நல்லது இருந்தால் அதனை எடுத்துக்கொள்ளலாம்!
எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.
டிசம்பர் 2021 தொடர்ச்சி…
“தனது இனத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சியின் முன்மாதிரியாக எறும்பை அல்லாஹ் குர்ஆனில் (அந்நம்ல்) “எறும்பு” எனும் அத்தியாயத்தில் சொல்லிக் காட்டுகின்றான்”. (27:17-19)
நபி சுலைமான்(அலை) அவர்களுக்காக ஜின்கள், மனிதர்கள், குதிரைகள், பறவைகள் எனப் பல்லினங்களின் படை கள் ஒன்று திரட்டப்பட்டனர். அவர்கள் அனைவரும் அணி வகுத்து நிறுத்தப்பட்டனர். அவர்கள் எறும்புகள் கூட்டமாக வாழும் ஓர் ஓடையைக் கடந்து சென்ற போது ஓர் எறும்பு சுலைமான் (அலை) அவர்களின் படையிலுள்ள குதிரைகள் தமது குளம்புகளால் எறும்புக் கூட்டத்தை மிதித்து நசுக்கிவிடும் என்று அஞ்சியது. எனவே அது எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்துவிடுங்கள். சுலைமானும் அவருடைய படையினரும் தங்களுக்கே தெரியாமல் உங்களை மிதித்துவிட வேண்டாம் என்று கூறியது. அதையே, தனது இனத்தைப் பாதுகாப்பதற்காக எறும்பு நடந்து கொண்ட முன்மாதிரியை இறைவன் இவ்வாறு புகழ்ந்து பேசுகின்றான்.
அவ்வாறு அந்த எறும்பு கூறியதைக் கேட்டு சுலைமான் புன்னகைத்துச் சிரித்தார். (27:17-19) என்பதாகவும் பிரஸ்தாபிக்கின்றான். அத்துடன் 93 வசனங்கள் கொண்ட இந்த அத்தியாயத்தில் 17,18,19 ஆகிய மூன்று வசனங்களில் மட்டுமே இது பேசப்பட்ட போதிலும் இந்த அத்தியாயத்திற்கு அந்நம்ல் “எறும்பு” என்றே பெயரிடப்பட்டுள்ளது.
“சடலத்தை மண்ணில் புதைப்பதற்கு முன் மாதிரியாக இருந்த காகத்தைக் குறித்தும் அல்லாஹ் பிரஸ்தாபிக்கும்போது”
தனது சகோதரரின் உடலை எவ்வாறு மறைப்பது என்று அவனுக்குக் காட்ட அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான், அது பூமியைத் தோண்டியது. “அந்தோ! இந்தக் காகத்தைப் போல் இருப்பதற்குக் கூட என்னால் இயலவில்லையே! அவ்வாறு இருந்திருந்தால் என் சகோதரரின் உடலை மறைத்திருப்பேனே” எனக் கூறினான். (அவன்) கவலைப்பட்டவனாக ஆனான். (5:31)
சூரியனுக்குச் சிரம் பணிவோராக இருந்தவர்களது கூற்றையும் உண்மைப்படுத்திய அல்லாஹ். (27:20-33)
சூரியனை வணங்கி வழிபட்டுவந்த “ஸபா” எனும் யமன் நாட்டின் மக்கள் மீது நபி சுலைமான்(அலை) அவர்கள் படை யயடுத்து யுத்தம் செய்யப்போவதை அறிந்த அந்நாட்டின் அரசியான பல்கீஸாகிய அவள், “நிச்சயமாக அரசர்கள் (படையயடுத்து) ஓர் ஊருக்குள் நுழைந்துவிட்டால் அதைச் சீரழித்துவிடுவார்கள். அங்குள்ளோரில் மதிப்பு மிக்கோரை(ச் சிறுமைப்படுத்தி) இழிந்தவர்களாக ஆக்கி விடுவார்கள்” என்று கூறினாள். (27:34) அதாவது: அரசர்கள் ஓர் ஊருக்குள் படையயடுத்துப் பலவந்தமாக நுழைந்துவிட்டால் அந்த ஊரைப் பாழாக்கி விடுவார்கள். நாசப்படுத்திவிடுவார்கள், அங்குள்ள ஆட்சியாளர்கள், படைவீரர்கள் போன்ற மதிப்பு மிக்கோரைத் தேடி ஒன்று அவர்களைக் கொன்றோ அல்லது சிறைப் பிடித்தோ மோசமாகக் கேவலப்படுத்தி விடு வார்கள் என்று இப்னு அப்பாஸ்(ரழி) அவர் கள் கூறினார்கள். (தஃப்சீர் இப்னு கஸீர் 6:671)
மேலும் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள். பல்கீஸ் இவ்வாறு கூற (அரசர்கள் படையயடுத்தால் இதுதான் நடக்கும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில்) “இவ்வாறுதான் அவர்களின் நடவடிக்கை இருக்கும்” என அவளது அக்கூற்றை உண்மைப்படுத்தி அடுத்த தொடரில் அல்லாஹ் மேற்கண்டவாறு குறிப்பிடுகின்றான். (27:34, தஃப்சீர் இப்னு கஸீர் : 6:671)
“அவளது அக்கூற்றை இறைத்தூதர் சுலைமான்(அலை) அவர்களும் உண்மைப்படுத்துகின்றார்கள்” (27:37)
நிச்சயமாக நாம் அவர்களால் எதிர்க்க முடியாத (பலமுள்ள) ஒரு பெரும் படையைக் கொண்டு அவர்களிடம் வருவோம். (அப்போது) நாம் அவர்களைச் சிறுமைப் படுத்தி அவ்வூரிலிருந்தும் வெளியேற்றி விடுவோம். மேலும் அவர்கள் இழிந்தவர்களாவார்கள். (என்று சுலைமான் கூறினார்)
“அதே அரசி பல்கீஸ் “அஷ்ஷீரா” எனும் “மஷீரா” என்ற கலந்தாலோசனை செய்தார் என்பதனையும் அல்லாஹ் இங்கே சிறப்பித்துக் குறிப்பிடுகின்றான்”. (27:29-33)
நபி சுலைமான்(அலை) அவர்களிடமிருந்து வந்த கடிதத்தைப் படித்த அரசி பல்கீஸ் அந்தக் கடிதம் தொடர்பாகவும் அதனால் தமக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பாகவும் தீர்வு பெற உடனே தமது நாட்டுத் தலைவர்கள், அமைச்சர்கள், பிரதானிகள், பெரிய மனிதர்கள் ஆகியோரை ஒன்றுகூட்டிய, “அவள்” “பிரமுகர்களே! எனது பிரச்சினைக்குத் தீர்வு கூறுங்கள். நீங்களும் பங்கெடுத்துக் கலந்து கொள்ளாமல் எந்த முடிவையும் நான் (சுயமாகத்) தீர்மானிக்கப் போவதில்லை என்றும் கூறினார். (27:32) என்பதாக “கலந்தாலோசனை” செய்வதற்கான முன்மாதிரியாக அல்லாஹ் சிலாகித்துக் கூறுகின்றான்.
தன்னைக் கடவுள் என்று வாதிட்ட சர்வாதிகாரியான ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் முஸ்லிம்களுக்கு எடுத்துக்காட்டாகப் போற்றுகின்றான். (10:83, 28:4, 28:38, 43:51, 44:31, 79:24, ) அல்லாஹ் கூறுகின்றான்.
அல்லாஹ் ஃபிர்அவ்னுடைய மனை வியை இறை நம்பிக்கையாளர்களுக்கான (சிறந்த) உதாரணமாகக் கூறுகின்றான். ஒரு முறை அவர் “என் அதிபதியே! எனக்காக உன்னிடம் சுவர்க்கத்தில் ஓர் இல்லத்தை அமைத்துக் கொடுப்பாயாக! ஃபிர்அவ்னிடமிருந்தும் அவனது (தீய) செயலிலிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக! அக்கிரமம் புரியும் சமுதாயத்தாரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக!’ என்று அவர் பிரார்த்தித்தார். (66:11) என்பதாக அடக்கு முறையாளர்களுக்கிடையில் ஏக இறைவனை ஏற்றுக் கொண்டவர்கள் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பதற்கு உதா ரணமாக அல்லாஹ் சிறப்பித்துக் கூறுகின் றான். அதனை நபி(ஸல்) அவர்களும் குறிப்பிட்டுப் போற்றியவர்களாக.
ஆண்களில் நிறையப் பேர் முழுமையடைந்திருக்கிறார்கள். பெண்களில் ஃபிர் அவ்னின் துணைவியார் ஆஸியாவையும், இம்ரானின் மகள் மர்யமையும் தவிர வேறெவரும் முழுமையடையவில்லை என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூ மூசா அஷ்அரி(ரழி) புகாரி: 3411, 3433,3769,3770,5418,5419.
“நபி மூஸா(அலை) அவர்களுக்கு எதிராக வந்த சூனியக்காரர்களைக் குறித்தும் அல்லாஹ் உதாரணமாகச் சிறப்பித்துக் கூறுகின் றான்” (7:120-126, 20:70-73, 26:46-51)
மூஸா தமது கைத்தடியைக் கீழே எரிந்தார். உடனே அது (பெரும் பாம்பாக மாறி) அவர்களுடைய பொய்(ப் பாம்பு)களை (யயல்லாம்) விழுங்கிவிட்டது. (இதைப் பார்த்தவுடன்) சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்தனர். அகிலங்களெல்லாவற்றின் இறைவன் மீது நாங்கள் இறை நம்பிக்கை கொண்டோம் “”அவனே மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இறைவனாவான்” என்றும் கூறினார்கள்.
அதற்கு ஃபிர்அவ்ன் (அவர்களை நோக்கி) உங்களுக்கு நான் அனுமதி கொடுப்பதற்கு முன்னரே நீங்கள் அவர் மேல் நம்பிக்கை கொண்டுவீட்டீர்களா? நிச்சயமாக இது ஒரு சூழ்ச்சியாகும். இவர் உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்த குருவானவராகும். இந்நகரவாசிகளை அதிலிருந்து வெளியேற்றுவதற்காக மூஸாவுடன் சேர்ந்து நீங்கள் செய்த சூழ்ச்சியேயாகும். இதற்கு விளைவை நீங்கள் அதி சீக்கிரம் அறிந்து கொள்வீர்கள்! நிச்சயமாக நான் உங்கள் கைகளையும், கால்களையும் மாறு கை, மாறு கால் வாங்கி உங்கள் யாவரையும் சிலுவையில் அறைந்து (கொன்று) விடுவேன் என்று கூறினான்.
அதற்கு அவர்கள் (அவ்வாறாயின் அதனால் எங்களுக்கு) எந்தக் கெடுதியும் இல்லை. நிச்சயமாக நாங்கள் எங்கள் இறை வனிடம்தான் திரும்பிச் செல்வோம் (எனவே இதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை). எங்கள் இறைவன் எங்கள் குற்றங் களை எங்களுக்கு மன்னித்து விடுவான் என்று நாங்கள் ஆதரவு வைக்கின்றோம் என்று கூறினார்கள்.
எங்களுக்கு எங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள அத்தாட்சிகளை நாங்கள் நம்பினோம் என்பதற்காகவே நீ எங்களைப் பழி வாங்குகிறாய் என்று கூறி “எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக. முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி) எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!” (எனப் பிரார்த்தனை செய்தார்கள்) 7:120-126, 20:70-73, 26:46-51 என்பதாக சோதனைகளின் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாக அவர்களைக் குறித்து அல்லாஹ் சிலாகித்துக் கூறுகின்றான்.
“இறைவனின் தண்டனைக்கான அறிகுறிகளைக் கண்டபோது தமது தவறைத் திருத்திக் கொண்டு மன்னிப்புக் கேட்டதால் வரவிருந்த தண்டனையிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்களைக் குறித்தும் அல்லாஹ் சிறப்பித்துக் கூறுகின்றான்”. (10:98)
நீனவா நகரத்தின் வாசிகளான நபி யூனுஸ்(அலை) அவர்களின் சமூகத்தார் ஏக இறைவனின் ஓரிறைக் கொள்கையை ஏற்க மறுத்து வந்தபோது இறைவனின் வேதனை வரும் என யூனுஸ்(அலை) அவர்கள் எச்சரித்து வந்தார்கள். ஆனாலும் அவர்களின் பிரச்சாரத்தை அந்நகர மக்கள் ஏற்க மறுத்ததால் அவர்கள் மீது வெறுப்புற்றவர்களாக வெளியேறுவோரிடம் சென்றுவிட்டார்கள். இறுதியில் தமது நபியைக் காணவில்லை என்றதும் சுதாரித்துக் கொண்டு தங்களுக்கு வேதனை நெருங்கிவிட்டது என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். வேதனைக்கான அடையாளங்களையும் நேரில் அவர்கள் பார்த்து விட்டனர்.
அப்போதுதான் அந்த மக்கள் அல்லாஹ்விடம் அடைக்கலமாகி உதவி கேட்டு அவனைப் பணிந்து நின்றார்கள். அல்லாஹ்வும் அவர்களின் உள்ளங்களில் பாவமீட்சி பெறவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தினான். அவர்கள் ஒவ்வொரு கால்நடைகளையும் அதன் கன்றுகளையும் தனித்தனியாகப் பிரித்தார்கள். தமது குழந்தை களையும் கால்நடைகளையும் ஓரிடத்தில் குழுமச் செய்தார்கள். முடியாலான ஆடையை அணிந்துகொண்டு நாற்பது நாட்கள் அல்லாஹ்விடம் நபி எச்சரிக்கை செய்த வேதனையை நீக்குமாறு கூக்குரலிட்டு அழுது பிரலாபித்து உதவி கோரினார்கள்.அவர்களின் உள்ளங்களில் உண்மையையும் கடந்த கால தவறுகளுக்காக வருந்தி பாவமீட்சி பெறும் உறுதியும் இருப்பதைக் கண்ட அல்லாஹ் அவர்கள் மீதான வேதனையை அவர்களை விட்டும் அகற்றி அருள் புரிந்தான். அவர்களுக்குத் திருந்துவதற்கான அவகாசமும் அளிக்கப்பட்டது. (10:98, தஃப்சீர் தபரீ, தஃப்சீர், அபூ ஹாத்திம் இப்னு, கஸீர் 4:567-569) அதனையே பின்வரும் வசனத் தில் அல்லாஹ் சிலாகித்துக் கூறுகின்றான்.
யூனுஸின் சமூகத்தாரைத் தவிர வேறு ஊர்க்காரர்களும் (வேதனை வருவதற்கு முன்பே) இறை நம்பிக்கை கொண்டு, அந்த இறை நம்பிக்கை அவர்களுக்குப் பயனளித் திருக்கக் கூடாதா? (யூனுஸின் சமூகத்தார்) இறை நம்பிக்கை கொண்டபோது, இவ் வுலக வாழ்க்கையில் இழிவு தரும் வேதனையை அவர்களிடமிருந்து நாம் அகற்றி னோம். (மேலும்) அவர்களைச் சிறிது காலம் (உலக வசதிகளை) அனுபவிக்கச் செய் தோம். (10:98) என்பதாக ஏக இறைவனின் தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கான முன் மாதிரியாக அவர்களை அல்லாஹ் சிறப்பித்துக் கூறுகின்றான்.