படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள் குர்ஆனை!
ஷரஹ் அலி, உடன்குடி
நிச்சயமாக மனிதன் பதற்றமிக்கவனாகப் படைக்கப்பட்டுள்ளான். அவனுக்குத் துன்பம் நேரும்போது கலக்கமடைகிறான். தனக்கு நன்மை ஏற்படும்போது (வசதி வாய்ப்புக்கள் மற்றும் செல்வம் வரும்போது மன இறுக்கம் உள்ளவனாக ஆகி மகா கஞ்சனாகி விடுகிறான். தொழுகையாளிகளைத் தவிர… (தொழுகையாளிகள் இத்தகைய தவறுகளில் இருந்து விடப்பட்டிருக்கிறார்கள்) (இறைநூல்: 70:19-22)
அல்லாஹூம்ம மஸ்துர் அவ்ராத்தினா வ ஆமின் ரவ்ஆத்தினா.
இறைவா! என் மானத்தை பாதுகாப்பாயாக! வாழ்க்கையில் திடுங்கங்கள் வரா மல் பதரும் நிலை ஏற்படாத கவலையற்ற நிலையை தா என் இறைவனே என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள். நபிமொழி, ஆய்வாளர், அபுதாவூத், நபிமொழி எண். 5074.
யுக முடிவு நாள் அடையாளம்!
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
தாப்பத்துல் அர்ளு மக்களின் மூக்கின் மேல் முத்திரையிடும் அப்படி முத்திரை இடப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வரும்.
ஒரு மனிதர் ஒட்டகத்தை வாங்குவார். அந்த ஒட்டகத்தை நீ யாரிடம் வாங்கினார்? என்று கேட்டால் மூக்கின் மேல் முத்திரை இடப்பட்டவரிடம் இருந்து வாங்கினேன் என்று கூறுவார். நபிமொழி ஆய்வாளர், இப்னு மாஜா, நபிமொழி எண் 4066, திர்மிதி, தமிழாக்கம், நபிமொழி எண். 3187.
முதலாவதாக வெளிப்படும் அடையாளம்.
மேற்கில் இருந்து சூரியன் உதிப்பதும் நண்பகல் நேரத்தில் (தாப்பத்துல் அர்ளு) அந்த பிராணி மக்களுக்கு காட்சி தருவதும் ஆரம்ப அடையாளமாகும். இதில் எது முதலில் தோன்றினாலும் அதைத் தொடர்ந்து (மற்றவைகள்) ஒன்றன்பின் ஒன்றாக தோன்றிவிடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். (நபிமொழி ஆய்வாளர், முஸ்லிம், தமிழாக்கம், நபி மொழி எண். 5637.)
எவன் தன்னுடைய அதிபதியின் முன்னிலையில் நிற்பது குறித்து அஞ்சினானோ இன்னும் மன இச்சைகளை விட்டு தனது மனத்தை தடுத்திருந்தானோ அவனுடைய இருப்பிடம் சுவனமாக இருக்கும். (இறைநூல் : 79:40,41)
இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்களைப் பற்றி நீங்கள் கவலைப்படுங்கள்! நீங்கள் நேர்வழியில் இருந்தால் மற்றவர்களின் வழிகேடு உங்களுக்கு எந்தத் தீங்கையும் செய்திடாது.
நீங்கள் அல்லாஹ்விடமே திரும்பிச் செல்லவேண்டியுள்ளது. பின்னர் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு அறிவித்து விடுவான்.
(இறைநூல்: 5:105)