சிந்திப்பவர்களுக்காக….

in 2021 ஏப்ரல்

சிந்திப்பவர்களுக்காக….

அப்துல்லாஹ் இப்னு அருணாச்சலம்.

வானங்கள் மற்றும் பூமியில் அமைப்பையும், அல்லாஹ் படைத்துள்ள ஏனைய பொருட்களையும், அவர்களது “தவணை” நெருங்கிவிடக்கூடும் என்பதையும் அவர்கள் சிந்திக்க மாட்டார்களா?  இதன்  பின்னும் அவர்கள் எந்த விஷயத்தைத்தான் நம்பப் போகிறார்கள்? (இறைநூல் 7:185)

சில நூறு மைல்கள் பூமிக்கு மேலும் கீழும் பயணித்துவிட்டு, படைப்புகளின் பிரம்மாண்டங்களைப் பார்த்தபின்னும் படைத்தவனை மறுக்கும் மனிதர்களே! நீங்கள் இதுகாறும் அங்கே என்ன கண்டீர்கள் தெரியுமா?

பலநூறு ஆண்டுகள் பறந்தாலும் முடிவடையாத பெருவெளி, அதில் காற்றில் பறக்கும் தூசுகள் போல் சில கோள்கள் (நட்சத்திரங்கள்) அவற்றில் அலசிப் பார்த்தாலும் அறியமுடியாத இடத்தில் இந்த பூமி அதன் மேற்பரப்பில் நுண்ணோக்கிப் பார்த்தாலும் அறியமுடியாத இடத்தில் இந்த பூமி அதன் மேற்பரப்பில் நுண்ணோக்கிப் பார்த்தாலும் புள்ளியை விடச் சிறியதாக தெறிகின்ற நீங்களும், நானும், அற்பத்திலும் அற்பமான மனிதர்கள்தானே நாம்?

பிறகு நமக்கேன் நீர்க்குமிழி உருவாகி உடைவது போல் இந்தத் தற்காலிக உலக வாழ்வு? மரணத்திற்கு பின் ஏன் நாம் வாழ்ந்த அற்பமான வாழ்க்கையைப் பற்றி அடுக்கடுக்கான விசாரணை? இது நியாயமா? என நாம் கேட்கலாம்.

இல்லை, உங்களையும், என்னையும் பூமியில் அவனது பிரதிநிதிகள் என்ற உயர்ந்த அந்தஸ்தைக் கொடுத்து, இங்கே நாம் கண்டு காணாதவற்றையெல்லாம் நமக்கு வசப்படுத்தித் தந்திருக்கிறான் அந்த ஏகன் இறைவன்.

வானங்களிலும், பூமியிலும் உள்ளவற்றை அவன் உங்களுக்கு வசப்படுத்தி தந்துள்ளான். உங்கள் மீது வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் தன் அருட்கொடைகளை நிறைவாக்கியுள்ளான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? அறிவில்லாமலும், வழிகாட்டுதல் இல்லாமலும், பிரகாசமான வேதம் இல்லாமலும் அல்லாஹ்வைப் பற்றி மக்களில் சிலர் தர்க்கம் புரிகின்றனர். (இறைநூல் : 31:20)

வானங்கள் மற்றும் பூமியிலுள்ள அனைத்தையும் அவன் உங்களுக்கு வசப்படுத்தித் தந்துள்ளான். நிச்சயமாக இதில் சிந்திக்கக்கூடிய மக்களுக்கு ஏராளமான  சான்றுகள் இருக்கின்றன. (இறைநூல்: 45:13)

நாம் சிந்திக்கக் கூடியவர்கள்தானே? அப்படியிருந்தும் சிலர் “நான் யார் தெரியுமா? என்னைப் பற்றிக் கேட்டுப் பார்? என தற்பெருமை பேசி, மறுமையையும், தனது விதியெழுதியவன் கொடுத்த வேதத்தையும், அதற்கும் ஒருபடி மேல் போய் அற்புதங்கள் எல்லாம் அனாயாசமாகப் படைத்த அந்த ஏக இறைவனையும் மறுக்கிறார்கள்.

அந்த நாளைப் பற்றி தூதர்களும், அவர்களுக்கு வழங்கப்பட்ட நெறிநூல்களும் எச்சரித்திருந்தும் “அது எப்போதும் வரும்?” என ஏளனமாகக் கேட்கிறார்கள். இவர்கள் மட்டுமல்ல, இவர்களுக்கு முன்பு இறைத்தூதர்களிடத்திலேயே இந்தக் கேள்வியை கேட்டவர்கள் உண்டு.

ஆனால் “அந்நேரத்தைப் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது” என இறைவன் கூறிவிட்டான். (இறைநூல் : 31:34)

நபிமொழித் தொகுப்பு முஸ்லிம்……ல் இறை நம்பிக்கை எனும் தலைப்பில் பலமுறை பதியப்பட்டுள்ள செய்தி, வானவர்களின் தலைவரும், மனிதர்களின் தலைவரும் சந்தித்து பேசியபோது, ஜிப்ரீல் (அலை) அவர்கள், இஸ்லாம், ஈமான், இஹ்லான் பற்றி கேட்டுவிட்டு “அந்த நாள் எப்போது வரும்?” எனக் கேட்டார். அதற்கு நபி(ஸல்) கேள்வி கேட்கப்படுவர், கேட்பவரைவிட அதிகம் அறிந்தவர் அல்லர்:” என்றே கூறுகிறார். பிறகு “அதன் அடையாளங்கள்” பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அந்த நபிமொழி தொடர்கிறது.

இறைத்தூதர் பல சமயங்களில் கூறிய மறுமையின் அடையாளங்கள் நிகழ்ந்து விட்ட போதிலும் நாம் அவற்றை உணர்ந்திருக்கிறோமா? எங்கேயும் தேடிப்போக வேண்டாம். ஒரு நிமிடம் உங்களைச் சுற்றி நடப்பவைகளை சிந்தித்துப் பாருங்கள். பல அடையாளங்கள்: இன்னும் பல அடையாளங்களை கடந்து இறுதிநாளை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.

அமானிதம் பாழ்படுத்தப்படும்பொது, தகுதியற்றவர்களிடம் அதிகாரம் (பொறுப்பு) ஒப்படைக்கப்படும்போது, வெட்டவெளியில் விபச்சாசம் நடக்கும் போது, காரணங்கள் தெரியாமல் கொலைகள் செய்யப்படும்போது, அற்பக் காசுக்காக இறைநெறிநூலை அதைக் கற்றவர்கள் விற்கும்போது, தங்களை “இறை நம்பிக்கையாளர்கள்” (முஸ்லிம்கள்) எனக் கூறும் மக்கள் எண்ணிக்கையில் அதிகமிருந்தும் ஈமான் இல்லாமல், இறைவனையும் இறைத்தூதர்களையும் பின்பற்றாமல், தங்கள் தலைவர்களையும், சில உபதேசம்  செய்பவர்களையும் அப்படியே பின்பற்றும்போது என பல நூறு அடையாளங்கள்.

இவைகளெல்லாம் மறுமையின் நெருக்கத்தில் நடக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறிய அநேக அடையாளங்களில் சில சிறிய அடையாளங்கள் தான்.

இவைகளை நீங்களும் நானும் கடந்துபோகிறோமா, இல்லையா? பிறகு ஏன் சிந்திக்க மறுக்கிறோம்?

சிறிய அடையாளங்கள் நிறைவேறிய பின்னர் பத்து பெரிய அடையாளங்கள் தொடரும். இவை எப்படியென்றால், முத்துக்கள் கோர்க்கப்பட்ட மாலையில் அதன் நாண் துண்டிக்கப்படும்போது அதன் முத்துக்கள் எவ்வளவு வேகமாக சுழன்று விழுமோ, அதேபோல் பெரிய அடையாளஙட்கள் நிகழ்ந்து விசாரணை நாளட் தொடங்கிவிடும். எண்ணிப்பாருங்கள் நாம் எவ்வளவு நெருக்கத்தில் இருக்கிறோம் என்று.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களது வருகையைப் பற்றி “நானும் மறுமை நாளும் இதோ இந்த இரு விரல்கள் போல் நெருக்கமாக அனுப்பப்பட்டுள்ளோம்” என்று தமது சுட்டுவிரலையும், நடுவிரலையும் இணைத்துக் காட்டியுள்ளார்கள். (புகாரி: 4936,5301,6503-6505, முஸ்லழிம்ட: 1573)

இப்படி பல எச்சரிக்கைகளும், அடையாளங்களும் நம்மை வந்து அடைந்திருந்தாலும், நாம் அவற்றை சில மணித்துளிகளாவது சிந்தித்திருக்கிறோமா?

இறைவனது வார்த்தைகளை, அவனது தூதர் மொழிகளையும் என்றாவது காதில் வாங்கி, மனதில் நிறுத்தியதுண்டா?

நீங்கள் உண்மையிலேயே சிந்திப்பவர்களாக இருந்தால், இறைவன் புறத்திலிருந்து இதோ உங்களுக்கொரு செய்தி!

அவர்கள் இந்த குர்ஆனை (ஆராய்ந்து) சிந்தித்துப் பார்க்கவேண்டாமா? இது இறைவன் அல்லாத வேறொருவரிடமிருந்து வந்திருந்தார், இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள். (இறைநூல் : 4:82)

Previous post:

Next post: