இறைவனை முறையாக அஞ்சுவோர் அறிஞர்களே!

in 2022 ஜனவரி

இறைவனை முறையாக அஞ்சுவோர் அறிஞர்களே!

அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுபவர்கள் அறிஞர்கள்தான்.  (அல்குர்ஆன் 35:28)

அனஸ் பின் மாலிக்(ரழி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதரே! “நல்லதை ஏவு வதையும், தீமையை தடுப்பதையும் எப்போது நாங்கள் நிறுத்த வேண்டும்?” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களுக்கு முன் வந்தவர் களிடையே தோன்றியவை உங்களிடையே தோன்றும் போது நீங்கள் நிறுத்திக் கொள்ளுங்கள்.

அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கு முன் வந்தவர்களிடம் தோன்றியவை என்ன?”  என்று  கேட்டேன்.

அதற்கு, இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட ராஜ்ஜிய அதிகாரம். வயதானவர்களி டம் ஒழுக்கமற்ற செயல், மற்றும் மோச மான அறிவு என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். சுனன் இப்னு மாஜா, நபி மொழி எண். 4015.

நேரும் துன்பம் நேற்றே முடிவானது:

ஒரு துன்பம், பூமியில் ஏற்பட்டாலும் உங்களுக்கு நேர்ந்தாலும் அதை நாம் படைப்பதற்கு முன்பே பதிவேட்டில் அது இல்லாமல் இராது. நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு எளிதானதாகும்.  (அல்குர்ஆன் 57:22)

அவன் அனுமதியின்றி சோதனை நேராது :

அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த சோதனையும் (உங்களுக்கு) நேராது. யார் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கி றாரோ அவரது உள்ளத்தை அல்லாஹ் நேர்வழிப்படுத்துவான்.

அல்லாஹ்வுக்கும் கீழ்ப்படியுங்கள்; இத் தூதருக்கும் கீழ்ப்படியுங்கள், நீங்கள் புறக் கணித்தால் (அதனால் இழப்பு உங்களுக்கே. ஏனென்றால்) தெளிவாக எடுத்துரைப்பது மட்டுமே நம் தூதர் மீது கடமையாகும்.

அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவ னில்லை. இறை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வையே சார்ந்திருக்கட்டும்.  (அல்குர்ஆன் 64:11-13)

அவன் எழுதியது தான் நடக்கும் :

(நபியே!) அவர்களிடம் நீர் அல்லாஹ் எங்களுக்கு எழுதியதைத் தவிர வேறு எதுவும் எங்களை ஒருபோதும் அணுகாது.

அவனே எங்கள் பொறுப்பாளன். எனவே இறை நம்பிக்கை கொண்டவர் அல்லாஹ்வையே சார்ந்திருக்கட்டும்.  (அல்குர்ஆன் 9:51)

எந்த மனிதர் தமக்குச் சோதனை ஏற் படும்போது, “நிச்சயமாக இது, அல்லாஹ்விடமிருந்தே வந்ததாகும்என்று அறிந்து, அதைப் பொருந்திக் கொண்டு அமைதி அடைந்து, தொடர் சோதனை ஏற்படும் போது, “இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்என அவர் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கவும்.

ஏனெனில், ஓர் இறை நம்பிக்கையாளரின் நிலை ஆச்சரியமானதாகவே அமைந்தி ருக்கிறது. அவருக்கு அல்லாஹ் எதை விதித்தாலும் அது அவருக்கு நன்மையாகவே அமைந்து விடுகிறது.

அவருக்குத் துக்கம், துன்பம் ஏற்படுமாயின், உடனே பொறுமை காக்கிறார்; அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டால், உடனே அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறார்; அதுவும் அவருக்கு நன்மையாகவே அமைந்து விடுகிறது. இது இறை நம்பிக்கையாளருக்குத் தவிர வேறு யாருக்கும் வாய்ப்பதில்லை என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள். முஸ்லிம் தமிழாக்கம், நபிமொழி எண். 5726

கஷ்டத்திற்குப் பின் சுலபம் :

அல்லாஹ் எந்த ஆன்மாவையும், அதற்குத் தான் வழங்கி உள்ளதற்கு மேல் சிரமப் படுத்தமாட்டான். சிரமத்திற்குப் பின் விரைவில் வசதியை அல்லாஹ் ஏற்படுத்துவான்.
(
அல்குர்ஆன் 65:7)

Previous post:

Next post: