முஸ்லிம்களுக்கு – சமத்துவம் இல்லாத நீதியா?
அஹமது இப்ராஹீம்
தாடியுடன் தலைப்பாகையும் வைத்துக் கொண்டு எல்லா அரசுப் பதவிகளிலும் அங்கம் வகித்துக் கொள்ளலாம்.
இதற்கு காரணம் சீக்கியர்களின் மத நடைமுறைகளை அம்மக்கள் உறுதியாகக் கடைபிடிப்பதால் அரசும் நீதித்துறையும் சீக்கியர்களின் கலாச்சாரத்தில் தலையிடுவதேயில்லை!
இந்திய நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய சலுகைகளை முழு சுதந்திரத்து டன் அனுபவித்து வருகின்றனர்.
அத்தகைய உறுதிமிக்க சீக்கிய சகோதர்களுக்கு வாழ்த்துக்கள்!!
ஆனால் முஸ்லிம்கள் மட்டும் அரசியல் சட்டம் வழங்கிய சலுகைகளை அனுபவிக்க விடாமல் அரசும், நீதித்துறையும் தடுக்கக் காரணமென்ன? என்பதைச் சற்று சிந்திப்போம்!
இஸ்லாமிய மார்க்கத்தில் ஆண்கள் தாடி வைப்பதை நபி(ஸல்) அவர்கள் கட்டாயக் கடமையாக்கியுள்ளனர்.
இப்னு உமர்(ரழி) அவர்கள் கூறியதாவது :
நபி(ஸல்) அவர்கள் மீசையை ஒட்ட நறுக்கு மாறும் தாடியை வளர்க்குமாறும் கட்டளையிட்டார்கள். முஸ்லிம்: 433, அத்.2 தூய்மை.
தாடி என்ற ஒரு அமலை தானும் வளர்த்து சமுதாய மக்களையும் தாடி வளர்க்கச் சொல்லி கட்டளையும் இடுகின்றார்கள் என்றால் நிச்சயமாக தாடி ஒரு கடமை தான் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.
ஆனால் நமது மார்க்கத்தின் முழு அதிகாரம் பெற்றவர்கள் தாங்கள் தான் என தங்களைத் தாங்களே நினைத்துக் கொள்ளும் மவ்லவிகள் தாடி ஒரு சாதாரண ஸுன்னத்துத் தான் என காலகாலமாக தங்கள் பயான்களில் சொல்லி வருகின்றார்கள்.
இதனால் பெரும்பாலான பள்ளிவாசல் நூற்றுக்கு தொண்ணூற்று எட்டுப் பேர் தாடி ஒரு ஸுன்னத்துத்தானே என அலட்சியமாக எண்ணி தாடியை சிரைத்து விடுகின்றனர். ஆனால் மார்க்கத்தில் ஸுன்னத் என்ற அந்தஸ்து கூட இல்லாத போப்பாண்டவர் மற்றும் RSS ஷாகா பண்டிதர்களின் கலாச்சாரமான தொப்பி அணிவதை கட்டாயக் கடமையாக்கி விட்டனர். விளைவு அரசுப் பணிகளில் பணியாற்றும் முஸ்லிமான ஆண்கள் தாடி வைக்க முடியாமல் அரசு அதிகாரிகளாலும் நீதித் துறையாலும் தடுக்கப்படுகின்றனர்.
அதேபோன்று முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் விஷயத்தில் அல்குர்ஆன் 24:31, 33:59 வசனங்கள் மற்றும் புகாரி: 1838 நபி மொழியின் படி முகமும், முன்கைகளையும் தவிர மற்ற உடல் பாகங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் உத்திரவிட்ட பின்னர் அதை மீறி முகத்தை மறைத்து முகத்திரை அணிந்து வருகின்றனர். இதன் காரணமாக பல சமூகக் குற்றங்கள் நடைபெறுவதை காரணம் காட்டி மொத்தத்திலேயே ஹிஜாபைத் தடை செய்ய அரசும் நீதித்துறையும் கங்கணங்கட்டி வருவதை இன்று நாம் காண்கிறோம்.
எனவே முஸ்லிம்களாகிய நாம் உடனடியாகச் செய்ய வேண்டியது அல்குர்ஆனையும் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டலான நபி மொழிகளை நமது தாய்மொழியான அழகுத் தமிழில் நேரடியாகப் படித்து அதன்படி அமல் செய்வது.
அதோடு மதப் புரோகிதர்களான (ஒரு சில நல்லடியார்களான சுய தொழில் செய்து பிழைத்து அதோடு மார்க்கப் பணி செய்யும் மவ்லவிகள் தவிர மற்ற அனைத்து மத்ஹபு மற்றும் தவ்ஹீத் மவ்லவிகளை புறக்கணித்து விட்டு மார்க்கத்தை சுயமாக விளங்குவதே தற்போதைய அவசியப் பணியாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அத்தகைய பாக்கியத்தை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக! ஆமீன்!!