இரவுத் தொழுகையும்… அதன் வழிமுறைகளும்…
முஹம்மத் ரஃபி
மறு பதிப்பு :
அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்க ளுக்கு ஐந்து நேர ஃபர்ழான தொழுகை கடமையாவதற்கு முன்பே இரவுத் தொழுகையை தொழும்படி ஆரம்பகால வஹீ அறி விப்பில் அல்லாஹு ரப்புல் ஆலமீன் 73வது அத்தியாயத்தில் கூறுகிறான்.
“போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே! இரவில் சிறிது நேரம் தவிர்த்து (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக;” அல்குர்ஆன் 73:1,2
மேலும் இரவுத் தொழுகையில் நாம் கேட்கும் துஆவானது அல்லாஹு ரப்புல் ஆலமீனால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்று நபி(ஸல்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நமது இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் பொழுது “என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கின்றேன்; யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கின் றேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கின் றேன்” என்று கூறுகிறான். நூல் : புகாரி 1145
ஒரு மனிதனுக்கு உறக்கம் என்பது மிக முக்கியமான ஒன்றாக இருக்கின்றது.பாதி இரவு வரை ஒருவர் புரண்டு, புரண்டு படுத் தாலும் இரவின் கடைசியில் அவர் தன்னை யும் அறியாமல் உறங்கி விடுவார். இப்படி யயாரு இன்பமான தூக்கத்தை தியாகம் செய்து அல்லாஹ்வின் முன் நின்று ஒருவர் வணங்கி, தன் தேவையை கேட்பாரானால் அவரது துஆவை அல்லாஹுரப்புல் ஆலமீன் ஏற்றுக் கொள்கின்றான். இவ்வா றான நேரங்களில் இறைவனிடம் பாவ மன்னிப்புக் கோருபவர்களாக முத்தகீன்கள் இருப்பார்கள் என்று அல்லாஹ்வே சிலாகித்துச் சொல்கின்றான்.
“ஸஹர் நேரத்தில் மன்னிப்புக் கோரு வோராகவும் (முத்தகீன்கள்) இருப்பார்கள்.” அல்குர்ஆன்: 3:17
ஒருவர் தனது இன்பமான தூக்கத்தை அல்லாஹ்வுக்காக தியாகம் செய்வாரேயா னால், அவர் அல்லாஹ்வுக்காக தனது வாழ்க்கையின் அனைத்து இன்பத்தையும் தியாகம் செய்யக்கூடிய மனப்பக்குவத்தை அது அளிக்கிறது. இவ்வாறான நிலையையே இறைவனும் தனது அடியானிடம் எதிர் பார்க்கின்றான். மேலும் இன்று நம் சமூகத் தில் இரவுத் தொழுகை என்பது ரமழான் மாதத்தில் மட்டும் நிறைவேற்றக்கூடிய தொழுகையாக ஆக்கப்பட்டுள்ளது; அம் மாதத்தோடு அத்தொழுகையை நம் சமூகத் தவர்களால் மூட்டையும் கட்டப்பட்டு விடும்.
ஆனால் அத்தொழுகை பற்றி அன்னை ஆயிஷா(ரழி) அவர்களின் அறிவிப்பானது, அது எல்லாக் காலங்களிலும் இரவில் நிறை வேற்றப்படக்கூடியது என புலனாகிறது.
அபூஸலாமா(ரழி) கூறியதாவது: ரமழா னில் நபி(ஸல்) அவர்களின் தொழுகை எவ் வாறு இருந்தது என நான் ஆயிஷா(ரழி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் நபி(ஸல்) அவர்கள் ரமழானிலும், ரமழான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரகாஅத் துகளை விட அதிகமாகத் தொழுததில்லை. நூல்: புகாரி 1147
இந்த இரவுத் தொழுகையை நாம் இதன் அடிப்படையில் ரமழானிலும், ரமழான் அல்லாத நாட்களிலும் தொழுது வரவேண்டும். இன்னும் இரவுத் தொழுகையை பற்றி அல்லாஹ் சொல்லிக் காண்பிக்கின்றான்.
“இன்னும் இரவில் (ஒரு சிறு) பகுதியில் உமக்கு உபரியான தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுது வருவீராக”. அல்குர்ஆன் 17:79
தஹஜ்ஜத் எனும் சொல்லின் பொருள் தூக்கத்தை களைந்து விட்டு எழுதல் என்ப தாகும். இரவு நேரத்தில் தஹஜ்ஜத் தொழுகையை கடைப்பிடிப்பதன் பொருள், இரவின் ஒரு பகுதியில் உறங்கிய பின்னர் மீண்டும் எழுந்து தொழுவதாகும். இவ்வாறு ஒரு மனிதன் இன்பத்திலும், நிம்மதியிலும் ஆழ்ந்திடச் செய்யும் தூக்கத்தைத் துறந்து எழுந்து தொழும் தொழுகை பல சிறப்பம்சங்கள் பொருந்தியது. உலக மறுமை பயன்களை பெற்றுத் தரக்கூடியது. இரவுத் தொழுகை முஃமினுக்கான கெளரவம் என மற்றொரு ஹதீஃத் கூறுகிறது.
அல்லாஹ் முகம் பார்த்து சிரிக்கும் மூவரில் இரவுத் தொழுகையை தொழுபவரும் ஒருவர். ஒருமுறை நபி(ஸல்) அவர்களிடம் கடமையான தொழுகைக்குப் பிறகு எந்த தொழுகை சிறப்பானது? என்று வினவப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் “இரவுத் தொழுகை’ என பதில் கூறினார்கள். மேலும் இரவுத் தொழுகையை தொடர்ந்து தொழுது வரும் மனிதன் கொள்கையுறுதி கொண்டவராக, இறைவனின் கட்டளைகளை, அல்குர்ஆனின் கருத்துக்களை மனதில் ஆழப் பதிய வைத்துக் கொள்கின்றார். அவர் உள்ளம் குர்ஆனிய சிந்தனையில் பொழிவடைகின்றது. அவர் சிந்தனை தெளிவடைகின்றது. கொள்கையில் திடம் பிறக்கின்றது. இந்த குர்ஆனின் அடிப்படையிலொரு சமூக அமைப்பு உருவாகாதவரை அவர் ஓய்வெடுப்பதில்லை. ஆனால் இன்று நம்மிடையே மிகவும் குறைந்துள்ள அமல் இதுவாகத்தான் இருக்கும். கடமையான ஐங்கால தொழுகைகளையே கோட்டை விட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம் சமுதா யம் தஹஜ்ஜுத் தொழுகையை பற்றி எங்கே அக்கறை கொள்ளப் போகிறது?
எவர்கள் எல்லாம் இறைத்தூதர் பணியை தொடர்கின்றார்களோ, அப்பாதையில் பயணித்து தம்மை முத்தகீன்களாக முஹ்ஸின்களாக ஆக்கிக்கொள்ள முயல்கிறார்களோ அவர்கள் இத்தொழு கையை, தொழுது வருவது அவசியமான தாகும். அல்குர்ஆனில் எங்கெல்லாம் முத்தகீன்கள், முஹ்ஸின்கள் சிறப்புகளை அல்லாஹ் கூறுகிறானோ அங்கெல்லாம் அவர்களுடைய இரவில் தொழும் பண்பையும் தவறாமல் குறிப்பிட்டே வருகின்றான். (பார்க்க : அல்குர்ஆன் 51:18, 3:17)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ரமழான் மாத நோன்புக்கு அடுத்து படியாகச் சிறந்த நோன்பு யாதெனில், அல்லாஹ்வின் மாதமான “முஹர்ரம்’ மாத நோன்பாகும். கடமையாக்கப்பட்ட தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை இரவுத் தொழுகை (தஹஜ்ஜத்) ஆகும். அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரழி), நூல் : திர்மிதி : 402.
இத்தகைய இரவுத் தொழுகையை இரவில் எழுந்து வணங்குவது என்பது அதிரடியாக நம்மால் கொண்டுவர முடியவில்லை என்றாலும், படிப்படியாக பழக்கத் துக்குக் கொண்டு வந்து பின் நிரந்தரமாக்கி முத்தகீன்களாக, முஹ்ஸின்களாக, நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். அவ்வாறான பழக்கத்தை நம்மிடையே கொண்டுவர சில உதாரண வழிமுறைகளை கடைபிடித்துப் பாருங்களேன்! இன்ஷா அல்லாஹ் பலன் கிடைக்கும்.
- “உணவினை குறைத்தல்”, அதிகமான உணவு அதிக தூக்கத்தை தரும். உணவை குறைத்தால் இரவில் எழுவதை இலகுவாக் கும்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: வயிற்றில் மூன்றில் ஒன்று உணவாகவும், ஒன்று தண்ணீராகவும், ஒன்று வெறு மையாகவும் இருக்கட்டும் என்று சொன்னார்கள்.
நூல்கள்: அஹ்மது, திர்மிதி : 2380
- “பகல் நேர சிறு உறக்கம்” (கைலுலா): நபி(ஸல்) அவர்கள் பகல் நேர தூக்கத் தினூடாக இரவும் தொழுகைக்கான பலத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறினார்கள். (புகாரி : 905)
- பாவங்களை தவிர்த்து வாழ்தல்: மனி தன் செய்யும் பாவங்கள் இபாதத்துக்கள், நல் அமல்களை விட்டு தூரமாக்கி விடும். சுன்னத்தான அமல்கள் ஒருபுறம் இருக்க கடமையான அம்சங்களையே சில சமயம் பாவங்களின் காரணமாக மறந்து போவான். எனவே பாவங்கள் அதன் சாயல்கள் ஆகியவற்றை விட்டு தவிர்த்து இருப்பது இபாதத்துக்கள் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தும்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உயர்வும் வளவும் மிக்க இறைவன் ஒவ்வோர் இரவிலும், இரவின் முதல் மூன்றிலொரு பகுதி கழியும்போது கீழ் வானிற்கு இறங்கி வந்து, “”நானே அரசன்; என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனையை நான் ஏற்கிறேன். என்னிடம் யாரேனும் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் யாரேனும் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்” என்று கூறுகிறான். இவ்வாறு வைகறை (ஃபஜ்ர்) நேரம் புலரும் வரை கூறிக் கொண்டிருக் கிறான். (அறிவிப்பாளர்:அபூஹுரைரா(ரழி) நூல்: திர்மிதி : 408)
இவ்வாறான அல்லாஹ்வின் மீதான மறுமை மீதான நம்பிக்கை, அச்ச உணர்வு மற்றும் இந்த இபாதத்திற்கான பெரு மதிப்பை உணர்ந்து, அதை அடைய வேண் டும் என்ற அடங்காத ஆசை போன்றவை தஹஜ்ஜத் தொழுகைக்கு பெரும் தூண்டுதலாக அமையும்.
மேலும் நாம் ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்லும் முன் நபி(ஸல்) அவர்களின் வழிமுறைப்படி அல்லாஹ்வை நினைவு கூர்ந்து, தஹஜ்ஜத் தொழவேண்டும் என்ற பேராவலோடு உறங்கச் செல்வோமானால், நிச்சயம் அல்லாஹ் நமக்கு இரவுத் தொழுகை (தஹஜ்ஜத்) தொழுவதற்கு கிருபை செய்வான்.
ஆக மக்கள் எல்லாம் தங்கள் முதுகு களை படுக்கையில் சாய்த்து இன்பத்தில் திளைத்திருக்க, ஓர் இறை அடியார் தன் உறக்கத்தை துறந்து இறைவன் முன் நின்று வணங்குவதில் இன்பம் கண்டு கொண்டிருப்பார்.
“அவர்களுடைய விலாக்களை படுக் கைகளிலிருந்து (தூக்கத்தை துறந்து) உயர்த்தி அவர்கள் தங்களுடைய இறை வனை அச்சத்தோடும் நம்பிக்கை ஆர்வத் தோடும் பிரார்த்தனை செய்வார்கள்; மேலும் நாம் அவர்களுக்கு அளித்ததிலி ருந்து செலவும் செய்வார்கள்…” அல்குர்ஆன் : 32:14
இவ்வாறான பாக்கியத்தை பெறக்கூடி யவர்களாக வல்ல நாயன் அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி வைப்பானாக ஆமீன்.