தலையங்கம்!
இறையடிமை ஆகுவோம்!
- பூமி பெரும் அதிர்ச்சியாக, அதிர்ச்சி அடையும்போது,
- இன்னும் பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும்போது,
- அதற்கு என்ன நேர்ந்தது என்று மனிதன் கேட்கும்போது,
- அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும்…
- உம்முடைய இறைவன் வஹீ(இறைச் செய்தி) 5லம் அதற்கு அறிவித்ததாக!
- அந்நாளில், தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, மக்கள் பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள்.
- எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும், அதனை அவர் கண்டு கொள்வார்….
மேலும், எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும், அதனையும் அவன் கண்டுகொள்வான். (அல்குர்ஆன் : அத்.99, தலைப்பு : ஜில்ஜால்(அதிர்ச்சி) வசனங்கள்: 1-8)
மேலே கூறப்பட்ட அகிலங்களின் இறைவனின் வார்த்தைகள், உலக முடிவு நாளுக்கு முன்பாக, பூமியில் நிகழவிருக்கும் ஒரு அதிர்ச்சியைப் பற்றியும், அடுத்து நிகழவிருக்கும் “அந்த நாளில்” அதாவது மறுமையின் இறுதித்தீர்ப்புக்காக விசாரணை செய்யப்படும் அந்த நாளில், நிகழவிருக்கும் நிகழ்ச்சிகள் பற்றியும் கூறுகின்றன.
“உலக முடிவ நாள் வரும்போது, மாற்றங்கள் நிகழும், பூமி தன்னிலிருப்பவைகளை வெளிப்படுத்தும்: (மேலும்) நிலச்சரிவம் (LANDSLIDE) ஏற்படும்” என்று இறைவனின் தூதர், நபி(ஸல்) அவர்களும் கூறிச் சென்றுள்ளார்கள். (ஹதீத் எண். 4059, ஆங்கிலம்) நூல் : இப்னு மாஜா.
கடந்த ஆண்டின் கடைசி நாள், நார்வே நாட்டின் வடதிசையில் தலைநகர் ஓஸ்லோவில் ஆஸ்க் என்ற கிராமத்திலுள்ள மக்கள் தங்கள் வீடுகள் நகர்ந்து கொண்டிருப்பதாக காவல் நிலையத்தில் தகவல் தந்தனர். திடுக்கிட்ட நார்வே அரசு. உடனே எமர்ஜென்சி பிரகடனப்படுத்தியது. அவசரகால நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன. பாதுகாப்பிற்காக அங்கிருந்த மக்கள் முன்னெச்சரிக்கையாக வேறு இடங்களுக்கு அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்னர். இப்படியான நடவடிக்கைகள் ஒருபுறம் நடந்தது.
மறுபுறம் மீட்புப்பணி1 நிலச்சரிவால் பல நூறு வீடுகள் மண்ணால் மூடப்பட்டு கிடந்தன. புதை குழியில், மக்கள் உயிரோடு இருக்கலாம் என்பதனால் அனைத்து குழிகளும் ஸ்கேன் செய்யப்பட்டது. மரணித்தவர்களையும், உயிர்பிழைத்து நடமாடியவர்களையும், உயிருடன் சிக்கிக் கொண்டவர்களையும், மீட்புக் குழுக்கள், மோப்பநாய்கள் மூலம் தரையில் தேடித்தேடி மீட்டனர். தளிமண் நிலம்! கடும் பனி! மீட்புப் படையினர் முன்னேறிச் செல்ல கஷ்டப்பட்டனர். தேடுதலுக்கு பயன்படும் ஹெலிகாப்டர் மற்றும் மிகச் சிறிய விமானமான ‘பறகலம்’ (DRONE) மூலம் வானில் பறந்து கொண்டே தரையில் தேடித்தேடி மீட்புப் பணி நடந்தது. தேடலில் பல சடலங்கள் மீட்கப்பட்டன. ரணகள வேதனைகளுடன் பலர் உயிரோடு மீட்கப்பட்டனர்.
நார்வே மக்களுக்காக ஏக இறைவன் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். மண்ணின் வலிமை குறைவதற்கான காரணிகளைக் கண்டறிந்து களையவேண்டும். அதேபோல. மண்ணின் வலிமை அதிகரிப்பபதற்கான காரணிகளை கண்டறிந்து மேம்படச் செய்ய வேண்டும். இது பாதுகாப்புக்கான ஒரு பரிந்துரையல்லாமல் வேறில்லை. இறைநாட்டம் எதுவோ அதுதான் நடக்கும். அதை வென்றிட எவராலும் முடியாது.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், கல்விழ பறிக்கப்படும் வரை, பூகம்பங்கள் அதிகமாகும் வரை, காலம் சுருங்கும் வரை, குழப்பங்கள் தோன்றும் வரை, கொலை செய்தல் அதிகமாகும் வரை, உங்களிடம் செல்வம் செழிக்கும் வரை கியாம நாள் ஏற்படாது. (அபூஹுரைரா(ரழி), புகாரி: 1036)
(உலக முடிவ நாள் என்பது இறைநாட்டத்திலுள்ள சங்கதி, இப்போது கூட திடீரென்று வந்துவிடலாம். எந்த அளவுக்கென்றால்) இரண்டு பேர் தங்கள் துணிகளை தங்களுக்கு முன்பாக விரித்து வைப்பார்கள். அந்தத் துணியை வியாபாரம் செய்திருக்கவும் மாட்டார்கள். அதை சுருட்டி வைத்திருக்கவும் மாட்டார்கள், அதை சுருட்டி வைத்திருக்கவும் மாட்டார்கள். அதற்கும் மறுமை நாள் வந்துவிடும். ஒருவர் தமது ஒட்டகத்தின் பாலை கறந்து கொண்டு வந்திருப்பார், அதை அவர் குடித்திருக்க மாட்டார், அதற்குள் மறுமை நாள் வந்துவிடும். ஒருவர் தம் தடாகத்தை அப்போதுதான் செப்பனிட்டிருப்பார். அதிலிருந்து (தம் கால்நடைகளுக்கு) நீர் புகட்டியிருக்கமாட்டார். அதற்குள் மறுமை நாள் வந்துவிடும் ஒருவர் தமது உணவை தம் வாயருகே கொண்டு சென்றிருப்பார். ஆனால், அதை சாப்டபிட்டிருக்கமாட்டார், ஆனால், அதை சாப்பிட்டிருக்க மாட்டார், அதற்குள் மறுமை நாள் வந்துவிடும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரி: 7121)
உலகில் இனி இறுதியாக நடைபெறவிருக்கின்ற பூமியின் அதிர்ச்சி மற்றும் நிலச்சரிவு ஆகியவைகள் பற்றி 1442 ஆண்டுகளுக்கு முன்பே இறைவனாலும், இறைத்தூதராலும் முன்கூட்டியே எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. உலகத்தின் பல நாடுகளில் ஆங்காங்கே நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, நிலச்சரிவு என பல இடர்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், உலக முடிவு நாள் இதுவரை வந்ததில்லை. அப்படியானால், இந்த உலகத்தில் இதுவரை நடந்து கொண்டிருக்கின்ற நிலநடுக்கங்கள், பூகம்பங்கள், நிலச்சரிவுகள், எரிமலை வெடிப்புகள் இவை எல்லாம் ஒரு மாதிரிக்குத்தானா (SAMPLE தானா?) மனித வர்க்கத்தை எச்சரிக்கைச் செய்யத்தானா?
அப்படியெனில் ஒவ்வொருவரும் படிப்பினைப் பெறவேண்டுமே! ஒரே இறைவனை முழு மனநிறைவுடன் ஏற்றுக்கொள்ள வேண்டுமே! இறை கட்டளைகளை செயல்படுத்த வேண்டுமே1 ஒவ்வொருவரும் இறையடிமையாகிவிட வேண்டுமே! இல்லையேல் அல்குர்ஆன் கூறியுள்ளபடி அணுவளவு தீமை செய்திருந்தாலும், அது காண்பிக்கப்பட்டு விடுமே! அப்படியானால் நரகம் செல்ல வேண்டியிருக்குமே? தப்பிக்க வேறு வழி கிடைக்காமல் பிடிபட்டு விடுவோமே? மறுமை நாளின் நஷ்டத்திலிருந்து தப்பிக்க ஒரே ஒரு வழி, இறைவனிடம் பாவமன்னிப்புக் கேட்டு தீயச் செயல்களை விட்டொழித்து இறையடிமையாகிழ விடவேண்டியதுதான்! எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!