சமுதாயத்தை கல்வியில் தலை நிமிரச் செய்வோம்!
அஹ்மது இப்ராஹீம், பளியங்குடி.
இன இழிவு நீங்க இஸ்லாம்தான் தீர்வு என முழங்கிய பெரியாரின் அந்த வார்த்தைகளையே பேராசிரியர் கீ.வீரமணியின் தி.க. மற்றும் பெரியார் தி.க. போன்ற அத்தனை பகுத்தறிவுவாதிகளும் இந்த உண்மை தாழ்த்தப்பட்ட மக்களைப் போய் சென்றடையவிடாமல் திட்டமிட்டு மறைத்து விட்டனர். தொடர்ந்து மறைத்தும் வருகின்றனர்.
தாழ்த்தப்பட்ட மக்களும் தங்களுடைய இன இழிவுகளை பற்றி எந்தக் கவலையும் படாமல் மத்திய மாநில அரசுகள் தரும் இட ஒதுக்கீட்டை அடைவதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். எனவே இவர்கள் காலமெல்லாம் இன இழிவிலேயே வீழ்ந்து கிடக்கின்றார்களே என்று நாம் கவலைப்படத் தேவையுமில்லை. மேலும் இது பற்றி வீணாக அலட்டிக் கொள்ளவும் தேவையே இல்லை.
அகில இந்திய அளவில் பொருளாதாரத்திலும் கல்வியிலும் நமது இஸ்லாமிய சமுதாயம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரை விட மிக மிகக் கேவலமான நிலையில் இருந்து கொண்டிருக்கிறது. முதலில் நமது சமுதாயத்தை உலகக் கல்வியிலும் மார்க்கக் கல்வியிலும் தலைநிமிரச் செய்வோம்.
இதோ அல்குர்ஆனின் கட்டளை :
ஈமான் கொண்டவர்களே! (வழி தவறிவிடாமல் நீங்கனே) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நேர்வழியைப் பின்பற்றுவீர்களானால், வழி தவறியவர்கள் உங்களுக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது. அல்லாஹ்வின் பக்கமே நீங்கள் அனைவரும் மீள வேண்டியிருக்கின்றது. நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றையெல்லாம், அப்போது அவன் உங்களுக்கு அறிவித்து விடுவான். (அல்குர்ஆன் : 5:105)
எனவே முதலில் நாம் அனைவரும் அல்லாஹ்வையும் அவனது தூதர்(ஸல்) அவர்களையும் ஏற்றுக்கொண்ட முஸ்லிம்களை குர்ஆன், ஹதீதின்படி வாழ்வதற்காக உழைப்பதே நமது இலட்சியமாகக் கொள்வோம்.