தொழுகையில் வரிசையின் ஒழுங்கு!
K. ரஹிமுத்தீன், திருச்சி
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்கள் (தொழுகை) வரிசைகளை சீர்படுத்துங்கள். வரிசையின் ஒழுங்கு தொழுகையை முழுமைப்படுத்துவதில் உள்ளது.
(புகாரி : 723, முஸ்லிம்:433)
வரிசையில் சமமாக நில்லுங்கள் :
வரிசையில் சமமாக நில்லுங்கள். தோள்பட்டை அருகே நிற்பவரின் தோள்பட்டையுடனும் உங்கள் பாதங்கள் அருகே நிற்பவரின் பாதத்துடனும் சேர்ந்து நில்லுங்கள் (இல்லையயனில்) உங்கள் முகத்தை அல்லாஹ் வேறுபடுத்திவிடுவான். (புகாரி:717-725, முஸ்லிம்:436)
அல்லாஹ் பிற்படுத்தி விடுவான்:
நீங்கள் (ஜமாஅத்திற்கு) முந்துங்கள். என்னை பின்பற்றுங்கள். உங்களுக்கு பின் வந்தோர் உங்களைப் பின் தொடரட்டும். தொடர்ந்து தொழுகைக்கு பிந்தி வரக்கூடிய கூட்டத்தார்களை அல்லாஹ்வும் பிற்படுத்தி விடுவான். (முஸ்லிம்:4)
இடைவெளியை ஏற்படுத்தாதீர்கள் :
வரிசைகளை (சமமாகப்) பேணுங்கள். தோள்பட்டைகளைச் சமமாக்குங்கள். இடைவெளிகளை நீக்குங்கள். உங்களின் சகோதரர்களின் கைகளை மென்மையாக பிடியுங்கள். இடைவெளியை ஏற்படுத்தி ஷைத்தான்களுக்கு இடம் தந்து விடாதீர்கள். வரிசையை விட்டுப் பிரிந்து நிற்பவரை அல்லாஹ் பிரித்துவிடுவான். (அபூதாவூது: 666)
முதல் வரிசையின் சிறப்பு :
நிச்சயமாக அல்லாஹ் முதல் வரிசைகளில் உள்ளோருக்கு அருள்புரிகிறான். வானவர்கள் அவர்களுக்கு அருள்புரிய வேண்டுகிறார்கள். (அபூதாவூது: 664)
1. கெண்டைக்கால் – கணுக்கால் :
ஒரு இறைநம்பிக்கையாளின் கீழாடை கெண்டை காலின் பாதி வரையிலும் கணுக் கால்கள் வரை கீழாடை இருந்தால் தவறு ஏதும் இல்லை.
அறி : அபூஸயீத் அல்குத்ரீ(ரழி) அவர்கள் நூல் : அபூதாவுத் : 4093
அறி . அனஸ்(ரழி) அவர்கள், நூல்: அஹ்மத் : 1315.
அறி : அப்தில்லாஹ் இப்னு உமர்(ரழி) அவர்கள் தப்ரானி.
படம் -1
2. கணுக்காலுக்கு கீழே கீழாடை செல்லக்கூடாது:
கணுக்காலுக்கு கீழே செல்லும் ஆடை நரகத்திற்கு இழுத்து செல்லும். மேலும் எந்த நன்மையும் இல்லை. மேலும் கணுக்கால் களுக்குக் கீழ் அடை அணிபவர் நரகத்திற்கு செல்வார்.
அறி.அபுஹூரைரா(ரழி)அவர்கள், புகாரீ: 5887
அறி. சமுரா(ரழி) அவர்கள், அஹ்மத்: 19309
அறி.அனஸ்(ரழி) அவர்கள், நூல்: அஹமத்:1315
3. அல்லாஹ் (இறைவன்) பார்க்கமாட்டான்:
“ஒருவர் தன்னுடைய கீழாடையை தரையில் பட்டாலோ, படும்படி இழுத்து சென்றாலோ அவரை மறுமையில் அல்லாஹ் பார்க்கமாட்டான்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி:அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) அவர்கள்
நூல்: புகாரி: 3665, முஸ்லிம்: 2085
அறி. அபுஹுரைரா(ரழி) அவர்கள்
நூல்: புகாரி: 5787, முஸ்லிம்:2087, அபுதாவூத்: 638
அறி. அபுதர்(ரழி) அவர்கள், நூல்: முஸ்லிம்:106
அன்பானவர்களே!
மேலே 1வது படத்தில் உள்ளது போல் அனைவரும் தங்கள் கீழாடையை சரி செய்து கொள்ளவும். என்றும் நபிவழிபடி நடப்போம்.
குறிப்பு : நம்மில் பலர் நாள் முழுவதும் கணுக்காலுக்கு கீழாக ஆடை அணிந்து ரோடெல்லாம் கூட்டி அலைந்து நஜீஸுடன் (அசுத்தத்துடன்) பள்ளிக்கு வந்தபின் மடித்துவிட்டு தொழுகையில் கலந்து கொள்வது யாரை ஏமாற்றும் வேலை (செயல்)? ஆகவே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.