தலையங்கம்!
கொரோனா வைரஸ் – 2019 (COVID – 19)
2019ல் கொரோனா என்ற வைரஸால் ஏற்பட்டதாக கூறப்படும் வியாதி தான் COVID-19. கடுமையான சுவாச நோய்க் குறி இருப்பதாகக் கூறி இதற்கு SARS-CoV2 (SEVERE ACUTE RESPIRATORY SYNDROME-CORONA VIRUS2) என்ற அதிகாரப்பூர்வ பெயரை இட்டது உலக சுகாதார அமைப்பு (WHO) உலகம் முழுவதும் அதிவேகமாக பரவிக் கொண்டிருக்கும் பயங்கர தொற்று நோய் என்று உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் எல்லோராலும் பேசும் பொருளாகிக் கொண்டிருக்கிறது. நோய் அறிகுறியாக சாதாரண சளியில் ஆரம்பித்து, சுவாசத்தில் கடுமையான பாதிப்பை விரைவில் ஏற்படுத்தி, சர்வசாதாரணமாக மரணத்திற்கு இழுத்து செல்கிறதாம் இந்த நோய்.
பாதிக்கப்பட்ட நோயாளி குடும்பத் தலைவராக இருந்தால், அவரிருக்கும் வீட்டில் மனைவி, அவரது மக்கள், அவர்களின் துணைவர்கள், பேரப் பிள்ளைகள், உறவுகளும் அவரிடம் வரக்கூடாதாம். நோயா ளியை தனிமைப்படுத்த வேண்டுமாம். தன் மூலம் ஏற்பட்ட அத்தனை சொந்தங்களும் தன்னை விட்டு தூரமாகியதால், தான் மட்டும் தன்னந்தனியாய் விடப்பட்ட நிலையில், என்றோ மரணிக்கப் போகும் அந்த குடும்பத் தலைவர் உளவியல் ரீதியாக (PSYCHOLOGICALLY) மன வலியால் இன்றே மரணித்து விடமாட்டாரா? ஜாம்பவான்களான மனநல மருத்துவர்கள் (PSYCHIATRISTS) இதில் அறிவுரை கூற ஏன் முன் வருவதில்லை? உலகம் தோன்றியது முதல் இதுவரை இல்லாத இதுபோன்ற பயங்கரங்கள் மக்களிடம் உலகெங்கும் அரங்கேறிவிட்டது. நோயாளியின் அருகில் கூட செல்லக்கூடாது என பயமுறுத்தி, உறவினர்களைக் கூட நெருங்கவிடாமல் நோயால் மரணித்தவர்களை, மருத்துவ மனை ஊழியர்களே அடக்கமும் செய்து விடுகின்றனர்.
சமூக வலைதலங்களில் வரும் ஆடியோ வீடியோ பதிவுகளைப் பாருங்கள். இந்த நோயை பெரிதாகப் பேசவேண்டிய அவசியமே இல்லை. இது சாதாரண சளியை போன்றதுதான் என்று டாக்டர்கள் தங்களின் தொலைபேசி எண்ணுடன் ஆறுதலாகப் பேசுகின்றனர். மருத்துவமனை நோயாளிகள் கவனிக்கப்படுவதில்லை போன்ற செய்திகளில் பதிவுகளும் வருகிறது.
இதனால் கடுமையாக உழைக்கும் டாக்டர்களும், செவிலியர்களும் வேதனையின் உச்சத்திற்கு சென்றுவிட்டனர். தனது வீடியோ பதிவில் பெண் செவிலியர் ஒருவர், ஊழியர்கள் ஒவ்வொருவரும் படும் கஷ்ட நஷ்டங்களை உணர்ச்சிபூர்வமாக கொட்டித்தீர்த்து கண்ணீர் சிந்துகிறார். உயிர் போய்விட்ட நோயாளியை இழந்த உறவுகளின் கதறல் நம் நெஞ்சை இன்னும் நெகிழ வைக்கிறது.
இந்த ஆடியோக்களையும் வீடியோக்களையும் பார்த்துக் கொண்டிருக்கும் மக்களின் மனநிலை உண்மையிலே இப்படி ஒரு நோய் இருக்கிறதா? இல்லையா? கட்டுப்பாடுகளை பின்பற்றவேண்டுமா? பின்பற்ற வேண்டாமா? என்ற சுய வினாக்களுக்குள் சிக்கிக்கொண்டு குழப்பத்தில் வாழ்ந்து வருகின்றனர். இது உலகெங்கும் உள்ள பிரச்சினை. இந்த ஆடியோக்கள் வீடியோக்களைப் பார்க்கும் மக்கள், பிறரை எச்சரித்து பாதுகாக்கும் நல்ல எண்ணத்துடன் அவைகளின் உண்மைத்தன்மை தெரியாமல் எல்லோருக்கும் ஃபார்வர்டு செய்து விடுகின்றனர். இவை மக்களை மேலும் அதிகமாக பயமுறுத்துகின்றன. இப்படிப்பட்ட சமூக வலைதளங்கள் நம் நாட்டிற்கு தேவையானவையா என மறுபரிசீலனை செய்து மக்களை வழிநடத்த வேண்டியது மத்திய மாநில அரசுகளின் பொறுப்பாகும்.
எனவே, அரசு கவனம் செலுத்த வேண்டிய மிகமிக முக்கியமான நடைமுறை விஷயங்களை இப்போது பார்ப்போம்! நாசியையும் வாயையும் மூடியவாறு முகக் கவசம் (MASK) அணிந்திருக்குமாறு அரசு அறிவுறுத் துகிறது. பலர் கடைப்பிடிக்கிறார்கள். கடைப்பிடிப்பவர்களில் சிலர் மாஸ்க் அணிய விரும்பாவிட்டாலும், மாஸ்க் அணியாவிட்டால் தொற்று ஏற்பட்டு விடும் என்று எண்ணுபவர்களின் எண்ணத்திற்கும், கஷ்டப்படும் காவல் துறையினருக்கும் மதிப்பளித்து மாஸ்க் அணிந்து கொள்கின்றனர். இன்னும் சிலர் மாஸ்க் அணிந்து கொள்வதில்லை. அப்படிப்பட்ட பாஜக எம்.எல்.ஏ. ஒருவரை போலீஸ் விசாரிக்கும்போது மாஸ்க் அணிந்தால் சுவாசத்தில் சிரமத்தை ஏற்படுத்துகிறது என்று கூறினார். அவரது கூற்றை புறந்தள்ளிவிட முடியாது. ஏனெனில் அவரின் அனுபவத்தைப் போன்று வேறு சிலரும் அனுபவித்து வருவதையும் கேள்விப்படுகிறோம்.
ஆரம்ப பள்ளிகளில் ஆசிரியர் பாடம் நடத்தியதை நினைவு கொள்வோமாக. மூச்சை நாம் உள்ளிழுக்கும்போது சுத்தமான காற்றான ஆக்ஸிஜனை உள்ளிழுக்கி றோம். மூச்சை வெளிவிடும்போது கெட்ட காற்றான கார்பன்டை ஆக்ஸைடை வெளிவிடுகிறோம். ஆகையால், தூங்கும் போது முகத்தை போர்வையால் மூடிக் கொள்ளாதீர்கள். இதனால் நாம் வெளிவிடும் கெட்ட காற்றை நாமே சுவாசிக்குமாறு நேரிட்டு விடுகிறது. இதனால் நம் உடல் நலம் பாதிக்கப்படும் என்று பாடம் நடத்தினர். வீட்டில் ஜன்னல்களை திறந்து வைத்து வீட்டினுள் வரும் சுத்தமான காற்றை சுவாசியுங்கள் என்று போதித்தனர் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள். சில டாக்டர்களும் இவ்வாறு அறிவுறுத்தியது உண்டு. அந்த ஆசிரியர்களும், அவர்களிடம் பயின்று உயர்ந்த பதவிகளில் இருக்கும் அரசு அதிகாரிகளும், அந்த டாக்டர்களும் கூட இப்போது ஏன் பொதுவெளியில் பேச வருவதில்லை.
“நீ சாக விரும்பினால், மூடிய சுவருக்குள் வாழ்ந்து கொள்” என்று சீனச் சொற்றொடர் ஒன்று தெரிவிக்கிறது. இதன் பொருள் என்ன? நீ வெளிவிடும் கெட்ட காற்றை, நீயே சுவாசித்துக் கொண்டிருந்தால் மரணித்து விடுவாய் என்ற எச்சரிக்கைதானே இது? மாஸ்க் அணிந்திருக்கும் போது, நாம் வெளிவிடும் கெட்ட காற்றை நாமே சுவாசிக்கிறோமே! நம் உடல் நலன் கெடாதா? முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற கடமை உணர்வில், கடும் வெயிலில் காவல்துறையினர் வெட்டவெளியில் வரும் நல்ல காற்றை சுவாசிக்காமல் கெட்ட காற்றை சுவாசிக்கலாமா? அவர்களின் உடல்நலன் கெடாதா? நோய் தொடராமலிருக்க மாஸ்க் போடவேண்டும் என்கின்றனர். நோய், தொற்று மூலம் ஏற்படுமேயானால், இன்றுவரை ஏகப்பட்ட டாக்டர்களும், செவிலியர்களும், கார்பரேசன் ஊழியர்களும் மண்ணோடு மண்ணாகி போயிருப்பர். மருத்துவம் படிக்க மாணவர்கள் வந்திருக்க மாட்டார்கள். ஏனெனில் நோயாளியுடன் நெருக்கத்தில் இருப்பவர்கள் முதன்முதலில் அவர்கள் தானே!
சிறுநீர் கழிப்பதிலிருந்து சிம்மாசனத்தில் அமருவது வரை ஒவ்வொன்றையும் எப்படி செய்ய வேண்டும் என்று இஸ்லாம் போதிக்கும்போது, கொரோனா பற்றி இஸ்லாம் கூறி இருப்பதை ஆராய்ந்தால் பிரச்சனையை கையாளும் வழி கிடைத்து விடுமே! எனவே, இஸ்லாத்தின் போதனைகளுக்குள் நுழைவோம்!
“தொற்று நோய் கிடையாது” என்று இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதார நூல்: புகாரி, எண்: 5717, 5757, 5770)
“அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஒருபோதும் அவர்களது உணவு அல்லது குடிக்கும் பானத்தில் ஊதியதில்லை” (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரழி), நூல்: (ஆங்கிலம்) இப்னு மாஜா, ஹதீஃத் எண். 3288)
ஊதும்போது வெளியாகும் காற்று கெட்ட காற்று, அது உணவில் அல்லது பானத்தில் கரைந்து, உடல்நலனில் பாதிப்பை ஏற்படுத்தும் அல்லவா? எனவே, இஸ்லாம் அதைத் தடுத்துள்ளது.
இஸ்லாத்தைப் பொறுத்தவரை, நோய்கள் இரு வகைப்படும்.
- உடல் நோய் (இதன்மூலம் அடியானுக்கு பாவமன்னிப்பு கிடைக்கிறது). “அல்லாஹ், ஒருவரை உடல் நோயைக் கொண்டு சோதித்தால், அது அவரது பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஹதீதின் சுருக்கம்) (இயாத் பின் குறூதைமிப், நூல்: அஹமது(ஆங்கிலம்) ஹதீஃத் எண். 1690)
- கொள்ளை நோய்: கொத்து கொத்தாக அதாவது கொள்ளை கொள்ளையாக மனிதர்களை பிணங்களாக அள்ளிக் கொண்டு போகும் நோய் இது. இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாவது. பிளேக், காலரா போன்ற கொள்ளை நோய் அல்லாஹ் அனுப்புகிற வேதனையாகும். இறை நம்பிக்கையாளர்களுக்கு அதை கருணையாக ஆக்கியுள்ளான். கொள்ளை நோய் பரவுகிற இடத்தில் இருப்பவர் யாராயிருந்தாலும் அவர் பொறுமையாகவும், இறை (நம்பிக்கையுடன்) வெகுமதியை விரும்பியவராகவும், அல்லாஹ் நமக்கு எழுதியுள்ளதைத் தவிர, வேறெதுவும் நம்மைப் பீடிக்காது என்று நம்பிக்கைக் கொண்டவராகவும் தன் ஊரிலேயே தங்கியிருந்தால், இறைவழியில் உயிர் தியாகம் செய்தவர் பெறுவதைப் போன்ற நற்பலன் அவருக்கும் நிச்சயம் கிடைக்கும்” என்று இறைத் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஹதீதின் சுருக்கம்) (ஆதாரம்: புகாரி. எண். 3474)
இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள்: “ஓர் ஊரில் கொள்ளை நோய் இருப்பதாக நீங்கள் செவியுற்றால், அங்கு நீங்கள் செல் லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும் போது அங்கு கொள்ளை நோய் ஏற்பட்டால், அந்த ஊரிலிருந்து வெளியேறாதீர் கள்”. (நூல்: புகாரி எண். 5728)
இந்த ஹதீதின் கருத்து பெரும்பாலோரிடம் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. தொற்று நோய் என்ற ஒன்று இருப்பதாலும், அது பிறருக்கும் பரவும் என்பதாலும்தானே, கொள்ளை நோயுள்ள ஊரிலிருந்து வெளி யேறாதீர்கள் என்றும், கொள்ளை நோய் இருக்கும் ஊருக்கு நீங்கள் செல்லாதீர்கள் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டு இருக்கிறது என்றும், அப்படி இருக்கையில், தொற்று நோய் கிடையாது என்று இஸ்லாம் சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்று சிலர் வினவுகிறார்கள்.
இந்த ஹதீதின் கருத்தை தவறாகப் புரிந்து கொண்டதன் விளைவாகவே இப்படியான வினாக்கள் எழும்புகிறது.
இந்த ஹதீது கூறும் உண்மையை இப்போது புரிந்து கொள்வோம்.
“கொள்ளை நோயுள்ள ஊரிலிருந்து வெளியேறாதீர்கள்” என்பதன் பொருள், இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் பெறுவதைப் போன்ற நற்பலன் அவருக்கு கிடைக்காமல் போய்விடும் என்பதற்காகவே, வெளியேறாதீர்கள் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. கொள்ளை நோய் இருக்கும் ஊருக்கு, நீங்கள் செல்லாதீர்கள் என்பதற்கான அர்த்தம், போகாதே என்று தடுக்கப்பட்டும், ஒருவர் அங்கே போய் மரணித்துவிட்டால் அவருக்கு அந்த நற்பலன் கிடைக்காமல் போய்விடும் என்பதற்காகவே, போகாதீர்கள் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. (காண்க மேலேயுள்ள ஹதீஃத் புகாரி, எண். 3474, காண்க மேலேயுள்ள ஹதீஃத் புகாரி, எண். 5728)
குறிப்பு : நடப்பு சூழலில், உலக சுகாதார அமைப்பும், உலகிலுள்ள எல்லா அரசாங்கங்களும், ஏறக்குறைய அனைத்து டாக்டர்களும், நர்சுகளும் வீதிகளை தங்கள் வீடுகளாகப் பாவித்து வாழ்ந்து வரும் காவல் துறையினரும், துப்புரவு பணியாளர்களும், கொரோனா என்ற மாய நோயின் மரணத்திலிருந்து மக்களைக் காப்பாற்றும் பணியில் ஊண், உறக்கம், குடும்பம், குழந்தைகள், உறவுகள், நட்புகள் அனைத்தையும் மறந்துவிட்டு, சுபகாரியம், துக்க காரியம் ஆகியவைகளை தவிர்த்து விட்டு போர்க்கால அடிப்படையில், குறிப்பிட்ட நேரத்தில் செய்து கொண்டிருந்த வேலையை எந்நேரமும் செய்ய வேண்டிய சேவையாக செய்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் மக்களின் மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரியவர்களாகி விட்டனர்.