை” என்ற கோஷத்துடன் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் வெள்ளம் நிரம்பி வழிகிறது. சிறு அசம்பாவிதமும் இல்லை! அச்சம் என்பதை சிறிதும் அறியாதவர்களாக இருக்கும் இடத்திலேயே உண்டு, உறங்கி வருகின்றனர். உலகம் இதுவரை கண்டிராத ஜனக்கூட்டம்! உலகின் ஒட்டுமொத்த பார்வையையும் சீக்கிய விவசாயிகள் ஈர்த்துள்ளனர்.
35 விவசாயிகள் இதுவரை இறந்துள்ளனர். 65 வயது சீக்கிய மதகுரு, பாபா ராம்சிங் போராட்ட களத்துக்கு வந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதம் ஒன்றை தந்துள்ளார்.அதில, விவசாயிகளின் வலியை தாங்க முடியவில்லை. விவசாயிகளை துன்புறுத்துவதும் பாவம், அவர்களை ஒடுக்குவதும் பாவம், அரசாங்கம் அவர்களுக்கு நீதி வழங்கவில்லை. இது மிகக் கொடுமை என எழுதிக் கொடுத்து விட்டு, தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு உயிரிழந்து விட்டார்! காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் விவசாயிகளுக்கு ஆதரவாக தம் பதவியை ராஜினாமா செய்கிறார். மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்ற இந்த புதிய சட்டம் அப்படி என்னதான் சொல்கிறது என்பதை பார்ப்போம்.
திருத்தப்பட்ட அந்த மூன்று புதிய சட்டங்கள் யாவை? (1) அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம் 2020, (2) விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக சட்டம் 2020, (3) விவசாயிகளுடன் விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020.
நடைமுறையிலிருக்கும் அதாவது பழைய சட்டத்தின்படி, அரசு விவசாயிடமிருந்து விளை பொருளை வாங்கி, நியாயவிலை கடைகள் மூலம் மக்களுக்கு குறைந்த விலையில் விநியோகித்து வந்தது. மக்கள் பயன்பெற்றனர். அரசுக்கும் விவசாயிக்கும் இடையே வணிக உறவு பிரச்சினைகள் இல்லாமல் இருந்து வந்தது.
பி.ஜே.பி. அரசின் புதிய சட்டம் என்ன சொல்கிறது? அரசு விவசாயிடமிருந்து இனி நேரிடையாக கொள்முதல் செய்யாது. அரசுக்கு பதிலாக தனியார் பெரு நிறுவனங்கள் மற்றும் கார்பரேட்டுகள் மட்டுமே விவசாயிகளிடமிருந்து விளைச்சல் பொருளை நேரிடையாக கொள்முதல் செய்து மக்களுக்கு நேரிடையாக விற்பனையும் செய்வார்கள். இனி, வணிக உறவு விவசாயிக்கும் பெரும் முதலாளிகளுக்குமிடையே மட்டுமே இருக்கும். இந்த வணிகத்தில் அரசு தலையிடாது என்றும் புதிய சட்டம் கூறுகிறது. அதாவது வணிகத்தின் எல்லா நிலைகளிலும் அரசு அந்நியனாகவே இருக்கும். உழவர் சந்தைகள், நியாயவிலை விற்பனைக் கூடங்கள், மாநில அரசின் கீழுள்ள வேளாண்துறை இனி இருக்காது. அதனாலென்ன? அரசுக்கு பதிலாக வேறொருவர் இருக்கப் போகிறார். வணிகம் தொடர்ந்து நடக்கத்தானே போகிறது. இதற்கேன் போராட்டம் என்கிறீர்களா?
வணிகம் இனி எப்படி நடக்கும் என்பதைப் பாருங்கள். விவசாயி கார்பரேட் முதலாளியுடன் “ஒப்பந்த விவசாயம்” (CONTRACT FARMING) என்ற பெயரில் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளவேண்டுமமாம்” பிறகு என்ன? விவசாயிக்கு பாதுகாப்புத்தானே என்கிறீர்களா? அதுதானில்லை!
அந்த ஒப்பந்தத்திலுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் (TERMS & CONDITIONS) பார்த்தால், விவசாயி பாதிப்புக்குள்ளாகப் போவது தெரியும். என்னய்யா குண்டைத் தூக்கி போடுறீங்க? இருவருக்கும் இடையே எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் விவசாயியின் நிலம் பறிக்கப்படாது என்று புதிய சட்டம் அழகாக சொல்கிறதே என்கிறீர்களா?
இந்த நெனப்புத்தான் பொழைப்பை கெடுக்கப் போகுது? இது “சர்க்கரைத் தடவிய ” (SUGAR COAT) நிபந்தனை! இப்படி ஆசை காட்டி விவசாயியை உள்ளிழுக்கின்றனர். வில்லங்கமான மற்ற விதிமுறைகள், நிபந்தனைகளை சந்திக்கும் விவசாயி, தாக்குப்பிடிக்க முடியாமல், தாமாகவே ஓடிவிடுவான். தார்பரேட் முதலாளிகளுக்கு அப்போது குஷி! ஏனெனில், இப்போதுள்ள சிறந்த விவசாய முறைகளை முற்றிலுமாக அழித்து, தடை செய்யப்பட்டுள்ள ஆரோக்கியத்தைக் கெடுக்கும் மரபணு மாற்று விதைகளை தாராளமாக சாகுபடி செய்து காசைப் பார்ப்பார்கள்.
அதனால் என்னவென்று எப்போதும் போல் இப்போதும் கேட்கிறீர்களா? மண்வளம் அழிந்து மலட்டுத் தனம் ஏற்பட்ட பிறகு, சத்து நிறைந்த தானியங்களுக்கு பதிலாக, நச்சுத்தன்மை கொண்ட உயிர்கொல்லி நோய் தாக்குதலுக்கு ஆளாக்கும் தானியங்கள்தான் கிடைக்கும். இதை முன்கூட்டியே எச்சரிக்கை, செய்துத் தடுக்கும்படி கூறி இருக்கிறது. இஸ்லாம் என்பதை கவனியுங்கள்.
“வேளாண்மைக் கருவிகளை துஷ்பிரயோகம் செய்வதால் ஏற்படும் தீமைகளுக்கும், விதிக்கப்பட்டுள்ள வரம்பை மீறுவதால் (அதாவது ஆரோக்கியத்தைக் கெடுக்கும் மரபணு மாற்று விதைகளை சாகுபடி செய்வதால்) ஏற்படும் தீமைகளுக்கும் பயப்படுங்கள்” (அறி.அனஸ் இப்பு மாலிக்(ரழி), புகாரி ஹதீத் எண். 2320)
ஆந்திராவில் ஏற்பட்ட மர்ம சாவுக்கு இதுதான் காரணம் என ஆய்வறிக்கை கூறுவதை ஒப்பிட்டுப் பாருங்கள். கொத்து கொத்தாக 587 பேர் மயங்கி விழுந்தார்கள். வாந்தி, மயக்கம், வலிப்பு மற்றும் உடல் நலன் பாதிப்பு தென்பட்டது. பலியானவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரியில் (SAMPLE) ஈயம் அதிக அளவில் கலந்திருப்பது உறுதியானது. புகழ் பெற்ற மருத்துவ நிபுணர்கடுன் ஆந்திர முதல்வர் ஆவோசனை நடத்தி, ஈயத்தின் அளவு 10 மைக்ரோகிராம் தாண்டினால் நரம்புகள், சிறுநீரகம், மூளை பாதிக்கப்படும் மற்றும் செவிட்டுத்தன்மை, கைகால்களில் உணர்வின்மை ஏற்படும் அபாயம் உண்டு என்று கண்டறியப்பட்டது.
பழைய சட்டத்தின்படி சமையல் எண்ணெய், உருளைக்கிழங்கு, வெங்காயம், பருப்பு என்ற அத்தியாவசிய பொருட்களை சேமிம்து வைக்கவும் ஏற்றுமதி செய்யவும் கடுமையான கட்டுப்பாடுகளை அரசு விதித்திருக்கிறது. இதனால் கள்ளசந்தையில் விற்பது சட்டத்தின்ட பார்வையில் கடும் குற்றமாகக் கருதி இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.
ஆனால் இந்த புதிய சட்டம் அதற்கு நேர்மாறாக பெரு நிறுவனங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் அவர்களின் தொழிற்சாலைகளில் பெரிய பெரிய கொள்ளளவில் ஸ்டாக் வைத்துக் கொள்ள அனுமதிக்கிறது. அதற்காகக் கதவை திறந்து விட்டிருக்கிறது. அதற்காகக் கதவை திறந்து விட்டிருக்கிறது. பி.ஜே.பி. அரசு, எப்படித் தெரியுமா? இது பதுக்கல் இல்லை,சேமிப்பு என்று சொல்வதற்காக அத்தியாவசிய பொருட்களின் பட்டியலிலிருந்து சமையல் எண்ணெய், உருளைக்கிழங்கு, வெங்காயம், பருப்பு போன்ற 25 பொருட்களை நீக்கிவிட்டது. பா.ஜ.க. அரசு, இந்த அரசு யாருக்காக செயல்படுகிறது என்பதை இப்போதாவது தெரிந்து கொள்ளுங்கள்.
எனவே, நடக்கப்போவதென்ன? அதிகமாக விளைச்சல் ஏற்படும்போது, விலை குறையும், அப்போது அந்த பொருட்களை கார்பரேட் முதலாளிகள் வாங்கி சேமித்து வைத்துக் கொள்வர். (புதிய சட்டத்தின்படி இது பதுக்கல் இல்லையாம்) விளைச்சல் குறைவான காலங்களில் ்அதிக விலைக்கு விற்று கார்பரேட் முதலாளிகள் லாபம் பார்ப்பார்கள். முதலாளி என்றால் லாபம் பார்க்கத்தானே செய்வார்கள் என்கிறீர்களா? அப்பயானால் விவசாயி வயிற்றில் அடிக்கப்படுவதையும், பொது ஜனங்கள் கொள்ளை விலை கொடுத்து ஏமாறுவதையும் கண்டுகொள்ள மாட்டீர்களா? பதுக்கல், கள்ளச்சந்தை என்று கடும் குற்றமாக பார்க்கப்பட்டவைகளை, இனி, சேமிப்பு, நவீன விற்பனை என்று போற்றிப் புகழ்வீரோ?
இனி, தமது விளைபொருளை விவசாயி முதலாளிகளுக்கு விற்பனை செய்வதற்கு போடப்பட்டுள்ள ஒப்பந்த நிபந்தனைகளைப் பார்ப்போம்.
விளைபொருளின் தரம் :
படிப்பில்லாமல், பொருளாதாரம் இல்லாமல், வசதி வாய்ப்புகள் இல்லாமல், விவசாயி தமது மிகச் சிறந்த அனுபவத்தால், விதைத்து அறுவடை செய்து கொண்டு வரும் விளைபொருளின் தரம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதை விளைவதற்கு முன்பே ஒப்பந்தத்தில் குறிப்பிட வேண்டுமாம். இவ்வாறு விரும்புவது தவறல்ல. ஆனால் விளையப் போவது நம் கையிலா இருக்கிறது?
விளைபொருளின் விலை :
குறைந்தபட்ச உத்தரவாத விலை நிர்ணயிக்கப்பட வேண்டுமாம்ட. தரம் குறைந்தால் நிர்ணயித்த விலை குறையுமாம். அதாவது ஒப்பந்த விலையை மனதில் கொண்டு விவசாயிழ விதைத்து அறுவடை செய்த விளைச்சலைக் கொண்டு வருவான். முதலாளி தரம் சரியில்லை என்று கூறிவிட்டால், விவசாயி விலையைக் குறைத்துக் கொடுக்க வேண்டுமாம். இது விவசாயிக்கு நஷ்டம்தானே?
பேமெண்ட் :
தரத்திலும் விலையிலும் நேர்மை இல்லாதபோது, செலுத்தும் கட்டணத்தில் மட்டும் நேர்மை இருக்குமா? விதை நெல்லை விவசாயி கொடுத்த பிறகு, தரவேண்டிய கட்டணத்தில் மூன்றில் இரு பங்கு உடனேயும், ஒரு பங்கு தொகையை முப்பது நாள் கழித்துத்தான் கார்பரேட் தருமாம்ட.
அதாவது கார்பரேட் முதலாளி, மக்களுக்கு பொருளை கடனுக்கு விற்கமாட்டார், விளைவிப்பதற்கு விவசாயிக்கு அட்வான்ஸ் தொகையும் தரமாட்டார். கொள்முதலில் விவசாயிக்கு மட்டும் ஒரு பங்கு தொகையை கடன்ட சொல்வாராம். இந்தக் கடனை தருவதிலும் பிரச்னையாம். இந்தக் கடனை தருவதிலும் பிரச்னையாம். ஏனென்றால், பிரச்சனை ஏற்பட்டால், சமரசக் குழுவிடம் (CONCILIATION COMMITTTEE) செல்ல வேண்டுமாம். நீதிமன்றத்திற்கு செல்ல முடியாதாம். அரசும் தலையிடாதாம், அந்தந்த மாநில சட்டங்களும் பொருந்தாதாம், நாம் சொல்லவில்லை. புதிய சட்டங்கள் சொல்கிறது. சமரசக் குழுவில் பெரிய பெரிய ஜாம் பவான்கள் வக்கீல்களாக இருப்பார்கள். படிக்காத விவசாயிகளை நோகடித்து விடுவார்கள்.
ஆக, அடிமட்ட விலைக்கு விற்ற பணத்தைப் பெற, இந்த ஏழை விவசாயி அவர்களுடன் போராட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. பொய்யை எதிர்த்து போராடுவோம் என முடிவு செய்து தைரியமாக சமரச குழுவிடம் சென்றால் பிரச்சனை தீர்ந்து விடுமா? தீராது என்று சட்டம் மறைமுகமாகக் கூறுகிறது. பிரச்சனையை தீர்வுக்குழு முடிக்கவில்லை ஏன்றால், இதற்கென்று நியமிக்கப்பட்ட மேஜிஸ்ட்ரேட் அடுத்த 30 நாட்களுக்குள் பிரச்சனையை முடிக்க வேண்டுமாம். அங்கும் முடிவு கிடைக்கவில்லை என்றால், உதவி கலெக்டர் அல்லது கலெக்டர் அந்தஸ்திலுள்ளவரிடம் அதாவது இவர்தான் மேல்முறையீட்டு அதிகாரம் பெற்றவராம் (APPELLATE AUTHORITY) முறையிட வேண்டுமாம். அடுத்த 30 நாட்களுக்குள் அவர் இறுதி தீர்ப்பைத் தெரிவித்து விடவேண்டுமாம். இந்த தீர்ப்பு நீதிமன்றத் தீர்ப்பிற்கு சமமான மரியாதையும் அந்தஸ்தையும் பெறுகிறதாம். ஆக மொத்தம் விவசாயி 90 நாட்கள் அலை வேண்டுமாம். தன் முதலைப் போட்டு, விவசாயம் செய்து விளைபொருளை கடனுக்கு விற்று கடனை வசூலிக்க இப்படி நாய் படாத பாடுபடவேண்டுமா? என்று நினைத்து விவசாயி, தனது பொருளை வெறு மாநிலங்களில் விற்பனை செய்யலாம் என்று கிளம்பினால், அங்கேயும் ஏஜெண்டுகளிடம் விற்கக் கூடாதாம். கார்பரேட்டுகளுக்குத்தானட் விற்க வேண்டுமாம். இந்த விளையாட்டு நமக்கு வேண்டாம் என்று கடைசியாக விவசாயி ஒதுங்கிக் கொள்வான்.
இதைத்தானட் கார்பரேட் எதிர்பார்த்தது, எதை? ஈயம் கலந்த உணவையா? இப்போது சொல்லுங்கள், எந்த சூழ்நிலையிலும் நிலத்தை விவசாயிகளிடமிருந்து பிடுங்கக் கூடாது என்கிற நிபந்தனை சர்க்கரைத் தடவியதுதானே? சர்க்கரை தடவிய இந்த சட்டத்திற்கு மறு திருத்தம் செய்து இதை மாற்றிவிட கார்ப்பரேட்டுக்கு எவ்வளவு நேரம் ஆகப்போகிறது?
இப்படிப்பட்ட வணிகம் விவசாயிக்குத் தேவையா? சிந்தியுங்கள்! அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே நடந்த பல பேச்சுவார்த்தைகள் பயனற்றுப் போய்விட்டன. இத்தனை நாட்கள் ஆகியும் உலகம் கண்டிராத ஜனத்திரள் சேர்ந்து கொண்டிருக்கும் நிலையிலும் சட்டத்தை வாபஸ் பெறமுடியாது என்று மத்திய அரசு அடித்துக் கூறுகிறது. ஏன்? நாட்டில் புது சட்டம் வரப்போகிறது என்பதை முன்கூட்டியே தெரிவித்த கார்பரேட் முதலாளி – அதானி, பெரிய கொள்ளளவு கொண்ட மிகப் பெரிய குளிரூட்டப்பட்ட நவீன தானிய சேமிப்பு கிடங்குத் தொழிற் சாலைகளை ஏற்கனவே நிறுவிவிட்டார். அவை செய்படனுமே! இந்த வேளாண் சட்டம் கார்பரேட்டுக்களின் நன்மைக்காகத்தான்! விவசாயிகளின் நன்மைக்காக அல்ல! இது உண்மை என்பதும் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது எப்படி? எங்களின் போராட்டத்திற்கு வெளிநாட்டிலிருக்கும் சீக்கியர்கள் நன்கொடை அனுப்பி வருகிறார்கள். வெளிநாட்டு நன்கொடைகளின் விவரங்களை வங்கியிடம் அரசு கேட்டிருப்பதாக வங்கியினர் தெரிவித்ததாக பாரதீய கிஷான் யூனியன் ஏக்த்தா உக்ரமான் அமைப்பின் தலைவரும் பொது செயலாளரும் தெரிவித்திருப்பதாக தினத்தந்தி செய்தித்தாள் 21.12.2020ல் செய்தி தந்திருக்கிறது. இந்த நேரத்தில் அரசின் இந்த செயல் எதைக் காட்டுகிறது என்பதை மக்களுக்கு உணர்த்தி இருக்கும் என நம்புகிறோம். சிந்தியுங்கள்!
போராட்டத்தின் வீரியத்தையும், நியாயத்தையும் கண்ட உச்சநீதிமன்றம் வேறொரு வழக்கு ஒன்றில், 3 வேளாண் சட்டங்களை அமுல்படுத்துவதை தள்ளி வைக்குமாறு உத்தரவு இட்டுள்ளதை அரசு தரப்பு நிராகரித்து விட்டது. காரணம், தயாராகவுள்ள அதானியின் நவீன தொழிற்சாலை என்னாவது? மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த சட்டத்தை எதிர்த்து போராடும் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிப்போமாக! நாட்டினட் முதுகெலும்பை வலுப்படுத்துவோமாக.
குறிப்பு : இந்த கட்டுரையில் புதிய சட்டம் பற்றி விளக்கப்பட்டிருக்கிறது. அந்த சட்டங்கள் எந்த CHAPTER எந்த SECTION. எந்த SUB-DIVISION ல் இடம் பெற்றிருக்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்புவோர், விவசாய சட்டம் என்ற சொல்கிறது. “விவசாயிகளே சிந்தியுங்கள்” என்ற தலைப்பில் சோ.ராமு அவர்கள் பேசிய வீடியோ பேச்சை முகநூலிலிருந்து பெறுங்கள்.