இதுதான் இயக்கவாதிகளின் ஏகத்துவம்,,,,,
அல்லாஹ் அர்ஷின் மீதா? அல்லது ஆகாயத்திலா?
- ஹலரத் அலி
இன்றைய இயக்கத் தலைவர், ஏராள மான புதுப்புது மார்க்க விளக்கம் கொடுத்து சமுதாயத்தில் குழப்பம் உண்டாக்கி வரு வது அனைவரும் அறிந்ததே! உதாரணமாக, 3:7 வசனத்தில் முதஷாபிஹாத் வசனங் களை அல்லாஹ்வும் அறிவான், அறிஞனும் அறிவார்கள். 2:102 ஹாரூத் மாரூத் என்ற இருவரும் மலக்குகள் அல்ல, ஷைத்தான்களே! வேதம் கொடுக்கப்பட்ட யூத, கிருஸ்துவ பெண்களை மண முடிக்கக் கூடாது. நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்படவில்லை என்ற குழப்ப ஃபத்வாக்களை முன் வழங்கினார். இப்பொழுது இவரது ஹதீத் விளக்கம் என்ற பெயரில் அல்லாஹ் இருப்பது அர்ஷிலா அல்லது ஆகாயத்திலா? என்பதே புதிய சர்ச்சை, இதோ ஏகத்துவம் கூறுகிறது.
அல்லாஹ் அர்´ன் மீதா? அல்லது ஆகாயத்திலா?
“உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும், ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்´ன் மீது அமர்ந்தான்”. அல்குர்ஆன் 7:54
இதுபோன்ற 20:5, 10:3, 13:2 போன்ற வசனங்களில் அல்லாஹ் அர்ஷின் மீது அமர்ந்திருக்கின்றான் என்று ஆணித்தரமாக அடித்துச் சொல்கின்றன.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
“நமது இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கின்றேன். யாரே னும் என்னிடம் கேட்டால் நான் அவருக்குக் கொடுக்கின்றேன். யாரேனும் என்னிடம் பாவ மன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்” என்று கூறுவான். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரழி) நூல்கள்: புகாரி 1145,6321, 7394, முஸ்லிம் 1261.
இந்த ஹதீதில் அல்லாஹ் முதல் வானத்திற்கு ஒவ்வொரு நாள் இரவில் இறங்குகின் றான் என்ற கருத்து இடம் பெறுகின்றது.
கடந்த கால மக்களிடம் (சஹா பாக்கள், தாபியீன்கள், தபஉ, தாபியீன்கள், மரியாதைக்குரிய இமாம்கள்) இந்தக் கருத்து முன் வைக்கப்பட்ட போது அவர் களுக்கு இதில் எந்த ஐயமும் ஏற்பட அறவே வாய்ப்பில்லை. ஆனால் பூமி 24 மணி நேர மும் உலகின் ஒவ்வொரு பகுதியில் இரவின் கடைசிப் பகுதி ஏற்பட்டுக் கொண்டே தான் இருக்கும்.
இரவின் கடைசிப் பகுதியில் அல்லாஹ் முதல் வானத்தில் இறங்கி விடுகின் றான் என்றால் 24 மணி நேரமும் அல்லாஹ் முதல் வானத்தில் தான் இருக்கிறான் என் றாகிவிடும். அதாவது அர்ஷில் இல்லை. அர்ஷ் காலியாக உள்ளது என்ற கருத்து வந்துவிடும். இங்கு குர்ஆன் கூறும் கொள்கை ரீதியான விளக்கத்திற்கு நபி(ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீத் மோதுவதாக அமைகிறது. உண்மையில் ஆதாரப் பூர்வமான எந்த ஹதீதும் குர்ஆனிடம் முரண்படாது. ஆகவே ஹதீதின் விளக்கம்.
“அல்லாஹ் இறங்கி வருகின்றான் என்றால், அல்லாஹ் நமது கோரிக்கையை மிக விரைந்து ஏற்றுக் கொள்கின்றான்” என்ற விளக்கத்தை கொடுக்க வேண்டியவர்களாகின்றோம். “ஏகத்துவம்’ ஜூலை 2005, பக். 48.
இது தான் தவ்ஹீது ஆலிமின் விளக்கம். குர்ஆனும், ஹதீதும் இவர்கள் அற்ப அறிவிற்கு முரண்படுகிறதாம். ஆகவே இவர்கள் சுயவிளக்கம் கொடுக்கிறார்களாம். உண்மையில் இந்த இயக்க ஆலிம்களின் தவ்ஹீது அறிவு? அன்றைய மக்கத்து ஜாஹிலியா மக்களின் அறிவைப் போன்றே உள்ளது.
“ஒரு சமயம் நபி(ஸல்) அவர்களின் கொடிய எதிரியான உமையா இப்னு கலப்பின் சகோதரன் “உபை’ என்பவர். உக்கி மக்கி மண்ணாய் போன ஒரு எலும்பைக் கொண்டு வந்து, அவ்வெலும்பை கைகளினால் நொறுக்கி அதன் துகள்களை நபி (ஸல்) அவர்கள் முகத்திற்கெதிரே ஊதிவிட்டு, “இறைவன் இவ்வெலும்பிற்கு உயிர் கொடுப்பானா?” என்று கேட்டார். அப்பொழுது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
“நிச்சயமாக அவன் இதனை உயிர்ப்பிப்பான். உம்மை கூட நீர் இப்போது இருப்பதைப் போன்றே உயிர்ப்பிப்பான். உம்மைக் கூட நெருப்பில் ஆழ்த்து வான்” என்று கூறினார்கள். மக்கத்து காஃபிர் களின் சந்தேகங்களுக்கு அல்லாஹ் பதில ளித்தான். நூல்: இப்னு இஸ்ஹாக் 239
“அவன் தன்னுடைய சிருஷ்டியை மறந்து விட்டு ஓர் உதாரணத்தை நம்மிடம் எடுத்துக்காட்டு கிறான். உக்கி மண்ணாய்ப் போன (இந்த) எலும்புக்கு உயிரூட்டுபவன் யார்? என்று அவன் கேட்கின்றான். நீர் கூறும், முதல் முறையில் அதனை சிருஷ்டித் தவன் எவனோ, அவனே அதனை உயிர்ப்பிப்பான்”. அல்குர்ஆன் 36:78
இயக்க ஆலிம்களின் சந்தேகங்களைப் படிக்கும்போது, உண்மையில் இவர்கள் அல்லாஹ்வின் ஆற்றலை வல்லமையை அறிந்து கொண்டிருக்கிறார்களா? என்ற சந்தேகமே நமக்கு ஏற்படுகிறது.
“24 மணி நேரமும் உலகம் சுழல்வதால் உலகின் ஒவ்வொரு பகுதியில் இரவின் கடைசிப் பகுதி ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். அப்படியானால் 24 மணி நேரமும் அல்லாஹ் கீழ்வானத்திலேயே இருக்க வேண்டியிருக்கும். எனவே அர்ஷ் காலியாக இருக்கும். அல்லாஹ் ஒரே நேரத்தில் அர்´லும் கீழ்வானத்திலும் இருக்கமுடியாது” இயக்கவாதி ஆலிம்களின் பேரறிவிற்கு இப்படித்தான். விளங்க முடிகிறது.
“ஒரு பொருள் ஓரிடத்தில் இருந்தால் அது இன்னொரு இடத்தில் இருக்க முடியாது என்பதுதான் அவன் (அல்லாஹ்) கற்றுத் தரும் இயற்கை விதி” என்று கூறி உதாரணமாக,
“குருடனும் பார்வையுடையவனும், இருள் களும், ஒளியும், நிழலும், வெயிலும் சமமாகாது” அல்குர்ஆன் 35:19,21
ஆகவே இந்த இயற்கை விதியின்படி, தான் ஏகன், ஒருவன், தன்னிகரற்றவன் என் பதை நிரூபிக்கிறான். இந்த இயற்கை விதி யின் அடிப்படையில் அவன் அர்´ல் தான் இருக்கிறான். அவன் வேறொரு இடத்திற்கு இடம் பெயர்வதில்லை. அதாவது அவன் நிர்ணயித்த அந்த விதிக்கு அவன் ஒருபோதும் முரண்படுவதில்லை. ஒரே சமயத்தில் அர்ஷிலும், முதல் வானத்திலும் அல்லாஹ் இருக்க முடியாது. ஏகத்துவம், ஜூலை 2005, பக். 50
இயக்கவாதிகள் ஓர் அடிப்படை உண்மையை அதாவது தவ்ஹீதின் பால பாடத்தை அறிந்து கொள்ளவில்லை. படைத்தவன் வேறு, படைப்பினங்கள் வேறு, அல்லாஹ் வேறு, அடிமைகள் வேறு, அல்லாஹ்வுக்குள்ள பண்புகள் அடிமைகளுக்கு இருக்க முடியாது. அடிமைகளுக்குள்ள பண்புகள் அல்லாஹ்விற்கு இருக்க முடியாது. இதுதான் தவ்ஹீதின் அடிப்படை இந்த அடிப்படை பால பாடம் அறியாத பாமரர்களாக தவ்ஹீது ஆலிம்கள் இருப்பது ஓர் அவலம்.
இயக்க ஆலிம்களுக்கு வந்த குழப்பம். சந்தேகம், படைத்தவன் அல்லாஹ் அர்´லா? அடிவானத்திலா? இங்கு படைப் பினங்களைப் பற்றி எந்த வாதமும் வைக்கப் படவில்லை. இங்கு வைக்காத வாதத்திற்கு தவறான பதில் தந்து வாசகர்களை குழப்பு கிறார்கள்.
“குருடனும், பார்வையுள்ளவன், இருள், ஒளி, நிழல், வெப்பம், ஊசித் துவார, ஒட்டகம்” உதாரணம் காட்டப்பட்ட அனைத்தும் அல்லாஹ்வால் படைக்கப்பட்ட படைப்பினங்கள்தான் படைப் பினங்களின் உதாரணம் படைத்தவனை கட்டுப்படுத்த முடியாது. உலகில் காட்டப்படும் உதாரணங்கள் அனைத்தும் படைப்புகளின் உதாரணம். படைப்பினங்களாகிய மனிதர்களுக்கே பொருந்தும். இவைகள் படைத்த ரப்புல் ஆலமீனுக்கு உதாரணமாக காட்ட முடியாதவை. காட்ட கூடா தவை. அவன் ஒப்பற்றவன். அவனுக்கு சம மாக ஏதுவுமில்லை. படைத்தவனும் படைப்புகளும் ஒருக்காலும் சமமாக முடியாது.
இதுபோன்ற கொள்கை குழப்பம் நபி தோழர்களுக்கு வந்ததில்லை. தாபியீன்களுக்கு வந்ததில்லை. இமாம்களுக்கு வந்ததில்லை. ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வின் வல்லமையை ஆற்றலை நன்கு அறிந்தவர்கள், படைத்த ரப்பு நமக்கு தந்த அறிவு மிக அற்பமானது. இந்த அற்ப சொற்ப அறிவைக் கொண்டு அல்லாஹ்வின் செயல்பாடுகளுக்கு விளக்கம் கொடுக்க முயற்சிப்பது மூடத்தனம். இதுபோன்ற விளக்கம் இறுதியில் வழிகேட்டில் தான் முடியும் என்பதை அவர்கள் நன்கு விளங்கி வைத்திருந்தார்கள்.
“….அறிவிலிருந்து மிக சொற்பமே தவிர நீங்கள் கொடுக்கப்படவில்லை. (ஆதலால் அதன் நுட்பங்களை நீங்கள் அறிந்து கொள்ள முடியாது)” என்று கூறுவீராக!. அல்குர்ஆன் 17:85
“அல்லாஹ் இரவின் கடைசிப் பகுதியில் முதல் வானத்திற்கு இறங்குகின்றான்” என்றால் அதை அப்படியே நம்ப வேண்டும் இப்படி இறங்கி வருவதால் “அர்ஷ்’ காலியாகி விடும்போன்ற ஷைத்தானிய சிந்தனைகள் ஒரு முஃமி னுக்கு வரக்கூடாது.
அல்லாஹ் இறங்கி விடுவேன் என்று சொன்னால் அவன் நிச்சயம் இறங்கி விடுவான். அது அவனுக்கே உள்ள தகுதிக்கு தகுந்தாற்போல் வருவான். அது எப்படி என்ற ஆராய்ச்சி நமக்குத் தேவையில்லை. அந்த அளவிற்கு நமக்கு அறிவு கொடுக்கப்படவில்லை.
“அவர்கள் அவனை (அல்லாஹ்வை தங்கள்) கல்வியால் தீர அறிந்து கொள்ள மாட்டார்கள்”. அல்குர்ஆன் 20:110
1400 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நபி தோழர்களுக்கு உலகம் உருண்டை என்பது தெரியாது. 24 மணி நேரம் சுழல்வது என்ற அறிவியல் உண்மை தெரியவில்லை. ஆகவே இதை அப்படியே ஏற்றுக் கொண்டார்கள். 21ம் நூற்றாண்டு மனிதனுக்கு பூமி 24 மணி நேரம் சுழல்வது தெரிந்து விட்டது. ஆகவே இவர்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என்று புறப்பட்டவர்கள் அல்லாஹ் வின் வல்லமையில் ஷிர்க் வைத்து விட்டார்கள். “அர்´ல் கீழ்வானத்தில் அல்லாஹ் ஒரே சமயத்தில் இருக்க முடியாது’. அல்லாஹ்வுக்கும் வரம்பு கட்டி “செக்’ வைத்து விட் டார்கள் நவூதுபில்லாஹ்! இதுதான் இவர்கள் தவ்ஹீத்.
சரி! நாம் கேட்கின்றோம். அன்றைய மக்களுக்கு அறிவியல் உண்மைகள் தெரிய வில்லை. அப்படியே ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் படைத்த அல்லாஹ்வுக்கு இனிவரப்போகும் மக்கள் அறிவு ஜீவிகளாய் இருப்பார்கள். ஏராளமான கேள்வி, சந்தே கங்களை தெளிவுபடுத்தாவிட்டால் மார்க்கம் மதிப்பிழந்து விடும் என்று நினைத்திருந் தால் அல்லாஹ் அன்றே இது போன்ற சந்தே கங்களை நீக்கியிருப்பான். ஆனால் அல் லாஹ் நிச்சயம் பேரறிவாளன். அவனுக்கு நன்கு தெரியும். உண்மை முஸ்லிம்கள் இது போன்ற ஃபித்னா வாதங்களை வைக்க மாட்டார்கள் என்று இவ்வசனத்தை இறக்கினான்.
“எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்து வதற்காக முத்தஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகிறார்கள்”. கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிட மிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம் என்று கூறுவார்கள். அல்குர்ஆன் 3:7
“அர்´ல் முதல் வானத்தில் ஒரே சமயத்தில் அல்லாஹ் இருக்க முடியாது” என்று கூறும் இயக்க ஆலிம்கள் விளங்குவதற்காக அல்லாஹ் கூறுகிறான்.
“அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றல் பெற்றிருக்கிறான் என்பதையும் அல்லாஹ்வின் அறிவு ஒவ்வொரு பொருளையும் சூழ்ந்திருக் கின்றது என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ளுங் கள்”. அல்குர்ஆன் 65:12
அர்´ல் அமர்ந்த அல்லாஹ்தான் இரவு, பகலை மூடுகிறான். “”பின் அர்ஷில் அமர்ந்தான்; அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்” அவ்விரவு பகலை வெகு விரைவாக்கப் பின் தொடர்கிறது”. அல்குர்ஆன் 7:54
அல்லாஹ் அர்´ல் இருக்கிறானா? முதலாம் வானத்தில் இருக்கின்றானா போன்ற கேள்விகளை அவனை நோக்கி எழுப்பக்கூடாது.
“அவன் செய்பவை பற்றி எவரும் அவனைக் கேட்க முடியாது” அல்குர்ஆன்21:23
துர்பாக்கியமாகிய, தவ்ஹீது பெயரைச் சொல்லி வயிறு வளர்க்கும் கூலி ஆலிம்கள் பின்னால் இன்று மக்கள் உள்ளனர். அல்லாஹ்வை எப்படி மதிக்க வேண் டுமோ, எப்படி கண்ணியப்படுத்த வேண்டுமோ, அவ்வாறு மதிக்கவில்லை, கண்ணியப்படுத்தவில்லை. இதுதான் இன்றைய இயக்க ஆலிம்களின் இஸ்லாம் அல்லாஹ் வின் வல்லமை ஆற்றல்களை அன்று முதல் இன்று வரை வழிகெட்ட கூட்டத்தினர் சந்தேகம் கொண்டே இருக்கின்றனர்.
“ஒரு யூதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து முஹம்மதே! அல்லாஹ், வானங்களை ஒரு விரல் “மீதும்’, பூமிகளை ஒரு விரல் மீதும், மரங்களை ஒரு விரல் மீதும் தண்ணீர் ற்றும் ஈரமான மண்ணை ஒரு விரல் மீதும், இதரப் படைப்பினங்களை ஒரு விரல் மீதும் வைத்துக் கொண்டு “நானே அரசன்” என்று சொல்வான், என்றுள்ளதே எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்களை இதைக் கேட்டு சிரித்துக் கொண்டு, அவர்கள் அல்லாஹ்வை எவ்வாறு மதிக்க வேண்டுமோ, அவ்வாறு மதிக்கவில்லை மறுமை நாளில் பூமி முழுவதும் அவன் கைப்பிடியில் இருக்கும் வானங்கள் அவனது கரத்தில் சுருட்டப்பட்டிருக்கும்” அவர்கள் இணை வைப்பதிலிருந்து அவன் தூயவன், உயர்ந்தவன் எனும் 39:67 வசனத்தை ஓதினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரழி), நூல்: புகாரி.
“அல்லாஹ் எவருடைய இருதயத்தை இஸ்லாத்திற்காக விசாலமாக்குகிறானே அவர் தம் இறைவனின் ஒளியில் இருக்கிறார்; (ஆனால்) அல்லாஹ்வுடைய திக்ரை நினைவை விட்டும் விலகி எவருடைய இருதயங்கள் கடினமாகி விட்டனவோ, அவர்களுக்குக் கேடுதான். இத்தகையோர் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார்கள். அல்குர்ஆன் 39:22