அறிந்து கொள்வோம்!
மர்யம்பீ, குண்டூர்
- தாய் தந்தை மற்றும் ரத்த உறவுகளை விட நேசத்திற்குரியவர் யார்?
முஹம்மத் நபி(ஸல்) அவர்கள், அனஸ்(ரழி) புகாரி: 15, முஸ்லிம்: 69 - அல்லாஹ்வின் நன்மையை எதிர் பார்த்து தனது குடும்பத்தாருக்கு செய்யும் செலவு எதுவாக ஆகிவிடும்?
தர்மம். (ஸதகா) அபூமஸ்ஊத்(ரழி) புகாரி :55, முஸ்லிம்: 1827 - மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்று.
கல்வி அகற்றப்படுவது. அனஸ்(ரழி), புகாரி: 80, முஸ்லிம்: 5186. - பொறாமை கொள்ளக் கூடாத இரண்டு விஷயங்கள் எது?
1. அல்லாஹ் வழங்கிய செல்வம், 2. அல்லாஹ் வழங்கிய அறிவாற்றல். இப்னு மஸ்ஊத்(ரழி) புகாரி: 73, முஸ்லிம்:1486 - தர்மத்தின் செயல்களில் ஒன்று எது?
ஒருவரை வாகனத்தில் ஏற்றிவிட உதவுவது. அபூஹுரைரா(ரழி), புகாரி: 2891, முஸ்லிம்: 1835 - யாரை தன்னிறைவு பெற்றவராக அல்லாஹ் ஆக்குவான்?
பிறரிடம் தேவை இல்லாதவராக இருக்க விரும்புபவரை, கூறியவர் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள். ஹக்கீம் பின் ஹிஷாம் (ரழி), புகாரி: 1427,1428 - முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் தன் சமுதாயத்திற்கு கட்டாயப்படுத்தாத செயல் ஒன்று எது?
ஒவ்வொரு உளுவின் போதும் பல் துலக்குதல். அபூஹுரைரா(ரழி), புகாரி: 887 - நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வை சந்திக்கும் நாளில் அவர்களுக்குரிய காணிக்கை எது?
ஸலாம் (சாந்தி உண்டாகட்டும்) குர்ஆன்: 33:44 - உறவுகளை துண்டித்து வாழ்பவர்களை அல்லாஹ் என்ன செய்தான்?
அவர்களை சபித்து செவிடாக்கி, குருடாக்கி விடுகிறான். அல்குர்ஆன் 47:22,23 - வானங்கள் மற்றும் பூமியின் பெருமை யாருக்குரியது?
அல்லாஹ்வுக்கே. அல்குர்ஆன் 45:37 - முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் எந்த மாதத்தில் அதிகமாக தர்மம் செய்வார்கள்?
ரமழான் மாதத்தில். புகாரி: 1902. - அல்லாஹ் கிணற்றுவாசிகளை எவ்வாறு கூறுகிறான்?
ரஸ்ஸு. (அரபி பெயர்) அல்குர்ஆன் : 50:12 - கணவனின் அனுமதியின்றி செய்யக் கூடாத செயல்களில் ஒன்று எது?
நஃபிலான நோன்பு. புகாரி : 5195 - வாங்கும்போதும், விற்கும் போதும், வழக்காடும் போதும் எவ்வாறு நடந்து கொள்ள நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
பெருந்தன்மையாக நடந்துகொள்ள வேண்டும். ஜாபிர் பின் அப்தில்லாஹ்(ரழி) புகாரி: 2076 - பறவைகளின் மொழி தெரிந்த நபி யார்?
சுலைமான் நபி அவர்கள். அல்குர்ஆன் 27:16 - ஸபர் நாட்டு இளவரசி எந்த நபியின் காலத்தில் முஸ்லிமாக மாறினார்?
சுலைமான் நபி காலத்தில். அல்குர்ஆன் 27:29,44 - சுலைமான் நபிக்கு அல்லாஹ் வசப்படுத்தித் தந்த பறவை எது?
ஹுத் ஹுத் பறவை. அல்குர்ஆன் 27:20
18, பொறுமையாக 20 பேர் எத்தனை பேரை (போரில் வெல்லலாம் என அல்லாஹ் கூறுகிறான்?
200 பேரை வெல்லலாம். அல்குர்ஆன் 8:65
- துன்பத்துடன் எது இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்?
இன்பமும் உள்ளது. அல்குர்ஆன் 94:5,6 - பாவம் கலவாத ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு உரிய கூலி எது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
சொர்க்கம். அபூஹுரைரா(ரழி), புகாரி 1773