தலையங்கம்!

in 2022 மார்ச்

அரசுவேலைகளைஇழக்கும்முஸ்லிம்இளைஞர்கள்!

அதற்குகாரணமானமுஸ்லிம்இயக்கதலைவர்கள்

கல்வியில் இலக்கு நிர்ணயித்து படித்தால் மட்டுமே அதிகாரத்தை அடைய முடியும்.

அப்படி படித்து முன்னேறி வரும் இன்றைய முஸ்லிம் தலைமுறைக்கு பல வகைகளிலும் தடைகள் போட்டு முஸ்லிம்களை கொதிநிலையிலேயே வைத்திருக்க திட்டமிட்டு செயல்படுகின்றனர். அதில் ஒன்று தான் ஹிஜாப் விவகாரம்.

நமது கல்வியறிவை கொண்டு இந்த தடைகளை உடைத்து முன்னேறுவதில் முஸ்லிம் சமுதாயம் கூர்மையாக இருப்பது நல்லது. அதுவே அடுத்த தலைமுறைக்கான நமது வழிகாட்டுதலாகவும் இருக்கும்.

ஹிஜாப் தொடர்பான வழக்கு அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமை தொடர்பானதாக இருப்பதால் பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களில் சட்டப் போராட்டங்கள் மூலமாக மட்டுமே இந்த உரிமையை மீட்டெடுக்க முடியும்.

ஹிஜாப் விவகாரத்தை முன்னிறுத்தி தமிழகத்தில் ஊருக்கு ஊர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி நமது பங்குக்கும் சேர்த்து சமுதாயத்தை கொதிநிலைக்கு கொண்டு செல்வதை விட அடுத்தடுத்த மாதங்களில் நடைபெறவுள்ள அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு இளைஞர்களை தகுதிப்படுத்துவதே சமுதாயத்தின் உரிமை மீட்புக்கு பேருதவி செய்வதாக இருக்கும்.

பள்ளிகல்லூரிகளில்தேர்வுகள்நடைபெறும்காலம்இது.

கடந்த காலங்களில் அரசு விதித்த தடைகளை மீறி முஸ்லிம் இயக்கங்கள் நடத்திய போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல்களில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் மீது FIR பதியப்பட்டு இருக்கிறது.

இதனால் அரசு வேலைக்கு செல்ல முடியாத நிலையில் முஸ்லிம் இளைஞர்கள் பல்லாயிரக்கணக்கானோர் தவிக்கிறார்கள். அரசு வேலை கிடைத்தவர்கள் கூட அந்த FIRரை காரணம் காட்டி தடுக்கப்பட்டுள்ளார்கள். (நடந்த சம்பவங்கள்)

இதைத்தான் சங்கிகள் விரும்புகிறார்கள். முஸ்லிம்கள் எந்த அரசு வேலைகளிலும் வந்துவிடக் கூடாது.

அவர்களை தூண்டிவிட்டு போராட்டங்கள் செய்ய வைக்கவேண்டும். அதனால் படிக்கின்ற இளைஞர்கள் மீது FIR போடவேண்டும். அவர்கள் பொதுத் துறைக்கு வந்துவிடக் கூடாது.

கடந்த காலங்களில் FIR போடப்பட்ட எந்த முஸ்லிமும் அரசு வேலைக்கு போக முடியாது. போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் மூலமாக அவர்களை திசை திருப்பி கைது செய்து FIR பதிந்து பின் அரசு வேலையில் இருந்து காலி செய்வதே அவர்களின் நோக்கம்.

இன்றைய முஸ்லிம் இயக்க தலைவர்களுக்கு மார்க்கமும் தெரியாது. உலக அறிவும் கிடையாது. அதனால் இந்த சமுதாயத்தின் வருங்கால பிரச்சனைகளை கவனத்தில் கொள்ளாமல் எதற்கு எடுத்தாலும் முஸ்லிம் இளைஞர்களை போராட்டம், ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போன்ற செயல்களில் ஈடுபடுத்துகிறார்கள்.

முஸ்லிம் இளைஞர்களே சிந்தியுங்கள்! செயல்படுங்கள்! வருங்காலத்தை நினைத்து சிந்தித்து முடிவெடுங்கள்! இயக்க தலைவர் களின் உணர்ச்சிமிகு உரைகளை கேட்டு பலியாகாதீர்கள்! இஸ்லாமிய சமுதாயத்திற்கு தேவை ஆர்ப்பாட்டம், போராட்டம் அல்ல, கல்வி அறிவு மூலம் அதிகாரமே!

மேலும், பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்கும்) பெரும்பாரமாகவே இருக்கும். (குர்ஆன் 2:45)

Previous post:

Next post: